Friday, April 26, 2019

கல்முனை சவளக்களை சம்மாந்துறை பிரதேசங்களில் மறுஅறிவித்தல் வரை ஊரடங்கு.

கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை, நாடுதழுவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு இன்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.

Read more...

சாய்த்தமருதில் தற்கொலை அங்கிகளுடன் மூவர் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுகின்றனர்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று தேடுதல் மேற்கொண்ட பொலிஸார் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்;பெற்ற குண்டுவெடிப்புடன் தொடர்புடைய பல்வேறு தடயங்களை கண்டு பிடித்துள்ளனர்.

அத்துடன் இதற்காக பயன்படுத்தப்பட்ட வீட்டினை சுற்றிவளைத்தபோது அங்கு தற்கொலை அங்கி ஒன்று வெடித்துள்ளதுடன், மூவர் தற்கொலை அங்கிகளை அணிந்தவாறு சுற்று வட்டத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் என இலங்கைநெட் அறிகின்றது.

இது தொடர்பான மேலதிக செய்திகளுக்காக அங்கு எமது செய்தியாளர்கள் காத்திருக்கின்றனர். விபரமான செய்திகளுக்கு இணைந்திருங்கள்..

Read more...

ரிசார்ட் பதுயுதீனின் சகோதரனை இராணுவம் கைது செய்ய பொலிஸ் விடுதலை செய்துள்ளது.

இராணுவ புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட ரிசார்ட் பதுயுதீனின் சகோதரன் , மேலதிக விசாரணைகளுக்காக பொஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, அவரிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட பொலிஸார் அவரை விடுதலை செய்துள்ளனர்.

நாட்டில் உருவாகியிருக்கின்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்களுக்கு பல்வேறு வழிகளில் ரிசார்ட் பதுயுதீன் உட்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்ந்து உதவி வந்துள்ளனர் என்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளது.

அந்த வகையில் கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரி இன்சாப் அஹமட், இராணுவத்தில் இருந்து அகற்றப்படும் வெற்று துப்பாக்கி ரவை கோதுகளை, கைத்தொழில் அபிவிருத்தி சபை ஊடாக பெற்றுக்கொண்டுள்ளாரென்ற தகவல் வெளியாகியுள்ளது.

அவரது செப்புத் தொழிற்சாலையில் மீள்சுழற்சி செய்வதற்கென்ற போர்வையில் அவற்றை பெற்றுக்கொண்டுள்ள இஸ்லாமியப் பயங்கரவாதியான இன்சாப் அஹமட் அவற்றை குண்டுதயாரிப்புக்கு பயன்படுத்தியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

ரவைக் கோதுகளை கைத்தொழில் அபிவிருத்தி சபை ஊடாக இன்சாப் அஹமட் கொள்வனவுச் செய்வதற்கு, வர்த்தக வாணிபத்துறை அமைச்சரான றிசார்ட் பதுயுதீன் உதவி புரிந்துள்ளதாக சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றது.

கைத்தொழில் அபிவிருத்தி சபை, ரிசாட் பதியுதீனின் கீழுள்ள வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றது.

வர்த்தகர் ஒருவர் என்ற அடிப்படையில், கைத்தொழில் அபிவிருத்தி சபையில் தம்மை அவர் பதிவுசெய்துள்ளார்.

இதற்கமைய, கொலோசஸ் பிரைவட் லிமிட்டட், இல.111ஃ6, அவிசாவளை வீதி, வெல்லம்பிட்டி என்ற முகவரியில், 1611216 பதிவு இலக்கத்தில் எம்.ஐ.இன்சாப் என்ற பெயரில் இதற்கான பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல வருடங்களாக இவர் வெற்று ரவைக் கோதுகளை கொள்வனவுச் செய்து வந்துள்ளதுடன், செப்பு உற்பத்தி நடவடிக்கைகளுக்காக தமது தொழிற்சாலைக்கு இதனை கொள்வனவு செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார்.

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்களிற்கான வெடிகுண்டுகள், இந்த வெல்லம்பிட்டி செப்பு தொழில்சாலையில் தயாரிக்கப்ட்டிருக்கலாம் என பாதுகாப்புப் பிரிவு கருதுகிறது.

Read more...

பள்ளிவாயல் மௌலவியின் கட்டிலின் கீழ் வாள்களும் இராணுவச் சீருடையும்.

கொம்பனித் தெரு ஜூம்மா பள்ளிவாயலை சந்தேசத்தின் பெயரில் சோதனையிட்ட இராணுத்தினர் அங்கிருந்து இராணுவத்தினர் அணியும் உடையினை ஒத்த சீருடைகளை மீட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மௌலவி கைது செய்யப்பட்டு கொம்பனித் தெரு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தொடர்ந்து பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது விடொன்றிலிருந்து 40 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Read more...

தவறான புகைப்படத்தை வெளியிட்டுவிட்டு பல்லிளிக்கின்றது இலங்கை பொலிஸ்

இஸ்லாமிய பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தேடப்படும் 6 சந்தேகநபர்களின் புகைப்படங்களை பொலிஸார் வியாழக்கிழமை வெளியிட்டிருந்தனர்.

இவ்வாறு வெளியிடப்பட்ட புகைப்படங்களில் மூன்று ஆண்களும், மூன்று பெண்களும் அடங்கும்.

இப்புகைப்படங்களை வெளியிட்டு சற்று நேரத்தின் பின்னர் அது தவறானதோர் படம் என்று சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் குறித்தபடம் தவறான என்பதை பொலிஸ்துறை ஏற்றுக்கொண்டுள்ளது. படத்திற்கு உரியவர் என பெயர் குறிப்பிடப்பட்டிருந்த அப்துல் காதர் பாத்திமா கதியா என்பவர் தேடப்படும் நபர்தான் என்றும் தாம் வெளியிட்டுள்ள படம் தவறானது என்றும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பல்லிளித்துள்ள இலங்கைபொலிஸ் பேச்சாளர் அலுவலகம் குற்றப் புலனாய்வுத் துறையினர் தமக்கு அனுப்பி வைத்த புகைப்படங்களையே தாம் வெளியிட்டதாக வேறு உள்ளக காட்டிக்கொடுப்புக்களையும் மேற்கொண்டுள்ளது.


Read more...

இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்பான சகல சீசீடிவி பதிவுகளும் வெளியாகியுள்ளது. (வீடியோ உள்ளே)

கடந்த 21ம் திகதி மேற்கொள்ளப்பட்ட 7 தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பான சகல சீசீடிவி பதிவுகளும் வெளியாகியுள்ளது. இப்பதிவுகளில் குறித்த பயங்கரவாதிகள் தாக்குதல் இலக்குகளை நோக்கிச் செல்லும் விதம் பதிவாகியுள்ளது.

இங்கே காணப்படுகின்ற வீடியோ பதிவுகளின் பிரகாரம் சகல குண்டுகளும் ஒரே வடிவம் கொண்டவை என்பது உறுதியாகின்றது. குண்டு நிரப்பப்பட்ட பைகளை தோள்பைகளில் சுமந்து செல்வதையும் அதனை வெடிக்கவைக்கும் றிமோர்ட் கொன்றோலர்கள் அல்லது அதற்கென வடிவமைக்கப்பட்ட இதர சாதனம் ஒன்று அவர்களின் கைகளில் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

பயங்கரவாதிகள் மிகவும் நிதானமாக சனங்கள் செறிந்து காணப்படும் இடங்களை தெரிந்தெடுத்துக்கொள்வதை காணக்கூடியதாகவுள்ளது.




Read more...

Thursday, April 25, 2019

பணிநீக்கம் செய்யப்பட்ட பங்களாதேசிய இராணுவ அதிகாரி குண்டுத் தாக்குதல்களுக்கு ஒரு சில வாரங்களின் முன்னர் இலங்கைக்குப் பணம் அனுப்பினார் –

உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த ஜிகாதிவாதியத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இலங்கையிலுள்ள நிலைமை நிலையற்று இருப்பது ஏலவே தெரிகிறது. இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன இத்தாக்குதலுக்கு ஓரளவு அறியப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதக் குழுவான “தேசிய தௌவீத் ஜமாத்” இனைக் குற்றஞ்சாட்டியதோடு “இதற்குப் பின்னால் ஒரு சர்வதேச வலையமைப்பு இருக்கிறது. இல்லாவிட்டால், இந்தத் தாக்குதல் சாத்தியமாகியிருக்காது” எனத் தெரிவித்தார். இந்தக் கொடுமையான தாக்குதல்களை மையப்படுத்திப் பல்வேறு ஊகங்கள் உள்ளன.

இப்படியான தாக்குதல்கள் குறித்து அரசாங்கத்தை எச்சரிக்கை செய்யத் தவறிய இலங்கையின் புலனாய்வு அமைப்புகளும் இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உதித்த ஞாயிறு வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த ரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளால் விரும்பப்படும் உயர்தர விடுதிகள் என்பவற்றை இலக்கு வைத்து நடந்த இந்தத் தாக்குதல்களுக்கு யாரும் முன்னர் பொறுப்பேற்கவில்லை என்பது முக்கியமாக நோக்கத்தக்கது. இறந்தோரின் எண்ணிக்கை ஆகக் குறைந்தது 290 ஆக அதிகரித்து விட்டது என்றும் 500 பேர் வரை காயமுற்று இருப்பதாகவும் கடந்த திங்கட்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை இரண்டு டசின் சந்தேக நபர்களைக் கைதுசெய்த அதிகாரிகள் அவர்களை அடையாளங்காட்ட மறுத்துவிட்டனர்.

இந்தத் தாக்குதல்கள் குறித்து இலங்கை ஏற்கனவே எச்சரிக்கப்பட்டது:


“தேசிய தௌவீத் ஜமாத்” என்ற அமைப்பினால் தேவாலயங்களுக்கு சாத்தியமான அச்சுறுத்தல் இருப்பதாக விபரமான ஒரு எச்சரிக்கையை, மத்திய கிழக்கைத் தளமாகக் கொண்டியங்கும் ஒரு உளவமைப்பு தாக்குதலிற்கு ஆகக் குறைந்தது 10 நாட்களுக்கு முன்னர், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தது. இதேமாதிரியான ஒரு எச்சரிக்கையை மேற்கத்தேய உளவமைப்பு ஒன்றும் அனுப்பி வைத்தது. ஆனால் இந்த விடயம் பிரதமர் ரணில் விக்கிரமசிக்கவிற்குக் கூடத் தெரியப்படுத்தப்படவில்லை. இலங்கையின் புலனாய்வு அமைப்புகளின் இத்தகைய சந்தேகத்திற்கிடமான நடத்தையின் பின்னாலுள்ள காரணம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்ற தீவிரவாத எதிர்ப்புப் பத்திரிகையாளரும் தீவிரவாத எதிர்ப்பு நிபுணருமான சலாவுதீன் சொயிப் சௌத்திரி என்பவர் அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற ஜிகாதிவாதித் தாக்குதல்கள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், “உள்ளூர் ஜிகாதிவாதி அமைப்பான ‘தேசிய தௌவீத் ஜமாத்’ தான் இந்தத் தாக்குதல்களை நடத்தியது என்கின்ற இலங்கை அதிகாரிகளின் கூற்று தர்க்கரீதியானதல்ல. தேவாலயங்களையும் சுற்றுலாப்பயணிகளையும் இலக்குவைக்க வேண்டிய காரணம் உள்ளூர் தீவிரவாத அமைப்புகளுக்கு இல்லை. பதிலாக, இதற்கு நிச்சயமாக சர்வதேசத் தொடர்புகள் உண்டு” எனக் கூறினார். “இத்தாக்குதல்களானவை அல்-கெய்தா மற்றும் இஸ்லாமிய அரசு (ISIS) போன்ற அமைப்புகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஒத்திருக்கிறன. ஒரு முக்கியமான மதம் சார்ந்த விடுமுறை தினத்தன்று பல தேவாலயங்களும் உயர்தர விடுதிகளும் தாக்கப்படுவது என்ற பாரிய திட்டம் தாக்குதலாளிகளிடம் இருந்துள்ளமை முக்கியமானது. ‘தேசிய தௌவீத் ஜமாத்’ உண்மையில் பௌத்தத்திற்கு எதிரான மனநிலையுள்ள ஒரு குழுவாகும். எனவே இது ‘தேசிய தௌவீத் ஜமாத்’ என்ற அமைப்பினால் நடத்தப்பட்டது என்பதைத் தனிப்பட்ட ரீதியில் நான் ஏற்கமாட்டேன்” என அவர் மேலும் கூறினார். இந்தச் செய்தித்தாளிற்குக் கிடைத்த ஒரு ஆவணத்திலிருந்து, பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு சட்ட அமலாக்கப் பிரிவுகளுக்கு ஒரு எச்சரிக்கையை சிறிலாங்கா அதிகாரிகள் ஏப்ரல் 11 ஆம் திகதி ஒரு ஆலோசனையாக வழங்கியிருந்தார்கள் என அறிய முடிகிறது. ஆனால், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளும் இலங்கையின் சட்ட அமலாக்கப் பிரிவுகளாலோ அல்லது பாதுகாப்புத் தரப்பாலோ எடுக்கப்படவில்லை.

ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்து இலங்கைக்கு மாற்றப்பட்ட தொகை:

ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்து மிகப்பெருந்தொகைப் பணம் இலங்கைக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் வந்தது. கடந்த சில ஆண்டுகளாக பிரித்தானியாவில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் சாகித் உடின் கான் என்கிற பங்காளதேசினைப் பிறப்பிடமாகக் கொண்ட ஐ.எஸ் அமைப்பிற்கு நிதிவழங்கும் நபரால் இந்தப் பெருந்தொகைப் பணம் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. பிரித்தானியாவில் இருந்துகொண்டு இவரும் இவரது குடும்பத்தினரும் பல்வேறு விதமான ஜிகாதிவாதிய செயற்பாடுகளைத் தொடருகிறார்கள். அண்மையில் “அஸ்தா” என்ற அமைப்பினை இவர் நிறுவியுள்ளார். உலகிலுள்ள சனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை இல்லாமலாக்கி அதற்குப் பதிலாக “கலிபட்” என்கிற இஸ்லாமிய அரச முறையைக் கொண்டு வருவதை தனது நோக்காக இந்த அமைப்புக் கொண்டுள்ளது. அவரது இரண்டு பணியாளர்கள் மூலமாக சுவீடன் மற்றும் அமெரிக்காவிலும் தனது இந்த நடவடிக்கைகளை சாகித் உடின் கான் அண்மையில் விஸ்தரித்துள்ளார்.

பங்காளதேசிலுள்ள பல்வேறு புலனாய்வு அமைப்புகளிடமிருந்து கிடைக்கும் ஆவணங்களின் படி, சாகித் உடின் கான் ஒரு தீவிரமான முஸ்லிம் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் என்பதோடு அவரது மனைவி ஃபர்ஜன அஞ்ஜும் என்பவரும் அதே போன்ற ஒரு குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர். இந்தத் தம்பதியினரின் மகள்கள் பிரித்தானியாவின் கல்வி பயின்று பிரித்தானியாவில் வாழ்ந்து வந்தாலும் மிகத் தீவிரமயப்படுத்தப்பட்டுள்ள இவர்களும் இத்தகைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகின்றனர். பல்வேறு தனிநபர்களை இவர்கள் இலக்குவைப்பதோடு அவர்களை இஸ்லாமிற்கு மதமாற்றும் முயற்சியிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

92000 டொலர்கள் பெறுமதியான பணத்தை டுபாயிலிருந்து கொழும்பிற்கு சட்டத்திற்குப் புறம்பான வகையில் பரிமாற்றும் முறையைப் பயன்படுத்தி சாகித் உடின் கான் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அனுப்பியுள்ளார். தெற்காசியப் பிராந்தியத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள்களை ஜிகாத்திய அமைப்புகளின் கூட்டாக நடத்தவிருக்கும் இரகசியமான சூழ்ச்சி பற்றி இந்தச் செய்தித்தாள் பல செய்தி அறிக்கைகளினூடாக கடந்த ஆண்டு வெளிப்படுத்தியிருந்தது என்பதனை இங்கு சுட்டிக் காட்டலாம்.

ஊடக அறிக்கைகளின் படி, இஸ்லாமிய அரசிற்கு (ISIS) நிதியளிக்கும் சாகித் உடின் கான், அவரது மனைவி ஃபர்ஜன அஞ்ஜும் அவரது மகள்கள் ஆகியோர் அவர்களது நேரடியான ஜிகாதிய நடவடிக்கைகளால் சர்வதேச ஊடகங்களினால் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவர்களாவர். அமெரிக்கா வரை பரந்துள்ள ஒரு வலையமைப்பை அவர்கள் இதுவரை உருவாக்கியுள்ளார்கள். தகவல்களின் படி, சாகித் உடின் கானின் நீண்டகால சகாவான சஜட் குசெயின் என்பவரும் அவரது மனைவியும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

சாகித் உடின் கானின் செல்லப்பிராணி போல இருக்கும் சஜட் குசெயின் என்பவர் தீவிரவாத இஸ்லாத்தினையும் ஜிகாதியத்தையும் அமெரிக்காவில் சில ஆண்டுகளாகப் பரப்பி வருகின்றார். உயர் பிரபல பாலியல் தொழிலாளியாக அறியப்பட்டவரும் சாகித் உடின் கானின் முன்னாள் பெண்தோழியுமான சஜட் குசெயினின் மனைவி ஐ.எஸ் தீவிரவாதிகளின் செய்திகளை அமெரிக்காவில் பரப்புவதோடு நின்றுவிடாமல் சாகித் உடின் கானுடன் இணைந்து பங்காளதேசில் சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைச் சதிப்புரட்சியின் மூலமாக வெளியேற்றுவதிலும் செயற்படுகிறார். இந்த மோசடி குழுவானது படைகளின் புலனாய்வு இயக்குனரகத்தை (DGFI) இலக்கு வைத்து அதைப் பற்றி தவறானவற்றைப் புனைந்துரைத்து அதன் மீது கறைபூசும் வேலைகளில் ஈடுபடுகிறது.

சாஜித் உடின் கான் (Army No: BA002428, Course: 8-BMA, Commission Date: 10-06-1983), தனது மனைவி மற்றும் மகள்களுடன் இணைந்து பங்காளதேசிலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களைக் கடத்தல் செய்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிரித்தானியாவிலுள்ள பல்வேறு வணிகத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளார்.

Visa Tier 1, vide VAF No. 511702 இன் கீழ் குடியுரிமை நிலையைப் பெறுவதற்காக இரண்டு மில்லியன் பவுண்ட்சினை இவர் 2009 இல் பிரித்தானியாவில் முதலிட்டார். பின்னர் எண்ணிக்கை அறியப்படாத தொகைப் பணத்தை இவரது குடும்பம் பிரித்தானியாவிற்குள் கொண்டு வந்தது.

இரகசியத் தகவலின் அடிப்படையில், பங்களாதேஸ் பொலீசின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நாடு கடந்த குற்றப்பிரிவு (CTTC) டாக்காவிலுள்ள பறிதரா இன்ற இடத்திலுள்ள இரண்டாவது தெருவில் உள்ள 184 ஆவது இலக்க வீட்டை முற்றுகையிட்டுச் சோதனை செய்தது. சாகித் உடின் கானிற்குச் சொந்தமான இந்த வீடானது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினுடைய ஆயுதங்கள், வெடி பொருட்கள் மற்றும் பரப்புரைக் கையேடுகள் என்பன களஞ்சியப்படுத்தும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றதென்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்த முற்றுகையின் போது, பெருமளவிலான ஆயுதங்கள், வெடிப்பிகள், போலி பங்காளதேசிய நாணயத்தாள்கள் மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஜிகாதிவாதக் கையேடுகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக சாகித் உடின் கான், அவரது மனைவி, அவர்களது மகள்கள் மற்றும் அவர்களோடு தொடர்புடையோர் மீது மூன்று தனி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. கண்டோன்மன்ட் பி.எஸ். வழக்கு எண்- 10, பிரிவு 6(2)/7/11/12, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், 2009 (திருத்தச் சட்டம் 2013), கண்டோன்மன்ட் பி.எஸ். வழக்கு எண்- 11, பிரிவு 25-A, சிறப்பு அதிகாரச் சட்டம். 1974, கண்டோன்மன்ட் பி.எஸ். வழக்கு எண்- 11, பிரிவு 19-A, ஆயுதச் சட்டம் 1878 ஆகிய மூன்று வழக்குகள் இவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்டன.

பயங்கரவாதத்தின் மீதான போரில் பிரித்தானியா உண்மையில் ஒரு நட்பு நாடாக உள்ளதா?

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு நிதியளிக்கும் இந்த சாகித் உடின் கான் மீதான வழக்கானது, பிரித்தானியா தவறான பணத்தை தனது நாட்டுக்குள் உள்ளீர்ப்பதை ஊக்குவிக்கின்றது என்பது மட்டுமல்லாது ஜிகாத்திய மற்றும் குற்ற நடவடிக்கைகளிற்கு ஒரு தளமாக பிரித்தானிய மண்ணைப் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அதிகளவு ஆர்வம் காட்டவில்லை என்பதையும் வெளிக்காட்டும் உதாரணமாக இருக்கிறது. உலகிலுள்ள ஒரு அரசாங்கத்தை கவிழ்க்கும் சதியைப் பிரித்தானிய மண்ணிலிருந்து செய்வதானது இப்படியான குற்றங்களுக்குப் பிரித்தானியாவும் உடந்தை என்ற முத்திரையை உறுதியாக ஏற்படுத்தும். சாகித் உடின் கான், அவரது மனைவி மற்றும் அவரது மகள்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களை பங்களாதேசிற்கு நாடு கடத்துவதை மேற்கொள்வது இப்போது பிரித்தானிய அதிகாரிகள் மற்றும் சட்டமியற்றுபவர்களிடம் குறிப்பாக பிரதமர் தெரேசா மே யின் கையில் இருக்கிறது.#Banglades #military officer #United Arab Emirates #ShahidUddin Khan #Dubai #Colombo

அனிற்ர மதுர்- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…

Read more...

பயங்கரவாதிகளின் சடலங்களை முஸ்லிம் மைய்யவாடிகளில் அடக்கம் செய்ய இடமளிக்கமாட்டோம். அ. இ. ஜ. உலமா

இலங்கையில் தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதிகளின் சடலங்களைப் பொறுப்பேற்கமாட்டோம் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இன்று அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

” தீவிரவாதிகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தவிதத்திலும் தொடர்புகள் இல்லை. எனவே, அவர்களின் சடலங்களை முஸ்லிம் மைய்யவாடிகளில் அடக்கம் செய்ய இடமளிக்கமாட்டோம்.

இஸ்லாம், தீவிரவாதத்திற்கோ, கொலைகள் செய்வதற்கோ, அப்பாவி மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கோ ஒரு போதும் அனுமதிப்பதில்லை. அது மிகப்பெரும் பாவம் ஆகும்.

அத்துடன், கிறிஸ்தவ ஆலயங்களிலும், பல்வேறு இடங்களிலும் கிறிஸ்தவ சகோதரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை முஸ்லிம் சமூகம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

குற்றவாளிகள் சரியாக அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு உச்சகட்ட தண்டனைகள் வழங்கப்படவேண்டும்.” எனவும் வலியுறுத்தப்பட்டது.

Read more...

பயங்கரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்டது சிஐடி. கண்டால் உடன் அழைக்கவும்

உயிர்தெழுந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல்களை மேற்கொண்ட இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் புகைப்படங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பயங்கரவாதிகளை கைது செய்வதற்கு உதவுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள அவர்குள் சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதாவது தகவல்கள் தெரிந்தால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு தெரியப்படுத்தியுள்ளனர்.

புயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடையவர் என நம்பப்படும் நபர் ஒருவர் தொடர்பான தகவல்களை அறிந்திருந்தும் அதை மறைப்பது 7 வருடங்கள் சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே தகவல்கள் ஏதாவது தெரிந்தால் 071 8591771, 011 2422176, 011 2395605 ஆகிய இலக்கங்களுக்கு அறிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Read more...

மொனிக் இலங்கையை நேசித்தார் அதனால் அவர் அமைதியாக இளைப்பாற இம்மண்ணையே தேர்ந்து கொண்டார்.

தனது கைத்தொலைபேசியில் ஒருவர் சேமித்து வைக்கக்கூடிய முக்கியமான போட்டோவாக இது இருக்காது. ஆனால் இந்த அற்புதமான ஆன்மாவின் அழகிய முகத்தினை எனது கைத்தொலைபேசியில் சேமித்து வைக்க வேண்டி இருந்தது.. இப்போது அதற்காக நான் பெருமையடைவதுடன் மனமொடிந்தும் போகின்றேன்.

நேற்றைய குண்டுத்தாக்குதல்களின் தொடர்ச்சியாக, சில மருத்துவ மாணவர்கள் , ஏதோ ஓர் வகையில் உதவமுடியுமா என்று பார்ப்பதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து சேவைப்பிரிவுக்கு விரைந்தோம். ஒரு மணித்தியாலமாக Resuscitation அறையின் ( செயற்கை சுவாசம் கொடுத்து, இதயத்தை இயங்க பண்ணி சுயநினைவு வரப்பண்ணும் அறை) அமளி துமளிகளின் பின், அவ்வறையில் அதிக மருத்துவர்கள் தாதிகள் கடமையில் இருந்தபடியால், மருத்துவ மாணவர்கள் வெளியே சென்று காயங்களுடன் தப்பியவர்களை அமைதிப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டார்கள்.

சத்திர சிகிச்சை அறைகளுக்கு திரும்பி கொண்டிருந்தபோது, நாம் ஏற்கனவே அவதானித்த, வெளி நோயாளர் பிரிவின் விபத்துப்பிரிவில் அங்கும் இங்கும் ஏக்கத்துடன் அலைந்து கொண்டிருந்த , நெதர்லாந்தை சேர்ந்த ஓர் தந்தையும் அவரின் இரு மகன்களும், சில உள்ளூர் வாசிகளுடன் casualty ward க்கு முன் யாரோ மிக நெருக்கமான ஒருவரை தேடிக்கொண்டிருப்பவர்களைப்போல் காணப்பட்டார்கள். நாம் அவர்களிடம் சென்று அவர்களுக்கு உதவ முயன்றோம். அன்று காலையில் சினமன் கிரான்ட் ஹோட்டலில் தமது மூத்த சகோதரனுடன் காலையுணவு அருந்திக்கொண்டிருந்த போது காயப்பட்ட தமது தாயாரை தேடிக்கொண்டிருப்பதாக சொன்னார்கள். தாம் மூவரும் அவர்களின் அன்றைய பாங்கொக் பயணத்துக்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தபடியால் அவர்களுடன் அந்நேரம் இருக்கவில்லை என்றும், அவர்களது மூத்த சகோதரனிடமிருந்து அவர்களுக்கு கிடைத்த ஒரேயொரு தகவல், அவர்களின் தாயார் தலையில் காயமடைந்ததாகவும், ஹோட்டல் போக்குவரத்து சேவை மூலம் தாயார் தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது மட்டுமே. அவர்களால் , தலையிலும் நெஞ்சிலும் கைகளிலும் காயப்பட்ட மூத்த சகோதரனை விட்டு அவர்களால் தாயாரை தேடமுடியாத்தால், நாம் அப்பெண்மணியை தேட முடிவெடுத்தோம். ஆதலால் அவர்களின் தாயாரின் போட்டோ ஒன்றினை கேட்டோம். அவர்களின் கமெராவில் இறுதியாக எடுத்த போட்டோவினை பெரிதுபடுத்தி எனது கைத்தொலைபேசியில் படம் பிடித்துக்கொண்டேன்.

தலையில் காயம் என்றபடியால் நரம்பியல் சிகிச்சை பிரிவுக்கு சென்றோம். அங்கு இல்லை. இரண்டு neurosurgical சத்திரசிகிச்சை அறைகள், இதுவரை அப்பெண்மணி சத்திர சிகிச்சை செய்யப்படவில்லை. ஐந்து neurosurgical அவசரசிகிச்சை பிரிவுகள், எங்கும் அவர் அனுமதிக்கப்படவில்லை. விபத்து சேவை அவசரசிகிச்சை பிரிவில் நான்கு படுகாயப்பட்ட உள்ளூர் வாசிகள் கவனமாக அவதானிக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள். விபத்து சேவை பெண்கள் ward வெறுமையாக இருந்தது. Triage பிரிவினரால் (காயங்களின் தன்மைகளுக்கேற்ப சிகிச்சைகள் தீர்மானிக்கப்படும் பிரிவு) பாரிய எண்ணிக்கையினாலான காயப்பட்டவர்கள் மத்தியில் அவரின் முகத்தை நினைவுறுத்த முடியவில்லை. மீண்டும் Resuscitation அறைக்கு விரைந்தோம். அங்கு மூன்று வேறு காயப்பட்டவர்களின் உயிர்காக்க போராடிக்கொண்டிருந்தார்கள். வெளி நோயாளர் பிரிவிலும் தேடினோம். எம் எல்லா முயற்சிகளும் வீணாகிப்போகின. தாதிகளிடம் விசாரித்தபோது,பல காயப்பட்டவர்கள் பொது சத்திர சிகிச்சை விபத்துப்பிரிவுக்கு மாற்றப்பட்டபடியால் அங்கு தேடச்சொன்னார்கள். அங்கு ஐந்து உள்ளூர் வாசிகள் மட்டும் சிகிச்சையளிக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஓர் தாதி அடுத்த பிரிவில் ஓர் வெளிநாட்டவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். நாம் அங்கு சென்ற போது, அத்தந்தையும் இரு மகன்களும் தொய்ந்து போன முகங்களுடன் வெளியில் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வெளிநாட்டவர் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இனி பார்க்கவேண்டிய ஒரே இடங்கள் பிணவறைகள் மட்டும்தான். ஏற்கனவே வைத்தியசாலை பிணவறையில் உறவுகளை தேடிய சில உள்ளூர்வாசிகள் அங்கு குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் யாருமில்லை என்று சொன்னார்கள்.
ஆதலால் தேடவேண்டிய இறுதி இடம் பிரான்ஸிஸ் றோட்டிலுள்ள பொலிஸ் பிணவறை மட்டுமே என்று தீர்மானித்து பிற்பகல் 1 மணியளவில் அங்கு விரைந்தோம். அவ்விடம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆட்களால் நிறைந்திருந்தது. அழுகைகளுடனும் விம்மல்களுடனும் மக்கள் காணப்பட்டனர். உத்தியோகத்தர்கள் காணாமல் போனவர்களின் தரவுகளை உறவினரிடமிருந்து பெற்றுக்கொண்டிருந்தார்கள்.அவர்களும் எம்மைப்போலவே உறவுகளை தேடிக்களைத்து சோர்ந்து போயிருந்தார்கள்.

இறந்த வெளிநாட்டவரைப்பற்றி விசாரித்தபோது, இதுவரை 27 வெளிநாட்டவரின் உடல்கள் அங்கிருப்பதாகவும், அவர்களின் புகைப்படங்கள் பிற்பகல் 3 மணியளவில் காட்சிப்படுத்தப்படுவதாகவும் சொல்லப்பட்டது. வெளிநாட்டு தூதரக அதிகாரிகளின் முயற்சிகளினால், வெளிநாட்டவர் அதற்கு முன்பாகவே தம் உறவுகளை அடையாளம் காண அனுமதிக்கப் பட்டிருந்தார்கள். ஆம், எதனைக்காணக்கூடாது என்று வேண்டிக் கொண்டிருந்தோமோ அதனை இறுதியாக கண்டோம். ஏனைய ஒன்றுமறியா பயணிகளின் மத்தியில் அந்த அழகிய தேவதை அழகாக படுத்திருந்தார் - இல்லை படுக்கவைக்கப்ப்பட்டிருந்தார்- இரத்த வெள்ளத்தில்-
பாரிய மூளையில் ஏற்பட்ட காயம் அப்பெண்ணின் இறப்புக்கு காரணம். மகன்கள் இருவரும் அழத்தொடங்கி மயங்கி விழுந்தார்கள். ஆனால் தந்தை திரு. லூயிஸ் அலன் , சிறிது நேர விசும்பலுடன் கூடிய கண்ணீரின் பின் அங்கிருந்த தன் மனைவியை கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் நன்றிகூறி தன் மகன்களை அணைத்துக்கொண்டு அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.

கனவான்களே நண்பர்களே ❤️

அலன் குடும்பம், நேபாளத்தில் பனிச்சறுக்கு விளையாட்டின்போது விபத்தில் இறந்த தமது மகன் ஜஸ்ரின் அலனின் நினைவாக 100 மில்லியன் ரூபாவினை இரத்தினபுரி மாகாண வைத்தியசாலையில் குழந்தைநலபிரிவு கட்டுவதற்காக வழங்கியிருந்தார்கள். கடந்த 20ம் திகதி ( குண்டுவெடிப்புக்கு முந்தைய நாள்) புதிதாக கட்டப்பட்ட அப்பிரிவுக்கு சென்றிருந்த போது திருமதி. மொனிக் அலன் மேலும் இரண்டு தளங்களை அக்குழ்நதைநல பிரிவில் கட்டித்தருவதற்கு உதவுவதாக வாக்களித்திருந்தார். இரத்தினபுரியில் இருந்து திரும்பும்வழியில்தான் அன்று காலையில் தனது உயிரை இழப்பதற்காக சினமன் கிரான்ட் ஹோட்டலுக்கு சென்றிருக்கிறார்.

அலன் குடும்பத்துக்கு ஏராளமான வியாபார நண்பர்கள் இலங்கையில் இருந்தாலும் அந்த உறவுக்கு மேல் மொனிக் அலன் இலங்கையை மிகவும் நேசித்தார். அதனாலேயே அடிக்கடி அவர்கள் இலங்கைக்கு வருகை தந்தார்கள். மொனிக் ஒல்லாந்து நாட்டினராகவும் அவரின் கணவர் ஓர் அமெரிக்கராகவும் இருந்தபோதிலும் இரத்தினபுரி வைத்தியசாலையில் ஓர் குழந்தைநல பிரிவினை அமைக்கும் குடும்பத்தின் தீர்மானம், அப்பெண்மணி எம் நாட்டின் மீது கொண்ட அன்பினாலேயே எடுக்கப் பட்டது. அதிகமான இலங்கையின் குழந்தைகள் தரமான மருத்துவ வசதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவரின் ஆசை, அவரின் இறுதி ஆசையாகவே போய்விட்டது.

வைத்தியசாலையில் அவரினைப்பற்றி அவரின் நண்பர்களிடமிருந்து அறிந்து கொண்டதைவிட, என் இதயத்தை தொட்டது அவரின் இறுதி கிரியைகளின் போது அவரின் கணவர் காட்டிய வெளிப்பாடு. எல்லா கிரியைகளும் முடிவடைந்து பங்குகொண்டவர்கள் எல்லோரும் அவர்களை ஆறுதல்படுத்தி விடைபெறும்போது, அவர் தன் பிள்ளைகளிடம் ஆழ்ந்த மூச்சினை எடுத்து நன்றியுணர்வுடன், அவர்களின் தாயார் இலங்கை மக்களின்மேல் கொண்ட அன்புடன் அவரின் ஆன்மா அமைதியில் இளைப்பாற அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார் .

அதன்பின் "மொனிக் இலங்கையை நேசித்தார் அதனால் அவர் அமைதியாக இளைப்பாற இம்மண்ணையே தேர்ந்து கொண்டார். நாம் அனைவரும் இவ்விடுமுறையில் வியட்னாம் செல்ல விரும்பியிருந்தோம். அவரே எங்களை இங்கு அழைத்து வந்தார். நாம் மூவர் மட்டும் எம் நாட்களை இங்கு சுருக்கி கொண்டு பாங்கொக் புறப்பட இருந்தோம். அவரும் ஜேசனும் இங்கிருக்க முடிவெடுத்திருந்தார்கள். நண்பர்களே, உங்கள்மேல் கொண்ட அதீத அன்பினால் அனேகமாக அவர் இதனை உணர்ந்திருக்க வேண்டும். இந்த மண்ணே அவரின் நிரந்தரமான வீடு எனவும் நினைத்திருக்க வேண்டும். அவர் உண்மையிலேயே இந்நாட்டினை நேசித்திருந்தார். உங்கள் அன்புக்கு நன்றி." என்று கூறி விடைபெற்றார்.

ஒவ்வொரு வருடமும் அவர்களின் தாயாரின் கல்லறைக்கு அவர்கள் பிரார்த்திக்க வரப்போகிறார்கள். நாம் இன்னும் அறிவிலிகளாக இருந்து கொண்டு அவர்களையும் அவர்களின் தாயாரோடு சொர்க்கத்தில் விரைவில் சேரப்பண்ணப்போகிறோமா???

திருமதி. மொனிக் இறக்கும்வரை அவர்கள் 100 மில்லியன் ரூபாய் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்தது எவருக்குமே தெரியாது. ஏனெனில் தமது உதவி பகிரங்கப்படுத்தப்படகூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். (அவர்களின் கமராவில் இருந்த குடும்ப போட்டோவில் இருந்து பெருப்பிக்கப்பட்ட இம்முகம் என் தொலைபேசியில் என்றும் அவர்களின் நினைவாக. தூரதிர்ஷ்டவசமாக இதுதான் அவர்களின் இறுதி குடும்ப படமாகவும் போய்விட்டது)

இந்த குடும்பம் தங்கள் குடும்பத்தின் தூண் ஒன்றை இழந்து இந்த நாட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறும்போது, தங்களை அதிமேதாவிகளாக, கொடைவள்ளல்களாக தங்கள் பகட்டுத்தனத்தை பகிரங்கப்படுத்திக்கொண்டிருக்கும், எங்கள் வரிப்பணத்தையே எமக்கு நஷ்ட ஈடாக வழங்கி எகத்தாளமிட்டுக்கொண்டிருக்கும், இப்பேரழிவினையே தமக்கு அனுகூலமாக்கப்போகும் எம்மவர்கள் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருப்பார்கள். இவர்களையா நாம் மீண்டும் எம் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்போகின்றோம்?

சிந்திப்போம்!!!! இதிலிருந்து நாம் கற்க வேண்டியது ஏராளம்.

அன்பு மட்டும் உங்களை பாதுகாத்திருந்தால், நீங்கள் எப்போதும் உயிரோடு இருந்திருப்பீர்கள்.

திருமதி. மொனிக் அலன் ❤️அமைதியடைக.

திரு. லூயிஸ் அலன், ஜேசன், ரிமோத்தி, ஜாஸ்பர் இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.🙏💐🙏

Original post : Tharushihan Muhunthan
Translated by : Benildus Johnson


Read more...

அவசரகால சட்டம் வழங்கும் அதிகாரம் என்ன? - 7 முக்கிய தகவல்கள்!

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் அவசரகால சட்ட சரத்துக்களை அமல்படுத்த பாராளுமன்றம் நேற்று ஏகமனதாக அனுமதி வழங்கியது.

இந்நிலையில், அவசரகால சட்டம் எப்போது இலங்கையில் முதன்முதலாக கொண்டு வரப்பட்டது என்று பார்ப்போம்.

காலணித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்ததன் பின்னர் 1953 ஆம் ஆண்டு இலங்கையில் முதன் முறையாக அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டது.

ஒரு கிலோ அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, நாட்டில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையினால் 29 நாட்களுக்கு இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து, நாட்டில் ஏற்பட்ட இன கலவரங்கள், உள்நாட்டு போர் போன்ற காரணிகளினால் அவசரகால சட்டம் தொடர்ந்தும் பல தடவைகள் அமல்படுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அவசர கால சட்டத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ரத்து செய்திருந்தது.

எனினும், கடந்த 9 வருடங்களுக்கு பின்னர், மீண்டும் அவசர கால சட்ட சரத்துக்களை அமல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த தாக்குதலை அடுத்து, ஏற்பட்டுள்ள அச்ச நிலைமையை நீக்கி, இலங்கையில் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையிலேயே இந்த அவசர கால சட்டம் அமல்படுத்தப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அவசர காலச் சட்டத்தினால் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பில் சட்டத்தரணி ஜி. ராஜகுலேந்திரா பி.பி.சி தமிழுக்கு தெளிவூட்டினார்.

1. சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸாருக்கு மாத்திரம் காணப்படுகின்ற அதிகாரம், தற்போது இலங்கையிலுள்ள அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

2. பொலிஸார் தவிர்ந்த ஏனைய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்படும் சந்தேக நபர்கள், அவர்களின் தடுப்பு காவலில் 24 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அதிகாரம் காணப்படுகின்றது.

3. 24 மணித்தியாலங்களின் பின்னர் பொலிஸாருக்கு சந்தேகநபர் ஒப்படைக்கப்பட்டு, தடுப்பு காவல் கட்டளையின் பிரகாரம், அவரை ஒரு மாத காலம் தடுத்து வைக்க முடியும்.

4. ஒரு மாத காலத்திற்கு மேல் சந்தேக நபரை தடுத்து வைத்து, விசாரணை செய்ய வேண்டுமாயின், பாதுகாப்பு செயலாளரின் அனுமதியுடன் குறித்த சந்தேகநபர் மேலும் ஒரு மாத காலத்திற்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அதிகாரம் காணப்படுகின்றது.

5. கைது செய்யப்படும் சந்தேக நபரிடம் முழுமையான விசாரணை நிறைவடையும் வரை, நீதிமன்றத்திற்கு பிணை வழங்குவதற்கான அதிகாரம் கிடையாது.

6. கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படும் சந்தேக நபர் குற்றமிழைக்காதவர் என்பதனை பாதுகாப்பு தரப்பு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் மாத்திரமே பிணை வழங்கப்படும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

7. தேவை ஏற்படும் பட்சத்தில், பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அதிகாரம் பொலிஸ் மா அதிபருக்கு இந்த சட்டத்தின் ஊடாக வழங்கப்படுகின்றது.

Read more...

Wednesday, April 24, 2019

சஹ்­ரான் கொல்லப்பட்டமை, இன்னும் உறுதி செய்யப்படவில்லை - அவனை 3 வருடங்களாக தேடுறார்களாம்!

ஈஸ்டர் ஞாயிறு தின­மன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களின் சூத்­தி­ர­தா­ரி­யென நம்­பப்­படும் தேசிய தவ்ஹீத் ஜமா­அத்தின் தலைவர் கொல்­லப்­பட்டு விட்­டாரா? இல்­லையா? என்­பது இது­வரை உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அவன் உயி­ருடன் இருந்தால் அவனைக் கைது செய்­வ­தற்கு முஸ்­லிம்கள் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும்.

அவனைக் கைது செய்­யும்­வரை நாம் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்டும். கைது செய்­யப்­பட்டு விட்டால் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைத்­து­விடும் என பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிறி பெர்­ணான்டோ உட்­பட பாது­காப்பு அமைச்சின் அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

நேற்று அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை உட்­பட முஸ்லிம் சிவில் சமூக அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் தலை­மையில் பாது­காப்புச் செய­லா­ளரை கொழும்பில் அவ­ரது செய­ல­கத்தில் சந்­தித்து குண்டு வெடிப்புச் சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து முஸ்­லிம்­களின் பாது­காப்பு தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­னார்கள்.

பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிறி பெர்­ணான்­டோவின் தலை­மையில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

தேசிய தவ்ஹீத் ஜமா­அத்தின் தலைவன் சஹ்­ரானை நாம் கடந்த மூன்று வரு­டங்­க­ளாகத் தேடு­கிறோம். அவன் மீது எமக்கு தொடர்ந்தும் சந்­தேகம் இருந்து வந்­தது. அவன் மிகவும் புத்­தி­சா­லி­. பேச்­சினால் கவ­ரக்­கூ­டி­யவன்.

அவரின் கீழ் இயங்­கு­ப­வர்கள் படித்­த­வர்கள். இந்த தாக்­கு­தலை மேற்­கொண்­ட­வர்­களில் இரு இளை­ஞர்கள் மாஸ்டர் டிக்ரி பட்டம் பெற்­ற­வர்கள். மற்றொருவர் சட்டத்தரணி இவ்­வாறு படித்­த­வர்கள் மேலும் இருக்க முடியும்.

காத்­தான்­கு­டியில் இடம்­பெற்ற சட்­ட­வி­ரோத நட­வ­டிக்கை கார­ண­மாக நீதி­மன்­றினால் பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டவர். இவ­ருக்கு பிர­யாண தடை உள்­ளது. இவர் ஊருக்கு வெளியே நட­மா­டு­வ­தாக அறியக் கிடைத்­துள்­ளது. இவரைக் கைது செய­வ­தற்கு முஸ்லிம் சமூகம் பூரண ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கருத்து வெளி­யி­டு­கையில்;

சஹ்ரான் மௌலவி தொடர்பில் நான் ஏற்­க­னவே சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளிடம் கூறி­யி­ருக்­கிறேன் என்றார்.

முஸ்லிம் சிவில் சமூக பிர­தி­நி­திகள் இவ் விவ­கா­ரத்தில் பூரண ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தாகத் தெரி­வித்­தனர்.

வெள்­ளிக்­கி­ழ­மை­களில் பள்­ளி­வா­சல்­க­ளுக்குப் பாது­காப்பு வழங்­கு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி வேண்டிக் கொண்டார்.

குண்டு வெடிப்புச் சம்­ப­வங்­களில் பலி­யா­ன­வர்­க­ளுக்கு பொது­வான இட­மொன்றில் அனு­தாபக் கூட்­ட­மொன்று நடத்­து­வ­தற்கு அனு­மதி கோரப்­பட்­டாலும் பாது­காப்பு கார­ணங்­களைக் கொண்டு அது நிரா­க­ரிக்­கப்­பட்­டது. பள்­ளி­வா­சல்­களில் அனு­தாபக் கூட்டங்களை நடத்தும்படி தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில், வை.எம்.எம்.ஏ., மேமன் சங்கம், மலாயர் சங்கம் உட்பட பல சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Read more...

பொலிஸ் மா அதிபரையும் பாதுகாப்பு செயலரையும் கைது செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்.

இடம்பெற்ற இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்பாக போதிய தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தும் , அத்தாக்குதல்களை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அரசு மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இதற்கு நேரடிப்பொறுப்புக் கூறவேண்டிய பொலிஸ் மா அதிபரையும் பாதுகாப்பு செயலரையும் கைதுசெய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் பாராளுன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச.



எது எவ்வாறாயினும் இக்கடிதம் பாரமளிக்கப்படுவதற்கு முன்னரே பொலிஸ் மா அதிபரையும் பாதுகாப்புச் செயலரையும் பதவிகளிலிருந்து ராஜனாமா செய்யுமாறு ஜனாதிபதி பணித்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தினை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்தது.

இதன் பின்னணியில் புதிய பாதுகாப்பு செயலராக முன்னாள் ராணுவத் தளபதி தயா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் சுயாதீன ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதால், ஆணைகுழுவிடம் முறையிட்டு அது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read more...

பர்தாவை தடைசெய்யுமாறு பிரேரணை கொண்டுவந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு உயிரச்சுறுத்தல்!

இலங்கையில் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை தடைசெய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி மாரசிங்க பாராளுமன்றில் தனிநபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

இதன் பின்னர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முஸ்லிம் அமைப்பு ஒன்றின் பிரதான நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

தங்களுடைய பாதுகாப்பை உறுதி படுத்திக்கொள்ளுங்கள், பிரயாணங்களையும் அவதானமாக மேற்கொள்ளுங்கள் என அந்த நபர் தெரிவித்ததாக கலாநிதி மாரசிங்க நெருக்கமானவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இநேநேரம் இலங்கையில் பர்தா தடை செய்யப்படவேண்டும் என சங்கைக்குரிய தேரர் அத்துரிய ரத்ன தேரர் தெரிவித்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினரான அவர் நேற்று ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை கூட்டி நாட்டில் பர்தா அணிவதால் பாதுகாப்புக்கு உள்ள சவால்கள் தொடர்பில் விளக்கியிருந்தார்.

இதேநேரம், பர்தா தடை செய்வது தொடர்பில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக பா.உ முஜிபிர் ரஃமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தெரிவித்த அவர், எனது மனைவியார் முகத்தினை மூடிக்கொள்வதில்லை அவ்வாறே எனது பிள்ளைகளையும் மூடிக்கொள்ளுமாறு நான் கூறப்போவதும் இல்லை. எனவே அது முஸ்லிம்களை பொறுத்தவரை பெரிய பிரச்சினையும் இல்லை. நாம் இது தொடபில் உலாமாக்களுடன் பேசி மக்களுக்கு தெரியப்படுத்துவோம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மார்க்கத்தில் முகம் தெரிய அணியவேண்டும் என்றே சொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Read more...

Tuesday, April 23, 2019

ஹிஸ்புல்லாவை இதுவரை கைது செய்யாதது ஏன்?

இடம்பெற்ற மனித கொலைத்தாக்குதல்களுக்கு தவ்ஹீத் ஜமாத் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பானது என்று தற்போது நிருபானமாகியுள்ளது.

காத்தான்குடியை தனது தளமாக கொண்டிருந்த அமைப்பு அங்கு பள்ளிவாயல் ஒன்றை தனியாக அமைத்து அப்பள்ளிவாயலிலேயே இந்த உலகம் முஸ்லிம்களுக்கு மாத்திரம் உரித்தானது என்றும் அல்லாவை ஏற்காதவர்கள் அனைவரும் காபீர்கள் என்றும் காபீர்கள் கொல்லப்படவேண்டியவர்கள் என்றும் பகிரங்கமாக பிரசங்கம் செய்து வந்தது.

இவ்வாறு அந்த இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு மனித குலத்திற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டபோது அவ்வமைப்புக்கான சகல ஆதரவினையும் வழங்கி வந்துள்ளான் கிழக்கு மாகாண ஆழுநராக நியமிக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லா என்ற அடிப்படைவாதி.

ஹஸ்புல்லா இவ்வமைப்பு எதிர்காலங்களில் தாக்குதல்களை மேற்கொள்ளப்போகின்றது என்பதை நன்கு அறிந்திருந்தவனாகவே பாராளுமன்றில் இலங்கை மக்களுக்கு பகிரங்க அச்சுறுத்தல் விடுத்தான்.

அவன் விடுத்த அச்சுறுத்தலில் இஸ்லாமியர் இந்நாட்டில் யுத்தத்தை ஆரம்பிக்கின்றபோது 60 ஆண்டுகளானாலும் அதை நிறுத்த முடியாது என்று தெரிவித்திருந்தான். அவ்வாறாயின் அவனுக்கு ஆரம்பமாகவுள்ள யுத்தத்தின் வியூகங்கள் யாவும் தெரியும் என்பதே அர்த்தமாகின்றது.

இவ்வாறான நிலையில் ஹிஸ்புல்லா குண்டுத்தாக்குதல்களை நடாத்திய பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதையும் அவர்களை உற்சாகப்படுத்துவதையும் கீழுள்ள படத்தில் காணலாம். அவ்வாறாயின் இதுவரை இலங்கை பாதுகாப்பு தரப்பு ஹிஸ்புல்லாவை கைது செய்யாதது ஏன் என்ற கேள்வியை இலங்கைநெட் எழுப்புகின்றது.



தவ்ஹீத் ஜமாத் உள்ளுர் முஸ்லிம் தலைவர்களாலும் அரசியல்வாதிகளாலும் போஷிக்கப்பட்ட அமைப்பாகும். எனவே குறித்த தாக்குதல்களுடன் பல முஸ்லிம் முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்பது தெளிவான நிலையில், விசாரணைகளை திசைதிருப்பும் நோக்கத்துடன் புதிய நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டுள்ளது.

அந்த நாடகமே ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பு கொலைகளுக்கு உரிமைகோரியமையாகும்.

ஆகவே இத்திசைதிருப்பல்களுக்கு இடமளியாது ஹிஸ்புல்லா , றிசார்ட் பதுயுதீன் , முஜிபிர் றஃமான் , அசாத்சாலி போன்ற அடிப்படைவாதிகள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவேண்டும்.

Read more...

மனிதம் மட்டுமிருந்த எனது சமுகத்தினுள் அரேபிய கலாச்சாராம் தலைக்கேறியுள்ளது. பாத்திமா மஜிதா

நேற்று முன்தினம் இலங்கையில் 321 உயிர்களை பலியெடுத்த இஸ்லாமியப் பயங்கரவாதத்தை முஸ்லிம் மக்களில் சிலரும் எதிர்கின்றனர். அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள மனிதாபினமற்ற கொலைகள் அப்பழுக்கற்ற பயங்கரவாதம் என்கின்றனர்.

மேற்படி பயங்கரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை என்று தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள பாத்திமா மஜிதா, அன்று தான் பர்தாவை அணிந்தாகவும் இன்று தனது மகளுக்கு அரேபிய உடையான ஹபாயாவினை திணிப்பதாவும் ஆதங்கப்படுகின்றார்.

அவரது முகநூலில் பதிவிடப்பட்டுள்ளதாவது :

நடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் அரசினை மட்டுமே நாங்கள் பொறுப்புக்கூறுவது ஒரு வித தப்பித்தல் முறை. ஒரு வித அச்சம் சார்ந்த முறை.

தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லிம்கள் அல்ல, அவர்கள் பயங்கரவாதிகள் , அவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்று சப்பைக் கட்டுவதை நிறுத்துங்கள். கூட எங்களை நாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளாவிட்டால் எங்கேயோ போய் முட்டி மோதி விடுவோம்.

கிட்டத்தட்ட இரு சகாப்தத்தின் முன்னால் போய் நின்று பார்க்கின்றேன். என்னையும் என்னைச் சுற்றி இருந்தவர்களும் படித்த பாடசாலை, பல்கலைக்கழகங்கள், வேலை செய்த இடங்கள் எல்லாவற்றிலும் மனிதம் மட்டுமே இருந்தன.

படிப்படியாக அரேபியக் கலாச்சாரம் தலைக்கு ஏறத் தொடங்கியது. முஸ்லிம் , காபிர் என்ற பிரிவினை வாதப் போக்கினை இந்த ஒற்றைக் கலாச்சாரம் ஏற்படுத்தி விட்டது .

அன்று நாம் சாப்பிட்ட நாரிசாச் சோறு , பராத் ரொட்டி , போன்ற எல்லாவற்றினையும் ஹராம் என்ற ஒற்றைக் கதவு போட்டு அடைத்து விட்டார்கள். ஒவ்வொருவரும் அடுத்த சமூகத்திலிருந்து பிரித்து விடப்பட்டுள்ளோம்.

நான் ஐந்து வயதாக இருக்கின்ற பொழுது எனது ஆடையை பற்றி கேள்வி எழுப்பாத மத்ரஸாக்கள் இன்று எனது எட்டு வயது மகள் கருப்பு ஹபாயாவினை அணிந்து வந்தால் தான் ஓத முடியும் என்று சட்டம் வகுக்கின்றது.

பாவாடை சட்டை தாவணி அணிந்து பாடசாலை சென்ற ராத்தா பல்கலைக்கழகம் செல்கின்ற அவளது மகளுக்கு கண்கள் இரண்டு மட்டும் தெரியும் விதமாக ஹபாயாவினை போர்த்தி அனுப்பி வைக்கின்ற சூழல்.

தெருவுக்குத் தெரு பள்ளிவாசல் , காபிர் . ஷைத்தான் என்று கதறுகின்ற ஒலி பெருக்கிகள். போதாக்குறைக்கு நோன்பு , பெருநாள் காலங்களில் பேரீச்சம் பழமும் குர்பான் இறைச்சியும் கொடுத்து இந்த அப்பாவிச்சனங்களை போட்டோ எடுக்கின்ற சகிப்புத் தன்மையற்ற வகாபிசத்தின் கொடூரங்கள்.

எல்லாவற்றினையும் நாங்கள் பார்த்தும் பார்க்காமலும் இருந்த இந்த நோயின் கடைசித் தருணம் தீவிரவாதமாக மாறி உயிர்களை பலியெடுக்கின்ற நிலைமை . இந்த குறிப்பிட்ட தீவிரவாத அமைப்பின் நடவடிக்கைகளினால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் இக்கட்டான நிலையில் நிற்கின்றது.

இனிமேலாவது சவுதியின் கைக்கூலிகளான இத்தீவிரவாதப் போக்கினை கண்டுகொள்ளாமல் விடுவது முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது.

ஆனால் இந்த நிலைமையை விளங்கிக்கொள்ளாது நம்மை நாமே தப்பித்துக் கொள்ளவதை விட்டு இந்த தீவிர வாத நோயிலிருந்து எமது தலைமுறைை காப்பாற்ற முனையுங்கள். எங்களைச் சுற்றி என்ன நடந்தது எப்படியெல்லாம் நாங்கள் மூலைச் சலவை செய்யப்பட்டோம் என்பதை உணருங்கள்.

Read more...

தாக்குதல்கள் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் பொறுப்புக்கூற வேண்டும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட அரசாங்கத்தின் சில பாராளுமன்ற உறுப்பினர்களே பொறுப்புக்கூற வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விஷேட அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் 4 குடும்பங்களை சேர்ந்த 32 பேர் ISIS அமைப்பில் பயிற்சி பெற்று இந்நாட்டிற்கு தாக்குதல் தயாராக இருப்பதாக கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி தான் தெரிவித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு தெரிவித்த பின்னர் அரசாங்கத்தில் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடக சந்திப்பொன்றை ​வைத்து அவை பொய்யான கருத்துக்கள் என தெரிவித்திருந்தனர்.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனக்கு சாபமிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

அரசும் மேலைத்தேயமும் இயக்கும் பொம்மைகளாக நம் இளைஞர்- களை இழுத்துச் சென்ற காரணிகளைத் தேட ஏன் தயங்குகிறோம்?

2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி பார்ப்பது ”ஹராம்” என்று பிரச்சாரம் செய்யத்தொடங்கியது. இந்தச் செயல்பாடு பிரச்சாரத்தோடு நின்றுவிடவில்லை. வீடு வீடாகச் சென்று அன்டனாக்களை உடைப்பது, சீடி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களை எச்சரிக்கை செய்து, கடைகளை எரிப்பது என்று வன்முறையாக மாறியது.

கறுப்பு அபாயாக்களையும், நீண்ட அங்கிகளையும் கொண்டுவந்து இதுதான் இஸ்லாமிய உடை என்று யாரோ சில வியாபாரிகள் அறிமுகம் செய்தார்கள். எங்கள் இறுதித் தூதர் முஹம்மத் நபி அவர்கள் வாழ்ந்த மண்ணில் பெண்கள் எல்லாம் இதைத்தான் அணிகின்றார்கள். இது எங்கள் கலாசாரம் என்று ஏற்பதற்கு பெண்களையும் பிள்ளைகளையும் பழக்கப்படுத்தினார்கள். இது பெண்களுக்குப் பாதுகாப்பான கௌரவமான உடை என்பதான உணர்வை வலிந்து உருவாக்கிப் பெண்கள் வாயாலேயே சொல்லும்படி மூளைச்சலவை நடந்தது. பாடசாலை மாணவிகளும், பல்கலைக்கழகம் செல்லும் மாணவிகளும் கறுப்பு அங்கியை மட்டுந்தான் கட்டாயமாக அணியவேண்டும் என்று வெள்ளிக்கிழமை ஜூம்மாக்களில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்துப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இது எங்கள் ஊரில் மட்டும் நிகழ்ந்த சம்பவமில்லை. பெரும்பாலாக முஸ்லிம்கள் வாழும் எல்லா ஊரிலும் இப்படித்தான் நடந்தது.

திடீரென்று முளைத்த சிந்தனைப் பள்ளிகளுக்கு அரபு நாடுகளிலிருந்து நிதி வசூலாகி வந்தது. வெறும் நூறு இருநூறோ ரூபாய்களை மட்டும் நன்கொடையாக செலுத்தி நாங்கள் கற்ற குர்ஆனை மாதாந்தம் மூவாயிரம் செலுத்திக் கற்கும் நிலை உருவாக்கப்பட்டது. மத கல்வி அவசியமேயின்றி முன்னிறுத்தப்பட்டது. வியாபாரமானது. கிலாபத் பற்றிய எண்ணங்கள் இளைஞர்களிடையே விதைக்கப்பட்டு இந்த பூமி முஸ்லிம்களால் ஆழப்படவேண்டியது என்ற பிரம்மை திணிக்கப்பட்டது. சில உலமாக்கள் சொத்துக்கள் சேர்த்தார்கள். எங்களுக்குத் தெரிய பாங்கு முழங்கிக் கொண்டிருந்த சம்பளமே இல்லாத மௌலவிகள் வெளிநாடுகளுக்குப் போய் வந்தார்கள். அவர்கள் வீடுகளுக்குப் பாக்கிஸ்தானிலிருந்தும் மத்திய கிழக்கிலிருந்தும் நண்பர்கள் வந்து தங்கிச் சென்றார்கள். அவ்வப்போது ஆடு மாடு அறுத்து விருந்துகள் நடத்தினார்கள். கஞ்சாவை அம்மியில் அரைத்து இறைச்சிக் கறி சமைத்த வாசம் எங்கள் மூக்குத் துவாரங்களை அரித்துக் கொண்டு காற்றிலேறிப் போனது.

இவர்களுக்குள் இந்த சிந்தனை மாற்றங்கள் எப்படித் திடிரெனத் தோன்றின என்று சிந்திப்பதில் யாருக்கும் ஆர்வம் இருக்கவில்லை.

சிங்கள மக்கள் சீத்தையையா அணிகின்றார்கள்? அவர்களது கலாசாரத்தில் மாற்றம் உண்டாகவில்லையா, நாங்கள் அபாயா அணிந்தால் தீவிரவாதமா என்று அபாயா திணிக்கப்பட்ட அரசியலுக்கு முட்டுக் கொடுப்பதை வெட்கமேயின்றி நிகழ்த்தி வெற்றி கண்டவர்கள் முகங்கள் எல்லாம் வரிசையாக கண்களில் வந்து போகின்றன.

மதத்தின் பெயராலான இத்தகைய சின்னச்சின்ன எக்ஸ்ட்ரீம் செயல்பாடுகளின் ஊற்றுக்கண்களை ஆழமாக நோக்கத் தவறியதோடு, அமெரிக்கா 9/11 தாக்குதலுக்குப் பின்னர் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகப் பார்க்கும் சூழ்நிலையை, இஸ்லாமோபோபியா போன்ற அரசியல்களைப் பேசுவதை மனிதாபிமானச் செயற்பாடாக கருதியவர்கள் எல்லாம்கூட இன்றைய இலங்கை முஸ்லிம்களின் அரசியல் நிலைக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களே.

இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து பேசுகின்ற எழுதுகின்றவர்களை மேலைத்தேய கைக்கூலிகள் என்றவர்கள், உண்மையையை உரக்கப் பேசிய எழுதியவர்களின் கழுத்துகள் நெறிக்கப்பட்டும், சமூக ஊடகங்களிலும், வாழ்விலும் அவமானப்படுத்தப்பட்டபோதும் மௌனித்திருந்தவர்கள்கூட இதன் பின்னால் இருக்கிறார்கள்.

இப்போது வெள்ளம் தலைக்கு மேல்! நாடகங்களின் அரங்குகளை மாற்றவேண்டிய தருணம்.

இலங்கை முஸ்லிம்களின் எதிர்வினைகளை மூன்று வகையாகப் பார்க்க முடிகின்றது.
1) தப்பிக்கும் தந்திரம்
2) குற்றஞ்சுமத்துதல்
3) எதிர்காலம் குறித்த அச்சம்

இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதத்திற்கு எதிராக அழத் தொடங்கியிருக்கி(றோம்)றார்கள். இது தப்பித்தல், அச்சம் சார்ந்தது.

குண்டு வைத்தவர்கள் தீவிரவாதிகள், கொல்லப்படவேண்டியவர்கள், அவர்கள் முஸ்லிம்கள் அல்ல, இஸ்லாம் தீவிரவாத மார்க்கமல்ல என்பதெல்லாம் தப்பித்தல் மற்றும் குற்றச் சுமத்தல் உளவியல் சார்ந்தவை.

தீவிரவாதிகளுக்கு மதமில்லை. அவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்படவேண்டும் என்று தப்பிக்க முற்படும் பச்சோந்திகளாக முஸ்லிம்கள் மாறவேண்டியது காலத்தின் தேவையாகியிருக்கிறது.

தீவிரவாதக் கருத்துக்களுக்கு எதிராக கடந்த காலங்களில் எதிர்வினையாற்றி இருக்கிறோமா என்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைக் கேளுங்கள். மௌனமாக இருந்தவர்கள்கூட தீவிரவாதத்தை ஆதரித்தவர்கள் என்பேன். சமூக ஊடகங்களில் வெளியான மத தீவிரவாத கருத்துக்களை நமக்கென்ன என்றும், யாரோ ஒருவன் உளருகிறான் என்றும் பொறுப்பற்று இருந்த நீங்கள் இப்போது நல்லிணக்கம் பேசுகிறீர்கள். தீவிரவாதிகளைக் கொல்லவேண்டும் என்கிறீர்கள்.

முளையிலேயே கிள்ளி எறியவேண்டியதை, அதற்கான வாய்ப்புகள் இருந்தும் நீங்கள் செய்ய முன்வரவில்லை. கழுத்திற்கு கத்தி வந்துவிட்ட பிற்பாடே தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும் வன்முறைகளுக்கு மார்க்கத்தில் இடமில்லை என்று கத்துகிறீர்கள். தேவைக்கு அதிகமாக சிந்தனைப் பள்ளிகள் வந்தபோது, அபாயா, முகமூடிகள் வந்தபோது அதனைக் கலாசார மாற்றம் என்பதாக அங்கீகரித்தவர்கள், அவற்றை எல்லாம் நம் கைகளில் கொணர்ந்து சேர்த்த அதே மனிதர்களால் தீனுக்கான போர் நடத்தப்படும்போது தனித்து நிற்கப் பார்ப்பது அறிவு முரணில்லையா? வழக்கம்போல அரசாங்கத்தின் சதி, மேலைத்தேய சதி என்றெல்லாம் புலனாய்வு விசாரணைகளை நமக்கு நாமே செய்து திருப்திப்பட்டுக் கொள்ள விளைவதால் எவ்வளவு தூரம் நம்மை நாம் நியாயப்படுத்திக் கொள்ளமுடியும்? அரசும் மேலைத்தேயமும் இயக்கும் பொம்மைகளாக நம் இளைஞர்களை இழுத்துச் சென்ற காரணிகளைத் தேட ஏன் தயங்குகிறோம்?

இந்தப் பதிவு உங்களில் பலருக்கு உவப்பாக இராதென்று தெரியும். எப்போதும்போல காட்டிக் கொடுப்பவள், கைக்கூலி என்று உங்கள் இயலாமைகளைக் கோபங்களாக கொட்டிவிட்டுக் கடந்துபோவீர்கள் என்பதை அறிந்தே இருக்கிறேன்.

இந்த உண்மைகள் கசப்பானவைதான் மருந்துகள் போல. நோய் தீரவிரும்பினால் நீங்கள் ஒவ்வொருவரும் சிகிச்சையளிப்பட்டே ஆகவேண்டும். உங்கள் நோயைக் கண்டறிந்து குணப்படுத்துங்கள். நோய்க்கூறுகளுக்கு சிகிச்சையளிப்பதும், சுகதேகிபோல நடித்திருப்பதும் உங்கள் தெரிவு.

- ஸர்மிளா செயித்

Read more...

Monday, April 22, 2019

குண்டை வெடிக்க வைப்பதற்கு 1000 ரூபா.. கோழைத்தனமான வியூகம்

கொச்சிக்கடை- ஜிந்துப்பிட்டி சந்தியின் கொழும்பு துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானொன்றிலிருந்து குண்டானது இன்று விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டது.

இக்குண்டினை வெடிக்க வைப்பதற்கு பயங்கரவாதிகள் மிக கோழைத்தனமான வியூகம் ஒன்றை கடைப்பிடித்துள்ளனர்.

இவ்வானுக்குள் 4 சமையல் எரிவாயு சிலிண்டர்களை இணைத்து பொருத்தப்பட்டிருந்த இந்தக் குண்டின் இயங்குஆழியை வானின் கதவை திறக்கும்போது வெடிக்ககூடியவாறு வடிவமைத்துள்ளனர்.

வடிவமைக்கப்பட்டிருந்த வாகனத்தின் ஒரு பகுதியை கறுப்பு ஸ்ரிக்கரால் மறைத்தும் வைத்துள்ளனர்.

அத்துடன் வாகனத்தினுள் ஆயிரம் ரூபா தாள்களை மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடியவாறு பரவி விட்டிருந்த அவர்கள் அதன் வாயிலிலும் பணத்தாள்களை விட்டுள்ளனர்.

அதாவது பணத்தை காணுகின்ற எவராவது பணத்தை எடுப்பதற்காக கதவை திறக்க முற்படுகின்றபோது , குண்டு வெடித்து சிதறும் என்பதே அவர்களது வியூகமாக இருந்துள்ளது.

இந்த வாகனத்தில் வந்து இறங்கிய இருவரில் ஒருவரே கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்தில் குண்டினை வெடிக்க வைத்தவர் என்று நம்பப்படுகின்றது.

குண்டு வெடித்துடன் குறித்த வாகனம் எரிந்து சாம்பலாகியதுடன் அருகிலிருந்த சில கட்டிடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் குறித்த பிரதேசத்திலுள்ள மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் குண்டு செயலிழக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது பல வீடுகளின் கூரைகள், யன்னல்கள் சேதமடைந்துள்ளதுடன் கொழும்பு துறைமுகத்தின் மதிலும் உடைந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வேனில் கதவுகள் திறக்கப்பட்டு, பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் குண்டு செயழிழப்பு தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரி ஒருவரின் நேரடி கட்டுப்படடில், துறைமுக பகுதிக்குள் இருந்து செயற்கை அதிர்வு கொடுக்கப்பட்டு பெட்டிகளில் இருந்த வெடிக்கச் செய்யப்பட்டது. இதன்போது அது பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

Read more...

இரு பயங்கரவாதிகள் றிசார்ட் பதுயூதீனின் தங்கையின் வீட்டிலிருந்து கைது.

நேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களுடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுகின்ற இருவர் இன்று பிற்பகல் வத்தளை எடேரமுல்ல பிரதேசத்திலுள்ள றிசார்ட் பதுயூதீனின் தங்கையின் வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேநேரம் தெமட்டக்கொட பிரதேசத்தில் பயங்கரவாதிகள் தங்கியிருந்தார்கள் என நம்பப்படும் வீட்டின் உரிமையாளர் குற்றப் புலனாய்வுப் பிரவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ரிசார்ட் பதுயுதீனின் நெருங்கிய சகா என்றும் அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.



Read more...

குண்டுவெடிப்பில் உயிரிழந்த மனைவியை மலர்சாலையில் வைத்துள்ள அமெரிக்கரின் சோகக் கதை.

லுயிஸ் அவருடைய பெயர். அமெரிக்காவிலுள்ள பிரபல வர்த்தகர். இலங்கைக்கு தொடர்ச்சியாக உல்லாச பிரயாணம் மேற்கொள்பவர்.

ரத்னபுரி பிரதேசத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு தனது செலவில் குழந்கைளுக்கான வார்ட் ஒன்று கட்டிக்கொடுத்துள்ளார். இம்முறை தனது குடும்பத்தினருடன் விடுமுறையில் வந்த அவர் தற்போது மனைவியை பலிகொடுத்துவிட்டு அவரது உடலை கொழும்பிலுள்ள மலர்ச்சாலை ஒன்றில் வைத்து காத்திருக்கின்றார்.

இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு கூறுகின்றார்.

எங்களுக்கு இலங்கை மீது அளவுகடந்த விருப்பம் உண்டு.

இந்த நாட்டுக்கு உதவவும் விரும்பினோம். எமது பணத்தில் ரத்தினபுர பிரதேசத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு சிறார்களுக்காக வார்ட்டு ஒன்றை கடந்த வருடம் மே மாதத்தில் கட்டிக்கொடுத்தோம்.

ஒருவருடத்தின் பின்பு அது எவ்வாறு உள்ளது என்பதை பார்வையிட வந்தோம். பார்த்தோம் மிக சந்தோஷமடைந்தோம்.

இவற்றையெல்லாம் முடிந்துக்கொண்டு இன்று (நேற்று) புறப்பட இருந்தோம். புறப்படுவதற்கு முன்னர் காலை உணவை உட்கொள்ளச் சென்றோம்.

எனது மனைவியும் மகனும் ஒரு மேசையில் உட்கார்ந்தனர். நானும் அடுத்த முன்று மகள்களும் பக்கத்து மேசையில் உட்கார்ந்தோம்.

சாப்பிடத் தொடங்கியதும் பாரிய சத்தம் ஒன்று கேட்டது. மனைவியும் மகனும் விழுந்து கிடந்தனர்.

வைத்தியசாலைக்குச் சென்றபோது மனைவி இறந்து விட்டதாக கூறினார்கள்..

மகன் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.



Read more...

நள்ளிரவு 12 மணிமுதல் அவசரகாலச் சட்டம் அமுலுக்கு வருகின்றது..

பயங்கரவாத தடைச் சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைகளை மாத்திரம் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பாக வர்த்தமானி அறிவித்​தலை வெளியிட அரசு தீர்மானித்துள்ளது.

நாட்டில் நேற்று இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளையடுத்து நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புச் சபை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (22) முற்பகல் ஒன்றுகூடியது. இதன்போது மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புடைய அமைப்புக்கள், அது தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் மற்றும் அதற்கு அனுசரணை வழங்கிய அனைத்து நாசகார சக்திகளையும் முழுமையாக அழிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

மேலும், இலங்கையில் உள்ள சகல வெளிநாட்டு தூதுவர்களையும் உயர் ஸ்தானிகர்களையும் அழைத்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளிப்பதற்கும் ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளார். இதன்போது இலங்கைக்கு அவர்கள் அனைவருடைய சர்வதேச ஒத்துழைப்பையும் கோரவுள்ளார்.

உள்நாட்டுப் பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதல்களின் பின்னால் சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் இருப்பது குறித்து புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ள காரணத்தால், அவற்றை ஒழிப்பதற்காகவே இவ்வாறு சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இதேநேரம் கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட பாதுகாப்புத் தேவையான அனைத்து இடங்களுக்கும் முறையான பாதுகாப்புத் திட்டமொன்றை தயாரிக்குமாறும் பாதுகாப்புத் துறையினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமையைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

Read more...

கொச்சிக்கடையில் மேலுமொரு குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி தகவல்

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகிலுள்ள ரட்ணம் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்றிலிருந்த குண்டு வெடித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற தாக்குதல்களை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதி ஒருவன் வழங்கிய தகவலையடுத்து குறித்த வாகனம் இனம் காணப்பட்டுள்ளது.

அங்கு விரைந்த வீசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் மக்களை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தி குண்டினை செயலிழக்கச் செய்ய முனையும்போதே அக்குண்டு வெடித்துச் சிதறியுள்ளது.

இக்குண்டினால் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரியவருகின்றது.


Read more...

மாவனல்ல பிரதேசத்தில் புத்த சிலையை தாக்கியவனும் தற்கொலைதாரிகளில் ஒருவன்.

மாவனல்ல வனாத்தவில்லு பிரதேசத்திலுள்ள புத்தர் சிலை ஒன்று 26.12.2017 தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. அச்சம்பத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் முஸ்லிம் இளைஞர்கள் சிலரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

குறித்த கைதுகளானது முஸ்லிம் சமூகத்தின்மீது மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நோகடிப்பு என கூக்குரலிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் அவர்ளை விடுவிக்குமாறு அரசாங்கத்தையும் நிர்பந்தித்திருந்தது யாவரும் அறிந்த விடயம்.

இந்நிலையில் அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவனும் நேற்றைய குண்டுவெடிப்புக்களின் தற்கொலைதாரியாக உள்ளதாக தற்போது அறியமுடிகின்றது.

இவ்விடயத்தினை ஏற்றுக்கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கபீர் ஹசிம், மாவனல்லை புத்தர் சிலை தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு தான் அரசாங்கத்தை வலியுறுத்தியாதாக அம்புலி மாமா கதை கூறியுள்ளார்.

அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Read more...

ஒரே குழுவினரே, நன்கு திட்டமிட்டு தாக்குதலை நடத்தினர், சரிக்கமுல்லையில் தப்பியவரை தேடி வேட்டை

நேற்று பல்வேறு இடங்களிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய நபர்களால் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பில் கிங்ஸ்பெரி, ஷங்ரி-லா, சினமன் கிரான்ட் விடுதிகளிலும், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, மட்டக்களப்பு தேவாலயங்களிலும், தெகிவளை உணவகத்திலும், தெமட்டகொடவில் வீடு ஒன்றிலும் குண்டுகள் வெடித்து 200இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 450 பேர் வரை காயமடைந்தனர்.

இந்த தாக்குதல்களை தற்கொலைக் குண்டுதாரிகளே நடத்தினர் என்றும், ஒரே குழுவினரே நன்கு திட்டமிட்டு நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய 13 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களில் 10 பேர் மேலதிக விசாரணைகளுக்காக, குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

காலையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை அடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்றுப் பிற்பகல் தெமட்டகொடவில் உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றை சிறிலங்கா காவல்துறையினர் முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினர்.

அப்போது, அங்கிருந்த தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் குண்டை வெடிக்கவைத்துள்ளார். அதில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் இரண்டு காவலர்களும் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.

அதேவேளை, அந்த வீட்டுக்குள் பெண் ஒருவரும், இரண்டு குழந்தைகளும் இறந்து கிடந்தனர்.

இதையடுத்து, சிறப்பு அதிரடிப்படையினரும் காவல்துறையினரும், வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த சிலரைக் கைது செய்தனர்.

அத்துடன் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அந்தக் காரில் ஷங்ரி-லா விடுதியில் பயன்படுத்தப்படும் தண்ணீர் போத்தல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரமு் மற்றொரு வானுமே, தற்கொலைக் குண்டுதாரிகளையும், குண்டுகளையும் எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

குண்டுகளை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்ட வான், சிறிலங்கா காவல்துறையினரை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிசன் வீதியில் கைப்பற்றப்பட்டது. அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே குண்டுத் தாக்குதல்களை நடத்தியவர்கள் தங்கியிருந்த இடம் என்று சந்தேகிக்கப்படும், வீடு ஒன்றும் நேற்று மாலை பாணந்துறை வடக்கு சரிக்கமுல்ல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தெமட்டகொட அடுக்குமாடி வீட்டு மறைவிடத்தில் இருந்து ஒருவர் தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அவரைக் கண்டுபிடிக்க சிறிலங்கா விமானப்படையின் உலங்கு வானூர்தியும் தேடுதல்களில் ஈடுபடுத்தப்பட்டது.

Read more...

மிஸ்டர் தீவிரவாதிக்கு, நீங்கள் மனிதர்களே அல்லர் - Hyder -

மிஸ்டர் தீவிரவாதிக்கு,

உடம்பு வெடித்துச் சிதறிய இன்பமா உனக்கு?

உன் உயிர் உடம்பிலிருந்து பச்சைக் கிளிப் பறவையாய்ப் பறந்து சென்றதா?

கஸ்தூரி கலந்த துணியில் உன் ஆன்மா சுற்றப்பட்டு அர்ஷை நோக்கி கொண்டு செல்லப்பட்டதா?

ஏழுபது கன்னியரோடு இன்பம் அனுபவிக்கிறாயா இப்பொழுது?

சுவனத்து ஜன்னலின் பூங்காற்று உன்னை இன்று வருடுகிறதா?

என் இறைவனைக் கண்டாயா?

என்ன, அவன் உன்னை வாழ்த்தினானா?

“ஆகா என் அடிமையே என்னவொரு அற்புதச் செயலைச் செய்துவிட்டாய்.நீ உறுஞ்சிய அத்தனை இரத்தத்திற்கும் இதோ உஹது மலையளவு நன்மை உனக்கு” என்று ஏதாவது எழுதித்தந்தானா?

நீ நேற்றுக் கொன்ற அவன் படைத்த அத்தனை ஆத்மாக்களுக்கும் கணக்குப் பார்த்து தலைக்கொரு தங்கத் தோட்டம் பரிசளித்தானா?

நீ நேற்று அனாதையாக்கிய அத்தனை குழந்தைகளின் கண்ணீருக்கும் தேனாறுகள் பரிசளித்தானா?

நீ விதவையாக்கிய அத்தனை பெண்களின் அழுகைகளுக்கும் பாலாறுகள் பருகச் செய்தானா?

‘இதுதானடா இஸ்லாம்.இதைத்தானாடா நான் சொன்னேன் என் செல்வமே’ என்று முத்துக் குவளையில் சஞ்சபீலை ஊற்றி உன் வாயில் பருக்கினானா?

‘ஆகா அற்புதம்.காபிர்களின் வணக்கஸ்தலத்தில் அவர்கள் பெருநாளில் வெடித்துச் சிதறிய உன் கால்களை ‘சுந்துஸ்’ மற்றும் ‘ஸ்தப்ரக்’ பட்டைக் கொண்டு சுற்றினானா?

பைத்தியக்காறா,

எவர் நீதியின்றி ஒரு உயிரைக் கொல்கிறாரோ எவர் முழு மனிதத்தையும் கொன்றவராவார் என்று சொன்ன என் இறைவன் உன்னை அங்கீகரிப்பான் என்று நினைத்தா நேற்று நீ வெடித்துச் சிதறினாய்?

இடையில் எம்பெருமானாரைச் சந்தித்தாயா?

“போர்க்களத்தில் எதிரே நிற்கும் எதிரிகளின் வணக்கஸ்தலங்களை தாக்காதீர்கள்.பெண்களைக் கொல்லாதீர்கள்.முதியவர்களைக் கொல்லாதீர்கள்.குழந்தைகளைக் கொல்லாதீர்கள்.மரங்களை வெட்டாதீர்கள்’ என்று சொன்ன எம்பெருமானார் நீ செய்ததைச் சரிகாண்பார் என்று நினைத்தா வெடித்துச் சிதறினாய்?

வரும் வழியில் உமரைக் கண்டாயா?

‘அவர்கள் வணக்கஸ்தலங்களில் அவர்கள் இணைவைத்தாலும் அவர்களை விட்டுவிடுங்கள்’ என்று சொன்ன உமர் உன் வீரச்செயலை மெச்சுவார் என்று நினைத்தா வெடித்துச் சிதறினாய்

ஸலாஹுத்தீன் அய்யூபியைச் சந்தித்தாயா?

‘போர்க்களத்தின் எட்வினின் குஷ்டரோகம் பிடித்த முகத்தைப் பார்த்துவிட்டு நாளை எனது வைத்தியரை அனுப்புகிறேன்’ என்று சொல்லி அனுப்பியும் வைத்த அய்யூபி உன்னை அங்கீகரிப்பார் என்று நினைத்தா வெடித்துச் சிதறினாய்.

எது உன் நீதி?

பெருநாளைக் கொண்டாட புத்தாடை அணிந்து பள்ளிக்குச் சென்ற அந்த அப்பாவிக் அக்குழந்தையைக் கொல்வதா உன் நீதி?

செய்த இனிப்பைச் சாப்பிடுவதற்கு முன்னர் தேவாலயம் சென்றவளைக் கொல்வதா உன் நீதி?

பெருநாள் காசைச் சேர்த்துப் பந்து வாங்க நினைத்த அக்குழந்தையின் கைகளைச் சிதைப்பதா உன் நீதி?

இதை இஸ்லாம் என்றா நினைத்தாய்.இந்தக் குழப்பத்தை விளைப்பதுதான் உனக்கு சுவனத்தைத் தரும் என்றா நினைத்தாய்?இந்த இரத்தம் ஓட்டுவதுதான் இஸ்லாம் என்று நினைத்தாயா மூடனே?1440 ஆண்டுகள் வாழும் இஸ்லாம் சொன்ன வாழ்க்கை முறை இதுதான் என்று நீ நினைத்தாயா?

மரணித்த நீ உயிரோடு வாழப்போகும் எங்களின் எதிர்காலத்தை ஒரு இரவில் புரட்டிப் போட்ட பாவத்திற்கு எங்கே போய் பிராயச்சித்தம் தேடுவாய்?

இனி நான் தாடி வைத்துக் கொண்டு வீதியில் நடந்தால் என்னையும் தீவிரவாதியாகப் பார்க்கும் இந்த நரக வாழ்க்கையை எனக்குத் தந்துவிட்டு உனக்கு சுவர்க்கம் கிடைக்கும் என்றா நினைத்தாய்?

முகத்தை மூடிக் கொண்டு வாழும் என் மனைவி குண்டைக் கட்டிக் கொண்டு போகிறாள் என்று யாரும் கூக்குரலிட்டால் அவள் அனுபவிக்கும் அவமானத்திற்கு உனக்கு வலக்கரத்தில் ஏடு வரும் என்றா நினைத்தாய்.

கொழும்புக்குப் படிக்கப் போகும் என் சகோதரனின் அறைக்குள் எப்போது மோப்ப நாய்களோடு பாய்ந்து வருவார்கள் என்று வாழும் நரக வாழ்க்கைக்கு உனக்கென்ன பிர்தௌவ்ஸ் கிடைக்கும் என்றா நினைத்தாய்?

ஒற்றை இரவில் எங்கள் வாழ்வியலை மாற்றிய பாவத்தை நாங்கள் முறையிட்டால் எங்கள் இறைவனிடம் என்ன சொல்வாய்?

இனி வாழும் காலமெல்லாம் பயத்தோடு வாழும் வாழ்க்கையைப் பரிசளித்த உன்னைப் பற்றி நாங்கள் அனைவரும் முறையிட்டால் என்ன செய்வாய்?

நேற்று காலை எழும்பும் போது தீவிரவாதத்திற்கு மதமும் இல்லை.இனமும் இல்லை.மொழியும் இல்லை என்றுதான் நினைத்திருந்தேன்.

நேற்று தூங்கப்போகும் போது தீவிரவாதிகளுக்கு மதமும்,மொழியும்,இனமும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.

உங்கள் மதமே தீவிரவாதம்தான்.உங்கள் இனம் தீவிரவாத இனம்தான்.உங்கள் மொழி தீவிரவாத மொழிதான்.

உங்களுக்கும் இஸ்லாத்திற்கும்,உங்களுக்கும் பௌத்தத்திற்கும்,உங்களுக்கும் கிறிஸ்தவத்திற்கும், உங்களுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தமே இல்லை.

ஏனெனில் இவைகள் மனிதர்களின் மதங்கள்.

நீங்கள் மனிதர்களே அல்லர்.

Read more...

Sunday, April 21, 2019

இறைவிசுவாசிகளை இலக்கு வைத்த கொடூரத்தை ஏற்க முடியாதாம்! கூறுகின்றார் ரிஷாத் பதுயுதீன்!

நாட்டின் அமைதி, இன ஐக்கியத்தை பதற்றத்திற்குள்ளாக்கும் வகையில் கொழும்பில் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை வன்மையாக கண்ணிப்பாதாகவும் , அமைதிக்கு எதிரான சதிகாரர்களை அரசாங்கம் உடனடியாக அடையாளம் காண வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார் ரிஷாத் பதியுதீன.

இன்று (21) கொழும்பில் நடாத்தப்பட்ட சம காலத்தாக்குதல்கள் மற்றும் மட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல்கள் தொடர்பில் ரிஷார்ட் பதுயுதீன் வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,

முப்பது வருட யுத்தம் மிகப்பெறுமதியான விலைகொடுத்து முடித்து வைக்கப்பட்டது. இதற்குப் பின்னரான ஒரு தசாப்த கால நிசப்தத்தை தகர்க்கும் வகையில் இத்தாக்குதல்கள் உள்ளன.

