Sunday, January 13, 2019

ஜேர்மன் இரகசிய சேவையின் உளவுபார்ப்புக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கிறது.

By the Sozialistische Gleichheitspartei
ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei — SGP) ஜேர்மன் கூட்டாட்சி அரசியலமைப்புக்கான பாதுகாப்பு முகமையின் (Verfassungsschutz) உளவுபார்ப்புக்கு எதிராகவும் மற்றும் கட்சியை உள்நாட்டு இரகசிய சேவையின் ஆண்டு அறிக்கையில் கண்காணிப்புக்குரிய பட்டியலில் வைத்ததற்கு எதிராகவும் சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஜூலையில் வெளியிட்டப்பட்ட அந்த அறிக்கை, ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியை முதல்முறையாக "இடதுசாரி தீவிரவாத" கட்சியாக அடையாளப்படுத்தியது. இதை நியாயப்படுத்துவதற்காக அதிகாரிகள் கூறிய ஒரே காரணம், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) முதலாளித்துவத்தையும், ஏனைய அரசியல் கட்சிகளையும் மற்றும் தொழிற்சங்கங்களையும் விமர்சிக்கிறது என்பதாகும்.

இரகசிய சேவையின் நடவடிக்கைகள் குறித்து கட்சி ஆகஸ்டில் ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டது, அது இரகசிய சேவையின் அப்போதைய தலைவர் ஹன்ஸ்-கியோர்க் மாஸனின் அதிவலது அரசியல் கண்ணோட்டங்களால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு கணக்கிட்ட அரசியல் தாக்குதலென அதை வரையறுத்தது. ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் வழக்கறிஞர் டாக்டர். பீர் ஸ்டோல் (Dr. Peer Stolle) மத்திய முகமைக்கு எழுத்துபூர்வமாக உத்தியோகபூர்வ அறிவிப்பைச் சமர்ப்பித்துள்ளார், இது கீழே பிரசுரிக்கப்படுகிறது.

ஸ்டோல், குடியரசின் வழக்கறிஞர் அமைப்பினது (RAV) தலைவர் ஆவார். அரசிலமைப்புக்கான பாதுகாப்பு அலுவலகத்திற்கு எதிராக பல வழக்குகள் நடத்தி உள்ள அவர், அதிவலது தீவிரவாத பயங்கரவாத NSU குழுவின் வழக்கில் துணை-வாதியான Ergün Kubasik ஐ பிரதிநிதித்துவம் செய்தார்.

* * * * * *

அன்புடன் ஐயா அல்லது அம்மா,

நாங்கள் இக்கடிதத்தில் முன்வைக்கப்படும் விடயமாக ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei) தலைவர் உல்றிச் ரிப்பேர்ட் பிரதிநிதித்துவம் செய்யும் அக்கட்சியின் சட்டப்பூர்வ நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளோம் என்பதை உங்களுக்கு இங்கே தெரிவித்துக் கொள்கிறோம். அதற்காக எமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியானது (Sozialistische Gleichheitspartei) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஜேர்மன் பிரிவாகும். ஜேர்மனியில் சோசலிச சர்வதேசவாத வேலைத்திட்டத்திற்குத் தொழிலாளர்களை வென்றெடுக்க செயற்பட்டு வரும் SGP, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் தொழிலாளர்களின் ஒரு அரசை ஸ்தாபிப்பதற்கும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி அணித்திரட்ட இந்த வேலைத்திட்டத்தை அடித்தளமாக கருதுகிறது. கட்சியின் கோட்பாடுகள் அறிக்கையின்படி, “உண்மையான ஜனநாயக, சமத்துவமான, சோசலிச சமூகத்தை" கட்டியெழுப்புவதற்கான புறநிலைமைகளை உருவாக்குவதே அதன் நோக்கமாகும். இந்த நோக்கத்தை எட்ட, SGP பிரதானமாக விபரங்களை விவரிப்பதற்கான நிகழ்வுகள் மற்றும் விரிவுரைகளை நடத்துவதில் ஒருமுனைப்பட்டுள்ளதுடன், உலக அரசியல் மற்றும் பொருளாதார அபிவிருத்திகளைக் குறித்து பகுப்பாய்வு செய்து உலக சோசலிச வலைத் தளத்தில் அன்றாடம் கட்டுரைகளைப் பிரசுரிக்கிறது.

உங்களால் பிரசுரிக்கப்பட்ட ஜேர்மன் கூட்டாட்சி அரசியலமைப்புக்கான பாதுகாப்பு அலுவலகத்தின் (Verfassungsschutz) 2017 அறிக்கையில், எங்கள் தரப்பினரை நீங்கள் "இடதுசாரி தீவிரவாதம்" என்ற தலைப்பின் கீழ், பக்கம் 131 மற்றும் 148 இல் குறிப்பிடுகிறீர்கள். அங்கே, SGP நிலவும் அரசு மற்றும் சமூக ஒழுங்கை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 'முதலாளித்துவம்' என்று அவதூறு செய்தும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராகவும், தேசியவாதம், ஏகாதிபத்தியம் மற்றும் இராணுவவாதம் என்று கூறப்படுவதற்கு எதிராகவும், அத்துடன் சமூக ஜனநாயகம், தொழிற்சங்கங்கள், இடது கட்சிக்கு எதிராகவும் அதன் வேலைதிட்டத்தைக் கொண்டு கிளர்ச்சிகரமாக வழிநடத்துகிறது என்று, ஏனையவற்றுடன் சேர்ந்து, நீங்கள் விவரிக்கிறீர்கள். இதற்கு கூடுதலாக, எமது தரப்பினர் தேர்தல்களில் பங்கெடுப்பதன் மூலமாகவும் மற்றும் தொடர்ச்சியான விரிவுரைகளை ஒழுங்கமைப்பதன் மூலமாகவும் கட்சியையும் மற்றும் அதன் கண்ணோட்டங்களையும் எவ்வாறு மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறது என்பதையும் அந்த அறிக்கை விவரிக்கிறது.

உங்களால் பிரசுரிக்கப்பட்ட ஜேர்மன் கூட்டாட்சி அரசியலமைப்புக்கான பாதுகாப்பு அலுவலகத்தின் 2017 அறிக்கையில் எமது தரப்பினரைக் குறிப்பிட்டமை சட்டத்திற்குப் புறம்பானது ஏனென்றால் அந்த அறிக்கையில் எமது தரப்பினரை உள்ளடக்குவதற்கான முன்நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.

ஜேர்மன் கூட்டாட்சி அரசியலைப்புக்கான பாதுகாப்பு அலுவலகத்தின் ஓர் அறிக்கை என்பது பொதுச்சேவை பணியின் வெறுமனே ஒரு பாரபட்சமான விளைபொருள் என்பது மட்டுமல்ல. இரகசிய சேவை அறிக்கையில் இயல்பான அல்லது சட்டபூர்வ ஒரு நபரைப் பெயரிடுவது என்பது பொது சர்ச்சைகளில் அரசு அதிகாரிகள் வெறுமனே பங்கெடுப்பது, அல்லது குடிமக்கள் சுதந்திரமாக முடிவெடுப்பதற்குப் போதுமானவில் உதவும் தகவலின் அடித்தளத்தை உருவாக்குவது என்பதற்கும் அப்பாற்பட்டு செல்கிறது, ஆகவே அது குறிப்பிட்ட குறுகியளவில் வரையறுக்கப்பட்ட பல அச்சுறுத்தல்களைப் பாதுகாக்க சிறப்புரிமை கொண்ட பல அதிகாரங்களிடம் இருந்து எழுகிறது என்பதுடன், சிலர் மீது சுமையேற்றுவதில், அதில் பெயரிடப்பட்டவரின் மீது (BVerfG, NJW 2005, 2912 [2913] ஆகியவற்றைப் பரிசீலிக்கவும்) எதிர்மறை தடைகளை விதிப்பதற்குக் கொண்டு செல்கிறது.

இரகசிய சேவை, அறிக்கை ஒன்றை தயாரிக்கையில் —அதுவும் குறிப்பாக அதில் எந்த நபர்களை அல்லது எந்த நபர்களின் குழுக்களை உள்ளடக்குவது என்பதைத் தீர்மானிக்கையில்— மிகவும் கவனமான வழிமுறைகள் கையாளப்பட்டிருக்க வேண்டும். இரகசிய சேவை அறிக்கை ஓர் எச்சரிக்கை சமிக்ஞைக்கு ஒத்திருக்கிறது. ஒரு நபரை அல்லது நபர்களின் குழுவை இரகசிய சேவை அறிக்கையில் பெயரிடுவது என்பது, அதேவேளையில், நடைமுறையளவில், இந்த நபர்களின் குழுவை ஆதரிக்க வேண்டாம், இக்குழுவில் இணைய விரும்பும், அவர்கள் யாராக இருந்தாலும் அதன் முன்மொழிவுகளை ஏற்க வேண்டாமென மக்களுக்கு உத்தரவிடும் ஓர் உத்தரவை வெளியிடுவதாக உள்ளது. அது இக்குழுவின் நபர்களுடன் செயல்படுவதில் இருந்து அல்லது இணைவதில் இருந்தே கூட குடிமக்களைத் தடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இரகசிய சேவை அறிக்கை, பரவலான தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதிப்படுத்தி வைக்க, வழமையாக ஊடகங்களில் குறிப்பிடப்படுகின்றன என்பதுடன் பொதுவில் விவாதிக்கப்படுகிறது. இதன் விளைவு, இரகசிய சேவை அறிக்கையில் பெயரிடப்படுவதன் மூலமாக பாதிக்கப்படும் குழு, ஒத்துழைத்த பங்காளிகள் (சாத்தியமானளவுக்கு) ஒத்துழைக்க தயங்குவதையும், பாதிக்கப்பட்ட குழுவின் நபர்கள் வர்த்தகங்கள், கலாச்சாரம், சமூக அல்லது மற்ற கட்சிகளுடனான பிற தொடர்புகளில் ஈடுபடுவதை மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கும் விதத்தில் இருப்பதையும் காணக்கூடும். இவ்விதத்தில் இரகசிய சேவை அறிக்கையில் பெயரிடப்படுகின்றவர்கள் பொது வாழ்வில் குறிப்பிடத்தக்களவில் எதிர்மறையான அவப்பெயருடன் தொடர்புபடுத்தப்படுகிறார்கள் (பரிசீலிக்கவும் OVG Berlin-Brandenburg, U. v. 06.04.2006 - OVG 3 B 3.99).

