Tuesday, December 17, 2019

புதிய அரசாங்கத்தின் வருகையோடு வாய்பொத்தியுள்ளது பாதாள உலகக்கோஷ்டி!

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளதால் பாதாள உலக நடவடிக்கைகள் 100% குறைந்துவிட்டதாக பொலிஸ் தலைமையகத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாடு முழுவதும் பாதாள உலக கும்பல்களால் மேற்கொள்ளப்பட்ட கொலை, மிரட்டி பணம் பறித்தல், கொள்ளை, அடித்தல், துப்பாக்கிச் சூடு, கொள்ளை மற்றும் கடத்தல் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கோட்டபாய ராஜபக்ஷ பதவியேற்றதிலிருந்து நாட்டில் தலைமறைவாக உள்ள ஏராளமான பாதாள உலக குற்றவாளிகள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டின் எந்தப் பகுதியிலும் குற்றங்கள், பாதாள உலகக் கொலைகள் மற்றும் பெரிய அளவிலான கொள்ளைகள் எதுவும் பதிவாகவில்லை.

கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில், பாதாள உலக நடவடிக்கைகள் மிகவும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. தற்போது அவர் ஜனாதிபதியாகியுள்ள நிலையில் பாதாள உலகக் கோஷ்டி வாய்மூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

முரளி ஏற்க மறுத்த வடக்கு மாகாண ஆளுநர் பதவி சார்ள்ஸுக்கா?

வடக்கு மாகாண ஆளுநர் பதவியை, இலங்கையின் முன்னாள் கிரிக்கட்ட வீரர் முத்தையா முரளிதரன் நிராகரித்துள்ளார்.

அவரிடம் இதுதொடர்பில் கேட்டபோது, அந்தப் பதவிக்குத் தான் விருப்பமில்லை எனக்கூறியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்தார்.

முரளிதரன் வடக்கு மாகாண ஆளுநர் பதவியைப் பெறாமைக்குக் காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே என சூட்சுமமாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வடக்கு மாகாண ஆளுநராக சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பி.எஸ்.எம் சார்ள்ஸை நியமிப்பதற்கான திட்டம் குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக திருமதி சார்ள்ஸிடம் இலங்கைநெட் கேட்டபோது அவ்வாறான எவ்வித திட்டமும் இல்லை என அவர் கூறினார்.

Read more...

Monday, December 16, 2019

வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஶ்ரீ ரங்கா உள்ளிட்ட ஆறுபேருக்கு ஏதிராக குற்றப்பத்திரிகை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஶ்ரீ ரங்கா மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) உள்ளிட்ட 6 சந்தேகநபர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குறித்த சந்தேகநபர்கள் 6 பேருக்கும் தனித்தனியாக இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில், ஸ்ரீரங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய, ஜயமினி புஸ்பகுமார எனும் பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்தார்.

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரே வாகனத்தைச் செலுத்தியதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ஸ்ரீ ரங்காவே வாகனத்தைச் செலுத்தியதாகவும் பொலிஸ் உத்தியோகத்தர் வாகனத்தின் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்தார் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, இறந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவியினால் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அதன் மூலம் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கமைய ஶ்ரீ ரங்கா உள்ளிட்டோரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த 6 பேரும் நீதிமன்றில் ஆஜராகி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

கட்சி தலைமைத்துவத்தில் இருக்கப் போவதில்லை - ரணில் விக்கிரமசிங்க

ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவைப்படுகிறது. நான் தொடச்சியாக கட்சி தலைமைத்துவத்தில் இருக்கப் போவதில்லை. அவ்வாறு இருப்பதற்கான அவசியமும் இல்லை. எனவே அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணிப்பதற்கான திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாம் முறையாக நேரடியாக களத்தில் இறங்கி பாடுபட்டால் எம்மால் சிறந்த பலனைப் பெற்றுக் கொள்ள முடியும். சிலர் எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் எம்மால் வெற்றி பெற முடியாமல் போகும் என்று சிலர் பின்வாங்கியிருக்கின்றனர். அவ்வாறு பின்வாங்குபவர்களுக்கு நேரடியாக களத்தில் இறங்கி பாடுபட்டால் எம்மால் சிறந்த பலனைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று கூற விரும்புகின்றேன் எனத் தெரிவித்தார்.

Read more...

ஜனாதிபதித் தேர்தலுக்காக பட்ட கடன் 260 மில்லியனையும் எவ்வாறு செலுத்துவதென்று தலையைப் பீய்க்கிறார் சஜித்!

எதிர்க்கட்சித் தலைவர், கட்சித் தலைவர் ஆகிய எந்தவொரு பதவியையும் தான் எதிர்பார்ப்பதில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வருகை தந்து, தன்னை தொந்தரவு செய்துவருவதாகவும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சஜித் பிரேமதாச மகாசங்கத்தினரிடம் தெரிவித்ததாகவும், ஐக்கிய பிக்குமார் முன்னணியின் செயலாளர் தினியாவல பாலிதா தேரர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பீடத்தில் இன்று (16) தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக தான் 260 மில்லியன் ரூபா கடன்பட்டிருப்பதாகவும், அதனைச் செலுத்துவது தொடர்பில் சிந்தித்து வருவதாகவும் சஜித் பிரேமதாச தன்னிடம் கூறியதாகவும் தேரர் குறிப்பிட்டார்.

பிளவுபட்டு பிரிந்து நிற்பதை விடவும், ஒற்றுமையாக செயற்பட்டு வெற்றிக்காக பங்களிப்புச் செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆலோசனை வழங்குவதாகவும் குறிப்பிட்ட பாலித்த தேரர், அதற்காக ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்ஷவிடம் ரியுஷன் வகுப்புச் செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய பிக்குகள் முன்னணி சிறிக்கொத்தவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பீடத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

Read more...

சுவிஸ் தூதரக பெண்ணுக்கு 30 ஆம் திகதி வரை விளக்கமறியல்

கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்ளூர் பெண் ஊழியரான கனியா பானிஸ்டரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொய்யான வாக்குமூலங்களை வழங்கியமைக்காக அவரை கைதுசெய்து நீதமன்றில் ஆஜர்படுத்துமாறு இன்று சட்ட மா அதிபர் சி.ஐ.டி. என்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர்.

இந் நிலையில் அவர் இன்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போதே நீதிவான் அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Read more...

அதிகாரப்பகிர்வு சாத்தியமா? காணாமல் போனோர் உயிரிழந்தார்களா? கோட்டாபய நேரடிப் பதில் !

இனப்பிரச்சினைக்கான அதிகாரப் பரவலை வழங்கமுடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசியர்களை இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்தபோதே அவர் இதனைக் கூறினார். பெரும்பான்மையின மக்கள் நிராகரிக்கின்ற ஒன்றை தம்மால் வழங்கமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் பல விடயங்களை ஜனாதிபதி தெரிவித்தார்.

காணாமல் போனவர்கள் பற்றி இங்கு கருத்து வெளியிட்ட அவர், அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும் அதனால் அவர்களுக்கான சான்றிதழை அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு வழங்குவதுதான் சரியான வழி என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கைக்கான சுவிஸர்லாந்து தூதரகத்திலுள்ள பெண் அதிகாரியொருவர் வெள்ளைவாகில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவமானது பொய்யான சம்பவம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இந்த விவகாரத்தில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தை தாம் குறைகூறப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்குவந்த சில தினங்களிலேயே கொழும்பிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர் வெள்ளைவானில் கடத்தப்பட்டு விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்திவருவதோடு ஐந்தாவது முறையாக சம்பந்தப்பட்ட பெண்ணிடம் இன்றைய தினம் வாக்குமூலத்தையும் பதிவுசெய்தது.

இந்நிலையில் இன்றைய இந்த சந்திப்பின்போது சுவிஸ் தூதரகப் பெண் கடத்தல் தொடர்பிலான கேள்வி முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சுவிஸ் தூதரகத்தில் பணிபுரியும் பெண் அதிகாரி எந்தவிதத்திலும் வெள்ளை வானில் கடத்தப்படவில்லை என்பதற்கு தொழில்நுட்பரீதியிலான சாட்சிகள் வந்திருக்கின்றன என்று கூறியதோடு குறித்த பெண் அதிகாரியின் வாக்குமூலத்தில் மாறுப்பட்ட கருத்துக்கள் காணப்படுகின்றமையினால் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்களுடனான இன்றைய சந்திப்பிற்கு முன்னதாக சுவிட்ஸர்லாந்து தூதரகத்துடன் உரையாடியதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி கோட்டாபய, சுவிட்ஸர்லாந்து தூதரகம் தனது கடமையை சரிவரச் செய்திருந்தாலும் சம்பந்தப்பட்ட பெண் பணியாளர் விசாரணைகளுக்கு உரிய வகையில் ஒத்துழைப்பு செய்வதில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

இந்த விடயம் தொடர்பில் சுவிஸர்லாந்து தூதரகத்துடன் தமக்கு எந்தவித முரண்பாடுகளும் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற தினத்தில் பதிவாகிய சி.சி.ரி.வி காணொளி, சம்பந்தப்பட்ட பெண் பயணித்த வாடகை கார் மற்றும் அவரது உறவினர்கள் போன்றவர்களின் சாட்சியங்களை ஒப்பிட்டுப்பார்க்கும்போது வெள்ளைவானில் அவர் கடத்தப்படவில்லை என்பது தெரியவந்ததாகவும், ஆனாலும் முழுமையான விசாரணை தற்சமயம் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இந்த சம்பவமானது தனது பெயருக்கு மேலும் கலங்கத்தை ஏற்படுத்திவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய சந்திப்பின்போது கவலை வெளியிட்டார்.

இதேவேளை இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அரச தலைவர் கோட்டாபய, 19ஆவது திருத்தம் இரத்து செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தமானது, பல குறைபாடுகளுடனான திருத்தம் என்று சுட்டிக்காட்டிய அவர் இந்த திருத்தச் சட்டத்தை விரைவில் இரத்துசெய்வதாகவும், மிகவும் பலவீனமான சட்டமான இதனை, அரசியலில் புலமைப்பெற்றோரும் அனுபவம் வாய்ந்தவர்களும் ஏன் கொண்டுவந்தார்கள் என்பது தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை மலையத்திலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

தாம் தற்போதே ஆட்சிக்கு வந்துள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து விரைவில் ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், மலையக மக்களுக்கு மட்டுமன்றி நாட்டு மக்களுக்கும் மானிய உதவிகளை வழங்கவும் தான் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அந்த வகையில் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் குறைப்பு ஏற்படுத்தப்பட்ட போதிலும் அவை உரியவகையில் மக்களை சென்றடையவில்லை என்ற முறைப்பாடுகளும் கிடைத்திருப்பதாக ஜனாதிபதி இன்றைய ஊடக சந்திப்பின்போது கூறினார்.

Read more...

வடகிழக்கில் நிலம் பறிபோகுதாம், புலம்பெயர்ந்த தமிழரை வந்து குடியேறட்டாம். அழைக்கின்றார் அடைக்கலநாதன்.

வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழ் மக்கள் மீளவும் இந்த மண்ணிற்கு வர வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தையடுத்து அந்த அமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட கிளையின் கூட்டம் நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, 'இந்தியாவின் குடியுரிமையச் சட்டத் திருத்தத்தில் ஈழத் தமிழ் மக்கள் உள்வாங்கப்படவில்லை.

அந்த நிலைப்பாட்டிற்கு ஆதரவும் அதேநேரம் எதிர்ப்பும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. குறிப்பாக பல அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறுபட்ட கோரிக்கைகளை இந்த விடயத்தில் விடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் என்னைப் பொறுத்தமட்டில், தாயகத்திலுள்ள எங்களுடைய மக்களின் நிலங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. ஆகவே அது தடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது. அதற்காக இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமுள்ள எமது மக்கள் இங்கே வர வேண்டும். அதனூடாகவே அவர்களது காணிகள் பறிபோவதை தடுத்து பாதுகாக்க முடியும்

இன்றைய நிலைமையில் அந்த மக்களின் காணிகள் எல்லாம் அத்தீமீறி களவாடப்படுகிறது. ஆகையினால் இங்கிருந்து சென்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருக்கின்ற மக்கள் அங்கே குடியுரிமையைப் பெற்று இருப்பார்களானால் அவர்களுடைய அந்த நிலங்கள் தொடர்ந்து களவாடப்படும்.

எனவே காணிகள் காக்கப்படவேண்டுமானால் புலம்பெயர் தமிழர் இங்குவந்த எமது நிலத்தை காப்பாற்றவேண்டும் என்றும் மாறாக ஐரோப்பாவிலிருந்து கொண்டு இங்கு நாடுவேண்டுமென்று கோஷமிடக்கூடாது என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

Read more...

கருணை கொலை கோரி இலங்கை தமிழர் தமிழகத்தில் மனு!

25 ஆண்டுகளுக்கு மேலாக சேலத்தில் வசித்து வருகிறேன். தற்போது குடியுரிமை சட்டத்திருத்தத்தால் எனக்கு இந்திய குடியுரிமை வழங்காவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள் என சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இலங்கை தமிழ் இளைஞர் மனு அளித்தார்.

கடந்த 2015-ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் மசோதா இரு அவைகளில் நிறைவேற்றப்பட்டு சட்டமாகிவிட்டது.

இதில் அகதிகளாக வந்துள்ள இலங்கை தமிழர்கள் சேர்க்கப்படவில்லை என தமிழ் அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனக்கு குடியுரிமை வழங்காவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள் என சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறுகையில், எனது தாய், தந்தை இலங்கையில் இனப்போர் நடந்ததால் கடந்த 1990ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வந்துவிட்டனர்.

அது முதல் சேலம் மாவட்டம் பவளத்தானூர் அகதிகள் முகாமில் இருந்து வருகிறோம். நான் 1991-ஆம் ஆண்டு பிறந்தேன். நான் தமிழகத்திலேயே படித்து பட்டம் பெற்றுள்ளேன். இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தால் இந்திய குடியுரிமை உள்பட அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு உள்ளது.

எனவே என்னை கருணை கொலை செய்துவிடுமாறு அவர் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு குறித்து அந்த இளைஞர் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழகத்திலேயே பிறந்து இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன்.

எனக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது, மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது.இது போன்ற நிலை யாருக்கும் வரக் கூடாது. கருணை கொலை செய்துவிடுமாறு ஆட்சியருக்கு மட்டுமில்லாமல் ஜனாதிபதி , தமிழக ஆளுநர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளேன் என்றார்.

Read more...

முதலைக்கு தீனிபோட்ட வெள்ளைவான் சாரதிகளுக்கு விளக்கமறியல்..

