Wednesday, May 26, 2010

திஸ்ஸநாயகத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு வாபஸ்.

தமக்கு விதிக்கப்பட்ட இருபது ஆண்டு கால கடூழியச் சிறைத்தண்டனைக்கு எதிராக ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ளும் ஆவணங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உலக ஊடக சுதந்திர தினமன்று சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. எனினும், இந்த பொது மன்னிப்பை அமுல்படுத்துவதில் சில சட்ட சிக்கல்கள் காணப்பட்டன. தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக ஊடகவியலார் திஸ்ஸநாயகம் மேன்முறையீடு செய்திருந்தார்.

மேன்முறையீட்டு உத்தியோகபூர்வமாக வாபஸ் பெற்றுக் கொள்ளும் வரையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பை அமுல்படுத்த முடியாதென அறிவிக்கப்பட்டிருந்தது.இதன்படி, தமது மேன்முறையீட்டை வாபஸ் பெற்றுக் கொள்வதாக ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் நீதிமன்றிற்கு சட்டத்தரணிகளின் ஊடாக அறிவித்துள்ளார்.மேன்முறையீட்டு மனு வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டவுடன் பொதுமன்னிப்பு அளிக்க முடியும் என சட்ட மா அதிபர் மொஹாளன் பீரிஸ் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு பொதுமன்னிப்பு வழங்கும் செயன்முறையை துரிதப்படுத்துமாறு சர்வதேச ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

திஸ்ஸநாயக்கத்திற்கு எப்போது பூரணமாக பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்பது தொடர்பில் ஜனாதிபதியும், சட்ட மா அதிபரும் தெளிவுபடுத்த வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.

Read more...

ஜெனரல் பொன்கேகாவை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதியிடம் மகஜர்.

30 வருடம் நடைபெற்ற யுத்தத்தை தோற்கடித்து, ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் யுத்தத்தை வெற்றியை நோக்கி வழி நடத்திய உண்மையான தலைவரை சிறைவைத்துள்ளமைக்கு எதிராகவும் அவரை விடுதலை செய்யுமாறும் கோரி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் மகஜர் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனநாயக தேசியக் கூட்டணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனநாயக தேசியக் கூட்டணியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தை வழி நடத்திய உண்மையான தலைவரை சிறை வைத்து விட்டே அரசாங்கம் யுத்த வெற்றியை கொண்டாடுகிறது. இதற்கான இராணுவ வெற்றி வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அதற்கு இயற்கையும் இடமளிக்கவில்லை. அரசாங்கம் அறிவித்த வெற்றி விழா வாரத்தில் ஊடகங்களில் வெளியிட்ட போர் தொடர்பான ஒளிப்படங்களில் ஜெனரல் சரத் பொன்சேக்கா காணப்படும் எந்த படங்களையும் வெளியிடவில்லை. கடந்த வாரம் லங்காதீப பத்திரிகையின் வெளியாகும் உப்புல் ஜோசப் பெர்ணான்டோவின் 'குருதா விக்ராய' கட்டுரை போர் வெற்றித் தொடர்பாகவே எழுதப்பட்டிருந்தது. இதில் ஜெனரல் சரத் பொன்சேக்காவின் யுத்த வெற்றிகளும் உள்ளடக்கப்பட்டிருந்தது. எனினும் அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக பத்திரிகை நிர்வாகிகள் வெளியிடவில்லை.

சுதந்திரமாக செயற்படும் ஊடகம் என எண்ணப்படும் ஊடகங்களை கூட அரசாங்கம் அழுத்தங்கள் மூலம் கட்டுப்படுத்தி வைத்துள்ளது. அதேவேளை ஜெனரல் சரத் பொன்சேக்காவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. இதில் முதலாவது நீதிமன்றத்தின் விசாரணைகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சரத் பொன்சேக்கா தாக்கல் செய்த மனுவை அடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டிருந்தன. எனினும் கடந்த 21 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்திருந்த தடையை விலக்கிக் கொண்டது. இதற்கு எதிராக இன்று உயர்நீதிமன்றத்தில் நாம் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளோம்.

மக்கள் நம்பிக்கை கொண்டுள்ள ஒரே இடம் நீதிமன்றமாகும். இந்த நீதிமன்றத்திற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அழுத்தங்களுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும். அதேவேளை நேற்றைய தினம் ஜெனரல் சரத் பொன்சேக்காவுக்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சட்டவிரோதமானது என உத்தரவிடுமாறு கோரி மேன்மறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளோம். இந்த நிலையில் யுத்த வெற்றி தொடர்பாக பொய்யான கண்காட்சிகளை நடத்தாது, யுத்த வெற்றியின் உண்மையான வீரனை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோருவதாகவும் விஜித ஹேரத் மேலும் கூறியுள்ளார்.

Read more...

Tuesday, May 25, 2010

தொலைபேசியை திருடிய அமைச்சர் மேர்வினின் மெய்பாதுகாவலருக்கு சிறைத்தண்டைனை.

அமைச்சர் மேர்வின் சில்வாவின் பிரத்தியேக மெய்பாதுகாவலர் | அமைச்சரின் துணைவி மேரி லூசிடா வின் தொலைபேசியை திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது குற்றத்தை ஒப்புக் கொண்ட அவரை 2500 ரொக்கப்பிணையிலும் 100000 சரீரப் பிணையிலும் விடுதலை செய்துள்ள நீதிமன்று எதிர்வரும் 8ம் திகதி அவருக்கான தண்டனையை அறிவிக்கவுள்ளது.

திருடப்பட்ட தொலைபேசியின் பெறுமதி 13500 என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

கட்சி சொன்னால் ராகுலுக்கு வழிவிட்டு பதவி விலகுவேன்: மன்மோகன் சிங்

இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி பதவி ஏற்கட்டும் என்று காங்கிரஸ் கட்சி சொல்லும் பட்சத்தில் பிரதமர் பதவியில் இருந்து விலக தான் தயாராக இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இருந்தாலும் அப்படி எதுவும் இப்போதைக்கு நடக்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிய வில்லை என்றார் அவர்.

இந்தியப் பிரதமர், நான்கு ஆண்டுகளில் முதல் தடவையாக நேற்று புதுடில்லியில் செய்தியாளர் களைச் சந்தித்தார். “ராகுல் முழு அமைச்சராக எல்லா தகுதிகளையும் கொண்டவர். “இது குறித்து ராகுலிடம் பல முறை ஆலோசித் திருக்கிறேன். அவர்தான் மறுத்து வருகிறார். “ராகுல் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றி வருகிறார். “காங்கிரஸ் கட்சி எப்போது இளைஞர்கள் கையில் முக்கிய ஆட்சி பொறுப்பை கொடுக்க வேண்டும் என முடிவு செய்கிறதோ அப்போது அதற்கு நான் வழி விடுவேன்.
“எனது விருப்பமும் அதுதான்,” என்று திரு சிங் தெரிவித்துள்ளார்.

பொருளியல், இந்தியா பாகிஸ்தான் உறவு, விலைவாசி முதலான பல விவகாரங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார். சோனியா காந்திக்கும் தமக்கும் இடையில் அவநம்பிக்கை எவையும் இல்லை என்றும் கருத்து இடைவெளியும் இல்லை என்றும் சொன்ன பிரதமர், தமக்கு மிகவும் பொருத்தமான ஆலோசனைகளை வழங்குவது காங்கிரஸ் தலைவி சோனியாவா அல்லது தம் மனைவி கூர்ச்சரன் கோரா என்பது பற்றியும் கருத்து கூறினார்.

“என் வாழ்க்கையில் இரண்டு பேரின் ஆலோசனைகளும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
“சோனியா காந்தி, என்னுடைய மனைவி இரண்டு பேரிடம் இருந்தும் ஆலோசனைகளை, யோசனைகளைப் பெறுவதற்கு நான் கொடுத்துவைத்து இருக்கிறேன். “இருவரும் வேறுபட்ட விவகாரங்களில் எனக்கு ஆலோசனை கூறி வருகிறார்கள்,” என்று பிரதமர் சொன்னார்.

Read more...

இலங்கயர்களைக் கடத்திய இந்தோநேசியருக்கு அபராதம்.

சட்டவிரோதமான முறையில் இலங்கையர்களை அவுஸ்திரேலியாவிற்குள் கடத்த முயற்சித்த இந்தோனேஷியர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கடந்த வருடம் 254 இலங்கையர்களை சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் கடத்துவதற்கு குறித்த இந்தோனேஷிய பிரஜை முயற்சித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆப்ரஹாம் லொசொன்பெசி எனப்படும் கப்டன் பிராம் என்பவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிறைத் தண்டனையை தவிர்ப்பதற்காக கப்டன் பிராம் 25 மில்லியன் இந்தோனேஷிய ருபியாக்களை செலுத்தினார்.

குடிவரவு சட்டங்களை மீறி சட்டவிரோத ஆட் கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திறக்hக பிராம் ஏற்கனவே 20 மாத சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த நபர் இதுவரையில் 1500 சட்டவிரோத குடியேறிகளை அவுஸ்திரேலியாவிற்குள் வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளதாகத் நம்பப்படுகிறது.

Read more...

அரசு தமிழ் மக்களின் போராடும் குணத்தை தூண்டுகிறது. அர்ஜுனா ரணதுங்க

இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலைத்தூக்கும் வகையில் இலங்கை அரசு செயற்படக்கூடாது என ஜனநாயக தேசிய கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. இலங்கை அரசு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது வெறுமனே கட்டிடங்களையும், வீதிகளையும் புதுப்பித்து தமிழ் மக்களிடையே மீண்டும் போராடும் குணத்தை தூண்டுவதாகவும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அத்துடன் வடக்கு கிழக்கு மக்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடும் அர்ஜூன ரணதுங்க, மக்களின் மனதை வென்று அவர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத் வேண்டும் எனவும் கூறினார்.