இதற்கும் கூடுதலாக, ஒரு நபரையோ அல்லது குழுவின் நபர்களையோ இரகசிய சேவை அறிக்கையில் உள்ளடக்குகையில், பொதுவான சட்ட விருப்புரிமை வரம்புகளைக் கொண்டுள்ளன, அவற்றில் விகிதாசார கோட்பாடும் உள்ளடங்கும். ஆகவே கடுமையான வரையறைகளின் அடிப்படையில் உண்மையில் அது அவசியமாகவும், பொருந்தக் கூடியதாகவும் இருந்தால் மட்டுமே பெயரிடுவது அனுமதிக்கத்தக்கதாகும்.

உங்களால் வெளியிடப்பட்ட ஜேர்மன் கூட்டாட்சி அரசியலமைப்புக்கான பாதுகாப்பு அலுவலகத்தின் 2017 அறிக்கையில் எமது தரப்பினரைச் சேர்ப்பதற்கான எந்த நிபந்தனைகளும் பூர்த்தி ஆகவில்லை. §16 BverfSchG ஐ பார்த்தால், உங்கள் அலுவலகம் ஆண்டுக்கு ஒருமுறை, முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மீதான தற்போதைய அபிவிருத்திகளை அறிக்கையில் விவரிக்கிறது, ¶3,.2 BverfSchG ஐ பார்த்தால், இதுவரையில் அவ்வாறு செய்வதற்கு போதுமானளவுக்கு, பலமான பொருத்தமான ஆதாரம் எதுவும் இல்லை. ¶3.1 No.1 BverfSchG ஐ பார்த்தால், சுதந்திர ஜனநாயக அரசியலமைப்பு உத்தரவை மீறும் நோக்கம் கொண்ட முயற்சிகள் மீது, அல்லது கூட்டாட்சி அரசு அல்லது அதன் அங்கத்துவ மாநிலங்கள் ஏதேனும் ஒன்றின் இருப்பு அல்லது பாதுகாப்புக்கு எதிராக வழிநடத்தப்படும் முயற்சிகள் மீது, அல்லது கூட்டாட்சி அரசின், அதன் அங்கத்துவ மாநிலங்களில் ஏதேனும் ஒன்றின் அல்லது அதன் அங்கத்தவர்களின் அரசு அங்கங்களால் உத்தியோகபூர்வ வணிகம் செய்வதைச் சட்டவிரோதமென தடுக்கும் முயற்சிகள் மீது தகவல்களைச் சேகரித்து மதிப்பீடு செய்வது உங்கள் அலுவலகத்தின் பொறுப்பாகும்.

குழுவின் நபர்களின் சார்பாக செய்யப்படும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை, ¶4.2 BverfSchG இல் பொதியப்பட்டுள்ளவாறு, குழுவின் நபர்களது நடவடிக்கைகள் அடிப்படை அரசியலமைப்பு கோட்பாடுகளை மீறும் நோக்கில் இருந்தால் மட்டுமே சுதந்திர ஜனநாயக அரசியலமைப்பு உத்தரவை மீறும் ஒரு முயற்சியாக வகைப்படுத்தப்படுகின்றன. ஆகவே அவ்விதமான நடவடிக்கைகள் உண்மையில் இந்த குழு நபர்களால் நடத்தப்படுகின்றன என்பதற்கான தீர்மானம் அவசியப்படுகிறது. இதுவும் ¶4.1c BverfSchG இன் அடிப்படையில் உள்ளது, இதன்படி சுதந்திர ஜனநாயக அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரான முயற்சிகள் என்பவை துணைப் பந்தி 2 இல் பொதியப்பட்டுள்ளவாறு அரசியலமைப்பு கோட்பாடுகளை மீற அல்லது பொருந்தாத ஒன்றை தக்க வைக்க செய்வதற்கான நோக்கம் மற்றும் இலக்கை நோக்கி ஒரு நபரோ அல்லது குழுவின் நபர்களோ செய்யும் பல வகையான நடவடிக்கைகளாக அரசியல்ரீதியில் வரையறுக்கப்படுகின்றன.

இந்த முன்நிபந்தனைகள் எதுவும் இந்த வழக்கில் பூர்த்தி செய்யப்படவில்லை. இந்த அறிக்கை விவரிக்கின்றவாறே, எமது தரப்பினரின் கிளர்ச்சிகர நடவடிக்கை 'முதலாளித்துவத்திற்கு' எதிராக, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக, தேசியவாதம், ஏகாதிபத்தியம் மற்றும் இராணுவவாதம் என்று கூறப்படுவதற்கு எதிராக, அத்துடன் சமூக ஜனநாயக கட்சிக்கு எதிராக, தொழிற்சங்கம் மற்றும் இடது கட்சிக்கு எதிராக உள்ளதே தவிர ¶4.2 BverfSchGஇன் வரையறையில் அரசிலமைப்பு கோட்பாடுகளுக்கு எதிராக இல்லை, அல்லது ¶4.1 BverfSchg இல் அமைக்கப்பட்டுள்ளவாறு அத்தகைய முயற்சிகளுக்கு ஆதாரங்களும் இல்லை.

ஆகவே அரசியலமைப்புக்கான பாதுகாப்பு அறிக்கை 2017 இல் எமது தரப்பினரை உள்ளடக்கி இருப்பது சட்டவிரோதமானதாகும்.

எங்களைப் பொறுத்த வரையில், உங்கள் அலுவலகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர். ஹன்ஸ்-கியோர்க் மாஸனின் அறிக்கைகளுக்குப் பின்னர் இருந்து, மிகச் சமீபத்தில் SPD இல் "இடதுசாரி தீவிரவாத சக்திகள்" குறித்த அறிக்கைகள் உட்பட, உங்கள் அலுவலகத்தின் அறிக்கையில் உரிய சட்ட நெறிமுறை வழிவகைகள் பின்பற்றப்பட்டதா, அத்துடன் அவை சட்டபூர்வமாக பின்பற்றப்பட்டதா என்பதை ஓர் உள்அலுவலக மறுமதிப்பீட்டில் தீர்மானிக்கப்பட வேண்டுமென நாங்கள் கருதுகிறோம்.

ஆகவே, எமது தரப்பினரின் சார்பில் மற்றும் அவர்களின் உரிமையைப் பிரயோகித்து, நாங்கள் உங்களைக் கோருவது அதில் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei) குறிப்பிடப்பட்டிருக்கும் வரையில், உங்களால் பிரசுரிக்கப்பட்ட அரசியலமைப்புக்கான பாதுகாப்பு அலுவலகத்தின் 2017 அறிக்கையை டிஜிட்டல் வடிவிலோ, எழுத்து வடிவிலோ அல்லது வேறெந்த வடிவிலோ நீங்கள் பரப்பவோ, வினியோகிக்க அனுமதிக்கவோ அல்லது அணுகுவதற்கு உதவவோ கூடாதென உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

பக்கங்கள் 131 மற்றும் 148 இல் இது சம்பந்தமாக உள்ள பந்திகள் நீக்கப்பட்டால் எங்கள் தரப்பில் அது பொருத்தமானதாக இருக்கும் என கருதுவோம்.

Yours sincerely,

Dr. Stolle
Lawyer

Read more...

Saturday, January 12, 2019

புலிகள் தமிழ் மக்களை மாத்திரமல்ல தமது இயக்க உறுப்பினர்களையே கொன்றொழித்தார்கள். மாவை சேனாதிராஜா

புலிகள் பயங்கரவாதிகள் அல்லவென்றும் அது ஒரு புனித இயக்கம் என்றும் மேற்கொள்ளப்படும் போலிப்பிரச்சாரத்தை தற்போது தமிழரசுக் கட்சியினர் தவிடுபொடியாக்கி வருகின்றனர்.

நேற்று முன்தினம் பாராளுமன்றில் பேசிய தமிழரசுக்கட்சியின் அடுத்த தலைவர் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்ற சுமந்திரன், இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களை மேற்கொண்டது போல் புலிகளும் போர்குற்றங்களை மேற்கொண்டுள்ளார்கள் என்று கன்சாட்டில் பதிவு செய்துள்ளார்.

இதற்கு முன்னர் புலிகள் ஜனநாயகத் தமிழ் தலைவர்களை கொன்றொழித்தனால் தமிழ் தலைவர்கள் உயிரச்சத்தில் புலிகளுடன் டீல் ஒன்றை செய்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி உயிர் தப்பிக்கொண்டனர் எனத் தெரிவித்திருந்திருந்தார்.

இக்கருத்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் புலிகளை வைத்து அரசியல் செய்துவரும் பெருச்சாளிகளுக்கு இவ்விடயம் பெரும் சங்கடமாக அமைந்துள்ளது. புலிகளின் முகத்திரை கிழிக்கப்பட்டால் தங்களது கஞ்சிக்குள் மண்விழுந்தாக போய்விடும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.

