Friday, August 9, 2019

கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து எடுத்துள்ள முடிவுபற்றிச் சொல்கிறார் மகிந்தர்!

உயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என கார்டினல் கோருகிறார். அந்த விசாரணை நடாத்தப்பட்டே ஆக வேண்டும். ஒரு தலைப்பட்சமற்ற விசாரணை மேற்கொண்டு, அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க குற்றவாளிகளை இனவாதிகளை இனங்கண்டு கட்டாயம் அவர்களை நீதியின் முன் கொண்டுவர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

மொரட்டுவ மாநகர சபையின் புதிய கட்டம் திறந்து வைத்தல், பணியாளர்களை கெளரவித்தல், காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைத்து இவ்வாறு உரையாற்றினார். அவர் தொடர்ந்து பேசுகையில்:

எங்களது கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் இன்று பிற்பகல் ஒன்றிணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்கு சுயாதீனமான ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று கோருவது என முடிவுக்கு வந்தோம். அதேபோன்று நீதியாக விசாரணை நடாத்தப்பட்டு, குண்டுத் தாக்குதலில் உயிர்நீத்த மற்றும் காயப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரவுள்ளோம்.

நாங்கள் 30 ஆண்டுகள் தொடர்ந்து நடந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி செய்தோம். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பினோம். என்றாலும் ஒருசிலர் நாங்கள் வீழ்ச்சி கண்ட பொருளாதாரத்துடனேயே நாட்டை ஒப்படைத்ததாகக் குறை சொன்னார்கள்.

அண்மையில் அமைச்சர் ஒருவர், நான் உடைந்து தளர்ந்துபோன பொருளாதாரத்தையே பொறுப்பேற்றேன் எனக்கூறுவது எனது காதுகளுக்குக் கேட்டது. நாங்கள் அவர்களின் காலகட்டத்து மத்திய வங்கி அறிக்கையைக் கூறினால் அவர்கள் வாய்பொத்திக் கொள்வார்கள்.

தொழிலில்லாப் பிரச்சினை எங்கள் காலத்தில் குறைந்த முறை பற்றியும், அவர்கள் காலத்தில் தொழிலில்லாப் பிரச்சினை எந்த அளவில் இருக்கின்றது என்பது பற்றியும் அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

பொருளாதாரம் இன்று நசுங்குண்டு கீழே போய் விழுந்துள்ளது. இன்று மக்கள் வாழமுடியாமல் தட்டுத் தடுமாறுகிறார்கள். கடைக்குச் சென்று, சந்தைக்குச் சென்று பொருட்கள் வாங்குவது தொடர்பில் இரண்டு முறை சிந்திக்கிறார்கள். அந்த அளவுக்கு மக்கள் நொந்துபோயுள்ளார்கள்.

இப்போது ஜனாதிபதித் தேர்தல் பற்றிப் பேசப்படுகிறது. நல்லாட்சி மூலம் சீரான ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதாகச் சொன்னார்கள். என்றாலும் பல ஆண்டுகளாக மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படவில்லை. மாகாண சபைத் தேர்தல் நடாத்துவது தொடர்பில் இரண்டரை ஆண்டுகள் சண்டை செய்ய வேண்டியிருந்தது. அதன் பெறுபேற்றை அவர்கள் கண்டதனால் மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுகிறார்கள். நாங்கள் இருந்தபோது அந்தப் பிரச்சினை இருக்கவில்லை.

நாங்கள் பயமின்றி மாகாண சபைத் தேர்தலை நடாத்தினோம். யுத்தத்தை இல்லாதொழித்தோம். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பினோம். அதனால் தேர்தல்களை நடாத்த நாங்கள் பயப்படவில்லை. நாங்கள் வெற்றிபெற்றோம். 2015 இல் போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, சர்வதேசமும் NGO வும் ஒன்றிணைந்து எங்களைத் தோற்கடித்தது. இன்று அதன் உண்மைத் தன்மை பற்றி மக்கள் தெரிந்துகொண்டுள்ளார்கள்.

அதேபோல நாங்கள் எதிர்கட்சியினராக இருந்து அரசாங்கம் செய்யும் சோடனைகளைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். பேச்சளவில் மட்டும்தான் நல்லாட்சி. இந்த ஆட்சி செய்தது ஒன்றும் கிடையாது. இன்று எல்லாப் பிரிவுகளும் சிதைவுண்டுள்ளன. கல்வி, சுகாதரம் அதளபாதாளத்திற்கே சென்றுள்ளன. சுகாதார அமைச்சின் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் எத்தனை எத்தனை...?

இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பனிப்போர்... ஜனாதிபதி வேட்பாளராக யாரை நியமிப்பது என்று தெரியாமல் தட்டுத்தடுமாறுகிறார்கள். நாடெங்கிலும் சுவரொட்டிகள்... எல்லா நாட்களும் பத்திரிகைகளில் விளம்பரங்கள்... இந்த விளம்பரங்களுக்கான பணம் எங்கிருந்து வருகின்றது... ? அவர்களது அம்மா அப்பாமார் சேர்த்துவைத்த சொத்துக்கள்தானா அவை? இந்நாட்டு அரசியலில் மாற்றம் தேவை.

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் நாட்டுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. எந்தவொரு இனத்தினருக்கும் பாதுகாப்பு இல்லை. இந்நாட்டில் எந்தவிதப் பீதியுமில்லாமல், சுதந்திரமாக வாழ்ந்த வாழ்வு இல்லாதொழிந்தது... எங்கும் பயம்... பயம்... கத்தோலிக்கர்களுக்கு அவர்களுடைய பள்ளிகளுக்கு போக முடியாதிருக்குமாயின், பெளத்தர்களுக்கு விகாரைகளுக்குப் போக முடியாதிருக்குமாயின், இந்துக்களுக்கு கோவில்களுக்குப் போக முடியாதிருக்குமாயின், முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல்களுக்குப் போகமுடியாதிருக்குமாயின் என்ன சுதந்திரம் இந்த நாட்டில் எனக் கேட்கிறேன் எனவும் குறிப்பிட்டார்.

Read more...

ஜனாதிபதி நானானாலும் மஹிந்ததான் அத்தனையும்! கூறுகின்றார் கோத்தா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் என்னை ஜனாதிபதியாக நியமித்தால், நாட்டின் அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் கவனிப்பதற்காக நான் மகிந்த ராஜபக்ஷவை நியமிப்பேன் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை அபிவிருத்தியின்பால் கொண்டு செல்லுதல், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல், தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக கரிசனை காட்டவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் வீட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடலின்போதே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

Read more...

சஹ்ரானின் பயங்கரவாத செயலால் முற்றாக பாதிக்கப்பட்டவன் நான். மனைவியை பறிகொடுத்த சாய்தமருது இளைஞன்.

தீவிரவாதி சஹ்ரான் குழுவினால் முழுமையாக பாதிக்கப்பட்டவன் நான் என சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் பின் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இறந்த அஸ்ரிபாவின் கணவர் ஜாசிர் என்பவர் கண்ணீருடன் தெரிவித்தார்.

கடந்த 85 நாட்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்ட பின்னர் கல்முனை நீதிவான் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பிணையில் விடுதலையான ஜாசிர் என்பவர் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

ஏப்ரல் 26 சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற அசம்பாவித சூழ்நிலை நேரத்தில் மனைவியின் சகோதரிகளை பார்க்கச் சென்ற போது தான் நான் உட்பட மனைவி (இறந்துவிட்டார்) தாய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட தங்கை உள்ளிட்டோர் முச்சக்கரவண்டியில் பயணம் செய்த நிலையில் இராணுவ உடைய அணிந்தவர்களால் சுடப்பட்டோம்.இவ்வாறு சுட ஆரம்பிக்கின்ற போது நான் எனது அடையாள அட்டையை காட்டி தமிழ் மற்றும் சிங்களத்தில் கத்திய போதும் சுட்டுக்கொண்டே இருந்தார்கள்.

சம்பவ தினம் நானும் எனது மனைவியும் எனது அம்மாவின் வீட்டில் தங்கி இருந்தோம். மாலை 7:10 மணியளவில்மனைவியின் தாயார்(மாமி) தொலைபேசி மூலம் அழைத்து தாங்கள் வசிக்கும்
சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் குண்டுத் தாக்குதல் இடம்பெற்று உள்ளதாகவும் இதனால் அங்குள்ள தங்கள் வீட்டுக்கு வரவேண்டாம் என எனது மனைவிக்கு கூறினார் .


இந்த நேரத்தில் தான் தனது தங்கைகளை உடனடியாக பார்க்கவேண்டும் தாயை பார்க்க வேண்டும் என மனைவி அஸ்ரிபா விடாப்பிடியாக கூற எனது மனைவி எனது தாயார் எனது மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரியையும் அழைத்துக்கொண்டு மாமியார் வீட்டுக்கு முச்சக்கரவண்டியில் சென்றேன். அப்போது நீங்கள் ஏன் வந்தீர்கள் திரும்பிச் செல்லுங்கள் இங்கே குண்டு வெடித்துள்ளது என மாமியார் கூற அவ்விடத்திலேயே நாங்கள் மீண்டும் திரும்பி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தோம்.

அவ் வேளையில் பல வெடி சத்தங்கள் துப்பாக்கி சூட்டு வேட்டுக்கள் கேட்டன. முச்சக்கரவண்டி மூலம் நாம் எமது தாயின் வீட்டுக்கு செல்வதற்காக வந்து கொண்டிருக்கும் போது தான் இராணுவத்தினர் எம்மை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.அவ்வேளை நான் எனது அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு உயர்த்தியவாறு சுட வேண்டாம் என கூறினேன். அப்போது எனது காலில் சூடு பட்டது. பின்னர் இறங்கி முச்சக்கரவண்டியை வீதி ஓரமாக தள்ள முற்படும் போது எனது மனைவி எவ்வித உணர்வும் இன்றி இரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தாள். அவரின் தலையில் இருந்து இரத்தம் வெளியேறி கொண்டிருந்தது.
அவ்வேளை அவளை காப்பாற்றுமாறு கூறினேன்.அது மாத்திரமன்றி எனது தாயார் எனது சகோதரியும் சிறு சூட்டு காயங்களுக்கு உட்பட்டிருந்தனர் . இராணுவத்தினர் உடனடியாக எனது தாய் சகோதரி என்னையும் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.


எனது உடம்பில் ஐந்து துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளதாக அறிந்தேன்.சம்பவ தினம் இராணுவத்தினரோ பொலிஸாரோ எங்களை நிறுத்தசொல்லவில்லை. இராணுவத்தினர் இருளில் நின்றதை நாங்கள் காணவில்லை. அவ்வாறு தெரிந்திருந்தால் முச்சக்கரவண்டியை நிறுத்தியிருப்போம். இன்று எனது மனைவியை இழந்து நான் வாடிக்கொண்டிருக்கிறேன் இதற்கு முற்றுமுழுதான காரணத்தை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். நான் வைத்தியசாலையில் இருக்கும் போதும் தடுப்பு காவலில் இருக்கும்போதும் என்னை அரசியல்வாதிகளோ நண்பர்களோ உறவினர்களோ யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறு பார்க்க வருபவர்களிடம் பல மணி நேரம் விசாரணைகள் இடம்பெற்றும் இருக்கின்றது.இப்போது எமது சமுதாயத்தில் பலவாறு புரளிகளை பேசுகின்றனர், பரப்புகின்றனர். எனவே பாதுகாப்புத் தரப்பு வீதித் தடை அல்லது பாதுகாப்பு சமிக்கைகளை வைத்திருந்தால் எனது மனைவியின் உயிர் வீணாக போயிருக்காது. இதற்கு அரசாங்கமே பதில் கூற வேண்டும் என்று எனது மனைவியை இழந்து தனிமையில் வாடுகிறேன்.இன்று நான் எவ்வித ஜீவனோபாயம் இன்றி சிரமப்படுகின்றேன். என்னிடம் இருந்த முச்சக்கர வண்டியையும் இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.தற்போது என்னை விசாரணை மேற்கொண்ட பொலீசார் குற்றத்தடுப்பு பிரிவினர் நான் நிரபராதி என்று கூறுகின்றனர்.தற்போது பிணையில் வந்தாலும் மீண்டும் நீதிமன்றத்தினால் அழைப்பாணை வந்தால் மாத்திரமே நீதிமன்றத்துக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் எனக்கு தெரிவித்துள்ளது.

எனவே எனக்கு எவராவது உதவி செய்தால் மீண்டும் எனது வாழ்க்கையை புதிப்பித்து எனது குடும்ப நிலையை பார்த்துக்கொள்வேன்.சிலர் வெளிநாட்டிற்கு அகதி அந்தஸ்து பெற்று செல்லுமாறு கூறுகின்றனர்.வெளிநாட்டில் இருக்கின்ற போது தான் எனது நாட்டின் அருமை தெரிந்தது.இலங்கை உண்மையில் சிறந்த நாடு.இந்த நாட்டையும் எனது தாயையும் எனது சகோதரியான மனநலம் பாதிக்கப்பட்டவரையும் விட்டுவிட்டு எங்கும் செல்ல மாட்டேன் என கண் கலங்கி நின்றார்.





Read more...

சில மதகுருமார்கள் ஒன்றிணைந்து, குண்டர்களை சிம்மாசனத்தில் ஏற்றுவதற்கு முனைகிறார்கள் - பேராசிரியர் சரத் விஜேசூரிய

சில மதகுருமார்கள் ஒன்றிணைந்து, குண்டர்களை சிம்மாசனத்தில் ஏற்றுவதற்காக ஆவன செய்துவருகிறார்கள் என பேராசிரியர் சரத் விஜேசுந்தர குறிப்பிட்டார். சிலர் தங்களுடைய அரசியல் நாடகத்தை அரங்கேற்றுவதற்காக தாங்கள் சேர்த்த பணத்திலிருந்து அச்சாறு போன்று தங்கள் சமயத்திற்காக - மதத்திற்காகப் பயன்படுத்துவது தெரிகிறது எனவும் அவர்

மதகுருமார்களின் கண்களில் மண்ணைத் துாவிவிட்டு, ஆசிர்வாதம் பெற்றுக் கொள்வதில் அவர்கள் மிகத் திறமைசாலிகளாக இருக்கிறார்கள் எனவும், பேராசிரியர் சரத் விஜேசுந்தர அவர்கள் கொழும்பு பண்டாரநாயக்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது குறிப்பிட்டார்.

தேசியத் தலைவர்களின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டியது ஜனநாயகத்தைப் பலமாக்குவதேயன்றி வேறில்லை எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.

Read more...

மலேசியாவில் சட்டவிரோதமாக பணியாற்றும் வெளிநாட்டினருக்கு கெடு!

மலேசியாவில் சட்டவிரோதமான முறையில் பணியாற்றிவரும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இந்த ஆண்டுக்குள் வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு கெடு விதித்துள்ளது.

