Sunday, October 28, 2018

அதிரடி மாற்றத்திற்கு காரணம் என்ன? விளக்கினார் மைத்திரி.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் அதனூடான அரசியல் ஸ்திரதன்மை தொடர்பில், நிலைமைக்கு பொறுப்புக்கூறவேண்டியவரனா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று 6 மணிக்கு தேசிய தொலைக்காட்சியில் தோன்றி மக்களுக்கு உரையாற்றிய அவர் தனது தரப்பு நியாயத்தை 37 நிமிடங்களாக பேசினார். அவர் தெரிவித்தமை வருமாறு:

என்னையும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக் ஷவையும், படுகொலைச் செய்வதற்காக, எடுக்கப்பட்ட முயற்சி தொடர்பிலான தகவலை மூடி மறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சூழ்ச்சி தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர், தகவல் வெளியாகி 48 மணிநேரத்துக்குள், அந்த குரல் போலியானது என்று தெரிவித்த பொலிஸ் மா அதிபர், அந்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணையை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கொடுக்காது, வேறுப்பிரிவுக்கு வழங்கினார். அதில் நான் சந்தேகப்பட்டேன்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி விவகாரம் தொடர்பில், ரணில் விக்கிரமசிங்க பொறுப்பு கூறவேண்டும். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை, ரணில் விக்கிரமசிங்கவே, நாட்டுக்கு அழைத்துவரவேண்டும்.

2014ஆம் ஆண்டு என்னை பொது வேட்பாளராக தெரிவு செய்த போது நான் எதிர்நோக்கி ஆபத்தான நிலைமை உங்களுக்கு நினைவில் இருக்கும் என நம்புகிறேன். நாட்டு அரசியலில் எந்த நபரும் பொறுப்பேற்காக சவாலை நான் ஏற்றுக்கொண்டேன்.

அது பாரதூரமான அரசியல் சவால் என்பது போல் ஆபத்து நிறைந்தது. அரசியல் ரீதியாக மட்டுமல்ல? எனக்கு, எனது மனைவி, பிள்ளை என அனைவருக்கும் ஆபத்தான சூழ்நிலையில் அந்த சவாலை எதிர்கொண்டேன்.

அதேபோல் கடந்த 26ஆம் திகதி நான் எடுத்த தீர்மானம் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி எடுத்த தீர்மானத்தை விட மிகப் பெரிய சவாலுடனான தீர்மானம்.

உங்களதும், எனது அன்புக்குரிய தாய் நாட்டுக்காகவும் அன்பான பொது மக்களுக்காகவுமே இவை அனைத்தையும் நான் செய்தேன் என்பதை கூறிக்கொள்கிறேன்.

எனது உயிரை பணயம் வைத்து 2015ஆம் ஆண்டு பெற்ற அரசியல் வெற்றியை கொச்சைப்படுத்தும் வகையில் நாகரிகமான அரசியலுக்கு பொருத்தமற்ற செயற்பாடுகளில் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டார்.

இலங்கையின் எதிர்காலத்தை அவர் அவருடன் நெருக்கமாக செயற்படும், மக்களின் உண்மையான இதய துடிப்பை அறியாத மேல் தட்டு வகுப்பினர் வினோத களியாட்டு இடமாக மாற்றும் நிலைமைக்கு அவர் சென்றார்.

குறிப்பாக நல்லாட்சி அரசாங்கம் என்ற எண்ணக்கருவை ரணில் விக்ரமசிங்க அழித்தார் என்ற நான் நினைக்கின்றேன்.

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி நான் தேர்தலில் வெற்றி பெற்று மறு நாள் மாலை நான் பதவியேற்கும் போது நாடாளுமன்றத்தில் 47 உறுப்பினர்களை கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தேன்.

எனினும் அந்த உன்னதமான நல்லாட்சி எண்ணக்கருவையும் நல்லாட்சியின் நோக்கத்தையும் ரணில் விக்ரமசிங்க அழித்தார். நாட்டில் ஊழல், மோசடிகள் பெருமளவில் அதிகரித்தன.

அத்துடன் ரணில் விக்ரமசிங்க கூட்டாக முடிவுகளை எடுப்பதற்கு பதிலாக தனியாக தீர்மானங்களை எடுத்தார்.

மிகவும் முரட்டுத்தனமாக ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்குள் நடந்துக்கொண்டார். இதனால், அரசாங்கத்திற்குள் பாரதுரமான அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.

கூட்டாக முடிவுகளை எடுக்காது அவரும் அவருக்கு நெருக்கமான சிலரும் கலந்துரையாடி முடிவுகளை எடுத்தனர். இதன் காரணமாக நாடு என்ற வகையில் நாம் துரதிஷ்டவசமாக நிலைமைக்கு தள்ளப்பட்டோம்.

கடந்த மூன்றரை வருடங்களில் எனக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அரசியல் ரீதியான வேறுபாடுகள் ஏற்பட்டன. கொள்கை ரீதியான மோதல்களை நான் பார்த்தேன்.

ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் கொள்கைக்கும் எனது அரசியல் கொள்கைக்கும் இடையில் வேறுபாடுகளை கண்டேன். அவருக்கும் எனக்கும் இடையில் கலாசார வேறுபாடுகளை கண்டேன்.

இவை அனைத்தும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்தன எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்தநாட்டின் வரலாற்றில் இடம்பெறாத மாபெரும் கொள்ளை ஒன்று இடம்பெற்றது. அந்த கொள்ளைக்கு பொறுப்புக்கூறவேண்டியவர் கௌரவ விக்கிரமசிங்க அவர்களே. அவ்விடயம் இடம்பெற்றபோது அவர் மிகவும் பிரச்சினைக்குரிய வகையில் நடந்து கொண்டார்.

இச்சம்பவம் நடைபெற்றிருந்த நேரத்தில் நான் மத்தியவங்கிக்கு செல்ல முற்பட்டேன் அப்போது, மிகவும் கலவரமடைந்தவராக ரணில் விக்கிரமசிங்க எனது இல்லத்திற்கு வந்தார். அவ்வாறு வந்த அவர் நானே மத்திய வங்கிக்கு பொறுப்பானவன் நீங்கள் ஏன் அங்கே செல்கின்றீர்கள் எனக்கேட்டார். அப்போது நான் கூறினேன்: அது உண்மை நீங்கள் தான் மத்தியவங்கிக்கு பொறுப்பானவர். ஆனால் நான் நாட்டின் ஜனாதிபதி அல்லவா, எனக்கு அந்த இடத்திற்கு போக முடியாதா என்று கேட்டேன். அப்போது அவர் எனது இல்லத்திலிருந்து வெளியேறினார். நான் திட்டமிட்டதுபோல் மத்தியவங்கிக்கு சென்றேன்.

அப்போது பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த அர்ஜூண மகேந்திரன் என்னை வெற்றிலை கொடுத்து வரவேற்றார். எவ்வாறு இந்த மனிதன் இவ்வளவு சீக்கிரம் இங்கு வந்தார் என நான் அதிர்ந்து போனேன்.

இறுதியாக பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்துடன், கைகோர்த்துக்கொள்ளுமாறு, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 பேருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பேச்சை முழுமையாக இங்கு கேட்கலாம்.



வணக்கம் உங்கள் அனைவருக்கும் மும்மணிகளின் ஆசிகள்.

இறைவனின் துணை.

எனது அன்புக்குரிய பெற்றோர்களே, நண்பர்களே,

இன்று உங்கள் முன் எனது இந்த கருத்துக்களை முன்வைக்க தீர்மானித்தமைக்கு கடந்த சில தினங்களாக இந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களுடன் நாட்டின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில் நாம் பயணிக்க வேண்டிய திசையை தெளிவுபடுத்துவதற்காகவேயாகும். அத்தோடு குறிப்பாக இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அடிப்படையாக அமைந்த காரணங்களைப் பற்றி மிக சுருக்கமான ஒரு தெளிவை முன்வைப்பதற்காகவாகும்.

இன்று நாம் ஒரு புதிய வருடப் பிறப்பை அண்மித்திருக்கின்ற கால கட்டத்திலேயே இருக்கின்றோம். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி இந்த நாட்டின் எனது அன்புக்குரிய பொதுமக்களாகிய உங்களின் ஏறத்தாழ 62 இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுக்கொடுத்து என்னை உங்களின் பிரதம சேவகனாகவும் அரச தலைவனாகவும் பெரும் எதிர்பார்ப்புகளுடனேயே தேர்ந்தெடுத்தீர்கள்.

அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்காக இன்றும் நான் உங்களுக்கு எனது மதிப்புடன் கூடிய நன்றியைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை, இன்றும் எதிர்காலத்திலும் நீங்கள் என்மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையினை பாதுகாப்பதுடன் எனது உயிரைப் பணயம் வைத்தேனும் அவற்றை நிறைவேற்றுவேன் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

நாட்டையும் மக்களையும் முன்னிலைப்படுத்தி அரசியலில் ஈடுபடும் நாம், எந்த கட்சி என்பதையோ வலதுசாரி கட்சியா இடதுசாரி கட்சியா என்பதை விட நாம் சேவை செய்யும் நாட்டிற்கும் மக்களுக்கும் சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு நாம் செய்ய வேண்டிய மிகச் சிறந்த காரியம் என்ன என்பதையே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.

2014 ஆம் ஆண்டு பொது வேட்பாளராக என்னை தெரிவு செய்தபோது எனக்கு முகங்கொடுக்க நேர்ந்த இக்கட்டான நிலைமையை பற்றியும் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நான் நினைக்கின்றேன். இந்நாட்டு அரசியலில் எவருமே பொறுப்பேற்காத பாரதூரமான அரசியல் சவாலையே அன்று நான் பொறுப்பேற்றேன். அத்தோடு அது அரசியல் ரீதியாக மாத்திரமன்றி தனிப்பட்ட வகையில் எனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் ஏற்பட்ட பெரும் அச்சுறுதலுக்கு மத்தியிலேயே அன்று நான் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

அதேபோலவே கடந்த 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி நான் மேற்கொண்ட தீர்மானமானது, 2014 நவம்பர் 21 ஆம் திகதி நான் மேற்கொண்ட தீர்மானத்தை விட மிகப் பாரதூரமான, சவால்மிக்க அதேநேரத்தில் மிகவும் இக்கட்டான ஒரு தீர்மானமே ஆகும் என்பதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகின்றேன். இந்த அனைத்து தீர்மானங்களையும் உங்களதும் எனதும் அன்புக்குரிய இந்த தாய் நாட்டுக்காகவும் அன்புக்குரிய பொதுமக்கள் உங்களுக்காகவுமே என்பதை நான் இங்கே மிகுந்த கௌரவத்துடனும் பணிவுடனும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

2015 ஆம் ஆண்டு எனது உயிரைப் பணயம் வைத்து அன்று பெற்றுக்கொண்ட அந்த அரசியல் வெற்றியை கொச்சைப்படுத்தும் வகையில் ஒழுக்கமிக்க அரசியலுக்கு ஒவ்வாத அரசியல் செயற்பாடுகளில் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரவேசித்தார். இலங்கையின் எதிர்காலத்தை அவரும் அவருடன் நெருங்கி செயற்படும் உண்மையான மக்களின் உணர்வுகளை உணராத ஒரு சில செல்வந்தர்கள் குழுவினரின் களியாட்ட செயற்பாடுகளாக்கிக் கொண்டார் என்பதே எனது நம்பிக்கையாகும்.

குறிப்பாக நல்லாட்சி அரசாங்கம் எனும் கருப்பொருளை கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மிக வெளிப்படையாகவே துஷ;பிரயோகம் செய்தார் என்பதே எனது நம்பிக்கையாகும். 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி நான் வெற்றியீட்டியதன் பின்னர் 09 ஆம் திகதி மாலையில் நான் ஜனாதிபதியாக பதவியேற்ற அதே கையோடு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்தில் 47 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே அவருடன் இருந்த பின்னணியிலும் அவரை பிரதமர் பதவியில் அமர்த்தியமை எனக்கு ஞாபகம் இருப்பதைப் போல் உங்களுக்கும் ஞாபகம் இருக்கும் என நான் நினைக்கின்றேன்.

இருப்பினும் அந்த உன்னதமான நல்லாட்சி கோட்பாடுகளையும் நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாசமாக்கினார் என்பதை என்னைப் போலவே நீங்களும் கடந்த சில ஆண்டுகளாக பெற்ற அனுபவங்களில் அறிந்திருப்பீர்கள் என நான் நம்புகின்றேன். நாட்டில் ஊழலும் மோசடியும் தலைதூக்கின.

ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் கூட்டுக்கட்சிகளும் அதாவது அச்சமயம் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கிய அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள் என 49 தரப்புக்கள் எம்முடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்கள். அதன்மூலம் நாம் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் ஏற்படுத்திக் கொண்ட எதிர்பார்ப்புகளும் மிகத் தூய்மையான உயரிய உன்னத குறிக்கோள்களும் மிக அப்பட்டமான முறையில் துவம்சம் செய்யப்பட்டதுடன் நாட்டில் ஊழலும் மோசடியும் தலைதூக்கின.

சில தினங்களுக்கு முன் டி.எஸ்.சேனாநாயக்க ஞாபகார்த்த நிகழ்வில் வெளியிட்ட கருத்து உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நான் நினைக்கின்றேன். டி.எஸ்.சேனாநாயக்க அவர்களின் அரசியல் நோக்கு, டட்லி சேனாநாயக்க அவர்களின் அரசியல் நோக்கு, ரணசிங்க பிரேமதாச அவர்களின் அரசியல் நோக்கு ஆகியன ஐக்கிய தேசிய கட்சியினை ஒரு பலமிக்க, பாரிய அரசியல் கட்சியாக எவ்வாறு உருவாக்கின என்பதையும் நமது கலாசாரம், நாட்டுப்பற்றுமிக்க நமது உற்பத்திகள் உட்பட அனைத்தையும் எந்தளவு பாதுகாத்தன என்பதையும் நாட்டின் தனித்துவம், ஒருமைப்பாடு ஆகிய எமது உயரிய தன்மைகளை அந்த சிரேஷ;ட தலைவர்கள் எந்தளவுக்கு பாதுகாத்தார்கள், அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள் என்பதையே நான் கூறினேன்.

ஆகையால் நான் இப்போதும் பிரார்த்திப்பது ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதைய தலைவர்களுக்கு டி.எஸ், டட்லி, ஜே.ஆர்.ஜயவர்தன, பிரேமதாச ஆகியோர் கடைப்பிடித்த அந்த அரசியல் நோக்குகள்மிக்க இன்றைய உலகுக்கு பொருந்துகின்ற ஒரு சமூகத்தை உருவாக்கத்தக்க அறிவு கிட்ட வேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பொதுவாகவே கூட்டுச் செயற்பாடற்ற, தன்னிச்சையான தீர்மானங்களை எடுக்கும் மிகவும் முரட்டுத்தனமான பிடிவாதமிக்க முறையிலேயே அரசாங்கத்தில் செயற்பட்டார். அவரின் அந்த செயற்பாடுகள் ஒரு பாரிய அரசியல் நெருக்கடியை உருவாக்கியது. கூட்டுத் தீர்மானங்கள், கலந்துரையாடல்கள், கருத்துப்பரிமாறல்கள் அற்ற நிலையில் அவரின் நெருங்கிய சகாக்களுடன் மாத்திரம் கலந்தாலோசித்து முடிவுகளை எடுத்ததன் காரணமாக ஒரு நாடு என்ற வகையில் எமக்கு துரதிஷ்டமான நிலை ஏற்பட்டது.

இங்கே இன்னொரு விடயத்தையும் நான் குறிப்பிட வேண்டும். ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் எனக்கும் இடையில் கடந்த மூன்றரை வருடங்களுக்கு மேலான காலப்பகுதியில் கொள்கை ரீதியிலான அரசியல் பிளவையும் வேறுபாட்டையும் முரண்பாடுகளையும் நான் தெளிவாகக் கண்டேன். ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் கொள்கைக்கும் எனது அரசியல் கொள்கைக்கும் இடையில் கொள்கை ரீதியிலான மோதல் ஏற்பட்டது.

