Sunday, June 23, 2019

சீன யுவதி மீது அரசியல்வாதியும் சாரதியும் கூட்டாக பாலியல்-வல்லுறவு. பொலிஸ் மற்றும் தூதரகத்தில் முறைப்பாடு.

தென்னிலங்கையிலுள்ள அரசியல்வாதியொருவர் தன்னை கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக சீன யுவதியொருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தன்னிடம் பெருந்தொகை பணத்தை நபர் ஒருவர். மோசடி செய்தபின், மேற்படி அரசியல்வாதியின் உதவியை தான் நாடியதையடுத்தே , இவ்வருடம் பெப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தான் பாலியல் தொந்தரவுகளுக்கும் வல்லுறவுக்கும் ஆளானதாக ‘த மோர்னிங்’ பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.

மேற்படி அரசியல்வாதி 16 வயதான மற்றொரு யுவதியை வல்லுறவுக்குட்படுத்திய மற்றொரு குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளதாகவும் அப்பத்தரிகை தெரிவித்துள்ளது.

ஹொங்கொங்கைத் தளமாகக் கொண்ட மேற்படி யுவதி, இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதுடன், கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்துக்கும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் நியாயமான விசாரணை நடைபெறும் என தான் எதிர்பார்ப்பதாகவும் ‘த மோர்னிங்’ பத்திரிகையிடம் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேற்படி சீன யுவதி கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு வந்துள்ளார். காலியில் விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையில். இலங்கையில் நிரந்தர வதிவிட உரிமை பெற்றுக்கொள்வதற்கும், உணவகமொன்றை ஆரம்பிப்பதற்கும் அவர் திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், உணவகத்தை ஆரம்பிப்பதற்காக தன்னிடம் பெற்ற பெருந்தொகைப் பணத்தை விடுதி உரிமையாளர் தரமற்ற கட்டடமொன்றை பெற்று தன்னை ஏமாற்றிவிட்டதாக மேற்படி யுவதி தெரிவித்துள்ளார்.

‘ நான் பணத்தை திருப்பிக் கேட்டபோது, அவர் என்னை அச்சுறுத்தினார். நான் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தேன். எதுவும் நடக்காத நிலையில், எனக்கு பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

அப்போது உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் உதவியை நாடுமாறும். அரசியல்வாதியின் வீட்டில் வாடகைக்கு தங்கியிருக்குமாறும் அதனால் பாதுகாப்பு கிடைக்கும் எனவும் மேற்படி யுவதிக்கு அப்பகுதியிலுள்ள பெண்ணொருவர் ஆலோசனை கூறினார்.

அந்த அரசியல்வாதி. ஏற்கெனவே சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் பிணையில் விடுதலையானவர் என்பதை தான் அறிந்திருக்கவில்லை என மேற்படி சீன யுவதி தெரிவித்துள்ளார். சீன யுவதியின் பிரச்சினையைத் தீர்ப்பதாக அவர் உறுதியளித்தார். எனனும், பின்னர், தன்னிடம் பாலியல் சலுகைகளை கோரினார் என யுவதி தெரிவித்துள்ளார்.

‘ஆனால், முதல் நாள் இரவிலேயே, அரசியல்வாதி தனது ஊடக செயலாளருடன் எனது அறைக்கு வெளியே வந்தார். அரசியல்வாதி என்னை விரும்புவதாக அவரின் ஊடக செயலாளர் தெரிவித்தார். அவரால் பொலிஸாரையும் நீதித்துறையையும் கட்டுப்படுத்த முடியும் என என்னிடம் கூறப்பட்டது. அரசியல்வாதி என்னை முத்தமிட்டார். அச்சத்தினால் நான் பணிந்தேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் தனது சாரதியுடன் நெருக்கமான உறவைப் பேணுவதற்கு யுவதியை அரசியல்வாதி நிர்ப்பந்தித்ததாகவும், ஆனால் தான் மறுத்ததாகவும் யுவதி கூறியுள்ளார்.

பின்னர் தான் வேறு ஒரு இடத்தில் தங்குவதற்கு ஆரம்பித்ததாகவும், ஆனால், கடந்த பெப்ரவரி மாதம் தனது விசா தொடர்பாக, அரசியல்வாதியின் உதவியை நாடியதாகவும் அந்த யுவதி தெரிவிததுளளார்.

தனக்கு உதவியளிப்பதாக அரசியல்வாதி கூறினாலும், தன்னுடனும் தனது சாரதியுடனும் அந்தரங்க உறவைப் பேணுமாறு அவர் கோரினார், இல்லாவிட்டால் விசா விவகாரம் காரணமாக தான் நாடு கடத்தப்படுவார் என எச்சரிக்கப்பட்டதாகவும் அந்த யுவதி தெரிவித்துள்ளார்.

‘அச்சம் காரணமாக நான் சம்மதித்தேன். எனக்கு வேறு வழியில்லை, நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன்’ என மேற்படி யுவதி தெரிவித்துள்ளார்.

பின்னர் கடந்த மார்ச் மாதம் தான் ஹொங்கொங்குச் சென்தாகவும், சில வாரங்களின் பின், மேற்படி உணவக கட்டடத்தை குத்தகைக்கு வழங்குவதற்காக இலங்கைக்கு வந்து மீண்டும் ஹொங்கொங் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

தான் இலங்கைக்குத் திரும்பி வந்தபின்னர், குறைந்தபட்சம் இரு தடவைகள் மேற்படி அரசியல்வாதியும் அவரின் சாரதியும் கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக அந்த யுவதி தெரிவித்துள்ளார்.

இறுதியாக ஏப்ரல் 30 ஆம் திகதி தன்னை வல்லுறவுக்குட்படுத்தியதாகவும், ஒரு சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பாக தனக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என தனது சாரதியுடன் தன்னை வல்லுறவுக்குட்படுத்துவதற்கு முதல், மேற்படி அரசியல்வாதி தன்னிடம் கூறியதாகவும் மேற்படி யுவதி தெரிவித்தார் என ‘த மோர்னிங்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேற்படி அரசியல்வாதி மீண்டும் கைது செய்யப்பட்டால் முந்தைய வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட பிணை இரத்துச் செய்யப்படக்கூடும என்பதால், கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்கு அரசியல்வாதி முயற்சிக்கிறார் என சீன யுவதியின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

மேற்படி சீன யுவதியிடமிருந்து முறைப்பாடு கிடைத்ததாக காலி பொலிஸின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது.

Read more...

Friday, June 21, 2019

கல்முனையிலிருந்து உலங்கு வானூர்தியில் தப்பியோடிய சுமந்திரன். நாளை வருகின்றார் ஞானசாரர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என மேற்கொள்ளப்பட்டுவரும் உண்ணாவிரதத்தினை முடித்து வைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் தூதர்களாக கல்முனை சென்ற பா.உ சுமந்திரன் , மனோகணேசன் மற்றும் தயா கமகே ஆகியோர் அங்கிருந்த மக்களினால் துரத்தியடிக்கப்பட்டுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவின் செய்தியை சுமந்திரன் வாசிக்க முனைந்தபோது மக்கள் எதிர்கோஷம் செய்து தமது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.

மேற்படி பிரமுகர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை சமயோசிதமாக செயற்பட்டு பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர். மிகுந்த தோல்வியுடன் வந்த உலங்குவானூர்தியில் அவர்கள் கொழும்பு திரும்பியுள்ளனர்.

இதேநேரம் நாளை ஞானசார தேரர் அவ்விடத்திற்கு விரையவுள்ளதாக இலங்கைநெட் அறிகின்றது. மேலிடத்து உத்தரவு ஒன்றின் பெயரில் அங்கு விரையும் தேரர் உண்ணாவிரமிருக்கும் மங்களாராம விகாராதிபதிக்கு பால் ஊட்டி உண்ணாவிரத்தினை நிபந்தனையுடன் முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.




Read more...

NGO க்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டேன். சிலோன் தௌஹீத் ஜமாத் மௌலவி குற்ற ஒப்புதல்வாக்குமூலம்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குல் தொடர்பாக விசாரணை நடாத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த சிலோன் தௌஹீத் அமைப்பின் தலைவர் அப்துல் ராசீக், தான் என்ஜீஓ க்களிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வதாக ஒத்துக்கொண்டுள்ளார்.

மேலும் தானே தற்கொலைதாரி ஒருவனுடைய காதலியை இஸ்லாத்திற்கு மாற்றிதாயதாகவும் ஏற்றுக்கொண்டுள்ள அவன் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து நிதியினை பெற்றுக்கொள்ளவில்லை என்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபச்சவிற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் சாட்சியமளிக்கையில் தெரிவித்தமை வருமாறு.

கேள்வி:- உங்­களை இங்கு விசா­ர­ணைக்கு அழைக்க சில கார­ணிகள் உள்­ளன. உரிய கார­ணி­களை மாத்­திரம் நீங்கள் குழு­விடம் கூற­வேண்டும். உங்­களைப் பற்றி கூறுங்கள்.

பதில் :- நான் ராசிக் ரபீட்தீன், மக்கள் மத்­தியில் அப்துல் ராசிக் என பிர­சித்தி பெற்­றுள்ளேன். இலங்கை தௌஹீத் ஜமாஅத் என்ற அமைப்பை 2005 ஆம் ஆண்டு ஆரம்­பித்து நாடு முழு­வதும் 86 கிளை­களை உரு­வாக்­கிக்­கொண்டோம். முஸ்லிம் மக்­க­ளுக்கு அல்­குர்ஆன் குறித்த தெளிவை ஏற்­ப­டுத்தி விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தோம். அது­மட்டும் அல்­லாது பல சமூக செயற்­பா­டு­களில் ஈடு­பட்டோம். குறிப்­பாக முஸ்லிம் இரத்­த­தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எம்மால் உரு­வாக்­கப்­பட்­டது. இஸ்லாம் இரத்­த­தா­னத்தை நியா­யப்­ப­டுத்­து­வதை நாம் எடுத்­துக்­கூ­றி­யுள்ளோம். மத இன வேறு­பா­டுகள் இல்­லாது இதனை நாம் செய்தோம். முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் உய­ரிய சட்­டங்­க­ளுக்கு கட்­டுப்­பட்­ட­வர்­க­ளாக இருக்க வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தினோம். எனினும் இலங்கை தௌஹீத் ஜமாஅத் அமைப்பில் ஏற்­பட்ட சில மத நிரு­வாக முரண்­பா­டுகள் கார­ண­மாக நாம் அதில் இருந்து வெளி­யேறி இலங்கை தௌஹீத் அமைப்பை உரு­வாக்­கினோம்.

கேள்வி:- என்ன முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன?

பதில்:- முரண்­பா­டுகள் என்றால் பாது­காப்பு குறித்த எந்த அச்­சு­றுத்­த­லான விட­யங்கள் அல்ல. மத ரீதி­யிலும்இ நிரு­வாக ரீதி­யிலும் சில முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன. கொள்­கைகள் பின்­பற்­றல்­களில் மற்றும் குருபான் போன்ற மத செயற்­பா­டு­களில் முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன. நாம் திருக்­குர்ஆன் வழியை மட்­டுமே கட்­டுப்­பட்டு பின்­பற்ற வேண்டும். அது அல்­லாது எந்த தலை­மை­க­ளுக்கும் அல்ல என்­பதே எமது நிலைப்­பாடு.

கேள்வி :- கிழக்கில் மட்­டுமா நீங்கள் இயங்­கு­கின்­றீர்கள்?

பதில் :- இல்லை நாட­ளா­விய ரீதியில் இயங்­கு­கின்றோம். கிழக்கில் எமது அமைப்பின் கிளைகள் மிகவும் குறை­வாகும். கிழக்கில் உள்ள மக்கள் தொகைக்கும் அமைய எமது அமைப்பின் செயற்­பாடு குறை­வா­ன­தாகும். ஏனைய பகு­தி­களில் உள்­ளன.

கேள்வி:- உங்­களின் உண்­மை­யான பெயர் என்ன?

பதில்:- ராசிக் ரபீட்தீன் இறை­வனின் பெய ரில் ராபிக் என்ற அடை­யாளம் உள்­ளது.

கேள்வி:- மன்சூர் என்ற பெயரில் நீங்கள் செயற்­பட்­டீர்­களா?

பதில்:- இல்லை

கேள்வி:- இந்­தி­யா­வி­லா­வது?

பதில்:-இல்லை. அவ்­வாறு ஒரு பெயர் எனக்கு இல்லை.

கேள்வி:- நீங்கள் ஏன் பெளத்த மதத்­துக்கு எதி­ரான கீழ்த்­த­ர­மான வார்த்­தை­களை பேசி­னீர்கள்?

பதில்:- உண்­மையில் 2013ஆம் ஆண்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக சிங்­கள அடக்­கு­முறை ஏற்­பட்­டது. அதற்கு பதில் தெரி­விக்கும் போதே இவற்றை நான் கூறினேன் எனினும் நான் கூறி­யது முழு­மை­யாக வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

கேள்வி:- நீங்கள் கூறி­யது தவறு தானே?

பதில்:- ஆம். அந்த தவறை நான் ஏற்­றுக்­கொண்டேன். பிர­சித்­தி­யான முறையில் நான் எனது மன்­னிப்பைக் கூறினேன். அதற்­கான ஆதா­ரங்கள் உள்­ளன. மாநா­யக்க தேரர்­களை சந்­தித்து மன்னிப்புக் கேட்­கவும் நான் முயற்­சித்தேன். ஆனால் வாய்ப்பு கிடைக்­க­வில்லை. ஊட­கங்­களில் ஒரு கார­ணியை வைத்து மட்­டுமே என்னை விமர்­சித்­தனர். ஒரு ஆண்­டுக்கு பின்னர் எனக்கு வழக்கு தொடுக்­கப்­பட்­டது. நீதி­மன்­ற­திலும் நான் மன்­னிப்­புக்­கோ­ரினேன்.

கேள்வி:- இந்த மாதிரி வேறு பிர­சா­ரங்கள் செய்­தீர்கள் தானே?

பதில் :- இல்லை புத்தர் இறைச்சி உண்டார் என்று கூறினேன். அதைத் தவிர நான் வேறு ஒன்றும் கூற­வில்லை.

கேள்வி:- வேறு மதங்­க­ளையும் இவ்­வாறு விமர்­சித்­துள்­ளீர்­களா?

பதில்:- இல்லை பெளத்­தத்தை பற்றி கூறவே தான் அதை கூறினேன். வேறு எந்த மதங்­க­ளையும் நான் விமர்­சித்­த­தில்லை.

கேள்வி (ரவி கருணாநாயக்க):- ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை நீங்கள் நிரா­க­ரிக்­கின்­றீர்­களா?

பதில்:- ஆம். பல தட­வை­கள் இதனை நான் எதிர்த்து கருத்­துக்­களைக் கூறி­யுள்ளேன். விடி­வெள்ளி பத்­தி­ரி­கையில் நான் இதனைத் தெளி­வாகக் கூறினேன். இவர்கள் முஸ்­லிம்கள் இல்லைஇ இவர்கள் இஸ்லாம் விரோத அமைப்­புகள் என்­றெல்லாம் கூறி­யுள்ளேன். நான் தொடர்ச்­சி­யாக இந்த அமைப்பை நிரா­க­ரித்து பேசி­யுள்ளேன். 2018 ஆம் ஆண்டு இறு­திக்­கா­லத்தில் கூட நான் ஐ.எஸ் அமைப்பை நிரா­க­ரித்து பேசினேன். அதற்­கான ஆதா­ரங்கள் என்­னிடம் உள்­ளன. எனினும் இன்று ஐ.எஸ். அமைப்பை நான் ஆத­ரிக்­கின்றேன் என என்­மீது கூறும் விமர்­ச­னங்­களை நான் முற்­றாக நிரா­க­ரிக்­கிறேன்.

கேள்வி:- வஹா­பிசம் என்­பதை நீங்கள் ஏற்­றுக்­கொள்­கி­றீர்­களா?

