Monday, June 3, 2019

பசில் ராஜபக்சவின் திவிநெகும வை ரணில் கம்பரெலிய வாக திணிக்க அதை நடைமுறைப்படுத்தும். த.தே.கூ !

படிப்பது சிவபுராணம்: இடிப்பது சிவன் கோவில்' என்பது தான் பல அரசியல்வாதிகளினதும் அரசியல் கட்சிகளினதும் போக்கு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செய்கின்ற காரியங்களைப் பார்க்கும்போது இந்தப் பேச்சு மொழி தான் நினைவுக்கு வருகின்றது.

மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பினதும் ஈழத் தமிழர்களினதும் நிலைப் பாடு. பேச்சுக்குப் பேச்சு, மூச்சுக்கு மூச்சு இதைத்தான் கூட்டமைப்பு வலியுறுத்தி வந்தது. ஆனால் தமிழர்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் இதன் படி ஒழுகுகின்றார்களா?

மாகாணங்களுக்கு இருக்கும் அதிகாரங்களை மேலும் வெட்டிக் குறைத்து, அவற்றை மத்திய அரசு பிடுங்குவதற்காக மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் திவிநெகும என்ற பெயரில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டமை பலருக்கும் நினைவிருக்கலாம். இதற்கு எதிராகக் கூட்டமைப்பினர் உயர்நீதிமன்றுக்குச் சென்றனர். மாகாண சபைகளின் - குறிப்பாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாணா சபையின் -அனுமதியோ, இலாக்கமோ இன்றி இப்படி மாகாணங்களுக்கு 13ஆவது அரசமைப்புத் திருத்தம் மூலம் வழங்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கலை மத்திய அரசு திரும்பப் பிடுங்க முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் கூட்டமைப்பு வாதிட்டது. கூட்டமைப்பு சார்பில் மாவை சேனாதிராசா எம்.பியே இந்த வழக்கைத் தொடுத்தார். சுமந்திரன் எம். பியும் தமிழர் தரப்பு வாதத்தைமுன்வைத்தார்.

அந்த வாதத்துக்குச் சார்பாகத் தீர்ப்பளித்தமை காரணமாகமாகவே அப்போது உயர்நீதிமன்றில் பிரதம நீதியரசராக இருந்து அந்தத்தீர்ப்பை வழங்கிய நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஒரேநாளில் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து பலவந்தமாகக் கலைக்கப்பட்டார்.

இப்படி எல்லாம் மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிரும்படி வற்புறுத்தி நின்ற தமிழ்க் கூட்டமைப்பு இன்று என்ன செய்கின்றது?

'கம்பெரலிய', 'பனை நிதியம்' எல்லாம் எத்தகையவை?

மத்திய அரசு முன்னெடுக்கும் திட்டங்களுக்கு தாங்கள் பெயருக்கு 'இடைத்தரகர்களாக' இருந்துகொண்டு அவற்றுக்கு முண்டுகொடுக்கும் வேலையைத்தான் அவர்கள் செய்கின்றார்கள்.

இந்த இரு வழிவகைகள் ஊடான - கம்பெரலிய மற்றும் பனைநிதியம் ஆகியன மூலமான - திட்டங்களை செயற் படுத்தும் உள்ளூர் முகவர்கள் யார்? மத்திய அரசின் கீழ் நேரடியாகஇயங்கும் பிரதேச செயலகங்கள்தான்.உண்மையில் இந்த நிதியும், திட்டங்களும் மாகாணசபையின் கட்டமைப்புக்கள் ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டியவை.

இன்று வேண்டுமானால் வடக்கு மாகாணசபை ஜனாபதியினால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் கைகளில் இருக்கலாம்.ஆனால், அதுதான் அதிகாரப் பரவலாக்கல் அலகு. அதன் ஊடாகத்தான்இந்த இரு கட்டமைப்புகளின் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதே முறை.

அப்படி இல்லாமல், அத்தகைய நடவடிக்கையை மஹிந்தரின் முன்னைய அரசு முன்னெடுத்த போது நாம் அதை முழுமையாக எதிர்த்தோம். ஆனால், அதையே இப்போது நமது எம்.பிக்கள் முன்னின்று ஆரவாரமாகச் செய்கின்றார்கள். மஹிந்தரின் அரசு அப்போது அப்படி முன்னெடுத்தமையிலாவது ஒரு. நியாயம் இருந்ததாகக் கூறலாம். அது, முப்பது ஆண்டுகால யுத்தம் முடிவுக்கு வந்த நேரம். வடக்கு. கிழக்கில் மீள் கட்டுமானம் மற்றும் புனர்வாழ்வுப் பணிகளைத் தேசிய ரீதியில் ஒன்றினைத்து முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு இலங்கை அரசின் முன்னால் இருந்த வேளை அது.

அந்த வேளையில் மாகாணத்துக்குரிய அதிகாரங்களை மத்திய அரசு கையில் எடுத்து சில திட்டங்களை ஒன்றிணைத்து முன்நகர்த்த முயன்றது என்ற சாக்கிலாவது அந்த நடவடிக்கைய நியாயப்படுத்தலாம்.

அப்போது வடக்கு மாகா சபைக்கான தேர்தல் கூட நடக்காத காலம். இப்போது அப்படியல்ல. யுத்தம் முடிவடைந்து பத்தாண்டுகள் கடந்து விட்டது. மாகாணங்களில் மாகாண? நிர்வாகங்கள் அமைந்து விட்டன. வடக்கு மாகாண சபையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் ஒரு பதவிக்காலம் கூட முடிவடைந்து விட்டது.

இப்போது ஒதுக்கப்படுகின்ற மாகாண அபிவிருத்திக்கான நிதி உண்மையில் மாகாணா சபைகளுக்குத்தான் வரவேண்டும். ஆனால், இன்று கூட்டமைப்பு எம். பிக்கள் தலையில் வைத்துக் கூத்தாடும். கம்பெரலிய, பனை நிதியம் போன்றன நேரடியாக மத்திய அரசினால் முன்னெடுக்கப்படுபவை. அவற்றில் ஒரெயொரு அனுகூலம் இந்த விவகாரங்களில் கூட்டமைப்பின் எம்.பிக்கள் இப்போது இடைத் தரகர்கள் போல செயற்படலாம் செயற்படுகின்றனர். அவ்வளவே.

அதுவும்கூட அவர்கள் காபந்து பண்ணும் ரணில் அரசு ஆட்சியிலிருக்கும் வரைதான். அது கவிழ்ந்ததும், இடைத்தரகர்கள் சிறப்புரிமையும் 'அவுட் ஆகிவிடும்.

அதற்குப் பிறகு அப்போது மத்திய அரசில் இந்த விடயத்துக்குப் பொறுப்பாக இருக்கும் ஒருவரும் - முன்னர் அந்தப் பொறுப்பில் இருந்த பஸில் ராஜபக்ஷ போன்ற ஒருவரும்-அவரின் செம்பு தூக்கிகளும்தான் பழையபடி இந்த விடயங்களைக் கையாளுவர். அப்போது வெளியில் வந்து நின்று கொண்டு அதிகாரப்பரவலாக்கல் என்று கூக்குரல் இடுவார்கள் இந்த எம். பிக்கள்.அதிலும் பார்க்க இப்போதே நேர்சீராகச் சென்றால் என்ன, கம்பெரலிய, பனை நிதியம் போன்றவற்றைத் தற்போதைய ரணில் அரசு மீது தங்களுக்கு இருக்கும் செல்வாக்கைப்பயன்படுத்தி மாகாணசபை ஊடாக முன்னெடுத்தால் என்ன?

அதில் ஒரேயொரு பின்னடைவு இருக்கும். இந்தவிடயங்களில் நம் எம்.பிக்களின் இடைத்தரகர் நிலைமைக்கு சற்றுப் பங்கம்வந்துவிரும். அவ்வளவு தான்.'இடைத்தரகர்' பவிசா? அல்லது உண்மையான அதிகாரப்பகிர்வா? எது வேண்டும்? எம்.பிக்களே முடிவு செய்யட்டும்.

Read more...

அல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - பாகம் 3. யஹியா வாஸித்

மொத்த ஸ்ரீலங்கா சோனவர்களினதும் டேர்ணிங் பாயிண்ட் இது. 1983 ஜூலை கலவரம் முடிந்த பின்னும், 2009 புலிகளை அடக்கி, ஒடுக்கி ஊமை களாக்கியபோதும் சிறிலங்காவில் உள்ள மொத்த சிறு பான்மையினருக்கும், ஒரு செய்தி ரொம்ப தெளிவாகவும், கூர்மையாகவும் சொல்லாமல் சொல்லப் பட்டது.

இது சிங்கள தேசம், இங்கு நாங்கதான் ராஜா, ராணி, மெஜாரிட்டி எல்லாமே, நீங்க ரெண்டு பேரும், இந்த நாட்டுக்கு வாழ வந்தவர்களே தவிர, ஆள வந்தவர்கள் அல்ல. ஹ்ம் புரிஞ்சிக்கோங்க.

புரிஞ்சவங்க புரிஞ்சிகோங்க, புரியாதவங்க புரிஞ்சவங்களுக்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க என்றும் சொல்லப்பட்டது.

1971 ,1977 தேர்தல் காலங்களில் தமது வாக்கு வங்கிக்காக தமிழ் அரசியல் தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்களால் உருவேற்றப்பட்ட அப்போதைய தமிழ் இளைஞர்களும், தரப்படுத்தலால் பாதிக்கப்பட்ட ஒருசிலரும், தம்மை சுற்றியுள்ள நாடுகளில், பிள்ளைகளையும் கிள்ளி தொட்டில்களையும் ஜாலியாக ஆட்டும், இந்திய அரசியல் கொள்கைவகுப்பு சாணக்கியர்களும், சிங்கள ஸ்ரீலங்கா அரச இயந்திரங்களின்
சிக்னல்களை கண்டு கொள்ளவே இல்லை.

