Friday, December 19, 2014

என் மகனுக்கோ குதிரை மீது ஏற ஆசை, அவர் மகனுக்கோ அடுத்தவன் மனைவி மீது ஏற ஆசை. மைத்திரிக்கு மஹிந்தர் பதிலடி!

எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக களமிறங்கியுள்ள மைத்திரபால சிறிசேன நாள்தோறும் அரச மாளிகையின் அந்தரங்களை போட்டுடைத்து வருகின்றார். கடந்தவாரம் தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் பேசிய அவர் பிரித்தானியாவின் பக்கிங்காங் பலஸிலிந்து பல்லாயிரம் கோடி பெறுமதியான குதிரை ஒன்று கொண்டுவரப்பட்டதாகவும், ஒய்வுநேரங்களில் கொழும்பு அரச மாளிகையிலிருந்து ஹெலிக்கொப்டரில் புறப்படும் மஹிந்தவின் இளவரசன் நுவரேலியாவில் பராமரிக்கப்படுகின்ற குதிரையில் ஏறிச் சவாரி செய்துவிட்டு இரு மணி நேரங்களில் மீண்டும் அரச மாளிகைக்கு திரும்புகின்றார் என்றும் இவ்வாறு வீண்விரயம் செய்யப்படுவது மக்களின் பணம் எனக்குறிப்பிட்ட அவர் இது தொடரவேண்டுமா என்பதை என் தங்கச் செல்லங்களே முடிவெடுங்கள் என்றார்.

மைத்திரியின் இக்கூற்றுக்கு தனது பிரச்சாரக்கூட்டமொன்றில் பதிலளித்துள்ள மஹிந்த ராஜபக்ச, எனது புத்திரன் குதிரையில் ஏறுவதற்கே ஆசைப்படுகின்றான் என்றும் அதில் தப்போதும் இல்லை என்றும் கூறிய அவர் , மைத்திரியின் மகன் பாசிக்குடாவில் உதவி பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மகனின் மனைவி மீது ஏற முயற்சித்தாக தெரிவித்துள்ளார்.


Read more...

Monday, December 15, 2014

காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை குழுவில் ஜப்பானின் முன்னாள் நீதிபதி நியமனம்

புலிகளுடனான 30 ஆண்டு கால போரின்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்க இலங்கை அரசு நியமித்த குழுவின் காலவரம்பை 2015ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி வரை 7 மாதம் நீடிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடந்த ஜுலை மாதம் உத்தரவிட்டார்.

கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைக்கப்பட்ட இந்த விசாரணைக்குழுவுக்கு இதுவரை சுமார் 20 ஆயிரம் புகார்கள் வரப்பெற்றுள்ளன. இவற்றில் சுமார் 5 ஆயிரம் புகார்கள் ராணுவத்துறையை சேர்ந்தவர்களின் உறவினர்களிடம் இருந்து வரப்பெற்ற புகார்கள் என தெரியவந்துள்ளது.

உள்நாட்டுப் போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களிடம் மேற்கண்ட புகார்கள் தொடர்பாக இந்த குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணைக் கமிஷனில் ஓய்வு பெற்ற நீதிபதி மேக்ஸ்வெல் பரனகாமாவுடன், இங்கிலாந்தைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்ட வல்லுனர் சர் டேஸ்மண்ட் டி சில்வா மற்றும் சர் ஜியாஃபரி நைஸ், அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமைகள் துறை பேராசிரியர் டேவிட் கிரேன், இந்தியாவைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்ட வல்லுனர் அவ்தாஷ் கவ்ஷல் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்ட வல்லுனர் அஹமத் பிலால் சூஃபி ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், ஆறாவது உறுப்பினராக ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் நீதிபதியான மோட்டூ நோகுச்சி நியமிக்கப்பட்டுள்ளார். மனித உரிமைகள் தொடர்பான சட்டங்களில் நல்ல தேர்ச்சி பெற்ற இவர், கம்போடியா நாட்டில் உள்ள கூடுதல் சர்வதேச நீதி மன்றத்தில் நீதிபதியாக திறம்பட செயலாற்றியவர்.

சர்வதேச நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கான பொது நிதியத்தின் முன்னாள் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீடம் கூடி வெங்காயத்தைத்தான் உரிக்கிறது - முஜிபுர் ரஹ்மான்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடிக்கடி உயர்பீடத்தை கூட்டி வெங்காயத்தையே உரிக்கிறது என மேல் மாகாண சபை உறுப்பினர் நையாண்டி செய்துள்ளார்.
எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்து ஏறாவூரில் இடம்பெற்ற தேர்தல் பிச்சார கூட்டத்தின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதிகமான கிழக்கு மாகாண மக்கள் தமக்கு விடிவு கிடைக்க வேண்டும் என தேர்தலிகளில் முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களிக்கின்றனர். ஆனால் அவர்கள் இன்றுவரை மக்களை ஏமாற்றியே வருகின்றனர். இன்று முஸ்லிம் மக்கள் மஹிந்தவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றனர். ஆனால் மு.கா. மக்களின் உணர்வகளை புரிந்துகொள்ளாது, தமது சொகுசு வாழ்க்கையையும் பதவிகளையும் மட்டும் எதிர்ப்பார்த்து மஹிந்த அரசாங்கத்தை பலப்படுத்திக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் முஸ்லிம் காங்கிரஸின் கொள்கைகளை புறந்தள்ளிவைத்துவிட்டு தமது சுய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய கட்சியை வழ நடத்துகின்றனர்.

சிலரின் சுய நலத்தின் காரணமாக இன்று முஸ்லிம் காங்கிரஸினால் ஜனாதிபதி தேர்தலில் முடிவுகளை எடுத்துகொள்ள முடியாமல் இருக்கின்றது. ஜனாதிபதி தேர்தல் ஒன்று எதிர்ப்பார்க்கப்பட்டபோதிலிருந்து முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் பல தடவை கூட்டப்பட்டது. ஆனால் அவர்களால் தீக்கமான முடிவுஎடுக்க முடியாதிருப்பது முஸ்லிம்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெங்காயத்தை உரிக்க உரிக்க எதுவும் கிடைப்பதில்லை. அதேபோல் மு.கா.வும் அடிக்கடி கூடுகிறது. ஆனால் அவர்களிடம் முடிவு தீர்க்கமான முடிவு இல்லை. இதனால் நாம் கவலையடைய வேண்டியுள்ளது.

18 அரசியல் திருத்தத் ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் நாட்டுக்கே துரோகமளித்தது. பின்னர் தேர்தல் காலங்களில் மட்டும் நல்ல பிள்ளை போல் மக்களிடம் மன்னிப்பு கோரியது. அவர்கள் செய்தது எமது அடுத்த சந்ததிக்கு செய்த துரோகமாகம். இந்த பாவத்திலிருந்து மீளுவதற்கு தற்போது சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. பொது எதிரணியினர் சர்வதிகார ஜனாதிபதி முறைமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். மஹிந்தவை தேற்கடிக்க அவர்கள் வெ ளியில் வரவேண்டும். இதனால் வரலாற்று துரோகத்திலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியும்.

பயங்கரவாதம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும் பயத்துடன் வாழ்தனர். அப்போது கிழக்கில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின்போது நாம் தென்பகுதியிலிருந்து குரல்கொடுத்தோம். இன்று தெற்கில் முஸ்லிம்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். இப்போது அவர்களுக்கு உதவ கிழக்கு முஸ்லிம்கள் அணி திரளவேண்ம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

ஏறாவூர் ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியில் பிரதிநிதிகளும் பங்குபற்றினர்.

Read more...

Sunday, December 14, 2014

புலி நாட்டிலோ காட்டிலோ இல்லை! வெளிநாட்டில் இருக்கின்றது! என மஹிந்த கூறுகையில் குப்பையை கிளறுகின்றது ஜேவிபி.

புலிகளியக்கத்தை தாம் நாட்டிலும் காட்டிலும் இல்லாதொழித்துள்ளபோதும் அவ்வியக்கம் வெளிநாட்டில் பலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச. ஜனாதிபதித்தேர்தலுக்கான தனது முதலாவது பிரச்சாரக்கூட்டம் அனுராதபுரத்தில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிநாட்டு புலிகளால் நாட்டிற்கு அச்சுறுத்தல் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் வெளிநாட்டு புலிகள் பலர் மஹிந்தவுடன் பல்வேறு ஒப்பந்தங்களுடன் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஒத்துழைத்து வருவகின்றனர் என ஜேவிபி எனப்படுகின்ற மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சுமத்துகின்றது.

வெளிநாட்டு புலிகள் பல்வேறு வழிகளின் மஹிந்த குடும்பத்தின் வியாபார பங்குதாரிகளாக மாறியுள்ளனர் என்றும் அவர்களே வெளிநாடுகளில் மஹிந்தவிற்கு எதிரான போரட்டங்களை மேற்கொண்டு பௌத்த சிங்கள வாக்குகளை மஹிந்த அபகரிப்பதற்கு உதவுகின்றனர் என்றும் தெரிவிக்கின்றது.

மஹிந்த ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டால் புலிகளின் நடவடிக்கைளுக்கு அது சாதகமாக அமையும் என சிங்கள மக்கள் மத்தியில் மேற்கொள்ளும் பிரச்சாரத்தை ஜேவிபி தவிடு பொடியாக்கியுள்ளது.

மஹிந்தவை புலிகளே ஆட்சியில் அமர்த்தினார்கள் என்றும் , மஹிந்தவை ஆட்சியில் அமர வைப்பதற்கு புலிகளின் ஆதரவை பெறுவதற்காக அவ்வமைப்புடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சூரியாராச்சி எவ்வாறு பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டது, எவ்வாறு பணம் செலுத்தப்பட்டது என்ற உண்மைகளை பாராளுமன்றில் தெரிவித்திருந்தார். அதன் கானொளிக்காட்சிகளை தற்போது ஜேவிபி வெளியிட்டுள்ளது.

பாராளுமன்றில் பேசிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சூரியாராட்சி, புலிகளுடனான பேச்சுவார்த்தையில் பசில் ராஜபச்சவுடன் தானும் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவும் பல தடவைகள் கலந்து கொண்டதாகவும் முதற்கட்டமாக 200 கோடி பணத்தை வழங்கியதாகவும் பின்னர் 1000 ற்கு மேற்பட்ட கோடிகளை அமைச்சரவை அங்கீகாரத்துடன் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.



Read more...

Saturday, December 13, 2014

தேர்தல் நெருங்க இலங்கை முஸ்லிம்களுக்கு சாதகமான முடிவுகள்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் இவ்வேளையில், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளதை காண முடிகின்றது. குறிப்பாக காணி , வாழ்வாதாரம் மற்றும் மத வழிபாட்டு உரிமை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் சாதகமான முடிவுகள் சில தமக்கு கிடைத்துள்ளதாக முஸ்லிம்கள் தெரிவிக்கின்றார்கள். அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவிற்கும்அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்குமிடையில் பாதுகாப்பு அமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பையடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் திருகோணமலை உயர்பாதுகாப்பு வலயமொன்றிலுள்ள கருமலையுற்று பள்ளிவாசல் தற்போது விடுவிக்கப்பட்டு இராணுவத்தினால் பள்ளி வாசல் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரான மொகமட் ரம்ழான் அன்வர் கூறுகின்றார். இந்த பள்ளிவாசலை விடுவிப்பதற்காக கிழக்கு மாகாண சபை ஊடாக இரு வருடங்களுக்கு மேலாக முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டும் அது கை கூடாமல் போனதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

அந்த பகுதியில் கரைவலை மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளது. அம்பாரை மாவட்டத்தில் ஒலுவில் வெளிச்சவீட்டு அருகாமையில் கடந்த சில வருடங்களாக அமைந்திருந்த கடற்படை முகாமும் இன்றுடன் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக புல்மோட்டை பிரதேசத்தில் காணி தொடாபான பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கக் கூடிய அறிகுறிகள் தென்படுவதாவும் ரம்ழான் அன்வர் குறிப்பிட்டார்.

கடந்த 4- 5 வருடங்களாக முஸ்லிம்களால் முன்வைக்கப்பட்ட இந்த பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே கவனம் செலுத்தவில்லை என்றும், தற்போது ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்கான முயற்சியாகவே இவை தற்போது நிறைவேற்றப்படுவதாகவும் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி குற்றஞ்சாட்டுகிறது. ஆனால் இந்த முயற்சியானது அவர்களது எதிர்பார்க்கும் பலனை கொடுக்கமாட்டாது என்றும், கிழக்கு மாகாண முஸ்லிம்களை பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள் என்றும் அக்கட்சியை சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினரான மொகமட் மஹ்ருப் இம்ரான் குறிப்பிடுகின்றார்

Read more...

குருமன்காடு விநாயகர் ஆலயத்தின் முன்பு தினமும் காட்ஸ் விளையாடும் இளைஞர்கள்.

வவுனியாவில் குருமன்காடு விநாகர் தேவஸ்தானம் பரசித்தி பெற்ற கோயில் என்பது குறிப்பிடத்தக்கது. இவ் ஆலயத்தின் முன் ஆட்டோ நிறுத்தும் இடமும் அமைந்துள்ளது. அதற்கு அருகில் பல இளைஞர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகின்றன. காலை 8 மணியிலிருந்து இரவு 10 மணிவரை ஆட்கள் மாறி மாறி சூதாட்டத்தில் ஈடுபடுவது அறியப்பட்டுள்ளது. சிறுவர்கள் சிலரும் இதில் ஈடுபடுகின்றனர். அத்துடன் திருநாவற்குளம் முதலாம் ஒழுங்கையில் களவாக விற்கப்படும் கஞ்சாஎனும் பொதைப்பொருளை வாங்கி அவ்விடத்தில் உபயோகிப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கோயிலுக்கு செல்லும் இளம் பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சிப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். சுpல இளைஞர்களின் பெயர்கள் எமக்கு தரப்பட்டன. ஆனால் அப் பெயர்களை வெளியிடாமல் செய்தியை மட்டும் பிரசுரிக்கின்றோம்.

