Thursday, May 16, 2019

ISIS தாக்குதல்களின் பின்னணியில் பிராந்தியத்தில் அகல கால்பதிக்க முற்படும் அமெரிக்கா

கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டின் பலபாகங்களிலும், கிறிஸ்தவர்கள் அதிகம் ஒன்றுகூடுகின்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவகங்களை மையப்படுத்தி இடம்பெற்ற மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதல்கள் அதிகமான ஊடகங்களையும் தன்பால் ஈர்த்ததுடன், தற்சமயம் அதனுடைய வீரியம் ஊடகங்களில் சற்று ஓய்ந்து வருவதை அவதானிக்க முடிகிறது. எனினும் தாக்குதல்களின் பின்னணிகளை ஆராயும் முகமாக நாட்டில் பல தேடுதல் நடவடிக்கைகளும், கைதுகளும் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதும் குறிப்படத்தக்கதாகும்.

அத்துடன் குறித்த தாக்குதல்களில் மரணித்த சகோதர மத மக்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதுடன், மேற்படி மிருகத்தனமான தாக்குதலானது மனிதம் வாழும் இதயங்களால் கண்டிக்ககூடிதோர் நிகழ்வு என்பதில் முஸ்லிம்கள் யாவரும் ஏக கருத்தை கொண்டுள்ளார்கள் என்பதையும் நினைவுபடுத்திக்கொள்ள விரும்புகின்றேன். அதுமாத்திரமின்றி தாக்குதல்களின் பிற்பாடு முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கண்மூடித்தனமான பாதுகாப்பு கெடுபிடிகளும், முஸ்லிம் சமூகத்தின் மீது கரிபூச முனைகின்ற பல இனவாத குழுக்களின் செயற்பாடுகளையும் இவ்விடத்தில் கண்டித்தே ஆக வேண்டும். இவற்றை விரிவாக நோக்க முடியும் எனினும் வேறு ஒரு ஆக்கத்தில் தனிப்பட அவற்றை ஆராயலாம் என நினைக்கிறேன்.


இவ்வாறான எமது நாட்டின் வரலாற்றில் கறைபடிந்த கசப்பான நிகழ்வொன்று நடந்தேறி முடிந்த கையோடு தாக்குதல்களுக்கான மூல காரணங்கள் பற்றிய வாதங்களும், பக்க நியாயங்களும் பலவாறு முன்வைக்கப்பட்டன. அந்தவரிசையில் குறித்த தாக்குதல்களின் பின்னணி இலங்கையின் உள்ளக அரசியல் குளறுபடிகளின் அரங்கேற்றமா?, மேற்கு அரசியலின் அசைபோடலா..?, இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதத்தின் கால்பதிப்பா..?, போதைப்பொருள் மாபியாக்களின் சூழ்ச்சிகளா?, அல்லது சர்வதேச பயங்கரவாதிகளின் ஊடுறுவலா.? என்றெல்லாம் பலரும் பலவாறாக கருத்துக்களை ஊகித்துவரும் சந்தர்ப்பத்தில் அன்மையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் மற்றும் அதனோடு இணைந்த சாதகமான அரசியல் காரணிகள் பற்றி தெளிவடைய வேண்டிய ஒரு கட்டாயம் எம் மத்தியிலும், பிற சமூக மக்கள் மத்தியிலும் சமகாலத்தில் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.

அந்தவகையில் மேற்படி தாக்குதல் இடம்பெற்று சில மணிநேரங்களிலே குறித்த தாக்குதலுக்கான சூத்திரதாரிகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது, அவற்றுள் ஆரம்பம் தொட்டே முஸ்லிம்கள் மீது பழியை போட வேண்டும் எனும் ஒருமித்த கொள்கையில் பல இனவாத்ததை கக்குகின்ற ஊடகங்களும், அரசியல் வாதிகளும் மற்றும் சில வெளிநாட்டு சக்திகளும் முனைப்புக் காட்டி வந்தன. எனினும் நடுநிலை சிந்தனை கொண்ட அரசியல்வாதிகள் பலரும் அவற்றை நிராகரித்திருந்த நிலையில், தாக்குதல் இடம்பெற்று மூன்று தினங்கள் கடந்ததன் பிற்பாடே சர்வதேச பயங்கரவாத குழுவான ISIS எனும் இஸ்லாமிய வரையறைகளை மீறி செயற்படுகின்ற ஆயுத குழு அதற்கான முழு உரிமையை கோரியிருந்தது.

இவ்வாறு ISIS எனும் தீவிரவாத சிந்தனை கொண்ட குழுவின் உரிமை கோரலின் பிற்பாடு இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் சற்று பெருமூச்சு விட்டது என்றே கூற முடியும் காரணம், முஸ்லிம்கள் ISIS எனும் குழு மீது கொண்டிருந்த கருத்தியல் மற்றும் கொள்கைகள் சார்ந்த விடயங்கள் முற்றிலும் முஸ்லிம்களுக்கு சாதகமானதாகவே காணப்பட்டது. அதாவது ISIS இயக்கத்தின் கடந்தகால நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் நிபந்தனைகளை மீறிய தீவிரவாத போக்குகள் என்பவற்றை கருத்திற்கொண்டு கடந்த காலங்களில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், இவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது. இவர்கள் முற்றிலும் மாறுபட்ட கொள்கையினை கொண்டவர்கள் என பகிரங்கமாக அறிவுறுத்தல்களை விடுத்திருந்தனர்.

மேலும் பெருமூச்சு விடுவதற்கான மற்றுமொரு காரணமே முஸ்லிம் சமூகம் மத்திய கிழக்கும், அதனை சார்ந்த இஸ்லாமிய நாடுகளினதும் அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பாக அடிப்படை அறிவினை கொண்டவர்களாக திகழ்வதாகும். அதாவது ISIS பற்றிய தெளிவான எண்ணக்கரு முஸ்லிம்களின் உள்ளங்களில் தோலுரித்து வைக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் ISIS எனும் குழுவானது மேற்கத்திய வல்லரசுகளின் கைக்கூலிகள் என்பதையும் அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் விரல்காட்டி பொம்மைகள் என்பதையும் முஸ்லிம்களாகிய அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

ஆனாலும் எமது நாட்டின் அரசியலில் கூட தெளிவில்லாத வேற்றுமத சகோதரர்கள் பலரும் இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளே என்று அலட்டிக்கொள்கின்றார்கள். இங்கு அவர்களை பொறுத்தவரை தப்பில்லை என்றே கூற வேண்டும் காரணம் அவர்களின் குறுகிய அறிவிற்கு எட்டியது போலும் அவர்கள் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். அடுத்து நான் மேற்குறிப்பிட்டது போன்று இந்த ISIS எனும் பயங்கரவாத குழு அமெரிக்காவின் கைக்கூலிகள் தான் என்பதற்கு பல ஆதாரங்களை முன்வைக்க முடியும் அது இங்கு என்னுடைய தலைப்பின் நோக்கமல்ல. ஆனாலும் நோக்கத்தை எடுத்தியம்ப சில ஆதாரங்களை முன்வைக்கின்றேன் அதாவது, எங்கெல்லாம் அமெரிக்காவிற்கு தேவைகள் எழுகிறதோ அங்கெல்லாம் ISIS இருப்பார்கள் இதனை கடந்த 10 வருடங்கள் பின்னோக்கிய மத்திய கிழக்கில் தெளிவாக அவதானிக்க முடிகிறது.

அத்துடன் சமகாலத்தில் அமெரிக்கா தனது அரசியல் கொள்கைகளின் நன்மை நாடி கையாளுகின்ற உத்திகளில் ஒன்றே இந்த ISIS ஆகும். மாறாக கடந்த 70 வருடங்கள் பின்னோக்கி அமெரிக்காவின் நரிக்கலைகளை பார்க்குமிடத்து அவை இவற்றை விடவும் விசித்திரமாக முன்னெடுத்துச் செல்லப்பட்டதை கண்ணுற முடிகின்றது. அதாவது முடுக்கி விடப்பட்ட ஈராக்-ஈரான் யுத்தத்தில் ஈராக் செயற்பட்ட விதமானது காட்டை கலைத்து பருந்துக்கு இரையாக்கிய செயலாகவே பார்க்க முடிகிறது. ஆனாலும் இங்கு அமெரிக்கா தனது நரிக்கலையை பயன்படுத்திய விதமானது மிகவும் நுணுக்கமாகவும், ராஜதந்திர மகோன்னதத் தன்மை வாய்ந்ததாகவும் அமைந்திருந்தது. அதாவது அமெரிக்கா ஈராக்கை மூட்டிவிடும் பணியை முன்னெடுத்ததுடன், ஊடகங்களை தன்கையகப்படுத்தி ஊடக ராஜதந்திரத்தை மேற்கொண்டுவந்தது. இதன் போது செய்தித் தணிக்கை, செய்தித்திரிபு, வதந்திகளை பரப்பல், செய்திகளை சோடனை செய்தல் போன்ற உத்திகளை கையாண்டது. இவ்வாறு தனது அதிகாரத்தை வளம்பொருந்திய நாடுகளில் நிலைநாட்ட பல தந்திரோபாயங்களை கையாண்டு வந்த அமெரிக்கா சமகாலத்தில் ISIS இனை பயன்படுத்துவது ஆதார பூர்வமாக நிறுவப்பட்ட உண்மையாகும்.

இப்போது எனது தலைப்பினுள் நேரடியாக நுழையலாம் என கருதுகின்றேன். அதாவது அமெரிக்காவின் கைக்கூலிகள் தான் இவர்கள் எனவும், இந்த ISIS இனாலே இலங்கையில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றது என்றும் வைத்துக்கொண்டால், அடுத்த கணம் இலங்கை மீது அமெரிக்காவின் பார்வை திருப்புவதற்கான காரணங்கள் தான் என்ன? மத்தியகிழக்கினுள் மாத்திரம் வரையறுக்கப்பட்டு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வந்த இந்த ISIS இனை இலங்கைக்குள் உடபுகுத்துவதன் ஊடாக அமெரிக்க பிணம்தின்ணி கழுகுகள் அடைய விழையும் இலாபங்கள் தான் என்ன?? இந்து ஆசிய கடற்பரப்பில் அமெரிக்காவிற்கான தேவைகள் என்ன? மற்றும் கடந்த காலங்களில் இலங்கை தொடர்பாக அமெரிக்காவின் முன்னெடுப்புகள் எவ்வாறு அமைந்திருந்தது என்றெல்லாம் ஆய வேண்டிய தேவை இயல்பாகவே எழுகின்றது. எனவே இது தொடர்பாக சற்று விரிவாக நோக்கலாம் என்று நினைக்கின்றேன்.

குறிப்பாக எமது நாட்டின் அரசியல் வாரலாற்றை ஒரு தடவை பின்னோக்கி பார்க்கும் போது கடந்த 70 வருட கால அரசியலில் மாறி மாறி ஆட்சி செய்த இந்த பச்சை, நீல அரசாங்கங்கள் கொள்கைரீதியாக உலக அரசியலை தழுவியே தங்களுடைய ஆட்சியை நகர்த்தி வந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. அதாவது பண்டாரநாயக அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சுதந்திரக் கட்சியானது. வல்லரசுகளான சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளை பின்பற்றி பொதுவுடமைப் பொருளாதார கொள்கைகளை கடைப்பிடித்து வந்துள்ளதுடன், டீ.எஸ். சேனாநாயக்க அவர்களால் ஆரம்பிக்கப்பட ஐக்கிய தேசிய கட்சியானது மேற்கத்திய வல்லரசான அமெரிக்காவின் முதலாளித்துவம் சார்ந்த கொள்கைகளை அடியொட்டியே செயல்பட்டு வந்துள்ளமையும் தெளிவாக வரலாறுகளின் ஊடாக அறியப்படுகின்றது.

மேலும் பன்னெடுங் காலமாக அமெரிக்கா ஆசிய பசுபிக் கடல் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி, பிராந்தியத்தில் ஒரு வல்லமைபொருந்திய சக்தியாக தனது கால்களை அகலப் பதிக்கவேண்டும் எனும் கொள்கையில் திடமாக செயற்பட்டு வருவதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இதனை அமெரிக்காவின் தனது ஆதரவு நாடுகளையும், வளம் பொருந்திய நடுகளையும் தனது நட்பு நாட்களாக இணைத்துக்கொள்ளும் மேலதிக்க கொள்கைகளை ஆய்வதனூடாக தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இதற்கு சிறந்த உதராணமாக மூண்டெழுந்த வியட்நாமிய யுத்தத்தை குறிப்பிட முடியும் இப்போரின் போதும் அமெரிக்கா தன்னையும் ஒரு பங்காளராக மாற்ற கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டும் இருந்தது.

இவ்வாறான, அமெரிக்காவின் பிராந்திய அதிகார எல்லை விரிவாக்கம் மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் தன்னிகரற்ற ஆதிக்கத்தை கட்டுப்படுத்தல் போன்ற இன்னோரன்ன காரணங்களை மையப்படுத்தி, அமெரிக்கா ஆசிய பசுபிக் கடற்பரப்பில் தனக்கான ஒரு இடத்தினை காலா காலமாக தேடிவந்துள்ளது. அந்தவரிசையில் இந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்குகின்ற இலங்கை மீதும் அமெரிக்காவுக்கு தீராத ஒரு ஆசை இருந்தே வந்துள்ளது. அந்த ஆசை எழுவதில் விசித்திரம் ஒன்றும் இல்லை தான், காரணம் அந்த ஆசை எழுவதற்கு இன்னும் பல ஏதுவான காரணங்களும் இல்லாமல் இல்லை. அதாவது போர்த்துக்கேயர் தொடக்கம் ஒல்லாந்தர் ஈராக ஆங்கிலேயர் வரை இலங்கையின் அமைவிட முக்கியத்துவம் பற்றி அறிந்து வைத்திருந்ததுடன், நாட்டை கைப்பற்றவும் செய்தார்கள். ஆகவே அமெரிக்காவும் ஆசைகொள்வதில் தப்பில்லையே! ஆனாலும் அமெரிக்கா அந்த ஆசையை ராஜதந்திர முறைகளினூடாக பெற்றுக்கொள்வதற்கு பலதடவைகளில் முனைந்துள்ளது. அதனை நான் மேலே கூறியது போன்று தங்களுடைய கொள்கைகள் சார்ந்த ஐக்கிய தேசிய கட்சியானது இலங்கையில் ஆட்சியை தக்கவைக்கும் போதெல்லாம் அமெரிக்காவும் தனது நோக்கத்தை அடைந்துகொள்ள முயற்சித்தே வந்துள்ளது.

அந்த முயற்சிகளையும், பிரயத்தனங்களையும் சுருக்கமாக விபரிக்கலாம் என்று நினைக்கின்றேன். அதாவது 90 பிந்திய காலப்பகுதிகளில் அமெரிக்கா இலங்கை மீதான கவனத்தை மிகவும் திட்டமிட்டபடியே செலுத்தி வந்துள்ளது. அதாவது இலங்கை மீதான கவனம் எனும் போது அதனை வரையறை செய்ய வேண்டிய தேவையும் உள்ளது, ஏனைய நாடுகளை போலல்லாது அமெரிக்காவின் இலங்கை தொடர்பான முன்னெடுப்புகள் ஆரம்பம் தொட்டே வேறுபட்டிருந்தது. அஃது பணம் மற்றும் பொருளாதாரம் சார் இதர காரணிகளை தாண்டி அமெரிக்கா இலங்கையின் இராணுவ மட்டத்தில் இருந்தே தனது நெருக்கத்தை அதிகரிக்க நாடுகின்றது..

அதாவது 90 க்களுக்கு பிற்பாடு அமெரிக்கா இலங்கையில் உள்ள பயங்கரவாத சூழ்நிலைகளை மேற்கோளிட்டு operation balanced style எனும் பெயரில் இராணுவத்தின் கொரில்லா போரை எதிர்கொள்ளும் திறமையை மேம்படுத்தும் நோக்கில் பயிற்சியளித்தது. இத்திட்டத்தின் கீழ் green beret எனும் பெயரில் அமெரிக்காவின் அதியுயர் கமாண்டோ அணி ஒன்று இலங்கை இராணுவத்திற்கு தீவிரவாத எதிர்ப்பு தொழிநுட்பம் சார்ந்த பயிற்சிகளை அளித்தது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்க இராணுவம் தனது IMET எனும் அமைப்பின் ஊடாக பல பயிற்சிகளை இலங்கை இராணுவத்திற்கு வழங்கி வந்தது.

மேலும் 2000 ஆண்டு காலப்பகுதியில் operation flash style எனும் பெயரில் அமெரிக்க-இலங்கை இருநாட்டு முப்படைகளும் கூட்டு இராணுவ பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. இதன் போது அமெரிக்க கடற்படை சீல் அணி மற்றும் special operations squadron என்ற அமெரிக்காவின் முக்கிய இராணுவ அணிகள் பலவும் இந்த கூட்டுப்பயிற்சியில் பங்கேற்றன. இதன் போது இராணுவ பயிற்சிகள் மாத்திரமன்றி இலங்கை இராணுவ உயர் அதிகாரிகளுக்கு உளவியல் பயிற்சிகளும் வழங்கப்பட்டது. இவ்வாறு இலங்கை மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்த சந்தர்ப்பத்தில் 2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதமராக பதவியேற்கின்றார். இது அமெரிக்காவிற்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போலவே இருந்தது. இச்சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த அமெரிக்கா முனைந்தது. இக்காலத்தில் அமெரிக்காவின் வழிகாட்டலிலோ அல்லது அதிஷ்டவசமாகவோ புலிகளுடன் சமாதான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது. ஆனாலும் திரைமறைவில் புலிகளை பலவீனப்படுத்தவும், இலங்கை இராணுவத்தை வலுப்படுத்தவும் அமெரிக்கா இலங்கை அரசுக்கு முழு அனுசரணையாக இருந்து வந்தது. இதனை 2002 இல் அக்கால அமெரிக்க தூதுவர் உறுதிப்படுத்தியும் இருந்தார். இதன் போது இராணுவ பயிற்சி மட்டுமல்ல இராணுவ ஆயுதங்கள் வாங்குவதற்கும் நிதி ஒதுக்கபட்டதை அவர் ஏற்றுக்கொண்டார்.