1983 ஜூலை தமிழ் மக்களுக்கு ஒருவகையில் அடியாக இருந்தாலும், பல வகைகளில் அவர்களுக்கு பல கதவுகளும் திறக்கப்பட்டன, உத்தரப்பிரதேசத்தின் மலையடிவாரங்களில் இந்திய இராணுவ ஜவான்களால் தமிழ் இளைஞர்களுக்கு இராணுவ பயிற்ச்சி இந்திராகாந்தி அம்மையாரின் பூரண ஆசியுடன் வழங்கப்பட்டது.

எப்போதுமே தங்களை அதிபுத்திசாலிகள் எனக்காட்டிக் கொள்ளும் வடமாகான மேல்தட்டு வர்க்கமும், அரசியல் சாணக்கியம் பேசி மொத்த தமிழர்களையும் பலிக்கடாவாக்கிய அரசியல்வாதிகளின் சொந்தம் , பந்தம், அடுத்த ஊடு, அல்லியல் ஊட்டுக்காரனுகள் எல்லாம் சந்தோஷமாக அயிரோப்பிய, அவுஸ்ட்ரேலிய, அமெரிக்க நாடுகளை சென்றடைய வழிகள் வகுத்துக்கொண்டார்கள்.

ஆனால் ஸ்ரீலங்கா சோனகர்கள் இவைகளை கண்டு கொள்ளவே இல்லை. இவர்கள் பணத்திலும், வியாபாரத்திலும், எங்கள் அல்லாஹ், நாங்க வான லோகத்தில் இருந்து நேரடியாக இந்த நாட்டுக்கு இறக்கப்பட்டவர்கள் என்ற ஒரு இறுமாப்பிலும் சுற்றிக்கொண்டு திரிந்தார்கள்.

1983 இறுதி மாதங்களில் இந்திய ராணுவத்தால் பயிற்ச்சி அளிக்கப்பட்ட, அந்த தமிழ் இளைஞர்கள், வடகிழக்குக்கு திரும்பி வந்து ஒரு காட்டு காட்டும்வரை. ஸ்ரீலங்கா சோனவனுகளுக்கு ஒண்ணுமே புரியல . கண்ணும் தெரியல.

திரும்பிய தமிழ் இளைஞர்கள் தமது துப்பாக்கிகளை அடிக்கடி முஸ்லிம்களையும் நோக்கி சுட்டு, மிரட்டி, ட்ரயல் பார்த்துக் கொண்டார்கள். அந்த துப்பாக்கி சத்தங்கள் முஸ்லிம்களை நோக்கி நீட்டப்படுவது , சிங்கள அரசுகளுக்கும் ரொம்ப ஆரோக்கியமாகவும், ஆறுதலாகவும் இருந்தது. வீ டோன்ட் வான்ட் டு வேஸ்ட் அவர் ஒண் புல்லட்.

அந்த தமிழ் இளைஞர்களுக்கு, முஸ்லிம்களிடம் உள்ளகாணிகள், பூமிகள், வயல்வெளிகள், கடைகள், எல்லாமே, தங்களது முன்னோர்களிடம் இருந்து கபளீகரம் செய்யப் பட்டது, ஏமாற்றி வாங்கப்பட்டது என்று தெளிவாக சொல்லப் பட்டிருந்தது. அது ஒரு வேதமாகவே ஓதப்பட்டுமிருன்தது.

இப்போது அதே தத்துவத்தை முப்பத்தி அயிந்து வருடத்துக்கு பின்னர் தூக்கி பிடித்துக்கொண்டு நம்ம குட்டி தம்பி வியாளேந்திரன் கிளம்பியுள்ளார். பாவம் !!

தமிழ் பேசும், தமிழ் நல்லுலகே அந்தப்பிள்ளைக்கு இந்தமுறை கொஞ்சம் அதிகப்படியாகவே வாக்களித்து, மீண்டும் ஒரு எம்பி ஆக்கி விடுங்கள். அடுத்த பதினைந்து, இருபது வருடத்துக்கு உங்களுக்கெல்லாம் தீனி போடுவார், ஆம் உணர்ச்சித் தீனி போடுவார். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.

1983 ஜூலை கலவரத்தின் அதி உச்சமாக, தென் மாகாண சிறைக்கூடங்களில் இருந்த குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உட்பட எண்பதுக்கு மேற்பட்ட, தமிழீழ போராட்டத்தில் முன்னணி வகித்த இளைஞர்கள், சக சிங்கள கைதிகளால் அல்லது அரசால் திட்டமிட்டு கொல்லப்பட்டார்கள். இதனால் மிச்சம் இருந்த தமிழ் கைதிகள் மட்டக்களப்பு சிறைச் சாலைக்கு மாற்றப்பட்டார்கள்.

இவ்வாறு மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ள அந்த தமிழ் இளைஞர்களை, மட்டக்களப்பு சிறையை உடைத்து மீட்டெடுப்போமா என, ஒரு கிழக்கு மாகாண முஸ்லிம் இளைஞர் வடமாகாண தமிழ் இளைஞர்களை பார்த்து கேட்ட போது, அந்த அளவுக்கு நமக்கு ஆயுத பலம் இல்லை எனக் கூறி ஒளித்தோடியவர்கள், மூன்று நாட்களில், அந்த முஸ்லிம் இளைஞரின் தலைமையில், அம்பாறை மாவட்ட தமிழ் இளைஞர்கள் ஆறு பேரின் துணையுடன், அறுபது துப்பாக்கிகள் சேகரித்து வடக்குக்கு செய்தி அனுப்பியதும், கிழக்குக்கு ஓடோடி வந்து, துப்பாகிகளை இரவோடிரவாக எடுத்து சென்று, கிழக்கு மாகாண
இளைஞர்களின் பூரண ஒத்துழைப்புடன், மட்டக்களப்பு சிறையையும் உடைத்து, இளைஞர்களையும் மீட்டு விட்டு, இந்திய கரையோரங்களுக்கு சென்றதும், ரொம்ப வாகாக வட மாகாண இளைஞர்களின் சாதனை இது என, ஜூனியர் விகடனுக்கும், துக்ளக்குக்கும் பேட்டி கொடுத்து, மொத்த கிழக்கு மாகாண மக்களுக்கும், அப்போதே நீங்க வேற, நாங்க வேற என ஆயுத தாரிகள் கோடிட்டு காட்டி விட்டனர், இது புரியாமல் அல்லது தெரியாமல்தான் இருபது வருடத்தின் பின் கருணா என்கின்ற முரளிதரன், கையை சுட்டுக்கிட்டு 2003 களில் கிழக்குக்கு ஓடோடி வந்தார்.

இதில் இன்னும் வேதனையான விடயம், வடமாகான, குறிப்பாக ஆயுத மோகம், பலம் கொண்ட தமிழ் இளைஞர்கள் எவ்வாறு கிழக்கு மாகாண இளைஞர்களை இரெண்டாம் பட்சமாக நினைத்தார்களோ, அதைவிட கேவலமாக கிழக்குமாகான முஸ்லிம்களை கிழக்குமாகான ஆயுத பலம் பொருந்திய இளைஞர்களும், மெத்தப் படிச்ச அல்லது பிழைக்க தெரியாத கொஞ்சம் தமிழர்களும் முஸ்லிம்களை கேவலப்படுத்த முனைந்தார்கள்.

எந்த காரணமுமில்லாமல் முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள் கடைகள் எரிக்கப்பட்டன, வீடுகள் கொள்ளையிடப்பட்டன, பாரியளவில் கப்பங்கள் பெறப்பட்டன, கிழக்கில் உள்ள மொத்த காணிகளும், வயல்வரப்புக்களும் தங்களது, பாட்டன் பூட்டன், முப்பாட்டன் களிடமிருந்து பறிக்கப்பட்டது அல்லது ஏமாற்றி பெறப்பட்டது என அந்த கூட்டம் சொல்லி மகிழ்ந்தது, கூத்தாடியது.

இதில் உலக மகா ஆச்சரியம் என்னவென்றால், 1983 ஜூலை கலவரத்தின் பின், இந்திய அரசு டெல்லியில் வைத்து தமிழ் அமைப்புக்களிடம் இளைஞர்களை பயிற்சிக்கு அனுப்புங்கள் என்று சொன்னதும், முதல் தகவல் கிழக்கு மாகாணத்துக்குத்தான் சென்றது. அதுவும் ஒரு முஸ்லிம் இளைஞரிடமே சென்றது.

அவர் அந்த தகவலை பொத்துவில் தொடக்கம், திருகோணமலை, கிளிவெட்டி, ரால்குழி வரை போய் சொன்னதாகவும், அய்யோ ராணுவ பயிற்சிக்கா, எப்படி போவது, அதற்கு யாழ்ப்பாணம் போக பணத்துக்கு எங்கு போவது என அனைவரும் ஓடி ஒளித்ததாகவும், பின்னர் அந்த முஸ்லிம் இளைஞர், தனது தந்தையின் கடையில் ஆறாயிரம் ரூபாவை திருடியும், களுவாஞ்சிக்குடியில் எந்த பொதுமகனுக்கும் பாதிப்பில்லாமல் ஒரு திருட்டு தனத்தை செய்தும், பணத்தை திரட்டிக்கொண்டு, எண்பது தமிழ் இளைஞர்களையும், ஒரே ஒரு முஸ்லிம் இளைஞரையும் யாழ் மயிலிட்டி வரை வழியனுப்பி, அங்கிருந்து உத்தர பிரதேசம் செல்ல ஏற்பாடுகள் நடந்துள்ளன.

உத்தரபிரதேசத்தில் ராணுவ பயிற்ச்சி பெற்ற முதல் குழுவும் இதுவே ஆகும். பயிற்ச்சி முடிந்து மெட்ராஸ் வந்து இறங்கி, ஓரிரு மாதங்களில் வடகிழக்குக்கு வந்த நமது, மண் மீட்பாளர்கள் முதன் முதலில் அடித்த ஆப்பு ஸ்ரீலங்கா சோனகர்களுக்கே ஆகும்.

இந்த அடிகள்தான் மொத்த சோனவனையும் சிந்திக்க வைத்தது, இதுவரை கடைகளும், வயல்காணிகளும், கடலும், மீனும்தான் தமது வாழ்வு என்றிருந்த முஸ்லிம்கள், மெதுவாக கல்வியில் கவனம் செலுத்த தொடங்கியதுடன், கண்டி, கொழும்பு போன்ற மாநகரங்களையும் நோக்கி நகர தொடங்கினர்.

கிழக்கில் ஒரு பக்கமும், வடக்கில் இன்னொரு பக்கமுமாக முஸ்லிம்களுக்கு அடிவிழ, வடகிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்களும், வடகிழக்குக்கு வியாபாரத்துக்கு வருவதை குறைத்துக்கொண்டார்கள்.

இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திய பிரேமதாச அவர்கள், முஸ்லிம்களை தமிழர்களிடம் இருந்து கூறு போட சரியான ஆளை கண்டு பிடித்தார். கல்முனையை விட்டு 1980 களில் வெளியேறி கம்பளையிலும், கொழும்பிலும் மாறி , மாறி வசித்துக்கொண்டிருந்த அஸ்ரப் அவர்களை 1987 இல் கூர் தீட்டி கிழக்குக்கு அனுப்பினார்.

யார் ஒருவருக்கு மூன்று மொழிகளும் தெரியுமோ, அத்துடன் அவர் ஒரு வழக்கறிஞருமாக இருந்தால் அவர் ஒரு உலக மகா புத்திசாலி என்ற ஒரு எழுதப்படாத தத்துவம் இந்த வடகிழக்கில் வசிக்கும் மொத்த சனத்துக்கும் இருக்கின்றது.

மொத்த தமிழனையும் இந்த லோயர் சமுதாயம்தான் உலகின் உச்சாணிக்கே அழைத்துச் சென்று, தொபுக்கடீர் என போட்டு வீழ்த்தியது, அதேபோல் நம்மாளும் " நாரே தக்பீர், அல்லாஹ் அக்பர்" என்ற ஒரே ஒரு கோசத்துடன் ரொம்ப ஆரவாரமாக வந்து, முந்தா நாளுக்கு முதல் நாள், மொத்த சோனவனின் மானம் , மரியாதை, தொப்பி, தாடி, பர்தா, குல்லா, சொத்து, பத்து, பட்டம், பதவி, கத்தி, கோடாலி, நகம் வெட்ட வெச்சிருந்த வில்லுக் கத்திகளுக்கெல்லாம் விளக்கம் சொல்ல முடியாமல், பொண்டாட்டிமாரின் முந்தானைகளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்றார்கள் அந்த சோனவ லோயரின் அடிவருடிகள்.

பணம் அத்துடன் வேண்டியளவு ஆயுதங்கள், கிராமம் கிராமமாக JOC ( ஜாயின்ட் ஒப்பரேசன் கொமாண்டோ) அதிகாரிகளால் பயிற்ச்சி என முஸ்லிம் காங்கிரஸ் ஜெகஜோதியாக கிழக்கில் முளை விட்டது. எந்த கோட்பாடும் கிடையாது, யாப்பு, கீப்பு, கோப்பு என்று எந்த கத்தரிக்காயும் இவர்களது கடைகளில் இல்லை. அப்போதும் இல்லை, இப்போதும் இந்த உலக மகா கொள்ளைக்காரர்களிடம் இல்லை.

தமிழ் இயக்கங்கள் அடிக்க வந்தா அடிக்கிற, ஓட விட்டு அடிக்கிற, ஒரே ஒரு தானை தலைவர், அவர் அஷ்ரப், இதுதான் மொத்த கொள்கையுமே. அந்த அஸ்ரப் அரனாயகே மலையுச்சியில் வெடித்து சிதறிய, அன்றிரவு தாருஸ்சலாமில் அரங்கேறிய இந்த கொள்கை கொழுந்துகளின் வண்டவாளங்களை பின்னர் பார்ப்போம்.

இந்த ஜெகஜோதியில் தமது பிள்ளைகளை சிக்க வைக்க கூடாது என்று எண்ணிய வாப்பாமரும், உம்மாமாரும் சத்தமில்லாமல், கொழும்பு, கண்டியை நோக்கி நகர்ந்தார்கள், வியாபாரம், உயர் கல்வி என தங்கள் கவனங்களை செலுத்தினார்கள்.

( இன்ஷாஹ் அல்லாஹ் தொடருவேன்......... )
yahiyawasith@ymail.com

Read more...

Sunday, June 2, 2019

றிசார்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு த.தே.கூ ஆதரவாக வாக்களிக்க வேண்டும். சித்தார்த்தன்.

சிறுபான்மை இனங்களுக்கிடையலான ஒற்றுமை என்பது முக்கியமானது. ஆனால் அத்தகைய ஒற்றுமை பரஸ்பரமானதாக இருக்க வேண்டும். மாறாக எப்போதும் தமிழ் மக்கள் மாத்திரமே விட்டுக்கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்தவகையில் நியாயமானது என்று கேள்வி எழுப்புகின்றார் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன். அமைச்சர் றிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்றும் அவர் சொல்கின்றார். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விஷேட நேர்காணலில் ஏப்ரல் 21ஆம் திகதியன்றைய தாக்குதல்களின் பின்னர், நாட்டிலும், தமிழர் அரசியலிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் பற்றி விளக்குகின்றார்.

நேர்கண்டவர் தேவராசா விருஷன்

கேள்வி – அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது சிறுபான்மை மக்களுக்கு எதிரான விடயமாக பார்க்கப்படுவது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில்- பிரேரணையில் உள்ள விடயங்களின் உண்மை மற்றும் பொய் என்பன எனக்குத் தெரியாது. இருப்பினும், மிகப் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

எனினும், பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது. எனவேதான், பல தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஆதரவான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பான இறுதி முடிவை எடுக்கவில்லை.

இது இவ்வாறிருக்க, சிறுபான்மை இனங்களுக்கிடையிலான ஒற்றுமையென்பது முக்கியமானது. ஆனால், அந்த ஒற்றுமை பரஸ்பரமாக இருக்க வேண்டும். குறிப்பாக, வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பானது முஸ்லிம் இனத்தவரான அஸ்மின் என்பவருக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியை வழங்கியது. அதேபோன்று, கிழக்கு மாகாணத்திலும் எம்மிடம் 11 உறுப்பினர்கள் இருந்த போதும் 7 உறுப்பினர்களை கொண்ட அவர்களிடமே முதலமைச்சர் பதவியை கொடுத்தோம்.

இதற்குக் காரணம் தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதற்காகவேயாகும்.

ஆனால், தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வடக்கு பிரதே செயலகம் அமைப்பதற்கு முஸ்லிம் பிரதிநிதிகள் கடுமையான எதிர்ப்பினை வெளியிடுகின்றனர். இவ்வாறான நிலைமையில், வெறுமனே தமிழ் மக்கள் மத்தியிலிருந்து மாத்திரம் இன ஒற்றுமையை எப்போதும் வெளிப்படுத்த முடியாது. ஓற்றுமை என்பது பரஸ்பரம் இருக்க வேண்டும். அந்நிலை இல்லாதபோது தமிழ் மக்கள் குறிப்பாக மன்னார், மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் இப் பிரேரணை விடயத்தில் ஆதரவாக செயற்படுமாறு வலியுறுத்துகிறார்கள். இதுவே உண்மை.

கேள்வி - இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரேரணை தொடர்பாக எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்ளப் போகிறது?

பதில் - கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதாகவே தீர்மானித்துள்ளது. அதே போன்று, மன்னார் மாவட்ட தமிழரசுக்கிளையும் இதே முடிவை எடுத்துள்ளது. இது தவிர, கூட்டமைப்பின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாகவே கருத்துக்களைக் கூறுகிறார்கள். ஆனால், கூட்டமைப்பின் முடிவு இன்னமும் எட்டப்படவில்லை. எமது பாராளுமன்றக் குழுக்கூட்டம் இடம்பெற்று அதில் முடிவொன்று எட்டப்பட்ட பின்னரே நான் அது தொடர்பாகக் கூற முடியும்.

கேள்வி - கூட்டமைப்பின் பங்காளி கட்சியான உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில்- எமது கட்சியிலும் பெரும்பான்மையானோர் பிரேரணைக்கு ஆதரவாகவே வாக்களிக்கக் கூறுகிறார்கள். எனினும், நாம் கட்சி ரீதியாக இறுதி முடிவை எடுக்கவில்லை. எனினும், இப் பிரச்சினைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உடைத்துவிட மாட்டோம். அதற்கேற்றவகையில் எல்லோருமாக ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

கேள்வி – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே இப் பிரேரணை தொடர்பாக காணப்படும் வௌ;வேறு விதமான கருத்துக்கள் கூட்டமைப்புக்குள் முரண்பாட்டை ஏற்படுத்துவதாக உள்ளதே?

பதில் - சாதாரணமாக ஒரு கட்சிக்குள்ளேயே பல கருத்துக்கள் உள்ளதை நீங்கள் அவதானிக்க முடியும். இந்நிலையில், பல கட்சிகளைக் கொண்ட கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடுகள் இருப்பது சகஜம். ஆனால், அது முரண்பாடல்ல. கூட்டமைப்பின் செயற்பாடு ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்கின்றோம். கருத்து வேறுபாடுகளைத் தாண்டிய முரண்பாடான நிலை உருவாகுமானால் அதனை நாம் கவனமாக கையாள்வோம்.
கேள்வி – பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவின் செயற்பாடுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் - இக் குழுவானது அரசியல் இலாபங்களுக்காக செயற்படக்கூடாது. இது மிகப் பாராதூரமான பிரச்சினை. ஓட்டுமொத்த நாட்டின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே அரசியலுக்காக எந்தவொரு செயற்பாடும் மேற்கொள்ளப்படக் கூடாது நேர்மையாக செயற்படுவதனூடாகவே நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல முடியும். மேலும் இவ்விவகாரத்தை பலர் மத்தியில் தெரிவுக்குழு விவாதிப்பது கேள்வியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, இவற்றை கவனமாக செயற்படுத்த வேண்டும்.