பொதுவான ஒரு இடத்தில் இத்;தகைய செயற்பாடு ஒன்று நடைபெறுவதற்கு பொலிஸ் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது??? மக்கள் என்ன செய்யப்போகின்றார்கள்??? கோயில் நிர்வாகம் என்ன செய்யப்போகின்றது???

Read more...

மாத்தறையில் வாக்குவசூலிப்புக்கு துணைபோகும் புலிகளின் சண்டைக்காட்சிகள்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்ற நிலையில் வாக்குகளை கவர்வதற்கான இனவாதமூட்டல் வரலாற்றில் இடம்பெறாதவாறு நவீன வடிவில் வெளிவர ஆரம்பித்துள்ளது. ஆழும் கட்சியினர் சிங்கள மக்களிடம் வாக்கு கோரும்போது தாம் யுத்தத்தை வென்றவர்கள் என்ற ரீதியில் மக்கள் தமக்கே வாக்களிக்க வேண்டும் என்கின்றனர்.

எதிர்கட்சியினரோ இல்லை இல்லை யுத்தத்தை நாங்களே ஆரம்பித்து வைத்தோம், அதற்கான அத்திவாரத்தை நாமே வெட்டினோம், சர்வதேசத்தை ஒன்றிணைத்தோம், கருணாவை பிரித்தோம் என்றும் அடிக்கிகொண்டு சென்று யுத்த வெற்றிக்கு உரிமை கோருகின்றனர்.

ஆனால் ஆழும்கட்சியினரோ தாம் ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டால் யுத்தத்தை முடித்து வைத்தவர்கள் என்ற ரீதியில் சர்வதேச சமூகத்தினரால் தண்டிக்கப்படும் அபாயம் உண்டு என்றும் மின்சாரக்கதிரையில் சேனாதி நாயகன் மஹிந்த ராஜபக்சவும் யுத்தத்துடன் சம்பந்தப்பட்டோரும் அமர வைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.

இவை எவற்றுக்கும் மக்கள் செவி மடுக்க தயாராக இல்லை என்பதையும் யுத்தம் என்ற ஒன்றை மக்கள் முற்றாக மறந்துள்ளார்கள் என்பதையும் உணர்ந்துள்ள ஆழும் கட்சியினர் புலிகளின் சண்டைக்காட்சிகளை மக்களுக்கு காண்பிக்க ஆரம்பித்துள்ளனர்.

கன்ரர் ரக வாகனம் ஒன்றில் நவீன ரக தொலைக்காட்சி ஒன்றை பொருத்தி அவ்வாகனத்தை மக்கள் அதிக நடமாட்டமுள்ள இடங்களுக்கும் பிரதான நகரங்களுக்கும் கொண்டு செல்லும் ஆழும் தரப்பினர் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கோர நடவடிக்கைகளையும் அதற்கு எதிராக படையினர் மேற்கொண்ட நடிவடிக்கைகளையும் காட்சிப்படுத்துகின்றனர்.

கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் மாத்தறை பஸ்நிலையம் முன்பாக யுத்தக்காட்சிகள் காட்சிப்படுத்தப்படுவதையும் மக்கள் அதனை ஏறெடுத்தும் பார்க்காமல் செல்வதையும் இங்கு காண்கின்றீர்கள்.






Read more...

தாண்டிக்குளத்தில் நீர் வளங்கள் வடிகால் அமைச்சு நிர்மாணித்த நீர் வளங்கள் குழாய் அமைக்கும் பணியில் ஊழல். மக்கள் குமுறல்.

தற்போது சற்று முன்னர் வவுனியா இராசேந்திரகுளம் ஒமேகா காமென்சில் இருந்து முல்லைத்தீவுக்கு பணியாளர்களை ஏற்றி சென்றுகொண்டிருந்த GP 2819 பஸ் வண்டி தாண்டிக்குளம் மூன்றாம் ஒழுங்கை பகுதியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த காமென்ஸ் பணியாளர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர். வீதி ஓரத்தில் நீர் வளங்களுக்காக ஏற்படுத்தபட்டிருந்த கிடங்கு ஒழுங்காக மூடப்படாததால் சென்று கொண்டிருந்த பஸ் விபத்துக்குள்ளாகியது. இது போன்று முன்பும் பல வாகனங்கள் விபத்துக்குள்ளாகி முறைப்பாடு தெரிவிகபட்ட போதும் அதற்கு எந்த நடவடிக்கையும் மேட்கொள்ளபடவில்லை. இந்த பனியின் போது பல இலட்ச கணக்கான ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும் தெரிவிக்க படுகின்றது.

Read more...

Friday, December 12, 2014

இந்திய மீனவர்களுக்கு எதிராக முல்லைத்தீவில் பேரணி



இந்திய மீனவர்களின் வருகையில் தமது இறால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி முல்லைத்தீவுப் பகுதி மீனவர்கள் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகளினால் தமது தொழிலை மேற்கொள்வதற்கு வசதியாக உரிய நடவடிக்கை இலங்கை அரசு எடுக்க வேண்டும் என அம்மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டிசம்பர் மாதத்தில் பெரும் எண்ணிக்கையில் வருகை தருகின்ற இந்திய மீனவப் படகுகளினால்ஜனவரி மாத பருவகால இறால் மீன்பிடித் தொழில் கடந்த 3 வருடங்களாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விஷயம் குறித்து அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரிடம் முறையிட்டுள்ள போதிலும் பிரச்சினைக்கு முடிவு ஏற்படாத காரணத்தினால், அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நேரடியாகச் சந்தித்து தமது பிரச்சினைகளை எடுத்துக் கூறியதாகவும் முல்லைத்தீவு மீனவர்கள் கூறுகிறார்கள்.

அது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்திருக்கின்ற போதிலும், இந்திய மீனவர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை தெரிவித்தார்.
மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களைக் கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துகின்ற போதிலும், அத்தகைய செயற்பாடுகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம் பெறாத காரணத்தினால், இலங்கைக் கடற்படையினரின் ஒத்துழைப்படன்தான் இந்திய மீனவர்கள் தமது கடற்பரப்பில் மீன்பிடி தொழிலில் அத்துமீறி ஈடுபடுகின்றார்களோ என்று தமது மீனவர்கள் சந்தேகம் கொண்டுள்ளதாகவம் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்தார்.

இதற்கிடையில் வடகடலில் நெடுந்தீவுக்கருகில் அத்துமீறி மீன்பிடித்த 43 இந்திய மீனவர்களை அவர்களின்ன் 5 இழுவைப் படகுகளுடன் கடற்படையினர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்திருந்தனர். இவர்களை வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டிருக்கின்றது.

இலங்கையின் வடகடல் பகுதியில் கைது செய்யப்பட்ட 38 இந்திய மீனவர்கள் யாழ் சிறைச்சாலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

இலங்கையில் கொழும்பு அருகே விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானது: இருவர் பலி

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் கொழும்பு அருகே இன்று காலை விபத்துக்குள்ளானது. இதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் மரணமடைந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்துக்குள்ளான அண்டோனோவ் என்ற அந்த போக்குவரத்து விமானம்மோசமான வானிலை காரணமாக அதன் கட்டுப்பாட்டை இழந்து அதுருகிரியாவின் புறநகர் பகுதியில் விழுந்து எரிந்ததாகவும், இந்த விபத்தில் இரண்டு பேர் இறந்திருப்பதாக விபத்து நடந்த பகுதிக்கு அருகிலுள்ள மக்களும், காவல்துறையினரும் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் நான்கு பேர் பயணம் செய்ததாக கூறப்பட்டு வரும் நிலையில், மீட்புப் பணியாளர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளதாகவும், அவர்களிடமிருந்து கிடைக்கும் தகவலை பொறுத்தே விபத்திற்கான காரணம், இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றியும் தெரியவரும் என்று அப்பகுதி காவல் அதிகாரி அஜித் ரொஹானா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more...

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுமதிக்குமாறு பிரிட்டன் இலங்கையை கோரியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுமதிக்குமாறு பிரிட்டன் இலங்கையை கோரியுள்ளது. பிரிட்டனின் பிரபுக்கள் சபையில் நடைபெற்ற விவாதத்தின் போது இதனை தெரிவித்துள்ள வெளிவிவகார மற்றும் பொதுநலவாய இணையமைச்சர் லோர்ட் லிவிங்ஸ்டன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம்நடைபெறவுள்ளது,தேர்தல் எவ்வாறாக நடைபெற்றது என மதிப்பிடுவதற்காக சர்வதேச கண்காணிப்பாளர்களை அழைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளோம்.

இலங்கை தேர்தல் ஆணையகம் பொதுநலவாய மற்றும்,சார்க் கண்காணிப்பாளர்களை அழைத்துள்ளதாக அறிகிறோம்.
அதனை வரவேற்கிறோம்.

பிரிட்டனின் திறந்த பொருளாதார கொள்கை என்பது மனித உரிமைகளுடன் தொடர்புபட்டுள்ளது. இவ்வருடம் இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு பிரிட்டன் ஆதரவு வழங்கியது.

இலங்கை அரசாங்கத்தை ஐ.நா விசாரணையாளர்களுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறும், சாட்சியமளிப்பவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துமாறும், அதன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் தொடர்ந்தும்வலியுறுத்தி வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்

Read more...

வவுனியாவில் உள்ள முகாம் ஒன்றின் மீது மரம் விழுந்ததில் பெண்ணுக்கு காயம்

வவுனியா, சிதம்பரபுரம் முகாம் மீது அருகில் இருந்த மரம் அடியோடு சரிந்து விழுந்ததால் முகாம் ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதுடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியாவில் மீண்டும் மழைபெய்து வருகிறது. மழை காரணமாக வவுனியா, சிதம்பரபுரம் முகாம் ஒன்றின் அருகில் இருந்த மரம் ஒன்று புதன்கிழமை முகாமின் மேல் சரிந்து விழுந்துள்ளது.

இதனால் முகாமின் கூரைப் பகுதி உட்பட அதன் சுவர்களும் முழுமையாக பாதிப்படைந்துள்ளன. சம்பவத்தின் போது குறித்த முகாமுக்குள் இருந்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

விக்கினேஸ்வரன் புஸ்பராணி (வயது 47) என்ற பெண்ணே காயமடைந்தவராவார். இவர் தற்போது சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

Read more...

இன்னொரு ஆளும் கட்சி பிரதேச சபை உறுப்பினர் மகிந்தவின் காலை வாரினாரா?

ரத்கம பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் மைத்திரி ஞானபால டி சில்வா எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆரதரவு தெரிவிக்க தீர்மானித்துள்ளார். இன்று (12) காலை சிறிகொத்த ஐதேக தலைமையகத்திற்கு வருகை தந்த உறுப்பினர் எதிர்கட்சியில் இணைந்து கொள்வதாக அறிவித்துள்ளார்..தற்போது அரசாங்கத்தால் மக்களுக்கு மேற்கொள்ளப்படும் மோசடிக்கு எதிராக தான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

ஒதுக்கப்பட்ட நிதியில் கால் பங்கை கூட மக்களுக்கு கொடுக்காமல் முழுவதையும் விழுங்கிய EPDP

கந்தபுரம், கண்ணகிநகர், அக்கராயன், வன்னேரிக்குளம், கோணாவில் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 78 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவியாக நல்லின மாடுகள் மற்றும் கோழிகள் என்பவற்றை வழங்கியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் முதற்தடவையாக ஒரு குறுகிய காலத்திற்குள் பெருமளவு நிதி வாழ்வாதாரத்திற்காக செலவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் நல்லின கால்நடைகளுக்காக 400 இலட்சம் ரூபாஒதுக்கப்பட்டு அவை பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டும் உள்ளது.

இந்த கோழி கூடு ஒன்றின் விலை கோழிகளுடன் இணைத்து இருபதாயிரம். மாடு ஒன்றின் விலை ஐயாயிரம் மிகுதி பல லட்சம் ரூபாய்களை இந்த கும்பல் கொள்ளையடித்து தமது பக்கட்டில் வைத்துள்ளது .

இது தான் இவர்களின் மக்கள் அபிவிருத்தி மக்கள் பட்டினியில் கிடக்க சோடாவும் குளிர்பானமும் அருந்தி திரிகிறது இந்த கும்பல். மக்களுக்கு உதவிகள் வளங்கப்டுவதாக கூறி போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு மிகுதி பல லட்சங்களை கொள்ளையடிக்கும் இந்த கும்பலை என்ன சொல்வது மகிந்தா சிந்தை வாழ்க .இங்கே கால், கண் இல்லா பாதிக்கப்பட்ட மக்கள் சாப்பிட வழியின்றி துடிக்கிறார். இவருக்கு உதவிட எந்த கும்பலும் முயலவில்லை.

தற்போது அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இப்படி உதவிகள் வழங்குவது எனற பெயரில் படங்களை எடுத்து மக்களை ஏமாற்றும் நிலை வடக்கில் தொடர்ந்துகொண்டிருப்பது அவதானிக்கபட வேண்டிய விடயமாகும்.

Read more...

“மெய்யொலி“க்காக ஆக்கங்கள் கோரப்படுகின்றன!

