அல் ஹம்துலில்லாஹ். சந்தோஷம்,சந்தோஷம், ரொம்ப சந்தோஷம். - முறாவோடை அச்சிமுகம்மது.

என்னடா இது சோனிக் காக்காமார் மீது கை வைக்காமல் இருக்கின்றார்களே! திருந்திட்டாங்களோ என எண்ணி முடிப்பதற்குள்……….. மாத்தறையில் ஜூம்ஆ பள்ளிவாசல் அடியில், எம்பெருமானார் முகம்மது நபி (ஸல்)பிறந்த தினத்தில்………….சோனிகளெல்லாம் கொந்தளித்து, ஆர்ப்பரித்து, கண்ணுக்கு கண். பல்லுக்கு பல் எனப் புறப்படுவார்கள். எரியிற வீட்டில் கொஞ்சம் புடுங்கலாம் என யோசிக்கின்றீர்களா? அது நடக்கவே நடக்காது அப்பனே. 77 களில் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு ஆயுதம் தூக்கியது போல்தான் ,நாங்களும் 84 களில் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு தூக்கினோம். உனக்கெதுக்கு இந்த தேவையில்லாத வேலை என உம்மாமார் சுளகாலையும், அகப்பைக் கணையாலையும் அடித்தும், வாப்பாமார் மரினா பெல்ட்டாலேயும், கிளிசறியாக் கம்பாலயும் வகுந்தும், மார்க்கப் பெரியார்களும், உலமாக்களும் இது தருணமல்ல, நமக்கு இது தேவையுமல்ல என ஆலோசனைகளைச் சொல்லியும் இரண்டு வருடங்குளுக்குள் எங்களை மனிதர்களாக்கிவிட்டார்கள்.
இருந்த இரும்புகளையெல்லாம் பஞ்சிகாவத்தை இரும்புக் கடைக்காறனுக்கு நிறுத்துக் கொடுத்துவிட்டு… வணக்கத்துக்கு பாத்திரமான நாயகன் இறைவன். அவன் ஒருவனைத்தவிர வேறு எந்த நாய், பேய், பூதம், சிங்கம், புலிகளையும் வணங்குவதில்லை என
எங்களுக்குள் பாரிய கடிவாளங்களை போட்டுக் கொண்டுவிட்டோம். (கொசுறு: காத்தான்குடி வங்கிக் கொள்ளைக்காக தம்பாம்பிள்ளை மகேஸ்வரன் அண்ணாவுக்கு மட்டக்களப்பு சித்தார்த்தனுடாக வாங்கிக் கொடுத்த “றைபிள்”க்கும்“3.6 ரிவோல்வருக்”கும் இன்னும் பணம்கொடுக்கப்படவில்லையாம்.அண்ணா எங்கிருந்தாலும் அந்த கணக்கை பைஸல் பண்ணிடுங்கோ. பிளீஸ் அட அங்கேயும் ஒரு சோனிதான் ஹெல்ப் பண்ணியுள்ளானா என யோசிக்காதீர்கள். சோனி யாருக்குத்தான் உதவவில்லை. எல்லா இயக்கங்களுக்குமல்லவா உதவினான். இறுதியில் இந்த விடாக்கண்டன் ஆட்சியில்தானே சோனிக்கு ரொம்ப நல்ல பெயர் தந்து சோனியின்ட கழுத்தில கத்திவைத்து அறுக்கத் தொடங்கினார்கள்.)
நீங்கள்தான் இன்னும் அதைக் காவிக் கொண்டு “அங்க தேள் கொட்டினால் இங்க நெறிகட்டும்”
என கணக்குப் போட்டு கந்தலாகிக் கொண்டிருக்கின்றீர்கள். கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என
புறப்பட்ட அந்த யாசீர் அரபாத்தே கடைசியில் ஒலிவ் இலையை சுமந்துதான் சமரசத்துக்கு வந்தார். லெபனானில் பயிற்சியின் போது என்ன சொல்லித் தந்தார்கள். முதலில் யுத்த நாகரிகம் அல்லவா சொல்லித் தந்தார்கள். முகம்மது நபி, அலி ரலி, உதுமான் ரலி, உஹது யுத்தம், பதுறு யுத்தம் என பல உதாரணங்களைச் சொல்லி தந்து விட்டல்லவா யுத்த தந்திரம் படித்து தந்தார்கள்.