மேலும் இலங்கை விவகாரத்தில் எல்லைமீறி மூக்கை நுழைத்த அமெரிக்கா அமைதி உடன்படிக்கை இலங்கையில் நடைமுறையில் இருந்த வேளையிலும் கூட தனது அதிசிறப்பு பசுபிக் கமாண்டோ படையணியை இலங்கைக்கு அனுப்பி இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் புலிகளின் பலம் பலவீனம் போன்ற காரணிகளை ஆயவுக்குற்படுத்தியது. ஆய்வு முடிவில் திருகோணமலையின் தென் கடற்பிராந்தியமானது( மூதூர் பிரதேசம்) புலிகளின் பிடியில் இருப்பதாகவும் இது புலிகளை திருகோணமலை மட்டுமல்லாது நாட்டின் பல பிரதேசங்களைக் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர ஏதுவாக அமையும் என்றும் அறிக்கையிட்டதுடன், சமாதான ஒப்பந்தத்தையும் மீறி புலிகளுடன் போரிட்டு அதனை மீட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

மேலும் அதனை மீட்க வேண்டுமாயின் இலங்கை கடற்படையானது வலிமை கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், இலங்கை கடற்படை தமது பலவீனமான நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் கூறி தன்னையும் உள்நுழைக்கும் வித்தயை சூட்சுமமாக அரசிடம் கூறிச்சென்றது. ஆனாலும் 2005 இற்கு பிந்திய காலப்பகுதி அமெரிக்காவின் இலங்கை தொடர்பான காய் நகர்த்தல்களுக்க முற்றுப்புள்ளி வைக்கும் காலமாக மாறியதை அமெரிக்காவின் துரதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும். கைக்கெட்டியது வாயக்கெட்டாத நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டது. இதற்கான காரணம் 2005 இல் பதவியேற்ற மகிந்த ராஜபக்ச அவர்களின் தீவிர பொதுவுடமை சார்பு கொள்கைகள் தான் என்பதை மறுத்துரைக்க முடியாது. மகிந்த பதிவியேற்ற பின்னர் அமெரிக்காவுக்கு இலங்கை பக்கம் தலைவைத்தும் தூங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் போது சீனாவின் பேராதரவுடன் தனது குடும்ப அரசியலை சடுதியாக பிரயோகித்த மகிந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதில் 30 வருடகால கொடும் பயங்கரவாத்ததை நாட்டில் இருந்து துடைத்தெறிந்தார். இதன் போதெல்லாம் மாற்றான் வீட்டுக்குக்காரன் போலும் பார்வையாளராக மாத்திரமே அமெரிக்காவால் இருக்க முடிந்தது. ஆனாலும் அமெரிக்காவிற்கு இலங்கை மீதான தனது தீராத ஆசை முடிந்தபாடில்லை.

அத்துடன் பயங்கரவாத ஒழிப்பை தொடர்ந்து இலங்கையின் மகிந்த தரப்பு அரசனாது சீனாவின், அரச மற்றும் தனியார் துறையினரை கொண்டு அபிவிருத்தியில் பாரிய வளர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. அத்துடன், இக்காலப்பகுதியில் மற்றுமொரு இலங்கையின் தலையெழுத்தை மாற்றக்கூடிய வகையிலான ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதுதான் நீண்ட காலமாக இலங்கையின் வடமேற்கு கடற்பரப்பில் ஆய்வு செய்யப்பட்டு வந்த பெற்றோலிய படிவுகள் தொடர்பான அறிக்கையாகும். அந்த ஆய்வினை மேற்கொண்ட இந்திய கெய்ரன் நிறுவனத்தின் அறிக்கையில், 9 ட்ரில்லியன் கன அடிக்கும் அதிகமான இயற்கை எரிவாயுவும் மற்றும் 2 பில்லியன் பீப்பாய்களுக்கு அதிகமான உறைபொருற்களும், கச்சா எண்ணையும் மன்னாரை அண்டிய கடற்பரப்பில் உள்ளதாக 2011 ஆம் ஆண்டளவில் கூறப்பட்டிருந்தது.

இதனை அறிந்த அமெரிக்காவோ நிம்மதி இழந்தது. காரணம் அவர்களின் பார்வையில் இலங்கையின் அமைவிடமும் அதிலும் குறிப்பாக திருகோணமலை துறைமுகமும் மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தனது பிராந்திய இருப்பினை உறுதிசெய்வது ஆகிய இரு பிரதான காரணிகளே மேலோங்கியிருந்தது. ஆனாலும், இவ்வாறான பிரதான சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதைகளுக்கு அண்மையில் சகல வளங்களும் கொண்ட அதாவது இயற்கை துறைமுகம், பெற்றோலியம் போன்ற உலக வல்லரசை தீர்மானிக்கும் காரணிகளை ஒருமிக்க கொண்ட தனித்துவமானதும், தன்னிகரற்றதுமான அனுகூலமிக்க நாடு ஒன்றின் கைநழுவல் நிம்மதி இழக்க செய்வதில் சந்தேகம் ஒன்றும் இல்லை தான்.

ஆனாலும் அமெரிக்காவின் பக்கம் அதிஷ்டக் காற்று அடிக்காமலும் இல்லை. அந்த அதிஷ்டக்காற்று 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துடன் ஆரம்பிக்கின்றது. அதனடிப்படையில் நாட்டில் ஏற்பட்ட சிறுபான்மை மக்களின் அதிருப்தியால் மகிந்த அரசு வீட்டுக்கு செல்ல தொடர்ந்தும் ஆட்சியை கைப்பற்றிய கலப்பு அரசாங்கத்தில் அதிகாரமிக்கவராகவும், ஆட்சி மாற்றத்தில் பெரும்பங்கு வகித்தவருமான ரணில் விக்ரமசிங்க அவர்களின், ஜனாதிபதியை விஞ்சிய அதிகார வல்லமை பெறுதலுடன், பேரதிஷ்டக் காற்றாக உருவெடுத்தது அமெரிக்காவிற்கு. அது அதிஷ்டக்காற்றா இல்லை அமெரிக்காவின் சூழ்ச்சிகள் பலித்த நாளா என்று ஊகிக்க முடியாதுள்ளது. எனினும் நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பயிற்சி வழங்கப்பட்டது எனவும் மேலும் ஆட்சி மாற்றத்திற்காக 73 மில்லியன் வரையில் அமெரிக்க அரசு செலவிட்டது என்றும் ஒரு ஊடகம் செய்தி வெளியிட்டது. எது எப்படியோ வெகு விரைவாக இலங்கை விடயத்தில் தன்னை உள்நுழைக்க விழைந்தது அமெரிக்கா.

அதாவது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சில சரச்சைக்குரிய சட்டமூலங்களை உருவாக்கி அதிகாரங்களை கையகப்படுத்தியதும் மிக வேகமாக தனது உறவுப்பாலத்தை மீள் கட்டுமானம் செய்ய முற்பட்ட அமெரிக்கா, முதற்கட்டமாக 2015.04.17 அன்று தனது நாட்டின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான USS Carl Vinson எனும் கப்பலை இலங்கையின் தென் கடற்பரப்பில் நிறுத்தியதுடன், அன்றய வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர, அமைச்சர் பெளசி, பாதுகாப்பு செயலாளர் பஸ்நாயக்க மற்றும் கடற்படை தளபதி உள்ளிட்ட குழுவினர் விமானம் மூலம் அக்கப்பலுக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தனர்.

இந் நிகழ்வானது ஊடகங்களுக்கு கூட அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை என்பது குறிப்படத்தக்கதாகும். அத்துடன் முன்னைய காலங்களில் ஒருபோதும் இலங்கை அமைச்சர்கள் அமெரிக்க கப்பல்களில் நுழைய அனுமதிக்கப்படவும் இல்லை. மொத்ததில் அது முழுவதும் இரகசியம் பேணப்பட்ட ஒரு பயணமாக அமைந்தது. அதனை தொடர்ந்து திருகோணமலை துறைமுகத்தில் பல்வேறுபட்ட இருதரப்பு இராணுவப் பயிற்சிகள் இடம்பெற்றிருந்தன. இவற்றுள் பல பயிற்சிகள் இரகசியமாகவே இடம்பெற்றது.

மேலும் இலங்கை கடற்படையை வலுவூட்ட பல கருவிகளையும் திருகோணமலை கடற்படையினருக்கு வழங்கியும் இருந்தது அவற்றில் அதிகமானவை கடற்கன்னிவெடிகளை அகற்றும் உபகரணங்களாகும் அத்துடன் இவை கரும்புலிகளின் அட்டகாசம் அதிகரித்த நேரங்களில் அல்லாது யுத்தம் முடிந்த பிற்பாடு வழங்கப்பட்டமையானது கேளிக்கையாகவும் சந்தேகத்திற்குரியதாகவுமே இருந்தது. மேலும் கடற் கன்னிவெடிகள் சமகாலத்தில் இலங்கையில் பாரிய பிரச்சினையாகவும் இருக்கவில்லை. அத்துடன் ஏக காலத்தில் கடற்படை கூட்டுப் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தின் போது ஒரு சிப்பாய் இறந்த பின்னரே அமெரிக்க- இலங்கை கூட்டுப்பயிறசிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு அறியக்கிடைத்தது. ஏன் இந்த ரகசியம் பேணப்படுகிறது எனும் சந்தேகம் இன்று வரை வினாக்குறியுடனே தொடர்கின்றது.

அன்று ஆரம்பித்த கப்பல்களின் வருகை இன்றுவரை அடிக்கடி வந்து செல்வதுடன் அவை பல நூறு மடங்குகளில் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது. நான் முன்னர் கூறியது போன்று இலங்கையின் உறவு தொடர்பில் சிந்திக்கும் அமெரிக்கா அது இராணுவ மயப்படுத்தப்பட்ட நட்புறவாக இருக்க வேண்டும் என்பதில் ஒரே இலக்காக இருந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக கடற்படை பயிற்சிகள், இலங்கையின் கடல்சார் கண்காணிப்பு திறன்களை அதிகரிக்கும் நோக்கில் விமானப்படையின் கண்காணிப்பு விமானத்தில் நிகழ்நேர கண்காணிப்பு கருவிகளை பொருத்தல், கடலுக்கடியில் உள்ள வெடிபொருட்களை அகற்றும் தன்னியக்க கருவிகளை வழங்கள் மற்றும் திருகோணமலை கடற்பிராந்தியத்தின் நிலைகளில் அக்கறை கொள்ளல் போன்றவை எம்மை ஆழமாக சிந்திக்கவே தோன்றுகிறது.

இதற்கான காரணமும் இல்லாமல் இல்லை அதாவது இந்து சமுத்திர கடற்பரப்பில் சீனாவின் ஆதிக்கத்தை குறைத்தலும், அவர்களுக்கு எதிராக இலங்கை கடற்படையுடன் இணைந்து செயல்படுவதற்கான முன்நகர்வுகளுமே இவை என்பதை தெளிவாக புலப்படுத்துகிறது.மேலும் 2014 களில் சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்றதும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறான நிகழ்வுகளை எதிர்காலத்தில் கட்டுப்படுத்த வேண்டும் என்ற பகிரங்க முடிவாகவே பார்க்க முடிகிறது

இவ்வாறான உள் நோக்கங்களை தன்னகத்தே கொண்டு செயற்பட்ட அமெரிக்கா 2015 பிற்பட்ட காலங்களில் இடைவிடாது இலங்கைக்கு போர்க்கப்பல்களையும், நட்புறவு பயிற்சிக் கப்பல்களையும் சாரை சரையாக அனுப்பி வருவதை அவதானிக்க முடிகிறது அவற்றுள் 2016 ஆம் ஆண்டில் கொழும்பு துறைமுகத்தில் மட்டும் USS Hopper எனும் ஏவுகணை கப்பல் உட்பட மூன்று நாசகார போர்க் கப்பல்களை அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்தது. அத்துடன் குறித்த ஆண்டில் பல இரகசிய இராணுவ பயிற்சிகளையும் திருகோணமலையை அண்டிய காட்டுப்பகுதிகளில் அரங்கேற்றியது. அப்பயிற்சிக்காகவென 95 கப்பல்கள் இலங்கை வந்திருந்தன. அத்துடன் 2017 ஆம் ஆண்டில் ஏறத்தாள 32 வருடங்களுக்கு பின்னால் கொழும்பு துறைமுகத்திற்கு USS Nimitz எனும் விமானம் தாங்கி போர்க்கப்பலுடன் இணைந்து பல போர்க்கப்பல்கள் இலங்கை வந்திருந்தன. அவை யுத்த பயிற்சிகள் மாத்திரமன்றி நாட்டின் பல துறைகளிலும் தங்களை ஈடுபடுத்தி சென்றிருந்தாரகள். அதன் பிற்பாடு அதே ஆண்டில் USS Comstock எனும் கப்பல் கொழும்பு வந்தது. இவ்வாறு பல பயிற்சிகளை மேற்கொண்ட அமெரிக்கா 2018 ஆம் ஆண்டு USS John c stennis எனும் விமானந்தாங்கிக் கப்பல் இலங்கையில் தற்காலிக விநியோக தளம் ஒன்றை நிறுவியதாக உத்தியோக பூர்வமாக அறிவித்தது. மற்றும் நடப்பு ஆண்டிலும் கூட கடந்த மாதம் USS Millinocket எனும் கப்பலானது கடல் சார் ஒத்துழைப்புகளை வழங்கும் நோக்கில் இலங்கை வந்துருந்தது.

எப்படியாயினும் கடல்சார் நட்புறவுகளையும் தாண்டி சமகாலத்தில் இலங்கையின் உள்ளக ராஜதந்திர நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்த வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு எழுந்துள்ளதை தர்க்க ரீதியாக நிரூபனம் செய்ய முடியும். அதாவது முன்னர் கூறியது போன்று மன்னார் பெற்றோலிய அகழ்வுகளுக்காக எமது நாட்டின் வளப்பற்றாக்குறையினை கருத்திற் கொண்டு ஏனைய நாடுகளிடம் இருந்து விலை மனுக்கள் கோரப்பட்டிருந்தது. அவற்றை இம்மாதத்துடன் முடிவுறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை அண்மையில் அமைச்சர் கபீர் காசிம் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். அப்படியாயின் இன்னொரு நாட்டின் தலையீடு இலங்கைக்குள் உள்நுழையும் பட்சத்தில் அமெரிக்காவின் நிலை ஒரு உறைக்குள் இரு கத்திகளுக்கு இடமில்லை எனும் நிலையை ஒத்ததாக மாறும் அபாயம் உள்ளது.

ஆனாலும் இலங்கையின் அரசியல் நிலவரமோ சற்று திடகாத்திரமானது காரணம் பலம்பொருந்ததிய பொதுவுடமை சார்ந்த மகிந்த தரப்பு எதிர்கட்சி மற்றும் அமெரிக்காவை தமிழின எதிரியாக நோக்குகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகளை தாண்டி ஒரு நாட்டின் இறைமைக்குள் தன்னை உட்புகுத்தல் என்பது சிறிதும் சாத்தியம் இல்லை என்பதை அமெரிக்கா நன்கு உணர்ந்துள்ளது.

எனவே தான் சடுதியாக இலங்கையின் சுயம் சார் விடயங்களில் தன்னை உட் புகுத்த சில சாதகமான உடனடிக் காரணிகளின் தேவை மேலெழுந்துள்ளது. எனவே இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களை ISIS குழுவினர் தான் செய்தார்கள் எனும் கருத்து உண்மையாயின், நிச்சயமாக அங்கு அமெரிக்காவின் கைவரிசை இருக்கவே செய்யும். அத்தாக்குதல்களே, அவர்கள் நாட்டினுள் நுழைவதற்கான உடனடிக் காரணிகள். இக்கருத்தை வலுப்படுத்த குண்டுகள் வெடித்த கையோடு அமெரிக்காவின் அறிக்கைகளை ஒப்பிடும் பட்சத்தில் நன்குணர்ந்துகொள்ள முடியும்.

