Friday, November 29, 2019

சுவிஸ் குற்றச்சாட்டுக்கு பிரதமரின் பதில்...

சுவிட்சர்லாந்து தூதுவராலய பெண் அதிகாரியொருவரைக் கடத்திச் சென்றமை தொடர்பில் வெளிவந்துள்ள செய்தி தொடர்பிலான விசாரணைகளுக்கு தூதுவராலயத்தின் எந்தவித ஒத்தாசையும் இதுவரை கிடைக்கவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

அதேவேளை இன்று நீர் வழங்கல் வசதிகள் அமைச்சரான வாசுதேவ நாணயக்கார இன்று (29) தனது அமைச்சில் அமைச்சுப் பொறுப்புக்களைக் கையேற்றவேளை, அரசாங்கத்தை சிரமத்திற்குள்ளாக்குவதற்காக செய்யப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட அமைப்பினரால் செய்யப்பட்டுள்ள மிக மோசமான செயற்பாடு இதுவென விவரித்தார்.

நீர் வழங்கள் வசதிகள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற வாசுதேவ நாணயக்கார இன்று அவ்வமைச்சில் தனது கடமைகளை ஆரம்பித்தார்.

அவ்வமைச்சின் அமைச்சராகக் கடமையாற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் அந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

Read more...

ஐதேக வசமான பகுதிகள் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன வசமாகும்!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியிடம் மீதமாகவுள்ள மாகாண சபைகளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசமாகும் என உறுதியாகச் சொல்ல முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கலாச்சக்கரம் பற்றி தான் இதற்கு முன்னரேயே தெரிந்து வைத்ததாகக் குறிப்பிடும் விஜயதாச, இனி ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியைக் கட்டியெழுப்ப எவராலும் இயலாது எனவும் குறிப்பிட்டார்.

கட்சித் தலைமைப் பொறுப்பைத் தனதாக்கிக் கொள்வதற்கு ஆளுக்கு ஆள் உள்ளே குத்திக்கொள்கிறார்கள் எனவும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை ஏனையோர் பெற முயற்சிப்பது நடக்கவியலாத காரியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Read more...

கள்வருக்கு பயந்து பொலிஸார் நாட்டை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஹந்துன்நெத்தி.

உறுதியான அரசாங்கம் ஒன்றினை உருவாக்க முன்னரே இடைக்கால அரசாங்கத்தில் அச்சுறுத்தல், அடக்குமுறை மற்றும் தான்தோன்றித்தனமாக செயற்படும் அரசாங்கம் உறுதியான ஆட்சி ஒன்றினை உருவாக்கிக்கொண்டால் நிலைமை என்னவாகும் என ராஜபக்ஷக்களை ஆதரித்த மக்களே சிந்தித்துப்பாருங்கள் என தெரிவிக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி கள்ளர்களுக்கு பயந்து பொலிசார் நாட்டைவிட்டு வெளியேறும் நிலைமை உருவாகியுள்ளது என்றார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

ஊடகவியலாளர்களை அச்சுறுத்தல் கலாசாரம் மீண்டும் தலைதூக்கிவிட்டது.

தேர்தலுக்கு முன்னர் இருந்தே நாம் இந்த காரணிகள் குறித்து அதிகமாகவே தெளிவுபடுத்தியுள்ளோம். தொடர்ச்சியாக மக்களுக்கு கூறினோம், இன்று அது நடக்க ஆரம்பித்துவிட்டது.

இப்போது உருவாகும் இந்த சூழல் மிகவும் மோசமான நிலையில் முடியும். தமக்கு எதிராக எழும் குரல்களுக்கு முகங்கொடுக்க முடியாத நிலையில் குறித்த நபர்களை அச்சுறுத்தி, சாட்சியங்களை திரிபுபடுத்தி நீதிமன்றத்தின் மீது அழுத்தம் பிரயோகித்து குற்றவாளிகள் தப்பிக்கும் நடவடிக்கையேயாகும்.

பல குற்றங்கள் குறித்து ஆராய ஆரம்பித்த நபர்கள் மீதான அச்சுறுத்தல் காரணமாக முக்கிய அதிகாரிகள் நாட்டினை விட்டு வெளியேற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

மத்திய வங்கி ஊழலில் குற்றவாளிகள் என கூறிவந்த ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயக்க ஆகியோர் சுதந்திரமாக இன்னமும் நடமாடுகின்றனர்.

இவர்களை காப்பாற்றுகின்றோம் என எம்மையும் விமர்சித்தவர்கள் ஆட்சிக்கு வந்ததும் ஏன் ரணில், ரவி ஆகியோருக்கு எதிராக விசாரணைகளை நடத்தவில்லை. ஆனால் விசாரணைகளை நடத்திய அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை எடுக்கின்றனர்.

இன்று கள்ளர்களுக்கு பயந்து பொலிசார் நாட்டைவிட்டு வெளியேறும் நிலைமை உருவாகியுள்ளது.

அரசாங்கம் அவ்வப்போது என்ன நினைக்கின்றதோ அதை செய்கின்றனர்.

இது நகைப்புக்குரிய விடயமாகும். அமைச்சரவை நியமனங்களை பார்த்தாலும், மூன்று மாதகால குறுகிய காலத்தில் அளவுக்கு அதிகமான நியமனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

முதல்நாள் இரவு பிரதியமைச்சர்களாக இருந்தவர்கள் அடுத்த நாள் காலையில் இராஜாங்க அமைச்சர்களாக மாறியுள்ளனர். இடைக்கால அமைச்சரவையிலேயே இந்த நிலைமை என்றால் ஆட்சியை கையில் எடுத்தால் நிலைமைகள் என்னவாகும். மக்களிடமே நாம் இந்த கேள்வியை கேட்கிறோம். மக்கள்தான் இதனை விளங்கிக்கொள்ள வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

(ஆர்.யசி).

Read more...

லண்டனின் பதட்டம், பயங்கரவாத தாக்குதலா? பாலம் மூடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் பிரபலமான லண்டன் பாலம் பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதுடன், பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் பொலிஸார் பிரதேசத்தை தங்களது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளனர்.

பாலத்திற்கு அருகாமையில் ஒருவர் கத்தியினால் குத்தி தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தபோது மக்களால் சுற்றிவளைக்கப்பட்டு மடக்கப்பட்டார். சுமார் 5 நிமிடங்களில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் மக்களை விலத்தி சந்தேகநபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவனை கைது செய்துள்ளனர்.

இது ஒரு பயங்கரவாத தாக்குதலா என்ற கோணத்தில் எம்ஐ 5 மற்றும் 6 னர் தேடுதல்களை நடாத்திவருகின்றனர்.

இச்சம்பவத்தில் 5 வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பொலிஸாருக்கு பிரித்தானிய பிரதமர் மற்றும் அமைச்சர்கள் அரசியல் பிரபலங்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

விசாரணைகள் தொடர்கின்றது.




Read more...

சிறிசேனவை வீட்டை வீட்டு விரட்ட திட்டம்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து விரட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

2015 ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரங்களின்போது தான் ஜனாதிபதியானால் ஜனாதிபதி மாளிகையில் குடியிருக்க மாட்டேன் என மைத்திரிபால சிறிசேன மக்களுக்கு உறுதி வழங்கியிருந்தார். அதன் பிரகாரம் ஜனாதிபதி மாளிகையில் குடியேறாத அவர், கொழும்பிலுள்ள ஜெய்ட வீதியில் வசித்துவந்தார். அவ்விடத்திலுள்ள மூன்று வீடுகளை இணைத்து 800 கோடி அரச செலவில் நவீனமயப்படுத்தியே சிறிசேன அவ்வீட்டில் வசித்துவந்தார்.

இலங்கையில் ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம், காரியாலயம், அதற்கான ஊழியர்கள் குழு, பாதுகாப்பு மற்றும் இதர செலவுகள் என பல வரப்பிரசாதங்கள் உண்டு. இந்நிலையில் தான் ஓய்வு பெற்றதன் பின்னர் மேற்படி இல்லத்தையே தனது வாசஸ்தலமாக பயன்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் கடந்த அரசாங்கத்தில் இறுதியாக இடம்பெற்ற அமைச்சரவை ஒன்றுகூடலின்போது, மேற்படி இல்லத்தினை மைத்திரிபால சிறிசேன தனது ஓய்வுக்காலத்தில் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக பயன்படுத்துவதற்கான அனுமதியை முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர வாய்மூலமாக கோரியுள்ளார். அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதும் புதிய அரசாங்கம் அவரை அவ்வீட்டிலிருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

Read more...

கோட்டா – அஜித் டோவால் சந்திப்பு!

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இந்திய தேசிய பாதுகாப்புக்கான ஆலோசகர் அஜித் டோவலை சந்தித்துள்ளார். இதன்போது இந்திய பாதுகாப்பு விகவாரங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றது என்பது தொடர்பாக அஜித் டோவால் ஜனாதிபதிக்கு விரிவாக விளக்கியதாக அறியமுடிகின்றது.

இலங்கையின் பாதுகாப்பு விடயங்களை மேம்படுத்துவதற்காக இந்தியா 50 மில்லியன் டொலர் அன்பளிப்பு செய்யமுன்வந்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் பாதுகாப்பு தொடர்பான சில நவீன தொழில்நுட்பங்களை இலங்கைக்கு வழங்கவும் இந்திய உறுதியளித்துள்ளது.



Read more...

சிஐடி சிறிகொத்தவிலிருந்து இயக்கப்பட்டதாம்! ஹக்கீம் - றிசார்டை கைது செய்ய கோருகின்றார் தேரர்.

கடந்த காலங்களில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து படையினருக்கும், பிக்குமார்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுத்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவே வழிநடத்தியதாக ராவணா பலய அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி நிஷாந்த டி சில்வா தற்போது வெளிநாட்டிற்குச் தப்பிச்சென்றுள்ள நிலையில், தப்பிச்செல்லாத முன்னாள் அமைச்சர்கள் ரிசாட் பதியூதீன், ஹக்கீம் உள்ளிட்டவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு ராவணா பலய அமைப்பின் இணைப்பாளரான இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் வலியுறுத்தியுள்ளார்.

புதிய இடைக்கால அமைச்சரவைக்கான இராஜாங்க அமைச்சர்கள் கடந்த புதன்கிழமை நியமிக்கப்பட்டனர்.

இதில் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்ற அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினரான ஜயந்த சமரவீர இன்றைய தினம் தனது அமைச்சில் கடமைகளை ஆரம்பித்தார்.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சருக்கு ஆசி வழங்குவதற்காக பௌத்த தலைமை பிக்குகள் அழைக்கப்பட்டிருந்ததோடு , கடும்போக்குவாத பௌத்த அமைப்புக்களில் ஒன்றாகக் கருதப்படும் ராவணா பலய அமைப்பின் இணைப்பாளரான இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரரும் கலந்துகொண்டிருந்தார்.

