Wednesday, July 24, 2019

கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்க கிட்டு முஸ்லிம்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் இதோ!

கல்முனை உப பிரதேச செயலக விடயம் இன்று தமிழ் முஸ்லிம் அரசியல் வங்குரோத்தர்களால் தங்கள்து வாக்குவங்கிகளை நிரப்பும் சாதனமாக கையாளப்பட்டுவருகின்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படமுடியாதது என்ற முஸ்லிம் தரப்பின் அடம்பிடிப்புக்கு பிரதான காரணமாக கூறப்படுவது யாதெனில், கல்முனை பிரதேச செயலகம் இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு முன்னர் ஒன்றாகவே இருந்தது என்றும் இந்திய இராணுவத்தினருடன் இணைந்திருந்த தமிழ் ஆயுதக்குழுக்கள் ஆயுதமுனையிலேயே குறித்த பிரதேச செயலகத்தை பிரித்தனர் என்பதுமாகும்.

பிரதேச செயலக பிரிப்பானது இந்திய அமைதிப்படை நிலைகொண்டிருந்த காலத்தில் தமிழ் ஆயுதக்குழுக்களின் ஆழுகைக்குள் கல்முனை இருந்தபோது, பிரிக்கப்பட்டாலும் அவ்விவகாரத்தில் ஆயுதக்குழுக்கள் நேரடியாக தலையிட்டார்கள் என்ற எவ்வித பதிவுகளும் இல்லை. அத்துடன் அப்பிரிப்பானது அத்தருணத்தில் மக்களின் வரவேற்பினை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பேயை அழிக்க பிசாசுடன் கூட்டுச்சேருவேன் என புலிகளுடன் தேனிலவு கொண்டாடிய பிறேமதாஸ புலிகளை ஏவல்பிசாசுகளாக மாற்றி மாகாண சபை நிர்வாகத்தை சீர்குலைக்க ஏவிவிட்டார். அதன் பின்னணியில் கிழக்கிலங்கையில் முஸ்லிம் கிராமங்களில் ஒழிந்து கொள்வதற்கும் மாகாண சபை நடவடிக்கைகளை முடக்குவதற்குமாக கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரைவார்க்கும் ஒப்பந்தம் ஒன்றை புலிகள் முஸ்லிம் தரப்புடன் செய்து கொண்டனர்.

புலிகளின் தளபதிகளின் ஒருவரான கிட்டு தலைமையில் சென்னையில் 1988 ஏப்ரல் மாதம் 15,16,19 ஆகிய திகதிகளில் இடம்பெற்ற குறித்த பேச்சுவார்த்தைகளின் முடிவில், பதினெட்டு (18) அம்சங்களைக்கொண்ட ஒப்பந்த பத்திரத்தில் 21.04.1988 திகதி புலிகளின் சார்பில் 'கிட்டு' என்று அழைக்கப்பட்ட சதாசிவம் கிருஷ்னகுமாரும், முஸ்லிம்கள் சார்பில் எம்.ஐ.எம். மொஹிதீன் என்பவரும் கையொப்பமிட்டதுடன் கூட்டறிக்கையும் வாசிக்கப்பட்டது.

அந்த உடன்படிக்கையில், 'தமிழீழத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தமிழ் மொழியை பேசினாலும் அவர்கள் வேறுபட்ட தனி இனம் என்றும், வடகிழக்கு மாகாணம் தமிழர்களுக்கு எவ்வாறு பாரம்பரிய தாயகமாக உள்ளதோ, அதேபோல முஸ்லிம்களினதும் பாரம்பரிய தாயகமாகும்.

தாயகத்தில் தமிழர்கள் எவ்வாறு அரசியல் உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவிக்கின்றார்களோ, அதேபோல் முஸ்லிம்களும் அனுபவிக்க முழு உரிமையும் உடையவர்கள்.

முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அவர்கள் அச்சம், பயம், சந்தேகமின்றி வாழ்வதற்கான அனைத்து உத்தரவாதத்தினையும் புலிகள் சட்டரீதியாக உறுதிப்படுத்துவார்கள் என்றும்,

கிழக்கில் 33 வீதமாக இருந்த முஸ்லிம்கள், வடகிழக்கு இணைப்பின் காரணமாக 18 வீதமாக குறைக்கப்பட்டார்கள். அதனால் மாகாணசபையில் 30 வீதத்துக்கு குறையாத பிரதிநித்துவத்தை முஸ்லிம்களுக்கு வழங்குவதுடன், அமைச்சரவையில் இடம் வழங்கப்படுவதற்கும் சட்ட ஏற்பாடுகளை செய்தல்.

அரச காணிப்பங்கீட்டில் கிழக்கில் 35 வீதத்துக்கு குறையாமலும், மன்னார் மாவட்டத்தில் 30 வீதத்துக்கு குறையாமலும், வடமாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் 5 வீதத்துக்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

கல்வியில் சமவாய்ப்புக்கள் பேணப்படுகின்ற அதேநேரம், விகிதாசாரப்படி வேலை வாய்ப்புக்களை வழங்குவதுடன், முஸ்லிம்களுக்காக தனியான இஸ்லாமிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.

வடகிழக்கு மாகாணசபையில் பிரதி முதலமைச்சராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்படும் வகையில் சட்ட ஏற்பாடுகளை செய்தல் என்றும்,

தாயகத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தின் காரணமாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பினை களையும் பொருட்டு ஒரு குடியகல்வு கொள்கையினை உருவாக்குதல்'

போன்ற விடயங்கள் அந்த ஒப்பந்தத்தில் பிரதானமாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்துக்கு பின்பு பல முஸ்லிம் இளைஞ்சர்கள் விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டு ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டார்கள். முஸ்லிம்களின் கிராமங்கள் நகரங்கள் எங்கும் புலிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. முஸ்லிம் கிராமங்களில் பாதுகாப்பாக இருந்தவாறே புலிகள் தமிழினப்படுகொலைகளை அக்காலகட்டத்தில் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 1990 இல் புலிகளுக்கும் பிரேமதாசாவுக்குமான தேனிலவு நிறைவுபெறுவரை புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப்படுகொலைகளுக்கு முஸ்லிம்களின் பூரண ஆதரவு கிடைக்கப்பெற்றது. அதற்கு பிரதியீடாக முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட தமிழ் இளைஞர்கள் மாற்று இயக்க உறுப்பினர்கள் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது பலரும் அறியாத வரலாறு. (குறிப்பாக முஸ்லிம் எதிர்ப்பில் தீவிரம் காட்டிய ஈஎன்டிஎல்எப் ன் முக்கிஸ்தர்கள் இருவர் முஸ்லிம்களின் முக்கிய பிரமுகர்கள் முன்நிலையில் கொல்லப்பட்டதாக அக்காலத்தில் மக்கள் பரவலாக பேசிக்கொண்டனர்)

ஆனால் பிறேமதாஸவுடனான தேன்நிலவுக்காலத்தில் வடக்கில் முஸ்லிம்களுடன் ஒட்டியுறவாடிய புலிகள் தேனிலவு முடிந்தபின்னர் முஸ்லிம்களுக்கும் பிறேமதாஸவிற்குமிடையேயிருந்த உறவு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை உணர்ந்து பிறேமதாஸவை நோகடிக்கும் நோக்கில் யாழ் முஸ்லிம்களையும் விரட்டினர். புலிகளுடன் இணைந்திருந்த பல முஸ்லிம் இளைஞர்களை கொன்று குவித்தனர். இவையாவற்றுக்கும் கிழக்குமாகாணம் விலைகொடுத்தது. முஸ்லிம்களின் வெறியாட்டத்தால் கல்முனை நகரத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக பிணவாடை வீசியது.

தங்களுக்கு அனுகூலம் அல்லாத வடகிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் எவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகளுக்கு போராடுகின்றோம் என்போரையே வைத்து தீர்த்துக்கட்டினார்கள் என்பதையும் அவர்களது அரசியல் சாமர்தியத்தையும் அறிந்து கொள்ளலாம்.




Read more...

Tuesday, July 23, 2019

மீண்டும் ஆஸ்திரேலியா செல்ல முயலும் இலங்கை அகதிகள்: நடுக்கடலில் 20 பேர் கைது

இலங்கையிலிருந்து 20 பேருடன் ஆஸ்திரேலியாவை நோக்கிச் சென்ற படகு ஒன்றை இந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலிய எல்லைப்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இப்படகில் சென்ற 20 தஞ்சக்கோரிக்கையாளர்களும் உடனடியாக கிறிஸ்துமஸ் தீவுக்கு அழைத்து செல்லப்பட்டு தனி விமானம் மூலம் மீண்டும் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

இது போன்ற நாடுகடத்தல் நடவடிக்கைகள் ஆஸ்திரேலிய எல்லைப்படையினால் மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதே சமயம், இன்று அதிகாலை கிறிஸ்துமஸ் தீவு விமான நிலையத்திற்குள் பாதுகாப்புடன் பலர் அழைத்து செல்லப்பட்டதாக தி ஆஸ்திரேலியன் ஊடகம் தெரிவித்திருக்கின்றது. விமான கண்காணிப்பு மென்பொருள் மூலம் தனிவிமானம் ஒன்று கொழும்புக்கு சென்றுள்ளதை வைத்து தஞ்சக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதை அந்த ஊடக உறுதி செய்துள்ளது.

இது போன்ற குறிப்பிட் நாடுகடத்தல்கள் பற்றி ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் கருத்து தெரிவிப்பதில்லை என்றும் ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக வருபவர்கள் எவராக இருந்தாலும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அமைச்சரின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.

2008 முதல் 2013 வரை ஆஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிய வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 50,000 எனப்படுகின்றது. 2009 போர் முடிவிற்குப் பின்னர் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் அகதிகள் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் பயணங்களை மேற்கொண்டு இருக்கின்றனர். இவ்வாறான பயணங்களில் ஆஸ்திரேலிய பகுதியான கிறிஸ்துமஸ் தீவை அடைவதே படகில் செல்பவர்களின் நோக்கமாக இருக்கும். இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள இத்தீவு இலங்கையிலிருந்து சுமார் 3500 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கின்றது. கடந்த காலங்களில் தமிழர்கள் பெருவாரியாக தஞ்சம் கோரும் பயணங்களை மேற்கொண்டிருந்த சூழலில், தற்போது செல்ல முயன்றவர்கள் தமிழர்களா? சிங்களவர்களா? என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

2013 முதல் கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கையை நடைமுறைப்படுத்திய ஆஸ்திரேலிய அரசு, நூற்றுக்கணக்கான இலங்கைத் தமிழ் அகதிகளை கடல் கடந்த தடுப்பு முகாமில் இன்றும் சிறைப்படுத்தியிருக்கிறது. சமீப ஆண்டுகளாக இவ்வாறான படகுப் பயணங்கள் குறைந்திருந்த சூழலில், சமீப நாட்களாக சட்டவிரோதமான ஆஸ்திரேலிய படகு பயணங்கள் மீண்டும் அதிகரித்துள்ளது.

அந்த வகையில், கடந்த மே மாதம் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தேர்தலுக்கு பின் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த இலங்கையர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பின்னர், மீண்டும் ஆபத்தான படகுப் பயணங்கள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்திருக்கின்றது. கடந்த ஏப்ரல் மாதம், இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களும் இதில் தாக்கம் செலுத்தலாம் எனக் கூறப்படுகின்றது.

Read more...

ஜனாதிபதி கோட்டபாய! நிழலா ? நிஜமா?

இலங்கை சனநாயக சோசலிஸ குடியரசின் 7 வது நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ம் திகதி நடாத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

கடந்தகாலங்களில் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களிடையே பெரும்போட்டி இடம்பெற்றுரிந்தபோதிலும் இம்முறை 4 அல்லது 5 முனை போட்டியாக அது அமையவுள்ளது. கடந்த 5 தேர்தல்களை மிகுந்த சவாலுடன் எதிர்கொண்டிருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியை தலைமையாக கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இரண்டாக பிளவுபட்டு மைத்திரிபால சிறிசேன தலைமையிலும், சிறிலங்கா பொது ஜன பெரமுன என்று அறியப்படும் புதிய கட்சி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தலைமையிலான கூட்டணி தேர்தலை சந்திக்க தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாக உணரமுடிகின்றது.

இதேநேரம் ஒரு புதிய அணுகுமுறையுடன் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை அரசியல் யாப்பாக மற்றியமைக்க மக்கள் ஆணையை கோரி நாகானந்த கொடித்துவக்குவும், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான கூட்டணி ஒன்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் பிறிதொருது நேர்தல் கூட்டணியும் களமிறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகானந்தவை தவிர இதுவரை வேட்பாளர்கள் யார் என எவரும் அறிவிக்காத நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் முன்னாள் பாதுகாப்பு செயலர் போட்டியிடவேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் அதன் பெருந்தலைவர் மஹிந்த ராஜபக்ச மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றது. குறிப்பாக பொது எதிரணி என்ற பெயருடன் உருவான அந்த அரசியல் கூட்டிலிருக்கக்கூடிய இடதுசாரிகள் என அறியப்படுவோர் தமது கூட்டணி சார்பில் கோட்டா வேட்பாளராக தெரிவு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிடுகின்ற சமநேரத்தில் விமல்வீரவன்ச , உதய கம்பன்பில , பிரசன்ன ரணதுங்க போன்ற பௌத்த அடிப்படைவாதிகளால் ஆதரவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான உள்வீட்டு ஆதரவு எதிர்ப்புக்களுக்கப்பால் கோட்டபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடுப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியினால் இருவிதமான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒன்று அரசியல்யாப்பின் பிரகாரம் இரட்டை குடியுரிமையை கொண்டுள்ள நபரொருவரால் தேர்தலில் போட்டியிடமுடியாது என்பதற்கிணங்க அவர் அமெரிக்க குடியுரிமையை கைவிட முடியாதவாறு அமெரிக்காவில் இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக தேர்தலுக்கு முன்னர் இலங்கையில் நீதிமன்றினூடாக குற்றவாளியாக்கி சிறையிலடைக்கும் முயற்சி.

இலங்கையில் வழக்குகளை துரிதப்படுத்தி தீர்ப்பினை வழங்கி சிறையிலடைக்கும் முயற்சி தோற்றுப்போயுள்ளதாக சட்டவாளர்கள் தெரிவிக்கின்றனர். தேர்தலுக்கு சுமார் 135 நாட்களே உள்ள நிலையில் சிக்கலான அவ்வழக்குகளை அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடமுடியாது என அவர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரம் அமெரிக்க குடியுரிமை விவகாரத்தை கையாளும் அவரது சட்டத்தரணிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இருந்தபோதும் இலங்கையில் கையெழுத்திடப்படவுள்ள சர்ச்சைக்குரிய சோபா ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திடாவிட்டால் அமெரிக்கா கோத்தாவை நிபந்தனைகளுடன் விடுவித்து தனது காரியத்தை சாதித்துக்கொள்ளும்.

இத்தனை இடியப்பசிக்கல்களுக்கும் அப்பால் நேற்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள கருத்தானது பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அதாவது நேற்றுவரை ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை ஆகஸ்டு மாதம் 11 ம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பேன் என தெரிவித்துவந்த அவர், கோட்டபாய ராஜபக்சதான வேட்பாளர் என „நான் ஒருபோதும் சொல்லவில்லை' என தெரவித்துள்ளார்.