அதாவது குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்ற மறுகனமே அமெரிக்காவின் கருத்துக்களை பார்த்தால் அவை இரங்கள்களாகவும், அனுதாபங்களாகவும் அன்றி, FBI இனரை அனுப்ப நாங்கள் தயார், அமெரிக்க இராணுவம் இலங்கைக்கு விரைய தயார் நிலையில் உள்ளது இன்னும் CBI உறுப்பினர்களை இலங்கைக்கு உதவிக்காக அனுப்பி வைக்க தயார் என்ற பாணியில் தான் அவைகள் அமைந்திருந்தன. அத்துடன் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற கையோடு இலங்கைக்கு பெருந்தொகையாக பண உதவியையும் வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்தது. இலங்கை புலிகளை அடக்கும் போது பார்வையாளராக இருந்த அமெரிக்கா இந்த விடயத்தில் முந்தியடித்துக் கொண்டதை மேற்கூறிய தர்க்கரீதியான காரணங்களுடன் ஒப்பிட்டு நோக்குமிடத்து இந்த வெடிப்பு சம்பவங்களுடன் அமெரிக்காவின் நரிக்கலையின் பிரதிபலிப்பு 100% இருப்பதை தெளிவாக ஊகிக்க முடியும்.


முற்றும்.

ஹப்லுல்லாஹ் புஹாரி.

Read more...

Wednesday, May 15, 2019

முறைகேடான யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனமும் தமிழரசுக் கட்சியின் கையாலகாத்தனமும்

அண்மையில் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக ஊடகங்களிலும் பொது வெளிகளிலும் பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன அந்த வகையில் சுகாதார இராஜாங்க அமைச்சின் செயலாளர் சுகாதார அமைச்சின் செயலாளருக்காக ஒப்பமிட்டு அனுப்பிய கடிதத்தின் பிரகாரம் 23.04.2019 தொடக்கம் வைத்தியக் கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந் நியமனமானது 13வது அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறும் வகையில் அமைந்துள்ளது எனலாம். காரணம் மத்திய அரசாங்கத்தின் ஆளுகையின் கீழ் உள்ள யாழ்போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிக்கொண்டு மாகாண சபைகளின் கீழ் வருகின்ற பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பதவியை பொறுப்பேற்றதன் மூலம் இந் நியமனமானது இரட்டை நியமனமாக அமைவதுடன் மாகாணத்தின் அதிகாராத்தை மத்தி பறித்தெடுப்பது போல் உள்ளது.

மேலும் இவ் முறையற்ற நியமனம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் முன்னாள் பராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் முன்னாள் வடமாகாண எதிர்க் கட்சி தலைவர் தவராசா மற்றும் முன்னைநாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் வடக்கு மாகாண ஆளுனருக்கு நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் தங்களது ஆட்சேபனையை தெரிவித்திருந்தனர். இதை கருத்தில் கொண்ட வடக்கு மாகாண ஆளுனர் அவர்கள் இன் நியமனத்தை உடனடியாக இடை நிறுத்தும்படி மத்திய சுகாதார அமைச்சுக்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும் மத்திய சுகாதார அமைச்சின் TCS/H/BF/15/891 இலக்க கடிதத்தின் பிரகாரம் அரசசேவைகள் ஆணைக்குழுவின் இலக்கம் HSC/PRO/BMAG/10/11/2017 மற்றும் 17.04.2019ம் திகதிய கடிதம் மூலம் சுகாதார திணைக்களத்தின் அனைத்து வைத்திய நிறுவனங்களுக்கும் பிரதி வைத்திய நிர்வாக தரத்திற்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன மேற்படி சுற்றறிக்கையின் 5ம் பந்தியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது 'சிரேஸ்ட வைத்திய நிரவாகத்தில் வெற்றிடமாக உள்ள நிறுவனங்களில் கடமைக்கு சமூகம் அழித்துள்ள பிரதி வைத்திய நிர்வாக தரத்தில் நிலையான உத்தியோகத்தர்களில் அந் நிறுவனத்தில் வெற்றிடமாக உள்ள சிரேஸ்ட வைத்திய நிர்வாக தர கடமைகளை பதில் கடமை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரான வசந்த பெரேரா அவர்களால் ஒப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

மேற்படி நிர்வாக ஒழுங்குக்கு அமையவே மத்திய சுகாதார அமைச்சின் அனுமதியுடனும் வடமாகாண ஆளுனரின் அனுமதியுடனும் கடந்த ஆறு மாதகாலமாக மருத்துவர் தேவநேசன் அவர்கள் யாழ் பிராந்திய பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார். இவர் மீது காழ்புணரச்சி கொண்ட ஒரு சில வைத்திய உத்தியோகத்தர்கள் வட மாகாண மருத்துவ மன்றம் என்ற பெயரில் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கி மத்திய சுகாதார அமைச்சரான ராஜிதசேனரத்னவுடன் நல்லுறவைப் பேணி மேற்படி மருத்துவர் சத்தியமூர்த்தியின் நியமனத்தை செய்துள்ளதாக அறியமுடிகிறது.

இதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் கடமையாற்றும் நிலை உருவாகியுள்ளது. இது அரச நிர்வாக மற்றும் கணக்காய்வு சம்பந்தமான சட்ட சிக்கலை உருவாக்கியுள்ளது. மருத்துவர் சத்தியமூர்த்தியின் நியமனத்தை ஆளுனர் நிராகரித்ததன் மூலம் அவர் கடமை செய்வதற்கான உரித்தானது மாகாண பிரதம செயலாளர், மாகாண பிரதிப் பிரதம செயலாளர்(நிதி) ,வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோராலும் நிராகரிக்கப்பட்டுள்ளது என தெரிந்தும் வைத்தியர் சத்தியமூர்த்தி 23.04.2019ல் இருந்து கடமையை பொறுப்பேற்று முறைகேடான வகையில் கடிதங்களில் கையொப்பம் இடல், கலந்துரையாடல்களை ஒழுங்கமைத்தல் மற்றும் யாழ் மாவட்டத்தில் உள்ள வைத்திய சாலைகளுக்கு திடீர் விஜயம் மேற்கொள்ளல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது அனைவராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களில் ரணில் தலமையிலான அரசை காப்பாற்றுவதற்கு உயர்நீதிமன்றம் சென்று அரசை காப்பாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனாலும், அரசிற்கு இன்றும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிகொண்டிருக்கும் கூட்டமைப்பின் பதின்நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களாலும் இன் நியமனத்தை நிறுத்தமுடியாமல் போனது? இவ்விடயம் தொடர்பாக கூட்டமைப்பு மௌனம் காப்பது மாகாணத்தின் அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசின் நிகழ்சி நிரலுக்கு இக் கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் உடந்தையா என்ற கேள்வி எழுகிறது.

இது இவ்வாறு இருக்கையில் 13.05.2019 திங்கட்கிழமை அன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் நடந்த கூட்டத்தில் மருத்துவர் சத்தியமூர்த்தி நான்தான் பணிப்பாளர் என்றும் நீங்கள் பிரதிப்பணிப்பாளர் என்று மருத்துவர் தேவநேசனைப் பார்த்து எச்சரித்திருந்தார். இதற்கு பதிலளித்த மருத்துவர் தேவநேசன் அவர்கள் வட மாகாண ஆளுனரால் தங்களுக்கு வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தை காட்டமுடியுமா? என கூறினார் இதற்கு பதிலளித்த வைத்தியர் சத்தியமூர்த்தி மாகாணத்தின் அனுமதி தேவையில்லையெனவும் மத்திய அரசாங்கத்தின் கடிதம் போதும் எனவும் ஆளுனராலும் எந்த அரசியல்வாதிகளாலும் என் இந் நியமனத்தை இடை நிறுத்தமுடியாது என கடும் தொனியில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன் நிலையில் வடமாகாண சபையின் அதிகாரங்களை எந்த அரசியல்வாதிகள் பாதுகாக்க போகின்றார்கள் அல்லது வடமாகாண ஆளுனரும் அவருக்குட்பட்ட அதிகாரிகளும் காப்பாற்ற போகின்றார்களா என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும்? மேலும் இவ்விடயம் தொடர்பாக ஆளுனராலும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனாலும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நபர் கைது

கொட்டாஞ்சேனை – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரி பயணித்த வேனை கொள்வனவு செய்து, அதில் ஆசனங்களை பொருத்தியதான குற்றச்சாட்டின் பேரில் நபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய காத்தான்குடியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

புதிய காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் ஆதம் என்பவரே இவ்வாறு இன்று சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொள்வதற்காக குண்டுதாரி பயணித்ததாக தெரிவிக்கப்படும் வேன் தேவாலயத்திற்கு அருகில் கடந்த 22 ஆம் தினதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் அதனை வெடிக்கச் செய்தனர்.

Read more...

வன்செயல்களினால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்ய விசேட குழு

குருநாகல், கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளான பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான முறையில் இழப்பீடுகளை பெற்றுக்கொடுப்பதற்காக, சேத விபரங்கள் தொடர்பில் உரிய மதிப்பீடு செய்வதற்கு விசேட குழுவொன்றை அனுப்பிவைக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கொட்டாரமுல்லையில் தெரிவித்தார்.

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்களினால் வடமேல் மாகாணத்தில் பாதிப்புக்குள்ளான இடங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் இன்னும் அச்சத்துடன் இருப்பதனாலும் பாதுகாப்பு நிலைமையை அவதானிப்பதற்காகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று புதன்கிழமை (15) இரண்டாவது நாளாகவும் பாதிக்கப்பட்ட சில பிரதேசங்களுக்கு சென்றார்.

குருநாகல் மாவட்டத்தில் சேதமடைந்த முஸ்லிம் கிராமங்களை நேற்று சென்று பார்வையிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், இன்று புத்தளம் மாவட்டத்தில் நாத்தாண்டிய தொகுதியில் இனவாத வன்செயல்களினால் பெரும் பாதிப்புக்குள்ளான கொட்டராமுல்ல, தும்மோதர மற்றும் புஜ்ஜம்பொல பிரதேசங்களை சென்று பார்வையிட்டார்.

இவற்றில் தும்மோதர கிராமம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு முஸ்லிம் குடும்பஸ்தரான பெளசுல் அமீர் என்பவர் காடையர் கும்பலினால் கொலைசெய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டுடன் இணைந்தாக தச்சுத் வேலைத்தளமும் அமைந்துள்ளது. அங்கு சென்ற அமைச்சர் தாக்குதலுக்குள்ளான அவரது வீட்டையும் எரியூட்டப்பட்ட வாகனத்தையும் பார்வையிட்டார்.

அத்துடன் தாக்குதலுக்குள்ளான தும்மோதர மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசல், உமர் தக்கியா மற்றும் புஜ்ஜம்பொல மொஹிதீன் பள்ளிவாசல் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டதுடன், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் மெளலவிமார்களுடனும் தாக்குதலின் பாரதூரம் குறித்து கலந்துரையாடினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச அமைப்பாளர் றிழ்வான் ஹாஜியார் தலைமையில் கொட்டராமுல்ல கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது, தங்களுக்கு நேர்ந்துள்ள இழப்புகள் மற்றும் அசம்பாவிதங்கள் பற்றி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் எடுத்துக் கூறினர்.

தாக்குதலின் பின்னணி, காடையர்கள் எங்கிருந்து வந்தார்கள், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள், உரிய பாதுகாப்பு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படாமை என்பன பற்றி இதன்போது அவர்கள் முறையிட்டனர்.

அயலிலுள்ள சிங்கள பிரதேசங்களிலுள்ள சந்தைகளில் வியாபாரத்துக்காகச் செல்லும் முஸ்லிம்களை அங்கு தொழிலுக்காக வரவேண்டாமென வெளிப்படையாகவே அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசங்களில் தாக்குதலுக்குள்ளான வீடுகள், கடைகள் போன்றவற்றின் சேதங்களை அமைச்சர் பார்வையிடும்போது, வீடுகளிலிருந்த தங்க நகை மற்றும் பெருந்தொகை பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் முறையிட்டனர்.

வெளியூர்களைச் சேர்ந்த காடையர் கும்பலுடன் அயலவர்கள் சிலரும் சேர்ந்தே, தங்கள் மீது தாக்குதல்கள் நடாத்தியதாக பாதிக்கப்பட்ட மக்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். தாங்கள் இன்னும் அச்சத்தின் மத்தியில் இருப்பதினால், இன்னுமொரு அசம்பாவிதம் நடைபெறாதவாறு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

மக்களின் முறைப்பாடுகளை செவிமடுத்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், அவற்றுக்கு தீர்வுகளைக் காண்பதற்காக, உரிய அரசியல் மேலதிகாரிகளிடம் கதைப்பதாகவும் இழப்பீடுகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் மதிப்பீடுகளை செய்வதற்காக குழுவொன்றை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்புவதாகவும் தெரிவித்தார்.

Read more...

Tuesday, May 14, 2019

ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பசில் எதிர்ப்பு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பொது ஜன பெரமுனவின் முக்கியஸ்தர் பசில் ராஜபக்ச எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கட்சி மாறிய வியாளேந்திரன் , நாமல் ராஜபக்ச, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை ஆதரவு தெரிவித்துக் கையொப்பமிட்டுள்ளபோதும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சில தவறுகள் உள்ளமையால் அதனை இப்போதைக்குச் சமர்ப்பிக்க வேண்டாம் என மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளதன் ஊடாக மஹிந்த தரப்பின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது.

இவ்வாறு மஹிந்த தரப்பு இரட்டை முகத்தை காண்பிக்கின்றது என்ற செய்திகள் பரவியுள்ள நிலையில், பசில் ராஜபக்சவிடமிருந்து அவ்வாறான எதிர்ப்புக்கள் எதுவும் வரவில்லை என மல்லிகைமொட்டு அறிவித்துள்ளதுடன், நாளை தமது கட்சி கூடி முடிவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பிரேரணைக்கு ஆதரவு வழங்க தயாராகவுள்ளனர் என அறிய முடிகின்றது.

இவ்விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜேவிபி போன்ற கட்சிகள் எவ்வாறான முடிவை எடுக்கப்போகின்றது என்பது தொடர்பில் எவ்வித அறிவித்தல்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

ஜூலியன் அசான்ஜ் சிறையில் வாடுகையில் அரசியல்வாதிகள் “உலக ஊடக சுதந்திர தினம்” கொண்டாடுகிறார்கள்- David Walsh

உலக ஊடக சுதந்திர நாளான மே 3, ஆண்டு தோறும் ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவினால் (UNESCO) ஆதரவளிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

இந் நிகழ்ச்சியை நடத்தும் யுனெஸ்கோ, “ஊடக சுதந்திரத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை” கொண்டாடுவதற்கு, உலகம் முழுவதிலும் ஊடக சுதந்திரத்தை மதிப்பீடு செய்வதற்கு, ஊடகங்களின் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களில் இருந்து அவற்றைக் காப்பாற்றுவதற்கு மற்றும் தங்களது தொழிலிலை மேற்கொள்ளும்போது தங்களது உயிரை இழந்த பத்திரிகையாளர்களுக்கு அஞ்சலி செய்வதற்கு அது சபதம் எடுக்கிறது.”

உண்மைகள் எடுத்துக்காட்டுகின்றவாறு, இந்த கூற்றுக்கள் வெற்றாரவாரமும் ஏமாற்றுமாகும்.

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ் மீண்டும் இலண்டனில் ஒரு உயர் பாதுகாப்பில் அடைக்கப்பட்டு மற்றும் அமெரிக்காவிற்கு ஒப்படைக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார். ஏன்? ஏனென்றால் அவரும் அவரது நிறுவனமும் “ஊடக சுந்திரத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை” முக்கியமானதாக எடுத்துக் கொண்டதாலும் மற்றும் சர்வதேச ரீதியாக அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் நாளாந்த ஊழல் மற்றும் குற்றத்தன்மையையும் மற்றும் குறிப்பாக அமெரிக்க இராணுவத்தின் கொலைகார நடவடிக்கைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியதாலுமாகும். அசான்ஜ் வழக்கறிஞர்களில் ஒருவர் கவனித்தவாறு, வாஷிங்டனானது, “உண்மையான தகவலை வெளியிட்டதற்காக கிரிமினல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளரை நாடுகடத்த கோருகின்றது.”

இதற்கிடையே, ஐக்கிய நாடுகள் சபையின் இன்னொரு அங்கமான, தன்னிச்சையான தடுப்புக் காவலில் வைப்பது தொடர்பாக விசாரணை செய்யும் குழுவானது, பிணையை மீறியதற்காக அசான்ஜிற்கு 50 வார “பொருத்தமற்ற சிறைத் தண்டனை” பற்றிய தனது நிராகரிப்பை வெள்ளி அன்று பதிவு செய்தது. அதனை அது “ஒரு அற்ப மீறல்” என்று குறிப்பிட்டது. 2015ல், ஐ.நா. மனித உரிமை குழுவின் பகுதியான இக் குழுவானது அசான்ஜ் சுவீடன் மற்றும் பிரிட்டன் அரசாங்கங்களினால் “தன்னிச்சையாக கைது செய்யப்பட்டார்” என தன் கருத்தைத் தெரிவித்தது. மற்றும் அவர் “சுதந்திரமாக நடமாடுவதற்கும் நஷ்ட ஈடு பெறுவதற்கும் தகுதி உடையவர் என்று தெரிவித்தது. அந்தக் கருத்தானது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அலட்சியம் செய்யப்பட்டது. அவ்வாறே வெள்ளிக்கிழமையும் இருக்கும்.

யுனெஸ்கோ மற்றும் உலக ஊடக சுதந்திர நாளுடன் தொர்புடைய எவரும், இந்த வாரத்தின் எந்த நிகழ்வின்பொழுதும் அசான்ஜ் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. உண்மையில், எத்தியோப்பியா அடிஸ் அபாபாவில் ஆபிரிக்க ஒன்றியத்தால் நடத்தப்பட்ட ஒரு முக்கிய விழாவில் அழைக்கப்பட்ட பிரதான பேச்சாளர்களில் ஒருவரான பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் Rt. Hon. ஜெரமி ஹண்ட் இருந்தார்.