இதற்கு முன்னர் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பிலும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த சத்தாதிஸ்ஸ தேரர், உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், ஹிஸ்புல்லா போன்றவர்களைக் கைது செய்யுமாறு வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் இராஜாங்க அமைச்சருக்கு ஆசிகூறி உரையாற்றிய உரையின்போதும் இதனையே மீண்டும் வலியுறுத்தினார்.

Read more...

இலங்கையில் சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு விட்ட துறைமுக ஒப்பந்தம் ரத்து!

இலங்கை ஹம்பந்தோடா துறைமுகத்தை சீனாவின் தனியார் நிறுவனத்துக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கியுள்ளது. முன்னாள் அதிபர் சிறிசேனா அரசு இதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டில் அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்ரசிங்கே அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த துறைமுகத்தை போர்க்கப்பல் நிறுத்தும் தளமாக சீனா மாற்றும். இதனால் இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. அதை சீனா மறுத்தது.

இந்தியா - ஐரோப்பியா கண்டத்தை இணைக்கும் பாலமாக இத்துறைமுகம் திகழும். இதன்மூலம் வர்த்தகம் மேம்படும். இலங்கையின் பொருளாதாரம் மேம்படும் என விளக்கம் அளித்தது.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக இத்துறைமுகம் சீனாவுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அங்கு ராணுவ தளம் அமைக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் இலங்கை அரசு கூறி வந்தது.

சமீபத்தில் இலங்கை அதிபர் தேர்தல் நடந்தது. அதில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சே இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபரானால் ஹம்பந்தோடா துறைமுக குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என உறுதி அளித்து இருந்தார்.

அதன்படி இலங்கையின் அதிபராக பொறுப்பேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே அரசு ஹம்பந்தோடா துறைமுக குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.

இத்தகவலை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் பொருளாதார ஆலோசகர் அஜித் நிவார்ட் கபிரால் தெரிவித்துள்ளார். இவர் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் கவர்னராக இருந்தார்.

கொழும்பு புறநகரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது, ஹம்பந்தோடா துறைமுக 99 ஆண்டு குத்தகை திட்டத்தை திரும்ப பெற இருக்கிறோம் என்றார்.

மகிந்த ராஜபக்சே கடந்த 10 ஆண்டுகளாக இலங்கை அதிபராக பதவி வகித்தார். அவரது அரசில் கோத்தபய ராஜபக்சே ராணுவ மந்திரி ஆக இருந்தார். அப்போது இவர்களது அரசு சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டது. சீனாவுக்கு பல்வேறு திட்ட பணிகள் வழங்கப்பட்டன.

தற்போது மீண்டும் ராஜபக்சே குடும்பத்தினரின் ஆட்சி ஏற்பட்ட நிலையில் சீனாவின் ஆதிக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோத்தபய தனது அணுகுமுறையில் மாற்றம் கொண்டு வந்துள்ளார். அதிபராக பொறுப்பேற்றதும் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளார். ஹம்பந்தோடா துறைமுக குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியா - இலங்கை இடையேயான உறவு மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி மாலைமலர்..

Read more...

Thursday, November 28, 2019

எக்னலிகொட வழக்கிலிருந்து மூன்று பேர் இன்று விடுதலை!

பிரபல கேலிச்சித்திர ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் இருந்து இராணுவப் புலனாய்வு அதிகாரியான பிரபோத சிறிவர்தன உட்பட மூன்று சந்தேக நபர்களை ஹோமாகம நீதவான் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இந்த வழக்கில் 9 சந்தேக நபர்களுக்கு நேற்றைய தினம் பிணை அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரையின் படி சந்தேக நபர்கள் 12 பேரில் மூன்று பேருக்கு இவ்வாறு இன்றைய தினம் விடுதலை வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய பிரதமரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கலமாகிய கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி சிரேஷ்ட கேலிச்சித்திர ஊடகவியலாளரான பிரகீத் எக்னலிகொட கடத்திச் செல்லப்பட்ட நிலையில் காணாமலாக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த வழக்கு விசாரணை கொழும்பின் புறநகரான ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இராணுவப் படையின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 12 பேர் சந்தேக நபர்களான இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 09 பேருக்கு நேற்றையதினம் பிணை அனுமதி வழங்கப்பட்டது.

இதன்படி சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இராணுவப் புலுனாய்வாளர்களுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையிலேயே ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் எக்னலிகொடவின் கடத்தல் வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது.

இதன்போது முன்னிலையாகியிருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு இணங்க, வழக்கில் இரண்டாவது சந்தேக நபரான இராணுவத்தின் கிழக்கு புலனாய்வுப் பிரிவின் இரண்டாவது கட்டளை அதிகாரியான லெப்டினன் கேர்ணல் பிரபோத சிறிவர்தன, 10ஆவது மற்றும் 12ஆவது சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு பரிந்துரைத்திருப்பதாக மன்றில் தெரிவித்தனர்.

இதற்கமைய குறித்த சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.

எவ்வாறாயினும் இந்த வழக்கில் பிணை வழங்கப்பட்ட 09 சந்தேக நபர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Read more...

தொப்புள் கொடியுமில்லை ஒரு மண்ணாங்கட்டியுமில்லை. சினிமாவுக்குள் நுழைந்த புலிப்பணம்தான் காரணம். ஸ்ரான்லி ராஜன்

ஈழ பிரச்சினை இங்கு 1983ல் தான் நுழைந்தது, அதுவரை தொப்புள் கொடியுமில்லை ஒரு மண்ணாங்கட்டியுமில்லை. பொதுவாக ஈழ தமிழருக்கும் தமிழ்நாட்டு தமிழருக்கும் பொருந்தாது அவர்கள் மேம்போக்கு மனநிலை படைத்தவர்கள், சாதிய பாகுபாடும் உண்டு. இங்கிருந்து மலையகத்துக்கு சென்ற தமிழக தமிழர்கள் அதாவது தாழ்த்தபட்ட தமிழர்கள் அவர்களுக்கு இன்றும் உவப்பானர்கள் அல்ல‌.

பிரபாகரனின் ஈழ வரைபடத்தில் மலையகம் கிடையாது, அந்த 1957 மலையக மக்களை திருப்பி அனுப்பியதில் தமிழக கோபம் ஈழதமிழர் மேல் இருந்தது, அண்ணா கடல் திடல் என பேசிகொண்டிருந்தது அப்பொழுதுதான்

இம்மாதிரி ஒரு நிலை இருந்தது ஆனால் ராமநாதபுரம் டூ ஈழம் அப்பொழுதே கடத்தலுக்கு பிரசித்தி. குட்டிமணி தங்கதுரை கடத்தல்கார கேங்க்ஸ்டர்கள், அவர்களின் சீட கோடி பிரபாகரன்

1975க்கு பின் ஆயுத போராட்டம் வந்தபொழுது இங்கிருந்து அதாவது சிவகாசிக்கு வந்து பிரபாகரன் வெடிபொருள் வாங்கி சென்ற காலமும் உண்டு, குட்டிமணி பிரபாகரன் கோஷ்டி இலங்கையில் வங்கி கொள்ளை அடிப்பதும் போலீஸ் தேடும்பொழுது தமிழகத்துக்கு தப்புவதுமாக காட்சிகள் நடந்தன‌

இதில் 1983 கலவரம் திருப்புமுனை அப்பொழுது அகதிகள் வந்தார்கள், இந்திரா நரசிம்மராவை அனுப்பி நேரடியாக கொழும்பில் தலையிட்டார்

அப்பொழுதுதான் இந்திரா திட்டபடி அமிர்தலிங்கம் தமிழகம் வந்தார், ஏற்கனவே திராவிட நாடு அடைந்து சமத்துவ சமதர்ம பூமி அமைந்து பிராமணரை ஒழித்து கட்டி தமிழை வாழவைத்துகொண்டிருந்த அதாவது ஒரு மண்ணாங்கட்டி அரசியலும் இல்லாமல் இருவருமே ஊழலில் திழைத்துகொண்டிருந்த, கருணாநிதியும் ராம்சந்தரும் ஊழல் பேர்வழி என இந்திராவுக்கு அடங்கி இருந்த காலத்தில் வந்தார் அமிர்தலிங்கம்.

கலைஞர் போஸ்டர் ஓட்டினார், ஆனால் ராம்சந்தர் கார் அனுப்பி அமிர்தலிங்கத்தை ஏர்போர்ட்டிலே தூக்கினார்.

இதிலிருந்துதுதான் 1983ல் இருந்துதான் ஈழ அரசியல் இங்கு தொடங்கியது, பயிற்சிகாக் 4 கோஷ்டி இந்தியா வந்தது தமிழகம் மற்றும் டேராடூனில் பயிற்சி கொடுக்கபட்டது, இலங்கை திரும்பியதும் மற்ற கோஷ்டிகளை ஒழித்துவிட்டு பிரபாகரன் ஏக போக சக்கரவர்த்தியானான்

இதில் இன்னும் ஏராளம் வரும் சுருக்கமாக சொன்னால் பிரபாகரனை அமெரிக்கா வளைத்துபோட்டு ஆட்டத்தை ஆரம்பித்தது.

அமெரிக்கா என்றால் யாரெல்லாம் வருவார்கள்? தமிழக அல்ட்ராசிட்டிஸ் எல்லாம் அமெரிக்க அடிமை அல்லவா? முதலில் ராமசந்திரனும் பிரபாகரனும் கோர்க்கபட்டார்கள் ஒரு கட்டத்தில் ராம்சந்தர் நழுவினர் பின் மறைந்தார்.

அதன் பின் முரசொலிமாறன் தோளில் கைபோட்ட புலிகள் திமுகவின் நண்பர்களாயினர், வழிகாட்டல் எல்லாம் மேற்குலக சக்தி.

பிரபாகரன் இந்தியாவினை எதிர்க்கின்றார், திமுகவும் டெல்லியினை எதிர்க்கின்றது ஆக தனி தமிழ்நாடு அகண்ட தமிழ்நாடாக மலரட்டும் என்ற கோணமெல்லாம் இதில்தான் வந்தது.

இதற்கு ஒரு செக் வைக்கவும் திரிகோணமலை இந்திய வசமாகவும் இந்திய ராணுவம் அனுப்பபட்டது அதை சிங்கள அமெரிக்க துணையோடு புலிகள் விரட்டினர்.

வைகோ திமுகவில் இருந்ததாலும் இயல்பாகவே வைகோ இந்திய எதிரி என்பதாலும் புலிகளுக்கும் அவருக்கும் நல்ல புரிதல் இருந்தது இதில் திகவும் சேர்ந்தது.

அந்நாளைய தேசியவாதி பழ.நெடுமாறன் பின்பு இதில் இணைந்தது சோகம்.