தாண்டி வந்தேன் கடலை, வாங்குவேன் உன் உடலை, அணிவேன் மாலையாக உன் குடலை, அனுப்புவேன் சுடலை, ஆனால் என் முருகன் கட்டளை இடலை, அதனால் நான் உன்னை தொடலை என்ற பரம்பரையில் வந்தவர்களல்லவா நாம். எல்லா தர்மங்களையும் தூக்கி கடாசிவிட்டு “நானே ராஜா நானே மந்திரி, நான்தான் எல்லாம்” என்ற மதம் பிடித்ததனால் தானே இவ்வளவு ஒப்பாரியும், ஓலமும். விபரமுள்ள தமிழ் சகோதரர்களே ! மாத்தறைப்பகுதியில் கிணறுகள் தோண்டும் போது பாரிய பாறாங்கற்கள் பூமிக்கடியில் படிந்து கிடக்கும். அப்போது அப்பாறைகளை உடைக்க வெடி வைப்பார்கள். அதற்குரிய வெடி மருந்துகளை (ஜெலிக்னைட், பொட்டாசியம் நைத்திரேற்று, கரிமருந்து, கந்தகம், திரி,கெப் ) காயலாங்கடைகளில் வாங்க முடியாது. ஜி.எஸ், ஏ.ஜி.ஏ, ஜீ.ஏ என பல பேரிடம்
கடிதம் பெற்று , அப்பகுதி பொலீஸ் நிலையத்தில் நேரமும் பெற்று, பில்டிங் மெற்றீரியல் கோப்பிரேஷனில் கால்கடுக்க நின்று “இத்தனுண்டு பொருளை”வாங்கி வருவார்கள்.
அதே போல் மாணிக்க கல் தோண்டுபவர்கள், கருங்கல் உடைப்பவர்கள் இத்தனுண்டு மருந்தைப் பெற நாயாய் அலைவார்கள். இப்போது விபரம் புரியாமல் அங்காங்கே அலைந்து திரியும் (வாழ்வதா ? சாவதா ? ) இந்த மனித வெடிகுண்டு பிள்ளைகளுக்கு இந்த விடயத்தை எத்தி வைக்க முடியாதா? அவ்வளவு பொருட்களையும் நிறுத்து கொடுத்து விட்டு வெளிநாடுகளுக்கு அம்பேல் ஆகி விட முடியாதா? இந்த சனி தோஷம் இன்னும் பல வருடங்களுக்கு நம்மை ஆட்டும் போல் இருக்கின்றதே ! இப்போதும். இனிமேலும் நாங்கள் திட்டப் போவதில்லை.
ஆண்டவா! யா அல்லாஹ்! மண்டை நிறைய மூளையிருப்பவர்கள் என்று சொல்லப்படுகின்ற அந்த வட மாகாண ஆட்டுக்கூட்டத்திலிருந்து ஒரு கறுப்பாடு ஒரே ஒரு கறுப்பாடு இதற்கு மட்டும் தலை நிறை களிமண். இந்த ஆடு தலை தெறிக்க ஓடி புதுக்குடியிருப்புக்குள் சிக்கி விட்டது யா அல்லாஹ். இந்த ஆட்டுக்கு பின் மண்டை ஓட்டுக்குள் மட்டும் ( என்ட பயோலஜி வாத்தியார் அப்படித்தான் சொல்லித் தந்தார். பின் மூளைக்குத்தான் சிந்திக்கும் திறன் உண்டாம் ) கொஞ்சம் மூளையை வைத்து விடு ஆண்டவனே.
அது ரொம்ப நல்லாடு ஆண்டவனே. கொஞ்சம் கேட்பார் புத்தியை கேட்டுவிட்டது ஆண்டவனே. ஆடு மேய்ப்பவராக இருந்து ஆடும் மேய்த்துக் கொண்டு 110 கோடி உலக முஸ்லீம்களை இன்றும் ஒரே குடையின் கீழ் கட்டிப்போட்டுள்ள அந்த முகம்மது நபி (ஸல்) அவர்களைப் படைத்த ஆண்டவனே பிளீஸ் மாத்தறையுடன் எல்லாமே முடிந்து விடட்டும் ஆண்டவனே.