“மிகவும் மரியாதைக்குரிய” திரு. ஹண்ட் ஏப்பிரல் 11 அன்று அசான்ஜை மிருகத்தனமாக கைதுசெய்து சிறையிடுவதற்குப் பொறுப்பான பிரிட்டிஷ் அதிகாரிகளுள் ஒருவராக இருந்தார். விக்கலீக்ஸ் வெளியீட்டாளரின் கைதை தொடர்ந்து, ஹண்ட் ஒரு அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டார், “இன்று நாம் எடுத்துக்காட்டி இருப்பது யாதெனில் சட்டத்திற்கு மேலாக எவரும் இல்லை என்பதுதான். ஜூலியன் அசான்ஜ் கதாநாயகன் இல்லை. அவர் ஆண்டுக் கணக்கில் உண்மையிலிருந்து மறைந்திருந்தார் மற்றும் அவரது எதிர்காலம் பிரிட்டிஷ் நீதிமுறையினால் தீர்மானிக்கப்பட இருப்பது சரியானதே.”

பத்திரிகைகளுக்கு விடுத்த செய்தியின்படி, அடிஸ் அபாபாவில் அவரது உரையில் ஹண்ட், “ஊடக சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கு அவரது கண்ணோட்டத்தை முன்வைத்தார்.” உலகின் மிக முக்கியமான புலனாய்வு பத்திரிகையாளரை தயாரிக்கப்பட்ட குறிப்புக்களோடு அல்லாமல், பெருநகர போலீஸ் சேவையின் மூர்க்கத்தனமான வன்முறையுடன், பழிவாங்கும் துன்புறுத்தலுக்கு தலைமைதாங்குவதில் வெளியுறவுச்செயலர் “தமது கண்ணோட்டத்தை முன்வைத்தார்” என்று கருத்துரைத்தமைக்காக நாம் மன்னிக்கப்படலாம்.

அவரது உரையின்போது, அப்பட்டமான பொய் மற்றும் வெற்றுரைகளின் கலவையுடன், எத்தியோப்பாவில் அவரது கூட்டத்திற்கு வருகைதந்தோரிடம் ஹண்ட், பல்வேறு கண்ணோட்டங்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் போட்டியிடுவதற்கு உயிர்க்காற்றை அளிக்கும்பொழுது, கருத்துக்களுக்கு இடையிலான பகிரங்கமான போட்டியிலிருந்து அறிவுடைமை எழுகிறது என்பதை மனிதகுலத்தின் முன்னேற்றம் தெளிவாக காட்டுகிறது எனக் கூறினார். “அந்த வேறுபட்ட கண்ணோட்டங்களும் உத்தியோகபூர்வ ஒன்றானதாக இருக்குவரை மட்டும்தான் இல்லாவிடின், உயிர்காற்றின் விநியோகம் துண்டிக்கப்படும்” என ஹண்ட் இன்னும் சேர்த்திருக்கலாம்.

அடிஸ் அபாபாவில் விளக்கவுரைகள் ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் ஆபிரிக்க முதலாளித்துவவாதிகள் போன்ற பங்கேற்ற அனைத்து முதலாளித்துவ அரசியல்வாதிகளின், வளர்ந்துவரும் மக்கள் அதிருப்தி மற்றும் எதிர்த்தரப்பு குரல்களை ஒடுக்க வேண்டியதன் அவசியம் பற்றிய அவர்களின் அச்சங்களால் மேலாதிக்கம் செய்யப்பட்டிருந்தன.

இதுதான் ஹண்ட் மற்றும் பிறராலும் வழங்கப்பட்ட உரைகள் —“ஊடக சுதந்திரம்” தொடர்பாக உலகம் முழுவதிலும் உள்ள பொறுப்பில் உள்ளவர்களிடையே உள்ள பொதுவான அணுகுமுறையாக— அவர்களின் திரிக்கப்பட்டதும் நேர்மையற்றதும் “இரட்டைத்தன்மை” கொண்டதுமாய் இருந்தன. அரசாங்கம் உண்மையில் விரும்புவது ஊடக சுதந்திரத்தில் இருந்து சுதந்திரமாகும். ஆளும் செல்வந்த தட்டு தாங்கள் சுதந்திரமாய் செயல்படுவதையே, அதாவது அதிருப்தி மற்றும் “இடையூறு விளைவிக்கும்” குரல்களின் தலையீடு இல்லாமல் செயல்படுவதையே விரும்புகிறது.

இந்த கவலைகளுக்கு பின்னால் இணையத்தை தணிக்கை செய்தலும், செயலிழக்க செய்வதற்குமான திட்டமிட்ட முயற்சிகள் மற்றும் வெறுப்புப் பேச்சு, இணையம் துன்புறுதல், கற்பனை புள்ளிவிவரங்கள், தவறான செய்தி ஊடக அறிக்கைகள், தேர்தல்களின் மோசடி மற்றும் "ஜனரஞ்சகவாத" வார்த்தையாடல்கள் பற்றிய போலியான நியாயப்படுத்தலும் இருக்கின்றன. நிச்சயமாக, தவறான தகவல்கள், வஞ்சகங்கள் மற்றும் ஒவ்வொரு விதமான பின்தங்கிய தன்மை மற்றும் பாரபட்சம் ஆகியவற்றின் போக்கு முதலாளித்துவ ஊடகங்கள் எல்லா இடங்களிலும் எங்கும் பரவலாக இருந்து வந்திருக்கின்றன, இது பற்றி அதிகாரத்திலுள்ள எவரும் புகார் செய்ய நினைத்ததில்லை. இதுவரை சக்திமிக்கதாக விளங்கிய தவறான தகவல்கள் மற்றும் ஏமாற்றும் இயங்குமுறையின் நிலைமுறிவுதான் இன்னும் பலமடைந்து அசான்ஜை துன்புறுத்துமாறு கோரும் முரட்டுத்தனத்தை தூண்டியும்விடும் சக்தியாக இருக்கின்றது.

இந்நிலைப்பாடுகளின் வழியே, யுனெஸ்கோவின் “இதழியல், போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்: இதழியல், கல்வி மற்றும் பயிற்சிக்கான கையேடு” (2018), “உத்தியோகபூர்வ ஆதாரங்கள்“ மற்றும் “நம்பத்தகுந்த இதழியல்” என்பன அழியாத சொற்றொடர் என அது குறிப்பிடப்படும் தற்போதைய "தகவல் கோளாறால்" பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று வாதிடுகின்றது.

“மாற்று அல்லது எதிர்க்கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாமையை உருவாக்குதல், துருவமுனைப்படல் மற்றும் கட்சிசார்பற்ற தன்மை, ஆகியவற்றை உருவாக்கல்” மூலம், “பிரபலத்தை சட்டரீதியானதாக்குதல்” மூலம், “ஜனரஞ்சக தலைவர்கள், அரசாங்கங்கள் மற்றும் முக்கியத்துவமற்ற நபர்களால் சூழ்ச்சிக்கையாளல்கள் செய்யப்படுவதை அனுமதித்தல்” மூலம் “சமூக ஊடகமானது ஜனநாயகத்தை கீழறுக்கிறது” என ஆசிரியர்கள் வாதிடுகின்றனர்.

செய்தி வெளியீட்டாளர்கள் தமது வெளியீடுகளை தொடர்ச்சியாக வெளியிட போராடுவதையும், செய்தி வெளியீட்டுக்கான தடைகளை நீக்குதல், தமது உள்ளடக்கத்தை வெளியிடுவதற்கு, பாரம்பரிய வாயில்காப்பாளர்களை கடந்துசெல்லல் மற்றும் கவனத்தை ஈர்க்கப் போட்டியிடல் ஆகியவற்றிகாக எவரையும் அல்லது எந்த நிறுவனத்தையும் அதிகாரத்தில் இருத்தல் இயல்நிகழ்ச்சியை கையேடானது ஆர்வத்துடன் சுட்டிக்காட்டுகிறது. மற்றும் அது “சமூக ஊடக மேடைகளில் மற்றும் இணையத்தில் அனைவருக்கும் இலவசமாக அதிவேக தகவலில் ஒவ்வொருவரும் வெளியீட்டாளர் ஆக முடியும் என்று மேலும் எச்சரிக்கிறது. அதன் விளைவாக, குடிமக்கள் எது உண்மை மற்றும் எது பொய் என்று பிரித்தறிய போராடுவர். ஆட்சி மீது எரிந்து விழுவதும் நம்பிக்கை இன்மையும் வருகிறது. தீவிர கருத்துக்கள், சதி தத்துவங்கள் மற்றும் ஜனரஞ்சகவாதம் பூத்துக் குலுங்கிவிட்டால் ஒருமுறை ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகளையும் நிறுவனங்களையும் கேள்விக்குள்ளாக்கும்.”

அவர்களின் பழமைவாத, ஜனநாயக விரோத மற்றும் ஸ்தாபக-ஆதரவு கருத்துக்களின் கடுந்தீவிரம் மற்றும் “ஒருமுறை ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகள் மற்றும் நிறுவனங்களை” பாதுகாக்கும் அவர்களது ஆசையின் ஆழம் ஆகியன உலக ஊடக சுதந்திர நாள் பற்றி நன்றாகப் பேசும் மற்றும் மரியாதைக்குரியனவாக திகழுபவர்கள் ஏன் அசான்ஜையும் அவரைப் போன்றோரும் வாழ்நாள் முடியும் வரை சிறையில் கிடந்து சீரழிய வேண்டும் என நம்புகிறார்கள் என்பதை விளக்க உதவும்.

யுனெஸ்கோவும் இக்கூட்டத்து மீதிப்பேரும் “தவறான தகவல்” பற்றி அக்கறையாக இருந்தனர் என்றால், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், இதுவரை நவீனகால “போலிச் செய்திகள்” நடவடிக்கையின் மோசமானதும் ஒரு மில்லியன் மக்களுக்கும் மேலானோரின் இறப்புக்கு வழி வகுத்த மற்றும் முழு பிராந்தியத்தையும் சீர்குலைய வைத்ததுமான காட்சிப் பொருள் எண் 1 ஆக ஈராக்கில் “பேரழிவு ஆயுதங்கள்” என்பதன் மீதான அமெரிக்க ஊடகத்தின் உண்மையற்ற மற்றும் ஆபத்தான பிரச்ச்சாரம் பற்றி அவர்கள் முன்வைக்க நேரிடும்.

“ஒவ்வொரு வரலாற்று சகாப்தமும் அதன் சொந்த தொழில் நுட்பம் மற்றும் அதன் சொந்த அரசியல் வடிவத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை, தனக்குத்தானே விசித்திரமான ஒரு பாசாங்குத்தனத்தையும் கொண்டிருக்கும்” என்று ஒருமுறை லியோன் ட்ரொட்ஸ்கி அவதானித்தார்.

ஒருபுறம் “பத்திகையாளர்கள் அவர்களது வேலையைச் செய்யும்பொழுது அவர்களைக் காப்பதற்கும் ஊடக சுதந்திரத்தின் நன்மைகளை முன்னிலைப்படுத்தவுமான ஒரு உலகப் பிரச்சாரத்தை அவரும் அவரது அதிகாரிகளும் தொடங்குகின்றர் என்று அறிவிப்பதும் மறுபுறம், சாத்தியமானால் அசான்ஜை எப்போதைக்குமாக மௌனமாக்குவதற்கும் முடிந்தவரை முயற்சி செய்வதும், ஹண்ட்டுக்கு இது எப்படி சாத்தியமாகிறது?

உண்மையிலே இது, வெறுமனே பாசாங்குத்தனம் என்பதற்கும் அப்பால் செல்கிறது. ஆங்கிலப் பொருளியலாரும் சமூக அறிவியலாருமான ஜோன். ஏ. ஹொப்சன் அவரது மதிப்பு மிக்க, ஏகாதிபத்தியம்: ஒரு ஆய்வு (1902) என்பதில், வாதிடுகிறார், “முரண்பாடான கருத்துக்களை அல்லது ஒரே நேரத்தில் மனதில் வைத்திருக்கும்" இந்த “முரண்பாட்டின் மேதைத்தன்மையை” அத்தகைய அதிகாரிகளின் பிரித்தெடுத்தல் என்பது “பாசாங்குத்தனம் இல்லை அல்லது தவறான உள்நோக்கங்களின் திட்டமிடப்பட்ட சிந்தனை உருவாக்கமல்ல” என்று வாதிடுகிறார். இன்னும் சொல்லப்போனால் இது பிளாட்டோவின் வார்த்தையில் “உயிரில் நிறைந்த பொய்” — ஒரு பொய்யாக தன்னையே அறியாத ஒரு பொய்யாக இருக்கும்” நிலை என்றே அவர் வாதிடுகிறார். ஹொப்சன் நிலைநாட்டும் இதுதான் ஏகாதிபத்திய கட்ட வளர்ச்சியின் “அறிவார்ந்த மற்றும் தார்மீக பாதுகாப்பு வழிமுறைகளின் விரிவான பின்னல்களினூடான ஏகாதிபத்திய கட்டத்தின் அபிவிருத்தியின் “அறவியல் மற்றும் சமூக இயல்” ஆக இருந்தது.

“இந்த ஒட்டுமொத்தப் போக்கினதும் செயற்பாட்டையும் கட்டுப்படுத்தும் மற்றும் வழிநடத்தும் கையாளாக இருப்பது ஒரு நாட்டின் சிறிய, திறமையான மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களின் நேரடி, குறுகிய-வரம்பு, பொருளாதாய நலன்களுக்காக இயக்கப்படும் நிதிய மற்றும் தொழிற்துறையின் அழுத்தம் என அவர் எழுதினார்.

அசான்ஜ், செல்வந்த மற்றும் செல்வாக்குடைய “சிறிய, திறமான மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவின் பேரால் பிடிக்கப்பட்ட ஒரு வர்க்கப் போர்க் கைதி, ஏனெனில் அவர் ஒடுக்கப்படுவோருக்கு எதிரான அவர்களின் குற்றங்களில் சிலவற்றை அம்பலப்படுத்தினார்.

அடிஸ் அபாபாவில் ஒருவிடயம் பற்றியதில் ஜெர்மி ஹண்ட் சரியானவராக இருந்தார். “பிரச்சினைகளும் பதட்டங்களும் கழுத்துவரை வந்தால், அதற்கு மேலாகவும் கொதித்து விடும்”, என அவர் எச்சரித்தார். பிரச்சினையை அறிவிப்பதிலிருந்து பத்திரிகையாளர்களை தடுத்துவிட்டால் பிரச்சினை அதைவிட்டுப் போகாது…. அரசாங்கங்கள் பத்திரிகைகளை மூடத் தொடங்கும்பொழுதும் ஊடகத்தை நசுக்கும்பொழுதும், ஒழுங்கமைதியை பாதுகாத்து வைத்திருப்பதைவிட எதிர்காலத்திற்கான தொந்திரவை சேமித்து வைப்பதாகத்தான் அதிகமாய் இருக்கும்.”

சாதாரணமாக அவரிடம் யோசனை எதுவும் இல்லை.

உலகம் முழுவதும், தொழிலாளர்கள் தங்களின் வேலைகளை, சம்பளங்களை மற்றும் சமூக உரிமைகளைக் காத்துக்கொள்வதில் வளர்ந்துவரும் வேலைநிறுத்த இயக்கத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சமூக சக்திதான், ஜனநாயக உரிமைகளைக் காப்பதற்கான உண்மையான சமூக அடிப்படையை அமைப்பர், முதலாளித்துவ செல்வத்தட்டின் ஊழல் மிக்க பிரதிநிதிகள் அல்லர்.

சனிக்கிழமை அன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஆறாவது ஆண்டு இணையவழி மேதின கொண்டாட்டத்தை நடத்தவிருக்கிறது. இந்த நிகழ்வின் மையக் குவிப்பு அசான்ஜையும் துப்பு வழங்குநர் செல்சீ மானிங்கையும் பாதுகாப்பதில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதாகும். நாம் உலக சோசலிச வலைத் தள வாசகர்கள் அனைவரையும், கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க விழையும் அனைவரையும் தங்களைப் பதிவு செய்து அதில் பங்கெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சோசலிஸ வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.

Read more...

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் நீடித்தது இந்தியா

புலிகள் அமைப்புக்கான தடையை மேலும் 5 வருடத்திற்கு நீடித்தது இந்தியா!

இந்திய தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தல், தேசத்துக்கு எதிரான செயல்பாடு ஆகியவற்றில் ஈடுபடுவதால் புலிகள் அமைப்புக்கான தடையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து இந்துpய மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

''தமிழ் ஈழத்துக்காகப் போராடும் விடுதலைப் புலிகளின் நோக்கம் இந்தியாவின் இறையாண்மைக்கும், எல்லைப்புற ஒற்றுமைக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கிறது. இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் இதுபோன்ற பிரிவினை வாதங்களையும், சட்டவிரோதச் செயல்களையும் அனுமதிக்க முடியாது.

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், அந்த அமைப்பில் இருந்து விலகியவர்கள், அனுதாபிகள், ஆதரவாளர்கள் ஆகியோரை சமீபத்தில் தமிழக அரசு கண்டுபிடித்தது. இவர்கள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட எல்டிடிஈ அமைப்பால் பயன்படுத்தப்பட உள்ளார்கள் என்பது குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் (எல்டிடிஈ) அமைப்பு தொடர்ந்து இந்திய அரசுக்கு எதிரான செயல்களிலும், இந்திய அரசின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் செயல்பட்டு வருகிறது.

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் மக்கள் இன்னும் தொடர்ந்து இணையதளங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றனர். இலங்கையில் விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிப்பட இந்திய அரசுதான் காரணம் என்று இணையதளங்களில் பிரச்சாரம் செய்யப்படுவதால், இலங்கை வாழ் தமிழர்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிரான மனநிலை தொடர்ந்து வருகிறது. 2009-ம் ஆண்டு போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டும், அவர்கள் தமிழ் ஈழம் கோரிக்கையை கைவிடவில்லை. அதற்கான பிரச்சாரங்கள், நிதி திரட்டுதலில் ஈடுபட்டு வருகிறார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள், ஆதரவாளர்கள் மீண்டும் சர்வதேச அளவிலும், உள்நாட்டளவிலும் ஒன்று சேர்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்

இதனால், இந்தியாவில் உள்ள மிக முக்கிய விவிஐபி மனிதர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளையலாம். ஆதலால், விடுதலைப் புலிகள் அமைப்பை சட்டவிரோத அமைப்பு என அறிவித்து உடனடியாகத் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது''.

என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச்சட்டம் 1967-ன் கீழ் இதுவரை விடுதலைப் புலிகள், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, அல் கொய்தா உள்ளிட்ட 41 அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more...

Monday, May 13, 2019

ஊடகங்களின் பொறுப்புணர்ச்சியற்ற செயலால் பயங்கரவாதியாகி நிற்கும் நிரபராதி.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு –

எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும் என்கின்றது திருக்குறள் 0423

இலங்கையில் இடம்பெற்ற தொடர்குண்டு வெடிப்புக்கள் மற்றும் நாடு பயங்கரவாதப் பிடியினுள் வந்துள்ளமை தொடர்பில் செய்தியிடுதலில் ஊடகங்கள் போட்டியிட்டு நிற்கின்றன. அவை தகவல்களுக்காக அலைகின்றது. ஆனால் அவ்வாறு கிடைக்கப்பெறுகின்ற தகவல்களை ஊர்ஜிதம் செய்து மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற தனது பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்கின்றது.

அவ்வாறு கிடைக்கப்பெற்ற சிசிரிவி பதிவு ஒன்றை போட்டிபோட்டு ஒளிபரப்பியதால் ஒரு குடும்பம் இன்று நாதியிழந்து நிற்கின்றது.

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாயலத்தில் குண்டுவெடிப்பு இடம்பெற்றபோது, குறித்த தேவாலயத்திற்கு திரும்பும் மூலையிலுள்ள மதிலருகில் தொலைபேசி கொண்டிருந்த ஒருவரது முழுக்குடும்பமே இந்ந அளெகரியத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

அவர்கள் இவ்வாறு ஊடகங்களிடம் கூறுகின்றனர்:

“என் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த பொய் குற்றச்சாட்டை நான் யாரிடம் போய் கூறுவது. எனக்கு இந்த சமூகத்தில் முகம்கொடுக்கவும், எனது மனைவி பிள்ளைகளை நினைத்தும், இந்த சூழலில் எனக்கு உயிர் வாழ்வதற்கும் மிகவும் பயமாகவுள்ளது. இந்த சம்பவத்தால் எனது உறவினர்களுக்கும் பெறும் அவமானம் ஏற்பட்டுள்ளது” என அவர் மிகவும் கவலையுடன் மேற்கண்டவாறு எமக்கு தெரிவித்தார்.
கடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரி கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு செல்லும் பாதையில் மதிலுக்கருகில் தொலைப்பேசியில் கதைத்துக்கொண்டிருந்த சிவப்பு டிசர்ட் அணிந்திருந்த நபரே இவர்.

மேற்படி சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி கேமராவில் பதிவாகியிருந்த கணொளியாகும் என்பதுடன் இந்த காணொளி தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பபட்டதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் ஒரு தீவிரவாதியாக கருதப்படுகின்றார்.

இவரை அனைவருக்கும் கட்டாயமாக நினைவிருக்கும் ஏனென்றால் அனைத்து தொலைக்காட்சி ஊடகங்களிலும் அவரது உருவம் வட்டமிட்டு குறித்து கட்டப்பட்டிருந்தமையே ஆகும். இவ்வாறு வட்டமிட்டு குறித்தக்காட்டப்பட்ட நாபரை பற்றி விசாரித்த போது இவர் கிராமத்தில் வாழும் சாதாரண அப்பாவித்தனமான நபர் என குறிப்பிட்டனர்.

இதனை கேள்விப்பட்டதும் எனது மனம் சங்கடத்திற்குள்ளானதுடன் நான் அவரை தேடிச்சென்றேன். நான் அவரது வீட்டிற்கு சென்ற போது வீட்டில் குறிப்பிட்ட நாபர் இருக்கவில்லை எனினும் அவரது மனைவி, பிள்ளைகள் இருவர், தங்கை ஒருவர் மாத்திரமே இருந்தனர்.

நான் மனைவியிடம் கதைத்தப்பேது அவர் கூறியதாவது: எனது கணவர் பெயர் அரோஷன் ஜூட் அவர் தற்போது வீட்டில் இல்லை தொழிலுக்காக வெளியே சென்றுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு காணொளி சம்பவத்தினால் நாங்கள் சொல்லமுடியாதளவு துன்பங்களை அனுபவித்தோம் நாம் இன்றுவரை பயத்துடனே வாழ்கின்றோம்.

21 ஆம் திகதி நாம் நால்வரும் இறைவழிப்பாட்டிற்காக தேவாலயத்திற்கு சென்று அனைவரும் ஒரே இடத்திலேயே இருந்தோம். அப்போது எனது கணவருக்கு அருட்தந்தை நேவிலிடம் இருந்து அழைப்பொன்று வந்தது எனவே அவர் வெளியே சென்றார்.

சிறிது நேரத்தின் பின்னர் கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் குண்டு வெடித்தது. நான் தூக்கி வீசப்பட்டது போல் உணர்ந்தோன் மகன் என்னை கட்டிப்பித்துக்கொண்டான் என்னுடைய கால் காயங்களுள்ளானது நான் பெரிய மகனின் கைகளை பற்றிப்பிடித்துக்கொண்டேன். நாம் நவலோக வைத்தியசாலைக்கு சென்று காயங்களுக்கு சிகிச்சைப்பெற்று வீட்டிற்கு திரும்பினோம்

திங்கட்கிழமை பொலிஸார் நமது வீட்டிற்கு வந்து எனது கணவர் கேமராவில் உள்ளதாக கூறினார். எம்முடைய தொலைப்பேசி இலக்கத்தையும் பெற்றுக்கொண்டு சென்றனர். அதன் பின்னரே எனது கனவருடன் சம்பந்தப்பட்ட சி.சி.டி கேமராவில் பதிவாகியிருந்த கணொளியை தொலைக்காட்சியில் பார்த்தோம். அதன் பின்னர் எம்மை பயம் பற்றிக்கொண்டது.

பின்னர் நாம் இது தொடர்பாக தெரிவிக்க நீர்கொழும்பு உளவுத்துறை பொலிஸ் பிரிவிற்கு சொன்றோம். அங்கு எமது தகவல்களை பெற்றுக்கொண்டு வீட்டிற்கு செல்லுமாறு எம்மிடம் கூறியதுடன் எமக்கு பாதுகாப்பு வேண்டுமா எனவும் வினாவினர்.

கணவர் புதன்கிழமை வேலைக்கு சென்றுவிட்டார். அவர் தூரத்தில் வோலை செய்கின்றார். நான் எமது பகுதியில் இடம்பெற்ற அனைத்து மரணவீட்டிற்கும் சென்றேன் அங்கிருந்த மக்கள் அவரை கொல்ல வேண்டும் என்று கோபத்துடன் எசுகின்றனர். எனினும் எனது கணவர் ஒரு நிரபராதி ஆவார்.

நான் அழுதுக்கொண்டே விட்டிற்கு வந்தேன் சிலர் எம்மை பற்றி தேடிப்பார்த்தனர். இதற்கு முன்னர் எமது வீட்டிற்கு வந்தவர்கள் வருவதை நிறுத்திக்கொண்டனர்.நாம் மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு முகம்கொடுத்தோம். நான் எனது பிள்ளைகள் பற்றிய பயத்தில் இருந்தேன் இரவு முழுவதும் எமது வீட்டிற்கு முன்னால் நாய் குறைத்துக்கொண்டே இருக்கும் ஆழ் நடமாட்டம் இருப்பது போன்று தோன்றும் எனினும் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு பயம். எனது கணவரை டிவியில் பார்த்த உறவினர்கள் அவரை இனங்கண்டுக்கொண்டனர் எனினும் பயம் காரணமாக வெளியில் தெரிவிக்கவில்லை.

நாம் இந்த சம்பவம் காரணமாக மிகவும் மோசமான நிலைக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளது ஊடகங்கள் எனது கணவரை கொடூரமான தீவிரவாதியாக சித்தரித்துள்ளது. அவர் சம்பவ தினத்தன்று எங்கு இருந்தார் என்ன செய்துகொண்டிருந்தார் என அவரிடம் கேட்டால் தெரியும் கண்ணீரை துடைத்துக் கொண்டு சிரியானி தனது கணவருடன் அழைப்பினை ஏற்படுத்தி கொடுத்தார். பாடசாலை செல்லும் வயதிலிருக்கும் இவர்களது பிள்ளைகள் இருவரும் இன்னும் பயத்துடனே இருக்கின்றனர்.

நாங்கள் தேவாலயத்திற்கு சென்று எப்போதும் வழிபாட்டில் ஈடுப்படும் இடத்திலேயே இருந்தோம் . அப்போது அருட்தந்தையின் அழைப்பு வர நான் அவருடன் தொடர்பு கொள்வதற்காக வெளியே வந்தேன். அவ்வாறு நான் வந்து நின்ற இடமே பிரதர் ஹவுஸ், அருட்தந்தையும் அவ்விடத்திற்கு வந்தார்.(அந்த காணொளியிலும் அவர் வருவது தெரிகிறது)

அப்போது பையொன்றை சுமந்துக் கொண்டு இளைஞர் ஒருவர் தேவாலயம் பக்கம் செல்வதையும் அவதானித்தேன். அவர் பார்ப்பதற்கு மதிக்க தக்கவராகவே தோற்றமளித்தார். அப்போது நான் அது யார் என சிந்தித்தேன். அவர் சென்று சிறிது நேரத்திற்கு பின் வெடிப்புச் சத்தமொன்று கேட்டது

நான் அது குண்டு வெடிப்பு என்று நினைக்க வில்லை, மின்விளக்கு வெடித்திருக்கும் என்றே நினைத்தேன். அதன்போது நான் தேவாலயத்தை நோக்கி ஓடினேன். அப்போது அங்கிருந்த மக்கள் குண்டு வெடித்து விட்டதாக குறிப்பிட்டார்கள், நான் பையொன்றை சுமந்துக் கொண்டு இளைஞர் ஒருவர் இப்பகுதிக்கு வந்தார் என தெரிவித்தேன். அவர் பார்ப்பதற்கு கௌரவமானவராக தெரிந்ததினால் நான் அரை சந்தேகிக்க வில்லை .

பிறகு அந்த நபர்தான் தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என நான் அறிந்தேன் . அதுமட்டுமல்ல அந்த நபருடன் என்னையும் கட்டம் பொட்டு காட்டுகின்றார்கள் என்று அறிந்தவுடன் மிகவும் பயந்தேன். கடவுளே நான் என்ன செய்வதென்று சிந்தித்தேன் ,பிறகு பொலிஸாரிடம் அழைப்பினை மேற்கொண்டு இது தொடர்பில் தெரிவித்தேன். பொலிஸார் பிரச்சினையில்லை என தெரிவித்தனர். பின் என் மணைவி பயத்தில் உள்ளார் எனவும் குறிப்பிட்டேன் ஆனால் ஒருவரும் என்னை சந்தேகிக்க வில்லை. உதவி பொலிஸ் அத்தியட்சகரை சந்தித்து இது தொடர்பில் தெரிவித்தோம்.

நான் அந்த ஊடகத்துடன் தொடர்பு கொண்டேன், நான் நிரபராதி என உறுதிபடுத்திய போதும் இவர்கள் அதற்காக மிக குறைவான காலத்தையே எனக்கு கொடுத்தார்கள். ஆனால் ஏனைய ஊடகங்களில் அந்த காலம் கூட வழங்கப்பட வில்லை, எம் ஊர்மக்களுக்கு என்னைப்பற்றி தெரிந்து இருந்தும் அவர்கள் என் மீது கொண்ட சந்தேகத்திற்கு காரணம் நான் வெளிநாடு சென்று வந்த நான்கு மாதகாலமே ஆகிவுள்ளது என்பதாலேயே, அங்கு சிலர் நான் வெளிநாடு சென்று ஆயுதப் பயிற்சி பெற்று வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்கள்.

எனக்கு பயமே எனது பிள்ளைகள் மற்றும் மனைவியை குறித்தே. இவ்வளவு நாட்களாக நிரபராதியாக இருந்த நான் குறிப்பிட்ட நொடிக்குள் பயங்கரவாதியாக அடையாளம் காணப்பட்டுள்ளேன். நான் ஆடைச் தொழிற்சாலையில் முகாமையாளராக செயற்படுகின்றேன். நான் நிரபராதி என்பதை நான் அறிவேன், எனது வீட்டார்களும் அறிவார்கள், அதேபோல் தேவாலயத்தின் அருட்தந்தைமார்களும் அறிவார்கள். இருந்த போதும் இதனால் எனக்கு பெரும் அவப்பெயர் ஏற்பட்டள்ளது. எனக்கு சமூகத்தை சந்திக்கவும் அச்சமாக உள்ளது.இந்த விடயங்களினால் என் பிள்ளைகளுக்கு ஏதாவது நிகழ்ந்தால் நான் உயிருடன் இருப்பதில் என்ன இலாபம் என அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

30 வருடகால யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டிருந்த நாம் இப்போது முகம் கொடுத்திருப்பது அதையும் விட மிக பயங்கரமான நிலைமையாகும். இப்போதுள்ள நிலைமையில் யாரையும் சந்தேகத்துடன் பார்க்காமல், எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டும்.

இவ்வாறான நிலைமைகளின் போது ஊடகத்திற்கும் ஊடகவியலாளர்களுக்கும் பாரிய பொறுப்பு இருக்கின்றது. இன்று அரோசனுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமையை போன்று வேறொருவருக்கும் ஏற்பட கூடாது என்பதை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும். ஊடகங்கள் எப்போதும் உண்மையான உறுதிப்படுத்திய செய்திகளை மாத்திரமே வெளியிட வேண்டும்.

Read more...

Sunday, May 12, 2019

அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் இலங்கை நீதிதுறையினுள் தலையீடு. போட்டுடைக்கின்றார் கம்பன்பில

இலங்கையின் நீதித்துறையின் விவகாரங்களில் தலைநுழைக்கும் நோக்கோடு அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் உயர் மட்டங்களில் இருக்கும் நீதிபதிகள் பலரை கருத்தரங்கு ஒன்றுக்கு அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக பொது ஜன ஐக்கிய முன்னணியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜாதிக்க பிவித்துரு உறுமய என்ற கட்சியின் தலைவருமான உதய கம்பன்பில சாடியுள்ளார்.

நாட்டின் சமகால நிலவரங்கள் தொடர்பாக கடந்த 8ம் திகதி பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்படி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

அங்கு உரையாற்றிய அவர் கூறுகையில் :

அமெரிக்கா எமது நீதிமன்றுகளை கையாள்வதன் ஊடாக உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முயற்சி செய்கின்றது. 'நிதிச் சலவை மற்றும் திருடப்பட்டவற்றை மீட்டல்' என்கின்ற தலைப்பில் எமது நீதிபதிகள் சிலருக்கு அமெரிக்காவில் கருத்தரங்கு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை அமெரிக்க நீதித் திணைக்களமும் FBI ம் இணைந்து செய்திருக்கின்றார்கள்.

இக்கருத்தரங்கிலே 9 சீரேஸ்ட நீதிபதிகள் கலந்து கொண்டிருக்கின்றார்கள். உச்ச நீதிமன்றின் நீதிபதிகளான புவனகே அலுவிகார , பிரியந்த ஜெயவர்த்தன , விஜித்குமார மலல்கொட, மேன்முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான ஏஎச்எம்டி நாவாஸ் , ஜனக் டீ சில்வா, என் பந்துள குணரட்ண மற்றும் உயர் நீதிமன்றின் நீதிபதிகளான சம்பத் விஜயரட்ண, சம்பத் அபயகோண், சம்பா ஜானகி ராஜரட்ன ஆகியோரே குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கருத்தரங்கின் இணைப்பாளராக செயற்பட்ட அமெரிக்க தூதரக அதிகாரியான பற்றிக் ரிலோ என்பவர் அங்கு இடம்பெற்ற இராப்போசன நிகழ்வு ஒன்றின்போது, முன்னாள் ஜனாதிபதி , முப்படைகளின் பிரதானி மற்றும் ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்த காமினி செனரத் ஆகியோரது வழக்குகளின் நிலைமைகளை தொடர்பில் விசாரித்திருக்கின்றார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள் 'குறித்த வழக்குகள் மிகவும் பலவீமானவை' என்றுள்ளனர். அப்போது 'நீங்கள் சகல சிரேஸ்ட அரச அதிகாரிகளுக்கும் உதாரணமானதோர் தீர்ப்பினை நீங்கள் வழங்குவீர்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்' என பற்றிக் தெரிவித்துள்ளார். அவ்வாறாயின் யார் இந்த 'நாங்கள்' நாங்கள் என்பது அமெரிக்க அரசாங்கமா?

பற்றிக் அத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை. முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான வழக்குகளில் காணப்படுகின்ற தாமதங்களுக்கான காரணங்களை வினவியிருக்கின்றார். தமது தீர்ப்புக்களுக்கு எதிராக கோத்தபாய ராஜபக்ச மேல்முறையீடு செய்துள்ளார் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்குகளின் இறுதி தீர்ப்புக்களை முடிந்த விரைவில் வழங்குமாறு பற்றிக் கேட்டிருக்கின்றார். இது என்ன? பற்றிக் எங்களது நீதிபதிகளுக்கு புத்திமதி கூறுகின்றார்.

தொடர்ந்து பேசிய கம்பன்பில, இவ்விடத்தில் மிகுந்த ஆத்திரம் அடைந்த எமது தேசப்பற்றாளர்களில் ஒருவரான நீதிபதி ஒருவர் அங்கு இடம்பெற்ற சகல சம்பாஷனைகளையும் பதிவு செய்திருக்கின்றார். அதன் பிரதி ஒன்று என்னிடம் உள்ளது. அவற்றில் மிகவும் முக்கியமான விடயங்கள் அடங்கியுள்ளதால் அதை இந்த சபைக்கு கையளிப்பதை தவிர்த்துக்கொள்கின்றேன்.

கம்பன்பில அவர்களின் மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று அமெரிக்க தூதரகத்தின் கருத்தினை அறிய முற்பட்டுள்ளது. மின்னஞ்சல் ஊடாக அமெரிக்க தூதரக பேச்சாளரை அவர்கள் தொடர்பு கொண்டிருந்தபோது, இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என அறிய முடிகின்றது.

Read more...

வவுனியா பிரதேச செயலாளரின் உறுதுணையுடன் றிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான்!!

வவுனியாவில் பழந்தமிழ் கிராமங்கள் பல அரச அதிகாரிகளின் உறுதுணையுடன் சூட்சுமமான முறையில் திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வவுனியா A9 பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள நொச்சிமோட்டை கிராமத்தில் உள்ள பல காணிகளுக்கு காணிக் கச்சேரி என்ற பெயரில் மக்களை ஏமாற்றி காணிகளை அபகரிப்பதோடு அதில் முஸ்லீம் மக்களை குடியேற்றி தமிழர் இனப்பரம்பலை சிதைக்கும் முயற்சிகள் நடந்தேறிவருகின்றது.

சுமார் 180 ஏக்கர் அளவிலான காணிகளுக்கு காணிக்கச்சேரி இடம்பெற்று அவற்றில் சுமார் 100 ஏக்கர் அளவிலான காணிகளுக்கு இப்பிரதேசங்களை ஒரு போதும் சேர்ந்திராத பிரதேச செயலாளரின் மனைவியின் உறவினர்கள் அண்ணனின் உறவினர்கள் என ஏறத்தாழ நூறு பேருக்குமேல் இவ்வாறு காணி அனுமதிப்பத்திரங்கள் பதியப்பட்டு வவுனியா பிரதேச செயலாளரினால் கையகப்படுத்தப்பட்டுள்ளமை ஆதாரபூர்வமாக நிருபிக்கபட்டுள்ளது

இதில் திடுக்கிடும் உன்மையாதெனில் பிரதேச செயலாளரின் உறவினர்கள் மற்றும் பிரதேச செயலாளருக்கு நம்பிக்கையானவர்கள் மூலம் தனது கட்டுப்பாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான காணிகளை அவர்களின் பெயரில் பதிந்து பின்பு LDO காணிப்பத்திரங்களுக்கான உறுதிப்பத்திரம் கிடைக்கப்பெற்றதும் முஸ்லீம்மக்களின் பெயரில் மாற்றம் செய்வதே பிரதேச செயலாளர் மற்றும் றிசாட் அமைச்சரின் திட்டம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.இவ் சதித்திட்டத்திற்கு வவுனியாவை சேரந்த ஒரு சில வழங்கறிஞர்களும் உடந்தையாக இருக்கின்றனர்.

மேலும் நோச்சிமோட்டை கிராமம் மட்டுமல்லாது A9 பிரதான வீதியை அண்மித்த ஏனைய சில தமிழர் கிராமங்களும் இந்த சதித்திட்ட வலைக்குள் வீழ்ந்துள்ளதாக அறியமுடிகிறது உறுதிப்பத்திரங்கள் மாற்றப்பட்டதும் குடியேற்றங்களை சட்டரீதியாக தடுக்கமுடியாது என்பது வெளிப்படை உன்மை அடுத்த சில வருடங்களில் வவுனியா-யாழ் வீதியை அண்மித்த பல கிராமங்களில் திடீர் இனப்பரம்பல் மாற்றமடையும் சந்தர்ப்பம் இதன் மூலம் எதிர்பாக்கப்படுகிறது.

வவுனியா பிரதேச செயலாளரின் குறித்த முறையற்ற காணி சுவீகரிப்பு நடவடிக்கை தொடர்பாக ஆதாரபூர்வமாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஹனீபா அவர்களிடம் தெரிவித்திருந்த போதும். குறிப்பிட்ட அமைச்சரின் தலையீடு காரணமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இவ் பிரதேச செயலாளருக்கு எதிராக வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவிலும் பிரதேச மக்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது






Read more...

பாடசாலைகளின் பாதுகாப்பை இரு வாரங்களில் உறுதி செய்யாவிட்டால் தெருவுக்கு இறங்குவேன். மிரட்டுகிறார் மட்டு தேரர்.

அப்பாவி தமிழ் மக்களின் பிள்ளைகளை பலாத்காரமாக சஹ்ரான் கடத்திக் கொண்டு சென்று இந்த குழுவில் இணைத்துக் கொள்வதாக தகவல் கிடைத்துள்ளது என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட தாயார் தனது மகளை கடத்திக் கொண்டு சென்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவிக்கச் சென்ற போது முறைப்பாட்டை ஏற்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களின் சோதனை நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

பாடசாலை மாணவர்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்க அரசுக்கு இரண்டு வாரகாலம் அவகாசம் தருகின்றோம். அதனை அரசு உறுதிப்படுத்தபடவில்லை என்றால் நாங்கள் வீதிக்கு இறங்கவேண்டி ஏற்படும்.

கடந்த 3 கிழமையாக நாட்டில் பாதுகாப்பு அற்ற நிலை இருப்பது நாம் அனைவரும் அறிந்த விடயம். இந்த பிரச்சினை தொடர்பாக அரசியல்வாதிகள் அதிகாரிகளிடம் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வாள்கள் உடனடியாக இல்லாமல் செய்யப்பட்டு நம்பிக்கையை உறுதிப்படுத்துமாறு வேண்டுகின்றோம்.

காத்தான்குடி பிரதேசத்தில் சஹ்ரான் இருந்து கொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவின் அறிவுறுத்தலுக்கும் அதிகாரத்தையும் பயன்படுத்தி சஹ்ரான் இந்த ஜ.எஸ்.ஜ.எஸ். குழுவை கட்டியெழுப்பியிருந்தார்.

அது மட்டுமல்ல சில சட்டத்தரணிகள், நீதவான்களும் அதனுடன் தொடர்பு பட்டிருக்கின்றனர். அதனை நிரூபிப்பதற்கான சாட்சி இருக்கின்றது. இது வரைக்கும் சஹ்ரான் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிப்பது எவ்வாறு?

ஆளுநர் ஏ.எல். எம். ஹிஸ்புல்லாவின் காரியாலயத்தில் துப்பாக்கி ரவைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். அது பொலிஸ் உத்தியோகத்தர் எடுத்துச் சென்ற ஆயுதங்கள் எனவும் அதனை அங்கு விட்டு விட்டு வந்தாகவும் கடைசியில் அதற்கு கதை ஒன்று கூறினர்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவ்வாறு பொறுப்பில்லாமல் ஆயுதங்களை விட்டு விட்டு வரமுடியுமா? அது பாரதூரமான பிரச்சினை ஆகையினால் அவர்கள் இவ்வாறு விடுதலை செய்தது எந்த நோக்கத்திற்காக என்றும் எமக்கு தெரியாது.

ஆனால் இறுதியாக பாதிக்கப்படுவது தமிழ் மக்கள் 30 வருட யுத்ததினால் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த இம்மக்களுக்கு மீண்டுமோர் துயரத்தை ஏற்படுத்துவதா?

இந்த அப்பாவி தமிழ்மக்களின் பிள்ளைகளை பலாத்காரமாக சஹ்ரான் கடத்தி கொண்டு சென்று இந்த குழுவில் இணைத்துக் கொள்வதாக தகவல் கிடைத்துள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட தாயார் தனது மகளை கடத்திக் கொண்டு சென்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைபாடு தெரிவிக்க சென்றபோது முறைப்பாட்டை ஏற்கவில்லையாம்.

எனவே இவ்வாறான பிரச்சினைகளுக்கு பெற்றோரை தள்ளவேண்டாம் என பொறுப்புள்ள அதிகாரிகளுக்கு மதகுரு என்ற வகையில் பெறுப்புடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

மேலும், இந் நாட்டில் எல்லோருக்கும் பொதுச் சட்டம் இருக்க வேண்டும் அந்த சட்டத்தை ஓவ்வொருவருக்கும் பிரித்து வழங்கியதன் பிரதிபலன்தான் இது.

அனைவருக்கும் பொதுவான சட்டத்தை நடை முறைப்படுத்துங்கள் என அரசுக்கு மிகவும் பொறுப்புடன் இந்த விடையத்தை அறியத்தருவதோடு, நிருவாகத்துறை, அரச திணைக்களம், நீதிமன்றங்கள் பாடசாலைகள் போன்ற அரச திணைக்களங்களில் எப்படி இஸ்லாமிய பெண்கள் உடல் முழுக்க உடையை போர்த்திக் கொண்டு உள்நுழைவது?

அரசுக்கு உரித்தான ஒழுக்க ரீதியான உடைகளை உடுக்குமாறு இந்த தமிழ் சிங்கள பெண்களுக்கு சாரி ஒசரி அணியுங்கள் என கூறிக் கொண்டு ஏன் இந்த முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் இந்த பௌத்த நாட்டினுள் இந்த மாதிரி ஒரு விடயத்தை அனுமதித்துள்ளனர்.

இவ்வாறன உடையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இந்த நாட்டிலும் இவ்வாறான தாக்குதலை செய்வதற்கு அவர்கள் முன்வந்திருக்கின்றனர் ஆகையினால் இந்த விடயம் தொடர்பாக கவனத்தை செலுத்துங்கள்.

அவசரகால மற்றும் பயங்கரவாத சட்டத்தை பயன்படுத்து எந்த ஒருவரையும் சிறைப்படுத்தலாம். ஆனால் இந்த நாட்டிற்குள் சேதத்தை ஏற்படுத்தி வருபவர்களை கைது செய்யாது நியாயத்தை கதைக்கும் மக்களை கைது செய்வது என்பது தொடர்பாக நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் .

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் , அரசாங்க அதிபர், கல்வி பணிப்பாளர்கள், என சம்மந்தப்பட்ட அதிகரிகளுக்கு மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக எதிர்வரும் புதன்கிழமை அறியப்படுத்த உள்ளோம் அதன் பிறகு அவர்கள் சரியான தீர்வை முன்வைக்காவிடின், நாங்கள் வீதிக்கு இறங்கவேண்டி ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Read more...

சமூக வலைத்தளத்தில் இனவாத பதிவு. சிலாபத்தில் ஊரடங்குக்கு வித்திட்டது.

சிலாபம் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கட்டுபடுத்தும் பொருட்டு சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இனங்களுக்கிடையே பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கில் சமூக வலைத்தளம் ஒன்றில் பதிவிடப்பட்ட பதிவு ஒன்றின் காரணமாக ஏற்பட்ட குளப்பநிலை பிரதேசத்தில் நிலைiமைகளை மோசமடையவைத்துள்ளது என அறியக்கிடைக்கின்றது.

இதன் விளைவாக சிலாபம் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பதிவினை இட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்:

Read more...

Saturday, May 11, 2019

கோழிகளை பாதுகாக்க நரியை விட்ட கதைதான் ஹிஸ்புல்லாவிற்கு அரசு வழங்கிய அனுமதி. சுனில் ஹந்துன்நெத்தி.

கோப் குழு தலைவர் என்ற பதவியை பயன்படுத்தி களவை பிடிப்பேன் என்கின்றார்.

கிழக்கில் இயங்கும் ஹிரா நிறுவனம் ஹிஸ்புல்லாஹ்வினது என்பதை இன்னும் அரசாங்கம் வெளிப்படையாக கூறாதது ஏன்? எதற்காக அரசாங்கம் ஹிஸ்புல்லாஹ்விற்கு அஞ்சுகின்றது, இந்த வாய்ப்பை வைத்து ஹிரா நிறுவனத்தை பல்கலைக்கழகமாக மாற்ற முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் கோழிகளை பாதுகாக்க நரியை விட்டது போன்றது ஹிஸ்புல்லாஹ்விற்கு இந்த நிறுவனத்தை கொடுத்தது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் கோப் குழு தலைவருமான தோழர் சுனில் ஹந்துநெத்தி சபையில் தெரிவித்தார்.

கோப் குழுவின் தலைவர் என்ற வகையில் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்வரும் 21 ஆம் திகதி தொழிற்பயிற்சி அதிகாரி, முதலீட்டு சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மற்றும் தேவைப்படும் சகல நிறுவனங்களையும் வரவழைத்து இதுகுறித்து ஆராயவுள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்.

"மதம் என்ற பெயரில் செய்யும் கொலைகள், பயங்கரவாதம் ஒருபோதும் மதமாக கருதப்படாது. மதம் எப்போதும் கருணை, அன்பு என்பவற்றை கூற வேண்டும்.

அடிப்படைவாதிகளின் மூலமாக மதம் வளராது. அதுபோலவே இந்த பயங்கரவாதம் எப்போதும் அதிகார வர்க்கத்தினால் வளர்க்கப்படுகின்றது. மத சுதந்திரம் என்பது ஏனைய மனித கொலைகளை நியாயப்படுத்துவதாக அமையாது. மதம் என்பது மனித சுதந்திரத்தை அதிகமாக வலியுறுத்த வேண்டும். மதம் என்ற பெயரில் மனித உரிமைகளை கட்டுப்படுத்திவிடக்கூடாது.

பெண் உரிமை, மனித உரிமைகளை அடிப்படை உரிமைகளை, சமத்துவம் என்பவற்றை மதம் பறித்துவிடக்கூடாது. ஆனால் இன்று இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் மதத்தை அடிப்படையாக வைத்து மதத்தின் பெயரில் நடத்தப்பட்ட தாக்குதல் என்பது மிகத்தெளிவாக தெரிகின்றது. ஆனால் பிரதமரின் ஜனாதிபதியின் அவர்களின் வாய்களில் இருந்து இது இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதம் என இன்னமும் கூறியதாக தெரியவில்லை.

ஆனால் ஏனைய அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். அரச தலைவர்கள் ஏன் இதனை இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலாக ஏற்றுகொள்ள இன்னமும் தயாரிக்கவில்லை என்பது தெரியவில்லை.
இந்த தாக்குதல் நடக்கப் போவது தெரிந்தும் அதனை கூறாது இறுதியில் இந்த தாக்குதலை ஒரு நகைப்புக்குரிய விடயமாக மாற்றிவிட்டனர். இதனால் மக்கள் கோபமடைந்துள்ளனர்.

அதேபோல் இந்த அரசாங்கம் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த எந்த வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. பெண்களின் பாதுகாப்புக்கும், பள்ளிகளில் புல் வெட்டுவதற்கும் கத்திகளும் வாள்களும் வைத்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். அதேபோல் ஊடகங்களில் தேடுதல் நடவடிக்கைகளை காட்ட வேண்டாம் என்ற காரணிகளை கூறுகின்றனர்.

மக்கள் அச்சத்தில் உள்ளனர் என கூறுகின்றனர், அதேபோல் தான் இந்த ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற கருத்துகளும் அவர்களின் முகங்களையும் பார்க்கையில் மக்கள் அதிகமாக ஆத்திரமடைகின்றனர். முதலில் இவற்றை தடுக்க வேண்டும். அதேபோல் 2013 ஆம் ஆண்டு தொடக்கம் கிழக்கில் ஹிரா நிறுவனம் நடத்தப்படுகின்றது என்றால் அது யாரால் நடத்தப்படுகின்றது, அதன் சொந்தக்காரர்கள் யார்? ஏன் இந்த குற்றத்தில் ஹிஸ்புல்லாஹ்வின் பெயரை கூற ஏன் நீங்கள் அனைவரும் அஞ்சுகிண்றீர்கள்? இந்த நிறுவனத்தை ஆரம்பித்த நாள் குறித்து தெரிவிக்க முடியும் என்றால் ஏன் இந்த நிறுவனத்தின் தலைவர் ஹிஸ்புல்லாஹ்வின் பெயரை கூற தைரியம் இல்லை. கிழக்கை அவரது கட்டுப்பாட்டில் வைத்துள்ள காரணத்தினால் அவர் பெயரை கூற அரசாங்கம் விரும்பவில்லை. இந்த வாய்ப்பை வைத்து ஹிரா நிறைவனத்தை பல்கலைக்கழகமாக மாற்ற அவர்கள் முயற்சிக்கின்றனர்.