சொந்த நாட்டு அமைதிபடையினையே தனக்காக எதிர்த்த கருணாநிதியும் தமிழகமும் தன்னை கைவிடாது என நம்பிய பிரபாகரன் ராஜிவ் கொலைக்கு துணிந்தான், அதன் பின்னும் தமிழகம் தன்னை காக்கும் என நம்பினான்.

ராஜிவ் கொலைக்கு பின் தமிழகத்தில் கலவரம் வரும் கஷ்மீர் போல் நெருக்கடி வரும் அதில் சிக்கும் இளைஞர்கள் ஆத்திரத்தில் புலி கோஷ்டியில் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அவனிடம் இருந்தது.

ஆனால் கருணாநிதி அதன் பின் விலகினார், வைகோ தனிகட்சி தொடங்கி ஆதரித்தார்.

ஜெயா எக்காலமும் புலி எதிரியே, அவரும் சோ ராமசாமியும் புலிகளின் ஹிட் லிஸ்டில் இருந்தனர், ராஜிவ் கொலைக்கு பின் புலிகள் பம்மியதால் தப்பினர்.

1997ல் ஆனையிறவில் புலி வென்று ஈழம் அமைக்க முயன்றபொழுது வாஜ்பாய் அரசு உறுமியது வைகோ திமுக எல்லாம் வாய் பொத்தியது, அதில் மிகவும் சோர்ந்தான் பிரபாகரன்.

அதன் பின் அவனின் திட்டம் தமிழ்க சினிமாக்காரர்களை வளைத்து தமிழ்நாட்டில் புதிய வகையில் ஆதரவு திரட்டுவதாக இருந்தது, 1999ல் அந்த முடிவுக்கு வந்தான்.

தமிழக சினிமா கோஷ்டிக்குள் புலி பணம் வந்தது, ஐரோப்பிய ஈழதமிழர் என புலிகள் சினிமா தயாரித்தனர், அந்த தொடர்பிலே தமிழக சினிமா கும்பல் காவடி எடுத்து இலங்கைக்கு ஓடியது.

மணிரத்னம் சுஜாதா கமல் ரஜினி தவிர எல்லா பயலும் சென்றதாக குறிப்பு உண்டு, நடிகைகள் யாரும் செல்லவில்லை. அவ்விஷயத்தில் பிரபாகரன் கவனமாய் இருந்தான்.

ராஜ்கிரண், மகேந்திரன் என பலரும் சென்றது அப்பொழுதுதான், சேரனை வளைத்துபோட புலிகள் முயன்றனர் லாவகமாக தப்பினார் அவர்.

இக்கோஷ்டியில் பாரதிராஜாவோடு சென்றான் சைமன், அவன் புலிகளுக்கு சினிமா பாடமே நடத்தினான், உண்மையில் அவன் யாரென்றே பிரபாகரனுக்கு தெரியாது.

பின் சில புலிகளை பிடித்து நான் தம்பி என அண்ணன் கதை எடுத்தேன், தமிழ்படம் எடுத்தேன் அண்ணனை பார்க்காவிட்டால் போகமாட்டேன் என ஒரே அடம்.

பின் பிரபாகரனை காண ஏற்பாடாயிற்று, அதுவும் புலி சீருடையில் பிரபாகரனுடன் நிற்பேன் என அடம் பிடித்திருக்கின்றார் அதெல்லாம் முடியாது என ஒரு படம் மட்டும் எடுத்தார்கள், சந்திப்பு நடந்தது 2 நிமிடமே.

இப்பொழுது சைமன் அள்ளிவிடும் கதை எல்லாம் அடிமட்ட புலிகளிடம் இவர் ஒட்டு கேட்டது.

அப்பொழுது சைமன் இன்னொரு காரியமும் செய்தான் அது புலிகள் உடையில் படம் எடுத்தது இன்னும் பல ஆயுதங்களுடன் போஸ் கொடுத்தது.

ஆனால் மேல்மட்ட புலிகள் அந்த படங்களை அனுமதிக்கவில்லை என்பதால் சோகமாக பிரபாகரன் படத்தோடு திரும்பினான்.

அத்தோடு 2006ல் யுத்தம் வெடிக்க ஈழகதவு மூடபட்டு புலிகளும் கொல்லபட்டனர்.

புலிகள் செத்தபின் புலிகளின் கோடிகணன்னான சொத்துக்கு சண்டை வந்தது அக்கோஷ்டிதான் பிரபாகரன் வந்தால் சொத்துக்களை தருவோம் என சொல்லிகொண்டிருப்பது அக்கோஷ்டிக்கு கணக்கு எழுத சீமான் மூலம் தமிழக எழுச்சிக்கான செலவு என எழுத சைமன் கிடைத்தான்.

அதன் பின் சைமனை சசிகலா கணவன் நடராஜன் வளைத்தார், திமுகவுக்கு எதிரான அம்பாக மாறினான் சைமன்.

பின் வைகுண்டராஜன் வளைத்து விஜயகாந்துக்கு எதிராக நிறுத்தினார், வடுக வந்தேறி கோஷம் அப்பொழுது வந்தது.

இந்திய உளவுதுறையும் அவனை சீண்டி விட்டு ஆடியது.

இப்படி யார் காசு கொடுக்கின்றார்களோ அவர்களுக்காக குரைத்த சைமன் இப்பொழுது யாருக்கு குலைப்பது என தெரியாமல் குழம்பி புலிகளை முனியாண்டி விலாஸ், மிலிட்டரி ஹோட்டல் அளவுக்கு சொல்லிகொண்டிருக்கின்றார்

இதனால் உச்ச மகிழ்ச்சியில் இருப்பது ராஜபக்சேவும் கோத்தபாயாவுமே, அவர்கள் விரும்பியது இதனைத்தான்.

ஆம் சீமானின் அல்ட்ராசிட்டியால் வைகோ, மணி, நெடுமாறன் போன்றவர்கள், பண்ருட்டி ராமசந்திரன் போல நேரடியாக புலியுடன் பழகியவர்கள் எல்லாம் அமைதியாய் ஓரமாய் நிற்கின்றார்கள் அல்லவா, இதுதான் சிங்களன் எதிர்பார்ப்பு

இந்திய உளவுதுறை எதிர்பார்ப்பும் அதுவே.....

Read more...

சாதாரண பயணிகள்போல் இந்தியா சென்றார் கோட்டா! எதிர்ப்பார்பாட்டம் நடத்திய வைகோ சிறையிலடைப்பு.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஜனாதிபதியை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதன் பிரகாரம் தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை இன்று இந்தியாநோக்கி ஆரம்பித்துள்ள கோத்தபாய ராஜபக்ச விஐபி (பிரமுகர்களுக்கான பாதை) களுக்கான பாதையை பயன்படுத்துவதற்கு பதிலாக சாதாரண பயணிகள் செல்லும் வரிசையில் சென்றுள்ளார்.

நாளை புதுடெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி யை சந்தித்து பேச நிகழ்சிநிரலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோத்தபாயவின் இந்திய வருகையை எதிர்த்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் வைகோ ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார். அவர் டில்லி ஜந்தர்மந்தர் பகுதியில் இன்று காலை முதல் மறுமலர்த்தி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தபோது அங்கு விரைந்த பொலிஸார் வைகோ வை கைது செய்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன..







Read more...

Wednesday, November 27, 2019

புதிய அரசின் புதிய இராஜாங்க அமைச்சர்கள் பற்றிய விபரம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான புதிய அரசின் 16 அமைச்சரவையின் அமைச்சர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிலையில், இன்று (27) 35 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 03 பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய(27) நியமனங்கள்:

இராஜாங்க அமைச்சர்கள்

1. சமல் ராஜபக்ஷ - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

2. வாசுதேவ நாணயக்கார - நீர்வளங்கள் வசதிகள் இராஜாங்க அமைச்சர்

3. காமினி லொக்குகே - நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

4. ஜோன் செனவிரட்ன - பொருளாதார மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

5. மஹிந்த சமரசிங்க - பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

6. சி.பி.ரத்நாயக்க - புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சர்

7. சுசில் பிரேம ஜயந்த - சர்வதேச ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர்

8. மஹிந்த யாப்பா அபேவர்தன - நீர்ப்பாசன கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

9. எஸ்.பி. திஸாநாயக்க - காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

10. லக்ஷமன் யாப்பா அபேவர்தன - தகவல் தொலைத் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்

11. சுசந்த புஞ்சிநிலமே - சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை இராஜாங்க அமைச்சர்

12. அநுர பிரியதர்ஷன யாப்பா - உள்ளக வர்த்தக மற்றும் பாவனையாளர் நலனோம்புகை இராஜாங்க அமைச்சர்

13. பிரியங்கர ஜயரத்ன - சுதேச வைத்திய சேவைகள் இராஜாங்க அமைச்சர்

14. ரஞ்சித் சியம்பலாப்பிடிய - கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர்

15. மஹிந்தானந்த அளுத்கமகே - மின்சக்தி இராஜாங்க அமைச்சர்

16. துமிந்த திசாநாயக்க - இளைஞர் விவகாரம் இராஜாங்க அமைச்சர்

17. தயாசிறி ஜயசேகர - கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

18. லசந்த அழகியவண்ண - அரச முகாமைத்துவ கணக்கீடு இராஜாங்க அமைச்சர்

19. கெஹெலிய ரம்புக்வெல்ல - முதலீட்டு மேம்பாடு இராஜாங்க அமைச்சர்

20. அருந்திக பெர்னாண்டோ - சுற்றுலா மேம்பாடு இராஜாங்க அமைச்சர்

22. திலங்க சுமதிபால - தொழில்நுட்ப புத்தாக்க இராஜாங்க அமைச்சர்

23 மொஹான் பிரியதர்ஷன - மனித உரிமைகள் சட்ட சீர்திருத்த இராஜாங்க அமைச்சர்

24. விஜித பேரகொட - மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

25. விதுர விக்கிரமநாயக்க - கமநல இராஜாங்க அமைச்சர்

26. செஹான் சேமசிங்க - அபிவிருத்தி வங்கிகள் மற்றும் கடன் திட்டங்கள் இராஜாங்க அமைச்சர்

27. கனக ஹேராத் - துறைமுக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

28. ரொஷான் ரணசிங்க - மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

29. ஜானக்க வக்கும்பர - ஏற்றுமதி கமத்தொழில் இராஜாங்க அமைச்சர்

30. தினும் அமுனுகம - போக்குவரத்து சேவைகள் மற்றும் முகாமைத்வதுவ இராஜாங்க அமைச்சர்

31.லொஹான் ரத்வத்த - நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

32. விமல் வீர திஸாநாயக்க - வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர்

33. ஜயந்த சமரவிக்ரம - சுற்றாடல் இராஜாங்க அமைச்சர்

34. சனத் நிஷாந்த பெரேரா - கடற்தொழில் மற்றும் நன்னீர் மீன்பிடி இராஜாங்க அமைச்சர்

35. தாரக்க பாலசூரிய - சமூக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

பிரதியமைச்சர்கள் :

1. நிமால் லான்ஷ - சமூக வலுவூட்டல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சர்

2. காஞ்சன விஜேசேகர - கடற்தொழில் நீரியல் வளமூலங்கள் பிரதியமைச்சர்

3. இந்திக அனுருத்த - பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர்

Read more...