அதன் அடிப்படையில் சயந்தனின் மேற்படி கருத்து அனுமதிப்கப்படக்கூடியதா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களின் கடந்த 9ம் திகதி சந்திப்பொன்றில் புலிகளின் பெயரால் வாக்குப்பிச்சை கேட்டலையும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இக்கேள்விக்கு பதிலளித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா : 'விடுதலைப்புலிகள் ஜனநாயக மீறலில் ஈடுபட்டது உண்மையே. குறிப்பாக தமிழ் தரப்பையே கொன்றார்கள். அதற்கும் மேலாக தங்களது இரண்டாம் நிலைத்தலைவராக இருந்த மாத்தையாவையும், 200 போராளிகளையும் சுட்டுக் கொன்றார்கள்' என நேரடிப் பதிலை வழங்கியுள்ளார்.

இக்கேள்விக்கு பதிலளித்த மாவை சேனாதிராஜா மிகவும் ஆத்திரமடைந்த நிலையில் புலிகள் மேற்கொண்ட ஜனநாயக மறுப்புக்களை பட்டியலிட ஆரம்பித்தபோது, குறுக்கிட்ட பா.உ சுமந்திரன், புலிகள் ஜனநாயக வழியில் அரசியலில் ஈடுபட்டவர்களை புலிகள் கொன்றார்கள்தானே என்றும் அவ்வாறு செய்யவில்லை என்று எவராலும் மனச்சாட்சியை தொட்டு கூறமுடியுமா என்று கேட்டபோது, கிளிநொச்சி கேணைப்பயல் சிறிதரன் கண்ணை பிதுக்கியதாக அறியக்கிடைக்கின்றது.

Read more...

சாரதி அனுமதிப்பத்திரம் பெறவுள்ள அனைவருக்கு இதைத்தான் செய்யவேண்டும்

இந்த ஆண்டிற்குள் சாரதி அனுமதி பத்திரம் பெறும் கணினி முறையிலான சோதனை அறிமுகப்படுத்தப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் A .K .K ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இந்தச் சோதனை நடவடிக்கை நாட்டின் 25 மாவட்டத்திலும் மேற்கொள்ளப்படவுள்ளன. சாரதி அனுமதி பாத்திரத்தை பெற்றுக்கொள்ளவுள்ள ஒருவர், கணினி முறையில் அதாவது ஒன்லைன் மூலம் பரீட்சைக்கு தோற்றவேண்டும். அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகளும் உடனடியாக ஒன்லைன் மூலம் அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

வடக்கு போன்று ஊவா மாகாண மாணவர்களுக்கும் அடிச்சது அதிஷ்டம்

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வடமாகாணத்தை போன்று ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 14 ம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமான் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விடுமுறை தினத்திற்கான பாடசாலை நடவடிக்கையை மற்றொரு தினத்தில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார். ஆகவே, வடக்கு கிழக்கில் உள்ள பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழப்பு

அம்பலாந்தோட்டை, உஸ்ஸன்கொட சுற்றுலா முகாமுக்கு சென்றிருந்த வௌிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சுற்றுலாக் குன்றுக்கு சென்ற இந்தியப் பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த நபரின் உடலம் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சுற்றுலா முகாம் கடந்த 09ம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், சுமார் 70 நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் பங்கெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

கடன் பெறுவதற்கு அமைச்சர் மங்கள சமரவீர வொஷிங்டன் பயணம்

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, சர்வதேச நாணய நிதியத்தில் கடனை மீளவும் பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை முன்னெடுக்கும் நோக்கில், வொஷிங்டன் பயணமாகியுள்ளார்.

நிதி அமைச்சரின் பயணத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கிறிஸ்ரின் லெகாட் மற்றும் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளைச் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த விஜயத்தில், இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சிலரும் பங்குகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் அதி உயர் கிண்டல் அடித்த ரோஹித அபேகுணவர்தன

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போகின்ற ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டினை இன்று வெளிப்படுத்தியுள்ளனர்.

எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வேட்பாளர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என்று, மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய குறிப்பிட்டார். யானை கலவரப்பட வேண்டிய தேவை இல்லை, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் உரிய நேரத்தில் மக்களுக்கு தெரிவிப்போம் என்று நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்ரோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டார்.

இவர்களை தொடர்ந்து, அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன சற்று கிண்டலான கருத்தைப்பதிவு செய்துள்ளார். அமைச்சர் சஜித் பிரேமதாச அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக ஆடைகளைத் தைத்து தயாராகின்றார். அந்த ஆடை அவருக்கு தேவையற்றது. அதேபோன்று ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே தைத்து வைத்துள்ளார். சம்பிக்க மற்றும் கரு ஜயசூரிய ஆகியோரும் புதிய ஆடைகள் இரண்டினைத் தைக்கின்றனர். ஆக, ஐக்கிய தேசியக் கட்சியினர் இதுவரையில் நான்கு ஜனாதிபதி ஆடைகளைத் தைத்து தயார் நிலையில் வைத்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Read more...

மேலும் மூன்று வீதிகள் வெகு விரைவில் கையளிக்கப்படும் - நிஹால் சூரியஆரச்சி

இந்த வருடத்தில் தெற்கு அதிவேக வீதியின் மூன்று வீதிகள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியஆரச்சி தெரிவித்துள்ளார். இந்த வருட இறுதிக்குள் இலங்கையின் அதிவேக வீதிக்கட்டமைப்பில் மேலும் 145 KM அதிகரிக்கப்படவுள்ளது. மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான 96 KM பகுதி, இந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்திற்குள் மக்கள் பாவனைக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட தெற்கு அதிவேக வீதியின் 30 KM நீளம் கொண்ட மாத்தறையிலிருந்து பெலிஅத்த வரையான பகுதி, எதிர்வரும் ஜூலை மாதம் மக்கள் பாவனைக்கு விடப்படவுள்ளது. சீனாவை சேர்ந்த மூன்று முக்கிய நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த அதிவேக வீதியில், ஹம்பாந்தோட்டை வரையான பகுதியில் 6 பிரதான நுழைவாயில்கள் அமையப்பெற்றுள்ளன. கடந்த 2016 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வீதி அமைப்பு தொடர்பான பணிகளின் தொடர்ச்சியாக, கொழும்பு வெளியேற்றத்திற்கான சுற்றுவட்ட வீதிக்கட்டமைப்பின் நிர்மாணப்பணிகள், இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்யப்படவுள்ளன.

இதன் இறுதிக்கட்டமாக கடவத்தையிலிருந்து கெரவலப்பிட்டிய வரையான 9.63 KM பகுதி எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் நிறைவு செய்யப்படவுள்ளது. அத்துடன் இந்த சுற்று வட்ட நிர்மாண பணிகள் நிறைவடைந்ததன் பின், தெற்கு அதிவேக வீதி மற்றும் கட்டுநாயக்க அதிவேக வீதி ஆகியன இணைக்கப்படவுள்ளன. மேலும் மத்திய அதிவேக வீதியின் கடவத்தை நுழைவாயிலும் இதற்கமைய நிறைவு செய்யப்படவுள்ளது.

இதேவேளை, மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்ட பணிகளாக மீரிகமவிலிருந்து குருநாகல் வரையுள்ள 40 KM வீதியின் நிர்மாணப்பணிகள், இந்த வருடத்தின் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படவுள்ளன. 140 பில்லியன் ரூபா செலவில் நடைபெறும் இந்த நிர்மானப்பணிகளை 15 உள்நாட்டு நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாத ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்ட மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்டம், இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எனினும், முதற்கட்டம் நிறைவு செய்யப்படும் காலம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Read more...

டிரம்ப்பின் நிறவெறி செயல்களை எதிர்த்து போராடுவேன்: கமலா ஹாரீஸ் ஆவேசம்

புலம்பெயர்ந்தவர்களை அழிக்க புறப்பட்டுள்ள டிரம்ப்பின் நிறவெறி செயல்களை எதிர்த்து போராடுவேன் என்று அமெரிக்க எம்.பி இந்திய அமெரிக்க பெண் கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.

மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்ப வேண்டும் என்பதில் அதிபர் டிரம்ப் உறுதியாக உள்ளதால் நிலைமை தொடர்ந்து சிக்கலாகி வருகிறது. எனினும் டிரம்ப் தனது பிடியை விடாமல், அமெரிக்க மக்கள், மெக்ஸிகோ எல்லைச்சுவர் கட்ட 5 பில்லியன் பணம் ஒதுக்கும்படி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஹாரீஸ் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

அமெரிக்க மக்கள் ஒரு சிறந்த தலைமையை எதிர்பார்த்தார்கள். ஆனால் இந்த அதிபரின் கீழ் அவர்கள் குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளனர். டிரம்ப்பை தவறாக தேர்ந்தெடுத்த காரணத்தால், இன்று 8 லட்சம் ஊழியர்களும் கூட்டாட்சி அரசின் அனைத்துவிதமான சேவைகளும் அதிபரின் தற்பெருமை திட்டத்திற்காக பணயம் வைத்துக்கொண்டிருக்கிறோம்.

இந்தியாவிலிருந்தும் ஜமைக்காவிலிருந்தும் குடியேறியவர்களின் மகளான எனக்கு புலம்பெயர்ந்தவர்கள் பற்றிய டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் நடந்துவரும் அரசியல் கொள்கைகள் ஏற்படுத்தியுள்ள கண்ணோட்டம் எவ்வளவு மோசமானது என்பதை உணர்கிறேன்.

என் அம்மா பழுப்பு நிறத்துடன் இருப்பதால் இதில் அவரும் ஒரு இலக்காகி வருவதை நான் கோபத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன் எனினும் சத்தியங்களை நாம் பற்றிக்கொண்டுள்ளோம். அமெரிக்காவிற்குள் குடியேறியவர்கள் மீது சட்டபூர்வ மற்றும் மனிதாபிமான பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் நான் இறங்கியுள்ளேன். அவரது செயல்களை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன்.