இந்தபின்னணிகளுடன் நேற்று இது விடயமாக மஹிந்த ராஜபக்சவின் விஜயராம இல்லத்தில் இறுதி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அங்கு ஐவரது பெயர்கள் முன்னமொழியப்பட்டுள்ளதுடன் அந்த சாத்தியமான வேட்பாளர்கள் தொடர்பில் எவரும் மூச்சுவிடக்கூடாது எனக் கட்டாய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கோட்டபாயதான் வேட்பாளர் என மஹிந்த ராஜபக்சவால் இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்பது „ஜனாதிபதி கோட்டபாய' நிஜமா ? நிழலா?

Read more...

கருப்பு ஜூலை 01 : ஸ்ரான்லி ராஜன்

1983ல் இதே காலங்களில் கொழும்பு எரிந்துகொண்டிருந்தது, தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லபட்டிருந்தனர், இங்கே முள்ளிவாய்க்காலுக்காகவும், மாவீரர் நாளுக்காகவும் மல்லுகட்டும் இன உணவாளர்கள் எல்லாம் இந்நாளில் மல்லாக்க படுத்தாயிற்று

ஆனால் அந்த கொடூர நிகழ்வு மறக்க முடியாதது, இந்தியா ஈழவிவகாரத்தில் தலையிட இதுதான் காரணம், அந்த தமிழர்களுக்கு இந்த உணர்வாளர்கள் எல்லாம் அஞ்சலி செலுத்த வரமாட்டார்கள். பிரபாகரனுக்காக செத்தவர்கள் அல்லது பிரபாகரன் சொல்லி செத்தவர்கள் தான் இவர்களுக்கு தமிழர்கள்

34 ஆண்டுகளுக்கு முன்னால் கொல்லபட்ட அம்மக்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு நடந்த கொடூரத்தை பார்க்கலாம்

சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே ஏன் அதற்கு முன்பே சிலோன் என அழைக்கபட்ட பிரிட்டிஷ் காலத்திலிருந்தே இலங்கைக்கும் இந்தியாவிற்கும் அவ்வளவு சுமூக உறவு என சொல்லமுடியாது.

ஒரு கட்டத்தில் சிலோனின் தலமையகத்தை சென்னைக்கு பிரிட்டிசார் மாற்றிய பொழுதே, "ஐயகோ இது இந்திய இணைப்பின் முன்னோட்டம்" என வரிந்துகட்டி பிரித்து சென்றவர்கள் இலங்கையர், உபயம் அனாரிகா தர்மபாலா எனும் அவர்களின் புத்தனின் தூதுவன் + யாழ்பாணதமிழர்கள்.

நேருகாலத்தில் 5 லட்சம் இந்தியா வம்சாவழி தமிழரை திரும்ப அனுப்பியதிலிருந்து இலங்கை இந்தியா உரசல் தொடங்கியது, அதாவது இந்திய தரப்பில் முணுமுணுப்பு,இலங்கை தரப்பில் மாபெரும் வெற்றி. யாழ்பாணர் தரப்பில் ஒரு திருப்தி.

படிப்பறிவில்லை,நாகரீகமில்லை பஞ்சம் பிழைக்கவந்த பரதேசி வம்சம் விட்டால் மக்கள்தொகை கூடி வோட்டுவங்கிக்கு வந்து நமக்கு சரிக்கு சரியாக அமர்ந்தால் எப்படி? சீ சீ விரட்டியாயிற்று. நாகரீகம் முக்கியம், கல்வி முக்கியம் தமிழரவாது? தொப்புள்கொடியாவது? வெட்டிவிட்டாயிற்று.

நேரு அப்போது இந்தியபிரதமர், ஆசிய ஓற்றுமை, பஞ்சசீலம் என என்னவெல்லாமோ சொல்லிகொண்டிருந்தார். சீனா பின்மண்டையில் அடிக்கும்வரை அவருக்கு உரைக்கவில்லை, அடிபட்டதும் அப்படியே கோமா நிலை.

அதன்பின் இந்திய தலையீடு இலங்கையில் இல்லை, ஆனால் வாய்ப்பு கம்யூனிஸ்டுகள் வடிவில் வந்தது.

உலகெல்லாம் கம்யூனிசதாக்கம், இலங்கையிலும் வந்தது. கட்சியின் பெயர் சிங்களத்தில் ஜனதா விக்தி பிரமுணா சுருக்கமாக ஜேவிபி , தமிழில் மக்கள் விடுதலை கட்சி. கட்சி 1971ல் திடீர் புரட்சி செய்து கொழும்பை முடக்கியது. பெயருக்கு ஒரு ராணுவம் இருந்த இலங்கை கையை பிசைந்து நின்றது, உலகநாடுகளுக்கு உதவிகரம் கேட்டது.

இந்தியபடைகள் அனுப்பபட்டன, முதல் முறையாக இந்தியராணுவம் இலங்கைக்குள் கால்பதித்து, கிளர்ச்சியை அடக்கி மறுபடியும் பண்டாரநாயகாவினை ஆட்சியாளராக்கிவிட்டு திரும்பியது, எந்த இலங்கையரும் அப்போது அதனை ஆக்கிரமிப்புபடை அல்லது கற்பழிப்புபடை என சொல்லவே இல்லை.

கலவரம் ஓய்ந்ததும் வாழ்த்தி அனுப்பினர் இந்தியபடைகளை. இந்தியா நேரடியாக இலங்கையில் தலையிட்ட முதல் நடவடிக்கை இதுதான், ஆனாலும் அந்த கிளர்ச்சி அடக்குவதில் பாகிஸ்தானும் படைகளை அனுப்பியிருந்ததால் லங்கா பாகிஸ்தான் உறவும் வலுத்தது.

சிங்களம் பாகிஸ்தானுடனேதான் உறவாடியாது. இந்தியா கச்சதீவை கொடுத்து வேறுமாதிரி உறவினை வளர்க்க நினைத்த காலமிது.

அதன் பின் இலங்கையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விகிதாசார முறை அறிமுகம்செய்யப்பட்டது. ( அதேதான் நமது ஊரில் தாழ்த்தபட்ட மாணவனுக்கும் பிராமண மாணவனுக்கும் இட ஒதுக்கீடு உண்டல்லவா? அப்படித்தான் புரியவில்லை என்றால் தமிழக வேலை வாய்ப்பினினை, கல்லூரி அட்மிசனை சென்றுபார்க்கவும்) தமிழ் மாணவர்கள் போராட கிளம்பினர்.

அதுவரை சாத்வீகமாக நடந்த எதிர்ப்புகள் அதன்பின் வன்முறையாக மாறின, அதனை ஈழதமிழ் அரசியல்வாதிகளும் பயன்படுத்திகொள்ள அதுபெருநெருப்பாக வளர்ந்தது.

போராளிகுழுக்கள் தோன்றின, 30க்கும் மேற்பட்ட குழுக்கள் தொடக்கத்தில் இருந்தது. போராளிகள் என்றால் பகலில் ஒழுங்காக வேலைக்கு சென்றுவிட்டு வார இறுதியிலோ அல்லது நள்ளிரவிலோ போராடமுடியாது. அவர்களுக்கு பணம் வேண்டும், ஆயுதம் வாங்க, பதுக்க, உண்ண, உறங்க, அறிக்கை விட, பேப்பர்வாங்க என ஏராளமான‌ பணம்வேண்டும்.

அதற்காக அரசுவங்கிகளை குறிவைத்தார்கள். அக்கால வசதியான பகுதி யாழ்பாண பகுதி, வங்கிகள் எல்லாம் கொள்ளைஅடிக்கபட்டன, அரசு கருவூலம் கொள்ளையடிக்கபட்டது இன்னும் ஏராளம்.

அடகுகடைகளும் தப்பவில்லை. இதில் பெரியகொடுமை என்னவென்றால் திருடர்களும் தாதாக்களும் திடீர்போராளிகளாகி கொள்ளையடித்துவிட்டு, அப்பணத்தில் பென்ஸ்காரில் போய்கொண்டிருந்தார்கள்.

அன்று வெள்ளையர் விட்டுசென்ற ஆட்சிமுறைபடி சிங்களர்பகுதியில் தமிழ் போலிசாரும், தமிழ்பகுதியில் சிங்களபோலிசாரும் அதிகம். வங்கிகொள்ளை என்றால் போலீஸ்தானே காவலுக்கு வரும். போராளிகளின் அடுத்தகுறி காவல்நிலையம் மீது திரும்பிற்று, சிங்கள போலிசார் பலியாக ஆரம்பித்தனர். இது சிங்களர் அதிகம்வாழும் பகுதிகளில் ஆத்திரத்தை கிளப்பிற்று, கொஞ்சம் கொஞ்சமாக பதற்றம் கூடிற்று.

ஆனால் போராளிகளோ காவல்துறையினர கிட்டதட்ட முடக்கும் நிலைக்கு வந்தாயிற்று. போலீஸ் என்றால் எத்தனை திருடர்களுக்கு, கடத்தல்காரர், சாராயவியாபாரிகளுக்கு கசக்கும், அவர்களும் போலீசாரை தீர்த்துகட்டிவிட்டு நாங்கள் போராளி என சொல்லிகொண்டனர்.

போலீஸ் முடியாவிட்டால் ராணுவம்தான் வரும், வந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ராணுவம் மேல் தாக்குதல் நடந்தது. ஒன்றும் உருப்படியில்லை.

கண்ணிவெடி ராணுவத்திற்கு வைத்தால் செம்மறிஆட்டு கூட்டம் சிதறும், என்னசெய்ய உப்புகண்டம் போடவேண்டியதுதான்.

இந்நிலையில் புலிகள் அமைப்பு பெரும் தாக்குதலுக்கு திட்டமிட்டது, பெரும் மிரட்டல் அதிகாரி பஸ்தியாம்பிள்ளை கொலைவழக்கில் தப்பிசென்ற செல்லகிளி பம்பாயிலிருந்து யாழ்பாணம் திரும்பியிருந்தார், அவர்தான் தாக்குதலுக்கு தலமை பொறுப்பு.

கொழும்பில் அமைச்சர்கள், சிங்கள ரவுடிகள் எல்லாம் ஒரு கூட்டம்போட்டு முடிவெடுத்தனர். அதாவது இனி வடக்கில் சிங்கள் மீது தாக்குதல் நடந்தால் கொழும்பிலும் தென்னிலங்கையிலும் பெரும் தாக்குதலை நடத்தவேண்டும், அது தமிழரின் வாழ்வில் மறக்கமுடியாத அடியாக அமையவேண்டும். ஆனால் முந்தகூடாது ஆனால் வாய்ப்பு வரும்பொழுது விடவும்கூடாது.

அப்படி அடிக்காவிட்டால் சிங்கள மக்களின் அபிமானத்தை இழந்துவிடுவோம், பெரும்பான்மை இனம் சிறுபான்மையினரிடம் அடிவாங்கினால் அது தற்கொலைக்கு சமம் அல்லவா? என்றெல்லாம் வெறியேற்றிகொண்டார்கள்.

இருபக்கமும் அடிப்பதில் தீர்மானமானமானர்கள், புலிகளுக்கோ ஏராளமான ராணுவத்தினரை கொன்று கவனத்தை திருப்பும் நோக்கம். சிங்களருக்கோ கொழும்புவாழ் தமிழரை மொத்தமாக கொல்லும் பயங்கரதிட்டம், காரணம் போலீஸ் பிணங்களாக சிங்களபகுதிக்கு வந்துகொண்டிருந்தன.

போராளிகுழுக்களில் ஒன்றான டெலோ அமைப்போ வெலிக்கடை சிறையில் இருந்த குட்டிமணி குழுவை எப்படி தப்பவைப்பது என திட்டமிட்டு மேப் வரைந்துகொண்டிருந்தது.

தமிழகத்திலோ ஈழ அரசியல் அப்போது அறவே இல்லை, கச்சதீவு பிரச்சினை இல்லை. எம்.ஜி.ஆர் முதல்வர், கலைஞர் எதிர்கட்சி. காங்கிரஸ் இந்திரா புண்ணியத்தில் உயிரோடு இருந்தது. கலைஞரும் எம்ஜிஆரும் அறிக்கையில் மோதுவார்கள், மக்கள் பார்த்துகொண்டு எம்ஜிஆருக்கு வோட்டளிப்பார்கள், கருணாநிதி கடுப்பில் "தமிழன் சோற்றுபாணை", "பிண்டம்" என முரசொலியில் தீட்டிகொண்டிருப்பார்.

மொத்த இந்தியகவனமும் பஞ்சாபில் இருந்தது, பிந்திரன்வாலே குழு அப்படி அட்டகாசம் செய்துகொண்டிருந்தது.

இந்திராகாந்திக்கோ இலங்கைமேல் திரிகோணமலை விவகாரம் தொடர்பாக கடுப்பு இருந்தது, வாய்ப்பு கிடைத்தால் ஆட்டம் ஆட தயாராக இருந்தார்.

புலிகள் தாக்குதலுக்கு நாள்குறித்தனர் ஜீலை 23 என முடிவெடுத்தனர் (தயாராக பாறைகளை உடைக்கும் வெடிமருந்தை சிங்கள சிமெண்ட் ஆலையிலிருந்து கடத்தினர்). தலமை செல்லகிளி, கிட்டு, மாத்தையா, விக்டர், பிரபாகரன் என ஆரம்பகால புலிகளின் டீம் களத்தில் இறங்கியது.

ராணுவதாக்குதலில் நேரடியாக பிரபாகரன் பங்கெடுத்த ஒரே தாக்குதல் இதுமட்டுமே. பின்னாளில் திட்டம் மட்டும் அவருடையது, யாராவது தளபதிகள் திறமையாக தாக்குவார்கள்.

யாழ்பாணம் திருநெல்வேலி சந்திப்பில் டெலிபோன் டிபார்ட்மெண்ட் வெட்டிவைத்த குழியில் கன்னிவெடி வைத்து காத்திருந்தார்கள். இரவில் இரு ராணுவ வாகனங்கள் ரோந்துவந்தன, எல்லா புலிகளும் பொசிஷனில் தயாராக இருந்தார்கள், கையில் இருந்த விசையை ( நமது ஊரில் கிணறுதோண்ட வெடி வைப்பார்கள் அல்லவா? அதே கருவி) செல்லகிளி இயக்க முதல்வாகனம் தப்பி இரண்டாம் வாகனம் சிக்கியது.

குறிவைத்தது முதல்வாகனத்திற்கு, சிக்கியதோ இரண்டாம் வாகனம், ராணுவத்தார் சுதாரிப்பதற்குள் புலிகள் தாக்கினர், 13 பேர் பலி இருவர் ஓடிவிட்டனர்.

(ஆச்சரியமாக ராணுவம் எதிர்தாக்குதல் நடத்தா நிலையிலும் செல்லகிளி குண்டுபாய்ந்து இறந்திருந்தார். எப்படி சாத்தியமானது என இன்றுவரை தெரியவில்லை. பெரும் மர்மம் அவர் சாவு, ஆனால் பிரபாகரன் தனது ஒரு உரையில் கூட தைரியம் மிக்க இவரைபற்றியோ அவரது மர்ம மரணம் பற்றியோ சொல்லாதது கூடுதல் மர்மம். இவரது சடலமும் மிக அவசரமாக எரியூட்டபட்டது, மாவீரர் கல்லறை எல்லாம் இவருக்கு இல்லை, ஏன் என்று கேட்டால் கேட்டவர் "இனதுரோகி" ஆகிவிடுவார்.)

வாய்பினை எதிர்பார்த்திருந்த சிங்கள குழு நெட்டிமுறித்து கிளம்பினர், சும்மா அல்ல 13 பேர் உடலும் ரத்தம் வடிய வடிய மேலும் சிதைக்கபட்டு மக்களின் பார்வைக்கு வைத்தனர், இன்னும் சிங்கள் உடல்கள் வருவதாக பிரச்சாரமும் நடந்தது, ஜெயவர்த்தனே சிக்னல் கொடுத்துவிட்டு அமைதியானர், சிங்கள வெறிகூட்டம் கிளம்பிற்று

உலகின் அனைத்து தெய்வங்களும் கண்களை மூடிகொள்ள, அந்த பயங்கரம் தொடங்கியது, யூதர்களுக்கு நாசிகள் செய்ததற்கும், பிரிவினை காலத்தில் இந்திய எல்லையில் நடந்த ரத்தகளறிக்கும் கொஞ்சமும் குறையில்லா கொடுமை அங்கு தொடங்கிற்று.

