Tuesday, December 24, 2019

மனிதத்தை தின்னும் மதவெறியில் ஈனப்பிழைப்பு நடாத்தும் நாதாரிகள்.. பீமன்

தமிழ் ஊடகப்பரப்பில் செத்தவீட்டு ஊடகம் என பரவலாக அறியப்படும் ஊடகத்திலும் சில முகநூல் பதிவுகளிலும் ஒரு செய்தி படிக்க கிடைத்தது. அச்செய்தியில் இஸ்லாமிய ஆண் மகன் ஒருவன் இந்து தமிழ் பெண் ஒருத்தியை இந்து கலாச்சார முறைப்படி திருமணம் செய்துள்ளான் என்ற செய்தி சொல்லப்பட்டுள்ளது. இரு மனங்கள் இணைந்து கொள்வதை செய்தியாக்குகின்ற அளவுக்கு இன்று ஊடகங்களின் வங்குரோத்து வளர்ச்சி பெற்றுள்ளது.

அங்கே வெகு வீராப்பாக மேலும் வெளிச்சம் போட்டுக்காட்டப்பட்டுள்ள விடயம் யாதெனில் அந்த ஆண் மகன் தனது பெயரை இந்துப்பெயராக மாற்றிய பின்னரே திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டாராம். அத்துடன் அந்த திருமண வைபவத்தின் புகைப்படங்களைக்கூட பிரசுரித்துள்ளார்கள் ஊதாரிப்பயல்கள். ஒரு தனிமனிதனின் கௌரவத்தை மதிக்காத ஊதாரிகள் தங்களுக்குள்ளே உள்ள மதம் என்ற அரக்கனை வெளியே விடுவதற்காக அவலத்தை விற்றுப்பிழைக்கின்றனர்.

அப்புகைப்படங்கள் தமிழரின் கலாச்சாரத்தையோ, இந்து மதம் போதிக்கின்றது எனச் சொல்லப்படுகின்ற சாந்தி , சமாதானத்தையோ காண்பிக்கவில்லை. மாறாக அங்கே வர்க்க ஏற்றத்தாழ்வின் ஆழஅகலத்தை புடம்போட்டுக்காட்டுகின்றது.

வறுமையின் கொடுமை எவ்வாறானது என்பதை அத்தம்பதியினரிடம் கேட்டால் யாவருக்கும் அவர்கள் விரிவுரையாற்றுவார்கள் என்பதையும் அப்படங்கள் காண்பிக்கின்றது. ஆனால் குறித்த புகைப்படத்தை பிரசுரித்து தங்களது மதவெறிக்கு தீனிபோட்டுக்கொண்ட பெருச்சாளிகளிகளிடம் சில கேள்விகள்.

உங்கள் அக்கறை மனிதர்கள் மீதானதா அன்றின் மதத்தின் மீதாதனதா? உங்கள் அக்கறை மதத்தின் மீதானதுதான் என்று நீங்கள் கூறுவீர்களானாலும், மனிதன் வாழாதவரை மதம் வாழப்போவதில்லை என்பதை மனதில் நிறுத்துங்கள். இஸ்லாமியன் ஒருவன் இந்து மதத்திற்கு மாறி தனது பெயரையும் இந்துவாக மாற்றிக்கொண்டபின்னரே திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டார் என செய்தி எழுதப்பட்டுள்ளது. அனுமதி யாருக்கு யாரிடமிருந்து என்ற கேள்வியை நான் விட்டுவிடுகின்றேன். ஆனால் பிறமதம் ஒன்றிலிருந்து இஸ்லாத்திற்கு மாறினால் அவர்கள் அங்கே வாழ்வதற்கான வழி சமைத்துக்கொடுக்கப்படுகின்றது. அந்த மார்க்கமும் மார்கத்தை முன்னெடுத்து செல்லுகின்ற பள்ளிவால்கள் அதன் அனுசரணையாளர்கள் அதனை செய்கின்றார்கள்.

ஆனால் இன்று குறித்த பெண்ணுக்கு என்ன நடந்திருக்கின்றது. அவருக்கு திருமணத்திற்கென உடுப்பதற்கென ஒரு சாறி கூட இல்லாத நிலையில் கோயில் வாசலில் வைத்து மாலை ஒன்றை மாற்றிக்கொள்கின்றார்கள், அந்த கண்ணால் காணக்கூடாத கொடுமையை படம்பிடித்து பிரசுரித்து மதவெறிக்கு தீனிபோடப்படுகின்றது.

குறித்த சம்பவத்தை புகைப்படமெடுத்து இந்துமதம் பெருகிவிட்டது, இஸ்லாமியன் ஒருவன் பெயரை மாற்றிக்கொண்டு இந்து மதத்திற்கு வந்துவிட்டான் என மார்தட்டுகின்ற மாயாவித்தைக்காரர்களே! முடிந்தால் அந்தக்குடும்பம் சௌபாக்கியமாக வாழ்வதற்கான உதவிகளை செய்யுங்கள் அன்றேல், அவன் மீண்டும் இஸ்லாத்திற்கு செல்வது மாத்திரமல்ல தனது வாழ்கைத்துணையையும் அவரது குழந்தையையும் அழைத்துக்கொண்டு சென்று விடுவார். அப்போது நீங்கள் பெருகிவிட்டதென தம்பட்டமடிக்கின்ற இந்துமதம் சிறுகிவிடும்.

புகைப்பட விண்ணர்களுக்கோர் வேண்டுதல் தனிமனித விருப்புவெறுப்புக்களுக்கும் அவர்களது தனித்துவத்துக்கும் மதிப்பளியுங்கள், சமூக வலைத்தளங்களில் எதை பகிரங்கப்படுத்துவது எதை இல்லை என்பதற்கான இடைவெளியை பூதக்கண்ணாடிபோட்டு பாருங்கள்..


Read more...

புதிய அரசுக்கு எதிராக சஜித் அணி அக்கினிப் போராட்டம்!

புதிய அரசாங்கம் செய்துவரும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை கண்டித்து ஐக்கிய தேசிய முன்னணியினர் கொழும்பில் சத்தியாக்கிரகம் ஒன்று முன்னெடுத்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்கா முன்பாக இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு தீப்பந்தம் ஏற்றி எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் விடுதலையை வலியுறுத்தி நடத்திய இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பெளத்த தேரர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் விடுதலைக்கான அத்தனை முயற்சிகளையும் தாம் உள்ளிட்ட குழுவினர் எடுத்து வருவதாக கூறினார்.







Read more...

சம்பிக்க ரணவக்க பிணையில் விடுதலை!

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனா தி சில்வா இன்று உத்தரவிட்டுள்ளார்.

25,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளின் விடுதலை செய்துள்ள நீதிமன்று ஒவ்வொரு மாதத்தினதும் இறுதி ஞாயிற்றுக்கிழமை 9 மணி முதல் 12 மணிக்கும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு ஆஜராக வேண்டும் , சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்ற நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

விடுதலை செய்யப்பட்ட சம்பிக்க ரணவக்கவை மீட்பதற்கு பல்வேறு பிக்குகள் நீதிமன்ற வாசலில் குழுமியிருந்ததுடன் அங்கு பிரித் ஓதல்களையும் மேற்கொண்டிருந்தனர்.

வெளியேவந்த சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்: தமது நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறையை சுயாதீனமாக்கியதன் பலாபலனாக இன்று நீதிபதி சுதந்திரமானதோர் தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும், அதற்கு தாம் தலைவணங்குவதாகவும் தெரிவித்தார்.

அதேநேரம் குறித்த விபத்து சம்பந்தமாக நீதிமன்று தீர்ப்பு வழங்கியிருந்தது. அதன் பிரகாரம் சம்பந்தப்பட்ட வாகனத்தை செலுத்தினார் என்ற குற்றச்சாட்டப்பட்டிருந்த சாரதிக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே மேற்படி வழக்கை மீள்பரிசீலனையாக எடுத்துக்கொண்ட பொலிஸார் சம்பிக்க ரணவக்கவை கைது செய்து கவனயீனத்;துடன் வாகனத்தை செலுத்தியமை, காயமடைந்தவருக்கு உதவி புரியாது தப்பியோடி பிறிதொரு நபரை சாரதியாக காண்பித்து நீதித்துறையை ஏமாற்ற முயற்சித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

Monday, December 23, 2019

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கு; 5 பேருக்கு தூக்கு தண்டனை

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சவுதி அரசு வழக்கறிஞர் கூறும்போது, ''சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் தொடர்புடையவர்களில் 5 பேருக்கும் தூக்கு தண்டனையும், 3 பேருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

ஜமால் கொலை வழக்கின் தீர்ப்பு தொடர்பான முழுமையான விவரம் இதுவரை வெளிவரவில்லை.

ஜமால் கஷோகி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர். 1980களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சியிலிருந்து தனது எழுத்துப் பணியைத் தொடங்கியவர். அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளராக இருந்து சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபிக் மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர்.

துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது.

மேலும், ஜமால் கொலை செய்யப்பட்டதின் பின்னணியில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாகவும் கூறியது. ஜமால் கொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும் ஜமாலின் மரணத்தில் சவுதி இளவரசருக்குப் பங்கு இருக்கிறது என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஜமால் மரணத்துக்கு சவுதி தலைவர் என்ற பொறுப்பில் நான் முழு பொறுப்பு ஏற்கிறேன். ஆனால் ஜமால் கொலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறேன் என்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பதில் அளித்திருந்தார்.

Read more...

சம்பிக்கவின் கைது, பாசிச காலத்தை நினைவுபடுத்துகின்றது. விக்கிரமபாகு.

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி கைது செய்துள்ளமையானது பாசிச காலத்தையே நினைவுபடுத்துகின்றது என நவ சமசமாஜக் கட்சியின் செயலாளர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

கொழும்பில், இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறிய அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் :

'விபத்தொன்றை ஏற்படுத்தியதாகக் கூறப்படும், விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும். நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறியே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடயத்தில் ஜனநாயக ரீதியாக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியொருவரை கைது செய்வது என்பது மக்களின் ஆணையை புறந்தள்ளும் செயற்பாடாகவே நாம் கருதுகிறோம். இது , ஜனநாயகத்தையும் மக்களின் ஆணையையும் மீறும் செயற்பாடாகும்.

இராணுவத்துக்கும் பொலிஸாருக்கும் பலத்தைக் கொடுத்து ஜனநாயகத்தை அழிக்கும் செயற்பாடுகள்தான் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

எனவே, ஜனநாயகத்தை காப்பாற்றும் நபர்கள் இருப்பார்களாயின் நாம் அவர்களுக்கு இவ்வேளையில் அழைப்பு விடுக்கிறோம். இவ்வாறான புதிய கலாசாரங்களை அழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்' என மேலும் தெரிவித்தார்.

Read more...

அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களிலேயே அதிக கவனம் செலுத்துகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தேர்தலுக்கு முன்னர் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட மாட்டேன் என்றும், பொருட்களின் விலையதிகரிப்பிற்குத் தீர்வைப் பெற்றுத்தருவதன் ஊடாக மக்களின் இடர்ப்பாடுகளுக்கு நிவாரணம் அளிப்பேன் என்றும் உறுதியளித்தே ஆட்சிக்கு வந்தார்.

ஆனால் ஆட்சிபீடமேறிய பின்னர் அவரது செயற்பாடுகள் அனைத்தும் தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிர்மறையானவையாக உள்ளன. மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் பார்க்க அரசியல் பழிவாங்கல்களிலேயே அதிக கவனம் செலுத்தப்படுவதாகத் தோன்றுகிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மாநகரசபை உறுப்பினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று (23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் வீ.ஏ.ஹர்ஷனி சந்தருவனி, ஷாந்தனி பத்திரகே மற்றும் வீ.சந்தமாலி ஆகியோர் கூறிய கருத்துக்கள் வருமாறு:

நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற போதிலும் தற்போது எமது இல்லத்தை நிர்வகிக்கும் குடும்பத்தலைவிகள் என்ற அடிப்படையிலேயே இங்கு வந்திருக்கின்றோம்.

கடந்த எமது அரசாங்கத்தில் பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பதாகக்கூறி அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தற்போதைய ஆளுந்தரப்பினர் கூச்சலிட்டனர். ஆனால் இப்போது பெரும்பாலான மரக்கறிகளின் விலைகள் 600 ரூபாவை விடவும் அதிகரித்திருக்கின்றன. இதற்குத் தீர்வு என்னவென்று அரசாங்கத்தைக் கேட்கின்றோம்.

இந்தப் பண்டிகைக் காலத்தில் மக்கள் அவற்றை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதிலும் பார்க்க பொருட்களின் விலைவாசி ஏற்றத்தை எவ்வாறு சமாளிப்பது என்றே பெருமளவில் கலக்கமடைந்திருக்கின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தேர்தலுக்கு முன்னர் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட மாட்டேன் என்றும், பொருட்களின் விலையதிகரிப்பிற்குத் தீர்வைப் பெற்றுத்தருவதன் ஊடாக மக்களின் இடர்ப்பாடுகளுக்கு நிவாரணம் அளிப்பேன் என்றும் உறுதியளித்தே ஆட்சிக்கு வந்தார்.

ஆனால் ஆட்சிபீடமேறிய பின்னர் அவரது செயற்பாடுகள் அனைத்தும் தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிர்மறையானவையாக உள்ளன. மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் பார்க்க அரசியல் பழிவாங்கல்களிலேயே அதிக கவனம் செலுத்தப்படுவதாகத் தோன்றுகிறது என இதன்போது அவர்கள் தெரிவித்தனர்.

Read more...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் றிசார்ட் மற்றும் ஹக்கீமிடம் சிஐடி விசாரணை ஆரம்பமாகிறது..

முன்னாள் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோரிடம் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை செய்யவுள்ளது.

குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்ய தயாராக இருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிஸிடர் ஜெனரல் திலீப பீரிஸ் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற தீவிரவாத தாக்குதல் பற்றிய வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரியந்த லியானகே முன்னிலையில் இன்று இடம்பெற்றது.

இதில் முன்னிலையாகிய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை எதிர்வரும் 06ம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதேப்போல் முன்னாள் அமைச்சர்களான ரிஷாட் மற்றும் ஹக்கீம் ஆகியோரிடம் விசாரணை நடத்த சி.ஐ.டியினர் தயாராக இருப்பதை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக மன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டது.

Read more...

இனி தன்னிச்சையாக வெளிநாட்டு ஒப்பந்தங்கள் முடியவே முடியாது - வெளிவந்துள்ளது சுற்றறிக்கை

அமைச்சர்கள், மாகாண மற்றும் அரச நிறுவனங்கள், அரச நிறுவனங்களுக்கு வெளிநாட்டு முதலீடு செய்யும் நிறுவனங்கள், வெளிநாட்டு அரசாங்கம் அல்லாத அமைப்புக்கள், தூதுவராலயங்களுடன் ஒப்பந்தங்கள் அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு முயல்வது தடைசெய்யப்பட்டுள்ளமைக்கான சுற்றறிக்கையொன்றை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதிச் செயலாளர் பீ.பீ. ஜயசுந்தரவின் கையொப்பத்துடனான அச்சுற்றறிக்கையை உடன் செயற்படுத்துமாறும் தெளிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஒப்பந்தங்களை மேற்கொள்வதாயின் உரிய வழிமுறைகளைப் பின்பற்றுமாறு ஜனாதிபதி செயலகம் வெளியுறவு, நிதி மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் மத்திய வங்கியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எந்தவொரு அமைச்சினது அல்லது நிறுவனத்தினது நோக்கம் தொடர்பான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நிதி, பொருளாதார மற்றும் கொள்கை மேம்பாட்டு அமைச்சின் தேசிய திட்டமிடல் துறையின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Read more...

லால் காந்த கண்டியில் போட்டியிட ஆயத்தம்!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக கண்டி மாவட்டத்தில் இருந்து போட்டியிடுவதற்கு, மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால் காந்த முடிவு செய்துள்ளார்.

பொதுத் தேர்தலில் திசைகாட்டி அடையாளத்தின் போட்டியிடவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Read more...

யாழ். சிறைச்சாலை முன் சுவரில் பெளத்த சித்திரங்கள் வரைவதற்கு கடும் எதிர்ப்பு!

யாழ்ப்பாணம், சிறைச்சாலை முன் சுவரில், பெளத்த வரலாற்று நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் சித்திரங்கள் வரைவதற்கும் பெளத்த வரலாற்றைப் பிரதிபலிக்கும் வரலாற்றைப் பிரதிபலிக்கும் சிலைகள் மூன்றினை நிர்மாணிப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து, அரசியல் கட்சியொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருசிலர் நேற்று முன்தினம் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் வடக்கு மாகாண உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்கள் சிலரும் இவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

பெளத்த மத நிகழ்வுகளை சித்தரிக்கும் ஓவியங்கள் வரைவதையும், சிலைகள் நிறுவுவதையும் தாம் எதிர்ப்பதாக தமிழ் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சிறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் முறைப்பாட்டையடுத்து, சிறை அதிகாரிகள் தற்காலிகமாக சித்திரம் தீட்டுவதைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.




Read more...

19 ஆவது இலக்கச் சட்டத்தை நீக்குவதனால் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிட்டவே கிட்டாது - ரவி

19 வது திருத்தத்தை நீக்குவதால் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படாது என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

நேற்று மாலை மட்டக்குளி - விஸ்ட்விக் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“19 ஆவது திருத்தத்தை இரத்து செய்வதன் மூலம் பொதுமக்களுக்கு எவ்வித நலனும் ஏற்படாது. வரிகளை குறைத்தல், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், உரங்களுக்கு மானியம் வழங்குதல், வீட்டுவசதி வழங்குதல் போன்ற மக்களின் நலனுக்காக எடுக்கப்படுகின்ற எந்தவொரு நலனுக்காகவும் நாங்கள் 2/3 ஐ ஆதரவினை நாங்கள் வழங்குவோம்.

எம்.சி.சி ஒப்பந்தம் நாட்டிற்கு தீங்கு விளைவிக்காது என்று நாங்கள் அன்றும் கூறினோம். இன்று அவர்கள் அதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அன்று எந்தவித ஒப்பந்தங்களும் இல்லாமல் நாட்டுக்கு கிடைக்கவிருந்தவற்றைப் பெற்றுக்கொள்ள அவர்கள் இடம்தரவில்லை. இன்று பெற்றுக்கொள்ளச் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு ஒரேயடியாக காலை இரவாகின்றது.... இரவு காலையாகின்றது.''எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Read more...

ஐ.தே.க எதிர்வரும் தேர்தலில் 113 ஆசனங்களை பெறத்தவறின் நாம் அவர்களுடன் இணைந்து கூட்டாட்சி அமைப்போம். சுமந்திரன்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி 113 இடங்களை எட்டத் தவறினால், மீண்டும் கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளது என, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்தின் குறிப்பிட்டார்.

அவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணிக்கு அக்கட்சியை ஆதரிப்பதற்குக் காரணம், புதிய 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதன் மூலம் வடக்கு மாகாணப் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதனால்எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Read more...

Sunday, December 22, 2019

ஈஸ்டர் தாக்குதல் குறித்து எச்சரிக்கை கடிதம் ஏப்ரல் 11 SP அலுவலகத்திற்கு கிடைத்தது! போட்டுடைக்கின்றார் பரிசோதகர்.

உயிர்த்த ஞாயிறு தொடர்பாக பூரண எச்சரிக்கை கடிதமொன்று 2019 ஏப்ரல் 11ம் திகதி வட கொழும்பிற்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சிவ பண்டாரவின் காரியாலயத்திற்கு கிடைத்ததாகவும் அவரின் பிரத்தியேக உதவியாளர் பொலிஸ் பரிசோதகர் ஆர்.எஸ்.உபேந்திர தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று (21) சாட்சியமளித்துள்ளார்.

ஆணைக்குழுவில் சாட்சியமளித்த பொலிஸ் பரிசோதகர் குறித்த எச்சரிக்கை கடிதம் தொடர்பாக தனக்கு தெரியும் எனவும் சஹ்ரான் ஹாசீம் மற்றும் அவரது ஆதரவாளர்களினால் தற்கொலை குண்டு தாக்குதல் நடைபெறும் எனவும், அவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகக்கூடிய இடங்களாக இந்திய உயர் ஸ்தானியகம் மற்றும் கத்தோலிக்க தேவாலயங்கள் குறித்து அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடிதத்தைப் பெற்றபின் சஞ்சீவ பண்டாராவை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றாலும், கொழும்பு வடக்கு பிரிவில் உள்ள அனைத்து OIC க்கள் மற்றும் ASP களுக்கு அது குறித்து குறிப்புக்களை எழுத்துப்பூர்வமாக அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.



இதற்கமைய குறித்த ஆவணங்கள் பொலிஸ் நிலையங்களுக்கு தொலைநகல் மூலம் அனுப்புமாறு அன்றைய தினம் சேவையாற்றிய தொலைபேசி கட்டுப்பாட்டாளருக்கு வழங்கிய போதும் அடுத்த நாள் காலை 6.00 மணிக்கு சோதனை செய்தபோது குறித்த ஆவணங்கள் அனுப்பப்படவில்லை என அறிந்துக்கொள்ள முடிந்ததாகவும் அது தொடர்பாக விசாரித்த பொது கடலோர பொலிஸ் நிலையத்திற்கு தொலைநகல் மூலம் ஆவணங்கள் அனுப்பப்பட்டிருந்தாலும், அவை தெளிவாக இல்லை என அவர்கள் தெரிவித்ததனால் மற்ற பொலிஸ் நிலையங்களுக்கு தொலைநகல் அனுப்பப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பின்னர் வட கொழும்புக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அதிகாரி சஞ்சிவ பண்டாரவின் அறிவுறுத்தலின் பேரில் கத்தோலிக்க தேவலையங்கள் அமைந்துள்ள கொட்டஹேன, மோதரை, கரையோர மற்றும் ஜம்பட்டா வீதி ஆகிய பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்கள் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்ற பின்னர் குறித்த எச்சரிக்கை ஆவணங்கள் தொடர்பாக குறித்துவைத்த லொக் புத்தகத்தை மாற்றுவதற்க்கு சஞ்சிவ பண்டார தன்னுடன் கலந்துடையாடியதாக தெரிவித்த உபேந்திர அவர்கள், தான் இதற்கு முதல் CID உள்ளிட்ட விசாரணை பிரிவுக்கு வழங்கியது சஞ்சிவ பண்டார தனக்கு அறிவிக்கும்படி கூறியவற்றையாகும் எனவும், இன்றைய தினம் ஆணைக்குழுவின் முன் தான் கூறுவது முழுமையான உண்மை கதை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

எங்களுக்கு இப்போது மங்குசனி! கூறுகின்றார் சித்தார்த்தன்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தற்போது மங்குசனி தொடங்கியுள்ளதாகவும் எதிர்வரும் தேர்தலில் முன்னரைப்போல் 16 ஆசனங்களை பெறமுடியாதுபோனாலும், ஒற்றுமை எனும் தோத்திரத்தை ஓதி தாம் மக்களின் காதில் பூச்சூடுவோம் என்றும் உறுதிபடக்கூறியுள்ளார் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் , தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்தன்.

வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புளொட் அமைப்பின் மத்திய குழு கூடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “ஜனாதிபதி தேர்தல் அதன் பின்னரான பெறுபேறுகள் மற்றும் தற்போதுள்ள நிலைமைகள் தொடர்பாக இன்று கலந்துரையாடப்பட்டதுடன் அடுத்து வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடுவற்காகவே எமது மத்தியகுழு இன்று கூடியிருந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு செல்லப் போகின்றோம் என்று என்றுமே நாம் சொன்னதில்லை. இன்றும் அதே நிலைப்பாடே உள்ளது. எங்களைப் பொறுத்தவரையில் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்.

சில வேளைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அதற்குள் இருக்கும் கட்சிகளுக்குமிடையில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட அந்த ஒற்றுமையை நிலை நிறுத்த வேண்டும் என்பதில் நாங்கள் அவதானமாக இருக்கின்றோம்.

எதிர்வரும் 27ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூடவுள்ளது. அப்போது பேசி ஒரு சுமூகமான நிலைப்பாட்டை எடுப்போம் என நாங்கள் நம்புகின்றோம்.

மாற்று அணி ஒன்று உருவாகும் போது அது தமிழ் தேசியக் கூட்டமைப்பை பாதிக்கச் செய்யும். போட்டிகள் கூடுகின்ற போது கட்டாயமாக பாதிப்பு இருக்கும். அது தொடர்பாக நாங்கள் பேசுகின்றபோது கூடியவரையில் ஒத்த கருத்துள்ள கட்சிகளைக் கூட்ட முடியுமாயின் இன்னும் கூட்டவேண்டும் என்ற அவிப்பிராயமும் இருக்கின்றது.

அது எவ்வளவு சாத்தியமென்று எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் அந்தப் பிளவு இன்று கூடுதலாகவே இருக்கின்றது. அதனை மீண்டும் ஒற்றுமைப்படுத்துவது சாத்தியமில்லாவிட்டாலும் கூட இரண்டு மூன்று அணிகளாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக்களே அதிகமாக உள்ளது. எனவே மக்களே இனி தீர்மானிக்க வேண்டும்.

எனினும் எங்கள் கட்சியைப் பொறுத்தமட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான வாக்குவீதமே கூடுதலாக இருக்கும். தமிழ் தேசியக் கூட்டமைப்பே கூடுதலான ஆசனங்களையும் பெறும்.

கடந்த காலங்களைப் போல 16 ஆசனங்களை எடுக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் கூட அதற்கான முயற்சிகளை எடுக்கவேண்டும் என்ற எண்ணப்பாடு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கின்றது.

தற்போதுள்ள கள நிலைவரங்கள் எப்படி சாதக பாதகமாக மாறும் என்று கூற முடியாது விட்டாலும் கூட தேர்தலில் கணிசமான ஆசனங்களை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.

Read more...

தொழிலை இழந்தால் மீண்டும் தொழிலை பெறும்வரை காப்புறுதி கொடுப்பனவு. கோத்தாவின் திட்டம்.

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மேற்கொள்ளும் தொழிலை இழக்கநேரிட்டால் மறு தொழிலை பெற்றுக்கொள்ளும்வரை இறுதியாக பெற்ற ஊதியத்திற்கு நிகரான கொடுப்பனவு வழங்கப்படும் காப்புறுதித்திட்டம் செயற்பாட்டில் உள்ளது. அந்த வகையில் அரசு மற்றும் தனியார் துறையில் ஊழியர்கள் வேலை இழந்து, மீண்டும் தொழில் வாய்ப்பைப் பெறும்வரை மாதாந்த கொடுப்பனவுக் காப்பீட்டு திட்டத்தை இலங்கையிலும் ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார்.

இது, தேசிய கொள்கைச் சட்டகத்தில் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கில் கூறப்பட்டுள்ளது.

ஊழியர் சேமலாபநிதி உறுப்பினர்களாக உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் ஊழியர் சேமலாப நிதியை 12% முதல் 15% வரை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மக்கள் அபிமானம் பெற்ற பொதுச் சேவையை உருவாக்க அரசாங்கம் வடிவமைத்த பல செயல்பாடுகளை தேசிய கொள்கைச் சட்டகம் கோடிட்டுக் காட்டுகிறது.