பதில்:- வஹா­பிசம் என்­பது குறித்து யாருக்கும் உறு­தி­யான தெளிவு இல்லை. இது அரா­பிய கொள்கை. இது குறித்து பல ஆதா­ரங்கள் உள்­ளன. புத்­தங்கள் உள்­ளன. இலங்­கையில்…

கேள்வி:- இல்லை. கேட்ட கேள்வி அது­வல்ல சரி இங்கு வஹா­பிச பள்­ளிகள் எத்­தனை உள்­ளன?

பதில்:- தௌஹீத் என்ற நபர்­களை வஹா­பிச வாதிகள் என கூறி அவர்­களை அடிப்­ப­டை­வா­திகள் என்றே கூறு­கின்­றனர். இது தவ­றான கருத்து. இலங்­கையில் வகாப்­பாதம் என்று கூறும் பயங்­க­ரவாத அமைப்பு ஒன்­றுமே இல்லை.

கேள்வி:- இங்கு ஏற்­க­னவே சாட்­சிக்கு வந்­த­வர்கள் வகா­பி­சத்தை தவ­றான ஒன்­றாக கூறு­கின்­ற­னரே?

பதில்:- அவர்கள் தவ­றான கருத்­துக்­களை கூறி­யுள்­ளனர். வகா­பிசம் என்­பது எமது கொள்கை. நாம் எமது கொள்­கையில் பல நல்ல கார­ணி­களைக் கூறி­யுள்ளோம். எமது நாட்டு கலா­சா­ரத்­துக்கு ஏற்ற முஸ்லிம் கொள்­கையை நாம் வலி­யு­றுத்­து­கின்றோம். எனினும் சிலர் இதனைத் தவ­றாக கூறி எம்மை எதிர்க்­கின்­றனர்.

கேள்வி:- யார் எதிர்த்­தது?

பதில்:– உலமா சபை இதனைத் தவ­றாக கூறு­கின்­றது. முகத்தை மூட வேண்டும் என்­றெல்லாம் உல­மாதான் கூறு­கின்­றது. பெண்கள் முகத்தை மூட வேண்டாம், சாதா­ரண பெண்கள் முகத்தை மூட வேண்டாம் என்று நாம் கூறு­வது தவ­றென கூறி அவர்கள் இறுக்­க­மான கோட்­பாட்டை வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். முகமூடி அணிய பெண்களுக்கு அனுமதி இல்லை என்று குர்ஆன் கூறுகிறது. முகமூடி என்பது நபியின் மனைவிகளுக்கு மட்டுமே இருந்த ஒரு சட்டம்.

கேள்வி:- இவ்­வாறு நன்­றாகப் பேசும் நீங்கள் ஏன் அடிப்­ப­டை­வாத கருத்­துக்­களை கூறு­கின்­றீர்கள்?

பதில்:- ஒரு தடவை நான் அந்த தவறை விட்­டு­விட்டேன். எனது தவறை நான் திருத்­திக்­கொண்டு ஆரோக்­கி­ய­மான நகர்­வு­க­ளுடன் முன்­ன­கர்­கின்றேன். நான் கூறி ஒரு மாதத்­திலே அதனை நான் திருத்­திக்­கொண்டு மன்­னிப்பும் கேட்­டுக்­கொண்டு என்னை திருத்­திக்­கொண்டேன்.

கேள்வி:- நீதி­மன்ற வழக்கு இருந்­ததே?

பதில்:- அது ஞான­சார தேர­ருடன் ஏற்­பட்ட ஒரு கருத்து முரண்­பாடு கர­ண­மாக சிக்கல் ஏற்­பட்­டது. தேரர் ஒரு­வரை அவன் என்று கூறி­யதே சிக்­க­லாக அமைந்­தது.

கேள்வி:- நீங்கள் எங்கு மத கல்­வியை கற்­றீர்கள்?

பதில் :- நான் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நிறு­வ­னத்தில் மத கல்­வியை படிக்­க­வில்லை. 12 வருடங்கள் குரானை மொழிபெயர்த்தேன். ஸாஹிரா வித்தியாலயம், கொழும்பு றோயல் கல்லூரி, களனி பல்கலைகழகத்தில் கல்வி கற்றேன்.

கேள்வி:- இலங்­கையில் மத தலை­மைகள் உள்­ளதை அறிந்­துள்­ளீர்­க­ளா?

பதில் :-ஆம்

கேள்வி :- அதில் நீங்கள் இணைந்து செயற்­பட்­டுள்­ளீர்­களா?

பதில் :- இல்லை நான் அதில் இணைந்­தி­ருந்தால் நானும் ஹலால் கொள்கை போன்ற இறுக்­க­மான கொள்­கையில் இருக்க வேண்டி வரும். ஆகவே நான் இணை­ய­வில்லை. இது மத பிரச்­சினை. இதில் நான் கலந்­து­கொள்­ள­வில்லை.

கேள்வி:- ஏனைய அமைப்­புகள் உல­மா­வுடன் இணைந்­துள்­ளன நீங்கள் மட்டும் தானே இல்லை?

பதில்:- எமது எல்­லைக்குள் இருந்து நாம் செயற்­பட்டு வரு­கின்றோம். தேவைப்­படும் நேரங்­களில் சில விட­யங்­களில் உல­மாக்­களை தொடர்­பு­கொள்வோம்.

கேள்வி :- அங்­கீ­காரம் இல்­லாத மத கற்­கை­ களை பெற்று உங்­களின் நினைப்­பிற்கு அமைய மத பிர­சாரம் செய்­வது சரியா ?

பதில்:- ஆம் உண்­மைதான், எனக்கு தெளிவு உள்­ளது. அவற்றை நான் அறிந்து தெரி­யப்­ப­டுத்­து­கின்றேன்.

கேள்வி :- உங்­க­ளுக்கு தெளிவு உள்­ளது. ஆகவே இதனை மற்­றவர் ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என்று கூறு­கின்றீர்கள் அப்­ப­டியா?

பதில்:- இல்லை எனக்கு சாட்­சி­யங்கள் தெளிவு உள்­ளன.

கேள்வி:- அரபு மொழியை பின்­பற்ற வேண்டும் என்­பது கட்­டா­யமா?

பதில் :- ஆம், பௌத்தம் எவ்­வாறு பாளி மொழியில் உள்­ளதோ அதேபோல் எமது அடிப்­ப­டை­களை அரபி மூலமே கொண்டு செல்ல வேண்டும். எம்மால் அரபி மொழியை நிரா­க­ரிக்க முடி­யாது. உலகின் இரண்­டா­வது பிர­தான மொழி­யாக அரபி உள்­ளது. ஐக்­கிய நாடுகள் சபையில் ஆங்­கி­லத்­துக்கு அடுத்தபடி­யாக அரபி மொழி உள்­ளது. அப்­படி இருக்­கையில் ஏன் பின்­பற்­றக்­ கூ­டாது

கேள்வி:- ஆங்­கிலம் இங்கு போதாதா அர­பியும் வேண்­டுமா?

பதில்:- நான் அவ்­வாறு கூற­வில்லை. எமது பிர­தான மொழி எமது மத அனுஷ்டானங்கள், வழி­பா­டுகள் அனைத்தும் அரபி மொழியில் தான் கூறு­கின்றோம்.

கேள்வி :-அதற்­காக இங்கு அரபி வேண்டும் என்று கூறு­வது தவறு. பதா­கைகள் வைத்து இதனை செய்ய வேண்­டுமா?

பதில் :- நான் அதைத்தான் கூறு­கின்றேன். அரபி கலா­சாரம் ஒன்று இங்கு வர­வேண்டும் என நாம் கூறவில்லை. அரபி பின்­பற்றல் இங்கு வேண்டாம் என்று உறு­தி­யான நிலைப்­பாட்டில் நாம் உள்ளோம். நபிகள் நாயகம் அரபிக் கலா­சா­ரத்தை தான் பின்­பற்ற வேண்டும் என கூற­வில்லை. நாம் இங்­குள்ள முறை­மை­களை பின்­பற்­றலாம்.

கேள்வி:- பெண்­களின் திரு­மண வயது குறித்து பேசி­யது குறித்து உங்­களின் கருத்து என்ன ?

பதில் :- நான் கூறி­யதை முழு­மை­யாக எவரும் கேட்­க­வில்லை. வயது எல்லை பற்றி நாம் கூற­வில்லை. 18 வயது என்­பதை நான் நிரா­க­ரிக்­க­வில்லை. பொது திரு­மண சட்­டத்தில் 12 வயது அடிப்­படை வயது என்று உள்­ளது. ஆனால் சில விசேட கார­ணிகள் அமைய அவர்­களின் அங்­கீ­கா­ரத்­திற்கு அமைய மாற்­றிக்­கொள்ள முடியும்.

கேள்வி :- நீங்கள் கூறு­வதை கூறி­விட்டு மன்­னிப்பு கேட்­பது ஏன்?

பதில் :-நான் அவ்­வாறு அல்ல. எனது கதை யை நீங்கள் யாரும் முழு­மை­யாக கேட்­க­வில்லை. திரு­மண வயது குறித்து ஒரு உறு­தி­யான திட்டம் வேண்டும். யாரும் நினைத்த நேரத்தில் மாற்ற வேண்டாம். 18 வயது நல்­லது. அதை­விட குறைந்த வயதில் தேவை ஏற்­பட்டால் விசேட செயற்­பா­டு­களை கருத்தில் கொண்டு திரு­மணம் செய்து வைக்க முடியும் என்றே கூறினேன்.

கேள்வி:- ஒரு சிறுவன் ஒரு பதா­கையை ஏந்திக் கொண்டு அதில் சிறு வயதை திரு­ம­ணத்தை வலி­யு­றுத்தும் புகைப்­படம் உள்­ளது. இதன்­மூலம் சிறு­வர்­களை இள வயது திரு­ம­ணத்­திற்கு வலி­யு­றுத்­து­வ­தா­கவே உள்­ளதே?

பதில்:- நாம் சிறு­வர்­களை வைத்து பதா­கையை ஏந்த கூற­வில்லை பெண்­களை நாம் சம­மாக மதிக்­கிறோம். எமது போராட்­டங்­களில் முஸ்­லிம்கள் வரு­வார்கள் குடும்­ப­மாக வரும்­போது அதில் சிறு­வர்­களும் வரு­கின்­றனர். அவ்­வாறு ஏற்­பட்ட ஒன்றே இந்த படங்­களில் உள்­ளது.

கேள்வி :- இதன் பின்­ன­ணியில் யாரும் உள்­ள­னரா?

பதில்:-யாரும் இல்லை கோத்­த­பாய ராஜபக்ஷ கூட பின்­ன­ணியில் இல்லை.

கேள்வி:- இப்­போது நீங்கள் ஏன் அவ­ரது பெயரைக் கூறி­னீர்கள்? கேள்வி கேட்க முன்­னரே நீங்கள் ஏன் தடு­மா­று­கின்­றீர்கள்?

பதில்:- இல்லை, எப்­போதும் என்­னுடன் அவரைத் தொடர்­பு­ப­டுத்தி பேசு­வது வழக் கம். அதுதான் கூறினேன். இந்த கேள்வி வரும் என்று தெரியும்.

கேள்வி:- உங்­க­ளுக்கு நிதி எவ்­வாறு வரு­கின்­றது?

பதில்:- அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களில் இருந்து நான் உத­வி­களை பெற்­றுக்­கொள்­கிறேன். ஆரம்­பத்தில் எனக்கு தொழில் இல்­லாத நேரங்­களில் அமைச்சர் ரவூப் ஹக்­கீமை சந்­தித்து கூட உதவி பெற்­றுக்­கொண்டேன். அவர் வழங்­கிய கடி­தமும் என்­னிடம் உள்­ளது.

கேள்வி:- இல்லை நான் கேட்ட கேள்­விக்கு பதில்?

பதில்:- எனக்கு யாரி­டமும் இருந்து பணம் வந்­தது நான் எவ்­வாறு இந்த பணங்­களை செல­வ­ழித்தேன் என்ற சகல ஆதா­ரமும் கணக்கு வழக்கும் உள்­ளன. நாம் முஸ்லிம் மக்­க­ளுக்­காக சேவை செய்­கின்றோம். சதகா சகப் என்ற புண்­ணிய கோட்­பா­டுகள் எமது மதத்தில் உள்­ளன. அதற்கு அமைய நாம் சேவை செய்­கின்றோம். எனது வங்கிக் கணக்கு எமது அமைப்பின் வங்கிக் கணக்கு உள்­ளது தேடிப்­பார்த்தால் தெரியும்.

கேள்வி:- கோத்­த­பா­யவின் பெயரை ஏன் கூறி­னீர்கள்?

பதில்:- என்னை அவரின் அடியாள் என்று கூற சில­ருக்கு தேவை இருந்­தது. அதனை நிரா­க­ரிக்க வேண்­டிய தேவை இருந்­தது

கேள்வி :-பி.ஜே. என்­ப­வரை தெரி­யுமா ?

பதில்:- ஆம் அவர் ஒரு பிர­சித்தி பெற்ற மதத் தலைவர்

கேள்வி:- அவரை இலங்­கைக்கு வர­வ­ழைக்க நட­வ­டிக்கை எடுத்­தீர்­களா?

பதில் :-ஆம், ஆனால் அவரை பயங்­க­ர­வா­தி­யாக கூற முயற்­சிக்­கின்­றனர்.

கேள்வி:- அவர் இங்கு வரு­வ­தற்கு எதிர்ப்பு இருந்­தது தெரி­யுமா?

பதில் :-அது ஒரு அர­சி­யல்­வா­தியின் நோக்கம் மட்­டு­மே­யாகும். அவர் முஸ்லிம் எதிர்ப்­பு­வாதி அல்ல. அசாத் சாலி மட்டும் எப்­போ­துமே எமக்கு எதி­ராக செயற்­பட்டு வரு­கின்றார். நாம் பி.ஜே. வை வர­வ­ழைக்க முயற்­சிகள் எடுத்த போதெல்லாம் அசாத்­சாலி அவற்றை தடுத்தார். இதற்கு எதி­ராக நாம் வழக்கும் தொடுத்தோம்.

கேள்வி:- நீங்கள் என்ன கூறி­னாலும் இவர் குறித்து அர­சாங்கம் அச்ச­ப்­ப­டு­கின்­றது புல­னாய்வு எச்­ச­ரிக்­கி­றது என்றால் அவர் தடுக்க வேண்­டி­யது கடமை தானே. இவர் ஆரம்­பத் தில் கூட முரண்­பட்ட கருத்­துக்­களை கூறி குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த எடுத்த முயற்­சிகள் குறித்து பல குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ளன. இது தெரி­யுமா?

பதில்:- இது வேறு அர­சியல் தலை­யீடு தான். இந்­தி­யாவில் ஏழு இலட்சம் மக்கள் ஆத­ரவை கொண்ட ஒரு­வ­ருக்கு எப்­படி அவ்­வாறு கூறு­வது.

கேள்வி:- உங்­க­ளுக்கு சரி என்று நினைப்­பதை பேச முடியும் ஆனால் இன்­னொரு மதத்­திற்கு பிரச்­சி­னை­யாக அது அமை­யலாம் தானே ?

பதில்:- நான் தூண்­ட­தக்­க­தாக கருத்­து­களை ஒரு­போதும் பேசி­ய­தில்லை.

கேள்வி :-நீங்கள் கூறு­வது சரி ஏனை­ய­வர்கள் கூறு­வது பிழை அப்­ப­டியா?

பதில் :- ஒன்று சரி­யென்றால் இன்­னொன்று பிழை­யாக இருக்க வேண்டும். ஆனால் எமது கொள்­கையை பின்­பற்­றுங்கள் என வலி­யு­றுத்­த­வில்லை. நாம் சரி­யென நினைக்­கிறோம். இது மத தர்மம்.

கேள்வி:- “பக்­தா­தியின் கருத்­துக்­களை ஏற்­று­கொண்ட ராசிக் ஒரு பயங்­க­ர­வாதி” என அசாத் சாலி கூறினார், இது குறித்து உங்­களின் கருத்து என்ன?

பதில் :-இது முற்­றிலும் பொய்­யா­னது. இந்த அமைப்­புகள் குறித்து என்­னிடம் கேட்ட ஒரு கேள்­விக்கு நான் பதில் தெரி­வித்தேன். இவர்கள் இஸ்லாம் என்று கூறிக்­கொண்­டுள்­ளனர். பயங்­க­ர­வாதம் தான் இவர்­களின் இலக்­காக உள்­ளது. இவர்கள் இஸ்லாம் பற்றி பேசு­கின்ற போது இவர்கள் தான் சரி என உடல் புல்­ல­ரிக்கும். முதலில் இவர்கள் மனங்­களை வெற்­றி­கொள்ள பேசு­வார்கள். ஆனால் இறு­தி­யாக பயங்­க­ர­வா­தத்தில் தான் முடியும் என்றேன்.

கேள்வி:- முடிகள் சிலிர்க்கும் என்று கூறி­யது ஏன்?

பதில்:- இல்லை அவர் கூறிய ஒரு உரை யை கேட்­கும்­போது முடிகள் சிலிர்க்கும் ஆனால் இறு­தி­யாகக் தீவி­ர­வா­த­மாக அமையும் என்றே கூறினேன்.

கேள்வி:- பயங்­க­ர­வாதம் பற்றி என்ன கூறு­கி­றீர்கள்?

பதில்:- ஜிஹாத் என்­பதில் எமது நிலைப்­பாடு வேறு. ஆயுதம் ஏந்தி போரா­டு­வது ஜிஹாத் அல்ல. அதனை நாம் ஏற்­றுக்­கொள்ள மாட்டோம். அந்­நிய மக்­களை கொள்­வது ஜிஹாத் அல்ல.

கேள்வி:- உங்­களின் கொள்­கையை கூறுங்கள் சஹ்­ரானின் பின்னர் தௌஹீத் என்றால் அச்­ச­மாக உள்­ளது. ஆகவே சிங்­கள மக்கள் மத்­தியில் குழப்பம் உள்­ளது ?

பதில்:- அனைத்து முஸ்­லிம்­களும் தௌ ஹீத் என்­பதை ஏற்­றுக்­கொள்ள வேண்டும். ஒரு கடவுள் என்­பதே அது­வாகும். தெளி­வான முஸ்லிம் தெளிவு ஒன்று இருக்­க­வில்லை. முஸ்­லிம்­க­ளுக்கு ஒவ்­வாத பல கலா­ச­ாரங்கள் எமக்குள் வந்­தன. சிலை மந்­திர தந்­திரம் என அனைத்தும் வந்­தன. நான் ஏனைய மதங்­களைக் கூற­வில்லை ஆனால் முஸ்­லிம்கள் அவற்றை நோக்கி பய­ணிக்க ஆரம்­பித்­தனர். திருக்­குர்ஆன் பற்றி ஏனைய மதத்­த­வ­ருக்கு தெளிவு இல்லை. அவ்­வாறு இருக்­கையில் அவர்கள் தவ­றான எண்­ணக்­க­ருத்தை கொள்­வார்கள். எனவே முஸ்லிம் இல்­லாத ஒரு­வரும் முஸ்லிம் பற்றி தெரிந்­து­கொள்ள வேண்டும். இதில் முரண்­பா­டுகள் வரக்­கூ­டாது என்­ப­தற்­காக நாம் இல­கு­வாக இவற்றை செய்­கின்றோம். முஸ்லிம் இல்­லா­த­வர்கள் பள்­ளிக்கு வரக்­கூ­டாது எனக் கூறு­வது தவறு அவர்­களும் வர வேண்டும் என்று கூறு­வது நாம் தான். பெண்­க­ளுக்கு உரிமை கொடுக்க வேண்டும் என்று கூறு­வது நாம் தான். இவற்றை எல்லாம் கூறும் போது எம்மை தவ­றாகக் கூறு­கின்­றனர்.

கேள்வி:- நீங்கள் ஆக்­ரோ­ச­மாக பேசு­வது இளை­ஞர்­களைத் தூண்­டி­விடும் தானே?

பதில்:- நான் எங்­கேயும் ஆக்­ரோ­ச­மாக மக்­களைத் தூண்டும் பிர­சா­ரங்­களை செய்­ய­வில்லை.

கேள்வி:- சஹ்­ரா­னுடன் நீங்கள் இருந்­தீர்­களா?

பதில்:- இல்லை எப்­போதும் எங்­க­ளுடன் இருந்­த­தில்லை. சிலர் பொய்­யான கருத்­துக்­களை கூறு­கின்­றனர். அவர் எம்­முடன் இருந்­த­தாக எந்த ஆதா­ரமும் இல்லை.

கேள்வி:- நீங்கள் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யதும் இல்­லையா?

பதில்:- இல்லை. சந்­தித்­ததும் இல்லை பேச்­சு­வார்த்தை நடத்­தி­யதும் இல்லை. எமக்கும் அவ­ருக்கும் இடையில் கொள்கை ரீதியில் முரண்­பாடு உள்­ளது. நோன்பு விட­யங்கள் பெண்கள் குறித்த கோட்­பா­டுகள் ஜிஹாத் குறித்த கோட்­பா­டு­களில் எமக்கும் அவ­ருக்கும் இடையில் மாறு­பட்ட கருத்­துக்கள் இருந்­தன. அவர்கள் பொது­மக்­களை மற்றும் மக்­களை கொல்­ல­வேண்டும் என்ற கொள்­கையில் இருந்­தவர். முஸ்லிம் இல்­லா­த­வர்கள் கொல்­லப்­பட வேண்டும் என்று குர்ஆன் ஒரு­போதும் கோர­வில்லை. ஒரு­போதும் அதற்கு அங்­கீ­காரம் இல்லை. இவற்றை எல்லாம் நாம் எடுத்­துக்­கூ­றிய போது முரண்­பட்டார்.

கேள்வி:- அவர் இல்­லா­விட்­டாலும் வேறு எவ­ரா­வது உங்­க­ளுடன் இருக்­க­வில்­லையா?

பதில்:- ஹச்தூன் என்ற நபர் மட்டும் இருந்தார். 2015இல் வந்தார். அவ­ரது காத­லியை கூட்­டி­வந்து முஸ்லிம் மதத்­திற்கு மாற்­றினார். பின்னர் சில தொடர்­புகள் இருந்­தன. குடும்­பத்தில் சில பிரச்­சி­னைகள் இருந்­தன. அவள் ஒரு இந்துப் பெண். அவ­ளது விருப்­பத்தின் பெயரில் இஸ்­லாத்­துக்கு வந்தார். நாம் தான் மாற்­றினோம். எனினும் வீட்டில் முரண்­பா­டுகள் இருந்­தன. ஹச்தூன் என்­ப­வ­ருடன் வந்தே அவரை திரு­மணம் செய்­ய­வேண்டும் என்று கூறினார். எனினும் வீட்டில் பிரச்­சினை இருந்­தது. பின்னர் இரு­வ­ருக்கும் இடையில் பிரிவு ஏற்­பட்­டது. முஸ்­லிமை விட்டும் வில­கி­ய­தாக கூறி கடி­தத்தில் தெரி­வித்­தி­ருந்தார்.

கேள்வி:- நீங்கள் கூறும் கருத்­துக்கள் முஸ்­லிம்கள் மத்­தியில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளதே?

பதில்:- கொள்­கை­களை பின்­பற்றும் வழி யில் முரண்­பா­டுகள் வரும். எம்­மத்­தியில் நம்­பிக்கை ஏற்­ப­டுத்­திய நபர்கள் எம்­முடன் நன்­றாக பழ­கு­கின்­றனர். நாம் இன­வா­தத்தை பரப்­ப­வில்லை. நாம் கூறும் கருத்­துக்­களை ஊட­கங்கள் தவ­றாக முன்­வைத்து எம்மைத் தவ­றாக சித்­தி­ரிக்­கின்­றன.

கேள்வி:- சஹ்­ரானை அனைத்து முஸ்­லிம்­களும் அறிந்­தி­ருந்­தனர் என்று கூறி­யது ஏன்?

பதில்:- தவ்ஹீத் கருத்தில் சஹ்ரான் பிர­சித்­தி­யா­னவர். அதனால் தெரியும் என்று கூறினேன்.

கேள்வி :- இல்லை நீங்கள் அவ்­வாறு கூறி­யது ஏன்?

பதில் :- கேட்கும் அனைத்தும் தலை­வர்­க ளும் சஹ்­ரானை தெரியும் என்று கூறி­னார் கள். அர­சியல்வாதிகள் அனை­வ­ரு­டனும் புகைப்­படம் எடுத்­துள்­ளார். ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூகம் அல்ல பெரும்­பாலும் தெரியும் என்று அர்த்தம்.

கேள்வி:- சஹ்ரான் நல்ல பேச்­சாளர் என?

பதில்: -ஆம்,

கேள்வி:- ஐ.எஸ். அமைப்பின் கொடி தெரி­யுமா?

பதில்:- ஆம்இ அது சாதார­ண­மாகத் தெரிந்த ஒன்­று­தானே.

கேள்வி :- வாழைச்­சே­னையில் பாரிய ஆர்ப்­பாட்டம் நடந்­தது அதில் ஐ.எஸ். கொடி­யுடன் வந்­த­தெல்லாம் நடந்­துள்­ளது. இது குறித்து நீங்கள் அறிந்­தி­ருக்­க­வில்­லையா?

பதில்:- இல்லை, எமக்கு ஆரம்­பத்தில் இது தெரி­ய­வில்லை. அப்­போதே தெரிந்­தி­ருந் தால் நாம் அபோதே இதற்கு எதி­ராக நட­ வடிக்கை எடுத்­தி­ருப்போம்.

கேள்வி :- உங்­க­ளுக்கு அனைத்தும் தெரிந்­துள்­ளது, மத பிரி­வுகள் குறித்து பேசு­கின்­றீர்கள்இ இந்த சம்­பவம் தெரி­ய­வில்­லையா? நீங்கள் கூறு­வதில் எனக்கு சந்­தேகம் உள்­ளது?

பதில்:- உண்­மையில் நான் அறிந்­தி­ருக்­க­வில்லை, தெரிந்­தி­ருந்தால் நான் அப்­போதே எதிர்ப்பை தெரி­வித்­தி­ருப்பேன். நான் அறிந்­தி­ருக்­க­வில்லை.

கேள்வி:- நீங்கள் எங்­களை விடவும் நன்­ றாக சிங்­களம் பேசு­கின்­றீர்கள் ஆனால் நீங் கள் புத்­தரை விமர்­சித்­தமை குறித்து பேசிய கருத்­து­களை பார்க்கும் போது உங்­களை நம்ப முடி­யாது உள்­ளது. நீங்கள் இவ்­வ­ளவு அறி­வுள்ள ஒரு­வ­ராக இருந்தும் உங்­களின் மனதில் வரும் கருத்­துகள் அவை.

பதில்: -நான் பதில் கூறவா ?

கேள்வி:- நீங்கள் கூறு­வீர்கள் தான். ஆனால் நம்ப முடி­யாது நாம் குடித்­து­விட்டு கூட நபி­களை இயேசுவை விமர்­சிக்­க­மாட் டோம். நீங்கள் ஏன் புத்­தரை கீழ்த்­த­ர­மாகப் பேசி­னீர்கள். இதில் தான் சந்­தேகம் உள்­ளது.

பதில்:- நான் அவரை இழி­வு­ப­டுத்த நினைக்­க­வில்லை. ஒரு கார­ணியை நியா­யப்­ப­டுத்த நான் அவ்­வாறு கூறினேன். இதற்கு மேல் நான் எவ்­வாறு என்னை நியா­யப்­ப­டுத்­து­வது. அப்­போது நான் கூறி­யது சரி என்றே இருந்தேன். பின்னர் நான் ஆராய்ந்தே எனது தவறை திருத்­திக்­கொண்டேன்.

கேள்வி :- டென்மார்க் நாட்டில் நபி­க­ளுக்கு எதி­ராக காட்டூன் வரைந்­தனர். இதனை அடுத்து பாரிய சிக்கல் வந்­தது. முஸ்லிம் சமயம் போலவே ஏனைய சமூ­கத்தை விமர்­சிக்க நீங்கள் முன்­வந்­த­போது அதன் விளை­வு­களை நீங்கள் சிந்­தித்தி­ருக்க வேண்டும்.

பதில்:- ஆம், நான் செய்­த­ த­வறை திருத்­திக்­கொண்டு முன்­ன­க­ரவே நினை­கின்றேன்.

குழு:- நீங்கள் போத­க­ராக ஒரு கருத்துக்கள் தெரியாது போதிக்க வேண்டாம். உங்களின் போதனைகளை நிறுத்துங்கள்;

பதில்:- நான் 19 ஆண்டுகள் போதனை செய்துள்ளேன்.

கேள்வி:- நீங்கள் மதத் தலைவரா?

பதில்:- இல்லை, மதம் கற்பிக்கும் பிரசாரி

கேள்வி:- நீங்கள் பிரசாரம் செய்யும் போது மக்களை உங்கள் பக்கம் மாற்றுகின்றீர்களா?

பதில்:- அப்படி இல்லை, என்னை பின்பற் றும் நபர்கள் வரலாம்.

கேள்வி:- உங்களின் பிரசாரங்களில் மாற்று மதத்தவர் உங்களை சார்ந்துள்ளனரா?

பதில்:- இல்லை எனது கருத்துக்களை கேட்டு மாற்று மதத்தவர் யாரும் இணைய வில்லை

கேள்வி:-மக்கள் எண்ணிக்கையை கட்டுப் படுத்த முடியவில்லை என்றால் என்ன அர்த் தம்?

பதில்:- எமது மக்கள் தொகை கூடியுள்ளது, கல்வி கீழ் மட்டத்தில் உள்ளது. பல பிரச் சினைகள் உள்ளன. எமது சமூகத்தை சரி யான பக்கம் கொண்டுசெல்ல தேவை உள்ளது. அதனையே நான் அவ்வாறு கூறினேன்.

கேள்வி:- உங்களின் அமைப்பு அடிப்படை வாதமானதா ?

பதில்:- இல்லை அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் இல்லை

கேள்வி:- 18வயதிற்கு மேல் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்:- ஆம், ஆனால்……

குழு:- ஆனால் அல்ல நீங்கள் எப்போதுமே உங்களின் கருத்துக்களில் இருந்து நழுவிக்கொள்கின்றீர்கள்.

Read more...

ஹிஸ்புல்லா வின் பல்கலைக்கழகத்தை சுவிகரிக்குமாறு பரிந்துரை.

சர்ச்சைக்குரியாதாக மாறியுள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசரகால சட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்கு சவீகரித்துக் கொள்வதற்கு கல்வித் துறை சார்ந்த மேற்பார்வைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

கல்வித் துறை சார்ந்த மேற்பார்வைக் குழு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.

தொழிற்பயிற்சிக் கல்லூரிக்கென அரசகாணி மற்றும் அரச வளங்களைப் பெற்று சூட்சுமமாக காய்களை நகர்த்திய ஹிஸ்புல்லா, இவ்விடயத்தில் பிரதானமாக இலங்கை முஸ்லிம் மக்களை ஏமாற்றியுள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இலங்கையில் ஷரியா சட்டத்தினை போதிக்கும் பல்கலைக் கழகம் ஒன்றினை உருவாக்க என இலங்கை முஸ்லிம்களை அராபியரிடம் அடகு வைத்த ஹிஸ்புல்லா, அப்பணத்தினை தனது சொந்த முதலீடாக மாற்றியுள்ளார்.

ஆனால் ஷரியா பல்கலைக்கழகம் என்ற போர்வை போர்த்தப்பட்ட குறித்த பல்கலைக்கழகத்தினூடாக ஹிஸ்புல்லா இந்நாட்டின் இலவசக்கல்விக்கு ஆப்பு வைப்பதற்கே முயற்சித்தார் என்ற உண்மையை இந்நாட்டின் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் யாவரும் உணர மறுக்கின்றனர்.

இலவசக்கல்விக்கு எதிரான மேற்படி தனியார் பல்கலைக்கழகங்கள் யாவும் அரச நிறுவனங்களாக மாற்றப்பட்டு இலங்கையில் இலவசக்கல்வி முறை வலுப்பெறவேண்டும் என்று போராடவேண்டிய நிலையில் குறித்த பல்கலைக்கழகம் ஷரியா நீதியை கற்பிக்க முயன்றமையால் சவால்களை எதிர்நோக்குகின்றது என்ற தோற்றத்தை உருவாக்கி ஹிஸ்புல்லாவின் கொள்ளைக்கு துணை நிற்கின்றனர் என்பது கவலைக்குரியது.

Read more...

சபாநாயகருக்கான ஆலோசகருக்கு அமெரிக்கா ஊதியம் வழங்குகின்றது. போட்டுடைக்கின்றார் கம்பன்பில

இலங்கையில் அமெரிக்கா அதிதீவிரமாக கால்பதித்து வருகின்றது. சீனாவின் உறவினை தடுக்கும் வகையில் பல்வேறு வியூகங்களை மேற்கொண்டு தனது ஆதிக்கத்தை இலங்கையில் அதிகரிக்கவும் தனக்கு வேண்டிய அரசொன்றை நிறுவவும் அமெரிக்கா முயற்சிக்கின்றது என்பது யாவரும் அறிந்த விடயம்.

இந்நிலையில் இலங்கையின் சபாநாயகரான கரு ஜெயசூரியவின் ஆலோசகர் ஒருவருக்கு அமெரிக்க நிறுவனம் ஊதியம் வழங்குகிறது என்றும் அதனை சபாநாயகர் ஏற்றக் கொண்டிருக்கிறார் என்றும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.

இச்செயற்பாடானது கருஜெயசூரியவிற்கும் அமெரிக்காவுக்கும் இரகசியத் தொடர்பு உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முகவர் போன்றே சபாநாயகர் செயற்படுகிறார் என கம்பன்பில சாடியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின்போது மேற்கண்டவாறு தெரிவித்த பா.உ கம்பன்பில அமெரிக்காவுடன் சோபா உடன்பாடு, மிலேனியம் சவால் நிறுவனம் போன்ற உடன்பாடுகளை செய்து கொள்வதால், அமெரிக்க- சீனா இடையிலான மோதல்களுக்கான களமாக சிறிலங்கா மாறி விடும் ஆபத்து உள்ளது என்று எச்சரித்திருக்கிறார்.

அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான மிலேனியம் சவால் நிதிய ஒத்துழைப்பு உடன்பாடு ஒரு பொருளாதார தாழ்வாரத்தை உருவாக்கி விடும். அது பனாமா கால்வாயைப் போன்று சிறிலங்காவைப் பிளவுபடுத்தி விடும் என்றும் அவர் கூறினார்.

Read more...

பயங்கரவாத சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்ட 6 முஸ்லிம் இளைஞர்கள் விடுதலை.

கடந்த ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் தகுந்த காரணங்கள் எதுவுமின்றி கைது செய்யப்பட்ட ஆறு பேர் முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணிகள் குழுவின் தலையீட்டினால் நேற்று (20) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறையை சேர்ந்த மூவரும், சாய்ந்தமருதைச் சேர்ந்த ஒருவரும், திருகோணமலையைச் சேர்ந்த ஒருவரும், கம்பளையைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களாகும்.

நாட்டில் அண்மையில் இடம்பெற்ற தீவிரவாத செயப்பாட்டுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் தகுந்த காரணம் எதுவுமின்றி கடந்த மே மாதம் 13ஆம் திகதி கண்டி கலேகெதர பிரசேத்தில் வைத்து 06 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு பிணை இன்றி விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.

இதில் சம்மாந்துறையை சேர்ந்த மூன்று நபர்களையும் விடுதலை செய்வதற்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிரினால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

கட்சியின் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் இயங்கிவரும் கட்சியின் சட்டத்தரணிகள் குழு ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தலைமையிலான சட்டத்தரணி குழுவினருக்கும் குறிப்பாக இது விடயத்தில் களத்தில் நின்று பாடுபட்ட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிருக்கும் பாதிக்கப்பட்ட பெற்றோர்களும் விடுதலை செய்யப்பட்ட இளைஞர்களும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

( எஸ்.அஷ்ரப்கான்).

Read more...

Thursday, June 20, 2019

தெரிவுக்குழுவின் முன் கண்ணீர் விட்டழுத மௌலவி!

ஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பின்னணி தொடர்பில் கண்டறியும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக்குழுவின் முன்னர் சாட்சியமளித்த சூபி முஸ்லிம் மௌலவி மொகமது ஸியலான் தாங்கள் இஸ்லாத்தை தழுவுகின்ற உண்மையான முஸ்லிம்கள் என்றும் இஸ்லாம் சமாதானத்தையே விரும்புவதாகவும் வன்முறையே ஒருபோதும் போதிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அங்கு சாட்சியமளித்த அவர் :

சஹ்ரானது செயற்பாடுகள் தொடர்பாக 2013 மற்றுமஇ 2014ம் ஆண்டு காலப்பகுதியில் நாம் மொத்தமாக 11 முறைப்பாடுகளை செய்துள்ளோம்.

சஹ்ரானுடன் அரசியல்வாதிகள் ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்த ஒப்பந்தமானது சூபி முஸ்லிம்களை ஓரம்கட்டக்கூடியதோர் அடிப்படைவாத ஒப்பந்தமாகும். அவ்வொப்பந்தத்திலே ஷாபி ஸாலி, ஷிப்லி பாருக், எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லா, ஏஎல்எம் றூபி மற்றும் எம்எம் அப்துல் றஹ்மான் ஆகியோர் சஹ்ரானுடன் கையொப்பம் இட்டிருந்தனர்.

சஹ்ரான் இந்நாட்டிலுள்ள முஸ்லிம் அல்லாதவர்களை கொல்லவேண்டும் என மூன்று உரையாற்றியிருக்கின்றார். இது தொடர்பாக நாம் முறைப்பாடு ஒன்றை தயாரித்து இலங்கையில் ஜனாதிபதி, பிரதமர் , நீதித்துறை அமைச்சராக இருந்த விஜயதாஸ ராஜபக்ச , நீதிக்கும் சமாதனத்துக்குமான அமைச்சு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு, பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் இயக்குனர் நாலக டி சில்வா ஆகியோருக்கு அனுப்பிவைத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.




Read more...

தமிழ் பிரதேச செயலகமாக தரமுயர்த்தவே கூடாது! முஸ்லிம்கள் சத்தியாக்கிரகப்போராட்டம்.

கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி இன்று நான்காவது நாளாக கல்முனையில் கல்முனை விகாராதிபதி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து முஸ்லிம்கள் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

இன்று காலை 9.00 மணியளவில் கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இச்சத்தியாக்கிரக போராட்டதினை கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளனம், வர்த்தக சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புகள் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ளன.

கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப், கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், காரைதீவு பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.எம்.ஜாஹிர், ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.ஏ.ரஸ்ஸாக் உட்பட கல்முனை மாநகர சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் பலரும் உலமாக்கள், வர்த்தகர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களும் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

'கல்முனையில் இனத்துவ மற்றும் நிலத்தொடர்பற்ற ரீதியில் உருவாக்க எத்தனிக்கும் பிரதேச செயலகத்தை தடை' என்பதே அவர்களது பிரதான கோஷமாக உள்ளது.

அங்கு ஊடகங்களுக்கு கருத்துரைத்த மாநகர சபை முதல்வர் றக்கீப்:

இனத்துவ ரீதியிலும் நிலத் தொடர்பற்ற ரீதியிலும் உருவாக்கப்பட எத்தனிக்கும் பிரதேச செயலகத்தை தடை செய்ய வேண்டும் எனவும் கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை நியாயமற்றது எனவும் தெரிவித்ததுடன் கல்முனைப் பிரதேசம் ஒரு நியாயமற்ற காரணத்தினால் பிரிக்கப்பட்டு விடக்கூடாது என்ற காரணத்துக்காக சத்தியகிரகப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம் - என்றார்.

எல்லைகள் நிர்ணயிக்கப்படாமல், அதற்கான குழுக்கள் நியமிக்கப்படாமல் கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தித் தரக்கோருவது ஒரு நியாயமற்ற கோரிக்கையாகும். இதன் மூலம் அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடிய, இன முறுகலை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் நடந்தேற வாய்ப்புக்கள் இருக்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.








Read more...

Wednesday, June 19, 2019

பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதியாதீர்! - சத்தியாக்கிரக போராட்டத்திற்காக நாளை வீதியில் குதிக்கவுள்ள முஸ்லிம்கள்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது என அரசை கோரும் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை முஸ்லீம் சமூகம் முன்னெடுக்கவுள்ளது.

நாளை(20) கல்முனை மாநகரில் உள்ள பொதுஇடம் ஒன்றில் காலை குறித்த சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதே வேளை கல்முனை மாநகர வளாகத்தில் முக்கிய உறுப்பினர்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் வர்த்தக சமூகத்தினரின் பங்குபற்றலுடன் இன்று மாலை நடைபெற்று முடிந்த முக்கிய கூட்டம் ஒன்றில் தற்போது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரும் சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்டம் தொடர்பாக முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டில் போராட்டமானது பொதுப்போக்குவரத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் அவசரகால சட்ட விதிகளுக்கமைய அப்போராட்டத்தை சமூக நல்லிணக்கம் கருதி அகற்ற வேண்டும் என பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதே வேளை மேலும் வலுவடைந்துள்ள இப்போராட்டமானது மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த 30 வருடங்களாக தரமுயர்த்தப்படாமல் சில அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் இழுத்தடிக்கப்பட்டுவரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு அரசை கோரும் சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்டம் 17 ஆம் திகதி கல்முனையில் ஆரம்பமாகிநடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


(பாறுக் ஷிஹான்).

Read more...

ஈழத்து சே குவேரா . ஸ்ரான்லி ராஜன்

பிரபாகரனுக்காகவும் புலிகளுக்காகவும் செத்தவர்களை மாவீரர்கள் என சொல்லி ஒப்பாரி வைக்கும் கூட்டம் உண்டு, ஆனால் புலிகளால் கொல்லபட்ட தமிழ் போராளிகளுக்கு தியாகிகள் தினம் என அனுசரிக்கபடும் இந்நாளும் உண்டு

அப்படியும் ஒரு நாள் அனுசரிக்கபடும், தமிழகத்தில் இதெல்லாம் தெரிவதில்லை, நாம் அனுசரிப்போம்

ஜூன் 19ம் நாள் ஒப்பற்ற ஈழபோராளி பத்மநாபாவின் நினைவுநாள், கோடம்பாக்கத்தில் அவர் 1990ல் மரித்தபொழுதே ஈழம் இனி மலராது என அடித்து சொன்ன அனுபவஸ்தவர்கள் உண்டு, தமிழர்களின் பெரும் சிந்தனை செல்வம் அழிக்கபட்டுவிட்டது, இனி ஈழதமிழருக்கு மிஞ்சுவது கண்ணீரும், ரத்த ஆறும் என்பது அன்றே குறிக்கபட்டது.

பத்மநாபாவின் மரணம் தமிழகத்தை பெரும் சுடுகாடாக்கும் திட்டத்தின் முதல்புள்ளி, இனி என்னவெல்லாம் நடக்குமோ என மனிதநேயம் கொண்டோர்கள் எல்லாம் அஞ்சி புலம்ப அதற்கு விடை மறுவருடம் மே 21 1991ல் கிடைத்தது. மிகசிறிய வயதிலே பெரும் பக்குவமான பெரும்பணியினை செய்து அழியாபுகழ்பெற்றவர் பத்மநாபா.

ஈழம் என்றால் புலிகள், தமிழர் என்றால் புலிகள், புலிகளை ஆதரிக்காவிட்டால் தமிழரில்லை என்பதெல்லாம் அவரவர் விருப்பம். ஆனால் அழிவுகளை குறைத்து சர்வதேச நகர்வுக்கு ஏற்பபோராடி ஈழமக்களை வாழவைக்கமுடியும் என்ற யதார்த்த உண்மையையில் போராடிய “தமிழர்”தான் பத்மநாபா.

ஈழத்தில் எத்தனையோ போராளிகள் உண்டு, தற்கொலை போராளிகளுண்டு, அவர்களில் செட்டிதனபாலசிங்கம் போன்ற வயிறுவளர்ர்பு போராளிகளும் உண்டு. ஆனால் தொட்டுவிடும் தூரத்தில் இவரால் ஈழத்திற்கு விடிவு உண்டு என உலகம் நம்பிய, அதாவது சர்வதேச நிபுணர்கள் மரியாதையாக பார்த்த ஒரு போராளி உண்டென்றால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் அது பத்மநாபா.

காரணம் அவரின் ஆற்றல் அப்படி, தொலைநோக்கு சிந்தனையாளர் என்பதனை விட, சர்வதேச நிலைப்பாடு அறிந்து போராட்டத்தினை நடத்தியவர், எந்த தலைவருடனும் எதைபற்றியும் மணிகணக்கில் விவாதிக்கும் அறிவு அவருக்கு இருந்தது, சீரிய திட்டமும், துல்லியமான செயலும் அவருக்கு வாய்த்திருந்தது

(இந்த இடத்தில் 2002 கிளிநொச்சிமாநாட்டில் பத்திரிகையாளர்கள் அள்ளி வீசிய ஒவ்வொரு கேள்விக்கும் ஆண்டன் பாலசிங்கத்தினை பரிதாபமாக பார்த்த அந்த முகம் நினைவுக்கு வரகூடாது)

பெரும் அறிவாளி நாபா அதனை விட மிக முக்கியமானது அவரது மனிதநேயம்.

ஈழம் காங்கேசன் துறையில் பிறந்தவர், 1975 தரபடுத்துதல் சட்டத்தால் மாணவர்கள் பாதிக்கபட்டபொழுது போராடகிளம்பியவர். அக்கால யாழ்ப்பாண வழக்கபடி வலுகட்டாயமாக லண்டனுக்கு அனுப்பபட்டவர். அங்கு படித்து பட்டமும் பெற்றவர்.

லண்டனில் எல்லா போராளி குழுக்களுக்கும் அலுவலகம் இருக்கும் (பின்னாடியே ஓசைபடாமல் உளவுதுறைகள் பின் தொடரும்), அங்கு பாலஸ்தீன போராளிகளுடன் பழகியவர். உலக அனுபவம் அவருக்கு நிரம்ப கிடைத்தது.

இதுவரை உலகில் சேகுவாரேக்கு அடுத்த அராபத் எனும் ஒப்பற்ற போராளி ஏன் இலக்கினை அடையமுடியவில்லை என்பது அவருக்கு அன்றே விளங்கிற்று. மகா திறமைசாலி அராபத், இனி யாரும் அவர்போல போராடமுடியாது,

இஸ்ரேல் மட்டும் எதிரி என்றால் ஜெயித்திருப்பார், ஆனால் எதிரி இஸ்ரேல் மட்டும் அல்ல என்பது எதார்த்தம், இப்படியாக உலக அரசியலை கரைத்துகுடித்துவிட்டுத்தான் ஈழத்திற்கு போராட யாழ்ப்பாணம் திரும்பினார்.

1980களில் அவரின் போராட்டம் வித்தியாசமானது, புயலோ அல்லது மழையோ பாதிக்கபட்ட கிராமங்களுக்கு ஓடிசென்று குழுவோடு உதவுவார். கிராமம் கிராமாக பயணித்தார், அதாவது மக்களை திரட்டினார்.

இன்றும் நமது தமிழகத்தில் தாழ்த்தபட்ட மக்களுக்க்காக போராடிய அம்பேத்கர் பக்கத்தில் பிரபாகரன் படமும் இருக்கும், அரசியலாக கூட இருக்கலாம். ஆனால் தாழ்த்தபட்ட மக்களுக்காக அமைப்புமூலம் போராடிய உன்னத தலைவன் பத்மநாபா என்பது வரலாறு.

ஆனால் தமிழக சங்கங்கள் அவரை எல்லாம் கண்டுகொள்ளாது. ஈழம் என்பது மலையக இந்தியரும், மூர்ஸ் எனப்படும் தமிழ்பேசும் முஸ்லீம்களும் இணைந்த சமுதாயமாக அமையவேண்டும் என்பதுதான் அவரின் கோட்பாடு, தன்னை கம்யூனிஸ்ட்டாக அறிவித்துகொண்டு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முண்ணனி எனும் போராளிகுழுவினை தொடங்கினார்.

அதாவது மக்களை திரட்டாமல் போராளிகள் வெல்லவே முடியாது எனும் லெனின், மாவோ போன்றோரை அப்படியே பின்பற்றினார்.

(ஒருவகையில் அது பின்னாளில் உண்மையாகி கூட போனது, முள்ளிவாய்க்கால் கொடுமை நடந்தபொழுது யாழ்பாணத்தில் ஒரு எதிர்ப்புமில்லை, மட்டகிளப்பு மட்டையாகி கிடந்தது. கொழும்பு கோலாகலமாக இருந்தது, மலையகம் தேயிலை கூலி கூட்டி கேட்டது, ஆனால் முள்ளிவாய்க்கால் கதறிகொண்டிருந்தது)

அவருக்கு ஏழைமக்கள், பின் தங்கிய மக்களிடம் செல்வாக்கு கூடிற்று, அவ்வப்போது சிங்களபடைகளை தாக்கவோ அல்லது சிங்களரால் பாதிக்கபட்ட மக்களை காப்பற்றவோ அவர் தவறினதே இல்லை.

இப்படியாக மலையகம், ஈழம் என்று ஒடுக்கபட்ட மக்களை எல்லாம் தேடி தேடி சென்று இயக்கம் வளர்த்தார். “போராளிகளுக்கு போராடும் கடமை மட்டுமல்ல, ஈழம் மலர்ந்தால் அது எப்படி சமத்துவ பூமியாக மலரும் எனும் நம்பிக்கையை மக்களிடம் விளக்கி நம்பிக்கையை பெறவேண்டும்” என்பது அவரின் பெரும்கோட்பாடு.

ஒரு கட்டத்தில் ஏழை எளிய மக்கள் மட்டுமல்ல, பலதரப்பாலும் ஏற்றுகொள்ளகூடிய தலைவர் எனும் நிலைய மிக சிறியவயதில் 29 வயதிலே பெற்றார், ஈழத்தின் எதிர்காலம் என்றே அவர் பார்க்கபட்டார், பலமொழிகளில் பேசும் ஆற்றல் பெற்றவர். எல்லா நாட்டு அரசியலும் அவருக்கு அத்துபடி.

1983 கலவரத்தினை தொடர்ந்து, போராளிகள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தவுடன் இந்தியா தனது விளையாட்டை தொடங்கினாலும், அதற்கு முன்பே சிலகுறிப்புகளை தயாரித்திருந்தது.

அதாவது இந்தியா உதவும் பட்சத்தில் உலகினை சமாளித்து அதே நேரம் இந்தியாவிற்கும் ஆபத்தில்லா போராட்டத்தினை நடத்தும் ஆற்றல் யாருக்கு உண்டு என்று அறிக்கை தயாரித்தார்கள்.

டெலோவின் சபாரத்தினமும், பத்மநாபாவும் அதில் முதலிடம் பிடித்தார்கள், அப்படியே தமிழகமும் வந்தார்கள். இந்திய பயிற்சி தொடங்கும் முன்னமே லெபனானில் பெற்றபயிற்சியுடன் ஷெல்குண்டுகளை தயாரித்து இலங்கையை முதலில் அச்சுறுத்தியது பத்மநாபாவின் இயக்கம் .

தமிழகத்து கம்பூனிஸ்டுகள் மட்டுமல்ல, எல்லா அரசியல்வாதிகளிடமும் அவருக்கு நட்பு இருந்தது, ஈழத்தில் அதிதீவிரமாக இல்லாமல் மிக திட்டமிட்டு மக்களுக்கு பாதிப்பில்லா வகையில் அவரின் இயக்கம் தாக்குதல் நடத்திகொண்டிருந்தது.

ஈழத்து போராட்ட ஒரே ஏகபோகமாக உரிமை கொண்டாடிய புலிகளும், பத்மநாபாவும் இங்குதான் கருத்துவேறுபாடு தொடங்கிற்று.

எதனையும் கணக்கில்கொள்ளாமல் படுதீவிரமாக தாக்கிவிட்டு பின்னர் மக்களை சிங்களராணுவம் தாக்கினால், தாக்கபடும் மக்கள் தம்மை ஆதரிக்கவேண்டும் அல்லது விரும்புவார்கள் என்பது அவர்கள் கணக்கு, அதாவது “நாங்கள் போராடுகின்றோம் நீங்கள் மட்டும் எப்படி சும்மா இருக்கலாம், வந்துபோராடியே தீர்க்கவேண்டும், போராட்டம் என்றால் துப்பாக்கி, தற்கொலை அவ்வளவுதான், அப்படியானால் சிங்களன் தானாக நாட்டை போட்டுவிட்டு ஓடிவிடுவான்”

“பணமிருந்தால் பணம், சொத்து இருந்தால் சொத்து, பிள்ளைகள் இருந்தால் வீட்டிற்கு ஒன்று எமக்கு, அதாவது எமது போராட்டத்தை மக்கள் ஏற்றுகொள்ளவே வேண்டும்” என்பது அவர்கள் சித்தாந்தம்.

ஆனால் பத்மநாபா இப்படி சிந்தித்தார் “மக்களிடம் ஒரு சித்தாந்த எழுச்சியை ஏற்படுத்தவேண்டும் மக்களை அரசியலாக்க வேண்டும், ஆயுத போராட்டம் என்பது கூடுதலாக ஒரு போராட்டமே தவிர, அது மட்டுமே போராட்டமல்ல, அதி தீவிரத்துடன் அரசபடைகளை தாக்கி, அவர்கள் மக்களை பூண்டோடு அழித்தால் என்னவாகும்?” என்பதை தனது புகழ்மிக்க வார்த்தையால் சொன்னார்.

“எமது மக்களுக்காகத்தான் இம்மண்ணை நேசிக்கின்றோம், மண்ணுக்காக மக்களை நேசிக்கவில்லை” அதாவது வாழ்வு முக்கியம், மக்கள் பாதுகாப்பு முக்கியம், ஒவ்வொரு மக்களின் உயிரும் முக்கியம்.

இந்திய அரசு அவர்மேல் பெரு மரியாதை வைத்திருந்தது, பின்னாளில் இந்தியாவினால் அங்கீகரிக்கபட்ட 4 ஈழபோராட்ட இயக்கங்களில் (புலிகள் உள்பட) அவர் முக்கியமானவர்.

ஈழ மக்களின் மீது அனுதாபம் கொண்டிருந்த ஒரே இந்தியதலைவர் இந்திராகாந்தி, அவர் ஏன் போராளிகளை ஆதரித்தார்? அவருக்கு என்ன திட்டம் இருந்தது? அது தனி ஈழமா? அல்லது ஈழ மாகாணமா? என யாருக்கும் புரியவில்லை, அது இந்திராவிற்கு மட்டும் புரிந்த ரகசியம்.

அந்த ஈழதிட்டத்தினை மனதிற்குள்ளே வைத்துகொண்டு இறந்தும் போய்விட்டார், அதோடு பலரின் வாழ்க்கையில் சனி சம்மணம் போட்டு அமர்ந்தார்.

பிடல் காஸ்ட்ரோ போலவோ அல்லது சேகுவாரா போலவோ பெரும் பெயரினை பெற்றிருக்கவேண்டிய பத்மநாபாவின் தலைவிதியை மிக அவசரமாக இறைவன் மாற்றி எழுதிகொண்டிருந்தான்.

அப்பொழுதெல்லாம் புலிகளின் பலம் குறைவு, எல்லா குழுக்களும் இலங்கை ராணுவத்தை எதிர்த்து போராடின‌

ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு முகாமை தாக்க சிங்கள ராணுவம் திணறியது, இந்நிலையில்தான் நாங்கள் பெரியவர்கள் என சொல்ல தொடங்கினார்கள் புலிகள், சபாரத்னம் அவர்கள் எதிரியானார்

அவரை கொல்லதேடும் பொழுது காப்பாற்ற நினைத்தவர் பத்மநாபா, வைக்க்கோல் லாரியில் அவரை காப்பாற்றி இந்தியா அனுப்பும் திட்டம் அவருக்கு இருந்தது, அதற்குள் சபாரத்தினத்தை கொன்றனர் புலிகள்

பத்மநாபாவினையும் புலிகள் கொல்லதேட அவர் மோதலை விரும்பாமல் தலைமறைவானார், இந்நிலையில்தான் புலிகளை வடமராட்சியில் மக்களோடு சுற்றிவளைத்தது இலங்கை ராணுவம், அன்றைய முள்ளிவாய்க்கால் அது

இந்தியா அனுப்பிய உதவிபொருள் கப்பலை சிங்களம் திருப்பி அனுப்பி அவமானபடுத்தியபின்புதான், இந்தியா விமானம் மூலம் உணவுபொருளை வீசியது, அதற்கு பாதுகாப்பாக இந்திய ராணுவ விமானமும் அங்கு பறந்தது

இதன்பின்புதான் இலங்கை முற்றுகையினை தளர்த்தி ஓடியது, மீண்டும் அந்தவொரு நிலை வராமலிருக்கத்தான் அமைதிபடை அனுப்பபட்டது

இந்திய அமைதிபடை ஆக்கிரமிக்கவோ அல்லது கற்பழிப்பதையோ நோக்கமாக கொண்டு ஈழத்தில் காலடி எடுத்துவைக்கவில்லை, பலவிதமான உலக நெருக்கல்கள், ஐ.நா அமைதிபடையோ அல்லது அமெரிக்க படையோ இலங்கையில் காலூன்றுவதை தடுக்க அவசர அவசரமாக செய்யபட்ட ஏற்பாடு.

இலங்கையில் அமைதி திரும்புவதை பெரிதும் விரும்பிய பத்மநாபா, இந்திய படையினரோடு அமைதி திரும்ப கடும் ஒத்துழைப்பு கொடுத்தார்.

இந்திய இலங்கை ஒப்பந்தபடி இலங்கையின் 2 மாகாணங்களில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயக நிலமென்றும், அது இரண்டையும் இணைத்து ஒரே மாகாணமாக்கி ஒரு முதல்வரையும், அதாவது “தமிழ்” முதல்வரையும் வைக்கவேண்டும் என ஏற்பாடாகி இருந்தது. இப்படியாக வடக்கும் கிழக்கும் இணைந்த ஈழமாநிலம் உண்டாயிற்று.

அதாவது இந்தியாவில் தமிழ்நாடுபோல இலங்கையில் ஈழம், அதுவரை கிடைக்காத ஈழமாநில அந்தஸ்து, இந்தியாவால் அந்நேரம் உதவகூடிய ஆக உச்சகட்ட‌ உதவி அவ்வளவுதான், காரணம் உலக காலநிலை அப்படி, அதே நேரம் இந்திய பிண்ணணியில் அவர்கள் போராட இந்தியா உதவும் வாக்குறுதியும் உண்டு

வங்கம் பிரிந்த்தால் அடிபட்ட பாம்பாக உறுமிய பாகிஸ்தான், அப்பாம்ம்பிற்கு பால்வார்க்கும் அமெரிக்கா எல்லாம் எப்படியாவது காஷ்மீரை பிரித்தெடுக்க கங்கணம் கட்டிகொட்டு விரதமிருந்தன இப்படி ஏகபட்ட காரணத்தால் ஈழ மகாண அரசு, 13ம் சட்டதிருத்தம் என இந்தியா திட்டங்களை முன் வைத்தது

ஆனால் புலிகளுக்கு பிடிக்கவில்லை, மக்களில் ஒரு பிரிவினருக்கும் பிடிக்கவில்லை, ஆண்டவனுக்கும் அவர்களுக்கும் மட்டுமே காரணம் தெரியும்.

இன்றும் தமிழ்தேசியம் பேசுவோர், குதிரைக்கு அடியில் சிலைவைப்போர், முஷ்டி முழக்குவோர், கடற்கரையில் மெழ்கு பிடிப்போர் அண்ணே…… என கதறுவோர் இவர்கள் யாரிடமாவது ஏன் ஈழத்தில் வடக்கு தமிழரையும், கிழக்கு தமிழரையும் இணைக்ககூடாது என கேளுங்கள், பதிலிருக்காது.

யாரிடமும் இருக்காது, இவர்கள் புரிந்துகொண்டது யாழ்பாணம், ஈழம், பிரபாகரன், இந்தியா,சோனியா, கலைஞர் துரோகம் அவ்வளவுதான், அதனை தாண்டி யோசிக்கமாட்டார்கள்.

வடக்கும் தமிழர்கள், கிழக்கும் தமிழர்கள் இரண்டையும் இணைத்தால்தான் என்ன? அது கூடாதாம். தனி ஈழம் வேண்டுமாம் அதில் இரண்டு மாநிலமும் தனி தனியாக இருக்குமாம்.

டெல்லிக்கு இது மிகவித்தியாசமாக தெரிந்தது, வாய்விட்டு கேட்டார்கள், “நாளை ஈழம் அமையும் பட்சத்தில் இரண்டு ஈழமாக அமைப்பீர்களா?” யாரிடமும் பதில் இல்லை. ஈழம்தானே, தனி தமீழீழம் தானே, அதில் என்ன கிழக்கு வடக்கு பிரிவினை? என கேட்டால் யாரிடமும் பதில் இல்லை. புலிகள் இதனை ஏற்க மறுத்தார்கள்,

மக்களில் ஒரு ஆதிக்கபிரிவும் அவர்களோடு இணைந்தது, விளைவு ஈழம் இந்தியாவின் வியட்நாம் ஆயிற்று. புலிகள் இந்தியராணுவம் மோதல் தொடங்கியது.

புலிகளை ஒரு தீவிரவாத இயக்கமாக நினைத்துத்தான் இந்திய ராணுவம் களத்தில் சும்மா குதித்தது, அதன்பின் புரிந்துகொண்டது இந்திய ராணுவத்தை விட புலிகளிடம் இருக்கும் தொலைதொடர்பு வசதியும், சில வெடிமருந்துகளும் மிக நவீனமானவை. ஒரு பெரிய அரசாங்க ராணுவ தயாரிப்பு, அந்த அரசின் அனுமதி இல்லாமல் இவை புலிகளுக்கு கிடைத்திருக்காது, ஆனால் அந்த நாடு ஜெயவர்த்தனேவின் இலங்கை அல்ல.

சுதாரிப்பதற்குள் இந்திய ராணுவம் அடிமேல் அடிவாங்க ஆரம்பித்தது, கழுகு வழிகாட்ட புலி பாய்ந்தது, ஒரு பக்கம் உலகெல்லாம் ஊடகங்கள் இந்தியராணுவம் கற்பழிப்பில் ஈடுபடவே வாத்சாயனர் புத்தகங்களை எல்லாம் கொண்டு சென்றார்கள் எனும் அளவிற்கு உலகெல்லாம் போட்டுதாக்கின.

ஒரு செய்தி 10 ஆக்கபட்டது, களநிலமை இந்திய ராணுவத்திற்கு புதிது. ராணுவ யுத்தம் தெரியுமே தவிர கொரில்லா யுத்தம் பழக்கபடாதது. ரோந்துவரும் இந்திய கவசவாகனத்திற்கு சந்தோஷாக கைகாட்டும் பாட்டி, வாகனம் கடந்தபின் சுருக்குபையில் இருக்கும் ரிமோட்டை இயக்கி கன்னிவெடியை இயக்கி வாகனத்தை தூள் தூளாக்கினால்..

பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் அல்லது சிறுவர் (100 பேரில் ஒருவர்) எங்கு ஆயுதம் வைத்திருப்பார்கள் என தெரியாது, திடீரென சாலை சோதனையில் ஈடுபடும் இந்தியராணும் மீது கை குண்டு விழும்.

இப்படியாக பாதிக்கபடும் இந்திய‌ ராணுவம் அந்தபாட்டி கூட்டத்தையும், மாணவி கூட்டத்தையும் விசாரித்தால், அய்யகோ கற்பழிக்கும் கொடுமை பாரீர் என உலகெல்லாம் மீடியாக்கள் அலறும்.

5000 பேர் தங்கும் மருத்துமனையில் ஒரு புலி சென்று படுத்துகொள்வார், சாலையில் செல்லும் இந்தியராணுவத்தை தாக்குவார். இந்தியராணுவம் மருத்துவமனையில் நுழையும், எங்கிருந்தோ குண்டு விழும், சகலமும் பஸ்பம்.

