மட்டு நகரில் கிளேமோர் தாக்குதல்
இன்று காலை 7.30 மணியளவில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் முன்பாகவுள்ள தொலைத்தொடர்பு நிறுவனமருகில் நிறுத்தப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டியொன்றில் பொருத்தி வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் கிளேமோர் குண்டு வெடித்ததில் ஸ்தலத்திலேயே இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 9 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 3வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மரணமடைந்தவர்கள் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் 58 வயதான கணபதிப்பிள்ளை வள்ளிபுரம் எனப்படும் பொதுமகனுமாகும்
காயமடைந்தவர்கள் பாடசாலை மாணவர்கள், ஆசிரியை மற்றும் தாதியர் என அப்பாவி பொது மக்களாகும் .
0 comments :
Post a Comment