Service பொது சேவையின் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்த நீண்ட கால மனிதவள திட்டம் தயாரிக்கப்படும்.

சுதந்திரமான ஒரு சுயாதீன பொதுச் சேவையை நிறுவுவதற்கான புதிய நெறிமுறைகளை அறிமுகப்படுத்துதல்.

, அரசு, அரை அரசு, நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்களின் கடமைகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுக்கு எதிர்காலத்தில் நன்மையடையும் பொருட்டு, தேவையான ஏற்பாடுகளை வழங்குதல்.

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் வேலை இழந்தால், அவர்கள் மீண்டும் தொழில் வாய்ப்புப் பெறும்வரை மாதாந்தக் கொடுப்பனவை வழங்குதல்.

அரசாங்க, உள்ளாட்சி சேவை உட்பட பொது சேவையின் குறைந்த தரங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கான சுகாதாரக் கொடுப்பனவு.

விதவைகள் மற்றும் அநாதைகளின் ஓய்வூதியத்திற்கு தாமதமின்றி ஓய்வூதியம் வழங்குதல். ஊழியர் சேமலாப நிதியத்தில் (ஈபிஎஃப்) உறுப்பினராக உள்ள ஒரு பொது மற்றும் தனியார் துறை ஊழியர் தனது பதவிக் காலத்தில் ஒரு ஊழியர் இறந்தால் விதவைக்கு பணம் செலுத்த சட்டங்கள் கட்டாயமாக்கப்படும்.

தேவையான சேவைகளுக்கு புதிய யாப்புக்கள் அறிமுகப்படுத்தப்படும்.

சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் உள்ள முரண்பாடுகளை அகற்ற தனி ஆணைக்குழு உருவாக்கப்படும்.

பொதுத்துறை ஊழியர் தகராறுகளைத் தீர்ப்பதற்கான ஒரு நடுவர் செயல்முறையை அறிமுகப்படுத்துவோம்.

பொதுத்துறை ஊழியர் சேமலாப நிதிக்குக் கூடுதலாக, அரை அரசு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சிறப்பு பங்களிப்பு ஓய்வூதியங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

ஓய்வூதிய பணிக்கொடை மீதான வரி குறைக்கப்படும்.

Read more...

அரச நிறுவனங்களின் தலைவர்களை நியமிப்பதற்கான பரிந்துரை கையளிப்பு

சுமார் 80 அரச நிறுவனங்களுக்கான தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாக சபையின் உறுப்பினர்களை நியமிப்பது குறித்த பரிந்துரை, ஜனாதிபதி செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பதவியொன்றுக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பரிந்துரைக் குழுவின் உறுப்பினர் கலாநிதி நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார்.

குறித்த பதவிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அரச நிறுவனங்களுக்கான தகுதிவாய்ந்தோரின பெயர்களைப் பரிந்துரைக்குமாறு ஜனாதிபதி செயலாளர், குழுவிற்கு ஆலாசனை வழங்கியுள்ளார்.

பரிந்துரை குழுவின் தலைவராக சிரேஷ்ட அரச அதிகாரியான சுமித் அபேசிங்க செயற்படுகின்றார்.

சுசந்த ரத்னாயக்க, கலாநிதி நாலக்க கொடஹேவா, டயன் கோமஸ், டொக்டர் பிரசன்ன குணசேன மற்றும் பேராசிரியர் ஜகத் வெல்லவத்த ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

Read more...

தமிழ் மொழியை கற்றுக்கொள்ளாததையிட்டு வெட்கித்தலை குனிகின்றாராம் டளஸ் அழகப்பெரும

தமிழ் மொழியை கற்றுக்கொள்ளாததை இட்டு வெட்கமடைகிறேன் என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கவலை வெளியிட்டுள்ளார்.

அகில இலங்கை தேசிய மொழிகள் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

“இலங்கையில் இரண்டே மொழிகள்தான் அதிகளவு பேசப்படுகின்றன. அதில் சிங்கள மொழியை அதிகமாக பேசுகின்றோம். ஆனால் தமிழ் மொழியை நாங்கள் இதுவரை கற்றுக்கொள்ளாதிருப்பது வெட்கத்திற்குரிய விடயம்” என கல்வி அமைச்சர் கூறினார்.

Read more...

மாணவர்களுக்கு ஹெலிகொப்டர் சவாரி வழங்கி ஊக்குவித்த பிரபல தொழிலதிபர்.

5ம் தர புலமைப் பரீட்சையில் சித்தியெய்திய சாய்ந்தமருது, மாளிகைக்காடு மற்றும் காரைதீவு பிரதேச மாணவர்களை கௌரவிக்கும் ஹெலிகொப்டர் சவாரி (21) சாய்ந்தமருது பௌஸி மைதானத்தில் நடைபெற்றது.

மக்கள் ஐக்கிய முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும் பிரபல தொழிலதிபரும் சகுறா ஏவியேஷன் (SAKURA AVIATION) அதிபதியுமான றுஷான் மலிந்த பெர்ணான்டோவின் அனுசரணையில் இடம்பெற்ற இச் சவாரிநிகழ்வில் பங்கு கொள்ள சுமார் 300 மாணவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காரைதீவு முஸ்லிம் பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபை உப தவிசாளரும், ஜாஹிர் பவுண்டேசன் அமைப்பின் தலைவருமான ஏ.எம்.ஜாஹிரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வினை கண்டுகளிப்பதற்காக நூற்றுக் கணக்கான பொதுமக்கள் இங்கு வருகை தந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் பல சுற்று சவாரி நடைபெற்றது.

ஆனால் காலநிலை மாற்றமடைந்து மழை இடையூறு ஏற்படுத்தியதால் பலநூறு மாணவர்களை சவாரி செய்வதற்காக திட்டமிடப்பட்டிருந்த இந்நிகழ்வை இடைநிறுத்த நேரிட்டது.

றுஷான் மலிந்த பெர்ணான்டோ ஜப்பானில் கல்வி பயின்றுள்ளதுடன் விமானி பயிற்சி நெறியினையும் பூர்த்தி செய்துள்ளார். "இலங்கையில் 2030 ஆண்டளவில் விமானிகளுக்கான தேவை அதிகரிக்கவுள்ளதால் இளம் தலைமுறையினரிடத்தில் விமானி தொழிற்துறையை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக" அவர் கருத்து தெரிவித்தார்.

இதுபோன்று அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் பல்வேறு சமூக நற்பணி சேவைகளையும் இவர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்று (22) 2வது நாளாக இச் சவாரி தொடராக இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(எஸ்.அஷ்ரப்கான்).



Read more...

இலக்கத்தகடற்ற காரில் சும்பிக்க ரணவக்கவை பார்வையிடச் சென்றது யார்?

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்கவை பார்வையிடுவதற்காக இலக்கத்தகடற்ற கார் ஒன்று நேற்று வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு சென்றுள்ளது.

குறித்த காரில் பாராளுமன்ற உறுப்பினர் விஜிதமுனி சொய்சா சென்றுள்ளதாக அறியமுடிகின்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவிக்கொண்டுள்ள விஜிதமுனி சொய்சா கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ராஜபக்சர்களை விமர்சிப்பதில் முன்னணியில் திகழ்ந்தவர்களில் ஒருவராவார்.

இதேநேரம் பாட்டளி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டபோது, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய சம்பிரதாய முறையினை பொலிஸ் குற்றவியல் பிரிவினர் கடைப்பிடிக்கப்படவில்லை என பிரதி சபாநாயகர் பொலிஸ் சேவைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளார்.

இதன்பிரகாரம் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


Read more...

சுபிட்சத்தின் நோக்கால் மக்களுக்கு இத்தனை பயனாம்! குதுகலத்தில் துள்ளிக்குதிக்கின்றது ஜனாதிபதி செயலகம்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவியேற்ற ஒரு மாத காலத்தில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுடாக நாட்டு மக்கள் பல்வேறு நன்மைகளை அடைந்துள்ளதாகவும் , அடையவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கின்றது.

சுபிட்சத்தின் நோக்கு செயற்திட்டங்களுடாக மேற்கொள்ளப்பட்டுள்ள , படவுள்ள செயற்பாடுகளை ஜனாதிபதி செயலகம் பட்டியலிட்டுள்ளது.

அப்பட்டியல் இவ்வாறு நீண்டு செல்கின்றது.

300 மில்லியன் ரூபாவிற்கு குறைந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்காக பெற்றுக்கொண்ட கடன்கள் மீளச் செலுத்துதலை இடைநிறுத்தல்.

தேசிய பாதுகாப்பு கற்கை நிறுவகமொன்றை ஸ்தாபித்து தேசிய பாதுகாப்பு பற்றிய உயர்மட்ட பாடநெறிகளை உருவாக்குவதற்கான வரைவினை தயாரித்தல்.

கல்வி தொடர்பான செயலணியை உருவாக்கி, கல்வி மறுசீரமைப்புக்கான முன்மொழிவுகளை முறையாக திட்டமிட்டு வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

1000 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக அபிவிருத்தி செய்தல் மற்றும் மாவட்டத்திற்கு ஒரு பாடசாலை வீதம் மும்மொழி பாடசாலைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

க.பொ.த உ/தரம் சித்தியடையும் மாணவர்களை துரிதமாக பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தல்.

