Sunday, November 17, 2019

நுவரெலிய தபால் மூல வாக்கெடுப்பின் வெற்றியும் கோத்தாவுக்கே!

நுவரெலிய மாவட்ட தபால் வாக்கெடுப்பு முடிவின்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷ- 9151

சஜித் பிரேமதாஸ - 7696

அநுரகுமாரா - 638

Read more...

கொழும்பு மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு முடிவு!

கொழும்பு மாவட்ட தபால் வாக்கெடுப்பு முடிவின்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷ- 21717

சஜித் பிரேமதாஸ - 8294

அநுரகுமாரா - 2229

மகேஷ் சேனாநாயக்க - 522

Read more...

மாத்தளை மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு முடிவு!

மாத்தளை மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷ- 13405

சஜித் பிரேமதாஸ - 6165

அநுரகுமாரா - 987

மகேஷ் சேனாநாயக்க - 113

Read more...

திருகோணமலை மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பில் சஜித் முன்னணியில்!

திருகோணமலை மாவட்ட தபால் வாக்கெடுப்பு முடிவின்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வெற்றிபெற்றுள்ளார்.

சஜித் பிரேமதாஸ - 7871

கோத்தபாய ராஜபக்ஷ- 5089
அநுரகுமாரா - 610

எம்.கே. சிவாஜிலிங்கம் - 74

Read more...

காலி மாவட்ட - அம்பலாங்கொடை வாக்கெடுப்பு முடிவு!

காலி மாவட்ட அம்பலங்கொட தேர்தல் பிரிவின் முடிவின்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷ - 41528

சஜித் பிரேமதாஸ - 17793

அநுரகுமாரா - 2480

மகேஷ் சேனாநாயக்க - 235

Read more...

கம்பஹா மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பு முடிவு!

கம்பஹா மாவட்ட தபால் வாக்கெடுப்பு முடிவின்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச - 30918

சஜித் பிரேமதாஸ - 12125

அநுரகுமாரா - 3181

மகேஷ் சேனாநாயக்க - 700

Read more...

இரத்னபுரி மாவட்ட தபால் வாக்கெடுப்பு முடிவு!

இரத்தினபுரி மாவட்ட தபால் வாக்கெடுப்பு முடிவின்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச - 19061

சஜித் பிறேமதாஸ - 7940

அநுரகுமாரா - 1678

மகேஷ் சேனாநாயக்க - 183

Read more...

மொனராகலை தபால் மூல வாக்கெடுப்பு முடிவு!

மொனராகலை மாவட்ட தபால் வாக்கெடுப்பில் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச - 13754

சஜித் பிறேமதாஸ - 6380

அநுரகுமாரா - 1340

Read more...

Saturday, November 16, 2019

வன்னி மாவட்ட தபால்மூல வாக்கு முடிவு வெளியானது.

கோத்தபாய ராஜபக்ச 1703

சஜித் பிறேமதாஸ 8402

அநுரகுமாரா 147

சுயேட்கை10 சிவாஜிலிங்கம் 144

வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 10994
அளிக்கப்பட்ட வாக்குகள் 10742
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 147

Read more...

யாழ் மாவட்ட நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவு வெளியானது.

கோத்தபாய ராஜபக்ச 1836

சஜித் பிறேமதாஸ 27605

அநுரகுமாரா 166

சுயேட்சைக்குழு 10 (சிவாஜிலிங்கம்) 659

வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட வாக்குகள் 46888

அளிக்கப்பட்ட வாக்குகள் 32941

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 848

Read more...

முதலாவது முடிவு வெளியானது.

காலி மாவட்த்திற்கான தபால்மூல முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன் பிரகாரம்

கோத்தபாய ராஜபக்ச 25099

சஜித் பிறேமதாஸ 9093

அனுரகுமார திஸாநாயக்க 240

மகேஸ் சேனாநாயக்க 301

வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அளிக்கப்பட்ட வாக்குகள் 37585

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 393

Read more...

முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து....

ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து, இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்கெடுப்பின் முடிவாக இன்று (16) நள்ளிரவிற்கு முன்னர் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அதற்கேற்ப, வாக்குப் பெட்டிகள் வாக்குகளை எண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டுசெல்வதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தன.

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குகளை எண்ணும் மத்திய நிலையங்கள் 43 இல் இந்த வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

Read more...

வாக்களிப்பு ஆரம்பமாகிவிட்டது.... பொலிஸார் உசார் நிலையில்...!

ஜனாதிபதித் தேர்தலின் பாதுகாப்புக் கருதி, ஆவன செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியுமான ருவன் குணசேக்கர குறிப்பிடுகையில், ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களுக்கும் இரு பொலிஸார்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்தார்.

இன்று (16) நடைபெறும் தேர்தலுக்காக பூரண ஒத்துழைப்பினை பொலிஸ் வழங்கும் என்றும், பொலிஸ் பாதுகாப்புத் தவிர மேலும் அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும்நடமாடும் பொலிஸ் வருகையையும் செயற்படுத்துவதற்கு ஆவன செய்துள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.

இன்று அதிகாலை 7 மணி தொடக்கம் வாக்களிப்பு இடம்பெறவுள்ளதுடன், அதற்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை அளித்துவிட்டு, வாக்களிப்பு நிலையங்களின் பக்கமாக சூழ்ந்துகொண்டு நிற்காமல், தங்களுடைய அன்றாட வேலைகளில் ஈடுபடுமாறும் குறிப்பிட்டார்.

Read more...

Friday, November 15, 2019

புதிதாய் வாக்குகள் 947,606!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் புதிதாக மொத்தம் 947,606 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

தேர்தல் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 15,992,096 ஆக உள்ளன.

2015 முதல் 2018 வரை 947,606 வாக்குகள் புதிதாக பதிவு செய்யப்பட்டன. அதன்படி, 2015 தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக 947,606 புதிய வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதன்படி, 2015 ல் 37,6715 வாக்குகளும், 2016 ல் 190,765 வாக்குகளும், 2017 ல் 148,897 வாக்குகளும், 2018 ல் 231,229 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,992,096 ஆகும்.

Read more...

போலி வாக்குச்சீட்டுக்கள் 58 உடன் சாரதியொருவர் கைது!

வாக்குப் பெட்டிகளை விநியோகிப்பதற்காக ஹம்பாந்தோட்டை சுஷி தேசிய பாடசாலைக்கு வந்த வேன் ஒன்றிலிருந்து வாக்குச் சீட்டுடன் ஒத்ததான போலி வாக்குச் சீட்டுக்கள் 58 இன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சாரதி கைது செய்யப்பட்டதாகவும் ஹம்பாந்தோட்டை பொலிஸ் தலைமயமகம் தெரிவித்தது.

முல்கிரிகல தேர்தல் தொகுதியில் இத்ததெமலிய வாக்குச் சாவடிக்கு வாக்குப் பெட்டிகளை விநியோகிப்பதற்காக வாக்குச்சாவடிப் பொறுப்பதிகாரி, பொலிஸ் அதிகாரி மற்றும் உதவியாளர் இந்த வாக்குப் பெட்டியை எடுத்துக்காண்டு வாகனத்தினுள் நுழைந்துள்ளனர். அங்கு வாகனச் சாரதியின் ஆசனத்திற்கு அருகில் இருந்த இந்த போலி வாக்குச் சீட்டுக்கள் கண்டெடுத்துள்ளனர் என ஹம்பாந்தோட்டை மாவட்ட வாக்குக் கணிப்பதிகாரி எம்.கே. பந்துல ஹரிச்சந்திர குறிப்பிட்டார்.

போலி வாக்குச் சீட்டில் எந்தவிதக் குறியீடுகளும் அடையாளமிட்டிருக்கவில்லை எனவும், சீட்டின் கீழ்ப்பகுதியில் வாக்காளர்களைத் தெளிவுறுத்துவதற்காக மட்டுமே என அச்சிடப்பட்டிருந்தாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதனால் வேறொரு வாகனத்தின் மூலம் குறித்த வாக்குச் சாவடிக்கு வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள வாகனச் சாரதி திஸ்ஸமகாராம மோல கெபு பதான பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இந்த வாகனமானது கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் பிரச்சார நடிவடிக்கைகளுக்காக கூலிக்குப் பெற்றுக் கொள்ளப்பட்டது என வாகனச் சாரதி குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் ஹம்பாந்தோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

இன்றும் நாளையும் வன்செயல்களில் ஈடுபடுவோருக்கு பிணையில்லை! - தேர்தல்கள் ஆணையாளர்

தேர்தல் வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல் என்ற குற்றச்சாட்டின் பேரில் இன்று (15), நாளை (16) தினங்களில் எவரேனும் கைதுசெய்யப்பட்டால் அவர்களுக்குப் பொலிஸ் பிணை வழங்கக்கூடாது எனவும், அவர்கள் ஜனாதிபதித் தேர்தல் முடியும்வரை சிறையில் அடைக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய பொலிஸாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் சிறந்த முறையில் நடைபெற வேண்டும் என்னும் நோக்கிலேயே இந்த வேண்டுகோளைத் தான் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் பலத்தை ஆயுதங்களினாலும் வன்செயல்களினாலும் காட்டாமல் வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்கைப் பயன்படுத்தியே தங்கள் பலத்தைக் காட்ட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

Thursday, November 14, 2019

தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடனேயே ஸ்ரீசுக தலைமை மைத்திரி வசம்!

ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் வெளிவந்த உடனேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் அமர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் கலாநிதி ரோஹண லக்ஷ்மன் பியதாச குறிப்பிடுகின்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் எடுத்த தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகிக் கொண்டார்.

மீண்டும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி ஆவன செய்வார் என, அக்கட்சியின் பதில் தலைவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது செயற்பாடுகளை மேற்கொள்வார் எனவும் பதில் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

நாளை அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும்!

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளின்படி மூடப்படும் என கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது.

இன்று வாக்குச் சீட்டுக்கள் எண்ணுவதற்காகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மூடப்பட்டன என கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் குறிப்பிட்டார்.

Read more...

சுயாதீன தொலைக்காட்சிச் சேவைக்கு STF பாதுகாப்புக் கோருகிறார் அமைச்சர் ருவன்!

சுயாதீன தொலைக்காட்சிச் சேவைக்கு விஷேட எஸ்.ரீ.எப். பாதுகாப்பு வழங்குமாறு பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சர் ருவன் விஜேவர்த்தன எஸ்.ரீ.எப். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் எம்.ஆர். லத்தீபிடம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பிலான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லத்தீப் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக செய்திகளைப் பரப்புவதற்கு அரசாங்கம் இந்த ஊடக நிறுவனத்தைப் பயன்படுத்தியது என்ற கருத்து பொதுமக்களிடத்தில் உள்ளது.

Read more...

Tuesday, November 12, 2019

சஜித் பிறேமதாஸ வை கொலைசெய்ய சதித்திட்டம்..

தேர்தல் பிரச்சாரங்கள் நாளை 13 ம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு பெறுகின்றது. இந்நிலையில் சஜித் பிறேமதாஸ மீது போலித்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டு அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினர் முயல்வதாக சமூகவலைத்தளங்களில் பரவலாக செய்திகள் பரவிவருகின்றது.

இவ்வாறு அவரை வைத்தியசாலையில் அனுமதித்து அனுதாபவாக்குகளை பெற்றுக்கொள்வதே இச்சதித்திட்டத்தின் நோக்கம் என அத்தகவல்கள் தெரிவிக்கின்றது.

அவ்வாறு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் அதற்கான பொறுப்பை எதிராளிகள் மீது சுமத்தி , மக்களை கோத்தபாயவிற்கு எதிராக எவ்வாறு தூண்டுவது என மங்கள சமரவீர, சம்பிக்க ரணவக்க , ஹரேன் பெர்ணாந்து மற்றும் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் கலந்துரையாடல்களை மேற்கொண்டுவருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளகதகவல்களை மேற்கோள்காட்டியே இவ்எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது.

Read more...

பிரபாகரனுக்கு 42 கடிதங்கள் எழுதியிருக்கின்றேன். போட்டுடைக்கின்றார் சந்திரிகா அம்மையார்

நாங்கள் எப்போதும் அப்பாவித் தமிழ்மக்கள் பக்கமே சாய்ந்திருந்தோம்... எல்.ரீ.ரீ.ஈ யினர் ஒருபக்கம் இருக்கின்றார்கள்.. அப்பாவித் தமிழ் மக்கள் இன்னொரு பக்கம் இருக்கிறார்கள். அப்பாவித் தமிழர்களை நாங்கள் ஒருபாேதும் எல்.ரீ.ரீ.ஈயினருடன் ஒன்றுசேர்த்துப் பார்க்கவில்லை... அதனால்தான் எல்.ரீ.ரீ.ஈயினர் யுத்தத்தை விரும்பிய போதெல்லாம் நாம் சமாதானத்தின் பக்கமே அவர்களை அழைத்தோம்.

அவர்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குக் காலால் அடித்துவிட்டு, யுத்தம் செய்வதே ஒரே நோக்கு என்றார்கள்.. அரசாங்கம் என்ற வகையில் யுத்தம் செய்ய வருபவர்களுடன் நாங்கள் யுத்தம் செய்துதான் ஆக வேண்டும். அதுதான் அரசாங்கம் ஒன்றின் செயற்பாட இருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க, இன்று (12) ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,

இயலுமானவரை நான் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடாத்தி, அப்பாவித் தமிழ் மக்களுக்கு எந்தவொரு அநீதியும் நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு மேலிடங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினேன். இயலுமானவரை இழப்புக்கள் ஏற்படாமல் பார்த்துக் கொண்டேன். சிலநேரம் யுத்தம் ஏற்படும்போது அவ்வாறு சொன்னபோதும் அதற்கு நேர் எதிராக நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படவும் செய்கின்றது.

நான் ஜனாதிபதியாகி சில மாதங்கள் சென்றதன் பின்னர், தொடர்ந்து எட்டு மாதங்கள் எல்.ரீ.ரீ.ஈயுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தி வந்தோம். என்றாலும் எட்டு மாதங்களின் பின்னர் அவர்கள் மீண்டும் யுத்தத்திற்குத் தயாரானார்கள். அவ்வாறு யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த போதும், நான் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனுக்கு 42 கடிதங்கள் அவ்வப்போது எழுதினேன். எங்களுக்குள் கடிதப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. அவை என்னிடம் பத்திரமாக இருக்கின்றன. அவற்றை வெளிச்சத்திற்குக் கொணரவுள்ளேன்.

அந்தக் கடிதங்களில் நான், ' உங்களுக்கு யுத்தம் செய்ய வேண்டுமென்றால் யுத்தம் செய்யுங்கள்... அவ்வாறு நீங்கள் யுத்தம் செய்தால் நாங்களும் உங்களுக்கு எதிராக யுத்தம் செய்வோம்... என்றாலும் அப்பாவித் தமிழ் மக்களை நினைத்துப் பாருங்கள்.. - அவர்களது அனைத்து உடைமைகளும் நாசமாகியுள்ளன.... மீண்டும் அபிவிருத்தி நடவடிக்ைககளை நாங்கள் மேற்கொள்வதற்கு நீங்கள் விரும்புகின்றீர்களா? எனக் கேட்டேன்.

நாங்கள் எங்கள் அதிகாரிகளை அங்கு அனுப்பி, உங்கள் கருத்துக்களை அறிந்து உங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வடக்கில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக ஆவன செய்யட்டுமா எனக் கேட்டோம்...அதற்கு பிரபாகரன் ஒரே பேச்சில், ' நாங்கள் அதற்குத் தயாராக இல்லை.. நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை... என்ன செய்வதென்றாலும் இங்கு நான்தான் செய்வேன்' என்றார். எனவும் குறிப்பிட்டார்.

Read more...

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடை நீட்டிக்கப்பட்டு வந்தது.

2014 ஆம் ஆண்டு மே 14 ஆம் திகதி மத்திய உள்துறை அமைச்சகம் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து உத்தரவிட்டது. இந்த ஆண்டு மே மாதமும் மத்திய அரசு விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது.

இந்த தடையை ஆய்வு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்ட உத்தரவை தொடரலாமா? என்பது குறித்து ஆய்வு செய்ய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா பிந்த்ரா செகல் தலைமையில் ஒரு தீர்ப்பாயத்தை மே 27 ஆம் திகதி மத்திய அரசு அமைத்தது. இந்த தீர்ப்பாயம் டெல்லியிலும், சென்னையிலும் விசாரணை மேற்கொண்டது.

இதில் விடுதலைப்புலிகள் ஆதரவாளரான ம.தி.மு.க. தலைவர் வைகோ உள்ளிட்ட பலர் ஆஜராகி வாதிட்டனர். பின்னர் தீர்ப்பாயம் கடந்த 7 ஆம் திகதி விடுதலைப்புலிகள் இயக்கம் மீது மத்திய அரசு மேலும் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதை உறுதி செய்வது என்ற முடிவுக்கு வந்ததாக டெல்லி உயர்நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

தீர்ப்பாயம் தனது உத்தரவை மூடி முத்திரையிட்ட கவரில் வைத்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. மத்திய அரசு இதனை அறிவிக்கையாக விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(மாலைமலர்)

Read more...

சஜித் பிறேமதாஸவை நோக்கி சமூகவலைத்தளங்களில் வைரலாகும் கேள்விகள்..

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் நான்கே நாட்களே உள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸ வை நோக்கி 15 வினாக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அவ்வினாக்களாவன :

1. இலங்கையிலிருந்து பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் புலம்பெயர்ந்ததற்கும் அவர்கள் இன்றும் நாட்டின்மீது தீராத வைராக்கியங்களுடன் இருப்பதற்குமான காரணம் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல்வாதிகளால் திட்டமிடப்பட்டு யாழ் நூலகத்தை எரித்தமையும் 1983 கறுப்பு ஜூலை கலவரங்களை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டமையும் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

2. 1980 களில் வெடித்த ஜேவிபி கிளர்ச்சியின்போது மேற்கொள்ளப்பட்ட நீதிக்கு புறப்பான கொலைகளுக்கும் அக்காலகட்டத்தில் உருவெடுத்த பல்வேறுபட்ட ஒட்டுக்குழுக்கள் மேற்கொண்ட அட்டூளியங்களுக்கும் (வெள்ளைவேன்கட்தல்கள் அடங்கலாக) தங்களது தந்தை ரணசிங்க பிறேமதாஸவே பொறுப்பு என்பதை ஏற்றுக்கொள்கின்றீகளா?

3. தங்களுடைய தந்தையார் 700 அப்பாவி பொலிஸாரை ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு புலிகளிடம் சரணடையுமாறு கட்டளையிட்டார் என்பதையும் அதனூடாக நிராயுதபாணிகளான 700 பொலிஸாரையும் பட்டப்பகலில் புலிகள் சுட்டுக்கொண்டார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்கின்றீகளா?

4. இலங்கையில் சமாதானம் நிலவியபோது உங்களுடைய தந்தையார் புலிகளுக்கு கொள்கலன்களில் ஆயுதங்களை வழங்கினார் என்பதையும் அதே ஆயுதங்களை கொண்டே அவருடைய ஆட்சிக்காலத்திலேயே எமது படையினரை புலிகள் கொன்றார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்கின்றீகளா?

5. சிலவேளைகளில் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் நீங்கள் தங்களது தேர்தல் பிரச்சார மேடைகளின் முழங்குவதுபோன்று தங்களுடைய தந்தையாரின் செயல்முறைகளையே பின்பற்றப்போகின்றீர்களா?

6. தாங்கள் தேர்தல் பிரச்சார மேடைகளில் வழங்குகின்ற உறுதிமொழிகளுக்கும் தங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்குமிடையே பாரிய முரண்பாடு காணப்படுகின்றது. அவ்வாறே தங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் 3 மொழிகளிலும் வித்தியாசங்கள் காணப்படுகின்றது. இது தொடர்பான தங்களது விளக்கம் யாது?

7. வடகிழக்கு சகோதர சகோதரிகளை தங்களுக்கு வாக்களிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன:
அ. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் யாப்பை மீறும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளீர்களா?
ஆ. தங்களுக்கு தேர்தலில் ஆதரவு வழங்குவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஏதாவது ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளீர்களா?

8. கல்வி மற்றும் பொருளாதார புரட்சியில் நம்பிக்கை கொண்டுள்ள காரணத்தால் கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அதற்கான தலமைத்துவத்தை வழங்க அவரிடம் கல்விசார் பின்புலம்மொன்றுள்ளது. ஆனால் தங்களுடைய முகாமிலுள்ளவர்களே தங்களது கல்வித்தகைமையை கேள்விக்குட்படுத்துகின்ற காரணத்தினால் மக்கள் பெரிதும் சந்தேகம் கொண்டுள்ளனர்:
அ நீங்கள் உண்மையில் க.பொ.த (சஃத) , (உஃத) என்பவற்றை சித்தியடைந்துள்ளீர்களா? தங்களிடம் ஏதாவது பட்டமொன்றுள்ளதா?
ஆ அவற்றின் மூலப்பிரதியை மக்களுக்கு காண்பிக்க முடியுமா?

9. நீங்கள் வெல்லும் பட்சத்தில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பீர்களா?

10. பிணைமுறி மோசடி நடந்தது என்பதையும் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பொறுப்பு என்பதையும் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

11. நீங்கள் தெரிவு செய்யப்பட்டால் ரவி கருணாநாயக்க , மங்கள சமரவீர , ரவூப் ஹக்கீம் மற்றும் றிசார்ட் பதுயூதீன் ஆகியோரை அமைச்சர்களாக நியமிப்பீர்களா?

12. ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற நாட்டின் சொத்துக்கள் விற்கப்பட்டபோது நீங்கள் அதற்கு ஆதரவாக கை உயர்த்தி அனுமதி வழங்கினீர்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

13. அமெரிக்க மிலேனியம் சலேன்ஞ் கோப்பரேசனுடன் (MCC) செய்துகொள்ளப்படவுள்ள ஒப்பதந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியபோது அந்த அமைச்சரவையில் இருந்தீர்கள் என்பதையும் அதனை எதிர்க்கவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

14. நீங்கள் ஜனாதிபதியானால் MCC , ACCA and SOFA போன்ற ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவீர்களா?

15. உங்களுடைய அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

இத்தனை கேள்விகளுக்கும் ஆம் அல்லது இல்லை என்ற தெளிவான பதிலை கூறுவீர்களாயின் உங்களுக்கு வாக்களிக்கும் மக்களில் நானும் ஒருவனாவேன்..


Read more...

பிரச்சார நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஆளுநர்களை இடைநிறுத்துமாறு ஜனாதிபதியை கோருகின்றார் மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படும் நான்கு ஆளுநர்களை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோட்டாபயவின் தேர்தல் பிரச்சாரத்தில் நான்கு ஆளுநர்கள் பகிரங்கமாக செயற்படுவதாக, தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளால் மஹிந்த தேசப்பிரியவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. இதையடுத்தே, ஜனாதிபதியிடம் இந்த விடயம் குறித்து கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறிப்பிட்ட நான்கு ஆளுநர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு தகவல் அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read more...

ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பு நீதிமன்றை அவமதிக்கும் செயலாகும் - மஹேஷ்!

ரோயல் பார்க் கொலை சம்பவத்தின் குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியது நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். இவ்வாறான நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி வேட்பாளர் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் மேற்கொள்ளப்படுவது பொருத்தமில்லை. நீதிபதிகள் தீர்பொன்றை வழங்குவதாக இருந்தால் அது சாதாரணமாக வழங்கமாட்டார்கள். அதனால் நீதிமன்றத்துடன் தொடர்புபட்ட விடயங்களை நீதிமன்றங்களுக்கே அதனை விட்டுவைக்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என்றும் கூறினார்.

தேசிய மக்கள் கட்சி தேர்தல் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

Read more...

நான் மக்களுக்கு மாத்திரமே பொறுப்புக் கூற வேண்டியவனாக உள்ளேன் – கோட்டாபாய

மக்களுக்கு மாத்திரமே பொறுப்புக் கூற வேண்டியவனாக உள்ளேன் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஸவை தேர்தல் தொடர்பான விவாதத்திற்கு தொடர்ச்சியாக அழைப்பு விடுத்தார்.

ஆனால் கோட்டாபய ராஜபக்ஸ எந்ததொரு பதிலும் அளிக்கவில்லை.

இந்நிலையில் தனியார் ஊடகமொன்று வழங்கிய நேர்காணலில் சஜித்தின் அழைப்புக்கு கோட்டாபய மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:

எனது கொள்கைகளை பொதுமக்களிடம் கூறியுள்ளேன். அத்துடன் இந்த மாதிரியான விவாதங்களில் கலந்துகொள்வதினால் எந்ததொரு பயனும் ஏற்படப்போவதில்லை.

என்னை போன்று மக்களிடம் ஏனைய வேட்பாளர்களும் தங்களின் கொள்கைகள் தொடர்பாக கூற முடியும்.

குறித்த கொள்கைகள் அனைத்தையும் கவனத்திற்கொண்டு மக்களே இறுதியாக முடிவு எடுப்பார்கள் அத்துடன் உண்மையாகவே சேவையாற்றக்கூடியவர்கள் யார்? அல்லது திறமையற்றவர்கள் யார்? என்பதை மக்கள்தான் இனங்கண்டு அதற்கமைய செயற்பட வேண்டும்.

இதேவேளை நான், ஏனைய தேர்தல் வேட்பாளர்களின் பெயரை தவறாக பிரயோகித்து இழிவான தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்கவில்லை.

தங்களை அதிகமாக சோதனை செய்தார்கள் என பொய்களை கூறினாலும் நான் அவர்கள் குறித்து பேசவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Read more...

முஸ்லிம் சமூகத்தை நிந்தனைப்படுத்தி ஞானசேர தேரரை விடுதலை செய்யக் கூறியவர் ஹிஸ்புல்லாஹ்தான்-றிசாட்

கடந்த அரசாங்கத்தில் மிக மோசமாக இனவாதத்தை விதைத்து முஸ்லிம் சமூகத்தை நிந்தனைப்படுத்தி ஞானசேர தேரரை விடுதலை செய்யவேண்டும் என்று கூறியவர் ஹிஸ்புல்லாஹ்தான். அதனை அவர் தனது சுயநலத்துக்காவே செய்தார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த புதிய ஜனநாயக தேசிய முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் சனிக்கிழமை(9) இரவு கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்

இந்த நாடு ஒரு அழகான நாடாகும். இங்கு நாம் ஒற்றுமையாகவும் சுதந்திரமாகவும் வாழவேண்டும். 30 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்ற யுத்தில் நாம் இழந்தவை ஒன்றிரண்டல்ல உயிர்களையும் உடைமைகளையும் சொத்துக்களையும் இழந்து அன்று வீதியில் நின்றோம்.

மீண்டும் இவ்வாறான ஒரு நிலைக்கு நாட்டை கொண்டுசெல்ல துடிக்கிறார்கள். சஜித் பிரேமதாசவுடன் ஒப்பந்தம் செய்யவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். கடந்த 31 ஆம் திகதி என்னை மட்டுமல்ல அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட முஸ்லிம், சிங்கள, தமிழ் தலைவர்கள், சமயப் பெரியார்கள் என இந்த நாட்டின் இரண்டு கோடியே 25 இலட்சம் மக்களோடு செய்து கொண்ட ஒப்பந்தம்தான் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த நாட்டினுடைய தலைவரை கொண்டு வருவதற்கு நாங்கள் கட்சி பேதங்களை கடந்து ஏன் ஒன்றுபட்டிருக்கிறோம் என்று நீங்கள் சிந்திக்க வேண்டும். சாதாரண தேர்தலாக இதை கருத முடியாது. சிறுபான்மை மக்கள் தங்களது மத , இன, கலாசார விழுமியங்களை நிம்மதியாக நிறைவேற்ற நமக்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேர்தலாக அமைந்திருக்கிறது.

சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு இல்லாமலே வெற்றி பெற்று காட்டுவோம் என பேரினவாத சக்திகள் இனவாதத்தையும், மதவாதத்தையும் பேசி இந்த நாட்டை குட்டிச்சுவராக்கி கடந்த ஆயிரத்து நூறு வருடங்களாக சமாதானத்தையும் , இன ஒற்றுமையையும் பேணி வந்த சமூதாயத்தை அநியாயமாக கடந்த பத்து வருடங்களாக சீண்டி நிம்மதியை குலைத்து எமது வியாபார தளங்களையும் அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்பவர்கள். அந்த ஆட்சி காலத்திலும் இந்த ஆட்சி காலத்திலும் செய்பவர்கள் ஒரே கூட்டத்தினரே.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் மினுவாங்கொடையிலும், கெப்படிபொலயிலும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் சமூகத்தின் சொத்துகளையெல்லாம் சேதமாக்கினார்கள். மூன்று மாதம் கழித்து கைது செய்து பார்த்தால் அந்த மொட்டு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களும் , பல வேட்பாளர்களும் இருந்தார்கள். அனைவரையும் பிடித்து சிறையில் அடைந்தவர்கள் எங்களுடைய அரசு.

அன்று அந்த அநியாயங்களை செய்த அமித் வீரசிங்க உட்பட அனைவரும் மொட்டு கட்சிக்கு ஆதரவாக நிற்கின்றனர். கடந்த அரசிலே நாங்கள் அமைச்சராக இருந்து போய் சொன்னோம் அவர்களது சீசீரீவி புகைப்படங்களை போய் கொடுத்தும் அவர்கள் எவரும் கைது செய்ய படவில்லை என முழங்கினார்.


சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பேசுகையில்.

சேதமில்லாத விட்டு கொடுப்பு.


கல்முனை என்பது தமிழர்களும் , முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்தாலும் அவ்வப்போது எங்களுக்குள்ளே முரண்பட்டுக்கொண்டிருக்கிறோம். அதில் முக்கியமானது கல்முனை பிரதேச செயலக விவகாரம் இந்த கோரிக்கையை மிக நியாயமான அடிப்படையில் கல்முனையில் வாழுகின்ற முஸ்லிம்கள் காலம் காலமாக இந்த பிரதேசத்தில் இருந்து அடிப்படை உரிமைகளை இழந்துவிட கூடாது என்ற நிலைமைக்கு மிக கவனமாக இருந்து நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நண்பர்களோடு கதைத்திருக்கிறோம். முக்கியமாக அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவர்களோடும், ஏனைய உறுப்பினர்களோடும் பேசி ஒரு தீர்க்கமான முடிவுகளை கொண்டுவருவதற்கான முயற்சியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் உட்பட நாடாளுமன்ற குழு உறுப்பினர்களும் இது தொடர்பான சரியான விளக்கத்தை எங்களுடைய சனாதிபதி வேட்பாளருக்கு கொடுத்திருக்கிறோம்.

