Friday, June 28, 2019

ஜூலியன் அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதைத் தடுக்கும் ஓர் உலகளாவிய பிரச்சாரத்திற்காக!

அவரது சுதந்திரத்தைப் பாதுகாக்க ஓர் உலகளாவிய பாதுகாப்பு குழுவை உருவாக்குவதற்காக!

உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் (ICFI) இணைந்திருக்கும் சோசலிச சமத்துவக் கட்சிகளும் (SEP) விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதை நிறுத்துவதற்காகவும், அவரினதும் மற்றும் இரகசிய ஆவண வெளியீட்டாளர் செல்சியா மானிங்கினதும் விடுதலைக்காகவும் ஓர் உலகளாவிய பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுக்கின்றன.

கூட்டங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொது விவாதங்கள் என சர்வதேச அளவில் போராட்ட நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதன் மூலமாக மட்டுமே, ஜூலியன் அசான்ஜை மவுனமாக்கவும் அழிக்கவும் செயல்பட்டு வரும் பிற்போக்குத்தனமான அரசாங்கங்களின், அவற்றின் உளவுத்துறை முகமைகள் மற்றும் அரசியல் முகவர்களின் திட்டங்களை தகர்த்து தோற்கடிக்க முடியும். ஜூலியன் அசான்ஜினை பாதுகாப்பதற்கும், உண்மையில் அனைத்து தொழிலாளர்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை பாதுகாப்பதற்கும், மக்கள்தொகையில் பாரிய பெரும்பான்மையாக இப்புவியில் மிகவும் சக்தி வாய்ந்த சமூக சக்தியாக விளங்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் எழுச்சி பெறச் செய்வதும் அணிதிரட்டுவதுமே இப்பிரச்சாரத்தின் நோக்கமாக இருக்கவேண்டும்.

ஜூன் 12 அன்று, பிரிட்டிஷ் உள்நாட்டு செயலர் சாஜித் ஜாவித் வெளிநாட்டிடம் ஒப்படைக்கும் நடைமுறைகளுக்குச் சான்று வழங்கி, அமெரிக்காவிடம் ஜூலியன் அசான்ஜை விசாரணை கைதியாக ஒப்படைப்பதுடன், பெப்ரவரி 2020 இல் முடிவடைய உள்ள அரசியல்ரீதியில் மோசடியான ஒரு போலி-சட்டபூர்வ நடைமுறைகளைத் தொடங்கி வைத்தார்.

அசான்ஜைப் பிடித்து வைத்திருப்பதற்கு எந்த அடித்தளமும் இல்லை என்று ஒரு சுவீடன் நீதிபதி குறிப்பிட்டு வெறும் ஒரு வாரத்திற்குப் பின்னர், வெளிநாட்டிடம் ஒப்படைக்கும் இந்த நடைமுறைக்கு உள்துறை செயலர் முத்திரை குத்தியிருப்பது, அசான்ஜின் மதிப்பைக் கெடுத்து தனிமைப்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ள பொய்களை அம்பலப்படுத்துகிறது. ஆரம்பத்தில் இருந்தே, அமெரிக்கா, பிரிட்டன், சுவீடன் மற்றும் ஆஸ்திரேலியாவில் அரசு அதிகாரிகளின் நோக்கம் ஏகாதிபத்திய போர் குற்றங்களை அம்பலப்படுத்திய இந்த துணிச்சலான பத்திரிகையாளரை மவுனமாக்கி அழிப்பதாக இருந்துள்ளது. இரும்பு இதயம் கொண்டவரும் மனித கண்ணியம் மற்றும் நேர்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் செல்சியா மானிங்கும் அதேபோல அழிவுக்கான இலக்கில் வைக்கப்பட்டுள்ளார்.


செல்சியா மானிங்

ஜூலியன் அசான்ஜைக் கையாள்வதில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஒவ்வொரு அம்சமும் நீதியைக் கேலிக்கூத்தாக ஆக்குவதாக உள்ளது. ஜூன் 13 இல் பிபிசி வானொலி 4 க்கு வழங்கிய பேட்டியில், பிரிட்டிஷ் உள்துறை செயலர் சாஜித் ஜாவித் இவ்வாறு பெருமைபீற்றினார்: “முதலாவதாக பொலிஸ் அவரை [அசான்ஜை] கைது செய்ததற்காகவும், அவர் பிரிட்டன் சட்டத்தை உடைத்ததற்காக இப்போது அவர் சரியாகவே சிறை கம்பிகளுக்குப் பின்னால் இருக்கிறார் என்பதிலும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.” உண்மையில் அசான்ஜ் எந்த சட்டத்தையும் உடைக்கவில்லை. அவர் 2012 இல் சட்டபூர்வமாகவே ஈக்வடோரிய தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரினார், அப்போது அவர் இட்டுக்கட்டப்பட்ட பாலியல் நடத்தை குற்றச்சாட்டுகளை முகங்கொடுத்திருந்த நிலையில் சுவீடன் அதிகாரிகள் அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்க திட்டமிட்டு வந்தனர்.

கட்டப்பஞ்சாயத்து போன்ற நீதிமன்றத்திற்குத் தலைமை தாங்கும் நீதிபதி Emma Arbuthnot, பிற்போக்குத்தனமான பழமைவாத கட்சி அரசியல்வாதி James Arbuthnot இன் மனைவி ஆவார். பிரபுக்கள் சபையில் இடம் பிடிப்பதற்கு முன்னதாக, Baron Arbuthnot பாதுகாப்பு அமைச்சகத்தில் உயர் பதவி வகித்து வந்தார். அவர் பிரிட்டனின் அரசுக்குள் உளவுத்துறையுடனும் மற்றும் ஆயுதத் தொழில்துறையிலும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளார். அவர் மக்களின் பொதுநிதியை தனிப்பட்ட பயன்பாட்டுக்குத் திருப்பியதற்காக உத்தியோகபூர்வமாக கண்டனத்திற்குள்ளானவர். Emma Arbuthnot இன் தனிப்பட்ட தொடர்புகளை வைத்து பார்த்தால், ஜூலியன் அசான்ஜின் கதியைத் தீர்மானிக்கும் அந்த நீதிமன்ற நடைமுறைகளுக்கு தெளிவாக அவர் தலைமை வகித்திருக்கவே கூடாது. ஆனால் தன்னைதானே அவர் மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டுமென்ற கோரிக்கைகளையும் Arbuthnot நிராகரித்து விட்டார்.

நீதிபதி Arbuthnot தலைமையிலான அந்த சட்ட கேலிக்கூத்து எவ்வாறு முடியும் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். அந்த நடைமுறையின் ஒவ்வொரு விபரமும் மிக கவனமாக எழுதப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் Arbuthnot அவர் முடிவை வழங்குகையில், அவர் வழங்க இருக்கும் வரிகள் கூட ஏற்கனவே எழுதப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. அமெரிக்காவிடம் ஜூலியன் அசான்ஜை விசாரணை கைதியாக ஒப்படைப்பதற்கான நடைமுறைகள் பெப்ரவரியில் நிறைவடைய உள்ளன, அசான்ஜ் யாரை அம்பலப்படுத்த அதிகளவு செயல்பட்டுள்ளாரோ அங்கே அவர் அதே போர் குற்றவாளிகளின் பிடியில் நிறுத்தப்பட உள்ளார். ஏற்கனவே பதியப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், ஜூலியன் அசான்ஜ் 175 ஆண்டுகால சிறை தண்டனையை முகங்கொடுக்கிறார். அவர் எந்த மாதிரியான கொடூரமான சிறை நிலைமைகளில் அடைக்கப்படுவார் என்று அச்சுறுத்தப்பட்டுள்ளரோ அது "குரூரமான மற்றும் வழமைக்குமாறான தண்டனைக்கு" தடைவிதிக்கும் அமெரிக்க அரசியலமைப்பை ஏளனப்படுத்துவதாக இருக்கும்.

ஜூலியன் அசான்ஜின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அவரது பாதுகாப்பிற்கான ஒரு சர்வதேச பிரச்சாரம் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். சிறிதும் தாமதிக்க முடியாது. இன்றிலிருந்து பெப்ரவரிக்கு இடையே என்ன நடக்கிறதோ அதுவே தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும். ஜூலியன் அசான்ஜின் வாழ்வைப் பாதுகாக்க சர்வதேச தொழிலாள வர்க்கம், மாணவர்கள், இளைஞர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் புத்திஜீவிகளை அணித்திரட்ட ஓர் உலகளாவிய பிரச்சாரத்தை ஒழுங்கமைப்பது அவசியமாகும். ஜூலியன் அசான்ஜிற்காக பரந்தரீதியில், ஆழமாக உணரப்படுகின்ற, ஆனால் இப்போது நிலவுகின்ற மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின் உள்ளார்ந்த அனுதாபமும் ஆதரவும், அவரை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கான சதியை தோற்கடிக்கவும் மற்றும் அவர் விடுதலையைப் பெறுவதற்கும் போராடுவதற்காக, ஒரு நனவுபூர்வமான அரசியல் இயக்கமாக மாற்றப்பட வேண்டும்.

அசான்ஜ் ஒரு பயங்கர குற்றகரமான சதிக்கு ஆளாகி உள்ளார், இதில், உலகின் மிகவும் சக்தி வாய்ந்த அரசுகளும், உளவுத்துறை முகமைகள் மற்றும் அவற்றின் பெருநிறுவன ஊடக ஊதுகுழல்களும் சம்பந்தப்பட்டுள்ளன.

அசான்ஜை அழிப்பதற்கான இத்திட்டத்தின் கேவலமான விபரங்கள் அனைத்தையும், அதாவது பாலியல் நடத்தை குறித்த மோசடி வாதங்களைக் கொண்டு விக்கிலீக்ஸ் ஸ்தாபகரைச் சிக்க வைக்க எவ்வாறு திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தன, எவ்வாறு ஸ்வீடன் வழக்குதொடுனர்கள் பொய்யான குற்றச்சாட்டுக்களை விலைக்கு வாங்கியிருந்தனர், ஸ்டாக்ஹோம், இலண்டன், சிட்னி மற்றும் கீட்டோவின் உளவுத்துறை முகமைகள் எவ்வாறு அவற்றின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தன, அமெரிக்க அரசாங்கம் அசான்ஜைப் துன்புறுத்துவதற்கும் வழக்கில் இழுப்பதற்காகவும் சூத்திரதாரியாக செயற்பட்ட நிலையில், அது எவ்வாறு அதன் கையிலிருப்பிலுள்ள அனைத்து கையூட்டுக்கள் மற்றும் அச்சுறுத்தல்களை பயன்படுத்தியுள்ளது என்பது பற்றிய விபரங்கள் அனைத்தும் சீற்றத்தில் உள்ள பொதுமக்களுக்கு முழுமையாக அறியச் செய்யப்படும் ஒரு நேரம் வரும்.

அசான்ஜை இன்னலுக்கு உட்படுத்துதல் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு பாரிய தாக்குதலுக்குத் தாக்குமுகப்பாக உள்ளது, இது பேச்சு சுதந்திரத்தை அழிப்பது, புலனாய்வு இதழியலைச் சட்டவிரோதமாக்குவது, விமர்சகர்களை பீதியூட்டி பயங்கரமாக காட்டுவது, அரசின் குற்றங்கள் அம்பலப்படுத்தப்படுவதைத் தடுப்பது, சமூக சமத்துவமின்மை மற்றும் போருக்கு பாரிய மக்கள் எதிர்ப்பை ஒடுக்குவதே இதன் நோக்கமாகும்.

ஏற்கனவே அசான்ஜிற்கு எதிரான தேசத்துரோக சட்ட குற்றச்சாட்டுக்கள் வெளியிடப்பட்டமையே, பத்திரிகையாளர்கள் மீதான சர்வதேச தாக்குதல்களுக்கு மடைகளைத் திறந்து விட்டுள்ளது. யேமனில் இனப்படுகொலைப் போரில் அரசு உடந்தையாய் இருந்ததை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் பிரான்சில் வழக்கில் இழுக்கப்பட்டிருப்பது, போர் குற்றங்கள் மற்றும் உளவுபார்ப்பை அம்பலப்படுத்திய கட்டுரைகள் சம்பந்தமாக ஆஸ்திரேலியாவில் பொலிஸ் சோதனைகள் நடத்தப்பட்டிருப்பது ஆகியவை இவற்றில் உள்ளடங்கும்.



அசான்ஜை பாதுகாக்க 16 ஏப்ரல் 2019 இல் இலங்கையில் நடத்தப்பட்ட பேரணி

அமெரிக்காவுக்குள், ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க வரலாற்றிலேயே பேச்சு சுதந்திரம் மீதான மிகக் கடுமையான தாக்குதலாக அரசியலமைப்பின் முதல் சட்டதிருத்தத்தை அழிக்க முயன்று வருகிறது. உலகளவில், அது பத்திரிகையாளர்களையும், பதிப்பகத்தார் மற்றும் ஒவ்வொரு இடத்திலும் உள்ள நடவடிக்கையாளர்களை வழக்கில் இழுக்கும் நிலைமைகளை உருவாக்க முயன்று வருகிறது. இவர்களும், அமெரிக்க அரசின் வெறுப்புக்கு ஆளானால், இதேபோன்ற ஜோடிக்கப்பட்ட அமெரிக்க குற்றச்சாட்டுக்கள் மற்றும் வெளிநாட்டிடம் கைமாற்றப்படுவதை முகங்கொடுப்பார்கள்.

முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக அதிகரித்து வரும் சமூக எதிர்ப்புக்கு, ஆளும் உயரடுக்குகள், பாசிசவாத மற்றும் தீவிர வலதுசாரி இயக்கங்களை ஊக்குவிப்பதன் மூலமாகவும், முன்பில்லாதளவில் கடுமையான பொலிஸ்-அரசு நடவடிக்கைகளை பயன்படுத்துவதன் மூலமாகவும், போருக்கான அவற்றின் தயாரிப்புகளைத் தீவிரப்படுத்துவதன் மூலமாகவும் விடையிறுத்து வருகின்றன. அவர்கள் தொழிலாளர்களையும், இளைஞர்கள், கலைஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளை அச்சுறுத்தவும் மற்றும் பாரிய அரசியல் ஒடுக்குமுறைக்கான ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கவும் அசான்ஜை பலிக்கடா ஆக்கி வருகின்றனர்.

ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லா அரசாங்கங்கள், உளவுத்துறை முகமைகள் மற்றும் பெருநிறுவனங்களை விடவும் சர்வதேச தொழிலாள வர்க்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். முதலாளித்துவ வர்க்கம் அசான்ஜை இன்னல்படுத்துவதை சர்வாதிகாரத்திற்கான அதன் திட்டங்களுக்கான அச்சாணியாக பயன்படுத்துவதைப் போலவே, தொழிலாள வர்க்கமும் இராணுவவாதத்திற்கு எதிரான, ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான எல்லா தாக்குதல்களுக்கும் எதிரான ஓர் எதிர்தாக்குதலுக்கு அசான்ஜின் பாதுகாப்பை மையப்புள்ளியாக ஆக்க வேண்டும்.

இந்த போராட்டத்தின் வெற்றிக்கு ஓர் அரசியல் முன்னோக்கு அவசியப்படுகிறது. ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சியா மானிங்கின் பாதுகாப்பானது, ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புக்கான போராட்டத்தை முதலாளித்துவ சுரண்டல் மற்றும் அரசியல் ஒடுக்குமுறைக்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் சமூக போராட்டத்துடன் நனவுபூர்வமாக இணைக்கும் ஓர் உலகளாவிய மூலோபாயத்தால் வழிநடத்தப்பட வேண்டும். அங்கே சர்வதேச வர்க்க போராட்ட பேரலை அதிகரித்து வருகிறது, இது ஜூலியன் விடுதலையை வெற்றிகொள்வதற்கான போராட்டத்திற்கு சக்தி வாய்ந்த பாரிய அடித்தளத்தை வழங்குகிறது. ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சியா மானிங் அதைப்போல் உலகெங்கிலும் இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சக சகோதர சகோதரிகளைப் போலவே இறுதி ஆய்வுகளில் அவர்கள் வர்க்க போர் கைதிகளாவர்.

அமெரிக்கா மற்றும் போலாந்தில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம், மெக்சிகோவில் மக்கில்லாடோராவில் தன்னிச்சையான நடவடிக்கைகள், இந்தியாவில் பொது வேலைநிறுத்தம், அல்ஜீரியா, சிம்பாப்வே மற்றும் சூடானில் பாரிய இயக்கம், பிரான்சில் ஒடுக்கவியலாத மஞ்சள் சீருடை போராட்டங்கள், மிக சமீபத்தில், ஹாங்காங்கில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஆர்ப்பாட்டங்கள் என அதிகரித்து வரும் உலகந்தழுவிய வேலைநிறுத்த இயக்கமானது, பொது மக்கள் அவர்களின் அடிப்படை உள்நாட்டு சுதந்திரங்கள் மற்றும் சமூக உரிமைகளுக்காக போராட தீர்மானகரமாக இருக்கிறார்கள் என்பதற்கு சான்று பகிர்கின்றன. இத்தகைய போராட்டங்கள் ஒவ்வொரு நாட்டிலும் பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களை பீதியூட்டி உள்ளன.

ஜூலியன் அசான்ஜின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான இயக்கம் அடிமட்டத்திலிருந்து வர வேண்டும். அவரை வழக்கில் இழுத்து இன்னலுக்கு உள்ளாக்கி வரும் அரசாங்கங்களிடமே தார்மீகரீதியில் முறையிடுவது பயனற்றது என்பதை விடவும் மோசமானதாகும். அசான்ஜின் விடுதலைக்கு, ஆளும் வர்க்கத்தின் அரசியல் முகவர்களிடம் இருந்தும், எதிர்கட்சிகளிடம் இருந்தும், சுயாதீனமாக போராட வேண்டும். சமூக யதார்த்தத்தை சரியாக மதிப்பீடுசெய்வதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஒரு மூலோபாயத்தால் வழிநடத்தப்படும் போது, இந்த போராட்டம் ஜெயிக்க முடியும். ஆளும் உயரடுக்குகளின் ஈவிரக்கமற்றத்தன்மையைக் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது என்றாலும், அவர்கள் எல்லாம்வல்ல ஆற்றலுடையவர்கள் கிடையாது. அனைத்து உணர்வுகளிலும் தன்னைத்தானே மிகவும் முடக்கக்கூடிய அவநம்பிக்கைவாதம் (Pessimism), இந்த போராட்டத்திற்கு எந்த பங்களிப்பும் செய்யாது, மாறாக அழிவையே விளைவிக்கும். என்ன அடையப்படும் என்பது போராட்டத்திலேயே தீர்மானிக்கப்படும்.

