ஜனாதிபதியின் ஆலோசனையில் பேரில் கிரானில் மாணவர் ஒன்று கூடல்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் சட்டமறுசீரமைப்பு மற்றும் சமய விவகார அமைச்சுக்களின் இணை ஏற்பாட்டில் மாணவர் ஒன்று கூடல் நிகழ்வொன்று வாழைச்சேனை-கிரான் கிறிஸ்தா ஆச்சிரமத்தில் நேற்று இடம்பெற்றது. சிறுவர்களுக்கிடையே புரிந்துணர்வையும் சகோதரத்துவ மனப்பாங்கையும் உருவாக்கும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் சமயத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். சமய விவகார அமைச்சின் ஆலோசகர் அருட் சகோதரர் ஜே. கெட்டியாராச்சி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கம்பஹா மாவட்ட மாணவர்கள் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மற்றும் கிறிஸ்தவ சிறுவர்களுடன் இணைந்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். சமய மொழி மற்றும் கலாசார வேறுபாடுகள் காணப்படுகின்ற போதிலும் அனைவரும் இலங்கையர் என்ற கோட்பாடுடன் ஐக்கியப்படுவதன் மூலம் நாட்டில் நிரந்தர சமாதானம் இனங்களுக்கிடையே புரிந்துணர்வு மற்றும் கருத்துப் பரிமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment