Thursday, November 29, 2018

கரைச்சி பிரதேச சபையில் அமளிதுமளி. களவு பிடிபட்டதால் பாதுகாப்புக்கு பொலிஸை அழைத்த வேழமாலிகிதன்.

உரிய கேள்வி கோரல் விடுக்காமல், லஞ்சம் வாங்கிக்கொண்டு கடை ஒன்றை குத்தகைக்கு கொடுத்தமை தொடர்பில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் நேற்று (28.11.2018) பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நேற்று சபையில் ஆதனவரி தொடர்பான உரையாடல் இடம்பெற்றது. அதன்போது எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர், பசுமை பூங்கா பிரதேசத்தில் உரிய முறையில் கேள்வி கோரல் விடுக்காமல், மக்களுக்கு அது தொடர்பில் தெரியப்படுத்தாமல், அனைவருக்கும் கேள்வி பத்திரத்தை சமர்பிக்கும் சந்தர்ப்பத்தை மறுத்து, உரிய நடைமுறைகள் பின்பற்றாமல் நபர் ஒருவருக்கு கடையொன்று வழங்கப்பட்டிருப்பது தொடர்பில் கேள்வி எழுப்பினார்.

அதன்போது குறுக்கிட்ட தவிசாளரான சிறிதரனின் சகா வேழமாலிகிதன், பதில் தரமுடியாது என மறுத்துரைத்தபோது, உறுப்பினர்கள் தவிசாளரின் நடவடிக்கையை எதிர்த்து வாதிட்டனர். உறுப்பினர்களுக்கு பதில் கொடுக்க முடியாத வேழமாலிகிதன், இளங்கோ என்ற உறுப்பினரை சபையிலிருந்து வெளியேற்ற முற்பட்டபோது அவர் அங்கிருந்து வெளியேற மறுத்துவிட பொலிஸாரை அழைத்துள்ளார் வேழமாலிகிதன்.

வேழமாலிகிதனின் அழைப்பில் சபைக்கு வந்த பொலிஸாருக்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் பெரும் எதிர்ப்பை காட்டியதை தொடர்ந்து அவர்கள் சபையினுள் நுழைவதை தவிர்த்து பார்வையாளர்கள் பகுதியிலிருந்து சபை நடவடிக்கைகளை அவதானித்துள்ளனர்.

கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் நெருங்கிய சகாவாவார் என்பதும் இவர் மீது பல்வேறுபட்ட மோசடிக்குற்றச்சாட்டுக்களும் பாலியல்குற்றச்சாட்டுக்களும் சமூக வலைத்தளங்களில் உலாவருவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.




Read more...

Wednesday, November 28, 2018

என்னை கொல்லப்போறார்கள்! பொலிஸ் பாதுகாப்பு தாங்கோ! விக்கி ஜனாதிபதியிடம் மன்றாடிக் கடிதம்.

ராஜபக்ச குடும்பத்தினரை கொலை செய்ய முயற்சி செய்த அதே பிரதி பொலிஸ் மா அதிபரே தன்னையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ள பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் தருமாறு வேண்டியும் ஜனாதிபதி மைத்திரிபால விற்கு கடிதம் எழுதியுள்ளார் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.

அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தின் தமிழ் வடிவம் என கீழே குறிப்பிடப்பட்டுள்ள பகுதி ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள அக்கடிதத்தில் மேலதிகமாக என்ன எழுதப்பட்டிருக்கும் என்பது சந்தேகத்திற்கு இடமாகவே உள்ளது.

மஹிந்த குடும்பத்தினரை கொல்ல முயற்சி செய்பவர்கள் விக்கினேஸ்வரனையும் சேர்த்து கொலை செய்ய முயற்சிக்கின்றார்கள் என்றால் ராஜபக்ச குடும்பத்தினருக்கும் விக்கினேஸ்வரனுக்குமிடையேயான தொடர்பு என்ன என்பதே இங்கு எழுப்படவேண்டிய கேள்வியாகும்.

இது தொடர்பான புலனாய்வுகளை இலங்கைநெட் மேற்கொண்டு மக்களுக்கு தெரியப்படுத்தும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.



மேன்மை தங்கிய மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு
ஜனாதிபதி
ஜனாதிபதிசெயலகம்
காலிமுகத்திடல்
கொழும்பு– 01 28.11.2018

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு!

வடமாகாண முதலமைச்சராக என்னுடைய பதவிக்காலம் முடிந்ததன் பின்னர் என்னுடைய பிரத்தியேக பொலிஸ் பாதுகாப்பு அலுவலர்கள் தொடர்ந்து எனக்கு பாதுகாப்பு வழங்கி வந்துள்ளனர்.

சில காலங்களுக்கு முன்னர் என்னுடைய உயிருக்கு ஆபத்து என்பது சம்பந்தமாக பொலிஸ்மா அதிபருக்கும் சிரேஸ்ட உப பொலிஸ்மா அதிபருக்கும் தெரிவித்திருந்தேன். அது சம்பந்தமான செய்திகளை எமக்கு வழங்கியவர் அம்பலாங்கொடையைச் சேர்ந்த டிசில்வா என்பவர். நீங்கள் யாழ்ப்பாணம் வந்தபோது உங்களுக்கும் தனிப்பட்ட ரீதியில் இதுபற்றித் தெரிவித்திருந்தேன். இதில் சந்தேகத்திற்குரியவராகக் கணிக்கப்பட்டவர் தற்போது கைது பண்ணப்பட்டிருக்கும் உப பொலிஸ் அதிபர் நாலக டி சில்வா என்பவர்.

மேற்படி உயிராபத்து சம்பந்தமாக பொலிஸ்மா அதிபரும், சிரேஸ்ட உப பொலிஸ்மா அதிபரும் தெரிந்து வைத்துக் கொண்டிருந்த காரணத்தினால் அவர்களுக்கு இது பற்றி எழுத்தில் தெரிவிக்குமாறு கோரியிருந்தார்கள். இது என்னால் செய்யப்பட்டது. குறித்த கடிதத்தின் பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. என்னுடைய வாசஸ்தலத்திற்குரிய பாதுகாப்பு கைவாங்கப்பட்டதெனினும் என்னுடைய தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு இற்றைவரையில் தொடர்ந்து வந்துள்ளது.

இன்று காலை யாழ் பொலிஸ் தலைமையக மேற்பார்வையாளர் என்னுடைய பொலிஸ் பாதுகாப்பு அலுவலர்களை உடனே யாழ் பொலிஸ் நிலையத்தில் வந்து கையெழுத்திடுமாறு கோரியிருந்தார்.

நான் தற்போது கொழும்பில் என்னுடைய பாதுகாப்பு அலுவலர்களுடன் தங்கியிருக்கின்றேன். எனினும் இரு அலுவலர்கள் இன்று காலை யாழ் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள்.

பொலிஸ்மா அதிபருக்கு அறிகையிடப்பட்ட என்னுடைய உயிராபத்திற்கான காரணங்களை முன்வைத்து என்னுடைய தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை அனுமதிக்குமாறு மேன்மைதங்கிய உங்களிடம் தயவாகக் கேட்டுக் கொள்கின்றேன். கிழக்கு மாகாண முன்னைய முதலமைச்சர் அவர்களுக்கு தற்போதும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகஅறிகின்றேன்.
நன்றி
இப்படிக்கு

நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்
வடமாகாணம்

பிரதி –
1. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
2. பொலிஸ்மா அதிபர்
3. சிரேஸ்ட உப பொலிஸ்மா அதிபர், வடமாகாணம்

Read more...

தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவுற்ற அன்றிரவே அதிகாரங்கள் யாவற்றையும் கேட்டாராம் ரணில்! போட்டுடைக்கின்றார் தயாசிறி!

தன்னை பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதுடன் தனக்கு சகல அதிகாரங்களை வழங்க வேண்டும் எனவும், இதனை வர்த்தமானி அறிவித்தலின் மூலமாக அறிவிக்க வேண்டும் எனவும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் முடிவடைந்ததும் அன்றிரவு ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்ததாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு ஜனாதிபதிக்கு கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார். இதன் மூலம் இவரின் அதிகாரத்தை கைப்பற்றும் சூழ்ச்சி எல்லோருக்கும் தெரியவந்தது.

அதாவது ஜனாதிபதியை கைப்பொம்மையாக வைத்துக்கொண்டு அனைத்து அதிகாரங்களை தனக்கு கீழ் கொண்டுவர ரணில் விக்கிரமசிங்க முயற்சி செய்தார். தனக்கேற்றவாறு அரசியல் அமைப்புக்களை மாற்றுதில் ரணில் விக்கிரமசிங்க கைதேர்ந்தவர்.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க செயற்பாடுகள் தொடர்பில் எதுவும் தெரியாது. அவருடன் 14 வருடங்கள் அரசியல் செய்த எனக்கு அவரின் செயற்பாடுகள் தொடர்பில் நன்கு அறிந்துவைத்துள்ளேன்.

இவ்வாறான நிலையிலே முறையற்ற விதமான பாராளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து அதனை நிறைவேற்ற முயற்சி செய்கின்றார்கள் என்றார்.

Read more...

பாடசாலை விடுமுறைக்கு முன்னர் மாணவர்களுக்கான சீருடை அல்லது வவுச்சரை வழங்குவீர்! -CSTU.

2018 வருடத்தின் பாடசாலை நடத்துதல் நவம்பர் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளதால் இது நாள்வரையில் பாடசாலை சீருடைகளோ அல்லது வவுச்சரையோ பெற்றுக் கொடுக்காததையிட்டு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தனது வண்மையான கண்டத்தை தெரிவித்துள்ளது.

இதற்கு முனன்ர் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் விடுமுறைக்கு முன்னர் பாடசாலை சீருடை அல்லது வுவுச்சர் பெற்றுக்கொடுபப்தற்காக நடவடிக்கை எடுத்தமையானது அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் புதிய சீருடை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு முடியுமனான விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்ற அரசியலமைபுக்கு முரணான ஆட்சி மாற்றத்துடன் 2016ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த சீருடை வவுச்சருக்குப் பதிலாக துணி வழங்குவதாக அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதாக தெரிவிக்கும் அச்சங்கம் அகில விராஜ் காரியவசம் அமைச்சரால் சீருடைக்கான தரமான துணி வழங்குவதற்குப் பதிலாக ஆரம்பித்த வவுச்சர் பெற்றுக் கொடுக்கும் நடைமுறையை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள போவதில்லையென தெரிவிக்கிறது.

அதனால் நாற்பது இலட்சம் இந்நாட்டுப் பாடசாலை பிள்ளைகளை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்காது சீருடை அல்லது வவுச்சரை பாடசாலை விடுமுறைக்கு முன்னர் வழங்குவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக எடுக்கும்படி இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் வலியுறுத்துகின்றார்.

Read more...

விக்கினேஸ்வரனின் பொலிஸ்பாதுகாப்பு வாபஸ்!

முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பொலிஸ்பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அவர் பதவிக்காலம் முடிவடைத்ததை தொடர்ந்து அவருக்கான பாதுகாப்பு அவசியமில்லை என்ற காரணத்தினாலும், அவ்வாறு தொடர்ந்து பாதுகாப்பு வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை என்ற காரணத்தினாலும் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத பொலிஸ் அதிகாரி ஒருவர் இலங்கைநெட் இற்கு தெரிவித்தார்.

விக்னேஸ்வரன் தொடர்ந்தும் சிங்கள பொலிஸ் அதிகாரிகளையே பாதுகாப்புக்கு வைத்திருந்தார் என்றும் அவர் தமிழ் பொலிஸாரை விரும்ப வில்லை என்றும் ஆழுனர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

எது எவ்வாறாயினும் பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக்கொள்வதற்கு தனது சம்பந்தி வாசுதேவவின் உதவியை விக்னேஸ்வரன் நாடியுள்ளதாக அரசியல் வாட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.

Read more...

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைது!

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை எதிர்வரும் டிசம்பர் 05ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2008, 2009 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு அடைக்கலம் வழங்கியதாக ரவீந்திர விஜேகுணரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கு விவகாரத்தில் இன்று அவர் மன்றில் ஆஜரானபோதே விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அட்மிரல் விஜயகுணவர்த்தன தனக்கு எதிராக சாட்சியம் அளித்த கடற்படையின் அதிகாரி ஒருவரை மிரட்டியதுடன் அவரை கொலை செய்ய முயற்சித்தார் என்ற புதியதோர் குற்றச்சாட்டுக்கும் உட்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


Read more...

நீங்கள் வித்தாக மட்டும் ஆகவில்லை, அவர்களது வீடுத்தோட்டத்தில் காசுமரமாக காய்த்து குலுங்குகிறீர்கள். புதியவன் ராசையா

நீங்கள் வித்தாகவில்லை. களத்திலும் புலத்திலும் பலபேர் சொத்துச் சேர்க்க செத்தே போனீர்கள். உங்களை பெற்றவர்கள் தமிழீழத்தில் பிச்சைகூட எடுக்கிறார்கள். பல பெண்கள் கிணற்றிலே வீழ்ந்து உயிரை மாய்த்தார்கள். கூலிவேலைக்குச் செல்லும் பெண் போராளிகள். கொடுமைக்கு ஆளாகும் இளம் தாய்கள். வறுமையில் படிக்கமுடியாமல் பரிதவிக்கும் குழந்தைகள். வாழ்வே சூனியமாய் போன போராளிக் குடும்பங்கள்.

புலத்திலே மில்லியன் கணக்கிலே பணத்தை மடக்கிய மகான்கள் உங்களை வித்தென்றும் அழியாச் சொத்தென்றும் மேடைகள் கட்டிப் பாடுவதும், நாட்டியம் ஆடி தேசியம் பேசுவதும் பின் கொத்துரொட்டியும் புரியாணியும் வாங்கித் தின்றுவிட்டு, வீடு செல்வதுமே இவர்களது வியாபாரமாக இருக்கிறது.

இறந்தவர்களின் கண்ணீரைக் காசாக்கும் யுக்தி தெரிந்திருக்கிறது இவர்களுக்கு. மரணித்தவர்களின் உறவுகளின் உணர்வுகளை கிளர்த்த புலத்தில் எப்படிக் குளிர்காய்வது என்ற வியாபார தந்திரம் தெரிந்திருக்கிறது இவர்களுக்கு.