இலங்கை தென்னகத்திலிருந்து 2015 தை மாதம் முதல் வெளிவரவுள்ள அரசியல் சமூக கலை இலக்கிய மற்றும் மீள்மொழிவுச் சஞ்சிகைக்கு ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

நவீன ஈழத்து இலக்கியம் சார்ந்த கட்டுரைகள், சிங்கள இலக்கியம் சார்ந்த கட்டுரைகள், அரசியல் நிலவரம் குறித்த கட்டுரைகள், விமர்சனங்கள், சிறுகதைகள், கவிதைகள் அனுப்ப விரும்புவோர் தங்களைப் பற்றிய சிறு குறிப்புடன் முத்திரை அளவு புகைப்படத்தையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.

விளம்பரதாரர்களின் விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆக்கங்கள் அனுப்ப வேண்டிய முகவரி –

THE EDITOR
MEYYOLI MONTHLY
252/C/2, MADURAPURA,
DENIPITIYA. (81730)
E-MAIL: meyyolimonthly@gmail.com

விளம்பரங்களுக்காக மட்டும் – 094 0770787976

Read more...

Monday, December 1, 2014

சர்வாதிகார ஆட்சியை தோற்கடிப்போம். ஜேவிபி யின் முதலாவது தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நுகேகொடயிலிருந்து நேரடி ஒளிபரப்பு.



இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவருவதன் ஊடாக சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என ஜேவிபி பிரச்சாரம் செய்கின்றது. அதன் அடிப்படையில் மஹிந்தவின் ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் என்றும் மஹிந்தவிற்கு எதிராக நாட்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ஜேவிபி வேண்டுகின்றது. இது தொடர்பில் அக்கட்சி ஆரம்பித்துள்ள முதலாவது தேர்தல் பிரச்சாரம் நுகேகொடயில் ஆரம்பமாகியுள்ளது.

Read more...

Wednesday, November 26, 2014

இம்முறை ஹம்பாந்தோட்டையில் மகிந்தவுக்கு படுதோல்வியே!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தோல்வியைத் தழுவுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிக்கிறார்.

மொரட்டுவை இதிபெத்த பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

“மகிந்த ராஜபக்ஷ இந்நாட்டில் நடாத்திய ஜனாதிபதித் தேர்தல்கள்இரண்டிலும் எனது தலைமையின் கீழ் அவரின் சொந்த ஊரான ஹம்பாந்தோட்டையில் தோல்வியடையச் செய்தேன். இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் நான் அவரைத் தோற்கடிப்பேன். ஏனென்றால் ஹம்பாந்தோட்டை மக்களுக்கு எங்களைப் பற்றி நன்கு தெரியும்..நாங்கள் ஏது செய்திருக்கின்றோம் என்பது பற்றித் தெரியும். அதனால் அம்மக்கள் என்றும் எங்களுடன் இருப்பார்கள்.

ஜனாதிபதி ஆட்சியில் இருந்துகொண்டு ஹம்பாந்தோட்டைக்கு சிற்சில விடயங்களைச் செய்கிறார். நானோ எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்கின்றேன். எனது தந்தையாகிய முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச மக்களுக்காக பல்வேறு நற்காரியங்களைச் செய்தவர் என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள். நாங்கள் பொதுமக்களின் வாக்குகள் மூலமே பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுகிறோம்.. அவர்களது பிரதிநிதிகளாகவே நாங்கள் இருக்கின்றோம். அதனை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும்,அமைச்சர்களும் கருத்திற் கொள்ள வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(அபூஹம்னா)

Read more...

Sunday, October 26, 2014

நிர்வாக சபை உறுப்பினர்களாலும், தனி ஒரு குடும்பத்தாலும் சீர்குலைந்து போயிருக்கும் தாண்டிக்குளம் அருள்மிகு அற்புத ஐயனார் ஆலயம்.

அரச கலாச்சார அதிகாரிகள் தூங்குகிறார்களா?

வவுனியாவில் தாண்டிக்குளம் பகுதியில் பிரசித்து பெற்று விளங்கியது மட்டுமல்லாது வவுனியாவில் காணப்படும் தல வரலாறு உடைய கோயிலாகவும் இக் கோயில் காணப்படுகின்றது. வவுனியாவில் ஐயனார் கோயில் என்று குறைந்த எண்ணிக்கையிலான கோயில்களே இருக்கின்ற நிலையில், ஆகமங்களிலும், கோயில் வரலாற்றிலும் நடைபெறாத சம்பவம் இங்கு நடந்தேறுவதாக அவ்வூர் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கோயில்கள் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்த எம் நிரூபர் குழுவுக்கு கிடைத்த அதிர்ச்சியான, சங்கடமான தகவல்களையடுத்தே இக்கோயில் பற்றி ஆராய எத்தனித்தோம்.

2000 ம் ஆண்டு காலப்பகுதியில் இவ் ஆலயத்துக்கு பொன்னம்பலம் என்பவரால் கும்பாபிடேகம் நடைபெற்றது. தொடர்ந்து 19.08.2001 ல் இவ் ஆலயத்தின் மூல விக்கிரகத்தில் இருந்து கண்ணீர் வழிந்தோடியதாக அடியார்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக ஆலயத்தின் நிர்வாக சபை உறுப்பினர் ஒருவருடன் தொடரபு கொண்டு கேட்ட போது அந்த நிகழ்வு தொடர்பாக பத்திரிகைகளில் வந்த செய்திகளை காண்பித்தார்.

தொடர்ந்து பொன்னம்பலம் நிர்வாக சபைத் தலைவராக இருப்பது பொறுக்காத விசமிகள் சிலர் புளொட் உறுப்பினர்கள் சிலருடன் இணைந்து சதி செய்து இரண்டொரு வருடங்களில் உமாபதி என்பவர் தலைவராக பொறுப்பேற்றார். இது தொடர்பான மேலதிக தகவல்களை கோயிலை சூழ உள்ளவர்களிடம் கேட்ட போது அது தொடர்பாக அவர்கள் எதையும் தெரிவிக்கவில்லை.

தலைவர் - உமாபதி (கிராம சேவையாளர்)
செயலாளர் - சிவலிங்கம்
பொருளாளர் - இரங்கநாதன் (பொறுப்பிலிருந்து விலகிவிட்டதாக அறியப்படுகின்றது)

பொதுவாக நிர்வாக சபை பொறுப்பேற்று வருடாவருடம் பொதுக்கூட்டம் கூடி கணக்குகள் ஒப்படைக்கப்பட்டு பொதுச்சபையில் அனுமதி பெற வேண்டும். இது தொடர்பாக பொருளாளரிடம் கேட்ட போது தான் அப் பொறுப்பில் இருந்து விலகிவிட்டதாகவும், தான் ஐயனாரின் ஒரு அடியவர் என்றும் குறிப்பிட்டார்.

இவ் ஆலயம் தொடர்பாக மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள்.
1. இவ் ஆலயத்துக்கு பொதுக்கூட்டம் என்றோ, நிர்வாக சபைக்கூட்டம் என்றோ எதுவும் இதுவரை நடைபெறவில்லை.
2. ஆலயத்துக்கு என வழங்கப்பட்ட நிதிகள் தொடர்பாக எதுவித கணக்குகளும் யாருக்கும் தெரியாது.
3. நிர்வாக சபை என்ற ஒன்று இருக்க தலைவரின் அண்ணனான பகீரதன் என்பவர் தன்னிச்சையாக, தனியே ஆலய நிர்வாகத்தையும், கணக்குவழக்குகளையும் கையாள்கின்றார்.
4. ஆகம விதிக்கு முரணான கட்டடங்கள் கட்டப்படுகின்றன.
5. வெளிநாட்டில் இருந்து வந்த நிதிகளுக்கான ஆவணங்கள் பேணப்படவில்லை.
6. கோயில் ஐயர் தான்தோன்றித்தனமான நேரத்துக்கு வந்து பூசை செய்வது. இரவு 8.00 மணிக்கும் பூசை நடத்தும் நிலை.

இவ்வாறு கணக்கிட முடியாத அளவு பிரச்சனைகளை இவ் ஆலயம் கொண்டிருக்கின்றது. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச செயலகத்தில் முன்பு இருந்த பிரதேச செயலாளர் சிவபாதசுந்தரம் மற்றும் கலாச்சார உத்தியோகத்தர் நித்தியானந்தன் என்போருக்கு பல முறை முறைப்பாடுகள் தெரிவித்தும் அதற்கான எந்தவித நடவடிக்கைகளு; எடுக்கப்படவில்லை என்று தாண்டிக்குளம் பகுதி பிரதேசவாதி ஒருவர் தெரிவித்திருந்தார்.

திருவிழா, விசேட பூசைகள், பாலஸ்தானம் என்று எதுவும் இங்கு 10 வருடத்துக்கு மேலாக நடைபெறவி;லை. நூளாந்த பூசையும் ஒழுங்காக நடைபெறுவதில்லை. இதற்கான ஆதாரங்களை எமது நிரூபர் குழு ஒரு மாத காலமாக சேகரித்து வைத்துள்ளது.

மேலும் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள், மற்றும் பொருட்கள் எல்லாம் தற்போது தலைவராக இருக்கும் உமாபதி என்பவருடைய தாயாரது வீட்டில் இருப்பதும், அங்கிருந்து பொருட்கள் கோயிலுக்கும் வீட்டுக்கும் இடையே நடமாடுவதும் எம்மால் நேரடியாக அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்களுக்கு பொதுவான கோயில் ஒன்று ஒரு குடும்பத்தால் ஆழப்படுவது கேலிக்கூத்தாக காணப்படுகின்றது.

இது தொடர்பாக தலைவரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் சரியான பதிலை அளிக்காத சந்தர்ப்பத்திலும், நித்தியானந்தன் என்பவர் சரியான பதிலை அளிக்காத சந்தரப்பத்தாலும் இச் செய்தியை வெளிப்படையாக பிரசுரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு இப்போது பொறுப்பான அதிகாரிகள் என்ன செய்யப்போகிறார்கள்? இரண்டு வாரங்களுக்குள் மாற்றங்கள் நிகழாவிடின் ஆதாரங்கள் யாவும் பிரசுரிக்கப்படும்.

-சிறீ-
தாண்டிக்குளம் நிரூபர்

Read more...

Tuesday, October 21, 2014

ஐரோப்பிய ஒன்றிய தடை நீக்கத்தால் புலி வர வாய்ப்பு ஏற்படலாமாம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியமையால் புலிகள் அமைப்பு சர்வதேச ரீதியில் மீளவும் செயற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படலாம். ஆனால், அதனை உறுதியாக சொல்ல முடியாது என்று அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான சுசில் பிரேமஜயந்த நேற்று திங்கட்கிழமைநடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தெரிவித்தார்.

ஐரேப்பிய ஒன்றிய நீதிமன்றம், தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. இலங்கையின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு பதவியேற்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று ஒருவருடம் கடந்து அதாவது 2006 ஆம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் மீது தடைவிதித்திருந்தது. இதனையடுத்து புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தன. தற்போது தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் மீதான தடை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு புலிகள் அமைப்பின் மீதான தடை நீக்கப்பட்டாலும் ஏனைய நாடுகளில் அத்தடை தொடர்ந்தும் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினுள் அடங்கும் 28 நாடுகளில் மாத்திரம் இந்த தடை நீக்கப்பட்டுள்ளது. தடையை நீக்கியமையால் இந்த நாடுகளில் புலிகள் அமைப்பினை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். புலம்பெயர் தமிழர்கள் புலிகளுக்கு ஆதரவாக மக்களிடம் நிதி திரட்டிவந்திருந்தனர். எதிர்காலத்தில் பலவந்தமாக நிதியை திரட்டலாம். இந்நிலையில், புலிகள் மீதான தடை நீக்கப்பட்டதையடுத்து இந்த நாடுகளில் மீண்டும் புலிகளுக்கு ஆதரவாக நிதிதிரட்டப்படும் அபாயம் காணப்படுகின்றது என்றார்.

இது தொடர்பில் அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் சர்வதேச ரீதியில் இராஜதந்திர மட்டத்தில் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கும். சில நாடுகளில் உள்ள சட்;டம் மற்றும் நீதி முறைக்கு அமைவாக தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கலாம். இந்தியாவின் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், புலிகள் மீதான தடையைநீக்குமாறு அந்நாட்டு அரசாங்கத்தை கோரியுள்ளனர். இறுதி தீர்மானம் அந்தந்த நாடுகளுடையது. எனினும், இலங்கையில் இந்த அமைப்பை 2009ஆம் முற்றாக நாம் தோல்வியடைய செய்தோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Read more...

Friday, October 17, 2014

சரத் பொன்சேகாவின் பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க உத்தரவு!

ஜனநாயக கட்சியின் தலைரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவின் பெயரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குமாறு சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணையாளருக்கு பரிந்துரைத்துள்ளார். சரத் பொன்சேகாவுக்கு வாக்குரிமை இருக்கின்றதா? என்பது தொடர்பில் தெளிவுப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணையாளர், சட்டமா அதிபரிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே சட்டமா அதிபர் மேற்கண்டவாறு தெளிவுபடுத்தியுள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் விசேட அதிகாரிகள் குழுவின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் அந்த தீர்ப்பு தொடர்பிலான விபரங்கள் தேர்தல்கள் ஆணையாளருக்கு நேற்று வியாழக்கிழமை மாலை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் 2014ஆம் ஆண்டு தேர்தல் இடாப்பிலிருந்து சரத் பொன்சேகாவின் பெயரை நீக்கிவிடுவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகா, கடந்த மேல் மாகாண சபைத்தேர்தலின் போது கெஸ்பேவ தேர்தல் தொகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார் என்பதுடன் அவருடைய பெயர் 2013ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் உள்ளடக்கப்பட்டிருந்தது. இராணுவ நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்ட ஒருவருக்கு, வாக்குரிமை இருகின்றதா என்று சிலர் தேர்தல்கள் ஆணையாளரிடம் வினவியிருந்தனர்.

அதுதொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் சட்டமா அதிபரினால், தேர்தல்கள் ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனையை, கட்சி செயலாளர்களை அழைத்து உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணையாளர் இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...

ஜெயலலிதா ஜெயராமுக்கு இடைக்கால நிபந்தனை பிணை வழங்கியது உச்சநீதிமன்றம்!!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமுக்கு பங்களூர் உச்சநீதிமன்றம் இடைக்கால நிபந்தனை பிணை வழங்கியது. மேலும், சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு தண்டனையையையும் நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் பிணை வழங்கி உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி இந்திய ரூபாய் அபராதமும் விதித்து கடந்த மாதம் 27ஆம் திகதி பெங்களூர் உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 10 கோடி இந்தியா ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பெங்களூர், பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தங்களை பிணையில் விடுதலை செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதுதவிர தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும் தண்டனையை நிறுத்தி வைக்க வலியுறுத்தியும் தங்கள் சொத்துகளை விடுவிக்க வேண்டும் என்று கோரியும் தனித்தனியாக 4 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவர்களுடைய பிணை மனுக்களை நீதிபதி சந்திரசேகரா கடந்த 7ஆம் திகதி நிராகரித்தார். குற்றவாளிகளுக்கு பிணை வழங்கலாம் என்று அரசு தரப்பில் விரும்பினாலும் ஊழலின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு தனி நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் மனுவையும், பிணை மனுவையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார்.

கர்நாடக உயர்நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துவிட்டதால் ஜெயலலிதா சார்பில் கடந்த 9ஆம் திகதி உச்சநீதிமன்றத்தில் பிணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு மறுநாள் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் சார்பில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஜெயலலிதாவின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் கடந்த திங்கட்கிழமை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு ஆஜராகி ஜெயலலிதாவின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதேபோல் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி சார்பில் மூத்த வழக்கறிஞர் சுஷில் குமார் ஆஜராகி, அவர்களுடைய பிணை மனுக்கள் மீதான விசாரணைக்கான வேண்டுகோளை முன்வைத்தார். இந்த வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இன்று விசாரணைக்கு திகதி குறித்து உத்தரவு பிறப்பித்தனர்.

இதன்படி ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் பிணை மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு இன்று விசாரணை செய்யப்பட்டது.

இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். மேலும் அரசு தரப்பு வழக்கறிஞராக முன்னுக்குப் பின் முரணாக பேசி வரும் பவானி சிங் நீடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞரான தே.மு.தி.க.வைச் சேர்ந்த ஜி.எஸ்.மணியும் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இதேபோல் பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமியும் தம் பங்குக்கு ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தானும் இந்த வழக்கின் ஒரு அங்கம். அதனால் என்னுடைய கருத்தையும் கேட்க வேண்டும் என்று சுவாமி தனது மனுவில் கூறியுள்ளார். இந்நிலையில், ஜெயாவின் பிணை மனு தொடர்பான வாதப்பிரதிவாதங்களை கருத்திற்கொண்ட நீதிபதி குழு, அவருக்கு இடைக்கால நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டது.

அத்துடன், ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிணையில் விடுதலையாகும் ஜெயலலிதா, வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும் மேல்முறையீட்டு ஆவணங்களை டிசெம்பர் 18க்குள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட 3 வாரத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

சிறப்பு நிதிமன்ற நீதிபதி குன்ஹாவுக்கு அச்சுறுத்தல் ஏதும் விடுக்க கூடாது என்றும் நீதிபதிகளை அவதூறு செய்யும் வகையில் பிரசுரங்கள் எதுவும் வெளியிடக்கூடாது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சுப்பிரமணிய சாமி வீட்டுக்கு உரிய பாதுகாப்பு தரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா குற்றவாளி என்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை என்றும் நான்கு ஆண்டு தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்து இடைக்கால ஜாமீன் வழங்கப்படுவதாக உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Read more...

Thursday, October 16, 2014

றிப்தி அலியின் “அமெரிக்காவில் 30 நாட்கள்” நூல் வெளியீடு!

இளம் ஊடகவியாளர் றிப்தி அலி எழுதிய அமெரிக்காவில் முப்பது நாட்கள் (அனுபவப் பகிர்வு) நூல் வெளியீடும் விடியல் இணையத்தளத்தின் பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் சனிக்கிழமை (18) பி.ப 3.30 மணிக்கு இல. 149, மாளிகாகந்த வீதி, கொழும்பு 10 இல் அமைந்துள்ள ஜம்இய்யதுஷ் ஸபாப் கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமயில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் இலங்கை அபவிருத்தி ஊடக மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எம்.சீ.ரஸ்மின் 'முஸ்லிம் சமூகமும் சமூக ஊடகங்களும்'' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார்.

புனித ரமழானை முன்னிட்டு விடியல் இணையத்தளத்தினால் நடத்தப்பட்ட கேள்வி – பதில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இதன்போது பரிசுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Wednesday, October 8, 2014

“சிங்கள கூட்டமைப்பு” எனும் பெயரில் அரசியல் கட்சியை உருவாக்குகின்றது பொதுபலசேனா!

பொதுபல சேனா அமைப்பின் தலைமைத்துவத்துடன் “சிங்கள கூட்டமைப்பு” எனும் பெயரில் புதியதொரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தெரிவித்துள்ளார்.

தமிழ் கூட்டமைப்பு, முஸ்லிம் கூட்டமைப்பு எனும் பெயர்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் இலங்கையில் உள்ளன. அக்கூட்டமைப்புக்களிலிருந்து ஒருபோதும் தலைவர்கள் வருவதற்கு இடமளியோம் என கொழும்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் ஞானசார குறிப்பிட்டுள்ளார்.

தலைவர்கள் உருப்படுவதற்கும் உருவாவதற்கும் இந்தக் காலப்பகுதியை வழங்குவதாகவும், அவர்கள் உருப்படாதவிடத்து, உருவாகாதவிடத்து தான் செயற்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள தேரர், நாட்டின் தலைவர்களை உருவாக்குது பொதுபல சேனாவே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

Read more...

Tuesday, October 7, 2014

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பிணையில் செல்ல கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் உள்ளிட்ட நால்வரையும் நிபந்தனை பிணையில் செல்ல கர்நாடக உயர்நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவிட்டதாக இந்திய செய்தித்தளங்களில் செய்தி வெளியாகியிருந்த போதிலும் அந்த செய்தியை மறுத்துள்ள அத்தளங்கள் பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள பிணை மனு மீதான விசாரணை இன்று (07) நடைபெற்றது.

ஜாமீன் மனு விசாரணையை முன்னிட்டு பெங்களுரின் சில முக்கியப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, ஜெயலலிதாவின் பிணை மனுவை முதல் மனுவாக விசாரிக்கக் கோரப்பட்டது. ஆனால், ஜெயலலிதாவின் மனுவை முதலில் விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஜெயலலிதா தரப்பில் மன்றில் ஆஜரான வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி ஆஜரானார். யெலலிதாவின் மனுவை அவசர மனுவாக கருதி முதல் மனுவாக விசாரிக்க வேண்டும் என நீதிபதியிடம், ராம் ஜெத்மலானி கோரிக்கை விடுத்தார்.

ஆனால், மனுவை வரிசைப்படியே விசாரிக்க முடியும் என நீதிபதி சந்திரசேகர் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் பிணை மனு வரிசை எண்படி 73ஆவது வழக்காக விசாரணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கக் கோரி அவர் சார்பில் மன்றில் ஆஜரான வழங்குரைஞர் ராம் ஜெத்மலானி வாதிட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக்கு எதிராக ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு நிலுவையில் உள்ள நிலையில், அவருக்கு பிணை வழங்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள சில தீர்ப்புகளை ஜெத்மலானி மேற்கோள்காட்டி வாதிட்டார்.

இதேவேளை, ஜெயலலிதாவுக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்து எதிர் மனு தாக்கல் செய்த அரசு தரப்பு வழக்குரைஞர் பவானி சிங், ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கினால் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லக்கூடும் என்பதால், பிணை வழங்கக்கூடாது என வாதிட்டார்.

'ஜெயலலிதா தமிழக அரசியலில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார். அவரை பிணையில் விடுவித்தால் இவ்வழக்கின் போக்கை மாற்றவும் தண்டனையில் இருந்து தப்பிக்கவும் முயற்சி செய்வார். மேலும், அவர் தலைமறைவாகி விடவோ, வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்லவோ வாய்ப்பு இருக்கிறது. எனவே ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கக் கூடாது' என அவர் மன்றில் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ராம் ஜெத்மலானி, 'ஜெயலலிதா எப்போதும் சட்டத்தை மதித்து நடப்பவர், எனவே அவர் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்க மாட்டார்' என்றார்.

ஜெயலலிதா தரப்பில் ஆஜரான ராம் ஜெத்மலானியின் வாதம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. வழக்கறிஞர் பவானி சிங்கும், ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கக்கூடாது என தனது வாதத்தை முன்வைத்தார். இரு தரப்பு வாதங்களும் எழுத்துப்பூர்வமாகவும் அளிக்கப்பட்டன.

தொடர்ந்து சசிகலா, இளவரசி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டு வந்தனர். உணவு இடைவேளைக்காக நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2.30 மணிக்கு பிணை மனு மீதான வாதம் மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மீண்டும் 2.30 மணிக்கு வாதம் தொடங்கியது. 3.35 மணியளவில் ஜெயலலிதா பிணையில் செல்ல முடியாது என கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read more...

Monday, October 6, 2014

இலங்கையின் சிறந்த அதிபர்களில் ஒருவர் என்ற விருது மதுராப்புர அஸ்ஸபா அதிபருக்கு!

இலங்கையின் சிறந்த அதிபர்களுள் ஒருவர் என்ற விருதினை வெலிகம - மதுராப்புர அஸ்ஸபா கனிஷ்ட வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம். ஹி்ப்ளர் (பீ.ஏ) பெற்றுக் கொண்டுள்ளார்.

இன்று கண்டியில் இடம்பெற்ற இலங்கையிலுள்ள சிறந்த அதிபர்களுக்கான விருதுவழங்கும் வைபவத்தின்போது பிரதமர் தி.மு ஜயரத்ன அவர்களினால் அஸ்ஸபா அதிபர் தனக்குரிய விருதினைப் பெற்றுக் கொண்டார்.

அதிபர் எம்.எஸ்.எம். ஹி்ப்ளர் பல வருடங்கள் வெலிகம - கப்புவத்தை அந்நூர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றிவிட்டு அண்மையில் (இம்மாதம்) அஸ்ஸபாவின் அதிபராக பணியேற்றுள்ளார். ஏற்கனவே இவர் பல அரச, மாகாண மட்ட விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

Read more...

Sunday, October 5, 2014

சந்திரிக்கா- ரணில் பிரித்தானியாவில் பேச்சு வார்த்தை. பிரதமருக்கு பச்சை – ஜனாதிபதிக்கு சிவப்பு சமிக்கைகள்.

எதிர்வரும் ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கள் வரவுள்ளது. இவ்வறிவித்தலுக்கு முன்னராக பிரித்தானிய சென்றுள்ள எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார் என தெரியவருகின்றது.

அந்த வரிசையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்கவையும் இரு தடவைகள் சந்தித்து நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்தனக்கு ஆதரவு தருமாறு வேண்டியுள்ளார் ரணில் விக்கிரமசிங்கா.

ரணிலுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு தர மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை தோற்கடிக்கக்கூடிய பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி வெற்றி பெற்ற பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்கும் பொறிமுறை தொடர்பில் விளக்கியுள்ளதுடன் அவ்வாறு ஒழிக்கப்பட்டு பாராளுமன்றுக்கு அதிக அதிகாரங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர் உருவாகவுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராவதற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் தேர்தலில் எதிர்கட்சிகளுக்குள்ள சவால்கள் தொடர்பிலும் எதிர்கட்சிகளின் ஐக்கியத்தின் அவசியம் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.

Read more...

உவா மக்களின் வாக்கு முடிவுகள் மஹிந்தவின் கழுத்தில் கத்தியாக. மின்சாரக் கட்டணத்தை குறைக்கு உத்தரவு.

எதிர்வரும் ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலை நடாத்தி மூன்றாவது முறையாகவும் ஆசனத்தில் அமர தீர்மானித்துள்ள மஹிந்தருக்கு கடந்த ஊவா மாகாண சபை முடிவுகள் பேதி மருந்தாக அமைந்துள்ளது. இம்முடிவுகள் முன்றாவது முறையும் ஆசனத்தில் அமரவேண்டுமானால் மாற்றங்கள் வேண்டும். நாட்டில் ஊழல் அற்ற நல்லாட்சி வேண்டும் என்று செய்தியை சொல்லியுள்ளது.

இதன் விளைவாக, ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் 25 சதவீத மின் கட்டணத்தை குறைத்து மக்களுக்கு நிவாரணத்துடனான மின் கட்டண பட்டியல் எதிர்வரும் தினங்களில் வாடிக்கையாளர்களு;ககு கிடைக்குமென இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

ஊவா தேர்தல்களுக்கு முன்னர்; 25 சதவீதத்தினால் மின் கட்டணத்தை குறைக்க ஜனாதிபதி உத்தரவிட்டார் கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய மின் கட்டணத்தை குறைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அன்றைய தினம் தொடக்கம் அமுலுக்கும் வரும் வகையில் சகல வாடிக்கையாளர்களுக்கும் மின் கட்டணம் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது .

Read more...

ஐக்கிய நாடுகள் சபையில் வஞ்சகமும், ஏமாற்றுத்தனமும். Barry Grey

இன்னுமொரு சட்டவிரோத யுத்தத்தைத் தொடங்கி வைத்துவிட்டு, ஜனாதிபதி பராக் ஒபாமா, உலகெங்கிலுமான அமெரிக்க நடவடிக்கைகளை நியாயப்படுத்த மற்றும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க உந்துதலின் பின்னால் எல்லா நாடுகளும் அணிவகுக்க வேண்டுமென கோரிக்கைவிட, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் வந்தார்.

அந்த உரை வெற்றுத்தனமான ஓய்ந்துபோன முழக்கங்களுடன் குறைகூறல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் இறுதி எச்சரிக்கைகளோடு இணைந்த பகட்டுப்பேச்சின் ஒரு தொகுப்பாக இருந்தது. அது இழுத்தடித்த, சம்பிரதாயமான முறையில், ஒரு அறிவிப்பை தொடர்ந்து மற்றொரு அறிவிப்பாக, நீண்ட மௌன இடைவெளிகள் அளிக்கப்பட்டு மற்றும் ஒரு பொருத்தமான வாதத்தை முன்வைக்க எந்தவொரு முயற்சியும் இல்லாமல், ஒரு உதட்டசைவாக வழங்கப்பட்டது.

ஆனால் அனைத்திற்கும் மேலாக அந்த உரை எவ்வகையில் வித்தியாசமாக இருந்ததென்றால், அதன் வலியுறுத்தல்களுக்கும் அரசியல் யதார்த்தத்திற்கும் இடையே முற்றிலும் தொடர்பற்றதாக இருந்தது. ஒபாமாவின் பொய்கள் மிகவும் மோசமானதாகவும் ஆணவத்துடன் இருந்து, அவை ஒரு மூளைக்குழப்பத்திற்குரிய குணாம்சத்தை எடுத்திருந்தன. அதிகாரத்தில் இருப்பவர்களால் ஒரேயொரு உண்மையைக் கூட ஒப்புக் கொள்ள முடியாத புள்ளியை உலக அரசியல் நிலைமை எட்டியிருக்கின்ற போது, அதுவே ஒட்டுமொத்த அரசியல் மற்றும் பொருளாதார ஒழுங்கமைப்பு நெருக்கடியின் ஓர் அசாதாரண மட்டத்தின் வெளிப்பாக இருக்கிறது.

“ஒரு நாட்டின் எல்லைகள் மற்றொன்றால் மாற்றி வரையப்படக்கூடிய ஒரு உலகில்... வலிமைக்கே உரிமை இருக்கிறது என்ற ஒரு உலக கண்ணோட்டத்தை" ஒபாமா கண்டித்ததில், எல்லா பொய்களும், பாசாங்குத்தனமும் ஒன்றிணைத்து கூறப்பட்டன. அவர் அறிவித்தார், “அமெரிக்கா வித்தியாசமான ஒன்றுக்காக நிற்கிறது. உரிமையே வலிமையை தருவதாக நாங்கள் நம்புகிறோம்—அதாவது பெரிய நாடுகள் சிறிய நாடுகளை அச்சுறுத்தக் கூடாது; அதாவது மக்கள் அவர்களின் எதிர்காலத்தை அவர்களே தேர்ந்தெடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்." [அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது]

இந்த கருத்து, உலகின் மிகவும் வன்முறைமிகுந்த மற்றும் அச்சுறுத்தும் நாட்டின் பிரதிநிதியிடமிருந்து வந்ததாகும், அந்நாடு தான், எங்கெல்லாம் அதன் பொருளாதார, அரசியல் அல்லது புவிமூலோபாய நலன்கள் ஆபத்தில் இருக்கிறதோ அங்கே இராணுவரீதியில் தலையிட அதற்கு கட்டுப்பாடில்லாத உரிமை இருப்பதாக வலியுறுத்தி, நேரடியாக ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறி, முன்கூட்டி போர்தொடுப்பதை அதன் வெளிநாட்டு கொள்கையின் அஸ்திவாரமாக கொண்டுள்ளது.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஓர் ஏகாதிபத்திய சக்தியாக அது எழுந்ததில் இருந்து, அமெரிக்கா அதன்விருப்பம் போல சிறிய மற்றும் பெரிய நாடுகளின் மீது அதன் விருப்பத்தைத் திணிக்க மற்றும் அச்சுறுத்த தனக்குத்தானே உரிமை எடுத்துக் கொண்டுள்ளது. கடந்த கால் நூற்றாண்டு, குறிப்பாக, உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள நாடுகளுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நடத்தப்பட்ட ஒரு முடிவில்லாத மற்றும் தீவிரமான தொடர் யுத்தங்களை, படையெடுப்புகளை, இரகசிய நடவடிக்கைகளை மற்றும் குண்டுவீச்சுக்களைக் கண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இருந்த அதன் இராணுவ நடவடிக்கைகளில், நூறாயிரக்கணக்கான மக்களின் மரணங்களுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியமே பொறுப்பாகிறது.

ஒருவர், ஏனையவைகளோடு சேர்த்து, 1989 பனாமா படையெடுப்பு, 1991இல் ஈராக்கிற்கு எதிரான முதல் வளைகுடா போர், 1992-93இல் சோமாலியாவில் தலையீடு, 1994இல் ஹைட்டி மீது படையெடுப்பு, 1998இல் சூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் குண்டுவீச்சு, 1999இல் சேர்பியாவுக்கு எதிரான போர், 2001இல் ஆப்கானிஸ்தான் மற்றும் 2003இல் ஈராக் படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு ஆகியவற்றையும் குறிப்பிடலாம். ஒபாமாவின் கீழ், அமெரிக்கா லிபியாவிற்கு எதிரான ஒரு போருக்குத் தலைமை வகித்துள்ளது, சிரியாவில் பஷர் அல்-அசாத் அரசாங்கத்தைத் தூக்கியெறியும் நோக்கில் ஓர் உள்நாட்டு யுத்தத்தைத் தூண்டிவிட்டது, மற்றும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், யேமன் மற்றும் சோமாலியாவில் ஆளற்ற விமான டிரோன் தாக்குதல்களை நடத்தியது.

உலகைக் கட்டுப்படுத்தும் அதன் உந்துதலில், அமெரிக்க ஏகாதிபத்தியம் மனிதகுலத்தை ஒரு புதிய பேரழிவுகரமான உலக யுத்தத்தை நோக்கி இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. ஒபாமாவின் முடிவுரை இந்த வலியுறுத்தலுடன் தொடங்கியது: “இந்த அமைப்பு ஸ்தாபிக்கப்பட்ட போது இருந்த உலக போர் நிழல் நீங்கிவிட்டது, பிரதான சக்திகளுக்கு இடையிலான யுத்தத்திற்கான சாத்தியக்கூறு குறைக்கப்பட்டுள்ளது." வாஷிங்டனும் நேட்டோவும் கிழக்கு ஐரோப்பாவை ஒரு ஆயுதமேந்திய முகாமிற்குள் திருப்ப தொடங்கியுள்ள நிலையில் மற்றும், மேற்கு மற்றும் அணுஆயுதமேந்திய ரஷ்யாவுக்கு இடையிலான ஓர் இராணுவ மோதலின் விளிம்புக்கு உலகைக் கொண்டு வர உக்ரேனின் உள்நாட்டு யுத்தத்தை—இந்த நெருக்கடி அவர்களின் சொந்த உருவாக்கமாகும்—பயன்படுத்த தொடங்கியுள்ள நிலையில் இது கூறப்படுகிறது.

அடுத்த வெறும் ஒருசில நிமிடங்களுக்குப் பின்னர், ஒபாமா மாஸ்கோவிற்கு எதிராக தெளிவாக இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தலை அறிவித்தார். “ஒருங்கிணைந்த தற்காப்புக்கு எங்களின் பொறுப்புறுதியை நாங்கள் உறுதியாக கடைப்பிடிப்பதுடன் மற்றும் இதற்காக எங்களின் நேட்டோ கூட்டாளிகளையும் நாங்கள் வலியுறுத்துவோம்," என்றார்.

ஆசியாவில், வாஷிங்டன் ஓர் ஆக்ரோஷமான இராஜாங்க, பொருளாதார மற்றும் இராணுவ தாக்குதலை சீனாவிற்கு எதிராக பின்பற்றி வருகிறது. மேலும் சிரியாவில் புதிய யுத்தம் ஒட்டுமொத்த மத்தியகிழக்கையும் சுற்றி வளைக்க அச்சுறுத்துவதுடன், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் மற்றும் சிரிய ஆட்சியின் ஆதரவாளர்களுக்கு (ஈரான் மற்றும் ரஷ்யா) இடையே ஒரு மோதலைத் தூண்டிவிட அச்சுறுத்துகிறது. ஒபாமாவின் வாதத்திற்கு நேரடியாக முரண்பட்ட விதத்தில், பிரதான சக்திகளுக்கு இடையிலான யுத்தத்திற்கான சாத்தியக்கூறு முன்னொருபோதும் இல்லாதளவிற்கு இப்போது அதிகமாக இருக்கிறது.

அவரது உரையின் பிரதான பகுதிக்கு வந்தால், வெளிவேடத்திற்கு இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக என்று, ஒரு முடிவில்லா "தலைமுறை" யுத்தத்தைத் தொடங்கியுள்ள ஒபாமா, “ஒரு பிரச்சினை மாற்றி ஒரு பிரச்சினையில், வெவ்வேறு நூற்றாண்டுக்காக எழுதப்பட்ட விதிகள் பற்றிய ஒரு புத்தகத்தை நாம் சார்ந்திருக்க முடியாது," என்றார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், யுத்தத்தை வெளியுறவு கொள்கையின் ஒரு கருவியாக பயன்படுத்துவதை மற்றும் நாடுகள் மற்ற நாடுகளின் உள்நாட்டு போர்களில் தலையிடுவதைத் தடுக்கும், ஐ.நா சாசனம் இனியும் பொருந்தாது என்பதையே அது குறிப்பிடுகிறது.

அடுத்து அவர் ஈராக் மற்றும் சிரியாவில் நிலவும் பேரழிவுகளை விபரிக்க சென்றார். முஸ்லீம் உலகின் "தீவிரவாத வன்முறை புற்றுநோய்" என்று எதை அவர் குறிப்பிட்டாரோ அதையே இந்த பேரழிவுக்கு காரணமாக சாட்டிவிட்டார். ஆனால் அப்பிராந்தியத்தின் பேரழிவுக்கான பொறுப்பு பெரிதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதே தங்கியிருக்கிறது என்பது அதை அவதானிக்கும் ஒவ்வொருவருக்குமே நன்றாக தெரியும்.

ஒரேமூச்சில் ஒபாமா அறிவித்தார், “மத்திய கிழக்கு முழுவதிலும் சுன்னி மற்றும் ஷியாவிற்கு இடையிலான பினாமி யுத்தங்கள் மற்றும் கொடூர நடவடிக்கைகளாலேயே அந்த பேரழிவு உருவாக்கப்பட்டது என்பதில் உடன்படுவதற்கு இதுவே நேரமாகும்." அதேவேளையில் அடுத்ததாக அவர் பிரஸ்தாபித்தார், “ISIL பயங்கரவாதிகளுக்கும் [ஷியா சார்ந்த] மற்றும் அசாத் ஆட்சியின் காட்டுமிராண்டித்தனத்திற்கும் எதிர்பலமாக சிரிய எதிர்த்தரப்பிற்கு [அதிகளவில் சுன்னி முஸ்லீம்களை கொண்டது] அமெரிக்கா, நம்முடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து, அவர்களுக்கு ஆயுதமேந்த உதவி வருகிறது மற்றும் பயிற்சி அளித்து வருகிறது."

ஒபாமாவின் 45 நிமிட உரைக்குள் நிறைந்திருந்த அத்தனை பிரமாண்ட பொய்களையும் தொகுத்தளிப்பது இங்கே சாத்தியமல்ல. ஆனால் உக்ரேனிய நெருக்கடி குறித்து அவர் கூறியதே அவரது கருத்துகளுக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் இருக்கும் முரண்பாட்டை நிரூபணம் செய்கிறது.

அவர் கூறினார், “இதுதான் அங்கு நடந்தது. உக்ரேனிய மக்கள் பரந்த போராட்டங்களில் ஒன்றுதிரண்டு சீர்திருத்தங்களுக்கு அழைப்புவிடுத்ததும், அவர்களின் ஊழல்மிகுந்த ஜனாதிபதி நாட்டை விட்டு ஓடிவிட்டார். கியேவ் அரசாங்க விருப்பத்திற்கு எதிராக, கிரிமியா இணைத்துக் கொள்ளப்பட்டது. ரஷ்யா கிழக்கு உக்ரேனுக்குள் ஆயுதங்களை அனுப்பியது, அது வன்முறைமிக்க பிரிவினைவாதிகளையும் மற்றும் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றுள்ள ஒரு மோதலையும் தூண்டி வருகிறது."

நிச்சயமாக, அந்த "பரந்த போராட்டங்களுக்கு" அமெரிக்கா மற்றும் ஜேர்மனியால் நிதியுதவி வழங்கப்பட்டு, ஒத்து ஊதப்பட்டன என்பதுடன், நாஜி ஆக்கிரமிப்பு மற்றும் உக்ரேனிய யூதர்களின் பாரிய படுகொலைக்கு ஒத்துழைத்த உக்ரேனியர்களை பெருமைப்படுத்தும் ஆயுதமேந்திய பாசிசவாதிகளால் அந்த போராட்டங்கள் தலைமை தாங்கப்பட்டன.

