புலிகளின் விமான எதிர்ப்பு ஏவுகணை ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் செயற்படும் விசேட பொலிஸ் பிரிவினர் நேற்று திங்கட் கிழமை
தொப்பிகல காட்டில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த விமான எதிர்ப்பு ஏவுகணை ஒன்றை மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள புலி உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இவ் ஏவுகணை மீட்க்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு பிரதேசத்தில் இருந்து புலிகள் பின்வாங்கும் போது இவ்வாறான முக்கிய ஆயுதங்களை ஆங்காங்கே மறைத்தனர் எனவும் அவற்றை மீண்டும் எடுத்துக்கொள்ள முடியாத நிலைக்கு புலிகள் தள்ளப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment