Tuesday, June 2, 2009

600 அநாதை சிறுவர்களை பொறுப்பேற்கிறது சிங்கப்பூர் பெளத்த சங்கம்

வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களிடையே உள்ள 600 அநாதைப் பிள்ளைகளை பொறுப்பேற்று அவர்களின் சகல தேவைகளையும் நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக சிங்கப்பூர் மகாகர்ணா பெளத்த சங்க மத ஆலோசகர் வண. அலவ்வே குணரத்ன தேரர் தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (2) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

வடபகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்குச் சகலரும் இன, மத, பேதமின்றி சகல உதவிகளும் வழங்க வேண்டும்.

இந்த மக்களுக்கென சிங்கப்பூரில் இருந்து ஒரு கோடி ரூபா பெறுமதியான பொருட்கள், பணம் என்பன

திரட்டியுள்ளோம். அவை கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளன. வடபகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள 10 வயதுக்குக் குறைவான பெற்றோரை இழந்த 350 பிள்ளைகளையும் 250 உயர் வகுப்பு மாணவர்களையும் நாம் பொறுப்பேற்க உள்ளோம்.

வடபகுதி மக்களுக்கு உதவுவதற்காக 100 பேர் கொண்ட சிங்கப்பூர் பிரஜைகள் குழுவொன்று இலங்கை வர உள்ளது. அந்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சகல உதவிகளும் வழங்கி வருகின்றனர்.

நாம் வருடாந்தம் பொசன் பண்டிகையை முன்னிட்டு அநுராதபுரத்தில் அன்னதானம் வழங்கி வருகிறோம். இம்முறை மெனிக்பாமிலுள்ள தமிழ் மக்களுக்கு அன்னதானம் வழங்க அரசின் அனுமதியை கோரியுள்ளோம்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com