யாழில் மருத்துவமனை தகர்ப்பு, இந்தியபடை அட்டூழியம் என செய்திவரும், எல்லா ஊடகங்களும் அப்படித்தான் எழுதி தள்ளின, உண்மை வெகு தூரத்தில் இருந்தது. சதாம் உசேனையும், மூமர் கடாபியையும் உலக வில்லன்கள் ஆக்கினார்கள் அல்லவா? போராளி யாசர் அராபத்தை தீவிரவாதி ஆக்கினார்கள் அல்லவா அப்படி.

இந்தியராணுவம் அடிவாங்க, புலிகளுக்கும் பாதிப்பு இருக்க, தமிழர்களும் மகா சிக்கலில் மாட்ட அப்பொழுது மிக பாதுகாப்பாக இருந்துகொண்டு செத்தவர் கணக்ககை குறித்துகொண்டிருந்தது இலங்கைராணுவம்,

அவர்களுக்கென்ன யார் செத்தாலும் சரி, இந்திய வீரனோ புலிகளோ இல்லை அப்பாவி தமிழரோ யார் செத்தாலும் மகிழ்ச்சி. அப்படித்தான் இருந்தது நிலை.

ஆனாலும் அவமானத்தோடு போராடிய இந்தியா, வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்திற்கு முதல்வருக்கு தேர்தல் நடத்தியது, புலிகள் தேர்தலில் நிற்கவில்லை (என்றுதான் அவர்கள் மக்கள்முன் நின்றார்கள்?), புலிகளுக்கு பயந்தும் யாரும் நிற்கவில்லை.

ஆனால் பத்மநாபா துணிந்து நின்றார், அந்த தேர்தலில் மகத்தான வெற்றியும் பெற்றார், மக்களின் ஆதரவு அப்படி. ஆனாலும் பதவியை தனது கட்சிக்காரர் வரதராஜ பெருமாளிடம் ஒப்படைத்துவிட்டு மக்கள் பணியிலே இருந்தார்.

பத்மநாபாவும், வரதராஜபெருமாளும் அழிக்கவேண்டிய அசுரர்களாக புலிகள் குறித்துகொண்டனர்.

30 ஆண்டுகாலம் தனிபோராட்டம் நடத்திய அராபத் இப்படித்தான் பாலஸ்தீன் சுயாட்சிக்கு ஒப்புகொண்டார், பெரும் அதிகாரம் இல்லைதான். ஆனால் வகுத்து வைத்த எல்லைகோடு இருக்கின்றது. காசாவும் மேற்குகரையும் பாலஸ்தீனருக்கு எனும் அடையாளம் இருக்கின்றது. இஸ்ரேல் எப்படியெல்லாம் நாடகமாடினாலும் அதனை அழிக்கமுடியவில்லை, முடியவும் முடியாது.

நாளை பாலஸ்தீனம் மலரும் பட்சத்தில் சிக்கல் இல்லை, இதனைத்தான் அன்றே ஈழத்தில் பத்மநாபா சொன்னார். இதுதான் தொலைநோக்கு, சாதுர்யம், வாய்பினை பயன்படுத்திகொள்ளும் சூட்சுமம்.

இன்று பர்மாவில் ரோஹிங்கியா முஸ்லீம்களை போட்டு விரட்டுகின்றனர்? எந்த உலகநாடு உள்நுழைத்திருக்கின்றது?

சிரியா பற்றி, ஏமன் மக்களை பற்றி கவலைபடுவோர் யாருமுண்டா? ஒருவருமில்லை, இப்படித்தான் ஈழநிலையும் இருந்தது, ஆனால் இந்தியா நுழைந்தது. அதனை விரட்டினார்கள் இந்தியா ஒதுங்கி கொண்டது.

இந்திய வழிகாட்டலில் ஈழமாகாணத்தை முன்னேற்றும் திட்டத்தில் கடுமையாக பத்மநாபா உழைத்துகொண்டிருக்கும் பொழுதுதான், பிரேமதாச அதிபர் ஆனார்.

எந்த சிங்கள ராணுவத்தை எதிர்த்து புலிகள் துப்பாக்கி தூக்கினார்களோ அந்த ராணுவத்தோடு இணைந்துகொண்டார்கள். (இதுதான் மேதகு தேசியதலைவரின் வழிகாட்டல்)

தனக்கு ஆகாதவர்கள் யாராயினும் ஒழித்துகட்டும் புலிகள், பத்மநாபாவிற்கு தற்கொலை போராளியை குண்டைகட்டி அனுப்பினார்கள். பத்மநாபாவை சந்திக்கும் முன் அவர் அகப்பட்டுகொண்டார், அவரை கொல்லும் நோக்குடன் துப்பாக்கி தூக்கியவர்களை தடுத்து சொன்னார் நாபா.

“நாம் உன்னை கொல்லமாட்டோம், நீனும் தமிழர், நானும் தமிழர். உங்கள் தலைவரை போல எமக்கு தலமை ஆசையோ, உயிர்பயமோ இல்லை. சிங்களனுடனான போரில் என் உயிர் போகட்டும், தமிழன் கையால் இருக்க கூடாது” என மன்னித்து உயிரோடு திருப்பி அனுப்பினார் நாபா.

புலிகளுக்கு மனசாட்சி என ஒன்று இருந்தால் இந்த இடத்தில் எப்படி சிந்தித்து இருப்பார்கள்?, ஒரு பெரும் தூக்கு தண்டனை கைதி கூட சிந்தித்து பார்க்கும் இடம் இது, பத்மநாபா இவ்வளவு மகத்தானவரா? என்று ,

புலிகளிடம் அதனை எதிர்பார்த்து என்ன செய்ய? சகதோழனின் கொலையில் தொடங்கிய இயக்கம் அது. பத்மநாபாவோ மனிதர்களை நேசித்த மானிடநேயமிக்க போராளி

(இதே புலிதலமை என்ன செய்தது? 15 ஆண்டுகாலம் தன்னோடு இருந்த, தனக்கு அடுத்த தலமையான மாத்தையா மீது பொய்யான குற்றசாட்டு சொல்லபட்டபொழுது ஒப்பற்ற அர்பணிப்பான போராளியான மாத்தையாவை 500 போராளிகளோடு சுட்டுகொன்று எரித்தது)

தமக்கு பயிற்சியும், பணமும், உணவும், இடமும் தந்த இந்தியாவினை புலிகள் மூர்க்கமாக எதிர்க்க ஆரம்பித்தார்கள், உலக நிலையும் மாற (ரஷ்யா சிதற்), இந்திய அரசியலும் மாற (விபி சிங்), தமிழகத்து அழுத்தமும் (திராவிட கழகங்கள், இன்று தமிழ்தேசியம் பேசுவோர் அன்று புலிகளுக்கு திராவிட இயக்கங்கள் செய்த உதவிகளை எல்லாம் மறந்துவிட்டார்கள்) கூட, இந்திய ராணுவம் வாபசானது.

இந்திய உடன்படிக்கை செல்லாது என பிரேமதாசா அறிவித்தார், இணைந்த வடக்கு கிழக்கு மறுபடியும் இரு மாகாணமாக பிரிக்கபட்டது. புலிகளும் அந்த ஆளும் தமிழ் வர்க்கமும் ஒப்பற்றமகிழ்ச்சி அடைந்தது.

இந்திய ராணுவம் 1500வீரர்களை இழந்து அவமானத்தோடு வெளியேறிய இந்தியா பத்மநாபாவோடு சென்னை வந்தது, எதிர்காலம் தெரியாத நிலையிலும், கம்யூனிச தாய்வீடான ரஷ்யா சிதறிய நிலையிலும் சொன்னார்.

“உண்மை சாகாது, வன்முறை வெல்லாது, ஒருகாலம் நிச்சயம் ஈழமக்கள் அமைதியாக வாழ்வார்கள்”

வரதராஜபெருமாளை ராஜஸ்தானில் தங்கவைத்த இந்தியா, பத்மநாபாவை வடஇந்தியாவில் தங்குமாறோ அல்லது வெளிநாட்டுக்கு செல்லுமாறோ கேட்க சென்னையிலே வாழதுணிந்தார்.

பாதுகாப்பான வாழ்க்கைத்தான் வாழ்ந்துகொண்டிருந்தார். ஆனால் 1500 இந்தியவீரர்களை இழந்தும் புலிகளுக்கு இந்தியாவில் தடை இல்லா காலமது.

அன்னை இந்திரா டெல்லியில் ஒரு அரசுவிழாவில் தன் அருகில் அமிர்தலிங்கத்தை அமரவைத்து “ஏதோ” சொல்லவந்ததை குறித்துகொண்டபுலிகள் பின்னாளில் அவரை கொன்றார்கள், அதுவும் அவர் வீட்டிற்கு சென்று, அவர் மனைவி கொடுத்த தேநீரை குடித்துவிட்டு அப்பெண்மணியின் தாலியை அறுத்தார்கள்,

அவர்கள் பயிற்சி அப்படி.

ஈழதேர்தலில் வெற்றிபெற்ற பத்மநாபாவை விடுவார்களா? ஈழம் என்றால் புலிகள், ஆட்சி என்றால் புலிகள், மக்களாவது? தேர்தலாவது? ஜனநாயகமாவது?

பிரபாகரனே சொன்னார் ஒரு பத்திரிகையாளரின் இப்படியான கேள்விக்கு “சுதந்திர தமிழ்ஈழத்தில் எம்மாதிரியான அரசு அமையும் என சொல்லமுடியுமா?”
மேதகு சொன்னார் “நிச்சயமாக சர்வாதிகார ஆட்சிதான்”
பின்னர் எப்படி பத்மநாபாவை விடுவார்கள்? ப‌லமுறை முயற்சித்தார்கள். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இறுதியாக பின்லேடனுக்கு கிடைத்த மூர்க்கமான மனிதாபிமானமே இல்லாத ரம்ஸி யூசுப் எனும் கோடூரமனம் படைத்தவரைபோல (பின்னாளில் பின்லேடன் ஒழிக்கபட்டதிற்கும் இவனே காரணம்) புலிகளுக்கும் ஒருவர் கிடைத்தார்.

இயக்கபெயர் பாக்கியநாதன், பத்மநாபாவை ஒழித்துகட்ட அவருக்கு இட்டபெயர் ரகுவரன். இரண்டு பெயர் உண்டே தவிர கண் ஒன்றே ஒன்றுதான்.

அவரேதான் அவர் பெயர் சாகும்பொழுது “ஒற்றைகண் சிவராசன்”.

எவ்வளவு தந்திரமாக பத்மநாபாவை கொன்றோழித்தார்கள் என்பது தனிபதிவாக காணவேண்டியது, அவ்வளவு தந்திரமும், நன்றிகெட்ட தனமும் நிறைந்த கொலை அது,

ஜூன் 19 1990ல் நடந்த கொலை அது.

சென்னையில் கலைஞர் அரசு பாதுகாப்பு கொடுக்காத நிலையிலும் இந்தியாவில் தலைமறைவாக‌ இருந்தாலும் தமிழகம் வந்த அகதிகளுடனும், தமிழக அரசியல்வாதிகளினுடம், நல்ல தொடர்பில் இருந்தார் பத்மநாபா. அகதிகள் பிரச்சினையில் முன்னின்று குறைகேட்டு களைய முயற்சிப்பார்.

கலைஞர் அப்பொழுதுதான் முதல்வராக கிட்டதட்ட 13 ஆண்டுகள் கழித்து அந்த நாற்காலியில் அமர்ந்திருந்த நேரம், ஆனால் பத்மநாபா அவருக்கு நண்பர் என்றாலும், புலிகளை தமிழகத்தில் சுதந்திரமாக உலவவிட்டுருந்தார் அதற்கு அந்த கட்சியில் அப்போது பலமாக இருந்தபலபேர் காரணம்.

புலிகளின் தகவல் தொடர்பு, ஆயுதம், பெட்ரோல், மருந்து என எல்லாம் டாஸ்மாக் சரக்குபோல மிக சரளமாக நடமாடிய நேரம். மத்திய அரசு புலிகளை முறைத்துகொண்டிருந்தபொழுதே கலைஞர் அரசு இதனை காணாமல்தான் விட்டு இருந்தது. கலைஞர் புலிகளுக்கு செய்த உதவி அப்படி.

வரதராஜபெருமாளுக்கு மத்திய உளவுதுறை கொடுத்தபாதுகாப்பில் கொஞ்சம்கூட பத்மநாபாவிற்கு தமிழகத்தில் கொடுக்கபடவில்லை, பத்மநாபா அதை விரும்பவும் இல்லை.

இந்நிலையில் சிவராசன் அதாவது ரகுவரன் எனும் பெயருடன் வந்த ஒற்றைக்கண் சிவராசனுக்கு பத்மநாபாவை கண்டுபிடிப்பதில் பெரும் சிக்கலை எதிர்கொண்டான், இன்னொரு காலில்லாத புலி உறுப்பினர் செயற்கைகால் பொருந்த ராஜஸ்தானுக்கு வந்ததாக சொல்லிகொண்டு வரதராஜ பெருமாளை தேடிகொண்டிருந்தார்.

சென்னையில் ஒரு இளம்புலி உறுப்பினரை அகதிகள் முகாமில் ஊடுருவ செய்தார் சிவராசன், அந்த புலியும் மிக பிரமாதமாக நடித்தது, அதாவது தான் அகதியாய் வந்ததாகவும், படிப்பை தொடரவிரும்புவதாகவும், கார்ல்மாக்ஸின் பேரனாக மாற இருப்பதாகவும் கண்டவர்கள் முன்னால் எல்லாம் புலம்பிற்று.

மிக பரிதாபகரமான தோற்றத்துடன் இருந்த அவரை சில ஈழ ஆதரவாளர்கள் கண்டு பத்மநாபா உனக்கு உதவுவார் என ஆறுதல் கூறி அழைத்துசென்றனர்.

வந்தவன் கோலத்தை கண்டு உணவிட்டார் நாபா, சென்னையின் மிக முக்கிய கல்லூரியில் செர்த்து படிக்கவும் வைத்து, செலவினை பத்மநாபாவின் இயக்கம் ஏற்றுகொள்ளும் எனவும் அறிவித்தார். அதோடு அந்த சந்திப்பு முடிந்தது.

“எம்மை ஆதரிக்காதவரெல்லாம் எமது எதிரிகள், அவர்களை உயிரோடு விடகூடாது, இரக்கம் கூடாது, கொல்… கொல்” என மனதை இறுக்கும் பயிற்சிபெற்ற புலிக்கு நன்றிஉணர்வு எப்படி இருக்கும்?

இரண்டாம் கட்ட தலைவர்களுடன் நெருங்கி பழகிய புலி, பத்மநாபா நெருங்கிய தோழர்களுடன் நடத்தபோகும் கூட்டம்பற்றி சிவராசனுக்கு சொல்லிவிட்டு பத்மநாபா குழுவினருடனே தேநீர் குடித்துகொண்டிருந்தது.

ஒரிசாவில் தங்கியிருந்த பத்மநாபா, சென்னைக்கு வரும் நேரத்தை அந்த புலிதான் காட்டிகொடுத்தது

மிக துல்லியமாக “துரோக” புலி கணித்துகொடுத்த நேரத்தில் கோடம்பாக்கத்திற்கு வெள்ளை மாருதிவேனில் பயங்கர ஆயுதங்களோடு வந்த சிவராசன் குழு வாட்ச்மேனை (அது அடுக்குமாடி வீடு) கொன்று உள்புகுந்து பத்மநாபா உள்பட 17 பேரை கண நேரத்தில் சுட்டுகொன்று மின்னல்வேகத்தில் வெளியேறியது.

பெரும் கனவுகளோடு லண்டன் உல்லாச வாழ்க்கையை விட்டு ஈழத்திற்கு போராட வந்த அந்த மேதை கோடம்பாக்கத்தில் பிணமானார், அவர் சாம்பல் கூட அவர் நேசித்த ஈழத்தில் பரவ இறைவன் அனுமதிக்கவில்லை.

அவசரமாக வேதாரண்யம் சென்று தப்பிக்க சென்ற சிவராசன் மறித்த‌ 3 போலிசாரை தாக்கி பின் கைதுசெய்யபட்டதும், உயர் அரசியல் அழுத்தங்களால் அவன் விடுவிக்கபட்டதாகவும் அதிகாரபூர்வமில்லா தகவல் உண்டு.

