Thursday, July 23, 2009

மதங்களுக்கு சேறு பூச முற்பட வேண்டாம். (புரட்சிதாசன் அஹமட்)

ஒரு மனிதனின் தனியாதிக்கம் அவன் அவன் மதங்களின் பின்னால் வழி நடப்பதாகும். இன்று உலகத்தில் மதத்தின் பால் சுதந்திரம் எல்லா சமூகத்திற்கும் உண்டு. இதில் யாரும் குறுக்கறுககவோ, தடைகள் ஏற்படுத்தவோ முடியாத விடயம். தனக்கு எது சாதகமாகத் தென்படுகிறதோ அதனைப் பினபற்றும் உரிமை எல்லோருக்கும் உண்டு. எனினும் இன்று பல கோணங்களில் இஸ்லாம் மதத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் கேடு விளைவிக்கும் வகையிலும், பிழையான வகையில் செய்திகள் பிரசுரிக்கும் வகையிலும், இழிவு படுத்தும் வகையிலும் பல இயக்கங்களும், பல சமூகத்தினர்களும் ஏன் தன்னிச்சையாகவும் செயற்படுகின்றனர்.

ஆனால் இஸ்லாமியர்கள் எந்த வகையிலும் எந்த சமூகத்தினருக்கும் ஊறு விளைவிக்க முனைவது இல்லை, மாறாக எல்லோருக்கும் உதவி புரியும் வகையிலேயே தனது காரியங்களை வழி நடாத்துகின்றனர் என்பது தெளிவான விடயமாகும்.

இன்று உலகில் முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதி என்றுதான் பொருள்படுகிறது. காரணம் அமெரிக்க ஏகாதிபத்தியம் வழங்கிய சிறப்பப் பெயராச்சே அதனால்தான் இது நீடிய ஆயுளைக் கொண்டுள்ளது. இன்று அமெரிக்கர்கள் தாடி வைக்க முடியாது தாடி வைத்தால் தீவிரவாதி, பயங்கரவாதி என்று பொருள். தாடியின் மகத்துவத்தைப் புரியாதவர்களுக்கு தாடியைப் பற்றி என்ன புரியப்போகிறது?

தாடியைப்பற்றி புனித இஸ்லாம் கூறுகிறது: என்னவென்றால் முகம் முழுவதும் நிறைந்து தாடி வைப்பது சுன்னத்தாகும். இந்த வகையில் தாடியை வைத்தால் முகம் பாதுகாப்படுகிறது. மடடுமன்றி ஜந்து நேரமும் இறைவனை வணங்க முற்படும் போது முகத்தினையும் கை கால்களையும் தண்ணீரால் சுத்தம் செய்ய சேண்டும். இவ்வாறு செய்யும் போது முகத்திலுள்ள தாடியில் தண்ணீர் தேங்கி நிற்கும், அது முகத்திற்கு குளிரூட்டிபோல் செயற்படுவது மட்டுமல்லாது தொண்டை சம்மந்தமான சகல விதமான நோய்களையும் வராமல் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது விஞ்ஞான ரீதியான உண்மையாகும். இப்பொழுது புரிகிறதா தாடி ஏன் வைக்கப்படுகிறது என்பது. இவ்வாறான நல்ல விடயத்திற்காகவே இஸ்லாம் தாடியை அவசியமாக்கியிருக்கிறது.

இன்று தாடியை எல்லா சமூகங்களும் வைக்கின்றனர். ஆனால் எங்களுக்கு வழிகாட்டியான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரமே நாங்கள் இதனை அமுல் படுத்துகிறோம். எல்வோரும் தாடி வைக்கின்றனர் ஏன் இஸ்லாமியர்களின் தாடிக்கு மட்டும் பயப்படுகின்றனர் என்பதுதான் புரியாத புதிராக இருக்கின்றது. அண்மையில் இலங்கையிளுள்ள ஒரு மலை நாட்டு தமிழ் பாடசாலையில் (பதுளை) ஒரு முஸ்லிம் ஆசிரியருக்கு புதுமையான ஒரு அனுபவம் ஏற்பட்டுள்ளது. அதாவது தாடியை எடுக்க வேண்டும் , வெள்ளிக்கிழமை ஜூம்மாவுக்குப் போகக் கூடாது என்றும் அந்தப்படசாலையின் அதிபரினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாவம் அந்த அதிபர் இலங்கையின் கல்விச்சட்டத்தில் வெள்ளிக்கிழமை முஸ்லிம் ஆசிரியர்கள் ஜூம்ஆவுக்குச் செல்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள விடயத்தையும் தாடி வைக்க முடியும் என்ற விடயத்தையும் அறியாதவர் என்று நினைக்கின்றேன்.

இதே போன்றுதான் தாளங்குடாவில் உள்ள கல்வியல் கல்லூரியில் பெண்களுக்கான ராக்கிங் வதை தமிழ் இனத்து சகோதர சகோதரிகளால் முஸ்லிம் இனத்து சகோதர சகோதரிகளுக்கு சில வாரங்களுக்கு முன்னர் இடம் பெற்றுளளது. அதாவது முஸ்லிம் சகோதரிகள் ஹிஜாப் (ஸ்காப்) பைக் களற்ற வேண்டும் என்று ஒரே பிடியாய்ப் பிடித்துள்ளார்கள். இதற்கு மறுப்புரை தெரிவித்தவர்களுக்கு சார மாறியாகவும் கண் மூடித்தனமாகவும் தாக்கியுள்ளார்கள். கேவலம் கல்வியைக் கற்று இளம் சமூதாயத்தினருக்கு அதனை மீளவும் வழங்க முற்படுகின்ற இந்த இளம் கமுதாயம் அடாவடித்தனத்திற்கும், அநாகரீகத்திற்கும் போரம் போய் விட்டதனை எண்ணி வெட்கப்பட வேண்டிய அவல நிலையில் இந்த மாணவ சமுதாயம் காணப்படுகிறது.

