Thursday, November 1, 2018

பிட்ஸ்பேர்க் யூதக்கோவிலில் பெருவாரியானோர் மீது துப்பாக்கிச்சூடு! அமெரிக்காவில் யூத-விரோத வன்முறை வெடிக்கிறது! Joseph Kishore

பென்சில்வேனியா மாநிலத்தின் பிட்ஸ்பேர்க் நகரில் ட்ரீ ஆஃப் லைஃப் யூதக்கோவிலில் (Tree of Life Synagogue) நடந்திருக்கும் யூத-விரோத படுகொலை அமெரிக்க அரசியல் மற்றும் சமூகத்தின் நெருக்கடியை ஒரு புதிய மட்டத்திற்கு உயர்த்தியிருக்கிறது. அமெரிக்காவின் நிலைமைகள், மேலும் மேலும் அதிகமாய், ஒரு உள்நாட்டுப் போரின் தன்மையைக் கொண்டிருக்கின்றன, மிகவும் பின்தங்கிய மற்றும் பிற்போக்கான சக்திகள் ஊக்குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சனிக்கிழமை காலை மதச் சடங்குகளின் போது நிகழ்ந்த இந்த பிட்ஸ்பேர்க் படுகொலையில் பதினொரு பேர் கொல்லப்பட்டனர். பெரும்பான்மையாக முதியவர்களை பலிகொண்ட இந்த தாக்குதலில் இரண்டு சகோதரர்களும், 84 மற்றும் 86 வயது கொண்ட ஒரு வயதான தம்பதியும் பலியாகினர். பலியான இன்னொருவரான ரோஸ் மலிங்கர் 97 வயதானவர், யூதப்படுகொலையில் உயிர்தப்பியவர். துப்பாக்கிச்சூட்டை நடத்திய ரோபர்ட் போவர்ஸ் (Robert Bowers) மீது குற்றவியல் படுகொலைக் குற்றங்கள் 11 எண்ணிக்கையும் இனரீதியான அச்சுறுத்தலின் 13 எண்ணிக்கையும் சுமத்தப்பட்டுள்ளன.

யூத-விரோதம் அமெரிக்காவுக்குப் புதிதல்ல என்ற அதேநேரத்தில், யூத மக்களைக் குறிவைத்து இந்த அளவுக்கான ஒரு பெருந்திரள் வன்முறை நடவடிக்கை என்பது முன்கண்டிராததாகும். இஸ்ரேலின் செய்தித்தாளான Haaretz இல் ஒரு கருத்துரையாளர் எழுதியதைப் போல, “ ‘இது இங்கே நடக்காது’ என்றதான மாயை நொருக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் யூதர்கள் மறுநாள் காலையில் எழுந்து, இது இங்கே நடந்திருக்கிறது என்பதை அறிவதோடு மட்டுமல்லாமல், இந்த தாக்குதல் வருங்காலத்தில் இதேபோன்ற தாக்குதல்களுக்கு கட்டியம் கூறலாம் என்றும் உணரும்போது ஒரு புதிய மற்றும் மிகக் கூடுதலாய் அச்சுறுத்துகின்ற ஒரு எதிர்காலத்தை மனதில் காண்பார்கள்.”

இந்த சம்பவத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வதற்கு, அதனை உள்நாட்டு உள்ளடக்கத்தில் மட்டுமல்லாது, அதன் சர்வதேச மற்றும் வரலாற்று உள்ளடக்கத்திலும் பொருத்திக் காண்பது அவசியமாகும்.

ட்ரம்ப் நிர்வாகம் பாசிச வன்முறைக்கு விடுத்த திறந்த விண்ணப்பங்களின் ஒரு நேரடியான விளைபொருளாக இந்தத் தாக்குதல் அமைந்திருக்கிறது. போவெர்ஸ் யூத-விரோத வெறித்தனம் மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத பேரினவாதத்தின் ஒரு கலவையால் ஊக்குவிக்கப்பட்டிருந்தார் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. தாக்குதலுக்கு சற்று முன்பாய் சமூக ஊடகங்களில் அவர் பதிவிட்டிருந்த கருத்துகளில், யூதர்கள் மீது அவர் காட்டும் வெறுப்பை ஹீப்ரு புலம்பெயர்ந்தோர் உதவி சமூகம் (HIAS) என்ற அமைப்பு -ட்ரீ ஆஃப் லைஃப் யூதக்கோயில் இதனைச் சேர்ந்ததாகும்- மத்திய அமெரிக்காவில் இருந்து தப்பிவரும் அகதிகளுக்கு உதவுவதற்கு செய்யும் முயற்சிகளுடன் தொடர்புபடுத்திக் காட்டியிருந்தார். “நமது மக்களைக் கொல்ல படையெடுத்து வருபவர்களை உள்ளே கொண்டுவருவதற்கு HIAS விரும்புகிறது” என்று அவர் எழுதினார். “எனது மக்கள் கொல்லப்படுவதை நான் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.”

மத்திய அமெரிக்காவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட வறுமை மற்றும் வன்முறையில் இருந்து தப்பித்து ஓடிவரும் அகதிகளை குறிப்பிட “படையெடுத்து வருபவர்கள்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது உள்ளிட அவர் பயன்படுத்திய மொழி, ட்ரம்ப் நிர்வாகம் பயன்படுத்தி வரும் ஒரு மொழியாகும். சென்ற வாரத்தில் நிகழ்த்திய ஒரு உரையில், ட்ரம்ப், அமெரிக்க எல்லையை நோக்கி புலம்பெயர்மக்கள் நடைபயணமாய் வந்ததை ”நமது நாட்டின் மீதான ஒரு தாக்குதல்” என்று குறிப்பிட்டார். இது “உங்கள் அண்டைஅருகாமைகளை, உங்கள் மருத்துவமனைகளை, உங்கள் பள்ளிகளை” அழிக்க அச்சுறுத்துகின்ற ஒரு படையெடுப்பு என்று அவர் அழைத்தார். யூத-விரோத மற்றும் பாசிச சூசகங்களால் நிறைந்த தனது கருத்துகளில் ட்ரம்ப் “கடிகாரத்தை பின்னுக்கு நகர்த்தி ஊழலடைந்த, அதிகார-பசி கொண்ட உலகவாதிகளுக்கு அதிகாரத்தை மீட்சி செய்ய விரும்புபவர்கள்…” மீது கண்டனம் செய்தார்.

யூதக்கோவிலிலான தாக்குதலைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சி பிரபலங்களுக்கு ட்ரம்ப் ஆதரவாளர் ஒருவர் பைப் குண்டுகளை அனுப்புவது பின்தொடர்கிறது.

ஆயினும், ட்ரம்ப்பே கூட ஒரு நோய்க்குறியே தவிர விளக்கமல்ல. ட்ரம்ப்பை எது அதிகாரத்துக்குக் கொண்டுவந்தது?

“மறக்கப்பட்டுப்போன மனித”னின் பாதுகாவலர்களாக வலதுசாரிகள் காட்டிக்கொள்வதற்கு வழிவகை தந்த 2008 நிதிப் பொறிவின் மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் வோல்-ஸ்ட்ரீட் ஆதரவுக் கொள்கைகளின் பின்விளைவுகள்; “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பதாகையின் கீழ் 17 ஆண்டுகள் உள்ளிட கால் நூற்றாண்டு காலத்திற்கும் அதிகமான முடிவற்றதொரு போரின் தாக்கம்; தொழிலாள வர்க்கத்திடம் இருந்தான எதிர்ப்பு பெருகுவதற்கான பதிலிறுப்பில் ஆளும் வர்க்கத்தின் இரு பிரிவுகளான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி கட்சியினரும் முன்னெப்போதினும் எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கித் திரும்பினர்.

ட்ரம்ப் நாடாளுமன்றத்திற்கு-அப்பாற்பட்டு அதி-வலதுகளின் இயக்கத்தை வளர்த்தெடுக்க முனைகிறார் என்றால், ஜனநாயகக் கட்சியினரோ “பிளவுகளை”யும் அதிருப்தியையும் விதைப்பவர்களுக்கு எதிராய் ஸ்திரத்தன்மையை உத்தரவாதம் செய்பவர்களாக FBI, CIA மற்றும் இராணுவத்தை ஊக்குவிக்கின்றனர்.

வெறுமனே ட்ரம்ப் நிர்வாகத்தை விடவும் மிக அதிகமான விடயங்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்ற உன்மையையே சர்வதேச உள்ளடக்கம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதி-வலது மற்றும் பாசிச இயக்கங்கள் மற்றும் அரசாங்கங்களின் வளர்ச்சி ஒரு உலகளாவிய நிகழ்வுப்போக்காக இருக்கிறது.

பிலிப்பைன்ஸில் இது ரோட்ரிகோ டூடெர்டே ஐ உருவாக்கியிருக்கிறது, இவர் கண்காணிப்பு தற்கொலைப் படைகளை புகழ்ந்து வந்திருப்பவரும் ஒழுங்கமைக்க உதவியிருப்பவருமாவார்.

இந்தியாவில், பிரதமர் நரேந்திர மோடி பாசிச ஆர்.எஸ்.எஸ். இன் ஒரு உறுப்பினராவார். குஜராத்தின் முதலமைச்சராக இருந்த சமயத்தில், நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்ட 2002 கலவரங்களை ஒழுங்கமைப்பதில் அவர் உதவினார்.

பிரேசிலில், நேற்று நடத்தப்பட்ட தேர்தல் அதி-வலது வேட்பாளரான ஜெயர் போல்ஸோனாரோவை அதிகாரத்துக்கு உயர்த்தியிருக்கிறது.

ஐரோப்பா முழுவதிலும், அதி-வலது மற்று பாசிசக் கட்சிகள் ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்டு ஊக்குவிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஜேர்மனியிலான அபிவிருத்திகள் குறிப்பான முக்கியத்துவமுடையவை ஆகும். ஹிட்லரையும் யூதப்படுகொலையில் ஆறு மில்லியன் யூதர்களை படுகொலை செய்தமை உள்ளிட இருபதாம் நூற்றாண்டின் மிகக் கொடூரமான குற்றங்களையும் உருவாக்கிய நாட்டில், பாசிசம் மீண்டும் ஒரு பெரிய அரசியல் சக்தியாக எழுந்திருக்கிறது.

பாசிச ஜேர்மனிக்கான மாற்று (AfD) பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது; ஒவ்வொரு திருப்பத்திலும் அதன் புலம்பெயர்-விரோத பேரினவாதத்திற்கு தகவமைத்துக் கொண்டமை மற்றும் ஏற்றுக் கொண்டமையின் மூலம் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினர் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியினர் ஆகிய அரசியல் ஸ்தாபகத்தின் கட்சிகளால் இது திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்டு வந்திருக்கிறது.

சென்ற மாதத்தில், AfD தலைவரான அலெக்சாண்டர் கௌலான்ட் முன்னணி செய்தித்தாளான Frankfurter Allgemeine Zeitung இல் எழுதியிருந்த ஒரு பத்தி, ஹிட்லரின் ஒரு உரைக்கு இணைசொல்லக் கூடிய வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டிருந்தது. இதனிடையே, அரசு, AfD உடனான கூட்டணியில், பாசிசத்திற்கான இடது-சாரி எதிர்ப்பை குற்றமாக்குவதை நோக்கி நகர்ந்திருக்கிறது.

ஜேர்மனியில் பாசிசம் எழுச்சி காண்பதன் முக்கியத்துவம், நியூ யோர்க் டைம்ஸ் உள்ளிட, அமெரிக்க ஊடகங்களால் கிட்டத்தட்ட முற்றிலுமாக உதாசீனம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. ஜேர்மன் வரலாற்றை திருத்தி எழுவதற்கும் நாஜிக்களது குற்றங்களை சார்பியலானவையாக்குவதற்கும் பிற்போக்கான வரலாற்றாசிரியர்கள் செய்கின்ற முயற்சிகள் அமெரிக்காவிலுள்ள ஊழலடைந்த கல்வியறிஞர்கள் உள்ளிட தாராளவாத ஸ்தாபகத்திடம் இருந்து எந்த எதிர்ப்பையும் தூண்டியிருக்கவில்லை.

பாசிசம் உயர்ச்சி கண்டுவரும் நாடுகளில் இஸ்ரேலும் இருக்கிறது என்ற உண்மையானது இந்த நிகழ்ச்சிபோக்கின் உலகளாவிய தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. யூத வெறுப்பு என்பது தேசியவாதத்தின் ஒரு நச்சுத்தனமான வகையின் ஒரு குறிப்பிட்ட வடிவமென்பது இஸ்ரேலில் பாலஸ்தீனர்களுக்கு எதிரான அரசு-ஒப்புதலுடனான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையில் வெளிப்படுகிறது. சமீபத்தில் யூத மேலாதிக்கத்தை புனிதப்படுத்துகின்ற “தேசிய-அரசு சட்டம்” நிறைவேற்றப்படுவதை மேற்பார்வை செய்த இஸ்ரேலிய பிரதமரான பெஞ்சமின் நெத்தனியாகு, ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஆர்பன் உள்ளிட ஐரோப்பாவில் உள்ள அதி-வலது பாசிச சக்திகளுடன் பொதுவான நோக்கத்தைக் காண்கிறார்.

