Monday, August 5, 2019

விக்கினேஸ்வரன் சட்டவிரோதி! மேல்முறையீட்டு நிதிமன்று தீர்ப்பு. டெனீஸ்வரனுக்கு செலவு கட்ட உத்தரவு.

பிரதம நீதியரசராக இருந்த ஒருவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அவர் சட்டவிரோதமாக செயற்பட்டுள்ளார் என இலங்கை வரலாற்றில் முதல்முறையாக மேன்முறையீட்டு நீதிமன்று தீர்ப்பளித்துள்ளது.

பிரதம நீதியரசாராகவிருந்து தற்போது அரசியல் எடுபிடி , கோமாளியாக இனம்காணப்பட்டுள்ள சி.வி விக்கினேஸ்வரன் தொடர்பாகவே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண மீன் பிடித்துறை முன்னாள் அமைச்சர் பி.டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமை சட்டவிரோதமானது என டெனீஸ்வரானால் தாக்கல்செய்யப்பட்ட வழக்கினை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் குவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என தீர்ப்பு வழங்கியுள்ளது .

2018 ஆம் ஆண்டு தன்னை பதவியில் இருந்து நீக்கியமை சட்டவிரோதமானது என தீர்ப்பளிக்குமாறு முன்னாள் அமைச்சர் பி.டெனிஸ்வரன் தாக்கல் செய்த மனுவிற்கு தீர்ப்பளிக்கும் போது மஹிந்த சமயவர்தன மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகியவர்களினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஒருவரை பதவி நீக்கம் செய்யவும் புதிய அமைச்சர் ஒருவரை நியமிக்கவும் முதலமைச்சருக்கு அரசியலமைப்பின் பிரகாரம் அதிகாரம் இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் டெனிஸ்வரனை பதவியில் இருந்து நீக்கவும் அந்த பதவிக்காக கே.சிவனேஷன் மற்றும் பீ.குணசீலன் ஆகியவர்களை நியமிக்கவும் முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் எடுத்த தீர்மானம் செல்லுபடியற்றது என தெரிவித்த நீதிபதிகள் டெனிஸ்வரனுக்கு வழக்கு கட்டணத்தை செலுத்துமாறும் பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

வடக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பி.டெனிஸ்வரன் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி பி. டெனிஸ்வரனை மேன்முறையீடு செய்திருந்தார்.

அரசியல் சாசனத்தின்படி மாகாண அமைச்சர் ஒருவரை பதவி நீக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் தன்னை பதவி நீக்குவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அவரது மனுவில் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

Sunday, August 4, 2019

சிறிலங்காவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் – அமெரிக்கா எச்சரிக்கை

சிறிலங்காவில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என்று, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்காவில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில்- அமெரிக்க தூதரகத்தினால் நேற்று முன்தினம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“எதிர்வரும் விடுமுறை நாட்களில் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க குடிமக்களுக்கு, இரண்டாம் நிலை எச்சரிக்கை அறிவிப்பை அமெரிக்க தூதரகம் நினைவுபடுத்துகிறது.

எதிர்வரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகள் கூடும் இடங்கள், போக்குவரத்து நிலையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், விடுதிகள், அரச செயலகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், பிரமாண்டமாக நடத்தப்படும் விளையாட்டுகள் மற்றும் கலாசார நிகழ்வுகள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பிரதான பகுதிகளில், தீவிரவாதிகள், சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தக் கூடும்,

எனவே, சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கு வேண்டும்.

அத்துடன், சுற்றுலா இடங்கள் மற்றும் நெரிசலான பொது இடங்களுக்குச் செல்லும்போது உங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்.

உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள்.

உள்ளூர் ஊடகங்களைக் கண்காணித்து, புதிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உங்கள் திட்டங்களை சரிசெய்யவும்.

விழிப்பூட்டல்களைப் பெற ஸ்மார்ட் டிராவலர் பதிவு திட்டத்தில் (STEP) பதிவுசெய்வதன் மூலம்,, அவசரகாலத்தில் உங்களைக் கண்டுபிடிப்பதை எளிதாக்குகிறது.

முகநூல் மற்றும் கீச்சகத்தில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தை பின்தொடருங்கள்.

சிறிலங்காவின் குற்ற மற்றும் பாதுகாப்பு அறிக்கையை மதிப்பாய்வு செய்யவும்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் அமெரிக்கா குடிமக்கள் எப்போதும் அவசரகால சூழ்நிலைகளுக்கு ஒரு திட்டத்தை வைத்திருக்க வேண்டும். பயணியின் சரிபார்ப்பு பட்டியலை மதிப்பாய்வு செய்யவும்.” என்றும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

Read more...

Saturday, August 3, 2019

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் எந்தப்பக்கம்? வை எல் எஸ் ஹமீட் - பாகம் 1

பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் யார்? என்ற எதிர்பார்ப்பும் ஊகங்களும் நிலவும் இவ்வேளையில் “ யார் வேட்பாளர்” என்பதைத் தீர்மானிக்கும் சக்தி சிறுபான்மை என்ற முறையில் நம்மிடமில்லாதபோதும் யார் ஜனாதிபதியாக வரவேண்டும்; என்பதைத் தீர்மானிப்பதில் ஒரு பெரும் பங்குதாரராக இருக்கின்றோம்.

இந்த பெரும் பொறுப்பை ஒரு சமூகமென்ற ரீதியில் எவ்வாறு நிறைவேற்றப்போகின்றோம்? எக்காரணிகளை அடிப்படையாக வைத்து அத்தீர்மானத்தை எடுக்கப்போகின்றோம்?
அல்லது ஒவ்வொருவரும் மனம்போனபோக்கில் எந்தவித சமூகம் சார்ந்த காரணிகளும் இல்லாமல் தீர்மானம் எடுக்கப்போகின்றோமா? இவைகள் இன்று நமக்கு முன்னால் இருக்கின்ற கேள்விகளாகும்.

இன்று நமது நிலை

இன்று நமது நிலை எவ்வாறு இருக்கின்றதென்றால், ஒரு கூட்டம் ஏற்கனவே நாம் மஹிந்த தரப்பு; மஹிந்த யாரை நிறுத்தினாலும் அவருக்கு வாக்களிப்போம்; என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். அந்த வேட்பாளர் இனவாதியா? அடுத்த வேட்பாளர்களுடன் ஒப்பிடும்போது அவர் இனவாதத்தில் அவர்களைவிட குறைந்தவராக இருப்பாரா? கூடியவராக இருப்பாரா? என்பதைப்பற்றி எந்தக்கவலையுமில்லை. அடுத்த வேட்பாளர் யாரென்றும் தெரியாது. ஆனால் மஹிந்த யாரை நிறுத்தினாலும் அவருக்கு ஆதரவளிப்போம்; இது அவர்களது நிலைப்பாடு. இது அறிவுபூர்வமானதா? இவ்வாறான நிலைப்பாட்டை சமூகத்திற்கான நிலைப்பாடு எனக்கூறலாமா?

மட்டுமல்ல, ரணிலின் அரசாங்கத்தின்கீழ் முஸ்லிம்களுக்கு ஒவ்வொரு பாதிப்பு ஏற்படும்போதும் ரணிலை விமர்சிப்பதோடு, மஹிந்தவைத் தோற்கடித்ததுதான் முஸ்லிம்கள் அந்தப்பாதிப்பை சந்திப்பதற்கான காரணம். மஹிந்த வெற்றிபெற்றிருந்தால் அவ்வாறான பாதிப்புக்கள் எதுவும் முஸ்லிம்களுக்கு நிகழ்ந்திருக்காது; என்பதுபோல் அவர்கள் கருத்துக்களைப் பதிவிடுகிறார்கள்.

அவர்களது நோக்கம், முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பாவித்து ரணிலிருக்கெதிரான அதேநேரம் மஹிந்தவுக்கு ஆதரவான ஒரு மனோநிலையை முஸ்லிம்களிடம் ஏற்படுத்துவது. இது ஒரு நேர்மையான நிலைப்பாடா?

முஸ்லிம்களைப் பாதுகாக்க ரணில் அரசாங்கம் தவறுகின்றபோது ரணிலை விமர்சிப்பதில் தவறில்லை. ரணில் பிழை செய்கின்றார்; என்பதற்காக மஹிந்த எவ்வாறு சரியாவார்; என்பதற்கு அவர்களிடம் விடையில்லை. ஒரு கூட்டம் இவ்வாறு அலைகின்றபோது, அடுத்த பக்கம் என்ன நடைபெறுகிறது.

மஹிந்தவின் ஆட்சியில் முஸ்லிம்கள் அனுபவித்த கொடுமை காரணமாகத்தான் ரணில்- மைத்திரி ஆட்சியைக் கொண்டுவந்தோம். நாம் சாதித்ததென்ன? ஏன் சாதிக்க முடியவில்லை. ஆகக்குறைந்தது நமது பாதுகாப்பாவது உறுதிப்படுத்தப்பட்டதா? இனவாதம் கட்டுப்படுத்தப்பட்டதா?

இந்நிலையில் ரணிலை முஸ்லிம் தலைவர்கள் முதற்கொண்டு அனைவரும் விமர்சிக்கிறார்கள். ஆனால் ஐ தே க அமைக்கப்போகும் கூட்டணியில் நம்மவரும் இருப்பதாக, இவர்கள் சொல்லாவிட்டாலும் அவர்கள் சொல்கிறார்கள். இக்கூட்டணி தொடர்பான கட்சித்தலைவர் கூட்டங்களிலும் நம்மவர்கள் கலந்துகொள்கிறார்கள். என்ன அடிப்படையில் அங்கம் வகிக்கப்போகிறார்கள்? எவற்றைக் கேட்டு ஒப்பந்தம் செய்ய இருக்கிறார்கள்? ஒப்பந்தம் செய்யவேண்டியவற்றை அடையாளம் கண்டிருக்கிறார்களா? முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமை பட்டதாக கூறினார்கள்; கூட்டாக சமூகத்திற்காக ஒப்பந்தம் செய்வார்களா? தெரியாது.

மஹிந்த தற்போது எதிர்க்கட்சி. அவருடன் இணைவதாக இருந்தால் ஒரு ஒப்பந்தம் செய்தாக வேண்டும். இவர்களுடன் சேர்வதாக இருந்தாலும் ஓர் ஒப்பந்தம் செய்யவேண்டும்; என்பது அவசியம் என்றபோதிலும் இன்று இவர்கள்தான் ஆட்சியில் இருக்கின்றார்கள். ஏன் அவ்வொப்பந்தத்தில் உள்ளடக்கவேண்டிய பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை.

அவ்வாறு ஆட்சியின்போது தீர்க்காதவர்கள் அடுத்தமுறை ஆட்சிக்கு வந்து தீர்ப்பார்கள்; என்பதற்கு என்ன உத்தரவாதம்? அவ்வாறு உண்மையில் தீர்க்கத்தயார் என்றால் அவர்களது ஆட்சிக்கு இன்னும் சில மாதங்கள் ஆயுள் இருக்கின்றது. ஏன் தீர்க்கமுடியாது? ஆகக்குறைந்தது ஒரு சிலவற்றையாவது தீர்த்துவிட்டு எஞ்சியவற்றை ஒப்பந்தத்தில் உள்வாங்கி அடுத்தமுறை தீர்ப்போம் என்று உத்தரவாதம் அளிக்கலாம். ஆனாலும் அவை ஏன் இப்பொழுது தீர்க்கப்படவில்லை என்பதற்கு வலுவான காரணம் கூறப்படவேண்டும்.

இவை எதுவும் செய்யாமல் ஒரு கண்துடைப்பு ஒப்பந்தத்துடன் வருவார்களா? அவ்வாறு வந்தால் தமது கட்சி சொல்கிறது; என்பதற்காக மக்களும் அதனை ஆதரிப்பார்களா? அவ்வாறாயின் மக்கள் சொந்த மூளையால் சிந்திக்க மாட்டார்கள் என்பது பொருளா? இவ்வாறான பல கேள்விகளை நோக்கி நமது கவனம் செலுத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதில் சிந்திக்கவேண்டிய முக்கிய அம்சங்கள்

சிலர் அடுத்து வரப்போகும் ஜனாதிபதி எதுவித அதிகாரமுமற்றவர்; பிரதமர்தான் அதிகாரமுடையவர்; என்கிறார்கள். அது உண்மையா? அது உண்மையெனில் ஜனாதிபதித் தேர்தல் எதுவித முக்கியத்துவமுமற்றதா? அல்லது இன்னும் கணிசமான அதிகாரத்தைக்கொண்டதா?
அவ்வாறாயின் அவ்வதிகாரங்கள் என்ன?

அவ்வதிகாரங்கள் ஆட்சியில் செலுத்தக்கூடிய சாத்தியமான தாக்கங்கள் எவை? அவை சிறுபான்மை மீது எதிரொலிக்கப்போகும் சாத்தியமான தாக்கங்கள் எவை?

ஜனாதிபதி ஒரு கட்சியிலும் பாராளுமன்றப்பலம் இன்னுமொரு கட்சியிலும் இருந்தால் அவற்றால் ஏற்படப்போகும் விளைவுகள் எவை? அவை தற்போதும் அவ்வாறான சூழ்நிலை நிலவியதால் ஏற்பட்ட தாக்களுக்கு ஒப்பானவையாக இருக்குமா? அல்லது மாறுபட்டவையாக இருக்குமா?

ஜனாதிபதியும் பாராளுமன்றமும் ஒரே பக்கம் இருந்தால் ஆட்சியொழுங்கு எவ்வாறு இருக்கும்? சிறுபான்மை நிலை எவ்வாறு இருக்கும்?

இந்த சூழல் ஐ தே க ஜனாதிபதியும் அதே கட்சி அரசாங்கமும் இருக்கின்றபோதும் மாறாக, பொதுபெரமுன ஜனாதிபதியும் அதே கட்சி ஆட்சியும் இருக்கும்போது ஒரே விதமாக இருப்பதற்கான சாத்தியம் இருக்கின்றதா? அல்லது மாறுபட்ட விதமாக இருப்பதற்கான சாத்தியம் இருக்கின்றதா?

இந்த சாத்தியப்பாடுகள் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுகின்றவரைப் பொறுத்து மாறுபடுமா? அவ்வாறாயின் சாத்தியமான மாறுபாடுகள் எவ்வகையானதாக இருக்கலாம்? சிறுபான்மையின் பார்வையில் அவற்றை எவ்வாறு பார்க்கலாம்?

இவ்வாறு பல கேள்விகளுக்கு நாம் தெளிவாக காணுகின்ற விடைகள் நாம் ஆதரிக்கப்போகும் ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்பதைத் தீர்மானிக்க வேண்டுமே தவிர நமது வெற்று உணர்வுகளோ, விசுவாங்களோ தீர்மானிக்கக்கூடாது. அவ்வாறு தீர்மானிக்குமாயின் நாமாகவே நமது தலையில் நெருப்பை அள்ளிக்கொட்டியது போலாகும்.

எனவே, இவை ஒவ்வொன்றையும் அடுத்தடுத்த பாகங்களில் விரிவாக ஆராய்வோம். இன்ஷாஅல்லாஹ்.

( தொடரும்)

Read more...

வவுனியா பிரதேச செயலகத்தின் முக்கிய ஆவணங்களை தீயிட சதித்திட்டம். சிக்கின ஆதாரங்கள்!

வவுனியா பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளருக்கு எதிராக காணி அபகரிப்பு தொடர்பான பல முறைப்பாடுகள் உள்நாட்டலுவல்கள் அமைச்சரிடம் அனுப்பபட்டிருந்தது.அந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமை அதிரடியாக கொழும்பில் இருந்து களமிறங்கிய விசாரணை பிரிவு இரவு பகலென மூன்று நாள் விசாரணையை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பியுள்ளனர்.

பிரதான முறைப்பாடு வழங்கியவரிடமிருந்து 9 மணித்தியாலத்திற்கு அதிகளவான நேரம் வாக்குமூலத்தை இருவேறு சந்தர்பங்களில் விசாரணை குழு பெற்றிருந்ததது.அது தொடர்பான பல ஆவணங்களும் வவுனியா பிரதேச செயலகத்தில் இருந்து அதிகாரிகளால் கொழும்புக்கு எடுத்து செல்லப்பட்டிருந்தது.

ஆயினும் சாட்சியம் மற்றும் வாக்கு மூலம் வழங்கிய பிரதான முறைப்பாட்டாளரின் வாகனத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதுடன் அவரது வயல் நிலங்களும் எரியூட்டப்பட்டது ஊழல் தொடர்பான முக்கிய விடயங்களை வெளிக்கொண்டு வந்த நபருக்கு இவ்வாறான தாக்குதல் நடாத்தப்பட்ட விடயம் வவுனியா வாழ் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர் உள்ளடங்கலான மூன்று நபர்கள் இரகசியமாக தமது சாட்சியங்களை முன்வைத்தனர்.காணி அபகரிப்புக்கு மேலதிகமாக அதிகாரிகளின் பல்வேறு மோசடிகள் தொடர்பாகவும் இதன் போது சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இருந்தும் சாட்சியங்களை அழிப்பதற்கு பிரதேச செயலாளர் முயல்வதாகவும் திட்டமிட்ட தீ விபத்து ஒன்றினை உருவாக்கி முக்கிய ஆவணங்களை அழிப்பதற்கு இரகசிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் நம்பகமான தகவல்கள் வெளிவந்துள்ளன.


Read more...

Friday, August 2, 2019

சஜித்தை வேட்பாளராக நிறுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிப்பு.

எதிர்வரும் தேர்தலுக்கான ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பில் ஐ.தே.க மற்றும் எதிர்தரப்பான மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு என்பவற்றிடையே உள்முரண்பாடுகள் மென்மேலும் வலுப்பெற்று வருகின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித்தை நியமிக்கவேண்டிய கட்டாத்திற்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை தள்ளப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஒருவர் இலங்கைநெட் க்கு தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் வினவியபோது மேற்கண்ட தகவலை உத்தியோகப்பற்றற்ற முறையில் தெரிவித்த அவர், கட்சியின் உயர்பீடத்திற்கு இவ்விடயத்தில் உடன்பாடு அற்றபோதும், மக்களிடமிருந்து சஜித் பிறேமதாஸ விற்கான வேண்டுதல் காணப்படுவதால் கட்சி கட்டாய நிலைக்கு தள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

மேலும் கட்சியின் உயர் பீடம் கருஜெயசூரியவை விரும்புகின்றபோதும், உள்ளே அவருக்கு எதிர்ப்பு பலமாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான „ஜனநாயக தேசியக் கூட்டணி' என்ற கூட்டணி ஒன்றை அமைத்து எதிர்வரும் தேர்தலை அவர்கள் எதிகொள்ளவுள்ளதாக தெரிவித்த அவர், எதிர்வரும் 5ம் திகதி கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் சக கட்சிகளுடன் செய்துகொள்ளப்படவுள்ளதாகவும் கூறினார்.

Read more...

நாடுகடந்த தமிழீழத்துடன் இணைந்து ஹக்கீம் சமஸ்டி கேட்கின்றாராம். சாடுகின்றார் அதாவுல்லா

இலங்கை ஒரு சிறிய நாடு. இங்கு 9 மாகாணங்களும் சமஸ்டி கோரி நின்றால் இந்த நாடு பாதாளத்திற்கு செல்லும். இதனால்தான் சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் இந்த சமஸ்டியை எதிர்க்கின்றனர். ரவூப் ஹக்கீம் நாடு கடந்த தமிழீழ அமைப்புகள் டயஸ்போரா போன்றோர்களின் ஊதுகுழலாக சமஸ்டியை கோரி செயற்படுகின்றார் எனச் சாடியுள்ளார் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா.

தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை புதிய உறுப்பினராக தெரிவாகிய சப்றாஸ் மன்சூர் கௌரவிப்பு விழா அண்மையில் கல்முனை பிரதான வீதி நகர மண்டபத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக கலந்துகொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தனது உரையில்,

தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. ரவூப் ஹக்கீமே! உங்களுக்கு தமிழ் மணம் தெரியாது. நீங்கள் கண்டியில் பிறந்தவர்.

தமிழர்கள் கல்முனை பிரதேச செயலகம் தான் கேட்கிறார்கள் ஆனால் தமிழ் மக்களுக்கு தேவை பிரதேச சபை அவர்கள் அதைக் கேட்கவில்லை. மஹிந்த ஒரு காலத்தில் ஜனாதிபதியாக வருவார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒரு காலகட்டத்தில் தீர்க்கதரிசனமாக தெரிவித்திருந்தார். அது எப்போது என்றால், இந்தப் பகுதியிலே இருக்கின்ற தொழில்நுட்பக் கல்வி பயிற்சி கல்லூரிகளை மஹிந்த ராஜபக்ஷ அமைச்சராக இருந்து திறந்து வைக்க வந்த போது இவ்வாறு கூறினார்.

அது போன்று எங்களுக்கு என்று ஒரு வெளிநாட்டுக் கொள்கை வேண்டும். மேலை நாட்டவர்களின் குப்பை தொட்டி அல்ல இலங்கை. இலங்கையை தங்களது ஆயுதங்களை விற்பனை செய்வதற்காக பயன்படுத்தியவர்கள் பல நாடுகளை இல்லாமல் செய்தது எனக்கு தெரியும். அந்த நாடுகளின் நிலைமை தற்போது மோசமாக இருக்கின்றது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளை ஒன்றிணைத்து ஒரு வலயமாக மாற்ற வேண்டும்.

இனப் பிரச்சனைக்கான தீர்வுகள் தீர்க்கப்பட வேண்டும். முஸ்லிம் மக்களோ தமிழ் மக்களோ தனியான அலகுகோரி நிற்கவில்லை. இந்த நாட்டில் 75 வீதமான இதர சிங்கள பௌத்த மக்கள் இருக்கிறார்கள். 25 விதமாக சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். ஆகவே 25 வீதமாக இருக்கின்ற சிறுபான்மை மக்களை வாழ வைப்பதற்கான பொறிமுறைகளை உருவாக்க வேண்டும்.

இந்த நாட்டிலே ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தல் வரும் போதும் பாரிய குழப்பங்கள் வருகின்றது. இவற்றிற்கெல்லாம் காரணம் சர்வதேச சக்திகள். இங்கு மீனவர்கள் மீன்பிடி படகுகளை தரித்து நிற்க செய்வதற்கு எம்மிடம் இடம் இல்லை. ஆனால் இலங்கையில் அழகு மிகுந்த பொக்கிஷமான திருகோணமலையை கபளீகரம் செய்ய அமெரிக்கா முனைகிறது.

தமிழர்கள் கல்முனை பிரதேச செயலகம் தான் கேட்கிறார்கள் ஆனால் தமிழ் மக்களுக்கு தேவை பிரதேச சபை அவர்கள் அதைக் கேட்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன், கோடீஸ்வரன், இருக்கின்ற சபையிலே நான் பகிரங்கமாக தெரிவித்தேன், கல்முனையில் நான்கு உள்ளூராட்சி சபை உருவாக்கப்பட வேண்டும் என்று அதனை சம்பந்தன் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள் உயர்பீட உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Read more...

கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டமைக்கான ஆவணம் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கோட்டாபயவிடம் இலங்கை மற்றும் அமெரிக்க குடியுரிமை இருந்தது. மாத்தறை மாவட்டத்தில் 1949 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 20 ஆம் திகதி பிறந்து, இலங்கை குடியுரிமையை கொண்ட கோட்டாபய ராஜபக்ஷவிற்கு, .2003 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி அமெரிக்க குடியுரிமை கிடைக்கப் பெற்றது.

அன்று முதல் சுமார் 16 வருடங்கள் அமெரிக்க குடியுரிமை வைத்திருந்த கோட்டாபய ராஜபக்ஷ, அதனை ரத்து செய்யுமாறு இந்த ஆண்டு ஆரம்பத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.

கோட்டாபய தனது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்வதற்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அமெரிக்காவில் அவருக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டிருந்தன.

அவருக்கு எதிராக அமெரிக்காவில் இருவேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமைக்கு, கோட்டாபய பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்து, லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்க வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அத்துடன், கோட்டாபயவுக்கு எதிராக தமிழ் இளைஞர் ஒருவரும், அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்ததாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவித்திருந்தது.

கனடா பிரஜையான ரோயி சமாதானம் 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொழும்பில் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் சித்திரவத்தைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும், 2010 ஆம் ஆண்டு ஆகட்ஸ் மாதம் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டது.

சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றஞ்சுமத்தியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டிருந்த அறிக்கையில் அன்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அமெரிக்கா - கலிபோனியா நீதிமன்றத்திலேயே இந்த இரண்டு சிவில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய போட்டியிட வேண்டும் என்றால், தனது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்த சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் யஷ்மின் சூகா, அவரை விசாரணையில் சிக்க வைக்கும் இறுதித் தருணம் இதுவெனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

எவ்வாறாயினும், அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்யக்கோரி கோத்தாபய அளித்த விண்ணப்பத்துக்கு அமெரிக்கா கடந்த மே மாதம் 3 ஆம் திகதி அனுமதி வழங்கியதாக அமெரிக்காவுக்கான வெளிநாட்டு குடியுரிமை சேவை திணைக்களத்தின் முத்திரையுடன் அமெரிக்கா இந்த ஆவணத்தை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு குறிப்பிடுகிறது.

இலங்கை அரசியலமைப்புக்கு அமைய தேர்தல் ஒன்றில் போட்டியிடும் ஒருவர் வெளிநாட்டு குடியுரிமையை கொண்டிருக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சில மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படவுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ களமிறங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் பின்னணியிலேயே கோட்டாபய தனது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்ய விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(பிபிசி தமிழ்)




Read more...

பயங்கரவாத நடவடிக்கைகளை கண்காணிக்க ஜப்பான் வழங்கிய வாகனத்தை பயன்படுத்த சிஐடி தடுத்தது. SSP நிஸாந்த

அதிநவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்ட வாகனம் ஒன்றை பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணிப்பதற்கு ஜப்பான் வழங்கியிருந்ததாகவும் அதனை பயன்படுத்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தடைவிதித்ததாகவும் ஈஸ்டர் தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தி பாரா­ளு­மன்­றத்தில் அறிக்கை சமர்ப்­பிக்க நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிக்க வர­வ­ழைக்­கப்­பட்ட பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் (ரி.ஐ.டி) பதில் பணிப்­பாளர் ஜகத் நிசாந்த குறிப்­பிட்டார்.

கேள்வி:- உங்­களின் பதவி என்ன?

பதில்:- எஸ்.எஸ்.பி.

கேள்வி:- ரி.ஐ.டி யினால் முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் குறித்து முதலில் எப்­போது விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன?

பதில்:- 2017 ஆம் ஆண்டு. இதில் சிங்­கள பெளத்த, முஸ்லிம் அடிப்­ப­டை­வாத குழுக்கள் மற்றும் விடு­த­லைப்­பு­லிகள் குறித்து ஆரா­யப்­பட ஆரம்­பிக்­கப்­பட்­டது. நாலக சில்வா மூல­மாக இதில் பிரி­வொன்று உரு­வாக்­கப்­பட்­டது. பங்­க­ளாதேஷ் நாட்டில் ஹோட்டல் ஒன்றில் குண்­டுத்­தாக்­குதல் இடம்­பெற்­றது. இதனை அடுத்து நாமும் கவனம் செலுத்தி இவை குறித்து ஆராய ஆரம்­பித்தோம்.

கேள்வி:- நீங்கள் செய்த விசா­ரணை பிரிவு எப்­போது உரு­வா­கி­யது? அதில் என்.டி.ஜே. அமைப்பை தடுக்க நட­வ­டிக்கை எடுக்க முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டதா?

பதில்:- ஆம், ஐ.எஸ் கொள்­கைகள் பற்­றியும் இலங்­கையில் இருந்த கொள்­கைகள் என்ன என்­பது குறித்­தெல்லாம் ஆராய்வோம். பொலிஸ்மா அதி­ப­ருக்கு தெரி­விப்போம்.

கேள்வி:- என்ன தொழி­நுட்ப வச­தி­களை பெற்­றுக்­கொண்­டீர்கள்?

பதில்:- கணி­னிகள் மற்றும் டொங்கல் போன்­ற­வற்றை பெற்­றுக்­கொண்டோம்.

கேள்வி:- ஏன் இங்கு அவ்­வா­றான ஒரு அமைப்பை உரு­வாக்க வேண்டும் என நினைத்­தீர்கள் ?

பதில்:- பங்­க­ளாதேஷ் தலை நகரில் ஒரு குண்­டுத்­தாக்­குதல் இடம்­பெற்­றது. அதன் பின்னர் எமக்கும் இவ்­வா­றான நிலை­மைகள் உரு­வா­கலாம் என்ற நோக்­கத்தில் அவற்றை தடுக்க இவ்­வாறு தயா­ரானோம். பங்­க­ளாதேஷ் போன்று இலங்­கையில் தாக்­குதல் நடத்­தினால் என்ன நட­வ­டிக்கை எடுப்­பீர்கள், தடுக்க என்ன நட­வ­டிக்கை எடுப்­பீர்கள் என ஜப்பான் அதி­காரி ஒருவர் கேட்டார். இந்த கேள்­வியை நான் நாலக சில்­வா­விடம் கொண்டு சென்றேன். பின்னர் இது குறித்து ஆராய்ந்தோம். பின்னர் இதனை தடுக்க என்ன செய்ய வேண்டும், உங்­க­ளுக்கு என்ன உத­விகள் வேண்டும் என்ற கோரிக்­கை­களை கேட்­டனர். அதன்­போது வாக­னங்கள், கம­ராக்கள், மென்­பொருள் உள்­ளிட்ட பல விட­யங்­களை நாம் கூறினோம். அதற்­க­மைய தான் கண்­கா­ணிப்பு வாகனம் ஒன்றும் வழங்­கப்­பட்­டது. ஜப்பான் நாட்டின் வாகனம் ஒன்று அது. அது மிகவும் உய­ரிய தொழி­நுட்ப வச­தியை கொண்ட கமரா பொருத்­தப்­பட்­டது.

கேள்வி:- சஹ்­ரானின் அரா­ஜ­கங்கள் திகன சம்­பத்­துடன் அது அதி­க­ரித்­ததா?

பதில்:- ஆம், அதனை வாய்ப்­பாக பயன்­ப­டுத்­திக்­கொண்­டனர். ஆத­ரவும் கூடி­யது.

கேள்வி:- இவ்­வ­ளவு தொழி­நுட்ப வச­திகள் தகவல் இருந்தும் சஹ்­ரானை ஏன் கைது­செய்­ய­வில்லை?

பதில்:- பல வழி­களில் நட­வ­டிக்கை எடுத்தோம். சஹ்ரான் குறித்து தக­வல்­களை பல்­வேறு இடங்­களில் தேடினோம். முஸ்லிம் அதி­கா­ரி­களை நிய­மித்தும் தேடினோம். ஆனால் கிடைக்­க­வில்லை

கேள்வி:- என்ன பல­வீ­ன­மாக இருந்­தது? உங்­களின் தொழி­நுட்பம் கைகொ­டுக்­க­வில்­லையா ?

பதில்:- அதனை பயன்­ப­டுத்த முடி­யாது போய்­விட்­டது

கேள்வி:- ஏன் ?

பதில்:- நாலக சில்வா இட­மாற்றம் செய்­யப்­பட்டார். அவர் இல்­லாது சில நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடி­யாது போனது. சில விசா­ர­ணை­களில் இருந்த கார­ணத்­தினால் எம்மால் வாக­னத்தை பயன்­ப­டுத்த முடி­யாது போய்­விட்­டது.

கேள்வி:- ஏன் வாக­னத்தை பயன்­ப­டுத்­த­வில்லை?

பதில்:- நாலக சில்­வா­விற்கு எதி­ரான விசா­ர­ணை­களில் முன்­னெ­டுக்­கப்­பட்ட கார­ணத்­தினால்.

கேள்வி:- அதற்கும் வாக­னத்­திற்கும் என்ன தொடர்பு உள்­ளது?

பதில்:- விசா­ரணை குழு இந்த வாக­னத்தை பயன்­ப­டுத்த முடி­யாது என கூறி­னார்கள்.

கேள்வி:- ஏன்?

பதில் :- அதனை அவர்­க­ளிடம் தான் கேட்க வேண்டும்

கேள்வி:- யார் அவ்­வாறு கூறி­யது?

பதில்:- குற்றப் புல­னாய்வு பிரிவு.

கேள்வி:- நீங்கள் ஏன் சாட்­சி­யங்­களை ஆராய முயற்­சிக்­க­வில்லை.

பதில் :- முயற்­சிகள் எடுத்தோம். குறிப்­பாக முதல் முறைப்­பாடு செய்­த­வரின் வாக்­கு­மூலம் பெற முயற்­சித்தோம்.

கேள்வி:- யார் முதல் முறைப்­பாடு செய்­தது?

பதில் :- காத்­தான்­குடி மௌலவி ஒருவர்.

கேள்வி:- யார் அவர் ?

பதில்:- மௌலவி கே.ஆர்.எம் சஹ்லான்.

கேள்வி:- அவ­ரது வாக்­கு­மூ­லத்தை பதிவு செய்­தீர்­களா?

பதில்:- அவர் எழுத்து மூலம் நாலக சில்­வா­விடம் கொடுத்தார்

கேள்வி:- அவ­ராக கொடுத்­தாரா?

பதில்:- ஆம்

கேள்வி:- வாக்­கு­மூலம் பெற­வில்­லையா?

பதில்:- இல்லை, முறைப்­பாட்டை எழுத்­து­மூலம் கொடுத்த கார­ணத்­தினால்.

கேள்வி:- பின்னர் ஒன்றும் செய்­ய­வில்­லையா?

பதில்:- சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு 6.7.2017 மற்றும் சிறிது காலம் கடந்தும் இரண்டு கடிதம் அனுப்­பினோம்

கேள்வி:- என்ன எதிர்­பார்த்­தீர்கள் ?

பதில்:- தவ்ஹீத் ஜமாத் அமைப்பை தடுக்­கவும் சஹ்­ரானை கைது செய்­யவும் கோரிக்கை விடுத்தோம். இந்தக் காலங்­களில் பல விசா­ர­ணை­களை நடத்­தினோம். அதில் ஒன்­றுதான் சஹ்ரான் குறித்­ததும்.

கேள்வி:- நீங்கள் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு அனுப்­பிய கோப்பில் குறை­பா­டுகள் இருப்­பது தெரி­யுமா?

பதில்:- இருந்­தி­ருக்கும் ஆனால் எனக்கு தெரி­ய­வில்லை, எமக்கு இருக்கும், கிடைக்கும் தக­வல்­களை கொண்டே அனுப்­பினோம்.

கேள்வி:- சட்­டமா அதிபர் திணைக்­கள அதி­கா­ரிகள் கூறும்­போதும் தக­வல்கள் போதாது என்றே கூறி­னார்களா?

பதில்:- எமக்கு கிடைத்த எம்­மிடம் இருந்த தக­வல்­களை கொண்டே நாம் அனுப்­பினோம்

கேள்வி:- சஹ்ரான் முன்­வைத்த கதைகள் குறித்து நீங்கள் பார்த்­தீர்கள் தானே ?

பதில்:- ஆம்.

கேள்வி:- அப்­போதும் அது குறித்து சாட்­சி­யங்­களை தேட­வில்­லையா?

பதில்:- ஆதா­ரங்கள் கிடைக்­க­வில்லை. இணைய கருத்­துக்­களை கொண்டே நாம் ஆதா­ரங்­களை தேடினோம்.

கேள்வி:- என்.டி .ஜே. அமைப்பை தடுத்­தி­ருந்தால் இவ்­வா­றான செயற்­பா­டுகள் இடம்­பெற்­றி­ருக்­காது என்று தெரி­யுமா?

பதில்:- ஆம்.

கேள்வி:- அப்­ப­டி­யென்றால் நீங்கள் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துடன் நெருக்­கத்தை கையாண்­டி­ருக்க வேண்­டும்­தானே ?

பதில்:- எமக்கு அவர்கள் கொடுக்கும் ஆலோ­ச­னை­க­ளுக்கு அமை­யவே நாம் அவர்­க­ளுடன் நெருங்­குவோம் எத்­த­னையோ கோப்­புகள் அனுப்­புவோம் நீண்­ட­காலம் எடுக்கும் பதில் வரு­வ­தற்கு.

கேள்வி:- காரணம் என்ன ?

பதில்:- வேலைப்­பளு அவர்­க­ளுக்கும் உள்ளது,

கேள்வி:- ஆனால் விளைவு மக்களின் மரணமே?

பதில்:- சஹ்ரான் குறித்து நாம் பல காரணிகளை தேடி அவரை நெருங்கினோம். ஆனால் எம்மை விட்டு சூட்சமமாக அவர் தப்பித்துகொண்டார்.

கேள்வி:- இராணுவ தளபதியின் சாட்சியில் அவர் கூற முயற்சிப்பது, இராணுவ புலனாய்வு அதிகாரிகளை கைதுசெய்யும் விடயத்தில் பொலிசாருடன் முரண்பாடுகள் ஏற்பட்டதாக கூறினார்?

பதில்:- இராணுவ புலனாய்வுடன் நாம் நெருக்கமாக இருந்தோம் இன்றும் அவ்வாறே இருக்கின்றோம்.

Read more...

இஸ்லாமிய பயங்கரவாதிகள் தொடர்ந்தும் மறைந்திருந்து செயற்படுகின்றனர். இராணுவத் தளபதி சாட்சி.

சில இஸ்லாமிய பயங்கரவாத சந்தேக நபர்கள் இன்னமும் மறைந்துள்ளனர். அவர்கள் இன்னும் இரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைத்துள்ளன என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் முன்பாக நேற்றுமுன்தினம் இரண்டாவது முறையாக சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

“இந்த அச்சுறுத்தலை இல்லாமல் செய்வதற்கு, ஒரு வாரம், ஆறு மாதங்கள் அல்லது ஆறு ஆண்டுகள் ஆகுமா என்று என்னால் கூற முடியாது.

ஆனால், இந்த அச்சுறுத்தலை ஒரு குறுகிய காலத்திற்குள் தோற்கடிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

நீங்கள் தேசிய பாதுகாப்பை இராணுவத்திடம் மட்டும் ஒப்படைக்க முடியாது, அனைவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. விழிப்புடன் இருக்க வேண்டும்.

அமெரிக்காவின் சிஐஏ, மற்றும் இந்தியாவின் றோ ஆகிய அமைப்புகள் 10 அல்லது 15 ஆண்டுகளை எடுத்துக் கொண்டுள்ளன என்று கூறினீர்கள். எமது நாட்டை எடுத்துக் கொண்டால், மூலோபாய அமைவிடத்தைப் பொறுத்தவரை, மிகவும் முக்கியமானது. இதற்கு எங்களுக்கு அதிக நேரம் எடுக்கும்.

அனைத்து மூலங்களில் இருந்தும் புலனாய்வுத் தகவல்களை பெறுவதற்கும் அதைச் செயலாக்குவதற்கும் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வேண்டும்.

அந்தப் பதவியில் நியமிக்கப்படும், நபருக்கு அவரது அரசியல் கருத்தைப் பொருட்படுத்தாமல், அரசாங்கத்தின் பகுப்பாய்வாளராக செயற்பட அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அவரது கண்டறிவுகள் குறித்து நடவடிக்கை எடுப்பற்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

தீவிரவாத இஸ்லாமிய வலையமைப்பின் பரவல் தொடர்பான தகவல்களை நாங்கள் பெற்றிருந்தோம். அதன் ஆபத்தை நாங்கள் உணர்ந்து மேலதிக புலனாய்வாளர்களை நியமித்து தகவல்களை சேகரித்தோம்.

நாங்கள் அதை செயற்படுத்தி, சரிபார்த்தோம். அதுகுறித்து பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை அனுப்பினோம். தேசிய புலனாய்வு பிரிவு தலைவர், அரச புலனாய்வு சேலையின் பணிப்பாளர், காவல்துறை மா அதிபருக்கும் தகவல்களை வழங்கினோம்.

சாதாரண சட்டத்தின் கீழ் கைது செய்ய எங்களுக்கு அதிகாரம் இல்லாததால் சில கைதுகளை நாங்கள் பரிந்துரைத்தோம். இப்போது, அவசரகால சட்டங்களின் கீழ் எம்மால் கைது செய்ய முடியும். அப்போது, சந்தேக நபர்களை காவல்துறையினர் தான் செய்திருக்க வேண்டும். எங்கள் கண்டறிவுகளை அவர்களுக்குத் தெரிவித்தோம்.

