Tuesday, March 10, 2009

இலங்கை கடற்பரப்புக்குள் அரசாங்கத்தின் அனுமதியின்றி எந்த கப்பலும் வர முடியாது அமைச்சர் போகொல்லாகம.



இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்புக்குள் எந்தவொரு வெளிநாட்டு யுத்தக் கப்பலோ சரக்குக் கப்பலோ அரசாங்கத்தின் அனுமதியின்றி வரமுடியாதென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

அமெரிக்க இராஜதந்திரிகளின் உயர் மட்டக் குழுவொன்று வன்னியில் இடம் பெற்றுவரும் மோதல்களில் தமது யுத்தக் கப்பல்களை ஈடுபடுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை அமைச்சர் போகொல்லாகம முழுமையாக மறுத்தார்.

வெளிநாட்டு யுத்தக் கப்பல்களோ சரக்குக் கப்பல்களோ எமது கடல் எல்லைக்குள் வரவில்லையெனவும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லையெனவும் அமைச்சர் அழுத்தமாக கூறினார். வெளி விவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கில் புலிப் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காகவும் புலிகளின் பிடியில் சிக்கியிருக்கும் சிவிலியன்களை விடுவிப்பதற்காகவும் தாம் பல்வேறு நாடுகளுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி வருவதுடன் உதவிகளையும் நாடியுள்ளோம். தவிர வெளிநாடுகளின் இராணுவ உதவிகள் எமக்கு அவசிப்படாதெனவும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

மோதல்களை மேலும் தீவிரமடையச் செய்து புலிப் பயங்கரவாதிகளை ஒரேயடியாக அழித்துவிட முடியும். ஆனால் நாம் அப்படிச் செய்யாததற்குக் காரணம் சிவிலியன்களே என்றும் அமைச்சர் தெரி வித்தார்.

சிவிலியன்களை பாதுகாப்பான மு¨ றயில் வெளிக்கொணர்வதற்கு அரசாங்கம் தம்மாலான முயற்சிகளை மேற்கொள்வ துடன் சர்வதேசத்தின் உதவிகளை நாடியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இம்மாநாட்டில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அத்துலத் கஹன லியனகே கருத்துத் தெரிவிக்கையில், இதுவரையில் அரச கட்டு ப்பாட்டு பகுதிக்கு 30 ஆயிரத்து 579 சிவிலியன்கள் வருகை தந்திருப்பதாகவும் ஐ.சி.ஆர்.சி. யின் உதவியுடன் இறுதியாக 3 ஆயிரத்து 240 பேர் திருமலை வைத்திய சாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதா கவும் அவர்களுள் 2 ஆயிரத்து 806 பேர் திருமலை வைத்தியசாலையில் அனுமதி க்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

வடக்கிலுள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சகல நவீன மருத்துவ வசதிகளையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் தெரி வித்தார்.

இடம்பெயர்ந்துள்ள சிவிலியன்களின் மருத்துவ வசதிகளுக்காக வவுனியா, மன் னார் மற்றும் செட்டிக்குளம் ஆஸ்பத்திரிக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டில்களை வழங்க இலங்கையிலுள்ள ஐ.நா. அமைப்பு இணக்கம் தெரிவித்திருப்ப தாகவும் அமைச்சர் போகொல்லாகம கூறினார்.

இதேவேளை நேற்றுக் காலை திருகோ ணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது புலிகள் மேற் கொண்டுள்ள ஆட்டிலறி தாக்குதலை அரசாங்கம் சார்பாக தான் வன்மையாக கண்டிப்பதாகவும் அமைச்சர் போகொல் லாகம இச் செய்தியாளர் மாநாட்டின் போது குறிப்பிட்டார்.

இம்மாநாட்டில் நீதியமைச்சின் செய லாளர் சுகந்த கம்லத், அத்தியாவசிய சேவைகள் பிரதி ஆணையாளர் எ. லிய னகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நன்றி தினகரன்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com