Thursday, April 30, 2009

நிலமைகள் தகரும் மட்டத்தில் இருக்கின்றது. UNHCR



ஐக்கியநாடுகள் சபையின் அகதிகள் புனர்வாழ்வுக்கான உயர் ஸ்தானிகர் ஆலயம் 160000 மக்கள் வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துள் வந்துள்தை ஊர்ஜிதப் படுத்தியுள்ளது. இவற்றுள் 140000 பேர் வவுனியாவிலுள்ள 32 புனர்வாழ்வு முகாங்களிலும் 11000 பேர் யாழ்பாணத்திலும் 5000 பேர் திருகோணமலையிலும் குடியமர்த்தப் பட்டுள்ளனர்.

ஐநா உயர்தானிக நிலய அதிகாரிகளின் களநிலவரச் செய்திகள் "வடக்கு இலங்கையில் நிலமைகள் பாரதூரமானவை" என்று தெரிவிக்கின்றது. வில்லியம் ஸ்பின்டலர் என்ற ஐநா முகவர் ஒருவர் ஜெனிவாவிலிருந்து கூறுகையில் "இந்தப் புனர்வாழ்வு முகாங்களின் நிலமைகளோ தகர்ந்து கொட்டுப்படக் கூடியவை என்றும் மனிதாபிமான சேவை நிறுவனங்களுக்குமேல் தாங்க முடியாத சுமைகளைச் சுமத்தியுள்ளனவென்றும்" கூறியுள்ளார்.

மக்கள் கூடாரங்கள் ஏதுமின்றித் தாங்கொணாத வெயிலில் வதங்குகின்றனர் என்று இந்த முகவர் அமைப்பு கூறியுள்ளது. அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகுள் வர எத்தனித்த ஆடவர்களும் பெண்களும் சரீரரீதியில் தாக்கப்பட்டுள்ளார்கள் என்று உறுதியான தகவல்கள் உள்ளது என்று இந்த அமைப்பு கூறுகின்றது.

அரசாங்கத்திற்குத் தனது சொந்த மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்று தாங்கள் ஞாபகப்படுத்தியதாக ஸ்பின்டலர் கூறியுள்ளார். அரசாங்கம் அதிக வளங்களைத் தர வேண்டுமென்றும் சனங்களை உள்ளடக்கப் போதுமான அரச கட்டிடங்களையும் காணிகளையும் வழங்கவேண்டும் என்றும் தாம் கோரியதாக அவர் கூறுகின்றார்.

இந்த முகவர் அமைப்பு டுபாயிலிருந்து 3000 குடும்பங்கள் வாழக் கூடிய கூடாரங்களை விமான மூலம் கொண்டுவந்ததாகக் கூறியுள்ளது. இரணடாவது மனிதாபிமான விமானம் 103 மெற்றிக் தொன் நிவாரணப் பொருட்களைக் கொழும்புக்குக் கொண்டு வந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.

உயர் ஸ்தானிகர் அந்தோனியோ கூட்ரெறெஸ் 2 மில்லியன் டொலர் மேலதிக நிதியை சனங்களின் தேவைக்கான கூடாரங்கள், புரதம்போன்ற உணவுப் பொருட்கள் வாங்குவதற்காகக் கொழும்புக்கு ஒதுக்கியுள்ளதாகக் கூறியுள்ளார். இந்த முகவர் அமைப்பு அரசாங்கத்தின் வேண்டுதலுக்கு ஏற்ப உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பராமரிப்புக்காக மேலும் 16.6 மில்லியன் டொலர் நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது. அவசர செலவுக்கு இது தரப்படும் என்று நம்புகின்றோம் என்று இந்த ஐநா முகவர் அமைப்பு கூறியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com