வெள்ளைவேன் சாரதி என அடையாளப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்ட இரண்டு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று மாலை முன்நிறுத்தப்பட்டபோது எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 11ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் நடந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட இருசந்தேக நபர்களும் வெள்ளைவான் கடத்தல்களுக்கு கோட்டாபய ராஜபக்சவே உத்தரவு வழங்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இந்நிலையில் கொழும்பின் புறநகரான மஹர பிரதேசத்தில் கடந்தவாரம் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

சுவிஸ் தூதரக ஊழியரை கைது செய்ய உத்தரவு. அவர் அல்ல பாதிக்கப்பட்டது, நானே பாதிக்கப்பட்டுள்ளேன் கோத்தா.

இலங்கைக்கான சுவிட்சர்லாந்தின் தூதரக ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டதாக செய்யப்பட்ட முறைப்பாடு நாட்டில் பல குளப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. அவ்வாறானதோர் சம்பவம் நடைபெறவில்லை என குற்றச்சாட்டை தொழில்நுட்பரீதியான ஆதாரங்களுடன இலங்கை அரசு மறுத்து வருகின்றது.

குறித்த பெண் நாட்டின் நற்பெயருக்கு குந்தகம் ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள இலங்கை சட்ட மா அதிபர் திணைக்களம் அவரை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவு வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இன்று பிற்பகலில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இந்த உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. பொய்யான தகவல்களை வெளியிட்டு அரசாங்கத்திற்கு பங்கத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின்படி அவர் கைது செய்யப்படவுள்ளார்.

இதேநேரம் இன்று ஊடகங்களின் பிரதானிகள் சந்தித்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, இவ்விடயத்தில் குறித்த பெண் அல்ல தானே பாதிக்கப்பட்டவன் என தெரிவித்துள்ளார். அங்கு கருத்துரைத்த அவர், சுவிட்சர்லாந்து அரசானது தனது ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்தவுடன் முறைப்பாடு செய்ததில் எந்த தவறும் கிடையாது. ஆனால் தவறான தகவலை வழங்கியமையே தவறாகும் என்று கூறியுள்ளார்.

ஹானியா பரிஸ்ரர் பிராண்சிஸ் என்ற குறித்த பெண்ணிடம் இன்று 5 வது நாளாக சீஐடி யினர் வாய்முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். அத்துடன் நீதிமன்ற உத்தரவின் பெயரில் அவரை அங்கோடை உளவியல் நிலையத்திற்கு அனுப்பி அவர் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது தொடர்பிலும் அறிக்கை பெறவுள்ளனர். மேலும் குற்றச்சாட்டப்பட்டவாறு அவர் பாலியில் துன்புறுத்தலுக்கு உள்ளானாரா என்பது தொடர்பிலும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் துறைசார் நிபுணர் ஒருவரிடம்; பரிசோனைக்கு அனுப்பி அறிக்கை பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். மேற்படி தகவல்களின் பிரகாரம் குறித்த பெண் பொய்யான தகவலை வழங்கியுள்ளார் என்பது நிரூபணமாகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது.

ஹானியா பரிஸ்ரர் பிராண்ஸிஸ் என்ற குறித் ஊழியர் சிங்கள பௌத்த குடும்பம் ஒன்றில் பிறந்தவர். இவர் பின்னாளில் மதம் மாறிக்கொண்டதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகர் ஒருவரின் மருமகள் என்றும் தெரியவருவருடன் அவரது இயற்பெயர் சிறியலதா பெரேரா என்தாகும்.

Read more...

ஜனாதிபதியிடம் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டார் விமல்!

சென்ற புதன்கிழமை ஒரு பெளர்ணமி தினத்தன்றுபோயா நாள் என்பதால், அமைச்சரவை செவ்வாய்க்கிழமை கூடியது. அமைச்சரவைக் கூட்டத்தின் தொடக்கத்தில் அமைச்சர் விமல் வீரவங்ச ஜனாதிபதியிடம் மிக முக்கியமான கேள்வியொன்றைக் கேட்டுள்ளார்.

'' அரசாங்கம் எம்.சீ.சீ ஒப்பந்தத்தில் கையெழுத்திட முயற்சிப்பது பற்றிய பேச்சு பரவலாக அடிபடுகின்றது. அதற்கு எதிராக நாங்கள் பேசியவர்கள். ஆகவே, ஜனாதிபதி அவர்களே... இது தொடர்பில் உங்கள் உங்கள் முடிவு என்ன? எனக் கேட்டுள்ளார்.

அதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள்,

"முதலாவதாக, எந்தவொரு காரணத்திற்காகவும் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு உடன்படிக்கையையும் நான் ஏற்க மாட்டேன் ... கூடுதலாக, ஒப்பந்தத்தின் ஒவ்வொரு பிரிவுகளையும் மறுஆய்வு செய்ய டாக்டர் லலித்ஸிரி குணவர்தன தலைமையில் ஒரு குழுவை நியமிக்க திட்டமிட்டுள்ளோம் ... அந்தக் குழுவின் நிபுணர் கருத்தையும் நாங்கள் ஆலோசிப்போம்." எனபதிலளித்துள்ளார்.

Read more...

ராஜிதவின் வெள்ளை வான் விவகாரம் தொடர்பில் முழுமையான விசாரணை -கமால் குணரட்ன

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தல் பிரசார காலத்தில் முன்னாள் சுகாதார அமைச்சரின் ஏற்பாட்டில் சிலர் முன்வைத்த வெள்ளை வான் மற்றும் முதலைக்கு இரையாக்கியமை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக முழுமையான விசாரணை நடைபெறுமென்று பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன கூறியுள்ளார்.

பன்னிபிட்டியவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, முன்னாள் சுகாதார அமைச்சர் நடத்திய ஊடக மாநாட்டு நாடகத்தின் சூத்திரதாரி யார் என்பது விசாரணைகளில் தெரியவரும். அத்துடன் அந்த நாடகத்தின் நடித்தவர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது? அந்த நாசக்கார குண்டர்கள் யார்? என்பது விரைவில் பொது மக்களுக்கு தெரியவரும் என்றும் அவர் மேலும் கூறினார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சேறுபூசும் பிரசாரம் தொடர்ந்த போதிலும் தேர்தலின் பின்னர் அரசியல் பழிவாங்கள் செயற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியர் கடத்தப்பட்ட சம்பவம் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு அங்கம் என்றும் அவர் கூறினார்.

மேற்படி சம்பவம் தொடர்பான அனைத்து விடயங்களும் வெளியாகியுள்ளன. அவற்றைப் பற்றி நாம் ராஜதந்திர சமூகத்துக்கு ஏற்கனவே தெரிவித்துவிட்டோம். புதிய அரசாங்கத்தை கஷ்டத்தில் போடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி இது. இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து விபரங்களும் இப்போது வெளிவந்துள்ளதால் அரசாங்கத்துக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ எவரும் அபகீர்த்தியை ஏற்படுத்த முடியாது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, வெள்ளை வான் விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தலைமையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பரபரப்பான கருத்துகளை வெளியிட்டிருந்த அந்தெனி பெர்ணான்டோ மற்றும் அதுல என்ற இருவரும் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.


நேற்று முன்தினம் இரவு கடவத்த பிரதேசத்தில் இருவரையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன நடாத்தியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அந்தெனி பெர்ணான்டோ மற்றும் அதுல ஆகிய இருவரும் வெள்ளை வான் கடத்தல் விவகாரம் தொடர்பில் பரபரப்பான சில கருத்துகளை வெளியிட்டிருந்தனர்.