மகிழ்ச்சியும் வளமுமான குழந்தைப்பருவத்தாலும் வளர்த்தெடுக்கப்படுவதற்காக ஆசிர்வதிக்கப்பட்டவள் நான். ஆனால் புலம்பெயர்ந்தோருக்கு டிரம்ப் செய்துவரும் துரோகம் என்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளேது.

குடியேற்றம் பற்றி நாம் விவாதிக்கும்போது, புலம்பெயர்ந்தவர்களை அவர்கள் வேறு நாடுகளில் பிறந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அழிக்க முயலும் ஜனாதிபதி உள்ளிட்ட பலம்வாய்ந்த சக்திகள் இங்கு உள்ளன என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

இவ்வாறு கமலா ஹாரீஸ் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார்.

மீண்டும் வெடித்த கோபம்

முடங்கிக் கிடக்கும் அரசாங்கத்தை மீண்டும் திறப்பதற்கு முன்பு தனது எல்லைக் சுவருக்கு நிதியளிக்க வேண்டும், இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் அழுத்தம் தர வேண்டும் என டிரம்ப் நேற்று மீண்டும் வலியுறுத்தியதை அடுத்து கமலாவின் கோபம் மீண்டும் நேற்று இரவு வெடித்தது.

நேற்று இரவு வாஷிங்டனின் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தனது மலரும் நினைவுகள் குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கமலா, மீண்டும் டிரம்ப் குறித்து பேசினார்.

அப்போது அவர் தெரிவிக்கையில், ‘‘தனது 11 வயது ஆண் குழந்தை எப்படி ஒரு பொம்மை ரயிலை வைத்து விளையாடிக்கொண்டிருக்குமோ அந்த மாதிரி டிரம்ப் நடத்தை உள்ளது.

எந்த நல்ல பெற்றொரும் உனது சண்டித்தனத்தைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்று உங்களுக்கு சொல்லுவார், மேலும் அந்தமாதிரியான உங்கள் நடத்தைகளுக்கு எந்த வெகுமதியும் கிடைக்காது.

இவ்வாறு கமலா ஹாரீஸ் பேசினார்.

Read more...

சிறிதரனின் படலைக்குள் கத்தி கோடாரியுடன் புகுந்தது அங்கஜனின் படையணி. நாளை நாமலின் படையணி.

கிளிநொச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சிரமதானம் அடிப்படையில் புனரமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் ராமநாதன் இன்று தனது இளைஞர் படையணியுடன் களமிறங்கியுள்ளார்.

யாழ் மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்களை கொண்டு பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் தெருக்கள் என அவசியமானவற்றை புனரமைக்கும் பணியில் அவர் இன்றைய நாள் முழுக்க ஈடுபட்டிருந்தார். இப்பணியில் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

அங்கஜனின் இச்செயற்பாடானது கிளிநொச்சியில் வெள்ளை வேட்டி கசங்காமல் அரசியல் செய்துவரும் சிறிதரனது வயிற்றில் புளியைக் கரைத்து ஊற்றியுள்ளது. வெள்ள அனர்த்தம் ஏற்பட்டபோது, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் வெள்ள நிவாரணங்களை அள்ளிக்கொண்டு பிரதேசத்திற்கு சென்றபோது அவ்விடத்திற்கு சென்று ஓசியில் போட்டோவுக்கு போஸ்ட் கொடுத்த சிறிதரனது உண்மைமுகம் வெளியாகியுள்ளதுடன் இதன் காரணமாக செல்வாக்கு பெரிதும் சரிந்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் நாளை தெற்கிலிருந்து இளைஞர் அணியுடன் நாமல் ராஜபக்ச கிளிநொச்சிக்கு சென்று சிரமதான பணிகளில் ஈடுபடவுள்ளதாகவும் அறியக் கிடைக்கின்றது.


Read more...

போதைப்பொருளை உண்டு வகுப்பறை மேசையில் மயங்கி கிடந்த 14 வயது மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாண மாணவர்கள் மூன்று மாணவர்கள் போதைப்பொருளை உட்கொண்ட நிலையில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலி வடக்கு மீள்குடியேற்றப்பகுதிக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவர்கள் மூவரே, இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க புரத்தில் உள்ள இரு மாணவர்களும் தெல்லிப்பழையை சேர்ந்த ஒரு மாணவனும் இணைந்து நேற்று காலை பாடசாலைக்குள் 20 போதை மாத்திரைகளை கொண்டு சென்றுள்ளனர்.

அதில் ஒருவர் 5 மாத்திரையும் மற்ற மாணவன் 4 மாத்திரைகளையும் மூன்றாவது மாணவன் 3 மாத்திரைகளையும் உட்கொண்டுள்ளனர். பின்னர் வகுப்பறையினுள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

குறித்த விடயத்தை அறிந்த பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து அவர்களை வெளியே அழைத்து சென்று விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர்கள் தாறுமாறாக தம்மை அறியாமல் பேசத்தொடங்கியுள்ளனர். இதனை அடுத்து பாடசாலை அதிபர் குறித்த மாணவர்களை தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து யாழ்ப்பாண காவல்துறையின் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Read more...

மொட்டு சின்னத்தில் தான் போட்டியிடுவோம் - காஞ்சன ஜயவர்தன.

அடுத்து வரப்போகும் தேர்தலில் தாங்கள் மொட்டு சின்னத்திலேயே போட்டியிடவுள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாகாண சபை உறுப்பினர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் சங்கத்தின் தலைவர் காஞ்சன ஜயவர்தன
இதனை கூறியுள்ளார்.

தற்போதுள்ள அரசாங்கத்திற்கு தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆளுமையோ, எண்ணமோ இல்லையென அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் அடுத்து வரப்போகும் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று கூறிய காஞ்சனா ஜயவர்தன, அதற்கான முழு நடவடிக்கைகளையும் தற்போது எடுத்து வருவதாக கூறினார்.

விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது வலியுறுத்தும் வகையில் நாடு முழுவதும் பல போராட்டங்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்த அவர், மக்கள் மத்தியில் இந்த அரசாங்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read more...

புதிய அரசியலமைப்பு ஒருபோதும் நிறைவேற்றப்படாது- ரோஹன லக்ஷ்மன் பியதாச சூளுரை.

புதிய அரசியலமைப்பு ஒருபோதும் நிறைவேற்றப்படாது என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மாலை கண்டிக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களின் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே, இதனை கூறினார்.

புதிய அரசியலமைப்பு யோசனை, அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து பல விவாதங்கள் இடம்பெறவேண்டும்.

அரசியலமைப்பொன்றை எடுத்த எடுப்பில் நிறைவேற்றிவிட முடியாது. இப்போதுள்ள நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கத்திற்கு இல்லை என்பது, அனைவருக்கும் தெரிந்த விடயமே என ரோஹன லக்ஷ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்தே பெரும்பான்மையைக் காட்டியுள்ளனர். எனினும் தற்போது அவர்களை இணைத்துக் கொண்டாலும் அவர்களினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறமுடியாது. அவர்களுக்கு இன்னும் 20 – 25 பேரின் ஆதரவு தேவையாகவுள்ளது.

எனவே, இந்த அரசியலமைப்பினை ஆராய்ந்து, அதனை நிறைவேற்ற முடியும் என தான் நம்பவில்லை என்பதோடு, மக்களும் இந்த புதிய அரசியல் அமைப்பை எதிர்ப்பார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன லக்ஷ்மன் பியதாச கூறியுள்ளார்.

Read more...

சுவாமி விவேகானந்தரின் 117 ஆவது பிறந்ததினம் அனுஷ்ட்டிப்பு.

சுவாமி விவேகானந்தரின் 117 ஆவது பிறந்ததினம் இன்று அனுஷ்ட்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.வவுனியா நகர சபையின் உப தலைவர் சு.குமாரசாமியின் தலைமையில் வவுனியாவிலுள்ள விவேகானந்தரின் சிலைக்கருகில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, சுவாமி விவேகானந்தரின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சுவாமி விவேகானந்தரின் 117 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும், ன்றைய தினம் விசேட நிகழ்வுகளுக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

த.தே.கூபின் ஆதரவு இருக்கும் வரை மட்டுமே ரணில் பிரதமராக இருக்கமுடியும் - கேலி செய்கிறார் தினேஷ்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வருகையை மக்கள் விரும்பவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார். கொஸ்கம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திற்கு நாட்டு மக்களிடையே ஆதரவு இல்லை என்று அவர் கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் ஆதரவு மட்டுமே இருப்பதாக தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு இருக்கும் வரை மாத்திரமே, பிரதமர் பதவியை வகிக்க முடியும் என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்காது போனால், நிச்சயமாக பிரமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி இல்லாது போகும் எனவும் கூறினார்.

Read more...

நாட்டை பாதுகாக்க மஹிந்த மீண்டும், ஆட்சிக்கு வரவேண்டும் - ரொஷான் ரணசிங்க.

நாட்டை கட்டியெழுப்ப எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என, பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு, கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரதீப் எக்னலிகொட ஆகிய ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு காரணமானவர்கள், தற்போது ஐக்கிய தேசிய கட்சியில் உள்ளனர்.

அத்துடன் பேருவளையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கு அரசாங்கம் எந்ததொரு விசாரணையையும் இதுவரை மேற்கொள்ளாத நிலையில், மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றதாக அவர் கூறினார்.