இறுதியாக, பாசிச இயக்கங்களின் சர்வதேச வளர்ச்சியானது அதன் வரலாற்று உள்ளடக்கத்தில் வைக்கப்பட வேண்டும். ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த 85 ஆண்டுகளுக்குப் பின்னர், இரண்டாம் உலகப் போர் வெடித்ததற்கு கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் பின்னர் பாசிசம் மறுஎழுச்சி காண்பதன் முக்கியத்துவம் என்ன?

சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் கலைக்கப்பட்டு கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் நெருங்கும் நிலையில், 1989-1991 இல் நடந்ததன் அத்தியாவசியமான பிற்போக்கான தன்மை ஒட்டுமொத்த உலகத்தின் முன்பாக அம்பலப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து வந்த காலத்தில் ஓரளவுக்கு ஒடுங்கிவந்த பாசிச நோய், சக்தியுடன் மீளெழுச்சி கண்டிருக்கிறது. சோவியத் ஒன்றியத்தின் முடிவானது, முதலாளித்துவத்தின் பரப்புரைவாதிகள் ஆருடம் கூறியதைப் போல, ஜனநாயகத்தின் ஒரு மலர்ச்சியை உருவாக்கவில்லை, மாறாக சமத்துவமின்மையின் வெடிப்பையும், ஏகாதிபத்தியப் போரையும், எதேச்சாதிகாரவாதத்தையும் அத்தோடு பாசிசத்தின் ஒரு மறுமலர்ச்சியையுமே உருவாக்கியிருக்கிறது.

பாசிசம், தீவிர முதலாளித்துவ நெருக்கடியின் ஒரு அரசியல் வெளிப்பாடாகும். நாஜிசத்தின் எழுச்சி மூலமாக, “முதலாளித்துவ சமூகம் அதன் சீரணமாகாத காட்டுமிராண்டித்தனத்தை வெளிக்கக்குகிறது” என்று ”தேசிய சோசலிசம் (நாஜி) என்றால் என்ன?” (1933) என்பதில் ட்ரொட்ஸ்கி விளக்கினார். பாசிசம் என்பது “ஏகபோக மூலதனத்தின் மிகவும் ஈவிரக்கமற்ற சர்வாதிகாரமாகும்” என்று அவர் எழுதினார்.

அவ்வாறே இன்றும் கூட, முதலாளித்துவமானது அதன் சீரணிக்காத காட்டுமிராண்டித்தனத்தை வெளிக்கக்கிக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்தியப் போர் மற்றும் முதலாளித்துவச் சுரண்டலின் பின்விளைவுகளுக்குத் தப்பி வரும் புலம்பெயர்ந்தவர்களும் அகதிகளுமே அதன் மிக உடனடியாக இலக்குகளாய் இருக்கின்றனர். அமெரிக்காவில், அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் எழுப்பப்பட்டிருக்கும் தடுப்பு முகாம்கள் குழந்தைகள் உள்ளிட்ட புலம்பெயர்ந்த மக்களை மிகவும் காட்டுமிராண்டித்தனமான நிலைமைகளின் கீழ் வைத்திருக்கின்றன.

1940 மேயில் வெளியான அவர் கடைசியாக எழுதிய முக்கியமானவற்றில் ஒன்றான “ஏகாதிபத்தியம் மற்றும் போர் தொடர்பாக நான்காம் அகிலத்தின் அறிக்கை”யில் ட்ரொட்ஸ்கி எழுதினார்: “சிதையும் முதலாளித்துவம் யூத மக்களை அதன் அத்தனை துவாரங்களின் வழியும் பிழிந்தெடுக்கப் பார்க்கிறது; இரண்டு பில்லியன் உலக மக்களில் பதினேழு மில்லியன் மனிதர்களுக்கு, அதாவது ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு, நமது கோளத்தில் இன்னமும் ஒரு இடம் கண்டுபிடிக்க முடியவில்லை! பரந்த நிலப் பரப்புகள் மற்றும் மனிதனுக்கு பூமியுடன் சேர்த்து வான்பரப்புகளையும் கூட வென்றுகொடுத்திருக்கின்ற தொழில்நுட்ப அற்புதங்களின் மத்தியில், முதலாளித்துவ வர்க்கம் நமது கோளத்தை ஒரு நாற்றமடிக்கும் சிறைச்சாலையாக மாற்றி விட முடிந்திருக்கிறது.” இதுவே இன்று மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த மக்கள் முகம்கொடுக்கும் நிலைமையாக இருக்கிறது.

சனிக்கிழமை அன்றான படுகொலை மீண்டுமொருமுறை விளங்கப்படுத்தியிருப்பதைப் போல, அரசியல் பிற்போக்குத்தனம் மற்றும் போரின் ஒரு காலகட்டமானது, பேரினவாதத்தின் மிகப்பழம் வடிவங்களில் ஒன்றான யூத-விரோதத்தின் புத்துயிர்ப்புடன் தவிர்க்கவியலாமல் தொடர்புபட்டுள்ளது. இஸ்ரேலின் இருப்பானது யூத-விரோத துன்புறுத்தல் மற்றும் வன்முறைக்கு ஒருவகையிலான பாதுகாப்பு என்பதான கருத்து ஒதுக்கப்பட வேண்டிய பிரமைகளில் ஒன்றாகும்.

வலது-சாரி பிற்போக்குத்தனத்தின் மிக அடிப்படையான இலக்காக இருப்பது தொழிலாள வர்க்கமாகும். முதலாளித்துவத்தில் இருந்து பாசிசம் பிறப்பதைப் போலவே, வர்க்கப் போராட்டமும் பிறக்கிறது. வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தியும் சோசலிசத்திலான பெருகும் ஆர்வமும் ஆளும் வர்க்கத்திற்கு பீதியூட்டுகிறது. தொழிலாளர்களின் பரந்த எண்ணிக்கையினர் வலதை நோக்கி அல்ல, இடதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர். சமூக சமத்துவமின்மைக்கும் போருக்கும் ஆளும் வர்க்கம் செய்கின்ற தயாரிப்புகளுக்கு குரோதம் ஆழமடைகிறது மற்றும் அதிகரித்துச் செல்கிறது.

சமூக எதிர்ப்பின் முதல் அறிகுறியிலேயே, ஆளும் வர்க்கம் பாசிச வன்முறைக்கு அழைப்பு விடுவதென்பது அதன் நம்பிக்கையற்ற தன்மையின் ஒரு அறிகுறியாகும். 1930களில், பாசிச இயக்கங்கள் ஒரு வெகுஜன அடித்தளத்தை பெற்ற சமயத்தில், ஆளும் உயரடுக்குகளின் அரசியல் சதிகளே ஜேர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயினில் அவை அதிகாரத்திற்கு உயர்வதை சாத்தியமாக்கின. இன்று, மேலிருந்து பாசிசத்தை திட்டமிட்டு தூண்டிவிடுவதென்பது இன்னும் அதிக மேலாதிக்கமான ஒரு காரணியாக இருக்கிறது.

சோசலிசப் புரட்சியா அல்லது முதலாளித்துவக் காட்டுமிராண்டித்தனமா என்ற மாற்றினை முதலாளித்துவம் மறுபடியும் மனிதகுலத்தின் முன்வைத்துக் கொண்டிருக்கிறது. “நாகரிகத்தை மீண்டும்கொண்டுவருவதற்கும்” மற்றும் “பிளவுபடுத்தும் அரசியல் வாய்வீச்சை” முடிவுக்குக் கொண்டுவருவதற்குமான அவசியம் குறித்து ஊடகங்களில் விவாதிக்கப்படும் அத்தனை கதைகளும் முக்கியமான பிரச்சினைகள் அத்தனையில் இருந்தும் நழுவிச் செல்கின்ற வெற்றுக் கதையாடல்களாகும். முதலாளித்துவ அமைப்புமுறையே ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

ஸ்ராலினிசத்தின் மற்றும் சமூக ஜனநாயகத்தின் காட்டிக்கொடுப்புகளுக்கான பதிலிறுப்பில் தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகரத் தலைமை நெருக்கடியைத் தீர்ப்பதற்காக, எண்பது ஆண்டுகளுக்கு முன்பாக, 1938 இல், நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டது. வரலாற்றில் தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் தோல்வியாக அமைந்த 1933 இல் ஜேர்மனியில் பாசிசம் பெற்ற வெற்றியில் இருந்தான படிப்பினைகளின் உட்கிரகிப்பு புதிய அகிலத்தின் அரசியல் வேலைத்திட்டத்தில் வெகு மையத்தில் இருந்தது.

ஒரு புரட்சிகர சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்ட அடிப்படையிலன்றி பாசிசத்தை எதிர்த்துப் போராடுவது சாத்தியமில்லாததாகும் என்பதே மிக முக்கியமான படிப்பினையாக இருந்தது. 1930களின் பயங்கரங்கள் மறுபடியும் எழுகின்ற நிலையில், பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை சமத்துவமின்மை, போர் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கான எதிர்ப்புடன் இணைக்கின்ற ஒரு சோசலிசத் தலைமையை, சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவதன் மூலமாக, இந்தப் புரிதலானது தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக கொண்டுவரப்பட்டாக வேண்டும்.

Read more...

மீண்டுமோர் பல்டி! பாராளுமன்று 14 ம் திகதியாம் .

இன்று அதிகாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ச விரிவுரையாளர்களை சந்தித்தபோது, பாராளுமன்றினை எதிர்வரும் 5 ம் திகதி கூடவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாராளுமன்றை எதிர்வரும் 14 ம் திகதியே கூட்ட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கசட் அறிவித்தல் எதிர்வரும் நாட்களில் வெளிவரும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

எது எவ்வாறாயினும் ஜனாதிபதி சரியான முடிவு ஒன்றை இதுவரை எடுக்கவிலை;லை என்று அவரது ஊடக பிரவு அறிவித்துள்ளது.

Read more...

ரணில் - கோத்தா அலரி மாளிகையில் சந்திப்பு – நாளை வெளியேறலாம்.

முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை இன்று பிற்பகல் அலரி மாளிகையில் சந்தித்துபேசியுள்ளதாக தெரியவருகின்றது.

முன்னாள் பிரதம மந்திரி ரணில் விக்கரமசிங்கவின் பாதுகாப்பு மற்றும் அவர் அலரி மாளிகையிலிருந்து விலகிச் செல்வதானால் அதற்குரிய பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக அறிய முடிகின்றது.

பெரும்பாலும் நாளை ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அலரி மாளிகையிலிருந்து வெளியேறலாம் என அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் இடம்பெறுகின்றது.

Read more...

புதிய அமைச்சர்கள் சிலர் பதவியேற்பு: பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மைத்திரி கையில்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் மேலும் சிலர், அமைச்சர்களாக இன்று பதவியேற்றுள்ளனர்.

இவ்வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அமைச்சர்கள்

துமிந்த திஸாநாயக்க: நீர்ப்பாசன, நீர்வழங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்
தயாசிறி ஜயசேகர: திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி

இராஜாங்க அமைச்சர்கள்

லக்ஷ்மன் செனவிரத்ன: பாதுகாப்பு
பியசேன கமகே – இளைஞர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி
மொஹான் லால் கிரேரூ – கல்வி மற்றும் உயர் கல்வி
ஸ்ரீயானி விஜயவிக்கிரம – மாகாண மற்றும் உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை

பிரதியமைச்சர்கள்

அங்கஜன் இராமநாதன்: விவசாயம்
மனுஷ நாணயக்கார: தொழில்துறை
இந்திக்க பண்டார: வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி
மனுஷ நாணயக்கார: தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
ஷாரத்தி துஷ்மந்த: நீதி மற்றும் சிறைச்சாலைகள்
நிஷாந்த முதுஹெட்டிகமகே: துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை
காதர் மஸ்தான்: மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி



Read more...

என்னை கொன்றுவிட்டுதான் வட-கிழக்கை இணைத்து சமஸ்டியை உருவாக்க முடியும். மைத்திரி ஆவேசம்.

புதிய அரசமைப்பில் வடக்கு – கிழக்கு இணைப்பு இல்லை; சமஷ்டியும் இல்லை. இவற்றைச் செய்ய வேண்டுமாயின் முதலில் என்னைக் கொன்றுவிட்டுத்தான் அவற்றை நிறைவேற்ற வேண்டும் என ; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர் :

ரணிலை மீண்டும் பிரதமராக்கக் களமிறங்கியுள்ளது மேற்குலகம். அவரை மீண்டும் பிரதமராகக் கொண்டுவரும் சதி முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. அது சாத்தியப்பட்டால் ஜனாதிபதி பதவியை உடன் துறப்பேன் – என அவர் சபதம் செய்தார்.

ரணில் விக்கிரமசிங்க மீளவும் பிரதமராக பதவி வகித்தால் ஒரு மணித்தியாலமேனும் ஜனாதிபதி பதவியில் நீடிக்கமாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ரணில் செய்த துரோகத்தின் காரணமாகவே மஹிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்தேன் எனவும் அவர் கூறினார்.

தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பாக தனது உத்தியோகபூர்வ இல்லைத்தில் அமைப்பாளர்களுக்குத் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, புதிய அரசை அமைப்பதற்கு அடிப்படையாக அமைந்த விடயங்கள் தொடர்பிலும் தெளிவு படுத்தினார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டி மிகவும் கடுமையான ஒரு நடவடிக்கையை அன்று எடுத்திருந்தேன்.. இன்று நான் எடுத்துள்ள நடவடிக்கை அதனை விடவும் வலுவானது. நாட்டையும் நாட்டு மக்களையும் கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் எடுத்துள்ளேன்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் அரசியல் சாசனத்தை காண்பித்து ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பிரதமர் பதவி வழங்குமாறு கோரியிருந்தார். அரசியல் சாசனத்தின் குறிப்பிட்ட சரத்தின் அடிப்படையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை பிரதமருக்கும் வழங்குமாறும் கோரியிருந்தார்.

இது தொடர்பான ஆவணமொன்றில் கையொப்பம் இடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

பிரதமரை நியமிக்க முடியும் என்ற போதிலும் எனது அதிகாரங்களைப் பிரதமரிடம் வழங்க முடியாது என நான் எழுத்து மூலம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெரியப்படுத்தியிருந்தேன்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியை ஏற்றவுடன் அவர் ஜனாதிபதியாகவே செயற்படுகின்றார் எனவும், தாம் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் கடமையாற்றுவதாகவும் ஐ.தே.கவின் குறிப்பிட்ட உறுப்பினர் கூறினார். இந்தநிலைமையை நீடிக்க விடக்கூடாது என்ற காரணத்தினால் மஹிந்த ராஜபக்சவை நான் புதிய பிரதமராக நியமித்தேன் – என்றார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சர் மஹிந்த சமரசிங்க உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Read more...

யார் இந்த நாமல் குமார? போட்டுடைக்கின்றார் மகாசோன் படையணியின் தலைவர் அமித் வீரசிங்க.

கண்டி பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டடில் மகாசோன் படையணியின் தலைவர் அமித் வீரசிங்க உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சுமார் 10 மாத விளக்க மறியலின் பின்னர் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

பிணையில் விடுதலையாகி வெளியேறிய அமித் வீரசிங்க, ஜனாதிபதியை கொல்வதற்கு சதிமுயற்சி மேற்கொள்ளப்படுகின்றது என்ற பரபரப்பு செய்தியை வெளியிட்டு, நாட்டில் பெரும் அசமந்த நிலையை உருவாக்கிய நாமல் குமார தொடர்பில் பல்வேறு விடயங்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்கள் முன்னிலையில் தெரிவித்தமை வருமாறு.

“மார்ச் மாதம் கூட்டு எதிர்க்கட்சியினால் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வெற்றிகொள்வதற்கு ஏதேனும் காரணத்தை தேடிக்கொண்டிருந்த போது, லொத்தர் சீட்டு கிடைத்தது போன்று கண்டி தெல்தெனிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவினை பெற்றுக் கொள்வதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ரணிலின் நண்பரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா, அப்பாவி இளைஞர்களை கைது செய்தார்.

மார்ச் மாதம் 8ஆம் திகதி என்னுடைய வீட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டன, ஆனால் அது பொய். என் வீட்டிலிருந்து 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 11ஆம் நபர்தான் இந்த நாமல் குமார.

எனது வீட்டின் சோபாவில் பிட்டு சாப்பிட்டு உறங்கிக்கொண்டிருந்தவர் தான் இந்த நாமல் குமார.

எங்களை வாகனத்தில் ஏற்றிச் சென்ற போது சிறிது தூரம் சென்றதன் பின்னர் நாமல் குமாரவின் கைவிலங்கை அகற்றி பரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா வேறு வாகனத்தில் அனுப்பி வைத்தார்.

என்னை கைது செய்வதற்கு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபா வழங்குவதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உறுதியளித்திருந்தார்.

வழங்கப்பட்ட இந்த ஐந்து இலட்சம் சன்மானத்தை பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா பெற்றுக் கொண்டார், அதனை நாமல் குமாரவிற்கு வழங்கவில்லை.

இந்த ஐந்து லட்சம் ரூபாவினை பிரித்துக் கொள்ள முடியாது, பாதாள உலகக் குழுவினர் வங்கியைக் கொள்ளையிட்டு பணத்தை பிரித்துக் கொள்ளும் போது மோதிக் கொள்வது போன்று இருவரும் மோதிக் கொள்கின்றனர்.

கொலைச் சதித் திட்டத்துடன் இருவருக்கும் தொடர்பு உண்டு, பிரதிப் பொலிஸ்மா அதிபர் மீது மட்டும் குற்றம் சுமத்துவதில் பயனில்லை.

நாமல் குமார சொல்லுவதனைப் போன்று அவர் நல்லவர் கிடையாது.

அனுராதபுர சிறைச்சாலையில் நான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது டென் பிரியசாத் (மஹாசேன் இயக்க செயற்பாட்டாளர்) என்னை சந்திக்க வாந்தார். பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் என்னை அழைத்துள்ளனர் நான் எவ்வாறு பேச வேண்டுமென அவர் என்னிடம் கேட்டார்.

அதற்கு நான் கூறினேன், “உங்களுக்குத் தெரிந்த உண்மைகளை வெளிப்படுத்துமாறு” கூறினேன். இறுதியாக ஒரு பொய்யை சொல்லுமாறு நான் கூறினேன்.

அந்த பொய் என்னவென்றால் “நாமல் குமார உங்களது (நாலக டி சில்வாவினது) குரல் பதிவு ஒன்றை என்னை கேட்கச் செய்தார்” என கூறுமாறு நான் டென் பிரியசாத்திடம் கூறினேன்.

ஏனென்றால் இந்த இருவரும் செய்யும் செயல்களை தாங்கிக்கொள்ள முடியாமல் இவ்வாறு ஓர் பொய் சொல்ல திட்டமிட்டோம்.

இதனைக் கூறிய போது நாலக டி சில்வா எதனையும் சிந்திக்காது கோபப்பட்டு, நமால் குமாரவை கடுமையாக திட்டினார்.

ஏன் அமீத் வீரசிங்க பற்றிய விடயங்களை கூறினாய் என நாலக டி சில்வா கடுமையாக சாடினார்.

உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாமல் குமார அனைத்து விடயங்களையும் உளறிவிட்டார்.

எனக்கு செய்த காரியத்தையே நமால் குமார, பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவிற்கும் செய்துவிட்டார்.

நாங்களும் எதிர்பார்க்கவில்லை, இருவரும் நீண்ட நாட்களாக உரையாடியவற்றை பதிவு செய்து வைத்திருந்து அவற்றை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தினார்.

ஒரு பாதாள உலகக்குழு இணைந்து செய்த காரியம் தற்பொழுது ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்த நேரிட்டுள்ளது.

இந்த விடயம் அரசாங்கமொன்று மாறும் அளவிற்கு பாரதூரமாக அமைந்துவிட்டது” என அமீத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.


Read more...

ஆழுநர் கனவுலகில் மிதக்கும் வித்தியாதரன்.

உதயன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியராக இருந்தவர் வித்தியாதரன். தமிழ் தேசியக் கூட்டமைமப்பு தன்னை வட மாகாணத்திற்கான முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கவேண்டுமென மிரட்டிவந்தார். அனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிரட்டல்களுக்கு அடிபணியவில்லை.

பின்னர் முன்னாள் புலிகளை ஒன்றிணைத்து ஜனநாயக போராளிகள் என்ற அமைப்பை உருவாக்கினார். அவ்வமைப்பினூடாக தமிழ் தேசியக் கூட்டமைபிடம் தனக்கு பா.உ தேர்தலில் வேட்பு மனுக்கேட்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்கும் மசியவில்லை.

ஜனநாயகப் போரளிகள் என்ற அமைப்பினூடாக தனியாக தேர்தலில் குதித்து மண்கவ்வினார். அது மாத்திரமல்லாது தமிழ் மக்களுக்கும் உலகிற்குமோர் மாபெரும் உண்மையை உணர்தினார். அந்த உண்மை யாதெனில் புலிகளுக்கு மக்கள் மத்தியிலுள்ள செல்வாகு என்னவென்பது. ஜனநாயகப் போராளிகள் பெருவெற்றியீட்டப்போகின்றார்கள் என கதை விட்டவர்கள் அனைவரும் தேர்தல் முடிவின் பின் நவ துவாரங்களையும் அடைத்துக்கொண்டு மறைந்தனர்.

தற்போது, புதியதோர் புரளியை அவிழ்த்து விட்டுள்ளார் வித்தியாதரன். அப்புரளி யாதெனில், மஹிந்த வடக்கு ஆளுநராக வித்தியை நியமிக்க போகின்றாராம். மஹிந்த பொருத்தமான தமிழர் ஒருவர் கிடைத்தால் அவரை வட கிழக்கு ஆழுநராக நியமிக்கலாம். ஆனால் அந்த நபர் வட-கிழக்கின் வாக்குகளை சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு கொண்டுவரக்கூடியவராக இருக்கவேண்டும். ஆனால் வித்தியாதரனால் அது முடியாது என்பது அவர் சந்தித்த இரு தேர்தல்களில் பின்பு நிரூபனமாகியுள்ளது.

இந்நிலையில், வித்தியாதரனை மஹிந்த வடக்கின் ஆழுநராக நியமிக்கவுள்ளார் என்ற செய்தியைப் பரப்பி தனது கனவு எவ்வளவு தூரம் நனவாகும் என நாடிபித்துப்பார்க்கும் வேலைத்திட்டத்தில் இறங்கியுள்ளார் வித்தியாதரன்.

Read more...

5 ம் திகதி பாராளுமன்று கூடுகின்றது.

இம் மாதம் 16 திகதிவரை வர்தமானி அறிவித்தலின் பிரகாரம் பிற்போடப்பட்டிருந்த பாராளுமன்ற அமர்வை எதிர்வரும் 05 திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மாணித்துள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலக்தில் இன்றைய தினம் இடம்பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

எனினும் நாடாளுமன்றை முன்கூட்டியே கூட்ட வேண்டுமென நேற்று சபாநாயகர் ஜனாதிபதியை சந்தித்தபோது கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கமைவாக எதிர்வரும் 05 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது.

Read more...

Wednesday, October 31, 2018

புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இனச்சுத்திகரிப்பு நேற்று நினைவு கூறப்பட்டது.

யாழ்மாவட்டத்தில் இருந்து 1990 ஒக்டோபர் 30 வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றப்பட்டதன் 28 ஆவது நினைவேந்தல் நேற்றைய தினம்(30) அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் யாழ் நகரின் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் ஐந்து சந்தி பகுதியில் உள்ள சில கடைகள் மூடப்பட்டு கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

இதன் போது அப்பகுதியில் ஒன்று கூடிய யாழ் முஸ்லீம் மக்கள் ஒக்டோபர் 30ம் திகதியினை யாழ் மாவட்ட முஸ்லிம் மக்கள் தாம் ஒரு துக்க தினமாக அனுஷ்டிப்பதாகவும்இ தமது சொந்த இருப்பிடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ் மாவட்ட முஸ்லிம் குடும்பங்கள் இன்று மும்மடங்காக அதிகரித்த நிலையில் இலங்கையில் பல பாகங்களிலும் சிதறுண்டு அகதி நிலையிலேயே தற்போது வாழ்ந்துவருகின்றனர் .

எனவே அவர்களை சொந்தமண்ணில் இன்றுடன் 28 வருடங்கள் கடந்தபின்பும் இலங்கை அரசு மட்டத்தில் அவர்களின் அபிலாசைகளை மதிக்கத்தக்க மீள்குடியமர்த்தலை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை ஆறாத்துயரமாக கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.

எனவே தான் எதிர்காலத்திலாவது சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்த்தலில் கூடுதல் கரிசனை கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என இதன் போது ஊடகங்களிடம் குறிப்பிட்டனர்.

பாறுக் ஷிஹான்







Read more...

ஒரு தமிழ் குடும்பம் மிகவும் உடல்நலம் குன்றிய அவர்களின் தந்தையை நாடு கடத்துவதற்கான இங்கிலாந்தின் திட்டங்களை எதிர்த்து போரிடுகின்றது. By Simon Whelan

பிரிட்டனின் மிருகத்தனமான குடியேற்ற முறை, கடுமையாக உடல்நலம் குன்றிய ஒருவரை நாடு கடத்துவதற்கான முயற்சியின் மீது மீண்டுமொருமுறை அம்பலமாகி உள்ளது. அவர் உயிருக்கு கடுமையான ஆபத்து என்பது தெளிவான பின்னரே, அதிகாரிகள் நாடு கடத்துவதை நிறுத்த நிர்பந்திக்கப்பட்டனர்.