வெள்ளை வானில் சாரதியாக கடமை புரிந்ததாக அடையாளப்படுத்திக்கொண்டு கருத்து வெளியிட்டிருந்த அந்தெனி பெர்ணாந்து, தாம் மொணராகலையில் உள்ள ஆட்கடத்தல் முகாமில் சாரதியாக பணிப்புரிந்ததாகவும், வெள்ளை வானில் கடத்தப்படுபவர்கள் குறித்த முகாமுக்கு கொண்டுவரப்பட்டு பாகங்களாக வெட்டப்பட்டு குறித்த முகாமுக்கு அருகில் காணப்படும் காட்டுப்பகுதியில் உள்ள முதலை கிணறொன்றில் வீசப்பட்டதாகவும் கூறியிருந்தார்

Read more...

'இலங்கை பெளத்த நாடே அல்ல...அறிக்கை விட்ட விக்னேஷ்வரனுக்கு பேரிடி!

முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஷ்வரனை மிக அவசரமாகக் கைது செய்யுமாறு கோரி, பொலிஸ் தலைமையகத்திற்கும் குற்றவியல் புலனாய்வுப் பிரிவிற்கும் நேற்று இரண்டு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சிங்களே தேசிய அமைப்பினாலேயே இந்த முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வரலாற்றாய்வாளர்களாலும் தொல்பொருளாய்வாளர்களினாலுமே இலங்கை ஒரு பெளத்த நாடு என்று கதைவிடப்பட்டுள்ளது. அது மகாவம்சம் என்ற சோடிக்கப்பட்ட பிரபந்தத்தை அடிப்படையாகவே உள்ளது. உண்மையான தகவல்களின் அடிப்படையில் அல்ல என முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஷ்வரன் நேற்றுக் குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஷ்வரன் அவர்கள் தனது அறிக்கையில்,

இந்த நாட்டின் எந்தவொரு தனிநபரோ அல்லது அரசியல்வாதியோ ஸ்ரீலங்காவை பெளத்த நாடு என்று குறிப்பிடுவதற்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை. பெளத்த பிக்குகளினால் பாளி மொழியில் வரலாறு பற்றிச் சொல்கின்ற பல பிரபந்தங்கள் எழுதப்பட்டுள்ளன. அவர்களின் பிழையான கருத்துக்களால் எண்ணப்பாடுகளால் மக்கள் வாழ்கின்றார்கள்.

வடக்கு கிழக்கில் ஆரம்ப காலங்கள் எந்தவொரு சிங்களவரும் வாழவில்லை எனவும், அது தமிழர்களின் தாயகம் எனவும் அவர் தெளிவுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், விக்னேஷ்வரின் கருத்துக்கள் இனவாதத்தைத்தையும் அடிப்படைவாதத்தையும் தூண்டுவதால், அவரை மிக அவசரமாக தண்டனைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய வேண்டும் எனக்கோரி சிங்களே தேசிய அமைப்பு பொாலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.

விக்னேஷ்வரின் கருத்துக்கு பெரும்பாலான சிங்கள அமைப்புக்களுக்கும், வரலாற்றாய்வாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

Read more...

Sunday, December 15, 2019

ஜனாதிபதியினால் சரியான விடயங்களைச் செய்யவியலுமா? தனக்குச் சந்தேகம் என்கிறார் அர்ஜுன

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சரியான விடயங்களைச் செய்யவியலுமா? என்று எனக்குச் சந்தேகமாக இருக்கின்றது எனவும், அவரைச் சூழவுள்ளோர் பழையவர்கள் என்றும் கம்பஹா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார்.

பா.உ. ரணதுங்கா வாரபலனா ஸ்ரீ ஜினேந்திரராம கோவிலுக்குச் சென்று அங்குள்ள குறைபாடுகளை ஆராயச் சென்றபோது, ஊடகவியலாளர்களிடம் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

'ஐக்கிய தேசியக் கட்சியில் இணையுமாறு எனக்கு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அழைப்பு வந்துள்ளது. தேர்தல் தொகுதியொன்றைப் பெற்றுக்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள், மஹர தொகுதியை மீளக் கட்டியெழுப்புமாறு என்னிடம் கோரியுள்ளார். நான் எந்தத் தொகுதியை எடுக்கின்றேனோ அத்தொகுதியில் பணியாற்றுவேன். தொகுதிகளுக்குச் சென்று ஐக்கிய தேசியக் கட்சியை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் ஏனைய கட்சிகளுடனும் இணைந்து செயலாற்றுவேன்.நாட்டுக்குப் பொருத்தமானவற்றைச் செய்வேன்... புதியதொரு அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவேன்.' எனவும் கூறியுள்ளார்.

Read more...

'என்ர தங்கமே உனக்கு எல்லாம் செய்வேன்.. எனக்கு உன்ர வேண்டுமென்ற பொலிஸ் பொறுப்பதிகாரி பதவியிழந்தார்.

மிரிஹானா பொலிஸ் சிறப்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் (OIC) ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததன் பேரில் வழக்கு தொடரப்பட உள்ளது.

இந்த அதிகாரிக்கு எதிராக ஆதாரபூர்வமான சான்றுகள் இருப்பதாக மேல் மாகாண தெற் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வசந்த விக்கிரமசிங்க அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிர்ஷ்ட இலாபச் சீட்டொன்றில் வெற்றிபெற்ற 23 வயதுடைய அழகிய பெண்ணொருத்தி, தனக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பு குறித்து புகார் அளிப்பதற்காக மகாரகாமவில் பொலிஸிற்குச் சென்றபோது, குறித்த பொலிஸ் அதிகாரி பாலியல் இலஞ்சம் கோரியுள்ளார்.

'உனக்கு நான் உணவு ஊட்டிவிடுகிறேன்....உன் குளிப்பாட்டி விடுகிறேன்... நீ எனக்கு வேண்டும் தங்கமே!' என்று முறைப்பாடு செய்ய வந்த பெண்ணிடம் பசப்பு வார்த்தைகளைக் கொட்டி, பாலியல் இலஞ்சியம் கோரியதாகத் தெரியவருகின்றது.

பொலிஸ் நிலையப் பொறுப்பாளர் கூறிய பாலியல் சார்ந்த விடயங்களை குறித்த பெண்மணி தனது கையடக்கத் தொலைபேசி மூலம் பதிவு செய்துள்ளார். அதனை மேல் மாகாண தெற்கு டி.ஐ.ஜி வசந்தா விக்ரமசிங்கவிடம் சென்று புகார் அளித்துள்ளார்.

அவர் பதிவுசெய்த தொலைபேசி உரையாடல்கள் குறித்து ஏ.எஸ்.பி ஒரு நீண்ட விசாரணையை நடத்தியுள்ளார், மேலும் சிறப்பு புலனாய்வு பிரிவின் ஓ.ஐ.சி அந்தப் பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் வாங்கியதற்கான தெளிவான சான்றுகள் உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப, பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வசந்த விக்கிரமசிங்க, சென்ற 7 ஆம் திகதியிலிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளரை பதவியை இரத்துச் செய்துள்ளார்.

Read more...

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையைச் சிக்கவைக்க முனைகிறது புலிப்பினாமிகள் அமைப்பு!

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்க எல்.ரீ.ரீ.ஈ சார்பு புலிப்பினாமிகள் அமைப்புகள் சில திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த புலம்பெயர் அமைப்புகள் ஐரோப்பாவின் பல நகரங்களில் சந்தித்து கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளன.

