Thursday, September 26, 2019

ஜதேகவின் அடுத்தக் கட்ட நகர்வுகள் ஆரம்பம்

ஐக்கிய தேசிய கட்சியினர் கட்சியின் மாநாட்டை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதியும் தமது மக்கள் பலத்தை நிரூபிக்கும் கூட்டத்தை 10 ஆம் திகதியும் நடத்தவுள்ளதாக கட்சியின் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பட்டத்தன் பின்னர் சிறிகொத்தாவில் இடம்பெற்ற விசேட ஊடவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவற்றை கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த தீர்மானம் எடுக்க ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுவும் பிரதமர் தலைமையில் கூடி இணக்கம் கண்டது.

இதன்போது தேர்தல் முறைமையில் மாற்றங்களை கொண்டுவருவது மற்றும் பிரதமரின் இணக்கப்பாட்டுக்கு அமைய நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது ஒழித்தல் உள்ளிட்ட எமது அரசாங்கம் இணக்கம் தெரிவித்த அரசியல் அமைப்பு முறைமையை உருவாக்குவதால் முதல்கொண்டு அனைத்தையும் நிறைவேற்றுவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. இவை தெரிவுக்குழுவிழும் பாராளுமன்ற குழுவிலும் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்துடன் பிரதமர் மற்றும் கட்சியின் தலைமைப்பதவி ரணில் விக்கிரமசிங்கவிடம் தொடர்ந்தும் இருக்கும். இதற்கும் அனைவரும் இணைக்கம் தெரிவித்தனர். எமது ஜனாதிபதி -எமது பிரதமரின் தலைமையில் ஆட்சியை உருவாக்க சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.
அத்துடன் நாம் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியாக இணைந்து பரந்த கூட்டணியாக தேர்தலில் களமிறங்கவுள்ளோம். இதுவரை எம்முடன் இணையாத கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பரந்த கூட்டணியாக வெற்றியை பெற்றுக்கொள்ளவே தீர்மானம் எடுப்போம் என்றார்

Read more...

2020 இல் அரச ஊழியர்களுக்கு அதிஸ்டம்

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட வேதன ஆணைக்குழுவின் பரிந்துரையின் படி 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரசு ஊழியர்களின் மாத சம்பளம் 3 ஆயிரம் ரூபா முதல் 24 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இது, 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரச ஊழியர் ஒருவரின் அடிப்படை சம்பளமானது, 2015 ஆம் ஆண்டில் அவரது அடிப்படை சம்பளத்தில் 107 சதவீத சம்பள அதிகரிப்பாகும்.

இந்த வேதன அதிகரிப்பின் ஊடாக அரச சேவையின் பல்வேறு துறைகளில் காணப்பட்ட வேதன முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கக்கூடும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேதன முரண்பாட்டை தீர்த்துக் கொள்வதற்கு தேவையான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு எஸ்.ரனுக்கேவின் தலைமையில் கீழ் 11 பேர் அடங்கிய ​வேதன மறுஆய்வு ஆணையம் ஒன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.

இதன் பிரதிபலனாக அரச துறையில் அனைத்து ஊழியர்களினதும் வேதனம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மேலும் அதிகரிக்கும் நிலையில், விசேடமாக ரயில் மற்றும் தபால் சேவைகளில் உள்ள வேதன முரண்பாடுகள் இதனூடாக தீர்க்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

ஐ.நா வின் அமைதிகாக்கும் படையிலிருந்து இலங்கை இராணுவம் வெளியேற்றம். ஆட்சி மாற்றம் உறுதியானது!

எதிர்வரும் காலங்களில் இலங்கைப் இராணுவத்தினரை ஐ.நா அமைதிப்படையில் இணைத்துக் கொள்வதை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் அமைதி காப்புத் திணைக்களம் முடிவு செய்துள்ளது.

மேற்படி முடிவினை ஐ.நா பேச்சாளர் பர்ஹான் ஹக் நேற்று நியுயோர்க்கில் அறிவித்துள்ளார்.

தமது இந்த அதிரடி முடிவுக்கு காரணம் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்:

பாதுகாப்புக்கு அவர்களின் பங்கு மிகஅவசியமானது என்ற சூழல் தவிர்ந்த நிலையில், சிறிலங்கா இராணுவத்தின் புதிய படைப்பிரிவுகள் இனிமேல் ஐ.நா அமைதிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படாது என்றும், ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

'தற்போது ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவ அணி மற்றும் அதிகாரிகளை கொழும்புக்கு அனுப்பும் பணி அடுத்தமாதம் ஆரம்பமாகும்.

சுழற்சி முறையில், அவர்களின் பணி நிறைவுக் காலத்தின் அடிப்படையில், இவர்கள் வெளியேறுவார்கள். இவர்களுக்குப் பதிலாக புதிய படையினர் சிறிலங்காவில் இருந்து ஏற்றுக் கொள்ளப்படமாட்டார்கள்.

ஐ.நாவின் ஆறு அமைதிகாப்பு நடவடிக்கைகளில் சிறிலங்கா பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. ஆனால் அதனை லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம், குழப்பி விட்டது என்றும் அவர் நீலிக்கண்ணீர் வடித்துள்ளார்.

அதேநேரம் இதுவரை காலம் இலங்கைப் படையினர் மேற்கொண்ட சேவைகளுக்கு அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் ஐ.நா வின் இச்செயற்பாடானது இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று நிகழவுள்ளது என்பதனை உறுதி செய்துள்ளது. கடந்தமுறை ஜனாதிபதி தேர்தலின்போது தமக்கு ஏதுவான அரசாங்கம் ஒன்றை நிறுவி இலங்கை வழங்களை சுரண்டிக்கொண்டிருந்த மேற்குலகம் தற்போது ஆட்சி மாற்றத்திற்கானதோர் ஏதுநிலை தென்படுகையில் நிலைமைகளை இறுக்கி பேரம்பேசலுக்கான வசதிகளை உருவாக்கி கொள்கின்றது.

Read more...

திலீபனை பதவியிறக்கம் செய்துவைத்துள்ளார் மேயர் ஆனோல்ட!

புலிகள் அமைப்பின் உறுப்பினராகவிருந்து எட்டமுடியாத இலக்குகளை முன்வைத்து இறந்தவர் திலீபன். அவரது நினைவு நாள் இன்று யாழ்ப்பாணத்தின் இடம்பெற்றது. இந்நினைவு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நிபந்தனை விதித்துள்ளனர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர்கள்.

அதாவது திலீபன் புலிகள் அமைப்பை சேர்ந்தவனான அடையாளங்களை கொண்டிருக்கும் பட்சத்தில் அந்நிகழ்வில் தம்மால் கலந்து கொள்ள முடியாது என்றும் திலிபனுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பால் ஒரு பொது மகனுக்கு செலுத்தும் அஞ்சலியே செலுத்தமுடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே தீலிபனுக்கு வழங்கப்பட்டுள்ள லெப்டினட் கேணல் பதவிநிலை கழையப்பட்ட நிலையிலேயே தாம் கலந்து கொள்வது என்ற முடிவை எடுத்துள்ளனர். அதன்பிரகாரம் திலீபனுக்காக அமைக்கப்பட்டிருந்த கட்டவுட்களில் காணப்பட்ட லெப் கேணல் என்ற பதவியை கழற்றுமாறு கட்டளையிட்டுள்ளார் யாழ் மாநகர மேயர் ஆனோல்ட்.

அதன் பின்னர் கட்டவுட்களில் எழுதப்பட்டிருந்த „லெப் கேணல்' என்ற பதவி கறுப்பு ஸ்ரிக்கர்களால் மறைக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டபின்னரே அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அவ்விடத்திற்கு சென்றதாக அறியமுடிகின்றது.

திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்தார் என்று கூறப்பட்டாலும் அவர் புலிகள் அமைப்பினால் நயவஞ்சகமாக கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி பலருக்கும் தெரியாத விடயமாகும். திலீபன் ஒரு கடும் நோயாளி. நோயாளி ஒருவர் அஹிம்சை போராட்டங்களில் ஈடுபடமுடியாது என்ற விதிகளை மீறி புலிகள் அவரை உண்ணாவிரதத்தில் இறக்கினர்.

உடல்நிலை பாதிப்படைந்தபோது உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாத திலீபன் உண்ணா விரதத்தை கைவிடுகின்றேன் தண்ணியை தாங்கோடா என மேடையிலிருந்து சத்தமிட்டார் ஆனால் அவரை புலிகள் உண்ணவிரதத்தை கைவிட அனுமதியாது மரணமடையச் செய்தனர். உடனடியாக மக்களை அவர் இருந்த மேடையிலிருந்து அவர் தண்ணி கேட்கும் சத்தம் கேளாத தூரத்திற்கு அப்பால் வேலி அமைத்து விரட்டிய புலிகள் அந்த மேடையில் திலீபனை பலவந்தமாக வைத்திருந்து கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

இழுபறி முடிவுற்றது. ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸ. சின்னம் அன்னம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பான வேட்பாளர் நியமன விடயத்தில் நிலவிவந்த இழுபறி சற்றுமுன்னர் முடிவுக்கு வந்துள்ளது. இன்று பிற்பகல் 3 மணிக்கு கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தமது கட்சியின் வேட்பாளராக சஜித் பிறேமதாஸவை நிறுத்துவது என்ற முடிவை எட்டியுள்ளதுடன் அம்முடிவை சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் 3 விசேட நிபந்தனைகளுடன் சஜித் பிறேமதாஸவிற்கு சந்தர்ப்பம் வழங்குவது என்ற முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் கட்சியின் தலைவராக செயற்படுவார், தேர்தலில் வெற்றிபெற்றால் 6 மாதங்களினுள் நிறைவேற்று அதிகார முறைமையை ஒழித்து பிரதமருக்கு அதிக அதிகாரங்களை வழங்கவேண்டும் என்ற நிபந்தனைகளுடன் மேற்படி வேட்பாளர் நியமனம் இடம்பெற்றுள்ளது.