ஆஸ்திரேலிய குடியுரிமை கொண்ட வயதுவந்த ஐந்து தமிழர்களை உள்ளடக்கிய பாலச்சந்திரன் குடும்பத்தினர், அக்டோபர் 15 இல், ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்துவதற்கான விமானத்தில் ஏற மறுத்தனர், ஏனென்றால் அவர்களின் தந்தை விமானத்தில் பயணிக்க நிர்பந்திக்கப்பட்டால் அவருக்கு உயிராபத்தான பக்கவாதம் ஏற்படலாமென அவர்கள் அஞ்சினர். அறுபத்தியொரு வயதான சங்கரப்பிள்ளை பாலச்சந்திரன் கடந்த ஆறு ஆண்டுகளில் மூன்று முறை மார்படைப்பில் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார், மருத்துவர்கள் இதை மன அழுத்தத்துடன் தொடர்புபடுத்தி உள்ளனர்.

பிறப்பால் இலங்கை தமிழரும் ஆஸ்திரேலிய குடியுரிமையும் கொண்ட சங்கரப்பிள்ளை, அவருக்கு ஏற்பட்ட ஒவ்வொரு மார்படைப்பும் அவர் குடும்பத்தின் மீதான குடியேற்ற வழக்கின் போது ஏற்பட்ட மனஅழுத்த காலங்களிலேயே ஏற்பட்டதாக கூறுகிறார். உள்துறை அலுவலகத்தின் கரங்களில் அவர் கடந்த ஆறு ஆண்டுகளாக இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்.

பாலச்சந்திரனின் மூத்த மகள் கார்த்திகா கூறுகையில், அக்குடும்பத்தினர் எந்த விதிகளையும் மீறியதில்லை என்றபோதும், உள்துறை அலுவலகம் அக்குடும்பத்தை "குற்றவாளிகளைப் போல" நடத்துவதாக அவர் உணர்ந்ததைத் தெரிவித்தார். அக்குடும்பம் வெளியேற்றப்படுவதைத் தடுக்கும் முயற்சியில் அக்குடும்பத்தின் நண்பர்கள் மற்றும் உற்றார்கள் அளித்த ஒரு மனு, தற்போது 15,000 கையெழுத்துக்களை எட்டி வருகிறது.

அக்குடும்பத்தினர் அவர்களே முன்வந்து இரண்டு முறை இந்தாண்டு ஆஸ்திரேலியா திரும்ப உடன்பட்டனர், ஆனால் அவ்விரு சந்தர்ப்பங்களிலும் சங்கரப்பிள்ளை உடல்நலமின்றி இருந்ததால் அவர்களால் பயணிக்க முடியவில்லை. அந்த குடும்பம் பரிசோதித்தளித்த ஒரு மருத்துவ வல்லுனர் அறிக்கை, பாலச்சந்திரன் விமானத்தில் பறக்க வேண்டியிருந்தால் அவருக்கு தீவிர ஆபத்து ஏற்படலாமென முடிவு செய்தது.

தண்ணீர் சுத்திகரிப்பு முறையில் நிபுணத்துவம் கொண்ட உயர்தர சிறப்பு பொறியாளரான பாலச்சந்திரனை ஒரு பிரிட்டிஷ் நிறுவனம் கட்டுமானத்துறை பொறியாளர்களின் கடுமையான பற்றாக்குறை காரணமாக அவரது சிறப்பு திறமைகளுக்காக 10 ஆண்டுகளுக்கு முன்னர் தேடிபிடித்து கொண்டு வந்த பின்னர், இங்கிலாந்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ள ஒரு குடும்பத்தின் மீது இந்த கடுமையான அணுகுமுறை பிரயோகிக்கப்படுகிறது. 1990 களின் இறுதியில், புலம்பெயர்வோரை ஏற்றுக் கொள்ளும் திட்டத்தின் பாகமாக அக்குடும்பம் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தது, குடும்பத்தினர் அனைவருக்கும் அங்கே குடியுரிமை வழங்கப்பட்டன.

30 வயதான கார்திகாவுக்கு வாசிப்பு குறைபாடு உள்ளது என்றாலும் அவர் கடந்த ஏழு ஆண்டுகளாக செயிண்ட் ஜோர்ஜ் மருத்துவமனையில் தன்னார்வ நிர்வாகியாக பணியாற்றி உள்ளார். 28 வயதான சிந்துஜா Queen Mary பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பு பொருளாதார பட்டம் பெற்றவர் என்பதுடன், உள்துறை சேவை துரிதவழி பரிட்சைகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். அவரது குடியேற்ற அந்தஸ்து பிரச்சினை தீர்க்கப்படுவதைச் சார்ந்து, உள்துறை சேவையில் அவருக்கான ஒரு வேலை நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

சிந்துஜா கூறுகையில், “நான் சற்று செவிதிறன் குறைந்தவர் என்பதால் மற்றவர்களின் அதே மட்டத்தை எட்ட நான் அதிக கடுமையாக முயற்சிக்க வேண்டியிருந்தது, ஆனால் பின்தங்கி விடக்கூடாது என்பதில் நான் தீர்மானகரமாக இருந்தேன். இப்போது அவை அனைத்தும் வீணாகிவிடும் போலிருக்கிறது. உள்துறை அலுவலகம் வெறுமனே ஒரு அரசு துறை தான். அரசு மக்களுக்காக இருக்குமென நான் கருதினேன்,” என்றார்.

அக்குடும்பத்தின் ஒரே மகனான, 23 வயதான பிரணவன், Queen Mary பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞான பட்டப்படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்றாலும், அவரது நிலையற்ற குடியேற்ற அந்தஸ்து காரணமாக அவர் இடத்தைப் பெற அவரால் முடியவில்லை.

பாலச்சந்திரன் நீண்ட விமான பயணம் மேற்கொள்ள நிர்பந்திக்கப்படுவோமோ என்று உயிரச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார், அதுபோன்ற பயணம் குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு மார்படைப்பு அபாயத்தை அதிகரிக்கும் என்பது நன்கறியப்பட்டதே. பாலச்சந்திரனுக்கு அவரது உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பாலச்சந்திரன் நாடு கடத்தப்பட்டால் அவரின் உயிருக்கு ஆபத்து என்பது குறித்து உள்துறை அலுவலகம் நன்கறிந்துள்ளது என்றாலும் ஒரு மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் இந்த தருணத்தில் அவர் விமானத்தில் பயணிக்கலாமென அது வலியுறுத்தியது. நான்குக்கு குறைவின்றி துணை மருத்துவக் குழுவினர் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் உடன் அவரை விமான நிலையம் வரையில் கொண்டு சென்று அகற்றும் அளவுக்கு அதிகாரிகள் மிகவும் தீர்மானகரமாக இருந்தனர்.

ஆஸ்திரேலியாவுக்கான விமானம் புறப்படும் நேரம் நெருங்கிய போது, சங்கரபிள்ளையின் இரத்த அழுத்தம் 169/113 ஆக அதிகரித்தது, “அவசர சிகிச்சை” நிலையம் நெருக்கத்தில் இருந்த போதும் கூட உள்துறை அலுவலகம் நியமித்திருந்த துணை மருத்துவக் குழுவினர் அவர் விமானத்தில் பயணிக்கலாம் என்றே கூறினர். பத்திரிகை செய்திகளின்படி பாலச்சந்திரன் நிலைகுலைந்து போயிருந்தார், ஒரு சமயத்தில், அரைகுறையாக நனவிழந்ததாக தெரிந்தது.

அக்குடும்பம் விமானத்தில் ஏற மறுத்து, பின்னர் அவர்களது வழக்கறிஞரின் கோரிக்கைக்கு இணங்க, மார்படைப்புக்கும் மன அழுத்தத்திற்கும் இடையே தொடர்புபடுத்தி பார்க்கும் ஓர் உளவியல் நிபுணர் ஒரு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அந்த அறிக்கை குறிப்பிடுகிறது: “எனது கருத்தில், அவருக்கு மேலதிக CVA கள் (மார்படைப்புகள்) ஏற்பட அதிக வாய்ப்புள்ளதுடன், உயர்மட்ட மன அழுத்தத்தின் காரணமாக உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து விளையக்கூடும்.” "உயிருக்கு ஆபத்தான மூளை பாதிப்பு" அபாயத்தில் அவர் இருப்பதாக குறிப்பிட்ட அந்த அறிக்கை, கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதால், தற்கொலைக்கு நிகரானது என்று குறிப்பிட்டது.

அவர்கள் தாமே முன்வந்து மொத்தமாக வெளியேற வேண்டும் அல்லது எதிர்வரும் நாட்களில் தனித்தனியாக பலவந்தமாக வெளியேற்றப்படும் சாத்தியக்கூறை முகங்கொடுக்க வேண்டும் என்று அக்குடும்பத்திடம் கூறப்பட்டது. பிரணவன் கார்டியனுக்குக் கூறினார், “நாங்கள் விமானத்தில் ஏறாவிட்டால், வரவிருக்கும் நாட்களில் உள்துறை அலுவலகத்தால் பலவந்தமாக வெளியேற்றப்படலாம், என் தந்தையின் மோசமான உடல்நலமின்மையால் அவர் இங்கே தங்க வைக்கப்பட்டு குடும்பமாக அனுப்பப்படுவதற்கு பதிலாக தனித்தனியாக நாடு கடத்தப்படலாம் என்று எங்களுக்குக் கூறப்பட்டது.”

பாலச்சந்திரனின் வேலைக்கான நுழைவனுமதி காலாவதி ஆகிவிட்டதாலும் உள்துறை அலுவலகம் அதற்குப்பின்னர் அக்குடும்பம் காலவரையின்றி தங்கியிருக்க அனுமதிக்க மறுத்து விட்டதாலும், இங்கிலாந்தின் கடுமையான குடியேற்ற சட்டங்களின் கீழ், பாலச்சந்திரன் குடும்பத்திற்கு இனி பிரிட்டனில் வேலை செய்ய அனுமதி இல்லை. அவர்களை இங்கிலாந்திலேயே தங்கியிருக்க அனுமதிக்க வேண்டுமென அவர்கள் 2012 இல் விண்ணப்பித்தபோதுதான் அக்குடும்பத்திற்குப் பிரச்சினைகள் தொடங்கின, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதற்குப் பின்னர் அவர்கள் 2013 இல் ஒரு மனு செய்து அதில் ஜெயித்தார்கள், அப்போது நீதிபதி அவர்கள் விடயத்தை மறுபரிசீலனை செய்யுமாறு உள்துறை அலுவலகத்திற்கு உத்தரவிட்டது. அதிகாரிகள் பின்னர் ஏறத்தாழ ஓராண்டுக்கு அக்குடும்பத்திற்கு எதுவும் எழுதவில்லை.

இறுதியாக ஜூலை 4, 2014 தேதியிட்டு அக்குடும்பத்தின் வழக்கறிஞர்களுக்கு முகவரியிட்டு எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் ஓர் உள்துறை அலுவலக அதிகாரி கடுமையாக விவரித்திருந்தார், “காலவரையின்றி இங்கேயே தங்கியிருப்பதை அனுமதிக்க கோரிய மேலே குறிப்பிட்ட விண்ணங்கள் நிராகரிக்கப்பட்டமை குறித்து அவர்கள் மறுத்த அந்த சமயத்தில் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கவில்லை என்பதும், ஆகவே அவர்கள் ஒரு முறையீடு செய்ய வேண்டியிருப்பதைக் குறித்து அறிந்திருக்கவில்லை என்பதும் என் கவனத்திற்கு வந்துள்ளது.”

மேற்கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்றாலும் இறுதியில் பெப்ரவரி 2017 இல் அக்குடும்பத்தின் வழக்கு உள்துறை அலுவலகத்தால் மறுக்கப்பட்டது. மனித உரிமைகள் கோருவதைப் பின்தொடர்வதற்காக, சட்ட உதவி அமைப்பால் வழக்கு செலவுகளுக்கான நிதி பிரத்யேகமாக அக்குடும்பத்திற்கு வழங்கப்பட்டது, ஆனால் உள்துறை அலுவலகம் ஏற்கனவே அக்டோபர் மத்தியில் விமானத்தில் பதிவு செய்திருந்த காரணத்தால் அவர்களுக்குப் போதிய கால அவகாசம் இருக்கவில்லை என்று கூறப்பட்டது.

வேலை செய்வதற்கான உரிமை பாலச்சந்திரனுக்கு மறுக்கப்பட்ட பின்னர், அக்குடும்பம் வீடற்றதாக ஆனதுடன், வேறு வழியின்றி அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு அவர்களின் சேமிப்புகள் அனைத்தையும் பயன்படுத்த நிர்பந்திக்கப்பட்டார்கள். அக்குடும்பம் ஹீத்ரோ விமான நிலையத்திலேயே படுத்துறங்கி ஒரு இரவைக் கழித்தது.

பாலச்சந்திரனின் உடல்நல பிரச்சினைகள் மற்றும் இரண்டு மகள்களின் உடல்ஊனம் —மற்றும் அவர்களின் கதியைக் குறித்த கேள்விக்கிடமற்ற மனஅழுத்தம்— ஆகியவற்றுடன், வீதிகளில் இருப்பதைக் காட்டிலும் அதற்கு மாற்றாக தடுப்புக்காவலில் வைக்குமாறு அவர்கள் உள்துறை அலுவலகத்திற்கு முறையிட்டனர்.

