Friday, September 7, 2018

பெருந்தலைவனைக் கொன்ற அடுத்த நாட்டுக்காரரை விடுதலை செய்தால் அது தேசத்துரோகம். ஸ்ரான்லி ராஜன்

மறுபடியும் 7 தமிழர் விடுதலை என, களம் என சத்தம் வர ஆரம்பித்துவிட்டது. இதில் 7 தமிழர் என்பதே பெரும் தவறு, மூவர் இந்தியர் மற்ற நால்வர் இலங்கையர் என்பதே உண்மை. இதில் 4 பேரை கேட்க வேண்டியது இலங்கை அரசு, இந்தியர்களான தமிழகத்தினர் அந்நியநாட்டு குடிகமன் 4 பேரை விடுவி என சொல்வது உலகிலே எங்குமே இல்லாத அதிசயம், அப்பட்டமான தேச துரோகம்.

மீதி 3 இந்தியரும் என்ன தியாகிகளா? நளினி பேரரிவாளன் உட்பட்ட மூவரும் நிச்சயம் பெரும் குற்றவாளிகள். சந்தேகமில்லை பேரரிவாளன் என்பவன் யாழ்பாணத்திற்கே சென்று புலிகளை சந்தித்து பயிற்சி எல்லாம் எடுத்தவன், இந்திய ராணுவத்திற்கு எதிராய் இங்கே "சாத்தானின் படைகள்" என்ற புத்தகம் எல்லாம் அச்சிட்டவன்.

நளினி முதலில் விவரம் புரியாமல் சிக்கினாலும் காதலுக்காக, காதலுக்காக நாட்டின் தலைவனையே கொல்ல துணை போனவர். இவர்கள் எல்லாம் நீண்ட நாள் சிறையில் இருந்தார்கள் என்பதற்காக விட முடியாது, நடந்த சம்பவம் அவ்வளவு கொடூரமானது.

இந்நாட்டில் நடந்தது உலகை உலுக்கிய படுகொலைகளில் காந்தி, இந்திராவினை தொடர்ந்தது ராஜிவ் கொலை. காந்தி இந்திரா கொலையாளிகள் சம்பவ இடத்திலே பிடிபட்டதும் அவர்களை தூக்கில் இட்டதும் யாவரும் அறிந்தது

ஆனால் ராஜிவ் கொலை உலகிற்கே சவால்விட்டது, கொலையாளிகளான புலிகளே முடிந்தால் இந்தியா கண்டுபிடிக்கட்டும் என சவால் விட்டனர், லண்டனில் இருந்து கிட்டு அப்படித்தான் சொன்னான்.

ஆனால் மிக அழகாக, தைரியமாக குற்றவாளிகளை அடையாளம் காட்டி நின்றது இந்திய புலனாய்வு துறை. புலிகளின் சால்ஜாப்புகள் எல்லாம் கலைந்தது. இதில் 24 புலிகள் தேடுதலிலே சயனைடு கடித்தனர், சிவராசனும் தனுவும் தற்கொலை செய்தார்கள்.

பின் 26 பேருக்கு தூக்கு அறிவிக்கபட்டு பின் அவர்கள் விடுவிக்கபட்டு 7 பேருக்கு ஆயுள் என்றானது, இப்பொழுது அவர்களையும் விடுவிக்க வேண்டுமாம். நிச்சயம் கூடாது, அப்படி விடுவித்தால் மாபெரும் தவறான முன் உதாரணமாக அமையும்.

அப்துல் குரு, யகூப் மேமனை எல்லாம் தூக்கிலிட்ட இந்திய அரசு இந்த சண்டாளர்களை விட்டிருக்க கூடாது. கேட்டால் சோனியா மன்னித்தாராம், ராகுல் உருகினாராம். ஆனால் ராஜிவ் மட்டுமா செத்தார்? 16 பேர் செத்தனர், அங்கவீனமானவர்கள் ஏராளம்.

ராஜிவ் குடும்பம் அரசியலுக்காக சிலதை சொல்லலாம், மீதி 16 பேரின் குடும்ப உணர்வுகள் என்ன? அவர்களுக்கான நியாயம் என்ன?

சரி இந்த சண்டாளா நளினி, பேரரிவாளன் கும்பலாவது ஒரு இடத்தில் ஒரே ஒரு இடத்தில் இந்த புலிகளாலே நாங்கள் நாசமானோம் என சொன்னார்களா?

அழுது புலம்பி திரியும் பேரரிவாளனை பெற்ற மகராசி ஒரு இடத்திலாவது புலிகளால் என் குடும்பம் அழிந்தது என சொல்லி இருக்கின்றாரா?

இல்லை, நிச்சயம் இல்லை. அதாவது இன்னும் தங்கள் மீதான தவறை அவர்கள் ஒப்புகொள்ளவே இல்லை பின்னர் எப்படி விடுதலை பற்றி யோசிப்பது?

இவர்கள் துயரத்திற்கு முதல் பொறுப்பு சனியன் பிரபாகரன், ஆம் அவனே முதல் பொறுப்பு. ஒரு இடத்திலாவது அவர்கள் குற்றமற்றவர்கள், இயக்கம் அவர்களுக்கு கொலைதிட்டத்தை சொல்லவில்லை என்றால் எப்போதோ முடிவு வந்திருக்கும்.

ஆனால் அவனோ ஒருவார்த்தை சொல்லவிலை, ராஜிவ் கொலை ஒரு " துன்பியல் சம்பவம்" என சொல்லி நகர்ந்தானே தவிர இவர்களை பற்றிய கவலை இல்லை. (ஆனால் நளினி மகள் டாக்டர் ஆனாள், பேரரிவாள்ன் தாய்க்கு சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும் அளவு பணம் வருகின்றது எப்படி என்றெல்லாம் நாம் கேட்க கூடாது)

அவனை பொறுத்தவரை கிட்டு செத்தான், ஹரிபாபு செத்தான், தனு செத்தாள், சிவராசன் செத்தான் அப்படியே இவர்களும் செத்து தொலையவேண்டும் , இயக்க விதி என்பது அதுதான். அது சயனைடு கடித்து செத்தால் என்ன? தூக்கில் தொங்கினால் என்ன? புலி என்றால் சாகவேண்டும். ஆக அவனை பொறுத்தவரை இவர்கள் சாக வேண்டும் ஆனால் காத்து நிற்பது இந்தியா.

இவர்களை தூக்கில்தான் போட வேண்டும், இல்லாவிட்டால் என்ன செய்யலாம்? அமெரிக்காவில் இரட்டை கோபுர தகர்ப்பில் சிக்கிய தீவிரவாதிகளுக்கு 200 ஆண்டுகால ஆயுள் விதித்து குவாண்டமாவோ தீவு சிறையில் வைத்தது போல் வைக்கலாம்.

ஆம், அமெரிக்காவில் நடந்த மாபெரும் அழிவு அது என்றால், ராஜிவ் கொலை இந்திய ஆன்மாவில் விழுந்த அடி. அதற்காக இவர்களை விடுவிக்காமல் வாழ்நாள் சிறையில் வைப்பதுதான் சரி, இல்லாவிட்டால் சட்டத்தை திருத்தி தூக்கிலும் இடலாம் ஒன்றும் தவறில்லை. நடந்த கொடூரம் அப்படி

வஞ்சகமாக வலைவிரித்து ராஜிவினை கொடூரமாக கொல்லும் திட்டத்தில் பங்கெடுத்து அதை நிறைவேற்ற உதவியர்கள் இவர்கள். பல இடங்களில் தெரிந்தே உதவியிருகின்றார்கள், பேரரிவாளன் சிவராசனின் சதிதிட்டம் இலங்கைக்கு வயர்லெஸில் விவாதிக்கபடும் பொழுதெல்லாம் பேட்டரி முதல் சகல விஷயங்களில் உதவி இருக்கின்றார்.

அதிலும் சாந்தனும், நளினியும் அவர் கொல்லபடும் வரை அருகிருந்தே பார்த்தவர்கள் என்றால் எவ்வளவு கொடூர மனம்? இப்பொழுது நடந்திருக்கும் நல்ல விஷயம் என்னவென்றால் திமுக ஆளும் கட்சியாக இல்லை, இருந்திருந்தால் இப்பொழுது 7 தமிழர் விடுதலை என நாடகம் ஆடுவார்கள்.

நமக்கு திமுகவினை பற்றி நன்றாய் தெரியும், நிச்சயம் அவர்கள் 7 பேரையும் விடுவிக்கவே பார்ப்பார்கள் அதுவும் பாஜக டெல்லியில் இருக்கும்பொழுது அது தீவிரமாக முயற்சிக்கபடும். காரணம் 7 பேரை விடுவித்தால் வடக்கே பெரும் கலவரம் வெடிக்கும், பாஜக அரசுக்கு சிக்கலாகும் என்ற அரசியல் கணக்கு தமிழக வாக்கு கணக்கு இன்னபிற‌.

கலைஞரே ராஜிவ் கொலையில் திமுக சிக்கிய பொழுது 1990க்கு முன்பிருந்தே இந்திரா காலத்தில் இருந்தே புலிகளோடு தொடர்புடையவர்களை விசாரிக்க வேண்டும் என சொல்லி பார்த்தார். 1987ல் இந்திய ராணுவத்தை புலிகள் கொல்ல தொடங்கிய காலத்தின் பின்னரான நிலையினைத்தான் பார்க்க வேண்டும், பத்மநாபா கொலையாளி எப்படி தப்பினான்? யார் உதவினார் என கேட்ட பின்பு கலைஞர் அமைதியானார்.

ராஜிவ் கொலை எனும் மீறமுடியாத கயிறு அவரை கட்டிபோட்டதே அன்றி இல்லாவிட்டால் திமுகவின் ஈழ அழிச்சாட்டியம் எங்கோ போயிருக்கும். இப்பொழுது பாஜகவினை எதிர்த்து தமிழ் அரசியல் செய்யவேண்டிய நேரத்தில் இந்த 7 பேர் விடுதலை எல்லாம் திமுக சும்மா விடாது. திமுக சுபாவம் அப்படி.

நல்ல வேளையாக அவர்கள் பதவியில் இல்லை என்பதால் ஆறுதல். பெரும் ஆறுதல்.

இந்த 3 இந்தியரையும் , 4 இலங்கையர்களையும் விட முடியாது. அதுவும் எல்லை தாண்டிவந்து பெரும் கொலை செய்த அந்த 4 பேரையும் இத்தேசம் மன்னிக்காது. முடிந்தால் இவர்களை தூக்கில் இடலாம், இல்லை 200 ஆண்டுகால சிறை என அமெரிக்க பாணியில் நிர்ந்தரமாக வைக்கலாம்.

அதுவே மாபெரும் முன்னுதாரணமாகவும் , தண்டனையாகவும் அமையும். பழனிச்சாமி அரசு அதை செய்யட்டும், நிச்சயம் அவர்களுக்கு அடுத்த தேர்தல், வோட்டு வங்கி இன்னபிற இம்சைகள் இல்லை. அதனால் துணிந்து செய்யட்டும், இந்த மாநிலத்தின் நாட்டுபற்று மிக்கோர் நிச்சயம் அவருக்கு ஆதரவு கொடுப்பர்.

மிஸ்டர் பழனிச்சாமி , அடுத்த நாட்டில் இருந்து வந்து இங்கு பெரும் தலைவனை கொன்ற 4 அடுத்தநாட்டு குடிமக்களை விடுவிக்க துணைபோனால், அவர்களுக்கு உதவிய உள்நாட்டினர் 3 பேரை விடுவிக்க‌ நீர் ஏற்ற ரகசிய காப்பு பிரமாணத்திற்கு என்ன அர்த்தம்?

மேன்மைதங்கிய ஆளுநரே, அடுத்த நாட்டு குடிமக்கள் இந்நாட்டில் வந்து செய்த பெருங்கொலைக்கு விடுதலை அளித்து அவர்களை விடுவிக்க பரிந்துரை செய்வீரா? செய்தால் அது தேசவிரோதம் ஆகாதா?

அதிகார வர்க்கம் இந்நாட்டு தலைவரை கொன்ற அடுத்தநாட்டுகாரனை விடுவித்து டாட்டா காட்டினால் அதைவிட பெரும் மானகேடு இத்தேசத்திற்கு உண்டா?

இத்தேசம் தன் கவுரவத்தை நிலைநாட்ட இந்த சண்டாளர்களை விடவே கூடாது என்பதுதான் நாட்டுபற்றுள்ளோரின் உருக்கமான கோரிக்கை

Read more...

Thursday, September 6, 2018

நீதிமன்றில் பரபரப்பு தகவல் தெரிவித்த இளைஞர் மட்டு சிறைச்சாலையில் உண்ணா விரதம்.

காத்தான்குடி முஸ்லிம்களிடம் 66 ஏகே 47 ரக ஆயுதங்கள் இருப்பதாகவும் அவை யாரிடம், அவற்றின் இலக்கங்கள் என்ன என்ற சகல விடயங்களும் தனக்கு தெரியும் எனவும் குற்றவாளிக்கூண்டில் நின்றவாறு பரபரப்புத்தகவல் தெரிவித்த நபர் கடந்த நான்கு நாட்களாக மட்டு சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

கடந்த 08.06.2018 அன்று காத்தான்குடி பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றின் உரிமையாளரான பலணிபாவா என அழைக்கப்படும் 73 வயதுடைய ஆதம்பாவா முகம்மட் இஸ்மாயில் எனும் முதியவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மூவரை சந்தேகத்தின்பேரில் கைது செய்து கடந்த 11.06.2018 அன்று நீதிமன்றில் ஆஜர் செய்தபோது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் எம். கணேசராஜா உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 16.08.2018 அன்று நீதிவான் றிஸ்;வி முன்னிலையில் சந்தேகநபர்களை சிறைக்காவலர்கள் ஆஜர்படுத்தியோது, குற்றவாளிக்கூண்டில் நின்றவாறு கையை உயர்த்திய சந்தேகநபரான ரவீந்திரன் குகன் (வயது 38) , தன்னை போலிக்குற்றச்சாட்டில் கைது செய்துள்ளார்கள் என்றும் குறித்த கொலையை செய்தவர்கள் யார் என்பது தனக்கு தெரியும் என்றும் திறந்த நீதிமன்றில் தெரிவித்துள்ளதுடன் காத்தான்குடியில் ஆயுதங்களை வைத்துள்ள 66 நபர்களின் விபரங்களும் அவ்வாயுதங்களின் இலங்கங்களும் தனக்கு தெரியும் என்றும கூறியுள்ளார்.

தான் நீதிமன்றில் தெரிவித்த விடயங்கள் தொடர்பில் நீதிபதி றிஸ்வி அவர்கள் நடவடிக்கை எடுக்காமை தொடர்ந்தே தான் இவ்விடயங்களை நீதியமைச்சு , சட்ட மா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தும் நோக்கில் உண்ணா விரதத்தினை மேற்கொண்டுவருவதாக தெரிவித்து வருகின்றார் என மட்டக்களப்பு சிறையில் விளக்கமறியலிலிருந்து வெளியேறிய காத்தான்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர் இலங்கைநெட் ற்கு தெரிவித்தார்.

உண்ணவிரதமிருக்கும் நபர் குறிந்த வயோதிபரின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை தனக்கு நன்றாக தெரியும் என்றும் பா.உ ஹிஸ்புல்லாவும் காத்தான்குடி நகர சபைத்தலைவரும் நேரடியாக தொடர்புபட்டிருப்பதாகவும் கூறிவருகின்றார் எனவும் தெரியவருகின்றது.

மட்டக்களப்பு, நாவலடிப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபரான ரவீந்திரன் குகன் 2004ம் ஆண்டுவரை புலிகளமைப்பிலிருந்தவர் என்பதுடன் இஸ்லாம் மதத்தை தழுவி காத்தான்குடி பெண்ணொருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் அவர் காத்தான்குடியில் ஹிஸ்புல்லாவின் தீவிர ஆதரவாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

Read more...

நீதிமன்றை அவமதித்த நீதியரசர்! ஏறுகின்றார் நாளை குற்றவாளிக்கூண்டில்.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு குழுவொன்றை அமைத்திருந்ததுடன், அந்த குழுவில் அவரும் ஒரு உறுப்பினராக இருந்தார்.

குறித்த குழுவானது வட மாகாண அமைச்சர்களில் சிலரை மோசடிக்காரர்களென இனம்கண்டதுடன் அவர்களை பதவி நீக்கம் செய்யுமாறும் பரிந்துரைத்திருந்தது. ஆனால் குற்றஞ்சாட்டப்படாத அமைச்சர்கள் சிலரும் விக்கினேஸ்வரனால் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

விக்கினேஸ்வரன் குற்றமற்ரோரை பதவி நீக்கம் செய்தமை சட்டத்திற்கு முரணானது என மாகாண அமைச்சர்களில் ஒருவரான டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்தார். டெனீஸ்வரன் வழக்கை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்று அவர் தொடர்ந்து அமைச்சராக செயற்படலாம் என தீர்ப்பளித்திருந்தது யாவரும் அறிந்த விடயம்.

குறித்த நீதிமன்ற தீர்ப்பினை செயற்படுத்தாது தட்டிக்கழித்துவந்தார் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன். அத்துடன் காலத்தை கடத்தும் நோக்கில் அத்தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடும் செய்திருந்தார். இந்நிலையில் டெனீஸ்வரன் நீதிமன்ற திர்ப்பை முன்னாள் நீதியரசர் நிறைவேற்ற தவறியதன் ஊடாக நீதிமன்றை அவமதித்துள்ளார் என வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்றை அவமதித்தமை தொடர்பில் நாளை குற்றவாளிக்கூண்டில் ஏறுகின்றார் முன்னாள் நீதியரசர் விக்கினேசுவரன். விக்கினேசுவரனுடன் சேர்த்து இரு மாகாண அமைச்சர்களான பவான் எனப்படுகின்ற சிவநேசன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோருக்கும் நீதிமன்று அழைப்பாணை விடுத்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினமிரவு அனந்தி சசிதரனுக்கு இரத்த அழுத்தம் அதிகரித்து விட்டதாம் என அவர் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இவ்வாறு அனுமதிக்கப்பட்டமை நீதிமன்றை ஏமாற்றுவதற்காகவே என இலங்கைநெட் சந்தேகிக்கின்றது.

நேற்று விக்கினேசுவரனின் மூஞ்சையில் குற்றிய மேன்முறையீட்டு நீதிமன்று.

விக்கினேசுவரனால் குறித்த தீர்ப்புக்கு எதிராக செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு எதிர்வரும் 28ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமது தரப்பு நியாயங்களை முன்வைக்காத விக்கினேசுவரனின் வக்கீல்கள் , தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளமையால் தீர்ப்பை நிறைவேற்றாது நீதிமன்றை அவமதித்தார் முன்னாள் நீதியரசர் என தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை இடைநிறுத்துமாறு மனத்தாக்கல் செய்தனர். குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதன் நோக்கமே மாகாண சபையின் காலம்முடியும் வரை தீர்ப்பை நிறைவேற்றாது கடத்துவதாகவே இருக்கக்கூடும் என்பதை உணர்ந்திருக்கக்கூடிய நீதிபதிகள் „நீதிமன்றை அவமதித்த வழக்கை இடைநிறுத்த முடியாது' என தீர்ப்பளித்துள்ளனர்.

Read more...

Wednesday, September 5, 2018

இஸ்லாத்திற்கு மதம் மாறக்கோரி தமிழ் குடும்பத்தின் வீடு தீக்கிரை! மூன்று மாதக்குளந்தை மயிரிழையில் உயிர் தப்பியது.

அம்பாறை மாவட்டத்தின் வளத்தாப்பிட்டி கிராமத்தில் உள்ள ஸ்மையில்புரம் சுனாமி வீட்டு திட்டத்தில் வசித்து வரும் சோதிநாதன் சந்திரசேகர் என்ற தமிழ் குடும்பம் ஒன்றை இஸ்லாம் மதத்திற்கு வருமாறு அச்சுறுத்தி அவர்களது வீடு மற்றும் முச்சக்கர வண்டிக்கு தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (31) அதிகாலை அம்பாறை வளத்தாப்பிட்டி ஸ்மையில்புரத்தில் உள்ள சோதிநாதன் சந்திரசேகர் வீட்டிற்கு வந்த இனந்தெரியாத குழு ஒன்று தங்களது வீட்டுக்கு தீவைத்து கொழுத்தியதாகவும் இதன்போது வீட்டில் இருந்த முச்சக்கர வண்டி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தின் போது தக்கசமயத்தில் தாங்கள் விழித்துக் கொள்ளாது இருந்திருந்தால் தங்களது மூன்று மாத குழந்தை உட்பட அனைவரும் தீயில் எரிந்து இறந்திருப்போம் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்.

சம்பவத்திற்கான பின்னணி!

மட்டக்களப்பு கரடியணாறு பகுதியைச் சேர்ந்த சோதிநாதன் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவியான வினோஜினி மற்றும் அவரது மூன்றுமாதக் குழந்தை என குடும்பமாக தனிமையில் வசித்து வந்த குடும்பம். தங்களது தொழில் நிமிர்த்தம் கடந்த ஐந்து வருடங்களாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள வளத்தாப்பிட்டி பகுதியில் உள்ள ஸ்மையில்புரத்தில் வசித்து வந்துள்ளனர்.

குறித்த கிராமம் சுனாமிக்கு பின்னர் உருவாகிய கிராமம் என்பதுடன் அது தற்போது ஸ்மையில் புரம் என்ற பெயருடன் முழு முஸ்லீம் கிராமமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு ஒரு சில தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்த கிராமத்தில் வசிப்பதாக இருந்தால் நீங்களும் முஸ்லீமாக இருக்க வேண்டும் என்று அங்குள்ள இஸ்லாமிய மதவாதிகள் இவர்களை அச்சுறுத்தி வந்த நிலையில் பல தடவைகள் சில நபர்களுடன் கைகலப்பு நடைபெற்று பொலீசில் முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியின் ஊடாக அதிக வருமானத்தை பெற்றுவந்த குறித்த குடும்பம் ஸ்மையில்புரத்தில் உள்ள இஸ்லாமியர்களினால் பல தடவைகள் இஸ்லாம் மதத்திற்கு மாறுமாறு வற்புறுத்தப் பட்டுள்ளனர். இந்நிலையிலேயே அந்த தீ வைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இஸ்லாம் மதத்திற்கு மாறிய 9 பேர்!

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருடைய மனைவியின் குடும்பத்தில் இருந்த 09 பேர் இது வரை இஸ்லாம் மதத்திற்கு சென்றுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் மட்டக்களப்பு நெல்லிக்காடு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

இவர்களும் தொழில் நிமிர்த்தமாக அம்பாறை வளத்தாப்பட்டி கிராமத்திற்கு சென்று வந்த போது சம்மாந்துறையைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரின் ஊடாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பல குடும்பங்களை பணம் மற்றும் ஏனைய உதவிகளை வழங்கி இஸ்லாம் மதத்திற்கு இணைத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.

கண்டுகொள்ளாத பொலிசார்!

வீடு மற்றும் முச்சக்கர வண்டிக்கு தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சம்மாந்துரை பொலீசில் முறைப்பாடு செய்தும். குறித்த சம்பவம் தொடர்பாக பெரிதாக அலட்டிக் கொள்ளாத பொலிசார், ஒரு குடும்பத்தின் கொலை முயற்சியை சிவில் முறைப்பாடாக பதிவு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை!

வளத்தாப்பட்டி ஸ்மையில்புரத்தில் உள்ள சில இஸ்லாமிய மதவாத குழுக்கள் தங்களது குடும்பத்தை கொலை செய்ய முயற்சி செய்வதாகவும், தங்களது மதத்தை விட்டு இஸ்லாம் மதத்திற்கு நாங்கள் மாற முடியாது எனவும் தாங்கள் தங்களது வீட்டில் வைத்து வணங்கிய இந்து கடவுள்களை எடுத்துக் கொண்டு கரடியணாறு பகுதிக்கு வந்துள்ளதாகவும் இனிமேல் அங்கு சென்றால் தங்களுக்கு எதுவும் நடக்கலாம் என்பதால் இந்த அரசாங்கம் தங்களுக்கான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

இலங்கையிலே திட்டமிட்ட மதமாற்றங்கள் சமூகங்களிடையே விரிசலை ஏற்படுத்தி வருவதுடன் இது நாளடைவில் பாரிய வன்முறைகளுக்கு வழிகோலும் என்பது கவலைக்குரியவிடமாகும்.








Read more...

Tuesday, September 4, 2018

போதைப்பொருளுக்கென தனி நீதிமன்று அமைக்க கோரப்போகிறாராம் ரெஜிநோல்ட் கூரே!

போதைப் பொருள் வியாபாரிகளுக்கான தண்டணை வழங்குவதற்காக விசேட நீதிமன்றம் ஒன்றினை அமைப்பதற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

நிதி மோசடிகளை விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ள நீதிமன்றினை போன்று போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாக தண்டணை வழங்கக் கூடிய வகையிலான விசேட உயர் நீதிமன்றம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் வன்முறைகளை கட்டுப்படுத்துதல், மாணவர்கள் மத்தியில் போதைவஸ்து புளங்குவதை தடைசெய்தல் சம்பந்தமாகவும் சட்டவிரோத மணல் வியாபாரம் உள்ளிட்ட சமூக சீரழிவுகளை கட்டுப்படுத்துதல் போன்றவை தொடர்பாகவும் யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (04.09.2018) முற்பகல் 10 மணியளவில் கூட்டம் நடைபெற்றது. இங்கு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை பாடசாலை அதிபர்களுடனும் சர்வமதத் தலைவர்களுனும், பேராசிரியர்களுடனும் கலந்துரையாடினேன். யாழ் குடாநாட்டில் மாணவர்கள் பணத்திற்காக போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாகவும் அதற்காக 9ம் 10ம் வகுப்பு மாணவர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டது. பாடசாலையில் கல்வி பயின்ற பழைய மாணவர்கள் இந்த போதை பழகத்தினை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதாவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக தெல்லிப்பளை அளவெட்டி மாதகல் வட்டுக்கோட்டைப் பகுதிகளில் இவ்வாறான பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பாடசாலை மற்றும் தனியார் வகுப்புக்கள் முடிவடையும்போது மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் குழு பெண் மாணவிகளை பின்தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும். பஸ் தரிப்பிடங்களிலும் இவர்கள் தொந்தரவு கொடுப்பதகாவும் தெரிவிக்கப்பட்டது.

தந்தை மற்றும் தாய் ஆகியோர் வேறு ஒரு திருமணத்தினை முடித்து செல்வதனால் பிள்ளைகள் தனிமை ஆகின்றனர். அவர்களினல் பலர் இந்த போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவது இனங்காணப்பட்டிருக்கின்றது.

இவ்வாறான பிரச்சினைகளை தடுப்பதற்கு சமூக மட்டத்திலும் கிராம மட்டத்திலும் பெற்றோர்களினதும் சமூக நலன்விரும்பிகளினதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது. பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினருடன் சமூக அக்கறை கொண்டோர் இணைந்து செயற்படுவதன் ஊடாகவே இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பெற்றோர்கள் பாடசாலை அதிபர் ஆசிரியர்களுடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருப்பதன் ஊடாக பிள்ளைகள் தவறான பாதையில் பயணிப்பதனை இலகுவில் அடையாளங்கண்டு கொள்ள முடியும். அவர்களை நல்வளிப்படுத்த முடியும் இதற்காக அனைவரினம் ஒத்துழைப்பு அவசியமாகின்றது என குறிப்பிட்டார்;.

தகவல் கிடைக்கின்றபோதும் விரைந்து செயற்படுவதில் பொலிஸாருக்கு பல்வேறு நெருக்கடிகள் உள்ளதாக தெரிவித்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜெயசுந்தர விரைந்து செல்வதற்கு உரிய போதிய வாகனவசதிகள் இல்லாது இருப்பதாக தெரிவித்தார்.

இருந்தபோதும் இயலுமானவரையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பாடசாலை ஆரம்பிக்கும்போதும் முடியும்போது போக்குவரத்து பொலிஸார் பாடசாலைக்கு அருகாமையில் கடமை புரிகின்றனர். யாழ் ஐந்து சந்தி, மன்னார் பேசாலை, அராலி போன்ற பல பகுதிகளில் கேரள கஞ்சா கரோயின்போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.

கொடிகாமம், மண்கும்பான், போன்ற பகுதிகளில் களவாக மண் அகழ்வு செய்யப்படுகின்றது. ஆயினும் அதனை கொண்டு செல்பவர்கள் அனைத்து சந்திகளிலும் தமது தரப்பினரை தகவல் வழங்குவதற்காக நிறுத்திவிட்டு பாதுகாப்பாக பயணிக்கின்றனர். பொலிஸார் செல்லும் போது அவர்கள் அதிலிருந்து அகன்று சென்றுவிடுகின்றனர் என்றும் குறிப்பிட்டாhர்.