தாம் சிறுவயதில் ஒற்றுமையாக வாழ்ந்தது போன்று ஒற்றுமையாக வாழவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பென சுட்டிக்காட்டும் அவர், இலங்கை அரசோ வடக்கு கிழக்கு மக்களை தெற்கு மக்களிலிருந்து பிரித்து இந்த நாட்டில் மீண்டும் ஒரு பயங்கரவாதத்தை உருவாக்கும் வகையில் செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தினார்.

ஆகவே இவ்வாறான சந்தர்ப்பத்தில் யுத்த வெற்றிகளைக் கொண்டாடுவதைத் தவிர்த்து வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் எனவும் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க வலியுறுத்தினார்.

Read more...

நாட்டில் சமாதானம் நிலவ கேபி உதவுகிறார். ரொஹான் குணரட்ன

நாட்டில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் தொடர்ந்து சமாதானம் நிலவுவதற்காக கேபி உதவுவதாக பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவிக்கின்றார். இலங்கை வாழ் தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கு இடையே உறவுப் பாலம் ஒன்றை ஏற்படுத்திவருவதாகவும் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவிக்கின்றார்.
இது தொடர்பாக இணையதளம் ஒன்றில் பின்வருமாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

நாடுகடந்த அரசாங்கத்தை அமைக்குமாறு வி.உருத்திரகுமாரனின் தலைமையிலான தனது
குழுவினருக்கு பணிப்புரை வழங்கி விட்டு இலங்கை அரசிடம் சரணாகதியடைந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் முதன்மையான – காத்திரமான பாத்திரத்தை வகித்து வருவதாக பேராசிரியர் ரொஹான் குணரட்ண தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையில் ஒரு உறவுப்பாலமாக கே.பி திகழ்கின்றார். இன ஐக்கியத்திற்காக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தனது தொடர்பாளர்கள் ஊடாக கே.பி பணியாற்றுகின்றார். இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் அவர் காத்திரமான பங்கை வகித்து வருகின்றார். வடக்குக் கிழக்கை சேர்ந்த பல தமிழர்களை கே.பி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அவரை நானும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளேன். எவ்விதமான சத்தம் சந்தடியின்றி அவரது பணி தொடர்கின்றது. அவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறீலங்கா அரசாங்கம் சித்திரவதைக்கு உட்படுத்தவில்லை. நல்லதொரு பணியில் ஈடுபடும் கே.பி அவர்களை அரசாங்கம் ஏன் சித்திரவதை செய்ய வேண்டும்?

கே.பி அவர்களின் உதவியுடனேயே வெளிநாடுகளில் உள்ள புலிகளின் கட்டமைப்புக்களை சிறீலங்கா அரசாங்கம் உடைத்து வருகின்றது. விடுதலைப் புலிகளின் கப்பல் ஒன்றை அவரது உதவியுடனேயே அரசாங்கம் கைப்பற்றியது. சிறீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து கே.பி செயற்படுவதால் வெளிநாடுகளில் இருந்து ஆயுதக் கிளர்ச்சியை தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடங்க முடியாது.”

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பொழுதும், அதன் பின்னரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளும், போராளிகளும் சிங்களப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டதன் பின்னணியில் முதன்மையான பாத்திரத்தை வகித்த கே.பி, வெளிநாடுகளிலும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் ரொஹான் குணரட்ணவின் ஊடகச் செவ்வி கடந்த ஓராண்டாக தமிழீழ மக்களிடையே நிலவிய சந்தேகங்களை மெய்யுண்மையாக்கியுள்ளது.

அத்துடன், தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்து புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் கே.பியின் அடியாட்களும், அவரால் நியமிக்கப்பட்ட புத்திஜீவிகளும் ஈடுபட்டு வருவதன் பின்னணியை ரொஹான் குணரட்ணவின் செவ்வி அம்பலப்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடகச் செவ்வியை அளித்த பேராசிரியர் ரொஹான் குணரட்ண, அருட்தந்தை இம்மானுவேல் அடிகளாரை ஒரு இனவாதியாக வர்ணித்ததோடு, கே.பி அவர்களால் நியமிக்கப்பட்ட வி.உருத்திரகுமாரனுடன் பேசி சிறீலங்கா அரசாங்கம் சமரசம் செய்துகொள்ள முடியும் என்று கூறியிருந்தமை நினைவுட்டத்தக்கது.

Read more...

போர்குற்றத்தினை ஐ. நா சபையால் விசாரிக்க வற்புறுத்துக - ஹிலாரிக்கு காங்கிரஸ் கடிதம்,

சிறிலங்கா அரசின் போர்குற்றத்தை ஐக்கிய நாடுகள் சபை விசாரிக்கவேண்டும். இதற்கான அழுத்தத்தினை ஹிலாரி கிளிங்டன் பான் கி மூன் அவர்களிற்கு கொடுக்கவேண்டும். இவ்வாறு அமெரிக்க காங்கிரஸ் ஹிலாரி கிளிங்டனுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும், நிதிச் சேவைகள் குழுவின் மூத்த உறுப்பினருமான ஸ்டிவ் டிரை கோஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹிலாரி கிளிண்டனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமது வேண்டுகோளை விடுத்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
இலங்கையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் அந்த நாட்டு அரசினால் நடத்தப் படும் விதம் குறித்த எமது கவலையை வெளிப்படுத்தி நானும் எனது சகாக்கள் 25 பேரும் ஒருவருட காலத்துக்கு முன்னர் கடிதமொன்றை உங்களுக்கு அனுப்பி இருந்தோம். இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதை சிறிலங்கா அரசு தாமதப்படுத்தியுள்ளது.

கடந்த 23 வருடங்களில் இலங்கை மக்கள் மிக மோசமான யுத்தமொன்றைச் சந்தித்துள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியும். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றவை எனத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றங்கள் மனித குலத்துக்கு எதிரான மோசமான குற்றங்களாகும். இதன் காரணமாக மோதலினால் உருவான துயரங்கள் மேலும் அதிகரித்துள்ளன.

இறுதி நான்கு மாதங்களில் 7ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் எனவும் 13 ஆயிரம் பேர் கயமடைந்தனர் எனவும் ஐ. நா. சபை மதிப்பிடுகின்றது. ஏனைய மதிப்பீடுகள் 30ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகின்றன.

மஹிந்தவின் ஆணைக்குழு வரவேற்கத்தக்கது. கடந்த கால ஆணைக்குழுக்களின் பயனற்ற தன்மை மற்றும் முன்னைய விசாரணைகளை ஜனாதிபதி கைவிட்டமை போன்றவற்றால் தற்போதைய ஆணைக்குழுவை அமைக்கும் நோக்கம் மற்றும் பலாபலன்கள் குறித்து சந்தேகம் எழுகின்றது. மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா.சபை விசாரணை செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் புதியவை அல்ல.

பல கௌரவம் மிக்க தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் இந்த வேண்டுகோளைப் பகிரங்கமாகவே விடுத்துள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரது அரசும் நீதியை நிலைநிறுத்தவும், மனித உரிமை மீறல்களுக்குக் காரணமான தனிநபர்களைப் பொறுப்புக்கூறச் செய்யவும் விரும்பினால் ஐ.நா.சபை மூலமாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளால் மாத்திரமே அது சத்தியமாகும் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இலங்கை அரசாங்கத்திற்கெதிராக வானில் எதிர்ப்பு வாசகங்கள் பறப்பு,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியொன்றில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணி, நியூசிலாந்துடன் விளையாடிய போது இலங்கை அரசாங்கத்திற்கெதிராக வானில் எதிர்ப்பு வாசகங்கள் பறக்கவிடப்பட்டிருந்தன. ஜெனரல் சரத் பொன்சேக்காவை விடுதலை செய்யுமாறு கோரியும், இலங்கையில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தக் கோரும் வாசகங்கள் அடங்கிய பதாகையொன்று இலகுரக விமானமொன்றில் கட்டப்பட்ட நிலையில் வானில் காட்சிப்படுத்தப்பட்டது. அமெரிக்காவிலுள்ள இலங்கையர்களினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read more...

இந்தியாவின் பாதுகாப்புக்கு சவாலாக உள்ள நக்சலைட்களை ஒடுக்குவோம்,

உள்நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் சவாலாக உள்ள நக்சலைட்களை ஒடுக்குவோம். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும். மத்திய அரசுக்கு மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வேண் டுகோள் விடுத்தார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2வது முறையாக ஆட்சிக்கு வந்து ஓர் ஆண்டு நிறைவு பெற்றது. இதையொட்டி, பிர தமர் மன்மோகன் சிங் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நக்சலைட் வன்முறை, தீவிரவாதம், ஐ.பி.எல். கிரிக்கெட் விவகாரம், மக்கள் தொகை கணக்கெடுப்பு, நதி நீர் பங்கீடு பிரச்னை, தனி மாநில கோரிக்கை, வளர்ச்சித் திட்டங்கள் உட்பட பல்வேறு பிரச்னை கள் பற்றி சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு பிரதமர் மன்மோகன் சிங் சளைக்காமல் பதில் அளித்தார்.

அதன் விவரம் வருமாறு:

நக்சலிசம் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு சவாலாக உள்ளது. இந்த பிரச்னையை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும். சட்டம்&ஒழுங்கு மாநில அரசின் பிரச்னை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும் நக்சலைட்கள் வன்முறையை ஒடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவத் தான் வேண்டும். மாநில அரசுகளும் மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் தனக்கு சில வரம்புகள் விதிக்கப்பட்டு இருப்பதாக கூறியது பற்றி கேட்கிறீர்கள். இதற்கு அவரே விளக்கம் அளித்து இருக்கிறார். சில வியூகங்களை உரிய அமைச்சரவையின் உரிய குழுக்களில் தான் விவாதிக்க முடியும்.

