Saturday, November 24, 2018

புத்தளத்தில் குப்பை கொட்டுதலுக்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம். பாறுக் ஷிஹான்

புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், குப்பைக்கு எதிராக 56 நாட்களைக் கடந்து போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் வெள்ளிக்கிழமை(23) பிற்பகல் யாழ். நகரிலுள்ள பஸ் தரிப்பிட நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, யாழ்.கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் ஆகியன இணைந்து குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தினர்.

குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான சி.கா. செந்திவேல், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் ச.தனுஜன், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், தூய்மைக்கான புத்தளம் அமைப்பின் செயற்பாட்டாளர்கள், யாழ். கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளன பிரதிநிதிகள், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தித் தமிழ், சிங்கள மொழிகளில் பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன் சுலோகங்களையும் தாங்கி கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தைக் கைவிட வலியுறுதியும் குப்பைக்கு எதிராக 56 நாட்களைக் கடந்து போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில்
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்இசமூக நீதிக்கான வெகுஜன அமைப்புஇ யாழ். கிளிநொச்சி முஸ்லிம் சமேளனம் ஆகிய அமைப்பு இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு உள்ளது.

அதாவது புத்தளம் நகரிலிருந்து 20 Km தூரத்தில் உள்ள வண்ணாத்திவில்லு பிரதேச சபைக்குட்பட்ட சேராக்குழியிலுள்ள அருவக்காடு பகுதியில் சுமார் 64 ஏக்கர்கள் நிலப்பரப்பில் கொழும்பிலிருந்து குப்பைகளை கொண்டு வந்து கொட்டத் தீர்மானிக்கப்பட்டு, அதற்குரிய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு நகரின் குப்பைகள் மாத்திரமன்றி, அண்மையில் எமது அரசாங்கம் சிங்கப்பூருடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் சிங்கப்பூரினதும், சிங்கப்பூருடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ள ஏனைய 62 நாடுகளினதும் இரசாயண, கதிரியக்க, மருத்துவ, பிளாஸ்ரிக் கழிவுகளும் இங்கே கொண்டுவந்து கொட்டப்படக்கூடிய அபாயம் இருப்பதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

கொழும்பில் சேரும் குப்பைகளை, 175 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள புத்தளம் அருவக்காடு பிரதேசத்தில் கொட்டுவதற்கு, அரசாங்கம் எடுத்துள்ள முடிவு, அப்பிரதேச மக்களின் அன்றாட வாழ்வையும் எதிர்காலத்தையும் பாழடையச் செய்யும் அபாயகரமான செயற்பாடாகும்.

இதற்கு எதிராக கடந்த செப்ரெம்பர் மாதம் 29 ஆம் திகதியில் இருந்து புத்தளம் மக்கள் புத்தளம் கொழும்பு முகத்திடலில் சுழற்சி முறையிலான தொடர் சத்தியாக்கிரகத்தினை 50 நாட்களையும் கடந்து முன்னெடுத்துவருகின்றனர்.

ஏற்கனவே, புத்தளத்தில் அமைக்கப்பட்ட பாலாவி சீமெந்துத் தொழிற்சாலை, கற்பிட்டி விமானப்படைப் பயிற்சித் தளம் மற்றும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் ஆகியவற்றினால் வளிமண்டலமும் கடலும் நிலமும் நிலத்தடி நீரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறுவக்காடு பகுதியில் 1965 ஆம் ஆண்டிலிருந்து சீமெந்து உற்பத்திக்காக சுண்ணக்கல் அகழப்பட்டுப் பின் 15 வருடங்களுக்கு முன்னர் 2003 ஆம் ஆண்டளவில் மீள நிரப்பிக் காடாக்கப்பட்ட பகுதியில், அக் காட்டை அழித்து மீளவும் தோண்டிக் குப்பைகளைக் கொட்டுவதற்கான ஆயத்த வேலைகள் செய்யப்படுகின்றன.

இவ்வாறான குப்பைகளைக் கொண்டு கிடங்குகளை நிரப்புவதில் (Sanitary Land Filling) முன் அனுபவம் இல்லாத, பல்வேறு நாடுகளாலும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட கம்பனியான சீனத் துறைமுக பொறியியல் நிறுவனம் (China Harbour Engineering Company ltd.) இவ் ஒப்பந்தத்தை மேற்கொண்டுவருவதாகவும், இத்திட்டம் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் முறைப்படியான அனுமதி பெறப்படாமலேயே தொடங்கப்பட்டிருப்பதாகவும் சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மூன்று அடி தடிப்பான அடித்தளம், சுவர் என்பன அமைக்கப்பட்டு அதற்குள் ஆயிரக்கணக்கான தொன் ஆபத்தான இரசாயண, மருத்துவ, பிளாஸ்ரிக், கதிரியக்கக் குப்பைகள் கொட்டப்படவுள்ளன. இச் செயற்திட்டத்தினால் அருகில் உள்ள சேரக்குழி, அருவக்கால், காரைதீவு ஆகிய கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மழைக்காலங்களில் இந்த குப்பை சேமிக்கப்படும் இடத்திலிருந்து கழிவு நீர் வழிந்தோடி 200 மீற்றறுக்கும் குறைவான தூரத்தில் உள்ள புத்தளம் களப்பில் நேரடியாக கலக்கும் அபாயம் ஏற்படவுள்ளது. மேலும், இப்பிரதேசத்திற்கு அருகில் உள்ள இறால் பண்ணைகள், உப்பளங்கள் மற்றும் தப்போவ நன்னீர் ஏரி என்பன பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

நிலத்தடி நீரூடாகவோ, மழை வெள்ளத்துடனோ மிகவும் அருகில் இருக்கின்ற வளமான கடற்பரப்பிற்கு இக் கழிவுகள் இலகுவாகச் சென்று அடைவதால், மிகவும் வளமான கண்டமேடையாகக் காணப்படுகின்ற இக்கடற்பரப்பு மிகவும் பாதிக்கப்படும். இப் பாதிப்பு அரபிக் கடல் வரை தாக்கம் செலுத்துமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கண்டல் தாவரங்கள் அழிவடையும். இறால் வளர்ப்புப் பாதிக்கப்படும். மீன்களும் நஞ்சாகும். மீன்களின் இனப்பெருக்கத்திற்குப் பொருத்தமான இலங்கையிலேயே பெரிய அளவில் (3100 ஹெக்ரெயர்) உள்ள கண்டல் தாவர பாதுகாப்பு வலயம் புத்தளத்திலேயே உள்ளமையும் கவனத்தில்கொள்ளத்தக்கது.

மிகவும் முக்கியமாக, இப்பிரதேசத்தில் இருந்து இரண்டு கிலோமீற்றர் இடைவெளியில் அமைந்துள்ள வில்பத்து விலங்குகள் சரணாலயத்திற்கும் இத் திட்டத்தால் பாரிய அச்சுறுத்தல் ஏற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மோப்ப சக்தி அதிகமாக உள்ள யானைகள் இக் குப்பையின் நாற்றத்தை நுகர்ந்து மிகவும் நீண்ட தூரத்தில் இருந்து இப் பகுதியை நோக்கி வரக்கூடிய அபத்து உள்ளமையால், இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் செறிந்து வாழும் கங்கேவாடிய, பூக்குளம், பழைய எலுவன்குளம், புதிய எலுவன்குளம் ஆகிய கிராமங்களில் மனித யானை மோதல் ஏற்படும்.

அருகிலுள்ள பிரதேசங்களில் சீமெந்துத் தொழிற்சாலைக்காக இன்றும் தொடர்கின்ற சுண்ணக்கல் அகழ்வின்போது, பாறைகளை உடைக்கப் பயன்படும் பாரிய வெடிகளால் ஏற்படும் அதிர்ச்சியானது அயல் மாவட்டங்களில் கூட யன்னல் கண்ணாடிகள் உடைகின்ற அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடப்படுகின்றது. இந் நிலையில் இவ் வெடிகளின் அதிர்வினாலோ, அல்லது இக் குப்பைகளில் ஏற்படக்கூடிய இரசாயணத் தாக்கத்தாலோ, 3 அடி அளவான சுவரிலோ அடித் தளத்திலோ சிறு வெடிப்பு ஏற்படுமானால், இக் குப்பைகளில் இருந்து வெளியேறும் மிகவும் ஆபத்தான விசத் திரவங்களும், நச்சு வாயுக்களும் நிலத்தடி நீரையும், மண்ணையும், வளிமண்டலத்தையும் மீட்க முடியாத அளவுக்குப் பாதிக்கும் வாய்ப்புள்ளது. இப் பகுதி சுண்ணக்கல் படிவுகளாலான நிலவமைப்பைக் கொண்டதாக இருப்பதால், இக் கழிவுகள் நிலத்தடி நீரோட்டங்கள் மூலமாகப் பல இடங்களுக்கும் வேகமாகப் பரவும் வாய்ப்பும் காணப்படுகின்றது.

இலங்கையின் உப்புத் தேவையில் 2/3 பகுதியை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான உப்பு புத்தளத்திலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது. இக் கழிவுகளால் களப்பை அண்டியுள்ள உப்பளங்கள் பாதிக்கப்படும். இலங்கையின் உப்பு உற்பத்தி குறைவடைந்து, உப்பை வெளிநாடுகளில் இருந்து அதிகமாக இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்படும்.

புத்தளம் தென்மேற் பருவப்பெயற்சிக் காற்றின் நுளைவாயிலாக இருப்பதனாலும், வருடம் முழுவதும் காற்று வீசும் பகுதியாக இருப்பதனாலும் இக் குப்பைகளில் இருந்து வெளியேறும் வாயுக்களும், துர்நாற்றமும் இலங்கையின் வடக்கு, வடமத்திய மாகாணங்களுக்கும் பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவுள்ளன.

உலர்வலயப் பிரதேசமான இங்கு, கடும் வெப்பமான கோடை காலங்களில் இக் கழிவுகளில் இருந்து மீதேன் வாயு வெளியேறும் சந்தர்ப்பத்தில் இலகுவில் தீப்பற்றக்கூடிய வாய்ப்பு இருப்பதால், அத்தீ இலங்கையின் மிகவும் முக்கியமான வனவிலங்குச் சரணாலயமான வில்பத்துக் காட்டில் பெரும் காட்டுத் தீயைத் தோற்றுவிக்கும் வாய்ப்புள்ளது.
துர்நாற்றம் அருகில் மனிதர்கள் வசிக்கமுடியாத நிலையைக் கொண்டுவரும். கிருமிகளின் பெருக்கம், ஈக்கள், கொசுக்களின் பெருக்கம் மக்களின் வாழ்வுக்குப் பெரும் நாசத்தை ஏற்படுத்தும்.

குப்பைகளைக் கொழும்பில் இருந்து தொடரூந்தில் கொண்டுவருவதாக ஆரம்பத்தில் சொல்லப்பட்டபோதும், பின்னர் அதற்கான பாதை வசதிகள் போதுமானதாக இல்லாத காரணத்தால் டிப்பர் வாகனங்களில் கொண்டுவர மாற்றுத் திட்டம் போடப்பட்டுள்ளது. இதற்கு ஒரு நாளைக்கு அண்ணளவாக 70 டிப்பர்கள் புத்தளத்திற்கும் கொழும்பிற்கும் சுமார் 175 கிலோமீட்டர் (மீளச் செல்வதும் சேர்த்து 350 முஅ) பயணம் செய்யவேண்டும். இதன்போது டிப்பர்களைச் சொந்தமாக வைத்திருக்கும் அரசியல்வாதிகளும், முதலாளிகளும் இவ் ஒப்பந்தத்தைக் கைப்பற்றிப் பங்குபோட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையிட முனைகிறார்கள்.

இக் கழிவுகள் எவ்வித பாதுகாப்புமற்ற வகையில் டிப்பர் வாகனங்களில் வெறுமனே படங்கால் மேல் தளத்தினை மூடிக் கொண்டு செல்லவே திட்டமிடப்;படுகின்றது. இப் பொறுப்பற்ற செயல் பாதையில் உள்ள பிரதேசங்களுக்கும் அவற்றில் வசிக்கும் மக்களுக்கும் பிரயாணிகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றது. எடுத்துக்காட்டுகளாக, தொடர்ச்சியான துர்நாற்றம் உருவாகும். ஏனெனில், படங்குகளால் துர்நாற்றம் வெளிவருவதைக் கட்டுப்படுத்தமுடியாது. அத்துடன், தற்செயலாக மூடிக் கட்டப்பட்டுள்ள படங்கின் ஒரு கயிறு அவிள்ந்தாலோ, படங்கில் சிறு கிழியல் ஏற்பட்டாலோ அல்லது டிப்பர் ஒன்று விபத்துக்குள்ளானாலோ விரும்பத்தகாத பல விளைவுகள் பாதை முழுவதற்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் குப்பையானது மிள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய பெரும் விலைமதிப்புடைய வளமாகவே உள்ளது. இக் குப்பைப் பிரச்சினைக்குத் தீர்வு காண, இத் திட்டத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் செலவு குறைவான, பாதிப்புக் குறைந்த மாற்றுத் திட்டங்கள் காணப்படுகின்றபோதும், இது சார்ந்த கொம்பனிகளும், அமைச்சர்கள் உள்ளடங்கலான அரசியல்வாதிகளும் மக்கள் பணத்தை செயற்திட்டம் என்ற பெயரில் கொள்ளையிடவும், தரகுப் பணத்திற்காகவும் இத் திட்டத்தினை அமுல்படுத்துவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மிகப்பெரியதொரு அழிவை அரங்கேற்றவுள்ள, சுற்றாடலுக்கு எதிரான இச் சதியை முறியடிக்க அனைவரும் அணிதிரள்வோம்!என தெரிவிக்கப்பட்டுள்ளது.







Read more...

Friday, November 23, 2018

புலிகளின் சின்னங்கள் , கொடிகளை பயன்படுத்தல் தடை! எழுச்சிப்பாடல்களுக்கும் வரும் ஆப்பு!

யாழ்ப்பாணம் கோப்பாயில் 51 ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் புலிகளின் மாவீரர் தின கொண்டாட்டங்களை நடாத்த சைக்கிள்கொம்பனி திட்டமிட்டுள்ளது.