இலங்கை தமிழருக்கு கருப்பு நாட்கள் அவை. அந்த கருப்பு ஜூலை நெருப்பாய் எரிய ஆரம்பித்தது.

அந்த கலவரம் பெரும் கொடியவன்முறை, நாட்டின் குடிமக்களை அரசே கொன்றுகுவித்த பயங்கரம். அதுதான் உண்மையில் "இனபடுகொலை", நடந்த கொடூரங்கள் அப்படி.

தமிழர்களின் வீடுகள், அரசின் வாக்காளர் அடையாள பட்டியலின் நகலாக எல்லா ரவுடிகளின் கையிலும் கொடுக்கபட்டது, பெட்ரோல்கள் ரகசிய இடங்களில் சேமிக்கபட்டது. பாதாள உலக குண்டர் தலைவர்கள் எல்லாம் சிங்கள அமைச்சர்களோடு பேசிகொண்டே இருந்தார்கள்.

அதாவது கொஞ்சகாலமாகவே முன் தயாரிப்புகள் மிக கடுமையாக நடத்தபட்டிருந்தது. முதல் ஆயுதபோராளியான குட்டிமணிகுழு சிறையில் இருந்தது, அவர்களையும் கும்பல் மனதில் வைத்திருந்தது.

ஜூலை 23 அன்று, கிட்டதட்ட 50 வருடங்களாக அனாரிகா தர்மபால ஊட்டிய அந்த ஈழதமிழர் வெறுப்பு, அன்று மொத்தமாக கொழும்பில் தீயாக இறங்கியது. பாதிக்கபடாத தமிழர் இல்லை. எரியாத தமிழர் சொத்துக்கள் இல்லை.

தமிழர் எரிந்துகொண்டிருக்கும் பொழுது வழியில் சென்ற சிங்கள்ருக்கு எல்லாம், தமிழரின் பணமும், நகையும் அள்ளிகொடுக்கபட்டன. அந்த உற்சாகத்தில் அவர்கள் 2 லிட்டர் பெட்ரோலை கூடுதலாக ஊற்றிவிட்டு சென்றார்கள்.

வெலிக்கட சிறையில் குட்டிமணி குழு கொடூரமாக சிதைக்கபட்டு கொல்லபட்டது, இன்னும் ஏராள படுகொலைகள். இந்திய தூதரே கொழும்பில் அபூர்வமாக உயிர்தப்பிய பின் சொல்வதற்கு என்ன இருக்கின்றது?
ஆயினும் ஏராளமான சிங்கள மக்கள் அப்பாவி தமிழர்களை தங்கள் வீடுகளில் வைத்து காப்பாறியதையும் மறக்கமுடியாது, உண்மையான பவுத்தர்கள்.

கிட்டதட்ட 10,000 தமிழர்களுக்கு மேல் இறந்திருக்கலாம், ஆனால் அவர்களின் சொத்துக்கள் முழுமையாக அழிக்கபட்டன, தமிழ்பெண்களின் நிலை, இரண்டாம் உலகபோரில் சீனபெண்களின் நிலையில் இருந்தது.

உலகம் கொந்தளித்தது, ஜெயவர்த்தனே அமைதியாக சொன்னார் "புலிகள் வடக்கில் எமது மக்களை கொன்றதன் சிங்கள எழுச்சி இது, அரசு என்ன செய்யமுடியும்?"

உண்மையில் ஜெயவர்த்தனேவும் கைதியாக்கபட்டுதான் இருந்தார், காரணம் அரசியல், அடுத்த சிங்களமக்களின் நம்பிக்கையை பெறுவது யார்? எனும் இரண்டாம் தலைவர்களின் அரசியல் விளையாட்டு.

மனிதாபிமான அடிப்படையில் இந்தியா களமிறங்கியது, களமிறக்கபட்டவர் அந்நாளைய வெளியுறவுதுறை அமைச்சர் நரசிம்மராவ். ஆனாலும் கிட்டதட்ட அவமானபடுத்தபட்ட நிலையில் திரும்பினார். கொழும்பு எரிவதை நேரில் கண்டவர் அவர், காரணம் கலவரம் 1 வாரம் நீடித்தது.

இனி அழிக்க ஒன்றுமில்லை என்பதால் கொழும்பில் கலவரம் ஒய்ந்தது அல்லது கொன்று கொன்று சிங்களர் களைத்துவிட்டார்கள், ஆனாலும் பின்னர் உயிர்தப்பிய தமிழர்களை வடக்கே அனுப்ப அரசு தயாரானாது.

நரசிம்மராவிற்கு நடந்த அவமானத்தை, தனக்கே நடந்ததாக பொறுமினார் இந்திரா, விளைவு போராளிகளுக்கு பயிற்சிகள் இந்தியாவில் பயிற்சிகொடுக்க உத்தரவிட்டார்.

இந்தியா இலங்கையில் நுழைய ஆரம்பித்த தருணமிது, ஒருபடிமேலே சென்று "இனியும் தமிழருக்கு எதிரான‌ தாக்குதல்களை இந்தியா பொறுக்காது" என மிரட்டியவர் இந்திரா, அதன்பின் கலவரங்களை நடத்த சிங்களம் அஞ்சியது.

போராளிகளுக்கு இந்திய பயிற்சியும், புலிகளின் முணுமுணுப்பும் ஆனாலும் இந்திரா காலம்வரை அவர்கள் அமைதியும் ரகசியம் அல்ல. அதன்பின் இந்திரா மிரட்டிய மிரட்டலில் அவர்காலம் வரை எந்த கலவரமும் இல்லை

ஆனால் இந்திரா அகாலமரணமடைந்தபின் பெருமூச்சுவிட்ட ஜெயவர்த்தனே, ஆட்டத்தை மாற்றினார், இம்முறை கொழும்பு அல்ல வடமராட்சி.

புலிகளை ஒடுக்குகிறேன் என யாழ்பாண பகுதியை முற்றுகையிட்டு 3 லட்சம் தமிழரை கொல்ல தயாரான பொழுதுதான், ராஜிவ் காந்தி இலங்கை அனுமதியே இல்லாமல் போர்விமானங்களை அனுப்பி உணவுகளை வீசி இலங்கையை மிரட்டினார்.

இது இந்தியாவின் இரண்டாம் இன்னிங்ஸ், இல்லாவிட்டால் ஜூலை கலவரம் போல அடுத்த கலவரம் யாழ்பாணத்தில் நடந்திருக்கும். சிங்களன் திருந்தமாட்டான் ஒவ்வொருமுறையும் இந்தியா காப்பாற்ற வரமுடியாது என்றுதான், இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தபட்டது.

ஜூலை பெரும் கலவரத்தினை தொடங்கிவைத்த அந்த குண்டுவெடிப்பினை நடத்தியபுலிகள் இதனை காதில் வாங்கவில்லை, எமது மக்கள் எமது மண்ணிற்காய் சாவதில் என்ன தவறு? என்றார்கள். அகதியாய் ஓடுவதுபற்றி எல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை. ஆனால் அகதிகளை பராமரித்துகொண்டிருந்த இந்தியாவிற்கு தார்மீக கடமை இருந்ததை யார் மறுக்கமுடியும்?

ஆனால் புலிகள் சிங்கள ராணுவத்தை தாக்க தாக்க, மற்ற அப்பாவி தமிழர் கலவரங்களில் கொல்லபடுவர் என்பதை தடுக்கத்தான் இந்திய அமைதிபடை அனுப்பபட்டது.

அதுவும் கண்ணியில் சிக்கவைக்கபட, அவமானத்தோடு திரும்பியது இந்தியா 1500 வீரர்களையும் இழந்து. அங்கே தந்திரசாலி பிரேமதாசாவும் புலிகளின் பெரும் பலமான ஆண்டன் பாலசிங்கமும் சிரித்துகொண்டிருந்தார்கள். உச்சமாக ராஜிவும் கொல்லபட்டார்.

ஆனால் அதுலத்முதலியும், ஜெயவர்த்தனேயும் 1983ல் ஜூலையில் சொல்லிகொடுத்த அந்த பாடத்தை சிங்களம் மறக்கவே இல்லை. வாய்ப்புகிடைத்தால் மொத்தமாக நொறுக்குங்கள்.

1983க்கு பின் சர்வதேச அழுத்தத்தால் கொழும்பிலோ அல்லது மற்ற பகுதிகளிலோ பெரும் கலவரம் இல்லை. ஆனால் புலிகள் ராணுவம் மோதிகொண்டே இருந்தனர்.

வாய்ப்புக்காக காத்திருந்த சிங்களம், முள்ளிவாய்க்காலில் சுத்திகொண்டது.

காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என குரலொலிகள் எழுப்பபட்டன, யாரை காப்பாற்ற குரலொலி எழுப்பபட்டது என்பது இந்தியாவிற்கு புரிந்தது. சென்னை பாண்டிபஜாரில் காப்பாற்றி, வடமராட்சியில் காப்பாற்றி, இன்னும் எங்கெல்லாமோ இந்திய அரசு காப்பாற்றிய "அவரை" காப்பாற்றத்தான், அவர் படத்தோடு லண்டனில் ஊர்வலம் சென்றதை உலகமும் புரிந்துகொண்டது.

ஜூலை கலவரத்தில் வெகுண்டெழுந்த இந்தியா, வடமராட்சியில் இலங்கையை மிரட்டிய இந்தியா இம்முறை அமைதியானது, காரணம் எல்லோருக்கும் புரியும்.

ஜூலை 23 கலவரத்திற்கு பின்னால்தான், ஈழத்தில் இந்தியா நுழைய தமிழகம் ஈழ எதிர்பினை தீவிரமாக்கியது, அகதிகள் தமிழகம் வந்தனர். பிரச்சினை கூடியது, உச்சமாக அமிர்தலிங்கம் சென்னை வந்தார். அவரை வரவேற்பதில் கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் பலத்தபோட்டி, வழக்கம்போல எம்ஜிஆர் ஜெயித்தார்.

அதுவரை திராவிடம், அண்ணாயிசம், தமிழ், வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு மேல்சபை, மதுக்கடை, என சண்டைபோட்டுகொண்டிருந்த இருவரும் மிகவும் விரும்பியது இந்திரா காந்தியுடனான நல்லுறவு.

அதற்காக இருவரும் தீவிர ஈழ ஆதரவை எடுத்து அவரை மகிழ்ச்சிபடுத்திகொண்டனர். எம்ஜிஆர் ஒருபடிமேலே சென்று பிரபாகரனை இந்திய பயிற்சியில் சேர்த்து இந்திராவின் "குட்புக்"கில் இடம்பிடித்தார்.

ஆனால் இந்திரா மறைவும், பின் அமைதிபடை காலத்தில் எம்.ஜி.ஆரும், ராஜிவ் மரணம் தொடர்ந்து கலைஞரும் அமைதியாயினர். அதன்பின் வை.கோவும் , நெடுமாறனும், ஆரம்பகால புலிகள் அமைப்பின் ஆதரவான திராவிட அமைப்புக்களும் ஈழபிரச்சினையை ஒரே வார்த்தைக்குள் அடக்கின‌ "ஈழம் ‍அதாவது பிரபாகரன்"

கொழும்பில் நடந்த மனிதவெடிகுண்டில் பள்ளிகுழந்தைகள் கொல்லபட, ஐரோப்பிய அமைப்பு புலிகளை தடை செய்தது, தாக்குதலில் உயிர்தப்பிய பொன்சேகா, அமெரிக்கா அனுப்பிய கோத்தபக்சே என சகலரும் சேர்ந்து முள்ளிவாய்க்காலில் கொள்ளி வைத்தாகிற்று.

அப்படியாக ஜூலை 23 இதேநாளில் 1983ல் தொடங்கிய கலவரம் மூலம் தமிழகத்தில் வலுவான ஈழ அரசியல், இந்திராவிற்கு பயந்த இரு தலைவர்களால் பெரும் தீயாக பற்றவைக்கபட்டு பின் அணைந்தும் விட்டது.
சேகுவாராவோடு சேர்ந்து உலகெல்லாம் தமிழருக்காக உழைத்துவிட்டு, துரதிருஷ்டமாக மிக தாமதமாக தமிழகம் வந்த ஒரு செந்தமிழன் அணைந்துவிட்ட அந்தபெரும் காட்டின் கரிகட்டையை ஊதி தீ வரும் என சொல்லிகொண்டிருக்கின்றார்.

அது கரிகட்டை என்றாலும் பரவாயில்லை அது கல், அட அது தீ பிடித்தாலும் பரவாயில்லை, அந்த தீயை கொண்டு இந்துமாக்கடலை எரித்து கொழும்பை பிடிப்பேன் என்கின்றார் பார்த்தீர்களா? அதுதான் விஷயம்.

மே 17 பெயரில் ஒரு டஜன் இயக்கங்கள் சுற்றும் தமிழகம் இது, ஆனால் உண்மையில் மிக கொடூரமான ஈழ இழப்புக்கள் இரண்டு. ஒன்று யாழ்பாண நூலக எரிப்பு, இன்னொன்று ஆடிமாத அதாவது ஜூலை 23 இனபடுகொலை. இதனை எல்லாம் பற்றி ஏன் இவர்கள் நினைவுகூறபோகின்றார்கள்? அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அவர் மட்டுமே, அவர் கொல்லபட்ட முள்ளிவாய்க்கால் மட்டுமே.

இதனை விட எல்லாம் விஷமான விஷயம் உண்டு, 2002 முதல் 2005 வரை பலர் காவடி எடுத்து சென்று பிரபாகரனை தரிசித்தனர். அதில் உலக அரசியலை பேசும் துறவியும் உண்டு, ஜெகத் கஸ்பர் என அவருக்கு பெயர்

அவரிடம் பிரபாகரன் சொன்னாராம் "1983க்கு பின் கொழும்பில் கலவரம் இல்லை பார்த்தீர்களா? காரணம் எம்மேல் உள்ள பயம்"

அப்பாவியல்ல "பாவி" துறவியும் அதனை சொல்லி வியக்கின்றார் " அதன்பின் இந்திய தலையீட்டில் கலவரம் இல்லையா? அல்லது புலிகளுக்கு பயந்தா? புலிகளுக்கு பயந்தால் ஏன் உங்களை வடமராட்சியில் சுற்றிகொள்ள போகின்றார்கள்??" என இவர் கேட்கவுமில்லை, கேட்டால் இவரை அங்கேயே சிலுவையில் அறைந்திருப்பார்கள் என்பது வேறுவிஷயம்.

அவ்வளவு பயந்திருந்தால் ஏன் முள்ளிவாய்க்காலில் கொள்ளிகுடம் உடைக்கபோகிறான் சிங்களன்.

பரப்பபட்ட பொய்கள் அப்படி, தமிழக பத்திரிகைகளும் இதனை கொட்டை எழுத்தில் வெளியிட்டன, இப்படியாக இவர்கள் உருவாக்கும் பிம்பம் இப்படி பொய்யானது, மகா ஆபத்தானது.

சீமானை போலவே இந்த போலிசாமியார் ஜெகத் கஸ்பர் என்பவரும் மகா ஆபத்தானவர், மனிதர் இப்பொழுது கொஞ்சம் அடங்கியிருக்கின்றார், அது அவருக்கு நல்லது.