ஆனால் மிரட்டல்களுக்கு இடையே அக்குடும்பம் சகிக்கவியலாத நிலைமையில் தங்களை கண்டது. சிந்துஜா விவரித்தார்: "தடுப்புக் காவலில் வைக்க முடியாதளவுக்கு எங்கள் தந்தை மிகவும் சுகமின்றி இருந்ததாக உள்துறை அலுவலகம் எங்களுக்குத் தெரிவித்தது, மேலும் நாங்களே முன்வந்து திங்களன்று மாலை ஆஸ்திரேலியாவுக்கு திரும்புகிறோம் என்ற ஆவணங்களில் நாங்கள் கையெழுத்திட்டால் நிபந்தனையில் பேரில் தடுப்புக்காவல் மையத்திற்கு அருகில் உள்ள குறைந்த கட்டண விடுதியில் எங்களைத் தங்க வைக்கவும் ஒப்புக் கொண்டது. நாங்கள் வீதிகளில் உயிர்வாழ முடியாது என்பதால், கையெழுத்திடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று உணர்ந்தோம். ஆனால் விமானத்தில் ஏறினாலோ எங்கள் தந்தை உயிரிழக்கக்கூடும்.”

தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரின் உடல்நலனைப் பாதுகாக்க முனைந்து வருகின்ற Medical Justice என்ற அறக்கட்டளை, மருத்துவரீதியில் விமானத்தில் பறக்க முடியாதவர்களாக கருதப்படுபவர்களை உள்துறை அலுவலகம் வெளியேற்றுவதற்காக செய்யும் முயற்சியாக மாதத்திற்கு மூன்று சம்பவங்களையாவது அது எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்டது.

ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்தில் இருந்து ஆயிரக் கணக்கானவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள். கடந்த ஆண்டு 12,666 பேர் பிரிட்டனில் இருந்து விமானங்கள் மூலமாக பலவந்தமாக நாடு கடத்தப்பட்டார்கள்—அதாவது சராசரியாக நாளொன்றுக்கு அண்மித்து 35 பேர். மார்ச் 2014 இல் இருந்து மார்ச் 2017 வரையில் வெறும் மூன்றாண்டுகளில், மொத்தம் 40,039 பேர் "பலவந்தமாக திருப்பியனுப்புவதற்கு" உள்ளாக்கப்பட்டிருந்தனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு முன்னதாக புலம்பெயர்வின் அனைத்து அம்சங்களையும் ஆளும் உயரடுக்கு இறுக்கி வருகின்ற நிலையில், இவர்களில் 12,585 பேர் ஐரோப்பிய ஒன்றிய தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

2010 இல் ஹீத்ரோ விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் 46 வயதான ஐந்து குழந்தைகளின் தந்தை ஜிம்மி முபென்கா மிருகத்தனமாக நாடு கடத்தப்பட்டபோது அவர் இறந்ததைத் தொடர்ந்து வழங்கப்பட்ட சீர்திருத்தங்களுக்கான வாக்குறுதிகளை, பாலச்சந்திரன் குடும்பத்தினரைக் கையாளும் விதம் கேலிக்கூத்தாக ஆக்குகிறது.

இந்த ஆண்டில்தான், இன்னொரு மனிதருக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான மற்றொரு நாடு கடத்தும் சம்பவமும் HuffPost UK இல் பதிவு செய்யப்பட்டது. 20 நிமிட நேர குரல் பதிவில், அப்துல் எனும் ஒருவர் துருக்கிய விமானச்சேவை விமானத்தில் பிரிட்டனில் இருந்து நாடு கடத்துவதற்கான ஒரு முயற்சியின் போது சரீரரீதியிலும் வார்த்தைகளாலும் அவமானப்படுத்தப்பட்டதைக் குறித்து மீண்டும் மீண்டும் குறைகூறுகிறார்.

பாலச்சந்திரன் குடும்பத்தினரை நாடு கடத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் உடனடியாக நிறுத்தப்பட்டு, அவர்கள் இங்கிலாந்தில் சுதந்திரமாக வாழ்வதற்கான மற்றும் வேலை செய்யவதற்கான உரிமை வழங்கப்பட வேண்டுமென சோசலிச சமத்துவக் கட்சி கோருகிறது.

Read more...

தமிழ் பொலிஸ் வேண்டாம் என்கிறாராம் சிவி விக்னேஸ்வரன்.

வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிங்கள பொலீஸாரின் பாதுகாப்பினையே கோருகின்றனர் என வட மாகாண ஆழுநர் ரெஜினோல்ட கூரே தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி அம்பாள்குளம் பாடசாலையில் இடம்பெற்ற தரம் ஜந்து புலமை பரிசில் பரீடசையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் :

தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் பொலிஸாரை நிராகரிக்கின்றனர். அதற்கான காரணம் அவர்கள் சிங்களப் பொலிஸாரே நம்பிக்கையானவர்கள் என்றும் தமிழர் நம்பிக்கையற்றவர்கள் என்றம் கூறுகின்றனர்.

அரசியல் வாதிகள் மக்களிடம் உண்மையை பேசுவது கிடையாது. அவர்கள் தங்களின் தேர்தல் வெற்றிக்களுக்காக தவறான கருத்துக்களை பேசி வருகின்றார்கள்.

தமிழ் மக்களிலுள்ள செல்வந்தர்களும், படித்தோரும் கொழும்பில் வெள்ளவத்தை போன்ற இடங்களில் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர். திருமணமும் செய்துகொண்டுள்ளனர.; ஆனால் ஏனைய தமிழ் மக்கள் அவ்வாறு நடந்துகெண்டால் அதனை தவறு என்கின்றனர்.

தமிழ் - சிங்கள மக்களும் ஒற்றுமையாக இந்த நாட்டில் வாழ்வதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே எனது ஒரே ஒரு நோக்கம்.

அதிகாரம் வேண்டும் அடையாளம் வேண்டும் என்று போராடும் அதே தருணத்தில் யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அபிவிருத்தி கொண்டுவர முயலவேண்டும். அப்போது மக்களின் வாழ்வில் சுபிட்சம் நிலவும்.

நானும் எனது தாய் தந்தையரும் மலையகத்தில் தேயிலைத் தோட்டத்திலே பணிபுரிந்தவர்கள். அம்மக்களின் வேதனை துக்கம் அனைத்தையும் சிறுவயது முதலே நான் நன்கறிந்தவன். அந்த வகையில் இங்கு வாழ்கின்ற அங்கிருந்து வந்த மக்களின் மனநிலைகளை அறிந்து கொண்டுள்ளேன். எனவே அவர்களின் மேம்பாட்டுக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று குறிப்பிட்டார் ரெஜினோல்ட கூரே.


Read more...

இனிமேல் தவறு விடமாட்டார்களாம், வரட்டாமாம் ஆட்சியமைக்க! அழைக்கிறார் சம்பிக்க.

நெகிழ்வுத் தன்மை கொண்ட தேசிய அரசாங்கமொன்றை உருவாக்க மீண்டும் ஒன்றுபடுமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு அழைப்பு விடுப்பதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்படி அழைப்பை விடுத்த அவர் கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகள் எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில், காணப்பட்ட குறைபாடுகளை திருத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கு ஐக்கிய தேசிய கட்சி தயார் என்று கூறியுள்ளார்.

அந்தவகையில், பரந்த ஜனநாயக அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்ப மீண்டும் ஒன்றிணையுமாறும் அவர் கூறுகிறார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கூறினார்.

Read more...

பிரதமர் நியமனம் குறித்து கருத்து கூறமுடியாதாம் என்கின்றார் பிரத நீதிபதி.

பிரதமர் பதவி மாற்றம் அரசியல் அமைப்புக்கு முரணானது என்ற கருத்து வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் அதன் நியாயம் குறித்து விளக்கமளிக்குமாறு சபாநாயகர் கடந்த 29ஆம் திகதியன்று சட்டமா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

சபாநாயகர் கரு ஜெயசூரியவின் கடிதத்திற்கு பதிலனுப்பியுள்ள பிரதம நீதியரசர், இலங்கையில் பிரதமர் பதவி மாற்றம் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் தாம் கருத்து கூறுவது பொருத்தமற்றது என தெரிவித்துள்ளார்.

அவ்வாறாயின் சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றினை சட்ட ரீதியாக அணுகவேண்டும் என்ற செய்தியை அவர் விடுத்துள்ளார்.

Read more...

இன்று பிற்பகல் 5 மணிக்கு ஜனாதிபதி-சபாநாயகர் சந்திப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் தொடர்பில் பேசுவதற்காக இன்று பிற்பகல் 5 மணிக்கு நாட்டின் ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் ஆகியோர் சந்திக்கவுள்ளனர்.

இது தொடர்பில் பிபிசி செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க அவர்கள், தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காணும்பொருட்டு பாராளுமன்றை கூட்டுவதற்கான சந்தர்ப்பம் இச்சந்திப்பினூடாக கிடைக்கலாம் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

Read more...

Tuesday, October 30, 2018

ஊடகவியலாளரை அச்சுறுத்திய வழக்கில் றிசாத்தின் சகா வெளிநாடு செல்ல நீதிமன்றத்தால் தடை விதிப்பு:

ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்திய வழக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் சகா என்று சொல்லப்படுகின்ற அப்துல் அஸீஸ் முஹமட் அஷாம் என்பவர் வெளிநாடு செல்வதற்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தடை விதித்தது.

கல்முனையை சேர்ந்த ஊடகவியலாளரான முஹமட் இப்ராஹிம் என்பவரை கடந்த 26 ஆம் திகதி நள்ளிரவில் தொடர்ந்தேச்சையாக தொலைபேசியில் தகாத வார்த்தைகளால் இவர் பேசினார் என்று கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உள்ளனர்.

இவ்வழக்கு அழைக்கப்பட்டபோது முறைப்பாட்டாளரான ஊடகவியலாளரை ஆதரித்து சட்டத்தரணிகளான ஏ. ஜி. பிறேம் நவாத், அனோஜ் பிருதர்ஸ் ஆகியோர் ஆஜராகி நீதிமன்றம் சந்தேக நபருக்கு அழைப்பாணை விடுப்பதுடன் அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முடியாதவாறு தடை போட வேண்டும் என்றும் கோரினர்.

இதை அடுத்து இச்சந்தேக நபரை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு கல்முனை நீதிவான் ஐ. என். ரிஸ்பான் உத்தரவிட்டதுடன் சந்தேக நேபர் எதிர்வரும் 04 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அழைப்பாணை பிறப்பித்தார்.

நீதிமன்ற உத்தரவு கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸார் மூலமாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸாரின் சார்பில் பொலிஸ் சார்ஜன் அப்துல் ஹை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

Read more...

ஏலத்தில் விடப்பட்டுள்ள தமிழ் - முஸ்லிம் அரசியல் பெருந்தலைகள். பீமன்

இலங்கையில் எதிர்பாராத அரசியல் மாற்றம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அனைவரும் கூறிக்கொள்கின்றனர். இது எதிர்பாராத மாற்றமா அன்றில் எதிர்பார்த்த மாற்றமா? மக்களை பொறுத்தவரையிலும் இன்றைய காலகட்டத்திலும் இது எதிர்பார்த்த மாற்றமாகவே கருதப்படுகின்றது.

கடந்த மூன்றரை வருடங்களாக ஆட்சியை கைப்பற்றிருந்த நல்லாட்சி என்று பெயர் சூடப்பட்டிருந்த அரசாங்கத்தால் மக்களுக்கு எவ்வித நலனும் இடம்பெறவில்லை என்ற கருத்து உருவாகி, இவ்வரசாங்கம் தொலைந்து போக வேண்டும் என்ற நிலைக்கு மக்கள் வந்தபோதே மாற்றமும் நிகழ்ந்துள்ளது.

புதிய பிரதமர் நியமனம் தொடர்பாக பல்வேறுபட்ட விளக்கங்கள் கூறப்படுகின்றது. நியமனம் சட்டவிரோதமானதும், அரசியல்யாப்பினை மீறுவதுமாகவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. பாராளுமன்றின் விசுவாசத்தை பெற்றுக்கொள்ளக்கூடியவர் என ஜனாதிபதி கருதுகின்ற ஒருவரை பிரதம மந்திரியாக நியமிக்கலாம் என அரசியல் யாப்பு கூறுகின்றது.

விசுவாசத்தை பெற்றுக்கொள்ளுகின்றவர் யார் என்ற கேள்வியை கேட்டால் „ பெரும்பாண்மையை கொண்டிருக்கின்றவர்" என்று எடுத்துக்கொள்கின்றார்கள் அல்லது வாதிடுகின்றார்கள். ஆனால் அவ்வாறு நியமிக்கப்படுகின்றவர் பெரும்பாண்மையை பாராளுமன்றில் நிரூபிக்க வேண்டும் என்று அரசியல் யாப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டால் „பிரத்தியேகமாக குறிப்பிடப்படவில்லை" என்று பதில் வருகின்றது. ஆகவே மஹிந்த ராஜபக்ச பெரும்பாண்மை இன்றி பிரதமராக நீடிக்கலாம் என்பது அவர் தரப்பு சட்ட வல்லுனர்களின் விளக்கமாகவுள்ளது. ஆனால் பெரும்பாண்மை இன்றி எவ்வாறு பாராளுமன்றில் நீடிக்க முடியும்? நம்பிக்கையில்லை பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டால் பெரும்பாண்மை இல்லாத பிரதமரின் நிலை என்னவாகும்?