ரஷ்யாவை ஆதரித்த அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் தூக்கியெறியப்பட்டார் என்பதுடன், அவருக்கு மாற்றாக அங்கே நவ-நாஜிக்கள் மற்றும் அதிதீவிர-தேசியவாதிகளைக் கொண்ட, சட்டவிரோத அரசாங்கம் நிறுவப்பட்டது. அது அந்நாட்டின் கிழக்கு பகுதியில் குடியிருந்த பெரும்பான்மையினரை புறக்கணித்தது.

அதைத்தொடர்ந்து கிழக்கு உக்ரேனில் கொல்லப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான ஆயிரக் கணக்கானவர்கள், அமெரிக்க ஆதரவிலான உக்ரேனிய இராணுவம் மற்றும் பாசிச-மேலாதிக்கம் கொண்ட போராளிகள் குழுக்களின் கரங்களால் கொல்லப்பட்டார்கள். அவை ரஷ்யாவை ஆதரிக்கும் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்களை முற்றுகை இட்டன.

கடந்த மாதம் தான், மத்திய கிழக்கில் இருக்கும் வாஷிங்டனின் கூட்டாளி, இஸ்ரேல், காஸாவில் நிராயுதபாணியான பாலஸ்தீனியர்கள் மீது கண்மூடித்தனமாக குண்டுவீசி, 2,200க்கும் அதிகமான மக்களை கொன்று குவித்தது, அதில் பரந்த பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்களாவர்.

இன்னும் அதிகமாக திகிலூட்டுவதைக் கூறுவதே கடினமாக இருக்கிறது, அதாவது ஒபாமாவின் வலியுறுத்தல்களுக்கும் மற்றும் யதார்த்தத்திற்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பது அவருக்கே முற்றிலும் தெரியும், அப்படியில்லையென்றால் அவர் யதார்த்தத்திலிருந்து மிகவும் துண்டிக்கப்பட்டிருக்கிறார் என்றாகும். இந்த நிலையில் அவர் தனது அதிகாரபூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புகிறார். அமெரிக்க ஆளும் வர்க்கம் மனிதகுலத்தை மற்றொரு உலக யுத்தத்தை நோக்கி இழுத்துச் செல்கின்ற அதேவேளையில், அதன் கட்டுப்பாட்டையும் இழந்திருப்பதற்கு இந்த உரையை ஒரு மைல்கல்லாக எதிர்கால வரலாற்றாளர்கள் மிக சரியாக திரும்பி பார்ப்பார்கள்.

ஒபாமாவின் முழுப்பேச்சு இணைக்கப்பட்டுள்ளது.


Read more...

பள்ளிவாசல் கட்டிடத்தை அகற்றுமாறு மாத்தறை மாநகர சபை உத்தரவு!

மாத்தறை, இஸ்ஸதீன் நகர் பள்ளிவாசல் கட்டிடத்தை அகற்றுமாறு மாத்தறை மாநகர சபையினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு தொடர்பாக 02.10.2014ஆம் திகதியிடப்பட்ட கடிதமொன்று வக்பு சபையில் பள்ளிவாசல் பதிவுசெய்யப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எனினும் இந்தக் கடிதத்தில் பள்ளிவாசலின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் பள்ளிவாசல் பதிவுசெய்யப்பட்டுள்ள முகவரிக்கு பள்ளிவாசலின் தலைவரின் பெயர் குறிப்பிடப்பட்டு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த பள்ளிவாசல் அமைந்துள்ள முகவரியிலுள்ள கட்டிடத்தை 14 நாட்களுக்குள் அகற்றுமாறும் இந்தக் கடிதத்தில் தெரிவித்தக்கப்பட்டுள்ளது.

மாத்தறை, இஸ்ஸதீன் நகர் பள்ளிவாசலை மூடுவதற்கு கடும் போக்காளர்கள் கடந்த வருடம் முதல் முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையே மாத்தறை மாநகர சபையினால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

எமது மக்களுக்கு உண்மையாக இருப்போம்! ஆனந்த சங்கரியார் மோடிக்கு கடிதம். சித்தார்த்தனுக்காக வக்காலத்து.

மடல் வரைவதில் காலத்தை கடத்தியவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி. இவர் பிரபாகரன், மஹிந்த, சந்திரிக்கா என பல்வேறு பட்டோருக்கு கடிதங்களை வரைந்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு கடதமொன்றினை வரைந்துள்ளார். இக்கடிதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளால் தமது தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக உருவாக்க பட்ட அமைப்பு என்றும் இவர்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு அல்ல என்றும் குறிப்பிட்டுள்ள அவர் த.தே.கூ தேர்தலில் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக கூட்டணியாக உள்ளதே அன்றி அங்கு கூட்டணியே கிடையாது என்றும் அதற்கு உதாரணமாக புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனை மோடியை சந்திக்க செல்லும்போது தவிர்த்து சென்றமையை சுட்டிக்காட்டியுள்ளார்.

இக்கடிதத்தின் முழுவடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர்,
கௌரவ நரேந்திர மோடி அவர்கள்
புது டெல்லி

கண்ணியமிக்க ஐயா,

எமது மக்களுக்கு உண்மையாக இருப்போம்

தற்போது நான் வகிக்கின்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் பதவி திரு..அ.அமிர்தலிங்கம் அவர்கள் 1989ம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பதாக வகித்து வந்ததாகும். அகிம்சையையும், சகிப்புத்தன்மையையும் மிக வலுவாக முன்னெடுத்தமைக்காக யுனெஸ்கோ ஸ்தாபனத்தால் 2006ம் ஆண்டுக்கான 'மதன்ஜித்சிங்' விருது எனக்கு கிடைக்கப்பெற்றது. 17 ஆண்டுகளுக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் வகித்து வந்துள்ளேன். பிரபல வழக்குரைஞரான கியூ.சி பட்டத்தைப் பெற்ற அமரர் கௌரவ சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்களால் 1972ம் ஆண்டு உருவாக்கப்பட்டதே த.வி.கூ ஆகும். மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றியமையால் மிக்க மதிப்புடனும், நேசிக்கப்பட்டு ஈழத்துகாந்தி என வாஞ்சையுடன் மக்களால் அழைக்கப்பட்டார். அன்னாரால் தமிழ் மக்களுக்காக விட்டுச்செல்லப்பட்ட பெரும் சொத்தே தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். எமது இனப்பிரச்சனை சம்பந்தமாக தங்களுக்கு சில விடயங்களை தெளிவுப்படுத்துவதற்காக த.வி.கூ யின் வரலாற்றை மிகச் சுருக்கமாக குறிப்பிட விரும்புகின்றேன். மதிப்புக்குரிய அமரர் கௌரவ ஸ்ரீமதி இந்திராகாந்தி அம்மையார் காலத்திலிருந்து இலங்கையின் இனப்பிரச்சனையை தமிழர் விடுதலைக் கூட்டணியே கையாண்டு வந்தது. ஆனால் தற்போது கட்டாயமான சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் சார்பான குழுவினரிடம் கை மாறியுள்ளது.

தமிழ் பேசும் பல்வேறு சிறுபான்மை இனத்தவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதே தமிழர் விடுதலைக் கூட்டணியின் பல நோக்கங்களில் பிரதானமாகவும், அன்றைய அத்தியாவசிய தேவையாகவும் இருந்தது. சோல்பரி அரசியல் சாசனத்துடன் 1948ம் ஆண்டு சுதந்திரமடைந்த இலங்கையில் ஏற்கனவே இருந்த அற்ப சொற்ப அரசியல் உரிமைகளும் நியாயமற்ற முறையில் மறுக்கப்பட்டு புதிய அரசியல் சாசனம் மூலம் குடியரசாக மாற்றமடைந்தது. அன்றைய தமிழ் மக்களின் ஒற்றுமையின் அத்தியாவசியத்தை உணர்ந்த சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்கள் 23 வருடமாக நிலைத்திருந்த அரசியல் குரோதத்தை ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு 1945ம் ஆண்டு தன்னுடன் இணைந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை உருவாக்கி அக்கட்சியின் தலைவரான ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களை சந்தித்து அன்று தமிழ் மக்கள் முகம் கொடுத்த சவாலை எதிர்கொள்வதற்காக தன்னுடன் இணையுமாறு, அவரின் வீடு சென்று அழைப்பு விடுத்தார். மிகவும் பாராட்டத்தக்க வகையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் எந்தவித தயக்கமுமின்றி தமிழரசு கட்சி தலைவருக்கு முழு ஆதரவு கொடுப்பதற்கு இசைந்தார். தமிழ் மக்கள் இவர்கள் இருவரினது மீள் இணைவை இருபெரும் புகழ்மிக்க தமிழ் அரசியல் ராட்சகர்களின் இணைப்பாக கருதினர். தமிழ் சமூகம் இவ்விரு தலைவர்களின் இணைவை, ஒரு பொது நோக்கத்திற்காக தமது அபிப்பிராய பேதங்களை மறந்து இணைந்த பெருந்தன்மையை மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

அத்தகையவொரு பலமான அத்திபாரத்தில் தமிழ் மக்களுக்காக பணியாற்ற ஒரு நிரந்தர அமைப்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டதே அன்றி எவரும் இந்த அமைப்பிடம் முறையற்று தலையிடுவதற்கல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) என தம்மை அழைத்துக் கொண்டு தற்போது இலங்கை தமிழரசு கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய ஐந்து கட்சிகளையும் உள்ளடக்கியதாக கூறிக்கொண்ட ஒரு தூதுக்குழு தங்களை சந்தித்தது. இந்தக் தூதுக்குழுவில் தமிழரசுக் கட்சியை சேர்ந்த நால்வரும், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பிரதிநிதிகள் தலா ஒவ்வொருவரும் மட்டுமே தங்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டனர். அண்மையில் நடந்த வடக்கு மாகாணசபை தேர்தலில் 40,000 இற்கு மேல் வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்ற புளொட் கட்சியின் தலைவர் இதில் இடம் பெறவில்லை. வழக்கம் போலவே 55 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் ஈடுபாடு கொண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரையோ வேறு எவருடனுமோ கலந்து ஆலோசிக்கவும், அழைக்கவும் இல்லை. மேலிடத்திலிருந்து பணிப்பு எதுவும் வரவில்லை போலும்.

மதிப்புக்குரிய பிரதம மந்திரி அவர்களே! நான் சமஷ்டி ஆட்சி முறைக்கு மாற்றாக இந்திய முறையிலான அரசியல் சாசனத்தையொத்த ஒரு தீர்வை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறேன். இதற்கு எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு வரவில்லை. மதிப்புக்குறையாத சில ஆங்கில பத்திரிகைகளில் வெளியான சில பகுதிகளை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்

• சண்டே ஐலண்ட் - தனது 12-03-2006 திகதிய பத்திரிகையில் 'ஆனந்தசங்கரியின் தீர்வு' என்ற தலைப்பில் தீட்டியுள்ள ஆசிரியர் தலையங்கத்தில,; 'இந்திய முறையிலான தீர்வை முன்வைத்துள்ளார். பெரும்பான்மையான இலங்கையர்கள் அதனை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் விடுதலைப்புலிகள் பிரிவினை கோரிக்கையை கைவிடுவார்கள் என்பது கேள்விக்குறி'.

• த மோர்னிங் லீடர்- தனது 15-03-2006 'ஆனந்தசங்கரியின் பிரேரணை' என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில், 'ஆனந்தசங்கரியின் பிரேரணை உண்மையில் நடைமுறைச்சார்ந்த பொருத்தமான நடுநிலைமையானதாகும். எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்வதற்கு தயாரா?'