இடதுசாரி தீவிரவாதத்தை ஒடுக்குவதில் மத்திய, மாநில அரசுகளிடையே கருத்து வேறுபாடு கிடையாது. மாவோயிஸ்ட்களுக்கு சில வழிகளில் நிதி கிடைக்கிறது. அதை வைத்து ஆயுதங்கள் வாங்குகிறார்கள். சில மனித உரிமை அமைப்புகள் நக்சல் திட்டங்கள் பற்றி பிரசாரம் செய்வதை கட்டுப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை. இந்தியா, ஒரு ஜனநாயக நாடு. ஒவ்வொருவரும் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்த உரிமை உண்டு. வன்முறையை பரப்பாதவரை எந்த தடையும் விதிக்கப்பட மாட்டாது. நக்சலிசம், தீவிரவாதம் இரண்டையும் கட்டுப்படுத்தாவிட்டால் நமது பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்.

ஐ.பி.எல். விவகாரம்: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி மீதான புகார்கள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. இந்த புகார்கள் குறித்து நிதியமைச்சகம் விசாரணை நடத்திக் கொண்டு இருக்கிறது. தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சாதி வாரி சென்சஸ்: மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பற்றி நாடாளுமன்றத்தில் நான் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறேன். இந்த விஷயத்தில் பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துக்களை பரிசீலிக்குமாறு அமைச்சரவையை கேட்டு இருக்கிறேன். இது பற்றி அமைச்சரவையில் விவாதிக்கப்படும். எந்த முடிவை எடுத்தாலும் அதை மக்களுக்கு அறிவிப்போம்.
முஸ்லிம் கல்வி: கல்வி மற்றும் பயிற்சிகளில் முஸ்லிம்கள் எந்த அளவுக்கு ஈடுபட வேண்டுமோ, அந்த அளவுக்கு ஈடுபடவில்லை. அவர்களது பங்கேற்பு குறைவாகவே இருக்கிறது. சச்சார் கமிட்டி அறிக்கையிலும் இது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் கல்வி, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த 15 அம்சத் திட்டத்தை உண்மை, நேர்மையுடன் செயல்படுத்துவோம்.

கற்பனைக் குதிரை: இடதுசாரிகளின் ஆதரவை நீங்கள் தவற விட்டு விட்டீர்களா?
என்ற கேள்விக்கு பிரதமர் அளித்த பதில்: எண்ணங்கள் குதிரைகளானால், பிச்சைக்காரர்கள் கூட அதில் ஏறி சவாரி செய்யலாம்" என்ற பழமொழி தான் என் நினைவுக்கு வருகிறது.
(அர்த்தமற்ற கற்பனைகள், ஆசைகள் மூலம் அடைய முடியாததை அடையலாம் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது) இந்த பழமொழியை கூறிய பிரதமர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு, "ஒரே கருத்துடைய கட்சிகள் மக்கள் நலனிலும், நாட்டு வளர்ச்சியிலும் அக்கறைக் கொண்டு ஆதரவு தர முன் வந்தால் வரவேற்போம்" என்றார்.

தீவிரவாதம்: இந்து தீவிரவாதம் வளர்ந்து வருவது பற்றிய கேள்விக்கு பதில் அளித்து பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், "தீவிரவாதத்தை மதத்துடன் இணைப்பதை நான் ஏற்க மாட்டேன். தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது. சில சக்திகள் தங்களது கொடுமையான செயல்களுக்கு மதச்சாயம் பூச முயற்சிக்கின்றன. இந்த சக்திகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இந்தியா நிபந்தனை: பாகிஸ்தான் உடனான உறவு பற்றிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன் சிங், "இரு நாடுகளின் உறவில் நம்பிக்கை குறைபாடு தான் பெரிய பிரச்னையாக இருக்கிறது. பாகிஸ்தான் தனது எல்லையை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விடக்கூடாது என்ற நிபந்தனையைத் தான் இந்தியா விதிக்கிறது" என்றார்.

Read more...

Monday, May 24, 2010

நாடுகடந்த தமிழீழம் பிரபாகரனின் ஈழக்கனவிற்கு ஒப்பானது. கருணாவின் இரட்டைவேடம்.

நாடு கடந்த தமிழீழம் அரசு என்பது பிரபாகரனின் ஈழக் கனவுக்கு நிகரான அர்த்தமற்றதென கருணா தெரிவித்துள்ளார். சண்டே ஒப்சேவர் பத்திரிகைக்கு இவ்வாறு தெரிவித்துள்ள அவர் நாடுகடந்த தமிழீழ அரசிற்கான பாராளுமன்றம் என்ற புலிகளின் தேர்தலில் போட்டியிட்ட பலருடனும் நெருங்கிய உறவை பேணி வருகின்றார் என அறியமுடிகின்றது. நாடுகடந்த தமிழீழத்திற்காக சுவிற்சர்லாந்து நாட்டின் சூரிச் மாநிலத்தில் போட்டியிட்ட மட்டக்களப்பு ஓந்தாச்சி மடத்தினை சேர்ந்த தேவராசா என்பவருடன் நெருங்கிய உறவினை கொண்டுள்ள கருணா மறுபுறத்தில் நாடுகடந்த தமிழீழம் தொடர்பாக ஆங்கிலப் பத்திரிகைக்கு தெரிவித்திருக்கும் கருத்தானது அவரது இரட்டை வேடத்தை கோடிட்டு காட்டுகின்றது.

மேலும் அவர் அப்பத்திரிகைக்கு தெரிவிக்கையில் இலங்கை வாழ் தமிழர்களின் ஆதரவின்றி எவ்வாறு தனிநாடு ஒன்றை புலம்பெயர் தமிழர்களினால் நிறுவ முடியுமென அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாடு கடந்த தமிழீழ இராச்சிய உருவாக்கம் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கருணா புலம்பெயர் தமிழர்களுக்கு இடையில் முரண்பாடு காணப்பட்டால், அவர்களினால் சர்வதேச ரீதியில் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

நாடுகடந்த தமிழீழம் என்ற கோட்பாட்டினை முன்வைத்துள்ள புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் அமெரிக்காவை மையாகக் கொண்டு இயங்கி வரும் ருத்ரகுமாரன் அணி மற்றும் நோர்வேயை மையமாகக் கொண்டு இயங்கி வரும் நெடியவன் அணி மற்றும் பிரித்தானியாவை மையமாக கொண்ட அனி என மூன்று பிரிவுகளாக பிளவடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளதுடன் நாடு கடந்த தமிழீழ இராச்சியம் தொடர்பாக புலம்பெயர் தமிழர்களுக்கு இடையில் முரண்பாடான கருத்து நிலவி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனி இராச்சிய உருவாக்கத்தை வலியுறுத்தும் எந்தவொரு புலி ஆதரவு அமைப்பிற்கும் இலங்கை வாழ் தமிழர்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளதுடன் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக கடந்த அரசாங்கங்கள் வடக்கு கிழக்கு மக்களை புறக்கணித்து வந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு திரும்பப் போவதில்லை எனவும், தங்களது இருப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளும் சுயலாப நோக்கில் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர் தமிழளர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் கரங்களில் சிக்கித் தவிக்கவில்லை எனவும், அவர்கள் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கி வந்ததாகவும் தெரிவித்துள்ள அவர் யுத்தத்தின் பெயரால் அவர்களுக்கு வெளிநாடுகளில் வாழ முடிந்ததாகவும் கூறியுள்ளார். எனினும், சில புலம்பெயர் தமிழர்கள் தற்போது உண்மையை நிலையை விளங்கிக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

இலங்கையின் உள்விவகாரங்களில் ஐ.நா வை தலையிட வேண்டாமென்கிறது அரசு.

அமெரிக்கா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமுடனான முதலாவது சந்திப்பின்போது இலங்கையின் உள்விவகாரங்களில் ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனை தலையிட வேண்டாம் என இலங்கை அரசாங்கம் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவென செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்படவுள்ள குழுவினை நிறுத்துமாறும் வேண்டியுள்ளார்.

இராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றியும் ஐக்கிய நாடுகள் சபை சுதந்திரமான விசாரணைக்குழு ஒன்றை நியமித்து உண்மைநிலையை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Read more...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் செய்வது போதாது. ஐ.தே.க

நாட்டில் பெய்துவரும் கடும்மழையினால் கதியிழந்துள்ள மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் நிவாரணங்கள் போதுமானதல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் பா.உ கயான் கருணாதிலக தெரிவித்துள்ளார். அதே நேரம் அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக படம்பிடித்துக்காட்டி பிரச்சாரம் செய்வதாகவும் அவர் குற்ஞ்சாட்டியுள்ளார்.

அதேநேரம் மேற்படி வெள்ள அழிவிற்கு சட்டவிரோத கட்டிடங்களே காரணம் எனவும் அவற்றை அமைச்சர்கள் தமது அரசியல் பலத்தினை பயன்படுத்தி கட்டியெழுப்பியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read more...

யாழ்பாணத்தில் பிரமாண்டமான வெசாக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு.

யாழ்பாணத்தில் எதிர்வரும் 27, 28, 29, 30 ம் திகதிகளில் வெசாக் பண்டிகையினை கொண்டாடும் பொருட்டு படையினர் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பொருட்டு மேற்படி தினங்களில் யாழ் கோட்டை, துரையப்பா அரங்கம், நூலகம் ஆகிய பகுதிகள் வெசாக் வலையமாக பிரகடணப்படவுள்ளது. இத்தினங்களில் அங்கு தமிழில் பக்தி கீதங்கள், வெசாக் பண்டிகை தொடர்பான விளக்கம் என்பன ஒலிபரப்பப்படவுள்ளது. இதன் ஏற்பாடுகளில் படையினர் இறங்கிள்ளதை படத்தில் காண்கின்றீர்கள்.

Read more...