நாங்கள் அந்த வலையமைப்பை அறிந்திருந்ததால், இதுபோன்ற தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதால், தாக்குதல்கள் நடந்த சில மணி நேரங்களிலேயே கைதுகள் இடம்பெற்றன. இன்னும் சில தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

இஸ்லாமிய தீவிரவாத செயற்பாடுகள் குறித்து. உயர் அதிகாரிகளுக்கு நாங்கள் 2017ஆம் ஆண்டில் இருந்து அறிக்கைகளை அனுப்பியிருந்தோம். இதுகுறித்த தகவல்கள் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

அங்கு அதுபற்றிய கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன. ஆனால், அந்தத் தகவலைக் கொண்டு அவர்கள் என்ன செய்தார்கள் என்று என்னால் சொல்ல முடியாது.

அவர்கள் அதை எவ்வாறு செயற்படுத்தினார்கள் அல்லது நாங்கள் அவர்களிடம் பரிந்துரைத்த நபர்களை அவர்கள் ஏன் கைது செய்யவில்லை என்பது எங்களுக்குத் தெரியாது.

பெரும்பாலான நேரங்களில் நாங்கள் சில உண்மைகளை அறிவித்தது மட்டுமல்லாமல், சில பயங்கரவாத சந்தேக நபர்களை கைது செய்யவும் பரிந்துரைத்தோம். ஆனால் அவர்களால் பின்தொடர்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்பது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை.

இராணுவத்துக்கும், அரச புலனாய்வு சேவை பணிப்பாளருக்கும் இடையிலான தொடர்புகள் மிகவும் வழக்கமானதாக உள்ளது. அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளருடன் நெருக்கமாக இணைந்து செயற்படுகிறோம்.

தொலைபேசி மூலம் பேசிக் கொள்வோம். இரகசிய விவகாரங்கள் குறித்து வட்ஸ்அப் வைபரில் பேசுவோம். சந்தித்தும் பேசிக் கொள்வோம்.

இராணுவப் புலனாய்வுத் துறையின் புலனாய்வு எச்சரிக்கைகளை அரச புலனாய்வு சேவை நம்பவில்லை என்று கருதும் படி, இருதரப்புக்கும் அவநம்பிக்கை இருந்தது என்ற கருத்தை நான் கூறியதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ, சாட்சியம் அளித்துள்ளார் என நான் இப்போது தான் அறிகிறேன்.

அந்த அவநம்பிக்கை அரச புலனாய்வுச் சேவையுடன் இருக்கவில்லை. பயங்கரவாத விசாரணைப் பிரிவுடன் தான் பிரச்சினை இருந்தது.

நான் அவரிடம் குறிப்பிட்டது, அரச புலனாய்வுச் சேவையுடன் அல்ல, பயங்கரவாத விசாரணைப் பிரிவுடன் இருந்த அவநம்பிக்கை பற்றித் தான்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவு எங்களுடன் ஒத்துழைக்கவில்லை. போருக்குப் பின்னர், வெடிபொருட்களை மீட்டெடுப்பதற்கும் சில கைதுகளை செய்வதற்கும் பல நடவடிக்கைகள் இருந்தன. அந்த நடவடிக்கைகளின் போது பயங்கரவாத விசாரணைப் பிரிவு எங்களுடன் நன்றாக ஒத்துழைக்கவில்லை.

விசாரணைகள் நீதிமன்றங்களுக்கு முன்பாக இருப்பதால், தனிநபர்கள் குறித்து நான் பெயரிட விரும்பவில்லை. ஆனால் சில வழக்குகள் தொடர்பாக அவநம்பிக்கை இருந்தது.

உதாரணமாக, கிளிநொச்சியில் தற்கொலை அங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து. நாங்கள் விசாரணையைத் தொடங்கியபோது, எங்கள் செயற்பாடுகள் தொடர்பான சிக்கல்கள் இருந்தன.

ஏப்ரல் 21 அன்று காலை அல்லது அதற்கு முந்தைய மாலை தாக்குதல் எச்சரிக்கை எதும் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கவில்லை. இதுபோன்ற தகவல்கள் இருந்திருந்தால், அது எங்களுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. அது தவறு.

இப்போது பாதுகாப்பு அமைச்சும், சட்டம் ஒழுங்கு அமைச்சும் ஒரே அமைச்சாக இருப்பதால், காவல்துறை மற்றும் பாதுகாப்பு பிரிவுகள் இணைந்து செயற்படுவது சுலபமாகியுள்ளது. அனுமதிகளையும் உத்தரவுகளையும் ஒரே இடத்தில் இருந்து பெற்று, அதற்கு அறிக்கை சமர்ப்பிக்க முடிகிறது.

தீவிரவாத சக்திகள் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபைக்கு அறியத் தரப்பட்டும், அதுபற்றி விவாதிக்கப்படவில்லை. அது தான் பிரச்சினை.

அறிக்கைகளின் அடிப்படையில் கைது செய்வதற்கு பாதுகாப்பு செயலர் எமக்கு அறிவுறுத்த வேண்டிய தேவையில்லை. இதுகுறித்த தகவல் வரும் போதும், நடவடிக்கை எடுப்பது இராணுவம் மற்றும் காவல்துறையின் கடமையாகும்.

படைகளின் தலைவர்களாகிய நாம் அந்த முடிவை எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் சட்டத்தின் கட்டமைப்பிற்குள் செயற்படுகிறோம். நாங்கள் தேசிய பாதுகாப்புச் சபையில் பெறும் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உரிமை உள்ளது.

பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் இணைந்து பணியாற்றியுள்ளோம். கடந்த பாதுகாப்பு சபை கூட்டம் மற்றும் புலனாய்வு ஒருங்கிணைப்புக் கூட்டங்களின் போது கூட, நாங்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக பணியாற்றி ஒருங்கிணைத்தோம்.

இது எங்களுக்கும் காவல்துறையினருக்கும் அதிக வாய்ப்புகளைப் பெற்று தந்துள்ளது. நாங்களும் கூட காவல்துறைக்கு பயிற்சி அளித்து வருகிறோம். அச்சுறுத்தல் நிலை குறைந்து விட்டது, ஆனால் நாங்கள் விழிப்புடன் இருக்கிறோம்.” என்றும் அவர் கூறினார்.

Read more...

மனித கடத்தலை தடுக்க தென்கிழக்காசிய நாடுகளுக்கு உதவும் ஆஸ்திரேலியா

மனித கடத்தல் தடுப்பு விவகாரத்தில் தென்கிழக்காசிய நாடுகளுக்கு உதவும் வகையில், பத்தாண்டு திட்டத்திற்கு பங்களிப்பு செய்யும் வகையில் 50 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

தென்கிழக்காசிய நாடுகள் எதிர்கொள்ளும் மனித கடத்தல் அச்சுறுத்தலை சமாளிக்க கடந்த 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா உதவி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் குற்ற வலைப்பின்னலை விசாரிப்பதற்காக காவல்துறை மற்றும் நீதிபதிகளுக்கு பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெறும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான கூட்டமைப்பு சந்திப்பில் இதனை வெளிப்படுத்தியுள்ள ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மேரிஸ் பயனி, “கூட்டு சர்வதேச விசாரணைகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், கடத்தல்காரர்கள் தண்டிக்கப்படவும் இம்முன்னெடுப்பு துணைப்புரியும்,” எனக் கூறியுள்ளார்.

மலேசியா உள்ளிட்ட நாடுகளில் மீன்பிடி மற்றும் கட்டுமானத்துறையில் அதிகரித்திருக்கும் குறைந்த சம்பளத்துக்கான ஆட்களை தேவை தென்கிழக்காசியாவில் மனித கடத்தல் நெருக்கடியை அதிகரித்துள்ளது.

அதே சமயம், மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு தொடர்ந்து வரும் அச்சுறுத்தல் கடல் வழி கடத்தல் சம்பவங்களுக்கு அடிப்படையாக இருந்து வருகிறது. மியான்மர், லாவோஸ், கம்போடியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மலேசியாவுக்கு செல்ல நினைக்கும் ஏழைத்தொழிலாளர்கள் தாய்லாந்து வழியாக கடத்தப்படும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.

இவ்வாறான சூழலில், ஆஸ்திரேலியா அறிவித்துள்ள மனித கடத்தல் தடுப்பு நடவடிக்கைக்கான பத்தாண்டு திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

Read more...

Wednesday, July 31, 2019

றிசார்ட் பதியுத்தீன் பாணியில் காடழித்து காணி அபகரிப்பில் த.தே.கூ பா.உ சாந்தி சிறிஸ்கந்தராசா.

வில்பத்து காடுகளை அழித்து பெரும்சொத்து சேர்த்துள்ளதாக றிசார்ட் பதுயுதீன் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சாந்தி சிறிஸ்கந்தராசாவும் அதே தேசவிரோத செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்விடயம் தொடர்பாக செல்வபுரம், முறிகண்டி பிரதேசத்தை சேர்ந்த சப்தசங்கரி என்பவரால் முல்லைத்தீவு மாவட்ட செயலரிடம் முறையிடப்பட்டுள்ளது. இம்முறைப்பாடு தொடர்பில் மாவட்ட செயலரால் ; சபாநாயகர் அலுவலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் முறைப்பாட்டாளருக்கு அறிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிவரும் நிலையில் விசாரணைகளை அரசு ஆரம்பிக்குமா என முறைப்பாட்டாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எது எவ்வாறாயினும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையை சபாநாயகர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

சாந்தி சிறிஸ்காந்தராசாவினால் 10 ஏக்கர் காடு பா.உ முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் அழிக்கப்பட்டுள்ளதுடன் , பாலி ஆற்றின் ஒரு பகுதியை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் உணர்வுகளை தூண்டி வாக்குகளை அபகரிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பதவிகளை பெற்றுக்கொண்ட பின்னர் சொத்துச் சேர்ப்பதற்காக பல்வேறு வழிகளில் அப்பதவியினை பயன்படுத்தி வருகின்றனர்.

இங்கு குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் முல்லைத்தீவு காணிவிககாரங்களுக்கான அரச உத்தியோகித்தர்களான சேந்தன் , சரவணன் எனும் இருவரும் சாந்தியின் எடுபிடிகள் என்றும் அவர்கள் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டு அவர்களை இடமாற்ற முற்பட்டபோது சாந்தி மற்றும் மாகாண சபை உறுப்பினரான ரவிகரன் ஆகியோர் ஆகியோர் தமது செல்வாக்கினை பயன்படுத்தி இடமாற்றத்தை இரத்துச் செய்துள்ளதாக அறியமுடிகின்றது.

Read more...

Tuesday, July 30, 2019

சிறைச்சாலை புலி நண்பனுக்கு கிளிநொச்சியில் வீடு கட்டிக்கொடுத்தார் நாமல் ராஜபக்ச.

எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் புத்திரன் நாமல் ராஜபக்ச விளக்க மறியலிலிருந்தபோது நண்பனாகிய கிளிநொச்சி கணகாம்பிகைகுளத்தைச் சேர்ந்த முன்னாள் புலி உறுப்பினரான சமரிமுத்து லோகநாதனின் குடும்பத்திற்கு குடிமனை ஒன்றினை அமைத்துக்கொடுத்துள்ளார்.

புலம்பெயர் தேசம் எங்கும் இன்றுவரை வன்னி மக்களின் வாழ்வாதாரத்திற்கு என நிதிசேகரிக்கப்படுகின்ற நிலையில் இன்று(30) காலை 10.30 நாமல் ராஜபக்ச தனது சொந்தச் செலவில் முன்னாள் புலியின் குடும்பத்தினருக்கு வீடு ஒன்றினை புதிதாக அமைத்து பாரமளித்துள்ளார்.

தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள குறித்த முன்னாள் புலி கிளிநொச்சி விஜயம் செய்துள்ள நாமல் ராஜபக்ச கலந்துகொண்ட பல்வேறு சந்திப்புக்களின்போதும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குpளிநொச்சியில் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொண்ட நாமல் ராஜபக்ச விளையாட்டுக்கழகங்களுக்கு உபகரணங்கள் சிலவற்றை வழங்கிவைத்துள்ளார்:

அங்கு ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர் :

தாம் வடக்கின் வசந்தம் திட்டத்தினூடாக வடக்கை கட்டியெழுப்பியதாகவும் தற்போதுள்ள அரசாங்கம் கம்பரெலியவூடாக வடக்கை அழிப்பதாகவும் தெரிவித்துள்ளார்:









Read more...

சஹ்ரானின் மைத்துனர் கைது. தற்கொலைத்தாக்குதலுக்கான பயிற்சி பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானின் உறவினர் ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகமட் அப்துல் காதர் என்பவரே இவ்வாறு கட்டுபொத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபர் சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானுடன் நுவரெலியாவில் ஆயுத பயிற்சி பெற்றவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபர் குறித்து கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Read more...

Monday, July 29, 2019

யாழ் மாநகர மேயரின் மோசடிகள் தகவல் உரிமைச் சட்டத்தினூடாக ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது.

யாழ் மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் மோசடிகள் இடம்பெறுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. இக்குற்றச்சாட்டுக்களை சபை முதல்வர் மற்றும் அவரது சகாக்கள் மறுத்து வந்த நிலையில், கொந்தராத்து முறையான நடைமுறைகளை பின்பற்றாது வழங்கப்பட்டுள்ளமை மற்றும் தேவையான அனுமதி பெறப்படாமை என்பன ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது.

குறித்த மோசடி தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள தகவல் உரிமைச் சட்டத்தினை பயன்படுத்திக்கொண்ட மாநகர சபை உறுப்பினர் பார்த்தீபன் இது தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியில் எந்த அனுமதியும் பெறப்படாமலேயே ஸ்மாட்போல் கம்பங்கள் நாட்டப்பட்டு கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த சபை அமர்வுக்கு முன்னர் முதல்வர் தாங்கள் R.D.A இன் அனுமதியையும் அத்துடன் மிக முக்கியமாக T.R.C யின் அனுமதியுடன் தான் இக் கம்பங்கள் நிறுவப்படுகின்ற என்று தெரிவித்திருந்தார். அத்துடன் அவர் சார்ந்த கட்சியை சேர்ந்த உறுப்பினர் வீதி அபிவிருத்தி அதிகார சபை அனுமதி தந்திருக்கின்றது. இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழு அனுமதி தந்திருக்கின்றது

என்று ஏதோ ஆவணங்கைத் தூக்கி சபையில் காட்டினார். இது நடந்த விடயம்.நானும் அதே போல் அது உண்மைதானா என்று அவ் விடயத்தை அணுகினேன்.

1. வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் தகவல் அறியும் சட்டம் மூலம் இது தொடர்பில் தகவல் ஒன்றினை கோரியிருந்தேன். அதற்கு பதில் அளித்த வீதி அபிவிருத்தி அதிகார சபை யாழ்.மாநகரசபை மற்றும் ஆகியோருக்கிடையான ஒப்பந்தம் மூலம் பொருத்தப்படும் Smart Lamp pole இற்கான அனுமதி எதுவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் பெறப்படவில்லை.

மேலும் R.D.A விற்குரிய வீதிகளில் 2 Smart Lamp pole fs; அனுமதி பெறப்படாமல் நடப்பட்டுள்ளது இது குறித்து யாழ்.மாநகர மேயருக்கும் யாழ்.மாநகர ஆணையாளருக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளோம் என்றுள்ளது. ஆக வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் அனுமதி பெறப்பட வில்லை.

2. மிக முக்கியமான விடயம் முதல்வர் குறித்த ஊடகவியளாளர் சந்திப்பில் இக் கோபுரங்களுக்கு உரிய படி T.R.C அனுமதி பெறப்பட்டுள்ளது அதன்படியே நிறுவுகின்றோம் என்று குறிப்பிட்டார். இதனையே சபையிலும் ஒரு உறுப்பினர் தெரிவித்தார்.

அவர்கள் எதை வைத்துக்கொண்டு தெரிவித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு விடம் தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்டதற்கு இன்று விடை கிடைத்துள்ளது.

இன்று அது அனுப்பியுள்ள கடித்தில் “ As per our records, approval has not been granted for smart lamp poles in Jaffna municipal council area and Edotco services (pvt) Ltd is not a licence Operator” என்று அனுப்பியுள்ளது. அதாவது யாழ்.மாநகர சபை எல்லைக்கு எந்த ஒரு சிமாட் லாம்போல்களை நிறுவுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதுடன் குறித்த நிறுவனம் எந்த வித அனுமதியும் இல்லாத ஒரு சேவை வழங்குனர் என்றும் தெரிவித்துள்ளது.

ஆக இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் தகவலின் படி.. இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் எந்த வித அனுமதியும் இல்லாமல் அதுவும் அனுமதிச்சான்றிதழ் இல்லாத ஒரு வழங்குனருடன் (Edotco services (pvt) Ltd is not a licence Operator)

யாழ்.மாநகர சபை எவ்வாறு ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டு Smart Lamp pole fis யாழ்.மாநகர சபை எல்லைக்குள் நிறுவலாம்? இது ஏற்புடையதா?உரிய அனுமதிகள் ஏன் பெறப்பட வேண்டும் ஏன்என்றால் குறித்த விடயங்கள் மக்களுக்கு தீங்கை விளைவிக்காதவையாக

இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். உரிய அனுமதிகளும் சட்டங்களும் மக்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கே உரியன .இது ஒரு நேர்மையான உண்மையாக மக்களுக்கு நன்மை தரும் திட்டங்கள் என்றால் நிச்சயமாக உரிய அனுமதிகளை

உரிய படி பெற்று உரிய நடைமுறைப்படி ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டு இது நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கும். ஆனால் இது அவ்வாறு செய்யப்பட வில்லை. அனுமதிகள் எதுவும் பெறாமல் செயற்படுத்தப்படுகின்றது.

கம்பரலிய திட்டத்தில் போடப்படுகின்ற வீதிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவின் போது மாலையுடன் தேங்காய் உடைத்து அவ் வீதிக்கான ஆரம்ப வைபவத்தை நடத்துபவர்கள் யாழ். மாநகர சபையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு சாதாரண

குளிர்களி விற்பனை நிலையத்தை ஆரம்பிப்பதற்கு இவ்வளவு பெரிய விழா எடுத்தவர்கள் எங்களுடைய மாநகரத்தை ஸ்மாற் நகரமாக மாற்றுகின்ற இச் செயற்றிட்டதில் ஏன் ஒரு சிறு ஆரம்பர விழாவையும் நடத்தாமல் நள்ளிரவு வேளையில்

யாருக்கும் தெரியாமல் இக் கோபுரங்களை நிறுவுகின்றார்கள் என்ற கேள்வியும் ஏழாமல் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.



Read more...

ஐ.தே.க உடையவே மாட்டாதாம்.. மஹிந்த வின் கட்சியே உடையுமாம்.. கூறுகின்றார் ரணில் விக்கிரமசிங்கே..

“ஜனாதிபதித் தேர்தல் விவகாரத்தால் ராஜபக்ச அணிதான் துண்டுதுண்டாக உடையப் போகின்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எந்தப் பிளவும் ஏற்படாது. அப்படிப் பிளவு ஏற்பட எமது கட்சியின் உயர்பீடம் இடமளிக்கப்போவதும் இல்லை.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி உறுதியாகிவிட்டது. வேட்பாளர் யார் என்ற விபரம் விரைவில் அறிவிக்கப்படும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளிவந்ததும், ஐக்கிய தேசியக் கட்சி மூன்றாகப் பிளவுபடும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். அந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் தோற்பது உறுதி எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் வெல்வது நிச்சயம் எனவும் அவர் மேலும் கூறியிருந்தார்.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எமது கட்சிக்குள் மும்முனைப் போட்டி நிலவில்லை. அதாவது, தேர்தலில் போட்டியிடத் தகுதியான மூவரின் பெயர்களையே எமது கட்சியினர் மும்மொழிந்துள்ளனர். கட்சியின் உயர்பீடமே இது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்கும். அதன்பின்னர் வேட்பாளர் யார் என்ற விபரம் வெளியாகும்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ராஜபக்ச அணிக்குள்தான் முரண்பாடுகள் எழுந்துள்ளன. வேட்பாளரின் பெயரைத் தெரிவு செய்வதில் அந்த அணியினர் திக்குமுக்காடுகின்றனர். ராஜபக்ச குடும்பத்துக்குள்ளேயே மூன்று சகோதரர்கள் நானா, நீயா என்று போட்டி போடுகின்றார்கள். ஆனால், ராஜபக்ச சகோதரர்கள் எவரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க அந்த அணியிலுள்ள பெரும்பாலானவர்கள் விரும்பவில்லை. மீண்டும் குடும்ப ஆட்சியை அந்த அணியிலுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் மட்டுமன்றி நாட்டு மக்களும் விரும்பவில்லை.

ராஜபக்ச அணிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாட்டால் அந்த அணியைச் சேர்ந்த சிலர் எமது கட்சியின் உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.

எனவே, ராஜபக்ச குழுவினர் ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சிப்பதை விட்டுவிட்டு தமது அணிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தும் வழியைப் பார்க்க வேண்டும்.

இந்த நாடு மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்குள் சிக்கிச் சீரழிய மக்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள் – அனுமதிக்கமாட்டார்கள். ஜனநாயகத்தை நேசிக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியைத்தான் நடைபெறவுள்ள அனைத்துத் தேர்தல்களிலும் நாட்டு மக்கள் வெற்றியடையச் செய்வார்கள்” – என்றார்.

Read more...

Sunday, July 28, 2019

சவப்பெட்டி -அரசியல்வாதி கஜேந்திரனின் மாளிகை கட்டுமானப்- பணிகளில் தென்பகுதி சிங்களவர். போட்டுடைக்கிறார் டக்கிளஸ்.

வடக்கில் பணப்பெட்டி அரசியல் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் சவப்பெட்டி அரசியல் செய்யும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்பது போலவே தமிழ் மக்கள் விடயத்தில் நடந்து கொள்கின்றனர் என ஈழமக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ்தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ஸ்ரான்லி வீதியிலுள்ள அவரது கட்சியின் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் தமிழ்க் கட்சிகளை கடுமையாகச் சாடியுள்ளார்.

இதன் பொது அவர் மேலும் தெரிவித்ததாவது..

வடக்கில் சவப்பெட்டி கடை அரசியல் செய்யும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் அங்கம் வகிக்கும் சட்டத்தரணி ஒருவர் ஆட்கடத்தலில் ஈடுபட்டவர். இப்போது பதிக்கப்படவர்களுக்கு வாதாடி வருவதாக கூறி திரிகின்றார் அவர்களின் உண்மை முகங்கள் உரிய நேரங்களில் வெளிக் கொண்டு வரப்படும்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் அங்கம் வகிக்கும் சட்டத்தரணி ஒருவருடன் ஓர் தொலைக் காட்சி நிகழ்வில் கலந்து கொண்டேன். அவர் என்மீதும் எனது கட்சியின் மீதும் பல கொலை, கொள்ளை கடத்தல் குற்றச் சாட்டுக்களை சுமத்தினார். அப்போது நான் அதற்கு உங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றின் ஊடாக சட்ட நடவடிக்கையை எடுங்கள் நாம் அதனை வரவேற்போம் என்றேன்.

எம்மில் யாரவது தவறு செய்திருந்தால் நிச்சயம் தண்டனை வழங்கப்பட வேண்டும். சில குற்றச் சாட்டில் ஈடுபட்ட எனது கட்சியை சேர்ந்த சிலரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளேன். அவர்களில் நீதிமன்ற நடவடிக்கையிலும் உட்படுத்தப்பட்டுள்ளனர். எங்கள் மீது குற்றச் சாட்டுக்களை முன்வைத்த முன்னணியை சேர்ந்த அந்த சட்டத்தரணி ஒரு காலத்தில் ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்.அவ்வாறு ஈடுபட்டமைக்கான சான்றுகள் உள்ளன. அவர்களின் உண்மை முகங்கள் உரிய நேரங்களில் வெளிக்கொண்டு வரப்படும்.

இவ்வாறு கடத்தலில் ஈடுபட்ட சட்டத்தரணி பாதிக்கப்பட்ட ஐயர் குடும்பம் ஒன்றுக்காக தாம் இலவசமாக வாதாடியதாக கூறினார். ஆனால் அவர் 5 இலட்சம் வாங்கி வாதாடியுள்ளார். இவ்வாறு இந்த சவப்பெட்டி கடை கட்சிக் காரரான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் உள்ள சட்டத்தரணிகள் ஏராளமான பணத்தினை கொள்ளைப் பணமாக கறந்து உழைத்து வருகின்றனர்.பின்னர் தேசியம் பேசி மக்களை உசுப்பேத்தி வருகின்றனர்.

மேலும் தென்னிலங்கையை சேர்ந்தவர்களை வடக்கில் வேலைக்கு அமர்த்தும் போது கூக்குரலிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் நல்லூர் பகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டி வரும் தனது பங்களாவின் கட்டுமானத்துக்கு தென்னிலங்கையை சேர்ந்த தொழிலாளர்களையே பயன்படுத்திவருகின்றார் இவர்கள்தானா மக்கள் காவலர்கள்?

வடக்கில் அரச வேலை வாய்ப்பின் போது தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கு நியமனம் வழங்கப்படுகின்றது.இதனை நாம் உட்பட பல தரப்புக்கள் எதிர்த்து வருகின்றோம். ஆனால் தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கு இங்கு தொழில் வாய்ப்பினை வழங்கக்கூடாது என கூக்கிரலிட்டு வரும் சவப்பெட்டி கட்சியின் தலைவர் நல்லூர் பகுதியில் கோடிக்கணக்கான பணத்தினை செலவழித்து பங்களா ஒன்றை கட்டி வருகின்றார்.

அதனை கட்டுவதற்கு இங்குள்ள தொழிலாளர்களுக்கு வாய்ப்பினை வழங்காது தென்னிலங்கையில் இருந்து அதிக பணத்தினை கொடுத்து தொழிலாளர்களை கொண்டு வந்து பங்களா கட்டி வருகின்றார். வடக்கில் உள்ள வேலை அற்றவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்க வேண்டும் என மக்கள் முன்னிலையில் மூச்சு விடாது பேசுபவர்கள் இவ்வாறு நடப்பது சரியானதா?இவர்கள் போலித் தேசிய வாதிகள் இவர்களை மக்கள் இனம்காண வேண்டும்.
இதே வேளை வடகிழக்கில் பணப்பெட்டி அரசியல் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் சுய நலன்களை முன்நிறுத்திச் செயற்பட்டு வருகின்றனர்.

ன்று சொல்லிக் கொண்டு இருக்கின்றார். ஆகவே தேர்தல்கள் வரவிருப்பதால் பாரிய வெடிப்புக்கள் ஏற்படலாம். ஆகவே மக்கள் தான் அவதானமாக இருக்க வேண்டும். மக்களுக்கு பல வாக்குறுதிகளையும் வழங்கி அவற்றை நிறைவேற்றாமல் ஏமாற்றி வந்த கூட்டமைப்பினர் இன்றைக்கு தங்களை அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக கூறுவது வேடிக்கையானது.

வடக்கில் மேற்கொள்ளப்படும் எந்தவnhரு விடயங்கள் தொடர்பிலும் குறிப்பாக பௌத்தமயமாக்கல் சிங்களக் குடியேற்றங்கள். தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் வடக்கில் நியமிக்கப்படுவது குறித்து எந்தவித கருத்தையும் கூட்டமைப்பினர் தெரிவிக்கவில்லை. இவர்கள் படிப்பது தேவாரமாக இருந்தாலும் இடிப்பது சிவன் கோவிலாகவே உள்ளது.