பல்கலைக்கழக அனுமதியினை பெற்றுக்கொள்ளாத உயர்தரம் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கான திட்டமொன்றினை விரைவில் உருவாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளல்.

தேசிய கல்வியியற் கல்லூரிகளை பல்கலைக்கழக நிறுவனங்களாக மாற்றுவதற்காக குழுவொன்று நியமிக்கப்படல்.

சர்வதேச தொழிற்சந்தைக்கு பொருத்தமான வகையில் பயிற்சி நெறிகளை ஆரம்பித்து, நிபுணத்துவமுடைய இளந்தலைமுறையை தொழிற்சந்தைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.

வறுமையை இல்லாதொழிக்கும் முதன்மை நோக்குடன் வறுமைகோட்டின்கீழ் வாழும் குடும்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் நிபுணத்துவமற்ற இளைஞர், யுவதிகளுக்கான ஒரு இலட்சம் அரச தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தல்.

தகவல் தொழிநுட்பத்துறையில் தொழிற்சந்தையை நோக்காகக்கொண்டு தகவல் தொழிநுட்ப சான்றிதழ் பாடநெறிகளை தொடர்வதற்கு 1000 பேருக்கு வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தல்.

பட்டம், வெசாக்கூடு போன்ற உற்பத்திகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்துவதற்கான சட்ட வரைவினை தயாரித்தல்.

அரச முதலீடு, தேசிய அபிவிருத்தித் திட்டங்கள், பெறுகை நடவடிக்கைகள், செயற்திட்ட பகுப்பாய்வு மற்றும் முகாமைத்துவ துறைகளை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் திட்டமிடல் பணியகமொன்றினை நிறுவுதல்.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி மேம்பாட்டிற்காக கௌரவ ஜனாதிபதி அவர்களின் பங்குபற்றலில் அமைச்சு மட்டத்தில் செயலணியொன்றினை ஸ்தாபித்தல்.

உள்நாட்டு கைத்தொழில் மற்றும் நிர்மாணத்துறை சார்ந்த மூலப்பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மணல்மண் மற்றும் களிமண் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திர முறைமையை நீக்குதல்.

பாரம்பரிய சிறு கைத்தொழில் துறையில் ஈடுபடும் உற்பத்தியாளர்களுக்கு மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்ளுதல்.

மாதாந்தம் 21 மில்லியன் ரூபா வாடகை செலுத்தி தனியார் கட்டிடத்தில் இயங்கிய விவசாய அமைச்சினை அங்கிருந்து அகற்றி கமநல நிலையத்திற்கு கொண்டு செல்லல்.

வாகன போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கான மாற்று வழியாக ஒரு இலட்சம் கிலோமீற்றர் நீளமுடைய மாற்று வீதி வலையமைப்பினை உருவாக்குவதற்கான வரைவினை தயாரித்தல்.

அரச நிறுவனங்களின் வினைத்திறனை கண்டறிவதற்காக குறித்த நிறுவனங்களுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளல்.

எம்சிசி ஒப்பந்தம் தொடர்பில் விரிவான ஆய்வினை மேற்கொண்டு பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நிபுணர் குழுவொன்றினை நியமித்தல்.

நாட்டிற்கு எதிராக செயற்படும் 1000த்திற்கும் மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களை கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.

ஜனவரி முதலாம் திகதி முதல் ஊடகங்களில் ஒளிபரப்பாகும் பாடல்களுக்கான எழுத்துரிமையை உரிய பாடகர், பாடகிகளுக்கு வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தல்.

கடந்த அரசாங்கத்தினை விமர்சிக்காது புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுத்துச் செல்லல்.

அரச நிறுவனத் தலைவர்களின் சம்பளத் திருத்தம், 20 இலட்ச ரூபாவாக காணப்பட்ட டெலிகொம் நிறுவனத் தலைவரின் சம்பளத்தினை இரண்டரை இலட்சமாக குறைத்தல்.

அரச நிறுவனங்களின் பெறுகை நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்வதற்கு பணிப்புரை விடுத்தல்.

அரச நிறுவனங்களில் நடத்தப்படும் தேவையற்ற வைபவங்களை நிறுத்துவதற்கு பணிப்புரை விடுத்தல்.

அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படும்போது அனைத்து மாவட்டங்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்கி, பொருத்தமானவர்களை தேர்ந்தெடுத்து நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

அரச ஊடக நிறுவனங்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

பாதாள உலகத்தினரை கட்டுப்படுத்தல் மற்றும் போதைப்பொருள் தேடுதல்களில் ஈடுபடுவதற்கு பொலிஸ் அதிரடிப்படையினருக்கு அதிகாரங்களை வழங்குதல்.

கோதுமை இறக்குமதியில் காணப்பட்ட ஆதிக்கத்தினால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை நீக்குவதற்காக ஏனைய இறக்குமதியாளர்களும் கோதுமை மாவினை இறக்குமதி செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தல்.

ஜனாதிபதியின் ஆளணியினர், வாகன பேரணி ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் மற்றும் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லமாக ஜனாதிபதி அவர்கள் தாம் வசிக்கும் வீட்டினையே தேர்ந்தெடுத்தல்.

இந்தியா, சீனா போன்ற நாடுகளைப் போன்று உலகின் ஏனைய பலசாலி நாடுகளும் எமது நாட்டிற்கு வருகை தந்து, எம்மீது நம்பிக்கைக்கொண்டு, எமது தனித்துவத்திற்கு மதிப்பளித்து முதலீடுகளை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்தல்.

9 மாகாணங்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விசேட பொறுப்பினை இராணுவத்தினரிடம் வழங்கும் நோக்கில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடல்.

சுற்றாடல் தொடர்பில் பொலிஸார் மற்றும் ஏனைய குழுக்களின் அவதானத்தை பெற்றுக்கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள துரித வேலைத்திட்டங்கள்.

இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவையினை 16 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையினை கட்டுப்படுத்துவதற்கும் மக்களுக்கு உறுதியளித்தல்.

அரச நிறுவனங்களில் ஜனாதிபதி அவர்களினதும் ஏனைய நிரல் அமைச்சர்களினதும் பெயர் பொறிக்கப்பட்ட உருவப்படத்திற்குப் பதிலாக வீதி பெயருடன் அரச இலச்சினையை காட்சிப்படுத்துவதற்கு பணிப்புரை விடுத்தல்.

அரச நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிக்கும்போது விசேட நிபுணர் குழுவின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளல். தொலைபேசி கட்டணங்களில் அறவிடப்பட்ட 25 சதவீத வரியை குறைத்தல்.

15 சதவீதமாக காணப்பட்ட VAT வரியினை 8 சதவீதமாக குறைத்தல். மிளகு, கறுவா உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்களின் இறக்குமதியை தடை செய்தல்.

(ஜனாதிபதி ஊடக பிரிவு).

Read more...

Saturday, December 21, 2019

அடுத்து வெலிக்கடை செல்வது நான்தான்! ஆதரவாளர்கள் மத்தியில் அழுதார் றிசார்ட்.

எதிர்வரும் நாட்களில் தான் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படலாம் என இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் றிசார்ட் பதுயுதீன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் ஆதரவாளர்களை சந்தித்த அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளதுடன், தன்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பிரகாரம் கைது செய்யப்படும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தலின்போது எவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் விளக்கியுள்ளார்.

றிசார்ட் பதுயுதீன் மீது அரச வளங்களை சூறையாடியமை, அதிகார துஷ்பிரயோகம் போன்ற பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. சதோச நிறுவனத்தில் பலகோடி மோசடி கோப் கொமிசன் முன்னிலையில் அம்பலமாகியுள்ளது. மேலும் வன்னி பிரதேசங்களில் காணி மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுக்களை றிசார் எதிர்கொண்டுள்ளார். இக்குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் கைது செய்யப்படின் பிணை பெறுவதற்கு உச்ச நீதிமன்று செல்லவேண்டுமென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவற்றிலிருந்து தப்பிப்பதற்காக அரசில் உயர் மட்டத்தின் பலரை அவர் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளபோதும் அது பலனளிக்காத நிலையில், அவரது சகோதரன் அரசிற்கு நெருக்கமான வட்டாரங்களுடாக தூதனுப்பிக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...

ஐதேக-ததேகூ தேன்நிலவு கலைகின்றது. கூட்டமைப்பு வட-கிழக்குக்கு வெளியேயும் போட்டியிட தீர்மானம்.

கடந்தகாலங்களில் இடம்பெற்ற தேர்தல்களின்போது, ஐக்கிய தேசியக் கட்சியினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ஒப்பந்த அடிப்படையில் சில தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுவதை தவிர்ந்து ஒருவருக்கு ஒருவர் வெற்றிக்கு உதவியிருந்தனர் என்பது யாவரும் அறிந்த விடயம்.