ஆனால் சொன்ன பொய்களுக்கு அவர் இன்னும் பாவ சங்கீர்த்தனம் செய்யவில்லை

சீமான் போன்ற நரிகள் இந்த நாளுக்கெல்லாம் அஞ்சலி செலுத்தவராது, அவர்கள் இன உணர்வு பிரபாகரனை மட்டும் பிடித்து தொங்கிகொண்டிருக்கும்.

அம்மக்கள் சாவதை கண்ட இந்தியா, எப்படி எல்லாம் துடித்து சென்று அவர்களை காப்பாற்றி, அவர்களுக்காக துணை நின்றது என்றெல்லாம் நினைக்க வேண்டிய நாள் இது, உலகமே கண்டுகொள்ளாத அந்த கொடூரத்தை கண்டித்து இலங்கையினை மிரட்டி களமிறங்கியது இந்தியாதான்

இந்த தமிழக ஈழ அல்ட்ராசிட்டிகள் இந்த நாளை மறைக்க காரணமும் அதுதான், அதனை சொன்னால் இந்தியா கலவரத்தை நிறுத்திய விஷயங்களையும், இலங்கை தமிழருக்கு துணை நின்ற விவகாரங்களையும் சொல்லவேண்டி வரும்.

இவர்கள்தான் இலங்கை தமிழர்களின் பாதுகாவலர் என சொல்லிகொள்பவர்கள்.

முள்ளிவாய்க்காலை விட ஆயிரம் மடங்கு கொடூரமானது ஜூலை 23 கலவரம். அந்த மக்களுக்காக அன்னை இந்திரா விட்ட கண்ணீர்போல நாமும் கண்ணீர் விடுவோம்.

அந்த மக்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், மறக்கவே முடியாத ரணம் அது.

தர்மங்கள் தோற்பதில்லை, காலம் மாறும்.

Read more...

நான் ஒரு முதுகெலும்புள்ள தலைவன். மார் தட்டுகின்றார் மைத்திரிபால சிறிசேன.

தன்னை முதுகெலும்பற்ற ஒரு தலைவராக சுட்டிக்காட்ட சிலர் முயற்சிக்கின்ற போதிலும், நேரடியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய முதுகெலும்புடைய ஒரு தலைவர் என்பதை 2015ஆம் ஆண்டு தேர்தலின்போதும் அதன் பின்னர் பல தடவைகளிலும் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

நேற்று (22) பிற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற 'சத்விரு அபிமன் 2019' இராணுவத்தினருக்கு நலன்புரி நன்மைகளை வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் :

கடந்த அரசாங்கத்தைப் போன்றே தற்போதுள்ள அரசாங்கத்திலும் இடம்பெறும் ஊழல், மோசடிகளை கண்டறிவதற்கு முதுகெலும்புடைய ஒரு தலைவர் என்பதனாலேயே ஆணைக்குழுக்களை நியமிக்க தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கடத்தல்காரர்கள், பாதாள உலகத்தினர், குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகளுடன் போராடுவதற்கும் அதுவே காரணமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.


ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்று மூன்று மாதங்கள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் சகல குற்றச்சாட்டுக்களையும் தான் நிராகரிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னரான காலத்தில் அரசாங்கம் தனது அனைத்து கடமைகளையும் நிறைவேற்றியுள்ளதுடன், அத்தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பினை இலங்கையிலிருந்து ஒழித்தது மாத்திரமன்றி, அத்தாக்குதல் இடம்பெறுவதற்கு ஏதுவாக அமைந்த சகல விடயங்கள் தொடர்பாகவும் தற்போது பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதனால் தமது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தீர்மானங்களை முன்வைக்க வேண்டாமென தான் சகல தரப்பினரிடமும் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.


தான் அனைத்து சமயங்களையும் மதிக்கும் ஒரு தலைவர் என்ற வகையில் அனைத்து மத தலைவர்களையும் போற்றுவதாக தெரிவித்தார். ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் யாராக இருப்பினும் அவை தொடர்பில் தம்முடன் வெளிப்படையாக கலந்துரையாட முடியுமெனவும், தேவையேற்படின் ஊடகங்களிற்கு முன்னாலும் அதனை மேற்கொள்ள முடியுமென ஜனாதிபதி தெரிவித்தார்.


முதுகெலும்புடைய தலைவர்கள் மேற்கொள்ள வேண்டியது யாதெனில், விமர்சனங்களை முன்வைப்பது அன்றி கடத்தல்காரர்கள், குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுவதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி, நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைவதாகும் எனக் குறிப்பிட்டார்.

விமர்சனங்கள் தேவையானவை என்றபோதிலும் அவை நாட்டையும் மக்களையும் தவறான வழியில் இட்டுச் செல்லக்கூடிய, அரசாங்கத்தை அசௌகரியங்களுக்கு உட்படுத்தக்கூடிய பாரதூரமான விமர்சனங்களாக அமையக்கூடாதெனவும் இன்று இந்த விமர்சனங்களை முன்வைக்கும் சகலரும் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்னர் எமது வீரமிக்க இராணுவத்தினர் உள்ளிட்ட ஒட்டுமொத்த பாதுகாப்புத் துறையினரும் தமது உயிரை துச்சமாக மதித்து நிறைவேற்றிய உன்னத மனித நேய செயற்பணிகளையே காட்டிக்கொடுக்கின்றனர் என தெரிவித்தார்.

மேலும் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற துன்பியல் சம்பவத்தில் உயிரழிந்தவர்கள் தொடர்பில் அன்று போலவே இன்றும் தான் வேதனை அடைவதாகவும், அதனை ஒருபோதும் மறக்க முடியதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

முப்பது வருடங்களுக்கும் மேற்பட்ட கொடிய பயங்கரவாத யுத்தத்தை முடிவுறுத்திய வீரமிக்க இராணுவத்தினருக்கு பல்வேறு நலன்புரி நன்மைகள் இதன்போது பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன், முப்படையினர்இ பொலிசார் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் இராணுவத்தினர் மற்றும் இராணுவத்தினரின் பிள்ளைகள் உள்ளிட்ட 1504 பேருக்கு இந்த நன்மைகள் வழங்கப்பட்டன.

அதற்கமைய முழுமையாக நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகள், பகுதியளவில் நிறைவு செய்யப்பட்ட 925 வீடுகள், மாணவர்களுக்கான 308 புலமைப்பரிசில்கள் மற்றும் வசிப்பிடங்களுக்கான 246 காணித் துண்டுகளை வழங்குதல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.

Read more...

விக்கியின் அரசியல் கடையின் கிளை ஒன்று மட்டக்களப்பிலும்!

முன்னாள் நீதியரசர் என்று கூறப்படும் அரசியல்வாதி விக்கினேஸ்வரனின் புதிய கட்சியின் கிளை ஒன்று இன்று மடக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணி என்று பெயரிடப்பட்டுள்ள விக்கினேஸ்வரன் தலைமைதாங்கும் கட்சியின் கிளையே இவ்வாறு மட்டக்களப்பு மாமாங்கம் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக வடமாகாணத்தை கைப்பற்றிய விக்கினேஸ்வரன் தனது பதவிக்காலத்தில் சபையினூடாக மக்களுக்கு புரியவேண்டிய கடமைகளை தட்டிக்கழித்திருந்தார், அபிவிருத்திக்காக அரசினால் ஒதுக்கப்பட்டிருந்த நிதியை திறைசேரிக்கு மீண்டும் திருப்பியனுப்பியிருந்தார் என்ற பாரிய குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகியிருக்கும் நிலையில், புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி நகர்வது அவதானிக்கப்படுகின்றது.

முதலமைச்சராக செயற்பட்டபோது மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் அடிப்படை உரிமையை மீறினார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகி நீதிமன்றில் விக்கினேஸ்வரனுக்கு எதிரான மனித உரிமை மீறல்வழக்கைகொன்று விசாரணையில் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.




Read more...

Monday, July 22, 2019

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேண்டாம். மனோவே வேண்டும். சிறையிலிருந்து முன்னாள் புலி கடிதம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் மலையக மக்களை பிரதிநிதித்துப்படுத்தும் அமைச்சர் மனோ கணேசனுக்குமிடையேயான முரண்பாடு வலுப்பெற்றுள்ள நிலையில் வடகிழக்கு விவகாரங்களில் தான் எதிர்வரும் காலங்களில் தலையிடப்போவதில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இவ்வறிப்பினால் அதிருப்தி அடைந்துள்ள வடகிழக்கு பொது அமைப்புகள் மற்றும் மக்கள் மனோ கணேசன் தனது முடிவினை பரிசிலிக்கவேண்டும் என்ற பகிரங்ககோரிக்கைகளை விடுத்துவரும் நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சார்பில் கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் தாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரிப்பதாகவும் தமது விடுதலைக்கு மனோகணேசனின் தலையீடு அவசியமானது எனவும் தெரிவித்துள்ளனர்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :




Read more...

கன்னியாவில் விகாரை அமைக்க இடைக்கால தடை; பக்தர்கள் போய் வர அனுமதி: மேல்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலயத்திற்கு சொந்தமான ஆதனங்களை தர்மகர்த்தா சபையே தொடர்ந்து பரிபாலிக்க திருகோணமலை மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இத்துடன், கன்னியா பிள்ளையார் ஆலயத்தில் விகாரை அமைக்கும் பணிக்கு இடைக்கால தடை விதித்தது.

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலயம், அதன் ஆதனங்களின் தர்மகர்த்தா சபையினால், திருகோணமலை மேல்நீதிமன்றத்தில் கடந்த 19ம் திகதி எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்றது.

மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் முன்னிலையாகினர்.

மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களை தொடர்ந்து, மேல்நீதிமன்றம் சில இடைக்கால கட்டளைகளை வழங்கியுள்ளது.

இதன்படி, கன்னியா பிள்ளையார் ஆலயத்தை இடித்து விட்டு அங்கு அமைக்கப்பட்டு வரும் விகாரையின் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

கன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலயம், மாரியம்மன் ஆலயம், மற்றும் அதற்கு சொந்தமான மற்ற வழிபாட்டிடங்களிற்கு பக்தர்கள் போய் வருவதையும், சமய அனுட்டானங்கள் செய்வதையும் யாரும் தடை செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், கன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலயம், மாரியம்மன் ஆலயம், மற்றும் அதற்கு சொந்தமான மற்ற வழிபாட்டிடங்களின் பரிபாலனத்தை அதன் தர்மகர்த்தா சபை தொடர்ந்து மேற்கொள்ளவும் அனுமதியளித்தது.

அத்துடன் வழக்கு ஓகஸ்ட் 29ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Read more...

Saturday, July 20, 2019

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் பலி

பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேசத்தில் இன்றிரவு 9 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆவா குழு உறுப்பினர்கள் இணைந்து பொலிஸாரை தாக்க முற்பட்ட போது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பொலிஸாருடன் இடம்பெற்ற மோதலையடுத்து 05 ஆவா குழு உறுப்பினர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

எவ்வாறாயினும் அவர்களின் 03 வாள்களும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read more...

றிசார்டின் எம்பி யின் ஆட்களுக்கு ஹக்கீம் எம்பியின் ஆட்கள் ஒலுவிலில் போட்டுத்தாக்கினர்.

ஒலுவில் பிரதேசத்திற்கு சென்றிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துறைமுக அதிகாரசபை தங்குமிடப் பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலை மேற்கொண்ட இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் உள்ளிட்ட குழுவினரே இத்தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தொடர்பாக பா.உ மஃறூப் தெரிவித்த கருத்து தொடர்பில் அதிருப்தி தெரிவிக்கும் வகைiயிலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

தாக்குதலை மேற்கொண்டவர்கள் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டும்பொருட்டு வீதியில் ரயர்களை போட்டு எரித்து சாதாரண மக்களின் செயற்பாடுகளுக்கு குந்தம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் இத்தாக்குதலில் மஃறூப் க்கு எவ்வித காயங்களும் ஏற்படாதபோதும் வாகனம் பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த படையினர் நிலமைகளை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளனர்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த சிலர் றிசார்ட் பதியுதீனது கட்சியில் இணைந்தமை தொடர்பிலேயே இம்முரண்பாடு உருவாகியுள்ளதாக அறியமுடிகின்றது.



Read more...

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் வயோதிபரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்று மாலை வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய வீதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த பத்து வருடங்களாக தனிமையில் இருந்து வந்த வயோதிபரான கணேசமூர்த்தி சாமித்தம்பி (74) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவரது உடலில் சிறு காயங்கள் காணப்படுவதால் இவரது மரணம் குறித்து உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வழமையாக தனது வீட்டில் உள்ள மாந்தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றி விட்டு அருகில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்று வரும் இவர், நேற்றைய தினம் மகளின் வீட்டிற்கு வராமையினால் அவரை தேடிச் சென்ற மகள் தனது தகப்பனார் மலசலகூடத்தில் இறந்து கிடப்பதை கண்டு மட்டக்களப்பு பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் குற்றத்தடயவியல் பொலிசாரின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

Friday, July 19, 2019

தோட்டக்காட்டான் எங்களுக்கு தலைமை தாங்குவதா? மீண்டும் சீறிப்பாய்கின்றார் சிறிதரன்.

ஐக்கிய தேசியக் கட்சியிடம் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தலில் கல்முனை பிரதேச செயலக , முல்லைக்தீவு ஆலய மற்றும் கன்னியா ஆலய விவகாரங்களை பேசுபொருளாக எடுத்து தமிழ் மக்களின் காதில் வழமைபோல் பூச்சூட திட்டமிட்டுள்ளது.

ஆனாலும் வடகிழக்கில் தேர்தல்களில் போட்டியிடாத அமைச்சர் மனோ கணேசன் இவ்விவகாரங்களுக்கான தீர்வுகளை தேடுவதில் ஈடுபட்டுவருகின்றமை அண்மைக்காலமாக அவதானிக்கக்கூடியதாகவிருக்கின்றது. அந்தவகையில் மேற்படி பிரச்சினைகளுக்கான தீர்வினை பேச்சுவார்த்தை ஒன்றின் மூலம் முடிவுக்கு கொண்டுவரும்பொருட்டு நேற்று ஜனாதிபதியுடனான சந்தப்புக்கு ஏற்பாடு செய்து அதற்கான அழைப்புக்களை சம்பந்தப்பட்ட சகல தரப்பினருக்கும் வழங்கிய மனோ கணேசன் இறுதியில் 'நான் இனிமேல் வடகிழக்கு பிரச்சினையில் தலையிடமாட்டேன்' என அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பிச்சைக்காரன் புண் அரசியல் செய்துவரும் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் குறித்த சந்திப்புக்கு சென்று பிரச்சினைகளுக்குரிய தீர்வினை தேடுவதை தவிர்த்துள்ளனர். எதுவாயினும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பங்களிப்பை த.தே.கூ செய்வார்கள் என மனோ கணேசன் எதிர்பார்த்தது குறித்து அவரது அறிவை கேள்விக்குட்படுத்தவேண்டி உள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசன்னம் இன்றி இடம்பெற்ற கூட்டத்தில் சில தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் பிரச்சினைகளுக்கான தற்காலிக தீர்வுகளும் ஜனாதிபதியிலால் அதிரடியாக அறிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காதது தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இவ்விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் : 'நான் சம்பந்தன் ஐயாவிடம் , உங்களுக்கு அழைப்பு கிடைக்கப்பெற்றதாக எனக்கேட்டேன். அழைப்பு ஒன்றும் வரவில்லை என்றார். உங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையாயின் போகவேண்டியதில்லை என்று முடிவெடுத்தோம்' என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பான விடயம் பேசப்படவிருக்கின்றது என்பது சுமந்திரனுக்கு நன்றாக தெரிந்திருக்கின்றது. அதற்கான அழைப்பும் அவருக்கு கிடைக்கப்பெற்றிருக்கின்றது. ஆனால் சம்பந்தனுக்கு அழைப்பு கிடைக்கவில்லை என்பதற்காக தாங்கள் போகவில்லை என்று சுமந்திரன் கூறுகின்றார். அதாவது தமக்கு வெற்றிலை வைத்து அழைக்கவில்லை என்றால் அவர்கள் தமிழ் மக்களை எந்த பாதாளத்திற்கும் தள்ளுவார்கள் என்பது சுமந்திரின் ஒப்புதல் வாக்குமுலத்தின் ஊடாக நிரூபணமாகியுள்ளது.