பாரசீகத்தின் (அதுதான் அரேபியாவில்) ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்கள் ஒரு இருட்டிய வேளை வீதிகளில் அலைந்து திரிந்து கொண்டிருந்திருக்கின்றார். இதைப் பார்த்த ஒரு பிரஜை
கலீபா அவர்களே ஏன் இவ்வளவு பதட்டம், எதை தேடுகின்றீர்கள் எனக் கேட்டுள்ளார். மந்தையில் உள்ள ஒரு ஆட்டைக் காணவில்லை அதை தேடிக் கொண்டிருக்கின்றேன் என்றாராம். அதற்கு ஏன் பதட்டப்படுகின்றீர்கள். ஒரு வேலை ஆளை வைத்து தேட வேண்டியதுதானே என்று இவர் கூற, இல்லை இல்லை இது எனது தவறு. நான்தான் அந்த ஆட்டை கண்டு பிடித்து பட்டியில் அடைக்க வேண்டும் என்றாராம். அதே போல் ஆட்டை கண்டு பிடித்து பட்டியில் போய் அடைத்த பின்னர்தான் வீட்டுக்கே போனாராம்.
இதைத்தானே கண்ணகி அங்கம் புழுதி பட அரிவாழி நெய்பூசி பாண்டியன் சபையில் போய் நின்ற போது பாண்டியனும், முல்லைக்கு தேரீந்த பாரிக்களும் செய்தார்கள். செய்கின்றார்கள். நீங்கள் புதிதாக எந்தப் புத்தகத்தில் நரபலி நாகரீகம் படித்தீர்கள். படிக்கின்றீர்கள். யாரும் ஒட்டக் கூத்தர்கள் அல்லது குணங்குடி மஸ்தான்கள் வன்னிக்காட்டுக்குள் குறி சொல்கின்றார்களோ??
நீங்கள் இடுப்பில ஏறினியள் எல்லோரும் ஓடி விட்டார்கள். அப்புறம் தோள் பட்டையில ஏறி உட்கார்ந்தயள். எல்லோரும் ஒழித்து விட்டார்கள். அப்புறம் தலையில ஏறினயள் எல்லோரும்
பயந்துட்டாங்கள். அப்புறம் சாஸ்டாங்கமாக தலையில உட்கார்ந்து கொண்டு ஒண்ணுக்கு (மூத்திரம்) அடித்தயள். எல்லோரும் செத்துட்டாங்கள். இப்போ புதுசா ரொம்ப கடுப்பா செத்த
பிணங்களின் மீது மலங்களிக்க முயற்சிக்கிறாப் போல லேசா தெரியுதே. தலைவா எங்களுக்கு வசை பாட வராதே தலைவா. சபிக்கவும் யாரும் சொல்லித் தரவில்லையே ஆண்டவனே. என்ன கொடுமை இது இறைவா.
காத்தான்குடிக் காக்காமாரை காவு வாங்கினீர்கள், ஏறாவூர் தாத்தாமாரை காவு கொண்டீர்கள்,
அக்கரைப்பற்றில் ஆடறுப்பது போல் மக்களை அறுத்தீர்கள், மூதூரில் முரசறைந்தீர்கள்,
முருங்கனில் சோனி ரத்தத்தில் முத்துக் குளித்தீர்கள் ,யாழ்ப்பாணத்தில் சோனியை மனிதக்காவடி ஆடினீர்கள் மொத்தமாக “காட்டிக் கொடுத்து விட்டான் சோனி” என்று பத்திரகாளி ஆடினீர்களே. சரி வட கிழக்கு சோனிகள்தான் ஏதோ செய்திருப்பார்களோ என தென்பகுதி சோனிகளும் கொஞ்சம் வாளா விருந்து விட்டோம்.
மாத்தறையில அடியும் தெரியாம, நுனியும் தெரியாம, 1400 வருடங்களுக்கு முதல் பிறந்த
எங்கள் நெய்னார் முகம்மது நபி ( ஸல் ) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாட பள்ளி
வாசலுக்குப் போன “அந்த மாத்தறைச் சோனி” யாரைக் காட்டிக் கொடுத்தான் ஆண்டவனே. அமெரிக்கன் திருகோணமலை துறை முகத்துக்கு பின் மறைத்து வைத்துள்ள சற்லைட்டைப் போல் மாத்தறைச் சோனிக்காக்காமார் எல்லாம் சேர்ந்து பள்ளி வாசல் கபுறு(அடக்கஸ்தலம்)க்
குள்ள சற்லைட் வைச்சிருக்காங்க. அதனுடாக சிங்களஅரசுக்கு தகவல்கள் போகின்றது என போகிற போக்குல பொட்டர் தகவல் கொடுத்தாரோ என்னவோ! அல் ஹம்துலில்லாஹ். எல்லாப் புகளும் அந்த இறைவன் ஒருவனுக்கே.
