Thursday, April 30, 2009

நிவாரணக் கிராமங்களில் சொந்தங்களை இணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

வவுனியா நலன்புரி நிலையங்கள், இடைத்தங்கல் முகாம்கள், நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுள் ஆங்காங்கே சிதறி இருக்கும் குடும்ப உறவுகளைத் தேடிக் கண்டு பிடித்து ஒரே இடத்தில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

வவுனியா கதிர்காமர் நிவாரணக் கிராமத்தின் இரண்டாவது பகுதியில் நேற்றுக் காலை அமைச்சர் ரிஷாத் விசேட கூட்டமொன்றை நடத்தினார். புலிகளின் பிடிக்குள்ளிருந்து தப்பி வந்த மக்களுள் அரச உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர்கள் போன்றோரும் அடங்குவர்.

இவர்களது உதவியுடன் குடும்ப அங்கத்தவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும் அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

புலிகளின் பிடியிலிருந்து தப்பிவரும் போது குடும்பத்திலுள்ள சிலர் முதலில் பிள்ளைகளையும், சிலர் பெண்களையும் அனுப்பினர். வந்தவர்கள் வவுனியாவில் ஆங்காங்கேயுள்ள இடைத் தங்கல் முகாம்களில் குடும்ப அங்கத்தவர்கள் கட்டம் கட்டமாக தங்க வைக்கப்பட்டதால் சிதறிக் கிடக்க வேண்டிய நிலை உருவாகியது.

தங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது. எங்கே இருக்கிறார்கள் என்ற ஏக்கம், தவிப்பு ஏற்படுவது போல பிள்ளைகளும் இதே தவிப்புடன் இருக் கின்றனர். இதனை கருத்திற் கொண்டே அமைச்சர் ரிஷாத் இந்த நடிவடிக்கையை எடுத்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com