Wednesday, June 10, 2009

கனடா பாராளுமன்ற உறுப்பினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கனடா பாராளுமன்ற உறுப்பினரான Bob Rae அவர்கள் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். புலிகளுன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர், விசாரணை முடிவில் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் என குடிவரவு - குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவத்துள்ளார்.

நேற்று காலை (June 09) கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்த Bob Rae இடம் ஒருவழி பயணச்சீட்டு மாத்திரமே இருந்ததாகவும் அவர் இலங்கைக்கு என்ன நோக்கத்திற்காக வந்தார் என்பது தெளிவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர் கடந்த காலங்களில் இலங்கை அரசு இன அழிப்பில் ஈடுபடுகின்றது எனவும் இலங்கை அரசு பொதுநலவாய நாடுகளில் தடைசெய்யப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com