கேள்வி – ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலின் பின்னர் நாட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டாலும் வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் நாட்டில் வேறெங்கும் இல்லாதளவு அதிகரிக்கப்பட்டுள்ளதே?

பதில் - உண்மை, இது பிழையான அணுகுமுறையாகும். இது தொடர்பாக ஜனாதிபதியிடத்திலும் பிரதமரிடத்திலும், பாராளுமன்றத்திலும் பேசியிருக்கிறோம். பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமானது. ஆனால் விசேடமாக மக்களை ஒடுக்குகின்ற அவர்களை மன ரீதியாகத் தாக்குகின்ற வகையில் வடக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது.

கொழும்பிலிருந்து மதவாச்சிவரை எந்தவொரு சோதனைச்சாவடியும் இல்லை. ஆனால் அதற்குப் பின்னர் 10 கிலோ மீற்றருக்கு ஒன்று என்ற வீதத்தில் சோதனைச்சாவடிகள் காணப்படுகின்றது. இது தேவையற்ற ஒன்று. தமிழ் மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்துகின்றதான செயற்பாடாகும். இது தொடர்பாக நாம் பேசியிருக்கிறோம். ஆவர்கள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார்கள்.

கேள்வி – தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக விட்டுக்கொடுப்புகளை செய்கின்ற போதும் தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படவில்லை. அதற்கான சாத்தியங்கள் இனிமேலும் இருக்கின்றதா?

பதில் - இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது புதிய அரசியலமைப்பு உருவாக்கமாகும். ஆனால் தென்னிலங்கை அரசியல் மூன்றாக உடைந்துள்ள இச்சூழலில்
புதிய அரசியலமைப்பு உருவாகும் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது. ஆரம்பத்தில் இப்புதிய அரசாங்கம் அமையும் போது எம்மிடம் அந்த நம்பிக்கை இருந்தது. காரணம் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்திருப்பதால் இச்சந்தர்ப்பத்தை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும் எனத் தீர்மானித்திருந்தோம்.

நாம் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதற்குக் காரணம் இனப் பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தையினை நாங்களாகவே உடைப்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகும். நாங்கள்தான் தவறிவிட்டோம் என்ற நிலையை இந்த அரசு சர்வதேசத்துக்கு காண்பித்து விடக்கூடாது. இப்போது இந்த அரசு எதையும் செய்யாதென்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாக்கியிருக்கிறது. இனி சர்வதேச ரீதியாக நாம் அழுத்தங்களைக் கொடுக்கின்ற போது என்ன நடக்கின்றது என்பதைப் பார்ப்போம். மேலும் இதனை ஓர் பேசுபொருளாக வைத்திருக்காவிட்டால் அது மறந்து போய்விடும். எனவே தொடர்ச்சியாக அதனை பேசுபொருளாக வைத்திருப்பது தமிழ்க் கட்சிகளது கடமை.

கேள்வி – நாடு தற்போது எதிர்கொண்டுள்ள இன்பிபரச்சினைக்கு மத்தியில் தீர்வு கிடைப்பதற்குரிய சாத்தியம் தொடர்ந்தும் இருப்பதாக கருதுகின்றீர்களா?

பதில் - சாத்தியமில்லை. தென்னிலங்கை அரசியல் மூன்றாக உடைந்துள்ள நிலைமை, அது தவிர சிங்கள அரசியல்வாதிகள் அடிப்படையிலேயே அதிகாரப் பரவலாக்கத்துக்கு எதிரானவர்கள். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேவையொன்று அவசியமான நிலையிலேயே பிரதமர் ரணில் புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். ஆகவே தமிழ் மக்கள் பலமாக ஒரே அணியாக இருப்பது முக்கியமானது.

கேள்வி – கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மன்னார் மாவட்டத்தில் 500 ஏக்கர் காணியை வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உங்களது கருத்தென்ன?

பதில் - இவ்வாறான சம்பவங்கள் பல இடம்பெறுகின்றன. இது அப்பிரதேசங்களை ஆக்கிரமிக்கின்ற எண்ணத்துடனே செய்யப்படுவதாக தமிழ் மக்கள் நம்புகின்றார்கள். அந்நிலையில் இத்தகைய சம்பவங்கள் நாம் முன்னர் கூறியது போல இன ஒற்றுமை என்ற விடயம் பாரிய கேள்விக்குரியாக அமையும்.

கேள்வி – நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கூட்டமைப்பு அதனை ஆதரிப்பதாக அல்லது நடுநிலை வகிப்பதாக தீர்மானித்தால் அதனூடாக தமிழ் மக்களுக்கான நன்மை என்ன?

பதில் - நேரடியான இலாபம் எதுவும் தமிழ் மக்களுக்கு இல்லை. எனினும் இச் சம்பவத்தில் அதிகளவு இறந்தவர்கள் தமிழ் மக்களே. எனவே எமக்கு நேரடியான பொறுப்பொன்று உள்ளது. இதற்கு சரியான நியாயம் கிடைக்க வேண்டும்.

கேள்வி – அமைச்சர் றிஷாட் பதியூதீன் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்து நடுநிலையான விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென தென்னிலங்கை அரசியலில் வலுக்கும் கருத்துக்கள் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?

பதில் - அது அவரது சொந்த விருப்பம். ஆனால், குழப்படைந்துள்ள இந்நிலைமையிலிருந்து நாட்டையும் அவரையும் மீட்க வேண்டுமானால் தனது பதவியை இராஜினாமாச் செய்வது புத்திசாலித்தனமாக அமையும்

Read more...

Saturday, June 1, 2019

சஹ்ரானின் லப்டொப்பை களப்பிலிருந்து மீட்ட பொலிஸார், 50 லட்சம் பணம் மற்றும் நகைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம் பயன்படுத்தினார் என நம்பப்படும் மடிக்கணினி மற்றும் 50 இலட்சம் ரூபா பணம், தங்க நகைகள் ஆகியவற்றை அம்பாறை – பாலமுனையில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சஹ்ரான் குழுவின் அம்பாறை மாவட்டத் தலைவரான கல்முனை சியாமிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவலுக்கு அமைவாகவே 50 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்றத் தகவலையடுத்து, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, சியாம் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்தார்.

இந்தநிலையில், சியாம் வழங்கிய தகவலுக்கு அமைவாக, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு 15 இலட்சம் ரூபாவைப் பொலிஸார் கைப்பற்றியிருந்த நிலையில், மிகுதி 35 இலட்சம் ரூபாவை நேற்று வெள்ளிக்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

சியாமின் மாமனாரின் வீட்டிலிருந்து ஒரு தொகைப் பணத்தைக் கைப்பற்றியிருந்த பொலிஸார், பாலமுனையிலிலுள்ள வீடொன்றின் இயந்திரமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மிகுதித் தொகைப் பணத்தை மீட்டுள்ளனர்.

மேலும், தங்கச் சங்கிலிகள் இரண்டு, ஒரு ஜோடி காதணி, மோதிரங்கள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, பாலமுனைக் களப்பிலிருந்து மடிக்கணினி ஒன்றும் நேற்றுக் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த மடிக்கணினி சஹ்ரானினுடையது என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சாய்ந்தமருது வெலிவேரியன் கிராமத்தில், சஹ்ரானின் சகோதரர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தினமன்றே மடிக்கணினி, பணம் ஆகியவற்றைத் தான் பெற்றுக்கொண்டதாகக் சியாம் விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.

சஹ்ரானின் சகோதரன் ரிழ்வான் இந்த மடிக்கணினியைக் கொடுத்து மிகவும் பத்திரமாக வைத்துக்கொள்ளுமாறு தன்னிடம் கூறியதாகவும் சியாம் வாக்குமூலமளித்துள்ளார்.

இந்த மடிக்கணினியை சஹ்ரான் பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சஹ்ரான் தலைமையிலான தற்கொலைக் குண்டுதாரிகள் அதிகம் பயன்படுத்திய 1800 தொலைபேசி இலக்கங்கள் தொடர்பிலும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

தற்கொலைக் குண்டுதாரிகள் வேறு நபர்களுடன் நடத்திய தொலைபேசி உரையாடல்களின்படி இந்த இலக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று ஊடகப் பொலிஸ் பேச்சாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.



Read more...

முஸ்லிம்களின் நல்லிணக்க வெளிப்பாட்டுக்கு பரிசாகவே புதிய சுற்றுநிருபம். இதற்கு பொறுப்பு நீலக்கட்சியா ? பச்சைக் கட்சியா ?

பொது நிர்வாக அமைச்சினால் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான ஆடைகள் அணிவது தொடர்பான குழப்பமானதொரு சுற்றுநிருபம் நேற்று வெளியிடப்பட்டிருந்தது.

பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் தெரியாமல் குறித்த அமைச்சினால் தன்னிச்சையாக இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டதென்று நம்பினால், எங்களைப்போலதொரு முட்டாள் யாருமிருக்க முடியாது.

இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்று வரைக்கும் முஸ்லிம் மக்களுக்கெதிரான சிங்கள இனவாதிகளின் அடக்குமுறைகள் மற்றும் இனவாத செயல்பாடுகள் ஒவ்வொரு ரூபத்திலும் நாளுக்குநாள் அதிகரித்து செல்கின்றதே தவிர, எதிர்காலங்களில் அது குறைவடைவதற்கான சாத்தியங்களை காணவில்லை.

அந்தவகையில் முஸ்லிம் பெண்கள் ஆடை அணிவதில் இருந்த சுதந்திரமும் இன்று பறிக்கப்பட்டு அதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றதென்றால், இன்னும் ஐம்பது வருடங்ககளுக்கு பின்பு இந்த நாட்டில் எமது முஸ்லிம் சமூகத்தின் நிலை என்ன ?

எதிர்காலங்களில் மார்க்க கடமைகளை மேற்கொள்வதற்கும், அல்குரானை ஓதுவதுக்கும் சுற்றுநிரூபம் மூலமாக தடை ஏற்படுத்தப்படமாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது ?

ஏப்ரல் 21 இல் நடைபெற்ற வண்முறை சம்பவத்துக்கும் முஸ்லிம் பெண்களின் ஆடைகளுக்கும் என்ன தொடர்பு உள்ளது ?

சிங்கள கடும்போக்குவாதிகள் கட்டம் கட்டமாக முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அதற்காக தென்னிலங்கையின் அப்பாவி சிங்கள இளைஞ்சர்கள் மத்தியில் முஸ்லிம் விரோத பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முஸ்லிம்கள் பற்றிய நிலைப்பாட்டில் இந்த நாட்டு சிங்கள மக்கள் மத்தியில் பத்து வருடங்களுக்கு முன்பு இருந்தது போன்ற மனோநிலை இன்றுள்ள சிங்கள மக்கள் மத்தியில் இல்லை. நாளுக்குநாள் சந்தேகப்பார்வை அதிகரித்தவன்னமே உள்ளது.

சிங்கள இனவாதிகளும், இனவாத கட்சிகளும் மற்றும் புதிதாக அரசியலுக்குவர ஆசைப்படுபவர்களும் பிரபலம் அடைவதற்காகவும், சிங்கள மக்களின் வாக்குகளை கவர்வதற்காகவும் முஸ்லிம் மக்களை ஓர் கேடயமாக பயன்படுத்தி அரசியல் செய்கின்றார்கள்.

இதனை புரிந்துகொள்ளாத அப்பாவி சிங்கள இளைஞ்சர்கள், இந்த அரசியல்வாதிகள் கூறுவதெல்லாம் உண்மை என்று நம்பிக்கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகின்றார்கள்.

இதனை விளங்கிக்கொள்ளாத எமது முஸ்லிம் சகோதரர்கள் இன நல்லிணக்கம் என்றும், இன ஒற்றுமை என்றும், தங்களது பெருந்தன்மையை வெளிக்காட்டுவதாக கூறிக்கொண்டு உச்சி குளிர்ந்தவர்களாக அடிமைத்தனத்தை வெளிப்படுத்தினார்கள்.

அதாவது கடந்த விசாக் பண்டிகைக்காக விசாக் கூடுகளை அமைத்து கொடுத்ததோடு, சில சகோதரர்கள் ஒருபடி மேலே சென்று புத்தர் சிலைகளை சுத்தம் செய்து கொடுத்ததும் சமூகவலைத் தளங்களில் வைரலாக பரவியது.

எம்மவர்கள் நல்லிணக்கத்தினை வெளிப்படுத்தி இரண்டு வாரங்கள் செல்லாத நிலையில், அதற்கு பரிசாக எமது பெண்களின் ஆடைகள் அணிவதற்கு இருந்த சுதந்திரத்தில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள்.

நாங்கள் என்னதான் நல்லினக்கத்தினை வெளிப்படுத்தினாலும், எமது இஸ்லாமிய மார்க்கத்தை கைவிடும் வரைக்கும் அவர்களின் இனவாத செயல்பாடுகளுக்கு ஓய்வு இருக்காது. அது ஒவ்வொரு புதுப்புது வடிவத்தில் வந்துகொண்டே இருக்கும்.

இவ்வாறான நிலையில் நீல கட்சிகள்தான் இதனை செய்தார்கள் என்றும், பச்சை கட்சிதான் இதற்கு பொறுப்பு என்றும் நாங்கள் பட்டிமன்றம் நடாத்துவது எங்களது அறியாமையாகும். இனவாத செயல்பாடுகளில் அவர்கள் எல்லோரும் ஒன்றுதான்.

முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது

Read more...

அத்துரலிய ரத்தின தேரரின் உயிரைக் காப்பாற்றக் கோருகின்றார் மறவன்புலவு சச்சிதானந்தன்.

ஹிஸ்புல்லா , றிசார்ட் பதுயுதீன் உட்பட்ட அடிப்படைவாதிகளை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்துவரும், அத்துரலிய ரத்தன தேரரின் உயிரை காப்பாற்றுமாறு சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் வேண்டுதல் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரரின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி அவரைக் காப்பாற்றுக.

இலங்கை சிவபூமி. திருமூலர் அன்றே கூறினார். புத்தர்கள் சிவபூமியை மதித்து நடக்கிறார்கள் புத்த விகாரைகளில் சிவனுக்கும் இடமுண்டு சைவக் கடவுளருக்கும் இடம் உண்டு.

400 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைகுள் வலிந்து புகுந்த கிருத்தவ மதம் சைவர்களையும் புத்தர்களையும் ஏளனம் செய்தது சைவக் கோயில்களும் புத்த விகாரங்களும் சாத்தானின் இருப்பிடங்கள் என வலிந்து கூறினர். பீரங்கி முனையில், துப்பாக்கி முனையில், வாள் முனையில் சைவர்களையும் புத்தர்களையும் கிறித்தவர்கள் ஆக்கினர்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரோடு புகுந்த முகமதியர்கள் தொடக்கத்தில் இந்த மண்ணின் மரபுகளை மதித்து உள் புகுந்தனர். படிப்படியாக மண்ணின் மரபுகளை இழித்துப் பேச தொடங்கினர். அண்மைக்காலங்களில் மிதித்து நடக்க முற்படுகின்றனர்.

சிவ பூமியில் இருந்த காளி கோயிலை அகற்றினேன், அந்த இடத்தில் முகமதியர் வழிபாட்டிடம் கட்டினேன், மசூதி கட்டினேன், அதற்காக அமைச்சர் அதிகாரத்தைப் பயன்படுத்தினேன் என்ற பொருள்பட இன்றைய கிழக்கு மாகாண ஆளுநர் இசுபுல்லர் கூறிய சொற்கள் அவர் இலங்கை அரசில் எந்தப் பதவியையும் வகிக்கத் தகுதியற்றவர் என்பதையே எடுத்துக் காட்டின.

முசலிப் பிரிவில் சிவபூமிக்குள்ளே அடாத்தாகக் காடுகளை வெட்டி ஆயிரத்துக்கும் அதிகமான முகமதியரைக் குடியேற்றியவர் இரிசாத்தர் பதியுதீன்.

முல்லைத்தீவில் சில ஆயிரம் ஏக்கர் பரப்பளவைக் கையகப்படுத்தி அங்கு முகமதியரைக் குடியேற்ற இரிசாத்தர் பதியுதீன் முனைந்த பொழுது வடமாகாண சபை தலையிட்டுத் தடுத்தது.

சிவபூமியில் மாட்டிறைச்சிக்கடை கூடாது எனச் சைவர்கள் களம் இறங்கிய பொழுது, உள்ளுராட்சி அமைப்புக்கள் தீர்மானங்கள் இயற்றிய பொழுது, உள்ளூராட்சித் தலைவர்களை மிரட்டியவர் இரிசாத்தர் பதியுதீன்.

இசுபுல்லரும் இரிசாத்தர் பதியுதீனும் அரசுப் பதவிகளில் இருப்பதால் சைவர்களுக்கு வேண்டாததைச் செய்கிறார்கள் என்ற முறைப்பாடு வடக்கே கிழக்கே மலையகத்திலே நெடுங் காலமாக உண்டு.

கிழக்கு மாகாணச் சைவத் தமிழர்கள் ஒன்றிணைந்து இசுபுல்லர் பதவி விலக வேண்டும் என ஒரு நாள் முழுவதும் கடையடைப்பு நிகழ்த்தியதை மறக்கமுடியாது.

கண்டியில் தலதா மாளிகையில் வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரர் காலவரையற்ற உண்ணா நோன்பு இருக்கிறார்.

சைவத் தமிழர்களாகிய நாங்கள் எதை இந்நாள்வரை கோரிக்கையாக வைத்திருந்தோமோ அதையே புத்தத் தேசியவாதியான வணக்கத்துக்குரிய தேரரும் வைத்திருக்கிறார், களத்தில் இறங்கி போராடுகிறார்.

வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தன தேரர் பெருமானின் கோரிக்கைகளில் நியாயம் உண்டு. நீதி உண்டு.

இலங்கை அரசு செவி சாய்க்க வேண்டும். அவரது கோரிக்கைகளை நிறைவேற்றி இலங்கைத்தீவின் மண்ணின் மரபுகள் பேணுவோரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.

வணக்கத்துக்குரிய தேரின் கோரிக்கைகளை ஏற்று உரிய நடவடிக்கைகளை எடுத்தால் இலங்கையைச் சிவபூமியாக கொண்டு வாழ்கின்ற சைவத் தமிழர்கள் இலங்கை அரசைப் பாராட்டுவார்கள்.

வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரர் அவர்களும் அவரது அருமைத் தொண்டர்களும் புத்த தேசியத்தை முன்னெடுத்து மண்ணின் மரபைப் பேண விழைகிறார்கள்.

இந்த வரலாற்று முயற்சியில் பௌத்த சிங்கள மக்களுக்கு உறுதுணையாக இந்த மண்ணின் மரபுகளைப் பாதுகாத்துப் பேணிக் காக்க விரும்புகின்ற சைவத் தமிழர்கள் இருப்பார்கள்.


Read more...

Friday, May 31, 2019

முன்னாள் புலிகள் மஹிந்தருடன் பேச்சு. அடுத்த தேர்தலில் களமாடுவதாக உறுதி.

முள்ளிவாய்காலில் சுமார் 12500 புலிகளை கைது செய்த மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு எவரும் எதிர்பாராத விதமாக அவர்களில் 90 விகிதமானவர்களை குறுகிய காலப்பகுதியில் விடுதலை செய்திருந்தது.

இவ்வாறு புலிகள் துரித கதியில் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் மஹிந்த அரசில் பங்காளிகளாகவிருந்த சம்பிக்க ரணவக்க போன்ற தொலைநோக்கு சிந்தனை உள்ள சிலரது விமர்சனத்திற்கும் எதிர்புக்கும் உள்ளானது.

