Monday, November 19, 2018

டக்கிக்கு கதவடைக்கிறார் விக்கி!

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி பிறிதொரு கூட்டணி அமைத்து எதிர்வரும் வட மாகாண சபை தேர்தலை எதிர்நோக்க தயாராகி வருகின்றார் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.

தமிழ் மக்கள் பேரவையின் ஒர் அங்கமாக இருந்த அவர் தற்போது தனக்கென ஒரு தனிக்கட்சியையும் ஆரம்பித்துள்ளார். விக்கியின் முதுகில் பயணிக்க இருந்த சில சில்லறை கட்சிகளுக்கு விக்கியின் தனிவழிப்பயண முன்னெடுப்பு சற்று புளியை கரைப்பதாகவே இருந்து வருகின்றது. ஆங்காங்கே மிரட்டல்களும், நிபந்தனைகளும் விதிக்கப்படுவதை உணர முடிகின்றது.

கஜேந்திரர்களுடனிருந்து சற்று விலகிப்போக முனைந்த விக்கி தற்போது தன்னிலை உணர்ந்துள்ளார். கஜேந்திரர்களை விட்டுச் சென்றால் போவற்கு இடமில்லை என்பதை உணர்ந்தும் உள்ளார் என்று கஜேந்திரர்கள் மார்தட்டிக்கொள்கின்றனர்.

இந்நிலையில், மீண்டும் கஜேந்திரர்களுடன் இணைந்து கொள்வதற்கு முனைப்புக்காட்டியுள்ள அவர் ஈபிடிபி க்கு ஒரு விடுகை விட்டுள்ளார். அது என்னவென்றால், ஈபிடிபி தவிர்ந்த சகல கட்சிகளும் தங்களுடன் இணைந்திருக்கலாமாம்.

ஈபிடிபியை விக்கினேஸ்வரன் இவ்வளவு வெறுப்பதற்கான காரணம் சின்ன குழந்தைக்கும் விளங்கும். விக்கி வடமாகாண சபையை நாசம் கட்டியபோது, விக்கியை நிப்பாட்டி வைத்து கேள்வி கேட்ட ஒரே ஒரு மகன் தவராசா என்கின்ற ஈபிடிபி உறுப்பினர் என்பது யாவரும் அறிந்தது.


Read more...

கொலைச் சந்தேக நபரான அர்ஜூனவின் மெய்பாதுகாவலரை தொடர்ந்தும் விளக்க மறியிலில் வைக்க உத்தரவு.

கனியவள கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரி இம்மாதம் 23ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் அவர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 28ம் திகதி முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கனியவள கூட்டத்தாபனம் சென்றிருந்த போது அங்கு ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த துப்பாக்கிப்பிரயோகத்தில் 31 வயதுடைய கனியவள கூட்டுத்தாபன ஊழியர் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில் , சம்பவம் தொடர்பில் குறித்த பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவும் கைது செய்யப்பட்டு 5 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

பிரதமர் அலுவலக நிதியை முடக்குவதற்கு பிரேரணை.

பாரளுமன்றின் நம்பிக்கையில்லா பிரேரணையின் ஊடாக பிரதமர் பதவி நீக்கப்பட்டிருக்கின்றார் என்ற அடிப்படையில், பிரதமரின் செயலாளரிற்கு அரசாங்க பணத்தை பாவிப்பதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என தெரிவித்து பிரேரணை ஒன்று பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் இன்று (19) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணையை இன்று ஒப்படைப்பதாக கட்சித்தலைவர்களின் கூட்டத்தின் போது பாராளமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார்.

இதேவேளை குறித்த பிரேரணை பாராளுமன்றத்தில் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான விவாதங்கள் மூன்று நாட்கள் இடம்பெற்று வாக்கெடுப்பிற்கு விடப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் தற்போது, பெரும்பாண்மை உள்ள நிலையில் பிரேரணை நிறைவேற சாத்தியக்கூறுகள் நிறையவே காணப்படுகின்றது.

குறித்த பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர்களான நவின் திஸாநாயக்க, ரவி கருணாநாயக்க, ஹெக்டர் அப்புஹாமி, சதுர சேனாரத்ன ஆகியோர் பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் ஒப்படைத்தனர்.

Read more...

„நீ ஐக்கிய தேசியக் கட்சியாய் மாறிவிட்டாய்" அனுர மீது சீறிப்பாய்ந்த தினேஸ் குணரத்ன.

இன்று நண்பகல் 12 மணிக்கு கட்சி தலைவர் கூட்டம் சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தெரிவிக்குழு அமைக்கும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதருக்கான செலவீனங்களை நிறுத்துவது குறித்தும் யோசனைகள் ஆராயப்பட்டபோது, ஒரு கட்டத்தில் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயகவிற்கும் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஜேவிபி யின் தலைவர் அனுர குமார திஸாநாயகவைப் பார்த்து „நீ ஐக்கிய தேசியக் கட்சியாக மாறிவிட்டாய்" என அமைச்சர் தினேஷ் குணவர்தன கடுமையாக விமர்சித்துள்ளார். இதனை அடுத்து சினமடைந்த அனுரகுமார எம்.பி 'நான் ஐக்கிய தேசியக் கட்சியாக செயற்படவில்லை. ஆனால் உங்களின் தந்தை ஒரு ஐக்கிய தேசியக் கட்சிக் காரர், முதலில் தகுதியான வார்த்தைகளை பயன்படுத்த பழகுங்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் இருந்த ராஜித சேனாரத்ன எம்.பி' இவரது தந்தை மட்டுமல்ல தாத்தாவும் ஒரு ஐக்கிய தேசியக் கட்சிக் காரர்தான்' என அமைச்சர் தினேஷ் குணவர்தனவை பார்த்துக் கேலியாக கூறினாராம்.

Read more...

பொதுபலசேனா தேரர்கள் மீது கண்ணீர் புகைத்தாக்குல். ஜனாதிபதிக்கு கவலையாம்.

நீதிமன்று அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பொது பல சேனா வின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரரது நீதிமன்ற விவகாரங்கள் தொடர்பில், மகஜர் ஒன்றை வழங்க வந்த பிக்குகள் மீது பொலிஸார் தண்ணீர் பாச்சி தாக்கியதுடன் கண்ணீர் புகைப்பிரயோகமும் மேற்கொண்டிருந்தனர்.

இத்தாக்குதல் விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றின் ஊடாக ஜனாதபதி மைத்திரிபால சிறிசேன தனது கவலையை தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேரர்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் மேற்கொள்ள உத்தரவிட்டவர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஞானசார தேரரின் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் தேரர்களினால் வழங்கப்பட்ட மகஜரை பெற்றுக் கொண்ட ஜனாதிபதி அவ்விடயம் குறித்து தேரர்களுடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது






Read more...

சபாநாயகருக்கு எதிராக சரத் வீரசேகரா உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல்.

உயர் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு ஒன்று விதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர.

இன்று (19) உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அடிப்படை உரிமை மனுவில், பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியை அமுல்படுத்துவதற்குத் தடை விதித்து உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகரால் எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்காத நிலையில், சபாநாயகர் பாராளுமன்றத்தைக் கூட்டியமை, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என சுட்டிக்காட்டியுள்ள சரத் வீரசேகர, இதனூடாக மக்களின் உரிமைகளை மீறும் வகையில் செயற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் உரிமையுடன் தொடர்புடைய தமது மனுவை விரைவில் விசாரணை செய்வதற்கு திகதியொன்றை வழங்குமாறும், சபாநாயகரின் செயற்பாடுகளில் தவறு காணப்படுவாதக உத்தரவு பிறப்பிக்குமாறும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக சபாநாயகர், சட்டமா அதிபர் மற்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றம் கூட்டப்பட்டதனால் நாட்டின் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாகவும் இந்த செயற்பாட்டினால் சபாநாயகர் உட்பட பிரதிவாதிகள் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை மீறியுள்ளதாகவும் தீர்ப்பு வழங்குமாறு மனுதாரர் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

சஜித்திடம் கட்சியின் தலைமை பொறுப்பை கையளியுங்கள். மாத்தளை மேயர் ரணிலுக்கு கடிதம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாஸவிற்கு வழங்குமாறு கோரி, மாத்தளை மாநகர மேயர் டல்ஜித் அளுவிகாரே ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆரம்பத் தலைவர்களான டி.எஸ். சேனாநாயக்க முதல் ஆர். பிரேமதாஸ வரை ஆற்றிய சேவைகளை டல்ஜித் அளுவிகாரே தனது கடித்தில் நினைவுபடுத்தியுள்ளார்.

எனினும், 1994 ஆம் ஆண்டிலிருந்து ரணில் விக்ரமசிங்க தலைமைத்துவத்தை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் இதுவரை கட்சிக்கோ, கட்சி ஆதரவாளர்களுக்கோ நிலையான வெற்றியை பெற்றுக்கொடுக்க முடியவில்லை எனவும் அதற்கு காரணமான 11 விடயங்களையும் அவர் இந்தக் கடிதத்தில் நினைவுபடுத்தியுள்ளார்.

கட்சியின் தலைமைத்துவத்தைத் தேவையான விடயங்களின்போது இலங்கையின் கலாசாரத்துடன் இணைத்து செயற்பாடாமை

கட்சிக்குள் உள்ளக ஜனநாயகத்தில் சரிவு ஏற்பட்டமை

செயற்குழுவின் அதிகாரம் ஒரு தரப்பினக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை

தலைமைத்துவம் கீழ்மட்ட கட்சி ஆதரவாளர்களின் குரலை செவிமடுக்காமை

1994 ஆம் ஆண்டின் பின்னர் இரு தடவைகள் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநித்துவப்படுத்தும் வகையில்
அமைச்சரவையில் சந்தர்ப்பம் வழங்காமை

பல்வேறு காரணங்களால் கட்சியை விட்டுச்சென்றவர்களுக்ளை மீண்டும் இணைத்துக் கொள்வதற்கு உரிய திட்டங்களை முன்னெடுக்காமை

கீழ்மட்டத்தில் கட்சியின் செயற்பாடுகளை உறுதியாக முன்னெடுக்காமை

கட்சியின் உயரமட்ட பதவிகளுக்கு டி.எம். சுவாமிநாதன், திலக் மாரப்பன, மலிக் சமரவிக்ரம, ஆஷூ மாரசிங்க போன்ற மக்களின் உணவர்களை அறியாத மற்றும் வாக்கு வங்கி அற்றவர்களை தெரிவiசெய்தமை.

கட்சியின் சிங்கள பௌத்த புராணத்தையும் கிராமிய மக்கள் பலத்தையும் பாதுகாபப்தற்கு சிறந்த திட்டங்களை முன்னெடுக்காமை

மத்திவங்கியில் இடம்பெற்ற முறிகள் விநியோக சம்பவம் தொடர்பிலான பிரச்சினையை மக்களுக்கு தெளிவுபடுத்தாமை

சந்தர்ப்ப அரசியல் நிலைமைகளின்போது திறம்பட முகாமைத்துவம் செய்யாமை


போன்ற விடயங்களை மாத்தளை மாநகர மேயர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, இந்த நிலமையில் இருந்து கட்சியை மீட்டெடுத்து, வெற்றிப் பாதைக்கு கொண்டுசெல்வது தற்போதைய சூழ்நிலையில் இன்றியமையாது எனவும் பெரும்பாலான மக்களின் கோரிக்கையான சஜித் பிரேமதாஸவிற்கு தலைமைத்துவத்தை கையளிக்குமாறும் மாத்தளை மாநகர மேயர் டல்ஜித் அளுவிகாரே, ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

Read more...