முன்னாள் புலிகளியக்க உறுப்பினர்களுக்கு சாரதிப் பயிற்யுடன் தொழில் வாய்ப்புக்கள்

தம்மிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் அல்லது சந்தேக நபர்களுக்கு விசேட வாகன சாரதிப் பயிற்சி வழங்கி அவர்களை வாகனச் சாரதிகளாக மாற்ற அரசாங்கம் முற்பட்டுள்ளது. இதற்கேதுவாக கோண்டாவிலிலுள்ள இலங்கைப் போக்குவரத்து சபையுடன் இணைந்து யாழ் மாவட்ட ராணுவத்தரப்பு பயிற்சி நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது.

முதற்கட்டமாக 100 இளைஞர்களுக்கு சாரதிப் பயிற்சி வழங்கப்படுகிறது. இது தொடர்பான நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாணம் கோண்டாவிலில் இடம்பெற்றிருந்தது. படையதிகாரிகளால் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் ஆரம்பமாகின. எனினும் அவர்களது குடும்பத்தினர் வழமை போன்று அச்சத்துடனேயே காணப்பட்டனர். சாரதிப் பயற்சிக்காக வந்தவர்களுடன் பிள்ளைகள் அல்லது மனைவியர் பிரசன்னமாகியிருந்தததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

படையினரால் விடுவிக்கப்பட்ட தமது பிள்ளைகள் தொடர்பில் இந்தப் பெற்றோரே அல்லது மனைவிமார் அல்லது பிள்ளைகள் அச்சம் கொண்டுள்ளதனை இது வெளிப்படுத்துகின்றது. முதற்கட்டமாக 100 பேருக்கு பயிற்சிகள் வழங்கி அவர்கள் தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக அண்மையில் ராணுவத்தரப்பு அறிவித்திருந்தது தெரிந்ததே.

Read more...

புலிகள் மற்றும் ஆதரவாளர்களால் தமிழக பாதுகாப்புக்கு ஆபத்து: மத்திய அரசு

இந்தியாவின் பெரும் அதிகாரிகள் அரசியல்வாதிகள் இலக்கு வைக்கப்படலாம்.
புலிகள் கள்ளத்தோணியில் இந்தியா வந்துள்ளனர் எ‌ன்று‌ம் அவர்களது ஆதரவாளர்களால் தமிழகத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று‌ம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்விவகாரத் துறை இணை செயலர் தர்மேந்திர சர்மா வெளியிட்டுள்ள செ‌ய்‌தி‌யி‌ல், தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தும், இலங்கையில் நிலவும் கொந்தளிப்பை பயன்படுத்தி புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட அதன் ஆதரவு அமைப்புகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி, தமிழகத்துக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் பெரும்பாலான புலிகள் கொல்லப்பட்டுவிட்டாலும், எஞ்சியுள்ள போராளிகளும், தலைவர்களும், அவர்களது லட்சியமான தமிழ் ஈழத்தை உருவாக்கும் நோக்குடனும், 'நம்பிக்கை துரோகிகள்' (இந்திய அரசு) மற்றும் 'எதிரிகளை' (இலங்கை அரசு) பழிவாங்கும் நோக்குடனும் தமிழகத்தில் ஒன்று சேர்ந்து வருகின்றனர் என்பது சமீபத்தில் பெறப்பட்ட அறிக்கைகள் வாயிலாக தெரியவந்துள்ளது.

எஞ்சியுள்ள போராளிகள் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தும், கள்ளத்தோணியில் இந்தியா வந்துள்ளனர். இந்தியாவை, குறிப்பாக தமிழகத்தை தாங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து திட்டம் வகுக்கும் தளமாக அவர்கள் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதை ஒதுக்கிட விட முடியாது.

கடல்வழியாகவும், முறையான ஆவணங்கள் மூலமாகவும், இலங்கை தமிழ் அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் இருப்பதை புறந்தள்ளிவிடவும் முடியாது.

உலகம் முழுவதும் பரவியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பினர், விடுதலைப்புலிகளின் தோல்விக்கு இந்தியாவின் பெரும் அரசியல் தலைவர்களும், அதிகாரிகளுமே காரணம் என்பது போன்ற, இந்திய விரோதப் போக்கை இலங்கை தமிழர்களிடையே விதைக்கும் வகையில் கட்டுரைகளை இணையதளத்தில் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். இத்தகைய பிரசாரம், இந்தியாவின் மிக மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை மிகவும் பாதிப்பதாக உள்ளன.

மேற்கண்ட காரணங்களுக்காக, விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு சட்டவிரோத அமைப்பு என்றும், இத்தகைய பிரிவினைவாத நடவடிக்கைகள் அனைத்தையும் இயன்ற வகையிலெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத் தேவை தொடர்ந்து உள்ளது என்று மத்திய அரசு கருதுகிறது.

தமிழகத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் போராளிகள், அந்த அமைப்பை விட்டு விலகியவர்கள், அனுதாபிகள் ஆகியோரின் நடவடிக்கைகள், குறித்து விசாரித்ததில் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்ட இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள், LTTE இயக்கத்தினரால் எப்படியேனும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவர் என்று தெரியவருகிறது.

தடையாணை செயலில் இருந்தும், இந்தியாவில் விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கள் மற்றும் தனி மனிதர்களின் நடவடிக்கைகள் காணப்பட்டதாலும், இந்த சக்திகள் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தங்களது ஆதரவை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொண்டன.

இந்த அமைப்பு குறித்த இந்தியாவின் கொள்கை மற்றும் அவர்களுடைய செயல்களை ஒடுக்குவதில் மாநில நிர்வாகத்தின் நடவடிக்கை ஆகியவை குறித்து விடுதலைப்புலிகள் தலைவர்கள், இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்கள், வெறுப்புற்றிருக்கிறார்கள் என்றும், மத்திய அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் மேற்சொன்ன நடவடிக்கைகள் இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பொது அமைதிக்கும், தொடர்ந்து அச்சுறுத்தலாகவும், குந்தகம் விளைவிப்பதாகவும் கருதி இவ்வமைப்பு ஒரு சட்டவிரோதமான அமைப்பு என அறிவிக்கப்படவேண்டுமென்றும் மத்திய அரசு கருதுகிறது.

மேலும் விடுதலைப்புலிகள் அமைப்பின் தொடர்ந்த வன்முறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிப்பதாக இருப்பதாலும், இவ்வமைப்பு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இந்திய மக்களின் பாதுகாப்புக்கு தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாலும், விடுதலைப்புலிகள் அமைப்பை சட்டவிரோதமான அமைப்பாக உடனடியாக அறிவிப்பது அவசியம் என்றும் மத்திய அரசு கருதுகிறது.

எனவே, தற்போது 1967ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (37/1967) 3ஆம் பிரிவின் (1) உட்பிரிவிலும், (3) உட்பிரிவின் வரம்பு நிபந்தனைகளிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு மத்திய அரசு, தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கிறது எ‌ன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

இலங்கை மீதான போர்க்குற்ற அறிக்கை கவலைதரும் விடயம்: ஐஎம்எப்

இலங்கை மீதான ஐ.நா. வின் போர்க்குற்ற அறிக்கை விடயம் கவலை தருவதாகவும், கவனத்தை ஈர்க்கும் விடயமாகவும் அமைந்துள்ளதென்று சர்வதேச நாணய நிதியத்தின்(ஐஎம்எப்) பேச்சாளர் கரோலின் அட்கின்ஸன் கூறியுள்ளார். இலங்கை தொடர்பாக ஐ.நா.வைத் தளமாகக் கொண்டியங்கும் இன்னர் சிட்டி பிரஸ்- க்கு அளித்த பேட்டியிலேயே ஐஎம்எப் பேச்சாளர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக இன்னர் சிட்டி பிரஸின் நிருபர் மத்யூ ரஸல்லீ குறிப்பிட்டிருப்பதாவது:

வட இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் தற்போது மேற்கொண்ட விஜயம் குறித்து இன்னர் சிட்டி பிரஸ் கேட்டது. அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் மூன்றாவது தொகுதி தாமதமாகியிருப்பதன் நிலைமை குறித்தும் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நெருக்கடிக்குழு இந்த வாரம் வெளியிட்ட அறிக்கை குறித்தும் கேட்கப்பட்டது.

அரசாங்கத்தின் கொள்கைகளால் மூன்றாவது தொகுதிக்கடனை வழங்குதல் விரைவாக இடம்பெறாதென்று எதிர்வுகூறப்படுகின்ற நிலையில், "களத்தில் தூதுக்குழுவை நாங்கள் அனுப்பி வைத்திருக்கின்றோம். அந்த தூதுக்குழுவானது விரைவில் தீர்மானத்தை மேற்கொள்ளும். வார இறுதியில் அதாவது நாளை (நேற்று) தூதுக்குழு தீர்மானத்தை எடுக்கும் என்று அட்கின்ஸன் குறிப்பிட்டிருந்தார்.

நட்பு ரீதியான நிருபர்களுக்கு கேள்விகள்,பதில்களை வழங்குவது தொடர்பாக நாணய நிதியம் மட்டுப்படுத்தப்பட்ட கொள்கையை கடைப்பிடிக்கின்றதா என்பது ஆச்சரியப்படும் விடயமென இன்னர் சிட்டி பிரஸ் குறிப்பிட்டிருக்கிறது.

வட பகுதிக்கான பயணம் எமது வழமையான நடைமுறையின் ஓர் அங்கமாகும். தலைநகருக்கு வெளியே சென்று மக்களைச் சந்திப்பது வழமையான நடைமுறையாகும் என்று அட்கின்ஸன் கூறியுள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் தற்போது தங்கியிருக்கும் முகாமுக்குச் சென்று மக்களை சர்வதேச நாணய நிதியம் சந்தித்திருந்தால் அது ஆச்சரியமானதொன்றாக விளங்கும்.

