Thursday, July 2, 2009

இலங்கை ஊடகவியலாளர்களின் உரிமை மறுப்பின் பங்காளிகள் யார்?

ஊடகவியாலளர்கட்கு அச்சுறுத்தல் உள்ள நாடாக இலங்கை வகைப்படுத்தப் பட்டுள்ளபோது அங்கு ஊடகவியலாளர்களுக்கான அச்சுறுத்தல், உரிமை மீறல்கள் அரசினாலும், ஆயுதக் குழுக்களினாலும் இடம்பெறுவதாகவே அனைவரும் கருதுகின்றனர். ஆனால் இவற்றுக்கும் அப்பால் ஊடகவியலாளர்கள் தாம் சேவை புரியும் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளாலும் மூத்த ஊடகவியலாளர்களாலும்கூட பாரபட்சங்களுக்கும் தவறான வழிநடத்தலுக்கும் உட்படுத்தப்படுவது வெளிவராத விடயங்களாக உள்ளன.

ஊடகவியலாளர் ஒருவர் ஊடகவியலாளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கு தான் கடமை புரியும் பத்திரிகை நிறுவனத்தின் பிரத ஆசிரியரினால் சிபார்சு செய்யப்படவேண்டும். ஊடகவியலாளர்கட்கு அரசினால் வழங்கப்படும் அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதில் சியத்த பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவருகின்றது. அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திலகரத்தின குருவிட்ட பண்டார தன் கீழ் வேலை செய்யும் ஊடகவியலாளர்களை சிபார்சு செய்வதற்கு மறுப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகின்றது. ஊடகவியலாளர் ஒருவர் தன்னை அடையாளப்படுத்துவதற்கு தனது ஆக்கங்கள் போதுமானது எனவும் அடையாள அட்டை என்பது மிக முக்கியமானது அல்ல எனவும் குரவிட்ட பண்டார அடையாள அட்டை பெறும் உரிமையை சிறுமைப்படுத்தி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறே இவர் ஸ்ரேன்டட் நியூஸ் பேப்பர் பிரைவட் லிமிட்டடினால் வெளியிடப்படும் மவ்விம பத்திரிகையில் கடமை புரியும் போதும் இவ்விடயத்திற்கு இடையூறு செய்திருந்ததாக கூறப்படுகின்றது. இவ் இடையூறினால் முனிசாமி பரமேஸ்வரி மற்றும் சசிகா வினோதினி ஆகிய இரு ஊடகவியலாளர்களும் அடையாள அட்டை இல்லாமல் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டதாக பேசப்படுகின்றது. இவர்கள் பல சந்தர்பங்களில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டபோது அவர்கள் தம்மை ஊடகவியலாளர்கள் என உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதுடன் அவர்கள் பல மாதங்கள் தடுப்புக்காவலில் இருக்கவேண்டி ஏற்பட்டிருந்தது.

இலங்கையில் ஊடகவியலாளர்கள் அளவு கணக்கில்லாமல் கைது செய்யப்படுகின்றார்கள் என குற்றச்சாட்டப்படுகின்றபோது, கைது செய்யப்படுபவர்கள் ஊடகவியலாளர்கள் என தம்மை உறுதிப்படுத்தப்படுகின்றனர் இல்லை அரச தரப்பினரால் கூறப்படுவதை காண முடிகின்றது.

அதேநேரம் உப்பாலி நியூஸ் பேப்பர் லிமிட்டட் இன் இயக்குனரின் சாரிதிக்கு ஊடகவியலாளர் ஒருவருக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதுடன் அவர் ஊடகவியாலளர்களுக்கான வங்கிக்கடன்களையும் பெற்றுக்கொண்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com