இவ்வாறான விமர்சனங்களுக்கும் எதிர்ப்புக்கும் மத்தியில் மஹிந்த புலிகளை விடுவித்தது பல்வேறு எதிர்பார்ப்புக்களின் மத்தியிலேயே. அவ்வாறு அவர்கள் விடுவிக்கப்பட்டபோது எழுத்தில் இல்லாத ஒப்பந்தங்கள் பலவும் கைச்சாத்தாகியிருந்தது என்பது பல்வேறு தரப்புக்களால் சுட்டிக்காட்டப்பட்டுவந்துள்ளது.

அந்த ஒப்பந்தங்கள் பல்வேறு விடயங்களை கையாள்வது தொடர்பில் அமைந்திருந்தது. படையினர் மீதான போர்குற்றங்களை முறியடித்தல், புலிகளின் தலைமை ஒன்று உருவாகாததை உறுதி செய்து கொள்வதுடன் அவ்வாறான சிந்தனை உடையோரை இனம் கண்டு கொள்ளல், எப்போதும் நிழல் புலி அமைப்பொன்றை தொடர்ந்து பேணல் , தேர்தல்களின்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்களுக்கு ஆதரவாக செயற்படுதல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்கான ஒப்பந்தங்களே அவ்வாற கைச்சாத்தாகியுள்ளது.

செயற்பாடுகளை கண்காணிப்பதற்கும் முன்னாள் புலிகளை கையாள்வதற்கும் பல்வேறு முகங்கள் நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த பணியை மிகக்கச்சிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த அடிப்படையில் கடந்த சில வாரங்களாக எதிர்வரும் தேர்தலில் ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் செயற்பாடு எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பாக அவர்களது கையாளுனர்கள் திட்டங்களை வழங்கியுள்ளதுடன். அத்திட்டங்கள் தொடர்பாக வடகிழக்கில் தமது முகவர்களுக்கு மிகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி மஹிந்தருக்கு நேரடியாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, அவர்களை தான் ஒருமுறை பார்க்கவேண்டும் என மஹிந்தர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பாராளுமன்ற கட்டத்தொகுதியில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அச்சந்திப்பின்போது நேரடியாக எந்த அறிவுறுத்தல்களையும் வழங்காத மஹிந்தர் சந்தித்ததில் மிக்க மகிழ்சி, அவர்களுடன் இணைந்து செயற்படுங்கள், உங்களுக்கான சகல வழங்களும் அங்கே ஒதுக்கப்பட்டுள்ளது என்று மாத்திரம் கூறிவிட்டு நழுவிச் சென்றதாக அறியமுடிகின்றது.

மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பதில் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு தயக்கம் இருக்கப்போவதில்லை என்பது கருத்துக்கணிப்புக்களின் ஊடாக தெரியவருகின்றது. ஆனால் முன்னாள் புலிகள் தொடர்ந்தும் பின்கதவால் சென்று கருமம் ஆற்றும் கைங்கரியத்தை கைவிடவேண்டும் என்றே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Read more...

சொந்த மகளை 12 வயதிலிருந்து 3 வருடங்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஜேவிபி வேட்பாளர்.

ரத்தனபுர பிரதேசத்தில் கடந்த தேர்தலில் ஜேவிபி எனப்படுகின்ற மக்கள் விடுதலை முன்னணியின் போட்டியிட்ட அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தனது மகளை கடந்த 3 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அப்துல் றஹீம் மொஹமட் ஹனாஸ் எனப்படும் நபரே தனது இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகளை 12 வயதிலிருந்து தொடர்ந்து 3 வருடங்கள் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.

லியானுதீன் பாத்திமா என்ற யுவதியிடம் ரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்போது இவ்வதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து ரத்தினபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள மொஹமட் ஹனாஸ், தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக அறியக் கிடைக்கின்றது.


Read more...

யாழ் முஸ்லீம் சமூகத்தின் ஏற்பாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கண்டன ஆர்ப்பாட்டம்.

யாழ் முஸ்லீம் சமூகத்தின் ஏற்பாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (31) மதியம் 1.00 மணியளவில் முஸ்லிம் கல்லூரி வீதியும் - நாவலர் வீதியும் இணையும் புதுப்பள்ளிச் சந்தியில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டமானது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் வகையிலும் அவ் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஏப்ரல் 21 தாக்குதலுக்கும் கண்டனம் வெளியிட்டு குறித்த தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அந்நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைவர் மீதும் அரசை சட்டத்தின் மூலம் தண்டணையை வழங்கக் கோரியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது பல்வேறு கோஷங்களையும் பதாதைகளையும் எழுப்பி போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்













Read more...

வவுனதீவு பொலிஸாரை கொலை செய்த அணியை தலைமை தாங்கியவர் சவுதியில் கைது.

வவுணதீவில் இரு பொலிஸார் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அடிப்படைவாத குழுவே செயப்பட்டுள்ளமை கடந்த ஈஸ்டர் தின தாக்குதல்களுக்குப் பின்னர் தெரியவந்தது.

இந்த கொலை விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் மீது சந்தேகம் கொண்டு அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டதுடன், இருவர் கைதாகி தற்போது விடுதலையாகியுள்ளனர்.

இதனிடையே இந்த சம்பவத்துடன், தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரானின் கட்டளையில் ஆயுதங்களை எடுப்பதற்காகவே சிரியாவில் பயிற்சி பெற்ற நில்கான் தலைமையிலான குழு வவுணதீவில் இரு பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த விடயம் சஹ்ரானின் சாரதியிடம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்த வகையில், ஐ.எஸ்.ஐ.எஸ்.இன் முதல் தாக்குதலான வவுணதீவு வலையிறவு பாலம் அருகில் சோதனைச் சாவடியில் கடந்த நவம்பர் 29ஆம் திகதி நள்ளிரவில் கடமையில் இருந்த பொலிஸாரை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு அவர்களிடம் இருந்த இரு கைது துப்பாக்கியை எடுத்துச் சென்ற தாக்குதலாகும்.

இந்த தாக்குதல் சம்பவம் எவ்வாறு நடாத்தப்பட்டது என கைது செய்யப்பட்ட 3 பேரையும் சி.ஜ.டி.யினர் கடந்த செவ்வாய்க்கிழமை (28ஆம் திகதி) கொழும்பில் இருந்து சம்பவம் இடம்பெற்ற வவுணதீவு சோதனைச் சாவடிக்கு அழைத்துச் சென்று ஒத்திகையும் பார்த்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி சஹ்ரானின் சாரதியான காத்தான்குடியைச் சேர்ந்தவர்களான 54 வயதுடைய முகமது சரீப் ஆதம்பாலெப்பை கபூர், 31 வயதான கம்சா முகைதீன் இம்ரான், 34 வயதுடைய முகமது ஆசிம் சியாம் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இவர்களை சி.ஜ.டி.யினர் பொறுப்பேற்று விசாரணை நடத்தினர்.

பின்னணி இதுதான்,


திஹாரியில் இருந்து வேலை ஒன்று இருக்கின்றது. அதற்கு ரி-56 ரக துப்பாக்கிகள் தேவை. எனவே அதனை எடுக்குமாறு சஹ்ரான் கட்டளையிட்டுள்ளார். இதனையடுத்து சம்பவ தினத்திற்கு 3 தினங்களுக்கு முன்னர் கொழும்பில் வைத்து சஹ்ரான் கபூரிடம் ரி-56 ரக துப்பாக்கியை கொடுத்து அக்கரைப்பற்று-கொழும்பு பேருந்து வண்டியில் கபூரை ஏற்றி அனுப்பியுள்ளார்.

காத்தான்குடிக்கு சென்று இறங்கியபோது அவரை ஏற்றிச் செல்வதற்கு அங்கு கார் ஒன்று ஆயத்தமாக இருந்துள்ளது இந்த காரில் கபூர் ஏறி அங்கிருந்து ஒல்லிக்குளம் பகுதியில் அந்த ஆயுதத்தை கொண்டு சென்று மறைத்து வைத்திருந்துள்ளனர் .

இதனிடையே உன்னிச்சை பகுதியில் கபூரின் நண்பனின் வாடி (கொட்டகை) இருக்கின்றது. அங்கு இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு 3 கிழமைக்கு முன்னர் அங்கு நில்கான் மற்றும் இம்ரான், சியாம் ஆகியோர் சென்றுள்ளனர். இதன்போது வவுணதீவு வலையிறவு பாலத்தில் பொலிஸ் சோதனைச் சாவடியில் பொலிஸ் இருப்பதை அவதானித்தனர்.

இதனையடுத்து இந்த சோதனைச் சாவடியை தெரிவு செய்தனர். இதனிடையே நவம்பர் 29ஆம் திகதியை தெரிவு செய்தோம். ஏன் என்றால் 27 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம். அதன் பின்னர் பொலிஸாரை கொன்றால் அது விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது பாதுகாப்பு படையினருக்கு முழு சந்தேகம் ஏற்படும்.

தெரிவு செய்யப்பட்ட திகதியில் முகமது ஆப்தீன் நில்கான் தலைமையில் இந்த தாக்குதலுக்கு ஒல்லிக்குளம் பகுதியில் அமைந்திருந்த முகாமில் இருந்து கபூரும், நில்கானும் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிள் ஒன்றினுள் ரி-56 ரக துப்பாக்கி மற்றும் மாடு அறுக்கும் கூரிய கத்திகளையும் வைத்து இரு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து நள்ளிரவு 1 மணிக்கு வெளியேறி காத்தான்குடி பகுதிக்கு வரும்போது இடையில் காத்திருந்த இம்ரானை ஏற்றிக் கொண்டு சென்றனர்.

பதுளை வீதி ஊடாக கரடியனாறு ஊடா ஆயித்திமலை சென்று அங்கிருந்து வவுணதீவு பொலிஸ் சோதனைச் சாவடிக்கு முன்னாள் நடுவீதியில் நின்றுள்ளனர்.

இந்த நிலையில் வழமையாக மாடு ஏற்றும் தொழிலில் ஈடுபட்டுவந்த முகமது ஆசீம் சியாம் இன்றைய தினம் மாடு ஏற்றும் லொறி ஓன்றில் சென்று பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகாமையில் லொறியில் சியாம் காத்திருந்துள்ளார்.