தற்போது அவர்களின் பணப்பெட்டி நிறைவதால் அவர்கள் மக்களைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. ஆனாலும் தேர்தல்கள் வரவுள்ளதால் வீரவசனங்கள் வெற்றுக் கோசங்களை உரத்துச் சொல்லி மக்களை ஏமாற்ற முனைவார்கள். கேவே மக்கள் இவற்றையெல்லாம் புரிந்து கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.

உண்மையில் இங்கு சவப்பெட்டி மற்றும் பணப்பெட்டி அரசியல் செய்கின்ற கூட்டமைப்பு மற்றும் முன்னணி ஆகிய இரு கட்சிகளின் கொள்கை என்ன, திட்டம் என்ன, வழிமுறை என்ன, இவர்களுக்கு வரலாறு இருக்கின்றதா. இவ்வாறு ஏதுமே இல்லாமல் மக்களை உசுப்பேத்தி ஏமாற்று அரசியலையே செய்கின்றனர். இன்றைக்கு தேர்தல் வரவிருப்பதால் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று பதவிகளை பெறுவதே இவர்களுக்கு இருக்கின்ற நோக்கமாக உள்ளது. அதிலும் கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவர்கள் வானத்தில் ஏறி வைகுண்டம் போனதாகவே இவர்களது கருத்தக்களும் செயற்பாடுகளும் அமைகின்றன.
ஆகவே இதனையெல்லாம் மக்கள் புரிந்து கொண்டு செயற்பட வேண்டியது மிக மிக அவசியமானது. எங்களிடம் கொள்கை இருக்கிறது. அதற்கான வழிமுறை இருக்கிறது. நாங்கள் மக்களை ஏமாற்றவில்லை. எங்களால் முடிந்ததைச் செய்து கொடுத்தே வந்திருக்கின்றொம். ஆகவே உண்மையில் மக்கள் எங்களுக்கு ஆதரவைத் தந்து எங்களைப் பலப்படுத்தினால் வடக்கில் தேனும் பாலும் ஓடும். ஆதற்கமைய எமது செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும் என்றார்..

Read more...

ஐக்கிய தேசியக் கட்சி மூன்றாக உடையும் நாள் வெகு தொலைவில் இல்லையாம். கூறுகின்றார் மஹிந்தர்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளிவந்ததும், ஐக்கிய தேசியக் கட்சி மூன்றாகப் பிளவுபடும் என்று தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளிவந்ததும், சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப இயங்குகின்ற ஐக்கிய தேசியக் கட்சி மூன்றாகப் பிளவுபட வாய்ப்புக்கள் மிகமிக அதிகம். ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ, கரு ஜயசூரிய ஆகியோருக்கு ஆதரவானவர்கள் தமக்குள் பிளவுபடுவார்கள்.

சஜித் பிரேமதாஸவை இந்தியாவும், கரு ஜயசூரியவை அமெரிக்காவும் இயக்குகின்றன. புலம்பெயர் புலிகளின் நாடு கடந்த தமிழீழ அரசால் ரணில் இயக்கப்படுகின்றார். எனினும், இறுதிநேரத்தில் சர்வதேச சமூகத்தின் தலையீட்டால் தீர்க்கமான முடிவொன்றுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வரலாம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரும்பினால் எம்முடன் இணையலாம். ஆனால், ஜனாதிபதி வேட்பாளர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சார்ந்தவராகவே இருப்பார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் தோற்பது உறுதி. அதேவேளை, எமது வேட்பாளர் வெல்வது உறுதி.

ராஜபக்ச குடும்பத்தை எவரும் இலகுவாக எடுக்க வேண்டாம். எமது குடும்பத்தில் அனைவரும் ஜனாதிபதி வேட்பாளருக்குத் தகுதியானவர்கள். தேர்தலில் களமிறங்கத் தயாராகவும் உள்ளனர். ஆனால், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்துள்ள சக கட்சிகளின் கருத்துக்களைக் கேட்டே எதிர்வரும் 11ஆம் திகதி எமது கட்சியின் வேட்பாளர் யாரென அறிவிக்கப்படுவார்” – என்றார்.

Read more...

Saturday, July 27, 2019

பிரித்தானிய குப்பைக் கொள்கலன்களின் பின்னணி கண்டறியப்படுமா?

பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து சட்­ட­வி­ரோ­த­மான முறையில் குப்­பைகள் அடங்­கிய கொள்­க­லன்கள் இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்­டுள்ள விவ­காரம் பலத்த சர்ச்­சையைத் தோற்­று­வித்­துள்­ளது. 2017ஆம் ஆண்டு முதல் இவ்­வாறு இலங்­கைக்கு 247 கொள்­க­லன்கள் மூலம் சூழ­லுக்கு தீங்கு விளை­விக்கும் வகை­யி­லான குப்­பைகள் கொண்டு வரப்­பட்­டுள்­ள­தா­கவும் இலங்கை சுங்கத் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

குறித்த கொள்­க­லன்­களில் பெரும்­பாலும் பயன்­ப­டுத்­தப்­பட்ட மெத்­தைகள் காணப்­ப­டு­வ­துடன், மெத்­தை­க­ளுக்குள் மருத்­துவ மற்றும் வேறு வகை­யி­லான கழிவுப் பொருட்கள் மறைத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சுங்கத் திணைக்­க­ளத்தின் அதி­கா­ரிகள் குறிப்­பி­டு­கின்­றனர்.

கொழும்பு துறை­மு­கத்தின் ஊடாக கொண்டு வரப்­பட்ட இந்த குப்­பைகள், கொழும்பு துறை­முகம் மற்றும் கட்­டு­நா­யக்க பகு­தி­யி­லுள்ள தனியார் நிறு­வ­ன­மொன்றின் வளாகம் ஆகி­ய­வற்றில் களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இதே­வேளை இவ்­வாறு இலங்­கைக்குள் கொண்டு வரப்­பட்­டுள்ள அனைத்து குப்­பை­களும் சூழ­லுக்கும், சுகா­தா­ரத்­திற்கும் பெரு­ம­ளவில் தீங்கு விளை­விக்கும் வகை­யி­லான குப்­பைகள் என மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

கட்­டு­நா­யக்க பகு­தி­யி­லுள்ள களஞ்­சி­ய­சா­லை­யொன்றில் 130 கொள்­க­லன்­களில் கொண்டு வரப்­பட்ட 27,685 மெற்றிக் தொன் எடை­யு­டைய குப்­பைகள் 50,000 அடி நீளத்­திற்கு கொட்டி வைக்­கப்­பட்­டுள்­ளன. இதன் மூலம் சூழ­லுக்குப் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­துடன் குறித்த குப்­பை­க­ளினுள் இரத்தம், மனித அவ­ய­வங்கள் உள்­ளிட்ட கழி­வு­களும் காணப்­ப­டு­வதால் இதன் மூலம் பாரிய சுகா­தார ரீதி­யான அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் இவற்­றி­லி­ருந்து வெளி­யா­கவும் கழிவு நீர் முத்­து­ரா­ஜ­வல பாது­காக்­கப்­பட்ட வனத்தைச் சென்­ற­டை­வ­தா­கவும் சுற்றுச் சூழல் வல்­லு­நர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

இதற்­கி­டையில் இலங்­கைக்கு குப்­பை­களைக் கொண்டு வந்த நிறு­வ­னத்­திற்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரி, சூழலை பாது­காக்கும் கேந்­திர நிலை­யத்­தினால் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் மனு­வொன்றும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த குப்­பை­களை நாட்­டிற்குள் கொண்டு வந்த தரப்­பினர் அடை­யாளம் காணப்­பட்டு, அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என அந்த மனுவின் ஊடாக வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.
உண்­மையில் 1980ஆம் ஆண்டு 47ஆம் இலக்க தேசிய சுற்­றாடல் சட்­டத்தின் பிர­காரம், ஏதேனும் பொருட்­களை நாட்­டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றால், மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை­யி­ட­மி­ருந்து சுற்­றாடல் தேசிய பாது­காப்பு அனு­மதி பத்­தி­ரத்தை பெற்றுக் கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எனினும், சுற்­றாடல் அதி­கார சபை­யி­ட­மி­ருந்து இந்த குப்பைக் கொள்­க­லன்­களைக் கொண்டு வந்த குறித்த தனியார் நிறு­வ­னங்கள் எந்­த­வொரு அனு­ம­தி­யையும் பெற்றுக் கொள்­ள­வில்லை என தெரிய வந்­துள்­ளது.

சர்­வ­தேச சட்ட விதி­மு­றை­களை மீறி இந்த குப்­பைகள் நாட்­டிற்­குள்­கொண்டு வரப்­பட்­டுள்­ள­தாக பல்­வேறு தரப்­பி­னரும் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். எனினும் இலங்கை நிதிச் சட்­டத்தில் 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட திருத்­தத்தின் பிர­கா­ரமே இந்த குப்­பைகளை நாட்­டிற்­குள் ­கொண்டு வரு­வ­தற்­கான சந்­தர்ப்பம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் சிலர் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ, நிதி அமைச்சர் என்ற விதத்தில் இந்த வர்த்­த­மானி அறி­வித்­தலில் கையெ­ழுத்­திட்­டுள்­ள­தாக குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது. இந்த வர்த்­த­மானி அறி­வித்­தலை பயன்­ப­டுத்தி மீள் ஏற்­று­மதி மத்­திய நிலையம் என்ற போர்­வையில் இந்த நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இவ்­வாறு இந்தக் குப்பை கொள்­க­லன்­களின் பின்­ன­ணியில் பல மறை­க­ரங்கள் இருப்­பது தற்­போது வெளிச்­சத்­திற்கு வர ஆரம்­பித்­துள்­ளது. பல்­தே­சிய கம்­ப­னி­களின் நலன்­க­ளுக்­காக இவ்­வாறு ஆபத்­தான வெளி­நாட்டுக் குப்­பைகள் இலங்­கைக்குள் தரு­விக்­கப்­ப­டு­கின்­ற­னவா எனும் கேள்­வியும் அச்­சமும் தற்­போது எழுந்­துள்­ளது. புத்­தளம் அரு­வாக்­காலு குப்பை கொட்டும் திட்டம் நிர்­மா­ணிக்­கப்­பட்­ட­தற்கும் இதற்கும் தொடர்­புகள் உள்­ள­னவா எனும் சந்­தே­கமும் எழ ஆரம்­பித்­துள்­ளன.

இலங்­கையில் சேரும் குப்­பை­க­ளையே முறை­யாக நிர்­வ­கிக்கத் திரா­ணி­யற்ற அர­சாங்கம் இவ்­வாறு வெளி­நாட்டுக் குப்­பை­க­ளையும் நாட்­டுக்குள் கொண்­டு­வர அனு­மதி வழங்­கி­யி­ருக்­கு­மாயின் அது மிகவும் துர­திஷ்­ட­வ­ச­மா­ன­தாகும். அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் குப்பைகளைக் கொண்டுவர சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ள அனுமதியும் உடன் இரத்துச் செய்யப்பட வேண்டும். அத்துடன் மத்திய சுற்றாடல் அதிகார சபை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளது போன்று கட்டுநாயக்க ஏற்றுமதி வளாகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள குப்பைகளை, தமது செலவிலேயே ஏற்றுமதி செய்த நாட்டிற்கே மீள் ஏற்றுமதி செய்ய வேண்டியதும் அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.



Read more...

சஹ்ரான் இரண்டு வருடங்களுக்கு மேலாக எமக்கு தண்ணி காட்டினார். எங்களால் முடியாமலே போனது. பயங்கரவாத தடுப்பு பிரிவு

சஹ்­ரானை கைது­செய்ய பல்­வேறு முயற்­சி­களை எடுத்தோம். அவர் பயன்­ப­டுத்­திய தொலை­பேசி இலக்கம் முதற்­கொண்டு சகல விதத்­திலும் தேடினோம். முகப்­புத்­தக கணக்­கினை முடுக்கி அதன் மூல­மாகக் கண்­ட­றி­யவும் முயற்சி எடுத்தோம். சஹ்ரான் எங்கு இருந்தார் என்­பதைக் கண்­ட­றிய முடி­யா­ம­லேயே போய்­விட்­ட­தென பயங்­க­ர­வாத தடுப்புப் பிரிவின் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி தரங்க பத்­தி­ரண பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு முன்­னி­லையில் வழங்­கிய சாட்­சி­யத்தின் போது தெரி­வித்தார்.

ஈஸ்டர் தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்த நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை சாட்­சி­ய­ம­ளிக்க வந்­த­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

சஹ்ரான் என்ற நபர் முகப்­புத்­த­கத்தின் ஊடா­கவே பிர­சா­ரத்தை முன்­கொண்டு சென்றார். 2017ஆம் ஆண்டு ஆரம்­பத்தில் இவ­ரு­டைய இந்த செயற்­பாடு தொடர்பில் அறிந்­து­கொண்டோம். அவ­ரு­டைய சகல செயற்­பா­டு­க­ளையும் நாம் பின்­தொ­டர்ந்து வந்தோம். ஒவ்­வொரு இரண்டு வாரத்­துக்கும் ஒரு­த­டவை தனது முகப்­புத்­த­கத்தில் வீடி­யோவை தர­வேற்­றுவார்.