இது இவ்வாறிருக்க குறித்த சந்திப்பில் கலந்து கொள்ளாததற்கான காரணத்தை கிளிநொச்சி பா.உ சிறிதரனிடம் சில தரப்புக்கள் வினவியபோது , எங்களுக்கு தோட்டக்காட்டான் தலைமை தாங்குவதா என சிறினாராம் என இலங்கைநெட் க்கு தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர் இணையத்தளம் ஒன்றில் வெளியாகியிருந்த செய்தி ஒன்று தொடர்பில் சர்சை ஏற்பட்டபோது அச்செய்தியை வெளியிட்ட நபரை 'வடக்கத்தேயான்' என விழித்து சர்ச்சையில் மாட்டிக்கொண்ட சிறிதரன் மீண்டுமொருமுறை தோட்டக்காட்டான் என மனோ கணேசனை விழித்துள்ளது கண்டனத்திற்குரியதாகும்.

Read more...

இலங்கையில் இராணுவ முகாம்களை அமைக்கவோ, காணிகளை கையகப்படுத்தவோ அமெரிக்கா முனையவில்லையாம்! அலெய்னா.

இலங்கை வல்லரசுகளின் மோதுகளமாக மாறிவருகின்றது. பிரதானமாக சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையினுள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமது கட்டுப்பட்டுப்பாட்டினை வைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன.

இலங்கையின் பொருளாதாரம் வீழ்சியடைந்து உலகின் கடனிலேயே அரசாட்சி நாடாத்தவேண்டிய நிலையிலுள்ள அரசு, அக்கடன்களையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்வதற்காக நாட்டினுள் பல்வேறு சக்திகளையும் பல்வேறு ஒப்பந்தங்களுடாக அனுமதிக்கின்றது.

அந்த வரிசையில் அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்படவுள்ள இரு ஒப்பந்தங்கள் தொடர்பில் பாரிய சர்ச்சை கிளம்பியுள்ளதுடன் அவ்வொப்பந்தங்களுக்கு எதிராக மக்கள் சார்பில் நீதிமன்றை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையுடன் தாம் செய்து கொள்ளவுள்ள ஒப்பந்தங்களை நியாயப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கான அமெரிக்கத்தூதர் அலெய்னா ரெப்டிஸ் முகநூல் வழியான விளக்கம் ஒன்றை வழங்கியுள்ளார்.

அவ்விளக்கத்தில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க – சிறிலங்கா ஒத்துழைப்பு அல்லது வேறு எந்த விடயம் பற்றி, பரப்புரை செய்யப்படும், தவறான தகவல்கள் மற்றும் தவறான தகவல்களை அடையாளம் காண்பது குறித்தும், எவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பது குறித்தும், கலந்துரையாட விரும்புகிறேன்.

அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான மூன்று ஒத்துழைப்பு உடன்பாடுகள் தொடர்பான அண்மைய ஊடக அறிக்கைகளுக்கு பதிலளிப்பதில் இருந்து ஆரம்பிக்கலாம்.

இந்த உடன்பாடுகளில் ஒன்று, வருகைப் படைகள் உடன்பாடு, இது இன்னமும் பேசப்பட்டு வருகிறது. இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.

இன்னொன்று கையகப்படுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் உடன்பாடு. இது 2007இல் கையெடுத்திடப்பட்டு, 2017இல், புதுப்பிக்கப்பட்டது. இது இராணுவ ஒத்துழைப்பை – குறிப்பாக, கூட்டு பயிற்சிகள், இடர் மீட்பு போன்ற விடயங்களில், வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தைக் கொண்டது.

மூன்றாவது, சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, மிலேனியம் சவால் நிறுவனத்தின், 480 மில்லியன் டொலர் அபிவிருத்தி உதவி பொதியை உள்ளடக்கியது.

இவை தொடர்பான, சில அடிப்படை உண்மைகளை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இராணுவ தளத்தை அமைப்பது, அல்லது சிறிலங்காவில் நிரந்தர இராணுவ இருப்பை நிறுவுவது தொடர்பாக அமெரிக்காவுக்கு எந்த நோக்கமும் கிடையாது. அதேபோல, மிலேனியம் சவால் நிறுவனம் மூலம் அமெரிக்கா எந்த நில உரிமையைப் பெறவோ, கட்டுப்பாட்டை பேணவோ முனையவில்லை.

சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே சிறிலங்கா மக்களுக்கு அமெரிக்கா ஆதரவையும் உதவிகளையும் வழங்கும்.

அமெரிக்க – சிறிலங்கா படைகளுக்கு இடையிலான பொருட்கள் மற்றும் சேவைகளை பரிமாறிக் கொள்ளும் போது, அந்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணம் செலுத்துவதற்கான ஒரு சட்ட கட்டமைப்பை வழங்குவதற்கே, கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தற்காலிகமாக சிறிலங்காவில் பயிற்சிகள் அல்லது அதிகாரப்பூர்வ கடமைக்கு வரும், அமெரிக்க படையினர் மற்றும் பாதுகாப்புத் திணைக்களத்தின் சிவில் பணியாளர்களின் நிலையை வருகைப் படைகள் உடன்பாடு விபரிக்கிறது.

மிலேனியம் சவால் நிறுவன உடன்பாட்டுக்கும், வருகைப் படைகள் உடன்பாடு மற்றும் கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது ஒரு இராணுவ உடன்பாடும் கிடையாது.

மிலேனியம் சவால் நிதிய கொடை, பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்கான ஒரு அபிவிருத்தி உதவி உடன்பாடு ஆகும். இது அமெரிக்க மக்களிடமிருந்து கிடைத்த பரிசே தவிர, கடன் அல்ல.

இந்த உடன்பாடுகளைப் பற்றி அதிகம் பேசுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

எனது பார்வையில், தவறான தகவல்கள், குறிப்பாக சமூக ஊடகங்களில் பரவும் தவறான கருத்துகள், எமது ஜனநாயக நாடுகளின் ஒருமைப்பாடு மீதான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.

நாங்கள் பேச்சு நடத்துகின்ற வருகைப் படைகள் உடன்பாட்டில், பயிற்சி, ஒத்திகைகள், மற்றும் இரண்டு நாடுகளுக்கும் நன்மையளிக்கக் கூடிய பரிமாற்றங்களுக்கான பரஸ்வர வசதிகளை அளிக்கிறது. அதன் அர்த்தம், தளங்களை அமைப்பதோ, அமெரிக்க படையினரின் நிரந்தர பிரசன்னமோ அல்ல.

சிறிலங்கா தனது எல்லை மற்றும் பிராந்திய நீர் அல்லது வான் வெளியில் அமெரிக்க படையினர், கப்பல்கள் மற்றும் விமானங்களின் நுழைவு அல்லது வெளியேறுவதற்கான ஒப்புதலை அளிப்பதற்கும், மறுப்பதற்குமான அனைத்து இறைமை உரிமைகளையும் கொண்டிருக்கும்.

வருகை படைகள் உடன்பாடு குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் நாங்கள் இன்னமும் பேச்சு நடத்தி வருகிறோம்.

இடர் மீட்பு, கூட்டுப் பயிற்சிகள் போன்ற சூழல்களில், நடைமுறைகளை முன்கூட்டியே உருவாக்கி, வசதிகளை ஏற்படுத்தலாம். வருகைப் படைகள் உடன்பாட்டின் கீழ், எந்தவொரு படையினரும், சரியான ஆவணங்கள் இன்றியோ, முறையான அனுமதியைப் பெறாமலோ, சிறிலங்காவுக்குள் நுழைய முடியாது.

பலமான, இறைமை கொண்ட, சுதந்திரமான சிறிலங்காவுக்கே அமெரிக்கா ஆதரிக்கிறது. இந்தோ-பசுபிக் பாதுகாப்புக்கு சிறிலங்காவின் பங்களிப்பை நாங்கள் மதிக்கிறோம்.

சிறிலங்கா இந்த விடயத்தில் இன்னும் திறமையாக இருக்க உதவுவதே, வருகை படைகள் உடன்பாடு குறித்து நாங்கள் பேச்சு நடத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளதற்குக் காரணம் ஆகும்.

சீனாவுக்கும் வருகை படைகள் உடன்பாட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை; இது சிறிலங்காவுடனான நீண்டகால இருதரப்பு கூட்டு பற்றியது.

சிறிலங்காவின் நீதித்துறையில் அமெரிக்கா தலையீடு செய்வதாக அண்மையில் ஊடகங்களில் நிறைய தவறான தகவல்கள் வந்துள்ளன. சிறிலங்காவின் நீதித்துறையில் அமெரிக்கா தலையிடவோ, அல்லது தலையீடு செய்யப் போவதோ அல்லது நேரடியாக ஈடுபடவோ இல்லை.

சிறிலங்கா அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் சிறிலங்கா நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்களுக்கு எமது நாடு பயிற்சி அளித்துள்ளது. இந்தப் பயிற்சியில் நிதிமோசடி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத நிதியுதவி போன்ற- புதிய வகை குற்றங்கள் குறித்த சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதை உள்ளடக்கியது.

ஒரு வலுவான மற்றும் சுயாதீன நீதித்துறை, ஒரு வலுவான ஜனநாயகத்தின் தூண் ஆகும். அமெரிக்க சட்டவாளர் சங்கத்தின் கிளையை சிறிலங்காவில் அமைக்கும் நோக்கம் ஏதும் கிடையாது.

சிறிலங்கா மக்களே தற்போதைய அரசாங்கத்தை உருவாக்கினார்கள். இன்னும் சில மாதங்களில் புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வார்கள். மக்களின் விருப்பங்களை அமெரிக்கா ஆதரிக்கிறது. எந்த அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்களுடன் பணியாற்ற தயாராக உள்ளது.

சிறிலங்காவுக்கு நாங்கள் ஒரு ஆண்டுக்கு 40 மில்லியன் டொலர் அபிவிருத்தி உதவிகளை வழங்குகிறோம், பெரும்பாலும் யுஎஸ் எய்ட் மூலம் இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன. இது ஒரு அமெரிக்க அரசாங்கத்தின் அபிவிருத்தி உதவி வழங்கும் நிறுவனமாகும்.

மிலேனியம் சவால் நிறுவனம் மற்றொரு உதவி வழங்குநராகும்.

எமது திட்டங்கள் அனைத்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலானவை. பால்பண்ணைத் தொழிலின் விருத்திக்கு ஆதரவு அளிப்பது தொடக்கம், அமெரிக்கன் கோணர்களில் ஆங்கில வகுப்புகளை நடத்துவது வரை, பல உதவி முயற்சிகளை உள்ளடக்கியது.

அமெரிக்க படையினர் சிறிலங்காவில் குற்றமிழைக்கும் போது, இங்கு தண்டனை வழங்கப்பட முடியாது என்ற கரிசனையை எழுப்பியதற்கு நன்றி. கடினமான மற்றும் சோகமான சூழ்நிலைகள் கூட ஏற்படலாம்.

வருகைப் படைகள் அல்லது சோபா போன்ற ஒரு உடன்பாட்டைக் கொண்டிருப்பதற்கு ஒரு காரணம், அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து முன்கூட்டியே ஏற்றுக் கொள்வது தான்.

பல நாடுகளில் ஒரு குறிப்பிட்ட சட்டத்தை, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பயன்படுத்த வேண்டிய உடன்பாடுகள் உள்ளன.

உதாரணமாக, வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா படையினர் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டபோது, அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டு, சிறிலங்கா சட்டத்தின் கீழ் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டனர். இத்தகைய நிகழ்வுகள் மிகவும் அரிதானவை.

சிறிலங்காவின் பன்முகத்தன்மையையும், நாட்டின் இறையாண்மையையும் அமெரிக்கா மதிக்கிறது. அந்த மதிப்பு எமது பாதுகாப்பு ஒத்துழைப்பின் இதயத்தில் இருக்கிறது. அமெரிக்காவின் சிறந்த வலுவான இறைமையுள்ள பங்காளராகவே சிறிலங்கா இருக்கிறது.

ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னர், சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, தாக்குதல்கள் குறித்த விசாரணைக்கு எவ்பிஐ அமைப்பின் ஆதரவை வழங்கினோம்.

எதிர்காலத்தில் தாக்குதல்களைத் தடுப்பதற்கு சிறிலங்காவின் சட்டத்தை நடைமுறைப்படுத்தும், மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுடன் கூட்டு சேருவதற்கு இன்னும் பல வழிகளைத் தேடுவோம்.

எல்லா நாடுகளையும் அச்சுறுத்தும் ஒரு புதிய வகையான பயங்கரவாதம் சிறிலங்காவில் உள்ளது.

நீண்டகால ஒத்துழைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பின்பற்றுவதன் ஊடாக, வலுவான ஒத்துழைப்புகள், சட்டத்தின் ஆட்சி, சிவில் சுதந்திரங்களுக்கு தொடர்ந்து மதிப்பளிப்பதன் மூலம் மட்டுமே பயங்கரவாதத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதை நாங்கள் அறிவோம்.

பொருளாதார ரீதியில், சிறிலங்காவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா விளங்குகிறது. ஆண்டுதோறும் சிறிலங்கா ஏற்றுமதி செய்யும் 11.7 பில்லியன் டொலர் பொருட்களில், கிட்டத்தட்ட 3 பில்லியன் டொலர் பொருட்கள் அமெரிக்க சந்தைகளுக்கே அனுப்பப்படுகின்றன.

சிறிலங்காவில் இருந்து அமெரிக்கா பெரும்பாலும் ஆடைகளைளே இறக்குமதி செய்கிறது. இறப்பர், தொழில்துறை பொருட்கள், இரத்தினக் கற்கள், தேயிலை மற்றும் வாசனைத்ப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

சிறிலங்காவுக்கான அமெரிக்க ஏற்றுமதியில் விலங்கு தீவனங்கள், மருத்துவ உபகரணங்கள், சோயா பீன்ஸ், பிளாஸ்டிக், பால் பொருட்கள், கோதுமை, துணி மற்றும் ஆடைகள் ஆகியன அடங்கும்.

Read more...

ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்துக்கு சவுதியில் தடை செய்யப்பட்ட அமைப்பால் 100 மில்லியன் யுஎஸ் டொலர்ஸ் வழங்கப்பட்டுள்ளது

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 1800 கோடி ரூபா) பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரயவந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக தாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நிதி குற்ற விசாரணை பிரிவு நேற்று நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.