‘Back for good’ என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம் சட்டவிரோதமாக மலேசியாவில் பணியாற்றும் வெளிநாட்டினர் வெளியேற அறிவுறுத்துகின்றது. இத்திட்டத்தின் கீழ் மலேசியாவிலிருந்து வெளியேறுபவர்கள் 700 மலேசிய ரிங்கட்டை (இந்திய மதிப்பில் சுமார் 11 ஆயிரம், இலங்கை மதிப்பில் 28 ஆயிரம்) அபராதமாக செலுத்த வேண்டும்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 1 அன்று பேசிய கோலாலம்பூர் குடிவரவு இயக்குனர் ஹமிதி ஏடம், “இதுவரை நாடு திரும்புவதற்காக 290 வெளிநாட்டினர் பதிந்துள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். “இத்திட்டத்தில் பதிவு செய்ய நினைக்கும் குடியேறிகள் விமான பயணச்சீட்டு, பயண ஆவணம், 700 ரிங்கட் அபராதத்தை தயாராக வைத்திருக்க வேண்டும்,” என அவர் கூறியுள்ளார்.

கடந்த ஜூலை 18 அன்று இத்திட்டத்தை அறிவித்த மலேசிய உள்துறை அமைச்சர் டேன் முஹ்யிதின் யாசின், நாட்டில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை குறைப்பதற்காக ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 31 வரை இத்திட்டம் நடைமுறையில் இருக்கும் எனத்தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 முதல் ஆகஸ்ட் 2018 வரை இருந்த மன்னிப்புத்திட்டத்தின் மூலம் 840,000 வெளிநாட்டினர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவித்து விட்டு கூட்டணியை அமையுங்கள் சஜித் அதிரடி

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கு அமைய ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை முதலில் அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் சஜித் பிரேமதாச , வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காது கூட்டணி அமைப்பது சாத்தியமற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சஜித்துக்கும் இடையில் கூட்டணி அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்திய ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்க வேண்டும் என்று எனக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த செய்தி 100 வீதம் உண்மையானது. ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கு அமைய கூட்டணி அமைப்பதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டும். இதனையே ஜனநாயக தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளும் அதனையே கோருகின்றன. எமது தனிப்பட்ட கருத்தும் அதுவாகவே இருக்கிறது. அவ்வாறு செய்யதால் மாத்திரமே நாம் உத்தேசித்துள்ள அரசியல் கூட்டணி உதயமாகும்.

அதே போன்று வேட்பாளர் யார் என்பதை அறிவித்ததன் பின்னர் பல கட்சிகள் முக்கிய அரசியல்வாதிகள் என பலரும் எம்முடன் இணைந்து வெற்றிக்கான கூட்டணியொன்று அமைவது உருதியானதாகும். போலியான பிரசாரங்களை ஊடகங்களுக்கு விடுக்காது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வெளிப்படையாகக் கூறிவிட்டு கூட்டணிக்கான ஒப்பந்த்தைத முன்னெடுக்கும் பணிகளே சிறந்ததாகும் என தெரிவித்தார்.

Read more...

கரைச்சி பிரதேச சபையின் முறைகேடுகளை பேசுவதற்கு அனுமதி மறுக்கும் சிறிதரனின் தவிசாளர் வேழமாலிகிதன்

கிளிநொச்சி கரைச்சி பிரதேசபையின் அபிவிருத்தி மற்றும் ஏனைய நடவடிக்கைகளின் போது இடம்பெறுகின்ற முறைகேடுகள்,ஊழல்கள் என்பவற்றை பேசுவதற்கு கூட தமிழரசு கட்சியின் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் அனுமதி மறுக்கிறார் என பிரதேச சபை எதிர்தரப்பு உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இன்று(09) அமைப்பின் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்

இன்று சபையில் கடந்த ஓராண்டு கால அபிவிருத்தி மீளாய்வு கலந்துரையாடல் இடம்பெற்றது இதன் போது ஒராண்டுக்குள் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டதோடு, அவற்றின் தொகுப்பும் உறுப்பினர்களிடம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் குறித்த ஓராண்டுக் கால அபிவிருத்திப் பணிகளில் பல முறைகேடுகள் ஊழல்கள் இருந்தமை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே நாம் இதனை சுட்டிக்காட்ட முற்பட்ட போது தவிசாளர் அனுமதி வழங்கவில்லை சபையில்தான் இது தொடர்பில் பேச முடியும் இந்த இடத்தில் பேசுவதற்கு அனுமதியில்லை என்றார் இது கண்டிக்கதக்க விடயம். ஒரு விடயம் அது பேசப்படுகின்ற போது கருத்துக் கூற முடியும். அதனை விடுத்து பிரிதொரு இடத்தில் பேசுவது என்பது பொருத்தமற்றது எனத் தெரிவித்த உறுப்பினர்கள்

கரைச்சி பிரதேச சபையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கம்பெரலிய திட்டத்தின் கீழ் புனரமைப்புச் செய்யப்படுகின்ற வீதி அபிவிருத்தியில் ஊழல்களும், முறைகேடுகளும் இடம்பெற்று வருகின்றன. இதனை பலதடவைகள் சபையில் எடுத்துக் கூறியும் பார்கின்றோம் என பதிலளிக்கும் தவிசாளர் பின்னர் அவற்றை கண்டுகொள்வதில்லை. அபிவிருத்தி திட்ட மதிப்பீட்டில் குறிப்பிட்டமைக்கு அமைவாக வீதி அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவில்லை. தரமற்ற அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் கட்சிசார்ந்து அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுகின்றன. தமிழரசு கட்சியினர் தோற்றுப்போன வட்டாரங்களில் தோல்வி அடைந்து தங்களது கட்சி உறுப்பினர்களை கொண்டு பிரதேச சபையின் அபிவிருத்திப் பணிகளை தவிசாளர் முன்னெடுக்கின்றார். அத்தோடு தாங்கள் வெற்றிப் பெற்ற வட்டாரங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடுகளும், அதிகளவான அபிவிருத்திப் பணிகளும் இடம்பெறுகின்றன. ஆளும்தரப்பு உறுப்பினர்களை ஒரு விதமாகவும் எதிர்தரப்பு உறுப்பினர்களை மாற்றாந்தாய் மனப்பாங்குடனும் தவிசாளர் நடத்துகின்றார் எனவும் குற்றம் சாட்டினர்

இப் பத்திரிகையாளர் சந்திப்பில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பினர் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான த.ரஜனிகாந், மயில்வாகனம், செல்வராணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Read more...

Thursday, August 8, 2019

ஆங்கிலம் கற்பிக்க அமெரிக்க US Peace Corps என்ற அமைதிப்படை.

சிறிமாவோ பண்டாரநாயக ஆட்சிக்காலத்தில் இந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட US Peace Corps என அறியப்பட்ட அமெரிக்க அமைதிப்படை நாட்டினுள் மீண்டும் நுழையவுள்ளதாக அறியமுடிகின்றது. இது தொடர்பாக நாட்டின் கல்வியமைச்சர் அகிலவிராஜ் மற்றும் அமெரிக்க தூதுவர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.

இன்று 8 இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அமெரிக்கர்கள் இலங்கை பாடசாலைகளில் ஆங்கிலம் கற்பிப்பது தொடர்பில் விரிவாக பேசப்பட்டுள்ளது:

எது எவ்வாறாயினும் அமெரிக்கர்கள் தமது கொள்கைகளை பரப்புரை செய்வதற்கும் புலனாய்வுத் தகவல்களை இலகுவாக தேடிக்கொள்வதற்கும் மேற்படி அமைதிப்படை முறையை கையாண்டுவருகின்றனர் என்பது பல்வேறு தரப்பாலும் வைக்கப்படும் குற்றச்சாட்டாகும்.

இலங்கையினுள் முற்றாக கால்பதிக்க முனையும் அமெரிக்கா தனது சகல பலத்தினையும் அதற்காக பயன்படுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

செஞ்சோலை மாணவர்கள் எங்கே பயிற்சி பெறுகின்றார்கள் என்பதை சிறிதரனே காட்டிக்கொடுத்தார். போட்டுடைக்கின்றார் டக்ளஸ்

புலிகளால் பலவந்த இராணுவப் பயிற்சிக்காக வள்ளிபுனம் காட்டுக்ப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த மாணவர்கள் பலர் வான்தாக்குதலுக்கு உள்ளான புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றில் பலியாகியிருந்தனர்.

இத்தாக்குதல் தொடர்பாக பல்வேறுபட்ட தகவல்கள் வெளிவந்திருந்திருந்த நிலையில் குறித்த இராணுவ முகாம் தொடர்பான தகவலை இராணுவத்தின் இரட்டை முகவராக செயற்பட்டுவந்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனே வழங்கியதாக பா.உ டக்ளஸ் தேவானந்தா இன்று பாராளுமன்றில் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

புலிகளின் பயிற்சிப் பாசறையில் இருந்து தப்பி வருவதற்கு அவர் அதற்குப் பரிகாரமாகத் தன்னிடம் கல்விகற்ற மாணவச் செல்வங்களைப் பயிற்சி முகாமில் பணயம் வைத்துவிட்டு வந்திருந்தார். இது யுத்தக்குற்றம் இல்லையா என்று கேட்கிறேன்.

சந்தர்ப்பம் பார்த்துப் புலிகளிடமிருந்து தப்பி வந்த அவர் பொதுமக்களிடம் இருந்து சேகரித்த தங்க நகைகளை அபகரித்து செஞ்சிலுவைச் சங்க வாகானத்தில் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் நுழைந்தாரே, அந்தத் தங்க நகைகள் எங்கே? என்று கேள்வி எழுப்பிய அவர் தொடர்ந்து பேசுகையில் :

இதுவரை எம்மீது சுமத்தப்பட்டு வந்த பல்வேறு பழிகளில் இருந்து வரலாறு எம்மை விடுவித்து வந்திருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் எம்மீது சுமத்தியிருக்கும் அவதூறுகளை உண்மையென அவர் ஒப்புவிக்க முடியுமானால், வெறுமனே கூச்சலிட்டுக்கொண்டிருக்காமல் உங்களுடைய அரசு, நீஙகள் கொண்டு வந்த ஆட்சி என்று கூறும் நீங்கள் அதை வைத்து ஏன் உங்களால் எம்மீதான ஒரு நீதிவிசாரணையை நடத்த முடியாமல் இருக்கின்றீர்கள்?

தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விட்டால் நீங்கள் வாக்குகளை அபகரித்து அரசியல் பிழைப்பு நடத்தக் காரணங்கள் இல்லாமல் போய் விடும்.

அது போலவே எம்மீது அடிக்கடி அவதூறு பரப்பும் நீங்கள் எம்மீதான நீதி விசாரணையை நடத்தி அதற்கு நியாத்தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டால் தொடந்தும் உங்களால் எம்மீது அவதூறுகளைப் பரப்பப் காரணம் இல்லாமல் போய் விடும்.

ஆகவேதான் உங்களால் எதையும் பேசிப் பிழைப்பு நடத்த மட்டும் முடியுமே தவிர, எதையும் சாதித்துக் காட்ட வக்கற்றவர்கள் என்பதையே நீங்கள் மெய்ப்பித்து வருகிறீர்கள். உங்கள் அரசியல் பலத்தை வைத்து தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வைத்தான் உங்களால் காண முடியவில்லை.

அதே அரசியல் பலத்தை வைத்து அடுத்தவர் மீதான உங்கள் அவதூறுகளுக்கு ஒரு நீதிவிசாரணையை ஆவது நீங்கள் நடத்திக்காட்டலாமே என்றுதான் உங்களிடம் சவால் விடுத்துக் கேட்கிறேன். நான் தயாராகவே இருக்கின்றேன். நடத்துங்கள் நீதி விசாரணையை!…

அடுத்தவர்கள் மீது அவதூறு பரப்பும் இவர்கள் அதற்கு ஆதாரம் கேட்டால் துணைக்கு அழைப்பது விக்கி லீக்ஸ் இணையத்தையும் தமது பினாமி ஊடகங்களையுமே. மேற்குலக வெளிநாட்டு இராஜதந்திரிகள் இங்கு வருவார்கள். இலங்கையில் என்ன நடக்கின்றது என்று அவர்களில் சிலர் நேரில் எங்கும் சென்று ஆராய்வதில்லை.

தாம் சந்திக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் அவிழ்த்துவிடும் அடுத்தவர்கள் மீதான அவதூறுகளையே தாம் திரட்டும் தகவல் என்று கூறித் தத்தமது நாடுகளுக்கு சில ராஜதந்திரிகளை அனுப்புவார்கள். அந்தத் தகவல்களைத் திருடியே விக்கிலீக்ஸ் வெளியிட்டுப் பரபரப்புக் காட்டும்!

ஆகவே எம்மீது சேறடித்து தோற்றுப்போன விக்கிலீக்ஸ் செய்தியாளர்களான தமிழ் கட்சித் தரகர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். தமிழரின் விடுதலைக்காக சிறு இறகைக்கூட இழந்திருக்காத கூரைக்கோழிகள், இன்று புலிகளின் பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்துவது ஏன் என்று கேட்கிறேன்.

மனித குல நாகரீகமே வெட்கித் தலைகுனியும் வகையில் கிளிநொச்சியில் சமூகச் சீரழிவில் ஈடுபட்டுப் புலிகள் இயக்கத்தால் கைது செய்யப்பட்ட இவர் இன்று தானும் ஒரு புலி என்று கூறி மக்களுக்கு புலுடா விடலாமா என்று நான் கேட்கிறேன்.

அண்ணன் தங்கை, அப்பு ஆச்சி, பாட்டன் பூட்டி, கட்டி வளர்த்த தமிழர் பண்பாட்டின் பாரம்பரியத்தையே வெட்கித் தலைகுனிய வைத்த விறகுக்கட்டை வீரன். தமிழர் பண்பாடு குறித்தும், தமிழ் தேசியம் குறித்தும் பேச அருகதை உள்ளவரா என நான் கேட்கிறேன்.

புலிகளின் பயிற்சிப் பாசறையில் இருந்து தப்பி வருவதற்கு அவர் அதற்குப் பரிகாரமாகத் தன்னிடம் கல்விகற்ற மாணவச் செல்வங்களைப் பயிற்சி முகாமில் பணயம் வைத்துவிட்டு வந்திருந்தார்.

இது யுத்தக்குற்றம் இல்லையா என்று கேட்கிறேன். சந்தர்ப்பம் பார்த்துப் புலிகளிடமிருந்து தப்பி வந்த அவர் பொதுமக்களிடம் இருந்து சேகரித்த தங்க நகைகளை அபகரித்து செஞ்சிலுவைச் சங்க வாகானத்தில் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் நுழைந்தாரே, அந்தத் தங்க நகைகள் எங்கே?

அதற்கு விசாரணை இல்லையா என்று கேட்கிறேன்.

ஒரு புறம் புலி முகம்! மறு புறம் சிங்க முகம்!! இரட்டை முகவராகச் செயற்பட்டு, தன்னைக் கைது செய்த புலிகள் இயக்கத்தைப் பழிவாங்க செஞ்சோலைச் சிறுவர் இல்லத்தை புலிகளின் பயிற்சி முகாம் என அரசுக்கு தகவல் வழங்கியிருந்தார்.

இதற்கு நீதி விசாரணை இல்லையா என்று கேட்கிறேன்.

பலருக்கும் தெரியாத இரகசியம் 2009இல் இவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை திரை மறைவில் சந்திக்க முனைந்ததுதான். இன்றுகூடப் பேசுவது தமிழ் தேசியம்! திரை மறைவில் அரசுடன் நடத்துவது தேன்நிலவு.

இறுதியாக,..

உனது கண்களை மறைக்கும் மரக்குற்றியை அகற்றிக்கொள். பிறரது கண்களை மூடும் சிறு மரத்தூசிகள் உன் கண்களில் தெரியும்.

எம்மீது அவதூறு பரப்புவோருக்கு இதை நான் கூறிக்கொண்டு,...

இத்துடன் முடித்தாலும் தொடரும் என்று கூறி இத்துடன் விடைபெறுகின்றேன்.

Read more...

வீட்டையும் மறக்கமாட்டோம் வீடு தந்த உங்களையும் மறக்கமாட்டோம் சஜித்தின் நிகழ்வில் கொத்தடிமை அடைக்கலநாதன்

நாடு பூராகவும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றிய கோசம் எழுப்பப்பட்டு வருகின்றது. ஒரு பக்கம் கோத்தாபாய ராஜபக்ஸவின் பெயரும் இன்னொரு பக்கம் சஜித் பிரேமதாசவின் பெயரும் முன் மொழியப்படுகின்ற போதும் இன்னும் பல பெயர்களும் முளைக்கின்றது.

ஆனாலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கள் வரும் போது தமிழ் மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தவிசாளருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் ஜோசவாஸ் நகர் மற்றும் ஜோசப் நகர் ஆகிய இரு மாதிரிக் கிராமங்களில் உள்ள வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்று (8) இடம்பெற்றது.

இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்

நாங்கள் பல அமைச்சர்களிடம் பேசினோம். உதவி கோரினோம். ஆனாலும் செயலாற்ற கூடிய ஏழைகளுக்கு செயலாற்ற கூடிய அமைச்சர் சஜித் பிரமதாஸவும் உண்மையை கூற வேண்டுமானால் எங்களுடைய மனங்களில் வீடு தந்த நீங்கள் இருக்கின்றீர்கள்.

ஆகவே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக தெரிவிக்கப் படுகின்ற போது எங்கள் மக்கள் சரியாக முடிவெடுப்பார்கள்.

அத்துடன் தோட்டவெளி கிராமத்தில் வீட்டுதிட்டங்கள் வழங்கப்பட்ட போதிலும் இன்னும் வீடுகள் தேவையானவர்கள் இருப்பதனால் அவர்களுக்கும் வழங்க முன்னவர வேண்டும் என கோரிக்கையாக விடுப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் நீங்கள் எங்களுக்கு வீடு தந்திருக்கின்றீர்கள் நாங்கள் வீடுகளை ஒரு போதும் மறப்பதில்லை அதே போன்று வீடுகளை தந்த உங்களையும் மறக்கமாட்டோம் என மேலும் தெரிவித்தார்.

இங்கு அடைக்கலநாதனிடம் கேட்கப்படும் கேள்விகள் யாதெனில், பிறேமதாஸவின் மகன் அவருடைய முதிசத்திலிருந்து வீடு கட்டிக்கொடுக்கின்றாரா? மக்களின் வரிப்பணத்திலிருந்து கட்டப்படும் வீடுகளுக்கு சஜித் பிறேமதாஸவை மனதில் மக்கள் வைத்துக்கொள்ளவேண்டியதன் தேவை என்ன?




Read more...

பிரிடிஸ் கவுன்சில் ஆதரவுடன் தொழில்பயிற்சி அதிகாரசபையும் (VTA)முஸ்லிம் எய்ட் சிறிலங்கா அமைப்பும் கைகோர்க்கின்றன

முஸ்லிம் எய்ட் நிறுவனம் இலங்கை பிரிடிஸ் கவுன்சில் அமைப்பின் ஆதரவுடன் இலங்கை தொழில்பயிற்சி அதிகார சபையுடன் (Vocational Training Authority (VTA) of Sri Lanka) இணைந்து இளைஞர் சமூகமயமாக்கம் (Youth Community Resilience Programme) நிகழ்ச்சித் திட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றது. அனுராதபுரம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. முஸ்லிம் எய்ட் உம் தொழில்பயிற்சி அதிகாரசபையும் புரிந்துணர்வு அடிப்படையில் இணைந்து மேற்கொள்ளும் இத்திட்டத்தின் கீழ் மேற்படி 03 மாவட்டங்களையும் சேர்ந்த பயிற்சி நிலையங்களில் பயிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு, பிரிடிஸ் கவுன்சிலின் முன்மாதிரி திட்டமான அக்டிவ் சிடிசன் சட்டகத்தின் கீழ் பயிற்சியளிக்கப்படுகின்றது. இத்திட்டம் 2019 ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

2013ம் ஆண்டு தொடக்கம் முஸ்லிம் எய்ட் பிரிடிஸ் கவுன்சில் நிறுவனத்தின் பங்காளர் அமைப்பாகச் செயற்பட்டு வருகின்றது. உலகலவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற, அக்டிவ் சிட்டிசன் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இளைஞர்களைப் போதனையூட்டிப் பயற்றுவிக்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பங்காளர் அமைப்புகளில் முஸ்லிம் எய்ட் நிறுவனமும் முன்னணிப்பாத்திரம் வகித்தது. இளைஞர்கள் தாம் வாழும் கிராமங்களிலும் சமூகத்திலும் உள்ள பிரச்சனைகளுக்குத் தாமே முன்வந்து தீர்வுகாணும் வகையில் அவர்களைப் பயிற்றுவிப்பது இத்திட்டத்தின் பிரதான இலக்காகும்.

இலங்கையில், தொழில் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் ஆற்றலும் திறமையும் மிக்கவர்களாக உள்ளனர். ஆனாலும் அவர்களிடம் தம்மைச் சூழலுள்ள சமூகங்களையும் சமூகப் பிரச்சனைகளையும் புரிந்து கொண்டு அவற்றைக் கையாளும் ஆற்றல் பற்றாக்குறை உள்ளவர்களாகக் காணப்படுகின்றனர். இக் குறைபாட்டினை எவ்வாறு களைய முடியும், இந்த இடைவெளியினை எவ்வாறு நிரப்ப முடியும் என்பது தொடர்பாக தொழில்பயிற்சி அதிகார சபையுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டது. இதன் விளைவாக முஸ்லிம் எய்ட் குழுவும் தொழில்பயிற்சி அதிகாரசபையும் அக்டிவ் சிடிசன் பயிற்சி சட்டகம் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தி இம் மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்தும் செயற்பாட்டில் இணைந்து கொண்டனர். எவ்வாறாயினும், இந்த பயிற்சிச் சட்டகமானது முஸ்லிம் எய்ட் மற்றும் தொழில் அதிகாரசபை என்பவற்றால் வீடிஏ (VTA) பாடவிதானத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பல தடவைகள் கவனமாக மீளாய்வு செய்யபட்டு மீள்வரைவு செய்யப்பட்டது.

பிரிடிஸ் கவுன்சில் ஆக்டிவ் சிடிசன் நிகழ்ச்சித் திட்டத்தினைப் பயன்படுத்தி, சமூக ரீதியில் ஆற்றல் மிக்கவர்களாகவும், சமூக நீதி, சமூக மயமாக்கம் மற்றும் சமூக இணக்கப்பாடு என்பவற்றை தாம் வாழும் பிரதேசங்களில் ஏற்படுத்தக் கூடியவர்களாகப் பயிற்றுவிப்பது இவ்விரண்டு நிறுவனங்களும் இணைந்து செயற்படுவதன் நோக்கமாகும்.

சமாதானம், நல்லிணக்கம் மற்றும் சமூக நீதி என்பவற்றுடன் வலுவான நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதை பிரதான செயற்பரப்புகளாக் கொண்ட நீடித்த அபிவிருத்தி இலக்கு 16 இன் கீழ், 'இளைஞர் சமூகமயமாக்கம்' என்ற அக்டிவ் சிடிசன் நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக, முஸ்லிம் எய்ட் இக் கருத்திட்டத்தினை உள்ளீர்த்துள்ளது.

18-29 வயதிற்கு இடைப்பட்ட 100 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையான தொழில்நுட்ப கல்வி பயிலும் இளைஞர்களை இத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. தொழிலில் ஈடுபடுபவர்கள், இளம் தொழில் முயற்சியாளர், எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் பிரஜைகளாக தமது பங்களிப்பினைச் செய்யும் வகையில் இவர்களுக்கு சமூக விடயங்களைக் கையாளும் திறனை வழங்குவது இத்திட்டத்தின் குறிக்கோளாகும். குறைந்த பட்சம் 6 மாத தொழில்நுட்ப பாடநெறிகளை தேசிய இளைஞர் படையணி, தொழில்நுட்பக் கல்லூரிகள், நெய்ட்டா போன்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பயில்கின்ற மாணவர்களுக்கும் மேற்படி சமூகத் திறனாற்றலை வழங்கும் என்பது இத்திட்டத்தின் நம்பிக்கையாகும்.

Read more...

சட்ட விரோத செயலுக்காக அமைச்சரவை பத்திரம் கொண்டுவந்தார் சஜித்... அமைச்சரவை நிராகரித்தது...

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கியுள்ள பதவிகள் தொடர்பில், அமைச்சரவை அனுமதியை நிராகரித்துள்ளது.

இந்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் சஜித் பிரேமதாச முன்வைத்திருந்தார்.

மேற்படி அதிகார சபையில் நீண்ட காலம் பணிபுரிந்துள்ள அந்த அதிகாரிகள் ஓய்வு பெற்ற பின்னரும் அவர்களுக்கு சம்பளம் மற்றும் படிகளை வழங்கி அவர்களை உயர் பதவிகளில் நிறுத்துவது தொடர்பாகவும், குறித்த மேல் பதவிகள் வகிப்போருக்கு சம்பளம் வழங்குவதற்காக அநுமதி கோரியுமே அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டிருந்தது.

இவர்கள் இரண்டு வருடங்களாக பதவியில் இருப்பது சட்ட விரோத செயல் என்றும் அதற்காக ஊதியம் வழங்குவது தொடர்பிலும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Read more...

சுஷ்மா சுவராஜ் - கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றார் மறவன் புலவு.

பாரதிய சனதா கட்சியின் மூத்த தலைவர் திருமதி சுஷ்மா சுவராஜ் 6.8.19 செவ்வாய்க்கிழமை காலமானார். பாரதிய சனதா கட்சிக்கு இலங்கையில் ஏதாவது அக்கறை இருக்குமானால் அங்குள்ள தமிழர்களே என என்னிடம் கூறியவர் திருமதி சுஷ்மா சுவராஜ்.

1997ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களை அவரது வீட்டில் நானும் திருமதி மாலினி இராசநாயகம் அவர்களும் சென்று சந்தித்தோம். அப்பொழுது அவர் ஈழத் தமிழர் தொடர்பான விபரங்களை விரல் நுனியில் வைத்திருந்தார்.

கடந்த ஆண்டு திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களின் முயற்சியாலேயே ஈழத்தமிழர்கள் சிதம்பரத்திற்கு வருவதற்குரிய கப்பலை விடுவதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்தது. அப்பொழுதும் நான் தில்லியில் இருந்தேன். மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு இல கணேசன் அவர்கள் என்னை அவரிடம் அனுப்பினார்கள். திரு இல கணேசன் அவர்கள் எதைக் கேட்டாலும் செய்து கொடுக்கின்ற நண்பராகத் திருமதி சுஷ்மா சுவராஜ் இருந்தார்கள்.

பல மாதங்களாக வெளியுறவுத்துறை அமைச்சில் தேங்கியிருந்த கடிதத்தைத் தூசு தட்டி எடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்து இலங்கை அரசுக்கு ஒப்புதல் கடிதத்தை எழுதியவர் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்கள்.

நாடாளுமன்ற அவையிலும் மாநிலங்களவையிலும் ஈழத்தமிழர்களுக்காக அவர் பலமுறை குரல் கொடுத்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலங்களிலும் அமைச்சராக இருந்த காலங்களிலும் அவரது குரல் ஈழத்தமிழர்களுக்காக ஓங்கி ஒலித்து இருக்கிறது.

ஒரு முறை பொதுவுடமைக் கட்சியின் திரு ராஜா அவர்கள் ஈழத்தமிழர்களுக்காக இந்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து மாநிலங்களவையில் பேசினார். அப்பொழுது பதிலளித்த திருமதி சுஷ்மா சுவராஜ் ஈழத்தமிழர்களின் நலனே இந்தியாவின் நலன் எனவும் அவர்களை காப்பது இந்திய அரசின் முன்னுரிமை என்றும் கூறினார்.

இத்தகைய நட்பும் அன்பும் ஈழத்தமிழர் மீது பாராட்டுகின்ற அம்மையார் மறைந்த செய்தி கேட்டதும் கண் கலங்கி நின்றேன். நெஞ்சம் கனத்து நின்றேன். நேரே சென்னையில் உள்ள பாரதிய சனதாக் கட்சி அலுவலகத்துக்கு ஓடினேன். அங்கே நிகழ்ந்த அஞ்சலிக் கூட்டத்தில் பங்கு பற்றினேன். திரு இல கணேசன் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன். அங்கிருந்த பாசகவின் ஏனைய தமிழகத் தலைவர்களுடனும் இணைந்து அஞ்சலி செலுத்தினேன்.

அம்மையார் ஈழத்தமிழர்களுக்கு ஆற்றிய சேவைகள் பற்றிச் சிறிய உரை ஆற்றினேன் தொலைக்காட்சியினர் கேட்ட வினாக்களுக்குப் பதில் சொன்னேன் ஊடகத்தாருக்கும் செய்தி சொன்னேன்.


Read more...

Wednesday, August 7, 2019

பள்ளிவாசல்களிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை மீளளிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்கிறார் சோபித்த தேரர்....

இஸ்லாமிய அடிப்படைவாத குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து பள்ளிவாசல்களில் இருந்து பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்ட வாள் உட்பட ஏனைய ஆயுதங்களை உரிமையாளர்களிடமே  மீள ஒப்படைப்பது சட்டத்திற்கு முரணானது என்பதுடன் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலானது என  சோபித்த தேரர் தெரிவித்தார்.

ஏப்ரல் 21 திகதி உயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் நாட்டில் பயங்கரவாதிகளினால்முன்னெடுக்கப்பட்ட ஒரு தாக்குதல் என்று ஒருபோதும் கருத முடியாது. தொடர்ந்து தாக்குதலை  பல்வேறு  வழிமுறைகளில் முன்னெடுப்பதற்கான உரிய  உபாயங்கள்  திட்டமிடப்பட்டுள்ளன.

ஆகவே ஏப்ரல் 21  உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் ஒன்றும் பயங்கரவாதிகளின் இறுதித் தாக்குதல் அல்ல என்றும் கூறினார்.

பள்ளிவாயல்களிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை விடுவித்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு நட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

தனிப்பட்ட முறையில் யாரும் கோத்தாவைச் சந்திக்க மாட்டோம் என்கின்றது ஐதேக

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை எக்காரணம் கொண்டும் தனிப்பட்ட முறையில் சந்திப்பதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர் எனத் தெரியவருகின்றது.

பொதுசன முன்னணியின் ஜனாதிபதி அபேட்சகராக கோத்தபாய ராஜபக்ஷவை முன்னிறுத்துவது மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹஷீம் மற்றும்அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோர் நேற்று முன்தினம் கோத்தபாய ராஜபக்ஷவைச் சந்தித்துத் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடியமை போன்றன தொடர்பில் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளமையும் இதற்குக் காரணமாகவுள்ளது.

அதனால் இச்சந்தர்ப்பத்தில் தனிப்பட்ட முறையில் கோத்தபாய ராஜபக்ஷவை யாரும் சந்திப்பதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.

Read more...

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறார் அமெரிக்க தூதுவர் – கம்மன்பில குற்றச்சாட்டு

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்கிறார் என, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

‘நிறுத்து அமெரிக்கா’ அமைப்பினால் கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“அமெரிக்க தூதுவர் இப்போது மிகவும் துடிப்புடன் செயற்படுகிறார். பல்வேறு நபர்களைச் சந்திக்கிறார். பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.

அவர் சிறிலங்காவின் அரசாங்கத்தில் அதிகம் தலையிடுகிறார். மைத்திரி – ரணில் கூட்டா அல்லது அமெரிக்க தூதுவரா உண்மையில் நாட்டை ஆளுகிறார் என்று எங்களுக்கு சந்தேகம் உள்ளது.

அவர் ஆட்சியில் தலையிடுவது மட்டுமல்லாமல், எதிர்கால அரசாங்கத்தையும் எச்சரிக்கிறார்,

தற்போதைய அரசாங்கத்தால் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகளை வருங்கால அரசாங்கங்கள் செயற்படுத்துவது கட்டாயம் என்று கூறுகிறார்.

டொலருக்கு டொலர் என்பதே அமெரிக்காவின் கொள்கை. தனக்குப் பயன் இல்லையென்றால், அமெரிக்கா ஒரு டொலரைக் கூட செலவிடாது.

இவ்வாறான நிலையில் அமெரிக்கா 480 மில்லியன் டொலரை வழங்குவதென்பது மிகப் பெரிய சூழ்ச்சி.

நவோமி க்ளீன் என்ற கனேடிய எழுத்தாளர் எழுதிய The Shock Doctrine என்ற நூலில், ஒரு குறிப்பிட்ட நாட்டில் தலையீடு செய்ய வேண்டும் என அமெரிக்கா கருதினால், அந்த நாட்டில் ஒரு பிரச்சினை ஏற்படும் போது, அதற்கு உதவுவதாகக் கூறி அமெரிக்கா அங்கு நுழைகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டதால், எதிர்மறையான பாதிப்புகளே ஏற்பட்டன.

ஒரு நாட்டின் விவகாரங்களில் தலையிடுவதில் அமெரிக்கா மிகவும் திறமையானது என்பது தெளிவாகிறது, அவ்வாறு செய்வதற்கான காரணங்களை உருவாக்குகிறது.

ஒரு நாட்டின் விவகாரங்களில் தலையிடுவதற்கான காரணங்களை உருவாக்குவதில் அமெரிக்கா மிகவும் திறமையானது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து அமெரிக்கா ஆரம்பத்தில் சிங்கள-முஸ்லிம் மோதலைத் தூண்ட முயற்சித்தது. பின்னர் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட்டது.

நாங்கள் மோதல்களில் ஈடுபடாத போது, அவர்கள் சிலாபம், குளியாப்பிட்டி மற்றும் மினுவாங்கொடாவில் உள்ள முஸ்லிம்களைத் தாக்கினர். ஆனால் இன்னும் நாங்கள் யாரையும் தாக்கவில்லை.

அதிபர் தேர்தலுக்கு முன்னர் அமெரிக்கா நாட்டில் மற்றொரு மோதலை உருவாக்கும், எனவே நாடு தயாராக இருக்க வேண்டும்.

அமெரிக்க இராணுவத்திற்குள் நிலவும் மிகப்பெரிய பிரச்சினை பாலியல் துன்புறுத்தல்கள் தான்.

பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து, அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டில் மட்டும் 13,000 பெண் அதிகாரிகள் மற்றும் 7,500 ஆண் அதிகாரிகள் உட்பட 20,500 இராணுவ வீரர்கள், ஏனைய இராணுவ வீரர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

2016ஆம் ஆண்டு இடம்பெற்றதை விட, 2018ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல்கள் 25 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

ஈராக், தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று ஆசிய நாடுகள் அமெரிக்க இராணுவத்தால் பாதிக்கப்பட்டுள்ளன, இந்த நாடுகளில் அமெரிக்கா இராணுவ தளங்களை நிறுவியுள்ளது.

அமெரிக்க இராணுவம் சிறிலங்காவுக்கு வந்தால், மிகவும் ஆபத்தான நிலைமை ஏற்படும். நாங்கள் அவர்களை திருப்பி அனுப்ப முடியாது.

இந்த அமெரிக்க தலையீடு நிறுத்தப்பட வேண்டும். எங்களால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்” என்றும் அவர் தெரிவித்தார்.

Read more...

கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவரை ரிஐடி யிடம் மாட்டி விட்ட புலம்பெயர் புலிப்பினாமிகள் !

புலிகள் வன்னியில் பூண்டோடு அழிக்கப்பட்டதுடன் புலம்பெயர் புலி வியாபாரிகளின் வருவாய் ஆட்டம் கண்டது. இந்நிலையில் தொடர்ந்தும் இலங்கையில் ஓர் அசமந்த நிலையை உருவாக்குவதில் அவர்கள் ஆர்வமாகவுள்ளனர். அதன் அடிப்படையில் புலம்பெயர் புலிப்பினாமிகள் நாட்டிலுள்ள துடிப்புள்ள இளைஞர்களை தவறாக பயன்படுத்தி வருகின்றமை யாவரும் அறிந்தது.

அந்த வகையில் புலம்பெயர் புலிப்பினாமி ஒருவனால் கிளிநொச்சி ஊடகவியலாளராக செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற நிபோஜன் என்பவர் நேற்று ரிஐடி யினரால் அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டமைக்கான காரணம் அவருடன் புலம்பெயர் தேசமொன்றிலிருந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற புலிப்பினாமி தொடர்பு கொண்டமையாகும்.

நிபோஜன் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயல்கள் பலவற்றுக்கு எதிராக குரல்கொடுத்து வருகின்றார். மேலதிகமாக பிரதேசத்தில் இடம்பெறுகின்ற கொலை கொள்ளை போன்ற விடயங்களை துப்புத்துலக்குவதிலும் ஆர்வமாக செயற்படுகின்ற அந்த துடியாட்டமுள்ள ஊடகவியலாளனை புலம்பெயர் புலி எச்சங்கள் தொடர்பு கொண்டு தவறாக வழிநடாத்த முனையின் இழப்பானது சமுகத்திற்கேயாகும்.

சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் என்பவர்கள் சாராயப்போத்தலுக்கு தமது பேனையை அடகு வைத்துள்ள நிலையில் வழர்ந்துவரும் ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கவேண்டியது சமூகத்தின் கடமையாகும்.

Read more...

உயிரைத் துச்சமாக மதித்து நாட்டைக் கட்டியெழுப்புவாராம் பிரேமதாஸவின் வாரிசு!

எனது ஒரே நோக்கமாக இருப்பது என்னவென்றால், எனது தந்தை சமயத்திற்கும் மதத்திற்கும் செய்த சேவையை விடவும் அதிகமான சேவை செய்வதே என அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் தனக்கு அதற்கான அவகாசம் கிட்டுமாயின், ஐந்து ஆண்டுகளுக்குள் இந்நாட்டின் சகல விகாரைகளையும், வழிபாட்டிடங்களையும் கட்டியெழுப்புவேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தனக்கு அவகாசம் கிட்டுமாயின் அதிகாலை நான்கு மணியிலிருந்து நள்ளிரவு 12 மணிவரை சேவையாற்றுவேன் என்றும், உயிரைத் துச்சமாக மதித்து தாய்நாட்டைக் கட்டியெழுப்புதவற்காக தான் தயாராக இருக்கின்றேன் எனவும்  அமைச்சர் சஜித் பிரேமதாச கடவத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது குறிப்பிட்டார்.

Read more...

முறைப்பாடு செய்தவரின் வீட்டுக்குச் சேதம்... 12 பேர் கைது!

குடிபோதையில்  12 பேரைக் கொண்ட குண்டர்கள் வந்து தன்னைத் தாக்கியதுடன், வீட்டையும் சேதப்படுத்தி நஷ்டப்படுத்தியதாக தாக்குதலுக்கு உள்ளாகி திக்ஓய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் முத்து கிருஷ்ணன் குறிப்பிட்டார்.

இதனுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய வீட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, அதன் பின்னர் தனது கணவனைத் தாக்கியமை தொடர்பில் நேற்று (06) ஹற்றன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும், அதன் பின்னர் முக்கிய சந்தேக நபர் உள்ளிட்ட பன்னிரண்டு பேர் தனது வீட்டுக்கு வந்து வீட்டின் கதவுகள், யன்னல்கள், வீட்டிலிருந்த மரத் தளபாடஙகள், இலத்திரனியல் உபகரணங்கள் என பலவற்றைச் சேதப்படுத்திவிட்டுச் சென்றனர் என முத்துக் கிருஷ்ணனின் மனைவி குறிப்பிட்டார்.

தாக்குதல் தொடர்பில் நேற்றுச் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில் உடனடியாக செயற்பட்ட பொலிஸார், தோட்டத்திற்கு வந்து தாக்குதல் நடாத்திய சந்தேகநபர்கள் 12 பேரையும் பொலிஸார் கைது செய்தனர் என வீட்டு உரிமையாளர்கள் குறிப்பிட்டனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அந்தத் தோட்டத்திலுள்ள ஹற்றன் குடாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் 22 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் ஹற்றன் பொலிஸார் தெரிவித்தனர்.


Read more...

தேசிய பட்டியல் உறுப்பினர் பதவி ஜகத் புஷ்பகுமாரவுக்கு....? ஹிஸ்புல்லாஹ்வுக்கும் வேண்டுமாம்..

குருணாகல் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவின் இராஜினாமாவைத் தொடர்ந்து, வெற்றிடமாகியுள்ள தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்குப் பலரும் விண்ணப்பித்துள்ளமை தெரியவருகின்றது.

ஜகத் புஷ்பகுமார, எம்.எல்.எம். ஹிஸ்புல்லாஹ், பிரஸங்க ஸோலங்காரச்சி, ஆறுமுகம் தொண்டமானின் கட்சி இதற்காக விண்ணப்பித்துள்ளமை பற்றியும் மேலும் தெரியவருகின்றது.

எதுஎவ்வாறாயினும், ஜகத் புஷ்ப குமார தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தெரிவுசெய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகத் தெரியவருகின்றது.

குருணாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்கவின் மறைவைத் தொடர்ந்து தேசியப் பட்டியல் உறுப்பினர் சாந்த பண்டார இராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து குருணாகல் மாவட்ட உறுப்பினர் பதவிக்கு அவர் நியமிக்கப்படவுள்ளார்.

Read more...

கைதிகளுக்கு கஞ்சா விநியோகம்! மட்டக்களப்பு சிறைச்சாலைக் காவலன் கைது!

வேலியே பயிரை மேய்கின்றது என்ற பழமொழி யாவரும் அறிந்ததானது. இலங்கையில் இடம்பெறும் சட்ட விரோத செயற்பாடுகளுக்கும் நீதி மீறல்களுக்கும் காரணகர்த்தாக்களாக அவற்றை பாதுகாக்கின்றோம் என சத்தியப்பிரமானம் செய்து மாதாந்தம் கூலிவாங்குகின்றவர்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றது என்றால் மிகையாகாது. சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கவேண்டியவர்களின் சட்டவிரோதச் செயற்பாடுகளே எமது இன்றைய நிலைக்கு காரணமுமாகும்.

சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கவேண்டிய பொலிஸ் திணைக்களதில் ஆரம்பித்து சட்டத்தை இயற்றித்தருகின்ற பாராளுமன்ற உத்தியோகித்தர்கள் வரை இந்நாட்டின் நீதி மற்றும் ஒழுங்குவிதிகள் மீறப்படுவதற்கு உடத்தையாகவுள்ளனர்.

சட்டத்திற்கு முரணாக செயற்படும் குற்றவாளிகள் சந்தேக நபர்கள் நீதிமன்ற உத்தரவின் பெயரில் சிறைச்சாலையில் அடைக்கப்படுவதன் நோக்கம் அவர்கள் நற்பிரஜைகளாக மாற்றம் பெறவேண்டும் என்பதாகும். ஆனால் இன்று இலங்கைச் சிறைச்சாலைகளுக்கு செல்கின்றவர்கள் குற்றங்களை புரிவதற்கு மேலதிக தகமைகளை பெற்றவர்களாக வெளிவருகின்றனர்.

இதற்கு காரணம் சிறைச்சாலை நிர்வாகத்தினராகும். சிறைச்சாலையினுள் இன்று தடைசெய்யப்பட்ட பொருட்கள் தாராளமாக கிடைக்கப்பெறுகின்றது. சிறைச்சாலையிலிருந்தவாறே நாட்டினுள் பல்வேறு கொலைகள் கொள்ளைகள் இயக்கப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்துக்கும் மேலதிகமாக போதைப்பொருள் வியாபாரிகள் தமது வியாபரத்தை மேற்கொள்ள பாதுகாப்பானதும் சிறந்ததுமான இடமாக சிறைச்சாலைகளையே தெரிவு செய்துள்ளனர். இவர்களின் இச்செயற்பாடுகளுக்கு சிறைச்சாலை காவலர் தொட்டு சிறைச்சாலைகள் ஆணையாளர் வரை உதவி ஒத்தாசை புரிகின்றனர். சட்டவிரோதிகளின் அடியாட்களாக இந்த அரச உத்தியோகித்தர்கள் செயற்படுகின்றனர்.

அவ்வாறு செயற்பட்ட சிறைச்சாலை காவலன் ஒருவன் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளான். அவன் கைதிகளுக்கு கஞ்சா மற்றும் தொலைபேசிகளை கொடுக்க முற்பட்டபோது பிடிக்கப்பட்டுள்ளான். அவனை இன்று மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

Read more...

இந்நாட்டின் முக்கிய தீர்வுகளை மாடுகளே எடுக்கின்றன! புத்திக பதிரண

'சுதந்திர இலங்கையில் தொழில்துறை இன்றுவரை எவ்விதக் கொள்கையுமின்றியே இருக்கின்றது' என கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பதிரண குறிப்பிடுகின்றார்.  அததெரண தொலைக்காட்சியில் இடம்பெறும் 360 எனும் நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்கும்போதே அமைச்சர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

பொன்னம்பலம் அவர்கள் அன்று தொழில்துறை அமைச்சராக இருந்த காலத்திலிருந்து இன்று வரை தொழில் துறையில் எந்தவொரு கொள்கையுமின்றியே இருக்கின்றது என அமைச்சர் புத்திக பதிரண குறிப்பிட்டார்.

தற்போது உள்நாட்டு வர்த்தகக் கொள்கை மற்றும் மூன்றாம் நிலைக் கல்விக் கொள்கை தற்போது செயற்பட்டு வருகின்றது எனக் குறிப்பிட்ட அவர், சில சமயங்களில் கம்பனிகளுக்குத் தலைசாய்கின்ற நிலைமையும் இதற்குக் காரணமாக இருக்கின்றது எனக் குறிப்பிட்டார்.

இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள சில பசுமாடுகளை வளர்ப்பதற்கு குளிரூட்டப்பட்ட அறைகள் தேவைப்படுகின்றன என்றும்; அவ்வாறான தீர்மானங்களை எடுக்கின்றவர்கள் எருமை மாடுகளாக மாறுவதே பிரச்சினை என்றும் அவர் தெரிவித்தார்.