எங்கள் சனாதிபதி யின் ஆட்சி இந்த பிரதேசத்தில் புரையோடிப்போயுள்ள பிரச்சினைகளுக்கு நிதந்தர தீர்வை தருகின்ற ஆட்சியாக இருக்கும். இது தொடர்பாக நான் சனாதிபதி வேட்பாளர் அவர்களுக்கு நீண்டதொரு விளக்கத்தை கொடுத்துள்ளேன்.

இரண்டு தரப்பும் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று இருக்காமல் விட்டுக்கொடுப்போடு இரண்டு தரப்பும் சேதம் இல்லாமல் முடிவை எடுக்க தயாராக இருக்கிறார்கள். கௌரவ பிரச்சினையாக பார்க்காமல் வருகின்ற ஆட்சி சஜித் பிரேம தாஸவின் ஆட்சியா இருக்கும் அதில் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதை கூறிக்கொள்கிறேன்.

சாய்ந்தமருது மீனவர்களது பிரச்சினை சாதாரண பிரச்சினை இல்லை சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அடி நாதமாத இருக்கின்ற மக்களின் பிரச்சினை . கல்முனை பிரதேச நீர்நிலைகளுக்கு பாதகம் ஏற்படாத வகையில் பாரிய நகரமயமாக்கலை ஏற்படுத்தி அபிவிருத்தி செய்து காட்டுவோம். அன்று மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு கொடுத்த ஆதரவை போல் நாம் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் வழங்க வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா

அலுகோசுகளில் ஒருவரே சனாதிபதி வேட்பாளராக நிற்கின்றார்.

2015 வெற்றிக்காக நீங்கள் அளித்த ஆதரவை போன்று வரும் சனாதிபதி தேர்தலில் வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களையும் நீங்கள் ஆதரிக்க வேண்டும். அதற்கு முன்பு மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் நரகத்தில் வாழ்ந்தோம் அதை போன்ற உணர்விலே இருந்தோம் . அவரை சுற்றியிருந்தவர்கள் அலுகோசிகள் அவர்களில் ஒரு அலுகோசுதான் சனாதிபதி வேட்பாளராக நிற்கின்றார். 2015 ஆண்டு அவரது மெதமுல்லையில் அவரை தோற்கடித்து சன்னலில் தொங்க வைத்தோம் அதையே மீண்டும் செய்வோம்.

வெள்ளை வேன் கலாச்சாரம் எமது ஆட்சிக்காலத்தில் தான் ஒழிக்கப்பட்டது. மஹிந்தவின் ஆட்சி காலத்தில் வெளிநாட்டு தூதர்கள் யாரும் அவர்களை சந்திக்க சந்திக்க விரும்பவில்லை . அவர்கள் சமாதானத்தை விரும்பவில்லை என்பதே இதற்கு காரணம்.

லிபியாவில் சர்வாதிகாரியான கடாபியை மகிந்த ராஜபக்ச சந்தித்து வந்தபின்னர் அந்த நாட்டு மக்களே புரட்சி செய்து கொன்றனர். அதே போன்றே மஹிந்த அரசியல் புரட்சி மூலம் தூக்கியெறியப்பட்டார்.

தர்கா நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்ட கலவரம் கோட்டாபய ராஜபக்ச விருப்பத்திற்காக மேற்கொள்ளப்பட்டது.

மீண்டும் ஒரு யுத்தத்தை இந்த நாட்டு மக்கள் விரும்பவில்லை . ஒரு நாட்டிற்குள் இன்னோரு இனம் இரண்டாம் குடி மக்களாக வாழ்வதை நாங்கள் விரும்பவில்லை. மொட்டு கட்சிக்குள் இருப்பவர்களின் கை சுத்தமில்லாமல் இருக்கின்றனர் அவர்கள் ராஜாவாக இருக்க விரும்புகின்றனர்.

சஜித் பிரேமதாஸ சனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதில் எமக்குள் சிக்கல்கள் இருந்த போதும் நாங்கள் பேசி முடிவெடுத்தோம். மகிந்த குடும்பம் அவ்வாறில்லை. அண்ணன் சொல்வார் அனைவரும் ஏற்க வேண்டும் .சஜித் பிரேமதாச என்னை பாதுகாப்பு அமைச்சராக நியமிப்பதாக உறுதி வழங்கியுள்ளார். அவ்வாறான நல்ல மனிதர் சஜித் பிரேமதாச என்பதை கூறிக்கொள்ள விரும்ப விரும்புகிறேன்.
மீண்டும் ஒரு யுத்தம் இந்த நாட்டில் இடம்பெற விடமாட்டோம் . ஷஹ்ரான்கள் உருவாகவும் விடமாட்டோம் . அவர்களை ஆதரிப்போரையும் கண்காணித்து நல்வழிக்கு கொண்டு வருவோம்.

தண்ணீர் கேட்ட மக்களை சுட்டு கொன்றவர் கோட்டாபய ராஜபக்ச இன்று இரவில் தூங்க முடியாது தவிக்கிறார் . சுட்டவர் சிறையில் இருக்கிறார் சுட சொன்னவர் வெளியில் சனாதிபதி வேட்பாளராக நிற்கின்றார். ஆயிரத்திற்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற லெப்டினட் கேணல்கள் இந்நாட்டில் இருக்கின்றார்கள். அனைவரையும் சனாதிபதி வேட்பாளராக நிறுத்த முடியுமா? என கேள்வியெழுப்பினார்.

புதிய ஜனநாயக முன்னணியின் சனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச

வாக்குறுதிகளை அள்ளி வழங்கிய சானாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கல்முனை பிரதேச அபிவிருத்தி உட்பட அனைத்து விடையங்களையும் தனது ஆட்சியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம் .ஹரீஸ் அவர்களிடம் ஒப்படைப்பதாக வாக்குறுதிகளை வழங்கினார்.

ஒளி வீசும் நகரமாக மாற்றியமைப்பதோடு புதிய வியாபார கட்டிட தொகுதியையும் அமைத்து தருவதாக தெரிவித்தார். கல்முனை , நற்பிட்டிமுனை,பாண்டிருப்பு ,மருதமுனை உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களும் பாரிய அபிவிருத்திகளை பெறும். பாஷை புரியாவிட்டாலும் அனைத்தையும் கையேட்டில் குறித்து வைத்துள்ளேன் 17ம் திகதி வேலைகளை தொடங்குவதற்கு .