அரசாங்க அதிகாரிகளுடன் அதாவது வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ்ப்பாண மாவட்ட ஆட்சித் தலைவர் கே.கணேஷ் ஆகியோரை நாணய நிதியப் பிரதிநிதிகள் சந்தித்ததாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நெருக்கடிக் குழுவின் அறிக்கையை நாணய நிதியம் படித்திருந்தால் முகாம்களுக்கு ஐ.நா. வின் ஆதரவு தொடர்பான சர்வதேச விசாரணைக்கு அது அழைப்பு விடுத்திருக்கும் என்று இன்னர் சிட்டி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

Read more...

போர் குற்றம் பற்றி விசாரிக்க ஐ.நா.சபை விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும். AI

இலங்கையில் இராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி ஐக்கிய நாடுகள் சபை சுதந்திரமான விசாரணைக்குழு ஒன்றை நியமித்து உண்மைநிலையை வெளிப்படுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை கேட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின் போது நடந்த மனித உரிமை மீறல்களையும் உண்மைகளையும் ஐக்கிய நாடுகள் சபை வெளிப்படுத்த தவறிவிட்டதாக அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஆசிய பிராந்திய பிரதி பணிப்பாளர் மது மல்கோத்திரா குற்றம் சாட்டியுள்ளார்.

வன்னியில் இறுதி யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பங்கள் ஒரு வருடம் கடந்து விட்டபோதிலும் அவை வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படவில்லை என தெரிவித்த அவர் யுத்தம் நடைபெற்ற காலத்தில் போர் நிறுத்த கண்காணிப்பாளர்கள் உட்பட சுதந்திரமான கண்காணிப்பாளர்களை அங்கு செல்வதற்கு இலங்கை அரசாங்கம் தடைசெய்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வருடகாலமாகியும் உரிய நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்றும் சுமார் 80ஆயிரம் பொதுமக்கள் இன்னமும் இலங்கை அரசின் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய பிராந்திய பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர்நாயகம் பான் கீ மூனை சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலளர் கிளொடியோ கோர்டான் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். யுத்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

கடந்த ஒரு வருடகாலமாக பொதுமக்களை தடுப்பு முகாம்களிலும் போராளிகளை சிறையிலும் அடைத்து வைத்திருக்கும் இலங்கை அரசு இவர்கள் பற்றிய விபரங்களையும் வெளியிட மறுத்து வருவதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

Read more...

அமெ‌ரி‌க்க படை‌யினரு‌க்கு எ‌திராக இ‌ஸ்லா‌மிய‌ர்க‌ள் போ‌ர்: அ‌ல் கொ‌ய்தா அழை‌ப்பு

ஈரா‌ன், ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல் முகா‌‌மி‌ட்டு‌ள்ள அமெ‌ரி‌க்க படை‌யினரு‌க்கு எ‌‌திராக இ‌ஸ்லா‌மிய‌ர்க‌ள் போ‌ர் தொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று அ‌ல் கொ‌ய்தா ‌பய‌ங்கரவாத இய‌க்க‌ம் அழை‌ப்பு ‌விடு‌த்து‌ள்ளது. இணைதள‌ம் ஒ‌ன்‌றி‌‌ல் ‌வீடியோ கா‌ட்‌சி‌யி‌ல் தோ‌ன்று‌ம் அ‌ல் கொ‌ய்தா தளப‌தி அ‌ன்வ‌ர், அமெ‌ரி‌க்க‌ர்களை எ‌தி‌ர்‌க்க வே‌ண்டியது இ‌ஸ்லா‌மிய‌ர்க‌ளி‌ன் கடமை எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

அ‌வ‌ர்களை கொ‌ள்கை ‌ரீ‌‌தி‌யிலாக எ‌தி‌‌ர்கொ‌ள்வதுட‌ன் உட‌ல் ‌‌‌‌ரீ‌தி‌யாகவு‌ம் து‌ன்புறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று அவ‌ர் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌‌ள்ளா‌‌ர். கட‌ந்த ஆ‌ண்டு நவ‌ம்ப‌ர் மாத‌ம் 13 அமெ‌ரி‌க்க இராணுவ ‌வீர‌ர்களை கொலை செ‌ன்றவ‌ர் ஹ‌ட்ச‌ன் தனது மாணவ‌‌ன் எ‌ன்று கு‌றி‌‌ப்‌பி‌ட்டு‌ள்ள அ‌ன்வ‌ர், அ‌ந்த ‌நிக‌ழ்வை எ‌ண்‌ணி தா‌ம் பெருமை அடைவதாகவு‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

அதேநேரம் ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல் அய‌ல்நாடு இராணுவ‌ ‌வீரரை கொ‌ன்றா‌ல் ரூ.2 ல‌ட்ச‌ம் ப‌ரிசு வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று த‌லிபா‌ன்க‌ள் அ‌றி‌‌வி‌த்து‌ள்ளன‌ர். ஆப்கானிஸ்தானில் வன்முறையை கைவிட்டு, நடைமுறை வாழ்க்கைக்கு திரும்பும் தீவிரவாதிகளின் மறு வாழ்வுக்கு பணம் வழங்க மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டுள்ளன. அதன்படி நல்வழிக்கு திரும்ப ஒரு சிலர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், தலிபான் தீவிரவாதிகளின் கமாண்டர்களோ அவர்களின் மனநிலையை வேறு வழிக்கு திருப்பி விடுகின்றனர். அதாவது, ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் அய‌ல்நாட்டு இராணுவ வீரர்களை அவர்கள் கொலை செய்யவேண்டும். அவ்வாறு கொலை செய்யப்படும் இராணுவ வீரர்களின் தலைக்கு தலா ரூ.2 லட்சம் பாகிஸ்தானிய பணம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நேட்டோ தளம் மீது தாலிபான்கள் தாக்குதல்
தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளின் பெரிய தளத்தின் மீது நடத்தி தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நேற்று முன்தினமிரவு நடத்தப்பட்ட இத்தாக்குதலில், ராக்கெட்டுகள், மார்ட்டர்ஸ், தானியங்கி ஆயுதங்கள் கொண்டு பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

இத்தாக்குதலில் நேட்டோ படையினரும், ஊழியர்களும் காயமுற்றுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Read more...

மீள்குடியேற்ற கிராமங்களுக்கு சூரிய சக்தி மின்சாரம்

வவுனியாவில் மீள்குடியேற்றம் செய்யப் பட்டிருக்கும் கல்மடு மற்றும் கனகராயன் குளம் பகுதிகளிலுள்ள 570 வீடுகளுக்கு சூரிய சக்தி மூலமான மின்சாரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பதாக வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலேயே இம்மின் வசதி பெற்றுக்கொடுக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார். அதன்படி, கல்மடுவிலுள்ள 320 வீடுகளுக்கும் கனகராயன் குளத்திலுள்ள 250 வீடுகளுக்கும் இலவசமாக சூரிய சக்தி மூலமான மின்சாரத்தை வழங்க சீட் நிறு வனம் முன்வந்துள்ளது.

இதேவேளை, மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கருத்திற்கொண்டு வவுனியாவிலுள்ள ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அரச அதிபர் சுட்டிக்காட்டினார். அடுத்த வாரமளவில் பாலமோட்டை பகுதியில் 500 குடும்பங்களை மீளக்குடியமர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read more...

உள்ளுராட்சிசபைகளின் சேவைகளை மேம்படுத்த உலக வங்கியின் உதவியுடன் நெல்சிப் .

வடக்கு கிழக்கு மாகாண உள்ளுராட்சி சபைகளின் சேவைகளை மேம்படுத்த உலக வங்கியினுதவியுடன் நெல்சிப் என்ற ஒரு புதிய ஜந்தாண்டு திட்டமொன்று வட-கிழக்கில் அமுல்படுத்தப்படவுள்ளது. அதன் முதற்கட்டமாக சில பிரதேச சபைகளில் மக்களது கருத்துக் கணிப்பு ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் காரைதீவு பிரதேசசபையில் சனியன்று நடைபெற்ற அமர்வில் நெல்சிப் திட்ட நிபுணர்களான கலாநிதி. ஏம்.றசாக் மற்றும் கலாநிதி.எஸ்.அமீர்தீன் ஆகியோர் பிரதிநிதிகளோடு கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

(தகவல் விரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்)

Read more...

16 வயது மாணவனின் எவரெஸ்ட் சாதனை!

காத்மாண்டு, மே 22: தில்லியைச் சேர்ந்த 16 வயது மாண​வன் அர்ஜுன் பாஜ்பேயி, எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டு சாதனை புரிந்துள்ளார். உலகின் அதிக உயரமான 8,848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட்டின் உச்சியைத் தொட்டு சாதனை புரிந்துள்ளார்.

மிகச் சிறிய வயதில் எவெரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட இந்தியர் என்ற பெருமையை அர்ஜுன் பாஜ்பேயி பெற்றுள்ளார். சனிக்கிழமை காலை நேபாளம் வழியா​கச் செல்லும் பாதையில் சென்று உச்சியைத் தொட்டுள்ளார்.

இதற்கு முன்னர், நேபாளத்தைச் சேர்ந்த ஷெர்பா தெம்பா தனது 16-வது வயதில் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டு சாதனை புரிந்துள்ளார். அந்த சாதனையை தற்போது அர்ஜுன் பாஜ்பேயி எட்டியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து கலி​ஃபோர்னியாவைச் சேர்ந்த ஜோர்டான் ரொமேரோ என்ற சிறுவன் மிகவும் கடினமான பாதையான திபெத் வழியாக எவெரெஸ்ட் சிகரத்தைத் தொட்டார். இவருக்கு வயது 13 என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் உள்ள அனைத்து சிகரங்களையும் தொட வேண்டும் என்துதான் ரொமேரோவின் விருப்பமாம்.

