Sunday, November 16, 2008

கிழக்கு மாகாண மக்களின் அரசியல் வரலாற்றில் ஏற்பட்ட அந்த இடைவெளியை நிரப்ப முன்வந்தவர்கள் வெகு சிலரே அவர்களில் இந்த ரகு முதன்மையானவர்.

ஒரு பொறியியலாளராக மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்துவந்த இவர். நாட்டை விட்டு வெளியேறி விடுவதே எமது இளைஞர்களின் வாழ்க்கை இலட்சியம் ஆகிவிட்ட பயங்கர சூழலில் இவர் வெளிநாட்டிலிருந்து தாய் நாட்டுக்கு திரும்பி வந்தார். தனது வளமான வாழ்வின் எல்லாப் பக்கங்களையும் கிழக்கில் அமைதி ஏற்படுத்துவதற்காக உதறிஎறிந்த மனிதன் ரகு.

குடும்பபாசம், சொத்துசுகம், கௌரவமான வாழ்வு என்று வடித்தெடுத்த சுயநலவாதியாக இருந்து கொண்டு போலியாக பொதுநலம் பேசியவர் அல்ல அவர். அவதூறுகளையும் சோடிப்புகளையும், அச்சுறுத்தல்களையும் கொண்டு அவரை ஒடுக்கி ஓரங்கட்ட யாராலும் முடியவில்லை.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை பதிவதிலும் அதனை வளர்த்தெடுத்து செல்வதிலும் அவரது பங்களிப்பு அளப்பரியது. ஜனநாயக நடைமுறைகளிலே தேர்தல் அரசியலிலோ எவ்வித முன்னனுபவமற்ற வுஆஏP எனும் மக்கள் இயக்கத்தை ஜனநாயக பாதையில் நடக்க வைப்பதற்கும் அவரது உழைப்பு மிகப்பெரும் பங்களிப்பை செலுத்தியது.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்கின்ற மும்மொழியும் தெரிந்தவர்கள் எம்மிடையே பலர் உண்டு ஆனால் மும்மொழிகளையும் சரளமாகவும், சீராகவும், அழகாகவும் பேசும் வல்லமைகொண்ட விற்பன்னர் ரகு என்றால் அது மிகையாகாது. ஓரிரு வருடத்திற்குள் அவரிடம் பழகிய அதிகாரிகள், உள்நாட்டு வெளிநாட்டு அரசியல்வாதிகள் இராஜதந்திரிகள் மட்டத்தில் அவரது நிர்வாகத் திறமையும், ஆளுமையும் பலரை அதிசயிக்க வைத்தது. அறிவும், புலமையும் என்பதை தனது சொந்த வாழ்க்கைக்குள் சுருட்டி கொள்ளாமல் அதை மக்களுக்காக பயன்படுத்தும் பலம்தான் ஒரு சமூகத்தின் புத்தி ஜீவியாக இருக்க முடியும். அந்த வகையில் கிழக்கு மாகாணத்தின் முதல் வரிசை புத்திஜீவியாக வாழ்ந்தவர் 'ரகு' ஆகும். TMVP யின் வளர்ச்சிப் பாதையில் எதிர்கொள்ள நேர்ந்த அடுத்தடுத்து வந்த இரு தேர்தல்களிலும் கட்சியை வெற்றி கொள்ள வைப்பதிலும், கிழக்கு மாகாணசபையின் முதலாவது முதலமைச்சர் எனும் பெருமையை ரி.எம்.வி.பியை கட்டி வளர்த்த பிள்ளையான் அடைய வைப்பதிலும் பக்கபலமாக நின்று செயலாற்றியவர் இந்த ரகுவே ஆகும்.

மாகாணசபையின் நிர்வாகங்களைத் தொடங்கி மக்களுக்கான புனர்வாழ்வு, பனரமைப்பு பணிகள் வரை சகல மட்டங்களிலும் ஓடி ஓடி ஓயாது உழைத்தவர் அவர். சம்பூர் பிரதேசத்தில் இருந்து வெளியேறிய கட்டைப்பறிச்சான், சேனையூர், கணேசபுரம், பாட்டாளிபுரம் .......... என்று பன்னிரண்டு கிராமங்களில் மக்களின் மீளக்குடியேற்றம் உறுதியாகவும், வேகமாகவும் முன்னெடுக்கப்படுவதற்கு ஓயாதுபாடுபட்டார். தனது பாதுகாப்பு காரணங்களைக்கூட புறந்தள்ளிவிட்டு அகதிகளோடு அகதிகளாக நின்று அவர்களின் வாழ்வாதார வேலைத்திட்டங்களில் களப்பணி ஆற்றிய காட்சிகள் மட்டுமல்ல கிழக்கு மாகாணம் எங்கும் பம்பரமாய் சுழன்று திரிந்த நினைவுகள் என்றும் கிழக்கு மாகாண மக்கள் மனதை விட்டகலாது.

............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com