இதனால்தான் அரசியல்வாதிகளை எதிர்க்கின்ற நாடாக இலங்கை மாறியுள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், நாட்டின் எதிர்காலம் கழுதைகளுக்கும் கள்வர்களுக்கும் ஒப்படைக்கப்படுகின்றது எனவும், 71 ஆண்டுகளாக இந்த சோக நிகழ்வே அரங்கேறி வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

Read more...

Tuesday, August 6, 2019

அமெரிக்க பெடரல் நீதிமன்றம் அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸிற்கு எதிரான ஜனநாயகக் கட்சியின் சூழ்ச்சியை அம்பலப்படுத்துகிறது.

(By Eric London) நியூ யோர்க் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி John Koeltl, செவ்வாயன்று மாலை வெளியிடப்பட்ட ஒரு தீர்ப்பில், விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான சூழ்ச்சிக்கு ஒரு கடுமையான அடி கொடுத்தார்.

ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழுவின் (DNC) மின்னஞ்சல்கள் மற்றும் தரவைத் திருடி பொதுமக்களுக்கு அவற்றை வெளியிடுவதற்காக விக்கிலீக்ஸ் ரஷ்ய அரசுடன் சூழ்ச்சி செய்ததற்காக அது உரிமையியல் சார்ந்து பொறுப்பாவதாக குற்றஞ்சாட்டி ஏப்ரல் 2018 இல் DNC தொடுத்த ஓர் உரிமையியல் சட்டவழக்கை, பில் கிளிண்டனால் நியமிக்கப்பட்டவரும் வாட்டர்கேட் சிறப்பு விசாரணை படைக்கான முன்னாள் சிறப்பு உதவி வழக்குதொடுனருமான Judge Koeltl, அவர் தீர்ப்பில், "தப்பெண்ணத்துடன்" தொடுக்கப்பட்டதாக கூறி தள்ளுபடி செய்தார்.

அசான்ஜின் முன்னணி வழக்கறிஞர் ஜெனிஃபர் ரோபின்சனும் பிற விக்கிலீக்ஸ் வழக்கறிஞர்களும் அந்த தீர்ப்பை "பேச்சு சுதந்திரத்தின் ஒரு முக்கிய வெற்றியாக" வரவேற்றனர்.

பேச்சு சுதந்திரத்தைத் தாக்குவதற்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களையும் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் இரண்டு கட்சிகளது ஊழல்பீடித்த நடவடிக்கைகளையும் மூடிமறைப்பதற்குமான அதன் சொந்த சூழ்ச்சியில் ஜனநாயகக் கட்சியை இத்தீர்ப்பு அம்பலப்படுத்துகிறது. நீதிபதி Koeltl பின்வருமாறு குறிப்பிட்டார்:

DNC இன் அரசியல் நிதி மற்றும் வாக்காளர்களை ஈடுபடுத்தும் மூலோபாயங்களைக் கொண்ட ஆவணங்களைப் பதிப்பிப்பதற்கு விக்கிலீக்ஸை பொறுப்பாக்கினால், அதுவும் ஏனென்றால் DNC அவற்றை 'இரகசியம்' என்றும் வர்த்தக இரகசியங்கள் என்றும் முத்திரை குத்துவதன் காரணமாக எடுத்துக் கொண்டால், பின்னர் அது எந்தவொரு பத்திரிகைக்கும் அல்லது பிற ஊடக நிறுவனத்திற்கும் கூட பொருந்தும். ஆனால் அது பொதுமக்கள் மீதான அதிகபட்ச அக்கறை சம்பந்தப்பட்ட பிரசுரிப்புகள் மீது முதல் அரசியலமைப்பு திருத்த நலனை மீறி முற்றிலும் தனிநபர் இரகசியம் மீதான நலனை ஏற்றுக் கொள்ளவியலாத வகையில் மேலுயர்த்தும். DNC இன் வெளியான உள்தொடர்பு தகவல்கள், ஒரு ஜனாதிபதி தேர்தலின் போது அமெரிக்காவின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றின் திரைக்குப் பின்னால் நடக்கும் விடயங்களை அமெரிக்க வாக்காளர்கள் தெரிந்து கொள்ள அனுமதித்துள்ளது. இதுமாதிரியான தகவல்கள், மூடிமறைப்பின்றி முதல் அரசியலமைப்பு சட்டதிருத்தம் வழங்கும் பலமான பாதுகாப்புக்கு உட்பட்ட வகையாகும்.

இந்த தீர்ப்பானது, தேசத்துரோக குற்றச்சாட்டு உட்பட்ட குற்றச்சாட்டுக்களுக்காக 175 ஆண்டுகால பெடரல் சிறைவாசத்தை முகங்கொடுக்கும் அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்காக, பிரிட்டன், ஈக்வடோர், ஆஸ்திரேலியா மற்றும் ஸ்வீடன் அரசாங்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த பெருநிறுவன ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகங்கள் ஆதரவிலான அமெரிக்க அரசினது சூழ்ச்சியின் சட்டவிரோதத்தன்மையை அம்பலப்படுத்துகிறது.

இந்த உரிமையியல் வழக்கின் வாதிதரப்பு —ஜனநாயக கட்சி— ஒரு தசாப்த காலத்தில் அரசு எந்திரத்திற்குள் இருந்து அசான்ஜைப் பிரதானமாக இன்னல்படுத்தியதாகவும் சேவையாற்றி உள்ளது. ஒபாமா நிர்வாகத்தின் போது, ஜனநாயகக் கட்சி நீதித்துறை அதிகாரிகள், அத்துடன் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் தொழில்ரீதியில் பதவியில் தங்கியிருக்கும் ஜனநாயகக் கட்சியினர், அவருக்கு எதிராக குற்றவியல் வழக்கைத் தயாரித்தனர்.

இந்த உரிமையியல் சட்டவழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதானது, பாரியளவில் செய்திகளில் தெரிவிக்கப்படாத நலன்களின் மோதல்களையும் மற்றும் வழக்கு விசாரணைகளில் நடக்கும் துஷ்பிரயோகம் மற்றும் அவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் நடைமுறைகளைக் குற்றகரமாக துஷ்பிரயோகம் செய்வதை எல்லாம் அம்பலப்படுத்துகிறது. அசான்ஜ் மீதான குற்றவியல் வழக்கு விசாரணைக்கும் உண்மைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அதற்கு பதிலாக அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கூட்டாளிகள் நடத்திய போர் குற்றங்கள் குறித்த உண்மைகளைக் கூறியதற்காக அவரை தண்டிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

விக்கிலீக்ஸை ஒரு "சர்வதேச செய்தி நிறுவனம்" என்று முத்திரையிட்ட நீதிபதி, பேச்சு சுதந்திர பாதுகாப்புக்குள் அசான்ஜ் வரமாட்டார் என்று அறிவிக்கின்ற பெருநிறுவன பத்திரிகைகளின் பொய்யர்களை அம்பலப்படுத்தி உள்ள அசான்ஜை ஒரு "பத்திரிகையாளர்” என்று குறிப்பிட்டார். நீதிபதி Koeltl தொடர்ந்து குறிப்பிட்டார்: “குறிப்பிடத்தக்க 'பென்டகன் ஆவணங்கள்' வழக்கான, நியூ யோர்க் டைம்ஸ் கம்பெனியும் அமெரிக்காவும் வழக்கில், உச்ச நீதிமன்றம் பொதுமக்கள் மீதான அக்கறையில் மூன்றாம் நபரிடம் இருந்து திருடிய ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களைப் பிரசுரிப்பதைத் தாங்கிப் பிடித்தது,” என்றார்.

ஒரு சட்ட விடயமாக, தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற விக்கிலீக்ஸின் பிரேரணையை ஏற்றுக் கொண்ட அந்நீதிமன்றம், DNC "உள்ளது உள்ளவாறே நம்பத்தகுந்த" வாதத்தை முன்வைக்கவில்லை என்று தீர்ப்பளித்தது. அந்த பிரேரணையின்படி நிராகரிக்கும் கட்டத்தில், வழக்காளி குற்றஞ்சாட்டிய உண்மைகள் அனைத்தையும் ஒரு நீதிபதி நிஜமென ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. இங்கே அந்த நீதிபதி, DNC குற்றஞ்சாட்டிய உண்மைகள் அனைத்தும் நிஜமென்றால், உண்மை-விரும்பி யாரும் "குற்றஞ்சாட்டப்பட்ட துஷ்பிரயோகத்திற்குப் பிரதிவாதி தான் பொறுப்பு என்பதில் நியாயமாக குறுக்கீடு செய்ய" போவதில்லை என்று தீர்ப்பளித்தார்.

இன்னும் ஒரு படி மேலே சென்று, அந்நீதிபதி DNC இன் வாதங்களை "இற்றுப்போன" வாதங்கள் என்று குறிப்பிட்டதுடன், “எந்த கட்டத்திலும் DNC குற்றஞ்சாட்டும் எந்த உண்மைகளும்" அசான்ஜோ அல்லது விக்கிலீக்ஸோ "DNC இன் தகவல்களைத் திருடுவதில் பங்கெடுத்ததை" காட்டவில்லை என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸ் "DNC இன் ஆவணங்களைத் திருடி பரப்புவதற்காக ரஷ்ய கூட்டாட்சியுடன் சூழ்ச்சி செய்தனர்" என்ற DNC இன் வாதம் "முற்றிலும் உண்மையிலிருந்து விலகி உள்ளது,” என்று Judge Koeltl தெரிவித்தார். நீதிமன்றம் "வலியுறுத்தப்படும் தீர்மானகரமான வலியுறுத்தல்களை உண்மைகளாக ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை" என்றும் நீதிபதி மேற்கொண்டு தீர்ப்பில் எழுதினார்.

அசான்ஜிற்கும் ரஷ்யா அரசாங்கத்திற்கும் இடையே குற்றஞ்சாட்டப்படும் தொடர்பு "பொருத்தமற்று" இருப்பதாக குறிப்பிட்டு, “திருட்டில் பதிப்பாசிரியர் பங்கெடுக்கவில்லை எனும் வரையில் ஓர் ஆதாரநபர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பதிப்பாசிரியர் திருடப்பட்ட ஆவணங்களைப் பதிப்பிக்க உரிமையுடைய ஒரு நபர் தான்" என்பதால், ரஷ்யாவுடன் விக்கிலீக்ஸ் குற்றகரமாக தொடர்பில் இருந்தார் என்ற DNC இன் வாதத்தை நீதிபதி கூடுதலாக உதறி தள்ளினார்.

“திருட்டுக்குப் பின்னர் திருடப்பட்ட ஆவணங்களைக் கொண்டு உடனிருந்து சதி செய்தவராக விக்கிலீக்ஸைப் பொறுப்பாக்கலாம்,” என்ற DNC இன் வாதத்தையும் நீதிபதி Koeltl நிராகரித்தார். இந்த வாதத்தை "ஆதாரத்திற்குரியதல்ல" என்று குறிப்பிட்ட நீதிபதி, அது அரசியலமைப்பு பாதுகாப்புகளின் "உள்அம்சங்களை அகற்றி" விடும் என்று எழுதினார்: “இதுபோன்றவொரு விதி, திருடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒரு கட்டுரையை பிரசுரிக்கும் எந்தவொரு பத்திரிகையாளரையும் திருட்டுக்கு உடனிருந்த சூழ்ச்சியாளராக ஆக்கிவிடும்,” என்று குறிப்பிட்டார்.

DNC அதன் ஏப்ரல் 2018 புகாரில், முன்வைத்த பல வாதங்கள் இப்போது திமிர்தனமான பொய்கள் என்பதாக அம்பலமாகி உள்ளன. அசான்ஜ், ட்ரம்ப் மற்றும் ரஷ்யா "அக்கட்சியின் மதிப்புகளையும் அமெரிக்க வாக்காளர்கள் மீதான அக்கட்சியின் பார்வைகளையும் பரிமாறிக் கொள்வதற்கான DNC இன் தகைமையை குழிபறித்து சிதைத்து விட்டனர்,” என்ற புகாரும் இதில் உள்ளடங்கும்.

அந்த புகார் பின்வருவதையும் குற்றஞ்சாட்டியது: “ரஷ்ய உளவுத்துறை சேவைகள் பின்னர் திருடப்பட்ட இரகசிய ஆவணங்களை GRU உளவாளி #1 மூலமாகவும், அத்துடன் விக்கிலீக்ஸ் மற்றும் அசான்ஜ் மூலமாகவும், பரப்பிவிட்டன, இவர்கள் ட்ரம்ப் பிரச்சாரக் குழு மற்றும் ட்ரம்புக்கு உடனிருந்தவர்களால் செயலூக்கத்துடன் ஆதரிக்கப்பட்டிருந்தனர், அதேவேளையில் அவர்களின் பொதுவான நோக்கங்களுக்குச் சேவையாற்றும் விதத்தில் தகவல்கள் உரிய நேரத்தில் உரிய முறையில் அமெரிக்க மக்களிடையே வெளியிட்டு பரப்பப்பட்டன,” என்று குறிப்பிட்டது.

DNC அதன் புகாரைப் பதிவு செய்த அந்நேரத்தில், நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிடுகையில், அந்த ஆவணம் "மக்கள் அறிந்த உண்மைகளையும்", அத்துடன் "செய்திகள் மற்றும் அதற்குப் பிந்தைய நீதிமன்ற நடைமுறைகளில் வெளியிடப்பட்ட தகவல்களையும்" சார்ந்திருப்பதாக எழுதியது. இந்த சட்டவழக்கு "திரு. ட்ரம்ப், அவருக்கு உடனிருப்பவர்கள் மற்றும் ரஷ்யா உடனான அவர்களின் தொடர்புகளைக் குறித்து ஆராய்வதைத் தீவிரப்படுத்தும் ஒரு சூழலில் வருகிறது,” என்று டைம்ஸ் எழுதியது.

நீதிபதி Koeltl அவர் தீர்ப்பில் பென்டகன் ஆவண வழக்கான நியூ யோர்க் டைம்ஸ் கம்பெனியும் அமெரிக்காவும் வழக்கை மேற்கோளிட்டது ஆழமாக முரண்பாடானது.

டைம்ஸ் பத்திரிகையாளர்கள் Andrew Kramer, Michael Gordon, Niraj Chokshi, Sharon LaFraniere, K.K. Rebecca Lai, Eric Lichtblau, Noah Weiland, Alicia Parlapiano மற்றும் Ashley Parker ஆகியோரின் கட்டுரைகள், அத்துடன் "கிளிண்டனின் பகிரங்க எதிரி, அசான்ஜ், ஜனநாயகக் கட்சி கருத்தரங்கிற்கு உரிய நேரத்தில் மின்னஞ்சல் வெளியீடு,” என்று தலைப்பிட்டு சார்லி சாவேஜ் எழுதிய ஜூலை 26, 2016 கட்டுரையும் உள்ளடங்கலாக, DNC இன் அடித்தளமற்ற புகார் அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸின் ரஷ்யாவுடனான உறவுகளுக்கு "ஆதாரமாக" நியூ யோர்க் டைம்ஸை எட்டு முறை குறிப்பிட்டது.