கல்முனைக்கும் பிரேமதாச குடும்பத்திற்குமான உறவு இன்று நேற்றயதல்ல . ரணசிங்க பிரேமதாச முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர் அஷ்ரப் அவர்களுடைய காலத்திலிருந்து இன்றுவரை அந்த உறவு இருக்கின்றது.

வடகிழக்கு மாத்திரமல்ல முழு இலங்கையிலும் ஒரு விடையம் நடக்கிறது அதுதான் முஸ்லிம்களிடம் சென்று தமிழர்களை போட்டு கொடுப்பதும், தமிழர்களிடம் போய் முஸ்லிம்களை போட்டு கொடுத்து பிரச்சினையை உண்டாக்குவதும் , சிங்களவர்களிடம் போய் தமிழர்களை போட்டுக்கொடுக்கின்ற வேலையைத்தான் எதிரணியினர் செய்து வருகின்றனர். இது குடும்ப ஆட்சிமுறையை தக்க வைத்து கொள்ளவே இந்த நடவடிக்கை அரங்கேற்றிக்கொண்டு இருக்கின்றனர்.

அளுத்கம, பேருவளை போன்ற பிரதேசங்களில் பள்ளிவாசல்களை உடைத்தவர்கள் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு வந்து அந்தப் பிரதேசத்திற்கு தீர்வினை பெற்று தருவதாக கூறுகின்றனர் . அங்கு பள்ளிவாசலை உடைத்தார்கள் சாய்ந்தமருதிற்கு எவ்வாறு தீர்வினை பெற்று தருவார்கள் என்ற கேள்வியை உங்கள் முன் வைக்கின்றேன் .

அதே போன்று கல்முனைக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றும் ,முஸ்லிம்களுக்கு ஒன்றுமாக அவர்கள் பேசி திரிகிறார்கள். இவர்களிடம் என்ன தீர்வு இருக்கிறது.

நானே கல்முனைக்கு வந்து சிறப்பான தீர்விற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பேன் சஜித் பிரேமதாசவை விசுவாசியுங்கள் என தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், மாநகரசபை முதல்வர், பிரதி முதல்வர் , மாநகரசபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் , பொதுமக்களும் கலந்துகொண்டனர் .

பாறுக் ஷிஹான்.

Read more...

1ம் தர அனுமதிக்காக 5000 – 50000 வரை கப்பம் பெறும் பாடசாலை அதிபர்! நல்லாட்சி நித்திரையில்..

நல்லாட்சி என்ற பெயரிடப்பட்டுள்ள அரசில் பொல்லாட்சியே நடைபெறுகின்றது. அரச நிறுவனங்கள் தோறும் பிரஜைகளின் அடிப்படை உரிமைகள் எண்கணக்கில்லாது மிறப்படுகின்றமையும் இலங்கையின் மனித உரிமைகள் அணைக்குழு ஆழ்ந்த நித்திரையில் அமிழ்ந்துள்ளமையும் யாவரும் அறிந்த விடயம்.

இந்நிலையில் கல்முனை கல்விமாவட்டத்தின் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு உட்பட்ட அக்/அரசினர் முஸ்லிம் வித்தியாலய அதிபர் எதிர்வரும் 2020 ஆண்டுக்கான 1ம் தர மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காக பெற்றோர் பாதுகாவலர்களிடமிருந்து ரூபா 5000 – 50000 வரை பெற்றுக்கொள்வதாக பிரதேச மக்கள் பெரும்விசனமடைந்துள்ளனர்.

இதேவாறான பண அறவீடு கடந்த வருடமும் இடம்பெற்றது. இதனைத் தடுக்க பதில் வலயக்கல்விப் பணிப்பாளர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கும் மக்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளர் இப்பாடசாலை மாணவர் அனுமதியை தனது விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டுவரவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் சிறிய பாடசாலை மாணவர்களை இங்கு கவருவதை தடுக்க வேண்டும், பாடசாலைக்கான அனுமதி வழங்குவதில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நியதிகள் கடைப்பிடிக்கப்படவேண்டும், அறவிடப்பட்ட பணம் பெற்றோரிடம் மீளஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இவ்விடயத்தில் நீதி , ஒழுங்கை கடைப்பிடிக்காத அதிபர் உட்பட்ட அனைவரும் நீதியின் முன்நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Read more...

பெரும்பாண்மை சிறுபாண்மை என்ற மரபை உடைத்தெறிந்து சகோதரஇனங்கள் என ஆட்சி புரிவோம். கூறுகின்றார் பசில்.

இந்நாட்டில் காணப்படும் பெரும்பாண்மை சிறுபாண்மை என்ற மரபினை உடைத்தெறிந்து சகோதர இனங்கள் என்ற கொள்கையுடன் எதிர்காலத்தில் ஆட்சியை கொண்டு செல்வோம் எனத் தெரிவித்துள்ளார் பசில் ராஜபக்ச.

மட்டக்களப்பு மாவட்ட சிறிலங்கா மக்கள் இளைஞர் முன்னணி தலைவர் ரீ.ஹரிபிரதாபின் ஏற்பாட்டில் கல்முனையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவிற்கு ஆதரவாக பிரசார கூட்டம் செவ்வாய்க்கிழமை(12) காலை அ.நிமலன் மற்றும் ஜெ.சி.கிஷாந்தன் ஆர்.சி றஜீவகுமார் தலைமையில் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் :

கிழக்கு மாகாணத்தில் 54 ஆயிரம் படித்த இளைஞர்கள் இருக்கிறார்கள் . தமிழ் தேசிய கூட்டமைப்பு 2015 ம் ஆண்டு எங்களை தோற்கடித்து தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள் தங்களது பைகளை நிரப்பி கொண்டதை மாத்திரம் செய்தனர். இந்த நல்லாட்சி ஆட்சியிலே பௌத்த விகாரையில் கோவில் பள்ளிவாசலுக்கு போவற்கு மக்களுக்கு பயமாக இருக்கிறது. மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல அச்சப்படுகின்றார்கள் . இந்த அச்ச நிலைமையை இல்லாது செய்ய கோட்டாபாய ராஜபக்ச காத்துக் கொண்டு இருக்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் 17ம் திகதி முதல் 1ம் திகதிக்குள் ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்போம் இந்த அரசாங்க படித்த இளைஞர்களுக்கு தொழில் வழங்காது புறக்கணிப்பை செய்து வருகின்றது.