கோப் குழுவின் தலைவர் என்ற வகையில் எனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்வரும் 21 ஆம் திகதி தொழிற்பயிற்சி அதிகாரி, முதலீட்டு சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மற்றும் தேவைப்படும் சகல நிறுவனங்களையும் வரவழைத்து இதுகுறித்து ஆராயவுள்ளேன். இந்த நிறுவனத்தை தனியார் பல்கலைக்கழகமாக மாற்றுவதாக ஜனாதிபதி கூறுகின்றார். யாருடைய தேவைக்காக இதனை செய்ய முயற்சிக்கின்றார்.

ஹிஸ்புல்லாவின் பெயரில் தனியார் பல்கலைக்கழகமாக மாற்றவா ஜனாதிபதி முயற்சித்து வருகின்றார். இந்த நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட 35 ஏக்கர் மகாவலி அபிவிருத்திக்கு சொந்தமான நிலம். இந்த நிலத்தை விவசாய அமைப்பு ஒன்றின் பெயரில் ஹிரா நிறுவனத்துக்கு கொடுத்தது எவ்வாறு. யார் இதற்கு அனுமதி கொடுத்தது. இதெல்லாம் நீங்கள் அனைவரும் இணைந்து செய்த சூழ்ச்சி.

மக்களின் வாக்குகளுக்காக மட்டுமல்ல இந்த அமைப்பின் பணம் , அதிகாரத்தை பெற்றுக்கொண்டு இவற்றை செய்து வந்துள்ளீர்கள். கோழிகளை பாதுகாக்க நரியை விட்டது போன்றது ஹிஸ்புல்லாஹ்விற்கு இந்த நிறுவனத்தை கொடுத்தது. இலங்கையில் எந்த பல்கலைக்கழகங்களிலும் இல்லாத சலுகைகள் அபிவிருத்திகள் இந்த ஒரு நிறுவனத்துக்கு கொடுக்கப்படுகின்றது.

கையில் பணம் இல்லாது வந்த இவர்கள் இன்று எவ்வாறு கோடிஸ்வர அந்தஸ்தை பெற்றனர் என்பது குறித்து ஆராய வேண்டும். மதத்தையும், அரசியலையும் பயன்படுத்தி பலமான நபர்களாக இவர்கள் உள்ளனர்.

முதலில் இந்த அரசியல்வாதிகளை விசாரிக்க வேண்டும். மேலும் முஸ்லிம்களை எவ்வாறு சமூகத்தில் இணைத்துக் கொள்வது என்பது குறித்து ஆராய வேண்டும். அரசாங்கம் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவர்களை அடிப்படைவாத கொள்கைக்குள் தள்ளாது எவ்வாறு மீட்பது என்பது குறித்து ஆழமான கலந்துரையாடல் வேண்டும். மதக் கட்டுப்பாடுகள் என்ன என்பது குறித்து ஆராய வேண்டும். இப்போது நல்ல வாய்ப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை சரியாக அரசாங்கம் கையாள வேண்டும். கலந்துரையாடல் என்றால் மீண்டும் ஹிஸ்புல்லாஹ், ரிஷாத் பதியுதீன், அசாத் சாலியுடன் அல்ல. உருப்படியான மதத் தலைவர்களை வரவழைக்க வேண்டும். வெடிகுண்டு தாரி போல இவர்கள் எவரும் தற்கொலை தாரிகளாக மாறப்போவதில்லை" என்று தெரிவித்தார்.

Read more...

சுற்றுநிருபம் தெரியாமல் சுகாதார அமைச்சராக இருந்தேன் பகிரங்கமாக ஒத்துக்கொண்டார் சத்தியலிங்கம்!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு வடக்கு மாகாண ஆளுனர் முன்னை நாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார்.

இவ் சந்திப்பில் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பளாராக நியமிக்கப்பட்ட வைத்தியர் சத்தியமூர்த்தியின் நியமனம் தொடர்பாக முன்னாள் வடக்கு மாகாண எதிர்க் கட்சி தலைவர் தவராச கேள்வியெழுப்பியிருந்தார். இதன்போது உரையாற்றிய முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் அவர்கள் வைத்தியர் சத்தியமூர்த்திக்கு வழங்கப்பட்ட நியமனம் முறைகேடானது எனவும் மத்திய சுகாதார அமைச்சால் இவ்வாறு நியமனம் வழங்கமுடியாது எனவும் தெரிவித்திருந்தார்.

இதன்போது சத்தியலிங்கத்திற்கு பதிலளிக்குமுகமாக உரையாற்றிய தவராசா, மத்திய சுகாதார அமைச்சுக்கே பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது என சுற்றுநிருபத்தை காட்டி வாதிட்ட போது சத்தியலிங்கம், நான் மூன்றுவருடகாலமாக சுகாதார அமைச்சராக இருந்தும் இவ் சுற்றுநிருபத்தை படிக்கவில்லை என்பதை பகிரங்கமாக அவ் கூட்டத்தில் ஒத்துக்கொண்டார்.

சத்தியலிங்கம் சுகாதார அமைச்சராக இருந்தகாலத்தில் இவ்வாறாக தன்னுடைய அமைச்சின் சுற்றுநிருபங்களை படிக்காததன் காரணத்தினால் தான் நிதிமோசடி மற்றும் அதிகார துஸ்பிரயோகம் போன்ற பல முறைகேடுகளில் ஈடுபட்டு பின்பு அமைச்சு பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார் என்பது தெட்டத்தெளிவாகின்றது.

Read more...

Friday, May 10, 2019

தமிழ் தலைவர்கள் விட்டதவறை, முஸ்லிம் தலைவர்கள் விடக்கூடாது - கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன

புலிகள் ஆயுதம் ஏந்திய போது தமிழர்களின் தலைவர்கள் அதனை ஆதரித்து செய்த தவறை இப்போது இஸ்லாமிய பயங்கரவாத செயற்பாடுகளில் முஸ்லிம் மக்களும் தலைவர்களும் செய்துவிட வேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று -10-- வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்.

இந் நாட்டில் தமிழ் பயங்கரவாத செயற்பாடுகளில் சர்வதேச ஆதரவு இருந்தது. அப்போது தமிழ் மக்களின் தலைவர்கள் செய்த தவறை இப்பொது முஸ்லிம் மக்களின் தலைவர்கள் செய்துவிட வேண்டாம்.

அன்று விடுதலைப்புலிகள் உருவாகிய போது அதனை ஆதரித்து தமிழர் தரப்பு தலைமைகள் தவறிழைத்தது. அதேபோல் இன்று பரவிவரும் சர்வதேச இஸ்லாமிய பயங்கவராதத்தை முஸ்லிம் மக்களும் மத தலைவர்களும் ஆதரித்துவிட வேண்டாம்.

இந்த இஸ்லாமிய அமைப்பிற்கும் சர்வதேச ஒத்துழைப்பு அதிகமாகவே உள்ளது. இதனை தடுத்து நிறத்த முஸ்லிம் மக்களுக்கும் தலைவர்களுக்கும் அதிகமாகவே பொறுப்பு உள்ளது. அதேபோல் அரசாங்கமாக நாமும் எமது கடமை பொறுப்புகளை சரியாக செய்து முடிக்க வேண்டும்.

இன்று முகப்புத்தகங்களில் இஸ்லாமியர்கள் அனைவரையும் தவறாக விமர்சிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. அதேபோல் முஸ்லிம் கடைகளை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்துக்களும் பரப்பப்பட்டு வருகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக நாமே முஸ்லிம் சமூகத்தில் மோதல் நிலைமைக்கு தள்ளுவதாக அமைந்துவிடும். ஆகவே இதனை கருத்தில்கொண்டு செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Read more...

பயங்கரவாதம் என்ற பொது எதிரியை ஒழிக்க அனைவரையும் வரட்டாம். அழைக்கின்றார் மைத்திரிபால சிறிசேனா.

இனம், சமயம், அரசியல் ரீதியாக பிரிந்திருக்காது பயங்கரவாதம் என்ற பொது எதிரியை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைவோம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரசியல் ரீதியாக ஒருவரை ஒருவர் விமர்சித்தும் இனவாதத்தை தூண்டியும் பிரிந்து செயற்படும்போது பயங்கரவாதிகளே அதனூடாக பலமடைவர் என்பதை மறந்து விடக்கூடாது என ஜனாதிபதி குறிப்பிட்டார். கண்டி மாவட்டத்தின் அரசியல் தலைமைகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு துறை பிரதானிகளுடன் இன்று (10) பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

இலங்கைக்கு மட்டுமன்றி முழு உலகிற்கும் சவாலாக அமைந்துள்ள பயங்கரவாதம் எனும் பொது எதிரியை ஒழிப்பதில் நாடு என்ற வகையில் நல்லிணக்கம் மிக முக்கியமானதாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அவ்வாறில்லாது இனம், சமயம் என்ற ரீதியில் பிரிந்து ஒருவரை ஒருவர் குரோதத்துடன் பார்க்க ஆரம்பித்தால் அதனால் வெற்றிபெறுவது எதிரியே என்றும் நாட்டின் தற்போதைய சிறுவர் தலைமுறைக்கும் எதிர்கால தலைமுறைக்கும் இந்த எவரும் இடமளிக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.

எனவே அரசியல் கருத்துக்கள் மற்றும் இனவாதக் கருத்துக்களை தெரிவிப்பதைத் தவிர்த்து எதிரியை ஒழிப்பதற்காக அனைவரும் ஒன்றிணைவோம் என அனைத்து இலங்கையர்களுக்கும் தான் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்தை இலங்கை தாய்நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு எமது பாதுகாப்பு படையினர் ஸ்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், ஒரு சிலரது குரோத வார்த்தைகள், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையின் காரணமாக நாட்டு மக்கள் மத்தியில் இருக்க வேண்டிய நல்லிணக்கமும் ஒத்துழைப்பும் இல்லாமல் போவதற்கு இடமளிக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி அவர்கள் அனைத்து அரசியல்வாதிகளிடமும் அரசாங்க அதிகாரிகளிடமும் கேட்டுக்கொண்டார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினரால் மிகவும் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பது குறித்து தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், அந்த செயற்பாடுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெற்றுக்கொடுத்து, அதனை வெற்றிபெறச் செய்வதற்கு அனைத்து அரசாங்க அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் செயற்படுவர் என்று தான் நம்புவதாக குறிப்பிட்டார்.

இதன்போது மாவட்ட குழுக்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கள் குறித்த பாதுகாப்பு துறை பிரதிநிதிகளுடன் இணைந்து உரிய முறையில் தமது பிரதேச பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களை குறித்து தொடர்ச்சியாக மீளாய்வு செய்தல், போலிப் பிரசாரங்கள் மற்றும் அச்சமூட்டுதல் குறித்து மக்களுக்கு தெளிவூட்டி மக்களின் அன்றாட நடவடிக்கைகளை இயல்பு நிலையில் பேணுவதற்கு அரசாங்க அதிகாரிகள் தலையிட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது சுட்டிக் காட்டினார்.

மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்பி.திசாநாயக்க, மாகாண உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள், மத்திய மாகாண பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே உள்ளிட்ட பாதுகாப்பு துறை முக்கியஸ்தர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு.

Read more...

ஹிஸ்புல்லாவை விரட்டக்கோரி திருமலையை முடக்கிய மக்கள்.

கிழக்கு மாகாண ஆழுனர் ஹிஸ்புல்லாவை அப்பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று திருமலை மாவட்டம் முடக்கப்பட்டது.

கடைகளை அடைத்து தமது எதிர்ப்பினை தெரிவித்த மக்கள் பொதுச்சேவைகளையும் பகிஷ்கரித்தனர்.

அத்துடன் தெருக்களில் டயர்களை போட்டு எரித்த அவர்கள் சேவையில் ஈடுபட்ட இலங்கை போக்குவரத்து சேவையின் பேருந்துகள் மீது கல்களை வீசி தாக்குதல் நடாத்தினர்.

அரச அலுவலகங்கள் திறந்திருந்தபோதும், மக்கள் சேவைநாடிச் செல்லாமையால் அவை உறங்கு நிலையிலேயே காணப்பட்டன.

பாடசாலைகளில் வரவு மிக சொற்ப அளவில் பதிவானது.

இதேவேளை, ஹிஸ்புல்லாவை கிழக்கு ஆளுநர் பதவியிலிருந்து நீக்கக் கோரி சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள மஹிந்த அணியின் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் விஜய விக்கிரம லமஹேவாவின் போராட்டம் தொடர்கின்றது.

புனானையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அரபு பல்கலைக்கழகம் என அறியப்படும் பல்கலைக் கழகம் தொடர்பான பெரும் சிக்கலில் ஹிஸ்புல்லா சிக்கியுள்ளார். அவர் அந்த விடயத்தில் பாரிய மோசடியை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவரது மகனுக்கு குறித்த பல்கலைக் கழகத்தில் 500 மில்லியன் ரூபாய்கள் முதலீடு உள்ளதாக ஆவனங்கள் உறுதிப் படுத்தியுள்ள நிலையிலேயே ஹிஸ்புல்லாவை அகற்றுவீர் என மைத்திரிபாலவிற்கு மக்கள் அழுத்தம் கொடுக்கின்றனர்.


Read more...

குண்டுத் தாக்குதல்களின் பின்னால் இருக்கும் மறைகரம் கண்டறியப்படவேண்டும் என்கிறார் அமைச்சர் ஹக்கீம்

“ஈஸ்டர் தினத்தில் நடந்த மிலேச்சத்தனமான தாக்குதலை ஏதோவொரு சக்தி பின்னின்று இயக்கியிருக்கிறது என்று எங்களால் நம்பமுடிகின்றது. இதன் பின்னாலுள்ள மறைகரம் என்னவென்பது சரிவர கண்டறியப்படவேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தியிருக்கின்றார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்.

“எல்லாக் குற்றங்களையும் ஒன்றாக்கி, முஸ்லிம் சமூகம் பயங்கரவாத்துக்குத் தயாராகின்ற ஒரு சமூகமாக பொதுவெளியில் சித்தரிக்கப்படுகின்ற ஒரு அவநிலைக்கு நாங்கள் முகம்கொடுத்துள்ளோம். அது தவிர்க்கப்படவேண்டும்” என்றும் அவர் கோரியுள்ளார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் நேற்று மென்டெரினா ஹோட்டலில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தை ஏனைய சமூகத்தின் மத்தியில் பிழையாக சித்தரித்துக் காட்டுவதற்கான பல முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தேவையில்லாமல் அடுத்த சமூகங்களை உணர்ச்சிவசப்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த செயற்பாடுகள் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

இவ்வாறான தேடுதல்களைப் பொறுத்தவரை, பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சாதாரண குற்றங்கள் என வேறுபடுத்திப் பார்க்கப்படவேண்டும். எல்லாக் குற்றங்களையும் ஒன்றாக்கி, முஸ்லிம் சமூகம் பயங்கரவாத்துக்குத் தயாராகின்ற ஒரு சமூகமாக பொதுவெளியில் சித்தரிக்கப்படுகின்ற ஒரு அவநிலைக்கு நாங்கள் முகம்கொடுத்துள்ளோம்.

இந்த விடயத்தில் பாதுகாப்புத் தரப்பும் ஏனைய சமூகமும் நடுநிலைத் தன்மையுடன் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த ஊடக மாநாட்டை நாங்கள் நடத்துகிறோம்.

பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதற்கு முஸ்லிம் சமூகம் தனது பூரண ஆதரவை வழங்கி வருகின்றது.

சமூகத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துகின்ற, ஈனத்தனமான தாக்குதலில் ஈடுபட்ட இந்தக் கும்பலைப் போன்றவர்கள் முஸ்லிம் சமூகத்துக்குள் ஒருபோதும் தலையெடுக்க இடமளிக்கக்கூடாது. இந்தக் கும்பலை முற்றாகக் களையெடுப்பதற்கு முஸ்லிம் சமயத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் திடசங்கற்பம் பூண்டுள்ளோம். நாங்கள் தாய்நாட்டை நேசிக்கிறோம்.

முஸ்லிம்கள் அதிகளவில் செறிந்துவாழும் இடங்களை மையப்படுத்தி நடைபெறும் இந்தத் தேடுதல் நடவடிக்கைகள், சில நேரங்களில் மக்களைத் தேவையில்லாமல் அசெளகரியப்படுத்துகின்றன.

கைப்பற்றப்பட்ட சாதாரண பொருட்களைக் கூட பயங்கரவாதத்துக்குத் துணைபோன ஆயுதங்களாகக் காட்டப்படுகின்றன. இதனால் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பயங்கரவாதத்துக்குத் துணைபோனவர்களாக காட்டுவது கண்டனத்துக்குரியது.