ஆந்த வரிசையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியின் ஊடாக சம்பந்தரின் ஆசனத்தை காப்பாற்றுவதற்காக திருகோணமலையில் போட்டியிடுவதை ஐக்கிய தேசியக் கட்சி தவிர்த்திருந்தது. அதற்கு கைமாறாக கொழும்பில் போட்டியிடுவதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவிர்த்திருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொழும்பு , கம்பஹா , கழுத்தறை , பதுறை , ரத்தினபுரி, நுவரேலியா , கண்டி உட்பட பல மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பாக தமிழரசுக் கட்சியின் உயர்பீடம் பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளதுடன் , இறுதிமுடிவை சம்பந்தரே எடுப்பார் என தெரியவருகின்றது. கடந்தகாலங்கள்போன்று திருமலையில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடாது விடின் சம்பந்தனின் முடிவுகள் மாற்றமடையலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் பொழும்பு மற்றும் ஏனைய மாவட்டங்களில் போட்டியிட்டால், சுமார் நான்குக்கும் அதிகமான மேலதிக ஆசனங்களை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பங்கள் இருக்கின்றபோதும், சுயநலங்களுக்காக இம்முறையும் காட்டிக்கொடுப்பு இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Read more...

அநுரகுமார கட்சித் தலைமையிலிருந்து ராஜனாமா செய்கின்றார்!

ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கட்சி தலைமைப்பதவியை ராஜனாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

ஜனாதிபதி தேர்தல் முடிவுற்றவுடன் கட்சியின் அரசியல் பீடம் ஒன்றுகூடி தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்துள்ளது. இதன்போது அதற்கான முழுப்பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தான் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரியப்படுத்தியுள்ளார்.

தனது ராஜனாமா கடிதத்தினை கட்சியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா அவர்களிடம் அவர் வழங்கியுள்ளாக நம்பந்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அவ்வாறு அவர் செயற்பட்டிருப்பாராக இருந்தால் அனுரகுமாரா திஸாநாயக்க இந்நாட்டின் அரசியல் கலாச்சாரத்திற்கு புதியதோர் அத்தியாயத்தை கற்றுக்கொடுத்துள்ளார்.

மேலும் கட்சியின் புதிய தலைமைக்கு இருவரது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. ஒரு தரப்பினர் கே.டி லால் காந்தவை முன்மொழிந்துள்ள அதேநேரம், கட்சிக்கு இளம் தலைமை ஒன்று தேவைப்படுவதன் தேவையை விளக்கிய அனுரகுமார திஸாநாயக்க விமல் ரத்நாயக்கவை நியமிக்கலமாம் என முன்மொழிந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

Read more...

அவசர சந்திப்பில் கோட்டா-மஹிந்த-மைத்ரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி உடனான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அதேவேளை, பிரதமர் உடனான சந்திப்பானது அளரிமாளிகையில் நடைபெற்றது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொதுவான சின்னத்தில் போட்டியிடுவது பற்றி இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இறுதி முடிவு இந்த இரண்டு சந்திப்புக்களிலும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இன்னும் சில தினங்களுக்கு பின்னர் மீண்டும் சந்தித்து பேச்சு நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.

Read more...

பிள்ளையானை விடுவிக்குமாறு மஹிந்தரிடம் கோரியுள்ளாராம் கருணா!

முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானை விடுதலை செய்ய பிரதமர் மஹிந்தவிடம் கோரிக்கை ஒன்றை விடுத்திருப்பதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ஆலயடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் வெள்ளிக்கிழமை(20) மாலை மக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது பொதுமகன் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்:

திருகோணமலையில் எங்கள் கட்சியின் கட்டமைப்பு முன்னெடுக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் பிள்ளையானின் விடுதலைக்கு பலமுயற்சிகளை மேற்கொள்பவன் நான். நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பயணிப்பது தான் இலக்கு என குறிப்பிட்டார்.

புலிகளமைப்பிலிருந்து கருணா பிரிந்துவந்தபோது, உடன்வந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனிக்கட்சி அமைத்ததும் பின்னர் கருணாவும் பிள்ளையானும் அரசியல் எதிரிகளாக செயற்பட்டுவந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

Friday, December 20, 2019

முஷாரப்பின் உடலை பொது இடத்தில் 3 நாட்கள் தொங்கவிட வேண்டும்: நீதிமன்ற உத்தரவு

தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷாரப் இறந்துவிட்டால், அவரது உடலை இழுத்துவந்து சென்டிரல் சதுக்கத்தில் 3 நாட்களுக்கு தொங்கவிட வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு முழு விபரத்தில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இராணுவ தளபதியாக இருந்த முஷாரப் 2001ஆம் ஆண்டு இராணுவ புரட்சி நடத்தி நவாஸ் ஷெரிப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி அந்நாட்டின் ஜனாதிபதியானார். 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி நெருக்கடி நிலையை அறிவித்தார். டிசம்பர் 15ஆம் திகதி வரை நெருக்கடி நிலை அமுலில் இருந்தது.

2014ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நவாஸ் ஷெரிப் மீண்டும் பிரதமராக பதவி ஏற்றதும், தனது ஆட்சியை புரட்சி மூலம் கைப்பற்றியதற்காகவும், நெருக்கடி நிலையை கொண்டு வந்ததற்காகவும் முஷாரப் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தார்.

2016ஆம் ஆண்டு சிகிச்சைக்காக துபாய் சென்ற முஷாரப் பின்னர் நாடு திரும்பவில்லை. விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் துபாயில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இஸ்லாமாபாத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தேச துரோக வழக்கை விசாரித்து வந்தது. கடந்த 17ஆம் திகதி சிறப்பு நீதிமன்றத்தில் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2 நீதிபதிகள் இந்த தீர்ப்பையும், ஒரு நீதிபதி மாறுபட்ட கருத்தையும் தெரிவித்து இருந்தனர்.

தீர்ப்பு முழு விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறியிருந்தனர். அதன்படி நேற்று அமர்வுக்கு தலைமையேற்றுள்ள பெஷாவர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வகார் அகமத் சேத் தீர்ப்பு முழு விபரத்தை வெளியிட்டார். 167 பக்கங்கள் கொண்ட அதில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாங்கள் அவர் குற்றவாளி என தெளிவாக உணர்ந்துள்ளோம். எனவே தண்டனை விதிக்கப்பட்ட அவரது கழுத்தில் தூக்கிட்டு இறக்கும் வரை தொங்கவிட வேண்டும்.

வெளிநாட்டு தப்பிச்சென்ற தண்டனை பெற்றவரை கைது செய்ய தங்களால் முடிந்த அளவு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுக்கு உத்தரவிடுகிறோம். அதோடு, சட்டப்படி அவரை தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

ஒருவேளை தூக்கிலிடப்படும் முன்பே அவர் இறந்துவிட்டால், அவரது உடலை இஸ்லாமாபாத்தில் உள்ள டிசவுக் (சென்டிரல் சதுக்கம்) பகுதிக்கு இழுத்துவந்து 3 நாட்களுக்கு தொங்கவிட வேண்டும்.

Read more...

Wednesday, December 18, 2019

சுவிஸ் தூதரக பெண்ணுக்கு பைத்தியமா? ஆய்வு செய்ய மூவரடங்கிய குழு நியமனம்

கடத்தி தடுத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் ஊழியர் கானியா பனிஸ்ட பிரான்சிஸின் மன நலம் தொடர்பில் பரிசோதனைச் செய்ய மூவர் கொண்ட விஷேட நிபுணர்கள் குழுவை கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் நியமித்துள்ளார்

விஷேட வைத்திய நிபுணர்களான லூஷான் ஹெட்டி ஆரச்சி, கபில ரணசிங்க மற்றும் புஷ்பா டி சில்வா ஆகிய வைத்திய நிபுனர்களைக் கொண்ட குழுவே இது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கானியா பெனிஸ்ட பிரான்சிஸ் தற்போது விளக்கமறியலில் உள்ள நிலையில், நாளை முற்பகல் 9.00 மணிக்கு அங்கொட தேசிய உளவியல் நிறுவனத்தின் உள சார் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர்செய்யப்படவுள்ளார்.

Read more...

முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கைது

முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு சட்டமா அதிபரினால் கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட ஆலோசனையின் படி சற்று முன்னர் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்ட்டதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

கவனயீனத்துடன் வாகனத்தை செலுத்தி நபரொருவரை படுகாயமடையச் செய்தமை மற்றும் வீதி விபத்தின் போது வேறு ஒரு நபரை சாரதியாக அடையாளப்படுத்தியதாக முன்னாள் அமைச்சருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


.

Read more...

Tuesday, December 17, 2019

இலங்கை பொதுநலவாய நாடுகள் பட்டியலிலிருந்து உடன் விலக வேண்டும்! ஓமல்பே சோபித தேரர்

புலம்பெயர்ந்த தமிழர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக உறுதியளித்துள்ள இங்கிலாந்தின் புதிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் கூற்றை எதிர்த்து பொதுநலவாய நாடுகளிலிருந்து இலங்கை வெளியேற வேண்டும் என நாட்டை விட்டு அவசரமாக வெளியேறுமாறு கலாநிதி ஓமல்பே சோபிதா தேரர் கோரியுள்ளார்.