சனிக்கிழமை காலை 6.33 அளவில் எவெரெஸ்ட் சிகரத்தைத் தொட்டார் அர்ஜுன். பின்னர் சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு பின்னர் கீழிறங்கினார். இவருடன் 50 வயதான அபா ஷெர்பாவும் துணைக்குச் சென்றிருந்தார். மலையேற்ற வீரரான அபா, தற்போது 20-வது முறையாக உச்சியைத் தொட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டவர் என்ற பெருமையை இவர் தக்க வைத்துக்கொண்டுள்ளார்.

இவர்களுடன் மற்றொரு மலையேற்ற வீராங்கனை மம்தா சோதா-வும் சென்றார். இவர் உச்சியை 10.24-க்கு சென்றடைந்தார். இவர்கள் மலை உச்சியை எட்டிய விவரத்தை ஆசிய மலையேற்ற வீரர்கள் குழு உறுதி செய்துள்ளது.

Read more...

Sunday, May 23, 2010

நான் ஒரு மார்க்சிஸ்ட்: தலாய் லாமா

திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா தன்னை ஒரு மார்க்சிஸ்ட் என்று பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளார். நியூயார்க் நகரில் நிகழ்த்திய சொற்பொழிவில் அவர் இதைத் தெரிவித்தார்.
முதலாளித்துவ கொள்கைகள் கம்யூனிஸ நாட்டில் அதீத சுதந்திரத்தைக் கொண்டு வந்தது. அதுவே தன்னை சீனாவிலிருந்து வெளியேற்றக் காரணமாக அமைந்தது என்றார்.

அவர் மேலும் கூறியது:

மார்க்சிய சிந்தனைகள் சில ஒழுக்க நெறிகளைக் கொண்டது.ஆனால் முதலாளித்துவ கொள்கையானது எப்படி லாபம் ஈட்டுவது என்பதை மட்டுமே போதிக்கிறது. கம்யூனிஸத்திலிருந்து விலகி சந்தைப் பொருளாதாரத்துக்கு சீனா மாறியதும் கம்யூனிஸ கொள்கைகளை கொஞ்சம் கொஞ்சமாக கைவிட ஆரம்பித்தது. பின்னர் அதையே அனைவரையும் பின்பற்றுமாறு வலியுறுத்தத் தொடங்கியது.

சீனாவில் முதலாளித்துவ கொள்கை வந்த பிறகு பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

போருக்கு எதிரான இயக்கம் தற்போது சர்வதேச அளவில் வலுப்பெற்று வருகிறது. ஹைதியில் நடைபெற்ற பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலகெங்கிலிருமிருந்து கிடைத்த உதவி, அமெரிக்காவில் முதல் முறையாக கருப்பர் இனத்தவர் அதிபராக தேர்வு பெற்றுள்ளது ஆகிய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது மக்களிடையே மிகுந்த முதிர்ச்சி ஏற்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. தற்போது இந்த உலகமே நேசம் மிகுந்ததாகவும் ஒருங்கிணைந்த பகுதியாகவும் மாறிவருவதாகத் தோன்றுகிறது. இந்த கருத்துகள் தவறு என்று எவருக்கேனும் தோன்றினால் தெரிவிக்கலாம் என்று வேடிக்கையாகக் கேட்டார் தலாய் லாமா.

சீனாவின் கம்யூனிஸ ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பேசியதால்தான் 1959-ம் ஆண்டிலேயே அந்நாட்டிலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று. இன்னமும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது தனக்கு அச்சம் இருப்பதாக அவர் கூறினார்.

சீனா பணக்கார நாடாக முன்னேறும் அதே வேளையில் அனைத்து துறைகளுக்கும் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். முதலில் சுயாட்சி கொண்ட நீதித்துறையும், சுதந்திரமான பத்திரிகை செயல்பாடும் அனுமதிக்கப்பட வேண்டும்.

சீனா தற்போது மத நல்லிணக்கத்தை எதிர்பார்க்கிறது. மத நல்லிணக்கம் என்பது இதயத்திலிருந்து சுயமாக வெளிவர வேண்டும். அது அச்சத்தினால் வந்தால் பலனிருக்காது. இப்போது மத நல்லிணக்கம் என்பது கட்டாயத்தால் கொண்டு வரப்படுகிறது என்றார்.

சொற்பொழிவுக்கான கட்டணம் அதிகமாக இருப்பது குறித்து கேட்டதற்கு, இதன் மூலம் திரட்டப்படும் தொகையில் ஒரு டாலர் கூட தம்மை வந்தடையாது என்ற அவர், பொதுவாக இதுபோன்ற சொற்பொழிவுக்கான கட்டணத்தை குறைவாக நிர்ணயிக்குமாறு ஏற்பாட்டாளர்களிடம் கூறுவதாக அவர் சொன்னார். இதன் மூலம் திரட்டப்படும் தொகையில் ஒரு பகுதி அறக்கட்டளைகளுக்கு செல்வதாக தலாய் லாமா குறிப்பிட்டார்.

Read more...

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்பான அறிக்கை பாதுப்புச் செயலருக்குச் செல்கிறது.

இலங்கையில் இயங்கி வரும் சர்வதேச மற்றும் உள்நாட்டு தன்னார்வ தொண்டு நிறுவங்களின் நடவடிக்கை பற்றிய அறிக்கையொன்று விரைவில் பாதுகாப்புச் செயலாளருக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஒரு சில வாரங்களில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் இயங்கி வரும் ஆயிரக் கணக்கான சர்வதேச மற்றும் உள்நாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு அறிக்கையிடப்படவுள்ளது.
குறிப்பாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சேவை ஓரு சமூகத்திற்கு மட்டும் நன்மை அளிக்கின்றதா அல்லது ஒட்டு மொத்த சமூகமும் நன்மை அடைகின்றார்களா என்பது குறித்து ஆராயப்படவுள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்பான நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளும் இந்த அறிக்கையில் இணைக்கப்படவுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையும் இத்துடன் இணைக்கப்பட உள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூலுகல்ல தெரிவித்துள்ளார் .

Read more...

புலிகளின் துஷ்பிரயோகங்கள் தொடர்பான ஐ.நா வின் அறிக்கை காலம் கடந்த விடயம். அமைச்சர்

வன்னியில் இடம்பெற்றிருந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்களை சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையானது காலம் கடந்த நடவடிக்கை என்று அராசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, விடுதலைப் புலிகள் இயக்கமே இந்த போர்க் குற்றங்களில் ஈடுபட்டது என்றும், படையினர் அவ்வாறான குற்றங்களை மேற்கொள்ளவில்லை என்றும் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டினார்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தப்பிச்செல்ல முயற்சித்த பெண்களின் தலைமுடியை விடுதலைப் புலிகள் கட்டையாக வெட்டியுள்ளனர். இதனால் தலைமுடி கட்டையாக வெட்டப்பட்ட பெண்களை விடுதலைப் புலி உறுப்பினர்கள் என கருதிய இராணுவத்தினர், முகாம்களில் அவர்களை வித்தியாசமான முறையில் நடத்தியுள்ளனர் என்றும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இருப்பினும், சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை படையினர் முறையாக நடத்தி அவர்களுக்கான மருத்துவ உதவிகளையும் செய்தனர் என்று தெரிவித்த ஊடக அமைச்சர், சரணடைந்த புலிகளிடம் படையினர் தவறுதலாக நடந்துகொள்ளவில்லை என்றும் கூறினார்.

Read more...

கிரனேட் தாக்குதலில் பத்துப்பேர் காயம்.

ரக்வான பிரதேசத்திலுள்ள தோட்ட லயம் அறையொன்றில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கிரனேட் தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். தனிப்பட்ட குரோதம் காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களுள் 2 பெண்கள் , 2 சிறுவர்கள் , 6 இளைஞர்கள் உள்ளனர். இதேவேளை காயமடைந்தவர்கள் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் 3 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read more...

மேஜர் ஜெனரல் சரத் சந்திரசிறியாலேயே இறுதி யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. கேகலிய

புலிகளுக்கான யுத்தத்தின் இறுதிக் கட்டம் மேஜர் ஜெனரல் சரத் சந்திரசிறியினாலேயே முன்னெடுக்கப்பட்டதாகவும் யுத்தத்தின் இறுதி கட்டத்தில் முன்னாள் ராணுவத் தளபதி சீனாவிற்கு பிரத்தியேக பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்ததாகவும் ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஊடக தகவல் நிலையத்தில் கடந்த 21ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Read more...

த‌மி‌‌ழ் உண‌ர்வை ம‌தி‌க்‌கிறே‌ன் - கம‌ல் அ‌றி‌க்கை

ஃபிக்கியின் ஊடக பொழுதுபோக்கு மற்றும் வணிகப் பொறுப்பில் இருந்து தா‌ன் விலக வேண்டும் என்று தமிழன உணர்வாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு நடிகர் கமல் ஹாசன் பதில் அளித்துள்ளார். த‌மிழ‌ர்களை இன‌ப்படுகொலை செ‌ய்த கு‌ற்ற‌ச்சா‌ற்‌றி‌க்கு ஆளா‌கியு‌ள்ள இல‌ங்கை‌யி‌ன் கொழும்புவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவிற்கு வணிக ஆதரவு அளித்துள்ள இந்திய தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு (FICCI) பொறுப்பிலிருந்து நடிகர் கமல் விலக வேண்டும் என்று மே 17 இயக்கம் சார்பாக தமிழின உணர்வாளர்கள் கமல் வீடு முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கு உடனடியாக பதில் அளித்துள்ள கமல், தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது :

த‌மி‌‌ழ் உண‌ர்வா‌ள‌ர்களே...

மேற்சொன்ன விலாசம் தவிர வேறு பொறுப்புகளில் உள்ளோர் பெயர்கள் இல்லாததால், கடிதம் ஒட்டுமொத்தமாக தமிழின உணர்வாளர்களுக்கு எழுதப்படுகிறது. அவ்விலாசம் எனக்கும் பொருந்தும் என்ற மயக்கமற்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

ஃபிக்கி என்ற அமைப்பு திரு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களால் துவங்கப்பட்டது. மனித நேயம் இந்த அமைப்பின் அடிப்படைத் தீர்மானங்களுள் இரண்டறக் கலந்ததாகும்.