அதுமாத்திரமன்றி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் எனக்கும் இடையில் பாரிய கலாசார வேறுபாடுகளையும் நான் கண்டேன். அவருக்கும் எனக்கும் இடையிலான இந்த அரசியல் கொள்கை ரீதியிலான வேறுபாடுகள், அரசியல் கலாசார ரீதியிலான வேறுபாடுகள், தனிநபர் சார்ந்த வேறுபாடுகள் ஆகிய அனைத்தும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நெருக்கடியை மிக மோசமாக்குவதற்கு காரணமாக அமைந்தன என நான் நம்புகின்றேன். நான் ஏனைய சிரேஷ;ட தலைவர்களுடன் கூடியிருந்த காலங்களில் நாம் இணைந்து செயற்படுவோம். கூட்டாக செயற்படுவோம். நாம் எடுக்கும் தீர்மானங்களை கலந்துரையாடி மேற்கொள்வோம்.

நல்லாட்சி கோட்பாடுகளை அடையும் வகையில் நாம் செயற்படுவோம் என நான் அவரிடம் பல தடவைகள் எடுத்துக் கூறினேன். எனினும் 62 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர் மக்களின் அந்த உன்னதமான அபிலாiஷகளை அவர் கவனத்தில் கொள்ளவில்லை. அவர் அப்படி நடந்ததையிட்டு நான் மிகவும் மனம் வருந்துகின்றேன். இந்த நாட்டின் தலைமைத்துவத்தை நான் பொறுப்பேற்றது இந்த நாட்டை இலஞ்சம், ஊழல் அற்ற நல்லாட்சி கோட்பாடுகளை முதன்மைப்படுத்திய புத்தாக்கமிக்க மிகச் சிறந்ததோர் அரச நிர்வாகத்தை நிலைநாட்டுவதற்கேயாகும். கடந்த கால அனுபவங்களுடன் தற்கால, எதிர்கால சவால்களை அறிந்து எமது நாட்டின் எதிர்காலத்தை மிகவும் உயரிய வகையில் எதிர்கால குறிக்கோள்களை அடையும் அதேவேளை, ஆன்மீக நல்லொழுக்கமிக்க சிறந்த கோட்பாடுகளுடன் முதன்மைப்படுத்தி செயற்பட நான் தொடர்ந்தும் முயற்சித்து வந்ததுடன், அதற்காக பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன்.

அநேகமான நேரங்களில் நான் சில அடிகளை பின்வாங்கியும் இருக்கின்றேன். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் சில சமயங்களில் நான் சினத்துடன் கருத்து தெரிவித்ததை நீங்கள் அவதானித்திருப்பீர்கள் அவ்வாறான வேளைகளில் நீங்கள் என்னை குறை கூறியதையும் நான் அறிவேன். சில வேளைகளில் நான் முதிர்ச்சியடையவில்லை என்றும் உணர்ச்சிவசப்படுவதாகவும் கூறியிருக்கின்றீர்கள்.

ஆயினும் அரசாங்கத்தின் அந்தரங்க கலந்துரையாடல்களின் போதும் அமைச்சரவை கூட்டங்களிலும் கட்சித் தலைவர்களின் கூட்டங்களிலும் நான் எந்த அளவு பொறுமையாகவும் கண்ணியமாகவும் நடந்து கொண்டேன் என்பதை எனது மனசாட்சி மட்டுமே அறியும். அந்த அர்ப்பணிப்பை நாட்டுக்காவும் நாட்டு மக்களுக்காகவுமே அதை நான் செய்தேன். இருந்தபோதும் நீங்களும் ஏற்கனவே அறிந்தவாறு அந்த உன்னத குறிக்கோள்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கிய இந்த நல்லாட்சி கருப்பொருளை, இந்த அரசாங்கத்தை உருவாக்கி மூன்று மாதங்கள் முடிவதற்கு முன்னரே சிதைத்து விட்டார்கள்.

மத்திய வங்கியின் மகா கொள்ளை நமது நாட்டை பாரிய பொருளாதார பாதாளத்தில் தள்ளிவிட்டது. இலங்கை வரலாற்றில் அரச சொத்துக்கள் மீதான இத்தகைய கொள்ளையடிப்பை நாம் கேட்டுக்கூட இருக்கவில்லை. அந்த தூய்மையான நல்லாட்சி அரசியல் கோட்பாடுகள் இலஞ்ச, ஊழலற்ற அரச நிர்வாகத்தை முன்னெடுப்பதாக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை வெளிப்படையாகவே மீறினார்கள்.

எனது ஞாபகத்தில் இருக்கின்றது அன்புக்குரிய பிள்ளைகளே பெற்றோர்களே அந்த மத்திய வங்கி சூறையாடல் சம்பந்தமாக நாட்டில் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பு போராட்டங்கள், எதிர்க்கட்சி, அரசியல் கட்சிகளின் சமூகத்திற்கு பொறுப்புக்கூறும் சிவில் அமைப்புகள் ஆகியன குரல் எழுப்பியபோது அரசாங்கத்தினுள் எந்தளவு பாரிய நெருக்கடியான நிலை ஏற்பட்டது என்பதை நான் அறிவேன்.

அந்த சம்பவத்துடன் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் எவ்வாறு செயற்பட்டார் அவரது நடத்தை எவ்வாறானதாக இருந்தது என்பது பற்றி இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கின்றது. மிகுந்த பதற்றத்துடனேயே அவர் செயற்பட்டார். அச்சமயம் மத்திய வங்கியின் பணிக்குழாமை சந்திக்க நான் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தபோது ரணில் விக்கிரமசிங்க அவர்கள் எனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு ஓடி வந்து மிகுந்த பதற்றத்துடன் அவர் என்னிடம் கூறினார். மத்திய வங்கி எனது கட்டுப்பாட்டின் கீழேயே இருக்கின்றது.

அதாவது வர்த்தமானிமூலம் எனது கட்டுப்பாட்டுக்கு கீழேயே இருக்கின்றது அதனால் நீங்கள் எதற்காக மத்திய வங்கிக்கு போக வேண்டும் என என்னிடம் வினவினார். அப்போது நான் அவரிடம் உங்களுக்கு வர்த்தமானி அறிவித்தல் மூலம் அந்த வங்கி கையளிக்கப்பட்டிருக்கின்றது என்பது உண்மை ஆனால் நான் இந்த நாட்டின் ஜனாதிபதி அல்லவா எனக்கு அங்கு செல்வதற்கு உரிமை இருக்கின்றதல்லவா எனக் கூறினேன். அவ்வாறு கூறிவிட்டு இன்னும் சொற்ப நேரத்தில் மத்திய வங்கிக்கு செல்ல போகிறேன் எனக் கூறினேன். அத்தோடு அவர் எனது வீட்டைவிட்டு வெளியேறினார்.

சொற்ப நேரத்தின் பின் நான் மத்திய வங்கியை சென்றடைந்தபோது மத்திய வங்கி நிதி மோசடி காரணமாக விடுமுறையில் இருந்த மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் அவர்கள் என்னை வெற்றிலை கொடுத்து வரவேற்க மத்திய வங்கி வாசலில் காத்திருந்தார்.

அவர் எவ்வாறு அங்கே வந்தார் என நான் ஆச்சரியப்பட்டேன். அப்போது அவர்கள் மிகவும் பதற்றத்துடன் நடந்துகொண்ட விதத்தையும்; பதற்றமடைந்திருந்த அவர்களது மனோ நிலையையும் அப்போது நான் தெளிவாகக் கண்டேன். அந்த சம்பவத்தினால் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடியும் அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டது. அதற்கு தீர்வு காணும் வகையிலும் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வகையிலுமே ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தேன்.

அந்த ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோது, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் என்னைக் குறை கூறியவாறு ஏன் ஆணைக்குழுவை நியமித்தீர்கள் என என்னிடம் வினவினார்கள். அப்படி செய்ததன்மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது நான் அவமதிப்பை ஏற்படுத்தினேன் என்பதே அவர்களது எண்ணமாக இருந்தது.

அதற்கு நான் அந்த சம்பவத்தின்; உண்மையை அறிவதற்கும் மக்களின் கோரிக்கைக்கு செவிமடுக்கவுமே நான் இந்த ஆணைக்குழுவை நியமித்தேன் எனக் கூறினேன். மத்திய வங்கியின் அந்த சம்பவமே பொருளாதார ரீதியில் இன்னும் எம்மால் தலைதூக்க முடியாத மிக மோசமான பாரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்திய காரணியாக இருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இவ்வருடம் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தல்களில் கிடைத்த பெறுபேறுகளை அரசாங்கத்தின் குறைபாடுகளை திருத்திக் கொள்ள மக்கள் வழங்கிய ஒரு தீர்ப்பாகவே நான் கருதுகின்றேன். ஆகையால் அதன்போது ரணில் விக்கிரமசிங்கவையும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களையும் அழைத்து நாங்கள் மூன்று வருடங்களாக மேற்கொண்ட செயற்பாடுகளைப் பற்றி மக்கள் இப்போது தமது தீர்ப்பை வழங்கியிருக்கின்றார்கள். நாங்கள் இப்போது எம்மை திருத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறினேன்.

அத்தோடு பிரதமர் அவர்களிடம் நீங்கள் எனது அதிகாரத்தையும் கையிலெடுத்து செயற்பட்டீர்கள் ஆயினும் என்னை அதிகாரத்தில் அமர்த்தும் செயற்பாட்டிற்கு நீங்கள் முன்னின்று உழைத்ததால் அதற்கு நன்றி உள்ளவனாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் மௌனமாக இருந்தேன் எனக் கூறினேன். அந்த நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்ற உயரிய பண்பினை நான் பின்பற்றியதால் ஒருபுறத்தில் நாட்டுக்கு பாரிய தீங்கு விளைவிக்கப்பட்ட அதே சந்தர்ப்பத்தில்; மறுபுறத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தான் விரும்பியவாறு சில வேளைகளில் ஜனாதிபதி அதிகாரங்களைக் கூட உபயோகப்படுத்திக் கொள்வதற்கு அவருக்கு நான் அதிகாரத்தைக் கொடுத்திருந்தேன்.

இதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? கடந்த மூன்று வருட காலத்தில் ஏற்பட்ட பல்வேறு சம்பவங்கள் காரணமாக மிக மோசமான அவல நிலையே ஏற்பட்டிருக்கின்றது. எனது உரை இன்னும் நீடிக்கும் என்பதால் காலத்தை நான் வீண்விரயம் செய்ய விரும்பவில்லை. ஆயினும் எதிர்வரும் காலங்களில் அவ்வப்போது அந்த விடயங்களைப்பற்றி நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என நான் எண்ணியிருக்கின்றேன்.

இந்த சம்பவங்களின் பின்னணியில் இரண்டு நாட்களுக்கு முன் நான் எடுத்த தீர்மானம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கும் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்குமான முடிவை நான் எடுப்பதற்கு மிக முக்கியமான காரணத்தை மிகுந்த மதிப்புடன் நான் உங்களுக்கு விளக்கிக் கூற விரும்புகின்றேன்.

எனது அரசியல் வாழ்க்கைக்கு இன்று 51 வருடங்களுக்கு மேலாகின்றது. கடந்த சில தினங்களாக ஊடகங்களில் தோன்றிய நாமல் குமார எனும் நபர் என்னையும் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களையும் கொலை செய்யவிருக்கும் சதித்திட்டம் பற்றிய தகவல்களை வெளியிட்டார். அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு நான் பணித்தேன்.

ஆனால் பொலிஸ்மா அதிபர் முதலில் அந்த விசாரணைகளை குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவினரிடம் கையளித்திருக்கவில்லை. பொலிஸின் வேறொரு பிரிவினரிடமே அதனைக் கையளித்திருந்தார். அதன்போது அந்த விசாரணைகளின் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என்ற நிலைமை ஏற்படும் என்பதை நான் உணர்ந்தேன். அவ்வாறு ஊடகங்களில் வெளிவந்த கொலை சதி திட்டகளைப் பற்றி விசாரணை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அந்த தகவல்களை முன்வைத்து 48 மணித்தியாலங்கள் கடப்பதற்கு முன்பாகவே பொலிஸ்மா அதிபர் அந்த தகவல்களை வெளியிட்ட நபர் சாட்சியமாக கையளித்த ஒலிநாடாக்கள் சந்தேகமானவை என அறிவித்தார்.

நாட்டின் ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டம் பற்றிய தகவல்களை வெளியிட்ட ஒலிநாடா மீதான எந்தவிதமான தொழினுட்ப விசாரணையையும் மேற்கொள்ளாது அந்த ஒலிநாடா சந்தேகத்திற்குரியது எனக்கூறும் அளவிற்கு பொலிஸ்மா அதிபரின் அந்த கீழ்த்தரமான செயற்பாடு ஒரு பொலிஸ்மா அதிபருக்கு உகந்ததா என மதிப்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த சதி பற்றிய விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வு திணைக்களமும் புலனாய்வு பிரிவினரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் அரசாங்கத்தின் புலனாய்வு குழுக்களும் இதுவரைப் பெற்றுக்கொடுத்திருக்கின்ற தகவல்களின்படி இந்த சதித்திட்டம் மிகப் பாரதூரமானதாகவே இருக்கின்றது. நாட்டு மக்களுக்கு இதுவரை அறியக் கிடைக்காத பெருமளவு தகவல்கள் இது தொடர்பில் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

என்னைக் கொலை செய்வதற்கான சதித்திட்டத்துடன் சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் பற்றிய தகவல்களையும் இந்த நபர் பெற்றுக் கொடுத்திருக்கின்றார். அதேநேரத்தில் இந்த விசாரணைகளுக்கு பாதகமான முறையில் பலவிதமான தாக்கங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்புமிக்க சில அதிகாரிகள் இந்த விசாரணைகளின் முக்கியமான திருப்புமுனைகளில் கைநழுவிச் செல்லும் நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது.

இந்தப் பின்னணியில் நாட்டு மக்களாகிய எனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய உங்களிடம் நான் மிகுந்த கௌரவத்துடன் கேட்டுக்கொள்வது இந்த அரசியல் நெருக்கடி பொருளாதார நெருக்கடி ஆகியவற்றிற்கு பின்னால் என்னைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் பற்றிய மிக முக்கியமான தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில் என் முன் எஞ்சியிருந்த ஒரே தீர்வு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை அழைத்து அவரை பிரதமர் பதவியில் அமர்த்தி புதிய அரசாங்கத்தை அமைப்பது மாத்திரமே ஆகும்.