ஐயா. ஐயனே பொட்டண்ணா நீங்க ஓரு வகையில நல்லவர்தான்.ஒத்துக்குறோம். என்.ஜி.ஓ.என்ட பேர்வையில உள்ளுக்க வந்து இப்ப ஒற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த வெள்ளைத் தொரமார்களுக்கும், மருத்துவக் குழு என்ற பெயரில் புல்மோட்டையில் களமிறங்கி இருக்கும் மகாத்மாக்களின் பேரப் பிள்ளைகளுக்கும் விளக்கம் அழித்து விட்டு சோனிக்கிட்ட வாங்கண்ணா. அப்புறம் நம்ம கணக்கு வளக்கப் பார்ப்போம். அத விட்டுப் போட்டு கறி வேப்பிலை யாவாரம் சோனிக்கிட்ட பண்ணாதீங்கோ அண்ணா.
அடிக்கும் போது மொத்த சிறிலங்கா சோனிக்கும் அடி அடியென அடித்து ஆப்பு வைத்துவிட்டு,
அப்புறம் சிங்களவன் அடிக்கும் போது பங்கறுக்க இருந்து கொண்டு மீசையில மண்படல என்று
புது வியாக்கியானம் வேறு சொல்வது. பங்கர் திருமகனே ! புதுக்குடியிருப்பு ராசாவே. வல்வட்டித்துறையின் வக்கிரமே மரபு வழி யுத்தம் நடாத்தி சிறிலங்கா ராணுவத்தை ஆட்டம் காண செய்துள்ளோம் என வடை பல தின்று கடை பல நடாத்தி பணம் சேர்த்து திரியும் தொழிலதிபரே மரபு வழி யுத்தம் என்றால் என்னவென்று தெரியுமா உமது ஜால்ராப்புகளுக்கு. இத்தனை மணிக்கு இந்த இடத்துக்கு வா ஒத்திக்கு ஒத்தியா நிண்டு மோதிப் பார்ப்போம் என்பது. நடுச்சாமம் போய் தூங்கிக் கொண்டிருக்கின்ற சிங்களவனை எல்லாம் சாக்காட்டி போட்டு மரபு வழிப்போர். ஓழிச்சிருந்து சுட்டுப் போட்டு அது கொரில்லாப் போர். சரி. இதென்ன போர். பள்ளிக்கு தொழப்போற சோனிக் காக்காமார மட்டும் குறி பார்த்து கொல்லுற போர்.
ஐயா. வேலுப்பிள்ளையாரே எங்கே ஐயா இருக்கின்றீர்கள். உங்களையும் வச்சிருக்காரோ இல்ல செல்லக்கிளி, சந்ததியார் (காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க….. ) கதைதானோ. ஐயா வேலுப்பிள்ள அப்பு அங்க யாழ்ப்பாணத்துல பிள்ளைகள் பிறந்தவுடன் நேர காலத்தை குறித்துக் கொண்டு சாத்திரியாருக்கிட்ட ஓடி குறிப்பெழுதுவாங்களாமே. உங்கட செல்லத்துக்கு குறிப்பெழுதினீர்களா ஐயா. அத நாங்க பார்க்கணும் ஐயா. அடுத்த வெள்ளிக் கிழமை நாங்க ஜூம்ஆவுக்கு போக வேண்டும்.
“இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன். அல்லாஹ_ம்ம ஃஜூர்னி ஃபீ முஸிபதீ வஅக்லிஃப்லீ கைரம் மின்ஹா” நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்விற்கே உரியவர்கள். நாங்கள் அவன் பக்கமே செல்லக் கூடியவர்கள். இறைவா! எனக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு அவர்களுக்கு கூலியைக்கொடு! அதைவிட சிறந்ததை எனக்கு வழங்கு. யா அல்லாஹ் அந்த அப்பாவி வன்னி மக்களுக்கும் நல்வழிகாட்டு நாயனே.
10-03-2009 VIII
0 comments :
Post a Comment