சென்ற அரசாங்கக் காலத்தில் ஏற்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் பற்றி ஆராய ஆணைக்குழு!

சென்ற நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கல்களை ஆராய்வதற்காக மிக விரைவில் ஆணைக்குழு ஒன்றினை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி காேட்டாபய ராஜபக்ஷ இன்று ஒன்றுகூடிய அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் முன்னேற்றத்திக்காக தீர்மானங்களை எடுக்கும் அரச உத்தியோகத்தர்களைப் பாதுகாப்பதற்காகவும் சட்ட ஒழுங்குகளை மேற்கொள்ளவுள்ளதாகவும்அமைச்சரவையின் இணை ஊடகப் பேச்சாளர் ரமேஷ் பதிரண குறிப்பிட்டார்.

Read more...

அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளர்களாக இருவர்!

அமைச்சர்களான பன்துல குணவர்தன மற்றும் வைத்தியர் ரமேஷ் பதிரண இருவரும் அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசின் முதலாவது ஊடகச் சந்திப்பு இன்று பிற்பகல் 4 மணிக்கு அவர்கள் இருவரினதும் கலந்துகொள்ளலுடன், அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read more...

நம்பவைத்து கொலை செய்வதில் பிரபாகரனுக்கு நிகர் அவனே! ஸ்ரான்லி ராஜன்

கொஞ்சம் யோசித்தால் பிரபாகரன் எனும் நபரை போல நம்ப வைத்து கொன்றவர் யாருமே இல்லை. அவர் வாழ்வு முழுக்க அதுதான் காணகிடக்கின்றது. தனக்கு தேவையென்றால் ஒருவரை அணைப்பதும் , அவருக்கும் தனக்கும் பகை வந்தால் அதனை உறவாடிகொண்டே அவரை கொல்வதும் பிரபாகரனுக்கு கை வந்த கலை. யாரை தன்னை நம்ப வைப்பாரோ அவர்களை கொல்வதில் பிரபாகரனுக்கு நிகர் அவரே.

முதலில் ஈழதமிழக அரசியவாதிகளின் எடுபிடியானார், அவர்கள் துரோகி தூண்டிவிட்டதில் ஆல்பர்ட் துரையப்பா எனும் தமிழரை கொன்று கணக்கை தொடங்கினார். பின் அதே தமிழ்தலைவர்கள் பிரபாகரனை ஒதுக்க தொடங்கியபொழுது அவர்களையும் கொன்று கணக்கை சரியாக்கினார்.

செட்டி தனபாலசிங்கம் எனும் கொள்ளையனுடன் வங்கிகொள்ளை எல்லாம் அடித்தார், பின்பு செட்டி தன்னை பயன்படுத்தினான் என அவனுக்கும் சூடு.

குட்டிமணி குழு இவரை ஆரம்பத்தில் இருந்தே ஒருமாதிரி கையாண்டதால், அவர்கள் சிறையில் இருக்கும்பொழுதே பெரும் கலவரத்தை ஏற்படுத்தி மொத்தமாக சங்கு ஊதபட்டது.

இப்படித்தான் ஆரம்பத்தில் இருந்தே யாரையாவது தனக்கு பயன்படுத்திகொள்வதும், பின் அவர்களை கொல்வதுமாகவே அவரின் நடவடிக்கை இருந்தது

அவரிடமிருந்து உயிர்தப்பிய முதல் நபர் தமிழக ராமசந்திரன், ஆம் "முதலில் தம்பி நீ சண்டையிடு, இந்திய பயிற்சிக்கு வா" என சொன்னதும் அவர்தான், பின் ராஜிவ் தலையிட்டவுடன் ஒதுங்கியதும் அவர்தான்

ராமசந்திரன் மத்திய அரசுக்கு பயந்து ஒதுங்கியதும், பிரபாகரனை சென்னையில் காவலில் வைத்ததும் பிரபாகரனுகு சினமூட்டிய விஷயங்கள்

கொஞ்சகாலம் இருந்திருந்தால் குண்டு ராமசந்திரனுக்குத்தான் வெடித்திருக்கும்

(இந்தியா அவருக்கு தொடக்கதில் இருந்தே பிடிக்காத நாடு, இந்தியா தான் ஒதுங்க இடம் கொடுத்தால் போதும் மற்றபடி ஈழவிவகாரம் பற்றி பேசகூடாது என்பதுதான் அவர் கொள்கை

ஆனால் சிங்களனிடம் அவர் தோற்றுகொண்டிருந்த காலங்களில் சில பயிற்சிகளுக்காகவும், சக இயக்கங்கள் வளர்ந்துவிட கூடாது என்பதற்காகவும் வந்தார்.

சக இயக்கம் வளர்ந்துவிட்டால் அது தனக்கு ஆபத்து என்ற ஒற்றை காரணமே அவர் கடைசியாக வந்து வெறுப்பாக கலந்துகொள்ள காரணம்.

பின் மிக சரியாக சக இயக்கங்களை ஒழித்து, ராஜிவினை கொன்று இந்தியாவினையும் ஈழ விவகாரத்தில் இருந்து விரட்டினார்

மற்றபடி மக்களை பற்றியெல்லாம் அவர் ஒருகாலமும் கவலைபட்டதே இல்லை, ஈழ எதிர்காலம் , மக்களின் வருங்காலம் பற்றி எல்லாம் சிந்தனை இல்லை )

அதன் பின் அவரின் மனதில் இருந்த அந்த மிருகம் மறுபடி விழித்தது

அதன் பின் பிரேமதாசா அமைதிபடைக்கு எதிராக ஆயுதம் கொடுத்தபொழுது பிரேமதாச பிரபாகரன் நட்பு உருவானது, ஆனால் அமைதிபடை வெளியேறியதும் பிரேமதாசவிற்கும் ஒரு குண்டு

இதன்பின் இந்தியா, சிங்களம் என யாருமே பிரபாகரனை நம்ப தயாராக இல்லை, நம்பிய எல்லோரும் கையினை சுட்டுகொண்டு ஓடிவிட்டனர். அவரை நம்ப ஒருவரும் இல்லை

இவ்வளவிற்கும் வடமாராட்சியில் பிரபாகரன் உயிர்காத்தவர் ராஜிவ்காந்தி , பல இடங்களில் பிரபாகரன் உயிரை காத்தவர் மாத்தையா, அமைதிபடை காலங்களில் ஆயுதமாக கொடுத்து அவரை காப்பாற்றியவர் பிரேமதாச‌

பிரபாகரனின் விருப்பம் மேற்குநாடுகளுக்கு சென்றது

அவர்களுக்கும் பிரபாகரனுக்கும் ஒரு ரகசிய பிணைப்பு இருந்தது, அது அமைதிபடை காலத்திலே இருந்தது

வழக்கம் போல் நார்வே குழு, அது இது என மேற்குநாடுகளை பயன்படுத்தி சில காரியங்களை சாதித்துகொண்டிருந்த பிரபாகரனுக்கு சிக்கல் பின்லேடன் வடிவில் வந்தது

பின்லேடனின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மேற்கு நாடுகள் களமிறங்கி, உலகளாவிய தீவிரவாத வலைபின்னலை கண்டறிந்தபொழுது பிரபாகரனுக்கும் மேற்கு நாடுகளுக்கும் முட்டி கொண்டது

ஈழ அரசியல்வாதி முதல் இந்தியா, ராஜிவ், பிரேமதாச, மாத்தையா என எத்தனையோ பேரினை தனக்கு தக்க உபயோகித்துவிட்டு கொன்ற பிரபாகரனால் மேற்கு நாடுகளிடம் வெல்ல முடியவில்லை.

இறுதியாக ஆண்டன் பாலசிங்கம் மூலம் இரு வாய்ப்புகளை கொடுத்துவிட்டனர், கருணாவும் அப்போது உடனிருந்தார்

அவர்கள் இரு வாய்ப்பினை கொடுத்தார்கள், ஒன்று சாக வேண்டும் அல்லது கிடைக்கும் அதிகாரத்தை எடுத்துகொண்டு ஆயுத ஒப்படைப்பு செய்ய வேண்டும்

பிரபாகரன் முடியாது என சொல்லி கொதிக்க, ஆண்டன் பாலசிங்கம் அமைதியானார், கருணா பிரிந்தே ஓடினார்

வழக்கம் போல தன் தந்திர வித்தையினை மேற்கு நாடுகளிடம் காட்ட நினைத்த பிரபாகரனுக்கு மண்டையில் விழுந்தது கொத்து. ஒரு நாடும் ஏன் என கேட்கவில்லை.

ஆயிரகணக்கான மக்கள் அழிந்தாலும் பிரபாகரன் தப்பிவிட கூடாது என்பதிலே உலகம் கவனமாக இருந்தது

ஆக பிரபாகரனை மாவீரன் என்றெல்லாம் சொல்ல முடியாது, தந்திரக்காரன் என்று வேண்டுமானால் சொல்லலாம், அதுதான் உண்மை

பிரபாகரனை நினைத்தால் ஒரே ஒரு வருத்தம்தான் உண்டு

ஏறகுறைய தன்னை நம்பிய அல்லது தன்னை பயன்படுத்த நினைத்த எல்லோரையும் கொன்றுவிட்ட பிரபாகரன் இந்த தமிழக அரசியல்வாதிகளை ஏன் விட்டுவிட்டு செத்துவிட்டார் என்பதே அது.

தன்னை யாரும் பயன்படுதுவதை ஒரு காலமும் அவர் விரும்பியதில்லை, அப்படி செய்தால் அவர்களுக்கு சாவுதான்

கொஞ்சகாலம் இருந்திருந்தால் சைமனை எல்லாம் உருதெரியாமல் அழித்திருப்பார் பிரபாகரன் .

கடைசி காலங்களில் தமிழகம் தன்னை காப்பாற்றும் என நம்பினார், இயக்கத்தை அழிய தமிழகம் விடாது, தமிழக அரசியல்வாதிகள் விடமாட்டார்கள் என முழுக்க நம்பினார்

ஆனால் அது நடக்காமல் போனதில்தான் தமிழக போலி அரசியல்வாதிகள் கொடுத்த போலி வாக்குறுதி அவருக்கு விளங்கிற்று, தமிழகத்தில் பெரும் எழுச்சியினை ஏற்படுத்துவதாகவும், பிரபாகரனுக்கு பெரும் ஆதரவு இருப்பதாகவும் அவரை நம்ப வைத்தது இவர்கள்தான்.

