Friday, May 1, 2009

புளொட் அமைப்பினர் சுவிஸ் முற்போக்கு முன்னணிகளுடன் இணைந்து மேதின ஊர்வலத்தில்.



இன்று காலை சுவிற்சலாந்து சூரிச் பிரதான புகையிரத நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மேதின ஊர்வலங்களில் சுவிற்சாலாந்தைச் சேர்நத முற்போக்கு முன்னணிகள், இடதுசாரி அமைப்புகளுடன் சுவிஸ் புளொட் கிளையினரும் இணைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சுவிற்சலாந்தில் மேதின பேரணியில் இணைந்துகொண்டுள்ள தமிழீழ விடுதலைக் கழக தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள்,
1. ஏகாதிபத்திய நாடுகள் இலங்கைப் பிரச்சனையில் எல்லைகடந்து தலையிடுவதை நிறுத்த வேண்டும்.
2. பிரித்தானியா இலங்கையை தமது காலணித்துவ நாடாக வைத்திருந்த காலத்தில் இலங்கைக்கு இழைத்துள்ள தீங்குகளுக்கு நஷ்டஈடு செலுத்த வேண்டும்.
3. இலங்கை அரசு இலங்கையில் உள்ள சகல அரசியல் மற்றும் பொது அமைப்புக்களையும் அதன் உறுப்பினர்களையும் சமத்துவத்துடனும் கண்ணியத்துடனும் நடாத்தவேண்டும்
4. புலிகள் மனிதகேடயங்களாக வன்னியில் தடுத்துவைத்துள்ள மக்களை உடனடியாக எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்யவேண்டும்

என்கின்ற கோரிக்கைகளுடன் 7 கோரிக்கைகளை முன்வைத்து பேரணியில் கலந்து கொண்டனர். அங்கு மேற்குறிப்பிட்ட 7 கோரிக்கைகளும் அடங்கிய துண்டுப்பிரசுரம் ஜேர்மன் மொழியில் பிரசுரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

துண்டுப்பிரசுரத்தின் தமிழாக்கம் மற்றும் புகைப்படங்கள் சற்று நேரத்தில் வெளிவரும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com