Saturday, January 3, 2009

உலகின் கவனம் இலங்கையின் பக்கம் அரசியல் தீர்வுப் பாதையின் முட்டுக்கட்டை நீங்கியது

புலிகள் இயக்கத்தின் நிர்வாகத் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி நகரத்தை அரச படையினர் முற்றாகக் கைப்பற்றியதன் மூலம் இலங்கை உலகின் கவனத்தை ஈர்ந்துள்ளதாக அரசியல் தலைவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கைப் படையினர் அடைந்துவரும் வெற்றியால் முழு உலகின் கவனமும் இலங்கை மீது திரும்பி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதென்பது மிகவும் சவாலான ஒரு காரியமாக இருந்தாலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தளராத தலைமைத்துவத்தின் கீழ் படையினர் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள அரசியல் தலைவர்கள், பயங்கரவாதத் தாக்குதல்களால் உயிரிழந்த மற்றும் பல்வேறு உபாதைகளுக்கு உள்ளான ஆயிரக் கணக்கான மக்களுக்கு கிளிநொச்சி வெற்றியைச் சமர்ப்பணமாக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதத்துடன் 25 ஆண்டுகளுக்கு மேலாக வாழ வேண்டிய நிலைக்கு உள்ளாகியிருந்த அப்பாவித் தமிழ் மக்களுக்கு தமது உரிமைகளுடன் சமாதானமாக வாழ முடியுமென்பது கிளிநொச்சி மீட்கப்பட்டதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பான அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் ஏற்பட்டிருந்த பாரிய முட்டுக்கட்டை நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, இந்த வெற்றியானது இலங்கை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்பட வேண்டியதாகுமென்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக கரையோரத்திலும் பாதுகாப்பு

கிளிநொச்சியை இலங்கை இராணுவத்தினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதால், விடுதலைப் புலிகள் தமிழகத்திற்குள் கடல் வழியாக நுழையாமல் தடுக்க தமிழக கடலோர பகுதியில் தீவிர ரோந்து பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியதாக தமிழக செய்திகள் தெரிவித்தன.

புலிகளுக்கு படையினர் புகட்டிய சிறந்த பாடம்

கிளிநொச்சியை மீட்டதன் மூலம் கிடைத்த வெற்றியானது முழு இலங்கை மக்களுக்கும் கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.

பயங்கரவாதத்திலேயே ஊறிப் போன பயங்கரவாதத்துக்கே பழக்கப்பட்டுப் போனவர்கள் கிளிநொச்சியை மீட்பது பயங்கரமான கனவு என்றார்கள்.

எனினும் மக்களின் கனவு பயங்கரவாதிகளின் கனவை

தகர்த்தெறிந்து விட்டது. மக்களின் ஆசீர்வாதத்துடன் படையினர் மக்களின் கனவை நனவாக்கியுள்ளனர். உலகத்திலேயே மிக மோசமான பயங்கரவாதிகள் என வர்ணிக்கப்பட்ட புலிகளுக்கு வரலாற்றில் மிகவும் பெறுமதியான பாடத்தை எமது படையினர் புகட்டியுள்ளார்கள். புலிகளின் கோட்டைகள் சரிந்து கொண்டிருக்கின்றன.

பயங்கரவாதிகளால் இன்று வரை தகர்த்தெறியப்பட்டது மக்களின் எதிர்காலம், அவர்களது நல்வாழ்வு, சுதந்திரம், அத்துடன் இந்நாட்டின் பொருளாதாரம். எவ்வாறாயினும் வடக்கு, கிழக்கு மட்டுமல்ல நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள மக்களின் அபிலாஷைகள், தேவைகளை உணர்ந்து அவற்றை பூர்த்தி செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் இதுவே அரசின் நோக்கமுமாகும்.

சமாதான பிரியர்களுக்கு கிடைத்த வெற்றி

கிளிநொச்சி நகரத்தை படையினர் முழுமையாக விடுவித்தமையானது இலங்கை வரலாற்றில் பொன் னெழுத்துகளால் பதியப்பட வேண்டிய ¦.பரு வெற்றியாகு மென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கருதுகின்றது. இது சமாதானத்தை விரும்பும் சகல இனங்களையும் சார்ந்த இலங் கையர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும்.

சேனாதிபதி என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 2009 ஆம் ஆண்டை படை வீரர்களின் வெற்றி ஆண்டாக அறிவித்து இரண்டு நாள் கடந்த வேளையில் இந்த வெற்றியை அடைந்தமை, அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுவாக்கியுள்ளது.

ஒருபோதும் தோல்வியடையச் செய்ய முடியாதென்றும், அரச படைகள் கிளிநொச்சியைக் கைப்பற்றுவது வெறும் கனவாகுமென்றும் பிரசாரம் செய்த வேலுப்பிள்ளை பிரபாகரன் வரலாற்றிலேயே படுதோல்வியைச் சந்தித்துள்ளார். கொடூரமான பயங்கரவாதத்தை ஒழிப்பது சவாலான விடயமென்றாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தளராத தலைமைத்துவத்தின் கீழ் அது வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. மூன்று தசாப்த காலமாக இலங்கைக்குப் பயங்கரவாத அழிவுகளைத் தந்த புலிகளின் இதயமாக விளங்கிய கிளிநொச்சி நகரத்தை தற்போது படையினர் தமது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக உயிரிழந்த மற்றும் பல்வேறு உபாதைகளுக்கு உள்ளான ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த வெற்றி சமர்ப்பணமாகும்.

தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும், கொடுமைகளுக்கும் உள்ளாகியுள்ள கிளிநொச்சி முல்லைத்தீவு பகுதிகளின் அப்பாவி மக்களும் இந்த வெற்றியை ஆசிர்வதிப்பார்களென்பதில் சந்தேகமில்லை.

கனவு நிறைவேறியது


எதிர்காலத்தில் அரசாங்கத்தின் மேலும் பல கனவுகள் நனவாகும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

கிளிநொச்சியை வெற்றிகொண் டது போன்று இன்னும் பல வெற்றிகள் காத்துக் கொண்டி ருக்கின்றன.

பிரபாகரனால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமையிலிருந்து அப்பாவி

தமிழ் மக்களை மீட்டெடுப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. கிழக்கு மற்றும் கிளிநொச்சி விடுவிக்கப்பட்டது போன்று ஆணையிறவையும், முல்லைத்தீவையும் நிச்சயம் படையினர் விடுவிப்பர். அது வெகு தூரத்திலில்லை. அன்றைய தினமும் அந்த வெற்றி பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும்.

கிளிநொச்சியை கைப்பற்றுவது என்பது மஹிந்த ராஜபக்ஷவின் பகல் கனவாகும் என்றும் புலிகளின் தலைவர் பிரபாகரனும், பா. நடேசனும் அண்மையில் கூறியிருந்தனர். அந்தக் கனவு இன்று உண்மையில் நனவாகியுள்ளது எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் என்றார்.ஜனநாயகத்துக்கு கிட்டிய வெற்றி

கிளிநொச்சியை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியமை ஜனநாயகத்திற்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். இதனை விடுவிப்பதற்காக சிறந்த வழிகாட்டல்களை வழங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளர் உட்பட முப்படையினருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். கிழக்கை முழுமையாக

விடுவித்து அங்குள்ள மக்களுக்கு பல்வேறு சலுகைகளையும், அபிவிருத்தித் திட்டங்களையும் அரசாங்கம் வழங்கி வருவது போன்று, எதிர்காலத்தில் வடக்கிலுள்ள தமிழ் மக்களும் இது போன்ற நன்மைகளை அடைவதற்கு இது முதற் கட்ட வெற்றியாகும் என்றார்.

இந்த வெற்றியை உறுதி செய்ய எதிர்காலத்தில் பல்வேறு அபிவிருத்திகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் தெரிவித்தார்.பிரபாகரன் சரணடைய இதுவே இறுதி சந்தர்ப்பம்


எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளின் உயிரையும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உயிரையும் காப்பாற்றிக் கொள்வதற்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும். புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு படையினரிடம் சரணடைவதன் ஊடாக இவ்விறுதிச் சந்தர்ப்பத்தை பிரபாகரன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கிளிநொச்சி படையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமை தொடர்பாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையையடுத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் நடைபெற்ற மோதல்களில் அப்பாவி இளைஞர்கள், யுவதிகளின் உயிர்கள் பலியாகின. இன்னமும் பலியாகத் தேவையில்லை. ஆயுதங்களை கீழே வைத்து அரசியல் நீரோட்டத்துக்குள் வருவதன் ஊடாக சுபீட்சமான ஒரு எதிர்காலத்தை அடையலாம்.

அப்பாவி இளைஞர்களின், யுவதிகளின் உயிர்கள் பலியாவதை தடுக்கலாம். எனவே, புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதங்களைக் களைந்து சரணடைய வேண்டும் என்றும் கருணா எம்.பி. கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் கிளிநொச்சியை கைப்பற்றிய படையினருக்கும் ஜனாதிபதிக்கும் முப்படைத் தளபதிகளுக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

வன்னி மண் முழுமையாக இன்னும் சில நாட்களில் படையினரால் மீட்கப்பட்டு அங்கு அகதிகளாக்கப்பட்டு அடக்கு முறைக்குள் அடங்கிக் கிடக்கும் எமது உறவுகள் பிரபா கும்பலின் பிடியிலிருந்து மீட்கப்படும் போதுதான் அனைத்துலக நாடுகளில் வாழும் உறவுகள் நிம்மதி அடைவார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

சிதைந்து கிடக்கும் எமது தமிழ்ப் பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்பி ஒளி பொருந்திய ஓர் அபிவிருத் திப் பாதையில் மக்களையும் தேசத்தையும் வழிப்படுத்தி எம்மக்கள் நிம்மதியான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க ஜனநாயக வழியே ஒரே தீர்வு என்பதை பிரபாகரன் உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை.

பாரிய முட்டுக்கட்டை தகர்ப்பு

இருபத்தைந்து வருடகாலமாக பயங்கரவாதத்துடன் வாழவேண்டி யிருந்த அப்பாவித் தமிழ் மக்களுக்கு, தமது உரிமைகளுடன் சமாதானமாக வாழ முடியு மென்பது கிளிநொச்சி வெற்றியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புலிகள் இயக்கம் தமது அரசியல் கோட்டையை இழந்துள்ளதால் தமது இராணுவக் கோட்டையைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில்

ஈடுபடக் கூடும். முழு உலகின் கவனமும் இலங்கை மீது திரும்பியிருக்கும் இந்த வேளையில் இந்த வரலாற்றுக் காரியத்தைச் செய்வதற்கு பாதுகாப்புப் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கி மக்கள் அமைதியுடனும், விழிப்புடனும் செயற்பட வேண்டும்.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பான அரசியல் தீர்வொன்றுக்குச் செல்வதில் இருந்த பாரிய முட்டுக்கட்டை நீங்கியுள்ளதாகவும் கருதுகின்றேன்.


சொந்த மண்ணில் மீள் குடியேற வாய்ப்பு

கிளிநொச்சி மீட்கப்பட்டதன் மூலம் நாட்டில் அமைதியும் நிரந்தர சமாதானமும் ஏற்பட அடித்தளமிடப்பட்டுள்ளது. சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை எதுவித பாகுபாடுமின்றி நிம்மதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்ளும் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது.

கிளிநொச்சி மீட்கப்பட்டதன் மூலம் வட மாகாண மக்கள் தமது சொந்த மண்ணில் மீண்டும் நிம்மதியாக சென்று வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. கடந்த காலங்களைப் போன்று தமிழ் முஸ்லிம் மக்கள் நட்புறவுடனும் ஒற்றுமையுடனும் ஒன்றாக வாழும் நிலையும் இதனூடாக ஏற்படும் என நம்புகிறேன்.