இதையறிந்த கோப்பாய் பொலிசார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் மாவீரர் தினத்தை தடைசெய்யக் கோரும் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

2011ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த பயங்கரவாத தடைச் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும்.

இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தனித்தல் என்ற ஏற்பாடுகளின் கீழ் நிகழ்வுக்கு தடை உத்தரவு வழங்க வேண்டும்.

அத்துடன், நிகழ்வில் தடை செய்யப்பட் பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள், இலச்சினைகள் என்பவையும் பயன்படுத்த தடை உத்தரவை மன்று வழங்கவேண்டும்' என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பொலிஸாரின் மனுவை விசாரணை செய்த யாழ்பாணம் நீதிவான் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்துவதற்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

புலிகள் அமைப்பு இலங்கையில் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்ட அமைப்பாகும். அவ்வமைப்பிலிருந்து மரணித்தவர்கள் பயங்கரவாதிகளாகவே கருதப்படுகின்றனர். குறித்த பயங்கரவாதிகளை நினைவுகூரும் நிகழ்வு நவம்பர் 27ஆம் கடைப்பிடிக்கப்படுகிறது. புலிகள் அமைப்பு அழித்தொழிக்கப்பட்டபின்னர் இந்நிகழ்வு கைவிடப்பட்டிருந்தது. 2015 ஆண்டு இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவ்வுறுப்பினர்களின் பெற்றோர் உறவினர்கள் நினைவு கூரலாம் என்ற விதிவிலக்கு ஒன்று நல்லாட்சி என்று கூறப்பட்ட அரசினால் வழங்கப்பட்டிருந்தது.

ஆனாலும் அந்த இடைவெளியினுள் நுழைந்த அரசியல்வாதிகள் அதனை தமது அரசியல்லாபத்திற்காக பயன்படுத்தி வருகின்றமை அவதானிக்க கூடியதாகவுள்ள இத்தருணத்தில் இத்தடையுத்தரவு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நீதிமன்றினால் இவ்வாறானதோர் தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு எழுச்சிப்பாடல்களை இசைத்து குழப்பங்களை உருவாக்கின் அதன் விளைவுகளை அங்கு பங்குபற்றச் செல்கின்றவர்கள் மாத்திரமல்ல பார்வையாளர்களும் சந்திக்க நேரிடலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Read more...

சிறைச்சாலையிலிருந்து மாயமாகிய போதைப்பொருள் பிரபலம். தலையை பிய்கின்றனர் சிறை அதிகாரிகள்.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்ர்டைய பிரதான சந்தேக இருதினங்களுக்கு முன்னர் தலைமறைவாகியுள்ளார். இந்நபர் எவ்வாறு தப்பித்திருப்பார் என்பது தொடர்பாக அதிகாரிகளால் ஊகிக்க முடியாதுள்ளது.

சந்தேக நபர் மதுகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் அழைத்து வரும் வேளையில் இவ்வாறு தலைமறைவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இச்சந்தேக நபர் போதைப் பொருட்கள் கடத்தலில் முக்கிய பிரமுகர்களான சுசேவ், சித்திக் ஆகியோரது பிரதான விநியோகஸ்தராக செயற்படும் நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆறு மாத்திற்கு முதல் 2கோடி பெறுமதியான ஹெரோயின் 2கிலோ வைத்திருநத குற்றச்சாட்டில் ஹொரனையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். களுத்தறை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லும் போதே தப்பித்திருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

Read more...

பாராளுமன்றில் இன்று.

இன்று காலை பாராளுமன்ற கட்டத்தொகுதியில் ஆரம்பமான கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடலில் தேர்வுக்குழுவுக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்வது தொடர்பில் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் பேசப்பட்டது.
ஆழும் கட்சியினர் தமக்கு பெரும்பாண்மை உறுப்பினர்கள் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க, ஆழும் கட்சி ஒன்று இல்லை எனவும் புதிதாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மற்றும் அமைச்சரவை தமக்கான பெரும்பாண்மையை இதுவரை பாராளுமன்றில் நிரூபிக்க வில்லை என ஐக்கிய தேசியக் கட்சி மறுப்பு தெரிவித்ததுடன், பெரும்பாண்மை உறுப்பினர்களை கொண்டுள்ள தமக்கே அதிக எண்ணிக்கையான உறுப்பினர்களுக்கான உரித்து வழங்கப்படவேண்டும் என்றது.

விடயத்தில் தீர்வு எட்டப்படாது முடிவடைந்தது கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடல். அத்துடன் இது தொடர்பாக பாராளுமன்றில் விவாதம் நடாத்தி வாக்கெடுப்புக்கு செல்வதென சபாநாயகர் அறிவித்தார்.

பாராளுமன்று கூடியது, இருதரப்பினரும் தமது தரப்பு நியாயங்களை முன்வைத்தனர்.

தினேஸ் குணவர்த்தன

ஆழும் கட்சிக்கு அதிக படியான உறுப்பினர்களை வழங்கும் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைவாக எமக்கு 7 உறுப்புரிமைகள் வழங்கப்படவேண்டும். அரசியல் யாப்பின் பிரகாரம் எங்களுக்கு வழங்கப்படவேண்டிய உறுப்புரிமைகள் வழங்கப்படாமையை நாங்கள் நிராகரிக்கின்றோம். சபாநாயகராகிய நீங்கள் இங்கே கூட்டியிருப்பது ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றமே அன்றி நியாயமான பாராளுமன்று அல்ல என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன் என தெரிவித்தார் தினேஸ் குணவர்த்தன.

லக்ஸ்மன் கிரியல்ல

அரசியலமைப்புக்கு முரணாக மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டு ஒருமாத காலம் முடிவடையும் நிலையில் இன்னும் பாராளுமன்றில் அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் உள்ளனர் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல, அவ்வாறு தமக்கு பெரும்பான்மை இருக்கின்றது என நிரூபித்தால் தாம் அவர்களுக்கு இடம்விட்டு விலகியிருக்க தயாராக இருக்கின்றோம் என தெரிவித்தார்.

மேலும் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறிய மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரை அரசாங்கமாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பிரதமர் என ஒருவர் இல்லை எனவும் சபாநாயகர் ஏற்கனவே அறிவித்திருந்தீர்கள். அதன் அடிப்படையில் ஆட்சியில் இல்லாதவர்களுக்கு எவ்வாறு தெரிவுக்குழுவில் அதிக உறுப்பினர்களை வழங்க முடியும் என கேள்வி எழுப்பினார் லக்ஷ்மன் கிரியெல்ல.

டக்ளஸ் தேவானந்த


தெரிவுக்குழுவில் எனக்கும் ஒரு உறுப்புரிமை தேவையென ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் டக்ளஸ் தேவானந்த பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.

நான் ஆளுங்கட்சியில் இருக்கின்றேனா அல்லது எதிர்க்கட்சியில் இருக்கின்றேனா என்பது எனது முடிவு.

ஆனால் நான் எனது கட்சியின் மூலமே நான் பாராளுமன்றத்திற்கு தெரிவானேன். அதன்படி எனது கட்சிக்கும் தெரிவுக்குழுவில் உறுப்புரிமை வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் என வேண்டுதல் விடுத்தார் அவர்.

அனுரவும் விமலும் மோதல்.

தற்போது அராசாங்கம் என்று ஒன்று இல்லை, தெரிவுக் குழு குறித்து வாக்கெடுப்பை நடத்துங்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் அனுரகுமார திஸாநாயக்க மன்றில் வேண்டுகொள் விடுத்தபோது குறுக்கிட்ட அக்கட்சியிலிருந்து வெளியேறி தேசிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை அமைத்துள்ள விமல் வீரவன்ச பாரளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று இதுவரை நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் ஆழும் எதிர்கட்சிகளுக்கு தலா 5 உறுப்பினர்களும், ஜேவிபி மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஒவ்வொரு உறுப்பினர்களும் வழங்கப்படும் என சபாநாயகர் அறிவித்தபோது, சபாநாயகரின் முன்மொழிவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஆழும் கட்சி சார்பில் டினேஸ் குணவர்த்தன தெரிவித்தார். அதை தொடர்ந்து இலத்திரனியல் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, ஆழும் தரப்பினர் வாக்கெடுப்பை பகிஸ்கரித்து வெளிநடப்பு செய்தனர்.

வாக்கெடுப்பில் சபாநாயகரின் முன்மொழிவுக்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 0 வாக்குகளும் பதிவானது. வாக்கெடுப்பின்போது காமினி ஜெயவிக்கரம பெரேரா, லக்ஸ்மன் கிரியல்ல, இரா சம்பந்தன் , கபீர் ஹசீம் ஆகிய நால்வரது இலத்திரனியல் கருவிகள் செயற்படாமையால் அவர்கள் நால்வரும் பெயர் அழைக்கப்பட்டு வாக்களித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் :

லக்ஸ்மன் கிரியல்
ரவூப் ஹக்கீம்
ரிசார்ட் பதுயுதீன்
பாட்டலி சம்பிக்க ரணவக்க

ஆழும் கட்சியின் சார்பில் :

டினேஸ் குணவர்த்தன
எஸ்.பி திஸாநாயக
மஹிந்த சமரசிங்க
நிமால் சிறிபால டி சில்வா
விமல் வீரவன்ச


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்:

மாவை சேனாதிராஜா

ஜேவிபி சார்பில்:

விஜித ஹேரத்

ஆகியோர் பாராளுமன்ற தெரிவிக்குழுவின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

முடிவில் பாராளுமன்று எதிர்வரும் 27ம் திகதி மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டது.

Read more...

Thursday, November 22, 2018

செஞ்சோலையில் வழர்ந்த பெண் கணவனற்று ஓட்டை குடுசையில்! பாய் விரிக்கக் கேட்ட சிறிதரனின் சகா வேழமாலிகிதன்! பீமன்.

இது கார்த்திகை மாதம் பொதுவாக தமிழர்களில் பெரும்பாலானோரின் போலி வெளிப்படும் மாதம். இந்த மாதத்தில் ஒரு உண்மையும் வெளிப்பட்டுள்ளது. அந்த உண்மையாதெனில், கார்த்திகை மாதத்தில் யாருக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்களோ, அந்த அவலங்களின அடையாளம் ஒன்றை விபச்சாரியாக்கி மரணத்தின் விளிம்புக்கு கொண்டு சென்று விட்டிருக்கின்றான் சிறிதரனின் சகாவான வேழமாலிகிதன் எனப்படும் கரைச்சி பிரதேச சபை தவிசாளரான தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி பிரபலம்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட கோணேஸ்வரியின் கதை மிக சோகமானது. சிறுவயதில் தாய் தந்தையரை இழந்த அவள் தனது சகோதரர்களுடன் செஞ்சோலையில் சேர்க்கப்படுகின்றாள். அந்த சகோதரர்களில் மூவர் பின்னாட்களில் புலிகள் இயக்கத்தில் இணைந்து அல்லது இணைக்கப்பட்டு மரணிக்கின்றனர். ஒருவர் மட்டக்களப்பில் இயங்கிய தமிழ் ஆயுதக் குழுவொன்றினால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பின்னாட்களில் புலிகளியக்தத்தில் இணைந்துகொண்ட கோணேஸ்வரி அவ்வியக்கத்தையே சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து இறுதி யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களில் கோணேஸ்வரியின் கணவனும் இணைகின்றார். புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினரான கோணேஸ்வரி சகலரையும் பறிகொடுத்துவிட்டு இரண்டு குழந்தைகளுடன் புதியதோர் சவாலான வாழ்கையை தொடங்குகின்றாள்.

கிளிநொச்சியில் திருநகர் பகுதியில் உள்ள காணி ஒன்றில் இடிந்து நொருங்கியுள்ள கட்டிடங்களுள் தகரங்களால் மறைப்பொன்றை உருவாக்கி கோணேஸ்வரி தனது இரண்டு குழந்தைகளுடன் வாழ்கை எனும் போராட்டத்தை தனிமையில் ஆரம்பிக்கின்றாள். அவள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகள் சாதாரணமானவை அல்ல. குழந்தைகளை வழர்க்க வழியற்ற அவள் உதவிகேட்டு கிளிநொச்சி பா.உ சிறிதரனிடம் ஏதாவது வாழ்வாதார உதவி கிடைக்குமா என்று சென்றபோது அவளுக்கு நடந்துள்ள அவலத்தை கோணேஸ்வரின் குரலிலே நீங்கள் கேட்டுக்கொள்ளலாம்.



வாழ்வாதாரம் கேட்டுச் சென்ற கோணேஸ்வரியின் நிலைமையை அவதானித்துவர சிறிதரனால் வேழமாலிகிதன் அனுப்பப்பட்டுள்ளான். அங்கு சென்ற அவன் ஓரிருநாட்களின் பின்னர் அவளுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி நடுச்சாமத்தில் அவளிடம் செல்ல முற்பட்டதன் நோக்கத்தை அறிந்த கோணேஸ்வரி பயத்தின் நிமிர்த்தம் தனது பாதுகாப்பிற்காக அட்டம்பக்கத்திலுள்ளவர்களுக்கு விடயத்தை கூறியதால் தற்போது பழிவாங்கப்படுகின்றாள்.

கோணேஸ்வரியை குடியிருக்கும் காணியிலிருந்து வெளியேற்றுவதற்கு வேழமாலிகிதன் தமிழ் வாக்காளர்களால் வழங்கப்பட்டுள்ள கரைச்சி தவிசாளர் பதவியை எவ்வாறு பயன்படுத்துகின்றார் என்பதை இக்கடிதத்தில் கண்டு கொள்ள முடியும்.




கோணேஸ்வரி குடியிருக்கும் காணிக்கு பின்னால் கதையொன்று உண்டு. கோணேஸ்வரியின் சகோதரனால் கொள்வனவு செய்யப்பட்ட அக்காணிக்கான சட்டபூர்வமான ஆவணம் கோணேஸ்வரியிடம் இல்லை. அதற்கான காரணம், புலிகள் போலி அரசாங்கத்தை நிகழ்த்திய காலத்தில் அவர்கள் ஒரு காணிப்பதிவேட்டை காத்து வந்தனர். ஆனால் அரச காணிப்பதிவேட்டில் அது பதியப்படவில்லை. எனவே கொள்வனவு செய்யப்பட்ட காணி சட்டப்படியாக பெயர் மாற்றம் பெறவில்லை. எதுவாக இருந்தாலும் காணியை 28 லட்சத்திற்கு விற்ற அழகரட்ணம் குடும்பத்தினர் தங்களது மனச்சாட்டியின் பிரகாரம் கோணேஸ்வரிக்கு எவ்வித பிரச்சினையும் இதுவரை கொடுக்கவில்லை.

ஆனால், தனது காம முகத்தை அம்பலப்படுத்திய கோணேஸ்வரியை பழிவாங்க முற்பட்டுள்ள வேழமாலிகிதன், காணியை விற்றுள்ளவர்களுக்கு காணிப்பதிவிலுள்ள குறைபாட்டையும் சட்டரீதியாக காணியை அவர்கள் மீண்டும் விற்கலாம் என்ற விடயத்தையும் எடுத்தியம்பியுள்ளதுடன், அக்காணியை தானே ஒரு கோடி ரூபாவிற்கு விற்றுத்தருவதாகவும் அவாகளுக்கு ஆசை காட்டியுள்ள அதேநேரம், காடையர்களை கொண்டு கோணேஸ்வரியினை அக்காணியிலிருந்து விரட்டியடிக்கவும் முயன்றுள்ளான். நள்ளிரவில் அவளது குடிசையினுள் நுழைந்த காடையர்கள் அவளது குடிசையினையும் பாத்திரங்களையும் அடித்து நொருக்கியுள்ளனர்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடுகின்றோம் அவர்களின் குரல்களை பிரதிநிதித்துவம் செய்கின்றோம் என்கின்ற தமிழரசுக் கட்சியினர் தமிழ் மக்களுக்கு செய்கின்ற சேவை இதுதான? நான்கு சகோதரர்களையும், கணவனையும் யுத்தத்தில் இழந்து தனது குழந்தைகளை பாதுகாக்க வழியில்லாது உதவி கேட்டு வாசற்படிக்கு வந்தவளை பாயை விரிக்க கேட்கின்றனர். சிறிதரனாலும் அவனது சகாக்களாலும் மேற்கொள்ளப்படும் முதலாவது அடாவடித்தனம் இதுவல்ல. வன்னி மக்களுக்கு இது பரீட்சயப்பட்ட ஒன்றாகிப்போய்விட்டது. சிறிதரனின் ஊடக பலம் யாவற்றையும் மறைத்துவருகின்றது. அதற்கும் அப்பால் அந்த ஊடகபலத்தை கொண்டு எந்த அநியாயத்தையும் நியாயப்படுத்த முடியும் என்ற மமதையில் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்கின்றனர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் சிறிதரனின் ஊடக பலத்திற்கு அஞ்சி கைகட்டி மௌனிகளாக நிற்கின்றனர்.

ஆனால் கோணேஸ்வரி விடயத்தில் தமிழரசுக் கட்சியினர் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் அன்றில் இத்தனைகால தவறுகளுக்கும் ஒரே நேரத்தில் தண்டனை அனுபவிக்க வேண்டிவரும் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்! அதற்காக செய்தற்கரிய அத்தனை காரியங்களையும் செய்வதற்கு மக்கள் திரள்வார்கள் என்பதனை தமிழரசுக் கட்சியினருக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.

Read more...

தமிழ் மகா சாயா வை அழிக்க ஏன் கொந்தராத்துக்காரர்களுக்கு இடம் அளிக்கின்றீர்கள்?

பொலநறுவையில் கட்டிக்காக்கப்பட்டுவரும் புரதான சின்னங்களில் தமிழ் மகா சாயாவும் ஒன்றாகும். மகா பராக்கிரமபாகுவின் உன்னத படைப்புக்களில் ஒன்றான இந்த மகா சாயா வின் புனருத்தாரனத்தில் ஊழல் இடம்பெறுவதாகவும் இன மத பேதமின்றி இச்சொத்துக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என சாலிய குமார குணசேகர என்ற சிங்களவர் எழுதியுள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது :

பொலன்னறுவை புனித பூமியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்ட மிகப் பழமை வாய்ந்த தமிழ் மகா சாயாவை புனருத்தாரனம் செய்வதற்காக மத்திய கலாச்சார நிதியத்தினால் 2014 ம் ஆண்டு வேலைகள் தொடங்கப்பட்டன.

இன்று அதன் நிலை மிக கவலைக்கிடமான நிலையில் உள்ளது. தரமற்ற கட்டுமான பொருட்களைக் கொண்டு கட்டுமான வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் அதுவும் எதிர்காலத்தில் அழியும் நிலையில் உள்ளது.

இம் மகா சாயாவை பற்றி பல தகவல்கள் மகாவம்சத்தில் இடம் பெற்றுள்ளது. அநுராதபுர இராஜ்ஜியத்தின் பின்னர் பொலன்னறுவை இராஜ்ஜியம் ஆரம்பமானது. இக் காலத்தில் மகாபராக்கிரமபாகுவின் ஆட்சி காலம். இக் காலத்தில் எல்லாத் துறைகளும் அதி உச்சமான வளர்ச்சியைப் பெற்றிருந்தது. இலங்கையை விவசாய நாடாக பெருமை அடைந்ததும் இக்காலத்தில் ஆகும்.

பொலன்னறுவை யுகத்தில் இந்தியாவில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 1200 கைதிகளைக் கொண்டே இம் தமிழ் மகாசாயா நிர்மாணிக்கப்பட்டது. இரண்டு மாடிக்கட்டிட அமைப்பில் உருவக்கப்பட்டுள்ளது.

மகாவம்சத்தில குறிப்புகளின் அடிப்படையிலும் தொல்பொருள் அகழ்வராய்ச்சியாளர்களின் கருத்து படியும்
மகாசாயவின் உயரம் -ரியன் 1300
சுற்று வட்டாரத்தின் அளவு- 600 மீற்றர்
அதன் உயரம்-25.65 மீற்றர் ஆகும்.

காலப்போக்கில் இம் மகாசாய சிதைவடையத் தொடங்கியது. 1982 ம் ஆண்டு மத்திய கலாச்சார நிதியத்தின் மூலம் புனரூத்தாரன வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் வேலைகள் முழுமைப்பெறவில்லை.

2014ம் ஆண்டு மார்ச் 6ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இக்காலத்தில் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக கடமையாற்றினார். தொல்பொருள் திணைக்ளத்தின் முன்னாள் அகழ்வாராய்ச்சியாளர் பேராசிரியர் நிமல் பெரோரா இப் புனரூத்தாரண பணிகளின் ஆலோசகராக செயற்பட்டார்.

ஜந்து ஏக்கர் நிலப்பரப்பளவுக்கான கட்டுமான பணிகளில் மிக சிக்கலை உருவாக்கியது. இருப்பினும் கட்டிட இடிபாடுகளைக் கொண்டு இதன் வடிவம் குத்து விளக்கைப் போன்றுது என இணங்கண்டுகொண்டனர். ஆனால் இதன் கட்டுமான பணிகளை ஒப்பந்தக்காரர்களுக்கு அளித்து புரதான சொத்தொன்றின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கி விட்டனர். டென்டர் அழைப்பின் மூலம் 1,30,000 செங்கற்களை கலாச்சார நிதியம் பெற்றுக்கொண்டது. ஒரு செங்கற்களுக்காக ரூபா 39 செலவிடப்பட்டது.

இவ்வாறு பெற்றுக்கொண்ட செங்கற்களின நிலையானது மழையில் நனைந்து மண்ணோடு மண்ணாகி விட்டது. கட்டித்தில் உள்ள செங்கற்களை விரல்களால் தொட்டாலும் நொறுங்கி போகும் நிலையில் உள்ளது. இதைப் பற்றி பொறுப்பான அதிகாரிகளிடம் கேள்வி கேட்க விளையும் போது எவ்வித பதிலும் கிடைக்க வில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த ஊழலின் பின்னனி தான் என்ன? புராதன சின்னங்கள் எமது அடையாளங்கள். அவற்றை பாதுகாக்க இனம் மொழி மதம் தேவையில்லை. கல்லாதவர் முதல் கற்றவர் எல்லோருக்கும் தமது பாரம்பரியங்களை பாதுகாக்கும் உணர்வு வேண்டும்.







Read more...

புரள்கிறது மீண்டும் தொப்பி.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான A.H.M பௌசி ஆட்சி மாற்றத்தின் பின்னர் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றிருந்த நிலையில் , ஒத்திவைக்கப்பட்டிருந்த பாராளுமன்று கூடிய நிலையில் மஹிந்த ராஜபச்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பம் இட்டு அப்பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

மஹிந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அழிப்பதாகவும், அதற்கு மைத்திரி துணைபோவதாகவும் தெரிவித்தே அவர் நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கினார். தற்போது அவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவி ஒன்று வழங்க தயார் என மைத்திரி தரப்பில் கூறப்பட்டதை தொடர்ந்து நாளை அவர் அரசின் பக்கம் உட்காரலாம் என நம்பப்படுகின்றது.

Read more...

ரணில் அலரி மாளிகையிலிருந்து வெளியேறா விட்டால் அபராதம் விதிக்கப்படும். பந்துல குணவர்த்தன

பதவி நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் அலரி மாளிகையை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அங்கு தங்கியிருந்தால், அவர்கள் சட்டரீதியான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அவர்களுக்கு எதிராக விதிக்கப்படும் அபராத பணத்தை அவர்கள் செலுத்த நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அபராத பணத்தை அறவிடுவதற்கும், சட்டத்தை செயற்படுத்துவதற்கும், பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் சட்டத்தை செயற்படுத்த என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Read more...

சம்பந்தனை எதிர்கட்சி தலைவர் பதிவியிலிருந்து நீக்க வேண்டும். அவுஸ்திரேலியாவுக்கு போட்டுக்கொடுத்தார் விக்கி.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய பிரதி உயர்ஸ்தானிகர் Victoria Coakley இன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளார். இவ்விஜயத்தின்போது முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சந்திப்பின்போது நாட்டிலுள்ள அரசியல் அசமந்தப்போக்கை நீக்குவதாயின், மைத்திரி தலைமையில் ஒர் கூட்டு அரசாங்கத்தினை உருவாக்கி அதில் பிரதமராக ரணில் விக்கிரசிங்கவையும் எதிர்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்சவையும் நியமிக்க வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளார் விக்கினேஸ்வரன்.

இன்றுள்ள பாராளுமன்ற நிலைகள் மற்றும் கட்சிகளின் ஆசன எண்ணிக்ககளின் பிரகாரம், கூட்டு அரசாங்கம் ஒன்று உருவானால் எதிர்கட்சியாக தமிழரசுக் கட்சி அல்லது ஜேவிபி இருக்க முடியும். இவர்களில் அதிக ஆசனங்களை கொண்டுள்ள தமிழரசுக் கட்சிக்கு அரசியல்யாப்பின் பிரகாரம் எதிர்கட்சி பதவி கிடைக்கும் என்பது அரசியல் யாப்பை வாசிக்க தெரிந்த அல்லது பத்திரிகைகளையாவது வாசிக்கத் தெரிந்த சாதாரண மகனுக்கும் விளங்கக்கூடிய நிலையில் , சம்பந்தன் மீது கொண்ட காழ்ப்புணர்சியில் சிறுபிள்ளைத்தனமாக இக்கருத்தினை அவுஸ்திரேலியப் பிரதித் தூதுவரிடம் கூறியுள்ளார் விக்கினேஸ்வரன்.

இது விடயத்தில் இலங்கைநெட் எழுப்புகின்ற கேள்வி யாதெனில், அரசியல் யாப்பின் அடிப்படை விவகாரங்கள் கூடத்தெரியாது ஒருவர் எவ்வாறு நீதியரசராக செயற்பட்டார் என்பதாகும்.

எனவே இந்த முழு முட்டாளினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் யாவும் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும்.

Read more...

நாளையும் பாராளுமன்றில் பொதுமக்களுக்கான கலரி மூடியாம். தெரிவுக்குழுச் சிக்கல் தொடர்கின்றது.

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அரசியல் கட்சித் தலைவர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் 12 பேர் இடம் பெறல் வேண்டும்.

புதிய ஆட்சி மாற்றத்தின் பின்னர், தெரிவுக்குழுவில் மாற்றம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதில் ஆழும்கட்சியான தமக்கு பெரும்பாண்மை உறுப்பினர்கள் வழங்கப்படவேண்டும் என மைத்திரி-மஹிந்த தரப்பு கோரியுள்ளதுடன், தமது தரப்பிலிருந்து 7 உறுப்பினர்களின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.

நேற்று சபை முதல்வர் தினேஸ் குணவர்தன பாராளுமன்ற செயலாளருக்கு தமது கோரிக்கை தொடர்பான கடிதம் அனுப்பி வைத்துள்ளதுடன் பின்வரும் உறுப்பினர்களின் பெயகளையும் பரிந்துரைத்துள்ளார்.

1. தினேஸ் குனவர்கன
2. நிமல் சிறி பாலடி சில்வா
3. மகிந்த சமரசிங்க
4. திலங்க சுதிபா
5. எஸ்.பி.திஸாநயக்க
6. உதம்கம்மன்பில
7. விமல் வீரவங்ச

இதேநேரம் மக்கள் விடுதலை முன்னணியினர்
1. விஜிதஹேரத்
2. வைத்திய நலிந்த ஜயசிங்க
ஆகியோரை தெரிவுக்குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளனர்.

நாளைய தின சபை நடவடிக்கைகள் சிக்கலின்றி முன்னெக்கப்படவேண்டுமாயின் தெரிவுக்குழுவின் நியமனம் அவசியமாகியுள்ள நிலையில், இக்கோரிக்கை மீண்டுமோர் சிக்கலை உருவாக்கியுள்ளது. பெரும்பாண்மைக் கட்சிக்கு பெரும்பாண்மை உறுப்பினர்கள் வழங்கப்படவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரோரா தமது கட்சியில் இருந்து 7 பேர் தெரிவு செய்யப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

எனவே இவ்வியடம் நாளை பாராளுமன்றில் சூடுபிடிக்கும் என நம்பப்படுகின்றது.

இந்நிலையில் நாளை பாராளுமன்றின் பொதுமக்கள் கலரி மக்களுக்காக திறக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

நீதிபதி இளஞ்செளியனின் மெய்பாதுகாவலர் கொலைச் சந்தேக நபர்களின் பினையை ரத்துச் செய்ய கோரும் அரச சட்டத்தரணி.

மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக இருந்த உப காவல்துறை பரிசோதகர் ஹேமச்சந்திரா சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர் மூவரும் கடந்த திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், மன்றின் கட்டளையை மறு ஆய்வு செய்யவேண்டும் என்று அரச சட்டவாதி ஊடாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் நேற்று புதன்கிழமை முன்வைத்த ஆட்சேபனை விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று ஒத்திவைத்தது.

மேல் நீதிமன்றம் பிணை அனுமதிக் கட்டளை வழங்கிய பின்னர் அரச சட்டவாதி சீராய்வு விண்ணப்பத்தை சமர்பித்ததை சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா கடுமையாக ஆட்சேபித்தார். அவர் மன்றில் நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த மன்று அரச சட்டவாதியின் விண்ணப்பத்தை ஒத்திவைத்தது. அத்துடன், அரச சட்டவாதி ஊடாக ஆட்சேபனை விண்ணப்பத்தை முன்வைத்த யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரியை எதிர்வரும் 26ஆம் திகதி மன்றில் முன்னிலையாக உத்தரவிட்டு பிணை விண்ணப்பத்தை அன்று வரை ஒத்திவைத்தது.

“மேல் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் அவரது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுக் கொல்லப்பட்டார். எனவே மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா? என்று விசாரணைகளை முன்னெடுக்கின்றோம். எனவே சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டால் விசாரணைகள் பாதிக்கப்படும்.

அத்துடன், காவல்துறை உத்தியோகத்தர் கொலை தொடர்பான இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை” என்று யாழ்ப்பாணம் காவல்துறையினர் தமது ஆட்சேபனையில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த ஆட்சேபனை விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் காவல்துறையினர் , மேல் நீதிமன்ற அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரனிடம் கையளித்திருந்த நிலையில் அவர் நேற்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் அணைத்து பிணை விண்ணப்பங்களை மன்றில் அழைக்குமாறு கோரினார்.

அதற்கு அமைவாக மேல் நீதிமன்றில் சந்தேகநபர்கள் மூவர் சார்பான பிணை விண்ணப்பங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. சந்தேகநபர்கள் மூவர் சார்பிலும் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா முன்னிலையானார்.

“சந்தேகநபர்களுக்கு எதிரான சுருக்கமுறையற்ற விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆரம்பிக்கப்படவில்லை. காவல்துறையினரின் ஆரம்ப விசாரணைகள் நிறைவடையவில்லை. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணக் குடாநாட்டை மட்டுமல்ல முழு நாட்டையும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்யாக்கியது. சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்ட விடயம் ஊடகங்களில் வெளிவந்தமையால் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டமையால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன், காவல்துறையினரின் விசாரணை பாதிக்கப்படும் நிலையும் ஏற்படும்” என்று அரச சட்டவாதி மன்றில் சமர்ப்பணம் செய்தார். “சந்தேகநபர்களுக்கு மன்றினால் பிணை வழங்கப்பட்ட பின்னர் அதனை இந்த மன்றிலேயே ஆட்சேபனை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. நீதிமன்றின் கட்டளையை சவாலுக்குட்படுத்தும் நடவடிக்கை.

சந்தேகநபர்கள் பிணையில் வெளிவந்தால் காவல்துறையினரின் விசாரணைக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்று அரச சட்டவாதியின் ஆட்சேபனை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது. அதனை ஏற்க முடியாது” என்று அரச தரப்பை கடுமையாகச் சாடி மூத்த சட்டத்தரணி மன்றில் சமர்ப்பணம் முன்வைத்தார். இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மன்று குறித்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது.

பின்னணி.

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக மாணிக்கவாசம் இளஞ்செழியன் கடமையாற்றிய கால பகுதியில், அவரது, வாகனத்துக்கு பாதுகாப்பு வழங்கிச் சென்ற காவல்துறை உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளை இடைமறித்த ஒருவர், அவருடைய கைத்துப்பாக்கியைப் பறித்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். சம்பவத்தில் படுகாயமடைந்த சார்ஜன்ட் ஹேமாவகே சரத் ஹேமச்சந்திர யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். அவருக்கு உப பொலிஸ் பரிசோதகராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

அத்துடன், மேல் நீதிமன்ற நீதிபதியின் காரில் பயணித்த மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் மீது சூடு நடத்தப்பட்டது. அவர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் நல்லூர் கந்தசுவாமியார் ஆலய தெற்கு வீதிப் பகுதியில் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி இடம்பெற்றது.

சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு நாள்களின் பின்னர் பிரதான சந்தேகநபரான செல்வராசா மகிந்தன் என்பவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் பாலசிங்கம் மகேந்திராசா, செல்வராசா ஜயந்தன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் மூவரும் 2017ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அந்நிலையில் சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பங்களைத் தாக்கல் செய்தார். அவை விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.

சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்கலாம் என்ற எண்ணத்துக்கு மேல் நீதிமன்றம் வந்தால், அவர்களுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கவேண்டும் என்று அரச சட்டவாதி மன்றுரைத்தார். அதனையடுத்து கட்டளை வழங்கப்பட்டது.

“சந்தேகநபர்கள் மூவரும் காசுப் பிணையாக தலா 2 இலட்சம் ரூபா பணத்தை நீதிவான் நீதிமன்றில் வைப்பிலிடவேண்டும். மூவரும் 5 லட்சம் ரூபா பெறுமதியையுடை தலா இரண்டு ஆள் பிணையாளிகளை முற்படுத்த வேண்டும்.

சந்தேகநபர்கள் மூவரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற அலுவலகத்தில் கையொப்பமிடவேண்டும். மூவரும் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்படுகிறது” என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் கட்டளை வழங்கி உள்ளார்.

Read more...

தமிழ்த்தேசியத் தலைமைக்கு - நடேசன்

ரோம இராச்சியம் ஒரு நாளில் கட்டப்படவில்லை என்பார்கள். அதேபோல் ஜனநாயக அரசியலில் சிறிய விடயங்களும் பல காலம் விவாதிக்கப்படும். சில செய்து முடிக்கப்படும். பல செய்வதற்கு மேலும் காலமெடுக்கும். இது ஜனநாயகத்தின் முக்கிய பலம். அதே நேரத்தில் பலவீனமும் கூட . இதை நாம் நினைத்தாலும் மாற்ற முடியாது.

சர்வாதிகாரிகளால் மட்டுமே நினைத்த காரியத்தை விரைவாக முடிக்க முடியும். அவர்களிடமிருந்து விலகிவிடவே நாம் விரும்புகிறோம். இலங்கையில் எந்தச் சிங்கள அரசியல்வாதிகள் பதவிக்கு வந்தாலும் தமிழர் விடயத்தில் சாதகமாக நடக்கமுடியாது. அந்த நிலையில் ரனில் விக்கிரசிங்க, மகிந்த இராஜபக்ச போன்ற அரசியல்வாதிகளால் இந்தியா மற்றும் வெளிநாட்டு அழுத்தத்திற்கு இசைந்து தமிழர்களுக்கு சாதகமாக வாக்குறுதி அளித்தாலும் எதுவும் பெரிதாக செய்ய முடியாது. இது அவர்கள் குற்றமல்ல. அடுத்த தேர்தலில் அவர்களுக்கு எதிராக மற்றவர்கள் பிரசாரம் செய்யக் காத்திருப்பார்கள். பண்டா – செல்வா ஒப்பந்தத்தை ஜே ஆர் ஜெயவர்த்தனா எதிர்த்ததும், சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் தீர்வுப்பொதியை ரனில் விக்கிரமசிங்கா எதிர்த்ததும் மறக்க முடியுமா?

இன்னமும் சிங்கள மக்களிடம் உடலில், உள்ளத்தில் போரின் ரணங்கள் ஆறாமல் இருக்கிறது.

நமக்கு மட்டும் ஆறிவிட்டதா? லட்சம் உயிர்கள் என்பது சும்மாவா?

வட- கிழக்கு இஸ்லாமியர்கள் போர் காலத்தை மறந்துவிட்டார்களா?

இவற்றின் மத்தியில் அரசியல் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். மனிதர்கள் வாழவேண்டும். அதுவும், இப்புவியில் ஒரு முறை வாழத்தான் முடியும். தேர்தல் மாதிரி மீண்டும் சந்தர்ப்பம் வராது. ஐயா சம்பந்தர் பாரளமன்றம் போவது மாதிரியல்ல.

உணவின்றி வைத்திய வசதியின்றி ஒரு நாள் இருந்திருக்கிறீர்களா?

ஏழைக் குழந்தைகள் கல்வி கற்கவேண்டும் . வைத்தியவசதி போக்குவரத்து உத்தியோகம் எல்லாம் வேண்டும்.

இவைகளைத் தருவது இலங்கை அரசே.

இந்த நிலையில் தமிழர்களுக்கு முன் இருக்கும் ஒரே ஆயுதம் இராஜதந்திரமே. அதைப்பாவிக்க மறுக்கிறீர்களே?

இலங்கையில் எந்தச் சிங்கள அரசியல் கட்சியும் இலகுவில் சிறுபான்பையினரது ஆதரவற்று அரசாளமுடியாது என்ற இந்த அரசியல் அமைப்பு சிறுபான்மையினருக்கு கொடுக்கப்பட்ட வரம் . இதை மலையகத்தில் மறைந்த தொண்டைமானும், மறைந்த அஷ்ரபும் மிகவும் திறமையாக பாவித்து தாங்கள் சார்ந்த மக்களை முன்னேற்றியிருக்கிறார்கள் அவர்களைப் பின்பற்றி பிற்காலத்தில் வந்தவர்கள் முடிந்த அளவில் செய்திருக்கிறார்கள். இதை, அந்த மக்கள் வாழும் பிரதேசத்தில்ற்கு போய் வரும்போது நாம் புரிந்துகொள்ள முடியும்.

இதற்கப்பால் நமது அரசியல் சமூகத் தலைவர்கள் சிங்கள மற்றும் இஸ்லாமிய மக்களிடம் சென்று ஐக்கிய இலங்கையில் இன மத பேதங்களை மறந்து வாழ்வதற்காக வேலை செய்யவேண்டும். நம்பிக்கையை ஊட்டவேண்டும். முப்பது வருடகாலப் போரில் எல்லா இன மக்களும் காயமடைந்திருக்கிறார்கள். இதை விட முக்கியமாகப் போர் நடந்த காலத்தில் தமிழர் மத்தியில் எப்படி தமிழர் என்ற இனவாதம் வளர்க்ப்பட்டதோ அதேபோல் சிங்கள மக்களிடம் இனவாதமும், இஸ்லாமிய மக்களிடம் மதம் சார்ந்த எதிர்ப்புணரவுகள் வளர்க்கப்பட்டிருக்கிறது. இதில் யாரையும் குறை சொல்லத் தேவையில்லை. இப்படியான உணர்வுகள் போர்க்காலத்தில் கத்தி தீட்டப்படுவதுபோல் மனித மனங்களில் நஞ்சாக ஊட்டப்படும் .

இவற்றைச் சரி செய்யாது போரின் பின்னான ஐந்து வருடங்களும் இராபக்சவுக்கு எதிரான சகல நடவடிக்கைள் மட்டுமல்ல, ஐக்கிய இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் காலம் கழித்தார்கள் தமிழ் அரசியல்வாதிகள்.

1) இராஜபக்சவுக்கு எதிரான அணியில் போர்த் தளபதியை ஜனாதிபதியாக ஆதரித்தது( போரில் இருவருக்கும் பங்கிருக்கு

2)யுத்தத்தின் பின்னர் ஜெனிவாவில் முறையிட்டது

3) அத்துடன் முக்கியமாக அரசியலே தெரியாத ஒரு மனிதரை வட மாகாண முதலமைச்சராகி அவர் மூலம் விடுதலைப்புலிகளின் தலைவர் விட்டுச் சென்ற சிங்கள எதிர்ப்பைப் பேசி இனவாதத்தை மீண்டும் கூராக்கியது

இவை தவறு அல்லது சரியானது என்பதல் முக்கியம். எந்த வகையிலாவது தமிழர்களுக்கு பயனளித்திருந்தால் பரவாயில்லை என ஏற்றுக்கொளள முடியும் .

1)சரத் பொன்சேகா தோற்றார் .

2)ஜெனிவா இரப்பராக இழுபடுகிறது.

3)விக்கினேஸ்வரன் தான்சார்ந்த கட்சிக்கும், தனக்கும் சூனியம் வைத்தபடி இருக்கிறார்.

நிலத்தில் தளை அடித்து கயிற்றில், புல்மேயக் கட்டிய மாடுபோல் ஆரம்பித்த இடத்திலே மீண்டும் வந்து சேர்த்திருப்பதால் உங்கள் அரசியல் அணுகுமுறை, பிரிவினை கோரியது போன்று வெறும் கோசம் மட்டுமே என்பது புரியவில்லையா ? உங்களுக்குத் தொலைநோக்கு இல்லை என்பது புரியவில்லையா?

ஒரு விவசாயியின் அறுவடையே அவனது விவசாயத் திறமையே. வியாபாரியாக இருந்தால் அவனது இலாபமே அவனது வருமானம்.

எவ்வளவு ஆழமாக உழுதீர்களோ ,பயிருக்கு மருந்தடித்தீர்களா? அல்லது இரவுபகலாக வியாபாரத்தில் ஈடுபட்டீர்களா எனக் குடும்பத்தினர் கேட்பதில்லை. உணவும் பொருளுமே அவர்களுக்குத் தேவை.

ஆனால் தமிழ் அரசியலில் மட்டும் ஏமாற்றத்தையும் முட்டாளத்தனத்தையும் அறுவடையாக சந்தோசமடையும் அரசியல்வாதிகளும் அவர்களை மீண்டும் மீண்டும் தேர்தெடுக்கும் மக்களும் நினைக்கிறார்கள்.

என்ன கொடுமையிது?

பின்னே பார்த்தபடி வாகனத்தைச் செலுத்தும் சாரதிகளையே அவர்கள் விரும்புகிறார்கள்.

கடந்த மூன்று வருடங்கள் மைத்திரிபால சிறிசேன – ரனில் விக்கிரமசிங்க என்று தமிழ் மக்களை வாக்குப் போடக் கேட்டீர்கள். மக்கள் உங்கள் சொல் கேட்டு நடந்தார்கள். அவர்கள் அரசியலுக்கு முண்டு கொடுத்து அவர்களது வாக்குறுதியை நம்பினீர்கள். மக்களையும் நம்பவைத்தீர்கள். யேசுநாதர் மீண்டும் பிறப்பார் என நம்பும் சில கிறீத்தவர்களைப் போல் .

தற்பொழுது அந்த அணி பிரிந்து விட்டது. நீங்கள் அம்மணமாகிவிட்டீர்கள் அந்த அம்மணத்தை மறைப்பதற்காக இலங்கையின் ஜனநாயக்தை பாதுகாப்பதாக முழக்கமிடுகிறீர்கள்.

புதுக்கோசம்!

ஆனால் என்ன? உங்களை நம்புவதற்குப் பலர் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.

இலங்கையில் 1971 மக்கள் விடுதலை முன்னணியினது கிளர்ச்சி காலத்திலோ பின்பு முப்பது வருடப்போர்க்காலத்திலோ இலங்கையில், முக்கியமாகத் தென்பகுதியில் ஜனநாயகம் அழியாது இருந்தது. ரொபேட் நொக்ஸ் எழுதியது போல் “உடலில் ஒட்டிய சேற்றை கழுவனால் ஒவ்வொரு சிங்கள விவசாயியும் மன்னராகத் தகுதியானவன்” . என்னைப் பொறுத்தவரையில் சிங்களமக்கள் பெரும்பான்மையாக இருக்குவரை இலங்கையில் ஜனநாயகம் இருக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன்

தற்போது கொழும்பில் நடைபெறுவிடயங்கள் தேநீர்க்கோப்பையில் எழும் சூறாவளி போன்றவை . அவை கடந்து போகும்

எனது கேள்வி போரின் பின்பு தமிழ்த்தலைவராகிய சம்பந்தனால் அவரை தேர்தெடுத்த தமிழர்கள் அடைந்த நன்மை என்ன ? 80 வயதிற்கு மேலான சம்பந்தன் இதுவரையும் தமிழர்களினது சார்பாக நடத்திய அரசியலின் எச்சமென்ன ?

பிரபாகரனது போரின் பயன்பாடுபோல்த்தானா?

கொழும்பில் இருந்து மதியூகி என யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த சுமந்திரன் இறுதியாக டான் ரீவிகலையகத்தில் என்னைச் சந்தித்தபோது இம்முறை தீர்வு எதுவும் கிடைக்காவிட்டால் அரசியலில் இருந்து விலகுவதாகக் கூறினார்.

மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் சிறந்த வக்கீல். மிகவும் திறமையாக பாராளமன்றத்தில் பேசுவார். ஆனால் அவரது தொழிலில் வெற்றி என்பது என்ன என அவருக்குத் தெரியும். கிறிஸ்தவப் போதகராக இருந்த நேர்மையான மனிதர். ஆனால் இவர் இரண்டு வருடங்களில் அரசியலில் இருந்து விலகும்போது தமிழர்களுக்கு எதை விட்டுச் செல்வார்?

மற்றவர்களை நான் குறிப்பிடவில்லை. காரணம் அவர்கள் வேறு நோக்கத்தில் அரசியல் செய்பவர்கள்

செல்வநாயகம் -பொன்னம்பலம் மற்றும் அமிர்தலிஙகம்- சம்பந்தன்- சுமந்திரன் என்று எமது கதைதொடர்கிறது.

சில வேளை நினைக்கிறேன் . தமிழ் அரசியல்வாதிகளில் தவறில்லை அவர்களுக்கு வாக்களிப்பவர்கள் திருந்தாதபோது விக்கிரமாதித்தன் கதையாகத் எமது ஏமாற்றங்கள் தொடர்வது தவிர்க்கமுடியாது.

ஏதோ ஊரில் சொல்வது நிவைில் வருகிறது.

“வயிற்றுக்குள் இருக்கும் மலத்தைக் கொழுப்பென நினைப்பதில் நமக்கு நிகர் எவருமில்லை.”.

Read more...

இன்ஸ்பெக்டர் ரங்கஜீவ மீண்டும் போதைப் பொருள் ஒழிப்புக்கு!

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மீண்டும் சேவையில் இணைய அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (21) முதல் அவர் தனது கடமையை செய்ய பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமையவே அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் 2018 ஆண்டு மார்ச் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

2012 ஆம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் 27 சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நியோமல் ரங்கஜீவ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுப்படி 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் 28 ஆம் திகதி நியோமல் ரங்கஜீவ பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஒரு இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட அவர் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக் கிழமையில் குற்றப் புலனாய்வுத் திணைக்கத்திற்கு சென்று கையொப்பமிடவும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் அவருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், கடவுச்சீட்டை நீதிமன்றின் பொறுப்பில் எடுக்கவும் நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

வழக்கு தாக்கலுக்கு உட்படாத தமிழ் விளக்கமமறியல் கைதிகளை விடுவிப்பதாக அறிவிப்பு!

நீண்ட நாட்களாக தடுப்புக்காவலில் வழக்குத்தாக்கல் செய்யப்படாதிருக்கும் தமிழ் விளக்கமறியல் கைதிகளை விடுதலை செய்வது குறித்து அமைச்சரவைக்கு ஜனாதிபதி அறிவித்திருப்பதாக ஸ்ரீலங்க சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் ஹொரண லக்ஸ்மன பியதாச தெரிவித்துள்ளார். ஜனவரிக்கு முன்னதாகவே விடுவிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாரிய குற்றமிளைத்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களை விடுதலை செய்வதானது பாதிக்கப்பட்டோருக்கான நீதிமறுப்பு என்ற கருத்து நிலவி வரும்நிலையிலேயே இவ்வறிவித்தல் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் ஏற்பட்டுள அரசியல் அசமந்த நிலையிலும், குறித்த கைதிகள் விவகாரம் தமிழ் அரசியல்வாதிகளின் வாக்குப்பிச்சைக்கான துரும்பாக காணப்படும் நிலையிலும், குறித்த நபர்களை விடுதலை செய்துவிட்டால் தமிழ் அரசியல்வாதிகளுக்கு மேடையில் முழங்குவதற்கு காரணங்கள் இருக்காது என மைத்திரிபால செக் வைக்கை முற்பட்டிருக்கலாம் என இலங்கைநெட் நம்புகின்றது.

இதேநேரம் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் அரசரங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Read more...

கல்முனை மக்களின் குடிநீர்க் கட்டணத்துக்கு ஆட்டையை போட்ட முகாமைத்துவக்குழு! 438 குடும்பங்கள் குடிநீரின்றி அவலத்தில்.

புதிய நிர்வாகம் குடும்பமொன்றிடமிருந்து 2500 ரூபாவை கோருகின்றது.

கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தின் பெயரால் கடந்த பல வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்த கல்முனை கிறீன்பீல்ட் கூட்டு ஆதன முகாமைத்துவக் குழுவினரால், அங்கு வாழும் 438 குடும்பங்களைச் சேர்ந்த மக்களால் குடி நீர் பட்டியலுக்கு செலுத்திய பெருந்தொகை பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு 921039 ரூபாவை மோசடி செய்த முகாமைத்துவக் குழுவினர் குடிநீர்க் கட்டணத்தை செலுத்தாமல் செயலிழந்து மாயமாகியதால், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை கடந்த 15.11.2018 ம் திகதியிலிருந்து நீர் விநியோகத்தை இடைநிறுத்தியுள்;ளதுடன் மக்கள் நீரின்றி பெரும் அவலத்தை சந்தித்துள்ளனர்.

குறித்த குழுவினருக்கு எதிராக மக்கள் பெரும் எதிர்ப்பார்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், புதியதாக உருவாகியுள்ள முகாமைத்துவக்குழுவினர், உடனடியாக நீரினை பெற்றுக்கொள்ளும்பொருட்டு, நீர்வழங்கள் சபைக்கு செலுத்தப்படவேண்டிய 9 லட்சம் பணத்திற்காக குடும்பங்கள் ஒவ்வொன்றிடமிருந்தும் 2500 ரூபாவை கோரி நிற்கின்றனர்.

இந்த அவலநிலையினுள் நுழைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக அறிவித்திருந்தார். அவ்வாறு அறிவிக்கப்பட்டமை முற்று முழுதான அரசியல் பிரச்சாரம் என குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு இதுவரை மக்களுக்கு நீர்வழங்கப்படவில்லை என்றும் புதிய நிர்வாகம் 2500 ரூபாவினை கேட்டு நிற்கின்றது என்றும் குடியிருப்பாளர்கள் நேற்று ஊடகங்களை அழைத்து பகிரங்கமாக அறிவித்தன் மூலாமாக ஹரிசின் முகத்தில் காறித்துப்பியுள்ளனர்.

இதேநேரம் மக்களின் பணத்தை விழுங்கிச் சென்றுள்ள முன்னாள் முகாமைத்துவக் குழுவினருக்கு எதிராக மக்கள் சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், இலங்கையின் சட்டத்துறையில் நம்பிக்கையற்ற குடியிருப்பாளர்கள் மேற்படி முகாமைத்துவத்தை சேர்ந்தவர்களின் வீடுகளை சுற்றிவளைத்து தாக்குதல் நடாத்தவேண்டும் என்று கோரிவருவதாக குடியிருப்பு மக்கள் தெரிவிக்கின்றனர்.







Read more...

Wednesday, November 21, 2018

விக்கி மூக்கை பொத்தினால் வாயை திறக்க தெரியாத குழந்தையாம் சொல்றார் வட மாகாண முன்னாள் அமைச்சர்.

மூக்கைப் பொத்தினால் வாயைத் திறந்து மூச்சுவிட்டு தன் உயிரைக் காப்பாற்றத் தெரியாத ஒருவராக முதலமைச்சர் விக்னேஸ்வரன் காணப்பட்டார் என வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ப.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் தனது பதவிக்காலத்தில் மாகாண சபையினூடாக மக்களுக்கான எந்த நிவாரணங்களையும் வழங்காதவராக அடுத்த சபைக்கும் போட்டியிட முனையும் இத்தருணத்தில் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் முன்னாள் முதலமைச்சரின் இயலாமை தொடர்பாக தனது முகநூலில் பதிவிடுகையில் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு அவர் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களில் என்றும் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திப்பணிகளுக்கான நிதியத்தை உருவாக்குவதில் அவரது இயலாமை எவ்வாறு இருந்தது என்பதை டெனீஸ்வரன் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு முதலமைச்சர் நிதியத்திற்கான நியதிச்சட்டம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் அதனை அனுமதிக்க முடியாது எனக் கூறியிருந்தார்.

அதன்பிற்பாடு அமைச்சர் வாரிய கூட்டத்தின் போது நான் தெரிவித்தேன், ஆளுநர் அனுமதிக்காவிட்டால் என்ன நாம் Trust Ordinanceகு கீழ் முதலமைச்சர் நம்பிக்கை நிதியத்தை உருவாக்க முடியும் என்று. அப்பொழுது முதலமைச்சர் பின்னர் பார்ப்போம் என்றார். சில மாதங்களின் பின்னர் மீண்டும் நினைவு படுத்தினேன். அப்பொழுதும் பின்னர் பார்ப்போம் என்றார். சில மாதங்களின் பின்னர் மாகாண சபையிலும் இது தொடர்பில் பிரஸ்தாபித்தேன். நான் சின்னப் பெடியன் என்பதனாலோ என்னவோ எனது கருத்தை கணக்கில் எடுக்கவில்லை. நான்கூறிய போது அதனை செவிமடுத்து Trust Ordinance கு கீழ் இவ்விடயத்தை கையாண்டிருந்தால் எமது புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் ஓரளவிற்கேனும் எமது மக்களின் வறுமையை ஒழித்திருக்க முடியும். அப்பொழுதுதான் பலர் தலைக்கணம் பிடித்து செய்ய வேண்டிய வேலையை செய்யாது விதண்டாவாதம் அல்லவா செய்துவந்தார்கள். மற்றும் நீங்கள் பெரியவரா அல்லது சமயம் ஐயா பெரியவரா என்ற பனிப்போர் அல்லவா நடந்தேறியது. இவ்விடயத்தினால் தற்போது நாம் எங்கு நிற்கின்றோம் என்பதை சற்று தூரநோக்கோடு யோசித்துப் பாருங்கள்.

Read more...

அம்மா கோழிக்கறி சமைக்காததால், அட்டம் பக்கத்து 7 கோழிகளை வெட்டிக் கொன்றார் எங்கள் அப்பா. சத்துரிகா

8 மணிக்கு வேலைக்கு செல்வதற்கு அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். தாயும் கூடவே எழுந்து இன்று என்ன கறி சமைக்கவேண்டும் என்று அப்பாவிடம் கேட்டுவிட்டு சமையல்கட்டுக்கு சென்றுவிடுவார். அன்றும் அவ்வாறே அம்மா அப்பாவிடம் கேட்கவும் அப்பா கோழிக்கறி சமைக்கச் சொன்னார். அம்மாவும் சரியென சொல்லிவிட்டு சமைக்கச் சென்றார். அம்மாவும் வீட்டில் கோழி இல்லாத காரணத்தால் கருவாட்டுக்கறியை சமைத்து பொதிகட்டி அப்பாவுக்கு கொடுத்து அன்பாக வேலைக்கு அனுப்பி வைத்தார்..

மதியநேரம் வந்ததும் தான் பிரச்சினை ஆரம்பமானது. அப்பா மதிய உணவை உண்பதற்காக சாப்பாட்டு பொதியை திறந்ததும்தான் அவருக்கு தெரிந்தது கோழிக்குப் பதிலாக கருவாடு சமைக்கப்பட்டிருப்பது. அப்பா சாப்பிடவில்லை, #உடனேகிராமசேவகர் #அலுவலகத்தைமூடிவிட்டு வீட்டுக்கு வந்தார்...

ஏன் இன்று கோழிக்கறி சமைக்கவில்லை என்று கத்திக்கொண்டே அம்மாவைத் தேடினார். அம்மா பயத்தால் அலுமாரிக்குப் பின்னால் ஒளித்துக்கொண்டார். அப்பாவால் அம்மாவை கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு கோபம் இன்னும் அதிகமானது அவ்வளவுதான்...

சமையலறைக்குச் சென்று கத்தியை எடுத்து நன்றாக தீட்டிக்கொண்டு வீட்டுக்கு வெளியே போனார். எங்கள் வீட்டில் கோழி இல்லாததால் எமது வீட்டு முற்றத்திலும் பக்கத்துவீட்டு தோட்டத்திலும் சுற்றிக்கொண்டிருந்த ஏழு எட்டு #கோழிகளைதாறுமாறாக அறுத்து_வீசினார்...

ஊரே கூடி அப்பாவின் கூத்தை பார்த்துக்கொண்டிருந்தனர். அவரைப்பற்றி ஏற்கனவே எல்லோரும் அறிந்துவைத்திருந்ததால் அவரை எல்லோரும் அவர்பாட்டில் விட்டுவிட்டு கடந்து சென்றனர்...

எல்லாம் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சிரித்தார் ஒரு சிரிப்பு அதை இன்றும் மறக்கமுடியாது. அப்பாவின் குறும்புகளை நினைத்தால் எமக்கு இன்றும் சிரிப்பு தான்.

- சதுரிகா சிரிசேன எழுதிய "ஜனாதிபதி தாத்தா" புத்தகத்திலிருந்து (பக்கம் 501,502).

Read more...

தனது பேத்தியின் ஆடையினுள் வைத்து ஹெரோயின் கடத்த முயன்ற பாட்டியுடன் இருவர் கைது.

அம்பலாங்கொடையில் குறித்த சிறுமியின் பாட்டி உட்பட இருவரை பொலிஸர் கைது செய்துள்ளனர். மேற்படி போதை பொருள் கடத்தல் தொடர்பாக பொலிஸார்க்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் இவர்களை கைது செய்துள்ளனர்.

குறித்த சந்நேகநபர்கள் 38 மற்றும் 40 வயதினையுடையவர்கள். இவர்களிடமிருந்து 4 கிராம் 365 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த முச்சக்கரவண்டியும் கைப்பற்றபட்டுள்ளது.

இதேவேளை மினுவங்கொடையில் வர்த்தக ஒருவரின் மகனிடமிருந்து 1300 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.

மற்றுமொரும் சம்பவம் மீன் விற்பனை செய்யும் போர்வையில் கஞ்சா விநியோகம் செய்துள்ளனர். 22லட்சம் பெறுமதியான போதை பொருட்களை கைப்பற்றி தனிநபர் ஒருவரையும் தம்பதியினரையும் கைது செய்து நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த உள்ளனர்.

Read more...

இராணுவத்தை வடகிலிருந்து அகற்றினால் மக்களுக்கு போக இடமில்லாமல் போகுமாம். வைத்தியர் கிறிஸான்.

இராணுத்தை வடக்கில் இருந்து அகற்ற கூறுகின்றார்கள். அவ்வாறு அவர்களை அகற்றினால் தமிழ் மக்களுக்கு போவதற்கு இடமில்லாமால் போகும் என சிறுநீரக சிறப்பு வைத்தியர் கிறிஸான் தெரிவித்துள்ளார்.

உலக இலங்கையர் பேரவையின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்து கூறுகையில் :

புலிகளால் உடைத்து சிதைக்கப்பட்ட ஆலயங்களை தென்பகுதி மக்களிடம் பெற்றுக்கொண்ட நன்கொடையைக் கொண்டு, எங்களைப் போன்ற அமைப்புகளையும் இனைத்துக் கொண்டு இராணுவத்தினர் புனருதாரணம் செய்துவருவதுடன் புதிய ஆலயங்களை கட்டியும் வருகின்றனர். ஆனால் விகாரைகளை அமைத்தால் உடைக்கச் சொல்கிறார்கள்.

இன்றைய அரசாங்கம் இதைப்பற்றி பேச வேண்டும். எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு கொழும்பில் வாழ முடியும் என்றால், விக்னேஷ்வரனின் மகன் வாசுதேவ அவர்களின் மகளை திருமணம் முடிக்க முடியும் என்றால், சுமந்திரனுக்கு கொழும்பிலே வியாபாரம் செய்ய முடியும் என்றால் ஏன் ஏனையோருக்கு முடியாது.

நான் ஒரு விடயக்தை ஆணித்தரமாக கூற விரும்புகின்றேன். 800 கோடி பணத்திற்கு நடந்தது என்னவென்று தெரியவில்லை. இந்நிலையில் இராணுவத்தினர் மட்டமே இங்கு செயற்படுகின்றனர்.

இங்கு ஒரு கொலை நடந்து விட்டால் புலம்பெயர் தமிழருக்கு 100 கொலை நடந்ததாக மிகைப்படுத்தி கூறுகின்றனர். கண்துடைப்பு வேலைகளில் இவர்கள் ஈடுபடுகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இவற்றுக்கு தரகர்களாக செயற்படுகின்றனர். இவர்கள் உரைப்பது யாவும் பொய்யான விடயங்களே.

இராணுவத்தினரின் நடவடிக்கைதளை நோக்கும்போது தென்னை மரங்கள் 30000மும் பனை 20000நாட்டியுள்ளனர். பாடசாலை மாணவர்களுக்கு பொருட்களை வழங்கியுள்ளனர். கண் நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சை செய்துள்ளனர்.

இன்று வாய்ச் சொல்லில் வீரம் பேசுபவர்களுக்கு மக்கள் நீரில்லாமல் கஷ்டப்படுவது தெரியாது. இராணுவத்தின் முயற்சியாலேயே மக்களின் நலன்கள் பூர்த்தி செய்யப்படுகிறது. வடக்கின் யுத்தத்தின் விளைவு யாதெனில் பெருமபாலன மக்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுநீரக வைத்தியர் என்றவகையில், மினரல் 786 நீரில் அதிகமான கனியப்பொருட்கள் காணப்படுகின்றது. இன்றைய சிறுநீரக நோயாளிகளில் 80மூ வீதமானோர் வடகிழக்கில் உள்ளவர்கள் ஆவர்.
இந்நிலையில் இராணுவத்தை வடக்கில் இருந்து அகற்றினால் மக்களுக்கு போக்கிடம் இல்லாமல் போய்விடும் என்று தெரிவித்துள்ளார் வைத்தியர் கிறிஸான்.

Read more...

வடிவேல் - சேனநாயக்க மீண்டும் பல்டியா?

அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் வசந்த சேனாநாயக்க மற்றும் வடிவேல் சுரேஸ் ஆகியோர் இன்றையை அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 14 ஆம் திகதி தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்திருந்தார். அதேநேரம் நான் அமைச்சுப்பதவியை மாத்திரமே பெற்றிருந்தேன் கட்சியை விட்டு செல்லவில்லை என தெரிவித்த வடிவேல் சுரேஸ் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் உட்கார்ந்திருந்தார். இவ்வாறான நிலையில் இவர்கள் இருவரும் இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

பெரும்பான்மை இருக்கும் தரப்புடன் தான் இருப்பதாகவும், புதிய அரசாங்கத்திடம் பெரும்பான்மை இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளதால் பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்த வசந்த சேனாநாயக்க தற்போது அரசின் பக்கம் சென்று அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளாராயின், அரசின் பக்கம் பெரும்பாண்மை வந்து விட்டதா என்ற கேள்வி எழுகின்றது.

Read more...

ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் கேட்கவில்லை என்கின்றார் சபாநாயகர்.

புதிய பிரதமர் மற்றும் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டி, அரசமைப்பின் 37.2 சரத்துக்கமைய பிரதம நீதியரசரின் அனுமதியுடன் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்கள், முப்படைகளினதும் கட்டளைத் தளபதி பொறுப்பு தனக்கு கிடைக்க வேண்டுமெனத் தெரிவித்து பிரதம நீதியரசர் நலின் ஜெயலத் பெரேராவுக்கு சபாநாயகரால் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கடிதம் ஒன்று சமூகவலைத்தளங்களில் நேற்று வெளியானது.

குறித்த கடிதம் உண்மைக்கு புறம்பானது என சபாநாயகர் அலுவலகத்தினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில், சபாநாயகர் கரு ஜயசூரியவால் பிரதம நீதியரசருக்கு நேற்றைய தினம் (20.11.2018) அனுப்பப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் கடிதம் ஒன்று உலாவருகின்றமை எங்களது அவதானிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இக்கடிதம் முற்றிலும் போலியானது என்பதுடன் அவ்வாறானதோர் கடிதத்தை சபாநாகர் அவர்கள் அனுப்பவில்லை என்பதை தெரிவித்துள்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

களுதாவளை சுயம்புலங்க பிள்ளையார் ஆலயத்தில் ஏகாதச ருத்ர வேள்வி ஆரம்பம்.

மட்டக்களப்பு களுதாவளை ஸ்ரீ சுயம்புலிங்கப் பிள்ளையார் அருளாசியுடன் கடந்த 19ம் திகதி ஆரம்பமான ஸ்ரீ ஏகாதச ருத்ர வேள்வி எதிர்வரும் 22.11.2018 வியாழக்கிழமை நிறைவுபெறுகின்றது.
அதிகாலையில் ஏகாதச ருத்ர ஜெபத்துடன் சிவபூஜைகள் ஆரம்பமாகி தென்னிந்திய பிரபல கர்நாடக இசைப்பாடகி கானவிநோதினிகலைமாமணி டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் சிவபுராணம் பாடி அனைத்து வரங்களையும் நல்கக்கூடிய ஸ்ரீ ஏகாதச ருத்ர வேள்வியைத் துவக்கி வைக்க பிரமாண்டமான ருத்ர வேள்வி ஆரம்பமாகி தொடர்ந்து சித்தர்களால் பூஜிக்கப்பட்ட மரகதலிங்கத்துக்கு ஏகாதச ருத்ராபிஷேகம் நடைபெற்று 11 வகையான தானங்கள் நடைபெறும்.

மகா யாகத்தின் பிரதம சிவாச்சாரியாராக பொன்னாலை வரதராஜப்பெருமாள் ஆலய பிரதச குரு சிவஸ்ரீ சோமாஸ்கந்தக் குரக்களும், சதுர்வேதபாராயணத்தை மயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் பிரதம குரு சசிவஸ்ரீ டாக்டர் ஸ்ரீனிவாச சசாஸ்திரிகளும் நிகழ்துத்துவதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று 20 செவ்வாய்க்கிழமை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளும், சின்மயாமிஷன் சுவாமி பிரம்மச்சாரி சீதாகாசானந்தா அவர்களும் கலந்து சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.









Read more...

Tuesday, November 20, 2018

அரசியல் தலைமைகளே உலாமாக்களிடம் அரசியல் ஆலோசனை பெறுவதை நிறுத்துவீர். றிசாத் ஏ காதர்

இலங்கையில் தேசத்தில் ஒக்டோபர் 26ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால் ஏற்பட்ட களேபரம் இன்று நாடாளுமன்றம் கலைப்பு வரை சென்றிருக்கின்றது. இதற்குப்பின்னால் இருந்திருக்கின்ற அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் ஏராளம். மேற்கத்தேய நாடுகளுக்கு பொருத்தமான, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு சார்பான போக்குடன் இலங்கை இயங்குதல் வேண்டும் என்கிற நிகழ்ச்சிநிரல்களுக்கும் குறைவில்லை.

மேற்குறித்த வெளிக்காரணிகள் ஓரளவான தாக்கத்தினை ஏற்படுத்தினாலும், உள்ளக காரணிகள் பல இருந்திருக்கின்றது என்பதனை ஜனாதிபதி அவர்களின் உரைகளில் இருந்து புரிந்துகொள்ளமுடிகின்றது. நல்லாட்சி ஒன்றினை இலங்கை தேசத்தில் நிறுவவேண்டும் என்பதுக்கு எடுக்கப்பட்ட முயற்சிகளை, முன்னால் பிரதமர் குழிதோண்டிப் புதைக்க முற்பட்டதன் விளைவு என்கிற கருத்து அரசியல் அரங்கில் பேசப்பட்டாலும் ஜனாதிபதியின் அதிரடி முடிவு அவசராமாக எடுக்கப்பட்டதுடன், ஆரோக்கியமற்றதாகவும் பார்க்கப்படுகின்ற சூழலில் முஸ்லிம் தரப்புகள் எப்படியான முடிவுக்கு வந்திருக்கவேண்டும் என்பதுடன், இன்னும் எஞ்சியிருக்கின்ற காலமொன்றுக்குள் எப்படி தமது அரசியல் நடவடிக்கையை நகர்த்துதல் பொருத்தம் என்பது பற்றி பொதுவெளிக்கருத்துகள் பற்றி அலசி ஆராய்தல் வேண்டும்.

முஸ்லிம் அரசியல் கட்சிகள் தமது பலங்கள் பற்றி இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளாமல் பலவீனங்களை முதலீடுகளாக வைத்தே அரசியல் செய்வதற்கு முற்படுகின்றனர். ஓர் அரசாங்கத்தில் இணைவது சாதாரண சில விவகாரங்களை மையப்படுத்தியதல்ல. தான் சார்ந்த சமூகத்தில் மிக நீண்டகாலம் தீர்க்கமுடியாது போன உரிமைசார், அபிவிருத்திசார் விடயங்களை பெற்றுக்கொள்வது முதன்மையானதாகவிருத்தல் வேண்டும். ஆனால் அவைகள் மு.கா.கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்எச்.எம். அஷ்ரபோடு முற்றுப்பெற்றுவிட்டது என்கிற கருத்தை கட்சி ஆதரவுகளுக்கு அப்பால் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.

ஏனெனில் கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றத்துக்கு பிற்பாடு நடாளுமன்ற ஒத்திவைப்பு இடம்பெற்று நவம்பர் 14ஆந் திகதி கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டு, சபாநாயகரின் கருத்தினால் அரசியல் அரங்கு களேபரம் அடைந்ததனால் நாடாளுமன்றத்தினை ஜனாதிபதி கலைத்திருந்தார். தற்போது மைத்திரி தலைமையிலான தரப்பு பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்கிற கருத்து மேலோங்கியிருக்கின்றது. இவ்வாறான சூழலில் முஸ்லிம் தரப்புகள் புத்திசாலித்தனமாக தமது நகர்வுகளை மேற்கொள்ளவில்லை என்கிற கருத்து நிறையவே. அப்படி தமது பலம் எதுவென நிலைநாட்டியிருந்தால் சிறுபான்மைக்குள்ள பலம் நிரூபிக்கப்பட்டிருக்கும் என்கிறனர் அரசியல் ஆய்வாளர்கள்.

அதனையும் தாண்டி சில விவகாரங்களை மைத்திரி தரப்புடன் எழுத்துமூலமான கோரிக்கையினை பெற்றுக்கொண்ட பிற்பாடுதான் ஆதரவு வழங்குவது என்றும் தீர்மானித்ததாக சொல்லப்படுகின்றது. ஆக இப்படி எழுத்துமூலம் பெற்றுக்கொள்வதற்குரிய மிகப் பொருத்தமான சந்தர்ப்பம் நல்லாட்சிக்கு வித்திட்ட 2015 காலப்பகுதியாகும். அதனை கைநழுவ விட்டுவிட்டு அரசியல் நெருக்கடி நிலை ஏற்பட்ட காலமொன்றில் எழுத்துமூலமான கோரிக்கைக்கு சாதகபதில் வழங்கப்படுதல் வேண்டும் என கோருவது பொருத்தமற்ற கோரிக்கையாகும்.

அரசியல் ரீதியாக நெருக்கடியை எதிர்கொண்ட ஜனாதிபதியை ஆதரித்து தமது அரசியல் பலம் இனறுள்ள சூழலில் எவ்வளவு பலமிக்கது என்பதனை நிரூபிக்கும் சந்தர்ப்பத்தினை தவிடுபொடியாக்கிவிட்டு ஜனநாயம், அரசியலமைப்பு மீறல் என்று கூறுவதிலுள்ள நியாயங்கள் எவை ?

இலங்கை தேச அரசியல் நிலமையானது இனவாத கட்டுக்குள் கட்டமைக்கப்பட்டடிருக்கவேண்டும் என சிந்திக்கும் சக்திகளுக்கு சாவுமணியடிக்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம் தலைமைகளுக்கு உண்டு. அதனை எப்படியான சந்தர்ப்பத்தில் ஏற்படுத்தவேண்டும் என்கிற இராஜதந்திரம் தெரியமால் முஸ்லிம் சமூகத்தை இக்கட்டான நிலைக்குள் தள்ளுகின்ற நிலை கைவிடப்படுதல் வேண்டும்.

அரசியலமைப்புக்கு உட்பட்டே தனது அத்தணை காரியங்களையும் அரங்கேற்றியதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். பிரதமர் நியமிப்பு விடயத்துக்கு உயர்நீதிமன்றினை அனுகாத ஐ.தே.கட்சி சர்வதேசத்தின் தலையீட்டினையே நம்பிக்கொண்டிருந்தது. அதன் பிற்பாடு சபாநாயகரின் அறிவிப்பு இந்த தேசத்தில் ஒரு கலவர நிலையை நவம்பர் 14ஆந் திகதி ஏற்படுத்திவிடலாம் என்கிற கருத்தை மையப்படுத்தியே நாடாளுமன்றை கலைத்தாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். இதில் எங்குமே சிறுபான்மை கட்சிகள் ஆதரவு தரவில்லை அதனால் எங்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்கிற கருத்து மறைமுகமாகவேனும் பொதிந்திருக்கவில்லை என்பதனையும் அவதானித்தல் அவசியம். ஆக இப்படியான அசாதாரண சூழலுக்கு வழிகோலும் ஜ.தே.கட்சியை மு.கட்சிகள் தொடரந்து ஆதரிக்கவேண்டிய தேவை என்ன?

நல்லாட்சி நிறுவபட்டு 3 ½ வருடகாலத்திற்குள் முஸ்லிம் சமூகம் அடைந்த நன்மைகள் எவை. அளுத்கம வன்முறையை தூக்கிப்பிடித்து துணிச்சலாக வெளியேறினோம் என சொல்லியவர்கள் அதற்கான ஒரு ஆணைக்குழுவையேனும் நியமித்தார்களா? அல்லது அதற்காக குரலெழுப்பினார்களா? அதனையும் தாண்டி சட்டம் ஒழுங்கு அமைச்சராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற சில நாட்களுக்குள் இடம்பெற்ற திகன, அம்பாறை கலவரங்களுக்கு நடந்தது என்ன?

பெற்றுக்கொள்ளப்பட்ட தீர்வு யாது? ஜ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் றஹ்மான் நாடாளுமன்றில் பேசியவை போதும் கடந்த அரசாங்கம் ஆட்சி செய்வதுக்கு பொருத்தமற்றது என்பதனை நிறுவ. இவைகளை புரிந்து கொள்ளாமல் சில வேளைகளில் குறித்த அரசியல்வாதிகள் கட்சிக்குள்ள விசுவாசத்தில் சமூகத்தை, தான் ஏலவே பேசிய மறந்து செயற்பாடுவதனை கண்டுகொள்ள முடியும். அதனை ஞாபகித்து கேட்கின்போது ஒற்றை வரியில் சொல்லிவிடுவர் எல்லாம் 'அரசியல்' என்று. இதனை பார்க்கின்றபோது அரசியல் என்பது அரிஸ்டோட்டில், கால்மார்க்ஸ், ரூசோ சொன்ன வியாக்கியானங்கள் புதைக்கப்பட்டுள்ளது என்று.

மேலும், முஸ்லிம் பகுதிகளில் புரையோடிப்போயுள்ள காணி ஆக்கிரமிப்பு விடயங்களைத்தானும் பேசிப் பெற்றுக்கொடுக்காத அரசாங்கம் ஒன்றுக்கு இன்னும் முட்டுக்கொடுத்து ஆதரவு கோருவது சமூகத்தின் நலனை முன்னிறுத்தியா என்றும் கேட்கத் தோன்றுகிறது.

ஆனால் முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கும், ஆட்சியாளர்களுக்குமிடையில் இணக்கங்கள் இருப்பது மட்டும் உறுதி. அதனை கடந்த நாட்களில் கண்டுகொள்ளவும் முடிந்தது. ஏனெனில் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனியே சென்று ஆதரவளித்து அமைச்சுப் பொறுப்புகள் பெற்றுக்கொள்வதற்குரிய சந்தரப்பம் அவர்களுக்கு வாய்த்திருந்தது. அதனை தடுத்து நிறுத்தும் அதிகாரம் என்பது சாதாரணமானதல்ல. இதனை புரிந்துகொள்ளாமல் அரசியல் அரங்கில் ஆதரவாளராக இருப்பதது சிறுபிள்ளைத்தனமானது. அதிலும் அதிகாரம் எந்தக்கட்சித் தலைவருக்கு இருக்கிறது என்கிற போட்டியும் உரசிப்பார்க்கப்பட்டதும் இங்கு ஞபாகிக்கவேண்டியதே.

இலங்கை தேசத்தில் பேரினவாதிகளின் கோரக்கரங்களுக்குள் அவ்வப்போது சிறுபான்மை சமூகம் அள்ளப்பட்டிருந்தது. அதிகமான சந்தரப்பங்கள் கற்றுக்கொள்வதுக்கு ஏதுவாக இருந்திருக்கின்றது. ஆனால் அதில் முஸ்லிம் தரப்பு கற்றுக்கொண்டது அரிது.

இனவாத சிந்தனையை இந்தநாட்டில் ஊன்றி விதைத்தவர்கள் இருக்கின்ற முகாமில் தஞ்சமடைந்துகொண்டு சமூகத்தை காப்பாற்ற முன்வந்திருக்கின்றோம் என்கிற பகடிகள் அரசியல் அரங்கில் ஏராளம்.

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை மிக மோசமான சொற்பதங்கொண்டு திட்டித்தீர்த்த முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு அரிய சந்தர்ப்பம் மிக அண்மையில் வாய்த்திருந்தும் அதனை சரிவர சாதிக்கமுடியாத நிலையிழந்து நிற்பதானது இந்த சமூகத்தின் மீதுள்ள அக்கறையீனமே.

அப்படியாகவிருந்தால் ரணில் விக்ரமசிங்க தரப்பிலான அரசாங்கம் நிறுவப்படும்போது முஸ்லிம் சமூகத்துக்கு சார்பாக செய்துகொள்ளப்படட்ட ஒப்பந்தங்கள் என்ன? அதுவல்லாமல் நிறுவப்படவிருந்த அல்லது நிறுப்படப்போகின்ற மைத்திர – மஹிந்த அரசாங்கத்தினை இன்னும் இனவாத சிந்தனைக்குள் கட்டுப்படுத்தி சமூகத்தை வழிநடாத்த எடுக்கின்ற எத்தனங்களின் பின்புலம் எவை என்கிற கேள்விக்கு பதிலளிக்கப்படுதல் வேண்டும்.

மேலும், எந்தப் பெரும்பான்மைக் கட்சிகளுடன் சங்கமிப்பது என்கிற நிலவரம் வருகின்ற போது உலமாக்களை அழைத்து ஆலோசனை கேட்கிற நிலை இன்னும் இச்சமூகத்துக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பதனை புரியாமல் அரசியல் செய்கிற நிலை இல்லாமலாக்கப்படுதல் வேண்டும். கட்சிகளினதும், அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட முடிவுகள் சிலநேரம் உலாமக்களின் முடிவுகளாக அறிவிக்கப்படுகின்றபோது இலங்கை தேசத்தில் வாழுகின்ற பெரும்பான்மை பேரினவாத சக்திகளுக்கு தீனியாய் இருந்துவிடும். அப்போது அதனை கட்டுப்படுத்த போதுமான சக்தி எந்த தரப்பிடமும் இருந்துவிடாது என்பது கடந்தகாலத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள்.

ஆக, எந்த அரசியற் தரப்பும் பிரித்தாளும் கைங்கரியத்தை செய்துவிடாதீர்கள். மக்கள் இந்த தேசத்துக்குரியவர்கள். அவர்களின் பொதுவான பார்வையின் கீழ் கட்சிகளுக்கான ஆதரவுத் தளம் மேலெழும். கடந்த 2015ஆம் ஆண்டுத் தேர்தலில் அரசியற் கட்சிகளின் முடிவுகளுக்கு முன்னரே மக்கள் தீர்மானம் முன்னின்றது அதன் பிற்பாடு முஸ்லிம் அரசியல் கட்சிகள் திக்குமுக்காடியே வெளியேறிய வரலாறும் உண்டு. கட்சிகளின் பெயரால் 'சமூகத்தக்கு' என்கிற கோசத்தை முன்னிலைப்படுத்தி பிரித்துவிட்டுச் சென்றுவிடுவீர்கள். சிலசமயம் அடுத்தமுறை நாடாளுமன்ற ஆசன அதிஷ்டம் இல்லாமல் போகலாம். ஆனால் மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள கைசேதப்படுவர்.

Read more...

சகலவற்றுக்கும் சபாநாயகரே பொறுப்பாம்! கூறுகின்றார் வீரவன்ச

நாடாளுமன்றில் அண்மையில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்கள் அனைத்திற்கும் கரு ஜயசூரியவே பொறுப்பு சொல்ல வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தற்பொழுது நடைபெறும் நாடாளுமன்ற அமர்வுகள் சட்ட ரீதியானதா என்ற கேள்வியும் எழுப்பினார்.

உச்ச நீதிமன்றின் இடைக்கால உத்தரவின் அடிப்படையில், நாடாளுமன்றம் கூட்டப்பட்டமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் சட்டத்திற்கு அமைய அரச ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்.

அதிகார மோகத்தினால் ஐக்கிய தேசியக் கட்சியினர் இவ்வாறு குழப்பங்களை செய்து வருகின்றனர்.

நிறைவேற்று அதிகாரத்திற்கும் நீதிமன்றத்திற்கும் இடையில் முரண்பாட்டு நிலையை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவினால் சர்வாதிகார அடிப்படையில் செயற்பட முடியாது.

இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் தலையீடு செய்வதனை நோக்கமாகக் கொண்டு கரு ஜயசூரிய உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் செயற்பட்டு வருகின்றனர் எனத் தெரிவித்தார்.

Read more...

ஹைதியில் ஊழலுக்கு எதிரான போராட்டம்: 6 பேர் பலி

கரீபியன் தீவுகளில் அமைந்துள்ள ஹைதி நாட்டில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் பலியாகினர். 5 பேர் காயமடைந்தனர்.

ஹைதி அதிபர் ஜொவினெல் மோஸ் அந்நாட்டில் எழுந்த ஊழல் விசாரணையை முறையாக நடத்தத் தவறியது தொடர்பாக அதிபர் ராஜினாமா செய்யுமாறு எதிர்க் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்நிலையில் ஹைதி தலைநகர் போர்ட்-அயு-பிரின்ஸில் அதிபர் ஜொவினெல் மோஸ்ஸின் ஊழல் ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை பேரணி சென்றனர். இதில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் 6 பேர் பலியானதாகவும், 5 பேர் காயம் அடைந்ததாகவும் பலர் கைது செய்யப்படுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து ஹைதி போலீஸார் தரப்பில், ''அமைதியாக நடந்த பேரணியில் போலீஸாரை நோக்கி கற்கள் வீசப்பட்டன. இதனைத் தொடர்ந்தே வன்முறை வெடித்தது'' என்று கூறப்பட்டுள்ளது.

ஹைதி நாட்டில் அண்மையில் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்பட்டது. இந்த அறிவிப்பு மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மக்கள் தலைநகர் போர்ட்-அயு-பிரின்ஸில் திரண்டு அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டமும் வன்முறையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.




Read more...

