Thursday, June 18, 2009

புலிகளுக்கான ஆயுத வழங்கலில் ஈடுபட்ட தாய்லாந்துக்காரர் மூவர் கைது.

தாய்லாந்து பொலிஸார் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிவந்த மூவரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் Mahammad Ali Hussien, Babuji or Mahammad Madbahem, and Chubri Awae என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் தென் தாய்லாந்தில் உள்ள மிகவும் செல்வாக்கு மிக்க குழு ஒன்றுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளதற்கான தகுந்த ஆதாரங்கள் தமக்கு உள்ளதாக தெரிவித்துள்ள விசேட விசாரணைப் பிரிவின் இயக்குனர் கேணல் Tawee Sodsong, இவர்கள் புலிகளுக்கு தேவையான பிரயாண ஆவணங்கள் பலவற்றை செய்து கொடுத்துள்ளதுடன் அவ்வியக்கத்திற்கு தேவையான ஆயுதங்களையும் வழங்கி வந்துள்ளனர் என்றார்.

அத்துடன் இக்குழுவினர் அல்-ஹைதா அமைப்பு அமெரிக்கா மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு தேவையான ஆவண உதவிகளையும் புரிந்துள்ளதாக தெரியவருகின்றது எனவும் அவர்கள் ஆயுதம் , போதைப்பொருள் கடத்தலில் உலகையே ஆட்டி வைத்துள்ளனர் என்றார்.

புலிகளின் ஆயுதக் கடத்தல் மன்னனான கே.பி தாய்லாந்தை தளமாக கொண்டிருந்தவர். ஆனால் அவர் தற்போது உலகில் உள்ள பிரபலமான புலனாய்வு பிரிவொன்றுக்கு விலைபோய் உள்ளதாக கூறப்படும் நிலையில் இக் கைது இடம்பெற்றுள்ளது. எதிர்காலத்தில் இதேபோன்று சர்வதேச மட்டத்தில் புலிகளுக்கு உதவி புரிந்த பலரும் கைது செய்யப்படலாம் என நம்பப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com