அரசிற்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐ.தே.க கையளித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசிற்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஐ.தே.க யினால் இன்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பெற்றோலியத்துறை அமைச்சும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இணைந்து ஏற்படுத்திக்கொண்ட ஹெஜிங் ஒப்பந்தம் மூலம் இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு ஏற்பட்டதாகக் கூறியே அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி இவ் நம்பிக்கையில்லாப் பிரேரணையை பதிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.
இது விடயத்தில் விவாத்திற்கு தாம் தயாராக இருப்பதாக ஐ.ம.சு.மு பிரதம கொரடா தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment