Tuesday, March 10, 2009

மாத்தறையில் இடம்பெற்ற தேசிய மீலாதுன் நபி அங்குரார்ப்பண வைபவத்தில் தற்கொலைத் தாக்குதல்

மாத்தறை அக்குறஸ்சையில் இடம்பெற்ற மீலாதுன் நபி தின வைபவமொன்றின் போது மாத்தறை கொடபிட்டிய முஸ்லிம் பள்ளிவாசலினுள் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதலை நடாத்தியுள்ளனர். முஸ்லிம்களின் புனித தினங்களுள் ஒன்றான முஹம்மத் நபி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களின் ஜனன தினத்தை முன்னிட்டு இன்று உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மீலாதுன் நபி தின கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் அவ்வாறான கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையிலேயே புலிப் பயங்கரவாதிகளால் தற்கொலைத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளின் தற்கொலைத் தாக்குதலில் அமைச்சர்களான மஹிந்த விஜேசேக்கர மற்றும் பண்டு பண்டாரநாயக ஆகியோர் காயமடைந்துள்ளதுடன்இ 10 பொதுமக்கள் பலியாகியும் 20 பொதுமக்கள் காயமடைந்தும் உள்ளனர். இச்சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டவுடன் பெரும் அதிர்ச்சிக்குள்ளான அதிமேதகு ஜனாதிபதியவர்கள் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளார்.அத்துடன் கொல்லப்பட்ட பொதுமக்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தொpவித்துக் கொண்டுள்ளதுடன் காயம்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்கும் கொழும்புக்கு கொண்டு வருவதற்குமென விசேட மருத்துவர்கள் குழு ஒன்றை அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் ஹெலிகொப்டர் மூலமாக மாத்தறைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கையின் அரசாங்கமானது அனைத்து இன மக்களுக்கும் சம அந்தஸ்து வழங்குவதனை உறுதிப்படுத்தும் வண்ணமாக சிறுபான்மை இன மக்களின் வைபவங்களை தேசிய விழாக்களாக கொண்டாடுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு மேலதிகமாக சிறுபான்மை மக்களின் பிரதான வைபவங்களில் பெரும்பான்மை இன அமைச்சர்களை கலந்துகொள்ள வைத்து நாட்டின் இன நல்லிணக்கத்தையும் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதிலும் காpசனை கொண்டுள்ளது. அதன் காரணமாக குறித்த மீலாதுன் நபி வைபவத்திலும் மத விவகார அமைச்சர் பண்டு பண்டாரநாயகஇ தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சர்மஹிந்த விஜேசேக்கர ஆகியோருடன் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸிஇ அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலீ ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வாறான நிலையில் தமது மிலேச்சத்தனத்தை பறைசாற்றும் வண்ணமாக வணக்கத்தலங்களை இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட புலிகளின் பயங்கரவாத நடவடிக்கை குறித்து இலங்கை மக்கள் அனைவரும் வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com