Sunday, June 21, 2009

தமிழீழத்தின் புதிய தேசியத்தலைவர் மே.த.கு பரந்தன் ராசன் : -கண்டதாசன்

பொறியில் ஒரு கட்டுரை. வாசித்தபோது தலை சுற்றியது. நண்பர் ஒருவர் வாசித்துவிட்டு என்னையும் வாசிக்கச் சொன்னார். வாசித்துப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம்.
ஆயுதப் பேராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து தமிழ் மக்கள் சுயாட்சி உரிமைகள் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் கொள்கை மாறாமல் இன்றுவரை ஒருவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாராம் ஒருவர். இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டின் உதவியினாலும் ஈழத்தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இன்றுவரை உறுதியாக உள்ளவர், எந்த நேரத்திலும் தனது பொது எதிரியுடன் இணையாமலும், எந்தவித உதவிகளையும் பதவிகளையும் பெறாமல் இன்றுவரை தனது கொள்கையில் உறுதியாக இருப்பவர், எந்த விளம்பரத்திற்கும் பதவிக்கும் ஆசைப்படாதவர்,' அரசியல் தலைமையாக ராஜன் மட்டும் என்னோடிருந்திருந்தால் ஈழத்தை எப்போதே வென்றிருப்பேன்' என்று
விடுதலைப்புலிகளின் தலைவரால் சக உறுப்பினர்களிடம் புகழப்பட்டவர் தேசிய ஜனநாய விடுதலை முன்னணியின் தலைவர் ஞா.ஞனசேகரனாம்.

இப்படி ஒரு புகழாரம். யாழ்ப்பாணத்தில் போய் பரந்தன் ராஜன் யார் என்று கேட்டால் யாரது
பரந்தனில் முந்தி இருந்த பிரபல கொள்ளைக்காரனோ? அல்லது கைப்பாட் மணியம், போயா மாதிரி பெரிய கேடியோ? பரந்தன் நகரைக் கட்டியெழுப்பிய மாமேதையோ? அல்லது பரந்தனில் பெரிய பணக்காரனோ? அல்லது வன்னி நாம்பன் சுந்தரலிங்கம் மாதிரி கல்வி கற்ற கல்விமானோ? இதில் எதனைக் கூறுவார்கள். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அஞ்ஞாதவாசம் செய்யும் முன்னாள் சமூக விரோதி, பயங்கரவாதி.

தன்னுடன் இருந்திருந்தால் இந்தச் சமூகவிரோதியைப் போட்டுத் தள்ளியிருக்கலாம் என்று புலிகளின் தலைவர் தன் சக உறுப்பினர்களுக்குச் சொல்லிக் கவலைப் பட்டிருக்கலாம். அதை யாரோ பரந்தன் ராஜனுக்கு மாறி மொழி பெயர்த்து விட்டார்கள். ஏதோ புலிகளின் தலைவருக்கு நல்ல அரசியல் தலைமை இல்லாததால் தான் தமிழீழம் கிடைக்கவில்லை என்கிற மாதிரியும் பரந்தன் ராஜன் சிறந்த அரசியல் நுணுக்கம் தெரிந்தவர், அவரைக் கூட வைத்திருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் என்கிற மாதிரியும் கூற முற்பட்டால் இந்த நூற்றாண்டில் இதைவிட நகைச்சுவை வேறு என்னவாக இருக்க முடியும்.

நல்ல வேளை பிரான்ஸில் இருக்கிற கடுவன் பொன்னியையும் புலிகளின் தலைவர் கூட வைத்திருந்தால் தமிழீழம் தென்னிலங்கையிலுள்ள வத்தளை மட்டும் விஸ்தரிக்கப்பட்டிருக்கும் என்று கூறவில்லை.

பரந்தன் ராஜன் பெங்களூரில் அஞ்ஞாதவாசம் செய்வதே தமிழ் மக்களுக்கும் புலிகளின் தலைவருக்கும் பயந்துதான் என்பது பலருக்கும் தெரிந்த விடயம். புலிகளுக்கு சார்பாக அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு சமிக்ஞை விடுவதே தன்னுடைய உயிரை புலிகளின் தலைவரிடமிருந்து பாதுகாப்பதற்குத்தான் என்பதும் தெரிந்த விடயம்.

இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டின் உதவியினாலும் ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கமுடியாது என்ற நிலைப்பாட்டில் இன்றுவரை பரந்தன் ராசன் உறுதியாக உள்ளவர் என்று பரந்தன் ராசனுக்கு சான்றிதழ் கொடுக்கும் அரைவேக்காடு சுவிஸ் நாகராஜா சங்கரன் இந்தியா இலங்கைத் தமிழர்களின் பிரச்சனையைத் தீர்த்து வைக்க முயன்றபோது
என்ன நடந்தது, இந்தியப்படை காலத்தில் ஈ என் டி எல் எவ் அமைப்பு தமிழினத்துக்கு விரோதமான காரியங்களிலேயே ஈடுபட்டது என்பதையும் மறந்து விடக்கூடாது. இப்படிக் கூறும் இந்த அரைவேக்காடு சுவிஸ் நாகராஜா சங்கரன் சுவிஸ் கிளைச் செயலாளராம்.