இந்த நிலையில் பாராளுமன்றை கூட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சி, ஜேவிபி, இலங்கை தமிழரசுக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவை சபாநாயகரை கேட்டுள்ளது. பாராளுமன்றை 16 ம் திகதி வரை பிற்போட்டுள்ளார் ஜனாதிபதி. ஜனாதிபதியின் மேற்படி உத்தரவை மேவி சபாநாயகர் பாராளுமன்றை கூட்டினால் என்ன நடக்கும் என்பதுதான் யாவரும் கேட்கின்ற கேள்வி.

பிரதமர் யார் என்பது, தொடர்பான தீர்ப்பு சிலநேரம் உச்ச நீதிமன்றினால் தீர்மானிக்கப்படலாம். மேற்படி விவாதங்களின் பிரகாரம் மஹிந்தவே பிரதமர் என்பது தீர்ப்பாகவும் அமையலாம். ஆனால் அடுத்த கட்டப்பிரச்சினை யாதெனில், வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம். வரவு செலவுத் திட்டம் நிறைவேற 113 வாக்குகள் வேண்டும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 96 ஆசனங்களுடன் இன்று அரசுடன் இணைந்து கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஐந்து உறுப்பினர்களுடன் சேர்த்து 101 அத்துடன் ஈபிடிபி யும் சேர்ந்தால் 102 ஆசனங்கள் மாத்திரமே மைத்திரி-மஹிந்த தரப்பினரிடம் உள்ளது.

இந்நிலையில்தான் தமிழ் - முஸ்லிம் அரசியல் தலைகளை மொத்தமாகவோ அன்றில் சில்லறையாகவோ கொள்வனவு செய்யும் திட்டத்தில் இறங்கியுள்ளார் பொதுஜன பெருமுனவின் இயக்குனர் என்று அறியப்படுகின்ற பசில் ராஜபக்ச. ஆட்களை வாங்குவதில் பசிலுக்கு நிகர் இலங்கையில் எவரும் இருக்கமுடியாது என்பதற்கு கடந்த 48 மணித்தியாலயங்களில் வடிவேல் சுரேஸ் அடிந்த அந்தர் பல்டிகள் தெளிவுபடுத்துகின்றது.

மஹிந்த ராஜபக்ச பதவிப்பிரமாணம் செய்தவுடன் அவரை சனிக்கிழமை சந்தித்த வடிவேல் சுரேஸ், மஹிந்த ராஜபச்சவிற்கு தனது ஆதரவு என்றார். மறுநாள் அலரி மாளிகைக்கு சென்ற வடிவேல் சுரேஸ், ரணில் சேர் உங்களை நான் விட்டுட்டு போவேனா? நான் அங்கே சென்றது அவர் முதல் எனக்கு செய்த உதவிகளின் நிமிர்த்தம் ஓர் வாழ்த்துச் சொல்லத்தான். அதற்கு மேல் ஒன்றுமில்லை சேர். நீங்கள் அப்பிடி ஒன்று கோபித்துக்கொள்ள மாட்டீர்கள் தானே என்ர தங்கச் சேர் என்று தலையில் நெட்டியும் முறித்துக்கொண்டு வெளியே வந்து அலரிமாளிகை வாசலில் மேற்சொன்னவற்றை அப்படியே ஊடகங்களுக்கும் கூறியதுடன் நின்றுவிடவில்லை தான் தொடர்பாக தவறான செய்தியை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதாகவும் மிரட்டினார்.

ஆனாலும் பஸில் ராஜபக்ச, சலித்து விடவில்லை. ஆத்திரப்படவில்லை. தொலைபேசி அழைப்பெடுத்து பிளெடி ராஸ்கல் என்று பேசவும் இல்லை. சாதுரியமாக அழைத்து ஜனாதிபதி மாளிகையில் விட்டு அமைச்சராக பதவிப்பிரமாணமும் செய்யவைத்துள்ளார். இதுதான் பசிலின் முளைச்சலவை செய்யும் சக்தி.

பஸிலின் சூத்திரத்தை நன்கு அறிந்தவர்கள்தான் நமது முஸ்லிம் அமைச்சர்கள். மாட்டோம் என்று சொல்லுகின்ற அளவுக்கு விலையும் சலுகைகளும் அதிகரிக்கும் என்பது அவர்களுக்கு தெரியும், இந்தப்பேரம்பேசல் அவர்களுக்கு ஒன்று புதிது கிடையாது. அந்த அடிப்படையில்தான் தற்போது அவர்கள் ஐ.தே.க யுடன் நிற்பதாக பாசாங்கு செய்கின்றார்கள். நான் அடித்துக்கூறுகின்றேன். அது இன்னும் சில நாட்கள் அல்லது சில வாரங்களுக்கு மாத்திரமே.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ரவுப் ஹக்கீம் சொல்லியிருந்த ஒருவிடயத்தை கவனிக்க வேண்டும். ஹக்கீம் எதிர்கட்சியில் உட்காருவதற்கும் தயங்கமாட்டாராம் என்பது அந்த செய்தி. உண்மையில் அவர் எதிர்கட்சியில் உட்காருவேன் என்பதல்ல அதன் அர்த்தம். தற்போது எதிர்கட்சியில் இருக்கின்றவர்கள் விரைவில் ஆழும் கட்சியில் உட்கார்வார்கள் அப்போது அவர்களுடன் நானும் உட்காருவேன் என்பதுதான் அதன் பொருளாக அமைந்திருந்தது.

தலைகளை மாற்றி ஆட்சியை மாற்றும் பேரம்பேசல்கள் இடம்பெற்றபோது, ரவி கருணாநாயக்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தியாளர்கள் 23 பேர் ராஜபக்ச பக்கம் தாவவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே ஹக்கீம் மேற்படி விடுகை விட்டிருந்தார். ஆனாலும் ரவி கருணாநாயக்க தலைமையிலான குழுவினருடனான பேரம்பேசலில் எட்டமுடியாமல்போன சில விடயங்களுக்கு அப்பால் ரவியை ஏற்றுக்கொள்வதில் பொதுஜன பெருமுன வினரிடம் எதிர்ப்பு காணப்படுகின்றது.

அந்த எதிர்ப்பு ஒன்றும் ரவியுடன் தனிப்பட்ட முரண்பாடுகள் கிடையாது. எதிர்வரும் தேர்தலில், பொதுஜன பெருமுன வினரின் தேர்தல் பிரச்சாரத்தின் பேசுபொருளாக அமையப்போவது, பிணைமுறிக் கொள்ளையேயாகும். எனவே குறித்த பகல் கொள்ளையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் பதவி பறிக்கப்பட்ட ரவி கருணாநாயக்கவை தம்பக்கம் வைத்துக்கொண்டு எவ்வாறு அதற்கு எதிராக பேசமுடியும் என்ற குழப்பம் உள்ளே காணப்படுகின்றது. இந்நிலையிலேயே ரவியை விடுத்து ஏனையவர்களை ஒவ்வொருவராக எடுத்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார் பஸில் ராஜபக்ச.

ரவி கருணாநாயக்க தலைமையில் 23 பேர் கட்சி தாவுகின்றார்கள் என்பதை அறிந்தவுடன், நீங்கள் அழைக்காவிட்டாலும் நாங்கள் உங்களுடன்தான் இருக்கின்றோம் என்று மஹிந்தவிற்கு கூறியிருந்த ஹக்கீம் மற்றும் ரிசார்ட் தரப்பினர் தற்போது தங்களைது தலைகளை ஏலத்தில் விட்டுள்ளனர். தாவாமல் தடுப்பதற்கு ரணிலும், தாவுவதற்கு பஸிலும் தற்போது ஏலத்தில் நிற்கின்றனர்.

முஸ்லிம் மக்களை பொறுத்தவரை தமது தலைவர்கள் தேவையான தரப்பிடம் பணத்தை வாங்கி தங்கள் மடியை நிரப்பிக்கொள்ளலாம். அம்மக்கள் அதை கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் தங்கள் தலைவர்கள் எதிர்கட்சியிலிருந்து, கூக்குரலிடுவதைக்கேட்டு தமிழரைப்போல் கைதட்டுவதற்கும் விசிலடிப்பதற்கும் அவர்கள் முட்டாள்கள் அல்ல. நேரடியாக கூறின், தமது தலைவர்கள் ஆட்சியில் பங்கெடுக்கவேண்டும் அதனூடாக பிரதேச அபிவிருத்தி, இளைஞர் யுவதிகளுக்கு வருடாந்தம் அரச வேலைவாய்ப்பு மற்றும் அரச சலுகைகள் யாவற்றையும் பெற்றுத்தரவேண்டும் என்பதே அம்மக்களின் எதிர்பார்ப்பு.

ஹிக்கடுவ , திகண , அம்பாறை வன்செயல்கள் யாவும் ரணில் விக்கிரமசிங்கவினால் மஹிந்தவையும் முஸ்லிம் மக்களையும் பிரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி எனக்கூறும் முஸ்லிம் மக்கள் மஹிந்தவின் அரசில் தமது தலைவர்கள் உடனடியாக பங்கெடுக்கவேண்டும் என்று அழுத்தம் பிரயோகிக்கின்றனர்.

இந்தப்படிப்பினையிலிருந்து தமிழ் மக்கள் தமது தலைமையையும் தாம் வழிநடாத்த தவறிவிட்டோம், தமது வழிக்கு எதிர்காலத்தில் தலைமையை கொண்டுவரவேண்டும் என்று உணரத்தொடங்கியுள்ளனர் என்பதை சமூக வலைத்தள பதிவுகள் எடுத்துக்கூறுகின்றது.

உணர்சிச்சி மாயையில் சிக்கியுள்ளவர்களையும் அவர்களது விதண்டாவாதங்களையும் கண்டுகொள்ளாது, முஸ்லிம் மக்கள் எவ்வாறு தமது தலைமையை வழிநாடாத்துகின்றார்களோ அவ்வாறு, இன்று தமிழ் மக்களும் தமது தலைமை அரசில் பங்கெடுக்கவேண்டும் அதற்கான பேரம் பேசலில் இறங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

ஏன் பட்ஜெட்டிற்கு ஆதரவளிப்பதாயின், அரசியல் கைதிகள் என்று அழைக்கப்படுகின்ற பாரிய குற்றமிழைத்துள்ளோரை விடுவிப்பதற்கு இணங்கவேண்டும் என்ற நிபந்தனையை முன்வைக்குமாறு புலிகள் தரப்புக்கூட த.தே.கூட்டமைப்பினருக்கு அழுத்தம் பிரயோகித்திருந்ததை குறிப்பிடலாம்.

ஆனால் இக்கருத்துடன் நேரடியாக மோதாத தமிழ் இளைஞர்கள் வர இருக்கின்ற அரசுடன், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் அரசியல் தீர்வு என்கின்ற சாத்தியமில்லாத நிபந்தனைகளை விடுத்து நடைமுறைச் சாத்தியமான நிபந்தனைகளை முன்வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசுடன் இணையவேண்டும் என்று வேண்டுகின்றனர்.

ஆனால் அரசு கவிழ்ந்தபோது நமிட்டு சிரிப்புடன் ஊடகங்கள் முன்தோன்றிய சுமந்திரன் நாங்கள், மஹிந்த தரப்பிற்கு நிபந்தனை விதித்துள்ளோம் : வரையப்பட்டுள்ள அரசியல் யாப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, ஐ.நா வின் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கான உறுதிமொழிகளை தந்தால் பரிசீலிப்போம் என்று தெரிவித்திருந்தார்.

அவர் அவ்வாறு தெரிவித்ததற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது தமிழ் மக்களிடமிருந்து வரும் அழுத்தத்திற்கான பதிலாக, தாம் இவ்வாறு பேசியிருக்கின்றோம் என்ற செய்தி. இரண்டாவது, அது நிறைவேறாத பட்சத்தில், ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசாங்கம் எமது தேவைகளை பூர்த்தி செய்ய தயாராகவிருந்தபோது, ஜனநாயக விரோதமாக மஹிந்த தரப்பு ஆட்சியை கைப்பற்றி ரணிலை முடக்கிவிட்டார்கள், சர்வதேசம் கொதித்துப்போயுள்ளது எனவே தமிழ் மக்கள் மீண்டுமொரு ஆணையை ரணில் விக்கிரமசிங்கே யிற்கு வழங்கவேண்டும் என பழைய கள்ளை புதிய பிளாவில் தமிழருக்கு பருக்கி போதையேற்றலாம் என்பது.