இன்று (17) எம்பிலிப்பிட்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேரர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,

“எங்களுக்கு பிரச்சினையொன்று இருக்கிறது. போரிஸ் ஜோன்சன் இலங்கை பிரச்சினை குறித்து ஏன் இவ்வளவுதூரம் அக்கறை கொண்டுள்ளார். அவர் இன்னும் இலங்கை ஒரு பிரிட்டிஷ் காலனித்துவ நாடு என்று நினைக்கிறாரா? என்று எனக்குத் தெரியவில்லை. அடுத்தது தமிழ் மக்களுடன் அவர் வைத்துள்ள உறவு பற்றியது.

இலங்கை உடனடியாக பொதுநலவாய நாடுகளிலிருந்து விலக வேண்டும். பொதுநலவாயம் என்பது இங்கிலாந்தைத் தவிர வேறொன்றுமில்லை, அது பிரிந்து பிளவுபடாமல் இருப்பதையே அது விரும்புகின்றது.

பொதுநலவாயம் என்பது காலனித்துவத்தை நிலைநிறுத்துவதற்கான தோல்வியுற்ற ஒரு முயற்சி.ஜோன்சன் இலங்கை இங்கிலாந்தின் காலனித்துவ நாடு என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. இலங்கை பொதுநலவாய நாடுகள் பட்டியலிலிருந்து விரைவாக விலக வேண்டும்.”

Read more...

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதிக்கு முஷாரப்புக்கு மரணத்தண்டனை

தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலுள்ள விசேட நீதிமன்றத்தினால் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் இராணுவ தளபதியாக இருந்து, கடந்த 1999ஆம் ஆண்டில் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியதோடு, பின்னர் 2001-2008 வரை நாட்டின் ஜனாதிபதியாக பர்வேஸ் முஷாரப்ஆட்சி செய்தார்.

இவர் தனது ஆட்சியின்போது 2007ஆம் ஆண்டு, நாட்டில் அவசரகாலநிலையை அறிவித்து, அரசியலமைப்புச் சட்டத்தை தற்காலிகமாக முடக்கியதுடன், சிரேஷ்டநீதிபதிகளை சிறையில் அடைத்ததோடு, 100க்கும் மேற்பட்ட நீதிபதிகளை பதவியில் இருந்து நீக்கினார் என இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, 2013இல் முஷாரப் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டு, கடந்த 2014ஆம் ஆண்டு பெஷாவர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று (17) தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது முஷாரப்புக்கு மரணதண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

தேசத்துரோக வழக்கு விசாரணை தொடரப்பட்ட நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக அரசின் அனுமதியுடன் கடந்த 2016ஆம் ஆண்டு துபாய் சென்ற முஷாரப், அங்கேயே தங்கிவிட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், மூவரடங்கிய நீதிபதிகள் குழாமின் பெரும்பான்மையின் (2-1) அடிப்படையில் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

மகனின் திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதி கேட்கின்றார் பூஜித.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற அனர்த்தத்தை தடுப்பதற்கான தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தும் கடமையை சரிவர மேற்கொள்ளாது உயிரிழப்புக்களுக்கும் ஏனைய சேதங்களுக்கும் உடந்தையாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ளனர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது அவர்களை இருவரையும் எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று அவர்கள் ஆஜர் செய்யப்பட்டபோது, பூஜித சார்பில் ஆஜரான அவரது சட்டத்தரணி அனுர மெதகொட, தனது காட்சிக்காரரின் மகன் எதிர்வரும் 02.01.2020 அன்று திருமணம் செய்யவுள்ளதாகவும் இந்நிகழ்வு காலை 6.30 மணிக்கு கங்காரமை விகாரையிலும் பின்னர் வரவேற்பு நிகழ்வு நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெறவுள்ளதாகவும், இவ்விரு நிகழ்வுகளிலும் தனது கட்சிக்காரர் கலந்து கொள்வதற்கு நீதிமன்று அனுமதிக்கவேண்டும் என்றும் அதற்கான அறிவுறுத்தலை சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு வழங்குமாறும் வேண்டினார்.

இவ்வேண்டுதலை எதிர்த்த பிரதி சொலிசிட்டர் நாயகம், குறித்த நிதீமன்றுக்கு மேற்படி அனுமதியை வழங்குவதற்கு அதிகாரம் இல்லை என்று வாதாடினார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இவ்வேண்டுதலை தான் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் பரிசீலனைக்குட்படுத்துவதாக தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் சிபார்சின் பெயரில் முடிவு எடுக்கப்படுமெனத் தெரியவருகின்றது.

Read more...

மகாநாயக்கர்கள் உட்பட 11 தேரர்கள் ரணிலுக்கு அதிர்ச்சிக் கடிதம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை சிங்கள பௌத்த தலைவர்களில் ஒருவராக உள்ள சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இப்போதாவது வழங்கி சிங்கள பௌத்த உரிமைகளையும், அதன் இருப்புக்களையும் உறுதிசெய்யுமாறு மல்வத்துப்பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் மற்றும் அஸ்கிரியப் பீடத்தின் மகாநாயக்கர் வறக்காகொட தம்மசித்தி ஸ்ரீ ஞானரத்தன தேரர் இணைந்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.

அரசியல் புலமை, பழம்பெரும் தலைவர் மற்றும் சர்வதேசம் ஏற்றுக்கொள்கின்ற தலைவர் என்கிற வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட ஆலோசகராகவும், வழிநடத்துபவராகவும் தொடர்ந்தும் செயலாற்றுமாறும், தற்போது காலம் கனிந்திருக்கின்ற படியினால் புதிய தலைமைத்துவத்திற்கு வழிகொடுக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டுமென மகாநாயக்க தேரர்கள், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த டிசம்பர் 03ஆம் திகதி மல்வத்துப்பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் மற்றும் அஸ்கிரியப் பீடத்தின் மகாநாயக்கர் வறக்காகொட தம்மசித்தி ஸ்ரீ ஞானரத்தன தேரர் ஆகியோரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண் சந்தர்ப்பத்தில் இதனை தெரிவித்துள்ளனர்.

மேற்படி மகாநாயக்க தேரர்களின் விசேட அழைப்பிற்கிணங்க முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்திப்பதற்கு சென்ற நிலையில், நேருக்குநேர் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் ஊடகங்களுக்கோ வேறு நபர்களுக்கோ வெளியிடப்படாத நிலையில் இரகசியமாக பேசப்பட்டுள்ளன.

மகாநாயக்க தேரர்களின் ஆலோசனைகள், போதனைகளை நன்கு அவதானித்து ஏற்றுக்கொண்ட முன்னாள் பிரதமர் ரணில், ஐக்கிய தேசியக் கட்சியை மிகவிரைவில் வெற்றிப்பாதைக்கு வழிநடத்திவிட்டு தாம் விரைவாக ஓய்வுபெறவுள்ளதாகவும், தலைமைத்துவத்தை தொடர்ந்து தன்வசம் தக்கவைப்பதற்கான நோக்கம் தனக்கு இல்லை என்பதையும் மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்பின்போது கூறியுள்ளார்.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி இழந்துள்ள சிங்கள பௌத்த மக்களின் வாக்குகள், பௌத்த உரிமைகள், ஒழுக்கம், முக்கியத்துவம் மற்றும் அபிமானத்துவம் என்பவற்றை சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கட்சியின் தலைமைத்துவத்தை கொடுப்பதன் ஊடாக மீள் உறுதிசெய்துகொள்ள முடியும் என்கிற ஆலோசனையை அஸ்கிரிய மகா விகாரையின் சிரேஷ்ட சங்கசபையின் உறுப்பினரான மக்குரப்பே ரத்தனபால ரத்தனஜோதி தேரர் மற்றும் துணை மகாநாயக்கர் உட்பட 11 பௌத்த தேரர்கள் இணைந்து ரணில் விக்கிரமசிங்கவுக்கு வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.

அதற்கமைய எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ, சபாநாயகர் கரு ஜயசூரியவின் வழிநடத்தலிலான தலைமைத்துவமானது சிங்கள பௌத்த உரிமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ள மகாநாயக்க தேரர்கள், ரணில் விக்கிரமசிங்கவின் சேவையானது நாட்டிற்கும், கட்சிக்கும் மக்களுக்கும் தொடர்ந்தும் அவசியமாகும் என்பதையும் கூறியுள்ளனர்.

இந்த ஆலோசனைகள் அடங்கிய விசேட கடிதமொன்றை அஸ்கிரிய மகா விகாரையின் சிரேஷ்ட சங்கசபையின் உறுப்பினரான மக்குரப்பே ரத்தனபால ரத்தனஜோதி தேரர் மற்றும் துணை மகாநாயக்கர் உட்பட 11 பௌத்த தேரர்கள் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர்.



Read more...

ஆட்சிபீடமேறி ஒரு மாதம். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில் அரசு இரட்டை வேடம் போடுகிறதாம்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஒரு மாதம் ஆகின்றபோது, அவர்கள் ஆட்சிக்கு வருவதற்காக பிரதான ஆயுதமாகக் கொண்டிருந்த தேசிய பாதுகாப்பு மற்றும் MCC உடன்படிக்கை தொடர்பில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் மறுதளிக்கப்பட்டு அரசாங்கம் இரட்டை வேடம் பூண்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவிக்கிறார்.

