புதுக்குடியிருப்பில் மேலுமோர் இரண்டு மாடி நிலக்கீழ் மாளிகை.
சில தினங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட கரும்புலிகள் முகாமில் இருந்து கிழக்கே நேற்று மேலும் ஒரு புலிகளின் நில்கீழ் இருமாடி கொகுசு வீடொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பெல்.கேணல் லலந்த கமகே தலமையில் செயற்பட்டுவரும் 681 படையணியினர் மேற்படி வீட்டை கண்டு பிடித்துள்ளனர்.
சாதாரண மக்களின் வசிப்பிடங்களின் மத்தியில் மிகவும் திட்டமிட்ட முறையில் இவ்வீடு அமைக்கப்பட்டுள்ளது. வீட்டின் ஒவ்வொரு சுவரும் குண்டுத்தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க கூடியவாறு இரண்டரை அடி அகலம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. வீடு முற்றாக குளிரூட்டப்பட்டுள்ளதுடன் அங்கு மிகவும் ஆடம்பரமான தொலைக்காட்சிப் பெட்டிகளும் தளபாடங்களும் காணப்படுவதாக களமுனையில் நிற்கின்ற ஐரிஎன் தொலைக்காட்சியின் நிருபர் அறிவித்துள்ளா.
மேலும் அவ்வீட்டில் அரசினால் பொதுமக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மருந்து வகைகள் பெட்டிகள் உடைக்காமல் அங்கு காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
0 comments :
Post a Comment