சுமந்திரன் தரப்பு மேற்படி நிபந்தனைகளை வைத்தற்கான காரணமும் மிக தெளிவானது. மஹிந்த தரப்பினர் ஐ.நா வின் பிரேணையை முழுமையாக எதிர்கின்றனர். அப்பிரேரணையை நிறைவேற்ற அல்ல பரிசீலிக்கவே தாங்கள் தயாரில்லை என்று அறிவித்துள்ள நிலையில் சாந்தியமில்லா நிபந்தனையை விதித்து வெளியேறிக்கொள்ள முடியும் என்பதாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசொன்றே இலங்கையில் இருக்கவேண்டும் என்று மேற்குலகம் விரும்புகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மேற்குலகின் ஏவலாளிகள். எனவே சூத்திரத்தை சிறுபிள்ளையாலும் விளங்கிக்கொள்ளமுடியும்.

எனவே தமிழ் தலைமையின் தலைகள் உள்ளுர் ஏலத்தில் இல்லை என்பது தெளிவு. ஆனாலும் ஓரிருவரை தனிப்பட்ட ரீதியில் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறாமலும் இல்லை. எது எவ்வாறாயினும் மேற்குலகினால் வழங்கப்படவுள்ள தொகையை பிரித்துக்கொள்வதில் பங்காளிக்கட்சிகள் நேரடியாக போர்க்கொடி தூக்கியுள்ளது.

அக்கட்சிகளின் தலைமைகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிய விடயங்கள் தொடர்பில் தங்களுடன் கலந்தாலோசிப்பதில்லை அவர்களே முடிவுகளை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் இம்முறை நாங்கள் அதற்கு அனுமதிக்கமாட்டோம் முக்கிய முடிவு எடுக்கின்றபோது நாமும் அதில் சம அந்தஸ்த்துடன் பங்கு கொள்ளவேண்டும் என்ற செய்தியை சொல்லியுள்ளனர்.

அதாவது நீங்கள் தொகையை வாங்க செல்லும்போது, நாங்களும் உங்களுடன் வரவேண்டும் எவ்வளவு வாங்குகின்றீர்கள் என்பதை நாமும் அறிந்தால்தான் அதை சரியாக பங்கிட்டுக்கொள்ள முடியும் என்ற அச்சுறுத்தலை விடுத்துள்ளனர். அவ்வச்சுறுத்தலுக்கு உறுதுணையாக கடந்த தேர்தலின்போது இந்திய றோ விடம் அள்ளி எடுத்துவிட்டு தமக்கு கிள்ளி கொடுத்த கதையை ஊடகங்களுக்கும் கசிய விட்டுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் இன்று சம்பந்தன் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து இருக்கின்றார். மஹிந்த சம்பந்தனிடம் வேண்டிய ஒரே ஒரு வேண்டுகோள் „வாக்கெடுப்பை பகிஸ்கரியுங்கள் தேவையானதை தருகின்றோம்" என்பதாகும் . மஹிந்த ராஜபக்சவை சரியாக புரிந்து கொண்ட ஒரே ஒரு இராஜதந்திரி எரிக் சொல்கைம். சொல்கைம் புலிகள் மீதான விமர்சனங்களை விரித்து வைத்தபோது, பிரபாகரன் அரசியலில் ஒரு சூனியம், எதுவுமே விளங்காத ஒரு மூர்க்கன். அவர் மஹிந்த ராஜபக்சவை சரியாக புரிந்து கொள்ளவில்லை. மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் நிலைப்பதற்காக எதையும் வழங்ககூடியவர். அவரிடமிருந்து நிறையவே பெற்றிருக்கலாம். ஆனால் பிரபாகரனால் அது முடியாமல் போய்விட்டது. அவருக்கு அரசியல் சூனியம் என்று தெரிவித்திருந்தார்.

இதை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் எனது கணிப்பும் அவ்வாறே. மஹிந்தவுடன் சாத்தியமான விடயங்களை தமிழ் தரப்பு பேசுமாக இருந்தால் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும். காரணம் மஹிந்த தமிழர் தரப்புக்கு எதாவது செய்தால் அதைக்கண்டு சிங்கள மக்கள் மிரளவும் மாட்டார்கள், சிங்களவர்களை எவ்வாறு கையாள்வது என்பது மஹிந்தவிற்கு நன்கு தெரியும்.

எனவே மஹிந்தவை கையாளும் விடயத்தை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பே மேற்கொள்ளவேண்டும். காரணம் அரசுடன் இணைந்துள்ள உதிரிகளால் பேரம் பேச முடியாது. அவர்கள் தங்களது சொந்த நலனுக்காகவே இத்தனை காலமும் இணைந்து இருந்துள்ளார்கள். எனவே அவர்கள் வேண்டினாலும் அது எவ்வளவு தூரம் கணக்கிலெடுக்கப்படும் என்பது சிந்திக்கவேண்டிய விடயமே.

Read more...

புளொட்டையும் ஈபிஆர்எல்எப் ஐயும் தமிழ் மக்கள் பேரவையிலிருந்து வெளியேறட்டாம். கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து புளொட்டையும், ஈ.பி.ஆர்.எல்.எவ் யும் வெளியேற்ற வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்தார்.

“தமிழ் மக்கள் பேரவையிலிருந்து புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிகளை உடன் வெளியேற்ற வேண்டும். இரண்டு கட்சிகளும் கொள்கைக்கு முரணாக செயற்படுகின்றன. தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தை தயாரித்த போது, புளொட் அதில் பங்களிக்கவில்லை. மாறாக அதை குழப்பும் முயற்சிகளில்தான் ஈடுபட்டது.

எமது தீர்வு திட்டம் தயாராகிக் கொண்டிருந்த போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அரசியலமைப்பு உருவாக்க வழிநடத்தல் குழுவில் அங்கம் வகித்தது.

ஈ.பி.ஆர்.எல்.எவ் தொடர்ந்து கொள்கைக்கு முரணாக செயற்பட்டு வருகிறது. தென்னிலங்கை கட்சிகளுடனும் கூட்டு வைத்துள்ளது. ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியை விட தமிழரசுக்கட்சியே பரவாயில்லை“ என தெரிவித்தார்.

Read more...

குடியுரிமையற்ற பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி அமெரிக்க குடியுரிமை கிடையாது.

அமெரிக்காவில் குடியுரிமை இல்லாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி குடியுரிமை வழங்கபடாது என்ற புதிய உத்தரவை டொனால்ட் ட்ரம்ப் விதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியுரிமை இல்லாமல் அமெரிக்காவுக்குச் செல்பவர்களுக்கு அங்கு குழந்தை பிறக்குமாயின் அக்குழந்தைகள் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களாவார்கள், இயல்பான இந்தக் குடியுரிமைத் திட்டத்தையும் ஒழிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

அமெரிக்க இடைத் தேர்தலுக்கு முன் குடிபெயர்ந்தவர்களுக்காக விதிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது,

”குடியுரிமை இல்லாது அமெரிக்காவுக்கு குடியேறிய பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி குடியுரிமை கிடையாது என்ற புதிய உத்தரவை விதிக்க விரும்புகிறேன். எனது முடிவை வெள்ளை மாளிகை வழக்கறிஞர் பரீசிலனை செய்து வருகின்றன” என்றார்.

ஆனால் இந்தத் உத்தரவு எப்போது விதிக்கப்படும் என்ற தகவலை ட்ரம்ப் உறுதியாக கூறவில்லை.

அமெரிக்க அரசியலைப்பு சட்ட 14-வது திருத்தத்தின்படி, அந்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான முழு உரிமை உள்ளது என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.

Read more...

மஹிந்த – சம்பந்தன் சந்திப்பு. எதிர்க்கட்சித் தலைமைப் பதவி குறித்து பேசவே இல்லையாம்.

பிரதமர் மஹிந்த ராஜபச்ச அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று விஷேட கூட்டம் ஒன்று அதன் தலைவர் சம்பந்தன் தலைமையில் இடம்பெறவதற்கு முன்னர் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. ஆனாலும் குறித்த சந்திப்பு தொடர்பில் எவ்வித தகவல்களும் மக்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இச்சந்திப்பு இடம்பெற்றதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும, எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா. சம்பந்தனை மாற்றுவதற்கு எவ்விதத் தீர்மானங்களும் இல்லை என தெரிவித்துள்ளார்.

டலஸ் அலகப்பெருமவின் இக்கூற்று மற்றும் த.தே.கூ புதிய பிரதமருடன் பேசிய விடயம் யாது என மக்களுக்கு தெரிவிக்காமையையிட்டு பல்வேறு விதமான கருத்து பரிமாறல்கள் இடம்பெற்றது. மக்கள் ஒருவகையான அதிருப்தியை வெளிக்காட்ட ஆரம்பித்திருந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அவ்வறிக்கையில் :

ஊடக அறிக்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் திரு.மஹிந்த ராஜபக்ச அவர்களின் வேண்டுகோளின்படி இன்று அவரை கொழும்பு விஜேராமையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

திரு இரா. சம்பந்தன் அவர்கள் வேறு எந்தவொரு அடிப்படையிலும் இந்த சந்திப்பில் பங்குபெறவில்லை. மேலும் இச்சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் எதுவும் கலந்துரையாடப்படவில்லை, இது தொடர்பில் வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்


மேற்படி அறிக்கையில் எதிர்கட்சி தலைவர் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லையாயின், பேசிய விடயங்கள் யாது என அறிந்து கொள்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


Read more...

ஐ.நா வின் பாதுகாப்பு படையைகோரியுள்ளாராம் ரணில். கூறுகின்றார் ஜீஎல் பீரிஸ் மறுக்கிறது ஐ.தே.க

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினரை இலங்கையில் கடமையில் ஈடுபடுத்துமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம் கோரியதாக பொதுஜன பெருமுன வின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

ரணில் விக்ரமசிங்க மிகவும் ஆச்சரியமான ஓர் கருத்தை வெளியிடுகின்றார்.

அவர் கூறுகின்றார் இலங்கையில் உள்ள அனைத்து தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை அழைத்து மிகவும் விசித்திரமான யோசனை ஒன்றை முன்வைக்கின்றார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி காக்கும் படையணியை இலங்கையில் கடமையில் ஈடுபடுத்துமாறு ரணில் கோருகின்றார்.

இந்தக் கோரிக்கையில் பிரதமர் என்ற வகையில் ரணில் விக்ரமசிங்க கையொப்பமொன்றையும் இடுகின்றார், எனினும் தற்பொழுது மஹிந்த ராஜபக்சவே நாட்டின் பிரதமராவார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் என்ற அடிப்படையில் கையொப்பமிடுவதற்கு எவ்வித அதிகாரமும் கிடையாது.

வெளிநாட்டு இராணுவங்களை இலங்கைக்கு கொண்டு வருமாறு ரணில் கோருகின்றார்.

இலங்கையில் 30 ஆண்டுகளாக கடுமையான போர் நிகழ்ந்த காலத்திலும் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினர் வரவுமில்லை எவரும் வருமாறு அழைக்கவும் இல்லை.

ரணிலுக்கு நாற்றுப்பற்று கிடையாது, தனது சுயலாப அரசியல் நோக்கத்திற்காக வெளிநாட்டுப் படையினரைக் கூட இலங்கைக்கு கொண்டு வர அவர் தயங்கவில்லை என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினரை இலங்கையில் கடமையில் ஈடுபடுத்துமாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரணில் விக்ரமசிங்க கோரவில்லை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் சமூக ஊடகங்களில் வலம் வரும் செய்திகளில் உண்மையில்லை எனவும், ரணில் அவ்வாறான ஓர் ஆவணத்தில் கையொப்பமிடவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

Read more...

கிளிநொச்சியில் கெரோயினுடன் கைதானவர் தப்பி ஓடிட்டாராம்.

கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் கடந்த இருபத்தாறாம் திகதி ஆறு கிராம் கெரோயினுடன் மன்னார் விசேட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இளைஞன், கடந்த இருபத்தெட்டாம் திகதி கிளிநொச்சிப் பொலிஸாரின் காவலில் இருந்து தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது :

கைது செய்ய முற்றபட்டபோது, மன்னார் விசேட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு உப பரிசோதகர் ஒருவருக்கும் சந்தேகநபருக்கும் காயங்கள் ஏற்ப்பட்டுள்ளது. காயங்களுடன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பாரமளிக்கப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் அங்கிருந்து சந்தேக நபர் தப்பி ஒடிவிட்டதாக தெரிவிக்கும் பொலிஸார், சந்தேக நபருக்கு காவலாக இருந்த இரு பொலிஸ் உத்தியோகித்தர்களை பணி இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Read more...

Monday, October 29, 2018

மைத்திரி , ரணில் மற்றும் மஹிந்தவின் அதிகாரப் போட்டியை எதிர்த்து மக்களை வீதிக்கழைக்கின்றது ஜேவிபி.