தமிழக ஈழ‌ அரசியல்வாதிகள் எப்படி எல்லாம் தன்னை ஏமாற்றி இருக்கின்றார்கள் என்பதை முள்ளிவாய்காலில்தான் உணர்ந்தார்.

கொஞ்சம் அவகாசம் இருந்திருந்தால் இந்த அழிச்சாட்டிய கும்பலை எல்லாம் கொன்றுவிட்டுத்தான் செத்திருப்பார்

விதி அதுவல்ல என்பதால் தன் பெயரை பாவித்தும், தனக்கு தவறான வழிகாட்டி சாகவிட்டு அதில் அரசியல் செய்யும் இவர்களை எல்லாம் கோபத்துடன் நரகத்திலிருந்து பார்த்துகொண்டிருக்கின்றார்,

எத்தனையோ உதவிகளை செய்தவர்களை எல்லாம் கொன்றவருக்கு இந்த தமிழக திடீர் ஈழ அழிச்சாட்டிய அரசியல்வாதிகள் எல்லாம் தூசு.

இவர்களை விட்டுவிட்டோமே என்று அவரின் ஆன்மா சீறிகொண்டே இருக்கும்

தமிழக தலைவிதி என்று நல்லதாக இருந்தது? ஒருகாலமும் இல்லை.

மாத்தையா



அவரின் இயற்பெயர் மகேந்திர ராஜா. 1980களில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்தார்

அந்த இயக்கத்து தளபதிகளுக்கு ஒரு பலவீனம் இருந்தது அது 2009 வரை இருந்தது அதாவது பிரபாகரனுக்கு அடுத்து யார் எனும் போட்டி அது

அன்று பிரபாகரனுக்கு அடுத்து கிட்டு இருந்தான், கிட்டுவுக்கும் மாத்தையாவுக்கும் மோதல் நடந்த நிலையில்தான் கிட்டுவின் கால் போனது. அது அந்த இயக்கத்தின் உள்மோதல் என்பதால் பொத்திகொண்டிருந்தார்கள்

கிட்டு ஒரு சிங்கள வீரனின் காலை நல்லூர் கந்தசாமி கொவில் முன் தொங்கவிட்டிருந்தான், தன் வீரத்தை காட்டினானாம், இது தெய்வ நிந்தனை என்றதை அவன் செவிகொடுத்து கேட்கவில்லை

பின் அவன் காலே போனது தெய்வத்து தண்டனை

கிட்டுவின் கால் மாத்தையாவால் போனது அவனுக்கு கட்டளையிட்டது பிரபாகரன் என்பதெல்லாம் அக்கால செய்திகள்

மாத்தையா அதன் பின் பெரும் இடத்துக்கு சென்றான் யாழ்பாணம் அவன் கையில் இருந்தது, ஈழ மோதலில் அமைதிபடையுடன் மோதி பிரபாகரனை காத்தவன் அவனே

ஆனால் அவனுக்கு ஒரு பலவீனம் இருந்தது, சண்டை என்றால் சண்டை மாறாக அமைதிபடையினர் பேசினால் அதையும் கேட்பான்

அமைதிபடையினரும் இந்திய உளவுதுறையும் இதை வைத்து ஆடின, எல்லாம் பாரதத்தில் கண்ணன் நடத்திய நாடகமே

கண்ணன் விதுரனிடம் சாதாரணமாக பழகி அது துரியன் கண்ணில்படும் படி பார்த்துகொள்வான், துரியன் கொள்ளும் சந்தேகத்தில் விதுரர் வெளியேறுவார், பலமிக்க விதுரரை அப்படி பிரிப்பான் கண்ணன்

இதையே இந்தியா செய்தது மாத்தையாவுடன் சகஜமாக பழகினார்கள் அவனும் அமைதிபடையினை நோட்டம் விட பழகினான் ஆனால் இந்த பழகலை பிரபாகரனுக்கு இந்திய தரப்பே போட்டு கொடுத்தது

கிட்டு இதை கொண்டு மாத்தையாவினை பழிவாங்க எண்ணினான், பிரபாகரனை கொல்ல ரா முயற்சித்ததாகவும் பிரபாகரன் காரில் குண்டு வைத்ததாகவும் குற்றசாட்டு கூறபட்டது

இக்காலகட்டத்தில் ராஜிவ் கொலை என அமளிதுமளி இருந்ததால் இவை எல்லாம் மெல்லதான் கசிந்தன‌

சந்தேக பிராணியான பிரபாகரன் மாத்தையாவினை சிறை வைத்தான் பின் மாத்தையா படையினர் 300 பேரோடு அவனை கொன்றான் பிரபாகரன்

மாத்தையாவினை தன் கையாலே சுட்டுகொன்றான் பிரபாகரன், இவ்வளவுக்கும் பலமுறை பிரபாகரன் உயிரை காத்தவன் மாத்தையா

300 வீரர்களுடன் மாத்தையா செத்தான், ஆம் அவர்களும் தமிழர்கள். பிரபாகரன் தமிழரை கொல்ல லைசென்ஸ் உண்டு அல்லவா?

மாத்தையா போனபின்பு அந்த இடத்துக்கு வந்தவனே கருணா, அவனுக்கும் பிரபாகரனுக்கும் 2004ல் முட்டியது

ஒருகட்டத்தில் மாத்தையா மாதிரியும் எனக்கு துரோகம் இழைக்கின்றாய் நேரில் வா என பிரபாகரன் சொல்ல கருணாவுக்கு வியர்த்தது உண்மை புரிந்தது

அவன் இந்திய உளவுதுறையிடம் சரணடைந்தான், இந்தியா அவனை நம்பாமல் இலங்கை அரசிடமே ஒப்படைத்தது அதன் பின் நடந்த யுத்ததில் பிரபாகரன் கொல்லபட்டு கருணா அடையாளம் காட்டினான்

மாத்தையா கொல்லபட்ட விதமே கருணாவினை காப்பாற்றி பிரபாகரனை ஒழித்துகட்டியது

மாத்தையா நல்லவன், அவனை கொன்ற பாவம் கருணா வடிவில் திரும்ப வந்து பிரபாகரனை ஒழித்துகட்டியது என்பதுதான் தெய்வத்தின் தீர்ப்பாகவே இருந்தது.

Read more...

கிட்டுக்கு நடுக்கடலில் அடிவிழ பிரபாகரன் எவ்வாறு இந்தியாவின் காலில் வீழ்ந்தான் தெரியுமா? ஸ்ரான்லி ராஜன்

ஏய் கோடாரி காம்பே, எம் இனத்து மாவீரர்கள் தெரியுமா? அவர்கள் படைத்த வீரகாவியம் தெரியுமா? அதை தெரிந்தால் இப்படி எல்லாம் பேசுவாயா? கிட்டு முதல் தீபன் வரை எமது காவிய நாயகர்களை படி, பின்பு எழுது என கொதித்துவிட்டு சென்றார் ஒருவர்.

மற்றவர் விரகாவியங்களை ஒவ்வொன்றாக எழுதலாம், முதலில் கிட்டுவினை பார்க்கலாம்.

கிருஷ்ணகுமார் எனும் சுருக்கம் கிட்டு, இந்தியாவில் தான் பயிற்சிபெற்றார், இடங்களில் ஓடி ஓடி தப்பியவர், பிரபாகரனின் திருமணத்திற்கு காரணம் இவர்தான், இதற்கு மேல் அச்சம்பவத்தை கிளர‌ வேண்டாம். அது சபையில் சொல்லமுடியா விவகாரம்

போராளி சபாரத்தினத்தை சுட்டுகொன்றவரும் கிட்டு தான்.

சக போராளி மாத்தையாவுடன் போட்டி, ஏன் பிரபாகரன் பெயரையும் மிஞ்சி சில இடங்களில் அவர் பிரபலமானார், கொஞ்சநாளில் குண்டுவீச்சில் கால் இழந்தார்,

எப்படி? மகா ரகசியமாக காதலியினை சந்திக்க செல்லும்போது தாக்கபட்டார், பழி மாத்தையா மீது சுமத்தபட்டாலும் பிரபாகரன் அமைதியாகத்தான் இருந்தார், ஏன் என்றால் தெரியவில்லை.

பிரபாகரன் சென்னையில் இருந்தபொழுது கிட்டு ஈழத்தில் பெரும் ஹீரோவானான், பிரபாகரன் பெயர் மங்க தொடங்கிய காலத்தில்தான் அவன் கால் போய் டம்மியானான்

வழக்கமாக துரோகிகளை களை எடுக்கும் பிரபாகரன் கிட்டுவிஷயத்தில் மகா அமைதி, அவர் அனுமதி இன்றி இது சாத்தியமில்லை, பிரபாகரனின் இன்னொரு மோசமான முகம் இது

(இதன் காரணமாக சம்பந்தமே இல்லாமல் நடந்த‌ புலிகளின் "கந்தன் கருணை" படுகொலையினை இன்னொருநாள் பார்க்கலாம் )

அமைதிபடை காலத்தில் காதலி சிந்தியாவுடன் கிட்டுவுக்கு கொழும்பில் திருமணம், தலமை தாங்க யாரை அழைத்தார்கள் தெரியுமா? இலங்கை அதிபர் பிரேமதாசா, ஆனால் அவர் வரவில்லை, பின்னாளில் விருந்துகொடுத்ததாக செய்தி.

அதாவது சிங்கள ராணுவத்தை எதிர்த்து பல புலிகள் செத்த இயக்கத்தின் பிராதன நாயகன் கிட்டு விருந்து உண்டது சிங்கள அதிபருடன்.

அதன் பின் ஊனமுற்றவராக பேச்சு வார்த்தை, அரசியல் துறை என இருந்தார்,

அதன்பின் நடந்ததுதான் விசித்தரம், இந்திய உளவுதுறையுடன் தொடர்பில் வந்தார் கிட்டு, டெல்லி வந்தார் ராஜிவ் கொலைக்கு முன்பான கொஞ்ச காலம் முன்பாக அவரை சந்தித்தார், அமைதிபடை மோதல்களை மறந்து சமாதானமாவோம் என உருகினார், ராஜிவும் அவரை வாசல் வரை வந்து அனுப்பினார், அதாவது புலிகளால் தனக்கு அச்சுறுத்தல் இல்லை என நம்பவைக்கபட்டார். பரிதாபம்

இதனால்தான் ராஜிவ் உயிருக்கு ஆபத்தான இயக்கங்கள் பெயரில் விடுதலை புலிகளின் பெயர் நீக்கபட்டது, திருப்பெரும் புதூரில் கூட அவருக்கு பாதுகாப்புகொடுத்த அதிகாரிகள் கையிலிருந்த பட்டியலில் புலிகள் பெயர் இல்லை

ஒரே நேரத்தில் சிங்களனுடம், இந்திய உளவுதுறையிடமும் தொடர்பில் இருந்த "வீரம்" இது

இவர்கள் செய்தால் தந்திரம், இன்னொருவர் செய்தால் துரோகம், ஈனம்.