நாட்டின் இன்றைய அரசியல் நிலைமை எங்களை ஐ.நா வில் பலவீனப்படுத்தும். GSLF தலைவர்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் அசமந்தப்போக்கானது ஐ.நா வில் எம்மை பலவீனப்படுத்தும் என்பதுடன் இனவாதிகளுக்கு சாதகமா அமைந்து விடும் என உலக இலங்கையர் பேரவையின் தலைவர் சந்திரகுமார தெரிவித்துள்ளார்.

'முரண்பாடற்ற ஆட்சியை உருவாக்கி மக்களின் இறையாண்மையை காப்போம்'எனும் தொனிப்பொருளில் உலக இலங்கையர் பேரவையால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர், தொடர்ந்து பேசுகையில் :

இன்றைய நாட்டின் அரசியல் சூழ்நிலையானது மிக கவலைக்கிடமான நிலையில் உள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைப்பெறவுள்ள ஜெனிவா மனித உரிமை சம்மேளனத்தில் எவ்வாறு முகம் கொடுக்கப் போகிறோம் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடினோம். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தேசபற்றுள்ள இலங்கை வாழ் மக்களின் இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாகவும் உரையாடினோம். ஜெனிவா சம்மேளனத்தின் போது தமிழ் டயஸ்வோரவுடன் இணைந்து ஏனைய சார்பு நாடுகள் விடுத்த சவால்களுக்கு முகம் கொடுத்தோம்.

ஆனால் இன்று நாட்டின் அரசியல் சூழ்நிலையானது கவலைக்கிடமாக உள்ளது. உள்நாட்டில் அரசியல் தலைமைகளின் முறையற்ற செயற்பாடுகளினால் சர்வ்தேசமே கைக் கொட்டி சிரித்ததை நரம் நேரடியாகவே கண்ணுற்றோம்.
இன்றைய அரசாங்கத்தின் ஸ்திரமற்ற நிலையை வெளிநாட்டு தூதுவர்கள் பாராளுமன்ற செயற்பாடுகளின் போது கண்டுகொண்டனர். ஆளும் கட்சியினரும் எதிர்கட்சியினரும் ஒன்றினைந்து செயற்படும் நிலையில் இல்லை என்பதனை உணர்ந்தே அவர்கள் அவ்வேளையில் கைக்கொட்டி சிரித்து கொண்டிருந்தனர்.

அத்தோடு இச்சூழ்நிலையை பயன்படுத்தி நாட்டினுள் இனவதத்தை தூண்டிவிடவும் சிலர் முயற்சிக்கின்றனர். அதற்குஉதாரணம் தமிழகத்தில் இருந்து வருகை தந்த திருமாளவன்.

மார்ச் மாதம் 30 இடைக்கால பிரேணை ஒன்றினை முன்வைத்தனர். 2 வருடங்கள் அதற்கான கால எல்லையாக இருந்தது. அக்காலப்பகுதியில் பல தூதுவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர். அவர்கள் வந்து போன ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு எதிராகவே கருத்துக்களை முன் வைத்திருந்தனர். ஒட்டு மொத்த முடிவும் மார்ச் மாதம் வெளியிடுகையில் எல்லாம் எமக்கு எதிராகவே இருக்கும்.

நல்லாட்சி அரசாங்கத்தில் 2015-10-01 ம் திகதி அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட நாட்டிற்கு பொருத்தமற்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்கள். இவ்வாறான அரசாங்கத்திடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. நாட்டை பாதுகாத்த இராணுவ வீரர்களையும் அரசியல் தலைவர்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வரை கொண்டு சென்றபோது அமைதி காத்தது நல்லாட்சி அரசாங்கம்.

2015 ம் ஆண்டில் தமிழ் டயஸ்ஹோரா (புலிகள்) ரணில் விக்கிரமசிங்க உட்பட குழுவினருக்கு ஆதரவளித்தது. மீண்டும் அதற்கான முயற்சியே நடைகெறுகின்றது.

நாம் மக்களை கேட்டுக்கொள்ளவது அரசியல் தலைமைகளை விட மக்களே விழிப்புனர்வுடன் இருத்தல் வேண்டும். மக்களாட்சியை உறுதிப்படுத்த பொது தேர்தலை மக்கள் வலியுறுத்தல் வேண்டும். இல்லையென்றால் இனவாத்துக்கு தூண்டப்பட்டு நாடு பிளவுபடும். நாட்டினை அழிவுபாதைக்கு இட்டுச் செல்லும்.

ஆகவே நாட்டினை கூறுபோடாத ஒன்றிணைத்து செயற்படுத்தும் அரசாங்கத்தை தேர்தெடுத்து மக்களின் இறையாண்மையை பாதுகாத்தல் வேண்டும்.

Read more...

Monday, November 19, 2018

ரெலோவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் பகிரங்க மடல்!

ரெலோ இயக்த்தின் தற்போதைய மற்றும் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றார் சோதிலிங்கம். முன்னாள் ரெலோ உறுப்பினரான அவர் அவ்வியக்த்தின் முறைகேடுகள் தொடர்பில் கடந்த சிலவாரங்களாக வாரந்தம் ஒரு கடிதத்தை தனது அமைப்பின் தலைமையை நோக்கி எழுதுகின்றார்.

ரெலோ அமைப்பு தற்போது தனி நபர்களின் மட்டுப்படுத்தப்பட்ட ஸ்தாபனமாகியுள்ளதாக குறிப்பிடும் சோதிலிங்கத்தின் கடிதத்தில் பல்வேறு உள்வீட்டு விவகாரங்கள் அம்பலமாகின்றது.

எழுச்சி, 19/11/2018 (கடிதம்05, மாதம்11, கிழமை 03)

தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.

தமிழீழ விடுதலை இயக்கம், இலங்கை.

போராடிய இனத்தின் பிரதிநிதிகளாக உங்கள் அரசியல் மக்களுக்கான தலைமையாக இல்லை என்பதையிட்டு மனவருத்தமாக உள்ளது.

அண்மைக்காலமாக ரெலோவினால் இயக்கப்படும் அரசியல் என்பது ஒரு சிலர் தமது சுய நலங்களை திருப்திப்படுத்துவதாகவும் தமிழ் மக்களுக்கு எந்த பிரயோசனத்தையோ , ஆழுமையேயோ தரவில்லை என்பது மட்டுமல்லாமல் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான குரலாகவும் இருக்கவில்லை என்பது வேதனையானது, இக்கருத்தில் மாற்றுக்கருத்து இருக்காது என்பது வெளிப்படையானது (நாம் ஆய்வுக்கு தயார்).

அண்மைக் காலங்களில் இலங்கையில் ஏற்படும் அரசியல் சிக்கலாக எழுந்திருக்கும் நிலைமைகளை தமிழர்களின் அரசியல் உரிமைகளின் அங்கீகாரத் தவறுகளையும், கடந்த காலங்களில் தமிழர்கள் மீதான தாக்குதல்களாக வெளிவந்த இனக் கலவரங்களை செய்ய முடியாது போய் பாராளுமன்ற உறுப்பினர்களின் சண்டையாக மாறியுள்ளதை தெளிவுபடுத்தும் அரசியல் ஆழுமையை ரெலோ தவறியுள்ளது.

தமிழர்கள் மீது இனவாத நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்ட கட்சிகள் இன்று தம்மிடையே மோதுவதின் உள்ளார்த்தத்தை புரிய "விடுதலை இயக்கம்" எப்படி தவறுவது? இயக்கத்தின் அரசியல் புரிதல் இன்மையையே வெளிப்படுத்துகின்றது.

ரெலோ தவறியது மட்டுமல்லாது மக்களை மறந்து பிற்போக்கு நிலைகளுக்கு ஆதரவாகவும், கடந்த கால இலங்கை அரசின் இனவாத நடவடிக்கைகளுக்கும் பாராளுமன்றத்தில் நடைபெற்ற சண்டைகளுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்த "தமிழீழ விடுதலை இயக்கம் " தவறி விடுதலை இயக்கத்தின் பெயருக்கு இழுக்கு ஏற்ப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி இயக்கத்தில் ஒரு சில தனிப்பட்டவர்களினால் மக்களுக்கான இயக்க இயங்கு முறை தவற விடப்படுகிறதை தெரிவிக்க விரும்புகிறோம்.

மக்களின் பக்கத்திலிருந்து சிந்திக்கும் அரசியலை முயற்சிக்க வேண்டிய அவசியம் எம் முன்னால் உள்ளது.

நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.

த சோதிலிங்கம்.
19/11/2018.

தொர்புகள்:
uktelo@gmail.com
telolondon@gmail.com


எழுச்சி, 12/11/2018 (கடிதம்04, மாதம்11, கிழமை 02)

தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.

தமிழீழ விடுதலை இயக்கம், இலங்கை.

தமிழீழ விடுதலை இயக்கம் தனது 1984 ம் ஆண்டுகளின் கைக்கூலி, கைநாட்டு அரசியலிலிருந்து வெளியே வர வேண்டும்.

தமிழீழ விடுதலை இயக்கம் இயக்கத்தின் இன்றய அரசியல் இயக்கம் என்ன என்ற வெளிப்படையான தகவலற்றும் , தமிழர் உரிமைப் போராட்டம் தொடர்பான நிலைப்பாட்டை தெளிவாக முன்வைக்காமலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைக்கு பின்னால் வால்பிடிக்கும் அரசியலையே ரெலோவின் அரசியல் என்ற பொது மக்கள் அபிப்பிராயம் வளர்க்கப்பட்டு விட்டது.

தமிழீழ விடுதலை இயக்கத்துக்கும் அரசியலுக்கும் வெகுதூரம் என்ற பொதுக் கோட்பாட்டுக்கு இதர அரசியல் கட்சிகள், அரசியலில் இயங்கும் தோழர்களும் கருத்து கொண்டுள்ளதை காண்கிறோம்.

தமிழீழ விடுதலை இயக்கம் 1983 க்கு பின்னர் இந்திய உதவியுடன் குறிப்பாக இந்திய இராணுவ தலையீட்டின் மூலம் இந்திய மக்களின் நலனுக்கு உட்டபட்ட தமிழர் அரசியல் அரிமைகளுக்காக இந்தியாவுடன் இணைந்து கிளர்ச்சி இயக்கமாக இயங்கி தமிழர்களின் அபிலாசைகளை பெறுதல் என்பதே நோக்கமாக செயல்பட்டு வந்திருந்தது.

அது பின்னர் புலிகளினால் உடைக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்ட பின்னர். ரெலோ மக்களுக்கான தனது அரசியல் நிலைப்பாடு என்ன என்பதையோ, மக்களுக்காக எப்படி இயங்குவது என்பது பற்றியோ எங்கும் எந்த கருத்தையும் முப்பது வருடங்களாக முன்வைக்க வில்லை.

அண்மைக்கால இலங்கை அரசின் குழப்பங்களின் போதும் ரெலோ தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாது கூட்டமைப்பின் பின்னால் நின்றது. அடுத்த நாள் மக்கள் ஆணை தந்தால் மகிந்தாவை ஆதரிப்போம் என்ற கூற்று ரெலோவின் அரசியல் திராணியற்ற பண்பையே வெளிப்படுத்தியுள்ளது.

ரெலோ தனது 1983 கைக்கூலி, கைநாட்டு அரசியலிலிருந்து வெளியேறி விடுதலைப் போராட்ட இயக்கத்தின் பண்புகளுடன் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வெற்றெடுக்கும் அரசியலை வெளிப்படுத்தி இயங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.

த சோதிலிங்கம்.
12/11/2018.

தொர்புகள்:
uktelo@gmail.com
telolondon@gmail.com


எழுச்சி /29/10/2018 (கடிதம்02, மாதம்10, கிழமை04)

தமிழீழ விடுதலைஇயக்கம்
இலங்கை.

நாட்டில் ஏற்ப்படும் அரசியல் மாற்றங்களில் மாற்று அரசியலையே மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.- கடிதம்:

இலங்கையில் காலத்துக்கு காலம் ஏற்ப்பட்டு வந்த சிங்கள தரப்பு அரசியல் மாற்ங்களும் அந்த அவர்கள் விரும்பும் அரசாங்க மாற்றத்துக்காக தமிழர்கள் மீது சச்சரவுகளை அவிழ்த்து விட்டே வெற்றி பெறும் நிலையில் இருந்தனர் , அண்மைக்கால இலங்கை அரசியல் அது போன்ற நிலைமைகளிலிருந்து மாற்றம் பெற்றுள்ள போதும், தமிழ் தலைமைகள் நலிவடைந்திருப்பது துர் அதிட்டமேயாகும்.

அண்மைய இலங்கை அரசியல் மாற்றத்திற்கான பதில் வழங்குதலை தமிழ் போராட்ட இயக்கங்களுடன் இணைந்த பொது முடிவு எடுப்பதையே அரசியல் தோழர்களின் எதிர்பார்ப்பாகும்.

கடந்த சில 5வருட காலங்களில் ரெலோ இயக்கம் அகத்தே எடுக்கப்படும் முடிவுகள் ஒரு சில உறுப்பினர்கள் மட்டும் எடுத்து வெளியிட்டிருந்தது பொதுவெளியில் தெரிந்தவிடயம் இந்த முடிவுகள் தலைமையில் சிலர் தமது சுய நலத்தின் அடிப்படையிலும் கட்சியின் பொது முடிவுக்கு உட்படாமலும் எடுக்கப்பட்டிருந்தது என்பது ரெலோவின் உள் இன்றும் கொதித்துக் கொண்டிருப்பதை அறிகின்றோம்.

மேற் கூறிய விடயம் விடுதலைப் போராட்ட இயக்கத்தின் அல்லது பொது அமைப்பின் நடைமுறைக்கு எதிரானது என்பதை தெளிவுபடுத்தி கடந்த இரண்டு நாட்களுக்குள் நடைபெற்ற மாற்றத்தை ரெலோ தனது கட்சியினுள்ளும், இதர போராட்ட இயக்கங்களுடனும் இணைந்து மேற் கொள்ளப்பட வேண்டும் எனவும் எதிர் பார்க்கிறோம்.

மிதவாத கட்சிகள் போல் அன்றி ஒரு வீடுதலைப் போராட்ட இயக்கத்துக்குரிய நிலைப்பாட்டினை உயர்த்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி.

முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.

த சோதிலிங்கம்.
29/10/2018.




Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com