ஆனால் அவ்வாறான எந்தவொரு நிபந்தனைகளையும் தான் ஏற்றுக்கொள்ளவில்லை என சஜித் பிறேமதாச தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இம்முறையும் ஐக்கிய தேசியக் கட்சி அன்னம் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக முடிவு செய்துள்ளனர். கடந்த இரு ஜனாதிபதித் தேர்தல்களையும் அவர்கள் அன்னம் சின்னத்திலேயே போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

இனி ஒருபாேதும் பயங்கரவாதமும் அடிப்படைவாதமும் இலங்கையில் தலைதுாக்க இடமளியேன்! - கோத்தா

மற்றுமொருமுறை பயங்கரவாதம் அல்லது அடிப்படைவாதம் நாட்டில் ஏற்படுவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்.

பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாத்துள்ளோம். மீண்டும் ஒருபோதும் அவ்வாறு பயங்கரவாதம் தலைதுாக்கதிருக்க நாம் ஆவன செய்ய வேண்டும். "இராணுவ வீரர்கள் என்றும் இராணுவ வீரர்கள்தான்" என்றுகூறி, அவர்களைப் பாதுகாப்பேன் என்று இன்று இடம்பெற்ற இராணுவ வீரர்களின் குடும்ப அமைப்பு ஒன்றுகூடலின்போது உறுதியளித்துள்ளேன் என ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ வீரர்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Read more...

திருமலையில் இரண்டு சிலைகள் உடைப்பு... கிழக்கு அடிப்படைவாதிகளின் செயல் எனச் சந்தேகம்!

திருகோணமலை - அபயராம விகாரையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சிலைகள் இரண்டு சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பில் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாகவும் உப்புவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த விகாரையின் விகாராதிபதி மானிங்கமுவே விமலஜோதிஸ்ஸ தேரரின் முறைப்பாட்டின் பேரிலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விகாரையின் சைத்தியத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளபுத்த சிலைகளின் தலைகள் உடைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் கருத்துத்தெரிவித்த பலகல விகாராதிபதி, நேற்று இடம்பெற்ற மத அநுட்டானமொன்றிற்காக வெளியே சென்றிருந்தவேளையில், காலைவேளை விகாரைக்கு வழிபாட்டிற்காக வருகைதந்திருந்த அம்மையார் ஒருவர் தனக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் இதுதொடர்பில் தெரிவித்ததாகவும், அதன்பின்னர் உடனடியாகத் தான் அங்குவந்து அதனைப் பார்வையிட்டதாகவும் குறிப்பிட்டார்.

Read more...

கோத்தாவை வெற்றிபெறச் செய்ய வெளிநாட்டில் உள்ள இலங்கையர் வருகை...!

'தாய்நாட்டைப் பாதுகாப்போம் கோத்தாவை வெற்றிபெறச் செய்வோம் - நவம்பர் 16 தேர்தலுக்காக இலங்கை செல்வோம்' எனும் கருப்பொருளில், ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வதற்காக இலங்கையில் வாக்குரிமையுள்ள வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இரண்டு இலட்சம் இலங்கையர்களையும் இலங்கைக்கு வரவழைப்பதற்கான விஷேட திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்ற 22 ஆம் திகதி பாரிஸ் நகரில் முதலாவது கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது, பிரான்ஸ் - பரிஸ் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்குபற்றிய பேராசிரியர் சன்ன ஜயசுமன, இதற்கு முன்னர் ஒருபோதும் தேர்தல்களுக்கு இந்தளவு விருப்பம் வெளிநாட்டில் இருக்கும் எவரும் காட்டவில்லை எனவும், குறைந்தளவு இரண்டு இலட்சம் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக இலங்கை வரவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Read more...

Wednesday, September 25, 2019

பிரபாகரனின் வீட்டிற்குச் சென்று அழுது புலம்பிய நடிகர் சதீஸ் பற்றி விசாரணை!

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் சதீஸ் குமார் யாழ்ப்பாணத்திலுள்ள வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள பிரபாகரனின் வீட்டிற்குச் சென்று அழுது புலம்பியுள்ள விடயம் தொடர்பில் யாழ்ப்பாணப் பாதுகாப்புப் பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எம். சதீஸ் குமார் யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்தினம் (23) போய், பிரபாகரனின் வீட்டு முன்றலிற்குச் சென்று இவ்வாறு அழுது புலம்பியுள்ளார்.

பிரபாகரனின் வீட்டிற்குச் செல்வதற்கு எந்தவொரு தடையும் இல்லை எனவும், அவர் எந்த நோக்கத்திற்காக இங்கு வந்தார் எனவும், அவரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்தவர்கள் யாவர் எனவும், ஆராய்வதற்காகவே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்
.
இந்த நடிகர் மாத்திரம் பிரபாகரனின் வீட்டுக்கு முன்னால் சென்று அழுது புலம்புவதை, அந்தப் பாதை வழியே சென்றோர் பார்த்து 'இவனுக்குப் பைத்தியம்' என்று கூறிச் சென்றுள்ளதுடன், சில நிமிடங்களுக்குப் பின்னர் குறித்த நபர் சதீஸ் குமார் என்பதைத் தெரிந்துகொண்ட ஒருவர் அவருடன் கதைத்துள்ளார் எனத் தெரியவருகின்றது.

Read more...

சிறிதரன் ஆடைகளை களைந்துவிட்டு ரணிலுக்கு பின்னால் ஒழிந்து நிற்கின்றார். சாடுகின்றார் அங்கஜன் ராமநாதன்.

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் இருவரும் இணைந்து தங்களின் இருப்புக்களை பாதுகாப்பதற்காக மக்களை பிழையான வழிகளில் வழிநடத்துகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

குஞ்சுபரந்தன் பகுதியில் உப்பளம் அமைக்கப்படுவதனால் தங்களிற்கான தொழில் வாய்ப்பு உருவாக்கி வாழ்வாதாரம் சிறப்பாக அமையும் என மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தாங்கள் பயனடைகின்றோம் என்றும் சிங்கள கம்பனி இலங்கையில் உள்ள சடத்தின்படிதான் முதலீடு செய்துள்ளது நாட்டின் சட்ட நியதிகளுக்கு கீழ்தான் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது சிங்களவருக்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டாம் என்று இவர்கள் அடாவடித்தனம் செய்கின்றார்கள்

ஆனால் பாராளுமன்றத்தால் வாகன அனுமதிப்பத்திரம் கௌரவ ஸ்ரீதரன் அவர்களிற்கு கிடைக்கப்பெற்றது என்றும் இதனை அவர் சிங்களவருக்கு விற்று பணம் பெற்று தான் வாழலாம் நாங்கள் தெருவில் நிற்க வேண்டுமா கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் ஒன்றாக நின்று அத்திவாரம் இடலாம் ஆனால் நாங்கள் மட்டும் சிங்கள கம்பனிகளுக்கு ஆதரவு வழங்க கூடாது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஸ்ரீதரன் அவர்கள் ஆடைகளை களைந்துவிட்டு ரணிலுக்கு பின்னால் நிற்கின்றார் என்று கரைச்சி பிரதேச சபையினால் குஞ்சுப்பரந்தன் பிரதேச மக்களிற்கு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்தது கரைச்சி பிரதேசசபை தவிசாளரின் பொய்யான சொல்லினை கேட்டு மக்களிற்கான குடிநீரினை வழங்காமல் நிறுத்தியுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர்

வடக்கில் ஆளுநரின் அதிகாரங்களிற்கு உட்பட்டு அமைச்சுக்கள் இருக்கின்ற போது இவர்கள் இருவரினதும் அடாவடித்தனத்தினால் மக்களிற்கான குடிதண்ணீர் வழங்காமல் நிறுத்தப்பட்டிருக்கின்றது. அத்தியவசிய தேவைகளில் ஒன்றான குடிதணீர் தேவையினை உடனடியாக மக்களிற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்கின்றேன்

Read more...

பளையில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அரச இரசாயன பகுப்பாய்வுக்கு

பயங்கரவாதிகளுக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, தற்போது பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரின் தடுப்பில், யாழ். பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் பளை சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனின் வாக்கு மூலத்துக்கு அமைய கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை பெற கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இன்றைய தினம் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் இது குறித்து முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள சட்டவைத்திய அதிகாரி உள்ளிட்ட 7 பேர் தொடர்பிலும் மேலதிக விசாரணைகளை சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் தலைமை அலுவலகத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இன்று நீதிமன்றில் இந்த அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

Read more...

இறந்தது டிக்கிரி யானை

அண்மையில் அனைவரினதும் கவனத்திற்கு உள்ளாகியிருந்த டிக்கிரி யானை நேற்று (24) இறந்துள்ளது.

உடல் பலவீனம் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, டிக்கிரி யானை இறந்துள்ளது.

வயது முதிர்ந்த நிலையில், குறித்த யானை பௌத்த உற்சவத்தில் பங்கேற்றதால் கடந்த காலங்களில் சர்வதேச ரீதியில் பாரிய சர்ச்சை தோன்றியிருந்தது.

டிக்கிரி என்றழைக்கப்படும் இந்த பெண் யானைக்கு சுமார் 79 வயது என கூறப்படுகிறது.

மிகவும் வயதான நிலையில் காணப்படும் இந்த யானை தொடர்பில் தாய்லாந்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் விலங்கு உரிமை செயற்பாட்டாளர்கள் கடந்த மாதம் சில படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர்.

டிக்கிரி என்ற இந்த யானை சுமார் 50 வருடங்கள் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை உற்சவத்தில் கலந்துக்கொண்டிருந்ததாக யானை உரிமையாளர் தெரிவித்திருந்தார்.

2018ஆம் ஆண்டு உற்சவத்தின் பின்னர் டிக்கிரி யானை சுகவீனமுற்றதாகவும், அதனை குணப்படுத்தும் வகையில் விஷ்ணுவுக்கு நேர்த்திக் கடன் வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

தேசிய நல்லிணக்கத்திலேயே தேசிய பாதுகாப்பு தங்கியுள்ளது. சஜித்

தேசிய நல்லிணக்கம் என்ற விடயத்திலேயே தேசிய பாதுகாப்பு தங்கியுள்ளது.நவீன பயங்கரவாதத்துக்கு எதிராக அறிவுப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் நவீன பயங்கரவாதத்துக்கு முகங்கொடுக்கும் வகையில் அறிவுப்பூர்வமான வேலைத்திட்டங்களுடன் தேசிய பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

கம்பஹா, மத்துகமையில் இன்று (25) இடம்பெற்ற மக்கள் பேரணியில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “நவீன பயங்கரவாதமானது ஒரு எல்லையை அடிப்படையாக்க கொண்டது இல்லை. தனிமனிதனால் கூட இன்று பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட முடியும்.

நவீன பயங்கரவாதத்துக்கு அறிவுப்பூர்வமான நாங்கள் முகங்கொடுக்க வேண்டும். அதற்கு நாட்டில் உள்ள மக்கள் சமூகத்தின் மத்தியில், இன, மதங்களுக்குள் சமாதானம், நல்லிணக்கத்தை ஏற்படுத்தப்படவேண்டும்.

அனைத்து மதங்களில் வழிப்பாட்டு தலங்களை அமைப்பதால் மாத்திரம் நாட்டை வலுப்படுத்திவிட முடியாது.

இவ்வாறான நடவடிக்கைகள் மதங்களுக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்படவே வழிசெய்கின்றன.

எதிர்வரும் 5 வருடங்களில் நாட்டில் உள்ள அனைத்து பௌத்த விகாரைகளையும் அபவிருத்தி செய்யம் திறமை எனக்கு உள்ளது. அதனை நிச்சயம் நான் செய்து முடிப்பேன்.

பௌத்தத்துக்கு முதலிடம் வழங்குவதனை போலவே அனைத்து இனங்களும், மதங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.

தேசிய நல்லிணக்கம் என்ற விடயத்திலேயே தேசிய பாதுகாப்பு தங்கியுள்ளது.

இன, மத, வேறுபாடுளை துறந்து நாட்டு மக்கள் ஒன்றிணைந்து தேசிய ஐக்கியம் ஏற்படும் போது, தேசிய பாதுகாப்பு வலுப்படும். நாம் அனைவரும் புதிய இலங்கைக்குள் நுழைவோம் ”என்றார்.

Read more...

இரண்டு நாட்கள் இலங்கை ஆசிரியர்கள் பணிபகிஸ்கரிப்பு

நாளை (26) மற்றும் நாளை மறுதினம் (27) சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தீர்மானித்துள்ளது.

வேதன பிரச்சினைகள் உள்ளிட்ட ஆசியர்கள் மற்றும் அதிபர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அதன் பொதுச் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தினங்களில் உயர் தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்தும் ஆசிரியர்கள் விலக தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

தலைமன்னார் கடற்கரையில் 840 கிலோ பீடி இலைகள் மீட்பு

கடற்படையால் இன்று (25) தலைமன்னர் கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 840 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடித்துள்ளன.

வட மத்திய கடற்படை கட்டளை மூலம் தலைமன்னர் கடற்கரை பகுதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கரை ஒதுங்கிய சந்தேகத்திற்கிடமான 18 பொதிகள் காணப்பட்டுள்ளதுடன் அதை மேலும் சோதிக்கும் போது அதில் இருந்து 840 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டன..

கண்டுபிடிக்கப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

அதன்படி, இந்த மாதத்தில் மட்டும் வட மத்திய கடற்படை கட்டளையில் நடத்தப்பட்ட கடற்படை நடவடிக்கைகளின் போது 3500 கிலோவுக்கு மேற்பட்ட பீடி இலைகளை மீட்டுள்ளதுடன் மேலும், இவ்வாரான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுக்க கடற்படை விழிப்புடன் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Read more...

ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய யோஷித ராஜபக்‌ஷ மீண்டும் கடற்படையில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்‌ஷவை கடற்படையின் லெப்டினன் தரத்துக்கு மீண்டும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கமைய சேவையிலிருந்து நீக்கப்பட்ட யோஷித ராஜபக்‌ஷவை 2016 பெப்ரவரி 28 இலிருந்து கடற்படை லெப்டினன் ஆக மீண்டும் சேவையில் இணைப்பதற்கான உத்தரவில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டீ சில்வா கையொப்பமிட்டுள்ளார்.

இதனை கடற்படை பேச்சாளர் லெப்டினட் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

Read more...

Tuesday, September 24, 2019

விஜயகலாவை அம்மணமாக்கினார் டக்கிளஸ் தேவானந்தா!

குற்றவாளி ஒருவரை காப்பாற்றுவதற்காக இலங்கையின் நீதித்துறையின் செயற்பாடுகளில் தலையிட்டுள்ளதாக விஜயகலாவின் நீதிக்கு முரணான செயற்பாடுகளை அம்பலப்படுத்தியுள்ளார் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா.

இன்று தனது கட்சிக்காரியாலயத்தில் இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டில் பருத்துறை நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கொன்றின் குற்றவாளி ஒருவரை அக்குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்குமாறு விஜயகலா நீதி அமைச்சர் மற்றும் பிற திணைக்களங்களுக்கு விஜயகலா எழுதிய கடிதங்களை அம்பலப்படுத்திய டக்ளஸ் தேவானந்த நல்லாட்சியிலும் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் அதே அரசின் ராஜாங்க அமைச்சரால் ஏற்பட்டுள்ளது எனக்குற்றஞ் சுமத்தினார்.

பாரிய குற்றஞ்சுமத்தப்பட்டிருந்த நடராஜா சேதுறூபன் என்ற ஊத்தைச் சேதுவை குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றுவதற்காக விஜகலா இவ்வாறு நீதிக்கு முரணாக செயற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் விஜகலா வித்தியா என்ற யுவதி கற்பழித்து படுகொலை செய்யப்பட்டபோதும் குற்றவாளிகளை காப்பாற்ற முயன்று நீதிமன்றினால் எச்சரிக்கப்பட்டவர் என்றும் சுட்டிக்காட்டினார்.

விஜயகால மகேஸ்வரன் நீதி அமைச்சருக்கு எழுதியுள்ள கடித்தில் நடராஜா சேதுறூபன் என்பவன் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் தனக்கு உதவியதை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அதற்கு கைமாறாக அவனை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கும் பொருட்டு வழக்கை வாபஸ் பெறுமாறு கோரியுள்ளார்.

வெளிநாட்டு பிரஜை ஒருவர் இலங்கையில் அரசியலில் ஈடுபட முடியாது என்ற சட்டத்தை மீறி தேர்தலில் பிரச்சாரப்பணிகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சேதுறூபன் பின்னர் மோட்டார் வாகன குற்றச்சாட்டுகள் மாத்திரம் சுமத்தப்பட்டு அக்குற்றத்திற்கான தண்டப்பணத்துடன் விடுதலையானார். ஆனால் அவ்வாறு விடுதலை செய்யப்பட்டமை விஜகலாவின் அழுத்தம் காரணமாகவே என்பதை சுட்டிக்காட்டியுள்ளார் டக்ளஸ் தேவானந்தா. இவ்விடயம் அம்பலத்திற்கு வந்ததை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பாக உடனடி விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று நீதியின்மேல் அக்கறையுள்ள பல தரப்புக்கள் தெரிவிப்பதுடன் மீள்விசாரணைக்கு உத்தரவிடப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

நீதிமன்றைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தினான் என்றும் நீதிபதிகளுக்கு அவமரியாதை ஏற்படுத்தினான் என்றும் ஊத்தை சேது மீது பருத்திதுறை நீதிமன்றில் வட மாகாண சட்டத்தரணிகள் சகங்கத்தினால் வழக்கொன்று தொடர்ப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அவன் தலைமறைவாகியுள்ளான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

விஜயகலா நீதி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தின் பிரதி இங்கே இணைக்கப்படுகின்றது.




டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இன்றைய பத்திரிகையாளர் மாநாட்டின் ஒரு தொகுதி.



Read more...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு

கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த நிவாரணப் பணிகளுக்காக முப்படையினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுமாறும் மண்சரிவு அபாயம் காணப்படும் பிரதேசங்களிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை முப்படையினரின் ஒத்துழைப்புடன் துரிதமாக மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளுக்கு நிதியை தடையாகக்கொள்ள வேண்டாமென தெரிவித்திருக்கும் ஜனாதிபதி, தேவையான நிதியினை நிதி அமைச்சிடம் கோரும்படியும் தான் தலையிட்டு அந்த நிதியை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் இன்று (24) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்ட அறிவுரைகளை வழங்கியிருந்தார்.

இன்னும் இரண்டு மாத காலம் வரை அதிக மழையுடன்கூடிய காலநிலை ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் முன் ஆயத்தங்களுடன் அந்த சூழ்நிலைகளுக்கு முகங்கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் துறைகள் ஒருங்கிணைந்து திட்டமிட்டு செயற்படுவதன் அவசியத்தையும் ஜனாதிபதி தெளிவுப்படுத்தினார்.

அத்தோடு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் காலத்தின்போதும் தடையின்றி அவசர அனர்த்த நிலைமைகளை சமாளிப்பதோடு மக்களுக்கான நிவாரண செயற்பாடுகளை முறையாக மேற்கொள்வதன் அவசியத்தை ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

இதன்போது கடந்த சில தினங்களாக ஏற்பட்ட கடும் மழையினால் காலி, மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் 6,000த்திற்கும் மேற்பட்டோர் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்திருப்பது தெரியவந்துள்ளதுடன், அவர்களுக்காக முன்னெடுக்கப்படும் நிவாரண வேலைத்திட்டங்கள் பற்றி மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சு கடந்த காலங்களில் நிலவிய வரட்சி காரணமாக சுமார் 15 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீர் விநியோகத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுத்ததாகவும் அதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, முப்படை தளபதிகள், பதிற் கடமை பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Read more...

சீரற்ற வானிலையால் 11387 குடும்பங்களை சேர்ந்த 45,091பேர் பாதிப்பு

சீரற்ற வானிலையால் காரணமாக 11387 குடும்பங்களை சேர்ந்த 45,091பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.கொழும்பு, காலி, மாத்தறை, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த நிலைகள் தொடர்பில் அறிவிப்பதற்காக பொலிஸார் அவசர உதவி தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதற்கமைய, 0112587229 மற்றும் 01122454576 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக, பொதுமக்கள் அனர்த்தங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்க முடியும்.

இதேவேளை, விசேட பயிற்சிப்பெற்ற உயிர்காப்பு மற்றும் அனர்த்த உதவி பொலிஸ் அதிகாரிகள் 150 பேர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

50 பேர் கொண்டு மூன்று குழுவினராக இவர்கள் காலி மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அனர்த்த உதவிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பொலிஸ் கடற்பிரிவுக்கு சொந்தமான 50 படகுகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more...

தமிழ் மக்களை ஏமாற்றாது சுமந்திரன் பதவி விலக வேண்டும் - சுரேஷ் பிரேமச்சந்திரன்

இனப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்காவிட்டால் தனது பதவியை இராஜினாமா செய்வேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமனற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியதை நிறைவேற்றுவதற்கான காலம் இப்போது வந்துள்ளது. எனவே அவர் இனியும் தமிழ் மக்களை ஏமாற்றாது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கட்டபிராயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசியல் சாசனம் நிறைவேறாது போனால் முழுப் பொறுப்பையும் தாமே ஏற்று பதவி விலகுவேன் என கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் கூறியிருந்தார். அவ்வாறு இல்லாது அரசியல் சாசனம் வெற்றிகரமாக நிறைவேற்றுப்பட்டிருந்தால் கூட தனது கடமை முடிந்து விட்டது. தாம் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என தாமாகவே கூறியிருந்தார்.அதுமட்டுமல்லாது தனது இராஜினாமா கடிதத்தில் அரைவாசி எழுதி விட்டதாகவும் மிகுதியே எழுத வேண்டியிருக்கின்றது என பல சந்தர்ப்பங்களில் கூறியிருந்தார்.இப்போது அவரது இராஜினாமா கடிதத்தின் மிகுதியையும் எழுதி முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

தாம் இனப்பிரச்சினைக்கான தீர்வினை எப்பாடுபட்டும் பெற்றுக் கொடுப்பேன் என கூறி ஐவரால் தமிழ் மக்களுக்கு எதனையுமே பெற்றுக்கொடுக்க முடியவில்லை.மக்களுக்கு ஆக்கபூர்வமான விடயங்கள் எதனையும் செய்யவில்லை.தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து ஐக்கிய தேசியக் கடசியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவை பாதுகாக்கும் வேலையை மட்டுமே செய்து வருகின்றார். இதனை தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருந்து கொண்டு செய்ய வேண்டிய தேவையில்லை.அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து கொண்டே செய்யலாம்.

எனவே, சுமந்திரன் கூறியது போல தனது ராஜினாமா கடிதத்தை முழுமைப்படுத்தி உடனடியாக பதவி விலக வேண்டும்.அவர் அரசியலில் இருந்து விலகினாலும் வெறுமனே தமிழ் மக்களின் அரசியலில் இருந்து மட்டுமே ஒதுங்குவார் என நினைக்கின்றேன். அவர் ரணிலை பாதுகாக்கும் பணியை ஐக்கிய தேசியக் கடசியில் இருந்து கொண்டு தொடரலாம்.ரணிலை காப்பாற்றிக் கொண்டு அவருக்கு சேவகம் செய்து வருவதால் இப்போது ஐக்கிய தேசியக் கடசிக்குள்ளும் அவருக்கு எதிர்ப்புக்கள் வந்துள்ளன.

Read more...

வடக்கு சட்டத்தரணிகள் வெள்ளிக்கிழமை பணி பகிஸ்கரிப்பு

பௌத்த மதகுருவின் உடலம் எரிப்பது தொடர்பில் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கின்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன்,நீதிமன்ற அவமதிப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவின் பெயரில் சென்ற சட்டத்தரணிகள் தாக்கப்பட்டுள்ள சம்பவத்தினை கண்டித்து; இன்று வடக்கு கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளார்கள்.

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவினை மீறி பௌத்த மதகுருவின் உடலம் எரிக்கப்பட்டமை சட்டத்தரணிகள் மற்றும் ஆலயபூசகர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினை கண்டித்து முல்லைத்தீவு பழைய வைத்தியசாலைக்கு முன்பாக இருந்து மக்கள் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை நடத்தி மாவட்ட செயலம் வரை சென்றடைந்துள்ளனர்.இதன்போது முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் வாயில் கறுப்பு துண்டை கட்டி தங்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு சட்டத்தரணிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதன்போது  கருத்து தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம்

வடமாகாணத்தினை சேர்ந்த சட்டத்தரணிகள் நூற்றிற்கு மேற்பட்டவர்கள் இன்று முல்லைத்தீவு நீதிமன்றின் முன்பாக ஒன்று கூடினோம்.
நேற்று நடைபெற்ற சம்பவத்திற்கு எதிராக சட்டத்தரணிகள் பணிபுறக்கணிப்பினை மேற்கொண்டோம். இந்த சந்தர்பத்தில் நீதிமன்றத்தின் செயற்பாட்டிற்கு இடையூறு ஏற்பட்டதற்கு இன்று தங்கள் நீதியினை கோரி திரண்ட மக்களுக்கு சட்டத்தரணிகள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

எங்களுக்கு தோழோடு தோழ் நின்று பணி பகிஸ்கரிப்பினை மேற்கொண்ட கிழக்கு மாகாண சேர்ந்த சங்க சட்டத்தரணி நண்பர்கள் நண்பிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.இன்றையதினம் வடக்கினை சேர்ந்த சட்டத்தரணிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒன்றுகூடி நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் தீர்மானங்கள் எடுத்துள்ளோம்.

தென்னிலங்கையில் இருந்து வெளிவருகின்ற ஆங்கில சிங்கள நாளிதழ்களில் நேற்று நடைபெற்ற சம்பவம் திரிவு படுத்தப்பட்டதாக காணப்படுகின்றது எனவே அது தொடர்பான தெளிவான அறிக்கை வெளியிடுவது.

நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்வது.மனிதஉரிமை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்வது எமது தாய்ச்சங்கத்திற்கு இங்கு நடைபெற்ற விடையங்கள் தொடர்பில் எடுத்துக்கூறுவது.
குறிப்பாக நேற்று நடைபெற்ற வழக்கு தொடர்பாக இடம்பெற்ற சம்பவங்கள் குறிப்பிட்ட ஒரு பௌத்த மதகுரு வழக்கு தீர்ப்பு வழங்குவதற்கு முன்னரே வெளியில் நின்று நீதிமன்றம் எந்த தீர்ப்பினை தந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வதில்லை தாங்கள் நினைத்ததைத்தான் செய்வோம் என்று நீதிமன்றத்தினை அவமதிக்கும் செயலாக செய்தியினை சொல்லியுள்ளார்.

இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பபது நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டமா அதிபர் மூன்று நாட்களுக்குள் எழுத்துமூலமான வாக்குறுதி ஒன்றினை வழங்கவேண்டும் இதனை கருத்தில் கொண்டு சட்டத்தரணிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை வடமாகாணத்தினை சேர்ந்த சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.என்றார்

Read more...

ஜெனிவா கொல்லன் தெருவில் ஊசி விற்கும் பொன்னம்பலத்தின் மகன்.

ஐ.நா வின் மனித உரிமைகள் மாநாடு இடம்பெற்று வருகின்றது. மாநாட்டில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதிநிதியாக கலந்து கொண்டுள்ள பொன்னம்பலம் கஜேந்திரகுமார் இலங்கையில் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சாவேந்திர சில்வா என்பவர் யுத்தக் குற்றவாளி என 'அடையாளம் காட்டப்பட்டவர்' என தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசானது மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் அலுவலகத்தால் நடாத்தப்பட்ட இலங்கை மீதான அலுவலக விசாரணையின் அறிக்கையின் பிரகாரம் முக்கியமான யுத்தக் குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்ட சவேந்திரசில்வா என்பவரை சிறிலங்காவின் இராணுவத் தளபதியாக்கியுள்ளது எனக் குற்றஞ் சுமத்தியுள்ளார்.

கற்றறிந்த சட்டத்தரணி என தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் கஜேந்திரகுமார் பொன்னப்பலம், இலங்கையின் இராணுவத் தளபதியாக சவேந்திரசில்வாவை நியமித்தது தவறானது என்ற தனது வாதத்திற்கு காரணமாக அவர் யுத்தக்குற்றவாளி என அடையாளம் காட்டப்பட்டவர் என தெரிவிக்கின்றார். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் ஒருவர் சந்தேகங்களுக்கு அப்பால் குற்றவாளி என நிரூபிக்கப்படும்வரை நிரபராதி என அடிப்படைச் சட்டம் கூறுகின்றது. அவ்வாறாயின் அவர் குற்றஞ்சாட்டப்பட்டவர் என்ற ஒரு காரணத்திற்காக அவரது சேவை அடிப்படையில் அவருக்கு கிடைக்கப்பெற்றுள்ள பதவி உயர்வை தடுக்கவேண்டும் என்று கோருவது சவேந்திரசில்வாவின் அடிப்படை உரிமை மீறலாகும் என மனித உரிமைகளுக்காக போராடும் தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

எனவே இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொண்டு மனித உரிமைகளை மீறும்மாறு கோரிக்கை விடுத்துள்ளார் சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

மேலும் சவேந்திர சில்வா ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத்தூதுவராக நியமிக்கப்பட்டபோது, இதே குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இலங்கையர்கள் உலகெங்கும் போர்க்கொடி தூக்கினர். ஐ.நா சவேந்திரசில்வாவை தூதுவராக ஏற்றுக்கொள்ளக்கூடாது என வலியுறுத்தினர். ஆனால் அவர் ஒரு சந்தேக நபர் மாத்திரமே என்றும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும்வரை அவர் நிரபராதி என்றும் தெரிவித்த ஐ.நா அவரை தூதுவராக ஏற்றுக்கொண்டிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை

சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் தேர்தல் தொடர்பான தவறான கருத்துக்கள், தகவல்கள் , இனவாத பிரசாரங்கள் ஆகியனவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் எதுவும் இல்லை.