இந்த ஆட்சியில் விவசாயத்தில் மக்கள் நெருக்கடியை சந்தித்து தாய்மார்கள் இ பெண்களின் நகைகள் அடகு வைக்கப்பட்டு பெரும் பொருளாதார நெருக்கடியில் இருகின்றனர் கோட்டாபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்து அவற்றை மீட்டு எடுக்க கூடிய விதத்தில் விவசாயத்திற்கு பல்வேறு சலுகைகளை வழங்கி நகைகளை மீட்டெடுக்கும் பொற்காலமாக அமையும்.

கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்து மூன்றே நாட்களில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தி இந்த பிரதேச மக்களின் அவலத்தை துடைத்தெறிவார் . இந்த நாட்டில் சிறுபான்மை, பெரும்பான்மை, என்ற மரபு உடைத்தெறிந்து சகோதர இனம் என்றே பொதுஜன பெரமுன ஆட்சியில் இருக்கும் என குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிரியானி விஜய விக்கிரம பைசர் முஸ்தபா உள்ளிட்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

பாறுக் ஷிஹான்









Read more...

கோத்தாவை வெற்றிபெறச் செய்ய ரீஎன்ஏவின் உதவி தேவையில்லை! வரதராஜப் பெருமாள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களின் வாக்குரிமையை அவர்களின் விருப்பின்பேரில் திருப்பிக்கொள்வதற்கு முயற்சிசெய்தாலும், கோத்தபாய ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்ய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகள் தேவையில்ைல என வடக்கு - கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலாவது முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் முல்லைதீவில் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக பொதுஜன பெரமுனவிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுகின்ற கோத்தபாய ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஏற்பாடுசெய்யப்பட்டடிருந்த மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நாட்களில் வடக்கில் இடம்பெற்றுவருகின்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் கூட்டங்களில் பெரும்பான்மையாகக் கலந்துகொள்ளு் தமிழ் மக்களைக் காணும்போது, தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாயைக்குள் மயங்கிய காலம் மலையேறி விட்டது என்பதும் அவர்களால் சிந்தித்துச் செயலாற்ற முடியும் என்பதும் தெளிவாகின்றது என்றார்.

தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போலிப் பேச்சுக்களுக்கு மக்கள் மயங்கியதற்கான காரணம் அவர்கள் கொடிய யுத்தத்திற்குள் மாட்டிக்கொண்டு, வெளிவந்ததனால்தான். தற்போது அவர்களுக்கு உண்மையென்றால் என்னவென்று தெரிகின்றது, இப்போது அவர்கள் யாரை விரும்புகின்றனரோ அவருக்கு வாக்களிப்பார்கள்...

தமிழ் மக்களின் தமிழ் அரசியலையும் பிளவுபடுத்தியது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே என்றும் அதன்மூலம் சஜித் பிரேமதாச அரசியல் லாபம் பெருவார் என்றும் வரதராஜப் பெருமாள் குறிப்பிட்டார்.

Read more...

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி நான் என்பது உறுதி! - சஜித்

தான் தாய்நாட்டின் பரிசுத்தமான குடிமகன் என்றும், இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தான் என்பது தற்போது உறுதியாகியுள்ளது என்றும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

16 ஆம் திகதி அசல் இலங்கையன்ஒருவரை ஜனாதிபதியாக நியமிப்பதற்கு முழு நாடும் ஒன்றுபட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Read more...

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் கோத்தாவின் கைங்காரியமாம்! நாடெங்கிலும் எதிர்ப்பார்பாட்டத்திற்கும் ஏற்பாடு !

ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷவே எனக்கூறி ஐக்கிய தேசிய முன்னணி ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் நகரங்கள் பலவற்றில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

எதுஎவ்வாறாயினும், இந்தத் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத் தேர்வுக் குழு மற்றும் ஜனாதிபதியின் விஷேட விசாரணை ஆணைக்குழு மூலம் இதுவரை கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்படவில்லை.

நூற்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் இந்தத் தாக்குதல் தொடர்பில் அபாய எச்சரிக்கைகள் மேலிடங்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்த போதும், ஒருவரும் இதுதொடர்பில் அக்கறை காட்டாமலிருந்தமை தொடர்பில் அவர்களுக்கு எதிராக தொடர்ந்து குற்றம் சுமத்தப்பட்டு வந்துள்ளமை தெரிந்ததே.

Read more...

இன்று நாடெங்கிலும் சஜித் அலையே வீசுகின்றது....! - மங்கள சமரவீர

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 70 வீதமானோர் இன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்த்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு சென்ற வாரம் உத்தியோகபூர்வமாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது பற்றித் தெரிவித்திருந்தமையை நாங்கள் சென்ற வாரம் தெரிந்துகொண்டோம். எனவே ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி என்பது உறுதியே என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவத்தார்.

வெலிகம - மதுராப்புரவில் நேற்றிரவு (11) இடம்பெற்ற, சஜித்திற்கான வெற்றியை உறுதிப்படுத்தும் மக்கள் சந்திப்பின்போதேஅமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

'சஜித்தின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நாட்டின் பல்வேறு அமைப்புக்கள் உத்தியோகபூர்வமாகத் தங்கள் ஆதரவை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளன. வடக்கு - கிழக்கு மட்டுமன்றி நாடெங்கிலும் இன்று சஜித் அலையே வீசுகின்றது. நேற்று முன்தினம் சம்மாந்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர். காலி முகத்திடலில் கூடிய மக்கள் தொகையை விடவும் அதிகமானோர் அங்கு கூடினர். மேலும் முஸ்லிம்களின் பெரும் ஆதரவு சஜித்திற்குக் கிடைத்துவருகின்றது.

இனவாதத்தை - அடிப்படைவாதத்தைப் பூண்டோடு அழிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி உறுதி செய்துள்ளது. எனவே, இலங்கையர் அனைவரும் அச்சமின்றி ஒன்றாக வாழ வேண்டுமாயின் அன்னச் சின்னத்தை வெற்றிகொள்ளச் செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டார்.

இங்கு முன்னாள் மாத்தறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மதுருபால எதிரிவீர, வெலிகம பிரதேச சபை உறுப்பினர் அஜ்மல் ஸத்தார் ஆகியோரும் உரையாற்றினர்.



Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com