நாட்டில் இடம்பெற்ற அனைத்து வன்முறை சம்பவங்களுக்கும் காரணமானவர்கள் இந்த அரசாங்கத்தினுள் இருக்கின்றமையாலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்று தெரிவித்த ரொஷான் ரணசிங்க, நாடு பெரும் பாதிப்பை நோக்கி பயணிப்பதாக எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஆபத்தில் இருந்து நாட்டு மக்கள் தப்பிக்க வேண்டுமாக இருந்தால், எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வர வேண்டும். அப்படி நடந்தால் மாத்திரமே இன, மத பேதங்கள் மற்றும் வன்முறைகள் இடம்பெறாது நாடு நல்ல வழியில் செல்லும் என அவர் கூறினார்.

நாட்டிற்குள் இலங்கையர் என்ற கோணத்தில் பௌத்தம், முஸ்லிம், கத்தோலிக்கம், இந்து என அனைத்து மதத்தவர்களையும் ஒன்றாக இணைந்து செயற்பட மஹிந்த அரசாங்கத்தால் மட்டுமே முடியும்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Read more...

இலங்கையில் நாய் வளர்ப்போருக்கு ஆராச்சியாளர்கள் விடுத்த எச்சரிக்கை

நாய்களிடமிருந்து பரவக் கூடிய ஒருவகை நோய் இனங்காணப்பட்டுள்ளமையால், இலங்கை மக்களை அவதானமாக செயற்படுமாறு, பேராதனை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

தென்னாபிரிக்கா நாடுகளிலேயே அதிகளவு பரவலாக காணப்பட்டு வந்த இந்த நோய், தற்போது இலங்கையில் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். இது மனிதர்களுக்கும் தொற்றக்கூடியது என்பதை பேராதனை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோய் பாரதூரமானது அல்ல என்று தெரிவிக்கும் அவர்கள், இதன்மூலம் தோலில் பாதிப்பு ஏற்படக் கூடுமென பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் அசோக்க தங்கொல்ல தெரிவித்துள்ளார்.

அண்மையில் கண் நோயால் பாதிக்கப்பட்ட நாயொன்றை பரிசோதைக்கு உட்படுத்திய போது, ட்ரை-பெனசோமா (Trypanosoma) என்ற நோய் ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டதாக பேராசிரியர் தங்கொல்ல தெரிவித்துள்ளார். குறித்த நோய் மக்களுக்கு பாரதூரமான தாக்கத்தினை ஏற்படுத்தாத போதிலும், தோல் நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளமையால் வீட்டில் நாயை வளர்க்கின்றவர்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


Read more...

நீதிபதி களு ஆராச்சி திடீர் விலகல்

ராடா நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களு ஆராச்சி நேற்றையதினம் அறிவித்துள்ளார்.

ராடா நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டில் டிரான் அலஸ் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இதுவரையில் தனது முன்னிலையில் நடைபெற்றதாகவும், எனினும் சாட்சி விசாரணைகளின் போது வௌியாகிய பல விடயங்கள் காரணமாக, தான் இந்த வழக்கு விசாரணைகளில் இருந்து தனிப்பட்ட ரீதியில் விலகுவதாகவும் மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களு ஆராச்சி அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை கொழும்பு, இலக்கம் – 05 மேல்நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சியின் முன்னிலையில் முன்னெடுக்குமாறும் நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த மாதம் 29 ஆம் திகதி வழக்கு விசாரணை நடத்தப்படும் என மேல்நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார்.

Read more...

ஜனாதிபதிக்கும், புதிய ஆளுநர்களுக்கும் இடையில் சந்திப்பு.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் வைத்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பொது மக்களுக்கான, சேவைகளையும், தேவைகளையும் முறையாகவும், வினைத்திறனாகவும் மேற்கொள்வதோடு அரசாங்கத்தின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக தாம் புதிதாக நியமித்த ஆளுநர்கள், நேரடி தலையீடுகளை மேற்கொண்டு பணியாற்றுவார்கள் என்று நம்புவதாக கூறினார்.



நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது, மாவட்ட ரீதியாகவும், ஜனாதிபதி செயலகத்தினாலும் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பொதுமக்களை, மேம்படுத்தி சுபீட்சம் மிக்க சிறந்த குடிமக்களாக உருவாக்கும் நோக்குடன், பல்வேறு விசேட செயற்திட்டங்கள் ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ், ஜனாதிபதி செயலகத்தினால் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது 

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய செயற்திட்டமும், பொதுமக்களை வறுமையிலிருந்து மீட்பதற்கான கிராம சக்தி தேசிய செயற்திட்டமும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, 
நாட்டின் இளைஞர் சமுதாயத்தை போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுவிப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளையும் முன்னெடுக்க தயாராக உள்ளதாக தெரிந்தார். 

இந்த மாதம் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதி தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் சீர்கேடுகள் தொடர்பில், சமூகத்தை விழிப்பூட்டும் பல வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

குறிப்பாக பாடசாலை மாணவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை இலக்காகக்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில், உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த ஜனாதிபதி, அந்த வேலைத்திட்டங்களில் ஆளுநர்கள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என பணிப்புரை விடுத்தார். 

இந்த சந்திப்பில் கலந்து கொண்ட புதிய ஆளுநர்கள், மக்களின் நலனை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டங்களில் தமது முழுமையான பங்களிப்பை வழங்குவதாகவும், தெரிவித்தனர். 

Read more...

Friday, January 11, 2019

ஹிஸ்புல்லாவுக்காக தொழுகையை கைவிட்ட முஸ்லிம்களும் , தொழிலை கைவிட்ட தமிழர்களும். பீமன்

கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் கிழக்கின் ஆளுநராக எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டிருந்தார். அவரது நியமனத்தை பல்வேறுபட்ட தரப்புக்கள் பல்வேறு கோணத்தில் எதிர்த்தன. இவ் எதிர்ப்புக்கு பின்னணியில் இருக்கும் இரண்டு பிரதான காரணகர்த்தாக்களாவன

ஒன்று குறுகிய அரசியல் லாபம்.

இரண்டாவது அப்பதவிக்காக போட்டியிட்டோர் அது கிடைக்காமையால் ஒழிந்திருந்து மேற்கொள்ளும் சூழ்ச்சிகள்.

மேற்படி இரு குழுவினரின் இணைச் சதியாக இன்று ஹர்த்தால் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் ஹர்த்தாலின் வெற்றி தோல்வி சம்மந்தமாக பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் மக்கள் அடைந்தது யாதென்பது பேசப்படவேண்டியதாகும்.

தொழுகையை கைவிட்ட இஸ்லாமியர்கள்.

இஸ்லாமியர்களை பொறுத்தவரை உலகளாவிய ரீதியில் வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகை மிக முக்கியமானதாகும். அரபு நாடுகளில் வெள்ளிக்கிழமை ஒரு பூரண விடுமுறை நாளாகவுள்ளது. இலங்கைபோன்ற இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக வாழுகின்ற சில நாடுகளில் இஸ்லாமியர்கள் தங்களது தொழுகைக்கேற்றவாறு வெள்ளிக்கிழமையை வடிவமைத்துக் கொண்டுள்ளனர்.

அவர்கள், வெள்ளிக்கிழமைகளில் பெரும்பாலும் 11 மணியுடன் தமது வியாபார ஸ்தலங்களை பூட்டி மிகுதி அரை நாளையும் தொழுகைக்காகவும் பிற தேவைகளுக்காகவும் பயன்படுத்திக்கொள்வர். அவ்வாறு 11 மணியின் பின்னர் வியாபார ஸ்தாபனங்கள் மற்றும் பிற அலுவலகங்களை பூட்டாத முஸ்லிம்கள் இஸ்லாமியர்களாக கருதப்படமாட்டார்கள். அவர்கள் மீது ஒரு சமூக வெறுப்பு ஏற்படும். இது இஸ்லாத்திற்கு அல்லது அல்லாகுத்தாலாவுக்கு செய்கின்ற பிரதிக்கடனாகக்கூட கணிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் இன்று ஹிஸ்புல்லாவிற்கு எதிராக விடுக்கப்பட்டிருந்த ஹர்த்தாலுக்கான அழைப்பு 'அல்லாகுத்தாலாவா அன்றில் ஹிஸ்புல்லாவா' என்ற நிலைக்கு முஸ்லிம் வர்த்தகர்களை தள்ளிவிட்டிருந்தது.

கிழக்கின் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா அல்லாகுத்தாலாவிலும் மேலானவர், அவருக்கு எதிரான ஹர்த்தாலை அல்லாகுத்தாலாவை புறந்தள்ளி வைத்து நாம் காப்போம் என்ற நிலைக்கு கிழக்கின் வர்த்தகர்களை கொண்டு சென்றுள்ளது. அவர்கள் கடைகளை அடைத்து தொழுகைக்கு செல்லாது ஹிஸ்புல்லாவிற்கு எதிரான ஹர்த்தாலை தோற்கடித்துள்ளனர். எனவே அல்லாகுத்தாலா கொடுக்கின்ற பாரிய கொடைகளிலும் பார்க்க கிழக்கின் வர்த்தகர்களுக்கு ஹிஸ்புல்லா கொடுக்கவேண்டும். கொடுப்பார் என்ற நம்பிக்கையும் உண்டு. அதுவே ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தோரது எதிர்பார்ப்பாகவும் இருந்திருக்கலாம். காரணம் என்னவென்றால் இனவாத அரசியல் என்பது திண்மக்கழிவு முகாமைத்துவத்தில் மேற்கொள்ளப்படும் மீள்சுழற்றி மாதிரி (றீசைக்கிளிங்)



தொழிலைக் கைவிட்ட தமிழர்கள்.