அச்சு ஊடகங்கள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுப்படும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் இத்தகவலை கேசரிக்கு தெரவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

சமூக வலைத்தளங்கள் குறிப்பாக முகநூல், டுவிடர், யு டிவூப், மின்னஞ்சல் ஆகிவற்றின் ஊடாக தகவல்கள், கருத்துக்கள், இனவாத பேச்சுகள் அகிவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை.இந்த விவகாரம் குறித்து பேஸ்புக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். அவர்கள் எம்முடன் இணக்கப்பாடுடன் செயற்பட்டு வருகிறார்கள்.

தேர்தல் கால குற்றங்கள் தொடர்பாக ஆராய 5 பேரை கொண்ட குழுவொன்றை அமைத்துள்ளோம். மாவட்ட ரீதியில் இவ்வாறான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் 3 பேர் அங்கம் விகிப்பர்.மாவட்ட குழுக்களினால் தேர்தல் வன்முறை சம்வங்கள் குறித்து 5 பேர் கொண்ட குழுவினரிடம் அறிவிப்பார்கள். அவர்கள் இது தொடர்பாக முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறினார்

Read more...

Monday, September 23, 2019

நீதிமன்ற உத்தரவை மீறித் தேரரின் உடல் பிள்ளையார் ஆலயத் தீர்த்தக்கேணியடியில் தகனம்

ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குமார் மக்கள் மீது தாக்குதல்- அச்சுறுத்தல்

வடமாகாணம் முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தின் ஒரு பகுதியில் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் பலாத்காரமாக விகாரை அமைத்து, சர்ச்சைகளை உருவாக்கிய மேதாலங்கார கீர்த்தி தேரரின் உடலை முல்லைத்தீவு இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்காமல் தேரரின் உடல் பிள்ளையார் ஆலய வளாகத்திற்கு அருகில் உள்ள ஆலயத் தீர்த்தக்கேணியடியில் வைத்துத் தகனம் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குமாரே தகனம் செய்ததாக பிரதேச மக்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.


நீதிமன்றத் தீர்ப்பை மீறி ஆலய வளாகத்திற்குள் தகனம் செய்வதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆலய வளாகத்தில் ஒன்று கூடியிருந்தவேளை பௌத்த பிக்குமார் அச்சுறுத்தித் தாக்குதல் நடத்தியதாக மக்கள் கூறுகின்றனர். இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறைக் கட்டமைப்பை பௌத்த பிக்குமாரே மீறுகின்றனர். அதற்கு இலங்கை இராணுவமும் ஒத்துழைப்பு வழங்கியதை முல்லைத்தீவில் நேரடியாகக் காண முடிந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் பொதுபல சேனவின் செயலாளர் அத்தே ஞரனசார தேரர் தலைமையிலான பௌத்த குருமாரே இவ்வாறு ஈடுபட்டதாகவும் நீதிமன்றத்தில் வாதாடிய தமிழ்ச் சட்டத்தரணிகளையும் பௌத்த பிக்குமார் தாக்கியதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.


முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவை எழுத்து மூலம் பெற்றுக் கொள்வதற்கு முன்னர் தேரரின் உடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்ய ஞானசார தேரர் முற்பட்டிருந்தார் எனவும் இலங்கைப் படையினர் ஆதரவாகச் செயற்படுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

இதனால் பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை இராணுவமும் பொலிஸாரும் ஆலய வளாகத்திலும் ஆலயத்திற்கு வெளியிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அமைச்சர் மனோ கணேசன் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பிரதேச மக்கள் முறையிட்டிருந்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இன வன்முறைகளைத் தூண்டும் வகையிலான கொலை மிரட்டல். அச்சுறுத்தல் குற்றச்சாட்டில் கைதாகி ஹோமகம நீதிமன்றத்தால் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுக் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அத்தே ஞர்னசார தேரர், கடந்த மே மாதம் இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். விடுதலையான நாள் முதல் பௌத்த சிங்கள இனவாதத்தை முன்நிறுத்திச் செயற்பட்டு வரும் ஞானசார தேரர், தனது குழுவுடன் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மேதாலங்கார கீர்த்தி தேரரின் உடலைத் தகனம் செய்வது குறித்த விசாரணையைப் பார்வையிட முல்லைத்தீவு நீதிமன்றம் வந்தபோது எடுக்கப்பட்ட படம் இது. தேரர் தலைமையிலான பொதுபல சேன அமைப்பின் பிக்குமாரே தமிழ் மக்களையும் சட்டத்தரணிகளையும் நீதிமன்ற வளாகத்தில் வைத்து தாக்கியிருந்ததாக மக்கள் கூறுகின்றனர். இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறைக் கட்டமைப்பை பௌத்த பிக்குமாரே மீறுகின்றனர். அதற்கு இலங்கை இராணுவமும் ஒத்துழைப்பு வழங்குவதை நேரடியாகக் காண முடிவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஞானசாரர் தலைமையிலான பௌத்த பிக்குமார் தொடர்ந்தும் ஆலய வளாகத்தில் நின்று மக்களை அச்சுறுத்துவதாகவும் இதனால் பிள்ளையார் ஆலய வழிபாடுகள் தடைப்பட்டுள்ளதெனவும் மக்கள் கூறுகின்றனர்.

ஞானசார தேரர் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகின்றமை உள்ளிட்ட கொலை. அச்சுறுத்தல் மற்றும் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு அடிப்படையில் அவரை கடந்த மே மாதம் விடுதலை செய்திருந்தார்.

குறிப்பாக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டிலேயே ஞானசார தேரருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். ஆனால் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பில் ஞானசார தேரர் ஈடுபட்டிருக்கிறாரென சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.

நீதிமன்றக் கட்டளையை மீறி மேதாலங்கார கீர்த்தி தேரரின் உடலை ஆலயத்தின் தீர்த்தக்கேணியடியில் தகனம் செய்தமை நீதிமன்ற அவமதிப்பு என்றே சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.
நன்றி: கூர்மை

Read more...

அசாதாரண காலநிலை காரணமாக காலியில் 861 பேர் பாதிப்பு

காலி மாவட்டத்தில் நேற்று (22) பெய்த கடும் மழையினால் தற்போதைக்கு 07 பிரதேசய செயலகங்களில் 36 கிராம சேவகர் பிரிவுகளில் 861 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.

பாதிப்புக்குள்ளாகிய குடும்பங்களின் எண்ணிக்கை 293 ஆகும்.

முழுமையாக சேதமடைந்துள்ள வீடுகளின் எண்ணிக்கை 05 ஆகும். ஓரளவு சேதமடைந்தள்ள வீடுகளின் எண்ணிக்கை 41 ஆகும் எனத் தெரியவந்துள்ளது. பொல்அத்து மோதர ஆறு பெருக்கெடுத்துள்ளதனாலேயே பெரும்பாலான வீடுகள் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாக வழங்கியதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

Read more...

அசாதாரண காலநிலை காரணமாக மாத்தறை - காலி மாவட்டப் பாடசாலைகளுக்கு 24, 25 ஆம் திகதிகளில் விடுமுறை

அசாதாரண காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை (24) மற்றும் நாளை மறுதினம் (25) இரு தினங்களும் மூடுவதற்கு ஆவன செய்துள்ளதாக தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேக்கர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனியார் பாடசாலைகளும் கருத்திற் கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசாங்கத்தின் அறிவித்தல்களை தனியார் பாடசாலைகளும் கவனத்திற் கொள்வதே சிறந்ததெனவும் பெற்றோர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Read more...

82 மில்லியன் ரூபாவைச் செலுத்தாதிருந்துவருகிறது மெண்டிஸ் நிறுவனம்! குற்றம் சுமத்துகிறார் வசந்த

அர்ஜுன் அலோசியஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான மதுபான நிறுவனம் கடந்த சில மாதங்களாக மதுவரித் திணைக்களத்திற்குச் செலுத்த வேண்டிய எண்பத்திரண்டு மில்லியன் ரூபாவைச் செலுத்தாதிருப்பதாக ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அமைப்பு வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

அவ்வமைப்பின் இணைப்பாளர் வசந்த சமரசிங்க குறிப்பிடும்போது, 15 நாட்களுக்கு அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வெற் வரி மற்றும் தேசியத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரிப்பணத்திற்கு உரித்தான நான்காயிரத்து நானுாறு மில்லியன் ரூபா பணத்தொகையையும் செலுத்தாது, அதனைப் பற்றி எவ்வித அக்கறையுமின்றியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார்.

மெண்டிஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய வரித்தொகை பற்றி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதும் அவ்விடயத்தில் அந்நிறுவனம் எவ்வித முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ளவில்லை எனக் குற்றம் சுமத்துகின்ற வசந்த சமரசிங்க தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த வரி செலுத்தாமையின் பின்னணியில் இருப்பதாகச் சந்தேகமும் வெளியிட்டுள்ளார்.

Read more...

வந்துரம்ப மண் சரிவினால் பெண்ணொருவர் மரணம்

வந்துரம்ப, கொக்காவல பிரதேசத்திலுள்ள இரண்டு வீடுகள் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்

இன்று பிற்பகல் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. காயங்களுக்குள்ளாகியுள்ள பெண் விசேட தேவையுடைய பெண்ணொருத்தி எனவும், மரணமடைந்துள்ள பெண் 36 வயதுடைய கொக்காவலயைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

Read more...

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் கடும் மழை பொழிய கூடும்! வளிமண்டல திணைக்களம்

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் தென், சபரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் 200 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழியக் கூடும் என வளிமண்டலத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதனால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அந்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் மழை பெய்யும் வேளைகளில் ஆங்காங்கே இடி முழக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுவதால் மின் உபகரணங்களை பயன்படுத்துதல்மற்றும் வயல் நிலங்களில் தொழிலில் ஈடுபடுதல், மரங்களுக்கு அருகில் ஒதுங்கியிருந்தல் ஆகிய நடவடிக்கைகளில் அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read more...

Sunday, September 22, 2019

அரசியல் சூடுபிடித்துள்ளவேளை இந்தியாவிலிருந்து வர எத்தனிக்கின்றான் அங்கொட லொக்கா!

