பிச்சைக்காரனின் வேடம் பூண்டு அலைந்த புலிகளின் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர் கொழும்பில் கைது.
அண்மையில் கொழும்பு நகரில் இருந்து சுமார் 15 கிலோமீற்றர் துரத்தில் உள்ள வர்த்தகவலயப் பிரதேசமான கிரிபத்கொட பிரதேசத்தில் வைத்து புலிகளின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்படும்போது தெருவில் பிச்சை எடுப்பவர் போன்று வேடமிட்டிருந்தார். அவரது செயற்பாடுகளை அவதானித்த கடையொன்றின் தொழிலாளி சந்தேகத்தின் நிமித்தம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகின்றது.
கைதுசெய்யப்பட்ட நபர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் புலிகளின் தற்கொலைதாரிகள் கர்பிணித்தாய், பிச்சைக்காரர்கள், வயோதிபர்கள், கைக்குழந்தைகளுடனான தாய், சமயபோதகர்கள் என்ற வேடங்கள் தரித்து தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
0 comments :
Post a Comment