தொடர்ந்து முன்னேறும் படையினருக்கு புலிகள் பலத்த எதிர்ப்பு. பல படையினர் காயம்.
வன்னியில் புலிகளிடம் எஞ்சியுள்ள சிறியதோர் நிலப்பரப்பையும் தமது கட்டுப்படாட்டினுள் கொண்டுவரும் நோக்கில் பல முனைகளாலும் முன்னேறும் படையினருக்கு புலிகள் கடந்த 48 மணிநேரங்களில் பலத்த எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.
புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, குப்பிளான்குளம், புதுமாத்தளன் மற்றும் முல்லைத்தீவு நகருக்கு அண்டிய பிரதேசங்களில் புலிகள் தமது பலத்த எதிர்ப்பைக் காட்டியுள்ளனர். அங்கு இடம்பெற்ற சண்டைகளில் பல படையினர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
மேற்படி யுத்தத்தில் புலிகள் தரப்பில் 10க்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டதாக களத்தில் முன்நிலைகளில் உள்ள ஸ்னைப்பர் தாக்குதல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment