Tuesday, August 27, 2019

நிரந்தர விடிவு தரப்படும் என எழுத்து மூலம் தந்தால் ஆதரவு தருவோம் சாந்தி எம்பி சொல்கிறார்

தமிழ் மக்களுக்கு நிரந்தரமானதொரு விடிவைத் தருவதாக, எழுத்து மூலம் எந்தக் கட்சி ஆதரவு தெரிவிக்கின்றதோ, அதற்கே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் . சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்புப் பகுதியில், அவரின் விசேட நிதி ஒதுக்கீடு ஒன்றின் மூலம் நிர்மாணிக்கப்படவிருக்கும் வீதி ஒன்றிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசியலிலே ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துக்கொண்டிருக்கின்றது.

யாரை ஜனாதிபதியாக நியமிப்பது என்பது தொடர்பில் ஆராயப்படுகின்றது. பலர் நியமித்தும் இருக்கின்றனர். பலர் வேட்பாளர்களை நியமிப்பதில் இழுபறி நடந்துகொண்டிருக்கின்றது.

ஆனால் அவர்களுடய கட்சி இழுபறிக்குள் நாங்கள் தலயீடு செய்யப் போவதில்லை.

எனினும் எந்தக் கட்சி தமிழ் மக்களின் விடிவிற்காக சரியான முறையிலே, வழமையாக கடந்த 70வருடங்கள் ஏமாற்றியதைப்போல் பேச்சுவார்த்தையில் இல்லாமல், ஒரு இழுபறி நிலை இல்லாமல், எழுத்து மூலமாக எமது தமிழினம் சுயநிர்ணய உரிமையுடன் தலை நிமிர்ந்து வாழ்வதற்குரிய ஆயத்தமாக இருக்கின்ற இந்தச் சூழலை தொடர்ந்து கொண்டு நடத்தி, ஒரு விடிவினை நிரந்தரமாகத் தருவதற்கு எந்தக் கட்சி எழுத்துமூலமாக ஒரு ஆதரவினை, நிச்சயத்தினைத் தெரிவிக்கின்றதோ அதற்கே எமது கட்சி ஆதரவு தெரிவிக்கும் நிலையில் இருக்கின்றது. என்றார்.

Read more...

நாட்டிலுள்ள ஒரு இராணுவ முகாமைக்கூட அகற்ற மாட்டேன். சவேந்திர சில்வா!

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் வேறு பகுதிகளில் தற்போது காணப்படும் படையினரின் முகாம்களை அகற்றும் அல்லது குறைக்கும் எண்ணம் ஒருபோதும் தனக்கில்லை என்று, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அரசியல்வாதிகளை விடவும், நாட்டின் பாதுகாப்புக்கு எந்தெந்த இடங்களில் எவ்வளவு படையினர் இருக்க வேண்டும் என்பது தொடர்பில், முப்படையினருக்கே அதிகளவில் தெரியுமென்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே படையினர் செயற்படுகின்றனர் என்றும் கூறிய அவர், தற்போதுள்ள முகாம்களை விட்டு இராணுவத்தினரையோ முப்படையினரையோ வெளியேற்றவோ இடமாற்றம் செய்யவோ முடியாது என்றும் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்துப் பார்த்து, காலத்தின் தேவைக்கு ஏற்பவே அதுபற்றி எதிர்காலத்தில் தீர்மானிப்பதாகவும் கூறினார்.

கொழும்பு, கிங்ஸ்பரி ஹோட்டலில், நேற்று (26) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கையில் உள்ள அனைத்தின மக்களையும், தான் சமமான முறையிலேயே பார்ப்பதாகவும் யாரையும் பிரித்துப் பார்க்கவில்லை என்றும் “நான், ஓரினத்தின் இராணுவ தளபதி இல்லை. அனைத்தின மக்களும் வாழும் நாட்டுக்கே நான் தான் இராணுவத் தளபதி” என்றும் கூறினார்.

தனது நியமனம் தொடர்பில் அமெரிக்கா, பிரித்தானியா, ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச தரப்பினர் தமது கருத்துகளை முன்வைக்கின்றனர். அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. எனினும், நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, அதற்கு பொறுத்தமானவர் என்ற ரீதியில், நான் தேவை என்பதன் காரணமாகவே முப்படைகளில் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனக்கு இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என்றும் நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, தான் அதை ஏற்றுக்கொண்டதாகவும் இந்த நாட்டையும் அனைத்து மக்களையும் காப்பாற்றும் பொறுப்பு தனக்கு உள்ளதென்றும் அவர் கூறினார்.

“எனது நியமனம் தொடர்பில், பலரும் அவர்களது கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம். இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது இது முதற்றடவை அல்ல.

மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பிலும் முன்னர் பல்வேறு குற்றச்சாட்டுகள், அனுமானங்களை முன்வைத்தார்கள். இறுதியில் அந்தக் குற்றச்சாட்டுகள் பொய்த்துப் போயின. அதைப் போலவே, இப்போது என்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் வரும் போகும்.

“நான் இந்த நாட்டின் இராணுவத் தளபதியாக பதவி வகிக்கும் காலத்தில், நாட்டின் புலனாய்வுத் துறையை விருத்திசெய்து வலுப்படுத்த, முன்னின்றுச் செயற்படுவேன். இராணுவத்தின் செயற்பாடுகளுக்கு, புலனாய்வுப் பிரிவினர் சக்திவாய்ந்தவர்களாகக் காணப்படுவது அவசியம்.

புலனாய்வுத் தகவல்களைக் கொண்டே, எமது படையினரை நாங்கள் பணிகளில் ஈடுபடுத்த முடியும். அவ்வாறான புலனாய்வுப் பிரிவை மேலும் வலுப்படுத்தி, உலகில் சிறந்த புலனாய்வுத் துறையைக் கொண்ட நாடாக இலங்கையை மாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.

இதேவேளை, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைச் சம்பவத்துக்குத் தேவையான தகவல்களை நீதிமன்றம் கோரினால், இராணுவத்தினரிடம் உள்ள தகவல்களை வழங்குவதற்கு, ஒருபோதும் பின்னிற்பதில்லை என்றும், இராணுவத் தளபதி மேலும் கூறினார்.

Read more...

கைது செய்யப்பட்ட வைத்தியரின் தகவலுக்கு அமைய ஆயுதங்கள் மீட்பு!

பயங்கரவாத தடுப்பு பிரிவினால் (TID) கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபனிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து பல்வேறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

AK 47 துப்பாக்கி, 120 தோட்டாக்கள், 11 கைக்குண்டுகள், PE10 என சந்தேகிக்கப்படும் 10 கிலோ வெடிமருந்து, தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை TID யினர் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். சந்தேகநபரின் மூலம் பளை, பிரதேசத்தில் வைத்து குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலீஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) இரவு பளை வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி வைத்தியர் சின்னையா சிவரூபன் கைது செய்யப்பட்டிருந்தார்.

3 பிள்ளைகளின் தந்தையான, 41 வயதான சிவரூபன் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, TID யிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். அவரது கைதை கண்டித்து, அவரை விடுதலை செய்யக் கோரியும் பளையில் கடந்த வெள்ளிக்கிழமை (23) ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்க்கது.

Read more...

ஜனாதிபதிக்கு பதக்கம் வழங்கி பாராட்டிய இன்டர்போல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்தல் உள்ளிட்ட அந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட வெற்றிகரமான நடவடிக்கைகள் குறித்து இன்டர்போலின் பொதுச் செயலாளர் ஜேர்கன் ஸ்டொக் (Jurgen Stock) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் முப்படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினருக்கும் இலங்கை பொலிஸாருக்கும் தமது பாராட்டுக்களை தெரிவித்ததோடு விசேட பதக்கம் ஒன்றையும் வழங்கியுள்ளார்.

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள இன்டர்போலின் பொதுச் செயலாளர் இன்று (27) முற்பகல் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார். ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போதே அவர் மேற்படி பாராட்டுக்களை தெரிவித்து இன்டர்போலின் விசேட பதக்கமொன்யையும் ஜனாதிபதிக்கு வழங்கிவைத்தா

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதலின் பின்னர் விசாரணை நடவடிக்கைகளுக்கு உதவுமாறு இன்டர்போலுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்தமை தொடர்பில் இதன்போது பொதுச் செயலாளருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, குற்றவாளிகளுக்கு எதிராக போராடுவதற்காக வழங்கிய உதவிகளை பாராட்டினார்.

இலங்கை பொலிஸாரும் புலனாய்வுத்துறை அதிகாரிகளும் உயர்ந்த தொழில்வாண்மையுடன் செயற்படுவதாகவும் இன்டர்போல் நிபுணர்களுக்கு தேவையான முழுமையான உதவி அவர்களிடமிருந்து கிடைப்பதாகவும் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் ஒழிந்திருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் நிதி தொடர்பான குற்றவாளிகளை நாடு கடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக உதவி வழங்குமாறும் ஜனாதிபதி இதன்போது இன்டர்போல் பொதுச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கு முழுமையான உதவிகளை வழங்குவதாக பொதுச் செயலாளர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.

போதைப்பொருட்களை கண்டறியும் புதிய தொழிநுட்ப உபகரணங்களை பெற்றுக்கொள்ளுதல் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கு தேவையான விசேட அறிவை பெற்றுக்கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக எதிர்காலத்தில் உடன்படிக்கையொன்றை மேற்கொள்ளல் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, இன்டர்போல் உதவிப் பணிப்பாளர் கரேன் பெலன் (Karel Pelan) உள்ளிட்ட பாதுகாப்புத் துறை சிரேஷ்ட அதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Read more...

Monday, August 26, 2019

நாட்டு மக்கள் கேட்கும் ஒரே தலைவர் „சஜித்" என்கிறார் கபீர் ஹஷீம். ஐ.தே.க அனாதைகளாகியுள்ளனராம். ரோஹித்த

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கட்சி சாராத வேட்பாளர் ஒருவரை களமிறக்க ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போது மேற்கண்ட தகவலை வெளியிட்ட அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் :

ஐ.தே.க தற்போது அனாதையாகியுள்ளதாகவும் அந்த கட்சி அருவருக்கதக்க ஒன்றாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்ட ரோஹித்த அபேகுணவர்த்தன உடைந்துபோயிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் வெல்டிங் செய்து பொருத்தியெடுக்கும் நோக்கில் நேற்றிரவு மீண்டுமொரு கலந்துரையாடலில் இடம்பெற்றதாகவும் தெரிவித்தார்:

மேலும் கட்சி சார்பில் போட்டியிடும் உறுப்பினர் கட்சி சாராத ஒருவராக இருக்கவேண்டும் என்றும் அவ்வாறு கட்சியின் உறுப்பினர் ஒருவர் போட்டியிடுவதாக இருந்தால், அவர் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் அங்கு பேசப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

அதாவது நாட்டின் ஜனாதிபதி கட்சி சார்பற்ற ஒருவராக இருக்கவேண்டும் என்று அவர்கள் அதற்கு பாடம் கற்பிக்க முற்படுகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்:

இதேநேரம் நாட்டு மக்கள் கேட்டும் ஒரே தலைவர் சஜித் பிரேமதாச என அமைச்சர் கபீர் ஹஷிம் தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

இந்த சந்தர்பத்தில் உண்மையாக ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்த கேள்விக்கு பதிலளித்தால் நிச்சயம் ஒழுக்காற்று விசாரணைக்கு முகம் கொடுக்க நேரிடும் என கூறினார்.

எவ்வாறாயினும் வேட்பாளர் குறித்து கட்சி இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ முடிவையும் எடுக்கவில்லை என கூறினார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவையே மக்கள் அதிகமாக விரும்புவதாகவும் இது தொடர்பில் குழு கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டதாக கூறினார்.

மக்கள் கேட்கும் தலைவரை கொடுக்க வேண்டியது கட்டாயம் எனவும், எவ்வாறாயினும் கட்சித் தலைவர் உள்ளிட்டவர்களோடு கலந்து பேசி தீர்மானிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அனைத்தும் சுபநேரத்தில் இடம்பெறும் எனவும் அந்த சுப நேரம் நாளை அல்லது நாளை மறுநாள் மலரும் எனவும் கூறினார்.

பதுளை மற்றும் மாத்தறையில் நடைபெற்ற கூட்டங்களில் கட்சியின் தவிசாளர் என்ற வகையில் ஏன் கலந்துக்கொள்ளவில்லை என ஊடகவியலாளர்கள் வினவினர்.

உத்தியோகப்பூர்வமாக வேட்பாளர் ஒருவர் தெரிவு செய்வதற்கு முன்னர் கூட்டங்கள் இப்படி இருந்தால் வேட்பாளர் தெரிவின் பின் எப்படி இருக்கும் எனவும் அமைச்சர் கூறினார்.

Read more...

இலங்கை இராணுவத்தினர் யார் என்பது பற்றி தமிழ் மக்கள் நன்கு அறிவர். வெளியாரின் நற்சான்றிதழ் தேவையில்லை. சவேந்திர

வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் இலங்கை இராணுவத்தினர் எவ்வாறு நடத்து கொண்டார்கள் என்பதை சம்பந்தப்பட்ட மக்கள் நன்கு அறிவர் என்றும் அந்த மக்களை எவ்வாறு இராணுத்தினர் தமது குடிக்கும் தண்ணீரையும் உண்ணும் உணவையும் கொடுத்து காப்பாற்றினர் என்பது குறித்தும் வன்னியிலிருந்து மீட்கப்பட்ட மக்களுக்கு ஞாபகம் உண்டு என்றும் புதிய இராணுத் தளபதியாக கடமை ஏற்றுள்ள லெப் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று கண்டியில் தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன், அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களையும் சந்தித்து ஆசி பெற்றுவிட்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன் அங்கு தொடர்ந்து கருத்துரைக்கையில் :

'அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் நாட்டுக்கு சேவை செய்வதில் எனது கடமையைச் செய்துள்ளேன்.

ஆனால் சில நபர்கள் என் மீது போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில் விடாமுயற்சியுடன் இருக்கின்றனர்.

எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ போர்க்குற்றங்கள் தொடர்பாக என் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சே எடுக்கும்.

சிறிலங்கா இராணுவம் ஒரு நவீன இராணுவமாக முன்னேறியுள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதும், புலனாய்வு அமைப்புகளை வலுப்படுத்துவதும், முறையான திட்டத்தை செயல்படுத்துவதும் இராணுவத்தின் முக்கிய பங்காகும்.

நாட்டில் நிலவும் சூழ்நிலைகளுக்கேற்ப ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் பாதுகாக்க இராணுவம் செயல்பட்டு வருகிறது.' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

Saturday, August 24, 2019

முப்படையினருக்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடப்பட்டுள்ளது.

முப்படையினருக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அமைதியைப் பேணும் பொருட்டு முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான இந்த அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வௌியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 40 ஆவது அத்தியாயத்தினூடாக ஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரங்களுக்கு அமைய இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் ஆயுதம் தாங்கிய முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்த ஜனாதிபதியால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகால சட்ட ஏற்பாடுகள் நேற்று முதல் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளது.

நாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது

எப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் அவசரகால சட்ட ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டன.

இந்நிலையில், அமைதியை தொடர்ந்தும் நிலைநிறுத்தும் வகையில், ஆயுதம் தாங்கிய முப்படையினரை அனைத்து மாவட்டங்களிலும் கடமைகளில் ஈடுபடுத்த அதிவிசேட வர்த்தமானியூடாக ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

Read more...

புதிய அரசாங்கத்தை உருவாக்க அனைவரையும் ஒத்துழைக்குமாறு ரணில் அழைப்பு

அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி, இன, மத பேதமற்ற தேசிய சமூகம் ஒன்றை உருவாக்கி, இந்த நாட்டை சுவிசேஷம், சுபிட்சம் உள்ள தேசியமாக அனைவரும் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின், அதிவேக நெடுஞ்சாலையில் காபர்ட் வீதி அபிவிருத்திக்கான அங்குரார்ப்பண வைபவம் இன்று (24) மூதூர் திரி டி சந்தியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தரையாற்றிய பிரதமர், 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் மறைந்த இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மகருப் உடன் நான் இந்தப் பிரதேசத்துக்கு கடல் வழியாக வந்து, வெறும் மணல் வீதியிலே பயணம் செய்தேன். ஆனால், இன்று தரைவழியாக வந்து, ஐ ரோட் கார்பட் வீதிக்கான அபிவிருத்தி வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

“இவ்வருட இறுதிக்குள் பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கான விசேட விமான சேவையை ஆரம்பிக்க உள்ளோம். இதற்காக இப்போது அதன் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

“அதேபோன்று, உல்லாசப் பயணத்துறை விருத்தி செய்வதற்காக, மட்டக்களப்பு விமான நிலையத்தையும் அபிவிருத்தி செய்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.

நல்லாட்சி அரசாங்கம் இந்த நாட்டை பொறுப்பேற்றபோது கடன் வழங்குவதற்கு கூட எந்த ஒரு நாடும் முன்வரவில்லை. ஆனால், கடந்த மூன்று வருட காலத்துக்கு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு எங்களிடம் போதுமான நிதியை வரவழைத்துக் கொண்டோம்.

21க்கு பிறகு நாடு அழிந்து விடும் என்று கற்பனை கதை ஒன்றை பொது எதிரணியினர் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். பாடசாலைக்கு மாணவருக்கு செல்ல வேண்டாம் என்றும் முஸ்லிம் கடைகளில் பொருள்கள் வாங்க வேண்டாம் என்றும் கூறி முஸ்லிம்களின் கடைகளை எரித்தார்கள். ஆனால் குறுகிய காலத்தில், இதற்கு எதிராக வெற்றி கண்டோம் எனவும் கூறினார்.

கடந்த முப்பது வருட கால யுத்தத்தில் யாழ்ப்பாணத்தில் ஒரு குண்டு வெடித்தால் இரண்டு, மூன்று வருடங்களுக்கு உல்லாசப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடையும். ஆனால் இந்த நிலைமையை மாற்றியமைத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

Read more...

பயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை அவசரகால சட்ட நீக்கத்தால் பாதிக்காது

அவசரகால சட்டத்தை நீக்குவதன் ஊடாக பயங்கரவாத அமைப்புகளின் தடைக்கு எந்த விளைவையும் ஏற்படுத்தாது என தேசிய ஊடக மையம் தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து சில இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கள் தடை செய்யப்பட்டன.

அந்த வகையில் குறித்து அமைப்புக்கள் மீதான் தடையில் எவ்வித மாற்றமும் அவசரகால தடைச் சட்டத்தை நீக்கியதால் ஏற்ப்படாது என தேசிய ஊடக மையம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயங்கரவாத அமைப்புகளான தேசிய தௌஹீத் ஜமாத், ஜமாதே மிலாது இப்ராஹிம், விலயாத் ஹஸ் செயிலான் ஆகிய மூன்றும் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

இலங்கையிலிருந்து சென்ற பயங்கரவாதிகளுக்கு வலைவீசும் தமிழக காவல்துறை

இலங்கையிலிருந்து கடல்மார்க்கமாக 6 பயங்கரவாதிகள் தமிழகத்துக்குள் ஊடுறுவியுள்ளதாக கிடைக்க பெற்ற புலனாய்வு தகவல்களையடுத்து திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானத்தின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன என தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு குறித்த ஆறு பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தேவஸ்தானத்திற்கு முன்பாக ஆயுதம் தரித்த காவற்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த புலனாய்வு தகவலையடுத்து, தமிழகத்தின் பேருந்து நிலையங்கள், தொடருந்து நிலையங்கள், மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனிடையே, பாகிஸ்தானியர் உட்பட இலங்கையிலிருந்து ஊடுறுவியதாக கூறப்படும் 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இளைஞரை தேடி விஷேட விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதுதவிர, தமிழகத்தின் சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல நகரங்களில் இரண்டாவது நாளாகவும் சோதனை நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...

சிறிதரனின் சகோதரனின் இணையத்தளங்களை முடக்குவதற்கு குற்றபுலனாய்வுத்திணைக்களத்திடம் செல்வம் எம்பி முறைப்பாடு

பல கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டார் என்ற ஆதாரமற்ற செய்தியினை பகிர்ந்தமை தொடர்பில் சில இணையத்தளங்களுக்கு எதிராக குற்ற புலனாய்வு திணைக்களத்தில் இன்றைய தினம் (24) முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இவ்விடையம் தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவிக்கையில்,

ஆதராமற்ற உண்மைக்கு புறம்பான குறித்த செய்தியை வெளியிட்ட இணையத்தளங்களுக்கு குற்ற புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளேன்.

இதனுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் குறித்த இணையத்தளங்களை முடக்குவதற்குமான வழக்கு தொடர்தலின் முதற்கட்டமாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளேன்.

இது தொடர்பில் பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் கட்சி தலைவர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே இதனுடன் தொடர்புடையவர்களை இன்டர்போல் ஊடாக கைது செய்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக குற்றவிசாரணைப் பிரிவினரிடம் முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இணையத்தளங்களை நடாத்தும் நபர்கள் வசிக்கும் நாடுகளின் தூதரகங்களுக்கும் அறிவிக்குமாறு குற்ற புலனாய்வு திணைக்கதிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு உண்மைக்கு புறம்பான அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிடும் இணையத்தளங்களை புலம்பெயர் நாடுகளில் இருந்து நடத்தும் பண முதலைகள் இராணுவ புலனாய்வுத்துறையினரின் கோரிக்கையில் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்பட்டு வருகின்றனர்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதளுக்கெதிராக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இத்தகையவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி இவர்களின் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவது அவசியமாகும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

றிசார்ட் பதியுதீன் ச.தொ.ச வில் மேற்கொண்டுள்ள மேலுமொரு களவை கோப் கமிட்டி அம்பலப்படுத்தியது.

மக்களின் சொத்தை களவெடுக்கும் தேசத்துரோகிகளின் முன்வரிசையில் நிற்பவன் றிசார்ட் பதுயுதீன். மன்னாரிலிருந்து புலிப்பயங்கரவாதிகளால் விரட்டப்பட்டபோது பொலித்தீன் பையுடன் புத்தளம் அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்திருந்த அவன் இன்று இலங்கையிலுள்ள முன்னணி தனவந்தர்களின் ஒருவனாக காணப்படுகின்றான்.

ச.தொ.ச நிறுவனத்தின் தலைவராக செயற்படும் றிசார்ட் பதுயுதீன் பலநூறு பில்லியன் நஷ்டத்தை சதோச நிறுவனத்திற்கு ஏற்படுத்தியுள்ளமை கோப் கமிட்டி அம்பலப்படுத்தியுள்ளது. நேற்று பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் சதோச நிறுவனத்தின் பிரதானிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டபோது றிசார்ட் பதுயுதீன் பல பில்லியன் ரூபாய்களை மோசடி செய்துள்ளான் என்ற தகவலை வெளிப்படுத்தியுள்ளது.

தனது அரசியல் பிரச்சார தொலைக்காட்சியான யுரிவி என்ற தொலைக்காட்சிக்கு சதோச விற்கான விளம்;பரச் செலவு என சதொச நிதியிலிருந்து மாதம் ஒன்றுக்கு 15 லட்சங்களை செலுத்தி வந்துள்ளான். யுரிவி என்பது றிசார்ட் பதுயுதீனுக்கு சொந்தமானதும் அவனுக்காக அரசியல் பிரச்சாம் மேற்கொள்ளும் தொலைக்காட்சியாகும். இந்த தொலைக்காட்சி ஊடாக 3 வருடங்களாக மாதமொன்றுக்கு மக்களின் பணத்தில் 15 லட்சங்களை விழுங்கி வந்துள்ளான் றிசார்ட் பதுயுதீன்.

இச்செயற்பாடுகளுக்கு உடந்தைகளாக செயற்பட்டுள்ள சதொச நிறுவனத்தின் உயர் மட்டத்தினரை நேற்று விசாரணைக்கு அழைத்திருந்தபோது, அவர்கள் அங்கு ஆஜராகியிருக்கவில்லை.

ஜனாதிபதி தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த றிசார்ட் பதுயுதீன் தன்னிடம் 50 ஏக்கர் காணிகள் மாத்திரமே உள்ளதாக தெரிவித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியதாகும். ஆனாலும் அந்த ஐம்பது ஏக்கர் காணியின் பெறுமதி என்னவென்று தெரிவுக்குழு றிசார்டிடம் கேட்கத் தவறியது. குறித்த ஐம்பது ஏக்கர் காணிகளும் இலங்கைலுள்ள அதிபெறுமதி வாய்ந்த இடங்களிலே உள்ளதாகவும் அதன் மொத்த பெறுமதி பல பில்லியன் ரூபாய்களை தாண்டும் என்றும் அறியக்கிடைக்கின்றது. அவ்வாறாயின் இவன் எவ்வாறு இப்பணத்தினை தேடிக்கொண்டான் என்பது எவராலும் புரிந்து கொள்ளக்கூடியதாகும். அமைச்சுப்பதவிகளையும் அரச நிறுவனங்களின் தலைமைப் பதவிகளையும் பெற்றுக்கொண்டு அரச மற்றும் பொது மக்கள் சொத்துக்களை றிசார்ட் தொடர்ந்து கொள்ளயடித்து வருகின்றான் என்பதற்கு மேற்படி உதாரணமும் ஒன்றாகும்.

Read more...

ஆஸ்திரேலியாவின் கொள்கைக்கு எதிராக இந்தோனேசியாவில் அகதிகள் போராட்டம்.

ஆஸ்திரேலியாவின் கடுமையான எல்லைக் கொள்கைகள் காரணமாக இந்தோனேசியாவில் தாங்கள் பல ஆண்டுகளாக தவித்து வருவதாக ஆஸ்திரேலிய தூதரகம் எதிரே அகதிகள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். இதில் 600க்கும் மேற்பட்ட அகதிகள் பங்கேற்று இருக்கின்றனர்.

ஆப்கானிஸ்தான், சோமாலியா, மியான்மர், இலங்கை உள்பட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 14,000 அகதிகள் இந்தோனேசிய முகாம்களிலும் வீதிகளிலும் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்திரேலியாவில் மீள்குடியேற காத்திருக்கக்கூடிய அகதிகள். ஆனால், கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கையின் அடிப்படையில் அகதிகள் விஷயத்தில் கடுமையான நிலைப்பாட்டை ஆஸ்திரேலிய அரசு பின்பற்றி வருகிறது.

இந்த சூழலில், மனிதாபிமானமற்ற விதிகளை ஆஸ்திரேலிய அரசு திரும்ப பெற வேண்டும் ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் சமர்பித்த கடிதத்தில் அகதிகள் கோரி இருக்கின்றனர்.

“நாங்கள் இந்தோனேசியாவில் எந்த அடிப்படை உரிமையுமின்றி கிடக்கிறோம். மன ரீதியாகவும் அகதிகள் பாதிக்கபப்ட்டிருக்கின்றனர்னர்,” என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013 முதல் கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கையினை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகில் வர முயற்சிக்கும் அகதிகளை முழுமையாக நிராகரித்து வருகின்றது. அதே சமயம், இந்தோனேசியாவில் 2014 ஜூலை 1 க்கு முன்னதாக ஐ.நா.அகதிகள் ஆணையத்திடம் பதிந்த அகதிகள் மட்டுமே மனிதாபிமான திட்டத்தின் கீழ் பரிசீலிக்கப்படுவார்கள என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.



Read more...

முஸ்லிம் எம்பிக்கள் இருவர் மீண்டும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டனர். முஸ்லிம்களின் பிரச்சினை தீர்ந்து விட்டதாம்!

அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரைஸச் சேர்ந்த பைஸல் காஸிம் மற்றும் அலி ஸாஹிர் மௌலானா இருவரும் மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேற்படி இருவரும் நேற்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளனர்.

பதவி பிரமானம் செய்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர்கள், நாட்டில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைதோன்றியபோது, அனைவரும் இணைந்து ராஜனாமா செய்துகொண்டதாகவும், தற்போது முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதன்படி பைஸல் காஸிம் சுகாதார அமைச்சராகவும், அலி ஸாஹிர் மௌலானா முதன்மைத் தொழில்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராகவும் நியமிக்குமாறு கோரி பிரதமர் அலுவலகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்குத் தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் பதவியேற்றுள்ளனர்.

இதேநேரம் அம்பாறை மாவட்ட எம்பி ஹரீம் கல்முனை தமிழ் பிரதேச செயலக பிரச்சினைக்கான தீர்வு காணப்படும்வரை தான் அமைச்சுப்பதவியை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்:

Read more...

'நான் ஜனாதிபதி வேட்பாளராவதை யாராலும் தடுக்க முடியாது' - கோத்தபாய

தனது அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்துள்ளதனால், ஜனாதிபதி வேட்பாளராவதற்கு எவ்விதத் தடைகளும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

சென்ற ஏப்ரல் 17 ஆம் திகதியிலிருந்து அமெரிக்கக் குடியுரிமையை நீக்கிக்கொண்டதாகவும், தற்போதைக்கு குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்குத் தெளிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், அதற்கமைய இரட்டைப் பிரசாவுரிமையாகக் குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்டிருந்த கடவுச்சீட்டுக்குப் பதிலாக புதியதொரு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

என்றாலும் இன்னும் தனது குடியுரிமை தொடர்பில் பல்வேறு பொய்யான கருத்துக்கள் நிலவுவதாகவும், சிலர் அதுதொடர்பின் நீதிமன்று வரை நடவடிக்கை எடுக்க முயல்வதாகத் தெரியவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பத்தரமுல்ல நெலும்மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற உள்ளுாராட்சி மன்றங்களின் தலைவர்கள் ஒன்றுகூடிய கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ, ரோஹித அபேவர்தன, மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Read more...

கஞ்சிப்பானை இம்ரானுக்கு சிறைத்தண்டனை....

பிரபல பாேதைப் பொருள் வியாபாரிகளுள் ஒருவனான கஞ்சிப்பானை இம்ரானுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அவன் கொழும்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். அங்கு இந்தத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

டுபாய் அரசாங்கத்திலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தியதன் பின்னர் இரகசிய பொலிஸாரினால் அவர் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு நீண்ட காலமாக விசாரணை மேற்கொள்ளப்படது.

Read more...

Friday, August 23, 2019

அமேசன் காட்டுத்தீக்கு பிறேசில் அதிபர் பொல்சனாரூவா காரணம்?

பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் பற்றி எரிந்துக் கொண்டிருக்கின்றன. அதுவும் 'சர்வதேச நெருக்கடி' என்று விவாதிக்கப்படும் அளவுக்கு.பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் ஒரே சமயத்தில் ஆயிரம் இடங்களில் தீப்பற்றி எரிகிறது.முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அமேசான் மழைக் காடுகள் பலமுறை பற்றி எரிகிறது என எச்சரிக்கிறது பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்

2018 தரவுகளோடு ஒப்பிடுகையில் இவ்வாண்டு இதுநாள் வரை மட்டும் அமேசான் மழைக் காடுகள் பற்றி எரியும் சம்பவம் 83 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை எச்சரிக்கிறது.பிரேசிலில் இந்த 8 மாதங்களில் மட்டும் 75,000 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி உள்ளன.குறிப்பாக பிரேசிலின் ரொரைமா, ஆக்ரி, ரோந்தோனியா மற்றும் அமசோனாஸ் ஆகிய பகுதிகள் இந்த காட்டுத் தீ சம்பவங்களால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
அமேசானில் காட்டுத் தீ சம்பவங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்வதுதான். ஜூலை - அக்டோபர் இடையிலான காலக்கட்டத்தில் இயற்கையாக அதாவது மின்னல்வெட்டின் காரணமாக காட்டுத் தீ ஏற்படும். ஆனால், மரம் வெட்டுபவர்கள், விவசாயிகள் நிலத்தை தங்கள் தேவைக்காக பயன்படுத்தி கொள்வதற்காக தீ வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
அமேசானில் இவ்வாறான காட்டுத் தீ ஏற்பட வலதுசாரி கருத்தியல் கொண்ட பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூதான் காரணம் என்று சூழலியல்வாதிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

அதாவது பொல்சனாரூ அரசின் கொள்கைகள் காட்டு அழிப்பை ஊக்குவிக்கிறது. காடுகளை அழித்து விவசாயம் செய்ய, மரங்கள் வெட்ட, வனத்தை மேய்ச்சல் நிலமாக மாற்ற அவர் ஊக்குவிக்கிறார் என்பது அவர்கள் குற்றச்சாட்டு.அத்தோடுஇயற்கைக்கான உலகளாவிய நிதி அமைப்பும், காட்டு அழிப்புதான் இந்த காட்டுத்தீக்கு காரணமென குற்றஞ்சாட்டுகிறது.

இப்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க சரியான முயற்சிகளை எடுக்கவில்லை என அவர்கள் சூழலியலாளர்கள் கூறுகிறார்கள்.

பொல்சனாரூவும் அமேசான் தீ தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், போதுமான வசதிகள் இல்லாததால் எங்களால் 40 தீயணைப்பு வீரர்களை மட்டுமே அனுப்ப முடியும்" என்ற தொனியில் பதில் அளித்தார்.

மேலும் அவர், இந்த காட்டுத்தீ சம்பவங்களுக்கு அரசுசாரா அமைப்புகள் காரணமாக இருக்கலாம் என குற்றஞ்சாட்டினார்.

"அரசுசாரா அமைப்புகளுக்கன நிதியை குறைத்தால் அதற்கு பழிவாங்க அவர்கள் இப்படி செய்திருக்கலாம்" என்றவரிடம், இதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டதற்கு, "நான் அவர்கள் மீது சந்தேகம்தான்படுகிறேன். குற்றஞ்சாட்டவில்லை" என்றார்.

பருவநிலை மாற்றத்தை ஒப்புக் கொள்ளாதவர் வலதுசாரி சித்தாந்தம் மீது நம்பிக்கை கொண்ட பொல்சினாரூ. தேர்தல் பிரசாரத்தின் போதே, .

Read more...

சர்வதிகார குடும்ப ஆட்சிக்கு இடமளிக்க முடியாது - நிதியமைச்சர் மங்கள சமரவீர

குடும்ப சர்வாதிகார ஆட்சிக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது .ஐக்கிய தேசிய கட்சி பிளவுப்பட்டு அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்காது மாறாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கப் பெறும். சர்வாதிகார குடும்ப ஆட்சியை மீள தோற்றுவிக்க முடியாத அளவிற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு படுதோல்வியினை பெற்றுக் கொடுப்போம் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

மாத்தறை நகரில் இன்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

1984 காலக்கட்டத்தில் இருந்து ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் மாத்தறை நகரில் இடம் பெற்றது. முன்னாள் சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்க தொடக்கம் நடப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கும் மாத்தறை நகரில் தேர்தல் பிரச்சாரம் இடம் பெற்றது. ஆனால் இந்த மக்கள் சந்திப்பு பாரிய மக்கட்தொகையினை கொண்டாக காணப்படுகின்றது.

நான்கு வருட ஆட்சி காலத்தில் அரசாங்கம் என்ன செய்தது என்று எதிரணியினர் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றார்கள். ஜனநாயகம், தேசிய நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி இவை மூன்றையும் அரசாங்கம் முன்னிலைப்படுத்தி அரசாங்கம் அரச நிர்வாகத்தை முன்னெடுத்து சென்றது. பல நெருக்கடிகளுக்கு மத்தியிலே அரசாங்கம் தேசிய பொருளாதாரத்தை தொடர்ந்து முறையாக கொண்டு சென்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.

Read more...

அவசரகாலச் சட்டம் இனி நீடிக்கப்படாது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகாலச்சட்டம் இனி நீடிக்கப்படாது என, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, நாட்டின் சில இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

அதன் பின்னர் அவசரகால சட்டம் மாதாந்தம் நீடிக்கப்பட்ட நிலையில் நேற்றுடன் குறித்த நீடிப்பு நிறைவடைந்துள்ளது.

அதற்கமைய அவசர கால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது

Read more...

யார் என்ன சொன்னாலும் மட்டு பல்கலையை ஜனவரி 03 இல் திறப்பேன் - ஹிஸ்புல்லா அதிரடி!

மட்டக்களப்புப் பல்கலைக்கழகத்தை Batticaloa University எனும் பெயரில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 03 ஆம் திகதி திறந்துவைப்பேன் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்.

அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்திக்கூட இந்தப் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் உடைமையாக்கிக் கொள்ளவியலாது என்றும், இங்கு எக்காரணம் கொண்டும் மார்க்கம் கற்பிக்கப்படமாட்டாது எனவும் காத்தான்குடி மீரா ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற மதஅநுட்டானங்களின் பின்னர் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

என்றாலும், நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையில் மக்கள் இந்தப் பல்கலைக்கழகம் பற்றித் தவறாக எடை போட்டுள்ளனர் என்றும், இங்கு இனத்துடனோ மதத்துடனோ தொடர்புடைய எந்தவொன்றும் கற்பிக்கப்பட மாட்டாது எனவும், பொறியியல், கட்டடக் கலை, விவசாயத் தொழிநுட்பம், ரொபோ தொழிநுட்பம் போன்ற பாடங்களேள அனைத்து இனத்தினருக்கும், குறைந்த வருமானம் உடையவர்களுக்கும் கற்பிக்கப்படும் என அந்தப் பல்கலைக்கழகம் பற்றி விவரித்தார்.
br/> உயர் கல்வி அமைச்சின் அனுமதியின்றி இவ்வாறானதொரு நிறுவனத்தை உருவாக்க இயலும் எனவும், இலாப நோக்கற்ற இந்தப் பல்கலைக்கழகத்திற்காக சகலவித அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன எனவும் முன்னாள் ஆளுநர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

'பல்கலைக்கழகம் தொடர்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் பல்கலைக்கழகத்தின் முக்கியமான பதவிகள் பலவும் சிங்கள பெளத்த விரிவுரையாளர்களிடமே செல்லும். அரசாங்கம் கூறும் நிபந்தனைகளின் கீழ் நாங்கள் கல்வி கற்பிப்பதற்குத் தயாராகவே உள்ளோம். இங்கு ஆரம்பிக்கப்படவுள்ள பாடத்திட்டம் தொடர்பில் நாங்கள் 2017 இல் உயர் கல்வி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடாத்தினோம்.

குடிசார் பொறியியல் (சிவில் இன்ஜினியரிங்), இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், கட்டடக் கலை, சட்டம், உல்லாசப் பிரயாண மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவம் உள்ளிட்ட பாடங்கள் எங்களால் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.

Read more...

Thursday, August 22, 2019

"கிழக்கை மீட்போம்" -- யார், யாரிடமிருந்து மீட்பது? அறுமக்குட்டி போடி

'ஒரு தேசப்பற்று மிக்க அரசியல்வாதி கிடைத்தால் உலகப் புகழ் மிக்க நகரங்களில் ஒன்றான வெனிஸ் நகருக்கு நிகராக மட்டக்களப்பு எழுந்து நிற்க முடியும்’

அண்மைக்காலமாக கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் கிழக்கு என்கின்ற சொல்லாடல் அதிகமாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை காலமும் 'கிழக்கு என்று பேச்சை எடுத்தாலே அது பிரதேசவாதமாகும்' என்கின்ற ரீதியில் அது பார்க்கப்பட்டு வந்தது.

ஆனால் இன்றோ கிழக்கு மாகாணத்தின் பிரச்சனைகள் வேறானவை, கிழக்கில் இருப்பவர்களே கிழக்கு மாகாண அரசியலை பற்றிய முடிவுகளை எடுக்க முடியும், கிழக்குக்கு வெளியே இருக்கும் தலைவர்களெடுக்கும் முடிவுகள் கிழக்கின் பல்லின சூழலுக்கு பொருத்தமானவையல்ல, கிழக்கின் அரசியல்வாதிகள் ஒருமித்து கைகோர்க்க வேண்டும் என்றவாறாகவெல்லாம் எழுத்துக்களும் பேச்சுக்களும் உரையாடல்களும் விவாதங்களும் நிறையவே நடந்தேறுகின்றன.

இதன் அடிப்படையில்தான் 'கிழக்கை மீட்போம்'என்கின்ற கோஷம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்போன்ற கிழக்கை அடிப்படையாக கொண்ட கட்சியினரால் அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து பலருடனும் ஒரு வினவலுக்காக உரையாடியபோது மீண்டும் ஒரு தமிழன் கிழக்கின் முதல்வராக வேண்டும் என்பதையிட்டு சிலர் கருத்து தெரிவித்தனர். வேறு சிலரோ முஸ்லிம்களிடமிருந்து கிழக்கை மீட்பதற்கு ஒரு தலைவன் தேவை என்கின்றனர். இன்னும் சிலரோ யாழ்ப்பாண தலைமைகள் எம்மை தீர்மானிக்கும் பொருத்தப்பாடற்ற வரலாற்று தொடர்ச்சியிலிருந்து கிழக்கை மீட்க வேண்டும் என்கின்றனர். இவ்வாறாக கிழக்கை மீட்போம் என்கின்ற கோசம் பல திசைகளிலுமிருந்து திரட்சி பெற்று வளர்ந்து வருவது தெரிகின்றது.

இதில் எது சரியானதென்றோ எது பிழையானதென்றோ இல்லை. எல்லாமே சாராம்சத்தில் சரியானவைதான். ஆனால் அவற்றையிட்ட தெளிவான புரிதல்கள் பலரிடம் இல்லாமையை அவதானிக்க முடிகின்றது.

கிழக்கு மாகாண மக்கள் பல வழிகளிலும் அடக்கப்பட்டு முடக்கப்பட்டு கிடக்கின்றனர் என்பது உண்மை. ஒரு சமூகம் தான் ஒடுக்குமுறைக்குள்ளாவதை விட தாம் ஒடுக்கப்படுகின்றோம் என்பதை உணராத சமூகமாக கிடப்பது சாபக்கேடானது. அந்த வகையில் கிழக்கு தமிழர்கள் தாம் நீண்டகாலமாக ஒடுக்கப்பட்டு வருகின்றோம் என்பதை உணரத் தலைப்பட்டிருப்பது முக்கியமானதொரு விழிப்புணர்வாகும்.

ஆனால் 'இருந்த காக்காயை வந்த காக்காய்' துரத்துவது போல இலங்கையின் பேரினவாத சக்திகளுக்கெதிராக எழுந்த போராட்டம் இன்று வலுவிழந்த நிலையில் புதிய புதிய பிரச்சனைகள் மேலெழுந்துள்ளன. அதனுடாக பிரதான ஒடுக்குமுறையான சிங்கள பேரினவாதம் மறக்கடிக்கப்பட்டு, உள்ளக முரண்பாடுகள் தலைதூக்கியுள்ளன. ஆனால் சிங்கள மேலாதிக்க சக்திகளின் ஒடுக்குமுறைகள் வெவ்வேறு வழிகளில் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இவையனைத்தையும் ஒருமித்து எதிர்கொள்ளுவதென்பது எப்படி என்பதுதான் கிழக்கு மாகாண மக்கள் அனைவரின் மீதான எதிர்கால சவாலாகும். முஸ்லிம்களோடு உருவாகிவரும் முரண்பாடுகளை பலர் முஸ்லீம் மக்களுக்கெதிரான உணர்வுகளோடு அணுக முயற்சிக்கின்றனர். ஆனால் முஸ்லிம்களின் பெயரில் அரசியல் தலைமைகளாகவும் நிர்வாக அதிகாரிகளாகவும் இருக்கின்ற அதிகார வர்க்கத்தினரே நாம் எதிர்கொள்ள வேண்டியவர்களாகும். அதேபோன்று தான் யாழ்ப்பாண மேலாதிக்க அணுகுமுறை அரசியல் என்பதே நமது எதிரியாகும், மாறாக சாதாரண யாழ்ப்பாண மக்களோ, முஸ்லீம் மக்களோ நமது எதிரிகளாக இருக்க முடியாது.

அது சரி இவற்றையெல்லாம் கருத்தில் கொள்கின்ற, கையாளுகின்ற திறமைகொண்ட கிழக்கு தலைமை ஒன்று மேலெழுந்து அதிகாரத்துக்கு வருகின்றபோது கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டு விடுமா? என்பதே இன்றுள்ள கேள்வியாகும். அதிகாரத்தில் பங்கெடுப்பதென்பது அவசியமானதுதான். ஆனால் சாமானிய மக்களின் அரசியல் பிரதிநிதியாக அத்தகைய தலைமைகள் செயற்படுகின்றபோதுதான் அது அம்மக்களை மீட்டெடுப்பதாக அமைய முடியும். ஆனால் நமது கடந்த கால தலைமைகளில் பெரும்பாலானவை கட்சி நலன்களையும் சொந்த நலன்களையும் மட்டுமே முன்னுரிமைப்படுத்தினார்கள். இனவாத அணிதிரட்டலில் 'தமிழர் ஒற்றுமை', 'தமிழ் பிரதிநிதித்துவம்' என்பதையிட்டு மட்டுமே அக்கறை கொண்டனர். ஒடுக்கப்படும் சாமானியமக்கள் இவர்களால் பயனடையவில்லை.

ஏனெனில் வெகுஜன மக்கள் இன, பிரதேச அடையாளங்களினால் மட்டும் ஒடுக்கு முறைக்குள்ளாக்கப்படவில்லை. அவர்கள் நாளாந்த சமூக, பொருளாதார, பாலின மற்றும் இன்னபிற சுரண்டல்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள். அவர்களது வளங்கள் உள்ளுர் முதலாளிகளையும் தாண்டி தற்போது பன்னாட்டு நிறுவங்களின் நிதி மூலதனங்கள் ஆதிக்கத்துக்குள் அகப்படத் தொடங்கியுள்ளன. என்ஜிஓக்கள், தொழில் பேட்டைகள், அபிவிருத்திகள், என்கின்ற பெயர்களில் உலகமயமாதல் எம்மையும் பீடிக்க தொடங்கியுள்ளது.

இவற்றிலிருந்தெல்லாம் எமது மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்கின்ற குறைந்தபட்ச தேடுதல் கொண்டவர்கள் தலைமைக்கு வருவது அவசியம். அவர்களால்தான் கிழக்கை மீட்க முடியும்.

எமது மண்ணில் பெண்கள் மீதும் குழந்தைகள் மீதும் நடத்தப்படுகின்ற பாலியல் வன்முறைகளின் களமாக எமது பிரதேசங்கள் மாறிவருகின்றன. பண்பாடு குடும்ப கெளரவம் என்கின்ற போர்வையில் இவையெல்லாம் அடக்கி வாசிக்கப்படுவதும் மறைக்கப்படுவதும் நடந்தேறுகின்றது. வேதனைக்குரிய இந்த நிலைமைகளை எப்படியும் மாற்றியாகவேண்டும் என்கின்ற அக்கறை கொண்ட மனிதர்கள் அதிகார பீடங்களை நோக்கி மேலெழ வேண்டும் அதுவே கிழக்கு மீட்சிக்கு வழிகாட்டும்.

போட்டி போட்டுக்கொண்டு ஆலயங்களை கட்டுகின்றோம் என்று வானளாவிய கோயிற் கோபுரங்கள் மூலை முடுக்குகளிலேயெல்லாம் எழுந்து நிற்கின்றன. ஒவ்வொரு தமிழ் கிராமங்களின் உழைப்பும் வருடாவருடம் கோவில் திருவிழாக்களில் கொட்டி கரியாக்கப்படுகின்றன. போதாமைக்கு வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்கள் குடிப்பெருமை, குலப்பெருமைகளை தூக்கி நிறுத்துவதற்கு லட்ஷக்கணக்கில் கோவில்களின் அலங்காரங்களை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். அனைத்துக்கும் மேலாக எமது எம்பிமாரின் மிகப்பெரிய சாதனைகள் கோயிலுக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குவது என்பதாக மாறிவருகின்றது.

'உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பே ஆலயம்' என்கிறார் திருமூலர். 'வெள்ளைநிறப்பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது' என்றார் விபுலானந்தர். எனவே கோயில்களை நோக்கி கொட்டப்படும் கோடிக்கணக்கான நிதிகள் அனைத்தும் விரயமானவை. இந்த நிதிவளங்களை அபிவிருத்தி நோக்கிச் செலுத்துவோம், சமூகநல மேம்பாடும் வாழ்வியலில் சமத்துவமும் நோக்கிச் செலவு செய்வோம் என்று சிந்திக்க தெரிந்த தலைவர்களாலேயே கிழக்கு விடுதலையாகும்.

காலையில் எழுந்து பள்ளிக்கு செல்லமுன்னர் ஒரு பாண்துண்டு வாங்க முடியாத குழந்தைகள் இன்னும் நமதூர்களில் உண்டு. ஒரு கனிஷ்ட பாடசாலைக்காக பல கிலோ மீற்றர்கள் நடந்து செல்லவேண்டிய நிலையில் சில குக்கிராமத்து மாணவர்கள் இன்றும் கிழக்கில் இருக்கின்றார்கள். ஒழுங்கான உடையணிந்து, அலங்கரித்து அறியாத சிறுவர் சிறுமியர் இன்னும் எம்மிடையேதான் வாழ்கின்றனர். குடிநீர் இன்றி பிளாஸ்ட்டிக் குடங்களுடன் அலையும் கிராமங்கள் இந்தியாபோல் இங்கும் அதிகரித்து வருகின்றன. இவையெல்லாம் தீர்க்கப்படாமல் நமது இனம் தலை நிமிர்ந்து வாழ முடியாது என்று வீறு கொண்டெழுகின்ற தலைவர்களாலேயேதான் கிழக்கை விடுவிக்க முடியும்.

அத்தனைக்கும் மேலாக கிழக்கு என்பது தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர், பறங்கியர் என்கின்ற பல்லினங்களின் சொத்தாகும். இங்கே யாரும் ஓரினத்துக்கு தலைவராக இருந்து கொண்டு கிழக்கின் தலைவராக முடியாது. ஆனால் துரதிஷ்ட வசமாக இப்போதெல்லாம் எம்மிடமிருப்பது இனத்தலைவர்களும் ஊர்த்தலைவர்களும் மட்டுமேயாகும். இந்நிலை மாற்றப்பட்டு சக இன மக்களாலும் போற்றப்படத்தக்க தலைவர்கள் உருவாக வேண்டும். ஒரு நல்லையாமாஸ்ட்டர் போல, ஒரு தேவநாயகம் போல ஒரு இராஜதுரை போல, கிழக்கை மீட்க பெருந்தலைவர்களே தேவை. எவரொருவர் எல்லா இனங்களையும் அரவணைத்து ஆட்சி செய்யும் வல்லமையை பெறுகின்றாரோ, எவரொருவரால் இனங்கள் என்கின்ற குச்சி வேலிகளைத்தாண்டி கிழக்கில் வாழும் ஒவ்வொரு குடிமகனிடத்திலும் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் சம்பாதிக்க முடிகின்றதோ அவராலேயே கிழக்கை முழுமையாக மீட்க முடியும். அதுமட்டுமல்ல மறைந்து போன மட்டக்களப்பு பொன்னுத்துரை என்கின்ற எழுத்தாளன் சொல்வான் 'ஒரு தேசப்பற்று மிக்க அரசியல்வாதி கிடைத்தால் உலகப் புகழ் மிக்க நகரங்களில் ஒன்றான வெனிஸ் நகருக்கு நிகராக மட்டக்களப்பு எழுந்து நிற்க முடியு'மென்று.

ஆம், அப்போதுதான் கிழக்கின் விடுதலை சாத்தியமாகும்.

அரங்கம் பத்திரிகையில் இருந்து.

Read more...

இனங்களுக்கு ஏற்றவகையில் ஒரு நாட்டினுள் வெவ்வேறு சட்டங்கள் இருக்க முடியாது. பா. உ துமிந்த திஸாநாயக்க.

நாட்டின் சட்டத்தை இனங்களுக்கு ஏற்ப வகைப்படுத்த முடியாதெனவும் சகலருக்கு ஒரே சட்டம் நடைமுறைப்படுத்ததப்படவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கலாவ கிறிஸ்துவ தேவாலயத்திற்கு தேவையான பொருட்களை தனது பண்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீடடில் வழங்கி வைத்து மேற்கண்டவாறு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கு மேலும் பேசுகையில் :

இங்கு கூடியுள்ள அனைவரும் மனிதர்களே எமக்கு ஒன்றாக வாழக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. அறியாமையினால் கடந்தகாலங்களில் நாம் பிளவுப்பட்டிருந்தோம். எது எவ்வாறாயினும் இடம்பெற்ற சகல தவறுகளையும் எம்மால் தடுக்க முடியாது. தற்போது மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. நாடு ஒன்றில் நாம் ஒன்றாக வாழ்வதாயின் ஒரு சட்டம் காணப்பட வேண்டும். அது இனங்களுக்கென மாறுபட முடியாது. எமது கடந்தகாலங்களில் பல பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டியுள்ளன. எனினும் அவை எமக்கு புரியவில்லை. ஒரே சட்டம் வௌ;வேறு இனங்களுக்கு மாறுபடுவது குறித்து நாம் இதுவரை கதைக்கவில்லை. ஆனால் நாம் இன்று இது குறித்து திறந்த மனதுடன் பேசுகின்றோம். நிலவுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது என்றார்.

Read more...

நான் அமெரிக்கனும் அல்ல, தேர்தலில் போட்டியிட தடையுமில்லை - கோத்தபாய

நான் அமெரிக்கன் அல்ல இலங்கையன் கடந்த ஏப்ரல் மாதத்துடன் இரட்டை பிரஜாவுரிமை நீக்கப்பட்டுள்ளது ஆகவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான எவ்வித தடைகளும் எனக்கு கிடையாது என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமெரிக்க குடியுரிமையினை கடந்த ஏப்ரல் மாதம் 17ம் திகதி நீக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் குடிவரவு குடியகழ்வு திணைக்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனக்கு வழங்கப்பட்டிருந்த கடவுச்சீட்டில் இரட்டை பிரஜாவுரிமையுடையவர் எனக்குறிப்பிடப்பட்டிருந்தமை நீக்கப்பட்டு இலங்கைப் பிரஜை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், அரசியல் எதிராளிகள் இவ்விடயம் தொடர்பாக தவறான கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் செல்வதாகவும் குற்றஞ்சுமத்தினார் .

Read more...

இந்திய முன்னாள் நிதி அமைச்சர் சிதரம்பரத்தை சிஐபி கைது செய்துள்ளது

இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) அதிகாரிகளால் இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) கைது செய்தது. கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தை நாளை ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் CBI அதிகாரிகள் ஆஜர்படுத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்பிணை மறுக்கப்பட்ட நிலையில் ப.சிதம்பரத்தை CBI அதிகாரிகள் கைது செய்தமையினால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Read more...

சிறிதரனின் பம்மாத்து! 100 மீற்றறுக்கு அப்பாலுள்ள காணியில் தேடுதல் நடத்தியதால் தனது சிறப்புரிமை மீறப்பட்டு விட்டதாம்.

கிளிநொச்சி வட்டக்கச்சியில் புலிகளின் ஆயுதங்கள் புதைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் இலக்கம் 885 ஆறுமுகம் வீதியில் அமைந்துள்ள கந்தையா குணரத்தினம் என்பவரின் காணியில் தேடுதல் மேற்கொள்வதற்கு கிளிநொச்சி தர்மபுரம் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்று தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் வடக்கச்சி ஆறுமுகம் வீதியில் இலக்கம் 882 இல் தனது காணி உள்ளது எனவும் இதனால் இந்த தேடுதல் தனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என பாராளுமன்றத்தில் சிறிதரன் முழங்கியுள்ளார்.

கிளிநொச்சி வடக்கச்சி கிருஸ்ணர் ஆலயத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் ஆதாவது பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் காணி அமைந்துள்ள இடத்திலிருந்து நூறு மீற்றர் தொலைவில் உள்ள கந்தையா குணரத்தினம் என்பவரது காணியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் புதைகப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் படையினர் தேடுதல் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று 21-08-2019 காலை முதல் பொலீஸ், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் இணைந்து இத்தேடுதல் நடவடிக்கையின் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் இத்தோடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

புலிகளின் அனுதாப வாக்குகள் பெற்றுவந்தவர் சிறிதரன். ஆனால் அவரது செயற்பாடுகள் பலவும் அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் இவ்வாறான தேடுதல்களை தானே வடிவமைத்து அல்லது எங்காவது இடம்பெறும் விடயங்களை தனது சீலைக்குள் இழுத்தெடுத்து வாக்குப்பிச்சைக்கு தயாராகி வருகின்றார் சிறிதரன்.

Read more...

சவேந்திர சில்வாவின் நியமனம் நல்லிணக்கத்தின் மீதான நம்பிக்கையை தகர்த்துள்ளதாம்! முன்னாள் EPDP சந்திரகுமார்

வன்னியில் புலிகளுக்கு சவேந்திர சில்வா ஆப்படிக்கும் வரை கொழும்பில் சவேந்திர சில்வாவின் சகாக்களின் பாதுகாப்பில் இருந்துவந்த சந்திரகுமார், புதிய இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை நல்லிணக்கத்தின் மீது தமிழ் மக்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய முதன்மை செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மை செயலாளரும், அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆலோசகருமான அமி ஓ பிரின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான மு. சந்திரகுமார் அவர்களை அவரது கிளிநொச்சி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்றைய தினம் 22-08-2019 காலை பதினொரு மணிக்கு இடம்பெற்ற இச் சந்திப்பில் இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளின் நிலைமைகள், ஜனாதிபதி தேர்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது நல்லிணக்கச் செயற்பாடுகளில் தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றனர். குறிப்பாக நல்லாட்சி அரசின் காலத்தில் தமிழர்களின் தொல்லியல் பிரதேசங்கள் உட்பட பல இடங்களின்ஆக்கிரமிப்புக்கள் அதிகமாக இடம்பெறுகின்றமை, என்பன நல்லிணக்கச் செயற்பாடுகளை கேள்விக்குட்படுத்துகிறது எனத்தான் சுட்டிக்காட்டியதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் விருப்பத்திற்கு மாறாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் உருவாக்கப்பட்டமை மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படுகின்றமை, அவர்களுக்கான நீதியான தீர்வுகள் காணப்படாமை பற்றியும், குறித்த அலுவலகத்தின் மூலம் இதுவரை ஆரோக்கியமான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்ற விடயம் என்பன நல்லிணக்கத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியருக்கிறது.
இதனை தவிர புதிய இராணுவத்தளபதியின் நியமனமும் நல்லிணக்கத்தின் மீது தமிழ் மக்களின் நம்பிக்கையை தகர்த்திருக்கிறது.

இதனைத் தவிர கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கை மீது இருந்த சர்வதேச அழுத்த தற்போது இல்லை எனவும் இலங்கை மீதான சர்வதேச விசாரணையை மேற்கொள்ளும் வகையில் பெயர் குறிப்பிட்டு நீதிபதிகளை நியமிக்கும் அளவுக்கு காணப்பட்ட சர்வதேச அழுத்தம் தற்போது இல்லை என்றும் தான் சுட்டிக்காட்டியதாக தெரிவித்த அவர்

ஜனாதிபதி தேர்தலில் தொடர்பில் தமிழ் மக்கள் இரண்டு தரப்பினர்கள் மீது நம்பிக்கை இழந்தே காணப்படுகின்றனர். எனவே இச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் வாக்குகள் பற்றி எதனையும் கூற முடியாது என்றும் தெரிவித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

ஆனாலும் கடந்த வாரம் கொழும்பு சென்ற சந்திரகுமார் கிளிநொச்சியில் தமிழ் மக்களின் வாக்குகளை தங்களுக்கு பெற்றுத்தருகின்றேன் என பல்வேறு தரப்புக்களிடமும் பேரம் பேசியதாக இலங்கைநெட் அறிகின்றது:

Read more...

டக்ளஸ் , கருணா வழியில் புலித்தளபதி எழிலனின் மனைவி அனந்தியும் சிறிலங்கா சுதந்திக்கட்சியில் இணைந்தார்.

புலிகளின் தளபதியின் மனைவி என்ற முகத்துடன் அரசியலுக்கு நுழைந்தவர் அனந்தி சசிதரன். இவர் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் பெருமளவில் பேசியவர். அத்துடன் மேற்படி குற்றங்களுக்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியினை தொடர்சியாக விமர்சித்து வந்துடன் அக்கட்சியுடன் கூட்டுவைத்திருந்த டக்ளஸ் தேவானந்தா மற்றும் கருணா போன்றோரை துரோகிகள் என குறிப்பிட்டு வந்தவர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி இனவழிப்பு மேற்கொண்ட கட்சியென்றும் அதனுடன் இணைந்து செயற்படுபவர்கள் துரோகிகள் என்றும் குறிப்பிட்டுவந்த புலித் தளபதியின் மனைவி அனந்தி சசிதரன் இன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படப்போவதாக அறிவித்துள்ளார்.

தனது இந்த முடிவை அவர் இன்று யாழ்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அறிவித்துள்ளார்.

இதன்போது எதிர்வரும் காலங்களில் அவர் மலையக மக்களின் பிரச்சினைகளை ஜெனிவாவிற்கு எடுத்துச் செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அனந்தி சசிதரன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினதும் இலங்கை புலனாய்வு பிரிவினதும் நிகழ்ச்சி நிரலின்கீழ் செயற்படுகின்றார் என இலங்கைநெட் தொடர்சியாக வெளியிட்டுவந்த சந்தேகங்கள் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

முன்னாள் புலிகள் என்ற நாமத்துடன் அரசியலில் ஈடுபட்டுவரும் அனைத்து தரப்புக்களும் கொழும்பைத் தளமாகவும் பெரும்பாண்மையினத்தை தலைமைத்துவமாகவும் கொண்ட கட்சிகளது தேவைகளுக்கேற்றவாறே செயற்படுகின்றனர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டவேண்டியதாகும்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் விக்கினேஸ்வரனும் இவ்வாறானதோர் அறிவிப்பை விடுப்பார் என இலங்கைநெட் அறிகின்றது.

Read more...

மைத்திரி - மகிந்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இவ்வாரத்திற்குள்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ இருவருக்குமிடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இவ்வாரம் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

கொழும்பு - எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட எதிர்க்கட்சிக் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும், ஏனைய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதியதொரு கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் நேற்று முன்தினம் கட்சித் தலைமைக் கூட்டத்தில் ஒருமைப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் பா.உ கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்புமனு வெளியாவதற்கு முன்னர் புதிய கூட்டணி உருவாக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Read more...

வாக்காளர் அல்லாத காலத்தில் வாக்களித்த கோத்தாவுக்கு எதிராக தேர்தல்கள் திணைக்களத்தில் முறைப்பாடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் இலங்கைப் பிரஜை அல்லாத நிலையில் வாக்காளர் பெயர்ப்பட்டியலில் பதியப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி, தேர்தல்கள் திணைக்களத்திற்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்தில் உள்ளகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கைப் பிரஜை அல்லாமல் ஹம்பாந்தோட்டை மாவட்ட முல்கிரிகலப் பிரிவில் 2005 ஆம் ஆண்டின் வாக்காளர் பெயர்ப்பட்டியலில் பதியப்பட்டுள்ளமை தொடர்பாகவும், 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது அவர் வாக்கினைப் பயன்படுத்துவதற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளமை பற்றியும் ஊடகவியலாளர் லசந்த ருஹுனவினாவினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்குச் சொந்தமான 'ஸண்டே ஒப்ஸவர்' பத்திரிகை இதுதொடர்பாக வெளியிட்ட கட்டுரைக்கு, கோத்தபாயவின் பெயர் குறிப்பிடப்பட்ட 2005 ஆம் ஆண்டு முல்கிரிகல - மெதமுலானப் பிரிவின் வாக்காளர் இடாப்பின் ஒரு பகுதியும் இணைக்கப்பட்டிருந்தது. 2003 ஆம் ஆண்டு அமெரிக்கப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டுள்ள கோத்தபாய ராஜபக்ஷ, இரட்டைப் பிரஜாவுரிமையை 2005 ஆம் ஆண்டின் பின்னர்தான் பெற்றுக்கொண்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

Wednesday, August 21, 2019

சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கெதிரான சர்வதேசத்தின் கூக்குரல். மூஞ்சையில் குத்தியது வெளிவிவகார அமைச்சு.

இராணுவத் தளபதியாக லெப்டினட் ஜெனரல் சாவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதை எதிர்த்து பல்வேறு வெளிசக்திகள் கூக்குரல் எழுப்பி வருகின்றது. இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களின் நேரடியாக தலையிடும் குறித்த அத்துமீறல்களுக்கு இலங்கை அரசாங்கம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு நேற்று விடுத்துள்ள அறிக்கையில், சிறிலங்கா இராணுவத் தளபதியின் நியமனம் தொடர்பான விடயத்தில், வெளிநாட்டுத் தரப்பினர் தேவையற்ற தலையீடுகளைச் செய்வதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
'சிறிலங்கா இராணுவத் தளபதியின் நியமனம், சிறிலங்கா அதிபரின் இறையாண்மைக்கு உட்பட்ட தீர்மானமாகும்.

நாட்டின் பொதுச்சேவை, பதவியுயர்வு தொடர்பான தீர்மானங்கள் மற்றும் உள்நாட்டு நிர்வாக செயன்முறைகளைப் பாதிக்கும் வகையில், வெளிநாட்டு தரப்பினரின் முயற்சிகள், தேவையற்றவையும், ஏற்றுக்கொள்ள முடியாதவையும் ஆகும்.

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு, அவரது நியமனம் தொடர்பாக அதிருப்தி தெரிவித்துக் கருத்துக்களை வெளியிடுவது கவலையளிக்கிறது.

இது அனைத்துலக சமூகத்தின் பொறுப்பு வாய்ந்த எல்லாத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும், இயற்கை நீதி கொள்கைகளுக்கு முரணானதாகும்' என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முதலைக்கண்ணீர் :

மோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகிய லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதானது, வெளிநாட்டு முதலீடுகளையும், இராணுவ ஒத்துழைப்பையும் பாதிக்கும் என்று, அமெரிக்கா எச்சரித்துள்ளது.

வொசிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரி ஒருவரே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

'லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம், 2009 இல் முடிவுற்ற மிருகத்தனமான மோதலின் பின்னரான, நிலையான நல்லிணக்கத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இது மிகஉயர்மட்ட அரசியல் சூழலாகும், சில அரசியல் சக்திகள் தேசியவாதத்தை வைத்து விளையாடுவதன் மூலம், அதிக பயன் அடையலாம் என்று கருதுகின்றன.

தெளிவான, நன்கு ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் பதிவுகளில் உள்ள ஒரு ஜெனரலின் பதவி உயர்வின் மூலம் இந்த, தேசியவாதம் செயற்படுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இதுகுறித்து நாங்கள் மிகவும் கலக்கமடைந்துள்ளோம்.

இராணுவத் தளபதி, மனித உரிமை மீறல்களைப் புரிந்தவர் என அறியப்பட்டவர் என்றால், சிறிலங்காவுடன் வலுவான இராணுவ ஒத்துழைப்பை ஏற்படுத்தும் போது, நாம் என்ன செய்ய முடியும் என்பதற்கு வரம்புகள் இருக்கும்.

இது, வெளிநாட்டு முதலீட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது.

அதிக துருவநிலைப்படுத்தலுக்கு வழிவகுக்கும் ஒரு சூழ்நிலையைக் கண்டால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆபத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதற்கு வரம்புகள் உள்ளன.

அத்துடன் சிறிலங்காவின் நகர்ப்புற போக்குவரத்து அமைப்பு மற்றும் உட்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கு, அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதியம் மூலம் புதிய 480 மில்லியன் டொலர் நன்கொடை வழங்குவதையும், இந்த நியமனம் பாதிக்கக் கூடும்.

இந்த உதவியை ஒரு நாடு பெறுவதற்கு, ஜனநாயகத்துக்கான அதன் உறுதிப்பாடு குறித்த மதிப்பீடும் ஒரு காரணியாக கொள்ளப்படும்' என்றும் அவர் கூறினார்.

கனடாவின் கவலை :

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது, சிறிலங்காவின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று கனடா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கொழும்பில் உள்ள கனேடிய தூதரகம் வெளியிட்டுள்ள கீச்சகப் பதிவில்,

'போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக, அவருக்கு எதிராக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், சிறிலங்காவின் இராணுவத் தளபதியாக, லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கனடா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

அவரது நியமனம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, ' என்று கூறப்பட்டுள்ளது.

யஸ்மின் சூகா வின் அறிக்கை.

சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதைக் கண்டித்துள்ள, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம், இந்த நியமனத்தின் மூலம் சிறிலங்கா அரசாங்கம் தனது மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

'ஒரு மோசமான போர்க்குற்றவாளியாக குற்றம்சாட்டப்படும், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை, இராணுவத் தளபதியாக நியமித்து, சிறிலங்கா அதிபர் நாட்டுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவருக்கு எதிராக போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அவரது இந்த நியமனம் நல்லிணக்க செயல்முறைகளையும் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதை அடையாளப்படுத்துகிறது.

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா வெளிநாடுகளுக்குப் பயணிப்பதற்கு- அதிகாரபூர்வ பயணங்களை மேற்கொள்வதற்குக் கூட, நுழைவிசைவுகளை மறுக்குமாறு சிறிலங்காவின் கூட்டாளி நாடுகளிடம் கோருவதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், அவருக்கு அளிக்கப்பட்டுள்ள பதவி உயர்வு நாடு முழுவதும் அச்சத்தைத் தூண்டும், குறிப்பாக, 2009 ஆம் ஆண்டில் லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் மேற்பார்வையில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களில் பெரும் இழப்பை சந்தித்த நூறாயிரக்கணக்கான தமிழர்களிடையே, அச்சத்தை ஏற்படுத்தும் என, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.

எண்பதுகளின் பிற்பகுதியில் ஜேவிபி கிளர்ச்சியை நசுக்குவதில் தனது பங்கிற்காக சவேந்திர சில்வா ஒருபோதும் பொறுப்புக்கூறவில்லை.

இதன்போது, படுகொலைகள், காணாமல் ஆக்கப்படுதல்கள், சித்திரவதை, பாலியல் வன்முறைகள், ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பான நம்பகமான குற்றச்சாட்டுகள் உள்ளன.

அப்போது, கோத்தாபய ராஜபக்சவின் தலைமையின் கீழ், 1 ஆவது கஜபா ரெஜிமென்ட்டில், சவேந்திர சில்வா பணியாற்றியிருந்தார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா வும் கவலை அடைகின்றதாம்.

சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கவலையடைவதாக, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசின் சார்பில், அவரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் நேற்று நடந்த நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார்.

'சிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம், ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

எமது தரப்பில், இந்த நியமனம் குறித்து நாங்களும் கவலையடைகிறோம்.

ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கைகளில்,நிறுத்தப்பட்டுள்ள அனைத்து பணியாளர்களும், மிகஉயர்ந்த மனித உரிமை தரங்களுக்கு அமைய இருக்க வேண்டும் என்ற விடயத்தில், ஐ.நா உறுதியுடன் உள்ளது.

ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் அனைத்து சிறிலங்கா சீருடை பணியாளர்களும் விரிவான மனித உரிமைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.' என்றும் அவர் தெரிவித்தார்.

Read more...

Tuesday, August 20, 2019

ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை செல்வம் அடைக்கலநாதனின் உத்தரவில் நானே கொன்றேன்! ஜேர்மனியிலிருந்து TELO உறுப்பினர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் 02.09.1985 அன்று தமிழீழ விடுதலை இயக்கம் என்ற ரெலோ அமைப்பினால் கொலை செய்யப்பட்டிருந்தனர். 34 வருடங்களின் பின்னர் தானே இக்கொலைகளை மேற்கொண்டதாக ஜேர்மனியில் வசித்துவரும் மன்மதன் என்பவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ரஞ்சித் என்ற இயக்கப்பெயரை கொண்ட மன்மதன் , செல்வம் அடைக்கலநாதனின் உத்தரவின் பெயரிலேயே தான் மேற்படி கொலைகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளதாகவும் அக்கொலைகளால் தனது முழுவாழ்வும் பாழடைந்துள்ளதாக அவர் மனம்வருந்துவதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றது.

அதேநேரம் இக்கொலைகளுக்கான உத்தரவை வழங்கிய செல்வம் அடைக்கலநாதன் அரச பாதுகாப்புடன் வலம்வரும் அதேநேரத்தில் தன்னால் தனது தாய்நாட்டுக்கு செல்ல முடியாத நிலையுள்ளதாக அவர் மனம் வருந்துவதாக அச்செய்திகள் குறிப்பிடுகின்றது.

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளாக பாராளுமன்றில் அடைக்கலநாதனும் கொலை செய்யப்பட்ட தர்மலிங்கம் அவர்களின் புத்திரனான சித்தார்த்தனும் இருக்கின்றனர். தனது தந்தையை கொல்ல அடைக்கலநாதனே உத்தரவிட்டார் என்ற தகவல் கிடைத்த பின்னர் சித்தார்த்தன் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றார் என்பதை மக்களும் அவதானிகளும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றனர்.

Read more...

ஐக்கிய தேசியக் கட்சியின்பிரதமர் நாற்காலிக்காவும் மோதல்...

19 ஆவது திருத்தத்துடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் பலமற்றவர் என்பதால், பிரதமர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு மூத்த வேட்பாளருக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உட்பூசல் உருவாகி வருகிறது.

இந்த விடயம் தொடர்பாகவும் ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாகவும் கலந்தாலோசிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை (21) கட்சி சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக சஜித் தெரிவுசெய்யப்பட வேண்டும் எனக்கூறுகின்ற கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான கபீர் ஹாஷிம், மாலிக் சமரவிக்கிரம மற்றும் மங்கள சமரவீர ஆகியோருக்குக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இதற்கிடையில், ஜனாதிபதி தேர்தலுக்கான ஜனாதிபதி வேட்பாளரின் பரிந்துரையை விரைவுபடுத்தக் கோரி 52 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு வழங்கியுள்ள கடிதம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க விசாரித்துள்ளார். அதற்குப் பதிலளித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாட்டில் பல்வேறு கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும், அதற்காக உடனடியாக ஜனாதிபதி வேட்பாளர் பற்றி அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கடிதத்தில் 10 பேர் மட்டுமே கைச்சாத்திட்டுள்ளதாக, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு நல்குகின்ற சமூக வலைத்தளமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் கைச்சாத்திடாதவர்களாக பின்வருவோர் சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர்.

அகிலா விராஜ் கரியவாசம்
நவின் திசாநாயக்க
ரவி கருணநாயக்க
வஜிரா அபேவர்தன
ஜோன் அமரதுங்க
திலக் மரப்பன
சாகல ரத்நாயக்க
சரத் ​​பொன்சேக்க
டி.எம். சுவாமிநாதன்
ஸ்ரீனால் த மெல்

Read more...

றிசார்ட்டின் வீட்டில் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலுக்கான ஆயுதங்களை தேடிச் சோதனை.

ரிஷாட் பதியுதீனுக்கு சொந்தமான புத்தளம், வில்அடி பிரதேசத்திலுள்ள வீட்டில் பொலிஸ் அதிரடிப்படையினரால் விசேட சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஈஸ்ரர் ஞாயிறு தினத்தன்று நடாத்தப்பட்ட தாக்குதலுடன் சம்பந்தமுடைய ஆயுதங்கள் ரிஷாட் பதியுதீன் வீட்டில் இருப்பதாக பொலிஸ் தலையைகத்தில்; நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரமே குறித்த சோதனை இடம்பெற்றுள்ளது. மேற்படி வீட்டினை சோதனை செய்வதற்கான அனுமதியை புத்தளம் நீதிமன்றில் பெற்றுக்கொண்ட நிதி மோசடிப்பிரிவின் அதிகாரிகள் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.


குறித்த சோதனையை நேற்று (திங்கட்கிழமை) நடத்தியுள்ளதாகவும் இந்த சோதனையின்போது எந்த சந்தேகத்திற்கிடமான பொருட்களும் மீட்கப்படவில்லை எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com