கூடிய பாராளுமன்று சில நிமிடங்களில் கலைந்தது. மீண்டும் 23ம் திகதி

பல்வேறு சிக்கலான சூழ்நிலைக்கு மத்தியில் இன்று நண்பகல் நான்காவது முறையாகவும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடிய பாராளுமன்று அடுத்த அமர்வை எதிர்வரும் 23ம் திகதிக்கு ஒத்திவைத்து கலைந்தது.

பாராளுமன்று கூடுவதற்கு முன்னர் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பேசி எடுக்கப்பட்ட முடிவுகளின் பிரகாரமே இவ்வாறு பாராளுமன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23 திகதி ஐக்கிய தேசிய முன்னணியினரால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை ஒன்று தொடர்பில் தொடர்விவாதங்கள் நடாத்துவதற்கு நிகழ்சி நிரலிடப்பட்டுள்ளது.

புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச அவர்கள் நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றின் ஊடாக பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் அவரது காரியாலயத்திற்கான நிதி ஒதுக்கீடுகளை செய்ய முடியாது என்று பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விவாதங்கள் மூன்று நாட்கள் இடம்பெற்று பின்னர் வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற அமர்வை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு இன்று அனுமதி வழங்கப்படாத நிலையில் அமர்வில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

மஹிந்தவை பிரதமராக ஏற்காவிடின் பாராளுமன்று இயங்க முடியாதாம். பிரசன்ன ஜயவீர

பிரதமாராக மகிந்த ராஜபக்ஸ அவர்களை ஏற்றுக்கொள்ளாவிடின் பாராளுமன்றத்தில் மீண்டும் ஒருமுறை எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் என மிக உறுதியாக பிரசன்ன ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஸ அவர்களை பிரதமராக ஏற்றுகொள்ள தவறும் பட்சத்தில் சபாநாயகர் அவர்கள் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கடும் எதிர்ப்புக்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும் முறையான நம்பிக்கையில்லா பிரேரணை முன் வைத்தால் அதற்கு முகம் கொடுக்க தம்முடைய கட்சி தயார் எனவும் அவ்வாறின்றி சபாநாயகர் ஐக்கிய தேசிய கட்சியின் கைப்பொம்மையாக செயற்படுவாராயின் எமது உச்சக்கட்ட எதிர்ப்புக்கு முகம் கொடுக்க நேரிடும் என கருத்து தெரிவித்தார்.

Read more...

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை சுமந்திரன் பொறுப்பேற்றுள்ளாராம். சாடுகின்றார் வீரவன்ச

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும் விமல் வீரவங்ச குற்றஞ்சுமத்தியுள்ளார்.

நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வகட்சி பிரமுகர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வீரவன்ச, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில், எம்.ஏ.சுமந்திரனே மேற்படி சந்திப்பில் கருத்துகளை பெருமளவில் முன்வைத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட தரப்பினரிடம் தெரிவித்திருந்ததாக அமைச்சர் விமல் வீரவங்ச கூறியுள்ளார்.

அவ்வாறு நிலையியற் கட்டளையின் பிரகாரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படுமாயின், அதற்கு ஒத்துழைப்பு வழங்க தாம் தயார் எனவும் இந்த சந்திப்பின் போது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் தரப்பினர் கூறியதாக விமல் வீரவங்க குறிப்பிட்டிருந்தார்.


இதேவேளை, 113 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், அவர்களின் ஆதரவுக் கடிதங்களையும் எடுத்துக்கொண்டு, தாம் நாளை காலை ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்து, தமது பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சி இந்த சந்திப்பின்போது ஜனாதிபதியிடம் கூறியுள்ளது.

ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு பின்னர், ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் பீ பெரேரா மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் இதனைக் குறிப்பிட்டிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியினால் இவ்வாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய பதிலை இன்றைய சந்திப்பில் வழங்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

எனினும், இந்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை 10 மணிக்கு முன்னர் பதிலொன்றை வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு தமக்குள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் பீ பெரேரா கூறியிருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்றம் மீண்டும் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளதுடன், இன்றைய தினம் அமைதியான முறையில் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது அனைத்து கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more...

Sunday, November 18, 2018

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலையில் புதிய திருப்பம்: கொலை செய்ய உத்தரவிட்டாரா சவுதி இளவரசர்- சிஐஏ தகவல்

பத்திரிகையாளர் ஜமான் கஷோகியை கொலை செய்யுமாறு சவுதி இளவரசர் மொகமதுபின் சல்மான் உத்தரவிட்டிருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அரசின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ கருதுகிறது.

சிஐஏ தனது இந்த கருத்தை அமெரிக்க அரசாங்கத்தின் பிற பிரிவுகளான காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற துறைகளிடத்திலும் தெரிவித்திருப்பதாக சிஐஏ-வுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இளவரசர் சல்மானுக்கும் கஷோகி கொலைக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று சவுதி மறுத்து வந்தது. தற்போது சிஐஏவின் இந்த கணிப்பு அதனைப் பொய்யாக்கியுள்ளது.


சிஐஏ-வின் இந்த உளவுத்தகவலை முதன் முதலில் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டது. இதுதான் இன்று வரை அமெரிக்க அரசின் நிச்சயமான ஒரு மதிபீடாக இருந்து வருகிறது.

ஆனால் இது குறித்து வெள்ளை மாளிகையும், அமெரிக்க அரசுத் துறையும் இது குறித்து கருத்து கூற மறுத்துவிட்டன.

இது தொடர்பாக வாஷிங்டனில் உள்ள சவுதி தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், “இந்த மதிபீடு உறுதியாகத் தவறானது” என்று மறுத்துள்ளார்.

சவுதி அரசாங்கத்தின் கடும் விமர்சகரான பத்திரிகையாளர் கஷோகி, கடந்த அக்.2ம் தேதி துருக்கி பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக ஆவணங்களை எடுத்துவர இஸ்தான்புல் சென்ற போது அங்கு சவுதி தூதரகத்தில் பயங்கரமாகக் கொல்லப்பட்டார். இவருக்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் ஏற்பட்ட மோதலில் கஷோகி இறந்ததாக சவுதி கூறிவந்தது.

இது வேண்டுமென்றே செய்யப்பட்ட படுகொலை, குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு துருக்கி சவுதிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. சவுதி அரேபியாவின் அரசு வழக்கறிஞர் கஷோகி தொடர்பாக 5 பேர் மீது சந்தேகம் உள்ளது என்றும் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வியாழனன்று தெரிவித்தார். ஆனால் இவரும் கூட கஷோகியின் உடல் பாகம் பாகமாக வெட்டப்பட்டு அகற்றப்பட்டது குறித்து சவுதி இளவரசருக்கு ஒன்றும் தெரியாது என்றே கூறினார்.

இந்நிலையில் சிஐஏ சவுதி இளவரசர் உத்தரவின் பேரில் கஷோகி கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருப்பதற்கு ஆதாரமாக இளவரசரின் சகோதரரும், அமெரிக்காவுக்கான சவுதி தூதருமான காலேத் பின் சல்மான், கஷோகியுடன் உரையாடிய தொலைபேசி உரையாடலைக் கூறுகிறது.

அதாவது கஷோகி, இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்துக்குச் சென்று வேண்டிய ஆவணங்களைச் சேகரித்துக் கொள்ளுமாறு காலேத் தொலைபேசியில் தெரிவித்ததை சிஐஏ தனது ஆதாரமாகக் கருதுகிறது.

Read more...

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ பைபிளால் எறியவே இல்லையாம்.

கடந்த 16ம் திகதிய பாராளுமன்ற வன்செயல்நிகழ்வுகள் தொடர்பில் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ பெரும் விமர்சனத்திற்குரியவராகியுள்ளார். இவர் பொலிஸார் மீது கதிரை கொண்டு தாக்கும் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நடைமுறைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் இக்குற்றச்சாட்டுக்களை நிராகரித்து அவர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாதம் 16 ம் திகதி பாராளுமன்ற கூட்டதொடரின் போது நான் புனித பைபலை தூக்கி எறிந்ததாக ஐ.தே.கட்சி தலைவர் ரணில் விக்கிரம சிங்க அவர்கள் சமூக வலைத்தளங்களின் ஊடாக செய்திகள் பரப்பி வருகின்றார். என்மீதான இக்குற்றசாட்டை வன்மையாக கண்டிக்கின்றேன். நான் எனது மத்தை புனிதமாக மதிப்பவன். நான் கத்தோலிக்க மதத்தவன். நான் எனது மதத்தை எவ்வளவு உயர்வாக மதிக்கின்றேன் என்பது தொடர்பாக கத்தோலிக்க மத தலைவர்களுக்கு நன்கு தெரியும்.

என் மீதான தவறான பிரச்சாரத்தை மேற்கொள்ள மதத்தை ஆயுதமாக கையில்லெடுத்துள்ளனர். எம் மீது சேறு பூச முயற்சிப்பது அவர்களின் பலவீனத்தை காட்டியுள்ளது. நாம் ஜனநாயகத்தை காக்கவும் சபாநாயகரின் முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிர்பையே தெரிவித்தோம். இவ் எதிரப்பை மத அடிப்படையில் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல எத்தனிக்கின்றனர்.

எதிர்கட்சியின் கத்தோலிக்க அமைச்சர்களான நிரோசன் பெரேராஇ ஹரின் பிரனாந்துஇ ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் ஆளும் கட்சியின் நடவடிக்கைகளுக்கு சேறுபூசுவதற்கு மதத்தை ஊடகமாக பயன்படுத்தியமை பாவச்செயலாகும்.

அரசமுத்திரை பதித்த புத்தகத்தை புனித பைபிளாக உருவகித்து மதத்தை அரசியலாக்க முனைந்தமை வெட்கப்பட வேண்டிய விடயம் என அவர் தெரிவித்தார்.

Read more...

ஜனாதிபதியை ஜேவிபி சந்திக்க மறுத்ததற்கான ஐந்து காரணங்கள் கடிதம் ஊடாக.

இன்று ஜனாதிபதி சகல கட்சிகள் தலைவர்களையும் சந்திப்பதற்கு அழைப்பு விடுத்திருந்தார். அவ்வழைப்பை நிராகரித்து அவரை சந்திப்பதை மக்கள் விடுதலை முன்னணியினர் தவிர்த்திருந்தனர்.

அவர்கள் ஜனாதிபதியை சந்திக்க மறுத்ததற்கான ஐந்து காரணங்களை குறிப்பிட்டு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அக்கடிதத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலைக்கு ஜனாதிபதியே பொறுப்புக்கூறவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி,
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு,
ஜனாதிபதி அலுவலகம்,
கொழும்பு 01.

ஜனாதிபதி அவர்களே,

பாராளுமன்றத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடலுக்கு வரும்படி விடுத்த அழைப்பு தொடர்பில்...

உங்களின் செயலாளரினால், அனுப்பப்பட்ட 2018.11.17 ஆம் திகதிய கடிதத்தில் உங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வரும்படி எங்களின் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அந்த அழைப்பினை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் கீழ்காணும் விடயங்களை உங்களின் கவனத்திற்குக் கொண்டுவருகின்றோம்.

உங்களின் கலந்துரையாடலின் நோக்கமாக அமைந்திருப்பது பாராளுமன்றத்தில் தற்போதைய நிலைமைகளாகும். ஆனால், எங்களின் முடிவு என்னவெனில் பாராளுமன்றத்தில் தோன்றியுள்ள நிலைமையானது உங்களின் சதிகார அரசியல் தேவைக்காக உருவாக்கிய நடவடிக்கை காரணமாக நாட்டில் தோன்றியுள்ள ஸ்திரமற்ற நிலையைப் பிரதிபலிப்பதாகும். தற்போது நாட்டில் பாரிய அராஜக, ஸ்திரமற்ற நிலைகள் தோன்றியுள்ளன. ஏழு தசாப்தத்திற்கு பின்னர் இலங்கை அரசியலில் இவ்வாறான நிலையற்றத் தன்மை இவ்வளவு காலம் நீடித்திருப்பது இதுவே முதற்தடவையாகும். இது வெறுமனே தன்னிச்சையாக தோன்றிய ஒன்றல்ல பிரதானமாக ஐந்து சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒன்றாகும்.

01. கடந்த அக்டேபர் 26 ஆம் திகதி உங்களால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைச் சூழ்ச்சிகரமான முறையில் பிரதமர் பதவிக்கு நியமித்தமை மற்றும் பல சந்தாபப்ங்களில் கேலிக்கிடமான முறையில் ‘கெபினட்’ அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களை நியமித்தமை.

02. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையென அம்பலமாவதைத் தடுக்கும் நோக்கமாகக் கொண்டு பாராளுமன்றத்தின் அமர்வுகளை முடிவுக்கு கொண்டு வந்தமை.

03. மக்களின் இறைமையை தலைகீழாக்குகின்ற கேடுகெட்ட நடவடிக்கையாக பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டமை.

04. அந்த ஏல விற்பனை நடவடிக்கை தோல்வியுற்றதன் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தமை.

05. சதி சூழ்ச்சியின் மூலமாக அமைக்கப்பட்ட பிரதமருக்கும் அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் முறையான வழியில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்த போதிலும் அதற்கு ஏற்ற முறையில் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக உங்களின் சதிகார அரசியல் தேவைக்காக காலத்தை நீடித்தமை.

இந்த ஐந்தம்ச நடவடிக்கையில் உங்களின் முதன்மையான பங்களிப்பினை ஒருபோதும் மறைக்க முடியாத அளவுக்கு மக்கள் மத்தியில் திரை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு உங்களால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிக்கை சவாலுக்கு உட்படுத்தப்பட்டு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு இடைக்கால தடையுத்தரவு ஆணை பிறப்பிக்கப்பட்டு, இந்த வர்த்தமானி பத்திரத்தைத் தற்காலிகமாக மன்று இடைநிறுத்தியுள்ளது. அதற்கிணங்க அமர்வுகளின் முடிவின் பின்னர் தற்போது பாராளுமன்றம் மூன்று நாட்கள் கூடியுள்ளது.

ஆரம்ப தினமான 2018 நவம்பர் 14 ஆம் திகதி உங்களால் அநீதியான முறையில் அமைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக எங்களால், கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் 122 உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. அது பற்றி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட அந்த உறுப்பினர்களின் கையொப்பம் அடங்கிய மனுவில் எழுத்துமூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பெரும்பான்மை உறுப்பின்ர்களின் கோரிக்கையின் படி நிலையியற் கட்டளையை இடைநிறுத்தும் பிரேரணையில் (நிலையியற் கட்டளைகள் 135) முன்வைக்கப்பட்ட அந்த நம்பிக்கையில்லா பிரேரணை சத்தம் எழுப்பி முடிவை அறிவிப்பதன் மூலம் 48(1) அத்தியாயத்தின் சபநாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டு முறையாக நிறைவேற்றப்பட்டது. அதை உறுப்பினர்களின் பெயரால் வாக்கெடுப்பை நடத்துவதற்கு சபாநாயகர் மேற்கொண்ட முயற்;சியின் மூலம் தோல்வி உறுதியாதென தெரிந்து வைத்திருந்த அரசாங்க கட்சியெனக் கூறும் தரப்பினர் இடையூறு விளைவித்ததன் காரணமாக எடுக்கப்பட்ட முடிவென்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இந்த நிலைமை நவம்பர் 16 ஆம் திகதியும் அவ்வாறே நிகழ்ந்தது. உங்களின் உறுப்பினர்கள் தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து மற்றும் பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்துவதையும் தடுத்து பாராளுமன்றத்தில் வெறிபிடித்தவர்கள் போன்று செயற்பட்டதும் உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

எவ்வாறாயினும் இரண்டு தடவைகள் முறையாக இடம்பெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றியதை ஏற்றுக்கொள்ளவும் பெயரளவிலான பிரதமர் பதவியைக் கைவிடுவதை மறுதளித்து அது முறையாக இடம்பெறவில்லையென கீழ்த்தரமாக நியாயத்திற்காக கருத்துக்களை வெளியிடுவது ஜனாதிபதி ஒருவருக்கு பொருத்தமான ஒன்றல்ல என்றே நாங்கள் நினைக்கின்றோம். அபோன்று மக்களின் இறைமையை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறுகின்ற பாராளுமன்றத்தின் மூன்று நாள் நிகழ்வுகளில் ஏற்பட்ட கலகமும் அருவறுக்கத் தக்க நிலைக்கும் அதன் மூலமாக ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலைக்கும் முழுமையாக பொறுப்புக் கூற வேண்டியவர் நீங்கள். உங்களின் தன்னிச்சையான நடவடிக்கையாகும்.

அதற்கிணங்க நாடு இன்று எதிர்கொண்டிருக்கும் ஒட்டுமொத்த அராஜக மற்றும் ஸ்திரமற்ற நிலைமையின் ஸ்தாபகர் நீங்கள். அதை நிவர்த்தி செய்ய முடிவதும் உங்களுக்கேயாகும். அதற்கு அப்பால் இந்த விடயங்கள் தொடர்பில் உங்களுடன் கலந்துரையாடுவதன் மூலமாக பெற்றுக்கொள்ள கூடிய தீர்வு இருக்கிறாதா? என்பதை நாங்கள் நம்பவில்லை. பாராளுமன்றத்தைப் பிரதிநதித்துவம் செய்யும் பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சி என்ற வகையில், எங்களால், இது தொடர்பில் உயரிய பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்போது இருப்பதெல்லாம் உங்களின் தரப்பினர் அதற்காக செயற்படுவதேயாகும். நாட்டுக்காக அந்த நடவடிக்கையை எடுப்பதற்கு உங்களுக்கு சுயநம்பிக்கை எஞ்சியிருக்க வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.



Read more...

முடிவுகள் இன்றி முடிவுற்றது சந்திப்பு.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் அசமந்த நிலை தொடர்பில் ஓர் தீர்வினை காணும் பொருட்டு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு எவ்வித தீர்வும் எட்டப்படாமல் முடிவுற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

ஜேவிவி மற்றும் சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டிருந்த குறித்த சந்திப்பில் ரணில் விக்கரமசிங்க , மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி தலைமையில் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ரணில் விக்கரமசிங்கவை எக்காரணம் கொண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் என மைத்திரிபாலவும், ரணில் தான் பிரதமர் என ஐக்கிய தேசியக் கட்சியும் விடாப்பிடியாகவுள்ளனர். ஆனால் இதன் சுமைகளை மக்கள் சுமக்க வேண்டியவர்களாக மாறியுள்ளனர். மக்கள் மீது அக்கறையுள்ள தலைமைகளாக இருந்தால் பரஸ்பர விட்டுக்கொடுப்புக்கு தயாராவேண்டும் என மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர்:


Read more...

பாராளுமன்ற மோதல் குறித்து 6 பேரிடம் விசாரணை

பாராளுமன்றில் இடம்பெற்ற மோதல் குறித்து இதுவரை 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விசாரணைக்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றில் ஏற்பட்ட மோதலில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டதாகவும் அதில் 5 பேர் தொடர்பான வைத்திய அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொள்ளவும் கூரிய ஆயுதம் வைத்திருந்த எம்பி தொடர்பில் விசாரணை நடத்தவும் வீடியோ ஆதாரங்களை பெறவும் சபாநாயகரின் அனுமதி பெறவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read more...

விருப்பத்திற்கு மாறாக மாணவர்களை ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்துச் சென்ற அதிபருக்கு எதிராக முறைப்பாடு.

பாடசாலைக்கு சென்ற தமது மகனை, அதிபர் பலவந்தமாக ஆர்ப்பாட்ட போராட்டமொன்றில் ஈடுபடுத்தினார் என, அந்த மாணவனின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய அதிபருக்கு எதிராகவே வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

“கடந்த வெள்ளிக்கிழமை தரம் 8 இல் கல்வி பயிலும் எமது மகனை மூன்றாம் தவணை பரீட்சை எழுத பாடசாலைக்கு அனுப்பினோம். ஆனால் எமது மகன், அவருக்கு விருப்பமில்லாத நிலையில் பாடசாலையிலிருந்து வீதிக்கு அழைத்து வரப்பட்டு, அதிபருக்கு சார்பான ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்ற செய்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததன் பின்னரே அவர் வகுப்பறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

அதிபரை நம்பியே எமது மகனை பாடசாலைக்கு அனுப்பி வைக்கிறோம். மாணவர்கள் பாடசாலையிலுள்ள ஏழு மணித்தியாலமும் முழு வழிகாட்டியும், பொறுப்புதாரியும் அதிபர்தான்.

அதிபர் பாடசாலையில் இருந்தபோதே இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. எனவே இதற்கான முழு பொறுப்பாளியும் அதிபர்தான். இலங்கை சட்டங்களின் பிரகாரம் பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்ட்தில் ஈடுபடுத்தக் கூடாது என அறிகிறேன். எனவே சட்டத்திற்கு புறம்பான விதத்தில் எனது மகனை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்திய அதிபரை விசாரணை செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி

வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் பாடசாலை மாணவரகளிற்கு வழங்கப்பட்ட மீ்ன்ரின்களில் மோசடி செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டு பாடசாலை அதிபருக்கு எதிராக சிறு குழுவொன்று ஆர்ப்பாட்டம் செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து- பாடசாலை அதிபருக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதாக குறிப்பிட்டு- பாடசாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இரண்டு அணிகளும், இரண்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதரவாளர்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.


Read more...

ஜனாதிபதி – ரணில் சந்திப்பு ஆரம்பமானது. சபாநாயகர் – ஜேவிபி பகிஸ்கரிப்பு

பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் திட்டமிடப்பட்ட சந்திப்பு சற்று முன்னர் ஜனாதிபதி மாளிகையில் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகியுள்ள இச்சந்திப்பில் மஹிந்த ராஜபக்ச , ரணில் விக்கிரமசிங்க உட்பட்ட கட்சித் தலைவர்களுடன் பல கட்சிகளின் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ள அதேநேரம் குறித்த சந்திப்பினை சபாநாயகர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் பகிஸ்கரித்துள்ளனர்.

Read more...

வெளிநாடுகளின் தலையீடு இலங்கையில் அதிகரிக்குமாயின் ஆயுதம் தூக்குவாராம் அருண் தம்பிமுத்து.

இலங்கையில் நிலவுகின்ற அரசியல் அசமந்த போக்கினை சாட்டாக வைத்து வெளிநாட்டுசக்திகள் உள்நாட்டில் விவகாரங்களில் தலைநுழைக்க முற்படுவார்களாயின் அவர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கவும் தயங்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார் அருண் தம்பிமுத்து.

கடந்த 15ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாராளுமன்றில் மேற்கொண்ட உரையை அடுத்து தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை மேற்கொண்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ச அவர்கள் இன்று (15.11.2018) பாராளுமன்றில் நிகழ்த்திய உரை, நான் ஏன் அவருடன் எட்டுவருடங்களுக்கு முன்னர் இணைந்து கொண்டேன் என்பதை நினைவூட்டியுள்ளது. அத்துடன் கரு ஜெயசூரிய அவர்களினால் அவர்களது கட்சியில் இணைந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட வேண்டுதலை நான் கணக்கிலெடுக்காதது பற்றியும் பெரு மகிழ்சியடைகின்றேன்.

இந்நாட்டின் இறைமையை விட எனக்கு மேலானது எதுவும் கிடையாது. ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லாட்சி, வெளிநாட்டு உறவு அல்லது வேறு ஏதாவது காரணங்களின் போர்வையில் எமது தேசிய நலனை அடகு வைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

கரு ஜெயசூரிய அவர்கள் வெளிநாட்டு நபர்களை பாரளுமன்றில் உள்நாட்டு விடயங்களை அவதானிக்க அனுமதித்த விடயத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னைப்பொறுத்தவரை மேற்குலகின் ராஜதந்திரிகளை கண்காணிப்பாளர்களாக அல்லது மேற்பார்வையாளர்களாக வைத்துக்கொள்வது என்பது இந்நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு விரோமானதாகும். இது தொடர்பில் மேலும் நான் விரிவாக சொல்வதாயின், இந்நாட்டின் மீது நான் கொண்டுள்ள பெருமதிப்புக்கு, கரு ஜெயசூரியவின் நவகாலனித்துவ செயற்பாடு அவமானத்தை தேடித்தந்துள்ளது.

உங்களில் சிலர் என்னை ஓர் தேசியவாதி அல்லது வெளிநாட்டினருக்கு எதிரானவன் என்று அழைக்கலாம். ஆனால் இந்த நாடு வெளிநாட்டு சக்திகளின் அச்சுறுத்தலை எதிர்நோக்குமானால், அது எந்த பலம்வாய்ந்த சக்தியாக இருந்தாலும், அவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த தயங்கமாட்டேன் என்பதை உங்களுக்கு காட்டுவேன்.

நான் என்றும் உங்களுக்கு கூறுகின்ற மாதிரி எனக்கு ஒரு தாயும் ஒரு தாய்நாடும் மாத்திரமே உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more...

ஜூன் மாதத்திற்கு முன்னர் பொது தேர்தல்-ரணில் விக்கிரமசிங்க.

நேற்றுமுன்தினம் நடைப்பெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைப்பெற்ற அராஜக நடவடிக்கைகள் தொடர்பாக கவலையடைகின்றேன். இந்நிலையை நாம் தொடரவிடப்போவதில்லை. நாம் நாட்டின் ஆட்சியை முறையாகவே பெற்றுக்கொண்டோம். எம்மால் பெரும்பான்மை காட்ட முடியும். நாம் காத்திருப்பது சபாநாயகரின் கடிதத்திற்கு ஜனாதிபதியின் உத்தியோக பூர்வமான பதிலையே என அவர் குறிப்பிட்டார்.

Read more...

பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு.

கிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பதுங்கியிருந்த அதிநவீன நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட நிலக்கீழ் பதுங்குகுழி இராணுவத்தினரால் இன்று உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

14 SLNG படைபிரிவின் கட்டுப் பாட்டில் இருந்த இவ் பதுங்குகுழியே உடைக்கப்படுகிறது. தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வருகின்ற சுற்றுலாப் பயணிகள் இவ் பதுங்குகுழியை கடந்த வருடம் வரை பார்வையிட்டு வந்தனர் அது இவ் வருடம் முதல் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ் உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது ஊடகவியலாளர்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி கோரிய போதும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப்பகுதி இராணுவத்தினரின் வசமுள்ள நிலையில் பதுங்குகுழி அகற்றப்படுகின்றமையால் குறித்த காணி விடுவிப்பிற்கான சந்தர்ப்பம் இருப்பதாகவும் அறியமுடிகிறது.

Read more...

Saturday, November 17, 2018

பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு ஜனநாயக நாடொன்றுக்கு பொறுத்தமற்றதாம். பிரித்தானியா

இலங்கையில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் முறையற்ற நடத்தையானது ஜனநாயக நடொன்றிற்கு பொருந்தகூடிய விடமல்ல என இலங்கைக்கான பிரித்தானிய உயரிஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் டூவிட் இட்டுள்ளார்.

'இலங்கை மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை உண்டு. மக்கள் வாக்குரிமையின் முலமாக தங்களுடைய பிரநிதியை தெரிவு செய்கின்றனர். அவ்வாறு தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் முறையாக நடத்தல் வேண்டும். ஆனால் இங்கு நடைப்பெற்ற நிகழ்வுகளை பார்க்கும் போது பாராளுமன்றத்தினை அவமரியாதை செய்துள்ளனர். மக்களுக்கு பொறுப்புகூற வேண்டிய இவர்களின் பொறுப்பற்ற நடத்தை ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல.' என அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

அமெரிக்கா ஜப்பான் இந்தியா அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் கலந்து கொண்ட சிங்கப்பூர் சந்திப்பொன்றின்போது இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Read more...

காட்டு தர்பார்! சல்மான் லாபீர்

குற்றுயிரும் குறையுயிருமாய் சாகத்துடித்துக் கொண்டிருக்கும் ஜனநாயகத்தை ஒட்டுமொத்தமாய் குழிதோண்டி புதைக்க புறப்பட்டு, தன் காட்டுதர்பார்களை கணக்கு பார்த்துக்கொண்டிருக்கிறது இலங்கை குடியரசு!

பிணைமுறி மோசடியுடன் மிஸ்ரர் கிளீன் (MR. CLEAN ) என்ற தனது மதிப்பை இழந்து நிற்கும் ரணில் என்ற மண் யானையை பிடித்து பானையில் அடைக்கப் போய் இன்று சொந்த செலவில் சூனியம் வைத்து விழி பிதுங்கி நிற்கிறார் ஜனாதிபதி சிரிசேன.

தன் அப்பாவோடு கோபித்து தம் குடும்பத்துக்கே சோறு போடும் வயலை எரித்த தன் பதின்ம வயது பைத்தியக்கார தனங்களை மீட்டிப்பார்த்து 'தான் இன்னும் பொலநறுவை சிறுவனாகவே இருக்கிறேன்' என உணர்ந்து வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்!

சென்ற ஒக்டோபர் 26 ம் திகதியிலிருந்து தொடக்கி வைக்கப்பட்ட இந்த அதிகார பைத்தியத்துக்கான போராட்டம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

கடந்த 3 வாரங்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை குழம்பிப்போய் கிடக்கிறது.

பிரதமர் எனும் ஆசனத்தை பிடிப்பதற்காக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜனநாயக கற்பழிப்புகள் அருவருப்புக்களை தந்து கொண்டிருக்கின்றன.

இங்கு எல்லாமே அதிகாரம் மீதான பைத்தியங்கள்தான். சிரிசேனாவுக்கு இன்னுமொருமுறை ஜனாதிபதியாக வேண்டும் என்ற பைத்தியம். மகிந்தவிற்கு நாடு பற்றி சாம்பலானாலும் தான் கட்டி ஆள வேண்டும் என்ற பைத்தியம்.

62 இலட்சம் மக்கள் ஆணை கொடுத்து கொடுத்து ஆசிர்வதிக்கப்பட்டு தொடங்கப்பட்ட அந்த மைத்திரி - ரணில் ஆட்சி, எவையெல்லாம் கூடாதென்பதற்காக மக்கள் ஆதரவு கொடுத்தார்களோ அவையெல்லாவற்றையும் நிவர்த்திக்க தவறிக்கொண்டிருந்தது.

இவர்களின் வங்குரோத்து ஆட்சியை விமர்சித்து தம் ஆதரவை பெருக்கி மகிந்தவின் மொட்டு வயிறு வளர்த்துக்கொண்டிருந்தது. கடந்த உள்ளூராட்சி தேர்தல் அதை புடம்போட்டுக் காட்டியிருந்தது.

இப்படியே போனால் தன் அடுத்த ஜனாதிபதி சொப்பனம் என்னாவது என்று சிந்திக்க தொடங்கிய ஜனாதிபதிக்கு சட்டம், அரசியலமைப்பு எல்லாம் கண்ணை மூடி மறைக்க 'ஒக்டோபர் 26' இல் கதகளி ஆடத்தொடங்கினார். மகிந்தவுக்கு பட்டாபிஷேகம் நடந்தது.

அதிகார பைத்தியத்தில் ஆங்காங்கே உளறிக்கொண்டிருந்த மகிந்தவிற்கு இந்த சட்டவிரோத நியமனம் 'சர்பத்தாய்' அமைந்தது.

இங்கு வைத்துத்தான் ஜனாதிபதி தன் அராஜக ஆட்சிக்கான அத்தனை கதவையும் திறந்து கொடுக்கிறார். எதேச்சதிகாரத்தை கையிலெடுக்கிறார்.

பாராளுமன்றில் பெரும்பான்மை இல்லாத மகிந்தவுக்கு பிரதமர் பதவி கொடுத்தது தவறு. அவர் பெரும்பான்மையை நிரூபிக்க காலம்கொடுக்க பாராளுமன்றை ஒத்திவைத்தது தவறு.

ஈற்றில் பெரும்பான்மை காட்ட துப்பில்லாமல் போன போது ஒரேயடியாய் பாராளுமன்றை கலைத்து தன் வெகுளித்தனத்தை காட்டியது ஆகப்பெரும் தவறு!! அத்தனையும் சட்டப்படி தவறு!

சிரிசேனாவின் இந்த கண்மூடித்தனமான செயற்பாடுகளுக்கு உயர்நீதிமன்றம் கன்னத்தில் ஓங்கியறைந்து இடைக்காலத் தீர்ப்பொன்றை வழங்கி இந்த தேசத்தில் மருந்துக்கேனும் மிச்ச சொச்சம் நீதி இருக்கிறது என்று நிரூபித்து வரலாறு படைத்தது நீதித்துறை!

சிரிசேனா மூக்குடைபட்டு நின்றார்!

பாராளுமன்றம் மீண்டும் கூடியது. கடந்த ஆட்சியில் மகிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பமும் உண்டுவிட்டு வீசியெறியும் எலும்புகளை உண்டு மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருந்த அவரது 'அல்லக்கைகள்' பாரளுமன்றத்தில் தம் காட்டு தர்பார்களை காட்ட தொடங்கினர்.

ஒரு உயரிய சபையில் தம் 'அசல்களை' திரையிட்டுக்காட்டினர். கௌரவ சபாநாயகரின் ஆசனத்தில் தரம் 7 வரை கற்ற, கசிப்பு விற்று காசு எண்ணும் எம்பியொருத்தர் தண்ணீரூற்றி தன் கசிந்த புத்தியை பறைசாற்றினார்.

இன்னுமின்னும் கோமாளித்தனமாய் நடந்து கொண்டார்கள். இத்தனையையும் ஏவிவிட்டு சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்தார் ராஜபக்ஷ மகான். என்னவொரு கேவலம்!!

இவர்களின் அடாவடிகளுக்கு மத்தியிலும் சபாநாயகர் சாமர்த்தியமாய் செயற்பட்டார். இதுவரை 3 முறை வாக்கெடுப்பு எடுத்து மகிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை! இல்லை! இல்லை!! என சொல்லியிருக்கிறது அந்த உயரிய சபை!!

ஆனால் மகிந்த தரப்பு 'படுக்கையை நனைத்த சிறுவனை போல' விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கிறது. பாராளுமன்றில் பெரும்பான்மை கிடைக்கும் வாய்ப்புள்ள ஒருவரை பிரதமராக நியமித்து அடுத்த அரசாங்கத்தை அமைக்க வேண்டிய பந்து மீண்டும் சிரிசேனாவிற்கே சென்றுள்ளது.

19ம் தேதி மீண்டும் கூடுகிறது பாராளுமன்றம்! அவைகளை தாண்டி டிசெம்பர் 7 'தீர்ப்பு நாள்'!!

மைத்திரி - ரணில் ஆட்சியின் ஏமாற்றத்தில் மெல்ல மலர்ந்து வந்து கொண்டிருந்த தாமரை மொட்டை அப்படியே வளரவிட்டு 2020 இல் பாராளுமன்ற தேர்தலில் ஒரு கை பார்த்திருக்கலாம்.

ஆனால் அதர்க்கிடையில் மகிந்தவின் அதிகார வெறி பிடித்த 'மக்குத்தனங்களால்' சேற்றில் விழுந்து கிடக்கிறது செந்தாமரை!

ஜனாதிபதியின் இந்த தீர்க்கதரிசனமற்ற செயல் மிகப் பழமை வாய்ந்த சுதந்திர கட்சியை சின்னாபின்னப்படுத்தியிருக்கிறது.

இப்போதைக்கு மைத்திரியின் ஜனாதிபதி கனவையும், மகிந்தவின் பிரதமர் கனவையும் சேர்த்து புதைப்பதற்கு பாராளுமன்ற முன்றலில் மரணக்குழி தோண்டப்படுகிறது!!

மறுபுறத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைக்குட்டிகள் தங்கள் தாய்யானை மண்யானை என்பதை உணர மறுக்கின்றனர். முட்டப்பயப்படுகின்றனர்.

ரணில் விக்கிரமசிங்க எண்கணக்கற்ற தேர்தல்களை தோற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவரை இந்நாட்டு மக்கள் வெறுக்கின்றனர் என்ற உண்மையை அவரும் அவரது அல்லக்கைகளும் உணர மறுக்கின்றனர்.

ஏதோ ஒரு கட்டத்தில் அன்றும் இன்றும் மைத்திரி வைக்கின்ற ஒப்பாரி யாதெனின் தனக்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் பயணிக்க முடியாதாம் என்பதாகும. அவ்வாறாயின் அவர் ஓட்டுகின்ற அந்த பஸ்ஸிலே ஏன் ரணில் விக்கிரமசிங்க ஏறவேண்டும். இறங்கி நின்று பார்க்க வேண்டியதுதான் அவர் இந்த நாட்டுக்கு செய்யவேண்டிய கடமை..

அவ்வளவு தான் சொல்லலாம்!!


Read more...

சட்டரீதியாக வந்தால் பதவி விலக தயாராகவுள்ளேன். பலாத்காரமாக செய்ய முடியாதாம்! மஹிந்தர் எச்சரிக்கை

பாராளுமன்றம் இன்று கேலிக் கூத்தாக மாறியுள்ளதாகவும், சட்ட ரீதியான முறையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைத்தால் பதவியை கைவிட்டுவிட்டுப் போவதற்கு தயார் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (16), வீரகெட்டிய – கசாகல, புராண விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் :

நாங்கள் அரசாங்கத்தைக் கொண்டுசெல்வோம். விட்டுச்செல்ல மாட்டோம். அதை நான் தெளிவாகக் கூறுகிறேன். சட்டத்திற்கு அமைய நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்றினால், விட்டுச்செல்ல நாங்கள் தயார்.

ஆனால், பலாத்காரமாக அகௌரவத்தை ஏற்படுத்தும் வகையில் பெற்றுக்கொள்ள முயற்சித்தால் எங்களை விரட்டுவது அவ்வளவு எளிதான விடயமல்ல.

ஜனாதிபதிக்கு மாத்திரமே என்னை அவ்வாறு செயற்படுத்த முடியும். ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை வேறு ஒருவரும் எடுத்துக்கொள்ள முடியாது. அரசியலமைப்பிற்கு அமைய அந்த அதிகாரத்தை நீதிமன்றத்திற்கு கூட பறிக்க முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்துவதில் எந்தவித பிரச்சினையும் இல்லை எனத் தெரிவித்த அவர் பாராளுமன்றில் கத்தி போன்ற கூரிய ஆயுதங்கள் எடுத்து வரப்பட்டமை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் எந்தவித சட்ட நடவடிக்கையோ, ஒழுக்காற்று நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ஸ பாராளுமன்றத்திற்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாவிட்டால், அதனை பொதுமக்களிடம் ஒப்படைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாது சட்டவிரோதமாக அவர்கள் செயற்பட்டால், தமது தரப்பினரும் உரிய வகையில் பதிலடி கொடுப்பார்கள் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Read more...

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணையவேண்டிய தேவை தனக்கு இல்லையாம்! வியாழேந்திரன்

சம்பந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை. மக்களாலே தான் நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன் மக்கள் கேட்டுக் கொண்டதனாலேயே இன்று பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டேன் என பிரதியமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதியமைச்சர் வியாழேந்திரன் மீண்டும் இணைய முற்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து இன்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது என்ன செய்தேன் என்பது எனக்கு வாக்களித்த என் உறவுகளுக்கு நன்றாகத் தெரியும். அந்த மக்களின் தேவை என்ன என்பதையும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் நான் நன்கு அறிந்து தான் செய்கின்றேன். வெறும் வெத்துப் பேச்சுகளையும், பின்கதவு முயற்சிகளையும் விட்டு எம் மக்களுக்கு எம்மால் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அதன் படியே நான் சிந்தித்துச் செயற்பட்டேன். தொடர்ந்தும் செயற்படவுள்ளேன்.

எனக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு சேர்ந்து மீண்டும் வாக்குக் கேட்க விருப்பமும் இல்லை. அதற்கான எண்ணமும் இல்லை. காரணம் கூட்டமைப்போடு இருந்து மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத குற்ற உணர்வு எனக்கு இருக்கின்றது. கூட்டமைப்பைச் சொல்லி மக்கள் முன்சென்று வாக்குக் கேட்க மனச்சாட்சி எனக்கு இடம்கொடுக்கவில்லை.

இந்த நிலையில் நான் எவ்வாறு கூட்டமைப்போடு இணைய விரும்புவேன். ஊடகங்கள் சில நான் கூட்டமைப்போடு மீண்டும் இணைய முற்படுவதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகளை அமைச்சரூடாக சம்பந்தன் ஐயாவுடன் முன்னெடுத்ததாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இது முற்றிலும் மகா பொய்யான செய்தியாகும். சம்பந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை. ஊடக தர்மத்திற்கு உட்பட்டு நடந்துகொள்ளும் ஊடகவியலாளர்கள் இருபக்க நியாயத்தை அறிந்து செய்திகளை வெளியிட வேண்டும் எனப் பணிவாகக் கேட்டுக் கொள்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

நோயுடன் வாழ்வதெப்படி? நீரழிவு தொடர்பான ஆழமான பார்வை. விளக்குகின்றார் டாக்டர் அஸ்லாம்.

உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள மக்களை மிக வேமாக தாக்குகின்ற நோய்களில் நீரழிவு நோய் முதலிடம் பெறுகின்றது. உலகலாவிய ரீதியில் 425மில்லியன் மக்களும், தென்கிழக்காசிய நாடுகளில் 82மில்லியன் மக்களும், இலங்கையில் கிட்டத்தட்ட 2மில்லியன் மக்களும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது புள்ளிவிபரம்.

அது மட்டுமன்றி இந்நோய் பௌதீக, சமூக, பொருளாதார ரீதியாக மற்றும் மனோ ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அண்மைக்காலத்தில் மேற்குலக நாடுகளின் பழக்க வழக்கங்களினால் கவரப்பட்டதனால், இலங்கையிலும், மற்றைய தெற்காசிய நாடுகளிலும் நீரழிவு நோய் அதிகரித்துக்கொண்டு வருகின்றது.

அத்துடன் எதிர்பாராத விதமாக வயதில் குறைந்தவர்களுக்கும் நீரழிவு நோய் இப்போது ஏற்படத் தொடங்கியுள்ளது. எனவே சமூகத்திலுள்ள அனைவரும் இந்நோய்க்கு எதிராக போராடுவதே இதனைக் கட்டுப்படுத்துவதற்குரிய வழிவகையாகவுள்ளது.

இந்த நோய் பற்றி விழிப்புணர்வு இன்றுள்ள சூழலில் மிக முக்கியமாகும். 2018.11.14ஆந் திகதி சர்வதேச நீரழிவு தினமாகும். இதனை முன்னிட்டு அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எம். அஸ்லம் அவர்களுடனான நேர்காணல் வாசகர்களின் பார்வைக்கு.

01. கேள்வி :- நீரழிவு நோய் என்றால் என்ன?


பதில் :- எமது உடல் அங்கமான கணையம் அல்லது சதையி (pancreas) இல் உள்ள ஒவ்வொரு Islet செல்களில் 1000 தொடக்கம் 2000 beta cells காணப்படுகின்றது. இந்த டிநவய செல்களே இன்சூலினை உற்பத்தி செய்கின்றது. நாங்கள் அன்றாடம் உண்ணுகின்ற உணவுக்கூறுகளில் காபோஹைரேட், புரதம் மற்றும் கொழுப்பு, கனிமங்கள் போன்றவை காணப்படுகின்றன. இதில் காபோஹைரேட் சமிபாட்டின் பின்னர் குளுக்கோசாக மாற்றப்படுகின்றது. இந்த குளுக்கோஸ் சாதாரணமாக 65 mg/dl தொடக்கம் 115 mg/dl குருதியில் காணப்படும். மேலும் சாப்பிட்டு 2மணித்தியாலயங்களின் பின் 140 mg/dl ஆகக் காணப்படும். சாதாரணமாக குருதியில் உள்ள குளுக்கோசின் அளவை கணையத்தினால் சுரக்கப்படும் இன்சுலின் என்கிற ஹோமோன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். மற்றும் குருதியில் உள்ள குளுக்கோஸ் கலங்களினுள் செல்வதற்கு இவ் இன்சூலினே தேவைப்படுகின்றது. இன்சூலின் உற்பத்தியில் குறைபாடுகள் ஏற்படும் பொழுது இரத்தத்தில் குளுக்கோசின் அளவு கூடுகின்றது. அதிகாலையில் எதுவும் உண்பதுக்கு முதல் எடுக்கும் குருதியில் (8 - 10மணிநேரம் fasting ) குளுக்கோசின் அளவு 126 mg/dl அல்லது 6.9mmol/l இனை அதிகமாக காணப்படும் போது இதை நாங்கள் நீரழிவு நோய் என வரையறை செய்கின்றோம்.

02. கேள்வி :- நீரழிவு நோயின் வகைகள் பற்றி குறிப்பிடமுடியுமா?

பதில் :- முதலாவது வகை இன்சூலினில் பூரணமாக தங்கியுள்ள நீரழிவு (IDDM) எனப்படும் வகையாகும். இது ஒரு Autoimmune, Idiopathic - காரணம் கண்டுபிடிக்கப்படாத வகையைச் சார்ந்தது. சாதாரணமாக இது சிறுவர்களுக்கும் 35வயதுக்குட்பட்டவர்களுக்கும் ஏற்படும். இவர்களின் கணையத்தில் உள்ள beta cells கள் இன்சூலினை சுரப்பதில்லை. இவர்களுக்கு தினமும் இன்சூலின் ஊசி ஏற்றப்படுதல் வேண்டும். “பசுப்பாலை மிக சிறிய பராயத்தில் அருந்திக்கொள்வதால்” முதலாவது வகை நீரழிவை உண்டாக்கும் சந்தர்ப்பத்தினை அதிகரிக்கச் செய்யும். ஆகவே குழந்தை பிறந்து 4மாதம் வரை தாய்ப்பால் மட்டும் கொடுப்பதன் மூலம் சிறுவர்களை தாக்கும் வகை ஒன்று நீரழிவு நோய் ஏற்படும் சந்தர்ப்பத்தை குறைக்கலாம்.

