அரசியல் தீர்வு முயற்சியில் ஒரு திருப்புமுனை.
புலிகளுக்கு எதிரான இரா ணுவ நடவடிக்கை இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. புலிகள் முழுமையாகத் தோற் கடிக்கப்படுவது உறுதியாகிவிட்டது.இந்த இராணுவ நடவடிக்கையில் படை யினர் அடையும் வெற்றி இனப் பிரச்சினையைப் பொறுத்தவரையில் ஒரு திருப்பு முனையாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. புலிகள் தோற்றால் தமிழருக்கு எதிர்காலம் இல்லை என்ற கருத்து சிலரால் பரப்பப்படுகின்றது.
இது புலிகளின் ஆதரவு சக்திகளால் தோற்றுவிக்கப்பட்ட மாயை. இதுவரை கால மும் தமிழ் மக்களின் துன்பதுயரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்ததற்குப் புலிகளே அடிப்படைக் காரணம் என்பது தான் உண்மை. புலிகள் இல்லாத நிலையில் விமோசனத்துக்கு இடமுண்டு.
இனப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் அரசியல் தீர்வு காண்பது தான் நடைமுறைச் சாத்தியமானது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் நடை முறைக்கு வந்த மாகாண சபை முறை அதிகாரப் பகிர்வின் ஆரம்பம். வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைந்த அலகாகக் கொண்ட மாகாண சபை தொடர்ந்து செயற்பட முடியாத நிலையை ஏற்படுத்தியதில் புலிகளுக்குப் பிரதான பங்கு உண்டு. அடுத்த பங்காளர் அன்றைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாச. மாகாண சபையின் செயற்பாட்டுக்கு வேட்டு வைத்ததை அரசியல் தீர்வுக்குத் தடை யான செயலின் ஆரம்பம் எனலாம்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கணி சமான நிலப்பரப்பைத் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்த புலிகள் அர சியல் தீர்வுக்குத் தடையான செயலை மேலும் வலுப்படுத்தினார்கள். தமிழ்க் கட்சிகளுள் சிலவற்றைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஓரணியா கத் திரட்டியமை இனப் பிரச்சினையின் தீர்வுக்கு எதிரான செயற்பாட்டுக்கு அரசி யல் முகம் கொடுக்கும் முயற்சியாகும்.
தனிநாடு பற்றிய கனவில் மிதந்ததாலேயே புலிகள் அரசியல் தீர்வு முயற்சிகளைத் தொடர்ச்சியாகக் குழப்பி வந்தனர். யதார்த்தத்தை விளங்கிக்கொள்ளாமல் தனி நாடு காலடிக்கு வந்துவிட்டது என்ற வீணான நம்பிக்கையுடன் செயற்பட்டார்கள். தனியான நிர்வாகத்தையும் தனி யான இராணுவத்தையும் தனியான கடற் படையையும் கொண்டிருப்பதாகவும் நாட்டுதய கட்டம் Proto State Phase ஆரம் பித்துவிட்டது என்றும் பிரசாரம் செய்தார்கள். இப் பிரசாரத்தின் போலித்தன் மையை இப்போது அவர்கள் உணர்ந்திருப்பார்கள். புலிகளின் பிரசாரத்தை நம்பிய மக்களும் உணர்ந்திருப்பார்கள்.
புலிகள் தனிநாட்டு இலக்கை இன்றும் கைவிடவில்லை. எந்தக் காலத்திலும் அவர்கள் அரசியல் தீர்வு முயற்சியைக் குழப்பாதிருக்க மாட்டார்கள். எனவே அரசியல் அரங்கில் புலிகள் இல்லாத நிலையிலேயே அரசியல் தீர்வு முயற்சி சாத்தியமாகும். இன்னொரு விதமாகக் கூறுவதானால் புலிகளின் தோல்வி அர சியல் தீர்வின் ஆரம்பம் எனலாம்.
புலிகள் தோல்வி அடைந்தவுடன் அரசி யல் தீர்வு தானாக வந்துவிடாது. பய னுறு வகையில் மேற்கொள்ளப்படும் முய ற்சியின் விளைவாகவே அரசியல் தீர்வை அடைய முடியும். தலைவர்கள் அரசியல் தீர்வை உறுதியான லட்சியமாகக் கொண்டு செயற்பட்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
தமிழகத்திலிருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்தும் வேறு வட்டார ங்களிலிருந்தும் வரும் யுத்தநிறுத்தக் கோரி க்கையை இந்தப் பின்னணியிலேயே பார்க்க வேண்டும். இனப் பிரச்சினை யின் தீர்வுக்குக் குறுக்கேயுள்ள தடை நீங்க வேண்டுமா அல்லது அது தொடர வேண்டுமா என்பதே இன்று தமிழ் மக்க ளின் முன்னாலுள்ள கேள்வி.
Thanks Thinaharan
0 comments :
Post a Comment