மத உணர்வுகளையும் சிவிலியன்களின் சாதாரண வாழ்க்கையையும் இத்திட்டமிட்ட தாக்குதல்கள் அச்சுறுத்தியுள்ளன.

குறிப்பாக கிறிஸ்தவ சகோதரர்கள் புனித ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடுகையில் தேவாலயங்கள் வன்முறைக்குள்ளானமை பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

மதச் சுதந்திரங்களைப் பறித்து, மத உணர்வுகளைக் காயப்படுத்தியுள்ள இந்தக் கயவர்களை எவ்விதக் கருணைகாட்டாது தண்டிக்க வேண்டும்.

எந்த நோக்கங்களையும் அடைந்து கொள்ள வன்முறைகள் வழிமுறையாகப் பின்பற்றப்படக் கூடாது. இலங்கை போன்ற ஜனநாயக நாடுகளில் இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு இனி இடமிருக்கக் கூடாது.

இந்நெருக்கடியான நிலையில் சில விஷமிகள் சமூக முறுகல்களைத் தூண்டிவிட முனைவது வேதனையளிக்கிறது. ஏப்ரல் 11 ஆம் திகதி இணையங்களில் வெளியான கடிதத்தை வைத்து முஸ்லிம் அமைப்புக்களில் முடிச்சுப்போடும் முயற்சிகளும் நிறுத்தப்பட வேண்டும்.

புலனாய்வுத்துறை விசாரணைகளை நடத்தி சூத்திரதாரிகளைக் கண்டறியும் வரை சட்டத்தை எவரும் கையிலெடுக்கக் கூடாது. இந்த வன்முறையில் உயிரிழந்த இறைவிசுவாசுகளின் சகல குடும்பத்தினர், உறவினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் அவர் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read more...

மட்டக்களப்பு குண்டுதாரியின் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு.

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் குண்டுதாரி என சந்தேகிக்கப்படுபவரின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த தேவாலயத்தில் குண்டு வெடிப்பிலிருந்து உயிர்தப்பியுள்ள பெண்ணொருவர் வெடிப்புச் சம்பவம் தொடர்பில் கூறுகையில், அங்கே பொதி ஒன்றுடன் சென்று உட்கார்ந்திருந்த நபர் எனக்காகவும் மன்றாடுங்கள் என்று கேட்டதாகவும் சிறிது நேரத்தில் பாரிய சத்தத்துடன் வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்நிகழ்வு மட்டக்களப்பில் பாரிய கொதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், முஸ்லிம் மக்கள் வாழுகின்ற பிரதேசங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளபோதும் பெரும் எண்ணிக்கையான படையினர் முஸ்லிம் பிரதேசங்களுக்கான பாதுகாப்பிற்கென வீதிக்கு இறக்கப்பட்டுள்ளனர்.

சிசிரிவி கமராக்களை பரிசோதித்ததில் அதிகமான குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடங்களுக்கு நபர்கள் பார்சல்களை கொண்டு சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Read more...

தெமட்டக்கொட குண்டுவெடிப்பில் 3 பொலிஸார் பலி! பரஸ்பரம் துப்பாக்கி பிரயோகம்..

தெமட்டகொட பிரதேசத்திலுள்ள தொடர்மாடி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸாரை கண்ட பயங்கரவாதிகள் குண்டை வெடிக்க செய்து கொண்டுள்ளனர். இவ்வெடிப்பில் மூன்று பொலிஸார் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் அங்கு பொலிஸாருக்கும் குறித்த நபர்களுக்குமிடையே சிறிய துப்பாக்கி சண்டை ஒன்று இடம்பெற்றுள்ளது.

அவ்விடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் இருவரை கைது செய்துள்ளனர்.

தொடர்மாடியை பற்றியிருந்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களுக்கான வெடிமருந்து மற்றும் குண்டுகளை எடுத்துச் சென்றது என சந்தேகிக்கப்படும் வேன் வண்டி ஒன்றை வெள்ளவத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும் அதன் சாரதி தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக அறியக்கிடைக்கின்றது.

மேலும் பாணந்துறைப் பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்தே மேற்படி செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அறியமுடிவதுடன் குறித்தவீடு தற்போது சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் தெஹிவளை குண்டுவெடிப்புடன் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின் பெயரில் தெஹிவளை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை செய்து செய்து செல்லும்போது ஆவேஷமடைந்த பொதுமக்கள் அவரை தாக்கமுற்பட்டபோதும், பொலிஸார் மிகவும் கடினமாக அவரை பாதுகாத்துள்ளனர் எனத் தெரியவருகின்றது.

Read more...

இரண்டு தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள். சந்தேக நபர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று காலை தொடக்கம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள 8 குண்டுத்தாக்குதல்களில் குறைந்தது இரண்டு தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள் என தெரியவருகின்றது.

சங்கரிலா ஹோட்டல் மற்றும் கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் ஆலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள் என தெரியவருகின்றது. சங்கரிலா ஹோட்டல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியில் சஃரான் ஹசிம் என்ற பயங்கரவாதி ஒருவன் உள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதே நேரம் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தெமட்டகொடை தொடர்மாடி ஒன்றிலுள்ள வீடு ஒன்றும் மற்றும் தெஹிவளை பிரதேசத்திலுள்ள தங்குமிட விடுதி ஒன்றும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

Read more...

பொலிஸ் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தங்கள் தடை.

நாட்டில் இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து நாடுபூராகவும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

மறு அறிவித்தல் வரை இவ் ஊரடங்கு அறிவித்தல் அமுலில் இருக்கும் என பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

இதேநேரம் இலங்கையில் அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தொடர் வெடிப்பு சம்பவங்கள் ஏற்படுவை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் வட்ஸ்அப், வைபர் மற்றும் முகப்புத்தகம் ஆகியவை இவ்வாறு தடை விதிப்பட்டுள்ளது.

Read more...

இலங்கையில் 6 குண்டுகள் வெடிப்பு. நான்கு தேவாலயங்கள். 3 ஹோட்டல்கள் இலக்கு 40 பலி! 300 மேற்பட்டோர் காயம்.

இலங்கையின் பலபாகங்களிலுமுள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் 3 பிரபல ஹோட்டல்களிலும் குண்டுகள் வெடித்துள்ளது. இவ் ஏழு குண்டு வெடிப்பிலும் இதுவரை 40 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 300 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

கொட்டாஞ்சேனை கொச்சிக்கடை, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய, மட்டக்களப்பு புளியந்தீவு தேவாலயங்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அத்துடன் அதிக உல்லாசப்பயணிகள் உள்ள சங்கரிலா , சினமன் கிறான்ட கிங்ஸ்பெரி ஆகிய ஹோட்டல்களிலும் குண்டு வெடித்துள்ளது.

காயமடைந்தவர்களுக்கான அவசர சிகிக்சைகளுக்காக நலன்விரும்பிகளிடமிருந்து இரத்தம் வேண்டப்படுகின்றது.





Read more...

Saturday, April 20, 2019

கல்முனை பிரதேச செயலக விடயத்தில் வெற்றிகாணும் வரை சாத்வீக வழியில் போராடுமாறு மக்கள் கேட்கின்றது ரிஎம்விபி.

கல்முனை பிரதேச செயலகம் (வடக்கு) தரமுயர்த்துவது தொடர்பில் நிலைமைகள் தொடர்ந்தும் சிக்கலடைந்து வரும் நிலையில் கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுதற்கு சகல தரத்தினையும் உரிமைகளை கொண்டுள்ளது என தெரிவித்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, மக்கள் இவ்விடயத்தில் தமது உரிமையை பெற்றுக்கொள்வதற்காக சாத்தீக வழியில் போராடவேண்டும் என்றும் அத்துடன் சட்டத்தினை மதிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

கட்சியின் செயலாளர் பூ. பிரசாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் தொடர்பான ஊடக அறிக்கை -தமிழ் மக்கள் விடுதலை புலிகள்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உபசெயலகமானது 1989 ஆம் ஆண்டு காலத்தில் உருவாக்கப்பட்டதொன்றாகும்.

இதையொட்டியகாலத்தில் நாடு முழுவதும் இதே போன்ற 25 உப செயலகங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. இன்றைய நிலையில் அவையனைத்தும் அதாவது குறித்த கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் தவிர்ந்த நாடு தழுவிய ஏனைய 24 உப செயலகங்களும் தரமுயர்த்தப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் இன்றுவரை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உபசெயலகம் ஆனது தரமுயர்த்தப்படாமல் இருப்பது துரதிஷ்ட்டவசமானதொன்றாகும்.

இந்த பிரதேசம் வாழ் மக்களிடமிருந்து சுமார் முப்பது வருடகாலமாக இந்த உப செயலகத்தை தரமுயர்த்தும் கோரிக்கைகள் அவ்வப்போது முன்வைக்கப்பட்டே வருகின்றன. ஆனால் தமிழ்-முஸ்லீம் என்கின்ற இனவாத அரசியல் போட்டா போட்டிகளில் சிக்குண்டு இச்செயலகமானது தரமுயர்த்தப்படுவது சாத்தியமாககாமலேயே சென்றுகொண்டிருக்கின்றது.

மிக இலகுவாக செயற்படுத்தக்கூடிய இந்த தரமுயர்த்தல் நடவடிக்கைகள் இன்று பெரும் சவால் நிறைந்த விடயமாக மாறுவதற்கு தமிழ் மக்களின் பெரும்பான்மையோரை பிரதிநிதித்துவம் செய்கின்ற தலைமைகளின் பொறுப்பற்ற தன்மையே காரணமாகும்.

இத்தகைய பொறுப்பற்ற அரசியல் தலைமைகளின் நம்பிக்கை இழந்த அப்பிரதேச மக்களும், பொதுநல அமைப்புகளும் தற்போது இப்பிரச்சனையை கையிலெடுக்க முன்வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த உப செயலகமானது தமிழர்களுக்கானது என்றும் அதனை தரமுயர்த்துகையில் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் சில முஸ்லீம் அரசியல்வாதிகள் பொய்யான பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். ஆனால் அத்தகைய பரப்புரைகளில் கிஞ்சித்தேனும் உண்மை கிடையாது. அதேவேளை அத்தகைய பரப்புரைகளை முன்வைத்து தமிழ் அரசியல்வாதிகளில் சிலரும் முஸ்லிம் மக்களுக்கெதிரான இனவாத அரசியலாக்க முற்படுவதும் இன முறுகல் நிலைமைகள் தொடருவதும் ஆரோக்கியமானதல்ல. கல்முனை வடக்கு மக்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்த இந்த கோரிக்கையை ஆதரித்தும் எதிர்த்தும் சிலர் சுய இலாபம் தேடுகின்ற முனைப்பில் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகின்றது.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதமேந்தி போராடியவர்கள் என்பதோடு இன்று ஒரு பொறுப்புமிக்க அரசியல் சக்தியாக ஜனநாயக பாதையில் பயணிப்பவர்கள் என்கின்ற வகையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் சார்ந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆகிய நாங்கள் கீழ்வரும் அவதானங்களை முன்வைக்க விரும்புகின்றோம்.

*கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் தரமுயர்த்தப்படுவது அப்பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வாழும் 36346 மக்களினதும் நிராகரிக்கப்படமுடியாத கோரிக்கையாகும் என்பதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகின்றோம்.

*இந்த செயலகம் தரமுயர்த்தப்படுவதால் கல்முனை தெற்கில் வாழும் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்கின்ற பிரச்சாரங்கள் பொய்யானவையென்றும் அவற்றினை நம்பி ஏமாற வேண்டாமென்றும் முஸ்லீம் மக்களை கோருகின்றோம்.

*கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் என்பதை முன்வைத்து இனவாத பிரச்சாரங்களையோ இன முறுகல் நிலைமைகளை ஏற்படுத்தும் பரப்புரைகளையோ செய்ய வேண்டாம் என்று தமிழ்- முஸ்லீம் மக்களுக்கு பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றோம்.

*கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலக தரமுயர்த்தல் கோரிக்கையை வலியுறுத்தி பொது மக்களாலும் கல்முனை இளைஞர் மன்றத்தினாலும் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்துவித வழிமுறைகளிலான போராட்டங்களுக்கும் நாம் முழு ஆதரவு வழங்குகின்றோம்.

*அத்தகைய போராட்டங்களில் பங்கெடுக்கும் அனைவரையும் சாத்வீக வழியில் போராடுமாறும் சட்டத்தையும் சகோதரத்துவத்தையும் மதித்து செயற்படுமாறும் வினயமாக கேட்டுக்கொள்ளுகின்றோம்.

செயலாளர் பூ.பிரசாந்தன்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள்

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com