உங்களைப் போன்ற உணர்வுள்ள நான், ஏற்கெனவே இலங்கை சென்று இந்த விழாவில் பங்கு கொள்வது நியாயமில்லை என்ற காரணத்தில் ஐஃபா நிகழ்ச்சியில் பங்குபெறச் செல்லவில்லை. உண்மையைச் சொன்னால், இதுவரை நடந்த ஐஃபாவின் எந்த நிகழ்ச்சியிலுமே நான் கலந்து கொண்டதில்லை.

என் அலுவலகத்தின் முன்னாள் கூடிய ஒரு சிறு தமிழுணர்வாளர்கள் கூட்டத்தில், சிலர் விண்ணப்ப வாக்கியங்கள் எழுதிய காகிதங்களை உயர்த்திப் பிடித்திருந்தனர்.

அவை நான் தென்னக FICCI தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்றும், இன்னொரு சுவரொட்டி எனக்கு இந்நாடு வழங்கிய பத்மஸ்ரீ பட்டத்தை திரும்பத் தந்துவிட வேண்டும் என்றும் வலியுறுத்தின.

தமிழ் உணர்வை மனதில் கொண்ட நான், FICCI தலைமை, FICCI entertainment தலைவர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யாரும் கொழும்பு விழாவில் பங்கேற்கக் கூடாது என அன்புக் கட்டளையிட, அவர்களும் இசைந்து IIFA விழாவுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளனர். இலங்கையில் நடக்கவிருக்கும் வர்த்தக் கூட்டமைப்பு விழாவுக்கும் இவர்கள் செல்லப் போவதில்லை என்றும் சொல்லியிருக்கின்றனர்.

மற்றபடி வியாபாரிகள் வர்த்தகம் செய்வது தொடர்ந்து நடந்து வருவதைத் தடுப்பது FICCI போன்ற சிறிய அமைப்புகள் கையில் இல்லை. உங்கள் கருத்துக்கள் என்னை வந்தடையும் முன்பாகவே (தற்காப்பு அல்ல) உணர்வின் உந்துதலால் இந்தப் பணியைச் செய்துள்ளேன். மற்றபடி என் நாடு எனக்களித்த கவுரவத்தைத் திருப்பித் தருவதால் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை என்று நம்புகிறேன்.

FICCI விமர்சனங்களை ஏற்று நடவடிக்கை எடுக்கும் மனப்பாங்குடையது. இம்மனித நேயம், மனப்பாங்கு, அதை நிறுவியவரிடம் FICCI கற்ற பாடம். தன் நிலையை உணர்த்தும் முதல் நடவடிக்கையாக FICCI தலைவர்கள் மனித நேயத்தோடு எடுத்திருக்கும் இம்முடிவு உங்களை மகிழ்விக்கும் என நம்புகிறேன் என்று கம‌ல் கூறியுள்ளார்.

Read more...

60 வயதுக்கு மேற்பட்ட சிறைக்கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை.

நாட்டின் பல்வேறு சிறைகளிலும் தண்டனை அனுபவித்து வரும் 60 வயதுக்கு மேற்பட்ட சிறைக்கைதிகளை விடுதலை செய்ய நீதி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில் 300 மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்படுவர் எனவும் அவர்களது பெயர் விபரங்கள் அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Read more...

இந்தியாவில் தஞ்சமடைந்தோர் மீள் குடியேற்றப்படுவர். அமைச்சர் மில்ரோய்.

இந்தியாவில் சரணாகதியடைந்துள்ள இலங்கைத் தமிழர்கள் விரைவில் சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தசாப்தங்களாக நீடித்த யுத்தம் காரணமாக அதிக எண்ணிக்கையிலான இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் சரணாகதியடைந்துள்ளனர்.

யுத்தம் காரணமாக படகுகள் மூலம் தென் இந்தியாவில் சரணாகதியடைந்த குறித்த இலங்கையர்கள் நீண்ட காலமாக அகதி முகாம்களில் தங்கியிருக்கின்றனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த அகதிகளை தமது சொந்தக் கிராமங்களில் மீள் குடியேற்றுவது தொடர்பிலான திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மீள் குடியேற்ற நடவடிக்கைகளை திட்டமிட்ட வகையில் முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவில் சரணாகதி அடைந்துள்ள இலங்கைத் தமிழர்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க உள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது. 2003ம் ஆண்டு முதல் இதுவரையில் 6687 பேர் இலங்கையில் மீள் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read more...

இறுதி யுத்தத்தில் தப்பிச்செல்ல முயன்ற பெண்கள் புலிகளால் சித்திரைவதை-ஐ.நா ,

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தப்பிச்செல்ல முயற்சித்த பெண்களை விடுதலைப் புலிகள் சித்திரைவதைக்கு உள்ளாக்கியதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவையிடம், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான்கீமூன் வழங்கியுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தப்பிச்செல்ல முற்பட்ட பெண்களின் தலைமுடியை விடுதலைப் புலிகள் கட்டையாக வெட்டியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு தலைமுடி கட்டையாக வெட்டப்பட்ட பெண்களை விடுதலைப் புலி உறுப்பினர்கள் என கருதிய இராணுவத்தினர், முகாம்களில் அவர்களை வித்தியாசமான முறையில் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் பெண்கள் இணைந்துகொள்வதனை தடுக்கும் முகமாக, பெற்றோர் மிக இள வயதில் அவர்களுக்கு உறவினர்களுடன் திருமணம் செய்துவைத்தாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அரசாங்கத்தினால் பல மனித உரிமை மீறல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் மறுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதுடன், அவர்களுக்கான நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தில் இலங்கை விவகாரம் குறித்து பகிரங்கமாக விவாதம் நடத்தப்படவிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பெண்கள் மீது பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பல்வேறு துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், எனினும், இதற்கு யார் பொறுப்பு என்பது தொடர்பில் தெரியவரவில்லை எனவும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 199 சிறுவர்கள் கொல்லப்பட்டும், 146 சிறுவர்கள் காணாமல் போயிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதேவேளை, சிறுவர்களை இணைத்துக்கொள்ளும் பட்டியலிருந்து பிள்ளையான் மற்றும் கருணாவின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதுடன், ஆனாலும் கருணாவின் ஆதரவாளர் இனியபாரதியின் பெயர் அந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.

Read more...

ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனை, ஜீ.எல் பீரிஸ் சந்திக்கத் திட்டம்

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ முனை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொடர்பான நிபுணர்கள் குழு நியமனம் மற்றும் லியன் பெஸ்கோவின் இலங்கை விஜயம் ஆகியன தொடர்பில் அமைச்சர் பீரிஸ் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நாளைய தினம் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

இதேவேளை, அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும் அமைச்சர் பீரிஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Read more...

அரசியல் தீர்வின் மாதிரி பொதியுடன் இந்தியா செல்கின்றார் ஜனாதிபதி - சிங்கள நாளேடு

இலங்கையின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான அரசியல் தீர்வு உள்ளடங்கிய மாதிரி அறிக்கையொன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ எதிர்வரும் ஜூன் மாதம் இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கவிருப்பதாக சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த மாதம் ஜனாதிபதி இந்தியாவிற்கு மேற்கொள்ளும் விஜயத்தின் போது இந்த அறிக்கையைக் கையளிக்கவுள்ளார். ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டு ஜனாதிபதி பிரதீபா பட்டேல் ஆகியோருடன் இந்த யோசனைகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

அரசாங்கம் உருவாக்கியுள்ள அரசியல் தீர்வுத் திட்டத்தில் 13வது அரசியல் சாசனத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி அந்தத் திட்டத்தின் கீழ் மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டிய முழுமையான அதிகாரங்களை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2002ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் வெளியாகும் இந்துப் பத்திரிகைக்கு செவ்வியளித்திருந்த ஜனாதிபதி, 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வை தன்னால் வழங்க முடியும் என்ற போதிலும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

மக்களிடம் இதற்கான அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பதே தனது தேவையாகும் எனவும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அதனை அமுல்படுத்தப் போவதாகவும் ஜனாதிபதி அந்த செவ்வியின் போது தெரிவித்திருந்தார். அதேபோல் கடந்த வருடம் ஜூலை மாதம் பசில் ராஜபக்ஸ கோதாபய ராஜபக்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்தியாவிற்கு விஜயம் செய்ததுடன் இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றிலும் கையெழுத்திட்டனர். இதன்மூலம் இந்தியாவிற்குத் தேவையான அரசியல் தீர்வு தொடர்பில் ராஜதந்திர இணக்கம் வழங்கப்பட்டது.

இதேவேளை, அண்மைக் காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்தியா மேற்கொண்டு வரும் பொருளாதாரத் தலையீடுகள் அதிகரித்துள்ளன. இந்தியாவின் புதிய தூதரக அலுவலகமொன்று யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விஜயத்தின் போது மற்றுமொரு தூதரக அலுவலகத்தைத் திறப்பது குறித்து பேச்சு நடத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அரசாங்கம் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இந்த செயற்பாடுகள் தேர்தலுக்கு முன்னர் ராஜபக்ஸ அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் மேற்கொண்ட இணக்கம் நடைமுறைப் படுத்தப்படுகிறதோ என்ற நியாயமான சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறான சூழல் ஏற்பட்டால் இலங்கை இந்தியாவின் மற்றுமொரு மாநிலமாக மாறி இறையாண்மை மற்றும் சுயாதீனத்தன்மையை இழந்த ஆசியாவின் செழிப்பு மிக்க நாடாக மாறுவதைத் தடுக்க முடியாது என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய இலங்கை விவகாரங்கள் தொடர்பில் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ கண்காணிப்பார் ,

இந்திய இலங்கை விவகாரங்கள் தொடர்பில் பொருளாதார அமைச்சர் பெசில் ராஜபக்ஷ கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவின் பதவிக் காலத்திலும், இந்திய விவகாரங்களை பெசில் ராஜபக்ஷவே கண்காணித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீ.எல்.பீரிஸ் இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக கடயைமாற்றிய போதிலும், இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகள் மற்றும் ஏனைய விவகாரங்களை பெசில் ராஜபக்ஷ கண்காணிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 8ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ள நிலையில், பெசில் ராஜபக்ஷ இன்றைய தினம் இந்தியாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

நாட்டில் நிலவும் மோசமான காலநிலையினால் அமைச்சர்கள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளக் கூடாது என்ற ஜனாதிபதியின் தடை உத்தரவு காரணமாக பெசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் காலம் தாழ்த்தப்படலாம் என அறிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க தலைமையிலான குழுவினர் இன்று இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும், இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவோவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயம் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளது.

Read more...

ஆமையினத்தை பாதுகாக்கும் உலக தினம் World Turtle Day : மே 23ம் திகதி - புன்னியாமீன்

உலக ளாவிய ரீதியில் சர்வதேச தினங்கள் அனுஸ்டிக்கப்படுவதற்கு குறித்த விடயத்தின் முக்கியத்துவமே மூல காரணமாகும். சர்வதேச தினங்களின் கருப்பொருள் மானுடம் சார்ந்ததாக மாத்திரமல்லாமல் சில முக்கியத்துவம் வாய்ந்த ஜீவராசிகள் தொடர்பாகவும் இந்த விசேட தினங்கள் அனுஸ்டிக்கப்படுகின்றன. இந்த அடிப்படையில் 2000 ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் மே மாதம் 23ஆம் திகதி ஆமை இனத்தைப் பாதுகாக்கும் உலக தினம் பிரகடனப்படுத்தப்பட்டு ஆமை இனத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மானுடத்துக்கு விளக்க வகை செய்யப்பட்டுள்ளது.

ஆமை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய உடலமைப்பைக் கொண்டது. இதன் உடல் ஓட்டினால் மூடப்பட்டதாக இருக்கும். உலகில் ஏறத்தாழ 300 வகையான ஆமையினங்கள் உள்ளதாக ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இவற்றில் சில இனங்கள் அழியும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளன. கடலாமைகள் ஒப்பீட்டளவில் பெரியவை. தோல்முதுகுக் கடலாமை (leatherback sea turtle) என்ற ஆமையினம் 900 கிலோகிராம் நிறை வரை வளர்வதாகக் கூறப்படுகின்றது.

ஆமையினத்தை பாதுகாக்கும் உலக தினமானது கடலாமைகளின் பாதுகாப்பினை வலியுறுத்தவும் அவை எதிர்நோக்கும் பல்வேறு அழிவுப் பயமுறுத்தல்களிலிருந்தும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றியும் ஆராய்வதாக உள்ளது.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடல் ஆமைகள் வாழ்ந்து வருகின்றன. டைனோஸர்களுக்கும் முன்பே பூமியில் தோன்றியவை இவை என்று நம்பப்படுகின்றது. எட்டு வகையான கடல் ஆமைகள் உலகத்தில் காணப்படுகின்றன. இவற்றில் ஐந்து வகை ஆமைகள் இந்திய, இலங்கை கடல் பகுதிகளில் வாழ்கின்றன. சூழ்நிலைக்கு ஏற்ப அவை தன் உடல் வெப்பத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும். உடல் வெப்பத்தை சீரமைக்கவும், சுவாசிப்பதற்கும் கடலின் மேல் மட்டத்துக்கு வந்து செல்லும்.

நிலத்தில் வாழும் ஆமை தன்னுடைய தலை, கால்களை ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். ஆனால், கடல் ஆமைகளால் இப்படிச் செய்ய முடியாது.

கடல் ஆமைகளில் மிகச் சிறியது சிற்றாமை. வளர்ந்த சிற்றாமையின் எடை சுமார் ஐம்பது கிலோ இருக்கும். சுமார் 80 செ.மீ. நீளம் வரை வளரும். பெரிய ஆமைகளின் எடை சராசரியாக 250 - 400 கிலோ கிராம்களாகும். சில இனங்கள் 900 கிலோ வரை வளர்ந்து காணப்படும்.

கடல் ஆமைகள் நிலத்தில் வாழும் பெரிய ஆமைகளில் இருந்து தோன்றியவைதான். இவை டொல்பின்கள் போல சில நிமிடங்களுக்கொருமுறை மூச்சு விட மேலே வரும்.

பெருந்தலை ஆமைகளின் முக்கியமான உணவு நத்தைகள், ஜெலி மீன், சிப்பி போன்றவை. இவை நத்தை போன்ற உறுதியான ஓடுகளையுடைய உயிரினங்களை உட்கொள்ளத் தகுந்தாற் போன்ற வாயமைப்புடன் இருக்கும். கடல் ஆமைகளுக்கு பற்கள் கிடையாது. தாடைகளை வைத்தே மென்று தின்ன முடியும். மிகக் குறைந்த தூரத்துக்கு மட்டுமே பார்க்க முடியும். நுகரும் திறன் இவற்றுக்கு மிகவும் அதிகம்.

கடலிலிருந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பெண் ஆமைகள் முட்டையிட நிலத்துக்கு வரும். இதற்காக சில வேளைகளில் ஆயிரக்கணக்கான மைல்கள்கூட நீந்தி வரும். கடலின் விளிம்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் அது மணலில் பெரிய பள்ளம் தோண்டும். பின்னர் அதில் முட்டையிடும். ஆண் ஆமைகள் ஒரு முறை கடலுக்கு சென்றுவிட்டால் வாழ்க்கை முழுவதும் அங்கேதான். ஒரு ஆமை 50 இலிருந்து 200 முட்டைகள் வரை இட்டாலும் சில மட்டுமே பொரியும். முட்டைகள் கோல்ப் பந்தின் வடிவத்தில் இருக்கும். முட்டையிட்ட பின்னர் குழியை மூடிவிட்டு, கடலுக்குள் இறங்கிச் சென்றுவிடும். கடலாமைகள் அருகிவரும் ஓர் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளதனால் கடலாமை முட்டைகளை எடுப்பதோ, விற்பனை செய்வதோ குற்றமாகக் கருதப்படுகிறது. முட்டைகளின் மீது படிந்திருக்கும் மணற்படுகை சூரிய வெப்பத்தினால் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடையும். குறித்த காலத்தில் ஆமைக்குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளியேறி மணலைத் துளைத்துக்கொண்டு அவை வெளிவரும்.

முட்டை பொரிந்த பின் (60-85 நாட்கள்) ஆமைக்குட்டிகள் இரவில் கடலுக்குள் சென்றுவிடும். எல்லா ஆபத்துகளிலிருந்தும் தப்பித்து முழு வாழ்நாளையும் கடல் ஆமையால் வாழ முடிந்தால் 120 ஆண்டுகளுக்கு மேலும் வாழும். டிஸ்கவரி சானலில் ஒரு முறை முட்டையிலிருந்து வெளிவரும் ஆமைக்குட்டிகள் கடலை நோக்கி விரைவதையும் அவைகளை பிடித்து தின்ன கடல் பறவைகள் வானத்திலிருந்து வட்டமிட்டுக் கீழிறங்குவதையும் ஒளிபரப்பினார்கள். கடற்கரை முழுவதும் குட்டியாக ஆமைகள். ஐந்து ஆறு நிமிடத்துக்குள் அவை கடல் நீரில் புகுந்துவிட்டால் உயிர் தப்பும். கடலுக்குள் செல்லும்வரை ஆமைக் குஞ்சுகளின் நிலை கேள்விக் குறியே.

அலுங்கு ஆமை சில காலங்களில் நச்சுத்தன்மை உள்ள கடல் பஞ்சு போன்ற மிருதுவான தாவர வகையை உண்ணும். இதனால் உடலெங்கும் நஞ்சு பரவியிருக்கும். இவற்றை மனிதர்கள் உண்டால் உயிருக்கே ஆபத்து.

மனிதனால் கடலாமைகள் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்கும் பிடிக்கப்படுகின்றன. இவற்றைச் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்காக அதிக கவனமும் அர்ப்பணிப்பும் தேவைப்படுகின்றது. இத்தினத்தின் பிரதான குறிக்கோள் கடலாமைகளுக்கு அன்பு செலுத்துவதாகும். அவற்றின் நல்வாழ்விற்கு எவ்வாறு வகை செய்ய வேண்டும் என்பதை உணர்த்துவதாகும்.

1975முதல் செல்லப்பிராணியாக இவற்றை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. கடலாமைகள் செல்மொனல்லா எனும் பெக்டீரியாவைக்கொண்டது. இதனால் மக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் என்பதாலே இது தடை செய்யப்பட்டது. நோய்களைக் கட்டுபடுத்த மற்றும் தடுக்கும் மத்திய நிலையத்தின் கணிப்பீட்டின்படி வருடா வருடம் 74000பேர் சல்மொனல்லா பக்டீரியாவால் பீடிக்கப்பட்டுவருவதுடன், இதில் 6வீதம் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது. இந்நோயால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் சிறுவர்களும், வயோதிபர்களும் ஆவர்.

கடலாமைகளின் வசிப்பிடங்களைப் பாதுகாத்தல் அவை பாதைகளை குறிக்கிடும் போது அவற்றின் மேலோட்டைப் பிடித்து பாத்திரமாக அகற்றுதல் அவற்றைப் பார்த்து ரசித்தல் அவற்றின் செயல்களை அவதானித்தல் அவற்றைச் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்கு கடலாமைகளை வாங்காதிருத்தல் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் கடலாமைகளை கொண்டு போய் காட்டுக்குள் போடாமலிருத்தல் போன்றவற்றை நாம் செய்தல் வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com