அருட்டந்தை எமானுவேல் தலைமையிலான உலகளாவிய தமிழ் அமைப்பு இந்த செயல்முறைக்கு தலைமை தாங்குகிறது என்று இராஜதந்திர அறிக்கைகள் கூறுகின்றன.

பல சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இந்த செயல்முறையை ஆதரித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

Read more...

பிரித்தானியப் புதிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு பேரிடிகள் உருவாகலாம்...! மொஹான்

பிரித்தானியப் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பிரதமர் பொரிஸ் ஜொன்சன் உள்ளிட்ட கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய அரசாங்கத்தினால் இலங்கைக்கு சிற்சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதற்கேற்ப, போர்க்குற்றம் தொடர்பில் பிரித்தானிப் புதிய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் தீவிர நடவடிக்கை எடுக்கவியலும் எனவும் அரசியல் விமர்சகரான, மொஹான் சமரநாயக்க குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் இந்நாட்டில் அதிகாரத்தில் உள்ளவர்கள் பெரும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

நித்தியானந்தாவின் அரசவையின் வக்கீலாக சிறிகாந்தா நியமனமாம்.. கிழிஞ்சவாயன்..

நித்தியானந்தா! ஆள் சும்மா ஆள் இல்லை கண்டியளே.. ரஞ்சிதாவிலை தொடங்கின ஆள் வந்துட்டு இப்ப நாடொன்றையே விலைக்கு வாங்கிப்போட்டார். நாட்டிடை பெயர் கைலாசாவாம். தேசிய மொழிகள்கள் மூன்றாம். ஆங்கிலம் , சமஸ்கிரதம் , தமிழ் மொழி என்பன அரசகரும மொழிகளாம். ஒரு நாட்டுக்கு உரித்தான தேசிய கீதம், தேசியப் பறவை, தேசிய கொடி என்று தேசியத்துக்கு உரித்தான அத்தனையையும் ஆள் அசத்தலா வடிவமைத்தும் இருக்கிறாராம்.

என்னதான் சொன்னாலும் பாருங்கோ பிராந்திய வல்லரசுக்குள்ளே வல்லரசு ஒன்றை குடும்பி கட்டின சாமி ஒருத்தர் அமைத்துக்காட்டியிருக்கின்றார் பாருங்கோ. ஆனால் அந்த வல்லரசு பாருங்கோ ஆசியாக் கண்டத்திலை இல்லை. அது அமெரிக்கா கண்டத்திலை.. வட அமெரிக்காவிலை உள்ள ஈகுவாடர் என்ற நாட்டுக்கு சொந்தமான தீவு ஒன்றை விலைக்கு வாங்கித்தான் ஆள் இந்த ஆட்டம் போடுது. ஐயன்னா நாவன்னாவிட்டையும் தன்ர நாட்டை உடனடியாக அங்கீகரி என்று கோரிக்கை விடுத்துள்ளார்

நித்தியானந்தாவை இந்திய அரசும் ஊடகங்களும் சும்மா சுற்றிவழைத்து பொக்சுக்குள்ளை விட்டு அடிக்க நிண்டவயள் பாருங்கோ. ஆள் வெளியேறாதமாதிரி பாஸ்போர்டையும் புடிங்கினவையள். ஆனால் ஆள் தனியான பிளைட்டை கொண்டுவந்து வல்லரசுக்கு விளையாட்டு காட்டிப்போட்டு அமெரிக்கக்கண்டத்தில் இந்தியாவின் நிழல் அரசையை உருவாக்கி உன்ர பாஸ்போட்டை நீவைத்துக்கொள் எனக்கு நான் பாஸ்போட் கந்தோரே திறக்கபோறன் என்று வல்லரசுக்கு ஒரு போடுபோட துணிந்துட்டார் சாமியார்.

நேபாளத்துக்கு தனியான பிளைட்டை கொண்டுவந்த சாமியார், தனிய போகல்லை பாருங்கோ, ஆச்சிரமங்களிலிருந்த குஞ்சி குரால்களையும் அள்ளிப்போட்டுக்கொண்டதான் போட்டாராம். இனியென்ன தனியான தீவுல தனியான ராஜ்சியத்திலை தனிக்காட்டு ராஜாவாக சாமியாரிடை விளையாட்டு ஓடும். வல்லரசும் சும்மாவா இருக்கபோகுது? ரஞ்சிதாவோடை விளையாட்டை கைடெக் கிடுன் வீடியோ பொருத்தியெல்லோ போட்டுடைச்சவையள், இனி சட்லைட் கமெரா அது இது என்று தங்கட ஐரி ஸ்பெசலிஸ்டை எல்லாம் கைலாசாவை நோக்கி நகர்த்துவினம்..

என்னதான் என்றாலும் பாருங்கோ அள்ளிக்கொண்டு போயிருக்கின்ற ஆச்சிரமத்து குஞ்சிகுராலுகளுக்கு என்ன நடக்கப்போகுது என்றதுதான் இந்த கிளிஞ்சவாயன்ட கவலை பாருங்கோ.. இது சம்பந்தமா கொஞ்சம் தேடுதலிலை இறங்கினபோது அட கோதாரி என்று போட்டுது. என்ன தெரியுமோ சங்கதி, நித்தியானந்தாவின் அரசவைக்கான வக்கீலாக தமிழருக்கு தமிழீழம் பெற்றுத்தாரம் என்று காதிலை பூ சுத்தின ரெலோவின்ட முதல்வர் சிறிகாந்தாவை நியமிக்கபோகினமாம் என்ற செய்தி கிடைச்சிருக்கு..

இதென்னடா கோதாரி இந்த உலகத்திலை சாமியாருக்கு வேற ஒருவரும் கிடைக்கலையே என்று விசாரிக்கத்தான் சொன்னாங்கள், சிறிக்காந்தாவை மாதிரி சிறுவர் துஷ்பிரயோகம் செய்கிற கழிசடைகளை வேறு ஒருவராலும் காப்பாற்ற முடியாதாம். அண்மையிலையும் யாழ்பாணத்திலை ஒன்பது வயது சிறுமிக்கு மொபைல் போண் வாங்கிக்கொடுத்து அலுவல்பார்த்த ஐயரை விடுவிக்கக்கோரி நீதிமன்றிலை ஒற்றைகாலில் நின்றவராம்.. அப்ப இதைவிட என்ன தகுதி வேண்டுமாம் என்று கேட்கினம் ஆச்சிரமக்காரார். ஏன் தெரியுமோ எதிர்காலத்திலையும் அங்க அள்ளிக்கொண்டு போயிருக்கிற குஞ்சி குரால்கள் குதரப்படேக்க சிறிக்காந்தா தொழிலை அப்படி அத்துப்படியா செய்வாராம் கண்டியளே..

மீண்டும் சந்திப்போம் அன்புடன் கிழிஞ்சவாயன்..
உண்மையுடன் சங்கமமான கற்பனை

Read more...

சஹ்ரானின் சகா ஒருவன் சிறையிலேயே மரணமடைந்துள்ளான்.

உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட சஹ்ரான் ஹாஷிமூடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடி, நூர் முஹம்மத் வீதியை சேர்ந்த ஜெய்னுலாப்டீன் முஹம்மத் ஜெஸீல் என்கிற நபரே இவ்வாறு மரணமடைந்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கொழும்பு வெலிக்கடை சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இவருடன் சேர்த்து சகோதரனும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

சிறிதரனின் சகாவின் உடந்தையால் 11 வயது சிறுமி வன்புணர்வு! ஊர்கூடி காமுகனின் கடையை எரித்தது.