நேற்று மதியம் ம.வி.மு தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசத்தின் இறையாண்மையை அமெரிக்காவுக்குத் தாரைவார்க்கும் MCC உடன்படிக்கைகயை சாக்கடையில் வீசியெறிவதாக ஜனாதிபதி தேர்தலில் வாக்குறுதி அளித்தவர்கள் தற்போது இந்த உடன்படிக்கையை ஆராயவுள்ளதாக கூறுகின்றனர்.
இந்த உடன்படிக்கைகயை குப்பைத் தொட்டியில் வீசுவதாக கூறியிருப்பது எதுவிதமான ஆராய்ச்சியும் இன்றியே என்பது தற்போது தெளிவாகிறது.

விஜித ஹேரத் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும்போது.....

கடந்த நவம்பர் 16ஆம் திகதி நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய வெற்றி பெற்றதன் பின்னர் அரசாங்கம் அமைக்கப்பட்டு இன்றைக்கு ஒரு மாதமாகிறது. ஜனாதிபதி தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு முக்கியமான விடயங்களை குறிப்பிட்டிருந்தார். அதில் தேசிய பாதுகப்புக்கு அச்சுறத்தலை ஏற்படுத்திய ஏப்ரல் 21 தாக்குதல் மற்றும் அமெரிக்க மிலேனியம் சேலஞ் கோப்பரேஷன் (MCC) உடனபடிக்கை.

குறிப்பாக மிலேனியம் சேலன்ஞ் கோபரேஷன் உடன்படிக்கைகயை குப்பை தொட்டியில் வீசியெறிய உள்ளதாகவே அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்குறுதிகளாக வழங்கினர். அது மட்டுமல்ல இந்த உடன்படிக்கையில் கைசாத்திட்டால் இலங்கையின் காணி உரிமை மற்றும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகுமெனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் இன்று மிலேனியம் சேலன்ஞ் கோபரேஷன் 70% நல்லதென கூறுகின்றனர். முற்றாக குப்பைத் தொட்டிக்குள் வீசியெறிவதாக கூறிய உடன்படிக்கை எப்படி 70% நல்லதாக முடியும் என நாங்கள் அவர்களிடம் கேட்கின்றோம். அவ்வாறு கூறுவதற்கான அளவீடு என்ன? அதில் அடங்கியுள்ள நல்லவைகள் என்ன? அதை அவர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

ரணில்-மைத்திரி அரசாங்கம் இந்த உடன்படிக்கையை கைசாத்திடுவதற்காக அமைச்சரவை அங்கிகாரத்தை பெற்றிருந்தனர். அப்போது நாங்கள் அவர்களுக்கு தெரிவித்திருந்தோம். இந்த உடன்படிக்கை மட்டுமல்ல 1995 இல் கைசாத்திடப்பட்ட சோபா உடன்படிக்கையும், 2007 மார்ச் 05 ஆம் திகதி அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய ராஜபக்ஷாவும் அப்போதைய அமெரிக்க தூதுவர் ரொபட் ஓ பிளேக் ஆகியோரால் கைசாத்திடப்பட்ட எக்ஸா உடன்படிக்கையையும் நமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் இறைமைக்கும் பாரிய அச்சுறுத்தல் என்பதை தெரிவித்திருந்தோம்.

தற்போது கைசாத்திடுவதற்கு தயாராகும் மிலேனியம் சேலன்ஞ் கோபரேஷன் நிறுவனத்தின் பிரதானி சோன் கெயான் குரோஸ் நேரடியாக அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்பால் நியமிக்கப்பட்டவராவார். அவர் அமெரிக்க ஜனாதிபதியின் பிரத்தியேக ஆலோசனைக் குழுவின் உறுப்பினறுமாவார். அவருக்கு புறம்பாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளரும் இதில் உள்ளடங்கியிருக்கிறார். அதற்குப் புறம்பாக மேலும் மூவரைக் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது அபப்டியானால் இது எப்படி சுயாதீனமான நிறுவனமாகும்.

மிலேனிய சேலன்ஞ் நிதியுதவியை இந்நாட்டுக்கு வழங்குவதற்கு 18 அளவுகோல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கு ஏற்பதான இந்த 480 டொலர் மில்லியன் கடன் வழங்கப்படுகிறது. உண்மையில் இந்த நிதியின் மூலமாக ஏகாதிபத்தியவாதிகள் தமது மறைமுக குறிக்கோளை அடைவதற்கு எதிர்பார்க்கின்றனர் என்பது தெளிவாகியுள்ளது.

ஆசியாவில் சீனாவுடன் அமெரிக்காவுக்கு இருக்கின்ற போட்டி பொருளாதார மற்றும் யுத்த ரீதியாக இரண்டு பக்கத்தில் தற்போது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ஆசியப் பிராந்தியத்தில் நேரடியாக தலையிடுவதற்காக இவ்வாறான உடன்படிக்கைகளை பயன்டுத்தி வருகின்றனர். அதனால் அரசியல் ரீதியாக இது முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய உடன்படிக்கையாகும்.

ஆனால் அமைச்சரவை கடந்த வாரம் முடிவுசெய்திருப்பதாவது மிலேனியம் சவால் கோபரேஷன் நிறுவனத்தைப் பற்றி கலாநிதி லலித சிரி குணருவன் அவர்களின் தலைமையில் துணைக்குழு ஒன்றை நியமித்துள்ளது.

அதேபோன்று இந்த உடன்படிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரணைக்கு எடுத்தபோது சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்தாவது, இதுபற்றி ஆய்வுசெய்து அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதாக தெரிவித்தது. தேர்தல் காலத்தில் சாக்கடையில் எறிவதாக கூறிய இந்த உடன்படிக்கை 70% நல்லதென கூறுவது வீதி புனரமைப்பு தொடர்பிலான நிபந்தனையாகும். ஆனால் இதற்கேற்ப நமது நாட்டின் வீதி சமிஞ்சைகள் தொடர்பிலான சகல தகவல்களும் அமெரிக்காவுக்கு செல்கிறது. மறுபுறத்தில் காணி தொடர்பிலான விடயங்கள் அனைத்தும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்துவவனாகவே அமைந்திருக்கிறது.

அன்று வாக்குகளைப் பெறுவதற்காக கெட்டதென கூறிய ஒப்பந்தத்தை இன்று அந்த பணத்தை பெறுவதற்காக நல்லதென கூறுகின்றனர். இதனால் மகா போதியும் எமக்கு இல்லாது போய்விடுமெனக் கூறியவர்கள் இன்று தமது ஆடைகளை களைந்து நிர்வாணமாகியுள்ளனர். கம்மன்பில, டலஸ் அலகபெரும போன்றவர்கள் நடவடிக்கை இதற்கு சான்றாகும்.

நிலம் என்பது விற்பனை பண்டமல்ல. அது நமது நாட்டு மக்களின் மரபுரிமையாகும். அடுத்த தலைமுறையினருக்கு பெற்றுக்கொடுக்கின்ற ஒன்றாகும். ஆனால் 70% நல்லதென கூறுகின்றவற்றில் நமது நாட்டில் நிலத்தின் உரித்துரிமை, மக்களுக்கு இல்லாது செய்கின்ற ஆபத்து தோன்றியுள்ளது. அதேபோன்று அரசியல் ரீதியாக தேசிய பாதுகாப்புக்கு தேசத்தின் இறையாண்மைக்கு பாரிய தீங்கு ஏறபடப்போவது தவிர்க்க முடியாது.
அதனால் இதை இனியும் பரீசீலிக்க வேண்டிய விடயமல்ல. அதனால் தேர்தல் மேடைகளில் கூறியதுபோன்று உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக இப்போது அரசாங்கம் தனது இரட்டை வேடத்தை காட்டி வருகிறது. ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தில் இப்படியென்றால் எதிர்காலம் இதைவிட மோசமானதாகவே அமையும் என்பதை கூறி வைக்க விரும்புகின்றோம்.

அரசாங்கம் இது தொடர்பில் தமது தெளிவான நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். அமெரிக்கவுக்கு அது தொடாபில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அமைச்சரவையில் கலந்துரையாடுவது, துணைக்குழுவை அமைப்பது போன்ற விடயங்களால் மக்களை ஏமாற்றாது, தேர்தல் மேடைகளில் தெரிவித்த நிலைப்பாட்டில் இருக்கிறிர்களா? அல்லது நிராகரிக்கின்றிர்களா என்பதை அமெரிக்கவுக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் எமக்குத் தெரிந்தவரையில் தேர்தல் வாக்குறுதிகளை சாக்கடையில் எறிந்துவிட்டு 8640 கோடி ரூபாவை பெறுவதற்காக அனைத்தையும் தாரைவார்ப்பதற்காக அரசாங்கம் வாயை பிளந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. ஆகவே ஒரு மாதம் செல்வதற்கு முன்னர் நிர்வாணமான அரசாங்கம். பச்சோந்தியான அரசாங்கம்.

நாங்கள் கூறுவதாவது பணத்திற்காக இரட்டை வேடம் போடுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும். மிலேனியம் சவால் மட்டுமல்ல, எக்ஸா, சோபா போன்ற உடன்படிக்கைகளிலிருந்தும் விலக வேண்டும்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com