இந்த நிலையில் இம்ரான் வேவு பார்ப்பதற்கு சோதனைச் சாவடிக்கு அருகில் சென்று திரும்பி வந்து காத்திருந்த நில்கான் கபூர் ஆகியோரிடம் இரு பொலிஸார் நிற்பதாக தெரிவித்துள்ளார்.

அப்போது லொறியில் காத்திருந்த சியாமை சோதனைச் சாவடிக்கு அருகில் செல்லுமாறு உத்தரவிட, சியாம் இறங்கியதும் லொறி சென்றுவிட்டது.

அதன் பின்னர் மோட்டார் சைக்கிளில் நான்கு பேரும் சோதனைச் சாவடிக்கு அருகில் சென்று அங்கு மோட்டர் சைக்கிளை நிறுத்திவிட்டு கபூரும், இம்ரானும் பொலிஸ் உத்தியோகத்தரான கணேஸ் டினேஸூக்கு அருகில் சென்று பேசிக் கொண்டிருந்தனர். இதன்போது சோதனைச் சாவடியின் உள்பகுதில் பொலிஸ் சாஜனான நிரோசன் இந்திர பிரசன்னா நித்திரையில் இருந்துள்ளார்.

இந்தவேளை நள்ளிரவு 2.40 மணிக்கு டினேஸ் உடன் நன்றாக இம்ரான் கதைத்துக் கொண்டிருந்துள்ள போது அங்கிருந்து கபூர் மற்றும் பதுங்கிருந்த நில்கான் சோதனைச் சாவடி உள்பகுதில் படுத்திருந்த இந்திக பிரசன்னாவின் முகம் கழுத்து பகுதியை வலையால் மூடியபோது அவர் மீது கபூர் கத்தியால் குத்தியுள்ளார்.

இதன்போது வெளியில் இருந்த பொலிஸ் டினேஸ்க்கு சத்தம் கேட்ட போது அவர் மீது கத்தியால் குத்தவே அவர் மயங்கி விழுந்துள்ளார்.

இதன் பின்னர் நில்கான் கொண்டு சென்ற ரி-56 ரக துப்பாக்கியால் பொலிஸ் சாஜன் பிரசன்னாவை இரண்டு தடவை சுட்டுள்ளார். கபூர் அவர் மீது கத்தியால் 9 தரம் குதியுள்ளார்.

பின்னர் மயங்கிகிடந்த பொலிஸ் உத்தியோகத்தர் டினேஸையும் கத்தியால் தாக்குதல் நடத்திவிட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

பின்னர் உடனடியாக பொலிஸாரிடமிருந்து றிவோல்வர் ரக கை துப்பாக்கிகள் இரண்டையும் எடுத்துக் ஒல்லிக் குளப்பகுதில் அமைத்திருந்த முகாமிற்கு சென்றனர்.

அங்கிருந்து பொலிசாரிடம் கைப்பற்றப்பட்ட றிவோல்வர் ஒன்றை நிந்தவூர் பகுதில் புதைத்து வைத்ததுடன் மற்ற றிவோல்லர் உட்பட 6 கை துப்பாக்கிகளை புத்தளம் பகுதில் கபூர் புதைத்து வைத்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு பயன்படுத்திய ரி 56 ரக துப்பாக்கியை சஹ்ரானின் தம்பியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அதன் பின்னர் சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் மோதலில் உயிரிழந்த ஒருவரின் கைகளில் இருந்து அந்த துப்பாக்கியை படையினர் மீட்டுள்ளனர் என சி.ஜ.டி. யினரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இந்த திட்டத்துக்கு தலைமை தாங்கிய நில்கான் சவூதி அரோபியாவுக்குச் செல்வதற்கு விசா மற்றும் விமான சீட்டு என்பவற்றை ஏற்கனவே ஒழுங்குபடுத்தியதுடன் இந்த தாக்குதலை நடத்திவிட்டு அவர் உடனடியாக சவூதிக்கு அரோபியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். ஆனால் நில்கானை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தற்போது, அவரை இலங்கைக்கு கொண்டுவரும் இராஜதந்திர முயற்சியில் குற்றப் புலனாய்வு பிரிவினர் நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

தலதா மாளிகை முன் அத்துரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதம்.

ஆளுனர்களான அசாத் சாலி , ஹிஸ்புல்லா மற்றும் பா.உ ரிசார்ட் பதுயுதீன் போன்றோரை பதவி விலக்ககோரி பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இன்று காலை ஸ்ரீ தலதா மாளிகை முன்னிலையில் உண்ணாவிரதம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இன்று காலை பல தேரர்கள் சகிதம் ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்ற அவர் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் மாளிகை முன்னிலையில் நிலத்தில் உட்கார்ந்து தனது போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

பாராளுமன்றில் அமைச்சர் ரிசார்ட் பதுயுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை தேரரே கொண்டுவந்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.




Read more...

Thursday, May 30, 2019

மைத்திரி எனது அடிப்படை உரிமையை மீறிவிட்டார். நீதிமன்று செல்லும் பூஜித.

கடமையை நிறைவேற்றத் தவறிய குற்றச்சாட்டின் பெயரில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர. அவ்வாறு தனக்கு விடுக்கப்பட்;டுள்ள கட்டாய விடுமுறை உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்ககோரி பூஜித் ஜயசுந்தர உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அத்துடன் சிறிலங்கா அதிபரினால் பதில் காவல்துறை மா அதிபராக, சந்தன விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறும், அவர் உச்சநீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

இது தொடர்பான அடிப்படை உரிமை மனுவை பூஜித ஜயசுந்தர நேற்று உச்சநீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை தடுக்கத் தவறினார் என்று குற்றம்சாட்டப்பட்ட நிலையிலேயே பூஜித ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார்.

அதேவேளை, இதே குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ, சிறிலங்கா அதிபரின் அறிவுறுத்தலை அடுத்து, பதவி விலகியிருந்தார். அவரும் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதே நேரம் குறித்த கொலைகளை தடுக்க தவறினார்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

கபில ஹெந்தவிதாரண வை போல் ஏன் நீங்கள் செயற்படவில்லை? சிசிர மெண்டிசிடம் பொன்சேகா விசாரணை.

தேசிய பாதுகாப்புக்கான புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானியாகவிருந்த ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவினைப் போல் நீங்கள் ஏன் செயற்படவில்லை என தற்போதைய பிரதானி, ஓய்வு பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸிடம் வினவினார் பீல்ட் மார்ஸல் பொன்சேகா.

கடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களை தடுப்பதற்கு அரசு போதிய நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முன்நிலையில் தேசிய பாதுகாப்புக்கான பிரதானி சாட்சியமளிக்கும்போதே பொன்சேகா மேற்கண்டவாறு வினவினார்.

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தொடர்பாக தான் ஏப்ரல் 8ம் திகதி மிகவும் இரகசியமான அறிக்கை ஒன்றை பொலிஸ் மா அதிபருக்கும் பின்னர் அரச புலனாய்வுத்துறை, குற்றப் புலனாய்வுத்துறை , பயங்கரவாத தடுப்பு பிரிவு, வீசேட அதிரடிப் படை ஆகிய பிரிவுகளின் பிரதானிகளுக்கு தெரிவித்திருந்தாக சிசிர மென்டிஸ் கூறினார்.

அதன்போது குறுக்கிட்ட பொன்சேகா, தேசிய பாதுகாப்புக்கான புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக கபில ஹெந்தவித்தாரண செயற்பட்டபோது, அவர் நாட்டின் சகல புலனாய்வுப் பிரிவுகளையும் ஒருங்கிணைத்துச் செயற்பட்டதுடன், தகவல்கள் உரியமுறையில் பரிமாறப்படுவதை உறுதி செய்து கொள்வார். அத்துடன் நடவடிக்கைகளுக்கான செயற்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரதானிகளை அழைத்து விசாரணை செய்வார். அவ்வாறான நடவடிக்கைகளை நீங்கள் செய்வதில்லையா என் வினவினார்.

இக்கேள்விக்கு பதிலளித்த தேசிய பாதுகாப்புக்கான புலனாய்வுப் பிரிவின் பிரதானி, தனக்கு அவ்வாறான அதிகாரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும், முன்னாள் பிரதானி பாதுகாப்புச் செயலருக்கு வழங்கப்பட்டிருந்த சகல அதிகாரங்களையும் பயன்படுத்தி அவ்வாறு செயற்பட்டு வந்தாக நழுவிக்கொண்டார்.

புலனாய்வு விடயங்களில் மிகவும் நேர்த்தியாக செயற்பட்ட கபில ஹெந்தவித்தாரண தகவல்களை திரட்டிக்கொள்வதிலும் அவற்றை நிர்வகிப்பதிலும் , தேவையானவாறு பயன்படுத்துவதிலும் மிக தேர்ச்சி பெற்றவராக காணப்பட்டார். இலங்கை வரலாற்றில் மிக நீண்டகால புலனாய்வு அனுபவம் கொண்டவர் அவர். புலிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். புலிகளின் பல்வேறு தாக்குதல்கள் எவ்வாறு முறியடிக்கப்பட்டது என்ற எவ்வித தடயங்களோ தகவல்களோ இதுவரை வெளிவராமைக்கு பின்னால் உள்ளவரும் இவரே. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அப்பதவியிலிருந்து ராஜனாமா செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அவர் அவ்வாறு பதவிவிலகிச் சென்றதன் பின்னார் நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அக்கருமத்தை சிறப்புறச் செய்வதற்கு பதிலாக ஹெந்தவிதாரணவின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டு அவற்றை ஊடகங்களுக்கு வழங்குகின்ற இழிசெயல்களை புரிந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஓய்வு பெற்றிருக்கும் அந்த அதிகாரியிடம் ஆலோசனைகளை பெற்றிருந்தால் சில சமயங்களில் உயிர்த்த ஞாயிறு அனர்த்தத்தை தடுத்திருக்க முடியும் என்பது பரவலான கருத்தாகவுள்ளது.