இன்று ஹிஸ்புல்லாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அறிவிப்பு விடுத்தவர்கள், குறிப்பிட்ட பிரதேசங்களிலுள்ள அன்றாடம் உழைத்து உண்ணும் (கூலித் தொழிலாளிகள் முதல் வியாபாரிகள் வரை) பட்டாளி வர்க்கத்தின் அடுப்பில் பூனை படுக்க விட்டுள்ளனர். இந்த மக்களின் இன்றைய நாள் வருமானம் பூச்சியம். இன்றைய சாப்பாட்டுக்கு அவர்கள் கடனாளிகளாயிருப்பர். ஆனால் அந்த கடனை அடைப்பதற்கு எவரும் எந்த வழியையும் காட்டப்போவதில்லை என்பது மாத்திரம் வரலாற்றில் நாம் கற்றுக்கொண்ட பாடம்.



ஹிஸ்புல்லாவும் எதிர்ப்பவர்களும்.

ஹிஸ்புல்லா ஒரு அப்பழுக்கற்ற அரசியல் விபச்சாரி என்பது மாத்திரமல்ல சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் பாஷையில் சொல்வதானால் ஊழலின் மொத்த வடிவம்.

இன்று ஹிஸ்புல்லா மீதான எதிர்ப்பானது, அவர் ஒரு முஸ்லிம் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக இடம்பெறுகின்றதா என்ற கேள்வி இருக்கின்றது.

கடந்த காலங்களில் எத்தனையோ தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலில் நின்றபோதும், மன்சூர் மற்றும் அஹமட் போன்ற பழைய அரசியல்வாதிகளை தமிழ் மக்களே பாராளுமன்றுக்கு அனுப்பினர். அவர்களும் அவ்வாறே அந்த மக்களுக்கு நியாயமாக நடந்துள்ளனர். அவர்கள் எந்தக்கட்டத்திலும், தமிழ் மக்களின் ஆணைக்கு எதிராக அந்த மக்களின் பிரதிநிதி என்ற ஸ்தானத்திலிருந்து விலகிச் சென்றதில்லை.

ஆனால் பல தடவைகளில் கணிசமானளவு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று அல்லது புலிகளின் உதவியுடன் ஒருசில பகுதி தமிழ் மக்களை வாக்களிக்காமல் பண்ணி பாராளுமன்று சென்ற பின்னர் அதே பலத்தை வைத்து கோயிலை இடித்துக் கொண்டினேன், சுடலையை தரை மட்டமாக்கினேன் என்று மன்சூரோ அல்லது அஹமட் போன்றோரோ என்றும் கூக்குரல் இட்டதில்லை.

எனவே இங்கே தமிழ் மக்கள் ஹிஸ்புல்லாவின் நியமனம் தொடர்பாக அச்சம் கொள்கின்றார்கள் என்றால் அது காரணமற்றது என்று யாராலும் எழுந்தமானமாக சொல்லிவிடமுடியாது.

இருந்தபோதும் ஹிஸ்புல்லாவின் நியமனத்திற்கு எதிராக ஊழையிடுகின்ற கருணா மற்றும் யோகேஸ்வரன் போன்றோர் உண்மையில் ஹிஸ்புல்லாவின் நியமனம் தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமானதல்ல என்ற உணர்வில்தான் மக்களை தூண்டுகின்றார்களா? என்பதுதான் கேள்வி.

கருணா இன்று தமிழ் மக்களை முஸ்லிம் மக்களுக்கு எதிராக தூண்டி, தன்னை ஓர் தமிழ் பக்தன் எனக் காண்பிக்க முற்படுகின்றார், முஸ்லிம்களுக்கு எதிராக கருத்திடுவதன் ஊடாக தனது வாக்கு வங்கியை நிரப்ப முடியும் என எண்ணும் கருணாவின் முஸ்லிம்களுடனான உறவு என்பது மக்கள் அறியவேண்டியதாகும்.

கருணாவின் மிகச் சிறந்த நண்பர்கள் என பத்துப்பேர் கொண்ட பட்டியலை எடுத்தீர்களானால் அதன் முதல் 9 பேரும் முஸ்லிம்களாக இருப்பார்கள். கருணாவின் உறவினர்களில் கருணா மிகவும் நேசிக்கின்ற உறவினர்கள் என்று நீங்கள் எடுத்துக்கொண்டால், அவர்களிலும் முதல் 9 பேரும் முஸ்லிம்களாக இருப்பார்கள் என்பது நான் அறிந்த விடயம். கருணாவின் சகோதரி ஒருவர் முஸ்லிம் நபர் ஒருவரை திருணம் செய்து இன்றைக்கு 30 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றார். அந்த முஸ்லிம் குடும்பம் கருணாவினாலும் அவரது இதர குடும்ப அங்கத்தவர்களாலும் மிகவும் நேசிக்கப்படுகின்றது. இவ்வாறு கருணா அச்சமூகத்துடன் உறவு கொண்டாடிக்கொண்டுதான் முஸ்லிம்கள் மீது தமிழ் மக்களை ஏவி விடுகின்றார். இது கண்டனத்திற்குரியவிடயமாகும்.

எனது கற்பனைக்கெட்டியவரை ஹிஸ்புல்லா பதவியேற்கப்போகின்றார் என்பதை அறிந்தவுடன் அவரை வாழ்த்திய முதலாவது நபராக கருணாவே இருந்திருப்பார். கருணா பேசுகின்ற விடயங்களை இவ்வாறு ''நீ என்னை பேசு'' என ஹிஸ்புல்லாவே தடம் போட்டுக்கொடுத்திருப்பார். அதன் பிரதிபலிப்பை நாம் இன்று காண்கின்றோம். தேர்தலில் ஹிஸ்புல்லாவை தோற்கடித்த முஸ்லிம் சமூகம் ஏன் இன்று ஜூம்மாவுக்கு செல்லாமல் ஹிஸ்புல்லாவிற்காக வரிந்து கட்டி நிற்கின்றது. கருணா மற்றும் யோகேஸ்வரன் போன்ற அரசியல் அனாதைகளின் இனவாதம் முஸ்லிம்கள் மத்தியில் சரிந்து கிடந்த ஹிஸ்புல்லாவின் செல்வாக்கினை நிமிர்த்தி நிறுத்தியுள்ளது.

ஆனால் முஸ்லிம் மக்கள் உணரவேண்டிய விடயம் ஒன்று உள்ளது. ஹிஸ்புல்லா ஒன்றும் முஸ்லிம் மக்களின் சேவகனோ அன்றில் அவர் முஸ்லிம்களுக்காகவே தமிழ் மக்களை நிந்திக்கின்றார் என்பதெல்லாம் வெறும் பொய். இதே ஹிஸ்புல்லா புலிகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களை செய்து கொண்டவர். புலிகள் மோட்டார் சைக்கிளில் வந்து முஸ்லிம்களை சுட்டுவிட்டு ஓடிக்கொண்டிருந்தபோது, புலிகளுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக்கொடுத்தவர்.

ஹிஸ்புல்லா மோட்டார் சைக்கிள் வாங்கிக்கொடுத்த விவகாரம் மாட்டியபோது அவர் ஆடிய நாடகம் அருவருக்கத்தக்கது. அவ்விடயம் தென்பகுதியில் சூடுபிடித்தபோது, தான் குண்டு துளைக்காத வண்டியில் வருவேன் நீங்கள் எனது வண்டிக்கு சுடவேண்டும் என நாடகம் போட்டவர்தான் ஹிஸ்புல்லா. அவ்வாறே புலிகளும் ஹிஸ்புல்லாவின் வாகனம்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். சந்திரிகா மேலதிக பாதுகாப்புக்கு உத்தரவிட்டார். அத்துடன் மோட்டார் சைக்கிள் தொடர்பான விசாரணை கோப்பு தூக்கி வீசப்பட்டது.

எனவே ''அரசியல் காவாலிகளின் இறுதிப்புகலிடம் தேசப்பற்று'' என்ற ஜவகர்லால் நேரு அவர்களின் கூற்றை மக்கள் ஏற்று எமது அரசியல் காவாலிகள் தொடர்பில் மக்கள் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும்.




Read more...

கருத்துக்களை களவாடிய விமல் வீரவன்சவை ஒரு கோடி செலுத்த உத்தரவிட்டது நீதிமன்று

மக்கள் விடுதலை முன்னனியின் பிரதம செயலாளர் ரில்வான் சில்வாவிற்கு 10 மில்லியன் இழப்பீடு வழங்க வீரவன்சவிற்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

விமல் வீரவன்சவினால் வெளியிடப்பட்ட 'நத்த வெனுவட்ட அத்த' எனும் புத்தகத்தில் தனது கருத்துக்களை விமல் வீரவன்ச களவாடி பிரசுரித்துள்ளதாக ரில்வின் சில்வா தொடுத்த வழக்கினை விசாரணை செய்த கொழும்பு உயர் வணிப நீதிமன்று இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.

புலமைச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இவ் வழக்கானது கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக வணிக மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையிலேயே இத்தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழுவிற்கு தான் முன்வைத்த யோசனைகளையும் முன்மொழிவுகளையும் விமல் வீரவன்ச திருடி தனது கருத்துகளாக புத்தகத்தில் வெளியிட்டுள்ளதாக ரில்வின் சில்வா வழக்கு தாக்கல் செய்திருந்ததுடன், புத்தகத்திற்கான உரிமம் தனக்கு வழங்கப்படவேண்டும் என்றும் நஷ்ட ஈடாக 10 வழங்கப்படவேண்டும் என்றும் வழக்குச் செலவு தனக்கு வழங்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன் அடிப்படையிலேயே தீர்ப்பில் நூலின் சொத்துரிமை ரில்வின் சில்வாவிற்கு உரிமையாக்கப்பட்டதோடு 10 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வழக்குச் செலவுகளை வழங்கவேண்டும் என்றும் வீரவங்சவிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read more...