இந்த போராட்டத்தை ஒரு புதிய மற்றும் உயர்ந்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்ல, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் குரலான உலக சோசலிச வலைத் தளமும் ICFI உடன் இணைந்துள்ள உலகெங்கிலும் உள்ள கட்சிகளும் ஓர் உலகளாவிய பாதுகாப்பு குழுவை உருவாக்க அழைப்பு விடுக்கின்றன. ஜூலியன் அசான்ஜை இன்னல்படுத்துவதை முடிவுக்குக் கொண்டு வரவும் மற்றும் அவரின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் சர்வதேச போராட்டத்தை ஒழுங்கமைத்து ஒருங்கிணைப்பதே இந்த குழுவின் நோக்கமாக இருக்கும். போராடுவதற்கான விருப்பம் பாரிய நடவடிக்கையாக மாற்றப்பட வேண்டும். இந்த அறிக்கையின் நோக்கம் உலகளாவிய பாதுகாப்பு குழுவை உருவாக்குவதற்காக பணியாற்றத் தொடங்குவதும் மற்றும் சர்வதேச நடவடிக்கைக்கான ஒரு வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்வதுமாகும்.

ஜனநாயக உரிமைகளுக்கான பாதுகாப்புக்கு கோட்பாட்டுரீதியில் பொறுப்பேற்கும் அடிப்படையில், இந்த வரலாற்று போராட்டத்தில் முற்போக்கான, சோசலிச மற்றும் இடதுசாரி தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம் மற்றும் ஒத்துழைப்பைக் கோருகிறோம். இந்த குழுவில் இணைபவர்கள் உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) முன்னெடுக்கும் அரசியல் கண்ணோட்டங்கள் மற்றும் வேலைதிட்டங்களின் அனைத்து அம்சங்களுடனும் உடன்பட வேண்டும் என்பது அவசியமும் இல்லை அல்லது நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. இந்த முக்கிய பாதுகாப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களிடையே —கண்டிப்பாக அரசியல் வலது நிலைப்பாடு கொண்டவர்களைத் தவிர— பரந்த பலதரப்பட்ட நிலைப்பாடுகள் இருக்கலாம். இக்குழுவில் இணைபவர்கள் ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புக்கு நிபந்தனையின்றி பொறுப்பேற்றிருக்க வேண்டும் என்பதையும், ஜூலியன் அசான்ஜ் மற்றும் செல்சியா மானிங்கின் விடுதலை ஒரு பாரிய மக்கள் இயக்கத்தைச் சார்ந்திருக்கிறது என்பதை அங்கீகரிக்க வேண்டும் என்பதையும் மட்டுமே நாங்கள் கோருகிறோம்.

ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புக்கு தீவிரமாக பொறுப்பேற்றுள்ள எவரும் இப்போராட்டத்திலிருந்து ஒதுங்கி நிற்க முடியாது. பேச்சு சுதந்திரம் மற்றும் உண்மையை பாதுகாப்பதிலும், உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் அடிப்படை தீங்குகளான சுரண்டல், சர்வாதிகாரம் மற்றும் போருக்கு எதிராக போராடுவதிலும் ஜூலியன் அசான்ஜின் வழக்கு இருபத்தோராம் நூற்றாண்டின் ஒரு முக்கியமான போர்க்களமாகும்.

இப்போதே ஜூலியன் அசான்ஜைப் பாதுகாக்கும் போராட்டத்தில் இணைய பதிவு செய்யுங்கள்!

Read more...

தோணாவில் வீசப்படும் கழிவுகளால் நோய் பரவும் அபாயம். அரச ஊழியர்கள் அசமந்தப்போக்குடன்!

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மாளிகா வீதியில் உள்ள தோணாவில் பிரதேச மக்கள் வீசும் திண்மக்கழிவுகளால் குறித்த பகுதியில் வாழும் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொள்வதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

சாய்ந்தமருது, மாளிகைக்காடு மக்கள் தினமும் இரவு நேரங்களில் குறித்த தோணாவில் தமது அன்றாட குப்பைகளை வீசுவதனால் பாரிய துர்நாற்றம் வீசுவதுடன் , கட்டாக்காலி நாய்களின் தொல்லையும் அதிகரித்து காணப்படுவதாகவும் அப்பிரதேச சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பல நோய்களுக்கு ஆளாவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்தும் முறையான வேலைத்திட்டங்கள் இல்லாமையால் பல தசாப்தங்களாக மக்கள் தொடர்ந்தும் பாரிய இன்னல்களை அனுபவித்துவருவதாகவும் இது தொடர்பில் சம்மந்தப்பட்டோர் பாராமுகமாக இருப்பதாகவும் அப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.

குறித்த தோணா பகுதிக்கு அண்மையில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலை, சுகாதார மத்திய நிலையம், பிரபல உணவகங்கள், மற்றும் மக்கள் குடியிருப்புக்கள் உள்ளதால் கல்முனை மாநகர சபை, சுகாதார பிரிவு போன்றன இது விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வினை பெற்றுத்தர முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



Read more...

அமெரிக்காவுடனான சோபா ஒப்பந்தம் ஆபத்தானது! எச்சரிக்கின்றார் பாலித ஹோகன்ன

சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில், பாதுகாப்பு உடன்பாடுகள் எதுவும் இல்லாத நிலையில், இந்தியா, சீனா, ஈரான் போன்ற நாடுகளுடன் மோதல் போக்கை ஏற்படுத்தக் கூடிய உடன்பாடுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று, தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலர் கலாநிதி பாலித கொஹன்ன.

கொழும்பில் நேற்று எலிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,

“சிறிலங்காவுக்குப் பயனளிக்காத, சோபா போன்ற உடன்பாடுகளில் ஏன் கையெழுத்திட வேண்டும்?

எமது அரசியல் தலைமை என்ன நினைக்கிறது? உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளுடன், அமெரிக்கா சோபா உடன்பாடுகளை செய்து கொண்டுள்ளது என்றா?

இந்த உடன்பாட்டின் மூலம், அமெரிக்க இராணுவ வீரர்கள் சிறிலங்காவுக்கு ஆயுதங்களுடன் வந்து எதையும் செய்ய முடியும். உள்ளூர் சட்டங்களின் கீழ் அவர்களை எதுவும் செய்ய முடியாது.

அமெரிக்க படைகள் பிலிப்பைன்சில் ஒரு தொகை வல்லுறவுக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளன. அந்த நாட்டில் அவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளவில்லை.

இத்தகைய உடன்பாடுகளை விவாதிப்பதில் நாடாளுமன்றத்துக்கு ஒரு பங்கு இருக்க வேண்டும். ஏனெனில் இவை நாட்டின் இறைமை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதிக்கக் கூடியவை.

இத்தகைய உடன்பாடுகளில் நுழைவதை, நாடாளுமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அங்கீகரிக்க வேண்டும்.

அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாவுடன் நாம் நல்ல உறவைப் பேண வேண்டும், அதற்காக, எமது சுதந்திரத்தை தியாகம் செய்ய வேண்டும் என்று அர்த்தமில்லை.

2007இல் கையெடுத்திடப்பட்ட கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் உடன்பாடு, சிறிலங்கா- அமெரிக்காவிற்கு இடையிலான கூட்டு இராணுவ ஒத்துழைப்பை வழங்குகிறது.

இராணுவ தளவாட ஆதரவு, விநியோகம், சேவைகள் மற்றும் “எதிர்பாராத சூழ்நிலைகளில்” விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை இது உள்ளடக்கியது.

அத்துடன் அந்த உடன்பாடு அமெரிக்க இராணுவ கப்பல்கள் சிறிலங்கா துறைமுகங்களுக்குள் ஒன்று வெளியேற மற்றொன்று நுழையவே அனுமதி அளிக்கிறது.

ஆனால், 2017இல் புதுப்பிக்கப்பட்ட உடன்பாட்டில், அந்தப் பிரிவு திறந்து விடப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.

Read more...

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை கோலாகலமாகத் திறந்துவைப்பு !

கதிர்காமம் ஆடிவேல் விழாவையொட்டிய இவ்வருடத்திற்கான காட்டுப்பாதை நேற்று(27) வியாழக்கிழமை காலை கோலாகலமாக இடம்பெற்றது. முன்னதாக உகந்தமலை முருகனாலயத்தில் விசேடபூஜை நடைபெறற்றது. ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் அருளாசி வழங்கினார்.

இன்று முதல்நாள் சுமார் 2ஆயிரம் யாத்திரிகர்கள் காட்டுக்குள் பிரவேசித்தனர் இம்முறை விசேடமாக இந்துகலாசார அமைச்சர் மனோகணேசன் கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும் அம்பாறை மாவட்ட பாரரளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் கண்டி மாவட்ட பாரர்ளுமனற் உறுப்பினபர் அ.வேலுகுமார் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில்அம்பாறை அரச அதிபர் டி.எம்.எல்.திசாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் பாதுகாப்பு உயரதிகாரிகள் ஆகியோரும் பங்குபற்றினர்.

இம்முறை ஆடிவேல்விழா எதிர்வரும் ஜூலை 03 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 18 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று உகந்தமலை முருகனாயல ஆடிவேல்விழாவும் இதோலத்தில் நடைபெறும்.

கதிர்காமத்திற்கு செல்லும் குமண யால சரணாலய காட்டுப்பாதை நேற்று காலை 27 ஆம் திகதி திறக்கப்படட்டது. தொடர்ந்து 13 தினங்கள் திறந்திருக்கும் இக் காட்டுப் பாதையானது ஜூலை 09 ஆம் திகதி மாலை 3 மணியுடன் மூடப்படவுள்ளது.

இதற்கமைய 13 தினங்கள் மாத்திரம் காட்டுப்பாதையூடாக அடியவர்கள் பாதயாத்திரை மேற்கொள்ள முடியும்.

தற்போது வடக்கு கிழக்கிலிருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் அடியார்கள் உகந்தமலை முருகனாலயத்தை வாந்தடைந்துள்ளனர். மேலும் பல அடியார்கள் அம்பாறை மாவட்டத்தினூடாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

முதற்கட்ட பாதயாத்திரைக் குழுவினர் அனைவரும் நேற்று 26 ஆம் திகதி உகந்தை மலை முருகன் ஆலயத்தை வந்தடைந்ததாக ஆலயத்தலைவர் சுதுநிலமே திசாநாயக்க தெரிவித்தார். சுமார் 2000பக்தர்கள் ஆலயத்தில் குழுமிஇருப்பதாகச் சொன்னார்.

இம்முறை காட்டுப்பாதையூடாக பயணிக்கும் பக்தர்களின் நலன்கருதி பாதுகாப்பு ஏற்பாடுகளும் காடுகளில் குடிநீர் வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கும் நடவடிக்கை யில் படையினர் மற்றும் பிரதேச சபைகள் ஈடுபட்டுள்ளன.

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையானது தினமும் 6 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 3 மணியுடன் மூடப்படவுள்ளது. அடியார்களின் பாதுகாப்பு கருதி காடுகளுக்குள் தனியாக உட்பிரவேசிப்பதற்கு இம்முறை அனுமதிக்கப்படமாட்டார்கள். குழுக்களாகவே காட் டுக்குள் செல்ல அனுதிக்கப்படுவார்கள்.

அனைவரும் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் அடையாள அட்டையினை எடுத்துவரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காரைதீவு நிருபர் சகா-.




Read more...

Thursday, June 27, 2019

அரசியல் பழிவாங்கலுக்குட்பட்ட அரச ஊழியர்களுக்கு வரிப்பணத்தில் நஷ்ட ஈடாம்! மக்களுக்கு ?

2005 முதல் 2015 கால பகுதியில் அரசியல் பழி வாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்ட அரச ஊழியர்கள் 36,000 பேருக்கு வருகின்ற மாதங்களில் நஷ்ட ஈடு வழங்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளதுடன் அதற்கான அமைச்சரவை பத்திரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்டு அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

இலங்கை பொது நிர்வாக சேவை, முப்படைகள் மற்றும் பொலிஸ் திணைக்களம் என்பன அரசியல் வாதிகளின் கைக்கூலிகளாகவே செயற்படுகின்றனர். இவர்களை கோடாரிக்காம்புக்கள், எச்சில்முள் தின்னிகள் மற்றும் அழுக்கெடுப்போர் என்றால் மிகையாகாது. மேற்படி எச்சில்முள் தின்னிகளில் ஒருபகுதியினர் நடைமுறையிலிருக்கும் அரசிற்கு சேவகம் செய்வதற்காக நாட்டின் சட்ட திட்டங்களை தயவு தாட்சணியம் இன்றி மீறுவர். அரச யத்திரம் என்ற புள்டோசரின் சாரதிகளான கோடாரிக்காம்புகள் தங்களது குறுகிய லாபங்களுகாக மக்கள் மீது அரசயந்திரத்தை தயவுதாட்சணியம் இன்றி செலுத்துவர். அவ்வாறு செலுத்துகின்றபோது சக கோடாரிக்காம்புகளும் சில சமயங்களில் அசௌகரியங்களை சந்திக்கின்றன.

அவ்வாறு அசௌகரியங்களை சந்திக்கின்ற கோடாரிக்காம்புகள் அடுத்த அரசு பதவி ஏற்கும்வரை காத்திருந்து தங்கள் மீது புள்டோசர் செலுத்தியோரை பழிவாங்கும். இவ்வாறு மக்களின் பணத்தில் கூலிபெறும் கூலியாட்கள் மாறி மாறி பழிவாங்குவர். இந்த எச்சில்முள்ளுக்கான மல்லுக்கட்டலினுள் சிக்கி பாமர மக்கள் தவிப்பர். அவ்வாறு தவிக்கும் மக்களுக்கு எந்த அரசாங்கமும் நியாயத்தை பெற்றுக்கொடுக்க முறையானதோர் பொறிமுறையை அமைக்கவில்லை. இலங்கையில் பொது நிர்வாக சேவை மக்களை அடிமைகளாகவே நடாத்துகின்றது.

இந்நிலையில் எச்சில்முள் தின்பதில் ஏற்பட்ட பிணக்குகளால் ஏவல்நாய்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களாம் என மக்களின் வரிப்பணத்தில் நஷ்ட ஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியை பெற்றுள்ளார் ரணில் விக்கிரமசிங்கே. ஆனால் இந்த எச்சில்முள் போட்டியினுள் சிக்குண்டு பாதிப்புக்களை சந்தித்த மக்கள் தொடர்பாக விக்கிரமசிங்கேயிற்கு எந்தவொரு அக்கறையும் ஏற்படவில்லை.

இங்கே வழங்கப்படும் நஷ்ட ஈட்டு பணம் யாருடை பணம் என்பதை மக்களும் கேள்விக்குட்படுத்துவதில்லை. அரச ஊழியர்கள் பழிவாங்கப்பட்டிருக்கின்றார்கள் என்றால் அவர்கள் யாரால் பழிவாங்கப்பட்டார்கள், சக அரச ஊழியர்களால் பழிவாங்கப்பட்டோருக்கு மக்களின் பணத்தில் நிவாரணம் கொடுக்கும் அநீதியற்றதும் வெட்டமற்றதுமானதோர் நடைமுறை இங்கு இடம்பெறுகின்றது. உண்மையில் அநீதி இழைக்கப்பட்டிருப்பின் பழிவாங்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து நஷ்ட ஈட்டை பெற்றுக்கொடுப்பதற்கு பதிலாக மக்களின் பணத்தில் நஷ்ட ஈடு கொடுப்பது நிறுத்தப்படவேண்டும்.

மக்களின் பணம் தவறான வழியில் பயன்படுத்தப்படுகின்றது , எங்களிடம் முறையான நிதிபரிபாலன திட்டமொன்றிருக்கின்றது என கூக்குரலிடுகின்ற ஜேவிபி குறித்த அமைச்சரவை பத்திரம் தொடர்பில் இதுவரை வாய்மூடி மௌனியாக ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சார முன்னேற்பாடுகளுக்கு வழிவிட்டு நிற்கின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

மத நல்லிணக்கத்தில் அடைக்கலம் தேடுவோரை நிர்மூலமாக்கும் நாதன்கள். சிவசேனை மறவன்புலவு க சச்சிதானந்தன்

சமயங்களிடையே நல்லிணக்கம் வேண்டும், அன்பில் திளைக்க வேண்டும் அறம் செழிக்க வேண்டும், அருள் பெருக வேண்டும் என நல்ல நோக்கங்கள் கொண்டவர்கள் மாந்தை மேற்குப் பிரதேச சபையினர்.

திருக்கேதீச்சரத்திற்குச் செல்லும் சாலை மாந்தைச் சந்தியில். அந்தச் சாலைக்குப் பெயரே திருக்கேதீச்சரம் சாலை.

கற்குளத்துக்குச் செல்லும் சாலைச் சந்தியில் கிருத்தவ வரவேற்பு வளைவு. மடுமாதா அருட் கோயிலுக்குச் செல்லும் சாலைச் சந்திப்பில் கிருததவ வரவேற்பு வளைவு. கற்குளத்திலே சைவக்கோயில்கள் உள்ளன மடுப் பிரதேசத்திலே சைவக்கோயில்கள் உள்ளன ஆனாலும் சந்திப்பில் கிறித்தவ வரவேற்பு வளைவுகள்.

சைவக்கோயில்கள் உள்ளே கிராமங்களில் இருப்பதால் அந்த வரவேற்பு வளைவுகளுக்கு முன்பு பிள்ளையார் கோயிலையோ முருகன் கோயிலையோ எவரும் கட்டவில்லை. சைவ சமய நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டுகள்.

ஆனால் தலைமன்னார் நெடுஞ்சாலையில் திருக்கேதீச்சரத்துக்கான சைவ வரவேற்பு வளைவுக்கு முன்னே கிறித்தவ உலூர்து அம்மாளுக்குச் சிறிய கோயில்! என்ன கொடுமை?

நல்லிணக்கத்தைப் பேணும் மாந்தை மேற்குப் பிரதேச சபையின் தீர்மானம். மாந்தைச் சந்தியில் திருக்கேதீச்சரம் சாலையில் நிலையாக அழகான சைவ வரவேற்பு வளைவு கட்டுவதற்குத் திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை உரிமம் வழங்கும் தீர்மானம்.

உறுப்பினர்களாகச் சைவர்கள் கிறித்தவர்கள் முகமதியர்கள் மாந்தைப் பிரதேச சபையில் உள்ளனர். ஒருமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்றினர்.

அந்தோ தலையிட்டனர் கத்தோலிக்கர். ஆயர் ஆலோசனை வழங்குகிறார். தொடர்பே இல்லாத நானாட்டான் பிரதேச சபை சைவ வரவேற்பு வளைவு கட்ட வேண்டாம் எனத் தீர்மானம் இயற்றுகிறது.

மாந்தையில் மிகச் சிறுபான்மையினராக வாழ்கின்ற கத்தோலிக்கரின் கிராம முன்னேற்றச் சங்கமும் அவ்வாறான தீர்மானத்தை இயற்றுகிறது. கிராம முன்னேற்றச் சங்கத்தின் தீர்மானத்தில் எழுதிய வரிகள் அப்பட்டமான வரலாற்றுத் தவறுகள் கொண்ட வரிகள். கற்பனைச் செய்திகளை வரலாறாக எழுதிக் கொடுத்தவர் ஆயர் இல்லத்தில் உள்ளவர்கள் போலும்!

அதைவிடக் கொடுமை என்னவென்றால் மாந்தைச் சைவ வாக்காளர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்ற இருவர் ஆயருக்குப் பக்கபலமாக நிற்கிறார்கள். திருக்கேதீச்சரம் சாலை முகப்பில் சைவ வரவேற்பு வளைவு அமையக்கூடாது என உறுதியாக இருக்கிறார்கள்.

சைவ வாக்காளரின் வாக்குகளைப் பெறும் போது பல்லிளித்துப் பெற்றீர்களே நகைமுகம் காட்டிப் பெற்றீர்களே. இன்று அந்த வாக்காளர்களுக்குப் பச்சைத் துரோகம் செய்கிறீர்களே. மாந்தைப் பிரதேச சபையின் மதநல்லிணக்க முயற்சியை முறியடிக்கிறீர்களே.

திரு செல்வம் அடைக்கலநாதனும் திரு சாரள்சு நிர்மலநாதனும் திருக்கேதீச்சரம் சாலை முகப்பில் சைவ வரவேற்பு வளைவு வைக்கக்கூடாது என ஆயருக்குப் பக்கபலமாக மாந்தைப் பிரதேச சபைக்குச் சொல்லி இருக்கிறார்கள் என்பதை இணைய தளங்களில் படிக்கும் பொழுது நெஞ்சு வெடிக்கிறது மனம் துடிக்கின்றது கொடுமையின் முகங்களைக் காண்கிறேன்.

சிங்களப் பெரும்பான்மையினர் தமிழ்ச் சிறுபான்மையினருக்குக் ரகொடுமை விளைவிக்கிறார்கள் என உலகெங்கும் கூறிய ஆயர் இராயப்புவின் வழித்தோன்றல்கள் அவரின் விதப்புரையில் நாடாளுமன்ற உறுப்பினர்களானோர் இன்று கத்தோலிக்கப் பெரும்பான்மையினரின் கொடும் பிடியை இறுக்கிச் சைவச் சிறுபான்மையினரை நசுக்குகிறார்கள் மன்னார் மாவட்டத்தில்.

சைவர்களே விழித்தெழுங்கள் மன்னார் மாவட்டத்தில் சைவர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனாலே உங்களுடைய வலிமை பெருகும். உங்கள் கோயில்களுக்கு நீங்கள் வளைவுகளை அமைக்கலாம். உங்கள் வழிபாட்டிடங்களில் இயல்பாக நீங்கள் வழிபட்டு அருள் பெருக்கலாம் அன்பை வியக்கலாம் அறத்தைப் பரப்பலாம்.

Read more...

கோட்டா பயம் உச்சக்கட்டத்தில்! அமெரிக்க நீதிமன்றில் மேலும் 10 பேர் வழக்கு தாக்கல்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ம் திகதிக்கு முன்னர் நடைபெறவுள்ளது. அத்தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மல்லிகைமொட்டு சார்பில் வேட்பாளராக களமிறங்குவதற்கான ஏதுநிலைகளை காணப்படுகின்றது.

கோத்தபாய ராஜபச்ச தேர்தலில் குதித்தால் பௌத்த சிங்கள வாக்குகளால் பெருவெற்றிபெறுவார் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே தேர்தலில் கோத்தபாயவை எதிர்கொள்ள முடியாத சக்கிகள் அவர் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊள்நாட்டில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை விசேட நீதிமன்றின் ஊடாக விசாரணை செய்து சிறையில் அடைத்தல் அல்லது அமெரிக்க பிரஜாவுரிமையை வாபஸ் பெற்றுக்கொள்ள முடியாதவாறு தடுத்தல் என்ற இரு வியூகங்களை அவர்கள் வகுத்துள்ளனர். அமெரிக்காவில் வழக்குகளை தொடுப்பதன் ஊடாக வழக்கொன்று நிலுவையில் உள்ளபோது பிரஜாவுரிமையை வாபஸ் பெற்றுக்கொள்வதில் தாமதத்தை அல்லது சிக்கலை உருவாக்கல் என்பதே கோத்தாவின் எதிராளிகளின் வியூகம்.

இத்தேர்தலில் கோத்தாவின் பிரதான எதிராளிகள் ஐக்கிய தேசியக் கட்சியனரே. அவர்கள் குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்றுவதற்காக புலம்பெயர் புலி ஆதரவாளர்களை பயன்படுத்துகின்றனர்.

ஆதன் அடிப்படையில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக, அமெரிக்காவின் கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் மேலும் 10 பேர் புதிய சித்திரவதை குற்றச்சாட்டுகளுடன் நேற்று வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்சவின் தலைமையிலான படையினர் மற்றும் பொலிஸார் தமது அரசியல் எதிரிகளை சித்திரவதை மற்றும் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்படுத்தினர் என்று மூன்று பெண்கள் உள்ளிட்ட 10 பேர் நேற்று வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இவர்களில் 6 பேர் தாங்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர் எனவும், பாலியல் தாக்குதல்களுக்குள்ளாக்கப்பட்டனர் எனவும் கூறியுள்ளனர்.

உளவியல் ரீதியாகவும், உடலியல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் தாங்கள் மிக மோசமான துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாக இவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது ஒரு தனியான சம்பவங்களோ, எங்காவது ஒன்றாக நிகழ்ந்தவையோ அல்ல எனப் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு சட்டவாளர்களில் ஒருவரான, ஸ்கொட் கில்மோர் ஏபி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இது நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு நடவடிக்கையாகும், இதற்கு கோட்டாபய ராஜபக்சவே தலைமை தாங்கியிருந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தக் குற்றங்கள் 2008ஆம் ஆண்டுக்கும் 2013ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்றன என்று கூறப்பட்டுள்ளது,

கடத்தப்பட்டு, கைதுசெய்யப்பட்டு இராணுவ முகாம்களிலும், பொலிஸ் நிலையங்களிலும் ஆண்களும் பெண்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம், கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் கனேடியத் தமிழரான றோய் சமாதானம், கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான மூல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

மேற்படி நபர் இலங்கையில் சிங்கள அரசியல்வாதிகள் பலருடன் கூட்டுச்சேர்ந்து சட்ட விரோத வியாபாரங்களை மேற்கொண்டபோது, ஏற்பட்ட சிக்கலில் சட்ட விரோத பொருட்களுடன் கையும் மெய்யுமாக பிடிபட்டு அதற்கான தண்டனையை பெற்றவர். இவர் தற்போது இலங்கையில் அரசியல் கட்சி ஒன்றின் எடுபிடியாக மாறியுள்ளார் என்பது யாவரும் அறிந்த விடயம்.

இந்த வழக்கில் நேற்று திருத்தம் செய்யப்பட்டு, அவருடன் மேலும் 8 தமிழர்கள் மற்றும் 2 சிங்களவர்கள் என மொத்தமாக 11 பேர், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

'தனது கட்டுப்பாட்டில் உள்ள படையினரால் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள் பெருமளவில் செய்யப்படுகின்றன என்பதை கோட்டாபய ராஜபக்ச அறிந்திருந்தார் அல்லது அறிந்திருக்க வேண்டும்.

இந்த முறைகேடுகளைத் தடுப்பதற்குப் பதிலாக, அவர் அவர்களை ஊக்குவித்தார் அல்லது சகித்துக்கொண்டார்.

குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவர் நீதிக்குத் தடையாக இருந்தார். மேலும் சாட்சிகளை மரண அச்சுறுத்தல் செய்தார்' என்று இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.

ஆறு ஆண்டுகள் நடத்தப்பட்ட விசாரணைகளுக்குப் பின்னர் தென்னாபிரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட சர்வதேச உண்மை நீதிக்கான திட்டம், சர்வதேச சட்ட நிறுவனமான ர்யரளகநடன உடன் இணைந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

இங்கு தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டிய விடயம் யாதெனில் கோத்பாய ராஜபக்ச ஜனாதிபதியாவதை தடுத்து ஐக்கிய தேசியக் கட்சியை அரியாசனம் ஏற்றுவதன் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா அதற்கு உத்தரவாதம் உண்டா என்பதாகும்.

Read more...

ட்ரம்பின் இடை-நிறுத்தப்பட்ட ஈரான் மீதான தாக்குதல்கள்: மூன்றாம் உலக போருக்குப் பத்து நிமிடங்கள். Bill Van Auken

ஈரானுக்கு எதிராக அமெரிக்க விமானத் தாக்குதல்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டு பின்னர் இரத்து செய்யப்பட்டதைச் சுற்றிய குழப்பமான மற்றும் ஆழ்ந்த அபாயகரமான வியாழக்கிழமை இரவு சம்பவங்கள், இறுதியில் ஒட்டுமொத்த பூமியையும் அச்சுறுத்தக் கூடிய ஒரு பேரழிவுகரமான புதிய போருக்கு இந்த உலகம் எந்தளவுக்கு நெருக்கத்தில் உள்ளது என்பதை அம்பலப்படுத்தி உள்ளது.

ட்ரம்பின் சொந்த தகவல்களின்படி, அமெரிக்க போர்க்கப்பலில் இருந்து Tomahawk ஏவுகணைகள் பறக்க இருந்த வெறும் 10 நிமிடங்களுக்கு முன்னர், அவர் ஈரானிய ஏவுகணை மற்றும் ராடார் நிலையங்கள் மீது குண்டுவீச இருந்ததை இரத்து செய்தார்.

அமெரிக்க ஜனாதிபதி, வெள்ளியன்று, பெரும்பாலும் ஒத்திசைவற்ற மற்றும் உள்ளார்ந்து ஒன்றுகொன்று முரணான ஒரு தொடர் ட்வீட் செய்திகளில், கடற்படையின் RQ-4 Global Hawk உளவுபார்ப்பு டிரோனை வியாழக்கிழமை ஈரான் சுட்டுவீழ்த்தியதற்குப் பதிலடியாக அவர் அந்த தாக்குதல்களை நடத்த உத்தரவிட்டதாக தெரிவித்தார். அந்த டிரோன் அதன் வான் எல்லைக்குள் அத்துமீறியிருந்ததாக தெஹ்ரான் குற்றஞ்சாட்டி இருந்தது.

டிரோன் சர்வதேச கடல்பகுதியில் பறந்து கொண்டிருந்ததாகவும், அந்த ஏவுகணை தாக்குதல் "ஆத்திரமூட்டப்படாத" ஒரு தாக்குதல் என்றும் வாஷிங்டன் மறுத்துரைத்த அதேவேளையில், ஈரான் அதன் எல்லை பகுதியில் விழுந்திருந்த அந்த டிரோனின் சிதைந்த பாகங்களைக் காட்டி வெள்ளியன்று அதன் கூற்றுக்களை வலுப்படுத்தியது. அந்த டிரோனின் விலை மதிப்பு 200 மில்லியன் டாலராக மதிப்பிடப்படுகிறது.

“எத்தனை பேர் கொல்லப்படுவார்கள் என்று நான் வினவிய போது, வெவ்வேறு 3 இடங்களில் நேற்றிரவு பதிலடி கொடுக்க நாம் விறைப்பாகவும் தயாராகவும் இருந்தோம் [ட்வீட்டில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை cocked & loaded],” என்று இவ்வாறு ட்ரம்ப் ட்வீட் செய்திருந்தார். “அத்தாக்குதலை நான் நிறுத்துவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர். 150 பேர், ஸார், என்பது ஒரு தளபதியின் பதிலாக இருந்தது.”


அமெரிக்க போர்கப்பலின் தாக்கும் படைப்பிரிவு [படம்: அமெரிக்க கடற்படை]

அந்தளவிலான மரண எண்ணிக்கை “ஒரு ஆளில்லா டிரோனைச் சுட்டு கொன்றதற்கு விகிதாச்சாரப்படி பொறுத்தமாக இல்லை" என்றவர் தயங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ட்வீட்டரில் ஏளன அலையைத் தூண்டிவிட்ட ஓர் இராணுவ துஷ்பிரயோக வார்த்தையான அவரின் "விறைப்பான & தயாரான" (cocked & loaded) வார்த்தையாடலுக்கு அப்பாற்பட்டு, ஈரானிய மரணங்களின் விகிதாச்சார பொருத்தமற்ற எண்ணிக்கை குறித்து அவர் அக்கறை கொண்டதாக குறிப்பிடுவது நம்புவதற்குரியதாக இல்லை.

ஒபாமாவின் கீழ் தொடங்கிய ஈராக் மற்றும் சிரியா மீதான அமெரிக்க போர்களை ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்தது மற்றும் தீவிரப்படுத்தியது, மொசூல் மற்றும் ரக்கா நகரங்களைத் தரைமட்டமாக்கிய இரத்தந்தோய்ந்த முற்றுகைகளையும், மொத்தம் இரண்டு அமெரிக்க உயிர்களைப் பறித்த அப்போர்களில் அமெரிக்க குண்டுகள் மற்றும் தோட்டாக்களால் பத்தாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டதையும் அது நடாத்தியது.

அனைத்திற்கும் மேலாக, அது சவுதி முடியாட்சியை அடிமுதல் தலை வரை ஆயுதமயப்படுத்தியதுடன், அரபு உலகிலேயே மிகவும் வறிய நாடான யேமனுக்கு எதிரான அண்மித்து இனப்படுகொலைக்கு நிகரான ஒரு போரில் சவுதிக்கு நேரடியான இராணுவ உதவி மற்றும் தளவாடங்களை வழங்கியது. யேமனில் சுமார் 80,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதுடன், மில்லியன் கணக்கானவர்கள் பட்டினியின் விளிம்பில் விடப்பட்டிருக்கிறார்கள்.

விகிதாச்சார பொருத்தமின்மை என்ற இந்த கருத்துரு, அண்மித்து மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் முதலாம் வளைகுடா போரில் இருந்து மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடுத்த எந்தவொரு இரத்தந்தோய்ந்த மோதலிலும் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கவில்லை.

ஈரானிய உயிரிழப்புகளைக் குறித்த எந்த அக்கறையிலிருந்தும் ட்ரம்ப் அந்த விமானத் தாக்குதல்களை நிறுத்தவில்லை, மாறாக அவரின் இராணுவ ஆலோசகர்கள் ஈரானில் மரண எண்ணிக்கை தவிர்க்கவியலாது பதிலடிக்கு இட்டுச் சென்று அதில் இன்னும் அதிக அமெரிக்க துருப்புகள் கொல்லப்படலாம் மற்றும் இராணுவ தீவிரப்பாடு சுழற்சி அடைந்து, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் செய்த அமெரிக்க தலையீடுகளை ஒப்பீட்டளவில் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டாக ஆகிவிடுமளவிற்கான ஒரு முழு அளவிலான போரில் போய் முடிந்துவிடும் என்று அவரை எச்சரித்தனர் என்பதாலேயே அவர் நிறுத்தினார்.

ஏற்கனவே அப்பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 20,000 துருப்புகளுடன் இணைவதற்கு, கூடுதலாக 2,500 துருப்புகளும், அணுஆயுத தகைமை கொண்ட B-52s தலைமையில் ஒரு கப்பற்படைப்பிரிவு மற்றும் ஒரு குண்டுவீசும் தாக்கும் படைப்பிரிவும் அமெரிக்கா அனுப்பி உள்ளது என்றாலும், அமெரிக்கா இன்னமும் அதுபோன்றவொரு போருக்குத் தயாராகவில்லை.

தயாரிப்புகள் இனி செய்யப்படும். ட்ரம்ப் வெள்ளியன்று ட்வீட் செய்ததைப் போல, “எனக்கு அவசரமில்லை, நமது இராணுவம் புதிதாக, புறப்படுவதற்குத் தயாராக, உலகில் தலைசிறந்ததாக ஆகும் வரையில் மீளகட்டமைக்கப்படும். தடைகள் நிறைய இருக்கின்றன மற்றும் நேற்றிரவு கூடுதலாக இன்னும் சேர்ந்திருந்தது.”

ஈரானிய அரசை ஒரு புதிய சுற்று பேச்சுவார்த்தைகளுக்குள் வர நிர்பந்திப்பதற்காக, ஆறு உலக சக்திகளுடனான 2015 ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையை உடைத்தெறிந்து, ஓராண்டுக்கு முன்னர் அது திணித்த தடையாணைகளை அது பயன்படுத்த விரும்புகிறது என்பதை வெள்ளை மாளிகை திரும்ப திரும்ப சுட்டிக்காட்டி உள்ளது.

அதுபோன்ற பேச்சுவார்த்தைகளில் வாஷிங்டன் என்ன கோரி வருகிறது என்றால், ஈரான் முற்றிலுமாக பொதுதேவைகளுக்கான அதன் அணுசக்தி திட்டங்களையும் கூட நிறுத்திக் கொள்ள வேண்டும், அதன் கண்டம்விட்டு கண்டம் பாயும் தொலைதூர ஏவுகணைகளை ஒப்படைத்து விட வேண்டும், பரந்த மத்திய கிழக்கில் அனைத்து தொடர்புகள் மற்றும் செல்வாக்கைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். சாரத்தில், 40 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் புரட்சியால் தூக்கியெறியப்பட்ட அமெரிக்க ஆதரவிலான ஷா சர்வாதிகாரத்தில் செய்ததை விட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காலடியில் இன்னும் அதிகமாக ஈரானை ஓர் அரை-காலனி நாடாக தரமிறக்குவதே அதன் நோக்கமாக உள்ளது.

அதுபோன்ற நோக்கங்களைச் சமாதானமான முறையில் கைவரப்பெற முடியாது; அவை தவிர்க்கவியலாமல் போருக்கு இட்டுச் செல்லும். அமெரிக்க அதிகாரிகளால் அறிவுறுத்தப்படும் "இராஜதந்திர நடவடிக்கைகள்", இரண்டாம் உலக போரை நோக்கி நாஜிக்களின் அணிவகுப்பில் அடோல்ஃப் ஹிட்லர் பயன்படுத்தியதைவிட சிறப்பானதொன்றையும் பெரும்பாலானவற்றுக்குக் குறைவின்றி இருப்பதை நினைவூட்டவில்லை.

ஈரானுக்கு எதிரான அதன் தாக்குதல் நெடுகிலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் மில்லியனுக்கும் அதிகமானவர்களின் உயிர்களைப் பறித்துள்ள போர்கள் மற்றும் ஆட்சி மாற்ற தலையீடுகள் மூலமாக மத்திய கிழக்கிலும் மற்றும் மத்திய ஆசியாவிலும் அது உருவாக்கிய நாசங்களைத் தலைகீழாக ஆக்க முயன்று வருகிறது. ஆனால் நிரந்தரமான அமெரிக்க கைப்பாவை ஆட்சிகளை நிறுவுவதற்கான இலக்கை எட்டுவதில் அவை பரிதாபகரமாக தோல்வி அடைந்துள்ளன. மாறாக, ஈரான், ரஷ்யா மற்றும் சீனா உட்பட அதன் போட்டியாளர்களின் செல்வாக்கு அப்பிராந்தியத்தில் அதிகரித்து வருவதில் போய் முடிந்துள்ளது.

2003 படையெடுப்பின் போது அந்நேரத்தில் ஈராக்கிய மக்கள்தொகையை விட மூன்று மடங்கு அதிகமாக மக்கள்தொகை கொண்டதும் நான்கு மடங்கு அதிக பரப்பெல்லையைக் கொண்ட ஒரு நாடான ஈரானுக்கு எதிரான ஒரு போர் என்பது தவிர்க்கவியலாமல் அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் உள்ளிழுக்கும். புதனன்று, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், லெபனானில் ஷியா-அடிப்படையிலான இயக்கமும் மற்றும் ஈரானுடன் அணி சேர்ந்துள்ளதுமான ஹெஸ்பொல்லாவுடன் ஒரு மோதலுக்குத் தயாரிப்பு செய்ய ஆயிரக் கணக்கான துருப்புகள் ஈடுபட்ட போர் ஒத்திகைகளை நடத்தி முடித்திருந்தது.

அனைத்திற்கும் மேலாக ஈரான் மீதான ஒரு போர் தவிர்க்கவியலாமல் சீனாவுடனான அமெரிக்க மோதலைத் தீவிரப்படுத்தும். சீனா அதன் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடித்துள்ள மத்திய கிழக்கு எண்ணெய் ஆதாரங்களை அமெரிக்க ஏகாதிபத்திய இறுக்கிப்பிடிக்கு விட்டுக்கொடுக்க முடியாது என்பதுடன், அது யுரேஷியாவின் ஒருங்கிணைப்பை ஆழப்படுத்துவதற்கான அதன் ஒரே பாதை, ஒரே இணைப்பு மூலோபாயத்தில் ஈரானை ஒரு மூலோபாய இணைப்பாக காண்கிறது.

அமெரிக்க இராணுவம், அமெரிக்கா மற்றும் அதன் "வல்லரசு" போட்டியாளர்கள் சம்பந்தப்படும் ஒரு "சிந்தக்கவியலா" மோதலுக்குத் தயாரிப்பு செய்து வருகிறது என்பதற்கான ஒரு தவறுக்கிடமற்ற குறிப்பாக, பென்டகனின் தலைமை தளபதி 14 ஆண்டுகளில் முதல்முறையாக 3 அணுசக்தி நடவடிக்கைகளுக்கான ஒரு புதிய கொள்கை விளக்க அறிக்கையைக் கடந்த வாரம் வெளியிட்டார். அது "தீர்க்ககரமான விளைவுகளையும் மற்றும் மூலோபாய ஸ்திரப்பாட்டை மீளமைப்பதற்குமான நிலைமைகளை" உருவாக்குவதற்கு ஒரு வழிவகையாகவும் மற்றும் "அமெரிக்கா, அதன் கூட்டாளிகள், மற்றும் பங்காளிகளும் அடையக்கூடிய மிகச்சிறந்த நிபந்தனைகளுடன்" மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரவும் அணுஆயுத பிரயோகத்தை ஆர்ப்பரிக்கிறது.

இந்த ஆவணம் பனிப்போர் கால தத்துவவியலாளர் ஹெர்மன் கானை மேற்கோளிடுகிறது, இவர் 1960 களில் "ஜெயிக்கக்கூடிய" அணுஆயுத போரை எடுத்துக்காட்டியதுடன், ஸ்டான்லெ குப்ரிக் திரைப்படமான "Dr. Strangelove” க்கான உட்தூண்டுதல்களில் ஒன்றை வழங்கியவர் ஆவார்.

அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் மிகப்பெரும் அபாயம் என்னவென்றால், விரிவாக்கப்பட்டு வரும் போர் தயாரிப்புகளும் மற்றும் மக்களுக்கு என்ன தெரியுமோ அதை விட அதிகமாக பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய முடிவுகளும் ஒட்டுமொத்தமாக அவர்களின் முதுகுக்குப் பின்னால் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன.

இப்போதிருக்கும் அரசியல் ஸ்தாபகத்திற்குள் ஏகாதிபத்திய போருக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ட்ரம்பின் ஈரானிய கொள்கை மீது அவருடனான ஜனநாயகக் கட்சியினரின் கருத்துவேறுபாடுகள் முற்றிலும் தந்திரோபாய இயல்பைக் கொண்டுள்ளன, ஒபாமா அவரினது சொந்த தண்டிக்கும் வகையிலான தடையாணைகள் மற்றும் போர் அச்சுறுத்தல்களைக் கொண்டு வழி வகுத்துத் தந்துள்ளார். வியட்நாம்-கால போர்-எதிர்ப்பு போராட்டங்களில் அவற்றின் மூலவேர்களைக் கொண்ட போலி-இடது அமைப்புளைப் பொறுத்த வரையில், அவை அனைத்தும் "மனித உரிமைகள்" என்ற பெயரில் அமெரிக்க ஆக்ரோஷத்தை ஊக்குவித்தவாறு, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஏற்பாடுகள் செய்து கொண்டுவிட்டன.

தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீட்டின் மூலமாக மட்டுமே ஒரு புதிய மற்றும் பேரழிவுகரமான போரை நிறுத்த முடியும். இதற்கு தொழிலாளர்களும், மாணவர்களும், இளைஞர்களும் போர் சம்பந்தமான கேள்வியை ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளின் கரங்களில் இருந்து எடுத்து, அதை அமெரிக்காவிலும் ஒவ்வொரு நாட்டிலும் தீவிரமடைந்து வரும் வர்க்க போராட்டத்தின் மத்திய குவிமையமாக ஆக்கி, நனவுபூர்வமான அரசியல் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

Read more...

மல்லிகைமொட்டுக்கு ஆதரவு வழங்க உலமா கட்சி 16 கோரிக்கைககளுடன் மஹிந்தவின் வாசற்படியில்.

உல‌மா க‌ட்சியினால் ஸ்ரீ ல‌ங்கா பொதுஜ‌ன‌ பெர‌முன‌ க‌ட்சியிட‌ம் முஸ்லிம் ச‌மூக‌ம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் முஸ்லிம்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பிலான 16 அம்சக் கோரிக்கைக‌ள் அடங்கிய மகஜர் ஸ்ரீ ல‌ங்கா பொதுஜ‌ன‌ பெர‌முன‌வின் தேசிய‌ அமைப்பாள‌ரும் முன்னாள் அமைச்ச‌ருமான‌ பெசில் ராஜ‌ப‌க்ஷ‌விட‌ம் உல‌மா க‌ட்சித்தலைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் நேற்று (26) கைய‌ளித்தார்.

இங்கு க‌ட்சியின் இணைச்செய‌லாள‌ர் சி. எம்.வை. இஸ்ஸ‌தீன், உத‌வி செய‌லாள‌ர் பொறியிய‌லாள‌ர் இஸ்ஸ‌தீன் உட்ப‌ட‌ ப‌ல‌ பொது ஜ‌ன‌ பெர‌முன‌வின் பிர‌முக‌ர்க‌ளும் கலந்து கொண்டனர்.

இந்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர் பின்வருமாறு,


1.அர‌சிய‌ல் சாச‌ன‌த்தில் உறுதி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ முஸ்லிம்க‌ளின் ம‌த‌, க‌லாசார‌ உரிமைக‌ள் பாதுகாக்க‌ப்ப‌டும் விட‌ய‌த்தில் அர‌சு நீதியாக‌ செய‌ற்ப‌டும் உத்த‌ர‌வாத‌ம் த‌ர‌ப்ப‌ட‌ வேண்டும்.

2.நாட்டில் எந்த‌வொரு இன‌, ம‌த‌ ம‌க்க‌ளுக்கெதிராக‌ யாரும் குறிப்பாக‌ ம‌த‌ த‌லைவ‌ர்க‌ள், அர‌சிய‌ல்வாதிக‌ள் வெறுப்பூட்டும் பேச்சை பேசினால் அவ‌ர்க‌ள் யாராக‌ இருப்பினும் கைது செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும்.

3.அளுத்க‌ம‌ க‌ல‌வ‌ர‌ம் முத‌ல் மினுவாங்கொடை வ‌ரை ந‌டை பெற்ற‌ க‌ல‌வ‌ர‌த்தின் சூத்திர‌தாரிக‌ள் விசேட‌ ஆணைக்குழுவின் மூல‌ம் விசாரிக்க‌ப்ப‌ட்டு த‌ண்டிக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

4.முஸ்லிம் நாடுக‌ளுக்கான‌ தூதுவ‌ர்க‌ளாக‌ முஸ்லிம்க‌ள் நிய‌மிக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

5.பௌத்த‌ ம‌க்க‌ள் வாக்காள‌ர்க‌ளாக‌ இல்லாத‌ பிர‌தேச‌த்தில் சிலை வைப்ப‌து, முஸ்லிம்க‌ள் வாக்காள‌ர்க‌ளாக‌ இல்லாத‌ ப‌குதியில் ப‌ள்ளி க‌ட்டுவ‌து போன்ற‌வை த‌டை செய்ய‌ப்ப‌ட வேண்டும். அவ்வாறு ஏதும் இருந்தால் அவ‌ற்றை நீக்கும் தைரிய‌ம் உள்ள‌தாக‌ அர‌சு இருக்க‌ வேண்டும்.

6.வ‌ட‌க்கையும் கிழ‌க்கையும் இணைக்காத‌ நிலையில் த‌மிழ‌ர்க‌ளும் முஸ்லிம்க‌ளும் திருப்தி கொள்ளும் வ‌கையிலான‌ அர‌சிய‌ல் தீர்வு அவ‌சிய‌ம்.

7.மாகாண‌ ச‌பை முறை க‌லைக்க‌ப்ப‌ட்டு மாவ‌ட்ட‌ ச‌பைக‌ள் அமைக்க‌ப்ப‌டுவ‌தை உல‌மா க‌ட்சி வ‌ர‌வேற்கிற‌து. மாவ‌ட்ட‌ ச‌பைக்கு ஒரு முத‌ல் அமைச்ச‌ர் 4 அமைச்ச‌ர்க‌ள் என‌ நிய‌மிக்க‌ப்ப‌ட‌லாம்.

8.முஸ்லிம் பெண்க‌ளுக்கான‌ கௌர‌வ‌த்தை அர‌சு பாதுகாக்க‌ வேண்டும். முக‌ம் ம‌றைத்த‌ல் த‌விர்ந்த‌ எத்த‌கைய‌ ஆடையையும் அணியும் சுத‌ந்திர‌ம் அவ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்க‌ வேண்டும்.

9.நாட்டில் அனைத்து வ‌கை தீவிர‌வாத‌மும் ஒழிக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

10.இன‌ங்க‌ளுக்கிடையிலும் ம‌த‌ங்க‌ளுக்குமிடையில் சௌஜ‌ன்ய‌த்தை ஏற்ப‌டுத்தும் வ‌கையில் அனைத்து ச‌ம‌ய‌த்த‌லைவ‌ர்க‌ளையும் உள்ள‌ட‌க்கிய‌ ஜ‌னாதிப‌தி அல்ல‌து பிர‌த‌ம‌ர் த‌லைமையிலான‌ ஆலோச‌னை ச‌பை அமைக்க‌ப்ப‌ட‌ வேண்டும். இத‌ன் உறுப்பின‌ர்க‌ள் ச‌க‌ல‌ ச‌மய‌த்திலிருந்தும் ச‌ம‌மான‌ எண்ணிக்கை கொண்டிருக்க‌ வேண்டும்.

11.யுத்த‌ கால‌த்தில் வ‌ட‌க்கு கிழ‌க்கில் முஸ்லிம்க‌ள் இழ‌ந்த‌ காணிக‌ள் திரும்ப‌ வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

12.நாட்டில் இர‌ண்டு உப‌ ஜ‌னாதிப‌திக‌ள் இருக்க‌ வேண்டும். ஒருவ‌ர் முஸ்லிம் இன்னொருவ‌ர் த‌மிழ‌ர். இவ‌ர்க‌ளும் ஜ‌னாதிப‌தி தேர்த‌லின் போது அந்த‌ந்த‌ இன‌த்த‌வ‌ரால் தேர்ந்தெடுக்க‌ப்ப‌டுவ‌ர். இவ‌ர்க‌ள் முன்னாள் இந்நாள் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளாக‌ இருக்க‌ கூடாது. ஆக‌க்குறைந்த‌து ப‌ட்ட‌தாரியாக‌ இருக்க‌ வேண்டும்.

13. 1992ம் ஆண்டு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ மௌல‌வி ஆசிரிய‌ நிய‌ம‌ன‌ம் மீண்டும் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ கால‌த்தில் 2010ல் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌பின் இன்ன‌மும் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வில்லை. அந்நிய‌ம‌ன‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்ப‌துட‌ன் அத‌ற்கான‌ போட்டிப்ப‌ரீட்சை ச‌ம‌ய‌ம் சார்ந்த‌தாக‌வும் ச‌ம‌ய‌ம் சார்ந்த‌ மொழியிலும் இருக்க‌ வேண்டும். இத‌னை க‌ண்கானிக்கும் அதிகார‌ம் உல‌மா க‌ட்சிக்கு வ‌ழ‌ங்க‌ வேண்டும்.

14.அர‌பு ம‌துர‌சாக்க‌ள் அனைத்தும் ஒரே பாட‌த்திட்ட‌த்தை கொண்ட‌தாக‌வும் அவ‌ற்றில் க‌ற்று வெளியேறிய‌ பின் அர‌சாங்க‌த்தினால் விசேட‌ பொதுப்ப‌ரீட்சை ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு மௌல‌வி த‌ராத‌ர‌ ப‌த்திர‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌ வேண்டும். ம‌துர‌சாவில் சேர்க்க‌ப்ப‌டும் மாண‌வ‌ர்க‌ள் குறைந்த‌து ஆண்டு 9 வ‌ரை பொது பாட‌சாலையில் க‌ல்வி க‌ற்ற‌வ‌ராக‌ இருக்க‌ வேண்டும். ம‌துர‌சாக்க‌ளின் க‌ல்வி ஆண்டு 5 வ‌ருட‌த்துக்கு மேற்ப‌ட‌ கூடாது. ம‌துர‌சா முடித்தோருக்கு மௌல‌வி ப‌ட்ட‌ம் வ‌ழ‌ங்காம‌ல் உய‌ர் க‌ல்வி டிப்ளோமா ப‌த்திர‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு பின்ன‌ர் முஸ்லிம் ச‌ம‌ய‌ க‌லாசார‌ அமைச்சினால் பொது ப‌ரீட்சை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டு மௌல‌வி சான்றித‌ழ் வ‌ழ‌ங்க‌ வேண்டும். இத‌னை பெற்ற‌வ‌ர்க‌ளையே அர‌சு ப‌ள்ளிவாய‌ல்க‌ளின் இமாம்க‌ளாக‌ நிய‌மிப்ப‌துட‌ன் அவ‌ர்க‌ளுக்கான‌ ச‌ம்ப‌ள‌த்தை அர‌சு வ‌ழ‌ங்க‌ வேண்டும்.

15.அனைத்து இன‌ பெண்க‌ளுக்கு ம‌ட்டுமான‌ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் கிழ‌க்கு மாகாண‌த்தில் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

16.க‌ல்முனை பிர‌தேச‌ செய‌ல‌க‌ பிர‌ச்சினையை தீர்க்கும் வ‌கையில் க‌ல்முனை பிர‌தேச‌ செய‌ல‌க‌த்தை இர‌ண்டாக‌ பிரித்து க‌ல்முனை ஸாஹிரா க‌ல்லூரி முத‌ல் தாள‌வெட்டுவான் வ‌ரை க‌ல்முனை பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் என்றும் 99 வீத‌ம் த‌மிழ் ம‌க்க‌ள் வாழும் பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பை இணைத்து பாண்டிருப்பு பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் என்றும் வ‌ழ‌ங்கி இப்பிர‌ச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க‌ முடியும்.


Read more...

Wednesday, June 26, 2019

அல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 6 - யஹியா வாஸித்.

நோகாம நொங்குதின்கிற கத இது.

யார் என்ன சென்னாலும் சிறிலங்காவுல இருக்கிற, வாழுற சோனவனுகளுக்கிட்ட ஒரு கெட்ட பழக்கமிருக்கின்றது. இந்த மொத்த காக்காமாரும், ஒரு குட்டி மயிர கட்டி, பாரிய மலகள இழுப்பானுகள். கம்மோ கோ.
கண்ண பொத்திக்கிட்டு தனி ஆளா நிண்டு இழுப்பானுகள்.

தைரியமா இழுப்பானுகள், தமிழ் மக்கள் எல்லாம் இந்த கூத்த ஓரக்கண்ணால, தூரநிண்டு பாப்பாங்க, சிங்கள நண்பர்களோ, ஆச்செரியமா எட்டி நிண்டு பாப்பாங்க. கப்சிப். இவன் இழுப்பான்.

இந்த மடையன் வெறித்தனமா இழுப்பான், ஒரு நேக்கா இழுப்பான். மயிரை கட்டி பெரு மலைகளையே இழுப்பான். மயிருக்கும் நோகாம , மலைக்கும் நோகாம. ஒரு நேக்கா, கொஞ்சம் வாகாக நிண்டு இழுப்பானுகள்.

நேரடியா சொல்றண்டா, பெற்றோளுக்குள்ளால எரியிற லாம்ப கொண்டுபோற வெளையாட்டு இது. லாம் பெண்ணெக்குள்ளால, லாம்ப கொண்டு போறதுக்கே நம்மாள் தயங்குவான், நூறுதரம் யோசிப்பான், படிச்சவன் நாலு பேருக்கிட்ட அய்டியா கேப்பான். பயந்துடுவான். ஐய்யன்னா, நாவவன்னாவுக்கெல்லாம் போவான்.

ஆனா நம்மாள் ஆர்ர அய்டியாவும் கேக்க, கீக்க மாட்டான், பொண்டாட்டி, புள்ள குட்டிக்கிட்டையும் சொல்ல மாட்டான். தனியாளா நிண்டு, நிதானமா, கொஞ்சம் சாக்கிரதையா இழுப்பான். இவன் முருகண்ட பரம்பர, புள்ளயார் மாதிரி டைம் வேஸ்ட் பண்ணமாட்டான்.

சீவன் போகும், கண் ரெண்டும் பிதுங்கும், தொண்டக்குழி வத்தும், நடந்து, நடந்து, கந்தோர் கந்தோறா ஓடி, ஓடி நாடி நரம்பெல்லாம் பதறும், அடுத்த ஊட்டுக்கரன், சொந்தக்காரன், மச்சான், மாமா, நண்பன், நண்பன்ட நண்பன், எல்லாருக்கிட்டயும் மூணு மாதத்துல, ஆறுமாதத்துல திருப்பி தாரன் எண்டு, வாங்கிய கடன்கள் முன்னுக்கு வந்து நிண்டு பல்லிளிக்கும், பொண்டாட்டி ஊட்ட உட்டு தொரத்துவாள், ஓளைக்க தெரியாத நாயே எண்டும் திட்டுவாள் , ஈரக்கொல திமிரும், அல்லாஹ், அல்லாஹ், அல்லாஹ், யா அல்லாஹ், வெல்லோனும், இந்த கேம வெல்லோனும் எண்டு ஓடுவான், மேலிடம், கீழிடம், டையினம், வல்லினம், மெல்லினம் எல்லாத்தையும், ஜாலியா ரூவாவ வீசி மடக்குவான், புரியாணி, வட்டிலாப்பமெல்லாம், ஏலக்கா கம கமக்க, அதிகாரிகளின் குசினி வர பறக்கும், வேணுமெண்டா கால்ல உளுவான், சாஷ்டாங்கமா, நெடுஞ்சான் கெடையா உளுவான். வெட்கமே படமாட்டான்.

ஹ்ம்ம்ம் . சாதிச்சுடுவான், நம்மாள் சாதிச்சுடுவான். அல்ஹம்துலில்லாஹ் சாதிச்சுடுவான். டிகிரி ஹோல்டர், டபுள் டிகிரி ஹோல்டர், டாக்குத்தர், இஞ்சினியர், அற்றோனியற் லோ, பாரீஸ்டர் இருவத்தி அஞ்சி வருசமா
சாதிக்காதத, நம்ம நாலாங் கிளாஸ் ஆறு மாதத்துல சாதிப்பான்.

இதெப்படி மூன்று, நாலினம் வாழும் சிறிலங்காவில், ஜஸ்ட் எட்டே வீதம் உள்ள இந்த குட்டி இனம் மட்டும் புற்றீசல் போல சாதிக்கிறதே !!!! ????

எல்லா இடத்திலும், எல்லா சபைகளிலும், நாங்க ஆளுமையற்ற சமூகமாகவே இருந்துள்ளோம், வாழ்ந்துள்ளோம். ஜஸ்ட் தம்பிலா, கள்ளத் தோணிகள். காக்கா.

புள்ள பூச்சிகளாகவே கணிக்கப்பட்டுள்ளோம். பத்தோடு பதினொன்றாக வாழ்ந்துவிட்டு போகட்டும் என்றுதான், சிங்கள மக்கள், சிங்கள தலைவர்கள், சிங்கள பவுத்த பிட்ச்சுக்கள் எங்களை இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ விட்டுள்ளார்கள்.

யெஸ் கிரேட், அதுதான் நியதியும்கூட. அப்படித்தான் வாழ்ந்தோம், ஆனால் வட கிழக்கில் நெருக்கடி, பாரிய நெருக்கடி, குட்டி குட்டி இன முறுகல்கள், but அது ஒரு, மச்சான், மச்சினன் சண்ட மாதிரி, சக்களத்தி
சண்ட மாதிரி இருந்தாலும், ஒரு வடு, ஆறாத வடு எங்கேயோ புரையோடிக் கொண்டிருந்திருக்கின்றது.

வடக்கில் நாங்க ஒரு கேட்பாரற்ற, பட் மதிக்கப்பட்ட சமுகமாக வாழ்ந்தாலும், கிழக்கில் எப்போதும் கேள்விக் குறியாகவே இருந்துள்ளோம்.

இது கிழக்கில் உருவான முறுகல் அல்ல, ராமநாதபுரம், தேனீ, உசிலம்பட்டி, கொட்டாம்பட்டி, திருச்செந்தூர் பகுதிகளில், நாங்கள், இஸ்லாம் மார்க்கத்தை தழுவ முதலும், தழுவிய பின்னும் ஆரம்பித்த முறுகல்.

அந்த முறுகலை, மூர்க்கமாக மாற்றி, மோதி, முட்ட, யாரிடமும் பலமும் இருக்கல, பணமும் இருக்கல. தில்லும் இருக்கல, ஆம் எல்லாருமே கொறஞ்ச சாதி. ஒரே வயிற்ருப் பிள்ளைகள் ,மாமன் மச்சான் உறவு, அவன் பள்ளன் எண்டா நான் பறையன், அவன் நளவன் எண்டா, நான் வண்ணான், அவன் படையாண்ட குடி எண்டா, நான் வடக்கன்னாகுடி, உயர்சாதி ஹிந்துக்களைவிட்டு தூர ஓட வழிதான் தேடினோமே தவிர, மோத வழி தேடவில்லை.

ஓடினோம், ஓடினோம். பொத்துவில் - சோனவன், கோமாரி -கிறிஸ்டியன், திருக்கோயில், தம்பிலுவில் - தமிழர், அக்கரைப்பற்று - தமிழர், சோனவன் , அட்டாளைச்சேனை - சோனவன் , மீனோடக்கட்டு - தமிழர், பாலமுனை, ஒலுவில் - சோனவன் , அட்டப்பள்ளம் - தமிழர், நிந்தவூர் - சோனவன் , காரைதீவு - தமிழர், சாயிந்தமருது - சோனவன் , கல்முனை - சோனவன் ,தமிழர், பாண்டிருப்பு - தமிழர், மருதமுனை - சோனவன், நீலாவணை, ஒந்தாச்சிமடம், கல்லாறு, களுவாஞ்சிகுடி, களுதாவளை, ஆரப்பத்தை - தமிழர், காத்தான்குடி - சோனவன் , மட்டக்களப்பு - தமிழர், ஏறாவூர் - சோனவன், செங்கலடி - தமிழர், வாழைச்சேனை - சோனவன், தமிழர்,

அப்படியே மூதூர், வெருகல், கிளிவெட்டி, கிண்ணியா, திருகோணமலை என மிக்சராக இல்லாமல், புட்டும் தேங்காய்ப் பூவுமாக இருக்க காரணம் என்ன.

எங்கேயோ, எப்போவோ சக்களத்தி சண்டை, மாமா மச்சான் சண்டை, உன் சாதி பெரிசா, எஞ்சாதி பெரிசா என ஒரு குட்டி சண்டை நடந்துள்ளது. சண்டை முற்றி அவனை விட்டு இவன், இவனை விட்டு அவன் கொஞ்ச தூரம் ஒதுங்கி உள்ளான்.

அப்படி ஒதுங்கிய மைனாரிட்டி சோனவன், ரொம்ப யோசிச்சிருக்கான், தலய போட்டு ஓடச்சிருக்கான், யெஸ், இனி நமக்கு யாருமே இல்ல, நாடில்ல, நகரமில்ல, மாமன் மச்சான் உறவுமில்ல, பட் வாழோணும்,
வாழோணும், வாழ்ந்து காட்டோணும், இந்த ஒலகத்துல வாழ்ந்து காட்டோணும், யெஸ், ஐ யம் எலோன், ஐ யம் எலோன். வீ ஆர் எலோன்.

ஒடுக்கப்பட்ட சமுகம், அடக்கப்பட்ட சமூகம், தாழ்த்தப்பட்ட சமூகம், வாழ வழியில்லாத சமூகம், கிடைத்த எல்லாவற்றையுமே பற்றிப்பிடித்திருக்கின்றது. அது கல்லோ, மண்ணோ, புல்லோ, பூண்டோ, கத்தரிக்காயோ, கஸ்தூரியோ எட்டிப்பிடித்து, பற்றிப் படர்ந்திருக்கின்றான். இங்கு இஸ்லாம் மார்க்கமும் அவனுக்கு கொஞ்சம் ஹெல்ப்பண்ணியிருக்கின்றது.

பொய் சொல்றத குறைச்சி இருக்கின்றான், அஞ்சு நேரம் தொழவும் பழகி இருக்கின்றான், மது, மாதில் இருந்து கொஞ்சம் ஒதுங்கியே இருந்திருக்கின்றான் கொஞ்சம் நல்லாத்தான் வாழ்ந்திருக்கின்றான்.

தமிழ் சகோதரர்களுடன் நகமும் சதையுமாக உறவாடியிருக்கின்றான், சிங்கள மக்கள் மத்தியில் ஒரு உயர்ந்த ஸ்தானத்தையும் பெற்றிருக்கின்றான்.

இடையில், இடைநடுவில் கொஞ்சம் அரசியல் வந்தது, வந்து எங்களது உள்வீட்டுகளுக்குள் சப்பாணி கட்டி உட்கார்ந்து கொண்டு , கும்மி, கும்மி என கும்மி அடித்து, மொத்த இதயங்களையும் சப்பித்துப்பி, காரி உமிழ்ந்து மண்வெறி பிடித்த சாம்ராட் அசோகனையும் மிஞ்சி, ரத்தவெறி பிடித்த ஹிட்லரையும் விஞ்சி, சாதி, மதம், மானம், மரியாதை எல்லாத்தையும் தொலைச்சி, போகாத ஊருக்கு வழி தேடிக் கொண்டிருக்கின்றோம்.

எண்ட மூத்தாப்பா, எண்ட உம்மாக்கிட்ட சொல்லுவார், அடியே பைத்தியக்காரி, ஒண்ட புருஷன், அவள், சரஸ்வதிட மகன், பொன்னம்பலத்துக்கிட்ட அந்த ரெண்டேக்கர் காணிய வேண்டுறான், நீயும் படிக்கல, நானும் படிக்கல, பொன்னம்பலமும் படிக்கல, ஒண்ட புருஷன் கொஞ்சம் படிசிருக்கான்.

உறுதிய( ஒப்பினை / காணி பத்திரம் ) டீ ஆர் ஓ கந்தோருக்கு கொண்டு போய், நல்லா படிச்ச யாழ்ப்பாணத்தான் இருக்கானுகள், அவனுகளுக்கு முன்னுக்கு வச்சி , ஒரு தரத்துக்கு, ரெண்டு தரம், பொன்னம்பலத்துக்கு வாசிச்சி காட்டச் சொல்லி, காணிய வேண்டச் சொல்லு, இல்லாட்டி, பொறவு பொன்னம்பலத்துர பேரப்புள்ளகள் வந்து, நம்ம புள்ளகளுக்கிட்ட சண்ட புடிப்பானுகள், நாம அவங்கட அப்பாவ ஏமாத்தி, கீமாத்தி காணிய வேண்டிற்றோம் எண்டு.

வேத வாக்கு. கிளவண்ட வாக்கு வேத வாக்கு. என் நண்பன், தமிழ் நண்பன், என் பள்ளி தோழன், ஊராண்ட ஊட்டு கோழிய அறுத்து ரெண்டுபேரும் ஒண்டா திண்டிருக்கம், சினிமா கொட்டகைகளில் லூட்டி அடிச்சிருக்கம், அவன் தந்த லவ் லெட்டர, விஷயம் தெரியாம, அவன்ட கேர்ல் பிரெண்டுட தங்கச்சிக்கிட்ட குடுத்து, ஊர்காரனெல்லாம் என வெரட்டி வெரட்டி அடிச்சிருக்கானுகள், பாண்டிருப்புல இன்னம் என்ன தேடிக்கிருக்கானுகள், அந்த வடு, அந்த காயம் இன்னம் என்ர ஓடம்பில இருக்கிறது, போடா போய் துப்பாக்கி பயிற்ச்சியாவது எடுதுவாடா நாயே, என்று உத்தரப் பிரதேசத்துக்கு அனுப்பி வச்சவனும் அடியேன்தான்..

வந்து நின்றான், என் உயிரினும் மேலான என் ஆருயிர் நண்பன் வந்து நின்றான், துப்பாக்கி பயிற்ச்சி எல்லாம் எடுத்து முடிந்து, ஊருக்குள்ள வந்து, சோனவனுகளுக்கிட்ட காசு அறவிடுகின்ற ஒரு கால கட்டத்தில, ஒரு நாள் என்ர வீட்டுக்கு முன்னுக்கு வந்து நின்று, ஒரு பழைய கடிதத்தை காட்டி, மச்சான், இந்த அக்கரபத்து மார்க்கட் அமைந்துள்ள மொத்த காணியும், காரதீவை சேர்ந்த ஒரு தமிழ் பெண்ணுடையது மச்சான், இந்த சோனவனுகள், அந்த பொம்பளைய ஏமாத்தி அந்த காணிய வாங்கி இருக்கானுகள் மச்சான் .

என்னத்தை சொல்வது, எப்படி சொல்வது, எங்க போய் சொல்வது, எந்த மலையில போய் முட்டுவது, ஆனால் நான் ஒரு சோனவன் என்றும் பாராமல் என்னிடம் வந்து சொன்னதுதான் எமது நட்பின் அதி உச்சம். அந்த அளவுக்கு நான், நாம் தமிழ் நண்பர்களினதும் , தமிழ் மக்களினதும் இதயக்கூட்டுக்குள்ள இருந்தம். இருக்கிறம்.

நண்பன் வெறியோட சொன்னான், நான் கிலியோட சிரிச்சன். போடா நாயே எண்டுப்போட்டு போயிட்டான்.

அப்புறம், ரெண்டு மாதத்துக்கு அப்புறம், ஒரு சுப யோக, சுப தினத்தில், அக்கரைப்பற்று சந்தை சதுக்கம் எரிந்து சாம்பரானது. யெஸ் ...யெஸ் ...யெஸ் ... யெஸ் ...யெஸ் ...யெஸ் ...என் ஆருயிர் நண்பனின் வழிகாட்டலில், முப்பத்தி முக்கோடி இயக்கங்களின் மத்திய செயற்குழுக்களின் தீர்மானத்திட்கேட்ப , சூர சம்ஹாரம் ஆடியதாக என் நண்பன், பின்னொருநாளில், மெட்ராஸ் அங்கப்பனாயக்கன் தெருவில் வைத்து சொன்னான். எரிந்த கடைகளில் முதல் கடை எங்கள் கடை, அந்தக்கடையில் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள், நானும் அவனும், வாழ்வாங்கு வாழ்ந்துள்ளோம் என்பதுதான் ??????. ரொம்ப
சந்தோசமான செய்தி. it is on record....it is on record..... it is on record.....

கிட்டதட்ட மூவாயிரம் பேர் நேரடியாக பாதிக்கப்பட்டார்கள், ஒரு பத்தாயிரம் பேர் மறைமுகமாக பாதிக்கப்பட்டார்கள்.

பின்னாளில், இன்னொரு அந்தி சாயும் வேளையில் என் நண்பனையும், வளர்த்த கடாக்களே, நாலு, குட்டி, த்ரீ பாயிண்ட் டூ குண்டுகளுக்கு இரையாக்கி இருந்தன. என் உயிரினும் மேலான நண்பன், மண்ணில் வீழ்ந்து விட்டான் என்ற செய்தி, ஆறாயிரம் மைலூக்கப்பால் இருந்த எனக்கு, காற்று வாக்கில் வந்து சேர்ந்தது. அந்த நாய், இன்னும், இன்னும் என்னுடன் வாழ்ந்திருக்கலாம். அவன் ஒரு பக்கா ஜென்டில் மேன்.

இது எங்கள்,எனது குட்டி அனுபவத்தின் ஒரு மைக்ரோ துளி. இந்த துளியை, துரும்பாக்கி, துரும்பை, துப்பாக்கியாக்கி, துப்பாக்கிகளை துரியோதனர்களிடம் கொடுத்ததனால் வந்த வினையின், வீம்பின், வீரியங்கள்தான் இன்று, பிரித்துத்தா அல்லது சோனியின் கழுத்தை வெட்டித்தா என்பதில் வந்து நிற்கிறது ..???

நோர்வேக்காரன் கோட்டையும், சூட்டையும் காட்டி, வன்னிகாட்டுக்குள், இருந்த கன்றுக்குட்டிகளை அழைத்த போதே நாம் இலங்கைநெட் இணையத்தளத்தில் ரெண்டாயிரத்து ஆறில், ஏழில் எழுதினோம், கத்தி கூப்பாடு போட்டோம்.

ராசாக்களே, ராஜ குலோத்துங்கர்களே, கொஞ்சம் கோட்ட கீட்ட போட்டு, பழக்கி, சிறு நகரங்களை, மெதுவாக பெரு நகரங்களை காட்டிபுட்டு, நம்ம வன்னி குழந்தைகளை எலெக் ரோனிக் நகரங்களுக்கு அனுப்புங்கள்,
இல்லாவிட்டால், மாறிடுவான், நம்மவன் மாறிடுவான் என்று சொல்லி மன்றாடினோம்...நெத்தின்க் ஹெப்பென்.

கருணா அம்மான் மாறினார், கிழக்குக்கு வந்து அறிக்கை விட்டார், வடக்கு வேற, கிழக்கு வேற. நாங்க சந்தோசப்பட்டோம், நான் சந்தோசப்பட்டேன், கிழக்கின் புதல்வன், கிழக்கை பற்றி யோசிக்க கூடிய ஒரு மாவீரன் வந்துவிட்டான் என்று ரொம்ப சந்தோசப்பட்டோம்.

கொஞ்சம் பயமும் வந்தது. பொத்துவில், பாணமை, குடும்பிமலை தொடக்கம் திருகோணமலை வரையுள்ள சாதாரண தமிழர்களும், அந்த தமிழர்களின் வாழ்விடங்களும், அவர்களின் தொழில்துறைகளும் நொந்து நொம்பலமாகிக் கெடக்கிறதே,

மொத்த சோனவனின் வளங்களும் உச்சானிக் கொம்பில் ஏறி இருக்கின்றதே, இத பார்த்துபோட்டு மனுஷன் தடுமாறுவாரே, சோனவன் மேல கோபம் வருமே என்ற ஆதங்கத்தில் , இலங்கைநெட் இணையத்தளத்தில் கிழக்கு மாகாணத்தை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவது எவ்வாறு, என்ற அடிப்படையில் "கருணா என்கின்ற முரளீதரனுக்கும், கிழக்கு மாகாண மக்களுக்கும் " என்ற தலைப்பில் பதினாலு தொடர் கட்டுரைகள் எழுதினோம்.

நம்ம கருணா அம்மானும் கண்டு கொள்ளல, அவர்ர பாசறையில் வளர்ந்த பிள்ளையானும் கண்டு கொள்ளல, அந்த பட்டாளங்களுடன் வளர்ந்த அடிப்பொடிகளும் கண்டு கொள்ளல. எல்லோரும் கொழும்புல போய்
ஜாலியா, கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துள்ளார்கள்.

ஆனால் சோனவன் இந்த கட்டுரைகளை கண்டு வீடு தேடி வந்தான், சில முஸ்லிம் இளைஞர்கள் கட்டார், துபாய்களில் இருந்து வேலைகளை தூக்கி வீசி விட்டு கிழக்கிற்கு போய் தொழில் தொடங்கினார்கள். அந்த
வளங்களை சிறப்பாக பாவித்தார்கள். இத்தாலியில் இருந்த அம்பாறை சிங்கள இளஞர்கள் மூன்று பேர் நேரடியாக என்னை வந்து சந்தித்து, அம்பாறை உகனையில் தொழில்சாலைகளை தொடங்கினார்கள். பலர்
மீன் வியாபாரத்தில் கொடி நாட்டினார்கள்.

ஆம், பொறாமை வரவேண்டும், அது பொல்லாமையாக இருக்க கூடாது. கருணா அம்மானும், பிள்ளையானும் கிழக்கு மாகாண தமிழனுக்கு என்ன செய்தார்கள்,எத்தனை தொழில்சாலைகளை ஆரம்பித்து கொடுத்தார்கள், இந்த மகான்களால் எத்தனை தமிழச்சிகளின் வீட்டில் அடுப்பெரிந்தது, ஏன் அவர்களுக்கு பின் வந்த, வந்துள்ள இந்த எம்பி, தும்பிக்களெல்லாம் எத்தனை காய்களை நகர்த்தி உள்ளார்கள். எத்தனை
சிங்கள எம்பிக்கள், மந்திரிகள், அதிகாரிகளின் காலில் விழுந்து சாதித்துள்ளார்கள்.

தமிழனுக்காக நீ வாழ்வதானால், எந்த குப்பையிலாவது விழுந்து சாதிக்கொனும். ஒவ்வொரு தமிழனின் வீடுகளிலும் அடுப்பெரியோனும். அதுவரை நாம் சாக கூடாது. அரசியல் தொடர்ந்து சோறு போடாது. நாம் தமிழ்
பத்தினிகளுடன் வாழ்ந்துள்ளோம். அவளுகள் வாய் தொரக்கோணும், தொறந்து, அடேய் புள்ளகளே !!!! மொதல்ல எங்களுக்கு சோத்துக்கு வழி பண்ணுங்கடா என்று சாபம் போடணும் ..அதன் பின் தமிழ் கிராமங்கள் தோறும், சோனவனுக்கு போட்டியாக பில்டிங்குகள் வானுயர முளைக்க வேண்டும்.......

அத செய்யுறத உட்டு போட்டு அனைவரும் நோகாமல் நொங்கு திங்கிற வேலைகளைத்தான் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். சரி ஹிஸ்புல்லாஹ் பள்ளிக்ககூடம் கட்டியிருக்கார் , ஊரா ஊட்டு காணில கட்டி இருக்கார், கிட்டத்தட்ட அது ஒரு மாயாபஜார். அது ஊருக்கே தெரிந்த விடயம்.

ஆனால் அவர் எத்தனை அரபிகளின் காலில் விழுந்திருப்பார், எத்தனை சிங்கள அதிகாரிகளின் பின் புறத்தை நக்கி இருப்பார், எத்தனை தமிழ் கிராம சேவையாளர்கள், சேர்வையர்களுக்கு ஆராத்தி எடுத்திருப்பார்,
இவர்கள் யாரினதும் ஆதரவில்லாமலா ஹிஸ்புல்லாஹ் கண்ணுக்கு தெரியாத அந்த கட்டிடத்தை கட்டி இருப்பார். ரிசாட் பதுயுடீன் மீண்டும், மீண்டும், மீண்டும் வர்த்தக அமைச்சை எடுத்திருப்பார், ஆஸாத் சாலி என்ன வானலோகத்தில் இருந்து வந்தா, கொழும்பு மேயர் கதிரையை பிடித்திருப்பார், கபீர் ஹாசீம் பெற்றோலியம் துறையை மொத்த சிங்கள புத்த பிக்குகளுக்கும் தெரியாமலா பறித்திருப்பார்.

பாவம், தமிழர்களும், சோனவனும் !!!!!! எப்போதுமே, எப்போவுமே சிங்கள புத்திசாலிகளே வென்றுள்ளார்கள், வெல்கின்றார்கள், வெல்லுவார்கள்.

yes, they are always mastermind.
I like them. I love them.


( அடுத்த வாரம் நம்ம தமிழ், சிங்கள எம்பிக்களையும், சோனக அலிபாப்பாகளையும்
பற்றி கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம் ......)

( இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் தொடருவேன் .....)
yahiyawasith@ymail.com
21-6-2019

Read more...

‘மீண்டும் தாக்குதல்கள் நடக்கலாம்’ – சிறிலங்கா இராணுவத் தளபதி

மீண்டும் தாக்குதல் நடக்கலாம். பயங்கரவாதம் நூறு வீதம் முடிவுக்கு வந்து விட்டது என கூற முடியாது. அந்த அச்சுறுத்தல் இன்னமும் உள்ளது. என்று சிறிலங்கா இராணுவ தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரிக்கும், தெரிவுக்குழு முன்னிலையில் இன்று பிற்பகல் ஊடகங்களின் முன்பாக அளித்த சாட்சியத்தின் போதே அவர் இதனைக் கூறினார்.

கேள்வி:- இந்த தாக்குதலை அடுத்து நீங்கள் முன்னெடுத்த தேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகளின் போது, அவற்றை தடுக்கும் வகையில் எவரதும் எந்த அரசியல் தரப்பில் இருந்தும் அழுத்தம் கொடுத்தனரா?

பதில்:- நீங்கள் கேட்கும் கேள்வி தெளிவானது, ஏப்ரல் 21 ஆம் நாள் சம்பவம் இடம்பெற்ற பின்னர் இராணுவ தளபதி என்ற வகையில் இராணுவத்தினரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தினேன். எனக்குரிய அதிகாரங்களுக்கமைய தேடுதல்கள் , விசாரணைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.

அந்த சந்தர்ப்பத்தின் போது ஏப்ரல் 26 ஆம் நாள் இசான் அஹமட் என்பவர் தெகிவளை பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார். அப்போது எனக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் தொலைபேசி அழைப்பை எடுத்தார். எனது தொலைபேசி இலகத்தை அனைவரும் அறிவார்கள்.

அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கதைப்பார்கள். இதன்படி அவரும் கதைத்துள்ளார். குறித்த தினத்தில் அந்த நபரின் பெயரை குறிப்பிட்டு அவரை கைது செய்தீர்களா என கேட்டார். அது பற்றி எனக்கு தெரியாது நான் ஆராய்ந்து கூறுவதாக கூறினேன்.

பின்னர் இராண்டாவது தடவையாகவும் கேட்ட போது இன்னும் தேடுவதாக கூறியிருந்தேன். இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களிடம் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளாரா என கேட்டேன். பின்னர் கேட்ட போது அவர் கைது செய்யப்பட்டிருந்தமை தொடர்பாக உறுதியாகியிருந்தது.

அப்போது இது பற்றி இன்னும் ஒன்றரை ஆண்டுகளின் பின்னரே இனி தொலைபேசி அழைப்பை எடுக்க வேண்டுமென கூறியிருந்தேன். பயங்கரவாத தடுப்பு பிரிவில் அவரை ஒன்றரை ஆண்டுகளுக்கு விசாரணைக்காக வைத்திருக்க முடியும். என்ற காரணத்திற்காகவே நான் அவ்வாறு கூறியிருந்தேன். எவ்வாறாயினும் அவர் எனக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை.

கோரிக்கையையே செய்திருந்தார். தனது அமைச்சில் பணியாற்றும் உயர் அதிகாரியின் மகன் என்பதனால் அது தொடர்பாக ஆராய்ந்து பார்க்குமாறே கூறியிருந்தார், அதை தவிர்ந்து அமைச்சரோ அல்லது வேறு எந்த அதிகாரியோ எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிக்க எவரும் அழுத்தம் கொடுக்கவில்லை.

கேள்வி:- வேறு அமைச்சர்கள் எவராவது அழுத்தம் கொடுக்கவில்லையா?

பதில்:- இல்லை, விசாரணைகள் இடம்பெற்ற நேரங்களில் சிலர் குறித்து தேடிப் பார்ப்போம். ஆனால் அதனை தவிர எந்த தரப்பில் இருந்தும் அழுத்தம் வரவில்லை. குறிப்பாக இந்த அமைச்சர் (றிசாத் ) எக்காரணம் கொண்டும் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று என்னால் உறுதியாக கூற முடியும்.

கேள்வி:- நீங்கள் உங்களின் விசாரணைகளை முன்னெடுக்க சகல சுதந்திரமும் இருந்தது அப்படித்தானே?

பதில்:- இந்த விடயத்தில் சிறிலங்கா அதிபரோ பிரதமரோ எந்தவொரு அமைச்சரோ எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. இராணுவம் சுயாதீனமாக செயற்படவே முடிந்தது.

குழு:- பாதுகாப்பு விவகாரங்களில் சில முக்கிய அம்சங்கள் உள்ள காரணத்தினால் வேண்டுமென்றால் ஊடகங்களை நீக்கிவிட்டு விசாரணைகளை நடத்துவோம்.

சரத் பொன்சேகா:- முதல் கேள்வியுடன் தொடர்புபட்ட சில கேள்விகள் உள்ளன அவற்றை கேட்டுவிட்டு அனுப்பலாம்.

கேள்வி:- ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் மீண்டும் தொலைபேசியில் அழையுங்கள் என நீங்கள் ஏன் கூறினீர்கள்?

பதில்:- எனது அறிவுக்கு அமைய பயங்கரவாத தடுப்புசட்டமே அப்போது இருந்தது. அதன் பின்னர் அவசரகால சட்டம். இந்த காலத்தில் ஒருவர் ஒன்றரை ஆண்டுகள் தடுப்பில் தடுத்து விசாரணைகளை நடத்த முடியும் என்பது எனக்கு தெரியும். அண்மையில் இந்த சட்டம் ஒரு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.

எனினும் அந்த தொலைபேசி அழைப்பிற்கு நான் யதார்த்தமாக ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் என பதில் தெரிவித்தேன். இதில் நான் ஆழமாக சிந்திக்கவில்லை. இவரை ஒன்றரை வருடங்கள் கைது செய்து தடுப்பில் வைத்திருப்பேன் என நான் வேண்டுமென்று கூறவில்லை.



கேள்வி:- கைது செய்யப்பட்ட போது அவர் பயங்கரவாதியென எப்படி தெரியும்? தெரியாது தானே?

பதில்:- சாதாரணமான அறிவின் படி எம்மால் அதனை தெரிந்து கொள்ள முடிந்தது. அத்துடன் எமது புலனாய்வு துறையினருக்கு அப்போதே ஓரளவு உறுதியான தகவல்கள் வந்துவிட்டது. அதை வைத்தே கூறினேன். எமக்கு கிடைத்த தகவலின் படி இந்த நபர் குறித்த அமைப்புடன் தொடர்பில் உள்ளார் என்று நாம் அறிந்திருந்தோம். புலனாய்வு துறையும் அதனை எமக்கு உறுதிப்படுத்தியிருந்தது.

கேள்வி:- கடந்த 21ஆம் திகதி தாக்குதல் சம்பவத்தின் போதும் இப்போதும் உள்ள நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் எவ்வாறு உள்ளது? இந்த பயங்கரவாத செயற்பாடுகளை வெற்றி கொள்ள முடிந்துள்ளதா?

பதில்:- இந்த பயங்கரவாதம் என்பது சர்வதேச பயங்கரவாதமாகும். அதற்கே நாம் முகங்கொடுத்து வருகின்றோம்.தெரியாத எதிரியோடு நாம் போராடிக் கொண்டுள்ளோம். இந்த பயங்கரவாத தாக்குதல் இதற்கு முன்னர் இருந்த பயங்கரவாத தாக்குதலை விட மாறுபட்ட ஒன்றாகும். இப்போது இந்த பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியுள்ளோம்.

முப்படை மற்றும் காவல்துறை இணைந்து இந்த பயங்கரவாதத்தை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம். ஆனால் இந்த பயங்கரவாதம் முடிந்து விட்டது என்ற வார்த்தையை எம்மால் கூற முடியாது. எவ்வாறு இருப்பினும் இறுதியை பார்க்கும் வரையில் போராடி கொன்றுள்ளோம்.

அவசரகால சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே தொடர்ந்தும் கைதுகளை மேற்கொண்டு விசாரணைகளை நடத்த எமக்கு அதிகாரம் உள்ளது. இதற்கு பின்னர் அரசாங்கமாக இணைந்து பேச்சு நடத்தி அடுத்த கட்டத்தை ஆராய வேண்டும்.

முன்னர் இருந்த நிலைமையை விட இப்போது முப்படை மற்றும் காவல்துறை இடையிலான தொடர்பு அதிகரித்துள்ளது. பாதுகாப்பு செயலர் ஒருவராக முன்னாள் இராணுவத் தளபதி ஒருவரை நியமித்துள்ள காரணத்தினாலும் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரி யாக இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாலும் நெருக்கம் அதிகரித்துள்ளது.

அனைவரும் ஒன்றாக இணைந்து பேச முடிகின்றது. ஒவ்வொரு வாரமும் பாதுகாப்புக் கூட்டம், புலனாய்வு மீளாய்வுக் கூட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. அதுவும் அனைத்துலக நாடுகளுடன் உள்ள தொடர்பும் இந்தியாவின் ஒத்துழைப்பும் எமக்கு பலமாக இன்று அமைந்துள்ளது.

கேள்வி:- எமது புலனாய்வு துறை ஏனைய நாடுகளின் புலனாய்வு துறை போன்று அல்லது யுத்த காலகட்டத்தில் சரத் பொன்சேகாவிடம் இருந்த புலனாய்வு போன்று பலமாக உள்ளதா?

பதில்:- அந்த யுத்தம் வேறு, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் இருந்த அணி இன்று இல்லை. யுத்தத்தை ஆரம்பித்தத்தைப்போல அல்லாது முடிக்கும் போது மிகவும் பலமாகவும் சர்வதேசத்தினால் ஏற்றுகொள்ளக்கூடிய வகையிலும் அத்துடன் பயங்கரவாதத்தை முழுமையாக தோற்கடிக்கும் வகையில் எமது புலனாய்வுத்துறை செயற்பட்டது.

பின்னர் கடந்த பத்து ஆண்டுகளில் சில பின்னடைவுகள் இருக்கலாம். ஆனால் எவ்வாறு இருப்பினும் மீண்டும் ஒன்றிணைந்து பலமாக எமது பாதுகாப்பு மற்றும் புலனாய்வு துறைகளை கட்டியெழுப்ப வேண்டிய தேவையே எமக்கு உள்ளது.

கேள்வி:- எக்காரணம் கொண்டும் அரசாங்கத்தினால் இது பலவீனமடைந்துள்ளது என கூற முடியாது தானே?

பதில்:- அவ்வாறு கூற முடியாது, ஒரு சிலர் கைது செய்யப்பட்டதால் அல்லது நீக்கப்பட்டதால் புலனாய்வுத்துறை பலவீனமாக மாறும் என நான் நினைக்கவில்லை. இதற்கு மாற்றீடுகள் கண்டறியப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட நபர்கள் இறந்திருந்தால் என்ன செய்வது-. புலனாய்வு துறையினர் இறந்துள்ளனர். அதனால் புலனாய்வு வீழ்ச்சி கண்டுள்ளது என கூற முடியாது.