இரண்டாவது வகை (NIDDM) என அழைக்கப்படும். இது சாதாரணமாக 35வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும். இவர்களின் கணையத்திலுள்ள Beta cells களில் இன்சூலின் சுரப்பது பாதிக்கப்படும். ஆனால் சிறிதளவு சுரக்கப்படும். அல்லது இன்சூலின் போதியளவு சுரக்கப்பட்ட போதும் அவ் இன்சூலின் பயன்படுத்த முடியாமல் காணப்படும். (predominantly insulin resistance ) இவர்களின் நீரழிவு நோயை உணவுக்கட்டுப்பாடு, மாத்திரைகளுடன், சரியான உடற்பயிற்சி செய்வதினால் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

மூன்றாவது Gestational diabetes வகையாகும். பிரசவ காலத்தின் போது தாய்மார்களுக்கு ஏற்படும் நீரழிவு நோயாகும். இது 75grm குளுக்கோசினை உண்ணக்கொடுத்து பின்னர் குருதியில் உள்ள குளுக்கோசின் அளவை சோதிப்பதன் மூலம் கண்டுபிடிக்கப்படும்.

03. கேள்வி :- நீரழிவு நோயின் அறிகுறிகள்

பதில் :-
I. அதிக தாகம், தொண்டை வரட்சி
II. சடுதியாக உடல் நிறை குறைதல்
III. அதிகளவு சிறுநீர் பல தடவைகள் கழித்தல்
IV. இரவில் பல தடவைகள் சிறுநீர் கழித்தல்
V. காயங்கள் ஏற்பட்டால் மாறுவதுக்கு அதிக நாட்கள் எடுத்தல்
VI. திடீரென கண்பார்வை மங்குதல்
VII. காரணமில்லாத உடல் களைப்பு
VIII. பாலுறுப்புகளில் அரிப்பு மேற்குறிப்பிடப்பட்ட அறிகுறிகளில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோ காணப்படின் நீரழிவு நோய் ஏற்பட்டிருப்பதுக்கு வாய்ப்புள்ளது.

04. கேள்வி :- எந்தவொரு அறிகுறியும் இல்லாது நீரழிவு நோய் ஏற்படுமா?

பதில் :- ஆம், மேற்குறிப்பிடப்பட்ட இரண்டாவது வகை நீரழிவு நோய் தொடர்ச்சியாக இருக்கக்கூடிய நோயாகும். இந்த நோய் “நிர்ணயம்” செய்யப்படும் போது கணையத்திலுள்ள 50வீதமான Beta cells இன் தொழிற்பாடு இழக்கப்பட்டுவிடும். இதன் பின்னரே அறிகுறிகள் வெளிப்படுத்தப்படலாம்.

எனவே, 30வயதை தாண்டிய ஒவ்வொருவரும் ஆறுமதங்களுக்கு ஒரு தடவை Daibatic screen பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்தப்படுவதன் மூலம் குருதியிலுள்ள குளுக்கோசின் அளவை அளந்து தங்களது உணவு பழக்கவழக்கம், உடற்பயிற்சியில் மாற்றங்களை கொண்டுவருவதன் மூலம் வகை 2 நீரழிவு நோய் ஏற்படும் சந்தர்ப்பத்தினை மாற்றியமைக்க முடியும்.

05. கேள்வி :- யாருக்கு நீரழிவு நோய் ஏற்படும் சந்தர்ப்பம் அதிகளவு உண்டு

பதில் :- உடற் பருமனானவர்கள், உடற்பயிற்சி, சுறுசுறுப்பற்ற வாழ்க்கை வாழ்பவர்கள், பெண்களாயின் பிரசவ காலத்தின் போது குருதியில் குளுக்கோசின் அளவு கூடிக்காணப்பட்டவர்கள். குடும்பத்தில் பரம்பரையாக (பெற்றோர், சகோதரர்கள்) வழியாக நீரழிவு நோய்காணப்படுதல், அதிகளவு மன அழுத்தம் உடையவர்கள். இன்றை காலகட்டத்தில் மனஅழுத்தம் எல்லாவகையினரையும் பாதித்துள்ளது. பிழையான பழக்க வழக்கங்கள், பிழையான நண்பர்கள் மூலமாக மன அழுத்தங்களுக்கு உட்படுபவர்களுக்கு நீரழிவு நோய் ஏற்படுவதுக்கு வாய்ப்புள்ளது.

06. கேள்வி :- நீரழிவு நோயினால் ஏற்படும் பாதிப்புகள்

பதில் :- முறையாக கட்டுப்பாட்டினுள் வைத்திராத நீரழிவு நோயினால் பின்வரும் உடல் உறுப்புகள் பாதிக்கப்படலாம். இதயமும் குருதிக்குளாய்களும், கண்கள், சிறுநீரகங்கள். மூளையும் நரம்புகளும், பாதங்கள் என்பனவாகும்.

07. கேள்வி :- இவ்வாறான பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

பதில் :- மேற்குறிப்பிட்ட அங்கங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டால் நிரந்தர பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். இதற்காக மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை தொடர்ச்சியாக மருத்துவரை சந்தித்து, தேவையான பரிசோதனைகள் செய்து பரிந்துரைக்கப்படுகின்ற மருந்துகளை தவறாது உட்கொள்ளுதல் வேண்டும். கிரமமான உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு போன்றவற்றில் பூரணமாக கவனம் செலுத்துதல் மிக முக்கியம்.

08. கேள்வி :- நீரழிவு நோய்க்கும் இருதய, கொலஸ்ரோல் நோய்க்கும் இடையில் ஏதாவது தொடர்புகள் இருக்கிறதா?

பதில் :- குருதியில் அதிக கொலஸ்ரோல் உள்ளோர் இருதய நோயினால் பாதிக்கும் சந்தர்ப்பம் அதிகம். மேலும் குருதியில் குளுக்கோசின் அளவு கூடுதலாக உள்ளபொழுது குருதிக்குழாய்களில் கொழுப்பு படிவதற்குரிய சந்தரப்பம் அதிகமாகவிருக்கும். இதனால் குளுக்கோசின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதன் மூலம் கொழுப்பு படிவை குறைத்து இருதய நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

09. கேள்வி :- நீரழிவு நோயாளர்களுக்கான மருத்துவ போசணைத் (Medical Nutrition)திட்டம் எவ்வாறு அமையப்பெறுதல் வேண்டும்.

பதில் :- நீரழிவு நோயளர்களுக்கான உணவுகளை திட்டமிடும் போது கலோரிப் பெறுமானங்களுக்கு ஏற்றவகையிலும், glycemic index யையும் கருத்திற்கொண்டு உணவுகளை திட்டமிடுதல் வேண்டும். கலோரிப் பெறுமானங்கள் கூடிய உணவுகளை உட்கொள்ளும் போது உடற்பருமன் அதிகரிப்பு, குளுக்கோஸ் Intolerance கொழுப்புத் தன்மை அதிகரித்தல், இரத்தக்குழாய்களில் கொலஸ்ரோல் படிதல் மற்றும் இருதநோய் ஏற்படலாம்.

புரதம் அதிகளவு அடங்கிய மரக்கறி உணவுகள் மிகவும் பாதுகாப்பானது. சமப்படுத்தப்பட்ட saturated, polyunsaturated and monounsaturated, கொழுப்பு அமிலங்கள் சமையல் எண்ணெய்யில் காணப்படுவது நன்மை பயக்கக் கூடியதாகும்.

மேலும் மீன்களில் உள்ள எண்ணெய்கள் அதிகளவு பாவிப்பதன் மூலம் கொலஸ்ரோலின் அளவு கட்டுப்படுத்தப்படும். தற்பொழுது நீரழிவு நோயாளர்களுக்கு சிபரிசு செய்யப்பட்ட உணவானது அதிகளவு complex காபோஹைரட், குறைவான கொழுப்புத் தன்மை, போதுமான புரோட்டின் உள்ள உணவுகளாகும்.

நீரழிவு நோயாளர்களின் மருத்துவ போசணை திட்டத்தின் பிரதான அடைவாக சுகாதாரமான உணவுப் பழக்கவழக்கங்கள் மூலம் தேகாரோக்கியத்தை கட்டியெழுப்புதல். குருதியில் உள்ள குளுக்கோசின் அளவினை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல். குருதியில் உள்ள கொழுப்பின் அளவினை பேணுதல். உடல் நிறைக்கு ஏற்றவகையில் கலோரிப் பெறுமானமுள்ள உணவுகளை வழங்குதல். இன்சூலின் எடுக்கக் கூடிய நோயாளிகள் தங்களது பிரதான உணவுகளையும், சிற்றூண்டிகளையும், நேரத்துக்கு எடுப்பதன் மூலம் குளுக்ககோசின் தளம்பல் நிலையை பேணமுடியும்.

10. கேள்வி :- இலங்கையில் நீரழிவு நோயாளர்கள் அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. இதற்குரிய காரணங்கள் என்ன

பதில் :- மேற்கத்திய உணவுப்பழக்கவழக்கங்களுக்குள் மாட்டிக்கொண்டமை, கிரமமான உடற்பயிற்சியின்மை, சமூக பொருளாதார காரணிகளின் பின்புலங்களால் அதிகளவு மன அழுத்தத்துக்குள் தள்ளப்படுதல் உணவிலுள்ள போசனை கலோரி, அதன் உள்ளடக்கம், கெழுப்புத் தன்மை பற்றிய தெளிவின்மை. பாரம்பரிய உணவுப்பழக்கவழக்கங்களில் இருந்து விடுபட்டு உடனடி உணவுப் பழக்கத்துக்குள் தங்களை திணித்துக்கொண்டமை. மதுசாரம், சிகரட் பாவனை அதிகரித்தமை போன்றனவாகும்.

11. கேள்வி :- நீரழிவு நோயாளர்களுக்கு உங்களின் ஆலோசனை ?

பதில் :- வைத்தியர் பரிந்துரை செய்கிற மருந்துகளை தவறாது எடுத்துக்கொள்ளுதல் வேண்டும். இரத்ததில் உள்ள குளுக்கோசின் அளவை அடிக்கடி பரிசோதனை செய்தல் வேண்டும்.

சீனி சேர்க்கப்பட்ட எவ்வித பதார்த்தங்களையும் உண்ணாது தவிர்த்தல் இன்னும் சிறப்பு. தேனீர் அல்லது கோப்பி அருந்தும் போது அதற்கு சர்க்கரை சேர்ப்பதனை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும். கொழுப்பு கூடிய உணவுகளை( பொரித்த ) குறைத்துக்கொள்ளுதல் வேணடும். பழவகைகளை அளவுடன் உட்கொள்ளுதல் வேண்டும். நார்சத்துப் பொருட்களை அளவுடன் உட்கொள்ளுதல் வேண்டும். உணவுகளை சரியான நேரத்துக்கு உட்கொள்ளுதல் அவசியம்.

அதிக வியர்வை, அதிக பசி, நடுக்கம் குருதியில் குளுக்கோஸ் குறைவாக உள்ளது என்பதுக்கான அறிகுறிகளாகும். உடற்திணிவுச் சுட்டெண்னை 18.5 – 22.9 Kg /m² க்கு பேண வேண்டும்.

இன்றைய காலத்தில் அதிகளவான நீரழிவு நோயளர்கள் தங்களை பூரணமாக குணப்படுத்த முடியும் என்று விளம்பரப்படுத்தப்படும் போலி மருத்துவ முகவர்களை நாடிச் செல்வது துர்பாக்கிய நிலையாகும்.
இன்றுவரை இந்த உலகிலுள்ள மருத்துவ முறைகளில் நீரழிவு வியாதியை பூரணமாக குணப்படுத்துவதுக்கு எந்த ஒரு மருத்துவ முறைக்கும், மருந்துகளுக்கும் சக்தி இல்லை என்பதனை மக்கள் உணர்ந்து கொண்டு, போலி வைத்தியர்களின் விளம்பரங்களை கண்டு ஏமாந்துவிடாமல் சரியான வைத்தியர்களிடமிருந்து சரியான வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு இந்நோயினை பூரண கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுதான் மிகச் சிறந்த நிவாரணமாகும்.


நேர்காணல் :-
Dr.KM. Aslam
B.Pu;ARM (UOC), BUMS (UOC)
MD (India), PGD.PUB. ADMIN (UOC)
Base Ayurvedic u;ospital - Addalaichenai

நேர்கண்டவர் :-
றிசாத் ஏ காதர்
நன்றி தினகரன் 14.11.2018

Read more...

Friday, November 16, 2018

1000 ரூபாவும் மலையகத்து அரசியல்வாதிகளும். ஸ்ரெலா

ஐரோப்பியரின் வருகையால் தேயிலை தோட்டங்கள் உருவாகின. சுதேசியர்களின் வேலை பகிஸ்கரிப்பால் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படட்னர் இந்தியவம்சா வழியினர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இலங்கையின் உழைக்கும் வர்க்கத்தினர்.

இவர்கள் குதிரைகள் கட்டப்பட்ட இடங்களில் லயக் குடியிருப்புகளில் குடியமர்த்ப்பட்டனர். அந்நாளில் இருந்து இன்று வரை லயக்குடியிருப்பு வாழ்க்கையும் தேயிலைத்தோட்டமும் தலைவிதியாகி விட்டது.

அவர்களின் துன்பம் தொடரும் வண்ணமாக உள்ளது. எத்தனை அரசியல் தலைவர்கள் வந்து போயினர். ஆனால் ஒருவரும் எம்மக்களை பார்த்தது இல்லை.

மலையக தலைவர்கள் அனைவரும் அரசியல் மோகத்தில் திளைத்தார்கலே ஓழிய மலையகளை நாடியது தேர்தலின் போது மட்டும் தான். வாக்குரிமை போடும் மக்களும் பரம்பரை அரசியலுக்கும் சாராயத்திற்கும் அடிமையாகி போனார்கள்.

தொடரும் இத்துன்பம் இன்று 1000ருபாவில் ......எப்பொழுது பார்த்தாலும் பேச்சு வார்த்தை. ஆனால் நடப்பது ஒன்றும் இல்லை. ஒரு சாண் வயிற்றுக்கு இத்தனை போராட்டம். AC அறையில் பேச்சுவார்த்தை நடத்தும் முதலாளிமார்களுக்கு அடிமைகளாகவே கண்ணுக்கு புலப்டுகிறார்கள்hக எம் மக்கள்.

இன்று நடந்தது ஒரு எதிர்ப்பு போராட்டம். ஆட்சி மாறும் போது புற்றில் இருந்து வெளிவரும் ஈசல்கள் போல மலையக தலைமைகள் 1000 ரூபாவிற்காக வெளிப்பட்டுள்ளனர். அரசியல் இலாபத்திற்காக இல்லாமல் மக்களின் உண்மை நிலையை அறிந்து போராடுங்கள். மக்களை ஏமாற்ற வேண்டாம். அரசாங்கத்தின் பொறுப்பும் கூட.....

Read more...

ஜனநாயகம் நாடாளுமன்றில் தலைவிரிக்கோலமாய்!

தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் தேவை தான் என்ன? என்பது தொடர்பாக அரசியல் தலைமைகள் சிந்திக்கின்றனவா? என்ற கேள்வி எம் எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. மக்களாட்சியை நிலை நிறுத்துவதற்கு போராடுவதாக அனைவரும் ஊடகங்களுக்கு கருத்துக்களை அள்ளி விடுகின்றனர். ஆனால் இன்றை பாராளுமன்ற சூழ்நிலையானது ஜனநாயகத்தை நிலை நாட்ட போராடுபவர்களின் உண்மையான நிலையினை வெளிப்படுத்தியது. ஜனநாயகம் நாடாளுமன்றத்தில் தலைவிரிக்கோலமாய் நிற்பதை மக்கள் அனைவரும் கண்டனர்.

அந்நியர் ஆட்சியின் போது மாபெரும் தலைவர்கள் நாட்டின் விடுதலைக்கு ஒன்றாக கரம் கோர்த்து போராடினர். தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக இரத்தம் சிந்தி போராடினர். ஆனால் இன்று மக்கள் பிரதிநிகள் என கூறிக்கொள்ளும் அரசியல் பிரமுகர்கள் நாட்டின் இறைமை காக்கும் நாடாளுமன்றத்தில் கலவரத்தை ஏற்படுத்தி இரத்தம் சிந்தி அதையும் பெரும் தன்மையுடன் கூறிக் கொள்கின்றனர்.

நிலையில்லாத கட்சி கொள்கையினை உடைய இவர்கள் சுயநலத்திற்காகவும் பதவி மோகத்தின் காரணமாகவும் துர் வார்த்தைகளை பேசிக்கொண்டு மக்களை ஏமாற்றும் இவர்களுக்கு தேர்தல் ஒன்று தேவை தானா? என்ற சிந்தனை எமக்கு வேண்டும்.

அதிகாரபோட்டிக்காக ஐந்தறிவு படைத்த ஆட்டு மந்தைகளைப் போல பாராளுமன்றத்தில் முட்டி மோதி திரியும் இவர்களுக்கு அரசாங்கத்தை பொறுப்பளித்தால் என்ன? நடக்கும். நாளைய தலைமுறைக்கு அறிவற்ற அரசியல் தலைமைகளின் வழிநடத்தல் தேவை தானா?

இன்றைய நாட்டிக்கு ஊழல் அற்ற ஜனநாயகத்தை காக்கும் அரசியல் தலைவர்கள் வேண்டும். மக்களை சிந்திக்கும் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தும் தலைவர்கள் தேவை.

அன்று தொடக்கம் இன்று வரை அபிவிருத்தியில் பின் தங்கியுள்ளோம். கழுகுகள் போல எம்மையே நோட்டமிட்டு கொண்டிருக்க சர்வதேசத்தின் பசிக்கு தீனி போட்டு கொண்டிருக்கின்றோம்.

இதற்காகவா மக்களாகிய நாம் எவ்வாறு எமது பிரதிநிதிகளை தேர்வு செய்கின்றோம் என்று மறு பரிசீலனை செய்கின்றோமா? இல்லை. நாங்கள் பழக்கப்பட்டுவிட்டோம், இந்த மந்தைகளை மீண்டும் மீண்டும் எங்களை மேய்க்கவிட்டு நாம் பழக்கப்பட்டு விட்டோம்.

எதிர்காலத்திலாவது நாங்கள் மேய்க்கக்கூடிய மந்தைகளை அனுப்புவோமா பாராளுமன்றுக்கு?


Read more...

இன்று இலங்கையின் கழுதைகள் மன்றில் என்ன நடந்தது?

பிற்பகல் 2.20 மணிக்கு பாராளுமன்று ஆரம்பமானது. பாராளுமன்றை இன்று முன்னெடுப்பதில் இருக்கக்கூடிய இடர்களை அறிந்திருந்த சபாநாயகர் சுமார் 50க்கும் மேற்பட்ட பொலிஸாரின் சங்கிலிவடிவிலான பாதுகாப்புடன் ஆசனத்தை நோக்கி நகர்ந்தார்.

மஹிந்த – மைத்திரி தரப்பினர் பொலிஸார் மீது தாக்குதல்களை மேற்கொண்டு சபாநாயகரை ஆசனத்திற்கு செல்லவிடாது தடுத்து நிறுத்தினர். கதிரைகள் , தடிப்பான புத்தகங்கள் கொண்டு தாக்கியதுடன் மிளகாய்த்தூள் கலந்த தண்ணீர்ப்போத்தல்களை வீசியும் தாக்கினர்.

சபாநாயகரின் ஆசனத்தை கைப்பற்றிய மஹிந்த தரப்பினர் சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டதுடன் கூச்சல் இட்டனர். சபாநாயகரின் ஒலிவாங்கி உட்பட்ட இலத்திரனியல் தொடர்புகள் யாவற்றையும் துண்டித்தனர்.

இவ்வாறானதோர் குழப்பநிலை எதிர்பார்க்கப்பட்டதாகவே இருந்ததனால், கிடைத்த ஆசனம் ஒன்றில் அமர்ந்து கொண்ட சபாநாயகர், திருத்தியமைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை அவ்விடத்திலிருந்தே மேற்கொண்டார். அதற்கு ஏதுவாக அவரிடமிருந்த ஒலிவாங்கி செயற்பட்டது. கன்சாட் பதிவானது. குறிப்பிடவேண்டிய விடயம் யாதெனில், வாக்கெடுப்பு இடம்பெறும்போது செங்கோல் அவரருகிலேயே இருந்தது. பாராளுமன்று எதிர்வரும் 19 ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

பாராளுமன்றில் மஹிந்தவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டது தொடர்பில் ஜனாதிபதிக்கு சபாநாயகரால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தவொரு காரணத்திற்காகவும் அவர் பாராளுமன்றை பிற்போடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.









Read more...

எனக்கு பிரதமர் பதவி பெரிய விடயமே அல்ல. மஹிந்த பாராளுமன்றில் ஆவேசம்.

நேற்று பாராளுமன்று கூடியபோது பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு விசேட பேச்சுக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஆச்சந்தர்பத்தில் குறுக்கிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை பிரதமர் என்று விழிக்காது, குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என குறிப்பிட்டபோது, ஆத்திரமடைந்த மஹிந்த ராஜபச்ச, தான் புதிய பிரதமராய் பதவியேற்றாலும் இப்பதவி எனக்கு ஒன்றும் பெரிய விடயம் அல்ல என்று ஆத்திரத்துடன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அப் பதவியை ரணில் விக்கிரமசிங்கவை போல பெரிதாக எண்ணவில்லை. நான் இதற்கு முன்னரும் பிரதமராக கடமையாற்றி உள்ளேன். நேற்று பாராளுமன்றத்தில் நடந்த நிகழ்வுகளை பார்க்கும் போது அரசியல் வரலாற்றில் இருண்ட யுகமாகவே எண்ணத் தோன்றுகின்றது. இவ்வாறான அமைதியற்ற சூழ்நிலையை ஒரு போதும் கண்டதில்லை.

கடந்த ஒக்டோபர் 26ம் திகதி வரையிலான காலப்பகுதியில் முன்னைய அரசாங்கத்தின் பல்வேறு ஊழல் நடவடிக்கைகளினால் மக்கள் பெரிதும் அதிருப்திக்கு உள்ளாகி இருந்தனர். மத்திய வங்கியின் கொள்ளை அரச செயற்திட்டங்களையும் வளங்களையும் வெளிநாட்டவர்க்கு தாரை வார்த்து கொடுத்தனர். மக்கள் மத்தியில் முன்னைய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை முழுமையாக அற்றுபோனது.