மேல் மாகாணத்தைப் போன்று வட மாகாணமும் எதிர்காலத்தில் துரித அபிவிருத்தி காணும். எமது அமைச்சினூடாக எதிர்காலத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றவும் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

புலிகளின் சூளுரை மழுங்கடிப்பு


எமது பாதுகாப்புப் படை யினரால் கிளிநொச்சி நகரத்தை ஒருபோதும் கைப்பற்ற முடி யாதென்று புலிகள் சூளு ரைத்திருந்தார்கள். கிளிநொச்சிக்குள் பிரவேசிப்பது ஒரு கனவாகு மென்றும் அவர்கள் தெரிவித்தி ருந்தார்கள்.

இந்த அனைத்து சூளுரைகளை யும் தோல்வியுறச் செய்த எமது படை வீரர்கள் தாய் நாட்டுக்காக

தமது கடமையை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர், குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், படையினரின் துணிச்சல் மிக்க செயற்பாடுகளை மழுங்கடிக்கச் செய்வதற்காக பல்வேறு விதமான பிரசாரங்களை மேற்கொண்டார். எந்நேரமும் அதனை நிறைவேற்றிக் கொள்ளவென முயற்சிகளை மேற்கொண்டார். இந்த அனைத்து முயற்சிகளையும் தோல்வியுறச் செய்து, எமது படையினர் பெற்றுத் தந்த வெற்றி எமது நாட்டின் வெற்றியாகும்.

ஜனாதிபதி, தீர்க்க தரிசனத்துடன், அனைத்து விதமான சவால்களையும் எதிர்கொண்டு, அதனால் சளைத்து விடாமல், தைரியமான முடிவுகளை மேற்கொண்டு முப்படைக்கும் சரியான தலைமைத்துவத்தை வழங்கி வருகிறார்.

புலிகள் இயக்கத்தின் நிர்வாகத் தலைமையகம் அவர்களுக்கு இல்லாமற் போனமை அவர்களுக்கு பாரிய தோல்வியாகும். அதேபோல், மூலோபய மற்றும் பெளதீக ரீதியாக எமது படையினருக்குக் கிடைத்த பெரு வெற்றியாகும்.

எனவே, இந்த வெற்றியானது பிரிவினைவாதத்தைத் தோல்வியுறச் செய்யும் பயணத்தில் தீர்க்கமானதும், முக்கியமானதுமாகும். எமது அடுத்த கட்ட பயணத்தின் மூலம் பயங்கரவாதத்தை இவ்வருடத்திற்குள் முற்றாகத் தோற்கடித்துவிட முடியும்.

புலிகளுக்கு அந்திமக்காலம்

இவ்வளவு காலமும் புலிகள் தமது அதிகாரத்தைப் பலத்த தமிழ் மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தி வந்தார்கள்.

தமிழ் மக்களின் எதிர்காலத் திற்காக புலிகள் அதிகாரத்தையோ, பலத்தையோ பிரயோகித்ததில்லை. மனிதக் கேடயங்களாக மக்களை தடுத்து வைத்துக்கொண்டு அரா ஜகம் புரிந்துகொண்டிருந்தவர்களின் அந்திமக்காலம் வந்துள்ளது.

கிளிநொச்சி மீட்கப்பட்டதுடன், புலிகளின் பலம் உடைத்தெறியப்பட்டுள்ளது. மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மக்கள் நிம்மதியாக தமது வாழ்விடங்களில் வாழும் நிலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசின் கீழ் உருவாகும் என்பதில் ஐயமில்லை.

கிளிநொச்சி நகரை கைப்பற்றியுள்ளதுடன், அங்கு சிக்குண்டுள்ள மக்களை மீட்பதற்காக முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து படைத்தரப்புக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Thanks Thinakaran

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com