அரசியல் சூடுபிடித்துள்ளதனால் பாதாளக் குழுவை முடக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதனால், இந்தியாவில் தலைமறைவாகியுள்ள பாதாளக் குழுத் தலைவன் அங்கொட லொக்கா இலங்கைக்கு வந்து, மீண்டும் வெளிநாட்டுக்குச் செல்வதற்கு எத்தனிப்பதாக பாதாளத் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சமயங் உள்ளிட்ட ஐவரைக் கொலை செய்ததன் பின்னர் 'அங்கொட லொக்க' மற்றும் 'லடியா' இருவரையும் கிம்புலாஎல குணாவின் குழுவினர் இந்தியாவுக்கு வரவழைத்தனர். இந்தியாவில் 'அங்கட லாெக்கா'வுக்கு சகல வசதிகளும் மதுஷின் ஆலோசனையின் பேரில் வழங்கப்படுகின்றன. இந்தியாவிலிருந்து டுபாய்க்குச் செல்வதற்கு 'அங்கொட லொக்க' முயற்சி செய்தபோதும் அதற்கு மதுஷ் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து இருவருக்குமிடையே முறுகல் ஏற்பட்டுள்ளது.

மதுஷின் இரண்டாவது மனைவி டுபாயிலிருந்து மதுஷைப் பாதுகாப்பதற்காக தலைவரைத் தேடி இந்தியாவுக்கு வருகைதந்தபோது, தலைவர் மதுஷின் மனைவியை அருகில் வைத்துக்கொண்டதனால் மதுஷ் மற்றும் தலைவனுக்கிடையே கொலைக்கான முயற்சிகளும் நடைபெற்றிருக்கின்றன என புலனாய்வுப் பிரிவுக்குத் தெரியவந்துள்ளது. மதுஷ் குற்றப்புலனாய்வுப் பிரிவினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டால் அங்கு சென்று மதுஷை கொன்றொழிப்பதற்கான சூழ்ச்சிகளையும் தலைவன் மேற்கொண்டுள்ளான் எனபுலனாய்வுப் பிரிவினருக்குத் தெரியவந்துள்ளது. மதுஷின் உறவுவைத்துள்ள பாதாளக் குழுவாகிய கிம்புலாஎல குணாவின் குழுவினர் சேர்ந்திருப்பது பயங்கரமானதே என்பதை அறிந்து, இந்தியாவிலிருந்து படகில் இலங்கைக்கு வருவதற்கு முயற்சித்துள்ளதாக பாதாளக் குழு ஒற்றர்கள் மூலம் இலங்கையின் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

Read more...

ஐஎஸ் பிடியிலிருந்து தப்பிய யாசிதி அகதிகள்: ஆஸ்திரேலியாவில் அவர்களது நிலை என்ன?

2014ம் ஆண்டு ஐஎஸ் எனப்படும் கொடூர மதத்தீவிரவாத அமைப்பின் பிடியிலிருந்து தப்பித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளனர். மேற்கு ஈராக்கின் சின்ஜர் மலைப்பகுதியிலிருந்து வெளியேறிய இந்த அகதிகள் இன்று புதியதொரு வாழ்வை ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளனர்.

ஈராக்கின் சின்ஜர் மலையிலிருந்து வெளியேறிய லைலா தனது அனுபவத்தை பகிரும் போது, “ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் ஏராளமான ஆண்களையும் குழந்தைகளையும் கொன்றுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் வந்த பிறகு, நாங்கள் மலைக்கு சென்றோம். குடும்பத்துடன் மலையில் வசித்த நாங்கள் உணவின்றி தண்ணீரின்றி இருந்தோம். ஐந்து நாட்கள் நடந்தே சென்ற நிலையில் குர்தீஸ்தானை அடைந்தோம்,” என அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு அவரது கணவர் மற்றும் குழந்தையோடு வந்த லைலா, சமீபத்தில் அவரது உறவினர்களுடன் மீண்டும் இணைந்திருக்கிறார்.

“எனது குடும்பத்தினர் அனைவரும் வந்த பிறகு எனக்கு இங்கு இருப்பது சுலபமாக இருக்கிறது. நாங்கள் ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பாக உணர்கிறோம்,” எனக் கூறியிருக்கிறார்.

இப்படி பல அகதிகள் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்கள். ஷஹாப்பும் அவர்களில் ஒருவர். “நான் இங்கு மூன்று மாதங்களாக இருக்கிறேன். ஈராக்கிலிருந்து நேரடியாக ஆஸ்திரேலியா வந்துள்ளேன்,” என்கிறார்.

முன்னாள் பல்கலைக்கழக பேராசிரியரான ஷஹாப் முகாமில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கழித்துள்ளார். “நாங்கள் எட்டு பேர், ஒரே டெண்டில் வாழ்ந்தோம். நைலான் டெண்ட் என்பதால் பனிக்காலத்தில் கடுஙகுளிரும் வெயில் காலத்தில் கடும் வெப்பமும் இருக்கும்,” என நினைவை பகிர்ந்திருக்கிறார்.

இவர்களில் பெரும்பாலான அகதிகள் மெல்பேர்னுக்கும் சிட்னிக்கும் இடையில் உள்ள வக்கா வக்கா (Wagga Wagga) என்ற பகுதியில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

அண்மையில் வக்காவில் பேரணி ஒன்றை நடத்திய யாசிதி அகதிகள், ஈராக் முகாம்களில் தங்கியுள்ள உறவினர்களுக்கு ஆஸ்திரேலியா உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். “தங்களுக்கு நடந்தவற்றை நிறுத்த தங்களுக்கு நீதி வேண்டும்,” எனக் கூறும் யாசிதி அகதிகள் ஈராக்கில் உள்ள மக்களின் நிலை குறித்து வருத்தம் கொண்டுள்ளனர்.

சுமார் 3,000 யாசிதி அகதிகளுக்கு ஆஸ்திரேலியாவின் மனிதாபிமான திட்டத்தின் கீழ் விசா வழங்கப்பட்டுள்ளது. இவர்களைப் போல் மேலும் பல யாசிதிகளுக்கு தஞ்சமளிக்கமாறும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.


Read more...

Saturday, September 21, 2019

ராஜனி திரணகம என்ற அறிவுக்கோபுரம் சரிந்து இன்றுடன் மூன்று தசாப்தங்கள் நிறைவு!

பாசிஸப் புலிகளின் அதிகாரவெறியால் சரிக்கப்பட்ட அடங்காத சுதந்திரவேட்கை கொண்டலைந்த ராஜனி திரணகம அவர்கள்:
„ என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படுதாக இருக்காது. எனது வரலாற்றைப் பகிர்ந்துகொள்ளும் இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும்"

என தன்னுடைய மரண சாசனத்தை எழுதி வைத்துவிட்டு எம் தேசத்து மக்களின் விடிவுக்காக போராடினார். அடங்காப்பற்றுடன் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடய அந்த தீர்க்கதரிசி புலிகளின் அழிவு எவ்வாறு அமையும் என்பதனை முற்கூட்டியே தனது முறிந்த பனை என்ற புத்தகத்தில் கீழ்கண்டவாறு எழுதி வைத்தவர்.

'புலிகளின் வரலாறு, அவர்களது தத்துவ வறுமை, காத்திரமான அரசியற் பார்வை இன்மை, சகிப்புத் தன்மையின்மை, வெறித்தனமான அர்ப்பணிப்பு போன்றனவே, அவர்களின் உடைவுக்கு, இறுதிக் காரணமாக அமையப் போகிறது.

புலிகளின் காவிய நாயகர்கள் தங்களின் தவறுகளால் பலியாகிப் போனவர்களின் கண்ணீராலும், ரத்தத்தினாலும் பூசப்பட்ட காவியங்களைச் சுமந்தவாறே மடிவர். இந்தச் சாம்பலில் இருந்து புதிய புலிகள் எழுந்து வரப் போவதில்லை. இந்த முழுச் சரித்திரத்திலிருந்தும், அதன் மேலாதிக்கக் கருத்தியலில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளும்போது தான் விடுதலைக்கான ஒரு புதிய பார்வை பிறக்க முடியும்.'


ராஜனி திரணகம அவர்கள் கொல்லப்பட்டு 16 வருடங்களின் பின்னர் அவரது மாணவன் ஒருவனால் அன்னாரது கொலையின் சில முடிச்சுக்கள் அவிழ்கப்பட்டது. இது தொடர்பில் இலங்கையில் இருந்து வெளிவந்த அமுது சஞ்சிகையில் 21 - 09 - 2005 வெளியாகிய கட்டுரை இவ்வாறு தெரிவித்திருந்தது. வரலாற்றில் மறக்கமுடியாத அந்த மாமேதையின் 30 ஆண்டு நிறைவில் அக்கட்டுரையை மீண்டும் ஒருமுறை வாசிப்போம்-

எங்கள் மெடம் ராஜனி ஒரு கலங்கரை விளக்கு!

1989 ம் ஆண்டு செப்டெம்பர் 21ம் திகதி, எங்கள் அன்புக்குரிய மெடம் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் தன் கடமையை முடித்து விட்டு வீட்டிற்கு போகும்போது வீதியில் வைத்து கோழைத்தனமாகசுட்டுக் கொல்லப்பட்டார். அவரையும் அவரது நேர்மையையும் நேருக்கு நேராக முகம் கொடுக்க முடியாத 'தமிழீழ விடுதலைக் கோழைகள் முதுகுப் புறமாக வந்து அவரைச் சுட்டுக் கொன்றனர். இந்தக்கோழைத்தனமான கொலையைக் கண்டித்து மருத்துவபீட மாணவர்களும் ஏனைய பல மாணவர்களும் எமது கைகளால் சுவரொட்டிகளை எழுதி யாழ்ப்பணம் எங்கும் ஒட்டினோம்.

அப்போது எமது விடுதலைப்போராட்டத்தைப் பற்றி எனக்குள் எழுந்த உணர்வை நான் பின்வருமாறு ஆங்கிலத்தல் எழுதினேன். இதுவும் ஒரு சுவரொட்டியாக அப்போது ஒட்டப்பட்டது
Free Doom
& Free Dump
ist our Freedom...?