ராஜிவ் கொலை நடந்தபின் முதலில் இந்திய உளவுதுறை கிட்டுவினை தொடர்புகொண்டது, "நாங்களே அதிர்ச்சியில் இருக்கின்றோம், பிரபாகரன் சாப்பிடாமல் கிடக்கின்றார், பொட்டு அழுது அழுது கண்கள் வீங்கி கிடக்கின்றார்..." என ஒப்பாரி வைத்தார் கிட்டு, இந்திய உளவுதுறை முதலில் நம்பியது

ஆனால் விசாரணையும், புலிகளின் வயர்லஸ் தகவலும் சரியாக புலிகளை வளைக்க, கிட்டுவிடம் இந்திய உளவுதுறை திகைப்பில் கேட்டது "நம்ப வைத்தா கழுத்தினை அறுத்தீர்கள்?"

கிட்டு சொன்னார் "இது எமது இயக்கத்தின் தந்திரோபாய நடவடிக்கை, ஒரு ரகசிய தாக்குதல்".

அதன் பின் என்ன செய்தார்? எந்த பிரேமதசா திருமணத்திற்கு விருந்தளித்தாரோ, அவருக்கே வெடிகுண்டு அனுப்பினார், செத்தார் பிரேமதாசா

பின் ஒரு கட்டத்தில் மாத்தையா இந்திய உளவுதுறையிடன் தொடர்பில் இருக்கின்றார் என இவர் புகார் சொல்லி பிரபாகரனால் 1000 போராளிகளுடன் கொல்லபட்டார் மாத்தையா. எப்படியோ கால் போனதற்கு மாத்தையாவினை பழிவாங்கினார் கிட்டு

இந்திய உளவுதுறை தன்னிடம் சம்பளம் வாங்கி ,தனது நாட்டில் பயிற்சி பெற்று, ஆயுதமும் பெற்று, உணவும், உறைவிடமும் பாதுகாப்பும் பெற்று, தன் நாட்டு தலைவரையே கொன்ற கிட்டுமீது கடும் கோபத்தில் இருந்தது, கப்பல் நிறைய ஆயுதங்களுடன் அந்தமான அருகே வந்த கிட்டுவினை கப்பலோடு போட்டு தள்ளியது இந்தியா.

(கிட்டு வந்த கப்பலை இந்தியா அடையாளம் கண்டவிதம் சுவாரஸ்யமானது , புலிகளின் தகவலை இடைமறித்து மிக சரியாக அடித்து நொறுக்கினார்கள்..)

தங்கள் கோபத்தை மிக சரியாக வெளிபடுத்திவிட்டு அமைதி காத்தது இந்தியா, பிரபாகரனுக்கு அடுத்த குறி தான் என்பது புரிந்தது , மெதுவாக தன் அல்லக்கை ஜெகத் கஸ்பர் மூலம் அந்த அறிக்கையினை விட்டான்

"பாதர் கிட்டு என் நண்பன், இந்தியா அவனை கொன்றது ஆனால் நான் இந்தியாவினை பழிவாங்கவில்லை நான் திருந்திட்டன்" என அவன் சொன்னதாக சொல்லி திரிந்தார் பாதிரி

சரி பிரபாகரன் இந்தியாவினை எப்படி பழிவாங்குவான் பாதர் என திருப்பி கேட்கபட்ட கேள்விக்கு பாதிரியிடமும் பதில் இல்லை

இம்மாதிரி ஒருமாதிரி இறுமாப்பான நபர்தான் பிரபாகரன்.

கிட்டு ராஜிவ் பிரேமதாச என இருவரை நம்ப வைத்து கொன்ற படுபாவி.

இப்படி நம்பவைத்து கழுதறுக்கும் துரோகத்திற்கு, உண்ட வீட்டிற்கே குண்டு வைக்கும் நன்றிகெட்ட தனத்திற்கு பெயர்தான் மாவீரம், இப்படி செய்தால் அவர் காவிய நாயகர்.

எத்தனை பச்சை துரோகங்கள், எத்தனை மனித தன்மையே இல்லா நன்றிகெட்ட தனங்கள் இவற்றின் உருவமெல்லாம் காவியம், ஆவியம் என சொல்வதை சீமானோடு நிறுத்தி கொள்ளுங்கள், அல்லது திருமுருகன் காந்தி என்பவனிடம் சொல்லுங்கள்

இன்னும் இங்கு வந்து அவன் வீரம் தெரியுமா? இவன் சாரம் தெரியுமா? என சொன்னால் இன்னும் அதிக தகவலுடன் புலி முகத்திற்கு பின்னால் இருக்கும் துரோக, கோழை முகம் ஒவ்வொன்றாக உரிக்கபடும்.

(இவை எல்லாம் ஏராளமான இடங்களில் இணையத்தில் பதியபட்டவை,இன்றும் இருப்பவை, ஏராளமானோர் எழுதிகொண்டிருக்கும் விஷயம்

சந்தேகமிருந்தால் உங்கள் புலனாய்வு துறையிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்)

கிட்டு இன்று இல்லை, ஆனால் இருந்திருந்தால் நமது சீமானிய குஞ்சுகள் எப்படி கத்தும் தெரியுமா?

கருணாநிதி மற்றும் சோனியாவின் சதிவேலையால் பரிதாபமாக கால் இழந்தார் வீரதிருமகன் கிட்டு.

Read more...

Tuesday, November 26, 2019

ஜூலியன் அசாஞ் சிறையிலேயே இறக்க நேரிடலாம். 60 வைத்தியர்கள் எச்சரிக்கை!

விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ் மனச்சோர்வு உள்ளிட்ட உடல் மற்றும் உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகுந்த உடனடி சிகிச்சை இல்லாமல் அவர் சிறையில் இறக்கக்கூடும் என 60 மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 60 மருத்துவர்களால் பிரித்தானிய உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் அசாஞ் குறித்து கடுமையான கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க இரகசியங்களை வெளியிட்டது உட்பட 18 குற்றச்சாட்டுகளுக்காக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதை எதிர்த்து வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள வழக்கு விசாரணைக்கு முன்னதாக 48 வயதான அசாஞ் தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையிலிருந்து மருத்துவ குழு, மதிப்பீடு செய்து சிகிச்சை அளிக்கக்கூடிய பல்கலைக்கழக போதனா மருத்துவமனைக்கு அசாஞ்சை மாற்றுமாறு மருத்துவர்கள் இந்தக் கடிதத்தில் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜனாநாயகத்தின் பிதாக்கள் என்று கூறிக்கொள்ளுகின்ற அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து கருத்துச் சுந்திரத்தை குழிதோண்டிப் புதைப்பதற்கு எடுத்திருக்கின்ற இந்நடவடிக்கைக்கெதிராக உலகமே திரண்டு நின்றாலும் பிரித்தானியாவும் அமெரிக்காவும் அசாஞ் விடயத்தில் அப்பட்டமான உரிமை மீறல்களை மேற்கொண்டுவருகின்றது.

Read more...

கிளிநொச்சியில் நாய் இறைச்சி?

கிளிநொச்சியில் நாய் இறைச்சி புழக்கத்தில் உள்ளதா என்கின்ற சந்தேகம் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இன்று 26-11-2019 கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக உள்ள வியாபார நிலையம் ஒன்றின் முன்பாக நாய் ஒன்றின் தோல் காணப்பட்டுள்ளது. இறைச்சிக்காக விலங்குள் வெட்டப்பட்டு இறைச்சி பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் அதன் தோல் எவ்வாறு காணப்படுமோ அவ்வாறே நாயின் தோலும் காணப்பட்டுள்ளது. இந்த நாயின் தோல் பிரிதொரு நாய் அல்லது காகத்தினால் தங்களது கடைக்கு முன்பாக காவிவந்திருக்கலாம் என சந்தேகித்துள்ளனர்

நாயின் கால் ஒன்றின் அரைவாசி பகுதியுடன் இறைச்சி எடுக்கப்பட்ட தோல் காணப்பட்ட நிலையில் குறித்த விடயம் பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்திற்கு வருகைதந்து அவற்றை பார்வையிட்டுள்ளனர். குறித்த தோளுக்குரிய நாய் வெட்டப்பட்டு இறைச்சி அகற்றப்பட்ட நிலையில் தோல் காணப்படுகிறது என்பதனை உறுதிசெய்துள்ளனர்.


மூன்று மாதங்களான நாய்க்குட்டி ஒன்றே இவ்வாறு இறைச்சிக்காக வெட்டப்பட்டிருக்கலாம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். விபத்தினால் இறந்த நாய்க்குட்டியாக இருக்க வாய்ப்பில்லை என்றும் இது சீராக வெட்டப்பட்டு இறைச்சி அகற்றப்பட்ட நாயின் தோலாக காணப்படுகிறது. எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும் குறித்த விடயம் தொடர்பில் தாம் அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Read more...

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் தடை. பேராசிரியரின் அதிரடி உத்தரவு

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் மாவீரர் தின கொண்டாட்டங்களையோ அதனையொத்த எவ்வித நிகழ்வுகளையோ நடாத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையுத்தரவானது யாழ். பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரியான பேராசிரியர் கந்தசாமியினால் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் பல்கலைக் கழகத்தின் சகல பீடாதிபதிகளுக்கும் மாணவர்களுக்கும் எழுத்துமூலமாக அறிவித்துள்ளார். அக்கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. :

எதிர்வரும் 26ம் மற்றும 27ம் திகதிகளில் பல்கலைக்கழக வளாகத்தில் எந்தவொரு நிகழ்வுகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்பதையும் பல்கலைக்கழக நடவடிக்கைகள் சுமூகமாக இடம்பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இதனை சகல மாணவர்களுக்கும் தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.



எவ்வாறாயினும் நேற்று நள்ளிரவில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரத்தியேக இடமொன்றில் கொண்டாடப்பட்ட புகைப்படங்கள் மற்றும் செய்திகள் இன்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

வட-கிழக்கு எமது தாயகம் என்பதை விடுத்து தமிழர்கள் இலங்கை முழுவதும் எமது தாயகம் என அழைக்க வேண்டுமாம்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தமிழ்க் கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகளை எப்போதும் வழங்கமுடியாது என்று அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உட்பட தென்னிலங்கை அரசியல் தலைவர்களின் பெருமதிப்பிற்குரியவரான எல்லே குணவங்ச தேரர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாத்திரமே தாயகப் பிரதேசம் என்று அந்த கோரிக்கைகளில் கூறப்பட்டதை வன்மையாகக் கண்டித்த எல்லே குணவங்ச தேரர், ஒட்டுமொத்த இலங்கை நாட்டையும் ஏன் தாயகப் பிரதேசம் என்று அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இனப்பிரச்சினைக்கான சமஸ்டி தீர்வு, புதிய அரசியலமைப்பு உட்பட தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளுக்கான தீர்வாக 13 அம்சக் கோரிக்கைகளை கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் 05 தமிழ்க் கட்சிகள் முன்வைத்தன.