இக்கூட்டத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னான்டோ, பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜெயசூரிய, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் 1 ஏச்.டி.எஸ்.துசித ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன், உதவிச் செயலர் ஏ.எக்ஸ் செல்வநாயகம் மற்றும் பிரதேச செயலர்கள் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



Read more...

மக்களின் எதிரிகள் ஆட்சியாளர்களே! அனுர குமார திசாநாயக

மக்கள் விடுதலை முன்னணியானது நாட்டை காக்கும் நாட்டை கட்டி எழுப்பும் மக்கள் நல ஆட்சி என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் நடாத்திவரும் மக்கள் சந்திப்பு நேற்று (03) மல்லாவி அணிச்சியங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக, நாங்கள் இன்று உங்கள் முன் வந்திருப்பது எமது நாடு இன்று முகம்கொடுத்துவரும் நெருக்கடிகள் தொடர்பிலும் இவற்றிலிருந்து எவ்வாறு இந்த நாட்டை மீட்டெடுப்பது என்பது தொடர்பில் உங்களுடன் கலந்துரையாடவே ஆகும்.

ஆங்கிலேயர் எமது நாட்டை விட்டு சென்றதிலிருந்து கிட்டத்தட்ட 7௦ ஆண்டுகளாக ஒவ்வொரு அரசாங்கங்களை அமைத்திருக்கின்றோம், விரட்டியிருக்கிறோம் எமது நாட்டு மக்கள் அரசாங்கத்தை அமைக்கவும் அவர்களை விரட்டவும் மீண்டும் அரசாங்கத்தை அமைக்கவும் மக்கள் அணி திரண்டிருக்கின்றனர்.

ஏன் மக்கள் இந்த அரசாங்கங்களை அமைக்கின்றனர். எமது அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆனாலும் எழுவது ஆண்டுகள் அரசாங்கத்தை அமைத்தாலும் அரசாங்கத்தை கலைத்தாலும் அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்கினாலும் எழுவது ஆண்டுகளாக எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை.

ஒரு மனிதனாக வாழ்வதற்கு பல அடிப்படை தேவைகள் உள்ளன. எமக்கு ஒரு வருமானம் வேண்டும் பிள்ளைகளுக்கு கல்வி வசதி வேண்டும். இருப்பதற்கு ஒரு வீட்டு வசதி வேணும் நல்ல சுகாதார வசதிகள் வேண்டும். நல்ல போக்குவரத்து வசதிகள் வேண்டும். குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் வேண்டும்.

ஆனால் இந்த ஆட்சியாளர்கள் இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வரவில்லை, இன்று எமது நாட்டிலே மக்கள் பல்வேறு பிரச்சனைகலுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

அவர்களுக்கு சிறந்த ஒரு வருமான வழி இல்லை. இன்று இந்த கிராமப்புற மக்களை வாட்டும் பிரதான பிரச்சினைதான் இந்த கடன் பிரச்சினை, எல்லா இடங்களிலும் இந்த கடன்களை பெற்றவர்கள் இருக்கின்றனர். இந்த மாகாணத்தை பொறுத்தவரை இங்குள்ளவர்களில் பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுகிறது ஆனால் அதற்க்கான வசதிகள் உள்ளதா?

உங்களுக்கு விவசாயம் செய்ய நல்ல விதை நெல் கிடைக்கிறதா? விவசாயம் செய்ய இடம்? அதற்க்கான நீர் வசதி? அந்த விளைபொருட்களை விற்றுக்கொள்ள சந்தை வாய்ப்பு? எனவே உங்களது பிரதானமான வருமான வழி விவசாய துறை எனில் அதனை அபிவிருத்தி செய்யாது உங்களது வருமானத்தை உயரத்த முடியாது. 7௦ வருடங்கள் கடந்த பின்பு திரும்பி பார்த்தால் மிகவும் வறுமையில் வாழ்வது எமது விவசாயிகள் எனவே எமக்கு இந்த கிராம மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த ஒரு ஆட்சிமுறை வேண்டும்

எமது நாட்டின் பிள்ளைகளின் கல்வித்துறைக்கு என்ன நடந்திருக்கிறது நாங்கள் நகரமா அல்லது சிங்களமா தமிழா அல்லது பணம் இருக்கிறதா இல்லையா அல்லது படித்தவர்களா இல்லையா இந்த வேற்றுமைகளை ஒழித்து கட்டி அல்லது இல்லாதொழித்து பிள்ளைகளுக்கு கற்பிப்பதற்க்கு முயற்சிக்குறோம்.

ஆனால் இன்று பாடசாலைகளில் என்ன நிலை பாடசாலைகளில் போதிய கட்டிடங்கள் இல்லை அல்லது தளபாடங்கள் இல்லை அல்லது உரிய ஆசிரியர்கள் இல்லை எந்த அடிப்படை வசதிகளும் இல்லை நாங்கள் எவ்வளவு எதிர்பாப்புக்களை வைத்துக்கொண்டு பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பினாலும் பிள்ளைகள் திறமான பெறுபேறுகளை பெறுவதில்லை எமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க முடியாத அரசாங்கங்கள் எங்களுக்கு தேவையா?

எங்களுக்கு ஒரு சிறந்த வீட்டு வசதி உள்ளதா அரசாங்கத்தின் தரவுகளை கூறுகிறேன் எமது நாட்டில் வீடுகள் அற்ற இரண்டரை இலட்சம் குடும்பங்கள் உள்ளனர். சிலருக்கு வீடுகள் உள்ளது ஆனால், அது வீடுகளே இல்லை எமது நாட்டில் வீடுகளில் சுமார் பத்து வீதம் 15 ற்கு 15 அளவிலேயே உள்ளது. அதை நாங்கள் வீடாக கருத முடியாது குறிப்பாக கடந்த யுத்த காலப்பகுதியிலே இந்த பகுதிகளிலே வாழ்கின்ற மக்களுடைய பல வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன இன்னுமே இந்த அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கிறது. இந்த மக்களில் வீடில்லா பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஏன் நாங்கள் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் அடிப்படை பிரச்சினைகளை கூட தீர்க்க முடியவில்லை.

எமக்கு சிறந்த சுகாதார வசதி இருக்கிறதா? இன்று கிராமப்புற மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர் சிறுநீரக நோய்கள் பல்வேறு வகையான தொற்றா நோய்கள் என அவதிப்படுகின்றனர் எமக்கு ஒரு சிறந்த சுகாதாரமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க இந்த ஆட்சியாளர்களுக்கு முடியவில்லை

எமது பிள்ளைகளுக்கு சிறந்ததொரு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுக்க முடியவில்லை பெரும்பாலான இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

இன்று எந்த பகுதியிலே என்ன வேலைவாய்ப்பு இருக்கிறது கொழும்பிலே கடைகளிலே அல்லது கட்டிட வேலைகளில் கொங்கிரீட் வேலைகளில் அல்லது பாதை வேலைகளில் எனவே சிறந்த ஒரு தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியாத அரசாங்கமாக தான் இருக்கின்றனர்.

வடக்கிலும் அப்பிடித்தான் தெற்கிலும் அப்பிடித்தான் சிங்கள், தமிழ், முஸ்லிம் என்ற வேற்றுமைகளை கடந்து அடிமட்டத்திலுள்ள மக்கள் இந்த பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகிறோம்.

இதிலிருந்து நாம் விடுபட வேண்டாமா நாம் கஷ்டப்படும் இந்த நிலையை எமது பிள்ளைகளுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டுமா எமக்கு ஒரு பாரிய பொறுப்பு இருக்கிறது. இன்று நாங்கள் படும் கஷ்டத்தை எமது பிள்ளைகள் அனுபவிக்காதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது யார்? அரசியல் வாதிகள் தான் எனவே எதற்கு தீர்வாகவும் நாம் இதையே பாவிக்க வேண்டும் இதற்க்கு எப்பிடி தீர்வு காண்பது இதற்காக நாம் என்ன செய்யபோகிறோம்.

சிங்கள மக்களில் இருந்து தமிழ் மக்களை பிரிக்கும் போராட்டமா தெற்கிலிருந்து வடக்கை பிரிக்கும் போராட்டமா அல்லது முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டமா என்ற போராட்டம் அல்ல தமிழ் சிங்கள முஸ்லிம் என்ற வேற்றுமைகளை கடந்து விவசாயிகள் இந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

மீனவ மக்கள் இந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். வடக்கு தெற்கு என்ற பேதங்களுக்கு அப்பால் எமது பிள்ளைகளுக்கு நாங்கள் கல்வியுரிமையை வழங்க வடக்கு தெற்கு என்ற பேதங்களுக்கு அப்பால் வைத்தியசாலைகளை நிர்மாணிக்க வேண்டும். இது வடக்கிற்கும் தெற்கிற்கும் உள்ள பிரச்சினை அல்ல சிங்களவர்களுக்கு எதிரான தமிழர்களின் போராட்டம் அல்ல தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்களது போராட்டமல்ல எமக்கு என்ன தேவை 7௦ ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களுக்கு எதிராக சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற வேற்றுமை இன்றி ஒன்றாக இணைந்து போராடவேண்டிய தேவை உள்ளது.

எங்களுடைய அனைத்து மக்களுடைய எதிரிகள் யார் சிங்களவர்களுடைய எதிரியாக தமிழர்களும் தமிழர்களுடைய எதிரியாக சிங்களவர்களையும் குறிப்பிட முடியாது. எமது எதிரிகள் இதுவரை காலமும் எமது நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள். அவர்களுக்கிடையே ஒருபோதும் பிரிவினை இருக்கவில்லை அவர்கள் ஒன்றாக சிறப்பாக இருந்தார்கள். எமது நாட்டு மக்களுடைய பணத்தை களவாடுகின்றனர் இவர்களுக்கு எப்போதும் வீட்டு பிரச்சினை இல்லை அவர்களுக்கு கொழும்பில் ஒரு வீடு வேறு இடங்களில் வீடு குளிர் பிரதேசமான நுவரெலியாவில ஒரு வீடு அதேபோன்று வெளிநாடுகளிலும் வீடு உண்டு.

அவர்களுக்கு ஒருநாளும் வீட்டு பிரச்சினை இல்லை அவர்களுக்கு தொழில் வாய்ப்பு பிரச்சினையும் இல்லை அப்பா ஜனாதிபதி எனின் மகன் அமைச்சர் அப்பா அமைச்சர் எனின் மகன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு தொழில் பிரச்சினை இல்லை எல்லா இடங்களிலும் உள்ளனர். மாகாண சபை அல்லது பாராளுமன்றங்களில் இருக்கின்றனர் அவர்களுக்கு தொழில் வாய்ப்பு பிரச்சினை இல்லை.

அவர்களுக்கு மருத்துவ பிரச்சினை உள்ளதா அவர்கள் மருந்தெடுக்க போவது எங்கே முன்னாள் ஜனாதிபதி அவர்கள் அவருடைய இடுப்புவலிக்கு மருந்து எடுக்க சென்றது சிங்கப்பூர் அவர்களுக்கு சுகாதார பிரச்சினை இருக்கா ராஜித சேனாரட்ன நாட்டின் சுகாதார அமைச்சர் மருந்து எடுக்க சென்றது சிங்கப்பூர் நாட்டின் சுகாதார அமைச்சருக்கு நாட்டின் சுகாதார துறையில் நம்பிக்கையில்லை ஜனாதிபதி நிதியத்திலிருந்து 1௦௦ இலட்சம் ரூபாவை ராஜித சேனாரட்ன அவர்களுக்கு மருந்தெடுக்க வழங்கினர்.

இந்த நாட்டின் மக்களுக்கு ஒரு வீட்டை நிர்மாணிக்க இரண்டு மூன்று இலட்சம் வழங்குகின்றனர். ஆனால் அமைச்சருக்கு மருந்தெடுக்க 1௦௦ இலட்சம் ரூபாவை வழங்குகின்றனர். எமது இந்த பகுதியில் உள்ள வைத்திய சாலைகளுக்கு கூட ஒரு வருடத்தில் 1௦௦ இலட்சம் ரூபாவை ஒதுக்குவதில்லை அவர்களுக்கு பிரச்சினை இல்லை எனவே இந்த ஆட்சியாளர்கள் இதுவரை மகளுடைய சொத்துக்களை வீணாக்கினர். மக்களுடைய சொத்துக்களை சூறையாடினர். இந்த ஆட்சியாளர்கள் மக்களுடைய பணங்களை எவ்வாறு சூறையாடினர் என்பது வெளிவந்துகொண்டு இருக்கிறது.

அந்த வகையில் அண்மையில் வெளியாகியது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ரூபா 111 கோடி சீன நிறுவனமொன்றிடம் பெற்றதாக இந்த 111 கோடி என்பது முல்லைத்தீவு மாவட்ட சொத்துக்கள் அனைத்தையும் சேர்த்தாலும் வராது இவ்வாறு இவளவு நிதியை என் அந்த நிறுவனம் வழங்கியது. அதாவது இந்த நிதி சாதாரண மகிந்த ராஜபக்ஷவுக்கு ஒரு சீனா பிரஜை வழங்கவில்லை ஜனாதிபதி மகிந்தவுக்கு வழங்கியது.

எமது நாட்டின் துறைமுகங்கள் விமான நிலையங்கள் மின் உற்பத்தி நிலையங்கள் இலக்குவைத்து வழங்கப்பட்டது. எனவே, இது லஞ்சம் எனவே எமது நாட்டு ஜனாதிபதி லஞ்சம் வாங்கியவர்.

அதுமட்டுமல்ல நாட்டின் பிரதமர் பிணைமுறி மோசடியில் அவருக்கு தொடர்பிருக்கிறது. மத்திய வங்கியானது நிதியமைச்சின் கீழ் தான் இருக்கிறது. அதை முதல் தடவையாக பிரதமர் தனது பொறுப்பின் கீழ் கொண்டுவந்து சிங்கப்பூர் பிரஜை ஒருவரை கொண்டுவந்து மத்திய வங்கி ஆளுனராக்கினர் களவாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்தி கொடுத்தார்.