இந்நிலையிலேயே ஜனாதிபதி அவர்கள் பிரதமராக என்னையும் புதிய அரசாங்கத்தையும் அமைக்க முனைந்தார். அதற்காகவே பொது தேர்தலையும் அறிவித்தார். ஆனால் அதற்கும் ஒரு தடை வந்தது. ஐ.தே.கட்சியும் ம.வி.முன்னனியும் மற்றும் பல கட்சிகள் ஓன்றினைந்து உயர்நீதிமன்றத்தினை நாடினர். இலங்கை அரசியல் வரலாற்றிலே முதன்முறையாகவே ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிவிப்பிற்கு எதிராக மனு முன்வைக்கப்பட்டது.

மக்களின் எதிர்பார்ப்பு நல்லதொரு அரசாங்கம். அதற்காக நாம் அனைவரும் ஒன்றாக கரம் கோர்ப்போம் என தனது உரையில் அவர் தெரிவித்திருந்தார்.

Read more...

வெல்லாவெளியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 19 வயது இளைஞன் கைது.

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள ஆனைக்கட்டு பிரதேசத்தில் 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை காட்டி பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 19 வயது இளைஞர் ஒருவரை கடந்த திங்கட்கிழமை (12) கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள சிறுமியின் தந்தை வெளிநாட்டிற்கு வேலைவாய்பு பெற்று சென்றுள்ள நிலையில் தரம் 10 ஆண்டில் கல்வி கற்று வந்த சிறுமி கடந்த 6 மாதமாக பாடசாலை செல்லாது வீட்டில் இருந்து
வந்துள்ளார் இந்த நிலையில் சிறுமிக்கு குறித்த இளைஞன் கையடக்க தொலைபேசி ஒன்றை வாங்கி கொடுத்து, அவருடன் உரையாடி வந்ததாக கூறப்படுகின்றது. தாயார் ஏனைய குழந்தைகளுடன் தனியறையிலும்
சிறுமியை தனியறையிலும் படுத்துறங்கி வந்துள்ளனர்.

சிறுமி குறித்த இளைஞருடன் சேர்ந்து தனது அறையின் யன்னல் கிறிலின் ஆணிகளை கழற்றி, யன்னல் ஊடகாக இரவில் இளைஞன் அறைக்கு சென்று இருவரும் ஒன்றாக இருந்து வந்துள்ள நிலையில் சம்பவதினமான திங்கட்கிழமை இரவு வழமைபோல இளைஞன் யன்னல் ஊடாக அறைக்குள் சென்ற போது அதனைக்கண்டு நாய் குரைத்துள்ளது.

இதனையடுத்து தாயார் கண்விழித்து மின்சார விளக்குகளை எரியவைத்து வீட்டை சோதனையிட்டபோது அறையில்இருநத இளைஞர் அங்கிருந்து யன்னல் ஊடாக தப்பி ஓடியுள்ளார்.

இதனைக்கண்ட தாயார் சிறுமியிடம் விசாரித்தபோது இளைஞர் தொடர்பாக தகவல் பெற்றுக் கொண்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இளைஞரை திங்கட்கிழமை மாலை கைது செய்ததுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாகவும், சிறுமியை வைத்தியசலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார்
கூறுகின்றனர்.


Read more...

Thursday, November 15, 2018

ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களியுங்கள். தமிழீழத்திற்கு ரணில் தயார்! விஜயகலா.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்து ரணில் விக்கிரமசிங்கவை பிரதம மந்திரியாக்கினால் அவர் சுயாட்சியை தருவதற்கு தயாராக இருப்பதாக யாழ் மாவட்டத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் இந்திய த ஹிந்து நாளேடுக்கு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நாடு அரசியல் ரீதியாக அசமந்த நிலையை அடைந்துள்ள நிலையில், மேற்படி கருத்து தென்னிலங்கை இனவாதிகளுக்கு தீனியாக மாறியுள்ளதுடன், சிங்களப்பத்திரிகைகள் இது தொடர்பில் பெரிதும் சாடியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் முறை பிரதமர் ஆசனத்தில் அமர்ந்தால் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

ஜனாதிபதி அரசியல் யாப்பை மீற மாட்டாராம். பாராளுமன்ற தீர்ப்பை ஏற்கவும் தயாராம்.

இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதிக்கும் கட்சித் தலைவர்களுக்குமிடையே ஆரம்பமான விசேட சந்திப்பு சற்று முன்னர் நிறைவு பெற்றுள்ளது.

சந்திப்பின் முடிவில் ஜனாதிபதி பாராளுமன்றின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதற்கு தயார் எனவும் அரசியல் யாப்பை மீறமாட்டேன் என்றும் கட்சித் தலைவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

நேற்று நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன நாளை முறைப்படி நம்பிக்கையில்லை தீர்மானத்திற்கான வாக்கெடுப்பை நாடாத்தின் அதன் தீர்ப்பை தான் ஏற்றுக்கொள்ள தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




Read more...

ஜனாதிபதியின் கடிதத்தை வாசிக்க மறுத்த சபாநாயகர்.

இன்று பாராளுமன்று கூடப்பட்டபோது முக்கியமான சில தீர்ப்புக்கள் மற்றும் மற்றும் நிலையியற்;கட்டளை தொடர்பான சில விடயங்களை சபாநாயகர் கரு ஜெயசூரிய சபையினருக்கு வாசித்தார்.

அதன் முடிவில் ஜனாதிபதியினால் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தை இங்கே வாசித்துக்காட்டுங்கள் என பா.உ தினேஸ் குணவர்த்தன மிகவும் காட்டமாக வேண்டினார். நாடு பெரும் அசமந்த நிலையினுள் தள்ளப்பட்டுள்ள இந்நிலையில் அக்கடிதம் முக்கியத்துவம் வாய்ந்தாகும் அதை நீங்கள் தற்போது வாசிக்கவேண்டும் எனவும்2018.11.14 வற்புறுத்தினார்.

பதிலளித்த சபாநாயகர் அக்கடிதத்தை வாசிப்பதா இல்லையா என முடிவெடுப்பதற்கு எனக்கு பூரண அதிகாரம் உண்டு. குறித்த கடிதத்திற்கு நான் ஜனாதிபதிக்கு பதில் எழுதவுள்ளேன். அப்பதிலுடன் அதை நான் சபையில் தேவைப்பட்டால் வாசிப்பேன் எனத் தெரிவித்தார்.

நேற்று பாராளுமன்றில் நடைபெற்ற நம்பிக்கையில்லை பிரேரணை தொடர்பில் சபாநாயகரால் எழுத்துமூலமாக ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டதுடன் சில சிபார்சுகளை செய்திருந்தார் என்பது யாவரும் அறிந்தது. குறித்த கடிதத்திற்கு நேற்று பிற்பகலே ஜனாதிபதி சபாநாயகருக்கு பதில் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் அவர் சபாநாயகரை மிகவும் சாடியுள்ளார்:

அவருடைய முழுக்கடிதம் வருமாறு.

கௌரவ கரு ஜயசூரிய அவர்கள்,
சபாநாயகர்,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றம்,
ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

2018 நவம்பர் 14 ஆம் திகதிய பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக தங்களால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் மற்றும் அதன் இணைப்புகள் தொடர்பில் எனது கவனத்தை செலுத்தினேன்.

முதலாவதாக பாராளுமன்றம் தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள தங்களது செயற்பாடுகள் இந்த வழக்கின் தீர்ப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியதாக அமையும் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

தங்களது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல், அரசியலமைப்பின் பிரகாரம் எனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகவே என்னால் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று முன்வைக்கப்பட வேண்டிய முறை மற்றும் அதற்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் அரசியலமைப்பிலும் நிலையியற் கட்டளைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அரசியலமைப்பு, நிலையியற் கட்டளைகள் மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்கள் ஆகியவற்றைக் கருத்திற் கொள்ளாது நீங்கள் செயற்பட்டுள்ளீர்கள் என்பது தெளிவாகின்றது.

அரசியலமைப்பின் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக பிரதமர் ஒருவரை நியமிக்கும் வேளையில், எனது கருத்திற்கு அமைவாக பாராளுமன்றத்தில் அதிகபட்ச நம்பிக்கையினைக் கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கான சட்ட ஏற்பாடு காணப்படுவதுடன், பிரதமருக்கு அல்லது அரசாங்கத்திற்கு பெரும்பான்மை காணப்படுகின்றது என்பதையோ அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்ற பாராளுமன்ற சம்பிரதாயமோ இல்லை என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

மேலும் பாராளுமன்றத்தினால் உரியவாறு அத்தாட்சிப்படுத்தப்படாத கையொப்பங்கள் அடங்கிய ஆவணமொன்றினை எனக்கு அனுப்பி வைத்ததன் ஊடாக குறித்த பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதென உறுதிப்படுத்துவதற்கு தங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி தொடர்பிலும் நான் கவலையடைகின்றேன்.

அவ்வாறே, 2015 ஜனவரி 09 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினைப் பிரதிநிதித்துவம் செய்த கௌரவ டி.எம். ஜயரத்னவிற்கு சார்பாக பாராளுமன்றத்தில் 162 ஆசனங்கள் காணப்பட்ட சந்தர்ப்பத்திலேயே அவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு பாராளுமன்றத்தில் 41 ஆசனங்களை மட்டுமே கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களை, நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சியின் வேண்டுகோளுக்கு அமைவாக நியமித்தேன் என்பதையும் நினைவுறுத்துகின்றேன்.

என்னால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் அரசியலமைப்பிற்கு உட்பட்டனவா என்பதை நிர்ணயம் செய்வதற்கு பாராளுமன்றத்தில் முயற்சித்தலானது, அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை தெளிவுபடுத்துவதற்கு உயர் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள பிரத்தியேக மற்றும் அதற்கே உரித்தான அதிகாரங்களை மீறிச்செயற்படும் நடவடிக்கையாகும் எனவும் அதனூடாக நீங்கள் அரசியலமைப்பு தொடர்பில் உரியவாறு கவனம் செலுத்தவில்லை என்பதும் தெளிவாகின்றது.

இறுதியாக சபாநாயகராக நியமிக்கப்படும் ஒருவர் எந்தவொரு அரசியல் கட்சியை பிரதிநிதித்துவம் செய்பவராக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பினும் மாட்சிமை மிக்க பாராளுமன்றத்தின் கௌரவத்தையும் அதன் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் பாதுகாப்பதற்காக சுயாதீனமாக செயற்பட வேண்டிய பொறுப்பினை வருத்தத்துடன், தங்களுக்கு ஞாபகப்படுத்த நேர்ந்துள்ளது. தங்களால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மேற்குறித்த கடிதத்தில் முதலாவது பிரேரணையாக குறிப்பிடப்பட்டுள்ள விடயமாகிய குறித்த நியமனம் மற்றும் கட்டளை அரசியலமைப்பிற்கு எதிரானது என குறிப்பிடப்பட்டுள்ள பிரகடனத்தை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். குறித்த முதலாவது பிரேரணை தொடர்பில் நான் மேற்கொண்ட நடவடிக்கை அரசியமைப்பிற்கு ஏற்புடைய, சட்ட ரீதியான தீர்மானமாகும். தங்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்கள் அடங்கிய ஆவணத்தின் மூலப்பிரதியில் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட திகதி அழிக்கப்பட்டு அதன் மீது நவம்பர் 14 ஆம் திகதி என எழுதப்பட்டுள்ளது.

மேலும் அரசியலமைப்பிற்கு அமைவாக பிரதமர் ஒருவரை நியமிக்கும் பூரணமான அதிகாரத்தைக் கொண்டுள்ள நியமிப்பு அதிகாரி ஜனாதிபதியே ஆவார் என்பதையும் தங்களுக்கு தயவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இப்படிக்கு – நம்பிக்கையுள்ள

மைத்ரிபால சிறிசேன
ஜனாதிபதி





Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com