அனைத்து வீடி­யோவும் ஜன­நா­ய­கத்­துக்கு எதி­ராக இருந்­தது. எமது பிரச்­சி­னையை நாமே தீர்க்­க­வேண்டும், சக­ல­வற்­றையும் பேச்­சு­வார்த்தை மூலம் தீர்க்க முடி­யாது. போராட வேண்டும். மத்­திய கிழக்கு நாடு­களில் உத­வியை நாடத்­தே­வை­யில்லை. எமது பிரச்­சி­னையை தீர்க்க வேண்டும் எனக் கூறி­வ­ருவார். அவ­ரு­டைய வீடி­யோக்­க­ளுக்கு பலர் லைக் போடத் தொடங்­கினர். ஒவ்­வொரு வீடி­யோக்­க­ளையும் நாம் உன்­னிப்­ப­ாக அவ­தா­னிக்கத் தொடங்­கினோம். இந்த வீடி­யோவின் சிங்­கள மொழி­பெ­யர்ப்­புக்கள் அடங்­கிய அறிக்­கை­யொன்றை 2017ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் திகதி சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு அனுப்­பி­வைத்தோம்.

2017ஆம் ஆண்டு காத்­தான்­கு­டியில் இரண்டு குழுக்­க­ளுக்­கி­டையில் மோதல் ஏற்­ப­டு­கி­றது. இதுவே முதன் முறை­யாக சஹ்­ரானின் மோதல் புலப்­ப­டு­கி­றது. இதில் சஹ்­ரானும் அவ­ரு­டைய இரண்­டா­வது சகோ­த­ரரும் தப்பிச் செல்­கின்­றனர். இச்­சம்­ப­வத்தின் பின்னர் சஹ்ரான் தொடர்பில் எந்­த­வி­த­மான மோதல்­களும் முறைப்­பாடு செய்­யப்­ப­ட­வில்லை. இத­னுடன் அவர் ஒளித்­துக்­கொண்டார். அன்­றி­லி­ருந்து 2019ஆம் ஆண்­டு­வரை அவரைத் தேடி விசா­ரணைக் குழுக்­களை தொடர்ச்­சி­யாக அனுப்­பினோம். கல்­முனை பிர­தே­சத்தில் எமது உப­பி­ரி­வொன்று உள்­ளது. சஹ்ரான் பற்றி தொடர்ச்­சி­யாகக் கண்­கா­ணிப்­ப­தற்­காக முஸ்லிம் அதி­காரி ஒரு­வரை நிய­மித்தோம்.

இவரைத் தேடி­வ­ரும்­போதும் சஹ்ரான் இருக்கும் இடத்தை பிடிப்­ப­தற்­காக பல்­வேறு முறை­களை பயன்­ப­டுத்­தினோம். அவ­ரு­டைய தொலை­பேசி இலக்­கங்­களை கண்­டு­பி­டித்து அவற்றை ஆராய்ந்­த­போதும் அவரை கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை. இதன் பின்னர் முகப்­புத்­தக நிறு­வ­னத்­துடன் தொடர்­பு­கொள்ளத் தீர்­மா­னித்தோம். எஸ்.எல்.சேட் நிறு­வ­னத்தின் உத­வி­யுடன் இவ­ரு­டைய முகப்­புத்­தக கணக்கை கண்­கா­ணித்தோம். இவ­ரு­டைய கணக்கை முடக்­கு­வ­தாயின் அவ­ருக்கு எதி­ராக பிடி­யாணை இருக்க வேண்டும் எனக் கூறி­னார்கள். இதற்­காக கொழும்பு மஜிஸ்­திரேட் நீதி­மன்­றத்தில் 2017ஆம் ஆண்டு பிடி­யாணை பெற்றுக் கொண்டோம். 2018ஆம் ஆண்டு ஜுன் 12ஆம் திகதி சட்­டமா அதி­ப­ருக்கு மற்­று­மொரு உப அறிக்­கை­யொன்றை அனுப்­பி­வைத்தோம். அவ­ரு­டைய வீடி­யோக்­களின் உள்­ள­டக்­கங்­க­ளையும் நாம் அந்த அறிக்­கையில் குறிப்­பிட்­டி­ருந்தோம்.

2018-.07.-09 ஆம் ஆண்டு சஹ்­ரா­னுக்கு எதி­ராக பிடி­யாணை பெற்று எஸ்.எல்.சேட் நிறு­வ­னத்­துடன் இணைந்து பேஸ்புக் நிறு­வ­னத்­துக்கு கடி­த­மொன்றை அனுப்­பி­யி­ருந்தோம். குறித்த கணக்கின் ஐ.பி. இலக்கம், சம்­பந்­தப்­பட்ட நபரின் தொலை­பேசி இலக்கம், செயற்­ப­டுத்தும் முக­வரி உள்­ளிட்ட விப­ரங்­களைக் கோரி அக்­க­டி­தத்தை அனுப்­பி­யி­ருந்தோம். 2018-.10.-17 ஆம் திகதி அனுப்­பிய இந்தக் கடி­தத்­துக்கும் எந்­த­வி­த­மான பதிலும் வழங்­கப்­ப­ட­வில்லை. பேஸ்புக் போஸ்ட் பற்றி முறைப்­பாடு செய்­யும்­போது அவர்­க­ளுக்கு விளங்­காமல் இருந்­தி­ருக்­கலாம். இத­னா­லேயே நாம் பிடி­யா­ணையைப் பெற்று அத­னுடன் இணைந்து கடி­தத்தை அனுப்­பி­யி­ருந்தோம்.

அதன் பின்னர் சஹ்­ரானின் வெளி­நாட்டுப் பய­ணங்கள் குறித்தும் ஆராய்ந்தோம். அவர்; 2009.-01.-08 ஆம் திகதி ஹொங்கொங் மாத்­திரம் சென்­றி­ருப்­ப­தாக குடி­வ­ரவு குடி­ய­கல்வுத் திணைக்­களம் எமக்குத் தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. 2018ஆம் ஆண்டில் கெக்­கு­னு­கொல்ல, காத்­தான்­குடி ஆகிய இடங்­க­ளுக்கு அவ்­வப்­போது விசா­ரணைக் குழுக்­களை அனுப்பி அவரைத் தேடு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்தோம். 2007ஆம் ஆண்டே மௌல­வி­யாகி வெளியே வரு­கின்றார். தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற அமைப்பை நலன்­புரி அமைப்­பாக 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதி பதி­வு­செய்தார். அதற்கு முன்னர் அவர் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் உறுப்­பி­ன­ராக செயற்­பட்­டுள்ளார். பின்னர் அதி­லி­ருந்து பிரிந்து வந்தே தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பை ஆர­ம்பித்தார்.

அவ­ரு­டைய அடை­யாள அட்டை இலக்­கத்தைப் பெற்று அவர் ஏதா­வது கைய­டக்­கத்­தொ­லை­பேசி இலக்­கத்தை பெற்­றுள்­ளாரா என்­ப­தையும் ஆராய்ந்து பார்த்தோம். இவர் சிறந்த போத­க­ராக இருந்­துள்ளார். தன்­னு­டைய நிலைப்­பாடு சரி­யா­னது என்­பதை நிரூ­பிக்கும் வகையில் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­துவார்.

2019-.03.-12 மாதம் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தினர் எம்மை அழைத்து நாம் அனுப்­பிய அறிக்­கையில் காணப்­பட்ட குறை­பா­டு­களை சுட்­டிக்­காட்டி அவற்றை சரி­செய்­யு­மாறு கூறி­னார்கள். 2017.-03.-17 காலி­யி­லுள்ள அமைப்­பொன்றின் பிர­தி­நிதி ஒருவர் எம்­மிடம் முறைப்­பா­டொன்றை செய்­தி­ருந்தார். இது­பற்­றியும் சட்­டமா அதி­ப­ருக்கு வழங்­கிய அறிக்­கையில் குறிப்­பிட்­டி­ருந்தோம். இந்த முறைப்­பாட்டின் விப­ரங்கள் போது­மா­னதாக இல்லை. மேல­திக விப­ரங்­களை இணைக்­கு­மாறு சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தினால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. மலீக் அஸீஸ் என்ற அர­சாங்க சட்­டத்­த­ர­ணியே எம்மை அழைத்து இந்த விப­ரத்தைக் கூறி­யி­ருந்தார்.

கேள்வி: முறைப்­பாடு என்ன?

பதில்: சஹ்­ரானின் செயற்­பா­டுகள் குறித்து குறிப்­பி­டு­மாறும் அவர்கள் கூறி­யி­ருந்­தனர்.

கேள்வி: கலந்­து­ரை­யா­ட­லுக்கு அழைத்­த­போது பேஸ்புக் பற்றி ஆலோ­சனை வழங்­க­வில்­லையா?

பதில்: கேட்டோம். சகல விட­யங்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக அறிக்­கையை சரி­செய்து இரண்டு மாதங்­க­ளுக்குள் கொண்­டு­வ­ரு­மாறு கூறி­யி­ருந்­தார்கள். இதனை சமர்ப்­பிப்­ப­தற்கு முன்னர் தாக்­குதல் நடை­பெற்­று­விட்­டது. சஹ்ரான் பற்றி நாம் செய்த விசா­ரணை, பேஸ்புக் வீடியோ உள்­ளிட்ட சகல விட­யங்­க­ளையும் உள்­ள­டக்­கிய அறிக்­கையை சமர்ப்­பிக்­கு­மாறும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தினால் கோரப்­பட்­டது.

கேள்வி: இந்த அறிக்­கையின் ஊடாக தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பை தடை­செய்­யவா எதிர்­பார்த்­தி­ருந்­தீர்கள்?

பதில்: தடை செய்­வது மாத்­தி­ர­மன்றி அடிப்­ப­டை­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக எடுக்கக் கூடிய நட­வ­டிக்­கைகள் பற்­றியே நாம் கோரி­யி­ருந்தோம்.

கேள்வி: குண்டுத் தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­வர்கள் பற்றி முன்­னரே உங்­க­ளுக்குத் தெரி­ய­வந்­தி­ருந்­ததா?

பதில்: சஹ்ரான் பற்­றியும் தெஹி­வளை ட்ரொப்­பிக்கல் இன் விடு­தியில் குண்டை வெடிக்­க­வைத்த நபர் பற்­றி­யுமே தக­வல்கள் கிடைத்­தி­ருந்­தன. தாஜ் சமுத்ரா ஹோட்­டலில் குண்­டு­வைக்க வந்த நபர் அதனை வெடிக்­க­வைக்க முயற்­சித்­துள்ளார். 2019-.04-.12 ஆம் திகதி பேஸ்புக் நிறு­வ­னத்­தினால் சஹ்­ரானின் கணக்கு முடக்­கப்­பட்­டது.

கேள்வி: ஏப்ரல் 10ஆம் திகதி நாட்டில் நடத்­தப்­ப­டக்­கூ­டிய தாக்­கு­தல்கள் தொடர்பில் உங்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­டி­ருந்­ததா?

பதில்: ஆம் எமக்கு முன்­னெச்­ச­ரிக்கை கடிதம் கிடைத்­தது. அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த நபர்­களை கண்­டு­பி­டிப்­ப­தற்கு நாம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தோம். தாக்­குதல் நடத்தப்படுவதற்கு இடையிலான 10 நாட்களுக்குள் ஒரு சிலரைப் பற்றியே அறிந்துகொள்ள முடிந்தது.

கேள்வி: சஹ்ரான் தரப்பினருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். இற்கும் இடையில் காணப்படும் தொடர்பு பற்றி உங்கள் விசாரணைகளில் வெளிப்பட்டதா?

பதில்: அவ­ரு­டைய போத­னைகள் அடங்­கிய வீடி­யோக்­களைப் பார்க்­கும்­போதும் எப்­பொ­ழுதும் இஸ்­லா­மிய இராச்­சி­யத்தை உருவாக்குவது பற்­றியே கூறுவார். இறை­வனால் மாத்­திரம் நிர்­வ­கிக்­கப்­படும் நாட்­டி­லேயே நாம் வாழ­வேண்டும். இலங்­கை­யிலும் அவ்­வா­றா­ன­தொரு இராச்­சி­யத்தை உரு­வாக்கும் நாளி­லேயே தமக்கு வெற்றி கிடைக்கும் எனக் கூறி­யுள்ளார். ஐ.எஸ். அமைப்பின் செயற்­பா­டு­களை நியா­யப்­ப­டுத்­தி­யுள்ளார். நேர­டி­யாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புடன் தொடர்­பி­ருப்­ப­தாக அவர் கூறி­யி­ருந்­தாலும் அது தொடர்பில் எந்தவித தகவல்களும் வெளிப்படவில்லை.

(ஆர்.யசி).

Read more...

ஏன் இந்த பாரபட்சமும் புறக்கணிப்பும்? மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வெளிவாரிப்பட்டதாரிகள்!

வேலைவாய்ப்பு விடயத்தில் அம்பாறை மாவட்ட வெளிவாரி பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மகஜர் ஒன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸடீனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை(26) காலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நற்பிட்டிமுனை பகுதியில் அமைந்துள்ள கல்முனை பிராந்திய அலுவலகத்திற்கு சென்ற அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிய தலைவர் முஹம்மட் ஜெஸீர் மகஜரை கையளித்துள்ளார்.

இதன் போது கருத்து தெரிவித்த ஒன்றிய தலைவர் முஹம்மட் ஜெஸீர் ,

அரசாங்கமானது எமது பட்டதாரிகள் விடயத்தில் பாரிய துரோகத்தை செய்துள்ளது.இந்த அநீதிக்கு நியாயம் கோரி மனித உரிமை ஆணைக்குழுவிற்கு தற்போது மகஜர் ஒன்றினை கையளித்துள்ளோம்.பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை செய்வதாக கூறிய இந்த அரசாங்கம் வேலையற்ற பட்டதாரிகள் விடயத்தில் ஏன் இவ்வாறு நடந்து கொண்டுள்ளது என்பது வேதனை தருகிறது.கடந்த கால அரசாங்கங்கள் 70 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான வேலைவாய்ப்புகளை உள்வாரி வெளிவாரி என்ற பிரிவினை இன்றி வழங்கியுள்ளது.அந்த கால அரசாங்கத்தில் இல்லாத சிக்கல்கள் தற்போதுள்ள அரசாங்க நியமனங்களில் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள எம்மால் முடியாது.இந்த அரசாங்கம் பட்டதாரிகள் விடயத்தில் அலட்சிய போக்கில் நடக்கின்றது என்பது தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது.


பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற பட்டசான்றிதழை உடைய உள்வாரி வெளிவாரி வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகள் கடந்த கால அரசாங்கத்தினால் வேலைவாய்ப்பை பெற்றனர்.எனினும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தில் இன்று இந்த அரசாங்கம் என்ன செய்கின்றது.உள்வாரி பட்டதாரிகளை மாத்திரமே உள்வாங்கி வெளிவாரி பட்டதாரிகளை நிராகரித்துள்ளது.இவ்வாறான வேறுபடுத்தல்களை அரசாங்கம் மேற்கொண்டு எமக்குள் பிளவுகளை ஏற்படுத்த வேண்டாம்.எமது இந்த மகஜர் கையளிக்கப்பட்ட முயற்சி உள்வாரி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க கூடாது என்பதல்ல.எல்லோருக்கும் சமத்துவமாக வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.இந்த வேலைவாய்ப்பு நியமனத்தில் எல்லா பட்டதாரிகளுக்கும் சமவுரிமை உள்ளது.

ஆனால் வெளிவாரி பட்டதாரிகளுக்கு உரிமை மறுக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாகவே மனித உரிமை ஆணைக்குழுவின் உதவியை நாடி வந்துள்ளோம்.இந்த விடயத்தில் மனித உரிமை ஆணைக்குழுவும் உதவும் என்று நம்புகின்றோம்.எமக்கான அநீதியை ஏற்படுத்திய இந்த அரசாங்கத்தின் எதிர்கால இருப்பு தீர்மானிக்கும் சக்தி இந்த பட்டதாரிகள் என்பதை பிரதமர் ஜனாதிபதி விளங்கி கொள்ள வேண்டும்.நிச்சயமாக எமது உரிமை மறுக்கப்பட்டால் எதிர்கால தேர்தலில் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதை சிந்திக்க வேண்டி ஏற்படும்.


சுமார் 65 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகள் நாட்டில் உள்ள நிலையில் அம்பாறையில் 3 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர்.இதில் தற்போது உள்வாரி வேலையற்ற பட்டதாரிகள் 700க்கு குறைவானோரே இந்த வேலைவாய்ப்பில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.வெளிவாரி பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு புறக்கணிக்கப்பட்டவர்களின் குடும்ப நிலை கேள்விக்குறியாக மாறி உள்ளது.வாழ்வாதாரம் மோசமடைந்துள்ளது.35 வயதிற்கு அதிகமானோரும் தற்போது எதுவித வேலைவாய்ப்பும் இன்றி உள்ளனர்.எனவே இந்த அரசாங்கம் இது குறித்து சுமூகமான தீர்வை காண முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேற்குறித்த விடயம் தொடர்பில் 3 நாட்கள் கடந்துள்ள போதிலும் எமது அரசியல் தலைமைகளுக்கு பல்வேறு வழிகளில் சுட்டிக்காட்டி இருந்தோம்.ஆனால் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.இவர்களால் எமது சமூகத்திற்கு எதுவித பிரயோசனமும் இல்லை என்பதே எண்ணத் தோன்றுகின்றது.

புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ள 16 ஆயிரம் பட்டதாரிகளில் தாம் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வெளிவாரிப் பட்டதாரிகள் நாடு பூராகவும் ஊடகங்கள் மூலமாக தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் ஒன்றுகூடி கலந்துரையாடி வருவதுடன் அந்த பகுதிகளில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டையும் பதிவுசெய்து வருகின்றனர்.

நாடு முழுவதும் 16 ஆயிரம் பட்டதாரிகளை உள்வாங்கும் நோக்கில் எதிர்வரும் 29 30ஆம் திகதிகளில் நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் பெயர்ப் பட்டியல்கள் மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ள பட்டியலில் வெளிவாரிப் பட்டப்படிப்பினை பூர்த்திசெய்த எந்தவொரு பட்டதாரிகளும் உள்வாங்கப்படவில்லை என பட்டியல்கள் மூலம் கண்டறியப்படுவதாக சுட்டிக்காட்டுறது.

தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலில் அண்மையில் மாகாண சபைகளில் நியமனம் வழங்கப்பட்ட சிலரின் பெயர்களும் உள்ளடங்குவதாகவும் இதன் காரணமாக புறக்கணிக்கப்பட்ட வெளிவாரிப் பட்டதாரிகள் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதேச செயலகங்களில் நேர்முகத்தேர்வு நடாத்தப்பட்டு அதில் தோற்றிய உள்வாரியான 16000 வேலையில்லா பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கான நடவடிக்கையை இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த பட்டதாரி நியமனத்தில் இலங்கை மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற வெளிவாரிப்பட்டதாரிகள் எவரும் உள்வாங்கப்படவில்லை என்று வெளிவாரி பட்டதாரிகள் கவலையுடன் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.கடந்த அரசில் வழங்கப்பட்ட எந்த நியமானத்திலும் பட்டதாரிகளை உள்வாரி பட்டதாரிகள் வெளிவாரி பட்டதாரிகள் என வேறுபடுத்தாது அனைத்து வேலையில்லா பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்புக்களை வழங்கினர். அதுபோன்று இந்த அரசும் சகல பட்டதாரிகளையும் வேற்றுமையில்லாத முறையில் கணித்து தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


Read more...

Thursday, July 25, 2019

புலனாய்வு தகவல்கள் தொடர்பில் எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை

இதுவரையில் நாட்டின் புலனாய்வு பிரிவு கூட்டங்களுக்கு வருகைதர பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர் லதீப் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரே தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் சில முக்கியமான புலனாய்வு தகவல்கள் தொடர்பில் தனக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலனாய்வு தகவல் தொடர்பிலான கடிதம் கிடைக்கப்பட்ட பின்னர் இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலய அதிகாரி ஒருவருடன் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக விஷேட அதிரடிப்படையினர் இருந்த காரணத்தினாலேயே இந்த நடவடிக்கையை எடுத்தாக அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் உதவியை நாடாத காரணத்தினால் தான் கொழும்பு பிரதான பள்ளிவாசல் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் உதவி வேண்டுமாயின் பொலிஸ் மா அதிபர் அல்லது பிரதி பொலிஸ்மா அதிபர் வேண்டுகோள் விடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Read more...

21/4 தாக்குதலுடன் ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை. Indonesia தொடர்பின் ஊடாக உரிமைகோர கேட்டனர் – சிஐடி பணிப்பாளர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்திய உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதிகள், ஐஎஸ் அமைப்புடன் நேரடியான தொடர்பைக் கொண்டிருக்கவில்லை எனவும் தாக்குதலின் பின்னர் இந்தோனேசியாவிலிருந்த தொடர்பு ஒன்றினூடாக தாக்குதலுக்கான உரிமையை கோருமாறு ஐஎஸ்ஐஎஸ் ஐ கோரியுள்ளனர் எனவும் குற்ற விசாரணைத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு ஆகியவற்றின் பணிப்பாளரான ரவி செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக நேற்று பிற்பகல் சாட்சியம் அளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

'மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று விடுதிகளில் தாக்குதல்களை நடத்திய தற்கொலைக் குண்டுதாரிகளுக்கு வெளிநாட்டு ஜிகாதி குழுவுடன் நேரடித் தொடர்பு இருக்கவில்லை.

இவர்கள் ஐஎஸ் அமைப்பின் சித்தாந்தத்தை பின்பற்றியுள்ளனர். அதனால் கவரப்பட்டுள்ளனர். ஆனால், அந்த அமைப்புடன் தொடர்பில் இருந்தமைக்கான எந்த ஆதாரமும், எமது விசாரணைகளில் கண்டறியப்படவில்லை.

ஐஎஸ் அமைப்புடன் மாத்திரமன்றி எந்தவொரு வெளிநாட்டு ஜிகாதி குழுவுடனும் கூட நேரடித் தொடர்பு இருந்ததாக தெரியவில்லை.

குண்டுதாரிகளுக்கு உள்ளூரிலேயே பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன என்பது விசாரணைகளில் தெரியவந்திருக்கிறது.

வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகளால் வழங்கப்பட்ட எச்சரிக்கைகள் தொடர்பாகவும், சஹ்ரான் காசிம் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தொடர்பாக புலனாய்வுப் பிரிவுகள் கண்டறிந்த தகவல்கள் குறித்தும், அவற்றின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது தொடர்பாகவும் சிறப்பு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.

கிடைத்த புலனாய்வு அறிக்கைகள் தொடர்பாக, குறிப்பாக ஏப்ரல் 21, நடந்த தாக்குதல்கள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயற்பட்ட விதத்தில் தனிப்பட்ட முறையில் எனக்கு திருப்தி இல்லை.

எதிர்பார்க்கப்படும் தாக்குதல்கள் குறித்து பெறப்பட்ட தகவல்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உறுதிப்படுத்தப்படாதவை என்று ஒதுக்கி வைக்கக் கூடாது.

ஏப்ரல் 21ஆம் நாள், தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கும் வகையில் அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் அனுப்பிய குறுந்தகவலை நான் பார்ப்பதற்கு முன்னரே, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் குண்டு வெடித்து விட்டது.' என்றும் அவர் கூறினார்.

சில தகவல்களை ஊடகங்களின் முன்பாக கூற விரும்பவில்லை எனக் கூறிய ரவி செனிவிரத்ன, தெரிவுக்குழு முன்பாக இரகசியமாக சாட்சியம் அளித்தார்.


Read more...

புலனாய்வு உயர் அதிகாரிகள் ஒளிய வேண்டியதில்லை- சிஐடி பணிப்பாளர்

உயர்மட்ட புலனாய்வு அதிகாரிகள் தங்கள் முகங்களை பொதுமக்களிடமிருந்து மறைக்கக் கூடாது என்றும், இரகசிய கள நடவடிக்கைகளில் ஈடுபடும் புலனாய்வாளர்கள் மட்டுமே அவ்வாறு மறைத்துக் கொள்ள வேண்டியிருப்பதாகவும், குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியம் அளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

“களத்தில் இறங்கிச் செயல்படும் புலனாய்வு உறுப்பினர்கள்தான் தம்மை வெளிப்படுத்திக் கொள்வது பற்றி கவலைப்பட வேண்டும்.

தம்மை வெளிப்படுத்திக் கொள்வது குறித்து உயர்மட்ட அதிகாரிகள் கவலைப்படக் கூடாது. இத்தகைய உயர் அதிகாரிகள் கள நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.

அவர்கள் தமது முகங்களை பொதுமக்களிடமிருந்து மறைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

எங்களுக்குத் தெரிந்தவரை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் அல்லது எமது காவலில் உள்ளனர். இந்தப் பிரச்சினை 80 சதவீதம் தீர்ந்து விட்டது.

வாராந்த புலனாய்வு மீளாய்வுக் கூட்டங்களுக்கு குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் அழைக்கப்படுவார். ஏப்ரல் 9ஆம் நாள் நடந்த கூட்டத்துக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

ஈஸ்டர் ஞாயிறு சம்பவங்களுக்குப் பின்னரே, அந்தக் கூட்டத்திற்கு குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் அழைக்கப்படுகிறார்.

தாக்குதல் குறித்து முன்னெச்சரிக்கை செய்யும் வெளிநாட்டுப் புலனாய்வு அறிக்கை எதுவும் எனக்கு கிடைக்கவில்லை.

புத்தளம்- வனாத்தவில்லுவில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களுடன் திசைகாட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அவை தரை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுபவை.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தவிர வேறு பல தாக்குதல்களை நடத்தும் நோக்கமும் அவர்களுக்கு இருந்தது.

புத்தளத்தில் நாம் பெருமளவு வெடிபொருட்களை கைப்பற்றினோம். அவையும் அவர்களிடம் இருந்திருந்தால், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைப் போன்று 30 தொடக்கம் 40 தாக்குதல்களை நடத்தியிருக்க முடியும்.

புத்தளத்தில் கண்டுபிடித்த இடத்தை, அவர்கள் சுடுகலன் பயிற்சிகளுக்கு பயன்படுத்தியிருப்பதை கண்டோம். அங்கு அவர்கள் வெடிபொருட்களை பரிசோதித்துள்ளனர். காட்டுப் போர்முறைக்கான பயிற்சி முகாமாக அதனைப் பயன்படுத்தியுள்ளனர்.

தாக்குதல்கள் தொடர்பான துல்லியமான தகவல்களைப் பெற்றிருந்த போதும், அதனை மூடி வைத்திருந்தது தவறு. அந்த தகவல்கள் எமக்கும் பகிரப்பட்டிருக்க வேண்டும். புலனாய்வு செயல்முறையில் சில தவறுகள் இருந்தன.

தாஜ் சமுத்ரா விடுதியில் சில முக்கிய பிரமுகர்கள் தங்கியிருந்ததால் தான், தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்யவில்லை என்று கூறப்படும் கருத்துடன் நான் இணங்கவில்லை.

தாஜ் சமுத்ரா விடுதியில் பெறப்பட்ட காணொளிப் பதிவை நான்கு முறை பரிசோதித்துள்ளோம். அதில், தற்கொலைக் குண்டுதாரி, குண்டை வெடிக்க வைப்பதற்கு, இரண்டு முறை முயற்சித்தும், அது வெடிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

அதன் பின்னரே அவர், அங்கிருந்து வெளியேறி தெகிவளையில் உள்ள தனது அறைக்குச் சென்று அதனை பொருத்தவோ, தவனை கண்டுபிடிக்கவோ முயற்சித்திருக்கிறார். அப்போதே அந்தக் குண்டு வெடித்துள்ளது” என்றும் அவர் சாட்சியம் அளித்துள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com