• டெய்லி மிரர்- தனது 16-03-2006 'தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவரின் வேண்டுகோளுக்கு செவிமடுங்கள்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆசிரிய தலையங்கத்தில், 'தென்னிலங்கை மக்களால் பெரிதும் மதிக்கப்படுகின்ற தலைவர் திரு. ஆனந்தசங்கரி நீண்டகாலமாக புலிகளின் வன்முறையையும், சர்வாதிகார போக்கையும் தொடர்ந்து எதிர்த்து வந்த யதார்த்தவாததியாக மதிக்கப்படுகின்றவர். ஆகவே அவருடைய பொருத்தமான ஆலோசனைகளுக்கு செவிமடுக்கப்பட வேண்டும்'. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்புடையீர், இக்குழுவினருக்கும் தங்களுக்குமிடையில் பேசப்பட்ட விடயங்கள் பற்றி எம்மில் யாருக்கும் எதுவும் தெரியாது. பத்திரிகைகளும் பிரமாதமாக எதையும் சொல்லவில்லை. தாங்கள் கூறிய ஆலோசனைகள் சில மட்டுமே தெரியவந்தது. ஆனால் அந்தக் குழுவில் பிரசன்னமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினரொருவர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறிய கருத்துக்களில் சில முக்கியமானவை உண்மைக்குப் புறம்பானவையாதலால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் உள்ள உறவு பற்றியும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு ஆணை கிடைத்துள்ளது என்பது பற்றியநிலைப்பாடும். உண்மையான நிலையை பிரதிபலிக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் பூசலும், ஏனைய கடசிகளுடன் நல்லுறவு இருப்பதாகவும் தெரியவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகள் ஆகியவற்றின் உறவுபற்றி கூறுவதானால் தமிழரசு கட்சியின் தலைவர் திரு. மாவை சேனதிராஜாவை விடுதலைப் புலிகள் தமது நிலைமையை பலப்படுத்த பயன்படுத்தினர் என்பதே உண்மை. இவர் இரு தடவைகள் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தேசிய பட்டியல் மூலம் கிடைத்த ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரு தடவையும் முழுமையாக அனுபவித்தவராவார். அதனைத் தொடர்ந்து 2002ம் ஆண்டு மூன்றாவது தடவையாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக தெரிவாகி பாராளுமன்றம் சென்றவராவார். இருப்பினும் தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் மறைந்து 26 வருடங்கள் செயல் இழக்கப்பட்டிருந்த தமிழரசு கட்சி முறையற்ற விதத்தில் மீண்டும் இவரால் புதுப்பிக்கப்பட்டது. ஊடக செய்தி ஒன்று பின்வருமாறு கூறியது:- 'தமிழரசு கட்சியை புனரமைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. மாவை சேனாதிராஜா 14-10-2003 இல் கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறை உபதலைவர் தங்கனை சந்தித்துள்ளார். தமிழரசு கட்சியின் புனரமைப்பு அவரின் கட்டளைக்கமையவே நடைபெறுகின்றது' இந்தப் பணியில் திரு மாவைசேனாதிராஜா விடுதலைப் புலிகளின் கட்டளைக்கமையவே செயற்பட்டுள்ளார் என்பது தெரிகின்றது. அதேபோல் என்னை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் பதவியிலிருந்து நீக்க எடுத்த முயற்சிகள் விடுதலைப் புலிகளின் கட்டளைக்கமையவே என்பது இங்கு தெளிவாகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கதையும் இது போன்றதே. தமிழ் தேசிய கூட்டமைப்பு த.வி.கூ உட்பட நான்கு கட்சிகளை கொண்டு உருவாக்கப்பட்டது அதிலிருந்து எவருடைய அனுமதியின்றி தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயர் நீக்கப்பட்டு அவ்விடத்தில் தமிழரசு கட்சியின் பெயர் சேர்க்கப்பட்டது. இது சம்பந்தப்பட்ட சக கட்சிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழரசு கட்சியும் விடுதலைப் புலிகளின் தூண்டுதலால் நேர்மையற்ற விதத்தில் உருவாக்கப்பட்டது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். 2004ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது திருவாளர்கள் மாவை சேனாதிராஜா, ஜி.ஜி.பொன்னம்பலம், பிரசன்னா இந்திரக்குமார், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகிய நால்வரும் முறையே தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளான இவர்கள் கையொப்பமிட்டு பிரசுரிக்கப்பட்ட த.தே.கூ இன் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஒரு பகுதியின் தமிழாக்கத்தை இங்கு தருகிறேன்.

'விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் தேசிய தலைமையாக ஏற்றுக்கொள்வதோடு விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் உண்மையான ஏகபிரதிநிதிகள் என்பதை ஏற்றுக்கொண்டு உண்மையாகவும், உறுதியாகவும் தமிழ் தேசம் சார்பில் விடுதலைப் புலிகளால் எடுக்கப்படுகின்ற சகல நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவோம்' என உறுதியளிக்கிறோம். தமிழரசு கட்சியின் முக்கியமான பொறுப்புள்ள அங்கத்தவர்கள் கூட இதன் தாக்கத்தை அப்போது உணரவில்லை. தமிழரசு கட்சி பொறுப்புள்ள வகையில் நடக்காமல் தமிழரசு கட்சிக்கும் த.தே.கூ இற்கும் பெரும் அவமானத்தை கொண்டு வந்துள்ளனர். த.தே.கூ, தமிழரசுகட்சி ஆகியவற்றின் புனரமைப்பு முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்பட்டதென சர்வதேச சமூகம் அறியும்போது அவர்களுடைய நிலைப்பாடு மாறுபட்ட முறையில் இருக்கும். இனப்பிரச்சினை சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஏகபோக உரிமையை தமிழரசு கட்சியும், த.தே.கூ உம் இழந்துவிட்டன. தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்ட பிழைகள் இன்னும்பல. த.தே.கூ இனர் தமது பிழையான செயற்பாட்டால் சரித்திரத்தையே மாற்றி அமைத்துள்ளனர்.

• விடுதலைப்புலிகளின் கட்டளைக்கமைய 2005இல் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை கலந்துகொள்ள விடாது தடுத்தமை.

• குறிப்பிட்ட ஒரு சிங்கள தலைவருக்கு தமிழ் மக்களை வாக்களிக்கும்படி கேட்டு வேறொருவரை வெல்ல வைத்ததோடு அனைத்து சிங்கள மக்களையும் தமிழ் மக்களுக்கு மாறாக ஒன்று சேர வைத்தமை.

• யுத்தத்தின் உச்சக்கட்டத்தில் அப்போதைய இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் திரு. சிவசங்கர் மேனன் அவர்களின் அழைப்பை ஏற்க மறுத்தமை பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் இழப்புக்கு காரணமாக இருந்தது. யுத்தத்தின் உச்சக்கட்டத்தில் பல ஆயிரக்கணக்கான பொது மக்களை இழந்து கொண்டிருந்த நேரத்தில் இச்சந்திப்பு இடம் பெற்றிருக்குமானால் பெரும் உயிரிழப்புக்களை தவிர்த்திருக்க முடியுமென அறிந்திருந்தும் எதுவும் தெரியாதது போல் நடிக்கின்றமை இவர்கள் மக்களுக்கு தொடர்ந்து செய்யும் துரோகமாகும். ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்புக்கும் த.தே.கூ உம் பொறுப்பேற்க வேண்டும்.

த.தே.கூ இன் நான்கு கட்சிகளின் செயலாளர்கள் விடுதலைப் புலிகளுக்கு வழங்கிய உத்தரவாதம் 2004 ஏப்ரல் தொடக்கம் 2009 மே 18 திகதி வரை விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள், குண்டுவெடிப்புக்கள், மிகக்கொடூரமான குற்றச் செயல்கள் மேற்கொள்வதற்கு காரணமாய் அமைந்ததோடு பல ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள, பாராளுமன்ற உறுப்பினர்களின்; இழப்புக்களுக்கும் காரணமாய் அமைந்துள்ளது. 2004ம் ஆண்டு த.தே.கூ இனரால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி அனைத்துவிதமான இழப்புக்களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பொறுப்புக்கூறல் வேண்டும். முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளும்போது அனுபவங்கள் இல்லாதவர்களிடம் கையளிப்பதால் ஏற்படுகின்ற வினையே இதுவாகும்.

அரசுடன் பேசுகின்ற ஆணையை தமிழரசுகட்சிக்கும், த.தே.கூ இற்கும் பல்வேறு தேர்தல்கள் மூலம் மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள் என்று கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாததது மட்டுமல்ல தவறான பாதைக்கும் இட்டுச்செல்கின்றது. 2004ம் ஆண்டு வடகிழக்கில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் அற்ப சொற்ப அரசின் தலையீட்டுடன் முற்று முழுவதுமாக விடுதலைப் புலிகளாலேயே நடத்தி வைக்கப்பட்டது. அத் தேர்தலில் ஆள்மாறாட்டம், அச்சுறுத்தல் என்பன வாக்களார்களுக்கு புலிகளால் நிறையவே இருந்தன. இத் தேர்தலில் தோற்றவர்கள் வெல்ல வைக்கப்பட்டார்கள். அதேபோன்று 2010ம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் பல்வேறு தேர்தல் மாவட்டங்களில் 09 வீதத்திலிருந்து 0.85 வீத மக்களே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் ஏறக்குறைய 7,50,000 வாக்குகளில் ஏறக்குறைய 65,000 மக்களே வாக்களித்தனர். இது வெறும் 09 வீதமாகும். இத்தகைய குறைந்த வாக்கை மக்களின் ஆணை என்று கூறமுடியாது. மேலும் உள்ளுராட்சி தேர்தல்களில் அளிக்கப்பட்ட வாக்குகளையும் மக்களின் ஆணை என்று ஏற்றுக்கொள்ள முடியாது. அவை உள்ளுர் சம்பந்தப்பட்ட விடயங்கள். இந்த விடயத்தில் என்ளால் குறிப்பிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இந்திய பிரதம மந்திரியின் குழுவினருடன் உண்மையை மறைத்து தவறாக வழிநடத்தியுள்ளனரா என்ற ஐயம் எழுகிறது.

தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தீர்வு சம்பந்தமாக த.தே.கூ அமைப்பே பேசி அரசுடன் வந்தது. இப்போது தமிழ் மக்கள் அவர்கள் மீது நம்பிக்கை இழந்துள்ளமையால் சம்பந்தப்பட்ட சகல அரசியல் கட்சிகளோடும் கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய காலம் வந்துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி தந்தை செல்வா அவர்களால் தமிழ் மக்களின் பிரச்சனை பற்றி பேசி தீர்ப்பதற்கு தமிழ் மக்களின் ஓர் நிரந்தர அமைப்பாக செயற்பட உருவாக்கப்பட்டது. அமரர் திரு. தொண்டமான், அமரர் திரு. ஜி.ஜி.பொன்னம்பலம் ஆகியோரின் ஆசீர்வாதத்தோடு தந்தை செல்வா அவர்களால் விட்டுச்செல்லப்பட்ட பெரும் சொத்தே தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். ஓவ்வொரு தமிழனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தன்னுடையது என சொந்தம் கொண்டாட உரிமை உண்டு. தன்னால் உருவாக்கப்பட்ட தமிழரசுக் கட்சியை மீள புதுப்பிக்கும் எண்ணம் கடுகளவும் தந்தை அவர்களுக்கு இருக்கவில்லை. அதை உறுதி செய்யும் நோக்குடனேயே திருவாளர்கள் ஜி.ஜி.பொன்னம்பலம், எஸ்.தொண்டமான் ஆகியோருடன் த.வி.கூ யின் தலைவர் பதவியை இவர்களுடன் பகிர்ந்து கொண்டார். தந்தையை மதிக்கின்ற ஒரு தமிழனும் தந்தையின் விருப்பத்துக்கு மாறாக தமிழரசு கட்சியை புதுப்பிக்க எதுவித நியாயமுமில்லை.

கௌரவ பிரதமர் அவர்களே! தங்களால் கூறப்பட்ட ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளையும் கலந்து ஆலோசித்து ஒரு பொதுவான நிலைப்பாடு எடுப்பதற்காகவே அன்றி தமிழரசு கட்சி ,தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றுடன் முரண்படுவதற்கல்ல. இவர்களுக்கு இனப்பிரச்சனை தீர்வில் அக்கறை இருப்பின் அவர்கள் விடுதலைப் புலிகளுடன் உள்ள தொடர்பை துண்டிக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும்.

நான் இந்திய அரசியல் சாசனத்தையொத்த ஒரு தீர்வை வலியுறுத்தி வருவது யாவரும் அறிந்ததே. அந்த நிலைப்பாட்டை இதுவரை எவரும்; பெரிதாக எதிர்க்கவில்லை. இதுபோன்று நாம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் பற்றியும் பேசக்கூடியதாக ஒரு சந்திப்பை மேற்கொள்ள எண்ணியுள்ளேன்.
நன்றி


வீ.ஆனந்தசங்கரி
செயலாளர் நாயகம்- த.வி.கூ

Read more...

சிறையிலுள்ள ராஜ் ராஜரட்ணம் மீது புலிகளுக்கு நிதி உதவியமைக்காக தாக்லான வழக்கு விசாரணைக்கு வருகின்றது.

அமெரிக்காவில் கோடிஸ்வரனாக இருந்தவர் இலங்கையை சேர்ந்த ராஜ் ராஜரட்ணம். பங்கு சந்தையில் சட்டவிரோதமான முறையில் உள்வியாபாரம் செய்தமை நிரூபிக்கப்பட்தை தொடர்ந்து அமெரிக்க வரலாற்றில் இவ்வாறான குற்றத்திற்கு அதிக தண்டனையான 11 வருடங்கள் சிறைத்தண்டனை ராஜரட்ணத்திற்கு வழங்கப்பட்டது யாவரும் அறிந்தது.

இந்நிலையில் இவர்மீது புலிகளின் பினாமி அமைப்பு என்று அறியப்படுகின்ற தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தினருக்கு நிதி வழங்கியமைக்காக வழக்க தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டிருந்த தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தினருக்கு 2000ம் ஆண்டிலிருந்து 2007ம் ஆண்டுக்குட்பட்ட காலத்தில் ராஜ் ராஜரட்ணமும் அவரது தந்தை ஜேஎம் ராஜரட்ணமும் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் 640 கோடி இலங்கை ரூபாக்கள்) வழங்கியுள்ளமை தெளிவாகியுள்ளது.

இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் வரவுள்ளதாகவும் அமெரிக்காவில் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றுக்கு ஒத்தாசை புரிதல் தேசத்துரோக குற்றமென ராஜரட்ணம் மற்றும் அவரது தங்தையாருக்கு பாரிய தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இங்கு குறப்பிடத்தக்க விடயம் யாதெனில் ராஜரட்ணத்தின் மகள் என அறியப்படும் யுவதி ஒருவர் வன்னியில் புலிகள் அமைப்பிலிருந்துள்ளார். யுத்தத்தின் இறுதி கட்டத்தில் சரணடைந்த இவர் தடுப்பு முகாமொன்றிலிருந்து படையினருக்கு கோடிக்கணக்கான பணத்தினை கொடுத்து வெளியே வந்து தற்போது ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சம் அடைந்துள்ளார். இவரின் பெயரில் கோடிக்கணக்கான பணம் ராஜரட்ணத்தால் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அப்பணத்தினை சுருட்டுவதற்கு புலிகளின் ஒரு தரப்பினர், சிங்கப்பூரில் பயங்கரவாத நிபுணர் என சொல்லப்படுகின்ற பாதுகாப்பு அமைச்சுக்கு நெருக்கமானவர் ஒருவருடன் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறியக்கிடைக்கின்றது. இச்செயற்பாடுகளுக்கு தமிழ் இணையம் ஒன்றினை முன்னர் நாடாத்தி வந்தவனும் தற்போது ஈபிடிபி யின் மண்கொள்ளை முகவருமாக மாறியுள்ள கண்ணன் என்பவன் இருப்பதாக அறியக்கிடைக்கின்றது.