நெடுங்கேணியில் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்கள் மீட்பு.

வவுனியா நெடுங்கேணி பகுயில் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

நெடுங்கேணியில் நேற்றைய தினம் விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்த நபர் ஒருவரின் நடமாட்டத்தை அடுத்து, காவல்துறையினர் அவரை சோதனை செய்தனர்.

இதன்போது சந்தேக நபரிடம் இருந்து போலி நாணயத்தாள்களை மீட்டுள்ளதாக, வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட போலி நாணயத்தாள்களில், 5000 ரூபாய் தாள்கள் 18ம், 1000 ரூபாய் தாள்கள் 10 அடங்கலாக ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான கபோலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை இன்றைய தினம் குறித்த நபர், வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா நெடுங்கேணி காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒருமீ சிவில் அமைப்பு கண்டன அறிக்கை.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முட்டுக் கட்டையாக இருக்கும் கூட்டு ஒப்பந்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தாலும், அது குறித்து சம்மந்தப்பட்ட தரப்பினர் எந்தவித பதிலையும் வழங்காதுள்ளனர்.

காலாகாலமாக மலையக மக்களின் பொருளாதாரம் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றது. பெருந்தோட்ட மக்களின் நலனுக்காகவே கூட்டு ஒப்பந்தம் உருவாகியது கூறப்பட்டாலும், அதன் மூலம் தொழிலாளர்களுக்கு எந்தவித அனுகூலமும் ஏற்படவில்லை.

கடந்த முறை செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகிய நிலையில், தற்போது ஆயிரம் ரூபாய் வேதனை உயர்வு குறித்த பேச்சுக்கள் பரவலாக அடிபட்டு வருகின்றன.

எனினும் பெருந்தோட்ட மக்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட மாட்டாது என, முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

எனினும் தமக்கு கூட்டு ஒப்பந்தம் தேவையில்லை என்று கூறி, தொடர்ந்தும் பெருந்தோட்ட தொழிலாளர்கள், நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தொழிலாளர்களை பாதுகாக்கும் ஒருமீ சிவில் அமைப்பு, கூட்டு ஒப்பந்தம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தல் விடுத்துள்ளதுடன், கூட்டு ஒப்பந்தம் குறித்த கண்டன அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

இந்த கூட்டு ஒப்பந்தமானது எவ்வகையிலும் மக்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் மேற்கொள்ளப்படும் ஓர் ஒப்பந்தமாகும். அத்துடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் பட்சத்தில் அது எதிர்வரும் 3 வருடங்களுக்கு மக்களுக்கு செய்யும் பாரிய அநீதியாக இருக்கும். எனவே இதனை எதிர்த்து தமது அமைப்பு கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக, ஒருமீ சிவில் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.



Read more...

அர்ஜுனை அழைத்து வராததை நினைத்து, அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் - மஹிந்த அமரவீர.

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி குறித்த விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

மத்திய வங்கியில் பிணை முறி மோசடி இடம்பெற்று நான்கு ஆண்டுகள் கலந்துள்ளன. எனினும் இந்த மோசடியுடன் தொடருடைய அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வர முடியாமல் போனதையிட்டு அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன் மகேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றைய தினம் பிற்பகல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கை, துருக்கி ஆட்களை மீள ஒப்படைத்தல் உடன்படிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் துருக்கியுடன் மேற்கொண்டுள்ள, ஆட்களை மீள ஒப்படைத்தல் உடன்படிக்கை போல சிங்கப்பூருடனும் மேற்கொண்டு, மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பிரதான சந்தேக நபரான அர்ஜுன மஹேந்திரனை அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதன் மூலமே ஐக்கிய தேசிய கட்சியும் தமது, குற்றச்சாட்டுக்களில் இருந்து தூய்மையடைய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணமுறி மோசடிகள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும், அந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வட மாகாண ஆளுநர், விசேட கட்டளை.

எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி, எதிர்வரும் திங்கட்க்கிழமை வட மாகாணதிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இந்த சிறப்பு விடுமுறைக்கான கட்டளையை கல்வி அமைச்சின் செயலாளருக்கு பிறப்பித்துள்ளார்.

வட மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்கிழமை, தமிழர்கள் தைத் திருநாளைக் கொண்டாடவுள்ளனர்.

இந்த பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் 14ஆம் திகதி திங்கட்கிழமை, வடக்கு மாகாணத்தின் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான உத்தரவை வட மாகாண ஆளுநர் வழங்கியுள்ளதாகவும், இந்த விடுமுறைக்கான மாற்றுப் பாடசாலை தினம், பின்னர் அறிவிக்கப்படும் என்று, வட மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

மனோவின் மனநிலையை அறியவே பேரம் பேசினேன் - போட்டு உடைத்தார் சஜீ.

தமிழ் முற்போக்கு  கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசனின் மன நிலையை அறிந்து கொள்ளும் நோக்கிலேயே அவருடன் ஒப்பந்தம் பேசியதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் முன்னாள் உறுப்பினர் சஜீவானந்தன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து வெளியேறியதன் பின்னரும், அமைச்சர் மனோ கணேசனுடன் தொடர்ந்தும் தாம் நட்பு ரீதியில் பழகி வந்ததாகவும், தமது நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கியமையாலேயே, மனோ கணேசனின் மன நிலையை அறிந்து கொள்ளும் பொருட்டு, அவருடன் ஒப்பந்தம் பேசியதாக சஜீவானந்தன் கூறியுள்ளார்.

அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக, 65 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டமை தொடர்பிலான ஒலிநாடா ஒன்று அண்மையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் இளைஞர் இணையத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்ட நிலையில், அவருக்கான ஆதரவை பெற்றுக்கொள்ளும் பொருட்டு இவ்வாறு பேரம் பேசப்பட்டதாக அந்த ஒலிநாடாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து வெளியேறிய சஜீவானந்தனுக்கும், அமைச்சர் மனோ கணேசனுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலிலேயே இந்த பேரம் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட போதே, ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து வெளியேறிய சஜீவானந்தன் இந்த விடயத்தைக் கூறினார்.

Read more...

பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்ட பிரதான இடம் நீக்கப்படுமா ? - விளக்குகிறார் பிரதமர்.

புதிய அரசியல் யாப்பின் மூலமாக நாட்டு மக்கள் அனைவருக்கும் சிறந்த பயன்கள் கிட்டும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டை பிளவுபடுத்துவதற்கோ அல்லது பௌத்த மதத்திற்கு உரித்தான பிரதான இடத்தை இல்லாமல் ஆக்குவதற்கான ஏற்பாடுகளோ, புதிய அரசியல் அமைப்பில் எந்தவொரு இடத்திலும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு நிர்ணய சபை இன்று காலை 10 மணியளவில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் தலைமையில் கூடியது. இந்த சபையில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை கூறினார்.

நாட்டின் ஒற்றையாட்சியை, பாதுகாப்பதற்கு அதன் புதிய அரசியல் யாப்பின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஒரே நாட்டிற்குள் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்குவது, தேர்தல்முறை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குதல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதேவேளை, புதிய அரசியல் யாப்பின் மூலமாக பௌத்த மதத்திற்கான பிரதான இடத்தை நீக்குவதற்கு எந்தவித யோசனைகளும் இல்லை என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்திற்கான பிரதான இடத்தை நீக்குவதற்கு புதிய அரசியல் அமைப்பின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக, சிலர் முன்வைக்கும் கருத்தில் எந்தவித உண்மையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வெகு விரைவில், நாட்டு மக்களுக்கு புதிய அரசியல் யாப்பின் மூலம் பல பயன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Read more...

அரசியலமைப்பை நிராகரிப்பது, பாரதூரமான விளைவுகளை உண்டாக்கும் - மனோ கணேசன்.

இன்றைய தினம் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரஸ்ரீயின் தலைமையில் அரசியலமைப்புச் சபை கூடியது. இதன்போது புதிதான கொண்டுவரப்படவுள்ள அரசியல் யாப்பு தொடர்பான யோசனைகளும், வாத பிரதிவாதங்களும் இடம்பெற்றன.

இந்த சபையில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், புதிய அரசியலமைப்பு நிராகரிக்கப்பட்டால், அது புலம்பெயர் தமிழர்களுக்கு தவறானதொரு செய்தியை கொண்டு செல்வதுடன், அதனால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமாக அமையும் என, எச்சரிக்கை விடுத்தார்.

அரசியலமைப்பு உருவாக்கத்தில் தற்போது சர்வ கட்சிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கோரும் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பான விடயங்களும் நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு அரசியலமைப்பை நிராகரித்தால் புலிகளை மீள உருவாக்குங்கள். இங்கே பிரச்சினை உண்டு. மீண்டும் யுத்தத்தை ஆரம்பியுங்கள் என்ற செய்தி, புலம்பெயர் தமிழர்களுக்கு செல்லும் அபாயம் உள்ளதாக அவர் கூறினார்.

இனவாதம், மதவாதம் பிரிவினைவாதம் போன்ற காரணங்களால் எமது நாடு முன்னேற்றமின்றி காணப்படுகிறது. தேர்தல் உரிமை பெற்ற ஒரு நாடு இன்று பின்னடைந்து செல்கிறது. இந்நாட்டில் ஒரு சமூகத்திற்கு மாத்திரமே உரிமை உண்டு என்றால் அதுதான் பிரிவினைவாதம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

Read more...

எங்களை அரசாங்கம் அடக்கி ஆளுகின்றது! கூறுகின்றார் ஈபிடிபி தவராசா.

தமிழர்களின் உரிமைகளை அரசாங்கம் அடக்கி ஆண்டு வருவதாக மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என சரணாகதி அரசியல் செய்யும் ஈபிடிபி எனும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர் சி. தவராசா குற்றம் சுமத்தியுள்ளார்.

உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியடியில் 45ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்று நினைவுகூரப்பட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர், தற்பொழுது ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் எங்களை அரசாங்கம் அடக்கி ஆளுகின்றது. ஒரு காலத்தில் பிரித்தானியர்கள் இந்த உலகத்தை ஆண்டனர். ஆனால் இன்று எமது ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அரசு ஜனநாயக விழுமியம் எனும் போர்வையில் தொடர்ந்து எங்கள் உரிமைகளை அடக்குகின்றது. இந்த நிலையிலிருந்து மீட்சி பெற வேண்டுமாயின் தற்போதைய சூழலுக்கு ஏற்ப எம்மை மாற்றி, எமது உரிமைகளை பெற முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் ஆயுதப்போராட்டம் நடைபெற்றபோது கொழும்பில் குண்டு துளைக்காக வாகனங்களிலும், வடகிழக்கெங்கும் இராணுவத்தின் கவச வாகனங்களிலும் அப்போராட்டத்தை தோற்கடிப்பதற்கு திரிந்தவர்கள் ஈபிடிபி யினர். புலிகளின் ஆயுதப்போராட்டம் இடம்பெற்றபோது , அது தமிழ் மக்களுக்கான போராட்டம் அல்லவென்றும் பயங்கரவாதம் என்றும் உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் வெளிப்படையாக கூறிவந்த அந்த கட்சியின் உறுப்பினர் தற்போது, புலிகள் தோற்கடிக்கப்பட்டமையை ஏற்க மறுக்கின்றார்.

புலிகளின் ஆயுதம் மௌனிக்கப்பட்டுவிட்டதாக தவராசா கூறுகின்றார். ஆனால் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள் என ஈபிடிபி யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார்.

ஈபிடிபி க்கு கொழும்பில் சந்திரிகாவால் வழங்கப்பட்டுள்ள வீடு ஒன்றில் தனக்கும் பங்குண்டு என அக்கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடன் முரண்பட்டு ஈபிடிபி யிலிருந்து வெளியேறி தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் சரணடைய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில் தவராசா மீண்டும் ஈபிடிபி யுடன் இணைந்து கொண்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் ஈபிடிபி யை ஏமாற்றுகின்றது அடக்கி ஆளுகின்றதென கூறுகின்ற ஈடிபிடி உறுப்பினரிடம் கேட்கப்படுகின்ற கேள்வி யாதெனில், அவ்வாறாயின் அதற்காக அந்த அரசாங்கங்களின் வாசற்படியில் அமைச்சுப்பதவிக்காக காவல் இருக்கின்றீர்கள்? அடக்குகின்ற அரசுடன் எவ்வாறு உங்களால் கூட்டாட்சி நடாத்த முடியும்?

கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற சட்டவிரோத ஆட்சி மாற்றத்தின் பின்னர் கிடைக்கப்பெற்ற அமைச்சகத்தில் கடை நாள்வரை நின்று காரியாலய குப்பைகளை தவராசாவே ஒதுக்கியதாக அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் இலங்கைநெட்க்கு தெரிவித்தார்.

இவ்வாறு நிலைமை இருக்கின்றபோது, தொடர்ந்தும் தமது அரசியல் லாபங்களுக்காக தமிழ் மக்களை எவரும் இனவாதத்தினை நோக்கி நகர்த்த அனுமதிக்க முடியாது.

தவராசாவின் சந்தர்ப்பவாத அரசியலின் பக்கங்கள் பலவுள்ளன. இவர் கொழும்பில் ஈபிடிபி முகாமில் இருந்து கொண்டு கொழும்பில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றின் பிரதான புலிச் சந்தேக நபருக்கு உதவி புரிந்தார் என சீஐடி யினரால் தேடப்பட்டபோது, பிரித்தானியாவுக்கு தப்பியோடியிருந்தார்.

அவ்வாறு லண்டனுக்கு தப்பியோடிய தவராசாவை விசாரணைகள் ஆரம்பித்து நீதிமன்று கோரும்பட்சத்தில் தான் நாட்டுக்கு கொண்டுவந்து தருவேன் என டக்ளஸ் தேவானந்தா லண்டன் பிபிசி க்கு தெரிவித்திருந்தார். ஆனால் பிரித்தானியாவுக்கு தப்பியோடிய தவராசா தன்னை டக்ளஸ் தேவானந்தாவும் கொல்ல முயற்சிப்பதாக அரசியல் தஞ்சம் கோரியிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குறித்த சம்பவம்தொடர்பாக தவராச முற்றாக விடுபட்டுள்ளாரா? அது நீதிமன்றின் நேரிய வழிமுறைகளுடாகவா அன்றில் பின்கதவு டீலா என்பது தொடர்பில் பழைய கோப்புக்கள் தூசி தட்டப்படவேண்டும் என்பது பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.



Read more...

எம்மோடு இணையுங்கள் - கூட்டமைப்பை அழைக்கின்றார் சம்பிக்க ரணவக்க!

தமிழ் தேசிய கூட்டமைப்பை, அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு, பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு நிர்ணயச் சபையில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது, அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்த பகிரங்க அழைப்பை விடுத்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவேண்டும். அமைச்சுப் பதவிகளை பெற்று வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு சேவையாற்ற கூட்டமைப்பினர் முன்வர வேண்டும் என, அமைச்சர் சம்பிக்க ரணவக்க அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைவதால், வடக்கு,கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், ஆளுங்கட்சியில் அங்கம் வகித்ததால் மலையகத் தமிழ் மக்களின் கலாசாரத்துக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. இதே போன்று, வடக்கு, கிழக்கு மக்களின் கலாசாரத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்முடன் இணைய வேண்டும் என, அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக அங்கம் வகிப்பதால், முஸ்லிம் மக்களின் கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களில் எந்தவித மாற்றமும் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

எனவே, எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களை கட்டியெழுப்ப அரசாங்கத்துடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணையவேண்டும். கடந்த 50 வருடங்களில் வடக்கு பகுதியில் பெரிதாக எவ்வித தொழிற்சாலையும் உருவாகவில்லை. வேலையில்லாப் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை.

அதேவேளை, காலைநிலை மாற்றத்தால் இன்னும் 40ஆண்டுகளில் வடக்கு பகுதி அரைப்பாலைவனமாக மாறக்கூடும் அபாயம் உள்ளது. இந்த ஆபத்தை சமாளிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைய வேண்டும் என, அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

Read more...

எதிர்வரும் தேர்தலில் அதிக வாக்குகள் நமக்கே - காரணத்தை கூறினார் பந்துல

நடைபெறவுள்ள தேர்தலில் அதிக வாக்குகளை நாங்கள் நிச்சயம் பெறுவது உறுதி என்று நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனர்
நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை உள்ளடங்கிய பாரிய கூட்டணியொன்று, எதிர்வரும் தேர்தலுக்காக தோற்றம் பெறவுள்ளது. தனியார் ஊடகமொன்றுக்கு நேற்று வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த புதிய கூட்டணி தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுன, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் இக்கூட்டணிக்கு ஆதரவு வழங்கியுள்ளதுடன், ஏனைய சில கட்சிகளும் இணைவதற்கு தயாராக உள்ளதாக பந்துல குணவர்தன இதன்போது கூறினார், அரசாங்கத்தினால் மக்களின் வாக்குகளை பெறமுடியுமென்றால் விரைவாக தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுகின்றோமெனவும் அவர் மேலும் சவால் விடுத்தார் .

Read more...

பல்கலைக்கழகத்திற்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு வந்தது செய்தி

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார அறிவித்துள்ளார். 2018ம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுகளுக்கமைய, இன்று முதல் எதிர்வரும் பெப்ரவரி 1ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

விண்ணப்பங்களை ஒன்லைன் முறையில் இணையத்தின் ஊடாக சமர்ப்பிக்க முடியும். இதற்குரிய வழிகாட்டல்கள் அடங்கிய கையேட்டை, இன்று முதல் முகவர் புத்தக நிலையங்களில் மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். இதனிடையே, இம்முறை 31 ஆயிரத்து 158 மாணவர்கள் பல்கலைக்கழக வாய்ப்பை பெற்றுள்ளார்கள். கடந்த ஆண்டைவிட ஆயிரம் மாணவர்கள் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளப்பட இருப்பது சிறப்பான விடயமாகும்.

Read more...

முன்னாள் புலிகள் இருவருக்கு 185 வருட கடூழிய சிறை.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இரண்டு பேருக்கு, வடமத்திய மாகாண மேல் நீதிமன்றத்தால் 185 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் முன்னிலையில் நேற்று இந்த வழக்கின் பிரதிவாதிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

பாதுகாப்புப் படையின் 37 பேரை ஏவுகணை செலுத்தி கொலை செய்தமை தொடர்பிலான குற்றச்சாட்டே இவர்கள மீது சுமத்தப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுரை  ஜெகன் மற்றும் நல்லசாமி சிவலிங்கம் ஆகியோரே குறித்த குற்றத்தை புரிந்துள்ளார்கள். இந்த நிலையில், 185 வருட கடூழிய சிறைத்தண்டனையை ஒரே தடவையில் 5 வருடங்கள் கழிக்கும் வகையில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பலாலி விமான நிலையத்திலிருந்து இரத்மலானை நோக்கி பயணித்த அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தி தாக்கியதில், அதில் பயணித்த பாதுகாப்பு படையின் 37 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2000 ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த குற்றச்சாட்டு உள்ளிட்ட 37 குற்றங்கள் தொடர்பில் குறித்த இரண்டு பேருக்கும் 185 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக  நீதிமன்றம் அறிவித்தது.


Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com