இந்த புதிய அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற மதிப்பிற்குரிய 225 அங்கத்தவர்களுக்கும் வெளிப்படையாக நான் அழைப்பு விடுக்கின்றேன். மிகத் தூய்மையான எண்ணத்துடன் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் அரசியல் நெருக்கடி இப்போது பெருமளவு தணிந்திருக்கின்ற நேரத்தில் எமது நாட்டின் எதிர்காலத்திற்காக நான் எடுத்திருக்கும் இந்த தீர்மானத்துடன் மகிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமராக்கி புதிய அரசாங்கத்தை அமைக்கும் எனது தீர்மானத்துடன் உங்களதும் எனதும் இந்த உன்னத தாய் நாட்டிற்காக அந்த உன்னத குறிக்கோளை அடைந்து ஜனநாயகத்தையும் மக்களிள் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தி, மனித உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்தி, ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தி, மக்களின் வரப்பிரசாதங்களை பலப்படுத்தி வளமான பொருளாதாரம் மிக்க பண்புமிக்க மிகவும் ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்ப இந்த புதிய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு நான் உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

கடந்த கால கசப்பான அனுபவங்களைப் பற்றி நான் இங்கே மீண்டும் குறிப்பிட வேண்டும். அர்ஜுன் மகேந்திரன் அவர்களை இந்த நாட்டுக்கு அழைத்துவந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பை கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதற்குக் காரணம் இந்த நாட்டில் யாவரும் அறிந்தவாறு அர்ஜுன் மகேந்திரன் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் மிகவும் நெங்கிய நண்பன் என்பதனாலேயே ஆகும். கடந்த சில வருடங்களாக நம் நாட்டின் தேசிய கைத்தொழில் துறை நலிவடைந்து சென்றிருக்கின்றது. அவற்றை ஊக்குவிப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் அரசாங்கத்திடமிருந்து போதுமான அளவு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

வெளிநாட்டு முதலீடுகளில் மாத்திரம் நம்பிக்கை வைத்து உள்நாட்டு கைத்தொழிலாளர்களையும் உள்நாட்டு வர்த்தகர்களையும் நலிவடையச் செய்யும் பொருளாதாரக் கொள்கையே முக்கியமாக இங்கே செயற்படுத்தப்பட்டது. இந்தப் பொருளாதாரக் கொள்கையின் குறைபாடுகள் ஒருபுறத்தில் இருக்க மறுபுறத்தில் இந்தப் பொருளாதாரத்தை சிதைத்த மேற்குறிப்பிட்ட மத்திய வங்கி கொள்ளையின் குற்றவாளிகளுக்கு துரிதமாக தண்டனைகளைப் பெற்றுக்கொடுக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கான சட்டம் மீதான திருத்தங்கள் தொடர்பில் கடந்த வாரம் பாராமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் மூலம் என்ன நடந்தது என்பதைப் பற்றி ஆராய்ந்து பார்த்தீர்களா என நான் உங்களிடம் வினவ விரும்புகின்றேன்.

சட்ட நிபுணர்கள், சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழு உள்ளிட்ட இந்த விசாரணைகளை நடத்திய அனைத்து அதிகாரிகளும் இந்த வருட முற்பகுதியிலேயே இப்போது இருக்கின்ற சட்டதிட்டங்களுக்கு அமைய மத்திய வங்கி கொள்ளையின் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டுமாயின் அதற்கு குறைந்தபட்சம் 15 வருடங்களுக்கு மேல் செல்லும் என தெரிவித்திருக்கின்றார்கள். அவர்கள் கொள்ளையடித்த பணத்தை மீளப் பெறுவதற்கும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கும் 15 வருடங்களுக்கு முன் இயலாத காரியம் என்பதை சட்ட நிபுணர்கள் எனக்கு விளக்கமளித்திருக்கின்றார்கள்.

அதற்குத் தீர்வாக இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழு சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியன இந்த விசாரணையை ஒரு வருடத்திற்குள் பூர்த்தி செய்து மக்களின் இந்த பெருந்தொகை பணத்தை மீண்டும் அரசாங்கத்திற்கு பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் ஒரு வருடத்திற்குள் விசாரணைகளை நடத்தி முடித்து பெறுபேறுகளைப் பெறுவதற்கு இயலும் வகையில் இலஞ்ச, ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களைப் பற்றி எமக்கு அறியத் தரப்பட்டது. குறிப்பிட்ட அந்த மாற்றங்களை செய்து இன்றைக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே ஜனாதிபதி அலுவலகம் ஊடாக பாராளுமன்றத்திற்கு அதனை அனுப்பி வைத்தோம்.

ஐந்து மாதங்கள் கடந்தும் அவை இன்னும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அந்த ஆவணம் சபாநாயகர் அலுவலகத்தின் பெட்டிகளுக்குள் சென்றுவிட்டன. இதைப்பற்றி நான் மிகத் தீவிரமாக விசாரித்தேன். இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களிடமும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தியொகத்தர்களிடமும் வினவினேன்.

அதற்கமைய கடந்த வாரம் பாராளுமன்றத்தின் முன் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சட்ட சீர்திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆயினும் அதற்கான பாராளுமன்ற அனுமதியைப் பெற்றுக் கொடுப்பதை திகதி குறிப்பிடப்படாது பின்போடப்பட்டிருக்கின்றது. அவ்வாறு பின்போடப்பட்டது ஏன்? எவரின் தேவைக்காக? எவரின் தலையீட்டினால்? இதனால் பொதுமக்களுக்கு சொந்தமான இந்த பெருந்தொகைப் பணம் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் கிடைக்காது போகின்றது.

குற்றாவளிகளுக்கு தண்டனை வழங்க 15 முதல் 20 வருடங்கள் வரை செல்லும். இந்த சீர்திருத்தம் திகதி குறிப்பிடப்படாது பின் போடப்பட்டதன் நோக்கம் இதுவே. கடந்த காலங்களில் ஈஏபி நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல் பற்றிய ஒரு சம்பவத்தை நீங்கள் ஊடகங்களில் கண்டிருப்பீர்கள். அந் நிறுவனத்தை வெளிநாட்டு வர்த்தகர் ஒருவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. விலைமனுக் கோரல் இல்லாத ஊழல் நிறைந்த ஒரு கொடுக்கல் வாங்கலாகவெ ஈஏபி நிறுவனத்தின் செயற்பாடுகள் இருக்கின்றன.

இதைப் பற்றியும் எதிர்வரும் காலங்களில் விரிவான விசாரணைகளை நடத்த எண்ணியிருக்கின்றேன். பெறுமதிமிக்க விசேட விலைமனுக்;கோரல்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. கட்டிட நிர்மாணப் பணிகளும் விலைமனுக் கோரலின்றி கொடுக்கப்பட்டிருக்கின்றன. விலைமனுக் கோரல்கள் அற்ற விதத்தில் அமைச்சரவைக்கு அவசரமான ஆவணங்களாக சமர்ப்பிக்கப்பட்டு அவை மீதான எதிர்ப்புகளை கவனத்தில் கொள்ளாது இந்த பாரிய நிர்மாணப் பணிகள் அந்நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.

கண்டி அதிவேக வீதி அதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட காணி பற்றிய விசேட விதிமுறைகள் சட்டம் மற்றும் காணி வங்கியை ஸ்தாபிப்பதற்கான சட்டத்திற்கு நான் எனது கடும் எதிர்ப்பை தெரிவித்து அவற்றை பிற்போட்டேன். அமைச்சரவையில் பெரும்பாலும் அமைச்சர்கள் இச்சட்டத்தினை எதிர்க்கின்றார்கள்.

கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட காணிகள் பற்றிய இந்த விசேட சட்ட ஏற்பாடுகளைக் கொண்ட சட்டம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறுமாயின் நமது இந்த தாய் நாட்டின் அனைத்து நிலங்களையும் எந்தவொரு தங்குதடைகளுமின்றி வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு சொந்தமாகவே பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

டி.எஸ்.சேனாநாயக்க, காமினி திசாநாயக்க, பண்டாரநாயக்க ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்ட விவசாயக் குடியேற்றங்கள் ஒட்டுமொத்தமாகவே இதனால் அழிந்துவிடும். கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கையின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட இந்த நாட்டின் காணி உரிமை பற்றிய இந்த விசேட சட்ட ஏற்பாடுகளை முழுமையாக நாம் அப்புறப்படுத்த வேண்டும்.

அதேபோன்று இங்கு இன்னொரு விடயத்தையும் நான் குறிப்பிட வேண்டும். ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் உருவாக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பொருளாதார முகாமைத்துவ சபை பாரிய ஊழல்களைக் கொண்டதாகும். அதனை இரத்துச் செய்வது பெரும் சவாலாகவே இருந்தது. இருப்பினும் கடும் முயற்சியின் பின்னர் அதை நான் இரத்துச் செய்தேன்.

அச்சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் ஊழல் மிக்கவையாக இருந்தன. அதற்கான ஒரு மாற்றுத்திட்டமாகவே நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யும் வகையில் நான் தேசிய பொருளாதார சபையை உருவாக்கினேன். அந்த தேசிய பொருளாதார சபையை பலவீனப்படுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். அந்த பொருளாதார சபைக்கு நியமிக்கப்பட்ட பொருளாதார நிபுணருக்கான மாதாந்த கொடுப்பனவு உலக அங்கீகாரத்தைப் பெற்ற எம்முடன் தொடர்புகளை வைத்திருக்கும் விசேட சர்வதேச நிதி நிறுவனம் மூலமே வழங்கப்பட்டது.

அந்த சர்வதேச நிதி நிறுவனம் பெற்றுக்கொடுத்து வந்த மாதாந்த கொடுப்பனவு கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அந்நிறுவனத்திற்கு பெற்றுக்கொடுத்த ஆலோசனைக்கமைய நிறுத்தப்பட்டது. அவ்வாறு தேசிய பொருளாதார சபையினை பலவீனப்படுத்துவதற்கும் அதன் செயற்பாடுகளை தடுப்பதற்கும் தன்னாலான அனைத்தையும் அவர் செய்து வந்தார். ரணில் விக்கிரமசிங்க அவர்களின் முரட்டுத்தனமான தீர்மானங்களே இந்த அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணமாக அமைந்தது என்பதை நான் தெளிவாகக் கூறவேண்டும்.

இதனால் இவ்வாறான அனைத்து செயற்பாடுகளுக்கும் எனக்கிருந்த ஒரே மாற்றுவழி கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்களை புதிய பிரதமராக நியமித்து புதிய அரசை அமைப்பது மாத்திரமே ஆகும். மகிந்த ராஜபக்ஷ அவர்களை புதிய பிரதமராக பதவியில் அமர்த்தி இந்த புதிய அரசாங்கத்தை அமைப்பது இலங்கை அரசியல் யாப்புக்கு முரணான செயலாகுமென கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ் சுமத்துகின்றது.

என்னால் மேற்கொள்ளப்பட்ட இந்த தீர்மானமானது சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளின்படி அரசியல் யாப்புக்கு அமைவாக எந்தவித முரன்பாடுகளும் அற்ற விதத்திலேயே இந்தப் பதவிப் பிரமாணமும் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையும் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதும் செய்யப்பட்டிருக்கின்றது. ஆகையால் இந்த செயற்பாடுகள் அரசியல் யாப்புக்கு முரனானவை என்ற குற்றச்சாட்டை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன் என்பதை மிகுந்த கௌரவத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேபோல் இன்று நிலவுகின்ற அரசியல் நிலைமையின்படி இந்த நாட்டின் பொதுமக்கள், அரச உத்தியோகத்தர்கள், பொலிஸ், இராணுவம், கடற்படை, வான்படை, படைத்தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பு எனக்கு பெற்றுத்தரும் ஒத்துழைப்பைக் கொண்டு நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் பலப்படுத்தி ஜனநாயகக் கட்டமைப்பை பலப்படுத்தி நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை இலகுவாக முன்னெடுப்பதற்கு வசதியளிக்கும் வகையில் இந்த அனைத்து தரப்புகளும் அவர்களது கடமைகளை முன்னெடுத்து வருவதையிட்டு அவ்வனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேபோன்று எனது இந்த உரையை பூர்த்தி செய்யும் நேரத்தில் நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று ஐக்கிய தேசியக் கட்சியினர் என்னை ஜனாதிபதியாக நியமிப்பதில் பாரிய அர்ப்பணிப்புகளை செய்தார்கள் என்பதை நினைவு கூறும் அதே நேரத்தில் நமது இந்த தாய் நாட்டின் சுபீட்சத்திற்காக அன்று நாம் ஏற்படுத்திக் கொண்ட குறிக்கோள்களை அடைய நாம் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். எனக் கூறிக்கொள்வதுடன் உங்களுக்கும் உங்களது ஐக்கிய தேசியக் கட்சிக்கும் நன்நோக்குமிக்க தேசப்பற்றுமிக்க நாட்டின் சாதாரண குடிமகனின் வேதனைகளை உணர்கின்ற சேனாநாயக்க, ஜயவர்தன, பிரேமதாச ஆகியோரின் தூரநோக்கையும் குறிக்கோள்களையும் பாராட்டுகின்ற ஒரு தலைவரை எதிர்காலத்தில் நீங்கள் பெறுவீர்களாயின் நாங்கள் அனைவரும் எதிர்பார்க்கின்ற அந்த உன்னத குறிக்கோளை அடைய முடியும் என நான் நம்புகின்றேன்.

ஆகையால் எனது நாட்டுக்காகவும் எனது அன்புக்குரிய மக்களுக்காகவும் நான் மேற்கொண்ட இந்த அரசியல் தீர்மானத்தினால் பொருளாதார நெருக்கடியை தீர்த்து அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து சுபீட்சமான பொருளாதாரத்துடன் நல்லதோர் சமூகத்தைக் கட்டியெழுப்ப உயரிய ஆன்மீக சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படுவோம் எனக்கூறிக் கொள்வதுடன் அதற்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அனைத்து அரச ஊழியர்களையும் சகல அரசியல்வாதிகளையும் மதிப்புக்குரிய மகா சங்கத்தினரையும் ஏனைய மதத் தலைவர்களையும் மிகுந்த கௌரவத்துடன் அழைப்பதுடன் இப்பணிகளை இனிதே நிறைவேற்ற உங்களது உத்துழைப்பையும் ஆசீர்வாதத்தையும் நல்குமாறு மிகுந்த கௌரவத்துடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி.
வணக்கம்.

- ஜனாதிபதி ஊடகப் பிரிவு
(2018.10.28)

Read more...

மஹிந்தரின் வரவை கிளிநொச்சி மக்களும் பட்டாசு கொழுத்தி கொண்டாடினர்.

நாட்டின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டதை ஆதரித்து நாடுபூராகவும் மக்கள் தமது மகிழ்சியை தெரிவித்திருந்தனர். குறிப்பாக கடந்த தேர்தலின்போது, மஹிந்தவை முற்றாக எதிர்த்த வடகிழக்கு மக்கள் அவரது மீள்வருகையை கொண்டாடியது குறிப்பிடத்தக்கதாகும்.

அந்தவகையில், யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டதும், மஹிந்த ராஜபக்சவை பெரிதும் வெறுக்கின்ற மக்கள் வாழ்வதாக நம்பப்படும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அவரது மீள்வருகையை வரவேற்றுள்ளனர்.

கிளிநொச்சியில் பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலக முன்னறலில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கிளிநொச்சி மக்கள் மஹிந்த ராஜபக்சவின் புதிய நியமனத்தினை பட்டாசு கொழுத்தி கொண்டாடினர்.

கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் க.ஜெயகுமாரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொங்கலும் பரிமாறப்பட்டது.








அவ்வாறே யாழ் மாவட்ட மக்கள் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்க அவர்களின் மீள்வருகையை கொண்டாடியதை கீழுள்ள காணொயில் காணலமாம்.







Read more...

Saturday, October 27, 2018

மைத்திரி-மஹிந்த தலைமையில் கூடியது ஐ.ம.சு.மு. திங்கள் கிழமை புதிய அமைச்சரவை.

ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்ற சூழ்நிலையில் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் மைத்திரி மற்றும் மஹிந்தவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் முதன்முறையாக கூடியுள்ளனர். இவ்ஒன்று கூடலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

முடிவில் நாளை மறுதினம் புதிய அமைச்சரவை சத்தியப்பிரமானம் செய்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவித்தலை சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாபா அபயரத்ன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த ஒன்றுகூடலின்போது சகல ஊடகங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




Read more...

ரணிலின் பாதுகாப்பு மற்றும் உத்தியோகபூர்வ வாகனங்கள் வாபஸ் பெறுவீர் ஜனாதிபதி.

நேற்று பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்கமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள பிரத மந்திரி ஒருவருக்கு உரித்தான் பாதுகாப்பு மற்றும் உத்தியோகபூர்யவ வாகனங்களை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு நாட்டின் ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ட்வீற் பண்ணியுள்ள மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர shame on you maithri (வெட்கம் கெட்டவன்) எனக்குறிப்பிட்டுள்ளார்.

இந்நாட்டின் அரசியல்யாப்பு ரீதியான பிரதமர் நானே என ரணில் தெரிவித்துக்கொண்டிருக்கும் நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read more...

50 வாரம் ஜனாதிபதியாகவிருந்த மைத்திரி 50 சதத்துக்கு பெறுமதி அற்றவராம். கொழும்பை சுற்றி வளைக்க போறாங்களாம் ஐ.தே.க.

ஐப்பது வாரங்கள் இந்நாட்டின் ஜனாதிபதியாகவிருந்த மைத்திரிபால சிறிசேன ஐம்பது சதங்களுக்கு பெறுமதியற்றர் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் ஹரின் பெர்ணாண்டு தெரிவித்துள்ளார்.

நன்றியுணர்வு அற்ற மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவந்ததற்காக நாம் மக்களிடம் மன்னிப்பு கோருகின்றோம் என ஹரின் பெர்ணாண்டோ மேலும் கூறியுள்ளார்.

அலறிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதேநேரம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்தமையை எதிர்த்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

நாளை மறுதினம் முழுக்கொழும்பும் ஸ்தம்பிதமடையும் பொருட்டு அவர்கள் தமது ஆதரவாளர்களை கொழும்பு நகருக்குள் இறக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Read more...

23 உறுப்பினர்களுடன் மஹந்தவுடன் இணையும் ரவி கருணாநாயக்க நிதியமைச்சராகலாம்..

நீண்டகாலமாக திரைமறைவில் இடம்பெற்றுவந்த அரசியல் பனிப்போர் நேற்று வெளிப்படையானது. மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டார். அது அரசியல் யாப்பிற்கு முரணான நியமனம் என்கின்றனர் ஐ.தே.கட்சியினர். ஆனால் பாராளுமன்றில் பெரும்பாண்மையை நிரூபிக்கும் என நம்பும் ஒருவரை பிரதமராக நியமிக்க ஜனாதிபதிக்கு முடியும் என்கின்றனர் சட்டவல்லுனர்கள்.

இந்நிலையில் பாராளுமன்ற பெரும்பாண்மையை நிரூபிக்கும் பொருட்டு கூடவுள்ள பாராளுமன்றில் ரவி கருணாநாயக்க தலைமையிலான 23 ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்ச பக்கம் தாவுகின்றனர் என பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் ஒருவர் இலங்கைநெட் க்கு தெரிவித்தார்.

அவ்வாறு அவர்கள் இணைகின்றபோது, அமையவுள்ள அமைச்சரவையில் ரவி கருணாநாயகவிற்கு நிதியமைச்சு வழங்கப்படலாம் என்றும், மறுபுறத்தில் பிணைமுறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவ் நியமனத்திற்கு எதிர்ப்புக்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மறுபுறத்தில் ரவி கருணாநாயக்கவை மஹிந்தவுடன் இணையவேண்டாம் என்றும் அவருக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினை தருவதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதை ரவி நிராகரித்துள்ளதாக தெரியவருகின்றது.

அதேநேரம் இன்று முழுவதும் ரவியை ரணில் தரப்பினர் தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும் அது கைகூடவில்லை என்றும் அறிய முடிகின்றது.

Read more...

மாவைக்கு வேண்டாட்டி தனக்கு வேண்டுமாம் முதலமைச்சர் பதவி. சிவிகே சிவஞானம்.

வட மாகாண சபை கலைக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளருக்கான போட்டி தற்போது ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் முதமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா விரும்பாத பட்சத்தில் தானே அடுத்த பொருத்தமான வேட்பாளர் என்றும் தனக்கு அதற்குரிய சகல தகைமைகளும் உண்டு என்றும் தெரிவித்துள்ளார் வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சிவிகே சிவஞானம்.

பேரவைச் செயலகத்தில் இன்று (27) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடமாகாண சபையின் ஆட்சிக் காலம் நிறைவுற்ற பின்னரான, திட்டங்கள் மற்றும் எதிர்வரும் மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் யார் என கேட்ட போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

மாவை சேனாதிராஜாவை தெரிவு செய்ய வேண்டுமென்று முன்மொழியப்பட்ட போது, மாவை சேனாதிராஜாவும் கைவிட்டதால், தற்போது அநுபவிக்கும் நிலை ஏமாற்றத்திற்குரியது. மாவட்டக் கிளையின் தற்போதைய தீர்மானத்தின் பிரகாரம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை வேட்பாளர், தமிழரசு கட்சி சார்ந்தவராக இருக்க வேண்டுமென்றும், தமிழரசு கட்சியின் யாப்பின் அடிப்படையில் ஆகக்குறைந்த சேவைக் காலத்தினைக் கொண்டவராகவும் இருக்க வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், பொதுவாக மாவை சேனாதிராஜா முதலமைச்சராக வர விருப்பம் தெரிவித்த காரணத்தினால் மாவை சேனாதிராஜாவை ஆதரிப்பேன். சில சமயங்களில் மாவை சேனாதிராஜா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாத நிலை ஏற்படுமேயானால் அந்த இடத்தில், அடுத்த தெரிவாக, உரித்துடையவன் நான் என்பதே எனது நிலைப்பாடு. அந்த சந்தர்ப்பத்தில், எனது கோரிக்கையை முன்வைப்பேன்.

கட்சியின் செயல்நிலை மற்றும் மாகாண அங்கிகாரங்கள், கடந்த 5 வருடங்களில் நான் செயற்பட்ட விதங்கள், அநுபவங்கள், அறிவுகள், இவற்றின் அடிப்படையில், அந்தத் தகுதி எனக்கு இருக்கு என்றதை மற்றவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகின்றேன். ஆகவே, மாவை சேனாதிராஜா போட்டியிடாத சூழ்நிலையில் எனது கோரிக்கையை வலியுறுத்துவேன் என்றார்.

Read more...

பிரதமரை நீக்கியது சட்டப்படியானதா? வை எல் எஸ் ஹமீட்

19வது திருத்தத்திற்குமுன் பிரதமரை ஜனாதிபதி விரும்பிய நேரம் நீக்குவதற்கு அதிகாரம் இருந்தது. [47(a)]

19வது திருத்தத்தில் அச்சரத்து நீக்கப்பட்டுவிட்டது. தற்போது பிரதமர் பதவியிழக்கின்ற சந்தர்ப்பங்களில் பதவி நீக்கம் செய்யப்படுதல் என்கின்ற ஒன்று இல்லாமலாக்கப்பட்டு விட்டது. எனவே, பாராளுமன்றத்தின் எண்ணம் பிரதமரை நீக்கக்கூடாதென்பதாகும்; என்று சிலர் வாதாடுகின்றனர்.

பிரதமரை நியமித்தல்


சரத்து 42(4) இன் பிரகாரம் ஜனாதிபதியினுடைய அபிப்பிராயத்தில் யாருக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கக்கூடிய சாத்தியம் இருக்கின்றதோ அவரைப் பிரதமராக நியமிக்க வேண்டும்.

பொதுவாக எந்தவொரு நியமனமாயினும் நியமிக்கின்றவருக்கு அவரை நீக்குகின்ற அதிகாரம் இருக்கின்றது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு.

இங்கு எழுகின்ற கேள்வி, ஏற்கனவே, பிரதமரை நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரத்தை பாராளுமன்றம் 19வது திருத்தத்தினூடாக நீக்கி தன் எண்ணத்தை வெளிப்படுத்தியதன் பின்னும் நியமிக்கின்ற அதிகாரிக்கு நீக்குகின்ற அதிகாரம் இருக்கின்றது; என்கின்ற தத்துவம் செல்லுபடியாகுமா? என்பதாகும்.

பிரதமர் பதவி இழக்கும் சந்தர்ப்பங்கள்

தானாக ராஜினாமா செய்தல்.
பாராளுமன்ற உறுப்புரிமையை இழத்தல்,
இதனைத்தவிர அமைச்சரவை இயங்கும் காலமெல்லாம் அவர் பதவி தொடரும். சரத்து 46(2).

அமைச்சரவை கலைதல்

1. பிரதமர் பதவியிழத்தல் ( மேற்சொன்ன இரண்டு சந்தர்ப்பங்கள் )
2. அரச கொள்கைத் தீர்மானம், அல்லது வரவு செலவுத்திட்டத்தில் தோற்றல்.
3. அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோற்றல்.

இதன்மூலம் ஜனாதிபதிக்கு அமைச்சரவையைக் கலைக்கமுடியாது; என்பது தெளிவாகின்றது. ஏனெனில் இங்கு கலைதல் மாத்திரம்தான் இருக்கின்றது, கலைத்தல் இல்லை.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றினால் அமைச்சரவை கலையும் பிரதமரும் பதவியிழப்பார்:
; என மேலே பார்த்தோம்.

இப்பொழுது பிரதமருக்கு எதிராக மாத்திரம் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றப்படுகின்றது; என வைத்துக்கொள்வோம். இப்பொழுது பிரதமர் சுயமாக பதவியிழக்கமாட்டார். அவர் ராஜினாமா செய்வது அவருடைய தனிப்பட்ட முடிவு. ராஜினாமா செய்யாவிட்டால் என்னசெய்வது.

பெரும்பான்மை இல்லை; என்று நிரூபிக்கப்பட்ட ஒருவர் எவ்வாறு பிரதமராக இருக்கமுடியும்? இந்த சந்தர்ப்பத்தில் “ நியமிக்கின்ற அதிகாரிக்கு நீக்குகின்ற அதிகாரம் இருக்கின்றது” என்ற தத்துவத்தின்கீழ் ஜனாதிபதி செயற்படக்கூடாது; என்பதும் பாராளுமன்றத்தின் எண்ணமாக இருந்திருக்குமா?

வியாக்கியானத்தில் பாராளுமன்றத்தின் எண்ணம்

ஒரு சட்டத்தின் ஏதாவது ஒரு பிரிவில் கருத்து மயக்கம் வரும்போது பாராளுமன்றம் அச்சட்டத்தைக் கொண்டுவருவதில் அல்லது திருத்துவதில் என்ன எண்ணத்தைக் கொண்டிருந்தது; என ஆராய்ந்து அந்த எண்ணத்திற்கு இசைவாக அச்சட்டத்தை வியாக்கியானப்படுத்துகின்ற நடைமுறை இருந்து வருகின்றது.

இது பிரித்தானிய நடைமுறையில் இருந்து வந்ததாகும். பிரித்தானிய பாராளுமன்றம் இறைமையுடையது. அதேநேரம் பிரித்தானியாவில் எழுதப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டம் இல்லை. எனவே, சட்டத்தில் மயக்கம் இருக்கும்போது பாராளுமன்றத்தின் எண்ணத்தைப் பார்ப்பது வழமையாகும். ஆனால் அரசியலமைப்பினால் ஆளப்படுகின்ற மேற்கத்திய நாடுகளில் இன்று நடைமுறை மாறிவருகின்றது.

சாதாரண சட்டத்தை வியாக்கியானப்படுத்தும்போது அரசியலமைப்புச் சட்டத்திற்கு இசைவாகவே வியாக்கியானப்படுத்தப்படுகின்றது. அதற்கு முரணில்லாதபோது பாராளுமன்றத்தின் எண்ணம் பார்க்கப்படுகின்றது.

அரசியலமைப்புச் சட்டத்தைப்பொறுத்தவரை பாராளுமன்றத்தின் எண்ணம் அடியோடு பார்க்கப்படுவதில்லை; என்று கூறமுடியாது. ஆனாலும் சமகால சூழ்நிலை, தேவை போன்றவைக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

அரசியலமைப்பு என்பது சாதாரண சட்டத்தைப்போல் நினைத்த நேரமெல்லாம் திருத்தமுடியாது. அதேநேரம் சமகால சூழ்நிலைகளுக்கு, தேவைகளுக்கு அரசியல்யாப்பு பொருந்தக்கூடியதாக இருக்கவேண்டும். எனவே, என்றோ ஒருநாள் அரசியல்யாப்பை எழுதியவர்களின் எண்ணங்களுக்குள் அரசியலமைப்பை வியாக்கியானப்படுத்துவதில் எங்களை நாங்கள் ஏன் கட்டிவைக்க வேண்டும்? என்ற கேள்வி அமெரிக்காபோன்ற நாடுகளில் எழுப்பப்படுகின்றது.

இந்தவகையில் அந்நாடுகளில் புதிய வியாக்கியான முறைமைகள் தோற்றம் பெற்றிருக்கின்றன. இது பிரதானமாக இருவகைப் படுத்தப்படுகின்றது. ஒன்று, Interpretivism or originalism இரண்டு, non interpretivism or non originalism.

இதில் முதலாவது வகை பாராளுமன்றத்தின் எண்ணம் போன்ற சில மரபுரீதியான வியாக்கியானமுறையைக் குறிக்கின்றது. இரண்டாவது வகை, சமகால சூழ்நிலைக்கேற்ப வியாக்கியானப்படுத்தப்பட வேண்டுமென்கின்றது. இவை இரண்டிற்குள்ளும் பல பிரிவுகள் இருக்கின்றன.

குறிப்பாக, இரண்டாவது வகை, சட்டத்தின் ஒவ்வொரு சொல்லுக்கும் பெறுமானம் ( value) இருக்கின்றது. சமகால மாற்றத்திற்கேற்ப அச்சொற்களின் பெறுமானம் கருத்திற்கொள்ளப்பட்டு வியாக்கியானப்படுத்தப்பட வேண்டும்; என்பதை அடிப்படையாகக் கொண்டது.

அமெரிக்காவில் கடந்த இரண்டு மூன்று வருடங்களுக்குமுன் ‘ஸ்கலியா’ என்ற ஒரேயொரு நீதியரசரே முதலாவது வகைக்கு ஆதரவாக இருந்தார். அவர் தற்போது மரணித்துவிட்டார். ஏனையவர்களெல்லாம் இரண்டாவது வகைக்கே ஆதரவாக இருந்தார்கள்.

இந்தியாவில் அண்மைக்காலம்வரை திருமணமுடித்தவர்களின் கள்ளத்தொடர்பு தண்டனைக்குரிய குற்றம் என்ற தண்டனைக்கோவை பிரிவை சரிகண்ட உயர்நீதிமன்றம் அண்மையில் அதே அரசியலமைப்பினடிப்படையில் பிழைகண்டிருக்கின்றது.

அரசியலமைப்பு மாறவில்லை. அவ்வாறாயின் எது மாறியது. சொற்களின் பெறுமானம் மாறியது. சமத்துவம் என்றசொல் சமகால மாற்றத்திற்கேற்ப பொருள்கோடல் செய்யப்பட்டது.

திருமணமுடித்தவர்களின் கள்ளத்தொடர்பு கூடாது; என்று பாராளுமன்றம் நினைத்ததனால்தான் தண்டனைக்கோவையில் அதைக்குற்றமாக்கியது. ஆனால் நீதிமன்றம் பாராளுமன்றத்தின் எண்ணத்தைப் பார்க்கவில்லலை. தற்போதைய சூழ்நிலைக்கேற்ப அரசியலமைப்புச் சட்டத்தின் பொருள் எவ்வாறு மாற்றமடைந்திருக்கின்றது; என்றே பார்த்தது.

எனவே, இலங்கையில் பாராளுமன்றத்தின் எண்ணம்தான் இன்னும் கூடுதலாக பார்க்கப்படுகின்றது; என்றபோதிலும் யதார்த்தத்திற்கு இசைவாக அரசியலமைப்புச் சட்டம் வியாக்கியானப்படுத்தப்பட வேண்டிய தேவையையும் கருத்திற்கொள்ளப்பட வேண்டும்.

பிரதமரின் பெரும்பான்மை இழப்பு

இது ஒரு தேசிய அரசாங்கம். ஐ தே கட்சி 106, SLMC 1 = 107 மிகுதி UPFA.

ஆட்சியமைக்க தேவை 113. இப்பொழுது UPFA அரசில் இருந்து வெளியேறிவிட்டது. வெளிப்படையாக ஐ தே கட்சியிடம் இருப்பதோ 107. பெரும்பான்மை இருக்கின்றதா? பாராளுமன்றத்தின் பெரும்பான்மை இல்லாதவரை எவ்வாறு பிரதமராக வைத்திருப்பது? இங்கு ஜனாதிபதியின் அபிப்பிராயத்தில் ( in his opinion) பெரும்பான்மை இருக்கின்றதா? என்பதுதான் கேள்வி.

பிரதமருக்கு பெரும்பான்மை இல்லாவிட்டாலும் என்னால் ஒன்றும் செய்யமுடியாது; விரும்பினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவாருங்கள்; என்று சொல்வதா? அவ்வாறு கொண்டுவராவிட்டால் பெரும்பான்மையற்ற பிரதமரை பதவியில் வைத்திருப்பதா?

நம்பிக்கையில்லாப்பிரேரணை கொண்டுவருவதும் கொண்டுவராமல் விடுவதும் அரசியல் முடிவு. தற்போது பிரதமர் பெரும்பான்மையை இழந்திருக்கின்றார்.

எனவே, பெரும்பான்மை இருக்கின்றது; என்று கருதி அவரைப் பிரதமராக நியமித்தார். பெரும்பான்மை இல்லை; என்று தெளிவாகத் தெரிந்ததும் நீக்கியிருக்கின்றார். பிரதமரை நீக்கமுடியாது; என்று அரசியலமைப்பு சொல்லவில்லை.

சுருங்கக்கூறின், 19 இற்குப்பின் நினைத்தமாதிரி பிரதமரை ஜனாதிபதி நீக்கமுடியாது. ஆனால் திட்டமாக பெரும்பான்மை இல்லையென்று தெரிந்தால் நீக்கலாம். ஆனாலும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கே இருக்கின்றது.

இப்பொழுது மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு எதுவும் தேவையில்லை. விரும்பினால் எதிரணியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரலாம்.

குறிப்பு: இது சட்டரீதியான நிலைப்பாடு. எனது அரசியல் ரீதியான நிலைப்பாட்டிற்கும் இந்தக்கருத்திற்கும் எந்தத்தொடர்புமில்லை.

குறிப்பு-2: UPFA தேசிய அரசாங்கத்திலிருந்து விலகியவுடன் தேசிய அரசாங்கம் கலைந்துவிட்டது. 30 இற்குமேல் அமைச்சர்கள் இருக்கமுடியாது. எனவே அமைச்சரவை கலைந்துவிட்டது; என்ற ஒரு கருத்து முன்வைக்கப்படுகின்றது.

அமைச்சர்கள் 30ஐத் தாண்டமுடியாது; என்பது சரி. அது வேறுவிடயம். ஆனால் அமைச்சரவை கலைந்துவிட்டது; என்பது பிழையாகும். மேற்சொன்ன சந்தர்ப்பங்களைத் தவிர அமைச்சரவை கலையாது.

Read more...

Friday, October 26, 2018

நான் தான் பிரதம மந்திரி. போக மாட்டேன். ரணில் மைத்திரிக்கு கடிதம்.

இலங்கை சனநாயக குடியரசின் அரசியல் யாப்பிற்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட பிரதம மந்திரி நானே என்று ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் ரணில் விக்கரமசிங்கே.

மைத்திரிபால சிறிசேனவினால் ரணில் விக்கிரம சிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடித்தத்தில் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டபோது, வெறும் 47 உறுப்பினர்களை கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க மைத்திரிபாலவால் நியமனம் செய்யப்பட்டதாகவும் அவ்வாறே தற்போது பதவியிலிருந்து விலக்குவதாகவும் குறிப்பிட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.



ஜனாதிபதியால் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதவி விக்குவதாக அனுப்பப்பட்ட கடிதம்.



Read more...

ஜனநாயக விரோத சூழ்ச்சியாம் மங்கள.

நாட்டின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டமை ஜனநாயக விரோதமும் அரசியல் யாப்புக்கு விரோதமானதும் என ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர் தொடர்ந்து கூறுகையில்:

பிரதமர் இறந்தால் அல்லது அவர் இராஜனாமா செய்தால் அன்றில் பெரும்பாண்மையை இழந்தால் பிரதமரை மாற்ற முடியும்.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியிடம் இதுவரைக்கும் பெரும்பாண்மை இருப்பதாக தெரிவித்துள்ள அவர், தமது பெரும்பாண்மையை மீண்டுமொருமுறை நிரூபிக்கும் பொருட்டு பாராளுமன்றினை கூட்டுமாறு சபாநாயகரை கோருகின்றார்.

மக்களவின் இவ்வேண்டுதலை அடுத்து, சபாநாயகர் கரு ஜயசூரிய நாளைய தினம் (27) நாட்டின் அரசியல் நிலைப்பாடு தொடர்பில் விசேட அறிவிப்பினை விடுக்கவுள்ளார்.

சட்ட விடயங்கள் தொடர்பில் தாம் ஆராய்ந்து வருவதாகவும் பக்கசார்பற்ற முறையில் தீர்மானத்தை அறிவிப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதேநேரம் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் 11, பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் 16 உறுப்பினர்கள் மற்றும் ஈபிடிபி என்பன மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக தெரியவருகின்றது.


Read more...

விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலைகளை பாமெடுத்து ஓரிரு நாட்களில் 5 காவலர்கள் கைது.

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலை அதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் மேலும் நான்கு அதிகாரிகளும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறைச்சாலை கண்காணிப்பு கோபுரத்தின் மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காமல் கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், சிறைக்கைதிகளை பார்வையிட வரும் சிறுவர்களிடம் சட்டவிரோதமான பொருட்களை சிறைச்சாலைக்குள் அனுப்பும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது சிறுவர்களிடமிருந்து பணம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இவ்வாறான நடவடிக்கை இடம்பெறுகின்றமை தெரிய வந்துள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சோதனையின் போது சிறுவர்களிடமிருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பணத்தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுவதாக கண்டறியப்பட்டுள்ள வெலிக்கடை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை மற்றும் புதிய மெகசீன் சிறைச்சாலை ஆகியவற்றுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்தவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த சிறைச்சாலைகள் வளாகத்திற்கு வௌிப்புறத்தில் இருந்தவாறு தமது உத்தியோகஸ்தர்கள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவார்கள் என பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்வையிட வருவோரை சோதனையிடுதல் மற்றும் சிறைச்சாலை மதில்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் வியாபாரத்தை தடுத்தல் போன்ற செயற்பாடுகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடவுள்ளனர்.

இதேவேளை, ஏனைய சிறைச்சாலைகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிக்க சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவை ஈடுபடுத்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு உத்தேசித்துள்ளது.

தற்போது 100 பேருடன் இயங்கும் சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவில் 200 பேரை பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Read more...

மணல் மாபியாவால் வரண்டு போகும் எம் பசுமை தேசம். றிசாத் ஏ காதர்

எங்கு இயற்கை வளங்கள் திட்டமிடப்பட்டு துவம்சம் செய்யப்படுகின்றதோ அங்கு அனர்த்தங்கள் அல்லது அழிவுகள் நடந்தேறுகின்றது. இவைகள் வரலாற்று நெடுகிலும் உணரப்பட்டுவந்தவைகள். வளங்கள் கடவுளின் அருட்கொடை அவற்றுக்கு நிகர் இந்த உலகத்தில் எதுவுவேமயில்லை.

ஒரு காலத்தில் இயற்கை வளங்களுக்கு இருந்த மதிப்பும், பாதுகாப்பும் இன்று இல்லாமல் போயிருப்புது இந்த மனித சமூகத்துக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரும் சாபக்கேடு என்று சொன்னால் மிகையாகாது.
அனர்த்தங்கள் எங்கெல்லாம் ஏற்படுகின்றதோ அங்கெல்லாம் இயற்கை வளங்கள் துவம்சம் செய்யப்பட்டதன் விளைவேயன்றி வேறில்லை.

இத்துணை வருடங்களும் இந்தப் பூமிப்பந்துக்கு பாதுகாப்பான கதிர்வீச்சுக்களை வழங்கி, நச்சுக்கதிர்களிலிருந்து மனிதன் தொடக்கம் விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் என அனைத்தையும் பாதுகாத்த ஓசோன் படலம் துளையிடப்பட்டது மனிதனின் சுயலப்போக்கும், சூழலை பேணிப்பாதுகாப்பதுக்கு தவறியதன் விளைவேயாகும்.

தற்போது இலங்கையில் போதைப் பொருள் வியாபாரம் எப்படி தடுக்கமுடியாத இலக்கை நோக்கி நகர்கின்றதோ அவ்வாறான ஒரு சூழலியல் மோசடி மிகச் சர்வசாதாரணமாக நடந்தேறுகின்றது. இந்த நிலை தொடர்வதுக்கு அனுமதித்தால் இந்த நாடு பாரிய சூழலியல் சிக்கல் நிலைக்குத் தள்ளப்படும்.

இலங்கையின் நில அமைப்பு மிக வித்தியாசமானது. எல்லாப்பிரதேசங்களும் ஒரேயமைப்பில் இல்லை. மிக அழகான இலங்கைத் தீவில் எல்லா வளங்களும் ஒருசேர கிடைக்கின்றது.

அப்படியான வளங்கள் நிறைந்த ஒரு பிரதேசம் கிழக்கு மாகாணத்தின் 'மீன்பாடும் தேனகம்' மட்டக்களப்பு மாவட்டம். கடல், வயல்வெளிகள், காடுகள் மற்றும் குளங்கள், ஏரிகள் என எல்லா வளங்களையும் ஒரு சேர கொண்டுள்ள மாவட்டம்.

இந்த வளங்கள் இன்று மெல்லச் சூறையாடும் நிலை மேலோங்கியுள்ளது. அதிகாரமிக்க கரங்கள் இதற்குப்பின்னால் இருப்பதாக மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

இங்குள்ள எல்லா வளங்களும் செழிப்புற மிக முக்கியமானது அதன் நிலம்சார் அமைப்பும், மண்ணும். ஆனால் நில அமைப்பு மாற்றப்பட்டு இங்குள்ள மணல் சூரையாடப்படுகின்றது. இவ்விடயம் பற்றி பேசாமல் இருப்பது இந்த சூழலினை தத்தமது கரங்களினால் கொல்வதுக்குச் சமனே.

ஒரு நாட்டினுடைய மிகச் சிறந்த வளம் ஆறு. அவ்வாறான ஆறு அழிக்கப்படுவது பற்றிய கவலை சிறிதளவேனும் எம்மில் எத்தனை பேருக்கு ஏற்படுகின்றது. பொதுவாக நம்முன்னே உள்ள மண் வளங்கள் பற்றி நாம் யாரும் சிந்திப்பதில்லை. கட்டுமாணப்பணிக்கான மணல் கிடைக்காதவிடத்து அல்லது அதற்கான விலை எகுறுகின்ற போதே அதனை பற்றி நம்மில் அதிகம் பேர் சிந்திக்கின்றோம். அதுவரைக்கும் அதனுடைய எந்த நன்மைகளையும் நாம் சிந்திப்பதேயில்லை.

மணல் பற்றிய அறிமுகம்

ஆற்றுக்கு மிக முக்கியம் அதிலுள்ள மண். மணல் என்பது எம்மால் உருவாக்க முடியாத பொக்கிஷம். இயற்கையாக உருவாகின்ற பொருள். ஆனாலும் சில மாதங்களிலோ அல்லது வருடங்களிளோ உருவாகுகின்ற பொருள் அல்ல. ஒரு கன அடி மணல் உருவாக 100வருடங்கள் எடுப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.

பருவகால வேறுபாடு காரணமாக குளிர்காலங்களில் இறுக்கமாகவும், வெயில் காலத்தில் விரிவடைந்து இலகுவாகியும் நொறுக்குகின்றன பாறைகள். இவ்வாறு நொறுங்கும் பாறைகள் மழைகாலம் வரும்போது, மழைநீரின் வேகத்தால் உருட்டப்பட்டு, உடைந்து சிறு சிறு துகள்களாகி மணலாக மாற்றம் அடைகின்றன.

மணலும் - கட்டுமானமும்

ஆரம்ப காலங்களில் மனிதனுடைய கட்டுமாணப்பணிகள் கம்புகளும், குச்சிகளுமே பயன்படுத்தப்பட்டது. எப்போது கற்களையும், மண்ணையும் பயன்படுத்தி கட்டுமாணப்பணி ஆரம்பிக்கப்பட்டதோ அன்றே கட்டுமானப்பணிகளுக்கு மணல் பயன்படத் தொடங்கியது. அப்போதெல்லாம் மாட்டுவண்டி மூலமாகவே மணல் எடுக்கப்பட்டது. தொன்னூறுகளுக்கு பிற்பட்ட காலத்திலே சிறிய ரக இயந்திரங்கள் மூலம் மண் கொள்ளை ஆரம்பமாகின்றது.
-----
உலகமயமாதலின் காரணமாக இலங்கையில் பெரும் பெரும் நிறுவனங்கள் கால்பதிக்கத் தொடங்கின. அதன் பின்னர் கட்டுமானப்பணிகள் ஆரம்பமாயிற்று. மேலும் சுனாமி அனர்த்தம், அதனையும் விட முப்பது வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர்; பல்தேசிய கம்பனிகள் வடக்கு, கிழக்கு மற்றும் அதற்கு வெளியேயான பிராந்திய அபிவிருத்திக்கு தங்களை இணைத்துக்கொண்டன. இதனால் இந்நடவடிக்கைகளுக்கு தேவையான கட்டுமாணப் பணிகளுக்கு மணல் அதிகளவில் தேவைப்பட்டது. அதற்காக நவீனங்கள் புகுத்தப்பட்டது. அதுவரையில் மாட்டுவண்டி, சிறிய ரக வாகனங்களில் மணலை அகழ்ந்து எடுத்துவந்த நிலையில், மணல் அகழும் தொழிலில் களம் இறங்கியவரகள் மண் அள்ள இயந்திரங்களை பயன்படுத்தினர். கட்டுமான நிறுவனங்களோடு மறைமுக கூட்டொன்றை இப்பிராந்தியங்களிலுள்ள அரசியல்வாதிகள் மேற்கொண்டிருற்தனர். விஸ்வரூபம் எடுத்த கட்டுமானப் பணிகளுக்கு தீனிபோட ஆற்றங்கரைகள் மணல் விற்கும் குவாரிகளாக மாற்றம் பெற்றது. கோடிகள் கொட்டும் தொழிலாக மண் விற்பனை மாறிவிட்டது.

குத்தகை அடிப்படையில் ஏலம் எடுத்து ஆறுகளில் மணல் அகழும் பணி தீவிரமடைந்தது. இன்று இதனை கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலை காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பிரதேசத்து பெருநிலங்களான காலபோட்டமடு, குருந்தையடிச்சேனை மற்றும் மணல்பிட்டி, சாமந்தியாறு, குழுவினமடு, விடுதிக்கல், மாவடிமுன்மாரி, பனிச்சையடி முன்மாரி நெல்லிக்காடு, வாழைக்காலை, காஞ்சிரங்குடா போன்ற வயற் கிராமங்களிலுள்ள ஆறுகள் முதல் வாய்க்கால் வரை எவ்வித அனுமதியுமின்றி சட்டவிரோதமாக மணல்; அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக அப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் இந்தப் பிரதேசம் எதிர்காலத்தில் பாரிய அழிவுகளை சந்திக்கும் நிலை ஏற்படுவதுக்கான அபாயங்கள் இருப்பதாக இங்குள்ள மூத்தவர்கள் கருத்துரைக்கின்றனர்.

அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவது வளங்களை சமப்படுத்துவதுக்கேயாகும். ஒரே இடத்தில் தொடர்ந்து மணல் அகழ்வில் ஈடுபடாமல் சூழலுக்கும், குறித்த காலத்தில் ஏற்படுகின்ற நீரோட்டத்தையும் மையப்படுத்தி நடைமுறைப்படுத்துவதே அதன் நோக்கம். ஆனால் சட்டவிரோதமாக ஒரே இடத்தில் தொடர்ந்து இவ்வாறான செயற்றபாடுகள் இடம்பெற அனுமதிப்பது அந்த பிரதேசத்தின் சூழலை மிக விரைவாக துவம்சம் செய்வதாகும். இதனை பொலிசாரிடம் எத்தனை முறை சொன்னாலும் இது தொடர்பில் கண்டுகொள்வதாக அவர்கள் இல்லை என்கிற வெளிப்படை உண்மையை மக்கள் கூறுவதுக்கு தயங்கவில்லை.

நாளொன்றுக்கு பத்து (10) முதல் பதினைந்து (15) லொறிகள் கொக்கட்டிச்சோலை பிரதான வீதியூடாக எழுவான்கரைக்கு மணல் கடத்துவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த மணல் அகழ்வுக்கு சம்பந்தப்பட்ட அரச அலுவலக அதிகாரிகள் தொடக்கம் பொலிஸ் நிலையம் வரை மௌனிகளாகவே இருந்துவிடுகின்றனர்.

மணல் அகழ்வினை மேற்கொள்ளும் பெரும் முதலாளிகளில பெரும்பாலானோர் வயற்காணிகளை சமப்படுத்துவதுக்கே அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதாகவும், அதன் பிற்பாடு ஆற்றங்கரைகளை அண்டி மணல் அகழ்வில் ஈடுபடுவதாகவும் ஒரு குற்றச்சாட்டும் இருக்கின்றது. இந்த குற்றச்சாட்டு உண்மையானதுவே. இதுவே இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்ல இயற்கை வளங்களை அண்டியுள்ள பிரதேசங்களில் நடந்தேறுகின்றது.

வளங்களை பாதுகாக்க நிறுவப்பட்ட அலுவலகங்கள் கூட இதில் தவறிழைத்துவிடுகின்றது. அல்லது பணங்களால் கட்டப்படுகின்றது என்கிற உண்மையை எளிதில் மறுத்துவிட முடியாது. இதற்குச் சிறந்த உதாரணம் அண்மையில் 'அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட ஒருவரை கைது செய்த போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுவித்த சம்பவமும், அதற்கு எதிராக உரிய பொலிஸ் சார்ஜன்ட் துப்பாக்கி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தமையும்' எனவே நாம் வாழுகின்ற சூழல் வியாபார மாபியாக்களிடமிருந்து பாதுக்காக்கப்படல் வேண்டும். இல்லையேல் நமது சந்ததிகளுக்கு பசுமையற்ற, பாலைவன தேசத்தையா கையளித்துவிட்டுச் செல்லவிருக்கின்றோம் என்கிற கேள்விக்கு விடைகாணுதல் அவசியம்.

இலங்கையின் மிக முக்கியமான கங்கைகளில் மஹாவலியும் ஒன்று. அதன் முடிவிடம் திருகோணமலையின் கிண்ணியா, மூதூர் பிரதேசங்களாகும். இங்குள்ள சீனன்வெளி, மணலாறு, சாவாறு, நிலாப்பொல கண்டல்காடு, பாடுகாடு போன்ற பகுதிகளில் அதிகமான மண் அகழ்வு இடம்பெறுவதாகவும், அதனை தடுக்காது விட்டால் எதிர்காலத்தில் இப்பிரதேசம் நீரில் மூழ்கும் அபாயம் நிலவுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. மேலும் கடந்த வருடம் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் 15க்கும் மேற்பட்ட ஆறுகள் பெருக்கெடுத்ததனையும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புக்களையும் நாம் எளிதில் மறந்துவிட முடியாது.

திருகோணமலை மாவட்டத்தினை பொறுத்தமட்டில் தற்போதுவரை 395 மண் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் 80வீதமான அனுமதிப்பத்திரங்கள் வெளி மாகாணங்களை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், மண் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் அங்குள்ள மக்கள். வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்கள் குறைக்கப்படல் வேண்டும் என்கிற கோரிக்கைக்கும் செவிசாய்க்கப்படல் வேண்டும்.

திருகோணமலை மக்களுக்கு தேவையான மணலை பெற்றுக்கொள்ள 395 அனுமதிப்பத்திரங்கள் தேவையா என்கிற கேள்விக்கு பதிலளிப்பது யார். நல்லாட்சியில் காடுகளை, குளங்களை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதாக தொண்டை கிழியக்கத்துகின்றனர். அந்த வரிசையிலே வில்பத்து விவகாரமும் கையாளப்பட்டதாக அரசியல்வாதிகள், அதிகாரிகளின் அறிக்கைகளில் குறிப்பிடுகின்றனர். நீதிக்கு புறமபான விவகாரங்களில் காட்டுகின்ற அக்கறை மணல் அகழ்வு விடயத்தில் காட்டமுடியமல் போவது ஏனோ.

வேறு சில மாவட்டங்களிலுள்ள அரசியல் பிரமுகர்கள் மண் அகழ்வுக்கு அம்பாரை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையை தளமாக பயன்படுத்துவதாகவும் அவ்வப்ப பிரதேசங்களிலுள்ள மக்கள் குறிப்பிடுகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் உள்ள இயற்கையான எழில் மிக்க ஆறுகள், கங்ககைளில் ஆற்று மணல் அகழ்வு வேலைகளில் அரசியல்வாதிகளினதும், அதிகாரிகளினதும் தலையீடுகள் இருப்பதாக அநேகமான குற்றச்சாட்டுகள் கிளம்புகின்றது. இதுவிடயத்தில் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் சிபாரிசின் பிரகாரமே அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுகின்றது. முதலில் இந்த நடவடிக்கை நிறுத்தப்படல் வேண்டும். இதனூடாக ஒரு விடயத்தை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் அனுமதி இல்லாமல் அனுமதிப்பத்திரங்களை வழங்கமுடியாது என்பதுடன், முதலில் அந்த நடவடிக்கைக்கு ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே பொறுப்புக்கூறவேண்டியவர்கள் என்பதும் தெளிவான வியடம்.

ஆக மொத்தத்தில் திருகோணமலை மாவட்டம் மாத்திரம் இந்த பிரச்சினைக்குட்டபட்டதல்ல. இங்குள்ள ஒவ்வொரு மாவாட்டமும் இதற்குள் அகப்பட்டுள்ளது. முறையான ஒரு செயற்றிட்டம் ஒன்றினூடாக மண் கொள்ளை கட்டுப்படுத்தப்படல் வேண்டும். அதனூடாகவே வளங்களை, பொக்கிஷங்களை பாதுகாக்க முடியும்.

ஒருபுறம் ஆற்றங்கரைகளில் மண் அகழ்வு நடைபெறுகின்றது. மறுபுறம் அம்பாரை மாவட்டத்தின் கரையோர பிராந்தியத்தின் கடற்கரையில் மண் அகழ்வு கூடுதலாக இடம்பெறுவதும் சுட்டிக்காட்டவேண்டியது. பலமிக்க அரசியல் பின்புலங்களை கொண்டு இந்த மண் அகழ்வு இடம்பெறுவதாகவும், சட்டம் இது விடயத்தில் அசமந்தமாக நடந்துகொள்வதாகவும் மக்கள் கவலைபட்டுக்கொள்கின்றனர். இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் கனரக, சிறியரக வாகனங்களில் கடற்கரை மணல் அகழ்வோரை கண்டுகொள்ளாத பாதுகாப்புத் தரப்புதனது குழந்தைகள் வீட்டு முற்றத்தில் கடற்கரை மணலில் விளையாட ஆசைப்படும் ஒருவர் உர பையில் மணல் அகழ்ந்தால் நுணுக்குக் கண்ணாடி கொண்டு கடமையாற்றும் பாதுகாப்புத் துறையினரும் இருக்கின்றனர்.

இயற்கையான வளங்களை அழித்து நமது சந்ததிகளுக்கு எதனை விட்டுவைக்கப்போகின்றோம். வளங்களை விற்று பெற்றுக்கொள்ளும் பணங்களினூடாக எதனை பெற்றுக்கொள்ளமுடியும்.

இயற்கை வளங்களை அநியாயமாக கொள்ளையடிப்பதால் நீர் மட்டம் குறைகின்றது, சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகின்றது. ஆற்றுப்படுக்கைகளில் அளவுக்கு அதிகமாக மண்ணை அகழ்வது 'தாயின் மடியை அறுத்து பால்குடிப்பதுக்கு சமனானது' என்று பல ஆண்டுகளாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் குறிப்பிட்டுவருகின்றனர். ஆனால் மணல் கொள்ளை மட்டும் தடுக்கப்படவேயில்லை. நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும், சுற்றுச் சூழல் பாதிக்கும் என்பதெல்லாம் ஆட்சியாளர்களுக்கு தெரியாத விடயமல்ல. ஆனால் இதனை ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதாகவில்லை. எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மணல் கொள்ளை மட்டும் தடுக்கப்படவேயில்லை. மாறாக குறிப்பிட்ட ஒரு சிலர் (ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்கள்) இந்த மண் அகழ்வில் கோடீஸ்வரர்களாக கோலோச்சுவதே வழமையாகிவிட்டது.

நன்றி தினகரன் 2018.10.26

Read more...

இரவோடு இரவாக மஹிந்தரை சந்திக்கச் சென்றார் பூஜித.

தனக்கு நெருக்கமான தேரர் ஒருவருடன் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திக்கச் சென்றுள்ளார் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர

புதிய பிரதமராக பதவியேற்ற பின்னர் மஹிந்தருக்கு மிக நெருக்கமானவர்களுடனான சந்திப்பில் ஈடுபட்டிருந்தபோது, கங்காரம பிரதம தேரருடன் அங்கு சென்ற அவர் தொடர்ந்து அரசை காப்பதாக தெரிவித்தபோது, நாட்டின் நீதியை காப்பாற்றினால் போதும் என மஹிந்த மறுபக்கம் திரும்பிக்கொண்டதை வீடியோவில் காணக்கூடியதாக உள்ளது.

பின்னர் அவ்விடத்திலிருந்த அமைச்சர்களை வெளியேற்றிவிட்டு கோட்டாவை அழைத்து பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபடுவதையும் காணக்கூடியதாகவுள்ளது.





Read more...

நான் தான் பிரதமர் - நியமனம் அரசியலமைப்புக்கு முரண் - ரணில் தெரிவிப்பு

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சத்தியப் பிரமாணம் செய்துள்ள நிலையில், “நான்தான் பிரதமராக இன்னும் பதவி வகிக்கின்றேன்” என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரணில் விக்கரமசிங்கதான் பிரதமராக இருக்கின்றார் என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்னவும் பிபிசி க்கு கூறியுள்ளார்.

இந்த நிலையில், அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாகவும், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்திருக்கிறது.

ஆயினும், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்துள்ளமையானது, அரசியலமைப்புக்கு முரணானது என்று, தொலைக்காட்சியொன்றுக்கு பேட்டியளித்த ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

ஆனால், தேசிய அரசாங்கம் என்பது 45அமைச்சர்களைக் கொண்டுள்ள அரசாங்கமாகும். அதிலிருந்து ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு விலக்கிக் கொண்டால் 45 அமைச்சர்களைக் கொண்டிருக்காது என்பதுடன் அமைச்சரவை தானாக கலைந்துவிடும். இதனால் பிரதம அமைச்சர் பதவிவிலகுவார். அதற்கிணங்கவே ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன புதிய பிரதமரை நியமித்துள்ளார் என சட்ட வல்லுனர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

எது எவ்வாறாயினும்அரசியமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 42(4)இன் படி புதிய பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது


Read more...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சற்று முன்னர் பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்திருந்தது.

இந்த நிலையில், சமீப காலமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் தோன்றியிருந்தன.

நீண்ட நாட்கள் திரை மறைவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவாக ஒரிரு மணித்தியாலயங்களில் இம்மாற்றம் இடம்பெற்றுள்ளது.

96 பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் கொண்ட மஹிந்த தரப்பினருடன் எதிர்வரும் சில மணித்தியாலயங்களில் ஐ.தே.க பிரபலங்கள் பல இணையவுள்ளதாக தெரியவருகின்றது.





Read more...

குற்றவாளிகளை நான் ஒருபோதும் அரசியல் கைதிகளாக கருதமாட்டேன். மாற்று வழி இருந்தால் கூறுங்கள். தலதா

“நீதிமன்ற தீர்ப்புக்களிற்கு முரணாக என்னால் செயற்பட முடியாது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நீதிப்பொறிமுறைகளிற்கு வெளியில் ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா என்று பார்த்து கூறுங்கள்“- இப்படி கேட்டிருக்கிறார் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரள.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு பதிலளித்து உரையாற்றிய போதே, இந்த கோரிக்கையை இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரிடம் விடுத்தார்.

“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கோரிக்கையை நான் உதாசீனம் செய்யவில்லை. 103 கைதிகளின் வழக்குகள் விசாரணையில் உள்ளன. வழக்கு விசாரணைகளில் ஏற்படும் தாமதம் பாரதூரமான பிரச்சனையாக உள்ளது. ஒரு நீதிபதி 400 வழக்குகளை விசாரிக்க வேண்டியுள்ளது.

103 கைதிகளில் 54 பேர் பாரதூரமான குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்களாக உள்ளனர். இவர்களில் 6 பேர் சிங்களவர்கள். 3 பேர் முஸ்லிம்கள். லக்ஷ்மன் கதிர்காமர் கொலை, சரத் பொன்சேகா கொலை முயற்சி, ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே கொலை, விமானங்களை கடத்தியமை, இராணுவ பிரதானிகளை கொல்ல முயன்றமை, தலதா மாளிகை குண்டு வெடிப்பு போன்ற பெரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை எப்படி அரசியல் கைதிகளாக கருத முடியும்?

எனவே, ஒருபோதும் அவர்களை நான் அரசியல் கைதிகளாக கருத மாட்டேன். நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக என்னால் செயற்பட முடியாது. எனவே, இக் கைதிகளின் விடுதலைக்கு நீதிப்பொறிமுறைக்கு அப்பால் வேறு ஏதாவது வழிமுறைகள் இருந்தால் கூறும்படி எதிர்க்கட்சி தலைவரையும், சுமந்திரன் எம்.பியையும் கோருகிறேன்“ என்றார்.

Read more...

Thursday, October 25, 2018

நாலக டி சில்வாவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஆஜரான சந்தர்ப்பத்தில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more...

எழுத்தாளரை கொலை செய்ததன்மூலம், சர்வதேச நெருக்கடியில் அரேபியாவின் அரச குடும்பம். பாகம் 3

எழுத்தாளர் ஜமாலின் கொலையானது துருக்கி நாட்டில் நடைபெற்றதனால் துருக்கி புலனாய்வு துறையினர்கள் விசாரணைகளை பல கோணத்தில் ஆரம்பித்துள்ளார்கள். இதனால் பல ஆதாரபூர்வமான தடயங்கள் அவர்களிடம் அகப்பட்டுள்ளதாக அறியக்கிடைகின்றது. ஆனாலும் எந்தவித தடயத்தினையும் துருக்கி வெளியிடவில்லை.

துருக்கிய புலனாய்வு துறையினர் தங்களது பணிகளை ஆரம்பித்ததும், சவூதி அரசாங்கத்தின் செயல்பாட்டில் சில மாற்றங்கள் நடைபெற தொடங்கியது. அந்த மாற்றங்களே சவூதி மன்னர் குடும்பத்தினர் மீது சந்தேகத்தினை வலுவடைய செய்தது.

அதாவது மன்னர் சல்மான் அவர்கள் மரணித்த எழுத்தாளரின் மகனை அழைத்து தனது கவலையை தெரிவித்தார். இது மரபுகளுக்கு அப்பால்பட்ட ஆச்சர்யமான விடயமாகும். அரச உயர்மட்ட பதவியில் இல்லாத எவரையும் மன்னர் அழைத்து இவ்வாறு ஆறுதல் கூறியதில்லை.

அத்துடன் துருக்கிக்கான சவூதி அரேபிய தூதுவர் உடனடியாக தனது குடும்பத்துடன் நாடு திரும்பினார். வழக்கமாக பிரத்தியேகமான ஆடம்பர விமானத்தில் பயணிக்கின்ற அவர், அன்று சாதாரண பயணிகள் விமானத்தில் சென்றுள்ளார்.

சவூதி தூதுவர் வசிக்கின்ற இல்லமும் சோதனை செய்யப்படும் என்று துருக்கி அதிகாரிகள் அறிவித்தல் வழங்கியதன் பின்பே சவூதி தூதுவர் அவசரமாக நாடு திரும்பினார்.

மேலும் பதினெட்டு பேர்கள் கைது செய்யப்பட்டதுடன், தங்களது ஐந்து உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சவூதி அரசு அறிவித்தது.

இந்த ஐந்து பேரில் இளவரசர் முஹம்மத் பின் சல்மானின் ஆலோசகர் சவுத் அல் குப்தானி மற்றும் உளவுத்துறை துணைத்தலைவர் மேஜர் ஜென்ரல் அஹமத் அல் அசீரி ஆகியோர்கும் அடங்குவார்கள்.

கடந்த இரண்டாம் திகதி சவூதி தூதரகத்தினுள் பிரவேசித்த எழுத்தாளர் ஜமால் அவர்கள் திரும்பி வரவில்லை. அப்படியென்றால் அவர் எங்கே மறைந்தார் ? கொல்லப்பட்டிருந்தால் அவரது உடல் எங்கே ? அவர் தூதரகத்தின் உள்ளே பிரவேசித்ததனை பதிவு செய்த தூதரகத்தில் பொருத்தப்பட்ட கமராக்கள், ஏன் வெளியே வருவதனை பதிவு செய்யவில்லை ? என்ற கேள்விகளுடனேயே விசாரணைகள் ஆரம்பமானது.

அந்த வகையில் ஜமால் அவர்கள் கொல்லப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளார் என்றே கூறப்படுகின்றது. அவரது வெட்டப்பட்ட உடல் பாகங்கள் எப்படியும் துருக்கியில்தான் புதைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியென்றால் அது எங்கே புதைக்கப்பட்டது என்பதுதான் துருக்கி அதிகாரிகளின் கேள்வியாகும்.

இந்த கொடூரமான கொலையினால் சவூதியின் உற்ற நண்பனான அமெரிக்காவில் எதிர்ப்பலைகள் உருவாகியுள்ளது. சவூதிக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்ற அழுத்தமும் வலுப்பெற்றுள்ளது.

ஆனாலும் அமெரிக்கா, சவூதி ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இராணுவ ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் நீண்டகாலமாக ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்ததாகும். இந்த நிலையில் ஒரு தனிநபர் கொலை செய்யப்பட்டதற்காக தனது உயிர் நண்பனுக்கெதிராக பொருளாதார தடை விதித்து விரோதியாக்கிக் கொள்வதென்பது சாத்தியமற்ற விடயமாகும்.

ஏனெனில் சவூதியை பகைத்தால் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகவும் அமெரிக்காவுக்கே அதிகம் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது அமெரிக்காவுக்கு தெரியாமலில்லை. இருந்தாலும் தனது நாட்டை சேர்ந்த சிலரை திருப்திப் படுத்துவதற்காக இந்த கொலை விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி கருத்து கூறியிருக்கின்றார்.

அண்மையில் கட்டார் நாட்டுக்கெதிராக சவூதி அரேபியா பொருளாதார தடைகளை விதித்தபோது அமெரிக்கா சவூதி அரேபியாவின் பக்கமே தனது ஆதரவினை தெரிவித்தது. இத்தனைக்கும் இரண்டு நாடுகளும் அமெரிக்காவின் நற்பு நாடுகளாகும்.

அதிலும் மத்தியகிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவ தளம் கட்டார் நாட்டிலேயே உள்ளது. இந்த இரு நட்பு நாடுகளுக்குமிடையில் விரிசல் ஏற்பட்டபோது சவூதிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது மட்டுமல்லாது தனது மிகப்பெரும் இரானுவத் தளத்தினையே கட்டாரிலிருந்து அகற்றுவதற்கு அமெரிக்கா துணிந்தது.

எழுத்தாளரின் கொலையானது அமெரிக்க நலனுக்கெதிரானதல்ல. மத்தியகிழக்கில் உள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளையும், இஸ்லாமிய முற்போக்கு நாடுகளையும் அழிப்பதற்கு எந்த சூழ்நிலையிலும் அமெரிக்காவுக்கு பக்கபலமாக இருந்துவருகின்ற சவூதி அரேபியாவை இழப்பதற்கு ஒருபோதும் அமெரிக்கா முன்னிக்காது.

அத்துடன் சவூதியுடனான அமெரிக்காவின் உறவில் பாதிப்பு ஏற்பட்டால் அது மத்தியகிழக்கில் தனது பரம எதிரியான ஈரானின் கை ஓங்கிவிடும். இதனை அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது.



தொடரும்.............................. முகம்மத் இக்பால் - சாய்ந்தமருது

Read more...

கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் கைவிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரில் அமைக்கப்பட்டு வந்து மத்திய பேரூந்து நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் பல மாதங்கள் கைவிடப்பட்டுள்ள நிலையில் காணப்படுகிறது.

வடக்கு மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ள மாவட்டமான கிளிநொச்சியில், ஏனைய மாவடங்கள் மற்றும் தென்னிலங்கையின் பல மாவட்டங்களிலிருந்தும் வரும் பேரூந்துகள் நிறுத்தி செல்கின்ற இடமாக காணப்படுகிறது. ஆனால் இங்கு ஒரு பேரூந்து நிலையம் இதுவரை அமைத்து முடிக்கப்படவில்லை.

கடந்த வருடம் கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் மாவட்டத்திற்கான மத்திய பேரூந்து நிலையம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் குறித்த பேரூது நிலையம் எந்த திணைக்களத்தினால், எவ்வளவு நிதி ஒதுக்கீட்டில், என்ன வடிவமைப்பில் அமைக்கப்படுகிறது என்ற எந்த விபரங்களும் காட்சியப்படுத்தப்படவில்லை. அத்தோடு பேரூந்து கட்டுமானப் பணிகளும் குறுகிய காலத்திற்குள் பல தடவைகள் தடைப்பட்டு வந்த நிலையில் தற்போது பல மாதங்களாக எந்த பணிகளும் இன்றி இடைநடுவில் தடைப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில் பல தடவைகள் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்த போதும் அவர்களும் விடயத்தை கவனத்தில் எடுக்கவில்லை.

இது தொடர்பில் கிளி நொச்சி மாவட்டச் செயலகத்தை தொடர்பு கொண்டு வினவியபோது குறித்த பேரூந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்றும் அதற்கும் மாவட்டச் செயலகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் அது தொடர்பில் வடக்கு மாகாண போக்குவரத்து ஆணைக்குழுவையே வினவ வேண்டும் எனறும் தெரிவிக்கப்பட்டது.

ஒரு நிரதர பேரூந்து நிலையம் இன்றி வெயில் மற்றும் மழைக்காலங்களில் உள்ளுர், வெளியூர் பயணிகள் கடும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Read more...

இந்திய றோ சந்தேச நபர் தொர்பாக வெளிவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்கள்..

ஜனாதிபதியை கொலைசெய்ய திட்டமிடப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தின் பொருட்டு கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய பிரஜை பாதுகாப்பு பிரிவிற்கு ஒப்படைக்க ஒருவாரத்திற்கு முன்னர் " எதிரிகள் என்னை சுற்றி வளைத்துள்ளனர், எனது உயிருக்கு ஆபத்து" என கூறியதாக அவரது நண்பர் ஒருவர் தெரிவித்தாக கூறப்படுகிறது.

இந்திய "ரோ" அமைப்பை சேர்ந்த இரகசிய தகவலாளி என சந்தேகிக்கப்படும் எம்.தோமஸ் என அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட அவரது நண்பரின் குறுஞ்ச்செய்தி கலந்துரையாடல் ஒன்றின் மூலம் இத் தகவல் அறியப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் சந்தேகிக்கப்படும் இந்திய பிரஜை 1997 வருட முதல் மனநோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும் அவரது நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.

சிவில் பொறியியலாளராக கடமையாற்றும் சந்தேக நபரின் நண்பர் தற்போது இந்தியாவில் இருப்பதாகவும் அவரது பெயரை குறிப்பிட மறுப்பதாகவும் அவ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சந்தேக நபரான தோமஸ் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதன் காரணம் விபத்தொன்றில் தலையில் ஏற்பட்ட பாரிய காயமொன்றின் மூலமாகவே எனவும் அவர் இந்திய விமான நிலைய அதிகாரசபையில் கணக்கியல் உதவியாளராக பல வருடங்களாக சேவையாற்றி உள்ளதாகவும் அவரின் நண்பர் தெரிவித்துள்ளார்.

வணிகவியல் துறை பட்டதாரியான சந்தேக நபர் பின்னர் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு சேவையாற்ற சென்றதாகவும் இருப்பினும் அவரது தொழில் அவரின் மனைவிக்கு கிடைத்ததாகவும் அதற்கான காரணம் தனக்கு சரியாக தெரியவில்லை எனவும் நண்பர் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

சந்தேக நபருக்கு மகன் ஒருவர் இருப்பதாகவும் சில வருடங்களுக்கு பின்னர் அவரது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

தோமஸ்சை இறுதியாக 2016 ஆண்டு தான் கண்டதாகவும் தோமஸ்சுக்கு கேராளாவில் 7 அறைகளை கொண்ட பங்களா ஒன்று இருப்பதாகவும் அதை விவாகரத்து செய்த மனைவி தன்னிடமிருந்து பறித்துக்கொள்ள கூடும் என்ற பயம் சந்தேக நபரிடம் இருந்ததாக அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் அவர் தலைமறைவாகியதுடன் 2017 ஆண்டு அவரிடம் இருந்தது கிடைத்த தொலைபேசி அழைப்பில் அவர் கொழும்பில் இருப்பதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் உரையாடியதாவும் அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.

தன்னை கொழுப்பிற்கு தோமஸ் வருகை தருமாறு அழைப்பு விடுத்ததாகவும் அவரது நண்பர் த நிவ் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

அவருக்கு பணம் இல்லை என்பது எனக்கு தெரியும். சில நேரங்களில் அவர் மிஸ்கோல் அனுப்பினால் நான் திருப்பி அழைப்பேன் இறுதியாக அவர் பேசியது செப்டம்பர் மாதம் 3ஆவது வாரம் அப்போது அவர் தனக்கு அதிக விரோதிகள் இருப்பதாக கூறினார் நான் அவரை மீண்டும் வர சொன்னேன் அல்லாவிடின் பொலிஸிலோ, இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்திற்கோ முறையிடுமாறு கூறினேன். திடீரென அழைப்பு துண்டிக்கப்பட்டது.' என அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.

இன் நாட்டில் அவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் இந்திய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் தமக்கு அதை தெரியப்படுத்தியதாகவும் தம்மிடம் தகவல்கள் பெறப்பட்தாகவும் இதுவரையும் தனது நண்பருடன் பேச கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தோமஸ் உடைய கடவுச்சீட்டு சில வருடங்களுக்கு முன்பே காணாமல் போயுள்ளதாகவும் 2 வருடங்களுக்கு முன்னர் புதிய அடையாள அட்டை ஒன்றை தயார் படுத்தி வைத்திருந்ததாகவும் அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.

இந்திய அதிகாரிகளும் தோமஸ்சை சந்திக்க மறுத்துள்ளதாகவும் தோமஸ்சின் புகைப்படம் ஒன்றை தமக்கு அனுப்பிவைக்குமாறு இன் நாட்டின் அதிகாரிகள் கேட்டதாகவும் அதன் படி தனது நண்பரா இல்லையா என சரியாக உறுதிப்படுத்திக்கொண்டதாகவும் அவரது நண்பர் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் அவருக்கு உடணடியாக சிகிச்சையளிக்கும் பொருட்டு அவரை விடுதலை செய்யுமாறு இன் நாட்டு அரசிற்கு அவரது நண்பர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more...

கொழும்பு சிறைச்சாலைகளின் பாதுகாப்பு விசேட அதிரடிப்படையினர் கையில்.

வெலிக்கட மற்றும் கொழும்பு விளக்கமறியல் மற்றும் மெகசின் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக இன்று (25) முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளை சுற்றி பாதுகாப்பு மற்றும் வௌியில் இருந்து வருவோரை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட உள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கூறியுள்ளது.

சிறைச்சாலைகளில் இடம்பெறுகின்ற பல்வேறு குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் பாகதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ள நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்தது.

அதன் முதல்கட்டமாக அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைத்துக் கொள்ளப்பட்டதுடன், அதற்கு சிறைக் கைதிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் எதிர்ப்பில் ஈடுபட்ட அங்குணுகொலபெலஸ்ஸ சிறைக்கைதிகள் 08 பேர் நேற்று முதல் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.

Read more...

ஹக்கீம் 800 பேருக்கு தொழில் வழங்கியதாலேயே குடிநீர் பாவனைக்கான கட்டணம் அதிகரிக்க வேண்டியுள்ளது. றிசார்ட்.

குடிநீர்ப்பாவனைக்கான கட்டணத்தை 65% - 100% வரை அதிகரிப்பதற்கான அமைச்சரவை அனுமதியை கோரி பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீம்.

அமைச்சரவையில் குறித்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள றிசார்ட் பதுயுதீன், நீர்ப்பாசனத் திணைக்களம் தற்போது நஷ்டமடைந்துள்ளதற்கான காரணம், குடிநீர் கட்டணத்தை அதிகரிக்காமை அல்லவென்றும் ரவூப் ஹக்கீம் தனது ஆதரவாளர்கள் பலருக்கு திணைக்களத்தில் வேலை வழங்கியுள்ளமையே என்றும் தெரிவித்துள்ளார்.

மேற்படி பணியில் சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக நீர்கட்டணத்தை அதிகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள றிசார்ட் அவ்வாறு மக்கள் மீது சுமையை சுமத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

றிசார்டின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள ஹக்கிம், 2010 ஆண்டிலிருந்து நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படாமையால், திணைக்களம் நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவித்துள்ளார்.


Read more...

யாழ் பல்கலைக்கழக்தில் பட்டப்படிப்பை தொடர புலம்பெயர் தமிழர்களுக்கு புதியதோர் வாய்ப்பு வருகின்றது. -பாறுக் ஷிஹான்-

புலம்பெயர் தமிழர்கள் யாழ்.பல்கலைக்கழகத்தில் B.A, M.A பட்டங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைத்ததோடு கனடா தமிழ் கல்லூரி முதன் முறையாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்வதற்கும் அவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கின்றார்கள் என உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத் தலைவர் விசு துரைராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று(24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் துரைராஜா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் தங்களுடைய அதாவது B.A, M.A வகுப்புகளை அங்கே எந்தெந்த நாடுகளில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ அந்தந்த நாடுகளில் இருந்து அடுத்த ஆண்டு ஆரம்பத்திலேயே யாழ்.பல்கலைக்கழகத்தின் சார்பாக B.A, M.A பட்டங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அத்தோடு கனடா தமிழ் கல்லூரி முதன் முறையாக யாழ். பல்கலைக்கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கின்றார்கள். எதிர்வரும் மாதம் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
குறிப்பாக நானும் இலங்கை கிளைத் தலைவர் செந்தில்வேல் அவர்களும் இரு நாட்களுக்கு முன்னதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் விக்னேஸ்வரன் அவர்களை சந்தித்தோம் இந்த சந்திப்பிலே கலைப்பீடாதிபதி தமிழ்த்துறைத் தலைவர் போன்றவர்களும் இருந்தார்கள்.

குறிப்பாக நாங்கள் ஒரு சில விடயங்களை துணைவேந்தருக்கு தெளிவுபடுத்தினோம். மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலே தமிழ்த்துறை இருக்கிறது இந்துநாகரிகத்துறை இருக்கிறது. பொருளியல்துறை இருக்கிறது. ஆனால் தமிழ்ப் பண்பாட்டுத்துறை இங்கில்லை.

உலகளவிலே தமிழ்ப் பண்பாட்டுக்கு ஒரு துறை இருப்பது அவசியம் என்பதை நாங்கள் துணைவேந்தருக்கு தெளிவுபடுத்தினோம். அதாவது மருகிப்போகின்ற தமிழ் பண்பாட்டு விழுமியங்களை எங்களுடைய தமிழர்களுக்கு தெரியப்படுத்தவும் அவர்கள் அதன் மீது இருக்கின்ற அந்த ஆர்வத்தையும் அந்த விருப்பத்தையும் அவர்கள் வளர்த்துக் கொள்ளவும். யாழ். பல்கலைக்கழகத்திலே தமிழ் பண்பாட்டியல்துறை என்கின்ற ஒரு துறையை உருவாக்கி அதற்கூடாக அருகிப்போயிருக்கின்ற தமிழ் பண்பாட்டு விழுமியங்களுக்கு ஒரு உருவம் கொடுத்து அந்த விழுமியங்களை வளர்த்தெடுக்கின்ற அந்தப் பணியை செய்வதற்கு யாழ். பல்கலைக்கழகம் ஓரளவு அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் தமிழர் என்ற அடையாளத்துடன் வாழவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகத் தான் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் தனது பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கிறது என்றார்.

Read more...

போதாவின் (தற்)கொலை மீதான சந்தேக கதவுகள் சற்று விரிகின்றது.

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் விரிவுரையாளர் போதனாவின் மரணம் தொடர்பான சர்ச்கைகளும சந்தேகங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யக்கூடிய சில கேள்விகளை தொடுத்துள்ளார் வன்னியில் செயற்படுகின்ற ஊடகவியலாளர் நிபோஜன்.

போதனா விடயத்தில் சந்தேகிக்கப்படும் அவரது கணவர் செந்தூனர் தெரிவித்த கருத்தொன்றை முதன்முதலாக வெளியிட்டு விமர்சனத்திற்குள்ளாகியிருந்தவர் நிபாஜன். ஆனால் தற்போது சில விடயங்களை நீண்ட பதிவாக, பலத்தகேள்விகளுடன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவு இவ்வாறு உள்ளது.

உங்கள் மனைவியின் இறப்பு ஈடுசெய்யப்பட முடியாத ஒன்று. அவரது மரணம் குறித்து உங்களுக்கே சந்தேகம் இருப்பதாக எனக்கு நீங்களே தெரிவித்து இருந்தீர்கள்.

உங்கள் மனைவியின் மரணம் குறித்து நீதி கிடைக்கவேண்டும் உண்மை நிலைநாட்டப் படவேண்டும் என்று ஒரு ஊடகவியலாளன் ஆக நான் மட்டுமல்ல பல ஊடகவியலாளர்கள் ,கல்வியியலாளர்கள், மனிதாபிமான செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் குரல் கொடுத்து வருவது யாவரும் அறிந்ததே.

ஆனால் உங்கள் மீது சந்தேகத்தை திருப்புவதற்கு நீங்களும் ஓர் காரணமாக இருந்துள்ளீர்கள் என்பதே எனது கருத்து. நீங்கள் மனநலம் சோர்ந்து இருந்தமையால் உங்களுக்கு வரும் தேவையற்ற அல்லது உங்களை மனவழுத்தங்களுக்கு உள்ளாக்கக் கூடியவாறு வருகின்ற கேள்விகளால் உங்கள் தொலைபேசியை நிறுத்தி வைத்திருக்கலாம். ஆனால் நீங்கள் ஏன் உங்களது முகநூலை இவ்வளவுகாலமும் முடக்கி வைத்திருந்தீர்கள்?

உங்கள் மீது ஊடகங்கள் தேவையற்ற குற்றச்சாட்டுகளை வைத்திருப்பதாக தெரிவித்திருந்தீர்கள். சில ஊடகங்கள் அவ்வாறு நடந்திருந்தால் அதற்கு நீங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும். ஆனாலும் உங்கள் மாமி அதாவது உங்கள் மனைவின் அம்மாவே உங்கள் மீது பல குற்றச் சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அவற்றை ஊடகங்கள் வெளியிட்டு இருந்தன. நீங்கள் ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கா விடினும் உங்கள் மாமியின் குற்றச் சாட்டுக்கு பதிலளிக்க வேண்டியவராக இருக்கின்றீர்கள்.

உங்கள் மனைவியின் மரண செய்தி கேட்டு இறந்தவர் வன்னியூர் செந்துரனின் மனைவி என்று நான் தெரிவிக்கும் வரை யாருக்கும் தெரியாது. உங்கள் மனைவி என அதன் பின்னர் என்னை அறிமுகம் செய்துகொண்டு முதன் முதலில் உங்களுடன் தொலைபேசியில் உரையாடியிருந்தேன்.

அதன் போது நீங்கள் அவர் கர்ப்பிணியாக இருப்பதனால் பதிவுகள் மாற்றப்பட வேண்டிய தேவை இருந்தது, கடந்த புதன் கிழமை எனக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பி இருந்தார், இரண்டு நாளும் நான் விடுமுறை எடுத்துக்கொண்டு வருகிறேன் எங்கள் பதிவுகளையும் மேற்கொண்டு எனது அம்மா வீட்டுக்கும் செல்வோம் என கூறினார்.

அதன் பின்னர் அவரது தொலைபேசி செயற்பட வில்லை, நான் நினைத்தேன் சில வேளை வேலைப்பளு எனில் அவரது அம்மா வீட்டுக்கு சென்றிருப்பார் என

பின்னர்தான் அவரது அம்மாவும் அங்கு வரவில்லை, காணவில்லை எனச் சொன்னார் ( இது நீங்கள் உங்கள் மனைவி மீது அக்கறை அற்றவர் என எனக்கு இக் கருத்து புலப்படுத்தியது )

என்பதனையும் எனக்கு சொல்லியிருந்தீர்கள் (நானும் நீங்களும் உரையாடியதற்கான ஆதாரம் என்னிடம் இல்லை ஆனால் தேவைப்படுமாயின் நீதிமன்ற அனுமதியுடன் இந்த தொலைபேசி உரையாடலை பெறலாம் என நினைகின்றேன் ) இச் செய்தி ஊடகங்களிலும் வந்திருந்தது.

ஆனால் நேற்றையதினம் நீங்கள் முகநூலில் பதிவிட்டிருக்கும் கானொளியில் இருபதாம் திகதி தன்னுடைய வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவரை, இருபத்தோராம் திகதி சடலமாகத்தான் நான் பார்த்தேன் என கூறியுள்ளீர்கள். இக் கருத்து முன் பின் முரணானதாக இருக்கின்றது.

அதுமட்டுமல்ல உங்கள் மனைவியின் இழப்பின்போது என்னை அறிமுகம் செய்து உங்களிடம் பேசும் போது, தெரிவாக பேசிய நீங்கள் இவ்விடயம் தொடர்பில் கதைத்தபோது உம்மை எனக்கு தெரியாது தனித்தனியாக பேச வேண்டிய அவசியம் இல்லை, ஊடக சந்திப்பை அனைத்து ஊடகங்களையும் அழைத்து ஏற்பாடு செய்யுங்கள் பதிலளிகின்றேன் என்றீர்கள்.

இந்நிலையில் நான் ஏற்பாடு செய்கின்றேன் நேரம் தாருங்கள் என்ற போது, நீங்கள் முதலில் ஏற்பாடு செய்யுங்கள், நீங்கள் கேட்கும் நேரத்துக்கு வரமுடியாது சொல்கிறேன் என்று கூறியவாறு தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டீர்கள். நீங்கள் செய்கின்ற ஊடக சந்திப்பை அறிவித்து பொது வெளியில் செய்யுங்கள். இது போன்ற சில கேள்விகள் என்னிடம் உண்டு. நீங்கள் உங்கள் ஊடக நண்பர்களை மட்டும் அழைத்து தனிப்பட ஊடக சந்திப்பை செய்ய மாட்டீர்கள் என நம்புகின்றேன்.

உங்கள் அன்பு மனைவிக்கு பாமாலைகளை சூட்டி மகிழ்ந்த நீங்கள், ஏன் உங்கள் ஆசை மனைவியின் இறுதிக்கிரிகையின் போதும் வவுனியா சிதம்பரபுரம் மயானத்தில் சமய முறைப்படி நீங்கள் தொட்டுக் கட்டிய தாலிகழட்டுதல் அடங்கலாக மனைவிக்கு செய்யவேண்டிய இறுதிக் கடமைகளை செய்யத் தவறியது ஏன் கணவனின் கடமையை தந்தை செய்ததனையாவது அறிவீரா

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் எவ்வாறு வேண்டும் என்றாலும் இருந்துவிட்டுப் போங்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எனக்கு தேவையில்லை. ஆனாலும் இந்தியாவில் நடைபெற்றதாக சொல்லப்படும் சம்பவமும் அப் புகைப்படமும் தொடர்பிலே பதிலளிக்க வேண்டும். அது உங்கள் மனைவியா அல்லது உங்கள் வெளிநாட்டு மோகத்திற்காக ஓர் பெண்ணை பயன்படுத்திக் கொண்டீர்களா தயவு செய்து தெளிவு படுத்துங்கள்.

உங்கள் நண்பரிடம் பேசினேன். நீங்கள் நல்லவர் என்பதனை ஆணித்தனமாக கூறினார். ஆனாலும் இவற்றுக்கெல்லாம் பதிலைத்தாருங்கள் இல்லை எனில் ஊடகசந்திப்புக்கு இவற்றுக்கு எல்லாம் பதில் இருந்தால் என்னையும் அழையுங்கள் சர்சைகளை தீருங்கள், உங்கள் மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீங்கள் கூறினீர்கள், வாருங்கள் உங்கள் மனைவியின் மரணத்த்ற்கு நீதிகிடைக்கும் வரை சேர்ந்து பயணிக்க தயாராக உள்ளேன்.

குறிப்பு உங்களை தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்ற சிந்தனை என்னிடம் இல்லை, உங்கள் மனைவியின் துயரச் சம்பவத்தின் பின்னரே முதன் முதலில் பேசியிருக்கின்றேன். தப்பட உங்களுடன் நட்புக் கூட இருக்கவில்லை.

ஒரு தடவையோ அல்லது இருதடவை எனது முகநூல் நண்பர்கள் உங்கள் கவிதைகளை பகிர்ந்த போது மட்டும் பார்த்திருக்கின்றேன். என்னிடம் இருப்பது உங்களின் சுயகௌரவத்திற்கோ மரியாதைக்கோ பங்கம் விளைவிப்பது அல்ல உங்கள் மனைவிக்கு நீதி கிடைக்க வேண்டும். பெண்ணின் நீதிக்கான பயணம் மட்டுமே.

Read more...

சிங்கள பௌத்த மக்கள் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போறாராம் மேர்வின் சில்வா.

சிங்கள பௌத்தர்களுக்காக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிட உள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற வீர துட்டுகெமுனு அமைப்பு ஆரம்ப நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்...

டி.எஸ். சேனாநாயக்கவின் கட்சியிலிருந்து விலகிய போது பண்டாரநாயக்க புதிய கட்சி அமைப்பது பற்றி முதலில் சிந்திக்கவில்லை. அது போன்றே நானும்.

இந்த நாட்டை கட்டியெழுப்பிய வீர துட்டுகெமுனு அரசனின் பெயரில் அமைப்பை நிறுவியுள்ளேன். மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் கடந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தற்போதைய அரசாங்கத்தின் அங்கத்தினர்களுக்கும் தொடர்பு உண்டு.

தற்பொழுது வழக்கும், களவாடப்பட்ட பொருளும் நீதவானுடையது என்ற நிலை காணப்படுகின்றது. மத்திய வங்கி பிணை முறி மோசடி என்ன?

வாகனங்களை இறக்குமதி செய்து பாரியளவில் பல பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1675 வாகனங்கள் தருவிக்கப்பட்டு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் ஒரு அமைச்சருக்கும் தொடர்பு உண்டு. மத்திய வங்கி பிணை முறி மோசடிகயை விடவும் இந்த வாகன இறக்குமதி மோசடி பெரிய தொகையாகும். துட்டுகெமுனு பிறந்த ஊரைச் சேர்ந்த அரசியல்வாதி நானாவேன்.

வட மத்திய மாகாணத்தின் குளங்களும், விஹாரைகளும் அழிவடைந்தால் அது எனக்கு வெட்கமான செயலாகும். இந்த வெட்கத்திலிருந்து மீளவும் மக்களுக்கு சேவையாற்றுவதற்கும் நான் வட மத்திய மாகாணத்தை தெரிவு செய்தேன்.

எதிர்வரும் காலங்களில் முதலமைச்சர் வேட்பாளராகவும் களமிறங்குவேன். ஜனாதிபதி தேர்தலின் போது சிங்கள பௌத்த மக்களின் சார்பில் தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ளேன்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு பாரிய மாற்றத்தை செய்ய எதிர்பார்க்கின்றேன். இந்த மாற்றம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தெளிவுபடுத்துவேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Read more...

Wednesday, October 24, 2018

வெடிபொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது!

மொரகொட, நபடவெவ பகுதியில் கைக்குண்டு ஒன்று மற்றும் வெடிபொருட்களை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அநுராதபுரம் விஷேட பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்களிடம் இருந்து 2 கைக்குண்டுகள், மின்சார டெடனேடர் 21, வோட்டர் ஜெல் 18, தோட்டக்கள் 17 மற்றும் 2 கத்திகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

மொரகொட, தலாவ பகுதியை சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவரும் 29 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் விஷேட பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

மஹிந்தவை பிரதம மந்திரியாக்க எவ்வேளையிலும் கூட்டு எதிர்கட்சியுடன் இணைவாராம் முத்து.

மகிந்த ராஜபக்ச பிரதம மந்திரியாவதை தான் முழு மனதுடன் விரும்புவதாகவும் அதற்காக கூட்டு எதிர்கட்சியுடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இணைந்து செயல்பட தயார் என்றும் துறைமுகம் மற்றும் கடல்துறைசார் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

காலியில் கடந்த 21ம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர் தொடர்ந்து கூறுகையில்:

அத்துடன் 2020 வரை ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன அவர்களே இருப்பார். அதனை எவராலும் மாற்ற முடியாது.

2015 தேர்தலில் கிடைத்த பலத்தை அநாவசிய முறையில் பயன்படுத்தி அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் செய்யும் இலஞ்சம் , ஊழல் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தின் பெயருக்கு அப கீர்த்தி ஏற்பட்டுள்ளது. இக் குற்றங்களை புரிந்தவர்களுக்கு முடியுமானால் பிரதமர் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களை தக்க வைப்பதற்காக பிரத்தியேக கொடுப்பனவுகள் மற்றும் வாகனங்கள் வழங்கவேண்டி ஏற்பட்டுள்ளது.

2020 ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன அவர்களே இருப்பார். இதன்போது வெற்றிடமாக நிலவும் பிரதம கதிரைக்கு நாட்டிற்கு பொருத்தமான தலைவர் ஒருவர் தேவை. அதற்கு உகந்தவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களே.

குமார வெல்கமவின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அவரது கருத்து முற்றிலும் உண்மையானது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் விலை சூத்திரம் இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும் ஒன்றாக உள்ளதாக முத்துஹெட்டிகம மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com