இன்றோடு எங்கள் மெடம் கொல்லப்பட்டு 16 வருடங்கள் ஓடிவிட்டன. அவர் கொல்லப்பட்டு 15 வருடங்களின் பின்னராவது அவரைப்பற்றி ஒரு திரைப்படம் எடுக்கப் பட்டிருப்பது மிகவும் நன்றிக்குரிய விடயம்தான். ஆனால் இன்னும் அவரைக் கொன்றவர்களைப் பற்றிய பல உண்மைகள் சரியாக வெளிவரவில்லை என்பதுதான் மிகக் கவலையான விடயமாகும். இதற்கு முக்கிய காரணம் எம்மிடமிருந்த தத்தமது உயிர் பற்றிய பயம் பிரதானமானதாகும். அதேவேளை நாம் உண்மைகளைச் சொன்னால் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் எமது சமூகம் இருக்கிறதா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு. இன்றல்ல 1989இல் மெடம் கொல்லப்பட்ட போதும்கூட அவரை யார் கொன்றார்கள் என்ற உண்மையை எமது சமூகம் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை என்பதை நான் கண்டேன்.

அப்போதும்கூட பலருக்கு அந்த உண்மை தெரிந்திருந்தும் அதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளுவதற்கு துணிச்சல் இருக்கவில்லை. ஆனால் அந்த உண்மையை தமக்குள் மனதளவில் ஏற்றுக் கொண்டவர்களும் பலர் இருந்தார்கள் என்பதும் மறுபக்க உண்மைதான். அவ்வாறு உண்மை தெரிந்து உள்ளுக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். அன்று ஏனைய பலரைப் போன்று எனது உயிர், எனது எதிர்காலம் என்று நானும் இந்த உண்மைகளை எனக்குள் போட்டு அமுக்கிக் கொண்டேன். தற்போது நான் என் நாட்டை விட்டு வெளியேறி வெளி நாடொன்றில் ஒரு வைத்தியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் நாட்டில் பல ஒடுக்கு முறைகளுக்கு மத்தியில் வாழும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களோடு ஒப்பிடுகையில் எனது எதிர்காலத்திற்கும் உயிருக்கும் இவ்வெளிநாட்டில் அதிக உத்தரவாதம் இருக்கிறது. அந்த வகையில் மெடத்தின் கொலை தொடர்பாக எனக்கு தெரிந்த சில உண்மைகளை இன்றாவது வெளியிடடுவது எனது கடமை என்று நினைக்கிறேன்.

எமது அன்புக்குரிய மெடம் கலாநிதி ராஜினி திரணகம அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போது நான் அங்கு மருத்துவபீட மாணவனாக இருந்தேன். அவர் எங்களுக்கு வெறும் உடற்கூற்றியல் விரிவுரையாளராக மட்டும் இருக்கவில்லை. அவரின் வகுப்புகள் எப்போதும் மிக உற்சாகம் நிறைந்ததாகவே இருக்கும். தனது அன்றாட விரிவுரைகளுக்கு அப்பால் எமது சமூகப் பிரைச்சினைகளைப் பற்றி சிந்திக்கும் திசையிலும் எம்மை மிகத்திறமையாக அவர் எடுத்து செல்வார். அப்போது அவரின் பரந்த அறிவையும் ஆழமான சமூக உணர்வையும் நாம் கண்டோம். எமக்கு அவற்றை புரிய வைப்பதற்காக சிறந்த திரைப்படங்கள், நாவல்கள் அவர் படித்து ரசித்த கவிதைகள் பலரின் உலக அனுபவங்கள் என சகலவற்றையும் எந்தவித தடங்கலும் இன்றி மள மளவென எம்முன் எடுத்துச் சொல்வார். அன்றைய கால கட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்திற்குள் நடந்தவைகள் இப்போதும் ஓர் திரைப்படத்தைப்போல் என் மனதிற்குள் ஓடுகின்றன.

இந்திய இராணுவத்தினரதும் அவர்களோடு சேர்ந்து இயங்கிய ஏனைய தமிழ் ஆயுத இயக்கங்களினதும் கெடுபிடிகள் மிக அதிகமாக இருந்ததால் விடுதலைப் புலிகள் இயக்கம் யாழ்ப்பாண பல்கலைகழகத்தையும் தமது மறைவிடங்களில் ஒன்றாக பாவித்தார்கள். புலிகள் இயக்கத்தின் நபர்கள் மட்டுமன்றி அவர்களின் ஆயுதங்கள் கூட பல்கலைக்கழகத்திற்குள் சில ஊழியர்களினதும் மாணவர்களினதும் உதவியோடு மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த உண்மை பல்கலைக்கழகத்தில் உயர் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை பலருக்கும் தெரிந்திருந்தது. இதற்கு எமது மருத்துவ பீடமும் விதிவிலக்காக இருக்கவில்லை. இதனால் யாழ். பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்களிடையேயும் விரிவுரையாளர்களிடையேயும் புலிகளைப்பற்றி பேசுவது மிக மிக அச்சம் நிறைந்ததாக காணப்பட்டது. இந்த அச்சத்தின் காரணமாக அன்று புலிகள் இயக்கம்தான் சில மருத்துவபீட மாணவர்களின் உதவியுடன் மெடம் ராஜினி அவர்களை சுட்டுக் கொன்றது என்ற உண்மையைப்பற்றி எவரும் வெளிப்படையாக பேசத் துணியவில்லை. அதுமட்டுமன்றி அக்கொலையைச் செய்தது இந்திய இராணுவம் அல்லது அவர்களோடு நிற்கும் ஏனைய ஆயுதக் குழுக்களில் ஒன்று என்ற பொய்யான கருத்தையே பலரும் பரப்ப முயற்சித்தனர்.

மெடம் அவர்கள் கொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இருந்தே புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மருத்துவ பீட மாணவர்களின் உதவியுடன் எமது வளாகத்திற்குள் நுழைந்து அவரை வேவு பார்த்தார்கள். மெடத்தோடு நெருங்கிப் பழகிய மாணவர்கள் பலருக்கு இவ்விடயம் தெரிந்திருந்தும் அதை எவ்வாறு வெளியிடுவது என்ற அச்சம் அவர்களிடம் காணப்பட்டது. அதே நேரம் இக்கொலையாளிகளை உள்ளே கூட்டிவந்த சில மாணவர்களும் கூட மெடத்தோடு மிக நெருக்கமாக பழகிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முக்கியமான இருவரை நான் இங்கு பெயர் குறிப்பிட விரும்புகிறேன்.
அவர்களில் ஒருவர் வடமராட்சியை சேர்ந்த சூரி எனப்படும் சூரியகுமாரன் மற்றவர் முல்லைத்தீவைச் சேர்ந்த தர்மேந்திரா என்பவர்களாவர். புலிகள் இயக்கத்தின் உளவாளிகளும் கொலைகாரர்களும் சூரியோடும் தர்மேந்திராவோடும் மருத்துவபீட வளாகத்திற்குள் நின்று கதைத்து பேசுவதும் வளாக சிற்றுண்டிச் சாலையில் தேனீர் அருந்துவதும் அப்போது மிக வெளிப்படையான நிகழ்ச்சிகளாக இருந்தன. புலிகளின் சாவகச்சேரி பொறுப்பாளர் கேடில்சின் சகோதரரான காண்டீபன் என்னும் பிரபல கொலையாளியும்கூட தர்மேந்திராவோடு தேனீர் அருந்துவதை நான் பலமுறை நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.

1989 செப்டெம்பர் 21ம் திகதியன்று, 2வது எம்.பீ.பீ.எஸ் பரீட்சையின் இறுதி அங்கம் முடிவடைந்து மெடம் வெளியே வரும்வரை காத்திருந்த புலிகளின் உளவாளிகளில் ஒருவன் வீதியிலே தயாராக நின்றிருந்த கொலையாளிக்கு இரகசியமாக சிக்னல் கொடுத்தான். அதைச் செய்தவன் வேறு யாருமல்ல. அங்கு பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர் செல்வக்குமார் என்பவனே. மெடம் தனது சைக்கிளில் வளாக பிரதான வாசலால் வீதிக்கு இறங்கியதும் அவரை சைக்கிளில் பின் தொடர்ந்த கொலையாளி அவரது தலையின் வலப்பக்கத்தில் முதல் வேட்டைத் தீர்த்தான். பின்னர் அவர் கீழே விழுந்ததும் இன்னும் இரண்டு தடைவைகள் அவர் தலையில் சுட்டுவிட்டுச் சென்றான்.

இந்த கொலையாளி யார் என்பதையும் நான் இங்கு சொல்லவேண்டும். புலிகளின் உளவுப்பிரிவில் பணியாற்றியவரும் கொலையாளியுமான பொஸ்கோ என்பவனே அவன். பொஸ்கோவை சாதாரண மக்களில் பலருக்கு தெரியாது. ஆனால் மெடம் கொல்லப்படுவதற்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பொஸ்கோவினதும் இன்னும் பல சந்தேகமான நபர்களினதும் நடமாட்டம் மருத்துவ பீடத்திற்குள் அதிகரித்திருந்தது. பொஸ்கோவிற்கு வயது 30 - 35 இடையில் இருக்கும். எப்போதும் மற்றவர்களை சந்தேகத்தோடு குரோதத்தோடும் பார்க்கும் அவனது விறைப்பான முகமே அவனைக் காட்டிக் கொடுத்து விடும். இந்த பொஸ்கோ சூரியோடும், தர்மேந்திராவோடும் அமர்ந்து வளாக சிற்றுண்டி சாலையில் தேனீர் அருந்துவதை நானும் பல மாணவர்களும் கண்டிருந்தோம். முதலில் எனக்கும் இவன் யார் என்று தெரியாது. எம்மோடு படித்த ஒரு மாணவனே எங்களுக்கு பொஸ்கோ யார் என்ற உண்மையைச் சொன்னான்.