களவெடுத்ததன் பின்னர் நாட்டை விட்டு வெளியேற வழியமைத்து கொடுத்தார். எனவே, எமது நாட்டின் தலைவர்கள் களவாணிகள் தலைவர்கள் களவானிகளாக இருக்கும் போது நாடு முன்னேறாது களவானிகளுக்கு அரசியல் என்பது வியாபாரம் அவர்களது வியாபாரம் அரசியல் எனவே வியாபாரமாக்கப்பட்ட அரசியலை மீட்டெடுக்க வேண்டும் வியாபாரமாக்கப்பட்ட அரசியலை ஊழல் மோசடிகள் உள்ள அரசியலை மக்கள் சார்பான அரசியலாக மாற்றவேண்டிய தேவை உள்ளது.

நாங்கள் எந்த அரசாங்கத்தை அமைத்தாலும் எந்த தலைவர்களை கொண்டுவந்தாலும் ஊழல்வாதிகளாக மக்களை பற்றி சிந்திக்காது தம்மைப்பற்றி சிந்திப்பவர்களாக இந்த நாட்டுக்கு நல்லது நடக்காது நாங்கள் 7௦ ஆண்டுகளாக அரசாங்கத்தை அமைத்தாலும் தலைவர்களை கொண்டுவந்தாலும் நாங்கள் கொண்டுவந்தவர்கள் ஊழல்வாதிகள் களவாணிகள் அதையே நாங்கள் மாற்ற வேண்டும்.

எனவே, நாங்கள் இந்த தவறான அரசியலை இந்த ஊழல் நிரம்பிய அரசியலை மீட்டெடுக்க வேண்டும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய நாங்கள் எங்களுக்கு அரசியல் வியாபாரமல்ல நாங்கள் இந்த அரசில் இருந்து ஒரு சதத்தை கூட எடுக்கவில்லை. அப்பிடியானால் என் இந்த அரசியலை தேர்ந்தெடுத்தோம் எமக்கு தெரியும் கிராமப்புறங்களில் உள்ளவர்களுடைய வாழ்க்கை மிகவும் அடிமட்டத்தில் உள்ளது எனவே இந்த நாட்டு மக்களுக்கு நிம்மதியான ஒரு வாழ்க்கை வேண்டும்.

அந்த வாழ்க்கையை உறுதிப்படுத்த கூடிய ஒரு அரசியல் தேவை எனவே இந்த நாட்டிலே ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்களுக்கும் சிறந்த ஒரு வாழ்க்கை அவசியம் புதிய அரசியல் பாதை தேவை புதிய ஒரு அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் அதற்காகவே நான் ஒன்றுபடுவோம் என்றார்

எங்களுக்கு இருப்பது இனவாதம் அல்ல இன்று என்ன நடக்குறது தமிழர்களுக்கு பிடித்த அரசியல் தமிழ் இனவாதம் ஆக இருக்கிறது. சிங்களவர்களுக்கு பிடித்த அரசியல் சிங்கள இனவாதம் ஆக இருக்கிறது முஸ்லிம்களுக்கு பிடித்த அரசியல் முஸ்லிம் இனவாதம் ஆக இருக்கிறது இந்த இனவாதத்துக்கு அப்பால் சிங்கள தமிழ் முஸ்லிம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் சிறந்ததொரு எதிர்காலத்தை அமைக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்

(முல்லைத்தீவு நிருபர் தவசீலன்)

Read more...

இராணுவ உள்ளகத் தகவல்களை வழங்காதீர்! முப்படைத்தளபதிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு

லசந்த விக்ரமதுங்க கொலை, பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, கீத் நெயார் கடத்தப்பட்டமை, உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்டமை உள்ளிட்ட பல வழக்குகளில், விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, முப்படையினர் தொடர்பான தகவல்கள் தேவைப்படுவதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியதையடுத்து, குறித்த விசாரணைகளுக்குத் தேவையான தகவல்களை வழங்குமாறு நீதிமன்று முப்படைகளின் தளபதிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கின்றன.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு எவ்வித தகவல்களும் வழங்கப்படாத நிலையில், தனது இல்லத்தில் முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரட்ண உள்ளிட்டோரை சந்தித்த ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, முப்படையினர் தொடர்பான உள்ளக தகவல்களை வழங்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளதாக சிங்கள இதழான „அனித்தா' தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு பாதுகாப்புச் செயலர் கபில வைத்யரத்ன கொண்டுவந்ததையடுத்தே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அங்கு கருத்து வெளியிட்ட பாதுகாப்புச் செயலர் கபில வைத்யரத்ன, கோரப்பட்ட 34 பிரிவுகளில் உள்ள தகவல்கள் வழங்கப்படுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

இதன்போது, காவல்துறை மா அதிபரின் பக்கம் திரும்பிய சிறிலங்கா அதிபர், ஆயுதப்படையினரை சந்தேகநபர்களாக காட்டியமை குறித்து அதிருப்தியை வெளியிட்டதுடன் அவர்களுக்கு எதிராக எந்த சாட்சியங்களும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு பதிலளித்த, காவல்துறை மா அதிபர், பூஜித ஜெயசுந்தர, நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே தகவல்கள் பெறப்பட்டுள்ளன என்றும், சந்தேக நபர்களிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன என்றும் தெரிவித்ததுடன் படையினருக்கு எதிரான போதுமான சான்றுகள் இருந்ததன் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும், இராணுவத் தகவல்கள் எதையும் வழங்கக் கூடாது என்று முப்படைகளின் தளபதிகளுக்கு ஜனாதிபதி கடின உத்தரவை பிறப்பித்துள்ளதாக அச்செய்திக்தாள் குறிப்பிட்டுள்ளது.

Read more...

எதிர்காலத்தில் சமஷ்டி முறைமைக்கு வாய்ப்புண்டா? - சேகுதாவூத் பஸீ்ர்

இலங்கையின் வடபுலத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான இராஜதந்திரப் போர் மையங்கொள்ளத் தொடங்கியிருப்பதை அனைவரும் அறிவோம். வடக்கில் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நிவாரண வீடமைப்பைக் கையாள்வது சீனாவா இந்தியாவா என்பதில் இழுபறி நிலை காணப்படுகிறது. இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தம்பக்கம் இழுப்பதில் சீனா முந்திக் கொண்டது.

ஆயினும், பின்னர் கூட்டமைப்பு இந்தியாவின் பக்கம் தள்ளாடியவாறு சாய்ந்துவிட்டதைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக சீனா ஒரு வகைச் சீற்றத்தோடு,வடக்கின் வீடமைப்புத் திட்டத்தில் இந்தியாவின் தலையீடு உள்ளதா என்று இலங்கை அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

அதே நேரம், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளின் முன்னிலையில் - இந்தியாவுக்கும் பலாலிக்குமிடையில் இந்தியத் தனியார் விமானப் போக்குவரத்தை உடனடியாக ஆரம்பிப்பது என்ற முடிவை இந்தியாவும் இலங்கையும் எடுத்துள்ளன.

இம்முடிவு நடைமுறைப்படுத்தப்படுமானால் ஐரோப்பாவில் வாழும் இலட்சக்கணக்கான வடபுலத் தமிழர்கள் இலங்கை வரும் போது சென்னைக்கு வந்து சில நாட்கள் அங்கு தங்கியிருந்து பொருட்கள் நுகர்வில் ஈடுபட்ட பின்னர் நேரடியாக யாழ்ப்பாணத்துக்கு வருவர். இதனால் கொழும்பு நட்டத்தை அடைகிற அதே வேளை சென்னை இலாபம் அடையும் வாய்ப்புள்ளது.

மேலும், யாழ் - சென்னைக்கு இடையிலான விமானக் கட்டணம் கொழும்பு சென்னைக்கு இடையிலான விமானக் கட்டணத்தைவிடக் குறைவானதாகவே இருக்கும். எனவே, சென்னைக்குச் செல்லுகின்ற வடகிழக்கைச் சேர்ந்த பெரும்பாலான பயணிகள் பலாலி ஊடாகவே செல்ல விரும்புவர். பலாலி விமான நிலையத்தை சர்வதேச சேவைக்கு இந்தியாவைத் தவிர வேறெந்த நாடும் உபயோகிக்க முடியாது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

இப்படியாக வடபுலத்து நிலைமை மாறி வருகிறதன் அரசியலையும் நன்கு புரிதல் இங்கு முக்கியமாகிறது. குறைந்த - சிறந்த அரசியல் தீர்வாக சமஷ்டி முறை அரசியலமைப்பையே தமிழர்கள் வேண்டி நிற்கிறார்கள்.

சீனா 2009 இல் விடுதலைப் புலிகளைத் தோல்வியடையச் செய்வதற்கு இலங்கை அரசுக்கு ஆயுத மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கிய நாடுகளுள் முதன்மையானதாகும்.

வடக்கில் அரங்கேறும் இராஜதந்திர யுத்தத்தை வெல்வதாயின் தமிழ் அரசியல் சக்திகளினதும், மக்களினதும் ஆதரவு என்பது சீனாவுக்கோ இந்தியாவுக்கோ மிகவும் அவசியமாதாகும்.

இந்தியா சமஷ்டி பற்றி பல முறை தமிழருக்கு வாக்களித்தும் அது சில பத்தாண்டுகளாக நிறைவேறவில்லை. எந்தவொரு இலங்கை அரசுக்கும் பெரும்பான்மை சிங்களவர்களுக்குள் இந்தியாவுக்கான செல்வாக்கை உட்செலுத்த முடியாது. இம்முடியாமைக்கு வரலாற்றுப் பகை காரணமாகும்.

சமஷ்டித் தீர்வு பற்றி சிங்கள அரசியல் தலைமைகள் மூச்சு விடுவதற்கும் அஞ்சுவதற்கு இந்தியா பற்றிய சிங்களவர்களின் தப்பபிப்பிராயமும் ஒரு காரணமாகும். இந்தியாவை விடவும் சீனாவுக்கு பெரும்பான்மையினருக்குள் மிகப் பெரும்பான்மை ஆதரவு உண்டு. அவர்கள், இந்தியா இங்கு வந்தால் திரும்பிப் போகாது, ஆனால் சீனா வந்தாலும் மீண்டும் போய்விடும் என்று நம்புகிறார்கள்.

தமிழர்களின் அரசியல் வேட்கையும், சிங்களவர்களின் அரசியல் போக்கும் சீனாவுக்குத் தெரியாததுமல்ல, புரியாததுமல்ல. சீனா தனது பட்டுப்பாதையில் இலங்கையை ஒரு சமஷ்டி நாடாகப் பதியமிடும் உத்தியை கையாளமாட்டாது என்றுமில்லை. இந்தியாவை விட சீனாவுக்கு இப்படிச் செய்வது இலகுவானதாகும்.

ஏனெனில் சீனாவிடம் பணமிருக்கிறது. சீனா தனது ஓரிரு மாநகர சபைகளைப் பராமரிப்பதற்குத் தேவையான பணத்தில் இலங்கையைப் பராமரிப்பதோடு அதன் பொருளாதாரத்தை கட்டி எழுப்பி வாழ்க்கைச் செலவையும் குறைக்க உதவ முடியும்.

Read more...

ஐயோ எனது மருமகனுக்கு அல்-கைதாவுடன் தொடர்பே இல்லை! கூறுகிறன்றார் பைஸர் முஸ்தபா

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தவர் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் நெருங்கிய உறவினர் என்றும் இலங்கை வங்கியின் முன்னாள் தலைவர் ஜெஹான் காசிம் என்பவரின் பேரன் என்றும் அந்நாட்டு தேசிய ஊடகமான ஏபிசி செய்தி வெளியிட்டிருந்தது யாவரும் அறிந்த விடயம்.

அவுஸ்திரேலியாவில் ஐஎஸ் அமைப்பின் சார்பில் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிஜாம்டீன் ஆபத்தான தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக அவுஸ்திரேலிய பொலிஸார் உத்தியோக பூர்வமாக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் சந்தேக நபர் அவுஸ்திரேலியாவையும் தாண்டி, இலங்கையுடனே அதிக தொடர்புகளை கொண்டிருந்தார் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை கைது செய்யப்பட்டவரின் சகோதரரான ஒருவர், நிஜாம்டீன் வெளிப்படையான முஸ்லிம் என்றும் அவுஸ்திரேலிய நகரமொன்றிற்கு இவ்வளவு மோசமான குற்றங்களை இழைப்பது குறித்து சிந்திக்க வேண்டிய தேவையில்லை என்றும் நிஜாம்டீன் கைது செய்யப்பட்ட பின்னர் எங்களால் அவருடன் தொடர்புகொள்ள முடியவில்லை, நாங்கள் அநாவசிய சம்பவங்கள் காரணமாக மனமுடைந்து போயுள்ளோம் எனவும் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார் எனவும் ஏபிசி தெரிவித்திருந்தது.

ஆனாலும் நிஜாம்டீன் மிகவும் ஆபத்தான நபர் என, அவரிடமிருந்து மீட்கப்பட்ட நாட்குறிப்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பலரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் சிட்னி நகரின் பல பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிஜாம்டீன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் 15 வருட சிறைத்தண்டனையை எதிர்கொள்ள வேண்டி வரும் எனவும் அவுஸ்திரேலிய தேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தன் மருமகன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுத்துரைத்துள்ள அமைச்சர் பைஸர் முஸ்தபா தன்து மருமகன் ஓர் பயங்கரவாதி என தான் நம்பவில்லை எனவும், தனது மருமகன் ஒரு அப்பாவி தெரிவித்துள்ளார்.

மேலும், தனது மருமகன் தவறு இழைத்திருக்க மாட்டார் என தமது குடும்பத்தினர் நம்புவதாகவும், நீதித்துறைக்கு மதிப்பு கொடுப்பதன் காரணமாக நீதித்துறையின் தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதாகவும் அமைச்சர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

Read more...

Monday, September 3, 2018

வரலாறு காணாத மக்கள் கூட்டம் நாளை மறுதினம் அரசுக்கு எதிராக கொழும்பில் கூடுகின்றது.

இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கொழும்பு நகரில் ஒன்றுகூட பெரும் திரளான மக்கள் தயாராக இருந்து வருகின்றனர் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கூட்டு எதிர்க்கட்சியினர் கொழும்பில் நாளை மறுதினம் நடத்தவுள்ள “மக்கள் சக்தி கொழும்புக்கு” என்ற ஆர்ப்பாட்ட நடவடிக்கை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து குழப்பமடைந்துள்ள அரசாங்கம், அங்குமிங்கும் ஓடி திரிகிறது. மாகாண சபைகள் ஊடாக பேருந்துகளை தடுத்து நிறுத்த அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கிராம மட்டத்தில் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகளை அரசாங்கம் அச்சுறுத்தி வருகிறது என்ற தகவல் எமக்கு கிடைத்துள்ளது.