கரைச்சி பிரதேச சபையின் தமிழரசு கட்சியின் தவிசாளர் அ. வேழமாலிகிதனின் நடவடிக்கையால் கிளிநாச்சியில் 11 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்குட்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் சிறு புடவை கடை ஒன்றை நடத்தி வருகின்ற வெளி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் சட்டவிரோதமாக அனுமதியின்றி தனியார் காணி ஒன்றிற்குள் வியாபாரம் நிலையம் அமைத்து நடாத்தி வருகின்றார். எனவே இவரின் வியாபார அனுமத்தி பத்திரத்தை இரத்துச் செய்யுமாறு கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளருக்கு இவ்வருடம் ஜனவரி மாதம் இரண்டாம் திகதி கடிதம் எழுதியிருந்தார். அத்தோடு அப்பிரதேச பொது மக்களும் வாய்மொழிமூலம் வேழமாலிகிதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆகியோருக்கும் முறைப்பாடு செய்திருந்தனர். அந்த முறைப்பாட்டில் குறித்த நபரின் சமூகவிரோத செயல்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தும் இவர்கள் இருவரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவு குறித்த நபரால் அப்பிரதேசத்தை சேர்ந்த 11 வயது பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

எனவே குறித்த நபர் தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் அதிகாரம் இருந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதன் காரணமாக ஆத்திரமடைந்த பொது மக்கள் குறித்த நபரை பொலீஸாரிடம் பிடித்துக்கொடுத்துள்ளதோடு, அவரின் கடையினையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது



குறித்த பகுதியில் சிறு புடவை கடை நடாத்தி வருகின்ற நபர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அத்துமீறி தனி நபர் ஒருவரின் காணியை பிடித்து வியாபாரம் நிலையம் அமைத்து நடாத்தி வருகின்றார் என்றும் எனவே இது தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளரினால் கடந்த 2017 ஆம் ஆண்டு கரைச்சி பிரதேச சபையின் செயலாளருக்கும். 2019 ஆம் ஆண்டு பிரதேச சபையின் தவிசாளருக்கும் குறித்த நபர் சட்டவிரோதமாக கடை நடாத்தி வருகின்றார் எனவே அவரின் வியாபார அனுமதி பத்திரத்தை நிறுத்துமாறு கோரி கடிதம் எழுதியிருந்தார் ஆனால் அக் கடிதத்திற்கு பிரதேச சபையினால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.


இந்த நிலையில் குறித்த நபர் 11 வயது சிறுமியை அச்சுறுத்தி வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். இதனை பலரிடம் கூறிய போது எவரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இவரது நடவடிக்கையினை இரகசியமாக வீடியோ எடுத்த பிரிதொரு நபர் அதனை ஆதாரமாக பொலீஸாரிடம் கொடுத்து நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதோடு, ஆத்திரமடைந்த பொது மக்கள் அவரது கடையினையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.





Read more...

Saturday, December 14, 2019

ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும் , வண்டியும் ஒருநாள் ஓடத்திலேறும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து ஏ.எச்.எம் பௌஸி நீக்கப்பட்டுள்ள நிலையில் அவரது தேசியப் பட்டியல் ஆசனத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வருகின்ற ஜனவரி 03ஆம் திகதி கூடுகின்ற நாடாளுமன்ற அமர்வில் அவர் நாடாளுமன்ற உறுப்பினரான சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவருக்கு அமைச்சுப் பதவி ஒன்றையும் வழங்க உத்தேசித்திருப்பதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

Read more...

ஐக்கிய தேசியக் கட்சியின் பா.உ 12 பேருக்கு ஆளுங்கட்சிப் பகுதியில் ஆசன ஒதுக்கீடு!

ஜனவரி 3 முதல் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் 12 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும் கட்சியின் இடத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தை விட எதிர்க்கட்சியில் அதிக உறுப்பினர்கள் இருப்பதால் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பக்கம் அமர வேண்டி ஏற்பட்டுள்ளது.

இந்த சபையில் அரசாங்கத்திற்கு 116 ஆசனங்களும், எதிர்க்கட்சிக்கு 116 ஆசனங்களும் உள்ளன. இருப்பினும், புதிய அரசாங்கத்தில் 96 உறுப்பினர்கள் உள்ளனர். சபாநாயகர் தவிர 128 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளனர். இதற்கேற்ப, 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்க்கட்சியின் பக்கத்தில் அமர அனுமதிக்கப்பட மாட்டார்கள். வெற்றிடமாக உள்ள 12 இடங்களை அரசாங்கம் தரப்பில் ஒதுக்க வேண்டியிருந்தது என்று பாராளுமன்ற சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ கூறினார்.

ஆளுங்கட்சியின் கடைசி வரிசையில் அமர்பவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் பன்னிரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களே எனவும் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

Read more...

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை மூடிமறைக்க பொலிஸார் ஆடிய நாடகம் அம்பலத்திற்கு வந்துள்ளது!

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு முன்னர் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸ் நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக உயர் போலிஸ் அதிகாரிகள் அளித்த அறிக்கைகள் முற்றிலும் பொய்யானவை என்று ஜனாதிபதி விசாரணை ஆணையம் உறுதிகூறியுள்ளது.

இவ்வாறு சோடித்துச் சொல்வதற்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு மூத்த பொலிஸ் அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், கோட்டாஹேன பொலிஸார் இந்தச் செய்தியை குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற தினத்திற்குப் பின்னர் புதிதாக பொலிஸ் புத்தகத்தில் இணைத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஆணையத்தில் தெரிய வந்துள்ளது.

Read more...

ஊடகவியலாளர்கள் அதிகாரிகளுக்கு ஏதிராக செயற்பட்டால் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டிவரும் கருணா அம்மான்

மட்டக்களப்பில் சில அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அநாகரிகமாக செயற்படுகின்றனர். அதே நேரத்தில் ஊடகவியலாளர்கள் அதிகாரிகளுக்கு எதிராக செயற்படுவார்களாக இருந்தால் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டிய நிலை ஏற்படும் என கருணா அம்மான் தெரிவித்துள்ளார். இன்று மட்டக்களப்பு மாங்காட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்.

நல்லாட்சி என்று கூறிக்கொண்டு வந்த அரசாங்கத்தில் கடைசி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஊடகவியலாளர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அநாகரிகமான செயலை அதிகாரிகள் செய்துள்ளனர். என்னுடைய பல தவறுகளையும் ஊடகவியலாளர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர். அதனை நான் வரவேற்றுள்ளேன். ஊடகவியலாளர்கள் தவறுகளை சுட்டிக் காட்டும் போது அதனை நாம் திருத்திக் கொள்ளலாம். அதை விட ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் அனைவருக்கும் தேவை ஏனென்றால் பல அதிகாரிகளின் ஊழல்களை தட்டிக் கேட்பதற்கு ஊடகவியலாளர்கள் தேவை.

எனவே ஊடகவியலாளர்களை தண்டிப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும். இதைவிட ஊடகவியலாளர்கள் தன்னிச்சையாக செயற்பட்டு அதிகாரிகளுக்கு எதிராக செயற்பட்டார்கள் என்றால் பல அதிகாரிகள் உள்ளே செல்லவேண்டி வரும். ஏனென்றால் அதிகாரிகள் மீது அவ்வளவு பெரிய பிரச்சினைகள் உண்டு. எனவே ஊடகவியலாளர்களை தன்டிப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்பதை இந்த இடத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.

Read more...