இலங்கை அரச வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த பணமானது ஹிரா நிறுவனம், மட்டக்களப்பு கம்பஸ் கொலேஞ் பிறைவட் லிமிட்டட் மற்றும் மட்டக்களப்பு கம்பஸ் பிறைவட் நிறுவனம் என்ற பெயர்களில் இயங்கும் பல்கலைக்கழக நிர்மாணத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக அன்றில் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக தாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் லங்கா ஜெயரட்ண அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

சவுதியில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பொன்றினால் குறித்த பணம் ஹிஸ்புல்லாவின் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னணி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

கோயில்கள் இடிகின்றன, வளைவுகள் உடைகின்றன, சிலைகள் எழுகின்றன! மறவன்புலவு சச்சிதானந்தன்

மாண்புமிகு அமைச்சர் மனோ கணேசன் அவர்களுக்கு, வரலாறு தந்த பெருமகன் மாண்புமிகு மனோ கணேசன் அவர்களுக்குச்

சிவசேனையின் அன்பான வேண்டுகோள்

கத்தோலிக்க மேலாதிக்க முன்னெடுப்புகளால் மாண்புமிகு மனோ கணேசனை வடகிழக்குக்கு வராமல் தடுத்துள்ளனர். தாங்களும் செய்ய முடியாததை மாண்புமிகு மனோகணேசன் செய்கிறார் என்ற பொறாமையு ம் அசூசையும் கத்தோலிக்கரல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருந்திருக்கலாம்.

மாண்புமிகு மனோ கணேசன் இலங்கை முழுவதற்கும் அமைச்சராக இருக்கிறார். இந்து சமயத் துறை அமைச்சராக இருக்கிறார். இலங்கை முழுவதும் இந்துக்கள் இருக்கிறார்கள்.

வடகிழக்கில் அவர்கள் பெருமளவில் இருந்தாலும் மலையகத்தில் ஆறு மாவட்டங்களிலும் அவர்கள் கணிசமான தொகையில் இருக்கிறார்கள் மேற்கு வடமேற்கு மாகாணங்களிலும் அவ்வாறு பழம் பராம்பரியத்துடன் இருக்கிறார்கள்

வடகிழக்கில் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக வாயடைத்துப் போய் நிற்கிறேன், ஒன்றும் செய்யமுடியாமல் இருக்கின்றேன், செய்யவும் மாட்டேன் என்ற மாண்புமிகு மனோ கணேசனின் இந்த முடிவு வருந்தத்தக்கது.

பொறுப்பற்ற சிலரால், அண்மைக்கால அரசியலுக்குள் நுழைந்த அரசியல்வாதிகளின் தாக்கத்தால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கக் கூடும்

இந்த வாரம் சென்னைக்கு வந்த தமிழ் கூட்டமைப்புக் குழுவிடம் பாரதிய சனதாக் கட்சியின் மேனாள் அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் அவர்கள் சொன்னார்கள், பொறுப்பற்றவர்களை நீங்கள் பொறுப்புகளில் வைத்திருப்பதால்தான் தமிழர்களுடைய அடிமைத்தனம் தொடர்கிறது என.

இலங்கையில் வாழும் இந்துக்கள் சார்பாக உங்களை வேண்டுகிறேன்.

வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் புத்தர்களால் கிருத்தவர்களால் முகமதியர்களால் நாங்கள் நசுக்கப்படுகிறோம்.

கோயில்கள் இடிகின்றன, வளைவுகள் உடைகின்றன, சிலைகள் எழுகின்றன, தொல்பொருளார் குடைகின்றனர், காளியை நீக்கிவிட்டு மசூதி, பிள்ளையாரை நீக்கிவிட்டுப் புத்தர், கண்ணகியை நீக்கிவிட்டு மரியாள்.

மாண்புமிகு மனோ கணேசன் அவர்களே சைவர்கள் யாரிடம் போவார்கள்? இந்து சமயத் துறை அமைச்சராக இருக்கும் உங்களிடம் போகாமல் வேறு யாரிடமும் நாங்கள் போவது?

மதமாற்றிகளின் கொடுமை தாங்க முடியவில்லை. எங்களது பெண்களைக் காதல் வலையில் வீழ்த்தி மூன்று நான்கு மனைவியரைக் கொண்டு வாழ்கின்ற சூழலில் நாங்கள் யாரிடம் போவோம்?

மாண்புமிகு மனோ கணேசன் அவர்களே இலங்கை இந்துக்கள் சார்பின் உங்களை அழைக்கிறேன். சைவர்கள் சார்பில் உங்களை அழைக்கிறேன். எங்களது உரிமைகளை மீட்டுத் தருவதில் உழையுங்கள். பொறுப்பற்றவர்களின் தாக்கத்தால் எங்களுக்காக உழைப்பதைக் கைவிடாதீர்கள்.

நீங்கள் வரலாற்று நாயகன்.

Read more...

Thursday, July 18, 2019

பிரபுக்கு வழிவிடாத வாகனச்சாரதிக்கு போட்டுப்பிடித்த மெய்பாதுகாவலர்.. (வீடியோ)

சொகுசுவாகனங்களில் வலம்வரும் அரசியல்வாதிகளால் வீதிகளில் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றனர். பிரபுக்களின் வானத்திற்கு பாதுகாப்பளித்துவரும் வாகனத்தொடரணிகள் வீதி ஒழுங்குமுறைகளை உதாசீனம் செய்து பயணம்செய்வது யாவரும் அறிந்த விடயம்.

அந்தவகையில் இன்று கண்டிப்பிரதேசத்தில் பயணித்துக்கொண்டிருந்த அரசியல்வாதி ஒருவனின் வாகனத்தொடரணிக்கு வழிவிடாத வான்சாரதி ஒருவர் குறித்த அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகித்தரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

வாகனத்தை இடைமறித்த பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த சாரதியை தாறுமாறாக தாக்கியுள்ளதுடன் இதுகுறித்து சாரதி அவசர பொலிஸ் சேவைக்கு செய்த முறைப்பாடு தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை என தெரியவருகின்றது.

பாதுகாப்பு உத்தியோகித்தர் சாரதியை தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது.




...............................

Read more...

கிழக்கு அரசியல்வாதிகளே இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு அடித்தளமிடுகின்றனர்! சாடுகின்றார் ஞானசார தேரர்

கொழும்பில் தேசிய நல்­லி­ணக்கம் தொடர்பில் கருத்­து­ரைக்கும் ஒரு­சில கிழக்கு மாகாண அர­சி­யல்­வா­திகள் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு அங்கு அடித்­த­ள­மி­டு­கின்­றார்கள். முறை­யற்ற செயற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்ள கிழக்கு மாகாண அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு எதி­ராக அனைத்து சாட்­சி­யங்­க­ளையும் விரைவில் நாட்டு மக்­க­ளிடம் பகி­ரங்­கப்­ப­டுத்­துவோம் என்று பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

அத்­துடன், கிழக்கு மாகா­ணத்தில் சேவை­யாற்றும் பொலிஸார் தமது பொறுப்­புக்­களை முறை­யாகப் பின்­பற்­றா­மையின் கார­ண­மா­கவே அங்கு இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் தழைத்­தோங்­கி­யது. வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் கட­மை­யி­லுள்ள பொலிஸ் அதி­கா­ரிகள் தொடர்பில் பாது­காப்பு அமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்­பிட்டார்.

பொது­பல சேனா அமைப்பின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

ஏப்ரல் 21 ஈஸ்­டர்­தின குண்­டு­த்தாக்­கு­தலின் சுவ­டுகள் இன்றும் சமூ­கத்தின் மத்­தி­யி­லி­ருந்து முழு­மை­யாக மாற­வில்லை. தேசிய பாது­காப்பு பலப்­ப­டுத்த வேண்­டு­மாயின் ஓர் உறு­தி­யான தீர்­மா­னத்தை எடுக்க வேண்டும். அடிப்­ப­டை­வாதி சஹ்­ரானின் குண்­டுத்­தாக்­குதல் நாட்டில் நாளாந்தம் இடம்­பெறும் வீதி விபத்து போல் தற்­போது பாது­காப்பு பிரி­வி­னரால் நோக்­கப்­ப­டு­கின்­றது.

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தை முழு­மை­யாக இல்­லா­தொ­ழிக்க எந்த விட­யங்­களை முறை­யாகப் பின்­பற்ற வேண்­டுமோ அதில் எவரும் கவனம் செலுத்­த­வில்லை. தேவை­யற்ற விட­யங்­க­ளுக்கே பாது­காப்­பினை உறு­திப்­ப­டுத்தும் தரப்­பினர் முழு­மை­யான கவனம் செலுத்­து­கின்­றார்கள்.

கிழக்கு மாகா­ணத்தில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் வலுப்­பெ­று­வ­தற்கு பொலி­ஸாரின் பல­வீ­னமே முக்­கிய கார­ணி­யாக காணப்­ப­டு­கின்­றது. சஹ்ரான் உள்­ளிட்ட அடிப்­ப­டை­வா­தி­க­ளினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­த­போது அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்கு எதி­ராக பொலிஸார் எவ்­வித நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை. பாது­காப்புப் பொறுப்­பி­லி­ருந்த அனை­வரும் ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு பொறுப்­புக்­கூற வேண்டும். இதில் கிழக்கு மாகா­ணத்தில் பொலிஸ் சேவை­யி­லி­ருந்து கட­மையை முறை­யாகப் பின்­பற்­றா­த­வர்­களும் உள்­ள­டக்­கப்­ப­டு­வார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு இட­மாற்றம் செய்­யப்­படும் பொலிஸ் அதி­கா­ரிகள் தங்­க­ளுக்கு தமது மேல­தி­கா­ரி­க­ளினால் வழங்­கப்­பட்ட ஒரு தண்­டனை என்றே கரு­து­கின்­றார்கள். இதனால் நெருக்­கடி ஏற்­ப­டக்­கூ­டிய அர­சியல் தலை­யீ­டுகள் உள்ள விட­யங்­களில் கவனம் செலுத்­து­வது இல்லை. தமது மேல­தி­கா­ரியை பழி­வாங்­கு­வ­தாக குறிப்­பிட்டுக் கொண்டு ஒட்­டு­மொத்த மக்­க­ளையும் நெருக்­க­டிக்குள் இன்று தள்­ளி­யுள்­ளார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் சேவை­யி­லுள்ள பொலிஸ் அதி­கா­ரிகள் தொடர்பில் பாது­காப்பு அமைச்சு முழு­மை­யாகக் கவனம் செலுத்த வேண்டும். இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தை முழு­மை­யாக இல்­லா­தொ­ழிக்க வேண்­டு­மாயின் கிழக்கு மாகா­ணத்தின் பொலிஸ் பிரிவில் திருத்­தங்கள் கொண்­டு­வ­ருதல் அவ­சி­ய­மாகும்.

கிழக்கு மாகாண ஒரு­சில அர­சி­யல்­வா­தி­களே இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு ஆரம்ப காலத்­தி­லி­ருந்து அடித்­த­ள­மிட்­டுள்­ளார்கள். குண்­டுத்­தாக்­கு­தலை தொடர்ந்தும் அவர்­களின் முறை­யற்ற செயற்­பா­டுகள் மாறவில்லை. கொழும்பிற்கு வந்து இன நல்லிணக்கம் பற்றி பேசிவிட்டு கிழக்கிற்கு சென்று அடிப்படைவாதம் வலுப்பெற அனைத்து உதவிகளையும் அரசியல்வாதிகளே செய்கின்றார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு ஆதரவு வழங்கி முறையற்ற விதத்தில் சொத்து சேர்த்துள்ள அரசியல்வாதிகளின் அனைத்து சொத்து விவரங்களையும் வெகுவிரைவில் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவோம் என்றார்.

Read more...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க கைது

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

சர்ச்சைக்குறிய எவன் கார்ட் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எவன் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பேரை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் அண்மையில் ஆலோசனை வழங்கியிருந்தார்.

இந்நிலையில் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி சமன் திஸாநாயக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனு நேற்று நிராகரிக்கப்பட்டிருந்தது.

இதேநேரம் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிராக மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த மீளாய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க தவறியமைக்காக இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டமை, சட்ட விரோதமானது, அநியாயமானது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சரியான புலனாய்வுத் தகவல்களை புறக்கணித்து இரண்டு சந்தேகநபர்களும் நூற்றுக் கணக்கான உயிர்கள் பலிகொடுப்பதற்கு இடமளித்தமை கொலைக் குற்றச்சாட்டு என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more...

சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களை கட்டுப்படுத்து! அவுஸ்திரேலியாவிடம் போட்டுக்கொடுத்த வட மாகாண ஆளுநர்.

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர் டேவிட் ஹோலி மற்றும் இலங்கை வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இடையே நடந்த சந்திப்பில் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோத பயணம் குறித்த பிரச்னை விவாதிக்கப்பட்டுள்ளது.

“அகதிகள் விவகாரத்தில் ஆஸ்திரேலிய அரசு கனடா போன்று மனிதாபிமான ரீதியில் அகதிகளை அனுமதிப்பது தொடர்பான கொள்கையை உருவாக்குவதன் மூலம் சர்வதேச அளவில் தனக்கான இடத்தை பெற்றுக்கொள்ள முடியும்,” எனக் கூறியுள்ளார் இலங்கை வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன். அத்துடன், சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

சட்டவிரோத படகு பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய உயர் ஆணையர், “சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது,” எனத் தெரிவித்திருக்கிறார்.

2013 முதல், ஆஸ்திரேலியாவின் தலையீட்டின் மூலம் ஆட்கடத்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் பல்வேறு நாடுகளில் 614 பேர் கைதாகியுள்ளனர். இதில் முதன்மையாக இலங்கையில் 489 கைதுகளும், இந்தோனேசியாவில் 66 கைதுகளும், மலேசியாவில் 48 கைதுகளும் நடந்துள்ளன. இந்தியாவிலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்..

வட மாகாணத்தின் தற்போதைய நிலைக்குறித்தும் ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் இச்சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளது.






Read more...

தம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும் கொல்லப்பட்டுள்ள தமிழ் மக்களில் பெரும் எண்ணிக்கையானோர் உட்படுகொலைகள் , சகோரதப்படுகொலைகள் மற்றும் போலிக்குற்றச்சாட்டுக்களை சுமத்தி தமிழ் இயக்கங்களால் கொல்லப்பட்டோர் என்பது மாத்திரம் யாவரும் அறிந்தும் பேசப்படதாக கசப்பான உண்மையாகும்.

இவ்வாறான கொலைகளில் பெரும் எண்ணிக்கையான கொலைகள் புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேநேரம் புளொட் அமைப்பின் உட்படுகொலைகளால் ஒரு தொகுதி இளைஞர்கள், குறிப்பாக விடுதலை தொடர்பான மிகதெளிவும் விடுதலை வேட்கையும் கொண்டிருந்தவர்கள் பலியாகியுள்ளார்கள்.

அவ்வாறு பலியாகியுள்ள புளொட் அமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவர் எவ்வாறு கொல்லப்பட்டார் அக்கொலைக்கு நியாயம் கோரிய அவரது சகோதரர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்ற விபரத்தினை நபர் ஒருவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவு இலங்கைநெற் வாசகர்களுக்காக இதோ..

காக்கா என்றழைக்கப்படும் துரைராஜா சிவனேஸ்வரன் யாழ்மாவட்த்தில் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உடுவில் டச்சு வீதியில் 20.08.1961ம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தைக்கு சிவனேஸ்வரன் உட்பட 11 பிள்ளைகள் , தனது ஆரம்ப கல்வியை உடுவில் முருக மூர்த்தி வித்திசாலையிலும் உயர்கல்வியை ஸ்கந்தவரோதயா கல்லூரிலும் பயின்றவர், ஸ்கந்தவரோதயாவில் பயின்ற காலத்தில் பாடசாலையின் கிரிக்கெட் அணியிலும் உதைபந்தாட்ட அணியில் கோல் காப்பாளர் பதிவியையும் விகித்தவர்.

இவருடைய அக்காவின் கணவர் பபா, இவர் டச்சு வீதியில் பபா ஸ்டூடியோ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். பபா குரும்பசிட்டியை சேர்ந்தவர். அதேவேளை பபா உமாமகேஸ்வரனுக்கு நெருக்கமானவர்.