நியூ யோர்க் டைம்ஸ் மார்ச் 2016 இல் அதன் தலையங்க பக்க ஆசிரியராக ஜேம்ஸ் பென்னெட்டை நியமித்ததற்குப் வெகுசில வாரங்களுக்குப் பின்னர் தான் இந்த கட்டுரைகளின் முதலாவது பதிப்பிக்கப்பட்டது. ஜேம்ஸ் பென்னெட்டின் சகோதரர், மிக்கெல் பென்னெட் ஜனாதிபதி வேட்பாளராவார், கொலராடோவின் செனட்டர் ஆன அவர் ஜனநாயக கட்சியின் தேசிய குழுவின் ஜனநாயக கட்சி செனட் சபை பிரச்சாரக் குழுவின் முன்னாள் தலைவராக இருந்தார். ஈக்வடோர் அசான்ஜ் இலண்டனின் ஈக்வடோர் தூதரகத்தில் சிக்கி இருந்த போது, ஈக்வடோர் அசான்ஜிற்குத் தஞ்சம் வழங்கியதை இரத்து செய்யாததைக் குறித்து அவர் "மிகவும் கவலை" கொண்டிருந்ததாக குறிப்பிட்டு 2018 இல் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இக்கான ஒரு கடிதத்தில் பென்னெட் கையெழுத்திட்டார்.

"விக்கிலீக்ஸ் ஜனநாயக கட்சி நடைமுறைகளை உலகளவில் குழிபறிக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற ஒரு நேரத்தில் ஈக்வடோர் திரு. அசான்ஜிற்கு ஆதரவைத் தொடர்ந்து கொண்டிருப்பது குறித்து [ஈக்வடோரிய] ஜனாதிபதி [லெனின்] மொரெனோ உடன் அமெரிக்காவின் கவலைகளை நீங்கள் எழுப்புவது,” “தவிர்க்க முடியாத கட்டாயமாகும்,” என்று அக்கடிதம் குறிப்பிட்டது.

ஏப்ரல் 2019 இல், ட்ரம்ப் நிர்வாகம் அசான்ஜிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அறிவித்த பின்னர், நியூ யோர்க் டைம்ஸ் பதிப்பாசிரியர் குழு, ஜேம்ஸ் பென்னெட் வழிகாட்டுதலின் கீழ், பின்வருமாறு எழுதியது: “சர்ச்சைக்கிடமற்ற குற்றச்சாட்டுடன் திரு. அசான்ஜைக் குற்றஞ்சாட்டி இந்த நிர்வாகம் மிகச் சிறப்பாக தொடங்கியுள்ளது.” இரண்டு வாரங்களுக்குப் பின்னர், மிக்கெல் பென்னெட் அவர் ஜனாதிபதி வேட்பாளராக நிற்பதை அறிவித்ததுடன், அப்போதிருந்து டைம்ஸின் தலையங்க பக்கத்தில் ஆதரவான செய்திகளைப் பெற்று வருகிறார்.

“இதற்கும் கூடுதலாக, ஜேம்ஸ் மற்றும் மிக்கெல் பென்னெட்டின் தந்தை, டக்ளஸ் பென்னெட், 1970 களின் இறுதியில் மற்றும் 1980 களின் ஆரம்பத்தில் சர்வதேச அபிவிருத்திக்கான சிஐஏ-தொடர்புபட்ட அமெரிக்க முகமைக்குத் தலைமை வகித்தார்.”

“தேர்தலுக்கு எதிரான DNC சட்டவழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது,” என்ற தலைப்பின் கீழ், புதன்கிழமை, டைம்ஸ் அதன் 25 ஆம் பக்கத்தில் ஆறு பத்தி கொண்ட சிறிய கட்டுரை ஒன்றை பிரசுரித்தது. அதன் இணையவழி பதிப்பில், டைம்ஸ் அதன் சிறப்பு பக்கத்தின் முல்லெர் அறிக்கைக்கான இணைப்பை முக்கியத்துவத்துடன் அதில் இணைத்திருந்தது, அந்த அறிக்கை பெடரல் நீதிமன்றத்தில் நீதிபதி Koeltl உதறித் தள்ளிய, அதே DNC-முன்வைத்த இற்றுப்போன பொய்களை அடிப்படையாக கொண்டதாகும்.

Read more...

புலிகளால் படுகொலை செய்யப்பட்ட அல்பிரட் துரையப்பாவின் பேரன் கனடிய பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரியாக நியமனம்!

கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள பீல் (Peel) பிராந்தியத்தின் தலைமை பொலிஸ் அதிகாரியாக முதன்முறையாக இலங்கை தமிழர் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் பீல் பிராந்தியத்தின் புதிய தலைமை பொலிஸ் அதிகாரியாக, ஹால்டன் பிராந்தியத்தில் பிரதி பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த நிஷான் துரையப்பாவை நியமித்துள்ளனர்.

ஒன்டாரியோ பிராந்தியத்திற்கு நியமிக்கப்பட்ட முதலாவது தென் ஆசிய தலைமை பொலிஸ் அதிகாரி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹால்டன் பிராந்தியத்தில் இருந்து கடந்த 2015 ஆம் ஆண்டு பீல் நகர பிராந்திய பிரதி பொலிஸ் தலைமை அதிகாரியாக நியமனம் பெற்றார்.

25 ஆண்டுகள் சேவை அனுபவம் கொண்டுள்ள நிஷான், குற்ற விசாரணைப் பிரிவின் கீழ், போதைப் பொருள் ஒழிப்பு, துப்பாக்கி, பாதாள உலக குழுக்கள் தொடர்பான விடயங்களை கையாண்டுள்ளார். அவர் சிறப்பு அதிரடிப்படை பிரிவிலும் பணியாற்றியுள்ளார்.

ஒக்டோபர் 1 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இவருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸ் சேவைகள் சபை அறிவித்துள்ளது.

3000 காவலர்களை கொண்டுள்ள பீல் பிராந்திய பொலிஸுக்கு தலைமை அதிகாரியாக பணியாற்றுவது உண்மையிலேயே பெருமையான விஷயம். சிறப்பாக கடமையாற்றுவேன் என நிஷான் துரையப்பாவை தெரிவித்துள்ளார்

அவரை பீல் நகரத்துக்குட்பட்ட மிஸிஸிசவ்ஹா மேயர், போன்னி கிரோம்பி வரவேற்றுள்ளார். நகரத்தை பாதுகாப்பாக வைத்துகொள்ள இணைந்து செயலாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிஷ் என அழைக்கப்படும் நிஷான் துரையப்பா என்பவர் யாழ்ப்பானத்தின் முன்னாள் மேயர் அல்பிரட் துரையாப்பாவின் பேரன் என தெரிவிக்கப்படுகின்றது.

1975 ஆம் ஆண்டு அல்பிரட் துரையாப்பா படுகொலை செய்யப்பட்ட பின்னர் இவர்கள் கனடாவின் பீல் பிராந்தியத்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

இதன்போது நிஷான் துரையப்பா 3 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அல்பிரட் துரையாப்பா படுகொலையே இலங்கையில் இடம்பெற்ற முதலாவது அரசியல் படுகொலை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரியாக செயற்பட்டிருந்தால் குண்டு வெடித்திருக்காதாம். ருவன் விஜயவர்த்தன

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரியாக செயற்பட்டிருந்தால் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற இந்த பயங்கரவாத தாக்குதலை தடுத்திருக்க முடியும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான ருவான் விஜயவர்த்தன தெரிவித்தார்.

சஹரானினால் 17 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. குண்டுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பான தகவல்கள் எனக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விடயங்களை கண்டறியும் பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு முன்னிலையில் இராயாங்க அமைச்சர் இன்று சாட்சியமளித்தார். பாராளுமன்ற கட்டட தொகுதியில் இன்று இடம்பொற்ற தெரிவுக்குழு அமர்வில் குழுவின் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இராஜாங்க அமைச்சர் பதிலளித்தார்.

இந்தியாவில் பாதுகாப்பு தொடர்பில் விஷேட நடைமுறைகள் உண்டு. புலனாய்வு பிரிவு வழங்கும் தகவல்களை ஆய்வு செய்வதற்கு தனியான ஆய்வு பிரிவொன்று செயற்படுகின்றது. இவ்வாறாக பிரிவுகளை உள்ளடக்கிய தேசிய பாதுகாப்பு பேரவை கூட்டம் நடைபெறும். இதன் போது நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் கிடைக்கப்பெற்ற குற்றப் புலனாய்வு தகவல்கள், மதிப்பீடு செய்யப்பட்ட ஆய்வுகள் தொடர்பிலான விடயங்கள் நாட்டு பிரதமருக்கு அதாவது இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் பிரதமருக்கு தெளிவு படுத்தப்படும்.

நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறுகியகாலத்துக்கு எவ்வாறு அமைந்திருக்க வேண்டும். இதே போன்று எதிர்வரும் 10 வருட காலத்திற்கு பாதுகாப்பு விடயங்கள் எவ்வாறு அமையவேண்டும் என்பது குறித்தும் மதிப்பீடுகள் சமர்ப்பிக்கப்படும். அது தொடர்பில் கலந்துரையாடல்களும் இடம்பெறும். இது போன்றே ஏனைய பல நாடுகளிலும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நடைமுறைகள் இருப்பதாக நான் அறிந்துள்ளேன் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவமானது நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான நீங்கள் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் தெரிவித்திருந்த கூற்றை நியூசிலாந்து பிரதமர் நிராகரித்திருந்தார் என்று தெரிவுக்குழு உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு இராஜாங்க அமைச்சர் பதிலளித்தார்.

தாக்குதல் தொடர்பாக நிஷாப் என்பவர் தனது மனைவியுடன் நடத்திய உரையாடலை அடிப்படையாக் கொண்டு புலனாய்வு பிரிவின் தகவலுக்கு அமைவாகவே இவ்வாறான கூற்றை தெரிவித்திருந்தேன் என்றும் அவர் கூறினார். மாவனெல்ல சம்பவத்தை சரியாக விசாரித்திருந்தால் உயிர்த்த ஞாயிறு சம்பவ தாக்குதலை தடுத்திருக்க முடியும்.

தாக்குதலுக்கு முன்னர் தாக்குதலுடன் தொடர்புபட்ட பாதுகாப்பு பிரிவினரால் எழுதப்பட்ட கடிதத்தை அதற்கு முன்னர் நான் அறியவில்லை, தாக்குதல் இடம்பெற்ற பின்னரே அதுபற்றி நான் அறிந்தேன்.

தேசிய பாதுகாப்பு பேரவையின் கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. புலனாய்வு, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் கூட்டம் செவ்வாய்க் கிழமைகளில் நடைபெறுவது வழமை. இதில் நானும் பங்கேற்பதுண்டு. இந்த கூட்டங்களில் சஹ்ரானின் பயங்கரவாதம் தொர்பான தகவல்கள் பரிமாறப்படவில்லை.

அடிப்படைவாதம் பயங்கரவாத வன்முறையாக வளர்ச்சி அடையும் விடயம் குறித்தும் கருத்து பரிமாறப்படவில்லை என்று தெரிவித்த அவர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியில் முக்கியமான விடயங்கள் தொடர்பில் பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் ஏற்றபட்ட சிக்கல் நிலையையிட்டு தாம் கவலை அடைவதாகவும் குறிப்பிட்டார்.

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 அல்லது 3 முறை பதில் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியுள்ளேன். பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்திலேயே இந்த பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. இதே போன்று 2017 செப்டெம்பர் 17 ஆம் திகதியும் 2018 ஆம் ஆண்டும் 2019 ஆண்டு மே மாதம் 13 திகதியும் பாதுகாப்பு அமைச்சர் நாட்டில் இல்லாத சமயம் பதில் பாதுகாப்பு அமைச்சராக ஓர் இரு நாட்கள் மாத்திரமே நான் பணியாற்றியுள்ளேன் என்றும் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு பேரவையின் கூட்டத்திற்கு இராஜாங்க அமைச்சராகிய நீங்கள் ஏன் அழைக்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், பாதுகாப்பு பேரவை தொடர்பான கூட்ட முன்னேற்பாடு எனது அமைச்சின் செயலாளருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையிலேயே அது தொடர்பான விடயங்கள் இடம்பெறும். முன்னாள் செயலாளரிடம் இது குறித்து நான் கேட்டுள்ளேன் என்றும் தெரிவித்தார்.

உங்களது அமைச்சிலேயே பாதுகாப்பு அமைச்சு உண்டு. அங்குள்ள உயர் அதிகாரிகள் தேசிய பாகாப்பு பேரவை கூட்டத்திற்கு செல்வது வழமை. அதிகாரிகள் இவ்வாறு செல்வது ஏன் என்பது குறித்து அறியவில்லையா? என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், எனது செயலாளர் மூலமாகவே இவ்வாறு அறிந்து கொள்வேன் என்று தெரிவித்தார்.

வர்த்தமானியின் ஊடாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரக்கென 4 பிரிவுகள் உரித்தாக்கப்பட்டிருந்தது. படைப்பிரிவினர் தொடர்பாகவே இந்த 4 பிரிவுகளும் இடம்பெற்றிருந்தன. அதற்கான பொறுப்புக்களை நான் நிறைவேற்றினேன். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த போதிலும் தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம் எனக்கு இருக்கவில்லை. சுமார் நான்கரை வருட காலமாக இந்த அமைச்சில் செயற்பட்டு வருகின்றேன் என்றார்.

Read more...

கோத்தா வேட்பாளர் என்பது உறுதி. ஓய்வு பெற்ற இராணுவத்தினரை கொண்டு சிறப்பு பாதுகாப்பு பிரிவு அமைக்க திட்டம்.

எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெருமுன சார்பான வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச வை நிறுத்துவது என்ற முடிவு நிறைவு பெற்றுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களிலிருந்து நம்பகமாக அறியமுடிகின்றது.

உள்ளக வெளியக பல்வேறு சாவால்களுக்கு மத்தியில் எடுக்கப்பட்டுள்ள இம்முடிவு தொடர்பில் எதிர்வரும் 11ம் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபச்ச அறிவிக்கவுள்ளார்.

இதேநேரம் அதிபர் தேர்தலில் தமது வேட்பாளராக போட்டியில் நிறுத்தவுள்ள கோத்தாபய ராஜபக்சவுக்கு பாதுகாப்பு அளிக்க, தனியான தொண்டர் படை ஒன்றை உருவாக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன முடிவு செய்துள்ளது.

கட்சியின் பேச்சாளர் ஒருவர் இதுபற்றி தகவல் வெளியிடுகையில்,

“பாதுகாப்புப் படைகளில் இருந்து ஓய்வுபெற்ற 50 அதிகாரிகளைக் கொண்டு இந்த தொண்டர் படை உருவாக்கப்படவுள்ளது. இவர்கள் படைகளில் இருந்து சட்டரீதியாக விலகியவர்களாக இருப்பர்.

தேர்தல்களின் போது, கோத்தாபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ பாதுகாப்பு அணிக்கு உதவுவது இந்த தொண்டர் படையின் பிரதான பொறுப்பாக இருக்கும்.

அவருக்கு அரசாங்கம் வழங்கியுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லை. அவரது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிறப்பு பாதுகாப்பு திட்டத்தை செயற்படுத்துவதில் கட்சி பிரமுகர்கள் கவனம் செலுத்தியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பாதுகாப்பு ஏற்பாடு குறித்து கட்சியின் அனைத்து அமைப்பாளர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, கோத்தாபய ராஜபக்சவுடன் பணியாற்றிய இராணுவ அதிகாரிகள் இந்த பாதுகாப்புத் திட்டத்தில் தாமாக முன்வந்து இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான நடவடிக்கைகளை மகிந்த ராஜபக்சவின் மகனும், முன்னாள் கடற்படை அதிகாரியுமான யோசித ராஜபக்ச எடுத்து வருவதாக பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Read more...