கேள்வி:- ஆரம்பத்தில் சாட்சியத்துக்கு வந்த பாதுகாப்பு செயலர் கூறினார் பயங்கரவாதம் உடனடி அச்சுறுத்தல் மற்றும் நீண்டகால அச்சுறுத்தல் என்ற காரணிகளை கூறினார். பயங்கரவாதிகளுக்கு அவ்வாறு ஒன்று இருக்க வாய்ப்பில்லை. எனினும் அவசரகால அச்சுறுத்தல் 99 வீதம் முடிந்துள்ளது என அவர் கூறி இரண்டு வாரங்களில் கண்டியில் இருந்து தற்கொலை தாரி ஒருவரும், சவுதியில் இருந்ததாக சிலரும் கைதுசெய்யப்பட்டனர். அப்படியென்றால் 99 வீதம் முடிந்ததாக கூறிய பின்னர் இந்த கைதுகள் எல்லாம் 1 வீத அச்சுறுத்தலா?

பதில்:- அவர் கூறிய கருத்து குறித்து என்னால் ஒன்றும் கூற முடியாது. ஆனால் இன்று அச்சுறுத்தல் நிலைமைகள் குறைவாகவே உள்ளது. குறிப்பாக சாய்ந்தமருது சம்பவத்தின் பின்னர் நிலைமைகளை கட்டுப்படுத்த முடிந்தது.

எனினும் 100 வீதம் கட்டுப்பாட்டில் உள்ளது என கூற முடியாது. ஆனால் அதிகமாக நிலைமைகள் எமது கட்டுப்பாட்டில் தான் உள்ளது. வீதமாக கூறுவதை விட அவசரமாக ஏதும் நடக்கும் என்ற அச்சுறுத்தல் நீங்கியுள்ளது. இந்த நபர்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட பின்னர் இந்த நிலைமை நீங்கியுள்ளது.

கேள்வி:- அப்படியென்றால் நீங்கள் கூறுவது முதல் இரு நாட்களில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அமைப்புகளை கண்டறிந்து விட்டீர்கள், நபர்களை கைது செய்யவே காலதாமதம் அப்படியா?

பதில்:- அப்படித்தான்.

கேள்வி:- பயங்கரவாதத்துடன் நாம் நெருக்கமாக செயற்பட்டோம், பயங்கரவாத தாக்குதல் அடுத்தடுத்து நடக்காதே, ஒருதரம் குண்டு வெடித்து தேடுதல் நடந்தவுடன் இனி அச்சுறுத்தல் இல்லை என ஒரு நிலைப்பாட்டுக்கு வர முடியாது என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்:- ஆம், இவ்வாறான தாக்குதலுக்கு கால எல்லை இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். நீண்டகால திட்டங்களில் இது நடக்கலாம்.

இனியும் எவருக்கும் தேவை இருப்பின் மீண்டும் தாக்குதல் நடக்கலாம். அதனால் தான் தேடுதலில் தொடர்ந்தும் இராணுவத்தை ஈடுபடுத்தி வைத்துள்ளோம். பலப்படுத்தியும் உள்ளோம். ஆனால் இந்த பயங்கரவாதம் நூறு வீதம் முடிவுக்கு வந்துவிட்டது என நாம் கூற முடியாது. இந்த அச்சுறுத்தல் இன்னமும் உள்ளது.

விடுதலைப் புலிகளை கூட நாம் இன்னமும் தேடிக்கொண்டு தான் உள்ளோம். அவர்களும் இன்றும் சில சில புலம்பெயர் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

ஆகவே இராணுவமாக நாம் இதனை கருத்தில் கொள்ளவேண்டும், விடுதலைப் புலிகளை பொறுத்தவரை அந்த அமைப்பின் தலைமைத்துவம் அழிக்கப்பட்ட பின்னர் ஒரு சில தலைவர்கள் சரணடைந்த பின்னரும் மேலும் பலர் சரணடைந்த பின்னர் அந்த அமைப்பு அப்படியே வீழ்ச்சி கண்டு விட்டது. ஆனால் இது அவ்வாறு அல்ல.

கேள்வி:- இந்த தாக்குதல் ஒரு நேரத்தில் ஏழு எட்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றது, புலிகள் கூட அவ்வாறு ஒருநாளும் தாக்கியதில்லை. ஒரு நேரத்தில் ஒரு தாக்குதல் தான், இது அவ்வாறு அல்ல அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய நோக்கம் உள்ளது. இதில் பயங்கரவாத்தை கூறவேண்டியதை செய்து முடிக்க ஒரு நபர் இருந்தால் போதும்.

பதில்:- ஆம், இந்த தக்குதல் ஆயுதம் மூலமாக மட்டும் அல்ல வாகனம் மூலமாகவோ விமானம், வேறு ஏதேனும் ஒன்றின் மூலமாக தாக்குதல் நடத்த முடியும். எல்லா நாடுகளிலும் இது நடக்கலாம்.

இந்த கேள்விகளின் பின்னர் ஊடகங்களை வெளியே அனுப்பி விட்டு சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக இராணுவத் தளபதியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

வழிமூலம் – வீரகேசரி

Read more...

சஹ்ரானின் மனைவி மகள் இன்று கல்முனை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்:

சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 26 திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்து உயிர் தப்பிய ஷஹ்ரான் காசிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா (வயது 28) இன்று(26) காலை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட ஷஹ்ரானின் மனைவியை பொலிஸ் பரீசோதகர் பஸீல் கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என். றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இவ்வாறு ஆஜர் படுத்தப்பட்ட ஷஹ்ரானின் மனைவி தொடர்பான விசாரணை நீதிவானின் மூடிய அறையில் விசாரணைக்காக எடுக்கப்பட்டது.

இதன்போது குறித்த இவ்விசாரணையில் 3 சாட்சியாளர்கள் வேறு வேறாக ஆஜர்படுத்தப்பட்டு நீண்ட நேர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

எனினும் எந்த விசாரணை குறித்த சாட்சியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்டது என்பதை ஊடகங்களுக்கு அறிவிக்க பதிவாளர் தயக்கம் காட்டினார்.


பின்னர் ஷஹ்ரானின் மனைவி கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கும் சிறிது நேரம் வாக்குமூலம் ஒன்று பெறப்பட்டதாக பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டது.

இதன் போது பணக்கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான விடயங்களையும் தான் அறிந்த தாக்குதல் விடயங்களையும் அந்த வாக்குமூலம் ஒன்றில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி வீட்டுத்தொகுதியில் இராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற தாக்குதலில் ஷஹ்ரானின் மகளான பாத்திமா ருஸையா(வயது-3) நீதிமன்ற வளாகத்திலும் பொலிஸ் நிலையத்திலும் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் செல்லமாக விளையாடி கொண்டிருந்தார்.

மேற்குறித்த விசாரணைகளை அடுத்து எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் திகதி புதன்கிழமை அன்று விசாரணைக்காக அழைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் கொழும்பு நோக்கி ஷஹ்ரான் காசிமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா (வயது 28) மற்றும் மகள் ஆகியோர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் அழைத்து செல்லப்பட்டனர்.






Read more...

நால்வருக்கு மரண தண்டனை நிறைவேறுகின்றது. ஜனாதிபதி கையொப்பம்!

போதைப்பொருள் வியாபாரத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நால்வருக்கு மிகவிரைவில் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இதற்கான இறுதி கையொப்பத்தை ஜனாதிபதி மைத்திரிபால இட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இன்று காலை ஊடகங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டால் அதனை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதியின் கையொப்பம் அவசியமானதாகும். இலங்கை ஓர் பௌத்த நாடு என்ற அடிப்படையில் பௌத்த மத போதனைகளுக்கு மரண தண்டனை முரண்பாடானது என்ற அடிப்படையில் கடந்த பல வருடங்களாக மரண தண்டனை நிறைவேற்றப்படாது, மரண தண்டனை ஆயுள் தண்டனையாக அனுபவித்து வந்த நிலையில், தற்போது போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி முடிவு செய்துள்ளமை பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இம்முடிவுக்கு ஆதரவாகவும் எதிரானதாகவும் விவாதங்கள் தோன்றியுள்ளது.

எது எவ்வாறாயினும் மேற்படி நால்வருக்குமான மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை சிறைச்சாலைகள் திணைக்களத்தினர் மிக இரகசியமாக மேற்கொண்டுவருவதாக அறியக்கிடைக்கின்றது.

Read more...

Monday, June 24, 2019

மத்ரஸாக்களை அரசுடைமையாக்குவீர்! அங்கே நடைபெறுபவற்றை ஆராய விசேட குழுவை அமைப்பீர்! மஹிந்த தரப்பினர் கோரிக்கை.

மத்­ர­ஸாக்­களில் கற்­பிக்­கப்­படும் கற்கை நெறிகள், மற்றும் அடிப்­ப­டை­வாத மத போத­னைகள் தொடர்­பிலும் ஆராய விசேட குழு­வொன்று நிய­மிக்­கப்­பட வேண்டும்.

பொருத்­த­மற்ற மத கருத்­துக்­களைப் போதிப்­பதன் கார­ண­மா­கவே இளம் தலை­மு­றை­யினர் அடிப்­ப­டை­வா­தி­க­ளாக மாற்­ற­ம­டை­கின்­றனர்.

எனவே, மத்­ர­ஸாக்­களை முழு­மை­யாக அர­சு­டை­மை­யாக்­கு­வதே அடிப்­ப­டை­வா­தத்தை முழு­மை­யாக இல்­லா­தொ­ழிக்­கு­மென மஹிந்த தரப்­பினர் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன இவ்­வாறு கருத்து வெளி­யிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

மத்­ரஸா பாட­சா­லை­களில் பொருத்­த­மற்ற கற்கை நெறி­களே கற்­பிக்­கப்­ப­டு­கின்­றன. இல­வச கல்­வி­யினை வழங்கும் நாட்டில் இவ்­வா­றான பாட­சா­லைகள் இயங்­கு­வது தேவை­யற்­றது. இப்­பா­ட­சா­லை­களில் மதக் கொள்­கை­க­ளுக்கே முக்­கி­யத்­துவம் வழங்­கப்­ப­டு­கின்­றன. ஒரு குற்­றத்­தினை செய்தால் என்ன தண்­டனை கிடைக்கும் என்­பது எமது பொது சட்­டத்தில் தெளி­வாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மத்­ரஸா பாட­சா­லை­களில் இவ்­வா­றான குற்­றங்­க­ளுக்­கான தண்­ட­னை­களும் மிக கொடூ­ர­மான முறையில் கற்­பிக்­கப்­ப­டு­கின்­றது.

அரபு நாடு­களில் குற்­றங்­க­ளுக்கு கிடைக்கப் பெறும் தண்ட­னை­களை எமது நாட்டின் மாண­வர்­க­ளுக்குப் போதிப்­பதால் எவ்­வித பயனும் கிடைக்­கப்­பெ­றாது. மாறாக அடிப்­ப­டை­வா­தமே தோற்றம் பெறும். பயங்­க­ர­வாதி சஹ்­ரானின் மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தலை தொடர்ந்து அடிப்­ப­டை­வா­தத்தை கற்­பிக்கும் பாட­சா­லைகள் தொடர்பில் அர­சாங்க தரப்பில் ஒரு மாத காலத்­திற்கு மாத்­திரம் பேசப்­பட்­டது. தற்­போது இவ்­வி­டயம் தொடர்பில் எவரும் அக்­கறை செலுத்­து­வ­தில்லை

நாட்­டுக்குப் பொருத்­த­மற்ற விட­யங்­களை அடிப்­ப­டை­வா­த­மாகப் போதிக்கும் பாட­சா­லைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்­தா­விடின் எதிர்­கா­லத்தில் பாரிய விளை­வுகள் ஏற்­படும். மத்­ரஸா பாட­சா­லை­களில் மாண­வர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்­தப்­பட வேண்டும். இப்­பா­ட­சா­லை­களின் பாடத் திட்­டங்கள் தொடர்பில் ஆராய உரிய குழு­வினர் நிய­மிக்­கப்­ப­டுதல் அவ­சியம். விரை­வான தீர்­வினை பெறா­விடின் மேலும் பல சஹ்ரான் போன்ற தற்­கொலை குண்­டு­தா­ரிகள் உரு­வாகி விடு­வார்கள்.

மத்­ரஸா பாட­சா­லை­களை முழு­மை­யாக அர­சு­டை­மை­யாக்­குதல் அவ­சியம். இப்­பா­ட­சா­லை­களில் கல்வி கற்கும் மாண­வர்­க­ளுக்கு இல­வச கல்வி கிடைக்­கப்­பெற வேண்டும். அடிப்­ப­டை­வாத பாடசாலைகளை முழுமையாக இல்லாதொழித்தால் மாத்திரமே இளம் தலைமுறையினரை பாதுகாக்க முடியும். அரசாங்கத்தில் இது முடியாவிடின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்கவுள்ள எமது அரசாங்கத்தில் நிச்சயம் மத்ரஸா பாடசாலைகள் நிபந்தனையற்ற விதத்தில் முழுமையாக அரசுடைமையாக்கப்படும் என்றார்.

Read more...

காத்தான்குடி பொலிஸார் சஹ்ரானுக்கு பூரண ஆரவு வழங்கினர். சுட்டுக்கொல்ல அனுமதி கேட்டேன் கிடைக்கவில்லை. அஸ்பர்

ஸஹ்ரான் ஹாஷிமின் இறுதி வீடியோவை பார்த்ததையடுத்து தான் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி அதிர்ச்சியடைந்ததாகவும், அதனையடுத்து புலனாய்வு பிரிவு அதிகாரிகளை தொடர்புகொண்டு, தன்னிடம் அனுமதிப்பத்திரம் உள்ள துப்பாக்கி இருப்பதால் தான் ஸஹ்ரானைத் தேடிச் சென்று சுட்டுக்கொல்ல அனுமதியளிக்குமாறு கேரியிருந்ததாக காத்தான்குடி நகரசபைத்தலைவர் ஷாஹுல் ஹமீட் மொஹமட் அஸ்பர் தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவத்துள்ளார்.

அவர் அளித்த செவ்வி வருமாறு:

நீண்டகாலமாக காத்தான்குடியில் பல தௌஹீத் ஜமாஅத் அமைப்புகள் இருக்கின்றன. குழுவென்று பார்த்தால் ஆறு குழுக்கள் இருந்தன. எனினும், அவற்றில் ஸஹ்ரானின் தேசிய தௌஹீத் ஜமாஅத் மாத்திரமே அடிப்படைவாத வழியில் சென்றது. அது சில ஆண்டுகளுக்கு முன்னரே தோற்றம் பெற்றது. இறுதியில் 2017 மார்ச்சின் பின்னர் காணாமல்போனது.

ஸஹ்ரானின் குழுவில் சுமார் 200 பேர் இருந்திருக்கக் கூடும். ஸஹ்ரானின் அபாயகரமான பேச்சுகளைக் கேட்டு அதிலிருந்து பெரும்பாலானோர் விலகியிருந்தனர். அவர்கள், ஸஹ்ரான் செல்லும் பாதை தவறானது என்பதை உணர்ந்து அவரை புறக்கணித்தனர். அதன்பின்னர் அவர்களில் 100 பேருக்கும் குறைவானோரே எஞ்சியிருந்தனர். தற்போது அந்த அமைப்பில் எவருமே இல்லை. இறுதியில் ஸஹ்ரானின் உறவினர்கள் சிலரே மீதமிருந்தனர். அவர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மைய அசம்பாவிதங்களின் பின்னர் காத்தான்குடியைச் சேர்ந்த 63 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

நௌபர் மௌலவி என்று ஒருவர் இருந்தார். அவர் குருணாகலை சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்து சுமார் 15 வருடங்களுக்கு முன் காத்தான்குடியிலிருந்து இடம்பெயர்ந்தார். நௌபர் மௌலவியின் தாருல் அதர் அமைப்பிலேயே ஸஹ்ரான் ஆரம்பத்தில் இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகி தேசிய ஜமாஅத் அமைப்பை தோற்றுவித்தார். பின்னர் அந்த அமைப்புடன் பிரச்சினைகளை ஏற்படுத்தியதுடன் அதனைச் சார்ந்தவர்களுக்கு ஸஹ்ரான் மரண அச்சுறுத்தலும் விடுத்தார். அவர்கள் ஸஹ்ரானுக்கு எதிராக முறைப்பாடும் செய்தனர். இன்றும், ஒரு சாதாரண சமய அமைப்பாக தாருல் அதர் காத்தான்குடியில் செயற்படுகிறது.

அடிப்படைவாத வழியில் சென்ற தேசிய தௌஹீத் ஜமாஅத், இங்குள்ள அப்பாவி முஸ்லிம்களுக்கு பெரும் தொந்தரவுகளை ஏற்படுத்தியது. தேர்தல் காலங்களில் வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவர். ஏன் என்று கேட்டால், வாக்கு கேட்கும் அனைவரும் தமது மார்க்கத்தை அழிப்பதாக கூறுவர். எந்த இடத்திலும், தாக்குவது, கொல்லுவது பற்றியதாகவே அவர்களது பேச்சு இருக்கும்.

ஸஹ்ரானுக்கு காத்தான்குடி பொலிஸார் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்


2015 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் எமது குழுவினர்களுடன் அவர்களது பள்ளிவாசலுக்கு அருகில் பாரிய மோதல் ஏற்பட்டது. அதன்போது, எமது குழுவினரால் ஸஹ்ரானின் சகோதரன் தாக்கப்பட்டார். ஏனென்றால், அவர்களது கருத்துகளை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இறுதியில் ஸஹ்ரான் குழுவினர் மனித உரிமை ஆணைக்குழுவுக்கும், பொலிஸுக்கும் சென்று எங்களில் 10 பேரை கைதுசெய்து விளக்கமறியலிலும் வைக்கச் செய்தனர். அந்த நாட்களில் இந்த அனைத்து விடயங்களுக்கும் ஸஹ்ரானுக்கு காத்தான்குடி பொலிஸார் பாரிய ஒத்துழைப்பை வழங்கினர் என்பதை நான் பயமில்லாமல் கூறுவேன்.