புலிகள் அமைப்பில் உமாமகேஸ்வரனும் பிரபாகரனும் சேர்ந்து செயற்பட்ட காலத்தில் இருவரும் இலங்கை அரசால் தேடப்பட்ட பொழுது உடுவிலில் வைத்து இருவரையும் பாதுகாத்தவர்கள் சிவனேஸ்வரனும் குடும்பத்தினரும்.

இவ்விடயம் இராணுவத்திடம் பிடிபட்ட விஜி என்பவர் மூலம் இராணுவம் அறிந்து கொள்ள 80 களின் இறுதியில் உடுவிலை நோக்கி சிவனேஸ்வரனை கைது செய்யும் நோக்குடன் இராணுவ அணி ஒன்று நகர்த்தப்பட்டது. அப்பொழுது வீட்டில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த சிவனேசன் மற்றும் பபா தப்பியோட முற்பட்டவேளை பபா மதில் பாயும் பொழுது சுடப்பட்டு இறந்து விட சிவனேஸ்வரன் தப்பித்துக் கொள்கிறார்.

இதே வேளை ஊர்மிளா விவகாரத்தால் பிரபாகரன் உமாமகேஸ்வரன் பிரிவு நிரத்தரமாகி விட தன்னை புளொட்டில் இணைத்து கொண்டார் சிவனேஸ்வரன்.

மேலும் அமிர்தலிங்கத்தை தனது புதிய பாதை பத்திரிகைகளில் விமர்சித்த போராளி சுந்தரமும் யாழ்ப்பாணத்தில் சித்ரா அச்சகத்தில் வைத்து 02.01.1982 அன்று புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதன் பின்னால் உமாமகேஸ்வரன், சிவனேஸ்வரன் மற்றும் கண்ணன் ஆகியோர் இந்தியா திரும்பி சென்னையில் தங்கி கொள்கின்றார்கள்.

19.05.1982 அன்று சென்னை பாண்டி பஜாரில் உள்ள உணவகத்துக்கு உமாமகேஸ்வரனும், அவரது இயக்கத்தை சேர்ந்த கண்ணன் என்பவரும் மோட்டார் சைக்கிளில் வந்திருந்தனர்.

சாப்பிட்டு விட்டு வெளியே வந்த இருவரும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை நெருங்கினர். பிரபாகரன் அங்கு நிற்கின்றமையை கவனித்து விட்டார் உமாமகேஸ்வரன்.

பிரபாகரனுடன் அவரது இயக்கத்தை சேர்ந்த ராகவன் என்பவரும் நின்று இருந்தார். ராகவன் புலிகள் அமைப்பின் ஆரம்ப கால உறுப்பினர். புpன்னர் நண்பனின் மனைவியை தூக்கிக்கொண்டு லண்டனுக்கு தப்பியோடிய அவர் புலிகள் அழிக்கப்படும்வரை பொந்துக்குள் ஒழிந்திருந்து தற்போது வெளியில் வந்துள்ளார்.

பாண்டி பஜாரில் பிரபாகரனை கண்டமையுடன் உஷார் அடைந்தார் உமா மகேஸ்வரன். சூடு நடத்து கின்றமைக்கு பிரபாகரனுக் சந்தர்ப்பம் கொடுக்க கூடாது என தீர்மானித்துச் சொந்தத் துப்பாக்கியை உருவினார் உமா மகேஸ்வரன். கிட்டத்தட்ட அதே எண்ண ஓட்டத்துடன் அதே கணத்தில் பிரபாகரனும் துப்பாக்கியை உருவினார்.

கைத்துப்பாக்கியால் சுட்டார் பிரபாகரன். ஆனால் உமா மகேஸ்வரன் காயம் எதுவும் இன்றி தப்பித்துக் கொண்டார். உமா மகேஸ்வரனுடன் வந்திருந்த கண்ணன் மீது துப்பாக்கி சூடு பட்டு இரத்தம் வழிந்தது.

சம்பவ இடத்தில் இருந்து உமா மகேஸ்வரன் விரைவில் தப்பிச் சென்று விட்டார். துப்பாக்கிச் சூட்டால் அதிர்ச்சி அடைந்து இருந்த மக்களின் கவனம் பிரபாகரன் மீதும் ராகவன் மீதும் படிந்தது. மக்கள் இவர்களை பிடிக்க வர பிரபாகரனும், ராகவனும் பாண்டி பஜாரில் இருந்து குண்டியில் காலடிபட ஒடத்தொடங்கினார்கள்.

பொதுமக்கள் துரத்திச் செல்ல பாண்டிபஜார் வீதியில் ஓடிய பிரபாகரன் அவர்களை எதிரே வந்த ஒருவர் மடக்கிப் பிடித்தார். தமிழக காவல்துறையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் அவர். பெயர் மாணிக்கம். மாம்பலம் பொலிஸ் நிலையத்தில் பணி புரிந்து வந்தவர்.

சம்பவ நேரம் பர்மா பஜாரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த மாணிக்கம் பொதுமக்களின் துணையுடன் பிரபாகரனையும் ராகவனையும் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த கண்ணனை மாம்பலம் பொலிஸ் கைது செய்தது.

இதைவேளை கண்ணன் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சிவனேஸ்வரன் சைதாப்பேட்டையில் கைது செய்யப்பட்டார். உமாமகேஸ்வரன் தப்பி ஒடி கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நிற்கும் பொழுது தன்னை நோக்கி வந்த பொதுமகனை பொலிஸ் என எண்ணி சுட்டுவிடுகின்றார். சூடுபட்டநபர் படுகாயமடைந்து விட உமாமகேஸ்வரன் கும்மிடிப்பூண்டி பொலிசாரல் கைது செய்யப்பட்டார்

இதேவேளை நீதிமன்றம் பிரபாகரன் மதுரையிலும் ராகவன் புதுக்கோட்டை உள்ள பொலிஸ் நிலையத்திலும். கண்ணன் ஈரோடு மாவட்டத்தில் பவானியில் உள்ள பொலிஸ் நிலையத்திலும் சிவனேஸ்வரன் திருச்சியிலும் பொலிஸ் நிலையத்திலும் கையெழுத்திடவேண்டும் என்ற நிபந்தனையில் பிணையில் விடுதலை செய்தது.

இதேவேளை நீதிமன்றம் நிபந்தனையை தளர்த்த சிவனேஸ்வரன் இரகசிய முகாம் ஒன்றில் புளொட் அமைப்பை சேர்ந்த முக்கிய உறுப்பினகளான வெற்றி செல்வன் மற்றும் மாதவன் ஆகியோருடன் தங்கியிருந்தார். இதேவேளை கண்ணனும் உமாவும் சென்னையில் தங்கி கொள்கின்றனர். இரகசிய முகாமில் சிவனேஸ்வரன் சென்னையை அண்டிய புளொட் பயிற்சி முகாம்களுக்கு சென்று பயிற்சி வழங்கி வந்தார்.

ஒருநாள் உமா மகேஸ்வரன் பெண் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் செல்வதை அவதானிக்க சிவனேஸ்வரன். இந்தப் பெண்ணையே பின்னாளில் உமாமகேஸ்வரன் திருமணம் செய்து கொண்டார்.

புளொட் முக்கிய உறுப்பினர்கள் முன்னிலையில் உமா மகேஸ்வரனுடன் குறித்த பெண் தொடர்பாக கடும் விமர்சனங்களை முன்வைத்தார் சிவனேஸ்வரன். இங்கு தான் ஆரம்பித்து உமா சிவனேஸ்வரன் விரிசல். மேலும் உமா காக்கா விரிசல் ஆரம்பித்த இடத்தில் இருந்த புளொட் முக்கிய உறுப்பினர் இன்றும் சாட்சியாக இருப்பதை என்னால் உறுதிப்படுத்த முடிகின்றது

பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த பிரபாகரன் யாருக்கும் அறிவிக்காது இலங்கைக்கு தப்பி ஓட ஏனையவர்களின் பிணை நிராகரிக்கப்பட்டு உமாமகேஸ்வரன், கண்ணன் மற்றும் சிவனேஸ்வரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர் . சிறையிலும் உமா சிவனேஸ்வரன் விரிசல் அதிகரிக்கின்றது

1983ம் ஆண்டு ஜூலை கலவரத்தின் பின்னர் சிறையில் இருந்து உமாமகேஸ்வரனும் கண்ணனும் சிவனேஸ்வனும் விடுதலை செய்யப்பட்டனர்

இந்நிலையில் உமா சிவனேஸ்வரன் விரிசல் நிரந்தரமாகி விட 1985 ம் ஆண்டு ஆரம்பத்தில் சங்கிலி என்றழைக்கப்படும் கந்தசாமியால் விசாரணை என்ற பெயரில் சிவனேஸ்வரன் கைது செய்யப்பட்டு சுழிபுரத்தை சேர்ந்த மொக்கு மூர்த்தி என்பவரின் பொறுப்பில் விசாரணைக்கு ஒப்படைக்கபட்டார் சிவனேஸ்வரன்.

கந்தசாமியும் மொக்கு மூர்த்தியும் சுழிபுரத்தை சேர்ந்தவர்கள் என்பதோடு கந்தசாமியின் தீவிர விசுவாசி மொக்கு மூர்த்தி

தளுசாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு என்னும் இடத்தில் வைத்து மொக்கு மூர்த்தியால் சித்திரவதை செய்யப்பட்டு சித்திரவதை தாங்காமல் இறந்து விட்டார் சிவனேஸ்வரன்

சிவனேஸ்வரன் சித்திரவதை செய்யப்பட்டு இறந்த பின்னாளில் தனது தம்பி படுகொலைக்கு நீதி கேட்டு சென்னை வருகிறார் சிவனேஸ்வரனின் மூத்த அண்ணன் விக்கினேஸ்வரன். சென்னையில் உமாவுடன் வாக்கு வாதத்தில் ஈடு பட்டுவிட்டு கடல் வழியாக இலங்கைக்கு திருப்பி கொண்டிருந்தவேளை உமாமகேஸ்வரனின் கட்டளைக்கு அமைய. கொல்லப்படுகின்றார் விக்கினேஸ்வரன்

தமிழ் விடுதலைக்கு தங்களது குடும்பத்தையே அர்பணித்த சிவனேஸ்வரனின் குடும்பம் பின்னாளில் கூடு கலைந்திட்ட குருவிகள் போல் உடுவிலை விட்டு புலம் பெயர்ந்து விட்டார்கள்.

Read more...

Wednesday, July 17, 2019

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட சகலருக்கும் மரணதண்டனை வழங்கவேண்டும் என்கிறார் மைத்திரி!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பெலேந்த ரஜமகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தாது கோபுரம், நூல் நிலையம் மற்றும் சமய உரை மண்டபம் ஆகியவற்றை நேற்று மகாசங்கத்தினரிடம் கையளிக்கும் புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மரண தண்டனையை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சட்டமூலமொன்றைக் கொண்டு வருவதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர்.

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற அழிவுகளின் மூலம் சுமார் 300 அப்பாவி மக்களின் உயிர்களைப் பலியெடுத்த கொடூர பயங்கரவாத நடவடிக்கைக்கு வகை கூரவேண்டியவர்களுக்கு வழங்கப்படவேண்டிய தண்டனையை தவிர்ப்பதற்காக எடுக்கப்படும் முயற்சியாகவே அதைப் பார்க்கின்றேன்.

நாட்டின் குற்றவியல் சட்டத்துக்கேற்ப கொலை, இராஜ துரோகம் போன்று பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகக் குற்றவாளியாக இனங்காணப்பட்டால் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும்.

எனினும், மரணதண்டனையை நீக்குவதற்கு அரசில் உள்ள சிலர் எடுக்கின்ற முயற்சியின் மூலம் எந்தவொரு குற்றவாளிக்கும் தண்டனை வழங்க முடியாத நிலை ஏற்படும்.

மத்திய வங்கி கொள்ளைக்குப் பொறுப்பான அனைத்து வகை கூறவேண்டியவர்களும் தற்போது இனங்காணப்பட்டிருக்கின்றனர். அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நாட்டுக்கு வெளியே உள்ளவர்களுக்கு சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்குக் கொண்டு வருவதற்காக சிங்கப்பூர் பிரதமருடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடினேன்.

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிரான விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெறுகினறன. அவர்களுக்கு எதிராக தெளிவான சாட்சிகள் உள்ளன. சட்டத்துக்கு அமைவாக அவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும்” – என்றார்.

Read more...

Tuesday, July 16, 2019

தேரர்களை ஒரினச்சேர்கையாளர்கள் என்ற ரஞ்சன் ராமநாயக்க கொதிநீரில்.

இலங்கையின் பொது அரங்கில் இரத்தத்திற்காக ஒருசில பிக்குகளே கூக்குரலிடுகின்றனர் என்றும் அவர்களில் 90 வீதமானவர்கள் சிறுவயதில் பிரதான பிக்குகளால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகி பின்னர் அவர்களும் அதையே செய்தவர்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்து நாடளாவிய ரீதியில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இக்கருத்தானது மகா சங்கத்தினருக்கு பெரும் அவமானத்தை தேடித்தந்துள்ளதாகவும் , ரஞ்சன் தனது கருத்தினை வாபஸ்பெற்றுக்கொள்வதுடன் தேரர்களிடம் பௌத்தர்களிடமும் உடனடியாக மன்னிப்புக்கோரவேண்டும் என்ற கோரிக்கை பல தரப்புக்களிடமிருந்தும் பலமாக வெளிவந்தவண்ணமுள்ளது.

இது தொடர்பாக முதன்முதலில் எச்சரிக்கை விடுத்த மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பேப்பிட்டி சுமணதிஸ்ஸ தேரர், ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்புக்கோராதவிடத்து அவரது வாயை பாராங்கல்லுடன் உரசவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஞானசார தேரர் உட்பட பல தேரர்கள் கொதித்தெழுந்துள்ள நிலையில், இக்கருத்துதொடர்பாக விளக்கமளிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கள் ராமநாயக்கவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டுள்ள கருத்துகளை நிராகரிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில், எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் கடிதம் மூலம் விளக்கமளிக்குமாறு வேண்டி ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

மறுபுறத்தில் பௌத்த தேரர்களை இழிவுபடுத்தியவர்களை இந்த நாட்டின் தலைமைகள் தண்டிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

காலி - போத்தல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இன்று இலங்கையில் வணக்கத்திற்குரிய பௌத்த தேரர்களை போன்று துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் தரப்பினர் வேறும் எவரும் கிடையாது.

கடந்த நான்கு ஆண்டுகளில் பௌத்த தேரர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டும் பல்வேறு விதமான துன்புறுத்தல்களுக்கு இலக்காகியும் உள்ளனர்.

பௌத்த தேரர்கள் மட்டுமன்றி ஏனைய மதத் தலைவர்களும் இழிவுபடுத்தப்படுகின்றனர். அண்மையில் பிரதி அமைச்சர் ஒருவர் பௌத்த தேரர்களை இழிவுப்படுத்தியுள்ளார்.

இது தற்செயலாக இடம்பெறும் செயலாக கருதப்பட முடியாது, இது பௌத்தர்களை ஆத்திரப்படுத்தி குழப்பம் விளைவிக்கும் நோக்கிலானது.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் பௌத்த தலைவர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் அது பௌத்த மதத்திற்கும், நாட்டுக்கும் செய்யும் இழிவாகவே கருதப்பட வேண்டுமென மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Read more...

பொதுக்கூட்டத்திற்கான பகிரங்க அழைப்பு விடுக்கின்றது சுவிஸ் உதயம்.