அதேவேளை குருணாகல் மேல் நீதிமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைத்து வழக்கு விசாரிக்கப்படுகிறது.

50 லட்சம் ரூபாயை வெள்ள நிவாரணமாக வழங்கியதாக குற்றம் சுமத்தி முன்னெடுக்கப்படும் வழக்கில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எனினும் கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட அலோசியஸ் முதலாளியின் மாமனார் இன்னும் சிங்கப்பூரில் இருக்கின்றார்.

இவர்களிடம் தேர்தலுக்கு பணம் வாங்கிய, புத்தகங்களை எழுதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதுவும் நடக்காது போல் இருந்து வருகின்றனர். அடக்குமுறையில் தமது ஆட்சியை முன்னெடுப்பதை தவிர அரசாங்கத்திற்கு வேறு வழி கிடையாது.

அரசாங்கம், நாட்டு மக்களையும் அரசியல்வாதிகளையும் எதிர்க்கட்சிகளையும் அடக்கி, தமது ஆட்சியை முன்னெடுக்க எதிர்ப்பார்துள்ளது எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.


Read more...

விக்கிக்கு உரியநேரத்தில் தக்க பதிலடி கொடுப்பாராம் சம்பந்தன்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் அரசியல் அறிமுகம் செய்துவைக்கப்பட்டவர்தான் முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் விக்கினேஸ்வரனுக்குமான உறவு விரிசலடைந்து தற்போது அரசியல் எதிரிகள் என்ற நிலையை எட்டியுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கிவரும் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக தோற்றம் பெற்றுள்ள தமிழ் மக்கள் பேரவையின் பணிமனைத் திறப்பு விழாவில் கலந்து கொண்டிருந்தார். அங்கு உரையாற்றிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தோல்வியடைந்து விட்டதாகத் தெரிவித்திருந்தார்.

அத்துடன், அரசியலில் தனக்கு முன்பாக 4 தெரிவுகள் இருப்பதாகவும் கூறியிருந்தார். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களிடம் கேட்கப்பட்டபோது :

'விக்னேஸ்வரனை வடக்கு முதலமைச்சராகக் களமிறக்கியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்கி அவரை முதலமைச்சராக்கியது வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம்தான் பங்களிப்புச் செய்தது என்பதை அவர் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்தநிலையில், கூட்டமைப்பின் தலைமையை விமர்சித்து அவர் தனது பக்க நியாயங்களை மாத்திரம் முன்வைத்துள்ளார். மறுபக்க நியாயங்களை நாம் முன்வைக்கவேண்டும்.

அதனை நாம் அவசரப்பட்டு முன்வைக்க முடியாது. ஆற அமர்ந்து அவர் முன்வைத்த கருத்துக்களை அலசி ஆராய்ந்து தக்க நேரத்தில் உரிய பதிலை வழங்குவேன்' – என்றார்.

Read more...

அ இ ம கா வில் பதவி வழங்கல். வை எல் எஸ் ஹமீட்

அ இ ம காங்கிரசின் பெயரில் அவ்வப்போது சில பதவிநிலைகளுக்கு சிலரை நியமிக்கின்ற செய்திகள் சமூகவலைத்தளங்களில் காணக்கிடைக்கின்றது. இது தொடர்பாக சில தெளிவுகளை வழங்க வேண்டியது எனது கடமையாகும்.

2016ம் ஆண்டு ஒரு கட்சியின் பேராளர் மாநாட்டிற்கு எத்தனைபேரை அழைக்க வேண்டும்; யரை அழைக்க வேண்டும்; யார் அவர்களை அழைக்க வேண்டும்; என்ற எந்த விதிமுறைகளும் தெரியாமல் ஒரு திருமணத்திற்கு அழைப்பிதழ் அனுப்புவதுபோன்று அனுப்பி ஏதோ ஒரு கூட்டத்தை வைத்துவிட்டு அதற்கு பேராளர் மாநாடு என்று பெயரை வைத்து புதிய யாப்பு, புதிய உத்திகத்தர்கள் நியமித்ததற்கெதிராக நான் நீதிமன்றம் சென்றிருப்பது அனைவரும் அறிந்ததே!

இவர்கள் சமர்ப்பித்த புதிய யாப்போ, புதிய உத்தியோகத்தர்களையோ தேர்தல் ஆணையாளர்/ ஆணைக்குழு அங்கீகரிக்கவில்லை.

ஒரு தேர்தல் வருகின்றபோது ஒரு கட்சியில் இரு தரப்பிற்கிடையில் பிரச்சினை இருந்தால் அதில் ஒரு தரப்பை தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணைக்குழு அனுமதிப்பதற்கு தேர்தல் சட்டத்தில் இடமுண்டு. அதன் அடிப்படையில் கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் நியமனப்பத்திரம் தாக்கல்செய்ய குறித்த ஒருவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதேநேரம் அக்கடிதத்தில் வேறு எதற்கும் அவர் உரிமை கோரக்கூடாது; என்றும் தெளிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இப்பொழு தேர்தல் முடிந்துவிட்டது. அந்த நபருக்கு கட்சியில் தற்போது எந்த உரிமையுமில்லை. இருந்தாலும் அந்த நபர் அரசியல் நாகரீகத்திற்கப்பால் தொடர்ந்தும் தன்னை கட்சியின் ‘ செயலாளர் நாயகமாக’ விழித்து ஊடகங்களுக்கு அறிக்கை விட்டு வந்தார். அதைப் பார்த்தும் நான் பொறுமையாக இருந்தேன்.

இப்பொழுது அதன் தலைவர் என்பவர் சிலரை கட்சியின் சில பதவிநிலைகளுக்கு நியமிக்கின்ற செய்திகள் ஊடகங்களில் வெளிவருகின்றன.

இங்கு புரிந்துகொள்ள வேண்டியவை

தேர்தல் ஆணையாளரால் இதுவரை அங்கீகரிக்கப்பட்டிருப்பது என்னால் சமர்ப்பிக்கப்பட்ட யாப்பும் உத்தியோகத்தர் பட்டியலுமாகும்.

புதிதாக சமர்ப்பிக்கப்பட்ட யாப்போ, உத்தியோகத்தர் பட்டியலோ தேர்தல் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்படவில்லை. அங்கீகரித்திருந்தால் ஆதாரத்தைக் காட்டலாம்.

அவர் இன்னும் தலைவராக இருப்பது நான் வழங்கிய பட்டியலின் அடிப்படையிலாகும்.

தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட நான் வழங்கிய யாப்பின் பிரகாரம் பதவிநிலைகளுக்கு யாரையும் நியமிக்கின்ற அதிகாரம் தலைவருக்கு இல்லை.

புதிய யாப்பும் அங்கீகரிக்கப்படவில்லை.

அங்கீகரிக்கப்பட்ட யாப்பும் அதிகாரம் வழங்கவில்லை. எனவே எந்த அடிப்படையில் இந்தப்பவிகள் வழங்கப்படுகின்றன?

பதவி வழங்குபவருக்கு யாப்புத்தெரியாதென்பது நாடறிந்த விடயம். பதவி பெறுபவர்களாவது யாப்பை வாசிக்கக்கூடாதா? பதவி வழங்குவதாக எழுதப்படுகின்ற அந்தக் காகிதத்தின் பெறுமதிகூட அந்தப்பதவிகளுக்கு இல்லை; என்பதைப் புரியமுடியாதவர்களா? இவர்கள்.

இந்தக்கட்சியின் தேர்தல்ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட செயலாளர் நாயகமாக இன்னும் வை எல் எஸ் ஹமீடே இருக்கின்றார். அவர் செயலாளர் நாயகம் இல்லை; என்றோ புதிய ஒருவரை செயலாளர் நாயகமாக ஏற்றுக்கொண்டோ எந்தக் கடிதமும் தேர்தல் ஆணைக்குழுவால் அனுப்பப்படவில்லை. நீதிமன்றம் தீர்மானிக்கும்வரை தேர்தல் ஆணைக்குழுவால் அதனைச் செய்யமுடியாது.

தேர்தல் ஆணையாளர் செய்திருப்பதெல்லாம், இக்கட்சியின் செயலாளர் பதவி தொடர்பாக வழக்கு இருக்கிறது.’ என்று மட்டும்தான் குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே, வை எல் எஸ் ஹமீட் செயலாளராக அங்கீகரிக்கப்பட்டார். அவ்வங்கீகாரம் தேர்தல் ஆணைக்குழுவினாலோ, நீதிமன்றத்தாலோ ரத்துச்செய்யப்படவில்லை. பதவிநிலைகளுக் ஆட்களை நியமிக்கும் அதிகாரம் இருந்தும் வழக்கு இருப்பதால் மௌனமாக இருக்கின்றேன்.

இவ்வாறு தொடர்ந்தும் நியமனங்களைச் செய்தாலோ, அல்லது இவ்வாறு என்னால் வழங்கப்படாத கட்சியின் பதவிகளை யாராவது விளம்பரம் செய்தாலோ அப்பதவிகளுக்கு நானும் புதியவர்களை நியமித்து அதனை விளம்பரம் செய்யவேண்டிய நிலைவரும்; என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது அதிகாரத்தை இன்னொருவர் எனது அனுமதியின்றி பாவிக்க என்னால் அனுமதிக்க முடியாது; என்பதைப்புரிந்துகொள்ளுங்கள்.

Read more...

Friday, August 31, 2018

இன்றைய நல்லாட்சி அரசின் நல்ல இலட்சனம் இதுதானா? -ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

இலங்கையில் சீரற்ற காலநிலைகளின் போது வெள்ளப் பெருக்கால் மிகப் பாதிக்கப்படும் ஒரு பிரதேசமாக அடையாளப்படுத்தப்படும் மாவட்டங்களில் ஒன்றுதான் இரத்தினபுரி. இந்த மாவட்டத்தில் ஏற்படக் கூடிய வெள்ளப் பெருக்கு கொழும்பின் களனி கங்கைக் கரையோரம் வரை பாதிப்பை ஏற்படுத்தும். இதன் மூலம் இரத்தினபுரியின் வெள்ள நிலைமை எவ்வாறிருக்கும் என்பதனை நாங்கள் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த மாவட்டத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால், வசதி குறைந்த ஒரு தனி நபர் சாதாரணமாகப் பாதிக்கப்பட்டாலும் அவர் இழக்கும் சொத்துகளின் ஆகக் குறைந்த பெறுமதி அண்ணளவாக 20, 000 ரூபாவாக இருக்கும். அதனை விட நிச்சயமாகக் குறைவான சேதம் அவருக்கு ஏற்படாது.

கடந்த வருடம் இரத்தினபுரி பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளம் அந்தப் பிரதேசத்தில் பாரிய அழிவுகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது. இதனை நாம் மறந்து விட முடியாது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நஷ்டயீடுகளை வழங்கியது. தொடர்ந்தும் வழங்கி வருகிறது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அண்மையில் அரசாங்கத்தால் நஷ்டயீடு வழங்கப்பட்டுள்ளது. அவர் பெற்ற நஷ்டயீட்டுத் தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 80 ரூபாதான்.

கடந்த வருடம் இரத்தினபுரியில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்குக் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட எஸ். சந்திமா ரஸஞ்ஜலி என்ற பெண், வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட தனக்கு நஷ்டயீடாக
80 ரூபாவை அரசாங்கம் வழங்கியமை தொடர்பில் தனது வேதனையை வெளியிட்டுள்ளார்.

வெள்ள அனர்த்தத்தில் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தின் கணிப்பீடு வெறும் 80 ரூபா அல்ல என்று தனது ஆதங்கத்தை வெளியிட்டு அவர் இரத்தினபுரி பிரதேச செயலாளருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மூலம் பல பில்லியன்கள் பணம் மோசடி செய்யப்பட்டு மக்கள் பணம் வீணடிக்கப்பட்டமை உட்பட பல மோசடிகளில் சிக்கியுள்ள இந்த அரசாங்கம், பாரிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு வழங்கிய நஷ்டயீடு வெறும் 80 ரூபாதான்.

பார்வையிழந்த ஓர் அரச அதிகாரியாவது பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டை நேரில் சென்று அந்தப் பெண்ணின் சேதமடைந்த உடைமைகளைத் தொட்டு உணர்ந்து அவற்றின் சேதத்தை அறிக்கையிட்டாலும் நிச்சயம் 80 ரூபாவாக இருக்க முடியாது

அலரிமாளிகையை அரசியல்வாதிகளின் திருமண மண்டபமாக மாற்றியுள்ள இந்த அரசாங்கம், அப்பாவி மக்களின் குடிசை வாழ்க்கையை அவல வாழக்கையாக மாற்ற முய்சிப்பது வேதனைக்குரியது.



(நன்றி படம் நெத் எப்.எம். சிங்களம்)


Read more...

5 மாத கர்பிணியை கொன்றது புலிகளின் முன்னால் காவல்துறை உறுப்பினன்.

நேற்று முன்தினம் கிளிநொச்சி பன்னங்கட்டி பகுதியில் இளம் தாய் ஒருத்தி கொலை செய்யப்பட்டிருந்தாள். கணவனால் கைவிடப்பட்டிருந்த அத்தாய் தனது ஊனமுற்ற குழந்தை ஒன்றை வழர்ப்பதற்காக தொழிற்சாலை ஒன்றில் காவல்காரியாக தொழில்புரிந்து வந்த நிலையிலேயே இக்கொலை நடைபெற்றுள்ளது.

கொலைஞன் இனம்காணப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் சகல ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டிருந்தாலும் அவன் புலிகளின் முன்னாள் காவல்துறை உறுப்பினன் என்பதை இருட்டிப்பு செய்துவருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த குறித்த கொலையின் முழுமையான மர்மமும் இன்று துலங்கியது. நித்தியகலாவின் வயிற்றில் வளர்ந்த குழந்தை தன்னுடையதுதான் என்பதையும், அந்த குழந்தை விவகாரத்தால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்பதையும் கைதுசெய்யப்பட்ட முன்னாள் புலி காவல்துறையினன் ஏற்றுக்கொண்டுள்ளான்.