எது எவ்வாறாக இருந்தாலும் இன்று இலங்கையின் புலனாய்வுத் துறை என்பது, அர்த்தமற்றதாக மாறியுள்ளது. புலனாய்வுத் துறைக்கான நியமனங்கள் துறைசார் அனுபவம் மற்றும் தகுதியிலன்றி அரசியல் பின்புலங்களை கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றது. இலங்கை புலனாய்வுத் துறையின் வினைத்திறனின்மையால் சுமார் 300 உயிர்கள் பலி கொடுக்கப்பட்டிருக்கின்றது என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.

ஒரு மணி நேரத்தில் 5 இடங்களில் இடம்பெற்றபோதும் அதை தடுத்திருக்ககூடியவர்கள் தமது கடமைகளிலிருந்து தவறி கொலைகளுக்கு உடந்தைகளாக இருந்திருக்கின்றார்கள் என்ற ரீதியில் அவர்கள் குற்றவியல் தண்டனைச் சட்த்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு அதி உச்ச தண்டனை அளிக்கப்படவேண்டியவர்கள்.

இந்நிலையில் அவ்வாறானவர்களை தொடர்பாக விசாரணை செய்வதற்கு பாராளுமன்றினால் தேர்வுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளமை கேலிக்குரிய விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

Read more...

மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த மாசு உங்கள் கைகளால் துடைக்கப்படவேண்டும் - வடக்கு ஆளுநர்

மதத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கம் மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த மாசு உங்கள் கைகளால் துடைக்கப்படவேண்டும். அது ஒவ்வொரு இலங்கை இஸ்லாமியருடைய ஆறாவது கடமையாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகின்றேன் என ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வடக்கு மாகாண இப்தார் நிகழ்வு யாழ்ப்பாணம் மொகைதீன் ஜூம்மா பள்ளிவாசலில் செவ்வாய்க்கிழமை (28) மாலை இடம்பெற்ற வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தனது கருத்தில்

இஸ்லாம் என்ற அமைதியான மார்க்கம் அந்த மார்க்கத்தை அல்லாவிடமிருந்து நியாயம்பெற்ற ஜனசமூகம் என்ற ரீதியிலே உங்களுக்கிடையிலே உங்களிலிருந்து அடுத்தவருக்கெதிராக வன்முறை வரமுடியாது என்றே மௌளவி தெரிவித்தார். அப்படியாயின் அந்த உண்மையின் மறுபக்கம் என்ன? வன்முறையை யார் திட்டம் தீட்டுகின்றார்களோ உதவுகின்றார்களோ அதை ஊக்குவிக்கின்றார்களோ அவர்கள் கட்டாயமாக மார்க்கத்தை தழுவிய உண்மையான இஸ்லாமியராக இருக்க முடியாது என்ற உண்மை தான் வெளிப்படுகின்றது.

இஸ்லாமிய புத்திஜீவிகள் இஸ்லாமிய அரசியல் வாதிகள் இஸ்லாமிய நண்பர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து சொல்லவேண்டிய ஒரு கட்டாய செய்தியுண்டு. இலங்கை கத்தோலிக்கர்களுக்கும் இலங்கை பௌத்தர்களுக்கும் இலங்கை இந்துக்களுக்கும் உங்களிடமிருந்து நாங்கள் கேட்கவேண்டிய குரல் என்னவெனில் வன்முறை இஸ்லாம் மதத்தை தழுவியது அல்ல என்ற ஒரு சொல்லை ஒரு குடும்பமாக சொல்லவேண்டும் என்பதே ஆகும். அண்மையில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக மதத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கம் மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த மாசு உங்கள் கைகளால் துடைக்கப்படவேண்டும். அது ஒவ்வொரு இலங்கை இஸ்லாமியருடைய ஆறாவது கடமையாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகின்றேன் .

நீங்கள் எவ்வளவு அழுத்தமாக முறையிட்டு நேர்மையாக வன்முறைக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்கின்றீர்களோ அதே வேகத்தில் ஏற்பட்டுள்ள இந்த காயங்கள் குணமாகும் நல்ல சிந்தனை வளரும் என்று நான் நம்புகின்றேன். இவற்றை நீங்கள் செய்ய அல்லா உங்களுக்கு இதயத்தையும் சக்தியையும் கொடுப்பதற்கு நான் துவா செய்கின்றேன். இது நான் மட்டுமன்றி மேதகு ஜனாதிபதியும் உங்களிடம் கேட்டுக்கொள்வதாகும் . நீதியின் முன் யார் குற்றவாளி என்று நியமிக்கும் வரை எல்லோரும் சுதந்திரமானவர்களே என்றும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.










பாறுக் ஷிஹான்.

Read more...

Wednesday, May 29, 2019

தவ்ஹீத் ஜமாத் பள்ளி வாயலை இடித்து தரைமட்டமாக்கும் முஸ்லிம் மக்கள்..

கெக்கிராவ, மடாட்டுகமவில் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பள்ளிவாசல் இன்று அந்தப் பகுதி முஸ்லிம் மக்களினால் உடைத்து அகற்றப்பட்டது.

ஊர் பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் மக்கள் ஒன்றுகூடி எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் குறித்த பள்ளிவாசல் உடைக்கப்பட்டது.

“நூலகம் ஒன்றை அமைக்க ஒதுக்கப்பட்ட காணியில் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் வெளிநாட்டு நிதியுதவியுடன் குறித்த பள்ளிவாசலை அமைத்திருந்திருந்தனர். இந்தநிலையில், நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையைக் கருத்தில்கொண்டு இந்தப் பள்ளிவாசலை உடைத்து அகற்றியுள்ளோம்” என்று அந்தப் பகுதி முஸ்லிம் மக்கள் தெரிவித்துள்ளனர்.




Read more...

சமுர்த்தி நிவாரணத்திலும் த.தே.கூ பா.உ சார்ள்ஸ் நிர்மலநாதன் தில்லுமுல்லு..

மன்னார் மாவட்டத்தில் 2019ம் ஆண்டுக்கான சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம்; வழங்கப்படவுள்ள நிலையில் இப் பயனாளிகள் தெரிவானது சமுர்த்தி உத்தியோகத்தர் மூலம் தெரிவு செய்யப்பட்டு பிரதேச செயலாளரால் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சில் சமுர்த்தி நிவாரண பயனாளிகள் அனுமதி வழங்கப்பட்ட பட்டியலை எடுத்து வந்து தனது போலி அரசியல் முகவர் மூலம் மன்னார் மாவட்டத்தில் பதிவுகளை மேற் கொண்டு வருகின்றார்.

இவ்விடயமானது மக்களை ஏமாற்றி தனது வாக்கு வங்கியினை அதிகரிக்க செய்யும் செயலாகவே இச் செயல் அமைகின்றது.மேலும் மன்னார் மாவட்டம் மட்டுமன்றி வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறான செயற்பாடுகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் அரங்கேற்றப்படுகின்றது. ஆகவே மக்கள் இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான போலி அரசியல்வாதிகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள்.

Read more...

Tuesday, May 28, 2019

புர்காவைக் களைய மறுத்த பெண் மருத்துவத் தொழிலைத் துறந்தார்!

ஹோமாகம தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும் இளம் பெண் முஸ்லிம் வைத்தியர் ஒருவர், புர்காவைக் கழற்ற மறுத்து வைத்தியத் தொழிலில் இருந்து விலகுகின்றார் எனக் கடிதம் அனுப்பியுள்ளார்.

கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியரான இவர், ஹோமாகம வைத்தியசாலையில் இணைப்பு கடமையாற்றி வருகின்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து, முகத்தை மூடும் புர்காவுக்கு அரசு தடை விதித்திருந்தது. புர்காவுடன் கடமையிலிருந்த இவரைப் பார்த்து அச்சமடைந்த நோயாளியொருவர், இவரிடம் சிகிச்சை பெற மறுத்திருந்தார்.

இதையடுத்து, புர்காவை கழற்றும்படி வைத்தியசாலைப் பணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார்.

வைத்தியசாலையிலிருந்து வெளியேறியிருந்த வைத்தியர், சில நாட்கள் பணிக்கு வருகை தரவில்லை.

அதன்பின்னர் தான் பணியியை இராஜிநாமா செய்துகொள்கின்றார் என வைத்தியசாலைக்கு இராஜிநாமாக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

எனினும், அந்தக் கடிதத்தை நாம் இன்னமும் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை என்று குறித்த வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரியான ஜே.ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

Read more...

ஆலய வழிபாட்டில் சமத்துவம் கோரி சத்தியாக்கிரகப் போராட்டம்

வறணி வடக்கு சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தின் உபயகாரர்களால் ஆலய வழிபாட்டில் அனைவருக்கும் சமத்துவம் வேண்டும்!
ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது உறுதிப்படுத்தப்படவேண்டும்!
என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆலய முன்றலில் இன்று 28.05.2019 செவ்வாய்க்கிழமை மு.ப. 10 மணியளவில் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது

முப்பது வருடங்கள் வரை திருவிழா இடம்பெறாதிருந்த இவ் ஆலயத்தில், கடந்த வருட தேர் திருவிழாவின்போது, பக்தர்கள் எவரும் வடம் தொட அனுமதிக்கப்படாது JCB இயந்திரம் கொண்டு தேர் இழுக்கப்பட்டமை அனைவரும் அறிந்தது. இந்நிலையில் இவ்வருட திருவிழாவை நடாத்தாது ஆலய நிர்வாகத்தினர் நிறுத்தி வைத்துள்ளமை அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் அவ் ஆலய உபயகாரர்களும், அடியவர்களும் இணைந்து கடந்தவாரம் அடையாளப் போராட்டங்களைத் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக மேற்கொண்டிருந்தனர். இதில் அம் மக்களுக்கான தீர்வு வழங்கப்படாத நிலையில், அவர்கள் தமது போராட்டத்தைத் தொடர் சத்தியாக்கிரகமாக ஆலயச் சூழலில் இன்று ஆரம்பித்துள்ளனர்.

இப் போராட்டத்தில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு , சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு உபயகாரர்கள் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.




Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com