எனினும் இந்த யோசனைகள் அனைத்தும் நாட்டைப் பிரிப்பதற்காகவே இருப்பதாகக் கூறிய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக களமிறங்கிய தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அவற்றை பகிரங்கமாகவே நிராகரித்திருந்தார்.

அதேபோல ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளரான சஜித் பிரேமதாஸவும் மறைமுகமாக இந்தக் கோரிக்கைகளை நிராகரித்திருந்த போதிலும் அவருக்கே தமது நிபந்தனையற்ற ஆதரவினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தது.

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சரவையில் ஊடகத்துறை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பந்துல குணவர்தன, ஊடகத்துறை அமைச்சில் சர்வமதத் தலைவர்களின் ஆசியுடன் இன்றைய தினம் தனது கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் விருந்தினர்களில் ஒருவராக அழைக்கப்பட்டிருந்த கொழும்பு எல்லே குணவங்ச தேரர், அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு ஆசியுரை நிகழ்த்தினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், தேர்தல் காலத்தில் தமிழ்க் கட்சிகளினால் வெளியிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை எவ்வகையிலும் வழங்கமுடியாது என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Read more...

கோட்டாவின் அடுத்த அதிரடி.. அரச நிறுவனங்களின் பிரதானிகளை நியமிப்பதற்கு சிறப்புக்குழு..

இலங்கையின் அரச நிறுவனங்களின் பிரதானிகளாக அமைச்சர்கள் மற்றும் அரசியல் பலம்பொருந்தியோரது சொந்த பந்தங்களும் நெருக்கமானோரும் நியமிக்கப்பட்டுவந்தமையை நாம் வரலாற்றினூடாக கண்டுவந்திருக்கின்றோம். குறிப்பாக மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் குடும்ப ஆட்சியே நடைபெற்றதாக பெரும் குற்றச்சாட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்க அரசின் நிறுவனங்களுக்கான பிரதானிகளை நியமிப்பதற்கான குழுவொன்றை நியமித்துள்ளார். இக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செயலாளராகவிருந்த லலித் வீரதுங்க, பேராசிரியர் நாலக கொடகேவா, சுசந்த ரத்நாயக்க மற்றும் டயஸ் கோமஸ் ஆகியோர் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவினர் சுயாதீனமாக செயற்படுவர் என்பதுடன் நியமனங்கள் வழங்கும்போது யாவருக்கும் பொதுவான நடைமுறை ஒன்றை கடைப்பிடிக்க பணிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் எவ்வித அரசியல் சிபார்சுகளுக்கும் அழுத்தங்களுக்கும் அடிபணியாது நிறுவனங்களின் பிரதானிகளாக பொருத்தமானவர்களை அவர்களின் தகமைகளின் அடிப்படையில் நியமிப்பர். இந்நியமனங்களுடாக நிறுவனங்கள் அரசியல் கட்சிகளின் நலனிலும் பார்க்க நாட்டின் சட்டம் ஒழுங்கின் நலன் பேணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read more...

Monday, November 25, 2019

மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி,மட்டகளப்பில் சோகம்

மட்டக்களப்பு, ஆரையம்பதி திருநீற்றுக்கேணி குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்

இதில் ஆரையம்பதி முதலாம் பிரிவு திரூநீற்றுகேணி பிரதேசத்தைச் சேர்ந்த திருமணம் முடித்து 4 மாதங்கள் ஆகிய 20 வயதுடைய சுரேஸ்குமார் தர்ஷன், ஆரையம்பதி 2ம் பிரிவு செல்வநகரைச் சேர்ந்த 19 வயதுடைய நகுலேந்திரன் திவாகரன், 19 வயதுடைய செல்வன் சதுர்ஷன் ஆகிய மூவருமே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்..

குறித்த குளம் அண்மையில் தோண்டப்பட்டு புனர்நிர்மணப் பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவதினமான இன்று பகல் 12 மணியளவில் 5 பேர் கொண்ட நண்பர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு குளித்துள்ளனர்.

இந்த நிலையில் குளத்தின் நடுப்பகுதியில் சகதியில் சிக்குண்டு அவர்கள் நீரிழ் மூழ்கியுள்ளதுடன் இதன்போது இருவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஏனைய மூவரையும் காப்பாற்ற முடியாமல் போன நிலையில் அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதனையடுத்து கொட்டும் மழையில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் உடனடியாக செயற்பட்டு குழத்தின் நீர்வேளியேறும் துருசு பகுதியை மண்அகழ்வும் இயந்திரம் கொண்டு உடைத்து நீரை வெளியேற்றும் நடவடிக்கையுடன் நீரிழ் மூழ்கி காணாமல் போனவர்களை தேடுதலில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து சுமார் 3 மணிநேர தேடுதலின் பின்னர் நீரில் மூழ்கிய உயிரிழந்த 3 சடலங்களை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

மனோகணேசனிடம் வடக்கத்தையானுக்கு வராத கோபம் தோட்டக்காட்டானுக்கு வந்திருக்கிறது.

வடக்கத்தையான் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பேசிய போது வராத கோபம் தோட்டக்காட்டான் என்று பேசிய போது மனோகணேசனுக்கு வந்துள்ளது. ஆச்சரியப்படுவதற்கில்லை என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் அவர்கள் மலையக மக்களை இழிவுப்படுத்தும் சொற்பிரயோகமான வடக்கத்தையான் என ஒரு தொலைபேசி உரையாடல் மூலம் பேசியிருந்தார். அப்போது அதற்கு பலரும் தங்களின் கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருந்தார்கள். இதேவேளை அக்காலக்கட்டத்தில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் மனோகணேசன் அவர்களிடம் ஊடகவியலாளர் ஒருவர் வடக்கத்தையான் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு அன்று அமைச்சர் மனோகணேசன் சிறிதரன் அவர்கள் அப்படி பேசியிருக்கவில்லை என்று சொல்கின்றார் எனவே அதனை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்தார். இதுவும் கிளிநொச்சியில் மனோகணேசன் அவர்கள் தொடர்பில் சமூகத்தில் கண்டனத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் அன்று தான் அமைச்சராக இருந்த அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கின்ற ஒரு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வடக்கத்தையான் என்று பேசியதனை எதிர்த்து முன்னாள் அமைச்சர் மனோகணேசன் அவர்கள் பேசவில்லை. காரணம் அவர் அமைச்சராக இருக்கும் அரசின் பங்காளி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற காரணத்தினால்.

அன்று வடக்கத்தையானுக்கு எதிராக குரல் கொடுத்திருந்தால் இன்று தோட்டக்காட்டான் என்பது வந்திருக்காது.முளையிலேயே கிள்ளுவதற்கு அதிகாரத்துடன் இருந்த அமைச்சர் தவறிவிட்டார். காரணம் அவரது நலன் என்பதே எனது கருத்து. இது ஒருபுறமிருக்க

அதாவுல்லாவின் கருத்து வன்மையாக கண்டிக்கதக்கது. ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துகொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு இனத்தை கொச்சைப்படுத்தும் வார்த்தையை அவர் பயன்படுத்தும் துணிவு எங்கிருந்து கிடைத்தது? அவர் அப்படி பேசும் போது நீங்கள் கோப்பட்டு தண்ணீரை ஊற்றியதற்கு பதிலாக எழும்பிய வேகத்தில் பளார் என கண்ணத்தில் அறைந்திருக்க வேண்டும். அதாவுல்லா போன்றவர்களுடன் அப்படிதான் நடக்க வேண்டும். இதனைத் தவிர அறிக்கைகள், கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்களையும் கடந்து சட்டரீதியான நடவடிக்கைக்கும் செல்லவேண்டும்.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் சட்டநடவடிக்கையானது சமூகத்தை கொச்சப்படுத்தும் எந்த வாரத்தைப் பிரயோகங்களையும் எவரும் எதிர்காலத்தில் பேசக்கூடாது தடுக்கும் வகையில் இருக்க வேண்டும்

Read more...

இனமுறுகலுக்கு வித்திடுவோரை கைது செய்து சிறையிலடைப்பீர்! பொலிஸ் தலைமையகம் விசேட உத்தரவு..

இனநல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்து இனமுறுகலை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இனமுறுகலுக்கு வித்திடும் செயற்பாடுகளையும் செயற்பாட்டாளர்களையும் இனம்காணும் பிரகாரம் ரோந்து சேவைகளை அதிகரிக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளது. அவ்வாறு இனம்காணப்படும் நபர்களை கைது செய்து விளக்கமறியலில் அடைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இனமுரண்பாடு தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தாமதமின்றி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சமூகவலைத்தளங்களில் இனமுறுகலை தோற்றுவிக்கும் பதிவிடுவோர் தொடர்பாக சைபர் கிறைம் பிரிவினரை கவனம் செலுத்துமாறும் வேண்டப்பட்டுள்ளது.

Read more...

மேலதிக வகுப்புக்கள் மற்றும் விரிவுரைகள் நடத்த தடை

கபொத சாதாரண தரபரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் - டியுசன் வகுப்புகள், மீட்டல் பயிற்சிகள், விரிவுரைகள்,கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் அனைத்தும் எதிர்வரும் புதன்கிழமை நள்ளிரவுடன் தடைசெய்யப்படுகின்றன.

இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் பொலிஸாருக்கோ அல்லது 1911 எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ தொடர்பை ஏற்படுத்தி அறிவிக்கமுடியும்.

கபொத சாதாரண தரபரீட்சை எதிர்வரும் இரண்டாம் திகதி நாடாளவிய ரீதியில் நான்காயிரத்து 987 பரீட்சை மத்திய நிலையங்களில் ஆரம்பமாகிறது. இம்முறை ஏழு இலட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சார்த்திகள் இந்தப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

இந்த பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Read more...

ரிஷாதின் வாகனத்திற்கு கல் வீச்சு!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுத்தின் பயணித்த வாகனத்தின் மீது கல் வீச்சு நடாத்தப்பட்டதாக முன்தலம பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

நேற்று 24 ஆம் திகதி பிற்பகல் 5.45 இற்கு மதுரங்குளி - கடையாமட்டம் பிரதேசத்திலேயே இந்த கல் வீச்சுச் சம்பவம் நடந்துள்ளது.

கல் வீச்சினால் முன்னாள் அமைச்சரின் வாகனங்களிலொன்று சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாருக்கும் எந்தவொருகாயங்களும் ஏற்படவில்லை.