கொலையுண்ட பெண்ணின் தொலைபேசித் தரவுகளை பரிசீலனை செய்த பொழுது, குறித்த நிறுவனத்தில் பாதுகாப்பு மேற்பார்வையாளராக பணிபுரிந்த முன்னாள் புலி காவல்துறையினனின்; தொலைபேசியில் இருந்தே இறுதியாக அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதுடன், கொல்லப்பட்ட பெண்ணும் அவரும் நீண்டகாலமாக தொடர்பில் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் நடைபெற்ற அன்று இரு தொலைபேசிகளும் நீண்ட நேரமாக ஒரே கோபுர அலையிலையே நகர்ந்துள்ளமை கண்டறியப்பட்டது. இதனடிப்படையில், இன்று மதியம் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரான கிருஸ்ணகீதன் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான்.

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் புலிகளின் காவல்துறையினனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, கொலையை தானே செய்ததாக அவன் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவன் கிளிநொச்சி விநாயகபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையாவான். அவனது ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது-

கொல்லப்பட்ட பெண்ணுடன் எனக்கு தொடர்பு இருந்தது. அவரது வயிற்றில் வளர்ந்த குழந்தை என்னுடையதுதான். அதனால் அவள் தன்னை கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தினாள். எனக்கு குடும்பம் இருந்தது. அதனால் நித்தியகலாவை கூட்டிச்செல்ல முடியவில்லை. இருவரும் நஞ்சு குடித்து இறந்துவிடுவோம் என்று முடிவெடுத்தோம். 28.08.2017 அன்று அவள் கடமை முடிந்து தொழிற்சாலையை விட்டு வெளியில் வந்ததும், நான் எனது வீட்டில் இருந்து நடந்து வந்து அவளது மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்டேன்.

பின்னர் அம்பாள்குள வீதியூடாக கிளிநொச்சி வந்து உள் பாதைகளால் கரடிப்போக்கு வந்து, பின்னர் மீண்டும் உள் பாதைகளால் சம்பவ இடத்திற்கு சென்றோம். வரும்போதே நித்தியகலாவை மருந்துப் போத்தல் ஒன்றை வாங்கிவந்தாள். அங்கு சென்றதும் குடிப்போம் என்றதும் எமக்குள் சிறு பிரச்சனை வந்துவிட்டது. நித்தியகலா பாதுகாப்பு உத்தியோகத்தரின் உடையில் வந்தமையால் அவரது கழுத்து பட்டியில் தொழில் அடையாள அட்டை தொங்கிக் கொண்டிருந்தது. கழுத்தில் இருந்த பட்டியைக் கொண்டே அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்.

இறந்தவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் என அடையாளம் காணப்படக் கூடாது என்பதற்காக நித்தியகலாவின் பாவாடை, மேற்சட்டை என்பவற்றை கழற்றி எடுத்துவிட்டு, சடலத்தை அருகில் இருந்த வயல்வெளிக்குள்ளால் இழுத்து சென்று, வாய்க்காலுக்குள் போட்டேன்.

மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வந்து கனகபுரம் பகுதியில் அவரின் பாவாடையை எறிந்துவிட்டு, கைப்பை மற்றும் மேற்சட்டை என்பவற்றை அம்பாள்குளப்பகுதியில் எறிந்தேன். மோட்டார் சைக்கிளில் நள்ளிரவு நேரம் வீட்டுக்கு வந்தேன். பின்பக்காக இருக்கும் அறையில் மோட்டார் சைக்கிள் கெல்மட்டை ஒழித்து வைத்து விட்டு மருந்துப் போத்தலை எடுத்து குடிக்க நினைத்தேன். பிறகு பிள்ளைகள் நினைவு வந்ததால் அதனையும் வீடுக்குள் ஒளித்துவைத்து விட்டேன். சம்பவ இடத்தில் இடுப்புபட்டி மற்றும் சில தடயங்களை மட்டும் விட்டுவிட்டு, மற்றவற்றை நானே கொண்டு வந்தேன். இக் கொலையை நான் மட்டுமே செய்தேன். என்னால் சம்பவ இடம், மற்றும் பொருட்கள் வீசப்பட்ட இடங்கள் என எல்லாவற்றையும் அடையாளம் காட்ட முடியும்' என வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தான்.

வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், பொருட்கள் வீசப்பட்ட இடத்திற்கு அவரை பொலிசார் அழைத்து சென்றனர். கனகபுரத்தில் வீசப்பட்ட பாவாடை மீட்கப்பட்டது. பின்னர், அவரது வீட்டுக் சென்று மோட்டார் சைக்கில் அவர் பாவித்த தொலைபேசி, ஹெல்மட், மற்றும் மருந்துப் போத்தல் என்பவற்றை மீட்டனர்.

அம்பாள் ளம் பகுதியில் வீசப்பட்ட மேற்சட்டையை சம்பவம் நடைபெற்ற மறுநாளே பொலிசார் மீட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் சந்தேகநபரின் மனைவியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

தற்போது சந்தேகநபர் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். திங்கள்கிழமை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளான்.



Read more...

யானை அடிக்க முன்னர் தானே அடித்துக்கொண்டு ஓடி ஒழிந்தார் விக்கி.

பளை பிரதேசத்தில் யூலிப்பவர் மற்றும் வீற்றாப்பவர் எனும் நிறுவனங்களுக்கு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் முதலமைச்சர் மற்றும் அவரது நெருங்கிய சாகவென அறியப்படுகின்ற ஐங்கரநேசன் மீது மோசடிக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன், குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் நீதியரசர் விக்கினேசுவரன் ஓடியொழித்துள்ளமை நேற்று வடமாகாண சபை கூடியபோது நிருபணமாகியுள்ளது.

குறித்த இரு காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களும் 2 வருடங்கள் மின்சார சபைக்கு மின்சாரத்தை வழங்கியமைக்காக2933.8 மில்லியன் ரூபாய் (293 கோடி ரூபா) நிதியைப் பெற்றுள்ளது. 2 வருடத்தில் 293 கோடி ரூபாய் மிகை லாபம் பெறும் நிறுவனத்திடமிருந்து 2 கோடி ரூபாய் மட்டுமே வருடம் ஒன்றுக்கு சமூகக்கடப்பாட்டு நிதியாக பெறப்பட்டுள்ளது.

இந்நடைமுறையானது முற்றிலும் தவறானது என்றும் குறித்த நிறுவனங்களிடமிருந்து மொத்த லாபத்தில் குறித்ததோர் விகிதாசாரத்தை பெற்றுக்கொள்வதற்கு ஏற்றவகையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படல்வேண்டும் என்ற முன்மொழிவுகள் வைக்கப்பட்டபோது அவற்றை முதலமைச்சர் எழுந்தமானமாக நிராகரித்து சட்டத்துக்கு புறப்பான முறையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் குறித்த காற்றாலை மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான பகிரங்க கேள்வி அறிவித்தல் விடப்பபட்டு அதிக வருமானத்தை மாகாண சபைக்கு வழங்கக்கூடியதோர் நிறுவனத்தை தேர்ந்தெடுக்காமல் குறித்த இரு நிறுவனங்களிடமிருந்தும் பெருந்தொகைப் பணத்தை முதலமைச்சர் மற்றும் ஐங்கரநேசன் உட்பட்டோர் பெற்றுக்கொண்டுள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

இக்குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையில் கணக்காய்வு அறிக்கையில் :

* குறித்த நிறுவனங்களுடன் மாகாண சபை செய்துள்ள ஒப்பந்தத்தில் பிரதம செயலாளர் கையொப்பமிட்டிருக்கவில்லை.

* காற்றாலை அமைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள காணி நோக்கம் குறிப்பிடப்பட்டு காணி ஆணையாளரிடமிருந்து அனுமதி பெறப்படவில்லை.

* ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முன்னர் மாகாண சபையின் அனுமதி பெறப்படவில்லை.

* நிறுவனங்களுக்கான அனுமதிக்கான சட்டரீதியான கேள்வி மனுகோரப்படவில்லை.

போன்ற பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளது.

இக்குறைபாடுகள் தொடர்பில் நேற்று கூடிய சபையில் விவாதிப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக முற்கூட்டியே அறிவிக்கப்பட்டபோது , இவ்விடயத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டாம் என சபையின் தவிசாளரை எழுத்துமூலமாக முதலமைச்சர் கோரியதன் ஊடாக விவாதத்திற்கு எடுத்துக்கொண்டால் மேற்படி குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் நிரூபணமாகும் என்பதை அவர் அறிந்து வைத்துக்கொண்டே இந்த தவறை புரிந்துள்ளார் என்பது தெளிவாகின்றது.

இவ்வாறு சட்டவிரோதமாக செய்யப்பட்டுள்ள குறித்த ஒப்பந்தம் முதலமைச்சரின் இல்லத்தில் வைத்தே இடம்பெற்றமையும் தற்போது அம்பலமாகியுள்ளது. முன்னாள் நீதியரசர் நியாயமாக நடந்துகொள்வார் என எதிர்பார்த்த தமிழ் மக்களில் பலர் விக்னேஸ்வரன் மோசடிப்பேர்வழி என்பதை நம்ப மறுத்தே வந்தனர். ஆனால் நேற்றைய விவாதத்தில் விக்னேஸ்வரன் கலந்து கொள்ளாமை புருவத்தை உயர்த்தப்பண்ணியுள்ளது.

நேற்று குறித்த விவாதம் ஆரம்பமாதற்கு முன்னர் சபையின் தவிசாளர் விக்னேஸ்வரனால் அனுப்பப்பட்டிருந்த கடிதம் ஒன்றை வாசித்தார். அக்கடிதத்தில்:
நான் வேறு நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளதால் இன்றைய சபை அமர்வுகளில் பங்கெடுக்க முடியாது என தெரியப்படுத்தியிருந்தார்.



(முதலமைச்சர் விடயத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டாம் என எழுதிய கடிதத்தின் பிரதி)

இவ்விடயத்தில் விக்னேஸ்வரன் தவறிழைத்திருக்காவிடின் அவரால் சபையோர் முன்தோன்றி தன்னை நிரபராதி என நிரூபித்திருக்க முடியும். எதுஎவ்வாறாயினும் முதலமைச்சர் விடயம் தொடர்பில் பதிலளிக்கும் பொருட்டு எதிர்வரும் 11ம் திகதி கூடவுள்ள அமர்வில் தொடர்ந்தும் இவ்விடயம் தொடர்பில் பேசப்படும் என்றும் அப்போது முதலமைச்சரிடமிருந்து சில கேள்விகளுக்கு பதிலெதிர்பார்க்கப்படுமென்றும் அவை முதல்வர் அறிவித்துள்ளார். அதேநேரம் அடுத்த அமர்விலும் விக்னேஸ்வரன் கலந்து கொள்ளாமல் தவிர்பார் என்றும் அடுத்த அமர்வே வடமாகாண சபைக்கான இறுதி அமர்வாக அமையும் என்றும் நம்பமுடிகின்றது.

விக்னேஸ்வரனின் முகத்திரை கிழித்து கே.சயந்தன் சபையில் தெரிவித்ததாவது:

மாகாணசபை உருவாக்கப்பட்ட சில மாதங்களில் பளையில் ஒரு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் உருவாக்க முயற்சிக்கப்படுகிறது. அதற்காக தென்னிலங்கையில் இருந்து வந்தவர்களுக்கு எங்களுடைய அதிகாரிகள் கண்ணை மூடிக்கொண்டு கையொப்பமிடுகிறார்கள் என எனக்கு தகவல் கிடைத்தது.

அதனை நான் முதலமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு சென்றபோது, அது தொடர்பாக நிபுணர்களின் கருத்துக்களை பெறுமாறு முதலமைச்சர் எனக்கு கூறினார். அதற்கமைய நான் சில நிபுணர்களை அணுகி கருத்துக்களை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மூவர்ணப்படங்களுடன் அப்போதைய அமைச்சர் ஐங்கரநேசனின் செய்தி ஊடகங்களில் வந்திருந்தது.

„வடமாகாணத்திற்கு வரும் பெருமளவான முதலீட்டை அமைச்சர் ஐங்கரநேசன் பார்வையிட்டார்' என அந்தச் செய்தி அமைந்திருந்தது.

இங்கே நான் கேட்பது மின்சார சபையின் கீழ் உள்ள பல கம்பனிகள் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க தயாராக இருந்தார்கள். அதுவும் இந்த யூலிப்பவர், பீற்றாப்பவர் ஆகிய நிறுவனங்கள் மின்சாரத்திற்கு அறவீடு செய்யும் நிதியிலும் பார்க்க மிக குறைவான நிதியில் செய்ய தயாராக இருந்தார்கள். அப்படி இருக்கையில் எந்த கேள்வி கோரலும் இல்லாமல் தனியே இந்த நிறுவனங்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டது எப்படி?

மிகப்பெரியளவில் வருமானம் பெறும் நிறுவனத்திடமிருந்து எமது மக்களுக்குக்கிடைத்த நன்மைகள் என்ன? என கேள்விக்கணைகளை தொடுத்தார்.
இக்கேள்விகளுக்கு எதிர்வரும் 11ம் திகதி விக்னேஸ்வரன் பதிலளிப்பாரா?


ஐங்கரநேசனின் முகத்திரை கிழித்து அஸ்மின் சபையில் தெரிவித்ததாவது:

வெளிப்படை தன்மை பற்றி பேசும்போது கண்காய்வு அறிக்கையை இந்த சபையில் எடுக்கவேண்டாம் என முதலமைச்சர் எமக்கும் சபைக்கும் கடிதம் எழுதியதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம்.

குறித்த நிறுவனத்தினர் '2 பெட்டிகள் நிறைய காசு கொண்டுவந்தார்கள் அப்பன்' நான் அவற்றை பெற்றுக்கொள்ளவில்ல என எனக்கும் சக உறுப்பினர் எஸ்.சுகிர்தனுக்கும் ஐங்கரசேன் அப்போது கூறியிருந்தார்.

அதேபோல் 40 மில்லியன் ரூபாய் செலுத்தி தனது மகளை ஐங்கரநேசன் எவ்வாறு வெளிநாட்டில் படிக்கவைத்தார்? என்பதற்கான ஆதாரங்கள் யாவும் எங்களிடம் உள்ளன என்றார் அஸ்மின் .

இதனை மறுதலித்த மாகாணசபை உறுப்பினர் ஐங்கரநேசன், நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல. என்னுடைய மகளை எங்கே படிக்க வைக்கவேண்டும் என்பதை நான் தீர்மானிப்பேன். அதை குறித்து கவலைப்படவேண்டாம் என்றார்.