புலிகளின் தமிழ்க நடுமாட்டத்தை கடும் வெறுப்புடன் கண்காணித்த மத்திய அரசு, சட்டம் ஒழுங்கை காப்பாற்றாத தமிழக‌ அரசு என அறிவித்து கலைஞர் அரசை டிஸ்மிஸ் செய்தது.

எம்.ஜி.ஆர் எனும் பெரும் சக்திக்குபின் அப்பொழுதுதான் ஆட்சிக்கு வந்திருந்த கலைஞருக்கு எப்படி இருந்திருக்கும்? மனிதர் அன்றே வெறுத்துவிட்டார், இவ்வளவிற்கு பத்மநாபா படுகொலை வழக்கு என்று ஒன்றோ அல்லது விசாரணை என ஒன்றோ கிடையாது.

அவ்வளவு சலுகை புலிகளுக்கு, வந்தார்கள் சுட்டார்கள், சென்றார்கள்.

இறந்ததில் 3 சென்னை தமிழரும் உண்டு.
பராரியாய் பாமரகோலத்தில் படிப்பிற்காய் வந்ததாக பத்மநாபாவை காட்டிகொடுத்த புலி பின் புலிகள் இயக்கத்தில் கவுரவிக்கபட்டது, சிவராசன் பெரும் ஹீரோவாக கொண்டாடபட்டார்.

கொன்றவர்கள் புலிகள்தான் என பலர் சொன்னபொழுதும் வழக்கம் போல புலிதலமை சொன்னது “எமது விடுதலையின் தடைகல் அகற்றபட்டது”

ஈழத்தின் படிக்கல்லான பத்மநாபாவை தடைக்கல் என வர்ணித்த புலிகள் அதன் பிறகும் திருந்தவில்லை, மிக சரியாக 11 மாதத்தில் ராஜிவ்காந்தியை வீழ்த்தினார்கள்.
தமிழகம் அவர்கள் விரும்பியவர்களை கொல்லும் காடாக மாறிற்று, பத்மநாபா கொலையோடு தமிழகத்தில் புலிகளை ஓடுக்கியிருந்தால் ராஜிவ் கொல்லபட்டிருப்பதை தடுத்திருக்கலாம் என்பதும் தியரி, என்பது உண்மை.

புலிகள் தமிழக மண்ணில் எந்த கொலையினையும் செய்வார்கள் என தன் உயிர்விட்டு இந்தியாவினை எச்சரித்தவர் பத்மநாபா, அவரின் நன்றிகடன் அப்படி இருந்திருக்கின்றது

பத்மநாபா கொலையில் ஒரு தடையோ கண்டனமோ பெறாத தைரியம்தான் புலிகளை ராஜிவ் வரை நீளச்செய்தது, எக்கொலை செய்தாலும் தமிழக அரசு நம்மை காக்கும் என திமிராக நம்ப செய்தது.

பத்மநாபாவின் இரத்தபழியில் கலைஞருக்கும் பங்கு உண்டு, உரிய பாதுகாவல் அளிக்கபட்டிருக்குமானால் அவர் கொல்லபட்டிருக்க மாட்டார்

ஆனால் பல காரணங்களுக்காக கலைஞர் புலிகளை பகைக்க விரும்பவில்லை, உன்னால் புலிகளை எதிர்கொள்ள முடியாவிட்டால் எங்காவது போ, என்னை தொல்லைபடுத்தாதே என்ற அணுகுமுறைதான் கலைஞரிடம் இருந்தது

அவர்களின் கொடும் இயல்பு அறியாமல் புலிகளுக்காக கலைஞர் செய்த இந்த பாதகம் தான், கலைஞரின் அரசு டிஸ்மிஸ் செய்ய காரணமானது

அன்றே புலிகளை கை கழுவினார் கலைஞர், ஆனால் புலிகளோ வைகோவினை வைத்து நுழையலாம் என தப்புகணக்கு போட்டுகொண்டிருந்தனர், கலைஞரை எல்லாம் ஒரு மனிதனாகவே எண்ணவில்லை

ராஜிவ் கொலை வழக்கு தீவிரமாக விசாரிக்கபடும் பொழுதுதான், பத்மநாபா கொலை உண்மையும் வெளிவந்தது. ஆனால் 1990ல் “ரா” முழு பத்மநாபா கொலை சிவராசன் சரித்திரத்தையே தெரிந்து வைத்திருந்ததை பின்னாளில் சிபிஐ இடம் கூடம் தெரிவிக்கவில்லை, இதுதான் “ரா”.

தெய்வம் நின்று கொல்லும் அல்லவா?

அசட்டு தைரியத்தில், என்ன ஆட்டம் போட்டாலும் தமிழகம் பின்வரும் என்ற திமிரில் சிவராசன் ராஜிவை வீழ்த்த, மத்திய போலிசார் மிக திறமையாக உண்மைய கண்டறிந்தனர், சிவராசனும் தற்கொலை செய்துகொண்டான்,

பெரும் கொலைகாரனான அவன் ராஜிவ்கொலைக்குபின்னும் ராஜஸ்தானில் வரதராஜ பெருமாளை கொல்லும் திட்டத்தோடுதான் வடக்குநோக்கி நகர்ந்தான், அவ்வளவு வெறி.

நளியின் வாழ்க்கை, பேரரிவாளனின் பரிதாபம், அன்னை லூர்தம்மாளின் தீரா சோகம், தமிழக முழுக்க தி.க பிரமுகர்களுக்கு இன்றும் மறைமுக கண்காணிப்பு என எல்லா சோகங்களுக்கும் காரணகர்த்தா இந்த சிவராசன்.

ராஜிவ் கொலையோடு கொல்லபட்ட ஹரிபாபு, நெல்லை மாவட்ட‌ ஆ.திருமலாபுரத்துக்காரர் இன்ஸ்பெக்டர் ராஜகுரு குடும்பம் வரை இவனால் பாதிக்கபட்டது, பெங்களூரில் தனக்கு இடமளித்த ரங்கநாத்தின் குடும்பம் நாசமானது வரை இவரது சாதனை அல்லது “போராட்டம்” நீளும்.

சிவராசனாலோ அல்லது அந்த இயக்கத்தாலோ யாராவது ஒருவர் வாழ்ந்தார்களா? அல்லது வாழவைக்கபட்டார்களா? (தமிழக அரசியல்வாதிகள் திடீர் தமிழ்போராளிகளை விடுங்கள்) என்றால் இல்லை, நிச்சயம் இல்லை. ஆதரித்த அனைவரும் காலி, இதுதான் அவர்கள் சித்தாந்தம்.

அவர்களுக்கு ஆக்க தெரியாது, அழிக்கமட்டும் தெரியும்.

ஒவ்வொரு படுகொலையின் பொழுதும் “தடைகல் அகற்றம்” என சொல்லும் புலிகள், ராஜிவ் கொலைக்கு அதுவும் சொல்லவில்லை. இறுதிவரை கனத்த மவுனம்.

இப்படியாக யாரும் எமக்கு வேண்டாம், சகலரையும் எதிர்த்து ஈழநாடு அடைவோம் என சகட்டுமேனிக்கு கொலைகளை புலிகள் புரிந்தனர்.

முன்பு உயிர்காத்த பத்மநாபா, வடமராட்சியில் உயிர்காத்த ராஜிவ், மணலாற்றில் உயிர்காத்த பிரேமதாசா என வரிசைகட்டி துரோகதனமாக கொன்றுவிட்டு அவர்களுக்கு இவர்கள் வைத்தபெயர் “துரோகிகள்”.

சபாரத்தினம், ராஜிவ்,பத்மநாபா,பிரேமதாசா என எல்லோரையும் வரிசைகட்டி கொன்றுவிட்ட பின்னும் புலிகளுக்கு 20 ஆண்டுகள் காலம் இருந்தது? என்ன சாதித்தார்கள்? ஒன்றுமில்லை.

“நீங்கள் ஒரு முடிவிற்கும் வரமாட்டீர்கள், நாட்டை உருவாக்கி துப்பாக்கி குழுவிடம் கொடுப்பது எவ்வளவு பெரும் விபரீதம், உலகம் இதனை ஒப்பாது, அரசியலுக்கு திரும்புங்கள்” என்று 23 வருடங்களுக்கு முன்பே இந்தியா சொன்னதன் விளைவு பத்மநாபா,ராஜிவ் படுகொலை.

காலசூழல் மாறுவதை கூட கணிக்காமல் முள்ளிவாய்க்காலில் முடங்கி கடைசி நொடியில் ஆயுதங்களை மவுனித்து சிங்களரிடம் சரணடைய சென்றார்கள்.

இவர்கள் தந்திரமாக பத்மநாபாவை சாய்த்ததை போல சிங்களம் அவர்களை நயவஞ்சகமாக சரித்து இயக்க கதையை முடித்தது,

ஆனால் பத்மநாபா கொலையில் அதாவது அவருக்கு பாதுகாப்பு கொடுக்காமல், கொலை குற்றவாளிகளை கண்டும் காணாமல் விட்டு செய்த பாவம் பின்னாளில் முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் கலைஞர் மீது பெரும் பழிச்சுமையாக விழுந்து கிடக்கின்றது, இதுதான் விசித்திரம்.

பத்மநாபாவின் நினைவுநாள் இன்று உண்மையான மானிடநேயமிக்க தமிழுணர்வாளருக்கு “ஈழதியாகிகள்” தினம். அந்தோ பரிதாபம் இந்த உண்மையான போராளிக்கு யாரும் அஞ்சலி செலுத்தமாட்டார்கள், கடல்கரையில் மெழுகுவர்த்தி பிடிக்கமாட்டார்கள், ஊர்வலம் செல்லமாட்டார்கள்,

அவர் கொல்லபட்ட வீடு சென்னையில்தானே இருக்கின்றது அந்த திசையை நோக்கி ஒரு ஊதுபத்திகூட கொழுத்தமாட்டார்கள்.

சமீபத்தில் தமிழனத்திற்கு வழிகாட்டி என ஹிட்லர் முதல் திப்புசுல்தான் வரை சம்பந்தமே இல்லாமல் சகட்டுமேனிக்கு பேனர் வைத்திருந்தார்கள்.

ஒருவேளை தமிழர்களுக்கு வழிகாட்டியருக்கு ஒரு பேனர் வைக்கவேண்டுமென்றால் நிச்சயம் பத்மநாபாவிற்குத்தான் வைத்திருக்கவேண்டும்.

அவர் எப்படி புலிகளோடு சேர்ந்து தற்கொலைகுண்டு, சயனைடு கடிக்காமல் அல்லது வெள்ளைகொடி பிடிக்காமல் மனிதநேயம், மக்கள் வாழ்வு என பேசி மக்களை திரட்டலாம்.

துப்பாக்கி,சயனைடு,கன்னிவெடி,தற்கொலை பெல்ட் இறுதியாக வெள்ளைகொடி .

இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் எப்படி தமிழரின் வழிகாட்டியாக இருக்கமுடியும்? முடியவே முடியாது. சிந்திக்க தெரிந்த தமிழன், சாகதீர்கள் அல்லது கொல்லாதீர்கள் என சொல்லும் தமிழன் எல்லாம் “துரோகி”.

அப்படி ஒரு போராளி இருந்தான், ஒருங்கிணைந்த ஈழமாநிலத்தை 1 வருடம் ஜனநாயக “மக்கள் முதல்வராக” ஆண்டான் என்பது கூட நினைவு கூற ஆளில்லாத இனமான தமிழகமாக இது ஆகிவிட்டது.

பத்மநாபா கொல்லபட்டபொழுது தனக்கும் நாள்குறிக்கபட்டதை அறியா ராஜிவ்காந்தி இப்படி சொன்னார் “பத்மநாபாவும் எனது தாயார் இந்திராகாந்தியும் ஒரே நாளில் அதாவது நவம்பர் 19ம் தேதி பிறந்தவர்கள், இருவரும் ஈழமக்கள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தவர்கள், அவர்களை வாழவைக்க எண்ணியவர்கள்”

மிக நிதர்சனமான உண்மை இது.

போராளிகளில் பத்மநாபாவையும் தவிர உண்மையாக ஈழமக்களை நேசித்தவர்கள் யாருமில்லை.

அப்படி நேசித்திருந்தால் முள்ளிவாய்க்கால், இனப்படுகொலை, கடலில் ஈழதமிழர் படகு, வடக்கில் ராணுவ குவியல் போன்ற வார்த்தைகளுக்கும் அது கொடுத்த கொடுத்துகொண்டிருக்கும் எண்ணற்ற வலிகளுக்கு இடமிருந்திருக்காது.

தன்னலம் துறந்த மானுடநேயமிக்க போராளிகள் ஒருநாளும் மறைவதில்லை. உறுதியாக சொல்லலாம் அவர் “ஈழத்து சேகுவாரா”.

இந்த தியாகிகள் நாளில் அவருக்கான வீரவணக்கத்தை சிந்தனையும், மானிட நேயமுள்ள தமிழர்கள் உலகெல்லாம் தெரிவித்துகொண்டிருக்கின்றார்கள்

பத்மநாபாவிற்கு அழிவே இல்லை, அவர் இருந்திருந்தால் முள்ளிவாய்க்காலில் பிரபாகரனை காக்க ஓடியிருப்பார் அவர் இயல்பு அப்படி

கடைசி நொடியில் தான் செய்த தவறுகளை பிரபாகரன் நினைத்திருந்தால் நிச்சயம் பத்மநாபாவின் முகமும் அவனுக்கு வந்து போயிருக்கும்.

பிரபாகரன் பாதை ஒருநாளும் வெற்றிபெறாது, ஆனால் பத்மநாமாபாவின் பாதையில் தான் ஈழவிடிவு இருக்கின்றது

என்றாவது ஒருநாள் அது நடக்கும், பத்மநாபாவின் ரத்தம் வீணாகாது

சென்னை மெரீனாவில் ஈழத்தில் செத்த 1500 அமைதிபடை வீரர்களுக்கு நினைவுசின்னம் அமைக்கும் நாளில், சென்னை சூளமேட்டில் பத்மநாபா கொல்லபட்ட இடத்தில் அவருக்கும் ஒரு நினைவு சின்னம் அமைக்கபட வேண்டும்

காலம் அதனை நிச்சயம் அமைக்கும்…

(தொடரும்..).

Read more...

சரியான வேட்பாளரை சரியான நேரத்தில் தெரிவிப்போம் என்கின்றார் மஹிந்தர்.

எதிர்வரும் டிசம்பர் 21ம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படும் என சுயாதீன தேர்தல்கள் அணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்து வருகின்றார்.

அதேநேரம் எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மஹிந்த தரப்பு வேட்பாளர்கள் யார் என்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை இன்னும் தெரிவு செய்யவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

நேற்று மாலை கொழும்பில் வைத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

பலர் பல்வேறு விதமாக ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாக கருத்து தெரிவித்த போதிலும், இன்னும் உறுதியாக வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்யவில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

வேட்பாளர் சம்பந்தமாக சரியான தருணத்தில் தெரிவிப்பதாகவும், எவ்வாறாயினும் முன்நிறுத்தப்படும் வேட்பாளர் சந்தேகமின்றி ஜெயிப்பார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

Read more...

இராஜனாமா நாடகம் முடிவுற்றது. இருவர் பதவியேற்பு! கைவிடப்படும் றிசார்ட் மற்றும் ஹிஸ்புல்லா.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் முஸ்லிம் அமைச்சர்கள் யாவரும் பதவிகளை இராஜனாமா செய்திருந்தனர். மூன்று முஸ்லி;ம் அரசியல்வாதிகள் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர்கள் பதவிகளை இராஜனாமா செய்யவேண்டும் என அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டபோது முஸ்லிம் அமைச்சர்கள் யாவரும் இராஜனாமா செய்திருந்தனர் என்பது யாவரும் அறிந்த விடயம்.