மருத்துவ பீடத்திற்குள் இவனின் நடமாட்டம் பல தடவைகள் இருந்ததை நானும் சக மாணவர்களும் கண்டிருந்தோம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இக்கொலை நடக்கும்போது அச்சம்பவத்தை நேரில் பாக்த்த ஓர் மாணவன் இன்னும் உயிருடன் இருக்கிறான். அந்த மாணவனும் நானும் ஒன்றாக திரியும்போதும்கூட பல தடவை பொஸ்கோவை நாம் கண்டிருக்கிறோம். அன்று அந்த மாணவனும் நாங்களும் இணைந்து, 'புலிகள் இயக்கமும், அதன் கொலையாளி பொஸ்கோவும், அவனுக்காக உளவு வேலை செய்த சூரிய குமாரனும் தர்மேந்திராவும்தான் மெடத்தின் கொலைக்கு பொறுப்பு' என்று கூறியிருந்தால் நாங்கள் ஒருவரும் இன்று உயிருடன் இருக்கமாட்டோம். எனவே என் சக மாணவன் கண்ணால் கண்ட அந்தக் கொலையை யாரிடமும் வெளியே சொல்லாதே என எச்சரித்தவர்களில் நானும் ஒருவன். மெடம் கொல்லப்பட்ட மறுதினம் அவரின் உடல் மருத்துவ பீடத்திற்கு கொண்டு வரப்பட்டபொழுது யாழ். பல்கலைக்கழகத்தின் பல மூத்த விரிவுரையாளர்கள் அங்கு சமூகமளிக்கவில்லை. ஏன்..? காரணம் அவர்களுக்கும் இக்கொலையை செய்தவர்கள் யார் என்று நன்றாக தெரியும்.

சூரி, தர்மேந்திரா ஆகிய இருவரோடும் நெருங்கி பழகியவர்களும், புலிகளின் கொலைகார அரசியலுக்கு ஆதரவாக இருந்த பல மருத்துவபீட மாணவர்களுக்கும் இந்த உண்மை நன்கு தெரியும். மெடம் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தி மருத்துவ பீடத்திற்குள் பரவியதுமே சூரி, தர்மேந்திரா உட்பட அவர்களின் நண்பர்களின் முகங்களை நான் பார்த்தேன். அவர்களின் முகங்களே உண்மையை தெளிவாக வெளிப்படுத்தின. அவர்களைக் காட்டிக் கொடுத்தன. எனது கண்களைக்கூட அவர்களால் நேரடியாக பார்க்க முடியவில்லை. தங்களுக்கு கல்வியை போதித்து வழிகாட்டி, எதிர்கால மாணவ சமூகத்திற்கு கலங்கரை விளக்காக நின்ற அந்த ஒப்பற்ற மேதையை சுட்டுக் கொன்றுவிட்டு அவர்கள் இன்று வெளிநாடுகளில் சுகம் அனுபவிக்கிறார்கள். சூரியகுமாரன் இன்று இங்கிலாந்தில் வைத்தியசாலை ஒன்றில் வேலை செய்கிறான். அன்று அந்த தாயின் இரு குழந்தைகளை அநாதையாக்கிய இக்கொலைத்திட்டத்தின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவனாகிய இவன், இன்று தான் உயிர்களைக் காப்பாற்றும் வைத்தியனாக வேஷம் போடுகிறான். இவர்கள் நாளைய சமூகத்தில் பெரிய மனிதர்களாக உலவ நாம் அனுமதிக்கலாமா? இந்த நாகரீக உலகத்தின் முன்னால் இவர்களை நிறுத்தி அம்பலப்படுத்த வேண்டாமா. நிட்சயம் அதை நாம் செய்ய வேண்டும்.

எனது அன்புக்குரிய சக மாணவர்களே நாம் நீண்டகாலம் மௌனமாக இருந்துவிட்டோம் எமது கண் முன்னால் நடத்தி முடிக்கப்பட்ட இந்த அநியாயத்தை மூடி மறைக்க புலிகளும் அவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களும் இன்னமும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் நடந்த உண்மை வரலாற்றில் புதைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே நான் இங்கு இதைப் பதிவு செய்கிறேன் இது தொடர்பாக நீங்களும் உங்களின் மனட்சாட்சியின் அடிப்படையில் உண்மையை சமூகத்தின் முன் வைக்க கோரிக்கை விடுக்கிறேன்.

-- ஆண்டு யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன்-

(1989ம் இலங்கையில் இருந்து வெளிவந்த அமுது சஞ்சிகையில் வெளியாகிய கட்டுரை 21 - 09 - 2005)




Read more...

Friday, September 20, 2019

விடுதலைப் புலிகளுடன் பினாங்கு ராமசாமிக்கு தொடர்பா? மலேசிய போலீஸ் சொல்வதென்ன?

பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமிக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே தொடர்புகள் நீடித்து வருவதாக சந்தேகிக்கத் தூண்டும் வகையில் காணொளிப் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது மலேசிய இந்தியர்கள் மத்தியில் புதிய விவாதப் பொருளாகியுள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய காவல்துறைத் தலைவர் ஹாமிட் பாடோர், விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட, எத்தகைய பயங்கரவாத சித்தாந்தங்களாக இருப்பினும், அவற்றைப் பரப்புபவர்கள் காவல்துறை நடவடிக்கையில் இருந்து தப்ப இயலாது என எச்சரிக்கை விடுத்தார்.

துணை முதல்வர் ராமசாமியும், தமிழீழ ஆதரவாளர்கள் சிலரும் இடம்பெற்றுள்ள அக்குறிப்பிட்ட காணொளிப் பதிவானது முன்பே எடுக்கப்பட்டது என்றும், பழைய பதிவை சிலர் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவதாகவும் ஹாமிட் பாடோர் கூறினார்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்ட அவர், தமிழீழ ஆதரவுக் காணொளி குறித்தும், அதனை மையப்படுத்தி உள்ள பிரச்சினை தொடர்பாகவும் முன்பே விசாரணை நடந்து முடிந்துள்ளது என்றார்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றும், விரைவில் அதன் மீது உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் அப்துல் ஹாமிட் கூறினார்.


லண்டனில் நடந்த போராட்டம் ஒன்றில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடியைப் பிடித்திருக்கும் தமிழர் ஒருவர். (கோப்பு படம்)

"இந்தக் காணொளிப் பதிவு உண்மையாக இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்வோம். இந்தக் குறிப்பிட்ட காணொளி மட்டுமல்ல..., இதேபோல் வேறு சில வழக்குகளும் உள்ளன.

"இனிமேல் எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படாது. இனம், மதம் மற்றும் அரச அமைப்பை சிதைக்கும் வண்ணம் செயல்படுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்," என்று காவல்துறை தலைவர் அப்துல் ஹாமிட் மேலும் எச்சரித்தார்.

துணை முதல்வர் ராமசாமி சம்பந்தப்பட்ட காணொளிப் பதிவு தொடர்பாக நியாயமான முறையில் விசாரணை நடைபெறும் என்று குறிப்பிட்ட அவர், இவ்விஷயத்தில் காவல்துறைக்கு சற்றே அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.

அனைத்துலக பயங்கரவாத அமைப்புகளை ஆராதிக்கும் செயல்பாடானது மலேசியாவுக்குப் பொருந்தாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பேராசிரியர் ராமசாமி, இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக பொதுச்செயலருமான வைகோ ஆகிய இருவரும் அந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதமே இந்தக் காணொளி தொடர்பாக மலேசிய காவல்துறை விசாரணை நடத்த துவங்கியது.

பல ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற தாம் முயற்சி மேற்கொண்டதாக ராமசாமி தெரிவித்தார் என மலேசிய ஊடகம் தற்போது சுட்டிக்காட்டி உள்ளது.



மலேசிய போலிஸ்

விடுதலைப்புலிகளுடன் ராமசாமி இன்னும் கூட தொடர்பில் இருப்பதாக குற்றம்சாட்டுவதற்கு ஏற்ப இந்தக் காணொளிப் பதிவு அமைந்துள்ளது.

ராமசாமி: ஜாகிர் நாயக்கை கேள்வி கேட்டதால் வீண் பழி சுமத்துகிறார்கள்
இந்நிலையில் துணை முதல்வர் ராமசாமியை பிபிசி நியூஸ் தமிழ் தொடர்பு கொண்டபோது, தம் மீது வீண் பழி சுமத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

மத போதகர் ஜாகிர் நாயக்கின் செயல்பாடுகளை தாம் விமர்சித்து வரும் நிலையில், பிரச்சினையை திசை திருப்பும் வகையில் தம்மை விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக சித்தரிக்க சிலர் முயற்சிப்பபதாக அவர் கூறினார்.

கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் முடிவடைந்த பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பு செயல்பாட்டில் இல்லை என்று சுட்டிக்காட்டிய ராமசாமி, தம் மீது குற்றம்சாட்டுபவர்கள் விடுதலைப் புலிகள் செயல்பாட்டில் இருப்பதை நிரூபிக்க இயலுமா? எனக் கேள்வி எழுப்பினார்.

"கடந்த 2003-2004ஆம் ஆண்டுகளில் நான் இலங்கை சென்றிருந்தேன். அங்கு பல இடங்களுக்குச் சென்று ஈழத் தமிழர்களின் நிலை குறித்து அறிந்து கொண்டேன். பின்னர் பேச்சுவார்த்தை மூலம் அங்குள்ள தமிழர்களுக்கு ஏதேனும் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக சில முயற்சிகளை மேற்கொண்டது உண்மைதான்," என்று துணை முதல்வர் ராமசாமி தெரிவித்தார்.


ஜாகீர் நாயக்

தமது இந்தப் பயணத்தையும் முயற்சியையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக தம்மை சித்தரிக்க முயற்சி நடப்பதாக அவர் குறிப்பிட்டார். இதற்காக மதிமுக பொதுச்செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகியோருடன் தாம் இருக்கும் புகைப்படங்களை வைத்து, சிலர் தவறான தகவல் பரப்புவதாகவும் ராமசாமி சாடினார்.

"ஜாகிர் நாயக் மீதான பண மோசடி, பயங்கரவாத தொடர்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து நான் கேள்வி எழுப்பினேன். அது சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால் எனக்கு எதிராகச் செயல்படுகிறார்கள்.

"இந்தக் குறிப்பிட்ட காணொளி தொடர்பாக போலீசார் ஏற்கெனவே விசாரணை நடத்தி முடித்துள்ளனர். இப்போது திடீரென இந்தக் காணொளி மூலம் சிலர் சர்ச்சை கிளப்புவது ஏன்?

"காவல்துறை நடத்திய விசாரணையின் முடிவு என்ன? அது எதுவாக இருப்பினும் ஏற்கத் தயாராக உள்ளேன்," என்று ராமசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பிபிசி தமிழ்

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com