தேவையில்லாத பதற்ற நிலையையும் அச்ச உணர்வையும் உருவாக்குவதன் மூலம் முஸ்லிம்கள் மீதான வெறுப்பையும் பீதியையும் ஏற்படுத்த எத்தனிக்கப்படுகிறது. முஸ்லிம்களின் இருப்பிடங்கள் தவிர, நாடு பூராகவுள்ள ஏனைய சமூகத்தினர் வசிக்கும் இடங்களில் இவ்வாறான தேடுதல் வேட்டைகள் நடந்தால் இதைவிட நூறு மடங்கு பொருட்கள் கைப்பற்றப்படலாம்.

இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை ஏதோவொரு சக்தி பின்னின்று இயக்கியிருக்கிறது என்று எங்களால் நம்பமுடிகிறது. இதன் பின்னாலுள்ள மறைகரம் என்னவென்பது சரிவர கண்டறியப்படவேண்டும்.

இந்த நாடு மிகப்பெரிய அச்சுறுத்துலக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவசரமாக இயல்புநிலைக்கு திரும்பவேண்டிய தேவைப்பாடு உள்ளது. இக்காலகட்டத்தில் இப்பிரச்சினை ஊடகங்களில் மிகைப்படுத்தப்படக் கூடாது. இதன்மூலம் மக்கள் மத்தியில் அவசியமற்ற பீதியை உருவாக்கி, நாடு சுதாகரித்துக்கொண்டு சுபீட்சத்தை நோக்கிப் பயணிப்பதற்கு நாங்களே தடைக்கற்களாக இருந்துவிடக் கூடாது” – என்றார்.

இதில் ஜம்இய்யத்துல் உலமா தலைவர் றிஸ்வி முப்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில் முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் சமயத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோர் பங்குபற்றினர்.

Read more...

Thursday, May 9, 2019

நாட்டில் மேலும் ஏற்படவிருந்த பாரிய ஆபத்தை முஸ்லிம்களே தடுத்தனர்: முன்னாள் அமைச்சர் சுபையிர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களை காட்டிக்கொடுத்து அவா்களை கைது செய்வதற்கு முஸ்லிம் சமூகம் வழங்கி வரும் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரன நிலைமை காரணமாக கிழக்கு மாகாண ஆளுநரினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு தொடர்பான விசேட கூட்டம் ஆளுநர் தலைமையில் திருகோணமலையில் இடம்பெற்ற போது கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலினால் அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலினை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் வன்மையாகக் கண்டிப்பதுடன், தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களை காட்டிக்கொடுத்து அவா்களை கைது செய்வதற்கும் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றது. இந்த விடயத்தில் முஸ்லிம் சமூகத்தின் செயற்பாடு குறித்து நாட்டினுடைய அரசியல் தலைவர்களும், பாதுகாப்பு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

ஒழுக்கமற்ற ஒரு அறைகுறை மத போதகரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த தாக்குதலினை இந்த நாட்டிலே உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களும் மிக வன்மையாக கண்டித்துள்ளனர். அத்துடன் தாக்குதலுடன் தொடர்பு பட்டவர்களை பிடிப்பதற்கும், அவர்கள் சந்தேகத்தின் பேரில் நடமாடிய இடங்களை காட்டிக்கொடுத்து அவர்களை அழிப்பதற்கும் பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். இது ஒரு முன்மாதிரியான பாராட்டத்தக்க செயற்பாடாகும்.

குறித்த தாக்குதலினை திட்டமிட்டு மேற்கொண்டவர் என அடையாளம் காணப்பட்ட சஹ்றான் என்பவர் இந்தப்பிராந்தியத்திலே வாழுகின்ற முஸ்லிம்களுக்குள் மார்க்க முரண்பாடுகளை தோற்றுவித்து பல வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டு பல பிரச்சினைகளையும் ஏற்படுத்திய ஒருவராவார். அவர் இந்தப்பிராந்தியத்தில் வாழுகின்ற மக்களின் இயல்பு நிலையை கெடுக்கின்ற ஒருவராகவும் செயற்பட்டுள்ளார். அவரது செயற்பாடுகளுக்கு எதிராகவும், அவரை கைது செய்யுமாறும் கோரி காத்தான்குடியில் 2017ஆம் ஆண்டு மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.

குறிப்பாக சஹ்றானின் செயற்பாடுகள் குறித்து பல்வேறு தரப்பினராலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டும், அவர் காத்தான்குடி பிரதேசத்தில் வன்முறை சம்பவத்துடன் தொடர்பு பட்டிருந்தும் கைது செய்யப்படவில்லை. ஏன் அவர் கைது செய்யப்படவில்லை என்பது புரியாமலுள்ளது. தாங்கள் சஹ்றானுடைய செயற்பாடுகள் குறித்து தெரியப்படுத்தியும் ஏன் அவை கவனத்தற்கொள்ளப்படவில்லை என பலரும் இன்று கேள்வியெழுப்புவதனை அவதானிக்க முடிகிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தது. இந்த பிரதிநிதித்துவத்தை இழப்பதற்கும் சஹ்றான் என்பவரே பிரதான காரணமாகும். அவர் தேர்தலின் போது மேற்கொண்ட தீவிர பிரச்சாரத்தினாலே நாம் தமது அரசியல் அந்தஸ்ததை இழக்க வேண்டியேற்பட்டது.

குறிப்பாக, இந்த நாட்டிலே வாழுகின்ற முஸ்லிம் சமூகம் நாட்டுக்குள் பிரிவினையை ஏற்படுத்தவோ அல்லது இந்த நாட்டை துண்டாடுவதற்கோ துணைபோன வரலாறுகள் கிடையாது. அனைவரும் இந்த நாட்டு பிரஜைகள் என்ற அடிப்படியில் ஐக்கிய இலங்கைக்குள் ஒற்மையாக வாழ்வதனையே விரும்புகின்றனர்.

கடந்த 30வருட காலம் இடம்பெற்ற கொடிய பயங்கரவாத யுத்தத்தின் போது இந்த நாட்டிலே வாழும் மக்கள் பல்வேறு இழப்புக்களை சந்தித்ததுடன், தமது நிம்மதிகளையும் தொலைத்து பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கினர். குறிப்பாக அந்த யுத்தத்தினால் சிங்கள இரானுவ வீரர்களும், திமிழ் மக்களும் அதிகமாக பாதிக்கப்பட்டதுடன், நாட்டில் வாழும் மூவின மக்களும் பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக வட கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமது உயிர், உடமைகளை இழந்து அகதிகளாக ஆக்கப்பட்டனர். யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை உணர்ந்த ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகம் உள்ளது. குறிப்பாக யுத்தத்தினால் எதனையும் சாதிக்க முடியாது என்பதனையும் முஸ்லிம் சமூகம் நன்கறிந்துள்ளது.

இவ்வாறான நிலையில் ஒரு கும்பலினால் மேற்கொள்ப்பட்ட குறித்த தாக்குதலினை வைத்து இந்த நாட்டிலே வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க முடியாது. இன்று சிலர் முஸ்லிம் சமூகத்தின் மீது பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். நாட்டில் மேலும் ஏற்படவிருந்த ஆபத்தினை முஸ்லிம் மக்களே காட்டிக்கொடுத்து தடுத்தனர் என்கின்ற வரலாற்று சம்பவத்தினை வங்குரோத்து அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

யுத்தத்தினை ஒருபோதும் விரும்பாத முஸ்லிம் சமூகத்தின் ஆதரவுடன் தீய சக்திகளை அடக்குவதற்கு சகல தரப்பினரும் முன்வர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எஸ்.அஷ்ரப்கான்

Read more...

விரிசலாகும் இந்து-முஸ்லிம் சகோசரத்துவ இன உறவுகள் - ஹப்லுல்லாஹ் புஹாரி

இனவாத்ததை பெருவாரியாக கொப்பளித்த பெருந்தகைகளில் வாய்களில் கூட இன்று சில யதார்த்தங்கள் உச்சரிக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. அந்தளவுக்கு பயங்கரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் எதிர்வினையாற்றலானது ஏனைய சமூகங்கள் மத்தியில் சிறப்புற ஒப்புவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக பா.உ. உதய கம்மன்பில அவர்களின் நிதானமான பேச்சை குறிப்பிட முடியும். அதுமட்டுமல்லாமல் பல உயர் மட்ட அரசியல் வாதிகளும் இணையத்தளங்களில் முஸ்லிம்கள் சார்பில் ஆரோக்கியமான கருத்துகளை பதுவேற்றி வருவதையும் அவதானிக்க முடிகிறது.

நாட்டில் வாழும் முஸ்லிம்கள் யாவரும் பயங்கரவாதிகளே...! என்ற மாயையை நாட்டு மக்கள் மத்தியில் திணிக்க முரசங்கள் அடித்துக்கொண்டிருந்த அபச்சார ஊடகங்களினதும், இனவாத கும்பல்களினதும் முகத்தில் கரிபூசும் நிகழ்வாகவே, சாய்ந்தமருது ஜும்மா பள்ளி நிருவாகத்தின், பயங்கரவாதிகளை காட்டிக் கொடுத்த செயற்பாட்டை சித்தரிக்க முடிகிறது. அதற்கான அங்கீகாரத்தையும் நேற்றய தினம் ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன அவர்கள் வழங்கிச் சென்றிருந்தார்.

பயங்கரவாத அச்ச சூழல் நிழவுகின்ற பிரதேசஙளுக்கு ஜனாதிபதியோ, இராணுவ தளபதிகளோ செல்வது சாத்தியமற்றதொரு நிகழ்வாகும். ஆனாலும் நேற்றய தினம் சாயந்தமருது ஜும்மா பள்ளி மற்றும் கிண்ணியா ஜும்மா பள்ளிவாயில் போன்ற இடங்களுக்கு இராணுவமும், உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் விஜயம் செய்திருந்தனர் இதனை நாட்டின் உயர்மட்டங்கள் முஸ்லிம்கள் மீது கொண்டிருக்கும் எண்ணப்பாங்குளை உணர்த்தும் நிகழ்வுகளாகவே பார்க்க முடிகிறது. அதாவது அவர்கள் யாவரும் முஸ்லிம்களுக்கு தீவிரவாத பட்டம் சூட்ட முற்படவில்லை என்பதையும் உணர முடிகிறது.

ஆனாலும் மூங்கில் பிட்டும் தேங்காய்ப் பூவும், நகமும் சதையும் போல என்றெல்லாம் முன்னைய காலங்களில் பிரஸ்பிதாக்கப்பட்ட, ஒரே ஊரில் கூடிக் குழாவி ஒன்றாய் வாழ்ந்த, ஒரே தட்டில் உணவருந்திய, ஒன்றாக தூங்கி எழுந்த இந்து-முஸ்லிம் உறவானது கால ஓட்டத்தில் பெரிதும் விரிசலடைந்து செல்வதே கவலைக்குரியதாகும். இந்த விரிசலுக்கான அடித்தளமிடும் செயற்பாடுகள் முகநூல் தோறும் மலிந்து போயுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

இங்கு கவலைகளை ஆர்முடுக்கும் காரணிகள் என்னவெனில், இவ்வாறான உறவு விரிசல்கள் ஏற்படுவதற்கான வரலாற்று பின்னனிகள் ஏதும் இந்துக்கள் சார்பில் உள்ளனவா? என்றால் நிச்சயமாக இல்லை என்றே கூற முடியும். ஆனாலும் முஸ்லிம்கள் சார்பில் உள்ளது நிதர்சனமே அதாவது தமிழின உரிமை போராட்டம் எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட ஈழப்போரில் முஸ்லிம்கள் சார்பில் பல நூறு தலைகளை புலிகளுக்கு அடமானம் வைக்கப்பட்டதானது ஆதாரபூர்வமானது. ஆனாலும் முஸ்லிம்கள் அதனை இன்றுவரை உள்ளங்களில் வடுக்களாக பொறித்து போராட்டமோ, போர்க்கொடிகளோ தூக்கவில்லை..

மேலும் முஸ்லிம்கள் தமிழர்களின் போராட்டத்தில் ஒரு போதும் சிங்கள இராணுவத்திற்கு சார்பாக செயற்பட்டார்கள் என்றோ அல்லது புலிகளை காட்டிக்கொடுத்து விடுதலை போராட்டத்தின் உன்னதத்தை துவம்சம் செய்தார்கள் என்றோ வரலாறு நெடுகிலும் பதியப்படவில்லை . மாறாக புலிகளோடு இணைந்து போரிட்ட பல முஸ்லிம்கள், புலி உறுப்பினர்களை மறைத்து பாதுகாத்த முஸ்லிம்கள் என்றவாறு புலிகள் சார்ந்து முஸ்லிம்கள் செயற்பட்டதையே பல வராலாற்று சான்றுகள் காட்டி நிற்கின்றது.

அப்படியாயின் இங்கு இனவாத்ததை கக்குற, முஸ்லிம்கள் மீது துவேசத்தை கொட்டுகிற செயற்பாட்டின் பின்னனி பற்றி தெளிவடைய வேண்டிய தேவை இயல்பாகவே வலுப்பெறுகிறது. அதாவது யுத்த காலங்களில் கூட பாசிசப் புலிகளின் வரம்பு மீறிய செயற்பாட்டின் விளைவாக சில முஸ்லிம்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருந்தாலும், ஏனைய சக இந்து முஸ்லிம் உறவுகள் சிநேகித்துடனே வாழ்ந்து வந்துள்ளார்கள். இதனை இந்து-முஸ்லிம் பின்னிப் பிணைந்து வாழ்கின்ற ஒரு பிரதேசத்தில் வாழும் என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

ஆனாலும் யுத்தத்திற்கு பிந்திய சமீப காலங்களிலேயே முஸ்லிம்கள் மீதான இந்துக்கள் சிலரின் ( எனது நண்பர் பட்டியலில் முஸ்லிம்களை விடவும் நல்ல இந்து நண்பர்களும் உள்ளார்கள்) எல்லை மீறிய இனவாத சிந்தனைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதை நன்றாக உணர முடிகிறது. அப்படியாயின் யுத்தத்தின் பிற்பாடு புதிதாக உருவாகிய சில அரசியல் கட்சிகளும், அரசியல் இலாபங்களுமே இந்த இனவாத செயற்பாடுகளின் நேரடி காரணம் என்றால் மிகையாகது. இக்கருத்தை அணுவணுவாக விபரிக்க முடியும் ஆயினும் கட்டுரை நீண்டு விடும்.

எனவே அரசியல் சல்லாபங்களுக்காக ஒரு போதும் காலா காலமாக தொடர்ந்துவரும் உறவினை கேள்விக்குட்படுத்த கூடாது என்பதே எனது வாதமாகும். இதற்காக இரு தரப்பினரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டிய தேவை சமகாலத்தில் மேலோங்கியுள்ளது. முகநூல் எங்கும் வாய்க்கு வந்தவாறு பேசுவதால் எமது உள்ளங்கள் வேண்டி நிற்கின்ற நியாய பூர்வமான தீர்வுகளை எட்டிவிட முடியாது என்பதை நாம் உணர்ந்து செயற்பட வேண்டும் என்பதையும், ஒருமைப்பாடுடைய கருத்துகளோடு ஒருமிக்க பயணிக்கும் பட்சத்தில் இவ்வாறான இன உறவை சீரழிக்கும் செயல்களில் இருந்து விடுபடலாம் என்பதையும் எனது சிறு கருத்தாக முன்வைக்க விரும்புகின்றேன்.

Read more...

Wednesday, May 8, 2019

பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த கோட்டா மேற்கொண்ட வழிமுறையை பின்பற்ற கூறுகிறார் றொபேர்ட் ஓ பிளேக்

தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு, உயர்மட்ட தொழிற்திறன் வாய்ந்த குழுவொன்றை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்று சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடந்த கருத்தரங்கில், 'சீனா மற்றும் தெற்காசியாவை நோக்கிய அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் இலங்கைக்கான அதன் அர்த்தம்' என்ற தொனிப்பொருளில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

'தீவிரவாத தாக்குதல்களைத் தடுப்பதற்கு, முன்னர் கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராக இருந்த போது, உருவாக்கப்பட்டிருந்த தொழிற்திறன் வாய்ந்த உயர்மட்ட குழுவைப் போன்றதொரு குழுவை, சிறிலங்கா அரசாங்கம் உருவாக்க வேண்டும்.

தொழிற்திறன் வாய்ந்த உயர்மட்டக் குழு சிறிலங்காவில் இருப்பது நாட்டுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

செப்ரெம்பர் 11 தாக்குதலுக்கு முன்னரும், பின்னரும் அமெரிக்கா செய்த தவறுகளில் இருந்து சிறிலங்கா பாடம் கற்றுக் கொள்ள முடியும்.

உண்மையில், போர்க்காலத்தில் பாதுகாப்புச் செயலராக கோத்தாபய ராஜபக்ச இருந்த போது, சிறிலங்காவில் அத்தகைய குழுவொன்றை வைத்திருந்தார்.

அவர் தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொண்டார். நாட்டில் உள்ள எல்லா புலனாய்வு கிளைகளினதும், தகவல்களை பகிர்ந்து, அதனை உயர்மட்டங்களுக்கு கொண்டு சென்று இத்தகைய தாக்குதல்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்தார்.

எனவே, சிறிலங்கா அரசாங்கம் அதுபோன்றதொரு குழுவை உருவாக்குவது மிகவும் முக்கியமானது என நான் நினைக்கிறேன்' என்றும் அவர் கூறியுள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com