Read more...

களவாக காணி விற்ற பொதுபலசேனாவின் தேரர் கைது. 7.5 மில்லியன் பிறாடு.

பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரின் இனங்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கான வலது கரமும் அக்கட்சியின் உப நிதிச் செயலாளருமான வெல்லம்பிட்டய சுமணதாச என்ற தேரர் காணி ஒன்றினை களவாக விற்றதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பௌத்த சங்கத்தின் பிக்குகள் சார்பில் பொரலஸ்கமுவ பிரதேசத்திலுள்ள விகாரை ஒன்றுக்காக விகாரரையின் பிக்குகளில் பெயரில் எழுதப்பட்டிருந்த காணியினை தனது சொந்த சொத்தாக விற்று எழுபத்திஐந்து லட்சங்களை பெற்றுக்கொண்டுள்ளார் குறித்த பிக்கு.

காணி உரிமை மாற்றத்தில் ஏற்பட்ட சிக்கலில் பிக்குவின் திருட்டினை உணர்ந்த காணியை கொள்வனவு செய்த வர்த்தகர் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கொடுத்த புகாரை அடுத்தே மேற்படி கைது இடம்பெற்றுள்ளது.

எது எவ்வாறாயினும் குறித்த பிக்கு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டபோது இரண்டு லட்சம் ருபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

குறித்த தேரரே கடந்த காலங்களில் சில அமைச்சகங்களுக்குள் அத்துமீறி நுழைந்து வட்டரக்க தேரரை தேடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்கு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது வீடியோ





கைது செய்யப்பட்ட பிக்கு அமைச்கத்தினுள் புகுந்து அட்டகாசம் புரிந்தபோது வீடியோ


Read more...

இந்துக் கட்டிடக் கலை வளர்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயம்.- த.விமலானந்தராஜா

'ஓர்நாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடி தெள்ளேணம் கொட்டாமோ'


நீக்கமற எங்கும் நிறைந்து விளங்கும் ஏகபரம் பொருளான இறைவனுக்கு பற்பல நாமங்களும் பற்பல வடிவங்களும் தருகின்றது இந்து தர்மம். அடியார்களின் பக்தித் திறத்துக்கு கேற்ப பல்வேறு வடிவங்களில் அருள்பாலிக்கின்ற இறைவடிவங்களில் பட்டி தொட்டிகள், வீதிஓரங்கள், ஆற்றங்கரை, குளக்கரை என எங்ஙணுகும் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வடிவம்தான் விநாயகர் பெருமானின் திருவடிவம்.

அந்தவகையில் சிவபூமியாம் இலங்காபுரியின் கண்ணே அஞ்ஞான இருள்போக்கி மெய்ஞான ஒளி கொடுக்கும் ஆதவனின் வரவுகாணும் கிழக்கிலங்கையின் மீன்பாடும் வாவிமகள் நீண்டிலங்கும் புகழ்பெற்ற மட்டக்களப்பு மாவட்டத்திலே 'தேன் கதலி சூழ்ந்து விளங்க', கல்வியும் கலைகளும் சிறந்து ஓங்கும் சிவபதிதான் 'தேனூர்' எனும் தேற்றாத்தீவுக் கிராமம். இக்கிராமத்தில் குடிப்பரம்பல் தோன்றிய காலந்தொட்டே தமிழர்களின் பாரம்பரிய கலையான கொம்புமுறி விளையாட்டு இக்கிராமத்தின் மத்தியிலே ஆடப்பட்டு வந்ததையும், இவ்விளையாட்டை ஆரம்பிக்கும் முன்னர் விநாயகருக்கு ஆலயம் அமைத்து வழிபாடு இயற்றப்பட்டதாகவும் அறியலாம். இதனால் இவ் விநாயகர் கொம்புச்சந்திப் பிள்ளையார் எனவும் போற்றப்படுகின்றார்.

ஆரம்ப காலத்தில் நீற்றுக் கட்டடித்தில் இருந்த இவ்வாலயம் கடந்த 2007 ம் ஆண்டு தை மாதம் பாலஸ்தானம் செய்யப்பட்டு நீற்றுச்சுவர் ஆலயம் முற்றாக அகற்றப்பட்டு ஆகம முறைக்குட்பட்டதாகவும் இந்து கலை அம்சங்கள் நிறைந்ததாகவும் அமைக்கப்பட்டு நிர்மானவேலைகள் நிறைவுறும் நிலையில் உள்ளது.

புதிய இவ்வாலய கட்டுமானப்பணியினை நோக்கும் போது இந்துக் கட்டிடக் கலைப்பாணிகளான நாகர, வேசர, தராவிட கட்டிடக் கலைப்பாணிகள் ஒருங்கே அமையப்பெற்ற ஆலயமாகத் திகழ்கின்றது என்றால் மிகையாகாது.

இவ்வாலயத்தில் கற்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், நிருத்த மண்டபம், தம்ப மண்டபம் ஆகியவற்றோடு வசந்த மண்டபம், யாகசாலை என ஆகமம்கூறும் அளவுப் பிரமாணங்களுக் கேற்ப மண்டப அமைப்புக்ககள் விளங்குகின்றன. இதன் விமானமனது மூன்று தளங்களைக் கொண்டதாக அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காட்சி தருகின்றது. இவ்வாலயத் தூண்கள் வட்டவடிவ, சதுரவடிவ, எண்கோணவடிவமாகக் காணப்படுவதோடு பல்வேறு புடைப்புச்சிற்பங்களைக் கொண்டதாகவும் விளங்குகின்றது. இதில் விநாயகப் பெருமானின் 32 வடிவங்களும் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.

இவ்வாலயத்தின் மண்டபங்கள், சுற்றுமண்டபங்கள் என்பவற்றின் உட்புறக்கூரையானது(பிளேட்) 12 இராசிகள் வடிவங்கள், கமலம், ரிசபகுங்சரம், மூசிகம், குதிரை, அன்னம், நாகம் போன்ற பல்வேறுபட்ட புடைப்புச் சிற்பங்களால் பொலிவுறுகின்றது. ஆலயத்தின் மகாமண்டபத்தில் தேவசபையும், நிருத்த மண்டபத்தில் சிவன் பார்வதி ஆகிய தெய்வங்களுக்கான அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய சிறிய ஆலயங்களும் அமைகக்கப்பபடுள்ளதோடு சமய குரவர் நால்வரது வடிவங்களும் அவர்களது வயதுத்தோற்றத்துக்கோற்ப அங்கலெட்சணங்களோடு தத்துருபவமாக அமைக்கப்பட்டுள்ளமையும் சிறப்பம்சமாகும் தம்பமண்டபத்தில் பலிபீடம் அமைந்துள்ளதோடு, கொடிதம்பம் 27 அடி உயரம் கொண்டதாகவும், கொடிமரத்தைச் சுற்றி வெங்கலவார்ப்பு வேலைகள் உள்ளதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாலயத்தின உள்வீதியில் பரிவாரக் கோயில்களாக நாகதம்பிரான், மகாவிஸ்ணு, முருகன், பைரவர், நவக்கிரகங்கள், ஆஞ்ஞனேயர் ஆகிய தெய்வங்களுக்கான ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளதோடு சண்டேஸ்வரருக்கான ஆலயமும் மற்றும் சிவலிங்கத்தைப் பிரதிஸ்டை செய்வதற்காக செவிதரிசன முறையில் வணங்கக் கூடியவாறு குறிஞ்சிக் கோட்டை அமைப்பை பின்பற்றி ஆலயமும் என பல சிறிய ஆலயங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அழகிய சிற்பவேலைகளுடன் அமைந்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது. மேலும் 41 அடி உயரம் கொண்ட 2 மணிக் கோபுரங்களும் அமைக்கப்படுகின்றன.

தன்னகத்தே ஒருங்கே கொண்டு விளங்கும் இவ்வாலயத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமும் எல்லோராலும் பேசப்படக் கூடியதும், வராற்றில் பொறிக்கப்படக் கூடியதும், 21ம் நூற்றாண்டின் இந்துக் கட்டிடக் கலை வளர்ச்சியில் புதிய பரிமாணமுமாக விளங்குவதுதான் இவ்வாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டு கொண்டுடிருக்கும் விநாயர் பெருமானின் 64 அடிஉயர சுதை விக்கிர ராஜ கோபுரக் கட்டுமாகம் பணியாகும்.

இந்து ஆகமமாகிய காமிய ஆகமத்தின் 21 வது பிரகார லக்ஷண விதிப்படலத்தில் இராஜகோபுர அமைப்புமுறை கூறப்பட்டுள்ளது. இதற்கமைய இராஜ கோபுரம் என்பது கருவறையில் சூக்கும் லிங்கமாக விளங்கும் இறைவனை ஆலயத்துக்கு வெளியே தொலைவில் நிற்கும் அடியார்களுக்குக் காட்சி தரும் வகையிலும், ஆலய மூலமூர்த்தியை நினைவுக்குக் கொண்டுவரும் வகையிலும் அமைக்கப்படும் அடையாள சின்னம் ஆகும். இதனால் இது ஸ்தூல லிங்கம் என அழைக்கப்படுகின்றது. அதாவது கருவறையில் சிறிய வடிவில் விளங்கும் இறைவனின் உருவத்தைப் பெரிதாக காட்சி தரக்கூடிய வகையில் அமைப்பதையே ராஜகோபுர சுட்டுகின்றது. ஆலயத்துக்குச் செல்லும் அடியார்கள் தொலைவில் இக் கோபுரத்தைக் கண்டதும் மூலமூர்த்தியாக இதனை நினைத்து வழிபடவேண்டும் என்பது ஆலய தரிசன விதியாகும். இந்து ஆலய அமைப்பானது ஒருமனிதனது உடமைப்பைப் போன்றது எனக் கூறப்படுகின்றது. அந்த வகையில் கருவறையானது தலையாகவும், அர்த்த மண்டபம் களுத்தாகவும் மகா மண்டபம் மண்டபம் மார்பாகவும் நிருத்த மண்டபம் வயிறாகவும், தம்பமண்டபம் கால்களாகவும் கோபுரம் பாதமாகவும் கொடிமரம் முள்ளந்தண்டாகவும் அல்லது தொப்புளாகவும் உருவகிக்கப் படுகின்றது. இங்கே கோபுரமானது பாதமெனக் கூறப்படுவதால் சமய அறிவு குறைந்த சிலர் கோபுரத்தை உயரமாகக் கட்டுவது பாதத்தை உயர்த்துவதுற்கு சமம் என்றும், கோபுர அமையப்படும் இடத்தில் பிரமாண்டமாக தெய்வ உருவை சிற்பமாக அமைப்பது பிழை என்று வாதிடுகின்றனர். இது முற்றிலும் தவறானது கருத்தாகும்.

இந்துக் கட்டிடக்கலை வராலற்றில் இராஜகோபுரங்கள் காலத்துக்குக் காலம் பல பரிமாண வளர்ச்சியைக் கொண்டு விளங்குவதை அவதானிக்கலாம்.டி பல்லவர் கால மன்னர்கள் குடவரைக் கோயில்களையும், கற்றளிக் கோயில்களையும் அமைக்க, சோழர்கள் பெரிய விமானங்களைக் கொண்டதாக ஆலயங்களை அமைத்தனர். பல்லவர், சோழர், காலங்களை விட நாயக்கர் காலத்தில் மிகப்பிரமாண்ட இராஜ கோபுரங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் மதுரை மீனாட்சி அம்மன், ஸ்ரீரங்கம் போன்ற ஆலயங்கள் குறிப்பிடதக்கவை. ஆனால் தொடர்ந்து பிற்காத்தில் பிரமாண்டமான ஆலயங்கள் அமைக்கப்பட்டதோடு இக்கோபுரங்களின் மூலமூர்த்தியின் பல்வேறு வடிவங்கள், தேவஅசுர யுத்தம் போன்ற வீரதீரச் சிற்பங்கள் என தெய்வங்கள் ஏராளாமாக அமைக்கப்படுவதோடு கோபுரங்களின் உயரமும் அதிகரித்து (மட்டக்களப்பு போரதீவு காளி அம்மன் 13 தளத்தில் அமைக்கப்படுகின்றது) இந்து கட்டிட, சிற்ப கலையானது பெருவளர்ச்சி கண்டுவருவதை அவதானிக்கலாம்.

அந்தவகையில் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேற்றாத்தீவு கிராமத்தில் அமைக்கப்பட்டுவரும் விநாயப்பெருமானின் 64 அடி உயர சுதைவிக்கிரக ராஜகோபுரகட்டுமானப் பணியானது ஆகமமுறை தழுவியதாகவும் அதேவேளை இந்துக் கட்டக்கலையும் ஒருங்கே அமைந்த பெருவளர்ச்சியாக திகழ்கின்றது. இது வரையில் எங்கும் இல்லாதவாறு அமைக்ப்படும் இவ்வாலய நிர்மானமானது இந்து கட்டிடக்கலை வளர்ச்சிகும் பெரிதும் உதவுவதோடு இந்து தர்மத்துக்கும் இக்கிராம மக்களுக்கும் கிடைத்த் பெருமை என்றால் அது மிகையாகது.







படங்கள்- எஸ்.ஸிந்தூ

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com