அவ்வாறு இராஜனாமா செய்து கொண்டவர்கள் தற்போது பதவிகளை மீளப்பெற ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசீம் மற்றும் அப்துல் காலிம் ஆகியோரே இவ்வாறு மீண்டும் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இவர்கள் ஏலவே பதவி வகித்துவந்த அமைச்சுப்பதவிகளையே மீண்டும் பெற்றுள்ளனர். அதன்பிரகாரம் கபீர் ஹாசிம் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராகவும் மற்றும் அப்துல் ஹலீம் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.

அமைச்சுப் பதவிகளை மீண்டும் ஏற்பது தொடர்பில் நேற்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடல் எவ்வித முடிவுகளும் எட்டப்படாது முடிவடைந்த நிலையிலேயே இப்பதவி ஏற்பு நிகழ்ந்துள்ளது. இதனால் மேலும் முஸ்லிம் அரசியல் வட்டாரங்களில் குழப்பங்கள் தோன்றலாம் என்றும் றிசார்ட் பதுயுதீன் மற்றும் ஹிஸ்புல்லா போன்றோர் கைவிடப்படலாம் எனவும் அறியக்கிடைக்கின்றது.

Read more...

மூன்றாவது நாளாக தொடர்கின்றது உண்ணாவிரதம்! கோடீஸ்வரன் கருணாவும் களத்தில்.

கல்முனை வடக்கு என்று அழைக்கப்படுகின்ற பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என்ற கோரிகைக்கையை முன்நிறுத்தி கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு, ஹிந்து மத பூசகர்கள், தேவாலய பாதிரியார்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஆகியோர் உண்ணாவிரம் இருந்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த உண்ணா விரதத்தில் கலந்து கொள்வதற்கும் ஆதரவு தெரிவிப்பதற்குமாக தற்போது முன்னாள் பிரதி அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பா.உ கோடீஸ்வரன் ஆகியோர் இணைந்து கொண்டுள்ளனர்.

மேலும் பிரதேச சமூக நல அமைப்புக்களின் சில பிரதிநிதிகள் கல்முனை மாநகர சபையின் பல உறுப்பினர்கள,; பொது மக்கள் என இன்று குறித்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

நேற்று போராட்டக்காரர்களுடன் அம்பாறை மாவட்ட அரச அதிபர், மேலதிக அரச அதிபர், கல்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் அதிசயராஜ் மற்றும் பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துரையாடினார்கள். 'எமது கோரிக்கைக்குத் தீர்வு கிடைக்கவில்லையாயின் இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியைத் தருவோம்' என்று போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

எது எவ்வாறாயினும் குறித்த பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் நபரொவரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றின் தீர்ப்பு வெளிவரும்வரை தரமுயர்த்தல் செயற்பாடு நிகழமுடியாத நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரதப்போராட்டடமானது அர்த்தமற்றதாகவே முடிவுறும் என சட்ட மற்றும் நிர்வாக சேவை நிபுணர்களின் கருத்தாகவுள்ளது.





Read more...

யாழில் பொது வீதியை அடைத்து கட்டடம் அமைக்கும் வர்த்தகர். வாய் கண் மூடி நிற்கிறது நகர சபை. மக்கள் வீதிக்கு!

யாழ்.மாநகரசபைக்கு சொந்தமான சுமார் 100 மீற்றர் நீளமான பொது பயன்பாட்டு வீதியை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டியிருக்கும் நிலையில், இந்த விடயம் தொடர்பாக யாழ்.மாநகரசபை எந்த நடவடிக்கையும் எடுக்காமை குறித்து வர்த்தகர்களும், பொதுமக்களும் கண்டித்துள்ளனர். மேலும் 10 வருடங்களாக குறித்த வீதி அபகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக சுட்டிக்காட்டியும் மாநகர

சபை நடவடிக்கை எடுக்காததுடன், தொடர்ந்தும் மெத்தனப்போக்கை கடைப்பிடித்து வருகின்றமையை கண்டித்து எதிர்வரும் சனிக்கிழமை மக்கள் போராட்டத்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் மேற்படி வீதி அபகரிக்கப்பட்டமை தொடர்பாக தொடர்ந்து பேசிவரும் யாழ்.மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், அத்திப்பட்டி என்ற கிராமம் காணாமல்போனதாக திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். அதேபோல் வீதி ஒன்று காணாமல்போயுள்ளது.

காங்கேசன்துறை வீதியையும் செம்மாதெரு ஜிம்மா பள்ளிவாசலுக்கும் இடைப்பட்ட 100 மீற்றர் நீளமான குறித்த வீதி யாழ்.நகரில் உள்ள புடவை வர்த்தகர் ஒருவரினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. அந்தப்பகுதியில் வீதி இருந்ததா? எனவும் சிலர் கேட்கிறார்கள். ஆனால் அதற்கு ஆதாரங்கள் உள்ளது. குறித்த வீதி யாழ்.மாநகரசபையின் வரைபடத்தில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

மேலும் 2016 ஆம் ஆண்டு குறித்த பொது வீதிக்கு அருகில் கட்டடம் கட்டுவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை வழங்கிய அனுமதியில் பொது வீதிக்கு அருகில் என்பது மிக தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.
எனவே இதனை விட வேறு ஆதாரங்கள் தேவையில்லை. மேலும் குறித்த வீதி சுமார் 100 வருடங்களுக்கு மேலாக மக்களால் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது. அதற்கு இங்குள்ள வர்த்தகர்கள் சாட்சியாக உள்ளனர். அதேபோல் 1997 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலையில், இராணுவம் தமது பாதுகாப்பு தேவைகளுக்காக குறித்த பொது வீதியை மூடியது. பின்னர் அவர்களிடமிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் தனியார் ஒருவர் குறித்த வீதிக்கு கதவு பொருத்தி ஆக்கிரமிக்க தொடங்கினார். அது படிப்படியாக தொடர்ந்துவந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு யாழ்.மாநகரசபை ஆணையாளருக்கு பொதுமக்களும், வர்த்தகர்களும் இணைந்து எழுத்து மூலம் குறித்த வீதி ஆக்கிரமிக்கப் பட்டமை தொடர்பாக தெரியப்படுத்தியிருக்கின்றனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இதற்கிடையில் வீதியை அபகரித்தவர்கள் மலசலகூடங்களை கட்டியதுடன், மின் பிறப்பாக்கி ஒன்றையும் வீதியில் பொருத்திவிட்டனர்.

இந்நிலையில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் வீதியை மக்களிடம் பெற்றுக் கொடுங்கள் என கேட்டபோதும் தற்போதைய மாநகரசபையும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் இந்த வருடம் 5 ஆம் மாதம் 29 ஆம் திகதி யாழ்.வர்த்தகர் சங்கம் யாழ்.மாநகரசபைக்கு மீண்டும் எழுத்து மூலம் கடிதம் ஒன்றை எழுதி வீதியை மக்கள் பாவனைக்கு திறந்து விடுங்கள் என கேட்டிருந்தனர். அதற்கும் நடவடிக்கை எடுக்காத மாநகரசபை நடவடிக்கை வேடிக்கையாக உள்ளது. நாங்கள் கேட்கிறோம் மாநகர சபையின் கட்டளை சட்டம் சாமானிய மக்களுக்கா? வசதி படைத்த வர்த்தகர்களுக்கு கிடையாதா? சாமானிய மக்கள் ஒரு அங்குலம் வீதியை ஆக்கிரமித்தாலும் நீதிமன்றம் வரை செல்லும் மாநகரசபை இங்கே மௌனமாக இருப்பது ஏன்? இந்த வீதி அபகரிப்புக்குப் பின்னால் அரசியல் சூட்சுமங்கள், சிலருடைய சுயலாபங்கள் நிறைந்திருக்கின்றது.
யாழ்.மாநகரசபைக்கு இன்றளவும் வீதியை பூட்டியது யார் என்பது தெரியாது. பாதையில் கட்டடங்களை கட்ட அனுமதி கொடுத்தது யார் என்பது தெரியாது. எனவே சனிக்கிழமை காலை குறித்த வீதியின் முன் பான பாரிய போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

அதில் வர்த்தகர்கள், பொதுமக்கள் பங்கெடுக்கவேண்டும் என்றார்.

தொடர்ந்து வியாபாரிகள் சிலரிடம் குறித்த வீதி தொடர்பாக கேட்டபோது 100 வருடங்களுக்கும் மேலாக குறித்த வீதி மக்களால் பயன்படுத்தப்பட்டது. அந்த வீதியை வர்த்தகர் ஒரு வர் அபகரித்தபோதே யாழ்.மாநகரசபைக்கு அதனை நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம். ஆனால் அவர்கள் அதனை கவனத்தில் எடுக்கவில்லை என்றார்.

இதேவேளை குறித்த வீதியை நேரில் பார்வையிட்டு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அங்கு நின்றிருந்த சிலர் தொலைபேசியில் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டிருந்தனர்.

மேலும் குறித்த வீதியில் இப்போதும் கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிந்தது.


Read more...

சைவர்களையும் புத்தர்களையும் மோத விட சூழ்ச்சி செய்கின்றார் செல்வம் அடைக்கலநாதன். மறவன் புலவு சச்சிதானந்தன்

கன்னியா மற்றும் செம்மலை நீராவியடி புத்தர் சிலைகளை ஆக்கிரமிப்புகளை அகற்ற நாடாளுமன்ற உறுப்பினர் வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரர் உதவுவாரா என மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வவுனியாவில் முந்தையநாள் நடந்த கூட்டம் ஒன்றில் கேட்டுள்ளார்.

சைவர்களையும் புத்தர்களையும் மோத விடும் சூழ்ச்சியில் கத்தோலிக்கர் காலம் காலமாக இலங்கையில் செயற்பட்டு வந்தனர் என்பதைச் செல்வம் அடைக்கலநாதன் இந்தத் தலைமுறையிலும் எடுத்துக்காட்டியுள்ளார்

அவர் வவுனியாக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த அதேவேளை நானாட்டான் பிரிவில் அருவி ஆற்றங்கரையில் பாழடைந்த சைவக் கோயிலுக்கு அருகில் சட்டத்தை மீறித் தூண் அமைத்து மரியாளுக்கு உருவச்சிலையை திடீரெனச் சாலையோரத்தில் அவரது ஆதரவாளர்கள் உருவாக்கியுள்ளார்கள்.

திருக்கேதீச்சரக் கற் கோயிலை உடைத்து மன்னார்க் கோட்டையையும் ஊர்காவற்துறை கடல் கோட்டையையும் கட்டிய போர்த்துக்கேயர் காலம் தொடக்கம் நேற்று அருவி ஆற்றங் கரையில் மரியாள் சிலையை வைத்த காலம் வரை மன்னார் மாவட்டம் முழுவதையும் கத்தோலிக்க மயமாக்கும் முயற்சியில் செல்வம் அடைக்கலநாதனின் ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருவதை அவர் மிகத் திறமையாக மறைத்து வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரர் மீது பாய்ந்துள்ளார்.

அடைக்கலநாதன் அவர்களே, திருக்கேதீச்சரம் கோயில் வாயிலில் மாந்தைச் சந்தியில் உலூர்தம்மாள் தேவாலயத்தைக் கட்ட நீங்கள் ஆதரவு கொடுத்ததை மறந்து விட்டீர்களா? சைவர்களின் மனத்தில் ஆறாப் புண் தந்த இந்த நிகழ்வை நீங்கள் மறைக்க முயல்கிறீர்களா?

அடைக்கலநாதன் அவர்களே கட்டையடம்பன் அரசுப் பள்ளியில் கத்தோலிக்க அருள் நங்கை முதல்வராக இருந்து கொண்டு சைவப் பிள்ளைகள் நெற்றியில் நீறும் பொட்டும் அணியக்கூடாது பூ வைக்கக்கூடாது என்று அராஜகமாக ஆணையிட்டதை அதற்கு நீங்கள் ஆதரவு கொடுத்ததை மறைக்க முயல்கிறீர்களா?

அடைக்கலநாதன் அவர்களே, மூன்றாம் பிட்டியில் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக உங்கள் ஆதரவுடன் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாதையை மறித்து முள்கம்பி அமைத்தை நீங்கள் மறைக்க முயல்கிறீர்களா?

அடைக்கலநாதன் அவர்களே, முழுக்க முழுக்கச் சைவர்கள் வாழும் வெள்ளாங்குளம் கிராமத்தில் உங்கள் ஆதரவாளரான தேவன்பிட்டிக் கத்தோலிக்கர் எட்டு அடி உயரச் சிலுவையை நிறுவியதை நீங்கள் மறைக்க முயல்கிறீர்களா?

அடைக்கலநாதன் அவர்களே, வண்ணான்குளம் கிராமத்தில் பெரும்பான்மையாகச் சைவர்கள் வாழும் அவ்வூரில் சைவர்கள் செல்லும் கோயில்களுக்கு வழியெங்கும் தடைவிதிக்கும் உங்கள் ஆதரவாளர்களை மறந்தீர்களா?

அடைக்கலநாதன் அவர்களே, சிலாவத்துறையில் புதுக்குடியிருப்பில் அரச காணியில் எவ்வித உரிமமும் இன்றிக் கத்தோலிக்கக் கோயில் ஒன்றைப் பாதிரியார் கட்டியதும் அல்லாமல் அங்கு வாழ்கின்ற சைவர்களை மிரட்டுவதற்குக் கத்தோலிக்கர்களை அழைத்துச்சென்றாரே அப் பாதிரியாரும் கத்தோலிக்கர்களும் உங்கள் ஆதரவாளர்கள் அல்லவா?

அடைக்கலநாதன் அவர்களே, நாடாளுமன்றத்தில் இறைத் தூதர் இயேசுவைக் கடவுள் என்றீர்கள் இறைவன் என்றீர்கள் உங்கள் அறியாமையின் உச்சத்தைத் தமிழ் மக்கள் சார்பில் உலகத்துக்குக் கூறி தமிழ் மக்களை வெட்கத்துக்கு உள்ளாக்கினார்கள். உங்களுக்கு வாக்களித்த கத்தோலிக்க மக்களுக்கு துரோகம் இழைத்தீர்கள்.

வணக்கத்துக்குரிய அத்துரலியே இரத்தின தேரர் வன்னியின் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல வன்னியில் வாழ்கின்ற சைவ மக்களின் வாக்குகளைப் பெற்று வென்றவரும் அல்ல

அடைக்கலநாதன் அவர்களே, நீங்களோ வன்னியில் உள்ள சிறப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள சைவர்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர்.

அடைக்கலநாதன் அவர்களே, வெற்றி பெற்றபின் உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மன்னார் மாவட்டச் சைவர்களுக்கு நீங்கள் இழைத்து வரும் கொடுமைகளை அநீதிகளை குற்றங்களை தீமைகளை அடுக்கடுக்காகச் சொல்கிறார்கள்.

என் செய்தோம் என் செய்தோம் என உங்களுக்கு வாக்களித்த தம் தவறை உணர்ந்து தலையில் அடித்து அழுகிறார்கள்.

அடைக்கலநாதன் அவர்களே, உச்சமாக, பல்லாயிரம் ஆண்டு பழமையான திருக்கேதீச்சர கோயில் வீதி முகப்பில் வரவேற்பு வளவை உடைத்த பாதிரி கோலத்தில் வந்த மார்க்கசுவுக்கும் குண்டர்களுக்கும் நீங்கள் மறைமுகமாக அளித்த ஆதரவு உங்கள் கட்சியைச் சேர்ந்தவர் பிணையில் எடுத்த சோக நிகழ்வு மன்னார் மாவட்டச் சைவர்களை உங்களுக்கு வாக்களித்த சைவர்களைத் துயரத்தில் சோகத்தில் துன்பத்தில் மீறாத அழுகையில் ஆழ்த்தியுள்ளது.

அடைக்கலநாதன் அவர்களே, வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரரைச் சுட்டும் உங்கள் விரலுக்காக மடித்த உங்களையே சுட்டும் மற்ற மூன்று விரல்களையும் மறைக்காதீர்கள்.

அடைக்கலநாதன் அவர்களே, அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என 1800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய தமிழ் வரிகளை மறக்காதீர்கள். சைவருக்கும் புத்தருக்கும் இடையே தொடர்ந்தும் பிளவை ஏற்படுத்தலாம் குளிர் காயலாம் என்ற உங்களின் பகற் கனவு இனிமேல் ஒரு போதும் பலிக்காது.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com