மைத்திரி, மஹிந்த, ரணில் மூவரி டையே ஏற்பட்டிருக்கும் அதிகாரப் போட்டியானது சாதாரண மக்களின் நன்மைக் கருதி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இந்த அதிகாரப்போட்டியானது தங்களுடைய இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கும், தனது அதிகாரப் பலத்தை நிலைநாட்டிக் கொள்வற்கு மேயாகும். பொதுமக்களின் வாழ்வில் அழிவை ஏற்படுத்தக்கூடிய இந்த நாசக்கார மைத்திரி, மஹிந்த, ரணில் மூவருடைய அதிகார முகாம்களுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி வீதியில் இறங்கி பாரிய எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பிக்க போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று (29) தற்போது நடைபெறுகின்ற விசேட ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மைத்திரி, மஹிந்த, ரணில் மூவருக்கிடையிலான அதிகாரப் போட்டியினால் தற்போது பெற்றோலியக்கூட்டுத் தாபனத்திலும் இரண்டு உயிர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகமும் நடந்துள்ளது.

இவர்களின் அதிகார முகாம்களுக்கு எதிராக, மக்கள் ஆட்சியை கட்டியெழுப்புவதற்கான பொறுப்பை மக்கள் விடுதலை முன்னணியான தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும், அதற்காக மைத்திரி, மஹிந்த, ரணில் தரப்பில் இருக்கும் முற்போக்கானவர்களுடனும், இடதுசாரி காட்சிகள், சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள், வியாபாரிகள் அனைவரையும் ஒன்றிணைத்த முற்போக்கு கூட்டணியோடு கலந்துரையாடப்படுவதாகவும், அவர்கள் அனைவருடனும் இணைந்து நவம்பர் முதலாம் திகதி நுகேகொடையில் பிரமாண்ட பேரணியை நடத்தப்போவதாகவும் தேறிவித்தார்.

அவர் மேலும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு முடிசூட்டுவதாலோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவுக்கு முடிசூட்டுவதாலோ மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை என்றும், ஆகவே மக்கள் ஆட்சியை கட்டியெழுப்ப தாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு அனைத்து ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read more...

நான் எந்த அமைச்சையும் பெற்றுக்கொள்ளப்போவதில்லை. பா.உ டலஸ் அலகப்பெரும

புதிய அரசாங்கத்திற்கான அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில், மாத்தறை மாவட்ட பாராளுமன்ற டலஸ் அலகப்பெரும தான் எந்த அமைச்சுப் பதவியையும் பெற்றுக்கொள்ளப்போவதில்லை என இலங்கைநெட் ற்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான முயற்சிகள் இடம்பெற்றபோது, நான் தெளிவாக மக்களுக்கு ஒரு செய்தியை கூறியிருந்தேன். அச்செய்தியானது அமையப்போகும் அமைச்சரவையில் நான் பங்கெடுக்கப்போவதில்லை என்பதாகும். அந்தவகையில் நான் மக்களுக்கு வழங்கிய செய்தியை அர்த்தமாக்கும் வகையிலும் பதவிகள் தேவைப்படுகின்றவர்களுக்கு வழிவிடும் வகையிலும் இம்முடிவுக்கு வந்துள்ளேன் என்றார் பா.உ டலஸ் அலகப்பெரும.

Read more...

ஜனநாயகத்தை நிலைநாட்ட எங்களுடன் இணையுங்கள். முன்னாள் பிரதமரின் விசேட வேண்டுகோள்.

குறுகிய அரசியல் வாதங்களில் இருந்து விலகி இலங்கையின் எதிர்காலத்திற்காக ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று (29) மாலை இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று (28) மாலை ஜனாதிபதி மேற்கொண்ட விஷேட உரையில் தனக்கும் அமைச்சரவைக்கும் குற்றம் சுமத்தியதாகவும், 19 ஆவது சீர்திருதத்தின் அடிப்படையில் நாட்டில் நிறைவேற்று அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஒருவரை தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பு சீர்திருத்தின் 42(4) சரத்தின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வெல்லக்கூடிய அமைச்சரே நியமிக்கப்பட வேண்டும் எனவும் இருப்பினும் மஹிந்த ராஜபக்ஷவின் நியமனம் அரசியலமைபிற்கு முரணானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, சிறு பிள்ளைகளால் கூட நம்ப முடியாத கருத்துக்களை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளை காணக்கூடியதாக இருக்கவில்லை எனவும் அரச ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் மூலம், ஊடக சுதந்திரத்தை கண்டுகொள்ள முடியுமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலமைக்கு பாராளுமன்றத்திலேயே தீர்வு உள்ளதாகவும், அதனால் உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறும் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பிற்கு முரணான, சர்வாதிகார ஆட்சியை எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதிக்க முடியாது எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.



Read more...

புதிய அமைச்சர்களின் விபரம் இதோ. தரவேற்றம் 3

மூன்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சற்று முன்னர் புதிய அமைச்சரவை சத்திய பிரமானம் செய்து கொண்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் மைத்திரபால சிறிசேன முன்னிலையில் அவர்கள் பதவியேற்றுள்ளனர்.

அவ்விபரம் வருமாறு:

1. மலை நாட்டு புதிய கிராமங்களை, உள்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் – ஆறுமுகம் தொண்டமான்
2. ஊடக அமைச்சர் – கெகெலிய ரம்புக்வெல
3. மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து சமய விவகாரங்கள் அமைச்சு – டக்ளஸ் தேவானந்தா
4. மாகாண சபை, உள்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் – பைசர் முஸ்தபா
5. கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் – விஜித் விஜயமுனி சொய்சா
6. மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சராக – ரஞ்சித் சியாமலபிட்டிய
7. விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீர
8. கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் – விஜயதாச ராஜபக்ஷ
9. துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சராக – மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்
10. வெளிவிவகார அமைச்சராக – சரத் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார்
11. சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சராக – நிமல் சிறிபால டி சில்வா
12. சிவில் விமானம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக – நிமல் சிறிபால டி சில்வா
13. நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷ
14. சுற்றுலா மற்றும் வனவிலங்கு பிரதி அமைச்சர் – ஆனந்த அளுத்கமகே
15. பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் – வடிவேல் சுரேஷ்
16. சுற்றுலா மற்றும் வனசீவராசிகள் அமைச்சராக – வசந்த சேனநாயக்க

Read more...

சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்காத உத்தியோகித்தர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை. எச்சரிக்கை.

நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டிருக்கின்ற இந்நிலைமையில் புதிய மாற்றங்கள் பல செய்யப்படவுள்ளதாக அறிவித்துள்ள அரசு, அமைச்சரவைகள் மற்றும் திணைக்களங்கள் உட்பட்ட சகல அரச நிறுவனங்களும் தங்களுடைய கருமங்களை மிகவும் கண்ணியமாக மேற்;கொள்ளவேண்டும் என அறிவித்துள்ளது.

விசேட அறிவித்தல் ஓன்றினூடாக சகல அரச நிறுவனங்களுக்கும் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சட்டத்தையும் ஒழுங்கையும் மீறுவோர் மீது அவர்களது நிலைகள் கணக்கிலெடுக்கப்படாது, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

மஹிந்த ராஜபக்ச கடமைகளை பொறுப்பெடுத்தார். கபினட் பேச்சாளர்கள் நியமனம்.

கடந்த வெள்ளிக்கிழமை நாட்டின் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட மஹிந்த ராஜபக்ச இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பாரமெடுத்துள்ளார்.

பிரதமர் காரியாலயத்தில் இந்நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுள்ளது. அவர் நாட்டின் 22 வது பிரதம மந்திரியாக கடைமையை ஏற்றுள்ளார்.

இதேநேரம் புதிய அமைச்சரவையின் பேச்சாளர்களாக கெஹெலிய ரம்புக்வெல வும் மஹிந்த சமரசிங்க அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

Sunday, October 28, 2018

சபாநாயகருக்கு சம்பந்தர் கடிதம். பாராளுமன்றை கூட்டட்டாம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர அரசியல் மாற்றத்தினை கருத்திற்கொண்டு நாடாளுமன்றினை கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் சாசனத்தின் மேன்மையமை உறுதி செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டமைந்த நாடாளுமன்றின் மேன்மை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றினை கூட்டுவதன் மூலம் சட்டம் ஒழுங்கினை உறுதி செய்ய முடியும் எனவும் அதனால் துரித கதியில் நாடாளுமன்றை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.


Read more...

ரணிலின் பாதுகாப்பை 10 ஆக குறைக்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவு.

முன்னாள் பிரதம மந்திரி ரணில் விக்கரமசிங்கவின் பாதுகாப்பினை விலக்கி கொள்ளுமாறும் அவருக்கான பாதுகாப்பிற்கு 10 பொலிஸாரை வழங்குமாறும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, பிரதம மந்திரிக்கான பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமசிங்கவிற்கு கட்டளையிட்டுள்ளார்.

அக்கட்டளையில் அவர் கூறியிருப்பதாவது:

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் முன்னாள் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பதவி நீங்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இலங்கை சனநாயக சோசலிஸ குடியரசின் பிரதம மந்திரியாக கௌரவ மஹிந்த ராஜபக்ச அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

அகவே முன்னாள் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிஉயர் பாதுபாப்பு மற்றும் மேலதிக விசேட அதிரடிப் படையை விலக்கி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன் என அவரது கட்டளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரதிகள்

ஜனாதிபதி செயலர்
பிரதம மந்திரி செயலர்
விசேட அதிரடிப்படையின் தளபதி எம்ஆர் லத்தீப் உட்பட எழுபருக்கு அனுப்பப்பட்டுள்ளது.




Read more...

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் மரணம். அர்ஜூண ரணதுங்கவை கைது செய்யக்கோரி ஊழியர்கள் தெருவில். வீடியோ

தெமட்டகொட பிரதேசத்திலுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைமையகத்தில் முன்னாள் அமைச்சர் அர்ஜூண ரணதுங்கவிற்கும் தொழிலளார்களுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாட்டினை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை கலைக்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த கோப்புக்கள் சிலவற்றை எடுத்துச்செல்வதற்கு சென்ற முன்னாள் அமைச்சருடன் தொழிலாளிகள் முரண்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து அர்ஜூண ரணதுங்க தனது பாதுகாவலர்களிடம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு கட்டளையிட்டதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

மரணமடைந்த செய்திகேட்ட ஊழியர்கள் தெருவுக்கு இறங்கியுள்ளதுடன் அர்ஜூண ரணதுங்க கைது செய்யப்படாது விட்டால், பணிபகிஸ்கரிப்பை மேற்கொண்டு முழுநாட்டையும் முடக்குவதாக அவர்கள் சவால் விடுக்கின்றனர்.

அதேநேரம் சம்பவ இடத்திற்கு விரைந்திருந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட அர்ஜூண ரணதுங்கவின் பாதுகாவலரை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் கைது செய்யவுள்ளதாகவும் மக்கள் மத்தியில் தெரிவித்ததாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர் ஒருவர் தெரிவிக்கையில்:

முன்னாள் அமைச்சர் கோப்புக்களை அள்ளிச்செல்ல முற்படுவதாக சில ஊழியர்கள் என்னிடம் வந்து கூறினர். அவ்விடத்திற்கு விரைந்து சென்ற நான் அமைச்சர் அவர்களே, நீங்கள் இப்போது அமைச்சர் இல்லைதானே எதற்காக கோப்புகளை எடுக்கின்றீர்கள், அவ்வாறு எடுத்துச் செல்ல அனுமதிக்கமாட்டோம் என்றேன். அப்போது அங்கிருந்தவர் ஒருவர் கூறினார் இவன்தான் நகரசபை உறுப்பினர் குலதிஸ்ஸ என்று, உடனேயே அர்ஜூண ரணதுங்க என்னை அடித்தார், அடித்து இழுத்துச் சென்றார், அப்போது எனது சக ஊழியர்கள் பின்னே ஓடிவந்தனர். அர்ஜூண ரணதுங்க வெடிவைக்க சொன்னார். அதன்போது அங்கு நின்றிருந்த பொலிஸ் பிரத இன்ஸ்பெக்டர் ஒருவர், வெடிவைக்க வேண்டாம் இங்குள்ள ஊழியர்கள் எனது கட்டுப்பாட்டினுள் நிற்கின்றார்கள் எனும்போது, அர்ஜூணவின் பாதுகாவலர் வெடிவைத்தார், எனது ஒரு நண்பனுக்கு வயிற்றில் வெடி வீழ்ந்தது மற்றவருக்கு எங்கு பட்டது என்பது எனக்கு ஞாபகம் இல்லை.

இது கொலை தொடர்பான பிரதான சாட்சியாகும். அங்கு நின்றவர்கள் பலர் அர்ஜூண ரணதுங்க வெடிவைக்க உத்தரவிட்டதாக கூறுகின்றனர்.

தற்போது அர்ஜூண ரணதுங்க உள்ளே இருக்கின்றார் அவரை கைது செய்யவேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். அச்சந்தர்ப்பத்தில் அர்ஜூண விசேட அதிரடிப்படையினரின் சீருடையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்குள் சிக்கியிருந்த முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மீட்டுள்ளனர்.

இதன்போது இடம்பெற்ற பதற்ற நிலையை அடுத்து அவர் வெளியே வர முடியாமல் இருந்துள்ளார்.

இதனை அடுத்து முன்னாள் அமைச்சருக்கு STF சீருடை அணிவித்து, தலைக்கவசம் அணிவித்து அவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.



சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட முழு வீடியோ



Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com