ஒரு காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மற்ற இயக்கங்கள் போல காட்டிக்கொடுக்கும் ஒட்டுக்குழு அல்ல என்ற இறுமாப்பும், ஒரு சதம் கணக்குக் காட்டத்தவறின் கடும் தண்டனை கொடுக்கும் இயக்கம் என்றும் மார்தட்டிய மக்களே! இன்று பாப்பா, கருணா, கேபி, தனம், ஊத்தை சேது, இமானுவல், இப்படி நீளும் பட்டியலில் உள்ளவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

உங்களைச் சொல்லி அனந்தி சம்பாதிக்கிறார். உங்களைக் காட்டி ஶ்ரீதரன் கொள்ளையடிக்கிறார். உங்களைக் காட்டி கஜேந்திரன் குதிரை ஓட்டுகிறார் ஆனால், பிள்ளைகளைப் பறிகொடுத்து விட்டு நீங்கள் பட்டினியில். மீளாத் துயரில்.

உங்கள் பிள்ளைகள் வித்தாகவில்லை தாய்மாரே. அத்தனைபேரையும் கொன்று தொலைத்துவிட்டு, அவர்கள் வீரத்தில் இவர்கள் விளைச்சலை அறுவடை செய்கிறார்கள்.

ஒரு சமூகம் பாரிய தோல்வியை வரலாற்றில் பதிவு செய்துவிட்டு மார்தட்டி வீரம் பேசுவதை தமிழ்ச் சமூகத்தைத் வேறெங்கும் காண்கிறோமா?

ஏன் தோற்றோம் என்ற ஆய்வில்லை. பிள்ளைகளை அள்ளிக்கொடுத்து இன்று அநாதைகளாக இருக்கும் குடும்பங்கள் எத்தனை யாருக்கும் தெரியாது.

மகனையும் மகளையும் எதிரியிடத்திலும், இயக்க மோதலிலும் பலிகொடுத்த என் தாய்ச் சனமே!

தலைவன் வரும் போது திருப்பிக் கொடுக்கிறேன் என்று உன் பணத்தைச் சுருட்டி சுகபோகம் அனுபவிக்கும் இந்த ஈன இனத்துக்காய் இனிமேலும் உங்கள் செல்வங்களை இழக்காதீர்கள்.

முப்பது வருடம் களத்தில் நின்று போராடியதாக கூறிக்கொள்ளுகின்ற பிரபாகரனுக்கே அஞ்சலி செலுத்தாமல் சுருட்டிய பணத்திற்கு காவலாய் உயிரோடு வைத்திருக்கும் ஒரு முட்டாள் சமூகம் ஒருபோதும் உருப்படாது.

களத்திலே நின்று உணவில்லாமல், உருப்படியான சீருடை இல்லாமல் , வேயிலிலும் மழையிலும் பட்டினியோடும் களைப்போடும் ஆனால் மன உறுதியோடும் போராடி மடிந்த செல்வங்களே
உங்கள் தியாங்களை கனத்த இதயத்தோடு அஞ்சலிக்குறேன்.

இன்று தமிழீழ தேசம் எந்த விட்டுக்கொடுப்பும் இன்றி உங்களை மனதிலே ஏந்தி மரியாதை செலுத்தும்.

புதியவன் ராசையா என்பவரது முகப்புத்தகத்திலிருந்து.

Read more...

Tuesday, November 27, 2018

சபாநாயகருக்கு புகழ்மாலை சூட்டுகின்றார் அடைக்கலநாதன். அவரின் கீழ் கடமையாற்றுவதில் பெருமையாம்.


சபாநாயகர் வயதானாலும் பிரச்சினைகளை எதிர்த்து துணிச்சலுடனும் ஒரு வீரனை போன்றும் செயற்பட்டதாகவும் சபாநாயகரின் கீழ் செயலாற்றுவதை பெருமையாக நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்.

பாராளுமன்றத்தில் புத்தகம் ஒன்றை வீசி தன்னை தாக்க முற்பட்ட சந்தர்ப்பத்திலும் சபாநாயகர் அச்சமின்றி செயற்பட்ட விதம் பாராட்டத்தக்கது என குறிப்பிட்டுள்ள போராளியாக இருந்த தனக்கு, ஜனநாயகத்ததை நிலைநாட்ட சபாநாயகர் நடந்து கொண்ட விதம் கடந்த காலத்தை நினைவு கூரியதாகவும் தெரிவித்துள்ளார்.


Read more...

இன்றைய அரசியலின் யதார்த்தநிலை. வை எல் எஸ் ஹமீட்

பிரதமரை நியமிக்க 113 அவசியமா?

ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன்; என்று ஜனாதிபதி கூறுகிறார். அவ்வாறு அவரால் கூறமுடியுமா?

113 ஐக் காட்டினாலும் மறுக்க முடியுமா?

ஜனாதிபதி கொலைமுயற்சியில் ரணிலுக்குத் தொடர்புண்டு. மத்திய வங்கி ஊழலில் பங்குண்டு. வெளிநாட்டு சதி. எனவே ரணிலை நீக்கியது சரி. மீண்டும் நியமிக்க மறுப்பதும் சரி, என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது? இது சரியா?

இவை தொடர்பாக ஆராய்வோம்.

பிரதமர் நியமனம் தொடர்பான சட்டநிலைப்பாடு

நாங்கள் முதலில் அரசியல் வேறு, அரசியலமைப்பு சட்டம் வேறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அரசியலில் சிலர் வரையறை இல்லாமல், பகுத்தறிவுக்குத் தொடர்பில்லாமலெல்லாம் பேசுவார்கள். எழுதுவார்கள். ஆனால் சட்டம் தொடர்பாக அவ்வாறு பேசமுடியாது.

தனது மனம் சொல்லுகின்ற அரசியல் நிலைப்பாடுகளெல்லாம் அரசியலமைப்பு சட்டமாகிவிடாது. ஆனால் ஜனாதிபதி உட்பட சிலர் அவ்வாறுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

“ பெரும்பான்மை இருந்தால் ரணிலென்றால் என்ன? யாரென்றால் என்ன? அவரை பிரதமராக ஜனாதிபதி நியமித்தே ஆகவேண்டும். அது அரசியலமைப்பினால் அவருக்கு வழங்கப்பட்ட கடமை. அந்தக் கடமையை தான் நிறைவேற்றமாட்டேன்; என்று அவர் எவ்வாறு கூறமுடியும்?

ஜனாதிபதி கொலைமுயற்சியில் ரணிலுக்குத் தொடர்பு என இதுவரை எந்த ஆதாரமும் முன்வைக்கப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு ஆதாரம் இருந்தால் அவருக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கலாம். அதுவேறுவிடயம். அதேபோன்றுதான் மத்தியவங்கி விவகாரம். அதற்காக அவரைப் பிரதமராக நியமிக்கமாட்டேன்; என்று கூறமுடியாது. அவர் குற்றவாளியாகக் காணப்பட்டு ஆறுமாதத்திற்குமேல் சிறைத்தண்டனை அனுபவித்தால்/ அனுபவித்துக்கொண்டிருந்தால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இழக்கப்படும். அப்போது பிரதமராக முடியாது.

அவ்வாறாயின் அரசியலமைப்பு சட்டத்தை வேண்டுமென்றே மீறினால் ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்கலாம். அரசியலமைப்பை ஜனாதிபதி மீறுவதென்பது அவ்வளவு பாரிய குற்றம். இந்த நாட்டுமக்களின் தலைவிதியோடு விளையாடுகின்ற விடயம். ஆனால் இன்று வெளிப்படையாகவே ஜனாதிபதி அரசியலமைப்பை மீறுகிறார். ஆனாலும் ஏன் அவரை நீக்கமுடியாமலுள்ளது? காரணம் 2/3 பெரும்பான்மை தேவை?

அதேபோன்றுதான் பிரதமர் என்ன செய்தார்? என்று குற்றச்சாட்டையும் ஜனாதிபதியே முன்வைத்து அவரே தீர்ப்பையும் தண்டனையையும் வழங்கமுடியாது. அது வேறாக பார்க்கப்பட வேண்டும். பிரதமர் நியமனத்துடன் சம்பந்தப்பட்ட ஒரேயொரு பிரதான சொல் ‘ பெரும்பான்மை’ என்பதாகும்.

பிரதமர் என்பவர் ஜனாதிபதியின் தோட்டக்காரனல்ல; விரும்பியவரை நியமிப்பதற்கும் விரும்பாதவரை நியமிக்க மறுப்பதற்கும். சிலர் அறியாத்தனமாக 113ஐ ஒருவர் காட்டாவிட்டால் ஜனாதிபதி தாம் விரும்பியவரை பிரதமராக நியமிக்கலாம். அது அவருக்குள்ள அதிகாரம் என்று நினைக்கிறார்கள். இவை இரண்டும் பிழையாகும். 113 காட்டவேண்டிய அவசியமும் இல்லை. ஜனாதிபதி “ தான் விரும்பியவரை” நியமித்தல் என்ற ஒரு விடயமும் இல்லை.

மறுபுறம் ரணில் 113ஐக் காட்டாவிட்டால் ஆட்சியில் இருப்பது தங்களுடைய வரப்பிரசாதம்; என்று மஹிந்த தரப்பினர் நினைக்கிறார்கள்.

பெரும்பான்மை என்பது என்ன? பெரும்பான்மைக்கு 113 தேவையா?

அரசியலமைப்பில் பெரும்பான்மை எனும்போது அது சாதாரண பெரும்பான்மையைக் குறிக்கின்றது. அதாவது பாராளுமன்றத்தில் வாக்களிக்கின்றவர்களில் பாதியும் ஒன்றும் ஆகும். 113 அல்லது 2/3 தேவையென்றால் அது வேறாக சுட்டிக்காட்டப்படும்.

பிரதமர் நியமனத்தைப் பொறுத்தவரை “ பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கூடியவராக ஜனாதிபதி அபிப்பிராயப்படுபவரை நியமிக்கலாம்; என்று சரத்து 42(4) கூறுகின்றது. பிரதமர் நியமனத்தைப்பற்றி அரசியலமைப்பில் கூறுகின்ற ஒரேயொரு சரத்து இது மட்டும்தான். இன்னும் சில பதில் நியமனத்தைப்பற்றிக் கூறுகின்றன. அது வேறுவிடயம்.

இங்கு ஜனாதிபதி ‘ விரும்புகின்றவரை’ என்றொரு வார்த்தையில்லை. இருப்பதெல்லாம் ‘ ஜனாதிபதியின் அபிப்பிராயத்தில் பெரும்பான்மை பெறக்கூடியவர்’ என்பதுதான்.

இந்த அபிப்பிராயம் objective judgement மூலம் ஏற்படவேண்டும். அதாவது வலுவான காரணங்களின் அடிப்படையில் அது இருக்கவேண்டும். சொந்தவிருப்பு வெறுப்புகளுக்கு இடம் கிடையாது. ஏனெனில் எந்த ஒருவருக்கும் அதிகாரம் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்படுகின்றபோது அவர்களுக்கு சில கடமைகளும் வழங்கப்படுகின்றன. அந்தக் கடமைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே அந்த அதிகாரம் வழங்கப்படுகிறது.

உதாரணமாக பொலிசாருக்கு ஒருவரைக் கைதுசெய்ய அதிகாரம் வழங்கப்படுகின்றது; என்றால் அமைதியை நிலைநாட்டுதல் என்ற கடமையைச் செய்வதற்காகத்தான் அந்த அதிகாரம் வழங்கப்படுகின்றது. அந்த அதிகாரத்தை அமைதியை நிலைநாட்டுவதற்காகத்தான் பாவிக்கலாம். தனிப்பட்ட நோக்கத்திற்காக பாவிக்க முடியாது.

அதேபோன்றுதான் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருப்பார் என்று நடுநிலையான கண்ணோட்டத்தில் தான் நம்புகின்றவரை பிரதமராக நியமிக்கலாம். அதேநேரம் ஜனாதிபதி சரியானமுறையில் தன் அபிப்பிராயத்தை ஏற்படுத்தினாரா? என்பதை பாராளுமன்றம் கேள்விக்குட்படுத்தி அதனை ஏற்றுக்கொள்ளலாம். நிராகரிக்கலாம்.

பாராளுமன்றம் நிராகரித்தால் அடுத்தவரை 113 கொண்டுவா என்றோ அல்லது அவரை நியமிக்கமாட்டேன், இவரை நியமிக்க மாட்டேன் என்றோ ஜனாதிபதி கூறமுடியாது. அடுத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மை காட்டுவதற்கு சாத்தியமானவரை ஜனாதிபதி நியமிக்க வேண்டும். அவரைப் பாராளுமன்றம் ஏற்றுக்கொள்ளலாம், நிராகரிக்கலாம்.

அந்தவகையில் மஹிந்தவின் அரசாங்கம் பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதேநேரம் ஆகக்கூடுதலான ஆசனங்களைப் பெற்ற கட்சியாக ஐ தே கட்சி இருக்கின்றது. அந்தக்கட்சி அதன் தலைவரை நியமிக்கச் சொல்கின்றது. எனவே அவரைத்தான் நியமிக்க வேண்டும். அதன்பின் வேண்டுமானால் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டைவந்து முடிந்தால் அவரைத் தோற்கடிக்கலாம்.

அவ்வாறு இல்லாவிட்டால் வேறு யாரை பிரதமராக நியமிப்பது? அடுத்தது சம்பந்தன். அதற்கடுத்தது அனுரகுமார. அவர்களையா நியமிப்பது. எனவே UPFA இன் சார்பில் நியமித்தவருக்கு பெரும்பான்மை இல்லை; என்று பாராளுமன்றம் கூறிவிட்டது. அடுத்த சாத்தியமான கட்சி ஐ தே கட்சிதான். அவருக்குப் பெரும்பான்மை இருக்கின்றதா? இல்லையா? என்று பரிசோதிப்பது பாராளுமன்றம். பாராளுமன்றத்தின் வேலையை ஜனாதிபதி செய்யமுடியாது.

ஜனாதிபதி நியமித்த மஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லலையென்று பாராளுமன்றம் நிராகரித்தன்பின் வெள்ளியன்று விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் சபாநாயகரைப் பார்த்துக் கேட்கின்றார், “ ஜனாதிபதி நியமித்த பிரதமரை பிரதமர் இல்லை என்பதற்கு நீங்கள் யார்?” என்று. இவ்வாறான மேதைகள்தான் நமது பாராளுமன்றத்தில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதற்கும் சிலர் இருக்கின்றார்கள்.

“ஜனாதிபதியின் அபிப்பிராயத்தில் பெரும்பான்மைக் கொண்டிருப்பவர்” என்ற பதம் ஏன் கொண்டுவரப்பட்டிருக்கின்றது? என்பதை நாம் புரியவேண்டும்.

இந்தப்பதம் இல்லாவிட்டால் “ பெரும்பான்மையைக் கொண்டிருப்பவரை நியமிக்கவேண்டும்” என்று பொருள் பட்டிருக்கும். வெளியில் வைத்து பெரும்பான்மை பார்ப்பதானால் 113 வேண்டும். பொதுவாக மக்களின் புரிதலுக்காக “ பெரும்பான்மை” என்ற சொல்லை எல்லோரும் பாவித்தாலும் சரத்து 42(4) ‘ பெரும்பான்மை, majority ‘ என்ற சொல்லே இல்லை. மாறாக “likely to command the confidence of Parliament “ என்றுதான் இருக்கின்றது. அதாவது ‘ பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெறுவதற்கு சாத்தியமான(வர்)’ என்பதாகும்.

இங்கு ‘ ஜனாதிபதியின் அபிப்பிராயத்தில்’ என்ற பதம் பாவிக்கப்படாமல் இருந்திருந்தால் ‘ யார்? எதைவைத்து?’ நம்பிக்கையைப் பெறக்கூடியவர், என்ற கேள்விகள் எழுந்திருக்கும்.

பிரதமர் நியமிப்பது பாராளுமன்றத்திற்கு வெளியே! இந்நிலையில் ‘ நம்பிக்கையைப் பெறக்கூடியவர்’ என்பதற்கு கொடுக்கக்கூடிய ஒரேயொரு அர்த்தம் 113 இருக்கின்றவர்; என்பதாகத்தான் இருக்கமுடியும். உதாரணமாக ஐ தே க பெற்ற ஆசனங்கள் 106. அடுத்தபக்கம் அதைவிடக்குறைவான ஆசனத்தை அடுத்த கட்சி பெற்றாலும் ஏனைய கட்சிகள் அந்தக் குறைவான ஆசனங்களைப்பெற்ற கட்சிக்கு ஆதரவளிக்காது; என்று எவ்வாறு தீர்மானிக்க முடியும். ‘ அவருடைய அபிப்பிராயத்தில்’ என்ற பதம் வருகின்றபோது ‘ அது எனது அபிப்பிராயம்’ அது பிழையென்றால் பாராளுமன்றம் தீர்மானிக்கலாம்; என்று கூறமுடியும்.

அவரது ‘அபிப்பிராயத்திற்கு’ இடம் கொடுக்காவிட்டால் பிரதமரை நியமிக்கமுன் வெளியில் வைத்து பெரும்பான்மை உறுதிசெய்யப்பட வேண்டும். எந்தவொரு கட்சியும் அறுதிப்பெரும்பான்மை பெறாதபோது இன்று த தே கூ மற்றும் ஜே வி பி அடம்பிடிப்பதுபோல் ஒரு சூழ்நிலையும் இருந்தால் தேர்தல் முடிந்து நாட்கள், வாரங்கள் கடந்தாலும் பிரதமரை நியமிக்க முடியாத நிலைமை ஏற்படும்.

எனவே, ‘ ஜனாதிபதியின் அபிப்பிராயத்தில்’ என்ற பதத்தை கொண்டுவந்ததன்மூலம் ‘ பெரும்பான்மையை வெளியில் வைத்து உறுதிப்படுத்தும் தேவையை அரசியலமைப்பு இல்லாமலாக்கி இருக்கின்றது.

அரசியலமைப்பு இல்லாமலாக்கிய தேவையை தேவைப்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது. மறுபுறம், ‘ அபிப்பிராயத்தில்’ என்ற பதத்தை கொண்டுவந்ததன்மூலம் வெளிப்படையாக பெரும்பான்மையை “கொண்டிருப்பவரை” அல்ல மாறாக “கொண்டிருப்பதாக தெரிபவரை” பிரதமராக நியமித்துவிட்டு மிகுதியைப் பாராளுமன்றத்திடம் விட்டுவிடுங்கள்; என்பது பொருளாகும்.

இங்கு ஒரு கணக்குக் காட்டப்படுகின்றது. அதாவது ரணிலிடம் 101, மஹிந்தவிடம் 104 என்று. ஆனால் அந்த 104 உள்ளவருக்கு எதிராக 122 காட்டப்பட்டதன்மூலம் பெரும்பான்மை இல்லை என்று தெரிந்துவிட்டதே. எனவே, அடுத்தது 101 இருப்பவருக்கு ( இவர்களது கூற்றுப்படி) பிரதமர் பதவியை வழங்கி மிகுதியைப் பாராளுமன்றத்திடம் விடவேண்டும்.

பாராளுமன்றத்தில் இவருக்கு பெரும்பான்மை இல்லை; என்று நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவாருங்கள். அதில் முடிந்தால் தோற்கடித்துவிட்டு மிகுதியைப் பேசவேண்டும்.

அவ்வாறு இல்லாமல் இந்த நாடு ஜனாதிபதியின் வீட்டுத்தோட்டம் போன்றும் பிரதமர் தோட்டக்காரர் போன்றும் ஜனாதிபதி செயற்படவும் கூடாது. ஏனையவர் அர்த்தமற்ற கருத்துக்களை முன்வைக்கவும் கூடாது.

( தொடரும்)

Read more...

குட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே! 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.

“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எங்களுக்கு நன்று விளங்குகிறது. இதை தம்பியிடமும் சொல்லுங்கள். நீயாவது இயக்கத்தை நல்லபடி நடாத்தி தமிழ் ஈழத்தை காணும்படி அவனிடம் சொல்லுங்கள்”. குட்டிமணி

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகள் என்று சொல்லப்படுகின்ற குட்டிமணி, தங்கத்துரை ஜெகன் குழுவினரை பிரபாகரனே காட்டிக்கொடுத்ததாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டிவந்தனர். இக்குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என புலிகள் தரப்பு மறுத்து வந்தனர்.

இந்நிலையில் முப்பத்தியேழு வருடங்களின் பின்னர் குட்டிணி, தங்கத்துரை , ஜெகன் குழுவினருக்கான சட்த்தரணிகள் குழாமின் ஒருவரான சட்டத்தரணி சிறிஸ்கந்தகுமார் அவர்கள், பிரபாகரன் தான் தங்களை காட்டிக்கொடுத்தாக பனாகொடை இராணுவ முகாமில் குட்டிமணியுடனான முதலாவது சந்திப்பில், குட்டிமணி தெரிவித்தாக எழுதியுள்ளார்.

முகநூலில் இடம்பெறும் கருத்தாடல் ஒன்றில் மேற்படி விடயத்தை போட்டுடைத்துள்ள சட்டத்தரணி சிறிஸ்கந்தகுமார் அவர்கள் எழுதியுள்ளமை வருமாறு:

1981ம் ஆண்டு நான் கொழும்பில் வழக்கறிஞராக சத்தியப்பிரமாணம் எடுத்து உடுப்பிட்டி எம். பி. - எம். சிவசிதம்பரம் அவர்களுக்கு ஜுனியராக வேலை செய்து கொண்டிருந்த காலமது. பயங்கரவாத தடைச்சட்டம் அறிமுகமாகி அச்சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடங்கிய காலம். 1982 ஆரம்பத்தில்தான் (அல்லது 1981 கடைசி) குட்டிமணி, ஜெகன், தங்கதுரை மற்றும் சிலர் மணலாற்றில் இராணுவத்தால் கைதானார்கள். அந்நாட்களில் இந்த கைது தமிழர் விடுதலை கூட்டணியின் அரசியலை வெகுவாக பாதித்தது. கூட்டணி எம்.பி க்கள் கதிகலங்கினர்.

குட்டிமணி, ஜெகன், தங்கதுரை கைதானவுடன் உடனடியாக பனாகொடை இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டனர். அந்த முகாம் பலத்த பாதுகாப்புடைய முகாம். பயங்கரவாத சட்டத்தின்கீழ் கைதானவர்களை யாரும் பார்க்கமுடியாது. எனவே கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு (Habeas corpus) தொடங்கப்பட்டு, அந்நாளில் மிகச்சிறந்த வழக்கறிஞரான கொல்வின் ஆர் டி சில்வா, ராணி வழக்குரைஞர், Q.C., அவர்களை நியமித்து வழக்காடி கைதானவர்களை பார்க்க அனுமதி பெறப்பட்டது. அந்த அனுமதி சட்டத்தரணிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இதன்போது உடுப்பிட்டி எம். பி. - எம். சிவசிதம்பரம் பின்னால் இருந்து இயங்கினாரே தவிர தன்னை பெரிதாக இவ்வழக்கில் அடையாளம் காட்டவில்லை.

(விடயத்திற்கு வருவதற்காக பல சில்லறை-சுவையான விடயங்களை இங்கே தவிர்க்கிறேன். தேவையானால் பின்னர் தரப்படும்).

குட்டிமணி, ஜெகன், தங்கதுரை குழுவினரை சந்திக்க இருந்த சட்டத்தரணி பட்டியலில் முதலிடம் வகித்தவர் சட்டத்தரணி கரிகாலன் நவரத்தினம். அந்நாளில் எனது சட்ட குரு என்று கூட சொல்லலாம். அவருடன் நான், காலம் சென்ற ஜி குமாரலிங்கம், தற்காலம் கொழும்பில் கொடிகட்டிப்பறக்கும் கே.வி. தவராஜா, அன்மையில் காலஞ்சென்ற வட்டுக்கோட்டை பாக்கியநாதன் மேலும் இன்னும் சிலர். எங்களுடன் வருவதாக இருந்த SJVயின் மகன் சந்திரகாசன் கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டார்.

நாங்கள் 1982ம் ஆண்டு (மாதம், திகதி ஞாபகம் இல்லை) ஒரு நாள் சனிக்கிழமை மாலை 3 மணிபோல வான் ஒன்றில் பனாகொடை இராணுவ முகாமை சென்றடைந்தோம். பலத்த சோதனையின் பின் தடுப்பு காவலில் இருந்த ஒவ்வொருவரையும் இரு சட்டத்தரணிகள் பார்ககலாம் என்று சொல்லப்பட்டது. அந்த அடிப்படையில் குட்டிமணியை கரிகாலன் நவரத்தினம் சந்திப்பதாக முடிவாயிற்று. உடனே அவர் என்னை தன்னுடன் சேர்ததுக்கொண்டார்.

ஒரு சிறிய அறையில் நாங்கள் அழைத்துச் செல்லப்பட்டு காத்திருக்கையில் குட்டிமணி அழைத்து வரப்பட்டார். மற்ற அறைகளில் மற்றவர்கள் சந்தித்துக் கொண்டார்கள். இது அவர்கள் கைதாகி ஏறக்குறைய 6 மாதங்கள் கடந்திருக்கலாம் என நினைக்கிறேன். எங்களை கண்டவுடன் குட்டிமணி கண்கலங்கினார். எங்கள் இருவரையும் குட்டிமணிக்கு முன்பின் தெரியாது. இருப்பினும் சாவு நிச்சயம் என்று தெரிந்த பின்னர் ஒரு தமிழரை சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற மனநிலையில் இருந்தவருக்கு எங்களை கண்டவுடன் மீண்டும் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது என்றே கூறவேண்டும்.

எங்கள் அறிமுகத்தின் பின்னர் குட்டிமணி முதலில் இவ்வாறு கூறினார்.

“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எங்களுக்கு நன்று விளங்குகிறது. இதை தம்பியிடமும் சொல்லுங்கள். நீயாவது இயக்கத்தை நல்லபடி நடாத்தி தமிழ் ஈழத்தை காணும்படி அவனிடம் சொல்லுங்கள்”.

மட்டக்களப்பை சேர்ந்த எனக்கு அந்நாட்களில் இயக்கங்களின் அரிச்சுவடே தெரியாது. ஆகவே நான் கரிகாலன் நவரத்தினம் அவர்களை உடனே கேட்டேன், அண்ணா, யார் அந்த தம்பி?
உனக்கு தெரியதேவையில்லை, பேசாமல் இரு, என்றார். நானும் அடங்கி விட்டேன்.

அன்றைய சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது. அரசியலை விட குடும்ப விடயம், வீட்டிற்கு என்ன சொல்வது போன்ற விடயங்களும் பேசினோம். ஒவ்வொரு கிழமையும் சந்திப்பதாக கூறி வெளியே வந்தோம். வந்தவுடன் கரிகாலன் நவரத்தினம் அவர்களிடம் நான் மீண்டும், அண்ணா, யார் அந்த தம்பி என்று கேட்டேன்.

சிறிது சினத்துடன் எனக்கு விளக்கினார். தம்பியின் பெயர் பிரபாகரன். அவன்தான் இனி இயக்கத்தை தொடர்ந்து நடாத்துவான். ஆனால், நீ இதை யாரிடமும் உளறி விடாதே. உளறினால் உன்னையும் போட்டு தள்ளிவிடுவார்கள். உன்னை இங்கு கூட்டி வந்தது, என் தப்பு என்று கூறிமுடித்தார்.

நானும் பயத்தில் அதை பெரிதாக யாரிடமும் பகிரங்கமாக சொல்லவில்லை. ஆனால் நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்தேன். இந்த சந்திப்பை தொடர்ந்து பல தடவைகள் பனாகொடை முகாமுக்கு சென்று வந்தேன். குறிப்பாக சீனியர் சிவசிதம்பரம் அவர்களுடன்.

1983 கலவரத்தின்பின் கூட்டனியினர் இந்தியா தமிழ் நாட்டில் குடியேறினர். 1984 -85 கால கட்டத்தில் கரிகாலன் நவரத்தினம் அவர்கள் சென்னையில் இருந்து ஜூனியர் விகடன் பத்திரிகையில் “குட்டிமணி ஜெகன் தங்கதுரை” என்ற பெயரில் ஒரு தொடர் சரித்திரம் எழுதினார். சென்னையில் அவரை நான் சந்தித்த பொழுதெல்லாம் குட்டிமணி சொன்ன அந்த ‘தம்பி’ விடயத்ததையும் வெளிப்படுத்தும்படி வேண்டினேன். எது சரி, எது பிழை என்பதை தவிர்த்து உண்மையான சரித்திரம் என்னவென்பதை மக்கள் அறியவேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது. ஆனால் கரிகாலன் நவரத்தினம் அவர்கள் உண்மையை எடுத்துச்சொல்ல மறுத்துவிட்டார். ஒவ்வொரு தடவையும் தனது உயிருக்கு ஆபத்து என்றே சொல்லிக் கொண்டிருந்தார். 2009ம் ஆண்டிற்குப் பிறகு, இனி அது தேவையில்லாத விடயம் என்று சொல்லி சப்ஜெக்கடையே மூடிவிட்டார்.

1956ம் ஆண்டு தமிழரசுக்கட்சியின் உண்ணா விரத போராட்டத்தில் பங்கு பற்றி சிறைசென்ற செம்மல் இந்த கரிகாலன் நவரத்தினம் அவர்கள் என்றால் மிகையாகாது. அவருக்கு அப்போது வயது 16ம் என்றும் சொல்கிறார்கள்.

நாங்கள் பனாகொடை இரானுவ முகாமிற்கு சென்ற முதல் நாளன்று எங்களுடன் தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசனும் வருவதாக இருந்தது. அவரை எங்கள் வானில் ஏற்றுவதற்காக கொழும்பு கொள்ளுப்பிட்டி அல்பிரட் கவுஸ் காடன்ஸ் வீட்டிற்கு மதியம் ஒரு மணிபோல் வந்தோம். இரண்டு மணிவரை வெளியில் காத்துக்கிடந்தோம். இரண்டு மணியளவில் கரிகாலன் நவரத்தினம் வந்து சந்திரகாசன் வரமாட்டார் என்று சொல்ல நாங்கள் புறப்பட்டோம். போகும் வழியில் கரிகாலன் சொன்னார், நாளை வீரகேசரி பத்திரிகையில் சந்திரகாசனும் பனாகொடை முகாமுக்கு குட்டிமணி குழுவினரை பார்க்கசென்றார் என்று வரும். அந்த செய்தி பத்திரிகையில் ஏறும் வரையிலேயே எங்களை தாமதப்படுத்திவிட்டு, பத்திரிகை அச்சுக்கு போனபின்னர் வரமறுத்துவிட்டார், என்றும் கூறினார். மேலும் காமினி திசநாயக்கா (அந்நாள் காணி, விவசாய, பெரும் தோட்ட மந்திரி) பனாகொடை முகாமுக்கு அவரை செல்லவேண்டாம் என்று கூறியதின் காரணமாகவே அவர் வரமறுத்ததாகவும் அங்கு பேசப்பட்டது.

அடுத்த நாள் வீரகேசரியில் அவர்களது பெயர்கள் வெளியாகி இருந்ததன. எனது பெயரோ, கே வி தவராஜா, பாக்கியநாதன் அவர்களின் பெயர்கள் பிரசுரமாகவில்லை. பெரிய இடத்து விடயம் என்று நாங்களும் பெரிதாக அலட்டவில்லை.



Read more...

உலகில் அதி உயர் சகிப்புத் தன்மை மிக்க ராணுவம் இலங்கை இராணுவமே! மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண

ரணில் விக்கிரமசிங்க புலிகளுடன் 2002 ல் ஒப்பந்தம் செய்து கொண்டபோது, எமது இராணுவ முகாம்களுக்கு முன்னால் வந்த புலி ஆதரவாளர்கள் சரத்தை கிளப்பி முன்பக்கத்தையும் அவ்வாறே திரும்பி பின்பக்கத்தையும் காட்டியபோதும், இராணுவச் சீருடை அணிந்து, கையிலே துப்பாக்கியுடன் இருந்த எமது படைவீரர்கள் மிகவும் சகிப்புத் தன்மையை கடைப்பிடித்து அரசாங்கம் செய்து கொண்டிருந்த சமாதான ஒப்பந்தத்தை கடைப்பிடித்தனர் என ஒய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

டுபாயில் இலங்கையர்களைச் சந்தித்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் அசமந்த நிலைதொடர்பில் விளக்கமளிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்து பேசுகையில் :

மஹிந்த ராஜபக்ச அவர்களின் திடமான அரசாங்கம் எமக்கிருந்திருக்கா விட்டால் எம்மால் இன்று இலங்கையில் சுதந்திரமாக வாழ முடிந்திருக்காது. பல்வேறு வகையான தாக்குதல்களில் பங்கெடுத்ததன் ஊடாக இவற்றை நான் உணர்ந்துகொண்டுள்ளேன். நாங்கள் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்து புலிகளை முடக்கும் அல்லது முடிக்கும் நிலைக்கு வரும்போது, அரசியல் தலைமைகளிடமிருந்து தாக்குதலை நிறுத்திக்கொண்டு திரும்புமாறு உத்தரவு வரும். பல்வேறுபட்ட இழப்புக்களை மேற்கொண்டு கைப்பற்றியவற்றை விட்டுவிட்டு வெறும் கையுடன் திருப்பியிருக்கின்றோம்.

அதற்கான சிறந்த உதாரணத்தை கூறுகின்றேன். வடமாராட்சி லிபரேஸன் ஒப்பரேசன் இலங்கையிலே பெருமதிப்புக்குரிய இரு ஜெனரல்களான டென்சில் கொப்பேகடு, விஜய விமலரட்ண ஆகியோரது கட்டளையின் கீழ் இடம்பெற்றது. அப்போது இந்திய இராணுவத்தினர் எமது வான்பரப்பினுள் பலாத்காரமாக நுழைந்து பருப்பு வீசினர். அதை தொடர்ந்து எமது தளபதிகளை தொடர்பு கொண்ட அன்றைய ஜனாதிபதி தாக்குதல் நடவடிக்கையை கைவிடுமாறு பணித்தார். அவர் அவ்வாறு செய்ததற்கு இந்தியாவின் அழுத்தம் காரணமாக இருந்தது.

ஆனால் ராஜபக்ச அவர்களின் அரசாங்கத்திற்கும் அவ்வாறான அழுத்தங்கள் இருந்தது, அமெரிக்கா யுத்தத்தை நிறுத்துமாறு அரசாங்கத்தை நிர்பந்தித்தது, அத்துடன் புலிகள் சரணடைவதற்கு தயார் என்றும் அவர்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமே சரணடைவர் என்றும் அரசை சிக்கலில் போட்டது. அவ்வாறான நிலையிலும் ராஜபக்ச அரசாங்கம் நிலைகுலைய வில்லை.

12 ம் திகதி மே மாதம் 2009 ஆண்டு கோட்டபாய ராஜபச்சவிடமிருந்து அவசர அழைப்பு வந்தது. அவர் கமால் இன்னும் எத்தனை நாட்கள் வேண்டும் என்றார். சுமார் 10 நாட்கள் தேவைப்படும் என்றேன். 10 நாட்கள் தரமுடியாது 5 நாட்களில் முடியுங்கள் என்றார். என்ன காரணம் என்றபோது மேற்சொன்ன அழுத்தத்தை கூறினார். அப்போது நீங்கள் அவர்களுக்கு என்ன சொல்லியிருக்கின்றீர்கள் என வினவினேன். நாம் இலங்கைப்படையினரிடம் சரணடையலாம் மூன்றாம் தரப்பிற்கு இடமில்லை என்று சொல்லியிருக்கின்றோம். அவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் நீங்கள் உங்கள் பணியை செய்யுங்கள் என எமக்கு தெளிவான ஆலோசனையை வழங்கினார்.

அழுத்தங்களுக்கு அடிபணியாத தலைமைத்துவம் கிடைத்ததாலேயே எமக்கு புலிகளை ஒழித்துக்கட்ட முடிந்தது என்றார் கமால் குணரட்ண.

Read more...

Monday, November 26, 2018

முன்னாள் பிரதம நீதியரசரின் கணவருக்கு 5 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை.

அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டுக்கு அமைய பிரதீப் காரியவசத்திற்கு 5 வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படும் என தெரிந்தும் தேசிய சேமிப்பு வங்கியின் நிதியை பயன்படுத்தி த பினான்ஸ் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலேயே இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றையதினம் (26) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.

இதன்போது அவருக்கு ரூபா 3 இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது


இவர் முன்னாள் பிரதம நீதியரசர் சிறியாணி பண்டாரநாயகவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

மலேசியாவில் மாரியம்மன் கோவிலருகே கலவரம்! 18 வாகனங்கள் தீக்கிரை! 17 பேர் கைது!

சிலாங்கூர் மாநிலத்தின் சுபாங் ஜெயா வட்டாரத்தில் உள்ள சீ ஃபீல்ட் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவிலில் இன்று நடந்த கலவரம் இனம் தொடர்பான வன்முறை அல்ல என்று காவல்துறை கூறியுள்ளது.

சம்பவத்தில் 18 கார்களுக்கும் 2 மோட்டார்சைக்கிள்களுக்கும் தீ வைக்கப்பட்டது.

காவல்துறைக் கார் மீது கற்கள் வீசப்பட்டதால் அதுவும் சேதமடைந்தது.

கலவரம் நேர்ந்த பகுதிக்கு, காவல்துறை அதிகாரிகள் 700 பேர் அனுப்பிவைக்கப்பட்ட பிறகே அங்கு நிலைமை கட்டுக்குள் வந்தது.

கோவிலை வேறோர் இடத்துக்கு மாற்றுவதன் தொடர்பில் இரு குழுக்களுக்கு இடையே வன்முறை வெடித்ததாகக் காவல்துறையினர் கூறினர்.

இம்மாதம் 22 ஆம் தேதி, தற்போதுள்ள இடத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேறோர் இடத்துக்குக் கோவிலை மாற்றத் திட்டமிடப்பட்டிருந்தது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் அருகே பக்தர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது இன்னொரு குழுவினர் அவர்களைத் தாக்கியதாக மலேசியக் காவல்துறை தெரிவித்துள்ளது.

வன்முறையில் எவரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை.

கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 17 மலேசியர்கள் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

சிலாங்கூர் காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர்க் கூட்டத்தில் உயர் அதிகாரி அதன் தொடர்பான தகவல்களை வெளியிட்டார்.

கைதுசெய்யப்பட்ட 17 பேரில் 6 பேருக்குக் காயம் ஏற்பட்டிருப்பதாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் முகம்மது ஃபாஸி ஹரூன் கூறினார்.

ஒழுங்குமுறை நடவடிக்கையின்போது காவல்துறை அதிகாரி ஒருவருக்கும் காயமேற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கலவரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் அனைத்து தனிநபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

சம்பவத்தின் தொடர்பில் 29 புகார்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டது.

இதற்கிடையே, சம்பவம் தொடர்பில் தனிப்பட்ட காவல்துறை விசாரணை தேவை என்று நான்கு அமைச்சர்களும் துணை அமைச்சரும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.




Read more...

பார்வையாளர்களுக்கு நாளையும் கதவடைக்கின்றது பாராளுமன்று

நாளை (27) இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வில், பாராளுமன்றத்தின் பொதுமக்களுக்கான பார்வையாளர் பகுதி மற்றும் சபாநாயகரின் விசேட விருந்தினர் பார்வையாளர் பகுதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அன்றைய தினம் (27) ஊடகவியலாளருக்கு மாத்திரம் பார்வையாளர் பகுதியில் அனுமதி வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

படைக்கல சேவிதரின் அலுவலகம் குறித்த அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளின் போது பார்வையாளர் பகுதியில் இருந்து கூச்சல் மற்றும் குழப்பங்கள் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (19) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போதும், கடந்த வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போதும் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

சாட்சியங்களுக்கு எதிராக அட்மிரால் விஜேகுணவர்த்தன. நடிவக்கை எடுக்குமாறு சிஐடி பொலிஸ் மா அதிபருக்கு சிபாரிசு.

கொழும்பில காணாமல்போன 11 இளைஞர்களது விடயத்தில் முக்கிய சந்தேக நபராக காணப்படும் நேவி சம்பத் என்பவருக்கு அடைக்கலம் அளித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் ஆர்.பி.செனிவிரத்ன, சிறிலங்கா காவல்துறை மா அதிபரிடம் கோரியுள்ளார்.

குறித்த வழக்கு சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி நிசாந்த சில்வா, விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர் என்று அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன குற்றம்சாட்டியிருந்தார்.

எனினும், அந்தச் குற்றச்சாட்டு பொய்யானது என்று காவல்துறை மா அதிபருக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை அளித்திருந்தனர்.

இந்தநிலையில், முக்கியமான விசாரணை அதிகாரி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, விசாரணைகளில் தலையீடு செய்ய முயன்ற, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மீது பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் செனிவிரத்ன, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு எழுத்து மூலம் பரிந்துரைத்துள்ளார்.

இதேநேரம் குறித்த சம்பவம் தொடர்பில் கடற்படையை சேர்ந்த முக்கிய சாட்சியொருவர் முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன முன்னிலையில் கடற்படையை சேர்ந்தவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடற்படை அதிகாரி லக்சிறி கலகமகே என்பவரே இவ்வாறு தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளார்.

மேலும் கடற்படை அதிகாரி மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதற்கும் முப்படைகளின் பிரதானியின் உதவியாளர்கள் முயன்றுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை கடற்படை தலைமையகத்தில் உள்ள அதிகாரிகள் உணவருந்தும் பகுதியிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த கடற்படை அதிகாரி லக்சிறி கலகமகேயை ரவீந்திர விஜயகுணவர்த்தன எதிர்கொண்டுள்ளார்.

லக்சிறி கலகமகே குறிப்பிட்ட பகுதியில் காணப்படுகின்றார் என்ற தகவல் கிடைத்ததை தொடர்ந்தே ஒய்வு பெற்ற கடற்படை தளபதியான ரவீந்திர விஜயகுணவர்த்தன அங்கு சென்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கலகமகேயை பார்த்ததும் சீற்றத்துடன் முப்படைகளின் பிரதானி அவரை தகாதவார்த்தைகளால் ஏசியுள்ளார்.

அதன் பின்னர் தனது உதவியாளர்களிடம் அவரை அழைத்துவருமாறு உத்தரவிட்டுள்ளார்.

எனினும் முப்படைகளின் பிரதானியுடன் மோதலை தவிர்ப்பதற்காக கலகமகே அந்த இடத்திலிருந்து விலகிச்செல்ல முயன்றவேளை ரவீந்திர விஜயகுணவர்த்தனவின் சகாக்கள் அவரை துரத்தி பிடித்துள்ளனர்.

இதன் போது அவர்கள் கைத்துப்பாக்கியை காண்பித்து கடற்படை அதிகாரியை அச்சுறுத்தியுள்ளனர் இதன் காரணமாக தன்மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெறலாம் என்ற அச்சம் காரணமாக கடற்படை அதிகாரி தனது காலால் கைத்துப்பாக்கியை உதைத்து வீழ்த்திவிட்டு கடற்படை தலைமையகத்திலிருந்து வெளியே தப்பியோடியுள்ளார்.

இதன் போது இடம்பெற்ற சிறிய மோதலின் போது கடற்படை அதிகாரியின் கையடக்க தொலைபேசி தவறி கீழே விழுந்துவிட்டது எனவும் அதனை முப்படையின் பிரதானியின் உதவியாளர்கள் எடுத்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட கடற்படை அதிகாரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு சென்றுள்ளார் எனினும் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியை தொடர்புகொண்ட முப்படைகளின் பிரதானி முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவேண்டாம் என அழுத்தம் கொடுத்துள்ளார்.

எனினும் இந்த அழுத்தங்களிற்கு அடிபணியாத குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதுடன் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக கடற்படை தலைமையகத்திற்கு சென்றுள்ளார்.

முப்படைகளின் பிரதானியின் உத்தரவின் பேரில் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி செல்வதற்கு சிரேஸ்ட கடற்படை அதிகாரிகள் சிலர் தடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read more...

பத்து லட்சம் கையெழுத்து வேட்டையில், மலையகத்தில் கரு ஜெயசூரியவின் உருவப் பொம்மை எரிப்பு

பாராளுமன்ற தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் 10 இலட்சம் கையொப்பங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

வலப்பனை தேர்தல் பிரதேசமான நுவரெலியா, இராகலை நகரில் நேற்று (25) இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது சபாநாயகர் கரு ஜயசூரியவின் உருவ பொம்மைக்கும் தீ மூட்டப்பட்டது.

அமைச்சர் சி.பீ. ரத்னாயக்காவின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், இராகலை நகர பௌத்த ஆலயத்துக்கு அருகில் ஒன்று கூடிய கட்சி ஆதரவாளர்கள் பேரணியாக இராகலை மேல் நகர தொகுதி சந்தியில் ஒன்று கூடினர்.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் சரியான தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்ள உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து பாராளுமன்ற தேர்தலை நடத்தும்படி வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக பதாதைகளையும் ஏந்தி வந்தனர்.

இதனை அடுத்து மேடை அமைக்கப்பட்ட இடத்திற்கு வருகை தந்தவர்கள் அங்கு அமைச்சர் சி.பீ. ரத்னாயக்காவின் உரையை தொடர்ந்து தேர்தலை வலியுறுத்திய மகஜரில் கையொப்பமிடும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது பேரணியில் ஏந்தி வந்த பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவின் உருவ பொம்மைக்கு தீ மூட்டியமை குறிப்பிடத்தக்கது.



(மலையக நிருபர் கிரிஷாந்தன்).

Read more...

யுத்தத்திற்கு உதவி வழங்கியதுபோல், நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கும் உதவி வழங்குங்கள். மகிந்தவின் விசேட கோரிக்கை.

நேற்று பிற்பகல் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றினார் பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ச.

அந்த உரையின் முழுவடிவம் வருமாறு :

நான் கடந்த 15ம் திகதியில் உரையாற்றிய பொழுது சகல கட்சியினரிடமும் கேட்டு கொண்டது பொதுதோர்தல் ஒன்றிற்கு நாம் முகம் கொடுக்க தயாராவோம் என்றே. மக்கள் விடுதலை முன்னனி இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட போதும் ஜ.தே.கட்சியினர் ஜனாதிபதி தேர்தலுக்கே திட்டம் தீட்டுகின்றார்கள். சகல அரசியல் சூழ்நிலையிலும் மையமாக விளங்குவது பாராளுமன்றமே.

2015ம் ஒகஸ்ட் மாதம் நடைப்பெற்ற பொதுத்தேர்தலின் போது எந்த கட்சியும் பெரும்பாண்மையை பெற்றிருக்கவில்லை. ஜ.தே.கட்சி 106 ஆசனங்களையும் ஸ்ரீ.சு.கட்சி 96 ஆசனங்களையும் பெற்றிருந்தனர். இதன் போது ஜ.தே.கட்சியினர் ஸ்ரீ.ல.சு கட்சியுடன் இணைந்தே ஆட்சி அமைத்துக்கொண்டனர்.

கடந்த ஒக்டேபார் 26ம் திகதியில் இருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் அரசாங்கத்திலிருந்து விலகி கொண்டனர். அதிலும் ஐக்கிய தேசிய முன்னணியினர் கட்சியின் சில அமைச்சர்கள் எம்முடன் இணைந்து கொண்டனர். இலங்கை அரசியல் வரலாற்றின் சில விடயங்களை நான் கூற விரும்புகின்றேன். அக்காலத்தில் ஜனாதிபதிகளாக விருந்த டீ.எம்.விஜயதுங்க மற்றும் சந்திரிக்கா அம்மையார் ஆகியோர் அரசாங்கம் அமைக்கும் போது பாராளுமன்றத்தில் பெரும்பாண்மை பெற்ற கட்சியுடன் இணைந்தே ஆட்சி அமைத்தனர். அவ்வகையில் 1994ம் ஆண்டு பொது பெரமுன உடனும் 2001ம் ஆண்டு ஐ.தே.கட்சியுடனும் 2004ம் ஆண்டு ஸ்ரீ.ல.சு.கட்சியுடனும் இணைந்தே ஆட்சி அமைத்தனர். ஜனாதிபதி அவர்களும் அவ்வாறே செயற்பட்டார்.

கடந்த 26ம் திகதி எமது அரசாங்கம் பொறுப்பேற்ற போதும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி நாம் காபந்து அரசாங்கமாக் செயற்படுகிறோம். நாட்டின் இறைமையை காக்கவே பொது தேர்தல் ஒன்று வேண்டும் என்றோம். ஆனாலும் ஏனைய பா.உறுப்பினர்கள் முன்னைய அரசாங்கத்தையே விரும்புகின்றனர்.

நான் இவ்வாறான உரையை ஆற்றுவதற்கான காரணம் என்னிடம் சிலர் எழுப்பிய கேள்வியினாலே. பொது தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்களே இருக்கும் நிலையில் திடிரென அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டது ஏன்? இது தொடர்பாக ஜ.தே.கட்சியினரும் கருத்து வெளியிட்டுள்ளனர்..

இதற்கு விளக்கமளிப்பது எனது கடமையாகும். ஜனாதிபதி ஜ.தே.கட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீதான அதிருப்தியின் காரணமாக அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கூறிய போது நாம் எவ்வாறு மறுப்பது?
நாட்டின் எதிர்காலம் கருதியே அரசாங்கத்தை எம்மிடம் ஒப்படைத்தார். நாட்டின் இன்றைய சூழ்நிலையில் சிந்திக்க வேண்டியது அதிகார போட்டியை அல்ல. நாட்டின் இனம் மற்றும் நாளைய தலைமுறையினரின் தலைவிதியை மட்டுமே.

நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் முன்னால் நிதியமைச்சர் கூறுகையில் அரசாங்க மாற்றமானது பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார். முன்னைய அரசாங்கத்தின் ஸ்திரமற்ற பொருளாதார நிலை காரணமாகவே ஆட்சியை எமக்கு ஒப்படைத்தார். ஜனாதிபதி அவர்கள் எம்மமுடன் இணைந்து செயற்படுகையில் நாம் எவ்வாறு நிதிநிலமைகளை சமநிலையில் வைத்திருந்தோம் என அறிந்திருந்தார். யுத்த காலத்தில் கூட நாம் ஒரு போதும் நிதி நெருக்கடியை சந்தித்தது இல்லை. 2007ம் ஆண்டு உலக உணவு பஞ்சத்தினை எம்மக்களை நாம் அனுபவிக்கவிடவில்லை. 2008ம் ஆண்டு காலப்பகுதியில் உலகத்துக்கே பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதும் கூட எம் மக்களின் பொருளாதார நிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.


பிரச்சினை பாராளுமன்றத்திலேயே காணப்படுகின்றது. ஆகவே, தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதித் தேர்தலை நடாத்த வேண்டிய எவ்விதத் தேவையும் இல்லை. 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எந்தவொரு கட்சியும் தௌிவான பெரும்பான்மையைப் பெறவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களைப் பெற்றதுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 96 ஆசனங்களைப் பெற்றது. இரு கட்சிகளுக்கும் இடையில் 10 ஆசனங்களே வித்தியாசப்பட்டன. ஆகவே, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்றுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமையவே ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழு அரசாங்கத்தில் இருந்து வௌியேறியது. அதன்பின்னர், ஐக்கிய ​தேசியக் கட்சியின் சில உறுப்பினர்களும் எம்முடன் இணைந்துகொண்டனர்.

ஆகவே, இன்று பாராளுமன்றத்தில் உள்ள மிகப்பெரிய குழுவுக்கே நான் தலைமைத்துவம் வழங்குகிறேன். 1994, 2001, 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களின் பின்னர் ஜனாதிபதியாக இருந்த டி.பி. விஜேதுங்க மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் அதிகூடிய உறுப்பினர்கள் கொண்ட குழுவையே ஆட்சியமைக்க அழைத்தனர். அதன்படி 1994 ஆம் ஆண்டு பொதுஜன முன்னணியும் 2001 ஆம் ஆண்டு ஐக்கிய ​தேசியக் கட்சியும் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் ஆட்சி அமைத்தன. தற்போது உயர்நீதிமன்ற நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்தல் நிறைவடையும் வரையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக மாத்திரமே கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு நாட்டில் யுத்தம் ஆரம்பமானபோது பொதுமக்கள், தொழிற்சங்கங்கள், நுகர்வோர், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் யுத்தத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்பட்டனர். அந்த ஒத்துழைப்பின் காரணமாகவே எவராலும் முடிவுக்குக் கொண்டுவரமுடியாத யுத்தத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவந்தோம். ஆகவே, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக யுத்த காலத்தில் வழங்கிய ஒத்துழைப்பைப் போன்று ஒத்துழைப்பு வழங்குமாறு நான் நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமான இறுதி சந்தரப்பம் இதுவாகும். இந்த முயற்சியில் தவறிழைக்கப்பட்டால் கிரேக்கத்திற்கு ஏற்பட்ட நிலைமையே எமது நாட்டிற்கும் ஏற்படும். நாட்டில் தற்போது பொருளாதார இடர்நிலைமை ஏற்பட்டுள்ளதாக கருதியே செயற்பட வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி பொதுமக்கள் மீது அதிக வரியை சுமத்தி அமைச்சர்களுக்கு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து வௌிநாட்டு பயணங்களுக்கு அதிக பணத்தை செலவு செய்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அடுத்த பொதுத்தேர்தலின் பின்னர் அதிகாரத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியுமான வகையில் குறிப்பிடத்தக்க அமைச்சர்களை நாம் நியமிப்போம். அதனை நான் முன்கூட்டியே கூறுகின்றேன். இவை அனைத்துக்கும் முன்பாக நாட்டில் நிலையான அரசாங்கமொன்று இருக்க வேண்டும். அந்த புதிய அரசாங்கத்தில் செலவுகளைக் குறைப்பதற்கு இயன்றளவு நடவடிக்கைகளை எடுப்பேன். மூடிஸ் நிறுவனத்தினால் எமது கடன் தரப்படுத்தல் கீழ் மட்டத்தில் உள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் கூறியுள்ளார். அவ்வாறு செய்யாவிட்டாலே புதுமையானது. 2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாம் அரசாங்கத்தை கையளிக்கும்போது அவையனைத்தும் தரப்படுத்தலில் உயர்மட்டத்திலேயே காணப்பட்டன. 2015 ஆம் ஆண்டின் பின்னரே அது வீழ்ச்சியடைந்தது.

இந்தத் தரப்படுத்தலில் அரசியலும் கூற வேண்டும். 2009 ஆம் ஆண்டு யுத்த வெற்றியின் பின்னர் கடன் தரப்படுத்தில் உயர் மட்டத்திற்கு கொண்டுசெல்ல வேண்டி இருந்தபோதிலும், அவர்கள் எம்மை கீழ் மட்டத்திற்கு கொண்டு சென்றனர். எனினும், வர்த்தகசந்தை தொடர்பில் எமக்கு இருந்த நம்பிக்கை காரணமாக நாம் அதனை ஐந்து சதத்திற்கு கவனத்திற் கொள்ளவில்லை. அவ்வாறான சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்பதினாலேயே ஜனாதிபதி நாட்டை எம்மிடம் கையளித்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு இது குறித்து தெரியும் என்பதினாலேயே தினமும் வௌிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் தூதுவர்களை அழைத்து பொதுத் தேர்தலை நடாத்துவது ஜனநாயக விரோதமான செயற்பாடு என சர்வதேசத்திற்கு பிரசாரம் செய்கின்றனர். பொதுத் தேர்தல் நடைபெற்று எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஜனாதிபதியும் நாமும் இணைந்து உருவாக்கும் அரசாங்கம் மிகவும் பலம் வாய்ந்தது. அது மக்கள் சார்ந்த அரசாங்கம் என்பதை கூறுகின்றேன். நாட்டின் ஸ்திரத் தன்மையை உருவாக்குவதற்காக நடாத்தவிருந்த பொதுத்தேர்தல் பிற்போட்டுள்ளமையால் ஸ்திரமான அரசாங்கம் ஒன்றை உருவாக்க சிறிது காலம் செல்லும். ஆகவே, இந்த காலத்தில் எம்முடன் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

2006 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை மக்கள் சிரமங்களை எதிர்கொள்ளாத வகையில் நாம் செயற்பட்டோம் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி நாம் ஆரம்பித்த இந்தப் பயணத்தின் ஊடாக எரிபொருளின் விலையையும் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையையும் குறைத்து உரமானியத்தை வழங்கி விவசாயத்தை மேம்படுத்துவதற்கு செயற்படுகின்றோம். 2015 ஆம் ஆண்டு உண்பதற்கும் அணிவதற்கும் மக்கள் ஆட்சி மாற்றத்தை உருவாக்கவில்லை என முன்னாள் அமைச்சரவைப் பேச்சாளர் எத்தனை தடவை கூறியிருப்பார். ஜனநாயகத்தை உருவாக்குவதற்காகவே ஆட்சி மாற்றத்தை மக்கள் ஏற்படுத்தியதாக அவர் கூறினார். எனினும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் மக்களுக்கு ஜனநாயகம் கிடைக்கவில்லை. வாக்களிக்கும் உரிமை கிடைக்கவில்லை. உண்பதற்கும் அணிவதற்கும் கிடைக்கவில்லை. அதுவல்லவா இடம்பெற்றது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இருக்கும் இறுதி சந்தர்ப்பம் இதுவாகும். தேர்தலை நடாத்தாமல் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருந்துகொண்டு நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டுசெல்லும் சக்திகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தோற்கடித்து, இந்த நாட்டை சரியான பாதைக்குக் கொண்டுசெல்வோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

Read more...

சிரியாவில் மீண்டும் ரஷ்யா ரசாயன தாக்குதல்: பொது மக்கள் பாதிப்பு

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தியதில் பொது மக்கள் பலர் சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ பகுதியின் ஒரு சில இடங்களில் சிரியா அரசுப் படைகள் மற்றும் ரஷ்யா ரசாயன வாயு தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள், பெண்கள் என பொது மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் ரஷ்யா தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கபப்ட்டுள்ளது. தீவரவாதிகளின் கட்டுப் பாட்டு பகுதியில்தான் நாங்கள் தாக்குதல் நடத்தினோம் என்றும். பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஊடகங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் பொது மக்கள் பலரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சிகள் இடப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் கடந்த வருடம் உள் நாட்டுப் போர் உச்சக் கட்டத்தில் இருந்தபோது, ரஷ்யா நடத்திய ரசாயன தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் பலியாகினர். பலர் சுவாசத்தில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்த நிலையில் மீண்டும் ஒரு ரசாயன தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது.

சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் 2014 -ம் ஆண்டு முதல் சண்டையிட்டு வருகிறார்கள். சுமார் ஆறு ஆண்டுகளாக நடக்கும் சிரிய உள்நாட்டுப் போரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யாவும் ஆதரவு அளித்து வருகின்றன.

இதில் கிளர்ச்சியாளர்களின் வசமிருந்த பெரும்பாலான பகுதிகளை சிரியா அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளன.


Read more...

1000 ரூபா கோரிய மனித சங்கிலி போரட்டம் வெற்றியாம்! கூறுகின்றார் ஆறுமுகன் தொண்டமான் .

மலையக பெருந்தோட்ட மக்கள் அடிப்படை சம்பளமாக 1000 வழங்குமாறு கோரி மலையகம் முழுவதும் முன்னெடுத்துவந்த மனித சங்கிலி போராட்டமானது வெற்றியளித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் மலைநாட்டு புதியகிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

26.11.2018. இன்று காலை மலைகபகுதிகளில் தோட்ட தொழிலாளர்களால் முன்னெடுக்கபட்டுவரும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதிகளுக்கு சென்ற அவர் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில் :

இப்போராட்டம் கம்பணி காரர்களுக்குக்கும் அரசிற்கும் பெரும் அழுத்தம் கொடுப்பதாக அமைந்திருந்தது.

இப்போராட்டத்தின் நிமிர்த்தமே இன்று அரசு என்னை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. அப்பேச்சுவார்த்தையில் உரிய பதில் கிடைக்காவிட்டால் போராட்டம் தொடரும் என்பதை நான் அவர்களுக்கு தெரியப்படுத்துவேன்.


(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

Read more...

மரணங்களுக்கு பொறுப்பானவனின் பிறந்தநாளை கொண்டாடும் பெருவிழா.

இந்த மாதம் பிரபாகரனின் பிறந்த நாளும், மறுநாள் பிரபாகரனின் சகாக்களின் மரணங்களை துக்க தினமாக அனுசரிக்கப்படும் ஒரு விசித்திரமான மாதமாகும். .

இதில் அதிசயம் என்னவென்றால் பிரபாகரனின் பிறப்பே அந்த மரணித்தவர்களின் மரணங்களுக்கு பொறுப்பு என்பதாக தெரியப்படுத்துகிறது. எனவே பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டு மறுநாள். துக்கம் அனுஷ்டிக்கிறார்கள்.

இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியபின் 1981 இல் மாவட்ட சபை தேர்தலின்போது தியாகராசா கொலை, யாழ் நூலகம் அழிவுக்கு காரணமாக அமைந்தது. 1982இல் வவுனியாவில் விமானப் படையினர்மீது நடத்திய தாக்குதல் ஒரு சிறிய இனக் கலவரமாக வெடித்து திருகோணமலை வரை பரவியது. பலர் கொல்லப்பட்டனர். இதற்கு பொறுப்பாக இருந்த புளொட் அமைப்பு மக்கள் இழப்பை தவிர்க்கு முகமாக தாக்குதல் நடாத்துவதை நிறுத்துவதாக அறிவித்தது.

1985 இல் ரெலோ சாவகச்சேரி பொலிஸ் நிலையம், மாங்குளம் ரயில் தாக்குதல்களை நடாத்தியது. ஆனால் அதன் பின்விளைவுகள் மக்களை பாதிக்காதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்தே நடாத்தியது. மக்களைப் பற்றிய ஒரு அக்கறையை வெற்றியோடு சேர்த்தே காட்டினார்கள்.

பிரபாகரன் தலைமையிலான புலிகள் அமைப்பு என்றைக்குமே மக்கள் உயிர்கள் மேல் அக்கறை கொண்டதில்லை. மக்களைப் பற்றி கவலைப் பட்டதும் இல்லை. தம்மைப் பாதுகாக்க மக்களை அரணாக பாவித்தார்கள்.

1982 கந்தர் மடம் பாடசாலையில் இராணுவம் மீது புலிகள் நடாத்திய தாக்குதலின் விளைவாக அயலில் உள்ள ஏழைகளின் வீடுகளை இராணுவம் கொழுத்தியது. அந்த ஏழைகளுக்கு பல்க்லைக் கழக மாணவர்களே உதவினார்கள். புலிகள் தமது கொலைகளை எண்ணி சந்தோசப்பட்டனர்.

1983 இல் 13 இராணுவத்தினர் படுகொலையின் எதிரொலியாக யாழ் நகரத்தில் 200 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். நாடே இனக் கலவரத்தில் மூழ்கியது. வெலிக்கடை சிறையில் 52 கைதிகள் கொல்லப்பட்டனர். இதற்காக புலிகள் வருந்தியது இல்லை.

அதைத் தொடர்ந்து பல இடங்களில் தாக்குதல்களை நடாத்தினார்கள். பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். கிழக்கே பல தமிழ்க் கிராமங்களே காணாமல் போனது. அதைப் பற்றி எல்லாம் புலிகளோ பிரபாகரனோ கவலைப் படவில்லை. இறந்து போன இராணுவ, பொலிஸ் உடல்களை கணக்குப் போட்டு சந்தோசம் கொண்டாடினார்கள்.

ஒரு இராணுவ வீரனைக் கொல்ல பத்து, நூறு என அப்பாவிப் பொதுமக்களை பலிக்கடாக்களாக கொடுத்தார்கள். பல கிராமங்களும் விலையாக கொடுக்கப்பட்டது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல கொல்லப்பட்ட இராணவ எண்ணிக்கைகளை தமது வீரமாக காட்டுவார்கள்.அதன் எதிர் வினையாக பலியான மக்கள் உடல்களை படம் பிடித்து அனுதாபமும் தேடுவார்கள். இரண்டு மரணங்களுக்கும் புலிகளே பொறுப்பு என்பதை மக்களும் உணருவது இல்லை.

மற்ற அமைப்புகள் தாக்குதல் நடாத்தினால் அதை ஒரு சவாலாக கருதி இன்னொரு தாக்குதல் நடாத்துவார்கள். அங்கே மக்களைப் பற்றிய கவலைகளே இல்லை.

மேலும் தாக்குதல்களை தொடர வழியில்லாத இயலாமை காரணமாக சக அமைப்புகள்மேல் தாக்குதல்களை நடாத்தினார்கள். சிங்கள இஸ்லாமிய அப்பாவிகள் மேல் தாக்குதல்களை நடாத்தினார்கள்.

தமது நோக்கத்தை நிறைவேற்ற தமது உயிர்களை தக்க வைக்க பொதுமக்களை கேடயமாக்கினார்கள். தம்மை நியாயப்படுத்த பொதுமக்களை அழிவுக்குத் தள்ளினார்கள். எந்தவொரு சூழ்நிலையிலும் மக்கள் உயிர்களைப் பற்றி கவலைப்படவில்லை.

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் பலியான அத்தனை மரணங்களுக்கும் புலிகளும் பிரபாகரனுமே பொறுப்பாளிகள்.இவர்கள் நினைத்திருந்தால் பல்லாயிரக்கணக்கான மக்களின் மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்.

அரச படைகள் நடாத்திய அராஜகங்கள் எல்லாம் புலிகளின் செயற்பாட்டின் எதிர்வினைகளே. எனவே முதல் குற்றவாளிகள் புலிகளே.அதன் தலைவர் பிரபாகரனே குற்றவாளி.

இது மரணங்களை நினைவு கூரும் மாதம்.அந்த மரணங்களுக்கு காரணமான பிரபாகரன் பிறந்த நாளைக் கொண்டாடும் மாதம்.பிரபாகரனே இத்தனை அழிவுகளுக்கும் பொறுப்பாளி.

Read more...

Sunday, November 25, 2018

ரணிலின் நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்ற மோசடிகளை கண்டுபிடிக்க விசேட ஆணைக்குழு அமைக்கின்றார் மைத்திரி.

ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் இடம்பெற்ற அனைத்து மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலும் ஆராய்ந்து பார்ப்பதற்காக புதிய ஆணைக்குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 26ம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்ததன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலைமையை அடுத்து முதன் முறையாக இலங்கையிலிருந்து வெளிநாடுகளைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் ஊடகங்களின் செய்தியாளர்களை சந்தித்தபோதே ஜனாதிபதி இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்.

இந்த ஆணைக்குழுவானது பிணைமுறி மோசடியை விடவும் மிகமோசமான மோசடியை கண்டுபிடிக்கும் என்பதில் தனக்கு நிச்சயமுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பு கொழும்பு 7 உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

சட்டரீதியாக பெரும்பான்மை நிரூபிக்கப்படினும் ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன்

தன்னுடைய காலத்தில் மீண்டும் ஒருபோதும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் இடம்பெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து வெளியாகும் பிரபல ஆங்கில வார இதழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இன்று இதேகருத்தை வெளிப்படுத்தியிருந்த ஜனாதிபதி சிறிசேன வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடமும் தனது விடாப்பிடி நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

'ஐக்கிய தேசிய முன்னணிக்கு பெரும்பான்மை உள்ளதாக சட்டபூர்வமாக நிரூபிக்கப்படினும் கூட ரணில் விக்கிரமசிங்கவை என்னிடம் கூட்டிக்கொண்டுவரவேண்டாம் என அவர்களிடம் தெளிவாகக் கூறிவிட்டேன்.'என சிறிசேன உறுதிபடக்கூறியுள்ளார்.

ரணில் நாட்டை நேசிக்கவில்லை

பாரிய மோசடிகளை புரிந்தமைக்கு ரணிலும் அவருக்கு கீழிருந்த சிலருமே காரணம் என ஜனாதிபதி இந்தச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளார். ' அர்ஜுன் மகேந்திரன் எங்கிருக்கின்றார் என்பது அவருக்கு தெரியும்.

ஆனால் அவர் இன்னமும் அதனை வெளிப்படுத்தவில்லை. அவர் நாட்டை நேசிக்கவில்லை. இலங்கை மிக மோசமான நிலையில் இருந்தது' என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

எந்தக்கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடையாது

நாடாளுமன்றத்தில் தற்போது எந்த கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடையாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். பொதுஜன பெரமுணவிற்கோ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கோ ஐக்கியதேசியக்கட்சிக்கோ தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கோ அன்றேல் ஜேவிபிக்கோ தெளிவான பெரும்பான்மை கிடையாது .

எந்தக் கட்சியும் தம்மிடம் 113 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக கூறமுடியாது. எந்தவொரு அரசாங்கமாக இருந்தாலும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Read more...

மக்களை ஏமாற்றி தியாகி பட்டம் எடுப்பதை விட துரோகி பட்டம் மேலானது.

மக்களை ஏமாற்றி, கொலை செய்து தியாகி பட்டம் எடுப்பதை விட மக்களுக்காகப் பணியாற்றி துரோகி பட்டம் சூடிக்கொள்வதை மேலானதாக நினைப்பதாக கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று வருடகாலம் எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்தனால் தமிழ் மக்களுக்காக எதனையும் பெற்றுக் கொள்ளாது ஏமாற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு- இலுப்படிச்சேனை பிரதேசத்தில் புதிதாக விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திலே புனர்வாழ்வு என்ற அடிப்படையில் 11 ஆயிரத்து 900 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திலே 217 அரசியல் கைதிகளில் நூறு பேர் மாத்திரமே விடுதலை செய்யப்பட்டனர். எஞ்சிய 117 பேரையும் விடுதலை செய்வதற்காக எத்தனை ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம் நடாத்தினோம். எதனையும் சாதிக்க முடியவில்லை.

மஹிந்த ராஜபக்ஷ அரசு காலத்தில் 2015 மார்ச் 31 ஆம் திகதியன்று 52 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் நாங்கள் ஆதரவு வழங்கிய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் மூன்றரை வருடகாலத்தில் முந்நூறு பட்டதாரிகளுக்குக் கூட வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.

2015, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்க்கட்சியிலிருந்து கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கிய போதெல்லாம் எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு ஆளுங்கட்சியின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு எவ்வளவு பணம் பெற்றுக் கொண்டீர்கள் என மக்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அவ்வாறிருக்கையில் அனைத்திற்கும் மகுடம் வைத்தது போல ரணில் விக்ரம சிங்கவைப் பாதுகாப்பதற்காகவும் கைகளை உயர்த்தினோம். ஆனால் எமது மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை.

தற்போது யார் ஆட்சியமைப்பது என்ற பலப்பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிறுபான்மைக் கட்சிகள் தமது சமூகத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

எது எவ்வாறிருப்பினும் மட்டக்களப்பிலே எதிர்காலத்தில் உரிமையும் நாங்கள் தான் அபிவிருத்தியும் நாங்கள் தான் என்பதை அனைவரும் நினைவிற் கொள்ள வேண்டும். அபிவிருத்தியும் உரிமையும் புகையிரத தண்டவாளங்கள் போல சமாந்தரமாக இருக்க வேண்டும்

அந்தவகையில் எதிர்வரும் காலத்தில் தேர்தலின் போது தமிழ் சமூகத்தில் பிரதிநிதியொருவரைத் தெரிவு செய்வதென்றால் உரிமைகளைப் பெறுவதற்காக களமிறங்கிப் போராடுபவர்கள். அதேபோன்று அதேவேகத்தில் அபிவிருத்திக்காகவும் போராடக்கூடிய தகுதிகளைக் கொண்டவர்களையே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் அபிவிருத்திக்காகப் போராடி எந்த உரிமையை இழந்திருக்கிறார்கள் என்ற கேள்வி உள்ளது. ஆனால் தமிழ் சமூகம் உரிமைக்காகப் போராடி உரிமையையும் பெறவில்லை. அபிவிருத்தியையும் அடையவில்லை.

தற்போது அரசாங்கம் ஒரு தளம்பல் நிலையில் உள்ள சந்தர்ப்பத்தில் பிரதானமான 17 அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளேன். இறைவனின் அருளால் எஞ்சியுள்ள ஒரு வருடமும் பத்து மாதங்களுக்கும் கிழக்கு அபிவிருத்தி என்ற எனது அமைச்சு தொடருமென்றால் தமிழ் சமூகம் அரசியலில் கடந்த முப்பது வருடங்கள் மனதில் சுமந்திருக்கும் அபிலாசைகளை பூர்த்தி செய்து காட்டுவேன் என்று சவாலுடன் கூறினார்.

(மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்)

Read more...

புலனாய்வுப் பிரிவு உருவாக்கிய போலிப் புலிகள் அமைப்பு. போட்டுடைக்கின்றார் விமல் வீரவன்ச

புனர்வாழ்விலிருந்து வெளியேறிய புலி உறுப்பினர்களை கொண்டு புலனாய்வுப் பிரிவினர் ஒரு போலிப் புலிகள் அமைப்பை உருவாக்கினர் என்றும் அவ்வாறு அவர்கள் அவ்வமைப்பை உருவாக்கியதன் நோக்கம் தொடர்ந்தும் புலிக்காச்சல் இருக்கின்றவர்களை அடையாளம் கண்டு கொள்வதாகும் என்றும் களனிப்பிரதேசத்தில் விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது தெரிவித்துள்ளார் விமல்வீரவன்ச-

தொடர்ந்து அங்கு அவர் கூறுகையில்:

அவ்வாறு செயற்பட்டதன் ஊடாக புலிகள் மீண்டும் சக்திபெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களை இனம் கண்டு கொண்டார்கள். அவ்வாறே புலம்பெயர் தேசத்தலிருந்து கொண்டு இங்கு புலிகளமைப்பை உருவாக்க நினைக்கின்றவர்களையும் இனம் கண்டு கொண்டார்கள்.

இருந்தபோதும், புதிய நடைமுறைகளின் நிமித்தம் இராணுவத்தினருக்கு கைது செய்யும் அதிகாரம் தற்போது இல்லை. எனவே அவர்கள் பாதுகாப்பு சபைக்கு இந்த விடயத்தை தெரியப்படுத்தினார்கள். பாதுகாப்பு சபை இவ்விடயத்தை பங்கரவாத ஒழிப்பு பிரிவின் இயக்குனர் நாலக டி சில்வாவிற்கு தெரியப்படுத்தினர்.

அவ்விடயம் நாலக டி சில்வாவிற்கு வழங்கப்பட்டு ஒரு வாரத்தில் இவ்விடயத்தினை மேற்கொண்டிருந்த புலனாய்வு அதிகாரிகளின் பெயர் விபரம் பத்திரிகையில் வெளியாகியிருந்தது.

Read more...

Saturday, November 24, 2018

தனது மகள் எழுதிய புத்தகத்தை விமர்சிப்பவர்களுக்கு தான் ஒரு புத்தகத்தை வெளியிடப்போறாராம் மைத்திரி.

பாராளுமன்ற அமர்வில் தான் கலந்து கொள்ளாத போது தன்னை பற்றியும் தன் மகளால் எழுதப்பட்ட நூலினை விமர்சித்தமையானது அநாகரிகமானது என்று குறிப்பிட்டுள்ள ஜனாபதிபதி அதை விமர்சிப்பவர்களுக்காக தான் ஒரு புத்தகத்தை எதிர்வரும் ஜனவரியில் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையினால் நடத்தப்பட்ட விருது வழங்கும் விழாவில்(23) பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போது மேற்கண்டவாறு கூறிய அவர் தொடர்ந்து பேசுகையில் :

எனது அரசியல் பயணத்தின் போது நான் பல தடைகளை கடந்தே இன்று இந்நிலையில் உள்ளேன்.

ரணிலுடன் வெற்றியளிக்காத அரசியல் பயணம் எனும் நூலை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிடவுள்ளேன். பாராளுமன்றத்தில் இல்லாத என்னை அவர்களின் உரைகளின் ஊடாக விளையாட்டுப் பொருளாக்கியுள்ளள்ளனர். எனது மகள் எழுதிய 'ஜனாதிபதி தாத்தா' எனும் நூல் பாராளுமன்றத்தில் பேசு பொருளாகியுள்ளனர்.

2015 ஜனவரி 08ஆம் திகதி பொது ஆபேட்சகராக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்வந்து தான் மேற்கொண்டது அரசியலில் ஒரு எதிர்நீச்சலாகும் என்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இன்று நாட்டுக்கு வேண்டாத அனைத்து சக்திகளையும் நீக்கி முன்னெடுத்திருக்கும் இந்த நிகழ்ச்சித் திட்டமும் அரசியலில் ஒரு எதிர்நீச்சலாகும் எனக் குறிப்பிட்டார்.

இன்று தன்னை பிழையாக காணும் அனைவரும் நாளை தன்னை சரியான ஒரு தலைவர் என புரிந்து கொள்வார்கள் என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். அத்துடன் தன்னை கொலை செய்யும் சதி முயற்சி சம்பந்தமான பல தகவல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியாகும் என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாட்டின் அநீதி லஞ்சம் ஊழல் அதிகார துஸ்பியோகம் ஆகியவற்றிற்கு எதிராக போராடுவதனை தான் ஒரு போதும் நிறுத்தபோவதில்லை. இம் முயற்சியின் போது தனது பதவி அல்லது தனது உயிர் இரண்டில் ஒன்று மட்டுமே இழக்க நேரிடும். ஆனால் இச் சவால்களைக் கண்டு பின் வாங்க போவதில்லை.

Read more...

தேசத்தில் என்ன மாற்றம் நேர்ந்தாலும் தேச நலனே முஸ்லிம்களின் இலக்காக இருக்க வேண்டும். M.T.M.Rizvi

ஒரு முஸ்லிமை பொறுத்த வரையில் அவனைச் சுற்றி நடக்கின்ற எந்த மாற்றங்களும் அவனது வாழ்வில் எவ்வித சலனங்களையும் சஞ்சலங்களையும் ஏற்படுத்துவிடக்கூடாது. அவனைச் சுற்றி நடப்பவைகள் அனைத்தையும் தான் வாழும் தேச நலனுக்குச் சாதகமானதாக மாற்றிட பழகிக்கொள்ள வேண்டும்.

“தேச நலன்” என்பது தான் வாழும் நாட்டின் அரசியல், பொருளாதாரம், அதன் பாதுகாப்பு இத்தனையையும் மிகச்சரியாகப் பேனுவதற்கும், உறுதிப்படுத்துவதற்கும் எத்தகைய அம்சங்கள் தேவையோ அவைகளை மேற்கொள்வது தேச நலன் எனலாம். இது அத்தேசத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனினதும் உணர்வுகளுடன் ஒன்றித்திருக்க வேண்டிய பண்பாகும். “நாம் இலங்கையர்” என்ற கொள்கைதான் எம்மை இத்தேசத்தின் பற்றாளர்களாகவும் பங்காளியாகவும் அடையாளப்படுத்துகின்றது என்பதுடன், நாட்டின் பொருளாதாரம், அரசியல், பாதுகாப்பு, அதன் அபிவிருத்தி, என்ற அடிப்படை விடயங்களில் இனம், மதம், மொழி வேறுபாடுகள் கடந்து நாம் பங்களிப்புச் செய்யும் மன நிலையையும் கூட தோற்றுவிக்கிறது.

தேச நலன் இன்று பேசப்பட வேண்டிய, உரையாடப்பட வேண்டிய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது என்ற வகையில் இக்கட்டுரை பொருத்தமாக அமையும் என நம்புகின்றேன்.

இலங்கை பண்மைத்துவப் பண்புகள், கொள்கைகள், நம்பிக்கைகளை உடைய மக்களைக் கொண்டதோர் தேசமாகும். அப்பன்மைத்துவ நிலைகள் தேச நலனில் எத்தகைய பாதிப்புகளையும் ஏற்படுத்தி விடக்கூடாது. தேச நலன் பேனுவது என்பது எல்லோர்க்கும் பொதுவானது. ஆள்பவர்களுக்கும், ஆளப்படுபவர்களுக்கும்தான் அதுபற்றிய அறிவும் தௌிவும் காலத்தின் கட்டாயமாகும். அந்த வகையில் தேச நலனை மாத்திரம் கருத்தில் கொள்ளும் மனிதர்களின் செயற்பாடுகள் எப்படி அமையப்பெற்றிருக்க வேண்டும் என்பதை அடையாளப்டுத்தும் கட்டுரையாயகக் கூட இதனைப்பார்ககலாம்.

01. “தேச நலன்” என்பதற்கான முதன்மை அம்சம்தான் தனது தேசத்தில் அநீதியும், அக்கிரமும் தலைவிரித்தாடும் பொழுது அதற்கு எதிராக குரல் கொடுப்பதும், தீமைக்கு எதிரான போராட்டத்தில் கை கோர்ப்பதுமாகும். அத்தோடு நாட்டின் நலனுக்குப் பங்களிப்புச் செய்வதும் இன்றியமையாததும், ஈமானிய மற்றும் சமூக உணர்வூமாகும்.

“எக்காரியம் நல்லதாகவும், இறையச்சத்திற்கு உரியதாகவும் உள்ளதோ அதில் எல்லோருடனும் ஒத்துழையுங்கள், உதவுங்கள். எவை பாவமானதாகவும், வரம்பு கடந்ததாகவும் உள்ளதோ அதில் எவருடனும் ஒத்துழையாதீர்கள். மேலும் இறைவனை அஞ்சாதவர்களுக்கு நிச்சயமாக அவனுடைய தண்டனை மிகக்கடுமையானது.” என அல்குர்ஆன் எப்படியான விடயங்களுக்கு ஒரு முஸ்லிம் ஒத்துழைக்க வேண்டும், எத்தகைய விடயங்களில் விலகி நிற்க வேண்டும் என்பதை தௌிவாக வழிகாட்டுகிறது.

அதாவது தான் வாழும் தேசத்தில் நன்மைகளை வாழவைக்கவும் தீமைகளை ஒழிக்கவும் ஒன்றுபடுவதே மனிதப்பண்பாகும்.

ஆரம்ப காலத்தில் சிரியாவினுடைய ஒரு மாகாணமாக இருந்த ஹிம்ஸ் பிரசேத்திற்கு ஆளுணராகச் செயற்பட்ட உமைர் (ரழி) என்ற நபித்தோழர் தனது தேச மக்கள் பிரதிநிதிகளை நோக்கியாற்றியதோர் உரையில் “இஸ்லாம் என்பது உறுதியான வாயிலைக்கொண்டதோர் கோட்டையாகும். கோட்டை என்பதன் கருத்து நீதியாகும். உறுதியான வாயில் என்பது உரிமைகளாகும். கோட்டை தகர்க்கப்பட்டு வாயில் உடைக்கப்பட்டால் இந்த மார்க்கம் வெற்றி கொள்ளப்பட்டு விடும். மக்களின் பிரதிநிதிகளான அதிகாரிகள் உறுதியாக இருக்கும் வரை இஸ்லாத்தின் கொள்கைகள் பாதுகாப்பாக இருக்கும். அதிகாரிகளின் உறுதி என்பது தேசத்தில் நீதியை நிலைநாட்டுவதும் மக்களிடையே உரிமைகளைப்பெற்றுக் கொடுப்பதிலும்தான் உள்ளது.” எனக் குறிப்பிட்டார். இது எமது முஸ்லிம் சமூக பிரதிநிதிகளுக்கு நல்லதோர் படிப்பினையை தருகிறது. அதாவது மக்களது உரிமைகளை பேணுதல், நீதியாக நடந்து கொள்ளுதல் ஓர் அரசாங்கத்தின் பொறுப்புள்ள அதிகாரிகளின் கடமை என்பதை இது வழியுறுத்துகின்றது. தேச நலன் என்பது சமூக நீதி பேணுவதும், உரிமைகளை வென்றெடுப்பதுமாகும் என்பதைக் கற்றுத்தருகிறது.

02. “தேச நலன்” என்ற எண்ணக்கருவின் மற்றுமொரு முக்கிய விடயம்தான் ஊழலை ஒழிக்கப் பாடுபடுவதாகும். ஒரு தேசத்தின் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்புக்குள்ளாக்குகின்ற காரணிகளுள் ஊழலே முதலிடம் வகிப்பதாக பொருளியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஒரு அரச அதிகாரி தன் கடமையை செய்யவோ அல்லது செய்யாமல் இருக்கவோ ஒரு குறிப்பிட்ட பணியில் சாதகமாக புரியவோ அல்லது பாதகமாக செய்யவோ சட்டப்படியான சம்பளம் தவிர்ந்த பணத்தையோ அல்லது பொருளையோ பெறுதல் அல்லது ஒப்புக்கொள்ளுதல் ஊழலாகும். ஒரு நபரோ அல்லது பலரோ ஓர் அரச ஊழியரை, பிரதிநிதியை ஒரு குறிப்பிட்ட கடமையை செய்ய அல்லது செய்யவிடாது தடுக்க அவர்களுக்கு லஞ்சம் வழங்குவதும் அல்லது பெறுவதும் ஊழலாகும்.

இந்த ஊழல் செயற்பாட்டில் இத்தேச அரசியல் பிரதிநிதிகள் கூட விதிவிலகில்லை. கட்சித்தாவல், பாராளுமன்ற ஸ்தீரத்தை உறுதிப்படுத்தல், பதவி உத்தியோகங்களை பெற்றுக்கொடுத்தல், அநீதியான அங்கீகாரங்களை பெற்றுக்கொடுத்தல் என நீண்ட நெடிய பட்டியல் உண்டு. இதனை எமது தேசத்தின் ஜனாதிபதி அவர்கள் கூட பாராளுமன்றத்தை தான் கலைப்பதற்கான முதன்மைக் காரணிகளுல் ஒன்றாக பாராளுமன்ற உறுப்பினர்களின் விலைபோகும் நிலைதான் எனக் கூறியுள்ளார். ஜனாதிபதியின் இக் கருத்து இத்தேசத்தின் ஊழல் நிலைமையை உறுதிப்படுத்தி நிற்கிறது. எனவே, இத்தேசம் தூய்மை பெற உழல் ஒழிக்கப்பட வேண்டும். அதில் பங்கேற்பது தான் தேச நலனாகும்.

இஸ்லாமிய சாம்ராச்சியத்தின் ஜனாதிபதி உமர் (ரழி) நல்லாட்சியின் முன்னோடி. ஒரு முறை ஒருவர் இரண்டு தலையணைகளை உமரின் (ரழி) மனைவியிடம் அன்பளிப்பாக கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். தன் வீடு சென்ற உமர் அரசவையில் அரசர் சாய்ந்து அமர்கின்ற மாதிரியான தலையணைகளை அங்கு காண்கிறார். தன் மணைவியிடம் இவை எங்கிருந்து எமது வீட்டில் ? என வினவினார். இதை இன்னார் நமக்கு அன்பளிப்பாக தந்து சென்றார் என மனைவி கூறவே “அல்லாஹ் அவருடன் போரிடுவானாக” என கோபமாக கூறிவிட்டு. அந்த நபர் தனக்கான ஒரு தேவையை நிறைவேற்றவேண்டி என்னிடம் வந்தார் நான் அதனை அனுமதிக்கவில்லை. ஆதலால், என் மனைவியின் சிபாரிசை எதிர்பார்த்து இதனை இங்கு உம்மிடம் அன்பளிப்பு என்ற பெயரில் தந்துள்ளார் என உமர் கூறிவிட்டு, அத்தலையணைகளை மனைவியிடம் இருந்து பரித்தெடுத்துக் கொண்டு சென்று இரண்டையும் முஹாஜிர் மற்றும் அன்சாரி பெண்கள் இருவருக்கு அன்பளிப்பாக கொடுத்துவிட்டார். (ஆதாரம் பைஹகி)

அதுபோன்று கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் உமையா ஆட்சிக்கால நேர்மை மிக்க ஜனாதிபதி. இவரது அவைக்கு ஒரு தடவை ஆப்பிள் பழங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டது. ஆப்பிள் சாப்பிட வேண்டுமென்ற ஆவல் அவருக்கு இருந்தும் கூட கலீபா அவர்கள் அதில் ஒன்றையேனும் எடுக்காது மறுத்துவிடுகிறார். ஏன் கலீபா அவர்களே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் இதுபோன்று அப்பளிப்புகள் வந்தபொழுது வாங்கி இருக்கின்றார்களே என்று கேட்டபொழுது உண்மைதான் ஆனாலும், இன்று என்னைப்போன்ற மக்கள் பிரதிநிதியான அரச ஊழியனுக்கு வழங்கப்படுகின்ற எல்லா அன்பளிப்புகளுமே யாதோ ஒருவரால் தன் சொந்தத் தேவையை நிறைவேற்ற முன்வைத்துத்தரப்படுகின்ற இலஞ்சமே ஆகும். எனவே இவை வேண்டாம் அதனை திருப்பி அனுப்பிவையுங்கள் என உத்தரவிட்டார்.

சாய்ந்து அமர உதவும் சாதாரண தலையணையாலும், ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்து உண்பதாலும் என்னதான் நடந்துவிடப்போகிறது. ஏன நினைக்கும் இக்காலத்தில் எமது அரசியல் பிரதிநிதிகள், சமூகத் தலைவர்கள் இதிலிருந்து பாடமும் படிப்பினையும் பெற வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அப்பளிப்புகளுக்குக் கூட அடிமையாகாத மனிதர்களாக வாழ வேண்டும்.நேர்மை, வாய்மை, சேவை மணப்பான்மைகளோடு செயற்படவேண்டிய பிரதிநிதிகள் ஒரு பொதும் இலஞ்ச ஊழல் எனும் கறைகளால் மாசுபட்டுவிடக் கூடாது.

03. தேச நலன் எண்ணக்கருவின் பிரிதொரு விடயம்தான் தேசத்தின் பாதுகாப்பு, அமைதி, கட்டுப்பாடு இவைகளில் அதிகூடிய கவனம் செலுத்துவதாகும். அல்-குர்ஆன் துல்கர்னைன் என்றதோர் மனிதரைப்பேசுகின்றது. அவர் மலைப்பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு தேசத்தின் சமூகத்தை சந்திக்கின்றார். அச்சமூகம் யஃஜுஜு மஃஜுஜு என்ற சாரார்களால் பெரும் தொல்லைகளுக்கு ஆற்பட்டு தமது பாதுகாப்பு, அமைதி, நிம்மதி அத்தனையையும் இலந்து காணப்பட்டனர்.

இதற்கான தீர்வினை பெற்றுத்தர துல்கர்ணைனை அவர்கள் வேண்டி நின்றனர். அவரோ அச்சமூகத்தின் மீது கொண்ட அன்பினாலும், தான் பெற்றிருந்த இறை அருள் நிறைந்த திறமையினாலும், அம்மக்களின் ஒத்துழைப்பையும் திரட்டி, குறித்த பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்தார். (18:92-98). திறன்கொண்ட மனிதர்கள், தான் சந்திக்கும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பது என்பது தேசத்தின் நலனின் அவருக்குறிய அக்கறையை புலப்படுத்தும். ஒரு தேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதும் இதேச மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதும் அத்தேச நலனில் அக்கறைமிக்க பிரதிநிதிகளின் தலையாய கடமை என்பதை இது உணர்த்துகிறது.

04. “தேச நலன்” எண்ணக்கருவின் மற்றுமொரு அம்சமாக தேசத்தின் பொருளாதாரம் அதன் அபிவிருத்தியில் சுய நலமில்லாமல் பங்கெடுப்பதும் ஓர் அம்சமாகும்.

யூஸூப் (அலை) என்றதோர் இறைத்தூதர் அவர் செய்யாததோர் தவருக்காக சிறையில் இடப்படுகிறார். ஒரு நிரபராதியின் சிறைவாசம் அது. அது அவரை தன் தேசநலனில் வெறுப்புக்கொள்ளச் செய்யவில்லை.

தன் தேச மன்னன் ஓர் கனவு காண்கிறார். அக்கனவுக்கான விளக்கத்தை சிறையில் இருந்த யூஸூபிடம் வினவப்படுகிறது. அதற்கான விளக்கத்தை யூஸூப் “எமது தேசத்தில் ஏற்படப்போகிற பஞ்சம், பொருளாதார நெருக்கடி அதற்காக செய்யப்படவேண்டிய முன் ஏற்பாடுகள் குறித்து என்ன செய்ய வேண்டும் என்பதை மன்னரின் கனவு காட்டுகிறது” என விளக்கம் கூறினார். அபூர்வமான அவ்விளக்கத்தைக் கேட்ட மன்னன், யூஸூபை விடுதலை செய்து, மன்னனின் ஆலோசகராக நியமிக்கிறார். யூஸூப் தனது பொருளியல் சார் திறனையும், தன்னால் இத்தேசத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கையையும் மன்னரிடம் தெரிவிக்கவே அவரை மன்னன் தேசத்தின் நிதிப் பொருப்பாளராக நியமித்தார். இச்சம்பவம் அல்குர்ஆனின் அத்தியாயம் 12 வசனங்கள்; 42-55 தௌிவாக பேசுகிறது.

உண்மையில் யூஸூப் நபியவர்கள் தான் அவதூருக்குற்றத்திற்கு ஆளாகி, தான் நிரபராதி என்றிருந்த நிலையிலும் சிறையடைக்கப்பட்டு, அவமானப்படுத்திய தன் தேசத்திற்கே அத்தேச நலனில் அக்கறையுடன் செயற்பட்டார் என்றால் இதனையே தேச நலன் என்ற என்னக்கருவை விளங்கிக்கொள்ள போதுமானதாக உள்ளது.

05. தேசநலன் என்பதன் மற்றொரு செயன்முறைதான் அரசியல் பிரதிநிதிகளும், தேசமக்களும் தேசத்தின் அபிவிருத்தியில் பார்வையாளர்களாக அன்றி பங்காளிகளாக மாறவேண்டும்.

கலீபா உமர் (ரழி) ஒரு தடைவ கடுமையான வெயில் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்ததை உஸ்மான் (ரழி) கண்டு கலீபா உமரே என்ன, இந்தக் கொடும் வெயிளில் எதனையோ தொலைத்து விட்டவர் போல் தேடிக்கொண்டிருக்கிறீர் என கேட்டபோது, திறைசேரிக்குறிய ஒரு ஆட்டைக் காணவில்லை அதனையே தேடுகிறேன் என்றார் கலீபா உமர் (ரழி). அதற்கு உஸ்மான் (ரழி) நீங்களோ ஓர் கலீபாவாக இருக்கும் நிலையில் ஒரு ஆளை நியமித்து அந்த ஆட்டை தேடச் சொல்லி இருக்கலாமே! நீங்களோ நிழலில் ஓய்வெடுக்கலாமே என்றார்.

கலீபா உமரோ (ரழி), உஸ்மானே! நீங்கள் வேண்டுமானால் ஓய்வெடுங்கள் இன்ஷா அல்லாஹ் நீங்கள் எனக்கு பதிலாக மறுமையில் அல்லாஹ்விடம் ஒரு ஆடு காணாமல் போனமைக்கு பதில் சொல்வீரா எனக்கேட்டார்.

இதுவே தேச நலனில் அக்கறையுடைய மக்கள் பிரதிநிதிகளின் பண்பு, பார்வையாளர்களாக அன்றி பங்களியாக செயற்பட்டார்கள்.

06. “தேச நலன்”; என்பதன் எண்ணக்கருவில் மற்றொரு விடயமே வீண்விரயம், ஆடம்பரம் தவிர்த்து, எளிமை வாழ்வினை கடைப்பிடிப்பது. இது குறித்து இன்றைய அரசியல் பிரதிநிதிகளுக்கு உரத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உள்ளது. இது தேசத்தின் பொருளாதாரத்தையும், வளங்களையும் துஷ்பிரயோகம் செய்யும் செயன் முறையாகும். நல்லாட்சியின் அடையாளம் எளிமையும், சிக்கனமுமாகும்.

இஸ்லாம் எனும் தூய மார்க்கத்தை அடிப்படையாகக்கொண்டு நல்லாட்சி செய்த மக்கள் பிரதி நிதிகள் தம் தேச நலனில் பின்வருமாறு காணப்பட்டனர் :

1. பொறுப்பு ஒரு அமானிதம் என்பதை புரிந்து வைத்திருந்தமை.

2. தமது பொறுப்பு பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்பதை நினைவில் கொண்டமை.

3. எளிமையான வாழ்க்கை.

4. பண்பாடான சக வாழ்வு.

5. நீதியாக நடந்தமை, சட்டம், ஒழுங்கு பேணியமை.

6. ஆக்க பூர்வ விமர்சனங்களை அங்கிகரித்தமை.

7. ஆலோசனை செய்து செயற்பட்டமை.

8. எப்பொழுதும் துறைசார்ந்தோறை அனுகியமை.

9. நிதானம், சகிப்புத்தன்மை, கன்னியம் பேணியமை.

10. சமகாலத்தில் ஈமானிய உணர்வோடும், சமூக உணர்வோடும் பங்காற்றிமை.

எனவே, இஸ்லாம் எனும் தூய மார்க்கத்தை அடிப்படையாகக்கொண்டு நல்லாட்சி செய்த மக்கள் பிரதி நிதிகளைப்போல் எமது மக்கள் பிரதிநிதிகளும் மாற முன்வரவேண்டும். தாம் கொண்டுள்ள திறமைகள், வகிக்கும் பதவி, அதிகாரம் எனபன மக்களுக்கும், தேச நலனுக்கும் சேவை செய்வதற்கே என்பதை உணர வேண்டும்.

குறிப்பாக நாட்டின் இன்றைய அரசியல் நெருக்கடிச் சூழல் எமது முஸ்லிம் தலைமைகளும் சமூகமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான பின்வரும் குர்ஆனிய வழிகாட்டல் தேச நலனில் எமது பொறுப்பை வழியூறுத்தும என கருதுகிறேன்.

• கலக்கமுறாது உறுதியாக இருப்பது.

• அல்லாஹ்வின் பால் நெருங்கி, அவனை நினைவு கூறுவது.

• அல்லாஹ், அவனது தூதர் வழிகாட்டலை பின்பற்றுவது.

• எமக்கிடையே பிணங்கிக்கொள்ளாது இருப்பது.

• பொறுமையை கடைப்பிடிப்பது. (8:45இ46)

எனவே தேசத்தின் நலன்களுக்காய் ஒன்றுபடுவோம், ஒத்துழைப்போம், கைகோர்ப்போம்.தேச நலனே எமது இலக்காகட்டும்.

As Sheikh: M.T.M.Rizvi (Majeedy), BA (Hons), PGDE MA, Mphil,
Senior Lecturer, Head of Dept. of Islamic Studies
Eastern University Sri Lanka

Read more...

மஹிந்தவிற்கு எதிராக பாராளுமன்றில் கை உயர்த்த மாட்டேன்! சம்பந்தனுக்கு நேரடியாக சொன்னார் சிறிதரன்.

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் ஸ்திரமற்ற நிலையில் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக தன்னால் செயற்பட முடியாது என கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன், மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மைத்திரிபாலவின் நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்வது பற்றி உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தபோதே சிறிதரன் தனது நிலைப்பாட்டை தெரியப்படுத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்த இரா. சம்பந்தன், ஒக்ரோபர் 26ம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது சட்டவிரோதம், நாடாளுமன்றத்தில் இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னரும் மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் தொடர்வது சட்டவிரோதம் என்று குறிப்பிட்டு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும், அதற்கு மஹிந்தவிற்கு எதிராக வாக்களித்த 122 எம்.பிக்களும் சத்தியக் கடதாசியில் கையொப்பமிட வேண்டுமென்றும் இரா.சம்பந்தன் கோரினார்.

குறித்த சத்தியக் கடதாசியில் 'இந்த அரசாங்கத்தில் எமக்கு நம்பிக்கையில்லாத காரணத்தால் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் நாங்களும் ஆதரவாக வாக்களித்தோம்.' எனக்குறிப்பிடப்பட்டிருந்ததுடன் அதில் சகல உறுப்பினர்களும் கையொப்பமிட தயாரானபோது, சிறிதரன் அவ்வாறு நம்பிக்கை இல்லை என கையெழுத்திட முடியாது என சம்பந்தனுடன் முரண்பட்டுள்ளார்.

அத்துடன் மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பதற்கு நிபந்தனை விதித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கிறது என சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளதுடன் இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளிற்கிடையிலான மோதலில் நாங்கள் ஒரு தரப்பாக இருக்க வேண்டிய அவசியமில்லையென்று தெரிவித்து மஹிந்தவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நிபந்தனை விதித்தது தவறு என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணிலிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் கூட்டமைப்பு ஆதரிப்பதாக சமூக வலைத்தளங்களிலும், பொதுமக்களிடமும் பகிரப்படும் கருத்துக்களை சிறீதரன் சுட்டிக்காட்டினார்.

எனினும், இரா.சம்பந்தன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

'நீர் கையெழுத்திடாவிட்டால், மஹிந்த ராஜபக்சவிடம் காசு வாங்கிக் கொண்டுதான் கையெழுத்திட மறுத்ததாகத்தான் சனங்கள் கதைப்பார்கள்.

ஏற்கனவே எங்களிடமிருந்து ஒருவர் போய்விட்டார். நீர் இரண்டாவது ஆளாகுவீர். தனியே உம்மை மட்டுமல்ல, கூட்டமைப்பையும் சேர்த்துத்தான் காசு வாங்கியதாக கதைப்பார்கள்.

சனங்கள் மட்டுமல்ல, நானும் சொல்வேன்- நீர் மஹிந்தவிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் கையொப்பமிட மறுத்தீர் என.' என இரா.சம்பந்தன் போட்டுப்பிடித்தார்.

சம்பந்தன் இவ்வாறு பதிலளிப்பார் என எதிர்பாராத சிறிதரன் பெட்டிப்பாம்பாக அடங்கி, ஐயா சொல்கிறார், அதனால் கையொப்பமிடுகிறேன். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக (மஹிந்தவிற்கு எதிராக) கை உயர்த்த மாட்டேன்' என கூறி, அந்த சத்தியக் கடதாசியில் சிறீதரன் கையொப்பமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.


Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com