நான் எப்படி பணம் செலுத்தினேன் என்பதற்கான ஆதாரம் இருக்கிறது என்றால் அதனை இப்போது வெளிப்படுத்துங்கள். மேலும் 2 பெட்டி நிறைய காசு கொண்டுவந்தார்கள் என நான் எப்போதும் -எங்கேயும் கூறவில்லை – என்றார்.

தொடர்ந்தும் உறுப்பினர் அஸ்மின் உரையாற்றுகையில், தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் வேட்பாளர்கள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிடவேண்டும். பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் தங்கள் சொத்து விபரங்கள் குறித்து வெளிப்படுத்தவேண்டும்.

இந்த இடத்தில் நான் கேட்கிறேன், முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் தங்கள் சொத்து விவரங்களை வெளியிடவேண்டும் என முழங்கினார்.

யானை அடிக்க முன்னர் தானே அடித்துக்கொண்டு ஓடி ஒழிந்துள்ள விக்கி வருவாரா 11ம் திகதி தருவாரா பதில்?

பீமன்.


Read more...

நான்கு தேரர்கட்கு நீதிமன்று பிடியாணை! ஞானசார தேரரின் மனு நிராகரிப்பு

கடந்த ஆண்டு இடம்பெற்ற அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் போராட்டத்தின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக பொலிஸாரால் இனம்காணப்பட்டுள்ளதாக கூறப்படும் நான்கு முன்னணி தேரர்கட்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.

பெங்கமுவெ நாளக தேரர், மாகல்கந்தே சுதத்த தேரர், இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மற்றும் மெடில்லே பன்யலோக தேரர் ஆகியோருக்கெதிராகவே மேற்படி பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர் தனது தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்வதற்கு அனுமதி கோரிய மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகயில் குற்றவாளியென காணப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, நீதிமன்றத்தை அவமதித்ததாக கடுமையான உழைப்புடன் 06 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பினை எதிர்த்து ஞானசாரதேரரால் சமர்பிக்கப்பட்ட மனு இன்று 31ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்ததுடன் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஞானசாரதேரரை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

Thursday, August 30, 2018

ஏமாற்றாதே! ஏமாறாதே! - விஜய பாஸ்கரன்

1977 இல் இலங்கையில் தமிழர்கள் தொகை 35 இலட்சம்.இதில் 20 இலட்சம் வடகிழக்கு தவிர்ந்த தென் பகுதிகளில் வாழ்ந்தார்கள்.மீதி 15 இலட்சம் இதில் பத்து இலட்சம் தமிழர்கள் குடாநாட்டில் வாழ்ந்தார்கள். மீதமுள்ள ஐந்து லட்சம் மக்கள் வன்னி, மன்னார் மற்றும் கிழக்குப்பகுதியில் வாழ்ந்தார்கள். அந்த ஐந்து லட்சம் மக்களை வைத்துக்கொண்டு எப்படி வடகிழக்கு நிலப்பரப்பை பாதுகாக்க முடியும்?

1948 இல் பிரசாவுரிமை சட்டத்தை எதிர்த்து அதற்கு காங்கிரஸ் ஆதரவளித்த காரணத்துக்காக செல்வநாயகம்,அக் கட்சியில் இருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்தார்.தமிழ் மக்கள் தொடர்பாக எந்த தெளிவான சிந்தனையும் இருக்கவில்லை.இன்றுவரைஅதே தொடர்கதை .

எந்த மலையக மக்களை காரணமாக காட்டி செல்வநாயகம் வெளியேறினாரோ அதன் பிற்பாடு அந்த மலையக மக்களைப்பற்றி செல்வநாயகமோ தமிழரசுக்கட்சியோ சிந்திக்கவில்லை.அவர் தனிக்கட்சி அமைக்க ஒரு காரணம் தேவைப்பட்டது. அவ்வளவுதான்.

தமிழ்த் தேசியம் சிங்கள இனவாதம் என தமிழ்மக்களுக்கு பூச்சாண்டி காட்டிய தமிழரசுக்கட்சி இந்த தமிழ்தேசியத்தைக் கட்டிக்காக்க என்ன செய்தது? தமிழுக்காக என்ன செய்தார்கள்?தமிழ் தேசியத்தை வலுப்படுத்த என்ன செய்தார்கள்? என் திட்டங்கள் இருந்தன? யாழ்ப்பாணத்தில் மேடைபோட்டு இனவாதம் பேசி கரகோசம் பெற்றதைத் தவிர என்ன செய்தார்கள்.

பெரும்பான்மைத் தமிழர்கள் தென்னிலங்கையிலேயே வாழ்ந்தனர். அந்த தமிழர்கள் தொடர்பாக என்றாவது தமுழரசுக்கட்சி சிந்திக்கவில்லை.வடக்கு கிழக்குக்கு வெளியே புத்தளம் மாவட்டம் இருந்தது. இங்கே தமிழர்களே புத்தளம், சிலாபம் பகுதிகளில் வாழ்ந்தார்கள்.இவர்களைப் பற்றி என்றாவது சிந்தித்தார்களா?

அம்பாறை கந்தளாய் திட்டங்களால் தமிழர் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள். அன்றைய காலங்களில் காணி அதிகாரம் அரச அதிபர், பிரிவுக் காரியாதிகாரி, மாவட்டக் காணி அதிகாரிகளிடமே இருந்தது. இந்தக் குடியேற்றங்களில் தமிழர்களுக்கும் பங்குகள் கிடைத்தன. அன்றைய காலங்களில் கிழக்குத் தமிழர்கள் போதியளவு நிலவளங்களோடு வாழ்ந்தார்கள். இதனால் இந்தக் குடியேற்றங்களில் அக்கறை கொள்ளவில்லை. இங்கே குடியேற்ற தகுதியான மக்களை தமிழ்அரசியல்வாதிகள் தேடவில்லை.இன்னமும் அம்பாறை திருகோணமலையில் நகர சுத்தி தொழிலாளர்களுக்கு காணிகள் இல்லை.இன்றளவும் இந்த மக்கள் பற்றிய கரிசனை இல்லை.தவறுகள் யாருடையது?

அன்றைய கல்லோயா கந்தளாய் தொடங்கி இன்றுவரை சிங்கள அரசியல்வாதிகள் நிலமற்ற ஏழைகளுக்கே காணிகளை வழங்குகிறார்கள். அன்று வடக்கு யாழ்ப்பாணத்தில் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களில் பலர் காணிகள் இல்லை.வறுமையானவர்களாகவே வாழ்ந்தார்கள். இவர்களை இந்தப் பகுதிகளில் குடியேற்றி இருந்தால் இன்று பூர்வீக நிலவளம் பாதுகாக்கப்பட்டிருக்கும்.இன்றைய யாழ்பாண மக்கள் நெருக்கடி குறைந்திருக்கும்.

1977 லேயே ஐந்து லட்சம் வன்னி மற்றும் கிழக்கில் வாழந்தார்கள் என்றால் 1948-50 களில் தமிழர் தொகை எவ்வளவாக இருந்திருக்கும்.

தமிழத் தேசியம்,சிங்கள பேரினவாதம் என்று சொல்லியே தமிழ் அரசியல்வாதிகள் காலத்தைக் கடத்துகிறார்கள்.இதுவரைக்கும் தமிழ்த் தேசியத்தைக் கட்டிக்காக்க என்ன செய்தார்கள்.பழியை இலகுவாக அரசாங்கத்தின் மேல் போட்டுவிட்டு தப்பி ஓடுகிறார்கள்.

இன்று இஸ்லாமிய வெறுப்பும் வளர்க்கப்பட்டுள்ளது. அவர்கள் தம்மை இஸ்லாமியர்களாகவே அடையாளப்படுத்துகிறார்கள் என்பது உண்மை. அவர்கள் பெரும்பாலும் வடக்கு கிழக்கில் வாழந்தபோதும் தென்னிலங்கையில் வாழ்ந்த இஸ்லாமிய மக்களைக் கைவிடவில்லை. சொந்த மொழி தமிழைக் கைவிடவில்லை. எத்தனையோ இடர்களை கண்டபோதும் இஸ்லாமிய ஒருமைப்பாட்டை கைவிடவில்லை. ஆனால் நமது தமிழ் அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள். தெற்கே இஸ்லாமிய மக்களால், மலையக மக்களால் தமிழ் காக்கப்பட்டது. மேற்கே புத்தளத்தில் தமிழ் அழிந்தது. எங்கே போனார்கள்?

1972 வரை யாழ் குடாநாட்டுக்கு வெளியே தமிழர்களுக்கு நல்ல பாடசாலைகள் இல்லை. நல்ல ஆசிரியர்கள் இல்லை. நல்ல கல்விபெற யாழ்ப்பாணமே வரவேண்டி இருந்தது. இதற்காக தமிழ் அரசியல்தலைவர்கள் செய்தது என்ன? நல்ல வைத்தியர், வைத்தியசாலை கூட இல்லை. இதற்கெல்லாம் இனவாதமா காரணம்? அரசாங்கமா பொறுப்பு?

வடக்கே குடாநாட்டில் சாதிவெறிகொழுந்து விட்டு எரிந்தது? இதை மாற்ற என்னநடவடிக்கை எடுத்தார்கள்? அதைவிட பிரதேசவாதம் வளர்ந்தது. இஸ்லாமியதமிழர்கள் நம்பகத் தன்மையை இழந்தார்கள். இதைப்பற்றி என்றாவது சிந்திக்கவில்லை. தமிழத் தேசியம் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது? அன்றைய செல்வநாயகம் தொடங்கி இன்றைய மாவை, விக்கி, சிறீதரன்வரை ஒரே நாடகங்களையே அரங்கேற்றுகிறார்கள். நிறுத்துங்கள்! ஏமாற்றியது போதும்.

அன்றில் இருந்து இன்றுவரை இதுவே தமிழர்களின் அரசியல். கொள்கை இல்லை. செயற் திட்டங்கள் இல்லை. இனவாதம் என்ற நெம்புகோலை வைத்து தமிழர்களின் அரசியலை பந்தாக உருட்டி விளையாடுகிறார்கள். இந்த இனவாதம் தென்னிலங்கை இனவாதிகளுக்கு அரசியலுக்கு தீனி போடுகிறது.

வடகிழக்கில் நிலங்கள் பறிபோவதற்கு அரசாங்கம் காரணமல்ல. தமிழ் அரசாங்க அதிகாரிகளும் அரசியல்வாதிகளுமே காரணம். எந்தவித திட்டங்கள், செயற்திறன்கள் உங்களிடம் இல்லை. வெறுமனே அரசாங்கம், சிங்கள இனத்தின் மேல் பழிபோடுவது அவசியமற்றது.

இனவாதங்களை தூண்டி மக்களைஏமாற்ற வேண்டாம். இவர்களின் இனவெறிகளை நம்பி மக்களும் ஏமாறவேண்டாம்.

Read more...

Wednesday, August 29, 2018

தென்கிழக்குப் பல்கலைக்கலைக்கழகத்தில் மாணவிக்குப் பாலியல் தொல்லை!

மூன்று குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சிரேஷ்ட விரிவுரையாளர் பதவி இழந்தார்! (ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்தமை உட்பட மூன்று குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் குறித்த விரிவுரையாளர் கடந்த வருடம் பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே அவர் அதே திகதியிலிருந்து பதவி நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற மாணவி ஒருவரை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியமை, அவருக்கு உள ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தியமை மற்றும் இந்த விவகாரம் தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொள்ளக் கூடாது என்றும், அவ்வாறு முறையிட்டால் பரீட்சையில் சித்தியடையாது செய்வேன் என்று அச்சுறுத்தியமை என்பன தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதனையடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாத காலப் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் காரணமாக பல்வேறு வாதப்பிரதிவாதங்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருந்ததுடன் குறித்த சிரேஷ்ட விரிவுரையாளரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்குமாறும் கோரிக்கைகள் வலுப்பெற்றிருந்தன.

இவ்வாறானதொரு நிலையிலே அவர் சிரேஷ்ட விரிவுரையாளர் பதவியிலிருந்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் இடைநிறுத்தப்பட்டதுடன், அவருக்கான மாதாந்தக் கொடுப்பனவாக, அவர் பெற்று வந்த மாதச் சம்பளத்தின் அரைப் பகுதி மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பல்கலைக்கழக பேரவையினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் கொழும்பு, பல்கலைக்கழக சட்ட பீட விரிவுரையாளர்கள் அடங்கிய குழுவினரால் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனையடுத்து அவர் மீதான மூன்று குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதனையடுத்து குறித்த விரிவுரையாளருக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டுமென விசாரணைக் குழு சிபார்சு செய்து தென்கிழக்குப்ப ல்கலைக்கழக பேரவைக்கு தமது அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தது.

இது தொடர்பில் கடந்த மாதம் கூடி ஆராய்ந்த தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவை அவரை பணியிலிருந்து நீக்குவதென தீர்மானித்தது. இதன்படி அவர் பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்ட காலப் பகுதியிலிருந்து பதவி நீக்கஞ் செய்வதாக பல்கலைக்கழகப் பேரவை தீர்மானித்தது.

அத்துடன், அவர் பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்ட காலத்திலிருந்து அவருக்கு மாதாந்தம் வழங்கப்பட்ட அரை மாதச் சம்பளத்தையும் மீளப் பெறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அந்தப் பணத்தை அவரது பணிக்கொடை கொடுப்பனவிலிருந்து மீளப் பெறுவதாகவும் பல்கலைக்கழகப் பேரவை தீர்மானித்துள்ளாகவும் தெரிய வருகிறது.

இது தொடர்பான கடிதம் பதவி நீக்கஞ் செய்யப்பட்ட குறித்த சிரேஷ்ட விரிவுரையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

இதேவேளை, தென்கிழக்குப் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் சில மாதங்களுக்கு முன்னர் உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ நாடாளுமன்றில் தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு, அங்குள்ள மாணவிகள் பாலியல் லஞ்சம் கொடுக்காமல் சில பாடங்களில் தேர்ச்சி அடைய முடியாது என்று அவர் தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் இந்த உரை தென்கிழக்கு பல்கலைக்கழக சமூகத்தினரிடையே பாரிய சர்ச்சையைத் தோற்றுவித்திருந்ததோடு கண்டனங்களுக்கும் உள்ளாகியிருந்தது.