வெள்ளை வேனின் ஆட்களை கடத்தி முதலைக்கு போட்ட இருவரும் சிஐடி யினரால் கைது!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடத்தப்பட்ட நபர்களை கொன்றுவிட்டு அவர்களது உடலங்களை மொனராகலை பிரதேசத்திலுள்ள குளமொன்றின் முதலைகளுக்கு தீனிக்கு வீசியாதாக தெரிவித்திருந்தனர்.

ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் (நவம்பர் 10) டாக்டர் ராஜித சேனாரட்ண தலைமையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தங்களை குறித்த வெள்ளை வான்களின் சாரதிகள் என அறிமுகப்படுத்திய இருவரே மேற்குறிப்பிட்ட தகவலை பகிரங்கமாக தெரிவித்திருந்தனர்.

அவர்களில் ஒருவர் தான் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற கடத்தில்கள் கொள்ளைச் சம்பவங்களின்போது சாரதியாக செயற்பட்டதாக குறிப்பிட்டிருந்த அதே நேரம் ஒருவர் தானே வன்னியிலிருந்து புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தை கொண்டுவந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

மேற்படி வெளிப்படுத்தலானது உண்மைக்கு புறம்பான செய்தியென அப்போது நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குமுது பிரதீப் சஞ்ஜீவ பெரேரா என்பவர் மேற்கொண்டுள்ள முறைப்பாட்டின் பிரகாரம், மேற்படி இருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் நபர்கள் இருவரும் வஜிர அபேயவர்த்தன யாப்பாவின் அமைச்சில் சாரதிகளாக கடமைபுரிந்து வந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது

Read more...

பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதால் இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை ஒத்திவைக்க அரசு வேண்டுகோள்!

எதிர்வரும் மார்ச் மாதம் பாராளுமன்றம் கலைக்கப்படுவதால், இந்த ஆண்டு ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மாநாட்டில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை ஒத்திவைக்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையிடம் கேட்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகம் இலங்கை தொடர்பான தீர்மானத்தை மார்ச் மாதம் அதன் அமர்வில் பரிசீலிக்க உள்ளது. புலம்பெயர்ந்துள்ள புலிகள் ஏற்கனவே புதிய அரசாங்கத்தை குற்றம் சாட்ட திட்டமிட்டுள்ளதாக ஜெனீவாவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெனீவா தீர்மானத்தை மார்ச் மாத தொடக்கத்தில் சட்டமன்றம் கலைக்கும் வரை அரசாங்கத்தால் சட்டப்பூர்வமாக முடிவு செய்ய முடியாது என்பதால், அடுத்த அமர்வு வரை தீர்மானத்தை ஒத்திவைக்குமாறு அரசாங்கம் கோரும் என்று அரசாங்கத்தின் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

Read more...

ஐதேகாவிற்குள் முறுகல்.... சம்பந்தனோ சூட்சுமத்தில்...!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மேல் மாகாணத்தில் மூன்று மாவட்டங்களில் போட்டியிட தமிழ்த் தேசிய கூட்டணி முடிவு செய்துள்ளது.

பொதுத் தேர்தலில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் போட்டியிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போட்டியிடவுள்ள விடயம் தெரியவந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் உட்பூசல் காரணமாக இந்த மாவட்டங்களில் போட்டியிடுவதன் மூலம் கட்சி பயனடையலாம் என்று கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஆயினும், கொழும்பிலிருந்து இயங்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களுள் ஒருவரான மனோ கணேசன் இந்த முடிவை கடுமையாக எதிர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கிடைத்த தகவல்களின்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புகழ்பெற்ற ஜனாதிபதி ஆலோசகர் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.

தமிழ் தேசியக் கூட்டணி, சுகாதார காரணங்களுக்காக சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று வடக்கிலிருந்து நம்பகத்தன்மை மிகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இது கட்சிக்குள் ஒரு பனிப்போரை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்துள்ளது.

Read more...

மணல் கொள்ளையை தடுக்குமாறு ஜனாதிபதிக்கு சிறிதரன் எழுதிய கடிதம் சாத்தான் வேதம் ஓதுவது போன்றது

மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸவுக்கு கடிதம் எழுதியது என்பது சாத்தான் வேதம் ஓதுவது போன்றது என கிளிநொச்சி மாவட்ட மக்களில் பலர் தெரிவித்துள்ளனர்.

ஏனெனில் கிளிநொச்சியில் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றவர்களில் பலர் கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசு கட்சியின் பிரதேச மற்றும் கிராம மட்ட அமைப்பாளர்கள் செயற்பாட்டாளர்கள் எனவும் அவ்வாறானவர்களே தற்போதும் கிளிநொச்சியின் பல இடங்களில் சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுப்பட்டு வருகின்றனர். எனவே இவர்களை தன்னோடு வைத்துக்கொண்டு சிறிதரன் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவது என்பது சாத்தான் வேதம் ஒதுவது போன்றதே எனவும். தெரிவித்துள்ள பொது மக்கள் ஜனாதிபதியே சிறிதரனுக்கு கடிதம் எழுத வேண்டும் மணல் கொள்ளையில் ஈடுப்படும் தங்களுடைய கட்சிக்காரர்களை கட்டுப்படுத்தி கிளிநொச்சி காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு எனவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பளை பிரதேச சபைக்கு தமிழரசுக் கட்சியியில் போட்டியிட்ட கிளாலியைச் சேர்ந்த மணல் மணியம் என்பவர். இவரே கிளாலியில் அதிகளவு சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டு வருகின்ற ஓருவர். இதனைத் தவிர கண்டாவளை பெரியகுளம் பிரதேசத்தின் கட்சியின் அமைப்பாளர் தீபன் என்பவர் பாரியளவு மணல் கொள்ளையில் ஈடுபடுகின்ற ஒருவர். இப்பொழுது சிறிதரன் தன்னுடன் அவரை எல்லா நிகழ்வுகளுக்கும் அழைத்துச் செல்கின்றார். கட்சியின் அலுவலகத்தில் இன்று 14-12-2019 இடம்பெற்ற அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு நிகழ்வில் தீபன் முன்னின்று ஏற்பாடுகளை செய்திருந்தார்
.
அத்தோடு திருவையாறு பிரதேச கட்சியின் அமைப்பாளர் ஜனா என்பவர் மீள்குடியேற்றக் காலம் தொடக்கம் இன்றுவரை சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டுவரும் நபர். இதனைத் தவிர கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ஜீவன் இப்படி மணல் கொள்ளையில் ஈடுப்படுகின்றவர்களை தனனோடு வைத்துக்கொண்டு சிறிதரன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவது வேடிக்கையானது எனவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற சிறிதரன் தன்னோடு இருக்கின்றவர்களை சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படாது தடுத்து நிறுத்தினாலேயே கிளிநொச்சியில் பெருமளவு மணல் கொள்ளையை தடுக்க முடியும் எனவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

Read more...

Friday, December 13, 2019

வழக்குகள் தொடர்பில் தவல்களை வெளியிடுவதை தவிர்ப்பீர். உறுப்பினர்களுக்கு சட்டத்தரணிகள் சங்கம்

விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள வழக்குகள் மற்றும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பில் அறிவிப்புகள் வெளியிடுவதை தவிர்க்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு அதன் உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமது உறுப்பினர்கள் வெவ்வேறு வழக்குகள் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துகள் குறித்து அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடையாத வழக்குகளுடன் தொடர்புடைய சட்டத்தரணிகள் மற்றும் அரச சட்டத்தரணிகள் தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து தாம் கவலையடைவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில் தர்மத்திற்கு கட்டுப்பட்டு செயற்படுமாறும் தொழில் கௌரவத்தை பாதுகாக்குமாறும் சட்டத்தரணிகள் சங்கம் தமது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் தொடருமாயின் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதில் தாம் பின்வாங்கப் போவதில்லை எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Read more...