நான்பிடித்த முயலுக்கு மூன்றுகாலென்று சொல்லி மேன்முறையீட்டு மன்றில் குட்டு வாங்கிய விக்கி! நக்கீரன்

முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலையில் மீண்டும் ஒருமுறை மேல்நீதிமன்றம் ஓங்கிக் குட்டியிருக்கிறது. அவருக்கு எதிராக முன்னாள் மாகாண அமைச்சர் ப.டெனீஸ்வரன் தொடுத்த வழக்கில் மேன்முறையீடு நீதிமன்றம் டெனீஸ்வரனுக்குச் சாதகமாகவும் விக்னேஸ்வரனுக்குப் பாதகமாகவும் தீர்ப்பளித்துள்ளது.

டெனீஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய முறை சட்டத்துக்குப் புறம்பானது என்றும் அவரை நீக்கி விட்டுப் புதிய அமைச்சர் நியமிக்கப்பட்ட முறையும் சட்டத்துக்கு முரணானது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான மகிந்த அபயவர்த்தன, பிரியந்த பெர்னான்டோ ஆகியோர் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, இந்த வழக்குக்கான செலவினங்களை சி.வி.விக்னேஸ்வரனே செலுத்த வேண்டும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அதேவேளை, மேல்நீதிமன்ற உத்தரவைச் செயற்படுத்தத் தவறியதால், நீதிமன்ற உத்தரவை அவமதித்தார் என விக்னேஸ்வரனுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை வரும் செப்ரெம்பர் 10ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

விக்னேஸ்வரனுக்கு எதிரான மேன்முறையீடு நீதிமன்றத் தீர்ப்பு எதிர்பார்த்ததுதான். இந்தச் சிக்கலை அதாவது முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனை பதவியில் இருந்து நீக்கியது சட்டப்படி தவறு என்பது சட்டம் படித்தவர்களுக்கு மட்டுமல்ல சராசரி படித்த மக்களுக்கும் தெரிந்திருந்தது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த போது டெனீஸ்வரன் அந்த வழக்கைத் திருப்பிப் பெற பெருந்தன்மையுடன் முன்வந்தார். அதாவது தன்னை பதவி நீக்கம் செய்தது சட்டப்படி தவறு என்று விக்னேஸ்வரன் ஒத்துக் கொண்டால் தான் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கைத் திரும்பிப் பெற முன்வந்தார்.

ஆனால் கெடுகுடி சொற்கேளாது என்பது போல விக்னேஸ்வரன் அதனை உதாசீனம் செய்தார். அவரது வழக்கமான தன்முனைப்பு (ego) தலைக்கனம், ஆணவம், செருக்கு, பேராசை அதற்கு இடம் கொடுக்கவில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடித்து அவமானத்துக்கு ஆளாகியுள்ளார். தமிழ் மக்களையும் தலைகுனிய வைத்துள்ளார்.

இதில் உள்ள முரண்நகை என்னவென்றால் டெனீஸ்வரன் ஓர் இளம் சட்டத்தரணி. ஆனால் விக்னேஸ்வரனோ உயர் நீதிமன்ற நீதியரசராக இருந்து ஓய்வு பெற்றவர். இருபத்தைந்து ஆண்டு நீதித்துறையில் பணியாற்றியவர். ஒர் இளம் சட்டத்தரணிக்குத் தெரிந்த சட்டம் நீதித்துறையில் கால்நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக நீதிபதி/ நீதியரசராக இருந்த விக்னேஸ்வரனுக்குத் தெரியவில்லை.

கதை இதோடு முடியவில்லை. மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்தகதையாக வழக்குச் செலவினங்களையும் விக்னேஸ்வரன், டெனீஸ்வரனுக்கு கட்ட வேண்டும் என்று மேன்முறையீடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்னொரு கத்தியும் விக்னேஸ்வரன் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. மேலே கூறியவாறு நீதிமன்ற உத்தரவை விக்னேஸ்வரன் அவமதித்தார் என அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் செப்ரெம்பர் 10ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.

ஒரு சிலர் நாம் விக்னேஸ்வரனை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கடுமையாக விமர்ச்சிப்பதாக நினைக்கக் கூடும். அவரைப் புத்திமான், யோக்கியவான், அரசியலில் சூரன் எனப் போற்றிபாடும் பக்தர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக அவரது வெளிநாட்டுப் பக்தகோடிகள்!

எனவே “இனி இது இரகசியம் இல்லை” என்ற தலைப்பில் நாள்தோறும் எழுதிவரும் காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரன் இந்தத் தீர்ப்பையிட்டு எழுதியுள்ளதை அப்படியே கீழே தருகிறோம். படித்துவிட்டு விக்னேஸ்வரன் ஒரு குழப்பவாதியா இல்லையா எனத் தீர்ப்புக் கூறுங்கள்! வித்தியாதரன் ததேகூ அரசியலையும் அவ்வப்போது கடுமையாக விமர்சிப்பவர். தன்னை நடுநிலையாளர் எனச் சொல்லிக் கொள்பவர்.

காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது’ என்றேன். – முன் னாள் வடக்கு முதல்வர் நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னாள் மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தொடர்ந்த வழக்குத் தொடர்பாக.நீதிமன்றத் தீர்ப்பு அதைத்தான் எடுத்துரைப்பதாக எனக்குத் தோன்றுகின்றது.

இந்த வழக்குச் சம்பந்தமான பிரச்சினையில் வடக்கு மாகாண சபையையும், அதன் பின்னர் நீதிமன்றத்தையும் போட்டுக் குழப்போ குழப்பு என்று குழப்பிய நீதியரசர் விக்னேஸ்வரன், இப்போது நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் மக்களையும் குழப்பத் தயாராகி விட்டார் போலத் தோன்றுகின்றது.

தீர்ப்புக்குப் பின்னர் அவர் வெளியிட்ட குழப்ப அறிவிப்பு’ அப்படிப்பட்ட எண்ணத்தைத் தான் தருகின்றது. விடயம் வெகு ஸிம்பிளானது. மாகாண சபைக்கு முதலமைச்சர் உட்பட ஐந்து அமைச்சர்கள். ஆளுங்கட்சி முதல்வரைத் தேர்வு செய்து எழுத்து மூலம் ஆளுநருக்கு அறிவிக்கும். தான் உட்பட மாகாண சபையிலிருந்து ஐவரை உரிய அமைச்சுகளின் ஒதுக்கீடுகளுடன் அமைச்சர்கள் பதவிக்குப் பரிந்துரை செய்வார் முதல்வர். முதல்வரின் அந்தப் பரிந்துரைக்கு அமைய அமைச்சர்களை நியமித்து சத்தியப்பிரமாணம் செய்து வைப்பார் ஆளுநர்.

நியமனம் எப்படியோ அப்படித்தான் பதவி விலக்கலும். ஓர் அமைச்சரைப் பதவி விலக்குவதாயின் அதற்கான பரிந்துரையை முதலமைச்சர் ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். ஆளுநர் அந்தப் பரிந்துரைப்படி அந்த அமைச்சரைப் பதவி விலக்குவார். புதிய பரிந்துரை முதல்வரிடம் இருந்து கிடைத்தால் அதன்படி புதியவரை அமைச்சராக நியமித்து சத்தியப் பிரமாணம் செய்து வைப்பார் ஆளுநர்.
– இவ்வளவும்தான் விடயம்.

இதை டெனீஸ்வரன் விடயத்தில் முதல்வர் விக்னேஸ்வரன் செய்யவில்லை. செய்யத் தவறிவிட்டார். செய்யத் தவறியமை மட்டுமன்றி. அதைமூடி மறைக்க இப்போதும் குழப்பம் ஏற்படுத்தும் கதைகளை
அவர் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றமை அழகல்ல.

தமது கோரிக்கையை ஏற்று டெனீஸ்வரன் பதவி விலகாவிட்டால் அவரை முதல்வர் பதவி விலக்கலாம். அதற்கு வழி என்ன?

நான் முன்னர் சுட்டிக்காட்டியபடி, ‘டெனீஸ்வரனை நான் பதவி விலக்கப் பரிந்துரைக்கிறேன்’ என்ற பரிந்துரையை அவர் ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். ஆளுநர் அதன்படி நடப்பார். நடக்க வேண்டும். அது அவரது கடப்பாடு.

ஆனால், முதல்வர் விக்னேஸ்வரன் அப்படிச் செய்யவில்லை. அவர் தம்பாட்டில் ஒரு கடிதத்தை டெனீஸ்வரனுக்குஎழுதினார்.

நான் உம்மைப் பதவி விலக்கி விட்டேன், பொறுப்புக்களை உமது அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைத்து விட்டு நீர் பதவியைக் காலி செய்யலாம் என்ற சாரப்பட அந்தக் கடிதம் அமைந்தது.

அந்தக் கடிதத்தையே தவறானது என்று தெரிவித்து நீதிமன்றத்தில் அதனைச் சவாலுக்கு உட்படுத்தினார் டெனீஸ்வரன். பிரச்சினை வந்ததும், டெனீஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து தாம் விலக்குகின்றார் என்று குறிப்பிட்டு அவருக்கு (டெனீஸுக்கு) தாம் எழுதிய கடிதத்தை – அதன் பிரதியை – ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்

முதல்வர் விக்னேஸ்வரன். அந்தக் கடிதத்தை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, அதன்படி டெனீஸ்வரனின் பதவி நீக்கத்தை வர்த்தமானியில் அறிவிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கதை எல்லாம் இப்போது விடுகின்றார் விக்னேஸ்வரன்.

டெனீஸ்வரனைப் பதவி நீக்குவதாயின் அதற்கான பரிந்துரை நேரடியாக ஆளுநருக்கு முகவரியிட்டு, அனுப்பப்பட வேண்டும். அதை விடுத்து டெனீஸ்வரனுக்கு முகவரியிட்டு, உம்மைப் பதவி
விலக்குகிறேன் என்று ஒரு கடிதத்தை அனுப்பி விட்டு, அதை ஆளுநருக்குச் சமர்ப்பித்தால் அதன் அடிப்படையில் எப்படி ஆளுநர் நடவடிக்கை எடுக்க முடியும்?

இந்த விவரங்களை மூடுமந்திரமாக வைத்துக் கொண்டு நீதியரசர் விக்னேஸ்வரன் நேற்று மாலை ஒரு சிறிய அறிக்கையை விடுத்திருக்கின்றார். (தீர்ப்பை வழங்கிய) நீதியரசர்கள் முக்கிய விடயத்தைக் கவனத்தில் எடுக்கவில்லை போல் தெரிகின்றது. அதாவது, டெனீஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்குவதாகக் கூறி அனுப்பிய எழுத்திலான கடிதம் ஆளுநரிடம் சேர்ப்பிக்கப்பட்டது. முன்னைய அமைச்சரை நீக்குவதாக அவருக்கு அறிவிக்கப்பட்டும் ஏன் அதனை ஆளுநர் வர்த்தமானியில் பிரசுரிக்கவில்லை….!” என்றெல்லாம் அந்த அறிக்கையில் நீதியரசர் விக்னேஸ்வரன் குறிப்பிடுகின்றார். ஆனால் யாருக்கு முகவரியிட்டு அனுப்பிய கடிதம் ஆளுநரிடம் சேர்ப்பிக்கப்பட்டது என்ற விடயத்தைத் தந்திரமாக மறைத்து விட்டார் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன்.

ஆளுநருக்கு முகவரியிட்டு, டெனீஸ்வரனைப் பதவி நீக்கத்தாம் பரிந்துரைக்கிறார் என்று அவர் கடிதம் எழுதியிருப்பாராயின், இந்தச் சிக்கல் ஏதும் வந்தே இருக்காது.

டெனீஸ்வரனைப் பதவி விலக்கு கின்றார் என்று டெனிஸுக்குத்தாமே கடிதம் எழுதி விட்டு, அந்தக் கடிதத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, டெனிஸ் நீக்கப்பட்டமை குறித்து வர்த்தமானியில் பிரசுரிக்கவில்லை என்று ஆளுநர் மீது அவர் குறை சொல்வது முற்றிலும் தவறானது.

அடுத்தது – அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக முதலமைச்சரின் பதவிக்கும், 13ஆவது திருத்தத்துக்கும் முடிச்சுப் போட்டு அவர் விடும் கதை.மாகாண சபையில் ஐந்து அமைச்சர்களை நியமிப்பதும், அவர்களுக்கான அமைச்சுக்களை ஒதுக்குவதும் முதலமைச்சருக்கே உரிய தனித்துவமான பாத்தியம் – உரிமை. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆனால் அதைச் செய்வதற்கான வழிமுறை ஆளுநர் ஊடானது. என்றாலும், முதல்வரின் பரிந்துரையை மீறி இதில் ஆளுநர் நடக்க முடியாது.

பதின்மூன்றாவது திருத்தத்தில் பல பின்னடைவுகள், குறைபாடுகள் மிகத் தாராளமாக உண்டு. ஆனால், அமைச்சர் நியமனம், பதவி விலக்கல் விடயங்களில் பின்பற்ற வேண்டிய சாதாரண நடைமுறைப் போக்கில் தவறிழைத்துவிட்டு – அந்தத் தவறைத் திருத்த மறுத்துத் தொடர்ந்து வீண் பிடிவாதம் பிடித்து எல்லாவற்றையும் குழப்பி விட்டு – அதன் காரணமாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் குட்டையும் வாங்கிக் கொண்டு விட்டு -அமைச்சர்களை நியமிக்கும் அல்லது பதவி விலக்கும் அதிகாரமே முதலமைச்சருக்கு இல்லாத – ஆளுநருக்கு மட்டுமே இருக்கின்ற – ஒரு முறைமையைக் கொண்டிருக்கும் 13ஆவது திருத்தச் சட்டம் எவ்வளவு வலுவற்றது என்பது இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும் என விக்னேஸ்வரன் வாதிடுவது அபத்தமானது. தமது தவறை அவரே மூடிமறைக்கும் தந்திரோபாய வாதம் இது.

13ஆவது திருத்தம் வலுவற்றது என்பது முழு உண்மை. அதற்குப் பல உதாரணங்கள், காரணங்கள், வாதங்கள், நியாயங்கள் உண்டு. ஆனால், அதற்கு இந்தத் தீர்ப்பு உதாரணம் அல்ல. 13ஆவது திருத்தத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தைச் சரியாகப் பிரயோகிக்கத் தெரியாத ஒருவரின் செயற்பாட்டை நிரூபிக்கும் தீர்ப்புத்தான் இதுவேயன்றி, 13ஆவது திருத்தத்தின் குறைபாட்டை குறியீடு செய்யும் தீர்ப்பல்ல இது.

இந்த விடயத்தில் வீண் பிடிவாதம், அபவாதம் போன்றவற்றை முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் விடுத்து, உண்மைகளைப் பகிரங்க வெளியில் ஒப்புக் கொண்டு நேர்ந்த தவறுகளை திருத்த வழி தேடுவதே நல்லது.

Read more...