மீண்டுமொரு ஸஹ்ரான் உருவாக காத்தான்குடியில் இடமளிக்கமாட்டேன். நாம் பாடமொன்றை கற்றுக்கொண்டோம். அவ்வாறொருவர் மீண்டும் வந்தால் பாதுகாப்பு பிரிவுக்கு மாத்திரமல்லாது, அனைத்து ஊடகங்களுக்கும் தெரியப்படுத்துவோம். நான் யுத்தகாலப்பகுதியில் இராணுவ புலனாய்வுப் பிரிவில் சேவை செய்தவன். இது எமது நாடு. மீண்டும் எவரேனும் இந்த நாட்டை அழிக்க வந்தால், அதனை எதிர்த்து நாமே முதலில் முன்வருவோம்.

நானும் இராணுவ புலனாய்வு பிரிவில் இருந்தேன், ஸஹ்ரான் பற்றி அறிவித்தேன்

காத்தான்குடியில் மீண்டுமொரு தற்கொலை குண்டுதாரி உருவாக நாம் இடமளியோம். அவ்வாறானவர்களை பேச்சு மற்றும் நடத்தைகள் மூலம் எம்மால் இனங்காணமுடியும். நாம் ஸஹ்ரான் பற்றிய அனைத்து தகவல்களையும் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கினோம். அவரது அபாயகரதன்மையை நாம் இனங்கண்டோம். தலைமறைவாகியிருந்த காலப்பகுதியில் கடுமையான நாசகார கருத்துகள் அடங்கிய வீடியோக்களை சமூகவலைத்தளங்கள் ஊடாக ஸஹ்ரான் வெளியிட்டார். ரீ56 ரக துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு ‘வெடிப்புகளை நிகழ்த்துவோம், இலங்கையை முழுமையாக அழிப்போம். சிங்களவர்களை தாக்குவோம்’ உள்ளிட்ட கருத்துகளை அவர் வெளியிட்டார். இதனை அனைத்து பாதுகாப்பு பிரிவுக்கும் தெரியப்படுத்தினோம்.

தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரும், நாட்டில் பாரிய அழிவொன்றை ஏற்படுத்துவதற்கு ஸஹ்ரான் தயாராவதாக நான் அறிவித்தேன். இவர் குருணாகல், கல்முனை ஆகிய பகுதிகளில் தலைமறைவாகியுள்ளார். உடனடியாக கைதுசெய்யுங்கள் என்றேன். ஊடகங்களுக்கும் தெரிவித்தேன். எனினும், எதுவும் பயனளிக்கவில்லை. ஸஹ்ரான் 2017 ஆம் ஆண்டு காத்தான்குடியில் இருக்கும்வரையில் பரம ஏழையாகவே இருந்தார். தகர கொட்டகையொன்றிலேயே அவரது பள்ளிவாசலை நடத்திச்சென்றார். அவர் தலைமறைவாகியிருந்த காலப்பகுதியிலேயே செல்வந்தரானார். தாக்குதல் தொடர்பில் தனவந்தரொருவரை சந்தித்த பின்னரே அவரும் செழிப்பாகியுள்ளார். ஸஹ்ரான் தலைமறைவாகியிருந்த காலப்பகுதியில் அவரது பள்ளிவாசல் பெரிதாக நிர்மாணிக்கப்படும்போது, இவருக்கு பணம் கிடைத்த வழி தொடர்பில் தேடிப்பார்க்குமாறு பாதுகாப்பு பிரிவுக்கு கூறினேன். துபாயிலிருந்து ஒருவர் பணம் வழங்குவதாக கூறப்படுகிறது என்றும் கூறினேன்.

அரபு எழுத்துகளில் நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்த வசனங்களும் எழுதப்படவில்லை

இங்கு சவூதி அரேபியா போன்று எதுவும் மாற்றப்படவில்லை. 2008 ஆம் ஆண்டிலேயே பேரீச்சை மரங்கள் நடப்பட்டன. ஆரம்பத்தில் பாம் (முள்ளுத்தேங்காய் அல்லது கட்டுபொல்) மரத்தையே நட எத்தனித்தோம். பின்னர், உஷ்ணம் அதிகம் என்பதால் பாம் மரங்கள் பட்டுப்போகக்கூடும், நடவேண்டாம் என விவசாய திணைக்களத்தினர் கூறினர். இப்பகுதியின் காலநிலைக்கு தாக்குப்பிடிக்கும் என்பதால் பேரீச்சை மரங்களை நாட்டுவதற்கு விவசாய திணைக்களத்தினர் அனுமதி வழங்கினர். வேறுமரங்களும் நடப்பட்டுள்ளன.
எமது மதத்தின் எழுத்து அரபு என்பதால் பெயர் பலகைகளில் அரபு சொற்களை பயன்படுத்தினோம். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு சொல்லும் அரபு மொழியில் எழுதப்படவில்லை. அவ்வாறு எழுதப்பட்டிருப்பின் நாம் அகற்றுவோம். எந்தவிதத்திலும் இலங்கையை அரபுமயமாக்கவேண்டிய தேவை எமக்கில்லை. நான் இராணுவ புலனாய்வில் பணியாற்றியவன். 2017 ஆம் ஆண்டில் குண்டுவெடிப்பினால் ஸஹ்ரானின் சகோதரன் ரில்வான் காயமடைந்ததாகத் தகவல் கிடைத்தது. இவை அனைத்தையும் 2018 ஜனவரியில் காத்தான்குடிக்கு வந்த புலனாய்வு பிரிவிடம் கூறினேன். இவர்களில் ஒருவரையாவது கைதுசெய்தால் பல தகவல்கள் வெளிவரும் என்றும் தொடர்ச்சியாக கூறினேன்.

எம்முடன் பேசி பழகுபவர்களே ஸஹ்ரானின் குழுவில் இருந்தனர். 2018 டிசம்பரில் உன்னிச்சை பிரதேசத்தில் அவ்வாறான ஒருவரை சந்திக்க நேர்ந்தது. ஸஹ்ரானின் வீடியோவை பற்றி கேட்டேன். அவருடனான உரையாடலில், இவர்கள் பாரிய அழிவொன்றை நிகழ்த்த தயாராவதை உணர்ந்தேன்.
இறுதி வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

ஸஹ்ரானை கொல்லுவதற்கு அனுமதி கோரினேன்

இவ்வாறிருக்கையில் ஸஹ்ரானின் வீடியோவொன்றை கண்டேன். விரைவில் தாக்குதலொன்றுக்கு அவர்கள் தயாராவதை உணர்ந்தேன். தாக்குதல் இடம்பெறுவதற்கு ஒருவாரத்துக்கு முன்னர் ஏப்ரல் 14 ஆம் திகதி புலனாய்வு பிரிவுக்கு தொலைபேசியில் அறிவித்தேன். என்னிடம் அனுமதிப்பத்திரம் உள்ள துப்பாக்கி இருக்கிறது. ஸஹ்ரானை தேடிச் சென்று சுட்டுக்கொல்கிறேன் என்றேன். இதனை கேட்ட புலனாய்வு அதிகாரி, உயர் அதிகாரிகளுக்கு கூறுவதாக என்னிடம் கூறினார். அவர்களில் ஒருவரையாவது கண்டுபிடித்து தாருங்கள் சுட்டுக்கொல்லுகிறேன். சிறை சென்றாலும் பரவாயில்லை என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.


நன்றி: சிலுமின - தமிழில் ரெ.கிறிஷ்ணகாந் (2019.06.21).

Read more...

அரசியலமைப்பின் 18 மன்னராட்சிக்கும் 19 உறுதியற்ற தன்மைக்கும் வழிகோலியதாம். மைத்திரிபால சிறிசேன.

சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு, அரசியலமைப்பின் 18 ஆவது மற்றும் 19 ஆவது திருத்தச் சட்டங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு – பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இன்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

'அரசியலமைப்பின் 18 ஆவது மற்றும் 19 ஆவது திருத்தச் சட்டங்கள் இல்லாமல் ஒழிக்கப்படுவதே நாட்டுக்கு நன்மையைத் தரும்.

மகிந்த ராஜபக்சவினால் கொண்டு வரப்பட்ட 18 ஆவது திருத்தச்சட்டம் நாட்டில் மன்னராட்சியை உருவாக்கியது.

அதனை ஒழிப்பதற்காக 2015இல் கொண்டு வரப்பட்ட 19 ஆவது திருத்தச்சட்டம், நாட்டில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

19 ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கா விட்டால், கடந்த நான்கரை ஆண்டுகளில் நாட்டுக்கு வெற்றி கிடைத்திருக்கும்.' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் அளித்த வாக்குறுதிக்கு அமையவே, 19 ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டமையும் 18ம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, அரசின் பலம்வாய்ந்த அமைச்சராகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் செயற்பட்ட மைத்திரிபால சிறிசேன இவ்விரு திருத்ங்களுக்கும் பாரிய பங்களிப்பு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

Sunday, June 23, 2019

ஜி. ஜி. பொன்னம்பலத்தின் ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது! கூறுகின்றார் டக்ளஸ்

ஜி. ஜி. பொன்னம்பலம் மற்றும் எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆகியோரது ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பில் இடம்பெறுகின்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இந்த நாட்டில் இன, மத வன்முறைகளைத் தூண்டுகின்ற அனைத்துத் தரப்பினரினதும் செயற்பாடுகள் முற்று முழுதாகவே ஒழிக்கப்பட வேண்டும்.

எமது வரலாற்றை எடுத்துக் கொண்டால், இந்த நாட்டில் தனிச் சிங்கள மொழிச் சட்டம் அரச கரும மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்டதை அடுத்தே இனமுரண்பாடு உத்வேகம் கொண்டது.

ஆனால் தமிழ் மக்கள் சிங்கள மொழியையும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும் கற்கவேண்டும் என்ற இரு மொழிக்கொள்கை அன்றே சட்டமாக்கப்பட்டிருக்க வேண்டும்.

தமிழ் பேசும் மக்கள் சிங்களத்தை கற்க வேண்டும் என்றால் சிங்கள மக்களும் தமிழ் மொழியை கற்க வேண்டும்!

இவ்வாறு அன்று நாடாளுமன்றத்தில் உரைத்தவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பருத்தித்துறை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் பொன் கந்தையா அவர்கள்.

அது போலவே, ஒரு மொழி இரு நாடு! இரு மொழி ஒரு நாடு!! என நாடாளுமன்றத்தில் தீர்க்கதரிசனமாக உரைத்தவர் தோழர் கொல்வின் ஆர். டி. சில்வா அவர்கள்.

இந்த இருவரினதும் தொலை தூர சிந்தனையை தமிழ் சிங்கள அரசியல் தலைமைகள் அன்றே ஏற்றிருந்தால், இங்கு இனப்பிரச்சினை தோன்றியிருக்காது. இரத்தக்காடாக இலங்கைத்தீவு மாறியிருக்காது.

1956இல் தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை இலங்கையின் ஆட்சி மொழியாக ஆங்கில மொழியே இருந்து வந்திருக்கின்றது.

ஆங்கில ஆட்சி மொழியை மாற்றி இலங்கைத்தீவில் சுதேச மொழிசட்டத்தையே அன்று கொண்டு வர நினைத்தார்கள்.

சிங்களமும் தமிழும் என இரண்டு மொழிகளுமே இந்த நாட்டின் சுதேச மொழிகள்.

இந்த நிலையில், அன்று தமிழ் மக்களின் தலைவர்களாக நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த ஜி. ஜி. பொன்னம்பலம், எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆகியோர் எடுத்திருந்த தீர்மானம் மாபெரும் வரலாற்று தவறு என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

ஆங்கிலத்தில் சிந்தித்து, ஆங்கிலத்தில் சிரித்து, ஆங்கில மோகத்தில் மூழ்கியிருந்த ஜி. ஜி. பொன்னம்பலமும் செல்வநாயகமும்; அன்று கொண்டுவரப்பட இருந்த சுதேச மொழிச் சட்டத்தை எதிர்த்திருந்தார்கள்.

இதை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய தென்னிலங்கை அரசியலின் கடும் போக்காளர்கள் தனிச்சிங்களச் சட்டத்தை நிறைவேற்றினார்கள்.

அன்று ஆங்கில மோகத்தில் இருந்து விடுபட்டு எமது மூத்த அரசியல் தலைவர்கள் சுதேச மொழிச் சட்டத்தை ஏற்றிருந்தால் சிங்கள மொழிக்கு நிகராக தமிழ் மொழியும் இந்த நாட்டின் ஆட்சி மொழியாக இன்று இருந்திருக்கும்.

அந்த மூத்த தலைவர்களின் வழிவந்த சக தமிழ் தலைமைகள் தமிழ் மக்கள் சிங்களம் கற்கக்கூடாது என்று அடம் பிடித்து,..

தாமும் தமது பிள்ளைகளும் மட்டும் சிங்கள மொழியை கற்றுகொண்டனர்.

தமக்கொரு நியாயம்! தமிழ் மக்களுக்கு இன்னொரு நியாயம்!!

போலி தமிழ் தேசியம் பேசும் இவர்கள் இன்று சிங்களத்தில் சிந்தித்து, சிங்களத்தில் பேசி, சிங்களத்தில் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டும் இருக்கிறார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

அடுத்த தேர்தலில் கோத்தாவே வேட்பாளர்! அடித்துக்கூறுகின்றார் கம்பன்பில

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையே வேட்பாளராக களமிறக்குவோம் என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார்.

மேலும் ஒகஸ்ட் 11ஆம் திகதி இதனை உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் என்றும் இதில் எந்தவொரு சிக்கலும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை அவசரகாலச்சட்டம் தளர்த்தப்படுமாக இருந்தால், நாட்டின் பாதுகாப்பு நிலைமை மேலும் பலவீனமடையும். என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து இரண்டு மாதங்கள் கடந்தும் இவ்வாறான தாக்குதல்கள் இனியும் இடம்பெறாமல் இருக்க அரசாங்கத்தினால் எந்தவொரு ஸ்திரமான நடவடிக்கையும் எடுக்க முடியாதமையையிட்டு நாம் கவலையடைகிறோம்.

பயங்கரவாத அமைப்புக்களுக்கான தடை மற்றும் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகளுக்கானத் தடை என்பனகூட, அவசரகாலச் சட்டத்தின் கீழ்தான் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த மாதமே நாட்டின் பாதுகாப்பு நிலைமை சீராகிவிட்டது எனக் குறிப்பிட்டு அவசரகாலச் சட்டம் தளர்த்தப்படுமாக இருந்தால், தற்போது பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புக்கள் அனைத்தும் சாதாரண அமைப்புக்களாகிவிடும்.

இதனால், கைது செய்யப்பட்டுள்ளவர்களையும் விடுதலை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும். அதேபோல், குறித்த ஆடைகளுக்கானத் தடையும் இல்லாது போய்விடும்.

இந்த விடயம் குறித்து இரண்டு அரசியல் தரப்பும் சிந்தித்து செயற்பட வேண்டும் என்பதுதான் எமது வேண்டுகோளாக இருக்கிறது.

அரசியல் வேறுபாடுகளை மறந்து நாட்டின் பாதுகாப்புக்காகவும் எதிர்க்கால சந்ததியினரின் நன்மைக்காகவும் ஒன்றிணைந்து முடிவுகளை எடுக்க வேண்டும்.

மத்ரசா பாடசாலைகள் தொடர்பிலும் இன்று பல கேள்விகள் எழுந்துள்ளன. இவை தொடர்பாகவும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறான நிலைமைகளினால் நாடு இன்னும் அபாயமான நிலைமையில் பயணித்துக்கொண்டிருக்கிறது என்றே தெரிகிறது.

அடிப்படைவாதிகளின் பணம், அவர்களின் வாக்குகளுக்கு அடிப்பணிந்துதான் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதின் குற்றவாளி என நாம் பல்வேறு ஆதாரங்களை முன்வைத்துள்ளோம். ஆனால், அவரிடம் இரண்டு மாதங்கள் கடந்தும் எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளவில்லை.

எனினும், இவர் மீண்டும் அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொண்டால், நாம் நிச்சயமாக அவருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவோம். ஜனாதிபதி இந்த விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். உண்மையில், இந்த அரசாங்கம் தற்போது இந்த நாட்டுக்கே சாபமாகத்தான் இருந்து வருகிறது.

இதனால், நாம் நிச்சயமாக அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவைதான் வேட்பாளராக களமிறக்குவோம்.

ஒகஸ்ட் 11ஆம் திகதி இதனை உத்தியோகபூர்வமாக அறிவிப்போம். இதில் எந்தவொரு சிக்கலும் இல்லை என்பதையும் நாம் இங்குக் கூறிக்கொள்கிறோம்” என மேலும் தெரிவித்தார்.

Read more...

அரபுக்கல்வி தொடர்பான சட்ட வரைபு நிராகரிப்பு.

இலங்கையில் இஸ்லாமியக் கல்வி (அரபுக்கல்லூரிகள்) தொடர்பான சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை தொடர்ந்து முஸ்லிம் விவகார அமைச்சர் ஹலீமினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டவரைபு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சட்ட திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , அமைச்சர் சம்பிக்க ரணவக்க , நீதியமைச்சர் தலதா அத்துக்கொரல மற்றும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இக்குழுவிடம் முஸ்லிம் விவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட சட்டவரைபே நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை முற்றாக மாற்றம் செய்து நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சட்டவரைபொன்றை முன்வைக்குமாறு வேண்டப்பட்டுள்ளது.

இஸ்லாமியக் கல்வி முற்றுமுழுதாக கல்வி அமைச்சின் பூரண கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படக்கூடியவாறு சட்டமூலம் அமையப்பெறவேண்டும் என்றும் அவ்வாறனதோர் முன்மொழிவு வரும்போது அதனை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அனுமதி பெறப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து அரபுக் கல்­லூ­ரி­களில் அடிப்­ப­டை­வாதம் போதிக்­கப்­ப­டு­வ­தா­கவும் அரபுக் கல்­லூ­ரிகள் தடை செய்­யப்­பட வேண்­டு­மெ­னவும் பெரும்­பான்மை இனத்­த­வர்­களால் கோரிக்கை விடுக்­கப்­பட்ட நிலையில் அரபுக் கல்­லூ­ரி­க­ளுக்­கென தனி­யான சட்ட மூல­மொன்­றினைத் தயா­ரிக்­கு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீ­முக்கு பணித்­தி­ருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com