அநீதிக்கெதிராக குரல்கொடுத்தால் நானாக இருந்தாலும் உன்னை கொல்வேன் என்ற நீதியின் காவலன் இவர்தான்.

வன்செயல் மற்றும் குற்றங்களின் பயத்திலிருந்து விடுபட்டு வாழ்வதற்கான சூழலை பிரஜைகளுக்கு உருவாக்கிக்கொடுப்பதே இலங்கை பொலிஸாரின் நோக்கம் என அத்திணைக்களம் கூறுகின்றது. மேலும் நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவும், குற்றங்கள் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளை தடுக்கவும் இலங்கை பொலிஸார் கடமைப்பட்டுள்ளதுடன் அக்கருமத்தை தம்மால் மேற்கொள்ள முடியுமென அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அநீதிக்கு எதிராக குரலெழுப்பிய நபர் ஒருவருக்கு இலங்கை பொலிஸ் நிலையத்தினுள் வைத்து உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவமானது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தினுள் வைத்து அப்பொலிஸ் நிலையத்திற்கான „குற்றத் தடுப்பு பிரிவின் தலைமை அதிகாரி" உப பொலிஸ் பரிசோதகர் யசிந்தன் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :

தன்னை இலங்கை புலனாய்வுத்துறை எனக்காட்டிக்கொள்ளும் பாயிஸ் என்பவனால் வன்னி பிரதேசமெங்கும் காணப்படும் அரச மற்றும் தனியார் காணிகள் மோசடியான முறையில் கையகப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருகின்றது. குறித்த நபர் தன்னை அரசியல் பிரபலங்களின் நெருங்கிய நபர் என்றும் புலனாய்வுத் துறையினைச் சேர்ந்தவன் என்றும் காட்டிக்கொள்ளுகின்ற காரணத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அவனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அச்சம் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த தினேஸ் என அழைக்கப்படும் இளைஞன், மோசடிக்காரனான பாயிஸ் தொடர்பில் பாதிக்கப்படும் மக்கள் அச்சம் கொள்ளவேண்டிய அவசியமில்லை என்றும் அவனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மக்களுக்கு விழிப்பூட்டியுள்ளார்.

மேற்படி இளைஞனின் செயற்பாட்டில் ஆத்திரமடைந்த மோசடிக்காரனான பாயிஸ் என்பவன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளான். முறைப்பாட்டின் நிமிர்த்தம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட தினேஸ் குற்றப் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி முன்னிலையில் அச்சுறுத்தப்பட்டுள்ளார். எழுதுதை நிறுத்தாவிட்டால் கைகளை வெட்டி அகற்றுவேன் என்றும் சில சமயங்களில் கழுத்தையே வெட்டி கொலை செய்யவும் முடியுமென்றும் அவன் கூறியுள்ளான்.

பொலிஸ் நிலையத்தில் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி முன்னர் அவன் அச்சுறுத்தப்பட்டபோது, பாதிக்கப்பட்டநபர் பொலிஸ் நிலையத்தில் வைத்தே என்னை கொல்வதாக அச்சுறுத்துகின்றான் என பொறுப்பதிகாரியான உப பொலிஸ் பரிசோதகர் யசிந்தனிடம் முறையிட்டபோது, அநாவசியமான நடவடிக்கைகள் மேற்கொண்டால் நானாகவிருந்தாலும் அவ்வாறுதான் செய்வேன் என கொலை அச்சுறுத்தல் விடுப்பவனை உற்சாகப்படுத்துகின்றார் „குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி' உப பொலிஸ் பரிசோதகர் யசிந்தன். மோசடிக்கு எதிராக குரல்கொடுத்தல் „அநாவசியமான செயற்பாடு' என இலங்கை குற்றவியல் கோவையில் எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் அந்த „அநாவசியமான செயற்பாட்டுக்கு தண்டனை கையை வெட்டுதல் அல்லது கழுத்தை வெட்டுதல் என இலங்கை தட்டனைச் சட்டக்கோவையில் எத்தனையாம் சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் „ குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி' விளக்கவேண்டுமென இலங்கைநெட் கோருகின்றது.

அத்துடன் கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி யசிந்தன் கொலை அச்சுறுத்தலுக்கு உடந்தையாக இருந்துள்ளதுடன் குற்றமொன்றை தடுப்பதற்கு அவர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, தினேஸ் மீது விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தலுக்கு உடந்தையாக செயற்பட்டார் மற்றும் கடமையை நேர்மையாகவும் வினைத்திறனுடனும் பக்கசார்பற்றும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் உப பொலிஸ் பரிசோதகர் யசிந்தன் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பொலிஸ் தலைமையகத்தை இலங்கைநெட் வேண்டுகின்றது.

கொலை அச்சுறுத்தல் பொலிஸ் நிலைத்தினுள் வைத்து விடுக்கப்படும் மற்றும் அதற்கு உடந்தையாக குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி செயற்படுவதை நிரூபிக்கும் ஒலிப்பதிவு.







Read more...

LLRC பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு மஹிந்தவுக்கு ஐ.நா மீண்டும் அழுத்தம்!

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான அழுத்தத்தை அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபை, பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் வழங்கியுள்ளது.

ஐ.நாவின் இலங்கைக்கான இணைப்பாளரான ஹனா சிங்கர், பிரதமர் மஹிந்த ராஜபக்சவை நேற்று மாலை அலரிமாளிகைக்கு சென்று சந்தித்துக் கலந்துரையாடினார்.

விசேடமாக ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்து அடுத்த வருடத்தில் இலங்கை 65ஆவது ஆண்டை கொண்டாடவுள்ளது.

அதேசமயம் ஐ.நா சபை தனது 70ஆவது நிறைவாண்டை அடுத்தவருடம் கொண்டாடவுள்ளது. இதனிடையே இலங்கை – ஐ.நா உறவுகளை மேலும் வலுப்படுத்துவது பற்றி இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, போர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யவும், பரிந்துரைகளை முன்வைக்க அறிக்கை தயாரிக்க அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்தும் இந்த சந்திப்பில் ஐ.நா நினைவூட்டியது.

குறிப்பாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளவற்றை செய்வதுபோல், அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் அமுல்படுத்த தவறவேண்டாம் என்பதை ஐ.நாவின் இலங்கைக்கான இணைப்பாளர் பிரதமரிடம் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

கிழக்கிலுள்ள அனைத்து மக்களினதும் உரிமைகளைப் பாதுகாக்கவே நான் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளேன். - ஆளுநர் அநுராதா

கிழக்கில் உள்ள அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்காகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்னை ஆளுநராக நியமித்தார் என கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் கூறினார்.

கிழக்கு மாகாண ஆளுநராக நேற்று தமது அலுவலகத்தில் கடமையேற்கும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

மாகாண ஆளுநர் பதவியேற்பதற்கு இணையாக கிழக்கு உரிமைகள் பாதுகாப்பு அமைப்பால் மரம் நடும் திட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேசிய அமைப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் சாகித்யசூரி குணதாச அமரசேகர, ரியர் அட்மிரல் சரத் வீரசேக்கர, தேசபக்தி தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார, டாக்டர் நிமல் கருணாசிறி மற்றும் டாக்டர் நலிந்த கஸ்தூரி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com