கிழக்கிலங்கை மக்களை மையமாகவும் சுவிட்சர்லாந்தினை தளமாகவும் கொண்டுள்ள உதயம் அமைப்பின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சொலத்தூண் மாநிலத்தில் இடம்பெறவுள்ளது.

அமைப்பினுள் அண்மையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாக நிர்வாக உறுப்பினர்கள் , அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்களுடன் விரிவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் கலந்துரையாடும் பொருட்டு அமைப்பின் தலைவர் திரு. சிவஞானசுந்தரம் அவர்களால் இப்பொதுக்கூட்டத்திற்கான பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுக்கூட்டத்தின்போது அமைப்பின் எதிர்காலச்செயற்பாடுகள் மற்றும் மறுசீரமைப்பு தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு பொதுமக்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் உள்வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாணத்தின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள பொதுமக்கள் யாவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

காலம் : 21.07.2019 பிற்பகல் 14.00
இடம் : Lindenstrasse 33,
2540 Grenchen


Read more...

மதம் பிடித்த பிராந்தியங்கள் -5

அமெரிக்க அரசியலில் செல்வாக்கு மிக்க சிந்தனை குழுக்களில் ஒன்றான The Heritage Foundation என்ற அமைப்பு, இந்த ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதியிட்ட , சிறிலங்காவின் அரசியல் நிலைமை குறித்து மிக விபரமான ஒரு அறிக்கையை தயாரித்திருந்தது.

இந்த அறிக்கை முன்னாள் அதிபர் ராஜபக்சவை முதன்மைப்படுத்துவதாகவும் ராஜபக்ச குடும்பமே, இந்த வருட இறுதியில் நாட்டின் உயர்பதவியை ஏற்க வல்லதாக இருக்கும் என்பது, அந்த அறிக்கையின் சாரம்சமாகும்,

ஆனால், முன்னர் என்றுமில்லாத அமெரிக்க உறவின் வளர்ச்சியை 2017இல் கண்டதாக குறிப்பிடுகின்ற அந்த அறிக்கை, ஜனநாயகத்தை தரமுயர்த்துவதற்கும், மனித உரிமையையும் அடிப்படை சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கும், இருநாடுகளும் சேர்ந்து உழைப்பதாக உறுதி கூறப்பட்டுள்ளது.

அதேவேளை பாதுகாப்பு விவகாரங்களில் திறந்த , சுதந்திரமான இந்தோ -பசுபிக் பிராந்தியம் என்ற பார்வையை அமெரிக்கா கொண்டுள்ளது.

சுதந்திரமான, திறந்த இந்தோ- பசுபிக் பிராந்திய மூலோபாயம் என்ற பெயரில் தேவைக்கு ஏற்ற வகையில் தனது படைகளை நகர்த்தக் கூடிய ஒரு ஒப்பந்தத்தை சிறிலங்காவுடன் செய்து கொள்ளமுனைகிறது அமெரிக்கா.

சுதந்திரமான, திறந்த இந்தோ- பசுபிக் பிராந்தியம் என்ற சொல்லாடல் 2017 ஆம் ஆண்டு ஆசிய -பசுபிக் பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பினால், பிரயோகிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

தனது படைகளையும், கலன்களையும் சிறிலங்கா குடியகல்வு குடிவரவு திணைக்களம், சுங்க திணைக்களம் ஆகியவற்றின் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் சிறிலங்கா அரசியல் எல்லைக்குள் தனியாகவோ, கூட்டாகவோ உட்பிரவேசிக்கவும் வெளியகலவும் வசதியாக இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்குத் தேவைப்படுகிறது.

பல்வேறு உட்பிரிவுகளை கொண்ட இந்த ஒப்பந்தம், ஏறத்தாழ அமெரிக்காவின் ஒரு மாநிலமாக சிறிலங்கா மாறுவது போன்ற எண்ணப்பாட்டை உருவாக்குவதாக, சில சிறிலங்கா ஆய்வாளர் தரப்பினால் பார்க்கப்படுகிறது .

ஆனால், இது சிறிலங்காவின் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் விரோதமான ஒரு ஒப்பந்தம் என்பது சிறிலங்காவின் பார்வையாக உள்ளது.

சிறிலங்காவில் அமெரிக்க சார்பாளராக கருதப்படும் ரணில் விக்கிரமசிங்க கூட விரைவில் வர இருக்கும் தேர்தலில் சிங்கள பௌத்த மத தேசியவாதம் முக்கிய இடம்பிடிக்க இருப்பதால், அமெரிக்காவுக்காக விவாதிக்க முடியாத நிலையில் உள்ளார்.

இதனால் சிறிலங்காவில் இடம்பெறும் மத வன்முறைகளையும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புருவாக்கத்தையும் கூட, எந்த அரசியல் கட்சிகளும் நேரடியாக எதிர்த்து நிற்க முடியத நிலையில் உள்ளன. மத அரசியலே இந்த ஆண்டின் இறுதியில் வரும் தேர்தலில் முக்கிய இடம் பிடிக்க இருக்கிறது.

சிங்கள பௌத்தம் சார்ந்த பெரும்பான்மை ஜனநாயக அரசியலில் வெற்றி பெறப்போவது அதீத மதவாதமே என்ற தீர்மானமும் கண்டு விட்ட பின்பு, பல்லினத்தன்மை என்பது முற்று முழுதாக மறுக்கப்பட்ட ஒரு தேசமாகவே சிறிலங்கா சென்று கொண்டு இருக்கிறது.

இலங்கையை ஆட்கொண்டிருந்த பயங்கரவாதத்தை அடக்க சிறிலங்காவுக்கு உதவிய சர்வதேசம், மேலும் தமது தேசிய நலன்களின் தேவைகளை அடிப்படையாக கொண்டு பெரும்பாண்மை மதவாத சக்திகளை ஊக்குவிக்கும் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது,. சிறிலங்காவில் அரச கட்டமைப்பு என்ற பெயரில் மதவாத சிந்தனைகள் மேலும் மேலும் வளர்த்தெடுக்கப்படுகிறது. சட்டஅங்கீகாரம் பெற்று வருகிறது.

உலகில் மத அடிப்படையில் சட்ட அங்கீகாரம் பெற்ற மேற்கு நாடுகளின் ஆதரவுடன் உள்ள நாடுகளான சவூதி அரேபியா , இஸ்ரேல், ஈரான், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளின் வரிசையில் சிறிலங்காவும் மிக சில வருடங்களில் நிறம் மாற்றப்படும் நிலையுள்ளது.

சிறிலங்காவிலும் முகவர் யுத்தம்

சர்வதேச அரங்கில் இன்றை காலகட்டம் முகவர் யுத்தம் அல்லது பதிலிகள் யுத்த காலகட்டமாக பல்வேறு ஆய்வாளர்களாலும் பார்க்கப்படுகிறது. அதாவது வல்லரசுகள் அவற்றின் செலவுகளை மட்டுபடுத்தும் வகையில், தமது பிரதிநிதிகள் ஊடாக தமது எதிரி நாட்டிற்கு சேதம் விளைவித்தல் என்பதுடன், நாடுகளை யுத்த நிலையில் ஈடுபட வைத்திருப்பதன் வாயிலாக அரசியல் இலாப நோக்கை எட்டும் போக்கு இந்த யுத்த முறையாகும் .

இந்த யுத்தத்தில் ஈடுபடக் கூடிய அலகுகள் பல்வேறு தேசிய இனங்களையும் மதங்களையும் சார்ந்தவர்களாக நாடுகளுக்கு நாடு பிராந்தியங்களுக்கு பிராந்தியம் வேறுபட்டவைகளாக இருக்கின்றன. இதில் ஒன்று தான் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பாகும்.

மத்திய கிழக்கு நாடுகளில் ஐஎஸ் ஐஎஸ் அமைப்புக்கு, மேற்கு நாடுகளில் இருந்தும் இஸ்ரேலிய, சவூதி அரசுகளிடமிருந்தும் முகவரி தவறாது எவ்வாறு ஆயுத தளபாடங்களும் நிதி உதவியும் பல்வேறு முகவர்களுடாக கொண்டு செல்லப்படுகிறது என்பதை ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல ஈரானும், லெபனானில் இருந்து தொழிற்படும் ஹிஸ்புல்லா இயக்கம், தெற்கு யேமனில் போராடும் கவுட்டி படைகள் என பல்வேறு ஷியா இஸ்லாமிய குழுக்களை, சவூதி அரேபியா மீதும் இஸ்ரேலின் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தி வருகிறது.

இதேபோல சிறிலங்காவிலும் இந்த முகவர் யுத்த ஏற்பாடுகள் அந்த நாட்டின் பூகோள அரசியல் தேவைகள் சார்ந்து பல்வேறு மேற்குலக, மத்திய கிழக்கு பிராந்திய, தெற்காசிய பிராந்திய வல்லரசுகளின் வழிநடத்தலில் ஒருசில அரசியல் இலாபம் பெறக்கூடிய அரசியல்வாதிகளின் இணக்கத்துடன் சிறிலங்காவில் தமக்கு சாதகமான அரசியல் நிலைமை ஒன்றை உருவாக்கும்பொருட்டு நடைபெற்று வருகிறது.

இதனை நிரூபிக்கும் வகையில் ஏற்கனவே சீன அமெரிக்க போட்டியை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் பொருட்டு சிறிலங்கா வல்லரசுகளுடனான பேரம் பேசலில் ஈடுபட்டு இருந்தது. இதில் இரு வல்லரசுகளும் சிறிலங்காவில் ஆழ ஊடுருவி சமூக மட்டத்தில் ஆளுமை செலுத்தும் வரைக்கும் சென்றுள்ளன. பல அரசியல் தலைவர்களை தமது தேவைக்கு ஏற்ப மனம் மாற்றவும் முனைந்திருக்கின்றன.

இதில் சிங்கள பௌத்த பேரினவாத தூண்டுதலும் இஸ்லாமிய மதஅடிப்படைவாத சிந்தனைகளும், அதேவேளை முன்பு குறிப்பிட்டது போல ஒரே காலப்பகுதியில் இந்தியாவில் இந்து மதவாத எழுச்சியின் தேவையும் ஒருங்கே இணைவாக ஏற்பட்டதன் காரணமே, சிறிலங்காவில் இஸ்லாமிய மதவாதிகளை கருவிகளாக பயன்படுத்துவதன் தேவை சிறிலங்காவில் ஏற்பட்டு உள்ளது.

சிறிலங்காவில் இடம் பெற்று வரும் அரசியல் மாற்றங்களை பொறுத்தவரையில் ராஜபக்ச குடும்பத்தின் மீள் வரவும், சர்வதேச அளவில் தற்போது எழுந்துள்ள தாராளவாதத்திலிருந்து, ஜனரஞ்சகவாத அரசியல் கோட்பாட்டு எழுச்சியும், கோத்தாபய ராஜபக்சவின் வரவும் தவிர்க்க முடியாது என்று அமெரிக்க உணர்ந்துள்ளது.

இதனை வெளிப்படுத்தும் வகைகளில் குண்டு வெடிப்பின் பின்பு மே மாதம் 8ஆம் திகதி கொழும்பில் இடம் பெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொண்ட முன்னைநாள் அமெரிக்க தூதுவர் றொபேட் ஓ பிளேக், 2009 ஆம் ஆண்டு முடிவுற்ற ஈழ யுத்தத்தில் பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ச, யுத்தசூழலிற்கு ஏற்ப வல்லுனர் குழுவை அமைத்து முடிவுகளை எடுக்கவும் அவற்றை செயற்படுத்தவும் ஒரு வலுவான தேசிய தலைமைக்கு அழைப்பு விடுத்ததாக நினைவு கூர்ந்து புகழ்ந்துரைத்தார்.

அமெரிக்கா தற்பொழுது பெரும்பான்மை அரசியலின் பக்கம் சார்ந்து செயற்பட முயற்சிப்பதையே இது காட்டுகிறது. ஏனெனில் கடந்த யுத்த காலத்தின் போது சிறிலங்காவுக்கு நேரடி ஆயுத உதவி செய்ய முடியாது போனதை இட்டு றொபேட் ஒ பிளேக் கவலையும் தெரிவித்திருப்பது இங்கே குறிப்பிடதக்கதாகும்.

இந்த பேச்சுகளுக்கு இணங்கி பெரும்பான்மை ஜனநாயக அரசியலில் பதவிக்கு வரும் ராஜபக்ச குடும்பத்தவர்கள் சிறிலங்காவின் எதிர்காலத்தை மீண்டும் இரத்தக் களரிக்குள் செல்லாது தடுப்பார்களா என்பது தான் கேள்வி.

–லண்டனில் இருந்து லோகன் பரமசாமி-

Read more...

Monday, July 15, 2019

முதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...

எதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் மனைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலனி பிரேமதாச.

நேற்று ஹட்டன் D.K.W கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற முதல் மகளிர் சம்மேளனத்தின் பிரதம விருந்தினராக பங்கேற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தோட்டப்புற பெண் தொழிலாளர்களின் சுகாதார நிலைமை,வாழ்வாதாரம் பற்றியும் கலந்துரையாடப் பட்டது.

இதன் போது பெண் தொழிலாளர்களால் முன் வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு வெகு விரைவில் சிறந்த தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார்.

அங்கு உரையாற்றிய அவர் தொடர்ந்து பேசுகையில் :

அமைச்சர் சஜீத் பிரேமேதாச என்பவர் நாடளாவிய ரீதயில் மக்களுக்கு சேவையினை முன்னெடுத்து வருவபவர் அந்தவகையில் மலையக மக்கள் எதிர் பார்க்கின்ற காணி பிரச்சினைகளுக்கும் நிச்சயமாக தீர்வினை பெற்றுகொடுப்பார்.

மலையகபெருந்தோட்டங்களில் வாழ்கின்ற பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் இன்னல்களுக்கும் மத்தியில் வாழ்ந்துவருவது நாடறிந்த உண்மை. மலையகம் என்பது எமது இலங்கை நாட்டின் ஒரு பகுதி.; நாட்டின் கல்வி என்பது கொழும்பு பகுதியில் ஒரு விதமாகவும் மலையகத்தில் ஒருவிதமாகவும் இருப்பதை என்னால் ஏற்று கொள்ள முடியாது.

நாட்டில் வாழ் அனைத்து மக்களுக்கும் ஒரேவிதமான கல்வி கிடைக்கவேண்டும் கல்வி என்பது அனைவருக்கும் அவசியமானது ஒரு மனிதனுடைய வாழ்க்கையினை தரபடுத்துவதில் கல்வி என்பது முதன்மை பெருகிறது. இந் நிலையில் இங்கு வந்திருக்கின்ற பெண்களுடன் கலந்துரையாடிய போது இச்சமுகத்தின் கல்வி நிலை பல்வேறு சாவால்களுக்கு மத்தியில் இருப்பதை என்னால் உனரமுடிந்தது.

அமைச்சர் சஜித்பிரேமேதாச அவர்களுடைய பணிப்புரையின் கிழ் மலையகத்தில் மாத்திரம் அல்ல இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து ஏழைமக்களுடைய பிள்ளைகளுக்கு புலமை பரீசில் எனும் வேலைத்திட்டத்தை கொண்டு வந்து அதனூடாக நீங்களும் கல்வி ரீதியில் உயர்வடைய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இந்த வேலைத்திட்டத்தினை வார்த்தையில் மாத்திரம் கூறாது நடைமுறைக்கு கொண்டு வருவேன். ஏன் எனில் சிலர் இதுபோன்ற கலந்தரையாடல்களில் வாக்குறுதிகளை வழங்கியிருப்பார்கள் அதனை நிறைவேற்றியிருக்கமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com