ராக்கிங் எனும் கேவலமான ஒரு நடைமுறையினை உயர்கல்வி நிறுவணங்களில் நடைமுறைப்படுத்தி வருகின்ற இந்த அறிவிலி மாணவர்கள் ஏனைய மதங்களிலும் தனது அத்துமீறல்களையும், அடாவடித்தனங்களையும் மேற் கொண்டு வருகின்றமை மன்னிக்க முடியாத ஒரு அபாண்டமான குற்றமாகும். இது வரையிலும் இஸ்லயமிய மாணவர்கள் ஏனைய இன மாணவர்களின் மதத்தில் ஊடுருவிய வரலாறு மிகவும் அரிது. இருந்தாலும் ஏனைய மதத்வர்கள் இஸ்லயமிய மதத்தில் அத்து மீறிய வரலாறே மிகவும் அதிகமானதாகும். இவ்வாறான சந்தர்ப்பங்கள் மீளவும் எழாமல் பாதுகாப்பது எல்லா மதத்தவர்களதும் கடமையாகும்.

மனித குலம் ஒரு கௌரவமானது, அதற்கு மானமுள்ளது என்பது எல்லோரும் அறிந்த விடயம். ஆனால் அதனை நடை முறைப்படுத்தலில்தான் சிக்கல்கள் காணப்படுகிறன. அண்மையில இடம பெற்ற அகோர யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் சகோதர சகோதிரிகளுக்கு முதன் முதலாக சமைத்த உணவு வழங்கி பசியாற்றிய மாபெரும் பெருமை இந்த காத்தான்குடி முஸ்லிம் மக்களையே சாரும் என்பதனை யாரும் மறந்து விட முடியாது.

இஸ்லாம் கூறுகிறது: பக்கத்து வீட்டார் பசித்திருக்க தாம் புசிக்கக்கூடாது என்று மறுதலை அளித்திருக்கிறது. இதனால்தான் எமது சகோதர இனம் பசியில். பட்டினியில் இருக்கக் கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காகவே அவர்கள் அதனை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் வழங்கினர். ஆனால் 1990 களில்யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு போன்ற இடங்களிலிருந்து நிபந்தனையுடம் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு இந்தச் சகோதர இனத்தினர் எந்த உதவியையும் செய்ய முற்படவில்லை. ஒரு எதிர்ப்பு அறிக்கை கூட விட முற்படவில்லை. இவையெல்லாம் அழியாத வடுவும், வரலாறுமாக பதியப்பட்டுப்போனது.

இனங்கள் ஐக்கியமாகவும் , ஒற்றுமையாகவும் வாழ புரிந்துணர்வும் நம்பிக்ககையும் அவசியமாகும். ஒரு மனிதன் ஆபத்திலிருக்கும் போது அவனுக்கு உதவி புரிய வேண்டும். அவன் எந்த இனமாகவோ, மதமாகவோ இருக்கலாம். இதுதான் மனித தர்மமும் நேயமுமாகும். மாறாக அவன் எமது இனமும் அல்ல அல்லது எமது மதமுமல்ல என்ற நோக்கத்திற்காக அவனைக்காப்பாற்றாமல் விடுவது மனித குலத்திற்கே அவன் சாபக்கேடு. இதுதான் இஸ்லாம் கூறுகிறது. மனிதனை மதத்தால் வேறுபடுத்துவது சிறந்ததல்ல. மதம் ஒருவனுக்கு வழிகாட்டியே தவிர அது கொலை காட்டியல்ல என்பதை மறந்து விடக்கூடாது.

இனங்களை ஐக்கியப்படுத்துவதற்கு மதங்கள் பங்களிக்க வேண்டும். மாறாக ஐயப்படுவதற்கு நாம் ஒர நாளும் சோரம் போகக் கூடாது. மொழயால ஒற்றிப்போன தமிழ் முஸ்லிம் மக்கள் மதத்தினால் மட்டுமே வேறுபடுகின்றனர். எனவே, மதங்களுக்கு ஊறு விளைவிக்க முனைய இரு தரப்பார்களும் முற்படாமல் தற்பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோமயின் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கக வேண்டிய தேவையும் அவசியமும் ஏற்படாது என்பது திண்ணம். அவரவர் மதத்திற்கு மதிப்பும், மரியாதையும் கொடுப்பது மட்டுமல்லாமல் அடுத்தவர் மத்திற்கும் உரிய மதிப்பும் மரியாதையும் கொடுப்பது இன்றியமையாததாகும். இவ்வாறான பண்புகள் சிறப்பாகப்பேணப்படும் போது பாரிய பிரச்சினைகளிலிருந்து எம்மை இலகுவில் விடுவித்துக் கொள்ள வழிகோலலாம்.

மனித குலத்தின் மதம் ஒரு சிறந்த முற்போக்குச் சிந்தையுடைய நல்வழிப் பதைகளுக்கு மட்டுமே பாவனைப் படுத்த வேண்டும். மாறாக மனித குலத்தையே குழைப்பதற்கு ஒரு காலமும் இதனைப் பயன்படுத்தலாகாது. மதத்தால் நாம் தமிழர், முஸ்லிம்கள் எனறு வேறுபட்டாலும் மொழயால் நாம் ஒன்று பட்டுள்ளோம். எனவே, இனிமேலாவது நாம் எமது மதத்தின் மேல் அன்பும், நம்பிக்கையும் வைத்திருப்பது போல் தமிழர், முஸ்லிம் என்ற உறவிலும் பிரியம் வைப்போமாக.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com