சுவிஸ் என்ன தமிழீழத்தின் ஒரு பகுதியா? இந்த இலங்கைத் தமிழ் ஏமாற்றுப் பேர்வழிகள்
வெளிநாடுகளில் கிளைப் பொறுப்பாளர், கிளைச் செயலாளர் என்று தங்களைத் தாங்களே கூறிக்கொண்டு இன்னும் மக்களை ஏமாற்ற நினைத்தால் அது இவர்களின் முட்டாள்தனம். தமிழ் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் வெளிநாடு வந்திருந்தால் பேசாமல் பொத்திக் கொண்டிருக்க வேண்டியது தானே!

கருணாவையும், ஆனந்தசங்கரியையும், டக்ளஸ் தேவானந்தாவையும் வைத்துக் கொண்டு அரசியல் நடத்த முற்பட்ட பரந்தன் ராசன் இவரை நம்பாமல் காலை வாரிவிட, அந்த ஏமாற்றத்தில் இப்போது அவர்களைத் தூற்றிக்கொண்டு தமிழர்களுக்கு அரசியல் தலைமை தேடித் திரிகிறாராம்! இவர் பொது எதிரியுடன் சேரவில்லையாம்! பொது எதிரியுடன்
சேராமல் பரந்தன் ராசனால் ஏன் தாய் நாட்டிலிருந்து தமிழ் மக்களுக்குச் சேவையாற்ற முடியவில்லை? பொது எதிரி கூட இந்தச் செல்லாக்காசு பரந்தன் ராசனை சேர்க்க விரும்பவில்லை என்பதே உண்மை.

பிரபாகரனிடமிருந்து தன்னை பாதுகாக்க பெங்பளூரில் அஞ்ஞாதவாசம் இருந்து கொண்டு உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாட்டில் மக்களுக்கு தங்களால் முடிந்த சேவைகளை செய்பவர்களை குற்றம் கூற இந்த சமூக விரோதி பரந்தன் ராசனுக்கு அருகதையில்லை.

ஏதோ தமிழ் மக்கள் தலைமையின்றித் தவிக்கிறார்கள் பரந்தன் ராசண்ணை தலைமையைத்
தேடித்தாங்கோ என்று தமிழ் மக்கள் பெங்களூருக்கு மனு அனுப்பினார்களா?

குமாரசூரியரைக் கொல்வதற்கு பரந்தன் ராசன் அலைந்தததை 'யார் இந்த பரந்தன் ராசன்'; என்ற சற்குணத்தின் கட்டுரை பரந்தன் ராசன் எப்பேர்ப்பட்ட கொலைப் பேர்வழி, கிரிமினல் என்பதைப் புட்டு வைக்கிறது.ஆனால் பரந்தன் ராசனோ தான் ஏதோ விடுதலைப் போராட்டத் தியாகி போலக் காட்ட முற்படுவதை இலங்கை தமிழர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

பிரபாகரன் இறக்கும் வரை காத்திருந்த பரந்தன் ராசன் பிரபாகரன் இறந்தபிறகு பரந்தன் ராசனின் பதவிப் போராட்டம் ஆரம்பித்துள்ளது. கடந்த காலத்தில் இலங்கைத் தமிழ் மக்கள் தாங்கள் பட்ட அனுபவத்தில் உண்மையான தியாகிகள் யார் துரோகிகள் யார் என்பதை இனங்கண்டு கொண்டுள்ளார்கள். புலிகள் அழியப் போகிறார்கள். அதனால் தமிழர்களுக்கு
சரியான தலைமை இல்லாமல் போகிறது. தமிழர்களுக்கு சரியான தலைமையைத் தேர்ந்தெடுக்க பெங்களூரில் மாநாடு கூட்டப்போன பரந்தன் ராசனின் முயற்சியும் புஸ்வாணமாகப் போய் விட்டது.

பிரான்ஸிலிருந்து கடுவன் பொன்னியும் ஆலாய்ப் பறந்து மசாலா தோசை தின்றுவிட்டுத் திரும்
பியதுதான் மிச்சம். பரந்தன் ராசனுக்கு வெளிநாடுகளில் எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதற்கு இதுவே உதாரணம். பரந்தன் ராசனின் பருப்பு இலங்கைத் தமிழ் மக்களிடம் அவியாது. தொடரும்

நன்றி ஈழநாசம்


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com