Friday, June 5, 2009

இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றிய பின்பே இந்தியாவிலுள்ள அகதிகள் பற்றி முடிவு

இந்தியாவுடனும் பேச்சு நடத்தப்படும் - அமைச்சர் யாப்பா

வன்னியில் இடம்பெயர்ந்த மக்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றிய பின்னர் இரண்டாம் கட்டமாகவே இந்தியாவில் அகதிகளாக உள்ள எமது மக்களை மீள அழைத்து தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவது குறித்து முடிவு செய்யப்படும். இது தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமென அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவி க்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (04) தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற் றது. ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :- இந்தியாவில் அகதிகளாக உள்ள மக்களும் எமது நாட்டு மக்களே.

அவர்களை நாம் மீண்டும் பொறுப்பேற்க வேண் டும். முதலில் வட பகுதியை அபிவிருத்தி செய்து வவுனியா வில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படுவர். 180 நாட்களுக்குள் அந்த மக்களை மீள்குடியேற்ற திட்டமிடப் பட்டுள்ளது. வடபகுதியை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி செயலணிக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதோடு இதனூடாக அப்பகுதி துரிதமாக முன்னேற்றப்படும்.

இந்தப் பணிகள் நிறைவடை வதோடு இந்தியாவில் அகதிக ளாக உள்ள எமது நாட்டவர்கள் குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

நன்றி தினகரன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com