Thursday, February 19, 2009

புலிகளின் பாரிய எரிபொருள் கிடங்கு கைப்பற்றப்பட்டுள்ளது.


புதுக்குடியிருப்பு மேற்கே நகரை அண்டிய பிரதேசத்தை கைப்பற்றிய படையினர் புலிகளின் பாரிய எரிபொருள் விநியோகக் கிடங்குத் தொகுதியையும் கைப்பற்றியுள்ளனர். 03 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்த இந் நிலையப்பகுதி புலிகளால் அதிபாதுகாப்பு வலயமாக நிர்வகிக்கப்பட்டு வந்ததாகத் தெரியவருகிறது.

டீசல், பெற்றோல், மண்ணெண்ணை என பிரிவு பிரிவுகளாக நிலத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பரல்களில் புதைக்கப்பட்டிருந்ததுடன் அவற்றின் பரிமாற்றத்திற்காக சிறந்தமுறையில் குழாய் இணைப்புக்களும் அமைக்கப்பட்டிருந்தன.

பாரிய அளவில் சேமிக்கப்பட்டிருந்த மேற்படி எரிபொருட்கள் அரசாங்கத்தினால் மக்களுக்கு அனுப்பப்பட்டிருந்தவை என்றும், அவற்றை மக்களுக்கு வழங்காமல் புலிகள் களஞ்சியப்படுத்தியிருக்கிறார்கள் எனவும் அரசதரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

வன்னியில் மக்கள் குப்பிலாம்பு ஒன்றிற்கு எரிபொருள் இல்லாமல் தவிக்கையில் புலிகள் இவ்வாறு எரிபொருட்களை முடக்கி வைத்திருந்த செயல் கண்டிக்கத்தக்கதாகும்.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com