இந்தக் கல் வீச்சு நடாத்தப்பட்டது யார் என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை. முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

Sunday, November 24, 2019

42 வருடகால அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடைபெறுகின்றார் ரணில் விக்கிரமசிங்க!

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியலில் இருந்து விடைபெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியினூடாக அவர் இம்முடிவை வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய பாராளுமன்றம் நிறைவடையும் போது தனது 42 வருடகால அரசியல் வாழ்க்கைக்கு விடைகொடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு தரப்பினரால் தற்போது உருவாக்கப்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்கள் சஜித் பிரேமதாசவுக்கு எதிர்க்கட்சித் தலைமை பதவி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால பொறுப்பு சஜித் பிரேமதாசவுக்கு வழங்கவேண்டும் என ஜனாதிபதி தேர்தலுக்கு பின் அவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள்.

அவ்வாறு நடைபெறாவிடின் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியை உருவாக்குவதற்கு சிலர் எத்தனித்து வருகிறார்கள்.

இந்தப் பின்னணியில்தான் அவர் இனி அரசியலில் ஈடுபடுவதில்லை என்று முடிவு செய்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியை காப்பாற்றக்கூடிய ஒரு தலைவரிடம் கட்சியை ஒப்படைக்க ரணில் விக்ரமசிங்க முடிவு செய்துள்ளதுடன், அத்தகைய தலைவரை சந்தித்தாலும் இல்லாவிட்டாலும், தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து தோல்விகளுக்கும் காரணம் விரைவாக செயற்படுவது.

அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தோல்விக்கு அவசர முடிவுகளே காரணம் என விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் பொறுமையாக செயற்படவேண்டும் என்பதோடு இளம் அரசியல்வாதிகளுக்கு இது மிக முக்கியமான காரணம் என்று அவர் அறிவுரை கூறியுள்ளார்.
தான் பிரதமராக நியமிக்கப்பட்டது மிகவும் பொறுமையாக இருந்ததன் மூலம் தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய அரசியலில் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும் எனவும், கால நேரம் பார்த்து செயற்படவேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க இளம் அரசியல்வாதிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

Read more...

வடக்கின் தலைவிதியை தலைகீழாக மாற்ற கோத்தா புதிய திட்டம்.. த.தே.கூ கதியற்று கைகோர்க்க முனைகின்றது.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கோத்தபாய ராஜபக்ச இலங்கை அரசியல் கலாச்சாரத்தினை முற்றிலும் மாற்றியமைக்கும் நோக்குடன் செயற்பட்டுவருகின்றார். அதன் பிரகாரம் விடுக்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தல்கள் பல மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள அதேநேரத்தில் அரசியல்வாதிகளை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது என்பதும் யாவரும் அறிந்தது.

இந்நிலையில் அவர் வடக்கின் தலைவிதியை முற்றிலும் மாற்றியமைக்க திட்டமொன்றை வகுத்துள்ளதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது. அதன் பிரகாரம் அவர் தனது தனிப்பட்ட தொடர்பு வலைப்பின்னலை பயன்படுத்தி வடக்கின் அபிவிருத்திக்காக சுமார் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிடவைப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 7200 கோடி ரூபாக்களை வடக்கில் முதலிட வைப்பதன் ஊடாக வடக்கில் நிலவும் வேலையில்லாப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர அவர் திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இத்திட்டத்தினை அறிந்து கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பரெலிய என்ற தெருத்தேங்கையை வழிப்பிள்ளையாருக்கு அடித்ததுபோல் புதிய அரசின் பங்காளிகளாக மாறி தாங்களே தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியையும் தொழில்வாய்ப்பையும் கொண்டுவந்தாக காதில் பூச்சுத்துவதற்காகவே அரசுடன் இணைய தமது விருப்பத்தினை தொடர்ச்சியாக தெரிவித்துவருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இதேநேரம் இலங்கையில் யுத்தம் முடிவடைந்த கையுடன் புலம்பெயர் தமிழ் பிரநிதிகள் மற்றும் புலிகளின் முக்கியஸ்தர்களை நாட்டுக்கு அழைத்திருந்த கோத்தபாய வடக்கில் இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அவர்களின் ஒத்துழைப்பை கோரியிருந்தார். அத்துடன் வடகிழக்கில் அவர்களை முதலிடுமாறும் அவ்வாறு முலிடுவதன் ஊடாக அங்குள்ள மக்களுக்கு தொழில்வாய்பினை பெற்றுக்கொடுக்குமாறும் கோரியிருந்தார். ஆனால் அக்காரியம் நிறைவேறியிராத நிலையில் தற்போது அவர் தனது சொந்த தொடர்புகள் ஊடாக இக்கருமத்தினை மேற்கொள்ளவுள்ளதாக அறியமுடிகின்றது.

Read more...

மூன்று மாதங்களுக்கு சபாநாயகர் பதவியை ஏற்க தயார் - வாசுதேவ நாணயக்கார

சபாநாயகர் பதவி வழங்கப்பட்டால் எதிர்வரும் 3 மாதங்களுக்கு அதனை பொறுப்பேற்க தயார் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதியாக நடவடிக்கை முன்னெடுத்து செல்வது தனது விருப்பமாயினும் சபாநாயகர் பதவி வழங்கப்பட்டால் 3 மாதங்களுக்கு அதனை பொறுப்பேற்க தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் 5 வருடங்களுக்குள் தான் சபாநாயகராக இருக்க விருப்பமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

சிஐடி யின் பிரதான பரிசோதகர் நிஸாந்த த சில்வா நாட்டை விட்டு குடும்பத்துடன் வெளியேறினார்..

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதான பரிசோதகர் நிஸாந்த த சில்வா இன்று பிற்பகல் 12.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அறியமுடிகின்றது.

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிஸாந்த த சில்வா தனது குடும்பத்தினருடன் சுவிட்ர்லாந்து நோக்கிய பயணமாகியுள்ளார். சுவிட்சலாந்துக்கு சொந்தமான சுவிஸ் விமானச் சேவையின் WK - 0065 என்ற விமானத்தில் அவர்கள் வெளியேறியுள்ளனர்.

அவர் நாட்டில் இருக்கும்போது முன்னாள் ஜனாதிபதியின் உத்தரவின்பெயரில் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தமையும் பின்னர் குறித்த இடமாற்றத்தை சுயாதீன பொலிஸ் சேவைகள் ஆணைக்குழு ரத்துச் செய்திருந்தமையும் யாவரும் அறிந்தவிடயம்.

Read more...

முகாம்களில் இராணுவ மற்றும் அரச இலாஞ்சனைகள் மாத்திரம். இராணுவத் தளபதி அதிரடி..

இலங்கை இராணுவத்தின் முகாம்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய காரியாலயங்களில் இலங்கை இராணுவத்தினரின் இலாஞ்சனைகள் மற்றும் அரச இலாஞ்சனை தவிர்ந்த எந்தப்படங்களும் காட்சிப்படுத்தப்படக்கூடாது என இராணுவத் தளபதி விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

புதிதாக பதிவியேற்றுள்ள ஜனாதிபதி கோத்தபாயவின் முதல் அறிவிப்பாக இவ்விடயம் அமைந்திருந்தது. அந்த உயரிய நோக்கத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் நோக்கில் இராணுவத் தளபதியினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

மாவீர்களின் வரலாற்றை அழித்துக்கொண்டு துயிலுமில்லத்தில் வாக்குகளாக நடிக்கும் சிறிதரன் கூட்டம்

கிளிநொச்சியில் எஞ்சியிருக்கும் மாவீரர்களின் வரலாறுகளை சொல்லுகின்ற பதிவுகளை ஒரு புறம் அழித்துக்கொண்டு, மறுபுறம் மாவீரர் துயிலுமில்லங்களில் வாக்குளுக்காக சிறிதரனும் அவர்களது கூட்டத்தினரும் நடிகின்றனர் என பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஏராளமான முன்னாள் போராளிகளும், அவர்களது குடும்பங்களும், மாவீரர் குடும்பங்களும்
நாளுக்கு நாள் வறுமையின் பிடிக்குள் சிக்கி மூன்று வேளை உண்பதற்கு போராடிக்கொண்டிகொண்டிருக்கின்றார்கள், பல முன்னாள் பேராளிகள் தொழிலின்றி மிகவும் நலிவுற்று வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாத இக் கூட்டம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் வந்தவுடன் மாவீரர்களை நினைவு கூர்வதாக காட்டிக்கொண்டு வர்த்தகர்கள் மற்றும் புலம்பெயர் சமூகங்களிடம் பெருமளவு பணத்தை பெற்று மாவீரர் நாள் நடத்துவதாக கூறி பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.


2015 க்கு பின்னர் பெருமளவு நிதி பெறப்பட்டு நடத்தப்பட்ட மாவீரர் நாள் கணக்கறிக்கைகள் இதுவரை பொதுவெளியில் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது கிளிநொச்சியில் மாவீரர் பணிக்குழுவின் தலைவர் முன்னாள் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் பசுபதிபிளை, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன், அதன் முன்னாள் உப தவிசாளர் நகுலன் ஆகியோர் கிளிநொச்சி வர்த்தகர்களிடம் பணம் சேகரித்து வருகின்றனர்.


இதனை தவிர கிளிநொச்சி திருநகர் பகுதியில் 1991 ஆம் ஆண்டு கொக்காவில் சண்டையில் மரணித்து மாவீரன் கமலின் பெயரில் இருந்து வீதியின் பெயரை மாற்றி உயிரோடிருக்கின்ற பசுபதியின் பெயரை வைத்துள்ளனர். இது அப்பிரதேச பொது மக்கள் மத்தியில் கடும் கண்டத்திற்குள்ளாகியுள்ளது.

மாவீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் வரலாற்றை அழித்துக்கொண்டு மறுபுறம் மாவீரர் நாள் நினைவுகளை நடாத்தும் அவர்களின் செயற்பாடுகள் போலியானது எனவும் அரசியலின் இருப்புக்காக மக்களின் வாக்குகளை அபகரிக்க நடிக்கின்றனர் எனவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் இந்த பெயர் மாற்றத்தை மேற்கொண்டார் எனவும் பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் அவருடைய கூட்டமும் வாக்குகளுக்காக இவ்வாறு நடிகின்றனர் எனவும் பொது மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Read more...

ஜனாதிபதி கோட்டாபயவின் இந்தியாவுக்கான பயணத்தில் குடும்பத்தார் இல்லை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்தியப் பயணத்தில் எண்மர் கொண்ட தூதுக்குழுவினரும் செல்வதற்கு ஏற்பாடாகியுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பீ. ஜயசுந்தர, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவினாத்த ஆரியசிங்க, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்டோரும் இந்தப் பயணத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 29 ஆம் திகதியிலிருந்து இந்தியப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அத்துடன், நவம்பர் மாதம் டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்புவார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com