ஐக்கிய தேசியக் கட்சியின் எடுபிடி என்பதை தெரிவுக்குழுவில் நிரூபித்த சுமந்திரன்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் ஐக்கிய தேசியக் கட்சியின் நிகழ்சி நிரலில் செயற்படுகின்றார் என்பது பொதுவான குற்றச்சாட்டு. அரசியல் அரங்கில் இடம்பெறும் சகல நகர்வுகளையும் சுமந்திரன் ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்தே நகர்த்திக்கொண்டிருக்கின்றார் என்பது பல்வேறு சந்தர்ப்பங்களில் நிருபணமாகியுள்ளது.

21.04 தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையிடும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அங்கத்தினரான சுமந்திரன் அங்கும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகவே செயற்பட்டுவருவது அவர் பீல்ட மார்ஸ்ல் பொன்சேகாவுடன் பகிரங்கமாக முரண்பட்டதன் ஊடாக மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்தவாரம் தெரிவுக்குழு முன்னிலையில் இரண்டாவது தடவையாக இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க சாட்சியமளிக்கும்போது, அவரிடம் கேள்விகளை தொடுத்த சரத் பொன்சேகா, „இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முற்றுமுழுதாக ஒழித்துவிட்டதாக கூற முடியாது என்ற தங்களது கருத்தில்தான் நாங்களும் இருக்கின்றோம்' என்றார். அதன்போது குறிக்கிட்ட சுமந்திரன் „அது பீல்ட் மார்ஸல் பொன்சேகா அவர்களது கருத்து' என்றார். அவ்வாறாயின் „உங்களது கருத்து இஸ்லாமிய பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதா' என சரத் பொன்சேகா கேட்டபோது, „உங்களுக்கு நான் பதிலளிக்கவேண்டியதில்லை' என பதிலளித்து மூக்குடைபட்டார் சுமந்திரன். இதன்போது தெரிவுக்குழுவினர் மிகுந்த சங்கடத்திற்குளானதையும் இருவரையும் சமாதானப்படுத்த தலைவர் ஜயம்பதி விக்கிரமரட்ண சிரமப்பட்டதையும் உணர முடிகின்றது.

ஏப்ரல் 21 இடம்பெற்ற சம்பவமானது தற்செயலானது என்றும் அதனை தாம் முடிவுக்கு கொண்டுவந்துவிட்டோம் என்று மார்தட்டுகின்றது ஐக்கிய தேசியக் கட்சி. ஆனால் எதிர்கட்சிகள் மற்றும் பாதுகாப்பு உயரதிகாரிகள், இஸ்லாமிய பயங்கரவாதத்தால் எதிர்காலத்தில் அச்சுறுத்தல் உண்டு அவதானம் வேண்டும் என்று கூறப்படுகின்றது. அவ்வாறான நிலைப்பாட்டில் சரத் பொன்சேகா தனது கருத்தை தெரிவித்தபோது குறுக்கிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்தினை முன்வைத்த சுமந்திரன் தான் ஐக்கிய தேசியக் கட்சியின் எடுபிடியாகவே செயற்படுகின்றனே; என்பதை மீண்டுமொருமுறை வெளிப்படுத்தியுள்ளார்.

Read more...

Monday, August 5, 2019

கசிப்பு அருந்திய 12 பேர் மரணம். உடலங்களை கசிப்பு வியாபாரி வீட்டின் முன்வைத்து உறவினர்கள் போராட்டம். OIC இடமாற்றம்.

மீரிகம பிரதேசத்திலுள்ள பல்லேவல எனும் கிராமத்தைச் சேர்ந்த 12 நபர்கள் சட்டவிரோத கசிப்பு அருந்தியதால் மரணமடைந்துள்ளனர். இவ்வாறு மது அருந்தியவர்கள் 20 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே பன்னிருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடலங்களை சுடலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் கசிப்பு வியாபாரியின் வீட்டின் முன் உடலங்களை கொண்டுவந்த ஊரவர்கள் அவற்றை தெருவில் வைத்து கோஷமிட்டனர். அவ்வாறு ஒரே நேரத்தில் இரு உடலங்களை இருவேறு தெருக்களால் ஊர்வலமாக கொண்டுவந்த மக்களே குறித்த வியாபாரிக்கு எதிர்ப்புக் காட்டினர்.

அங்கு எதிர்ப்புக்காட்டியவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் :

காஞ்சன என்ற நபர் இக்கிராமத்தில் பத்து மேற்பட்ட வருடங்களாக சட்டவிரோத மது வியாபாரத்தில் ஈடுபட்டுவருகின்றார். அவர் அதனை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு பொலிஸார் பூரண ஆதரவு வழங்கிவருகின்றனர். பொதுமக்கள் முறைப்பாடுகளை மேற்கொள்ள செல்கின்றபோது அம்முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதும் இல்லை. இன்று இறுதியாக ஒரே நேரத்தில் 12 பேர் இறந்ததானால் பெரிதாக பேசப்படுகின்றது. ஆனாலும் இந்த வியாபாரத்தால் மாதந்தோறும் இங்கு மரணங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது என்றனர்.

இதை தொடர்ந்து பல்லேவெல பொலிஸ் நிலைத்தின் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர் றுவான் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.



Read more...

முஸ்லிம் பெண்களின் நிகாப் விடயத்தில் துணைபோகாதீர். முஸ்லிம் பா.உ ளை மிரட்டுகிறது பள்ளிவாயல்கள் சம்மேளனம்.

முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாபை தடை­செய்­வ­தற்கு சட்­ட­மொன்­றினை இயற்றிக் கொள்­வ­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்­றினை நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரளவினால் சமர்ப்­பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை விவாதங்களில் கலந்து கொள்வதிலிருந்து நரித்தனமாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நழுவி வரும் நிலையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைத்துள்ள கொழும்பு மற்றும் கண்டி பள்ளிவாயல்கள் சம்மேளனம் குறித்த சட்டத்திருத்தத்திற்கு துணை போகவேண்டம் என தமது பா.உ களை மிரட்டியுள்ளது.

கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட பள்­ளி­வா­சல்­களின் சம்­மே­ள­னங்கள் இணைந்து நேற்­றைய தினம் தெஹி­வளை ஜும்ஆ பள்­ளி­வாசலில் நடாத்­திய விசேட மாநாட்டில் மேற்படி மிரட்டலை மகஜர் வடிவில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் கையளித்துள்ளனர்.

கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னங்கள் இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்த இந்தக் கூட்­டத்­துக்கு நாடெங்­கி­லு­மி­ருந்து பள்­ளி­வா­சல்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி சுமார் 6000 பேர் கலந்­து­கொண்­டனர்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் உள்­ளிட்ட பிர­தி­நி­திகள், முஸ்லிம் அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்­டனர். பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்­தினால் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் மகஜர் ஒன்றும் கைய­ளிக்­கப்­பட்­டது.

முஸ்லிம் பெண்­களின் உரி­மை­யான நி­காபை தடை செய்­யக்­கூ­டாது. ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் அப்­பாவி முஸ்­லிம்கள் விரைவில் விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்டும்.

எமது முன்­னைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் வடி­வ­மைத்துத் தரப்­பட்ட முஸ்­லிம்­களின் உரி­மைகள் தொடர்­பான சட்­டங்கள் தொடர்ந்தும் பாது­காக்­கப்­பட வேண்டும். இவற்றைப் பாது­காப்­பதை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தமது கட­மை­யாகக் கரு­த­வேண்டும் என்று அந்த மிரட்டல் மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்­டத்தில் கலந்­து­கொண்­டி­ருந்த அமைச்­சர்­க­ளான ரிசாத் பதி­யுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் உட்­பட ஏனைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நி­காபை தடை செய்­வ­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் சட்­ட­மூலம் கொண்டு வரப்­பட்டால் அதனை எதிர்த்து வாக்­க­ளிப்­ப­தாக உறு­தி­ய­ளித்­தனர்.

நிகழ்வில் அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன், இரா­ஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்­அலி, பிர­தி­ய­மைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், இம்ரான் மஹ்ரூப், முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார் மற்றும் மேல்மாகாண அளுநர் எம்.ஜே.எம்.முஸம்மில், முன்னாள் ஆளுநர் அசாத்சாலி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். இம்மாநாட்டில் குருநாகல் வைத்தியசாலையின் டாக்டர் ஷாபியும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாயல்கள் சம்மேளனங்கள் அரசியல்வாதிகளை அழைத்து தமது வகாப்வாத செயற்பாடுகளை திணிப்பது இந்நாட்டில் நிறுத்தப்படவேண்டும். இவ்வாறு பள்ளிவாயல்கள் சம்மேளனங்கள் அரசியல்வாதிகளை மிரட்டி மதவாதத்தின் பக்கம் தள்ளுவார்களானால் அது ஒட்டுமொத்த இலங்கைக்கும் ஆபத்தாக அமையும்.


Read more...

தமிழரின் வரலாறு நாமலுக்கு தெரியாதென்ற மாவைக்கு மாவையின் வரலாற்றை போட்டுடைக்கின்றார் நாமல் ராஜபக்ச.

அண்மையில் யாழ்பாணம் சென்றிருந்த நாமல் ராஜபக்ச தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். குறிப்பாக அவர்கள் தமிழ் மக்களுக்காக செயற்படவில்லை என்றும் தங்களது சுயலாபங்களுக்காக தமிழ் மக்களை பகடைகாய்களாக பயன்படுத்துகின்றனர் என்றும் தெரிவித்திருந்தார்.

நாமல் ராஜபக்சவின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க முடியாத மாவை நாமல் ஒரு சின்னப்பையன் என்றும் அவருக்கு தமிழரின் வரலாறு தெரியாது என்றும் தெரிவித்திருந்தார். அதைதொடர்ந்து சிறிதரன் சரவணபவான் போன்றோரும் எதிர்கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்

இவர்களின் கூற்றுக்களுக்கு பதிலளித்துள்ள நாமல் ராஜபக்ச அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் :


எம்மை விமர்சிக்கும் முன் தமிழ் தலைமைகள் தம்மை ஒரு முறை தம்மை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதை விடுத்து நான் யாழ்ப்பாணம் சென்று மக்களை சந்தித்து வந்த பின் எம்மை பற்றி விமர்சிக்க அவர்களிற்கு என்ன தகுதி உள்ளது என்ற கேள்வி எழுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷாவின் புதல்வரான எனக்கு தமிழர் வரலாறு தெரியாது என்றும் நானொரு சின்னப்பையன் என்றும் மாவை சேனாதிராஜா ஐயா கூறியுள்ளார்.

அது உண்மைதான் அவரின் வயதுடன் ஒப்பிடும் போது நான் சின்னப் பையன் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் தமிழர்கள் அவதியுற்ற காலத்தில் தனது குடும்பத்தை இந்தியாவில் பாதுகாப்பாக வைத்ததுடன் அவரது மகன் கலையமுதனை லண்டனில் படிக்க வைத்து விட்டு பயங்கரவாதத்தினை நாம் ஒழித்த பின்னரே மாவட்ட புரத்தில் அரண்மனை கட்டி குடும்பத்துடன் குடியமர்ந்தார். துற்போது கூட அவரது மகள் இந்தியாவில் மருத்துவம் படித்துக்கொண்டிருக்கின்றார்.

மாவை ஐயா, அவர்களின் பிள்ளைகளிற்கு இலங்கைத் தமிழர் போன்று சரி வர தமிழ் மொழி கூட கதைக்கத் தெரியாது. இவ்வாறான நிலையில் தான் இலங்கையர் என்ற அடையாளத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற இலக்குடன் எம்மீது விமர்சனம் வைக்கின்றார். முதலில் அவர் தனது பிள்ளைகளுக்கு சரியாக இலங்கைத் தமிழர் வரலாற்றை கற்பித்து விட்டு பின்னர் என்னைப்பற்றி விமர்சிப்பதே சாலச்சிறந்ததாகும்.

அடுத்து, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஈஸ்வரபாதம் சரவணபவனும் சிறிதரனும் எம்மீது விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள். இவர்களுக்கு எம்மீது விரல் சுட்டுவதற்கு என்ன தகுதி உள்ளது.

சரவணபவன் 1989 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் யாழ்ப்பாணம் முழுவதையும் சப்பரா எனும் நிதி நிறுவனம் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றி பல கோடிகளை மோசடி செய்துள்ளார்.

வடக்கில் பல தமிழர்களின் தற்கொலைக்கு காரணமாக இருந்துள்ளார். தீவிர தமிழ்த் தேசியவாதியாக தன்னை அடையாளப்படுத்தும் அவர் தனது மகளின் 18 ஆவது பிறந்தநாளிற்கு ஜனாதிபதி மைத்திரி மற்றும் பல அரசியல் பிரமுகர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தவர். அன்று தீர்வு பற்றியோ அல்லது அல்லல்படும் மக்களின் வாழ்வாதார விடயங்கள் பற்றியோ தமிழ் கைதிகள் பற்றியோ ஜனாதிபதியுடன் கதைத்திருக்கலாமே. ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் இயங்கு நிலை முடக்கப்பட்டதன் பின்னர் தன்னை விடுதலைப்புலிகளின் தலைவருக்கு அடுத்தபடியாக கற்பனை செய்துகொண்டிருக்கின்றார். இவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இருந்த ஒரேயொரு தொடர்பு தீபனின் தங்கையை திருமணம் முடித்தது மட்டும் தான். தனது மச்சானான தீபன் உயிரிழக்கும் வரை அவருடன் உரையாடியது கூட இல்லை. உயிரிழந்த பிறகு கூட அவருடைய நினைவேந்தலையே மேற்கொள்ளவதை தவிர்த்து வரும் ஒருவராக உள்ளார். இது தான் விடுதலைப்புலிகளுடனான அவரின் உறவாகும். ஆனால் தமிழ் மக்களை குழப்புவதற்காக புலிவாலை பிடித்தவராக காண்பிக்க முற்படுகின்றார்..

அதுமட்டுமன்றி அன்று விடுதலைப்புலிகளே அரவணைத்து கிளிநொச்சி உட்பட வன்னி எங்கும் குடியேற்ற மலையக வாழ் மக்களை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் பார்த்து அவர்களை வார்த்தைகளால் வஞ்சித்துள்ளார். தற்போதும் அந்த மக்களின் மனதில் அவ்விடயம் வடுவாகி அவர்கள் வேதனைப் படுவதை நான் நேரடியாகவே அறிந்திருக்கின்றேன். அது மட்டுமா கிளிநொச்சி இரணைமடு நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதில் இரட்டைவேடம் போட்டவர்..

கட்சிக்குள் கடுமையான சாதியத்தையும் பிரதேசவாதத்தையும் பார்க்கும் கீழ் மட்ட அரசியல்வாதிகளான சிறிதரன் போன்றவர்களுக்கு எம்மை விமர்சிக்க என்ன தகுதி இருக்கின்றது..

எம்மைப் பார்த்து விரல்களை நீட்டுவதற்கு முன்னர் தமிழ் மக்களிற்கு தாங்கள் சிறந்த தலைவர்களாக இருக்கின்றோமா என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். இப்படியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது வருகையை கண்டு கொதிப்பதை விட மக்களுக்கு இதய சுத்தியுடன் நேர்மையாக இருக்க முற்பட வேண்டும். தமது வாக்கு வங்கிக்காக பொய்யான வாக்குறுதிகளையும் போலித் தமிழ்த் தேசியத்தினையும் விதைப்பதற்கு முற்படக் கூடாது என அறிக்கையில் தெரிவிக்க்பபட்டிருந்தது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com