Saturday, May 30, 2009

நாம் வல்வெட்டித்துறையிலேயே வாழ விரும்பினோம். ஆனால் புலிகள் அனுமதிக்கவில்லை - பிரபாகரனின் தகப்பனார்.

மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் ஒன்றில் இருந்து பிரபாகரனின் தந்தையான வீரசாமி திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயான பார்வதிப்பிள்ளை வேலுப்பிள்ளை கண்டுபிடிக்கப்பட்டிருந்தனர்.

பிரபாகரனின் தந்தை வழங்கியுள்ள தகவல்களில் கூறியுள்ளதாவது, நாம் திருச்சியில் இருந்து 2003ம் ஆண்டு வன்னி வந்தோம். வல்வெட்டித்துறையில் வாழ விரும்புகின்றோம் என பிரபாகரனிடம் கூறியபோதும் புலிகள் எம்மை அங்கு அனுமதிக்கவில்லை. விசுவமடுப் பிரதேசத்தில் வாழ்ந்தோம். ஆனால் பிரபாகரனின் வீட்டில் இருக்கவில்லை. நாம் எமது மகனை அடிக்கடி சந்திக்கவில்லை. எதாவது நிகழ்வுகளின் போது சந்திப்போம். புதுக்குடியிருப்பில் சண்டை ஆரம்பமானபோது பிரபாகரன் வாகனம் ஒன்றை அனுப்பி புதுமாத்தளன் யுத்த சூனியப் பிரதேசத்திற்கு வருமாறு அழைத்திருந்தார். அங்கு நாம் மக்களுடன் வாழ்ந்தோம்.

மே மாதம் 17ம் திகதி யுத்த சூனியப் பிரதேசத்தில் இருந்து இறுதியாக வெளியேறிய மக்களுடன் வட்டுவாக்கல் பாலமூடாக முல்லைத்தீவை வந்தடைந்தோம் என தெரிவித்துள்ளார்.

1 comments :

Unknown May 31, 2009 at 5:21 AM  

வேலுப்பிள்ளை சொல்வதை நம்பலாம். நம்பாமலும் விடலாம். வல்வட்டித்துறையில் போய் வாழ விரும்பியிருந்தால் அவர் அரசிடம் கேட்டிருக்கலாம். அவரை கையில் வைத்துக்கொண்டு அரசே ஒரு அருமையான பிரசாரத்தை வெற்றிகரமாய் நடத்தியிருக்கலாம். ஒருவேளை மகன் பக்கத்தில் இருக்க ஆசைப்பட்டிருக்கலாம். ஈழம் வந்துவிடும் என்று கனவு கண்டு கொண்டிருந்ததால் விசுவமடுவில் இருந்திருக்கலாம். அரசு இவர்களை வைத்து என்ன செய்யலாம் என்று இப்போது யோசித்துக்கொண்டிருக்கலாம். இதை வாசிப்பவர்களே நீங்கள் இதில் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com