இவரை இனம்காண உதவி கோரும் பாதுகாப்புத் தரப்பினர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்படும் இவரது சடலம் கொழும்பு மரண பரிசோதனைக் காரியாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சுபாஸ் என அழைக்கப்படும் சின்னத்தம்பி பகலவன் எனப்படும் இவரை பாதுகாப்புத்தரப்பினர் கைதுசெய்யமுற்பட்ட போது அவர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்ததாக தெரியவருகின்றது. இவரை கைது செய்யும் போது இவரிடம் தற்கொலை அங்கி இருந்தாக பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இவர் தொடர்பான மேலதிக தகவல்களை பாதுகாப்புத் தரப்பினர் எதிர்பார்த்து நிற்கின்றனர்.
தொலைபேசி இலக்கங்கள் : 0112-662323, 0112-266330, 0112-693825, 0112-662311.
0 comments :
Post a Comment