குறித்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு விரிவுரையாளர் மீதான குற்றச்சாட்டை வைத்துக் கொண்டு, அந்தப் பல்கலைக்கழகத்தை இழிவுபடுத்தும் வகையிலும், அங்குள்ள ஒட்டுமொத்த மாணவிகளை அவமதிக்கும் வகையிலும் அமைச்சர் கருத்து வெளியிட்டமையைப் பலரும் வெளிப்படையாக கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே குறித்த விரிவுரையாளர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

'மெட்ரோ நியூஸ்'

Read more...

எல்லைநிர்ணய மீளாய்வுக்குழுவின் பணி. வை எல் எஸ் ஹமீட்

எல்லைநிர்ணய மீளாய்வுக்குழுவை பிரதமர் தலைமையில் சபாநாயகர் நியமித்துவிட்டார். இவர்கள் மாகாணசபைச் சட்டத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்ய, தேர்தல்முறையை மாற்றியமைக்க, பழைய தேர்தல்முறைக்குச்செல்ல திருத்தங்களை முன்வைப்பார்கள்; என்றெல்லாம் ஊடகங்கள் நிறைய எழுதுகின்றன. அல்லது பலரும் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இவை எதுவும் இந்தக்குழுவின் பணியல்ல.

இந்தக்குழு மாகாணசபை தேர்தல்கள் (திருத்த) சட்டம் ( Act No 17 of 2017) பிரிவு 12 இன் படியே நியமிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்படி சட்டத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணிக்கு மேலதிகமாக எதையும் செய்யமுடியாது. அவ்வாறு செய்தால் அது அந்தக்குழுவின் பணியாக கொள்ளப்படவும் முடியாது.

குழுவின் பணி

பிரிவு 13 இல் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் இக்குழு, தொகுதிகளின், பெயர், இலக்கம், மற்றும் எல்லைகளில் மாற்றங்கள் செய்யலாம். அதாவது எல்லைகளை மாற்றியமைக்கலாம். பல் அங்கத்தவர் தொகுதிகளை அல்லது புதிய தொகுதிகளை உருவாக்கலாம். இதற்குமேல் எதுவும் செய்யமுடியாது.

பிரிவு 14 இன்படி, இதனை இரண்டுமாதங்களுக்குள் பூர்த்திசெய்து ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க வேண்டும். அவருக்கு இது தொடர்பாக ஒரேயொரு பணிதான் இருக்கிறது.

பிரிவு 15 அதனைக் கூறுகிறது. அதாவது, அறிக்கை கிடைத்ததும் புதிய அவ்வெல்லை நிர்ணயத்தை (வர்த்தமானியில்) பிரகடனப்படுத்த வேண்டும். அவ்வளவுதான். மிகுதி தேர்தல் ஆணைக்குழு விற்குரியது.

இந்த அறிக்கையை ஜனாதிபதி அங்கரிக்கவேண்டிய அவசியமுமில்லை. நிராகரிக்க அதிகாரமுமில்லை. திருத்தமும் செய்யமுடியாது. வேறு சிபாரிசுகள் வழங்கப்படவும் முடியாது. வழங்கப்பட்டாலும் வர்த்தமானியில் பிரசுரிப்பதை நிறுத்தி வேறு எதுவும் செய்யமுடியாது. பாராளுமன்றம் அங்கீகரிக்கவும் தேவையில்லை.

எனவே, ஊடகங்களில் எழுதப்படுவதை வைத்து யாரும் குழம்பவேண்டாம்.

சில தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் வேறு சிலரும், பாராளுமன்றம் முழுமையாக நிராகரித்த ஒன்றை எவ்வாறு ஒரு குழு திருத்தி அமுல்படுத்துவது. பாராளுமன்றத்தைவிட குழு உயர்ந்ததா? என்ற கேள்வியை எழுப்புவதாக சில ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அது நியாயமான கேள்வி. ஆனாலும் சட்டம் அப்படித்தான் சொல்கிறது.

பாராளுமன்றம் நிராகரித்தால்தான் குழுவுக்கே வேலை ஆரம்பமாகிறது. எனவே, இந்தக்கேள்வி சட்டமாக்கமுன் எழுப்பப்பட்டிருக்க வேண்டும். இலங்கையில் ஒரு சட்டத்தை மீளாய்வு செய்யும் அதிகாரம் நீதிமன்றுக்கு இல்லை. இந்தியாவில் இருக்கின்றது.

எனவே, சுருக்கமாக நாட்கள் கரைய ஆரம்பித்து விட்டன. மாதம் இரண்டுதான் இருக்கிறது. ஒரேயொரு தீர்வு, திருத்தம் சட்டம்தான். திருத்தச்சட்டம் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். வர்த்தமானியில் பிரசுரிக்க வேண்டும். ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெறச் செய்யவேண்டும். நீதிமன்றத்திற்கு விரும்பியவர்கள்செல்ல இருவாரகால அவகாசம் கொடுக்கவேண்டும். நீதிமன்றம் இது தொடர்பாக ஆராய்ந்து தனது முடிவைச்சொல்ல காலஅவகாசம் வேண்டும்.

இருப்பதுவோ, இரு மாதங்கள். திருத்தச் சட்டத்தை சாட்டாகவைத்து அறிக்கையைத் தாமதிக்க முடியாது.

எனவே, அவசரமாக திருத்தச் சட்டத்தைக் கொண்டுவாருங்கள்.

Read more...

Tuesday, August 28, 2018

புதியதோர் உலகம் செய்வோம்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

உங்களின் முன்னால் இக்கட்டுரையை ஒரு விண்ணப்பமாக வைக்கிறேன். அதென்ன விண்ணப்பம் என்கிறீர்களா? அதுபற்றி கொஞ்சம் விரிவாய்ச் சொல்லவேண்டியிருக்கிறது. என் கட்டுரைகளைப் படியுங்கள் என்று,
என்றும் எவரையும் நான் வலியுறுத்தியதில்லை. ஆனால், இன்று இக்கட்டுரையைக் கட்டாயமாகப் படியுங்கள் என, உங்களிடம் வேண்டி நிற்கிறேன். முக்கியமாக எம் இனத்தின் நாளைய தலைவிதியை நிர்ணயிக்கப்போகும், இளைய தலைமுறையினர் இக் கட்டுரையை கட்டாயம் படிக்கவேண்டும் என்பது என் விருப்பம்.

அதைவிட முக்கியம் உயர்கல்வி முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள், இக் கட்டுரையைப் படிப்பது. அதற்கான ஒரு காரணம் உண்டு. அது என்ன என்பதை பின்னால் சொல்கிறேன். அதற்கு முன்….

✍✍✍

நடந்து முடிந்த முப்பதாண்டு அவலங்களால், எம் இளையோரின் வாழ்வில் பல தேக்கங்கள். கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக, திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழ்ந்தாற் போன்ற அனுபவத்திற்கு, ஆளாக்கப்பட்ட துரதிஷ்டசாலிகள் அவர்கள்.

உயிர்ப்பயம், உடைமைப்பயம், உலகத்தொடர்பின்மை, நிமிர முடியா நெருக்கடிகள் என, பல விடயங்கள் அவர்களைப் பாதித்திருந்ததால், தமிழினத்தின் அறிவுலகப் புதிய தலைமுறை, ஓர் பெரிய பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.

அதென்ன பாதிப்பு என்கிறீர்களா? ஆளுமையின்மை. இதுவே மேற் கேள்விகளுக்கான ஒரே பதிலாம்.

✍✍✍

தனிமனித எழுச்சிக்கும் ஓர் இனத்தின் எழுச்சிக்கும், ஆளுமை என்பது மிக அவசியமானது. கல்வி, செல்வம், வீரம், விளையாட்டு, இலக்கியம், சமயம், கலை என, பல்துறைப்பட்ட ஆற்றல்கள் தனிமனித, சமூக உயர்ச்சிக்கு அவசியமானவை.

ஆனால், இவற்றால் மட்டும் உயர்வுகள் கிட்டிவிடப்போவதில்லை. ஒரு மரத்தை அதன் கிளைகள், இலைகள், பூக்கள், பழங்கள் என, பலவும் அழகு செய்யலாம். அன்றேல் பயன் செய்யலாம். ஆனால், இவையெல்லாவற்றின் உயிரோட்டம் தங்கியிருப்பது அம்மரத்தின் வேரில்தான். மேற்சொன்ன அனைத்தும் வேர் கருகின் கருகிப்போம்.

அதுபோலத்தான், கல்வி, செல்வம், வீரம், விளையாட்டு, இலக்கியம், சமயம், கலை எனும், அனைத்துத் திறமைகளின் பின்னணியில் இருப்பது ஆளுமையே. அது இன்றேல் இவையனைத்தும் இருந்தும் பயன் அன்றாம்.
அந்த உயர்ச்சியின் உயிரனைய ஆளுமையைத்தான், நம் இளையோர் இன்று இழந்து நிற்கின்றனர்.

✍✍✍

இன்றைய எமது இளைஞர்களிடம் மற்றைய திறமைகள், அனைத்தும் நிறைந்து கிடக்கின்றன. ஆனால், ஆளுமையின்மையால் இவற்றின் பயனை அடையமுடியாமல். நம் இளைஞர்கள் தத்தளிப்பதை நான் கண்கூடாகக் காண்கிறேன்.

✍✍✍

ஒரு காலத்தில் நம் இனத்தில் அறிஞர்களும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும், ஆளுமைமிக்கவர்களாய் தலைமைப் பண்போடு செயலாற்றினார்கள். அதற்காம் சில உதாரணங்கள் சொல்கிறேன்.

✍✍✍

தமிழினத்தின் அன்றைய அரச அதிபர்கள், இன்றைய மத்திய அமைச்சர்களை விடப் பெரிதும், துணிவும் ஆளுமையும் மிக்கவர்களாய் கம்பீரத்துடன் வாழ்ந்தனர்.

பிரதமர், ஜனாதிபதி போன்றோரின உத்தரவுகளைக் கூட ஆராய்ந்து, உடன்பாடின்றேல் அவற்றை நிராகரிக்கும் ஆற்றல் அவர்களிடமிருந்தது. யாழ். நூலக எரிப்பின்போது அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். இட்ட உத்தரவை, எதிர்த்து நிற்கும் துணிவுடன் அன்றைய யாழ் அரசஅதிபர், இருந்ததாய்ப் பலரும் சொல்வார்கள். இது அன்றைய நிர்வாகிகளின் ஆளுமை.

✍✍✍

அதுபோலவே நம் கல்வியாளர்கள், உலக அரங்கைச் சமன் செய்யும் ஆற்றலோடும் ஆளுமையோடும் அன்று திகழ்ந்தார்கள். யாழ் இந்துக்கல்லூரியின் அதிபராய் இருந்த சபாலிங்கம், சென்ஜோன்ஸ் கல்லூரி அதிபராய் இருந்த ஆனந்தராஜா, ஹாட்லிக் கல்லூரி அதிபர் பூரணம்பிள்ளை ஆகியோரின் ஆளுமையை, இன்றும் யாழ்ப்பாணம் பேசுகிறது.

அதற்குப் பின்னர்கூட ஆளுமைமிக்க கல்வியாளர்கள் நம் மண்ணில் இருந்தார்கள். இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் அட்டூழியங்கள் செய்து முடித்திருந்த வேளையில், மூடியிருந்த யாழ் பல்கலைக்கழகத்தை மீண்டும் திறப்பதற்காய், அப்போதைய இலங்கைக்கான இந்திய இராணுவக் கட்டளைத்தளபதி மஞ்சித்சிங், யாழ்பல்கலைக்கழகத்தில் கூட்டம் ஒன்றைக் கூட்டியபோது, 'எங்கள் மண்ணில் அழிவுகளைச் செய்யும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது?" என்று, அந்தப் பயச் சூழ்நிலையிலும் பேராசிரியர் டாக்டர் கூல் துணிந்து பேசியதைக் கேட்டு, அந்த இராணுவ அதிகாரியே அதிர்ந்து பணிந்தாராம்.

இச் சம்பவத்தை பிறர் சொல்ல அறிந்து மகிழ்ந்திருக்கிறேன். இவை அன்றைய கல்வியாளர்களின் ஆளுமை.

✍✍✍

அன்றைய நம் அரசியல்வாதிகளைக் கண்டு, பெரும்பான்மையின அரசியல்வாதிகளும், மற்றை நாட்டுத் தலைவர்களும் கூட, மனதால் மரியாதை செய்யும் நிலை இருந்தது. தந்தை செல்வாவின் இறுதிக்கிரியை முற்றவெளியில் நடந்தபோது, அந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் எம். சிவசிதம்பரம் அவர்கள், உயர் மேடையில் நின்று உரையாற்றிய தொனியைக் கேட்டு, அந்நிகழ்வுக்கு வந்திருந்த சிங்களத் தலைவர்களும் வெளிநாட்டுத் தூதர்களும், மெய்சிலிர்த்ததைக் கண்ணால் கண்டிருக்கிறேன்.

யு.என்.பி. கட்சி தேர்தலில் பெருவெற்றி பெற்று, முன்னால் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமையைப் பறிக்க முடிவு செய்தபோது, நமக்கு எதிரானவர் அவர் எனத்தெரிந்திருந்தும் ஜனநாயகத்திற்கு மாறான செயற்பாடு இதுவென, அமிர்தலிங்கம் உரையாற்றியபோது இலங்கைப் பாராளுமன்று அதிர்ந்தது உண்மை.

அமரர் அமிர்தலிங்கம் பாரதப் பிரதமர் அன்னை இந்திராகாந்தியுடன், பல உலகத்தலைவர்கள் சேர்ந்திருந்த விருந்தில் கலந்து, அவர்களுக்குச் சமமாய் இருந்து உரையாடும் ஆற்றலும் தகுதியும் பெற்றிருந்தார். இது அன்றைய அரசியல்வாதிகளின் ஆளுமை.

✍✍✍

இன்று இவை ஏதும் எம் இனத்திடம் இல்லை. நிர்வாகத்திலோ, அறிவுலகிலோ, அரசியலிலோ, இத்தகைய துணிவுமிக்க ஆளுமையாளர்களை காண்பதென்பது அரிதிலும் அரிதாகிவிட்டது. அண்மைக்காலத்தில்,
எனக்குத் தெரிந்து சத்தியம் சார்ந்து துணிந்து ஆளுமை செய்பவர்களாய், மேல் நீதிமன்ற நீதியரசர் இளஞ்செழியனையும், யாழ் மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவையுமே காணமுடிகிறது. அவர்கள் பற்றியும் ஆயிரம் விமர்சனங்கள்.

எவர் எதைச் சொன்னாலும் அவர்களது ஆளுமையை ரசிக்கவேண்டித்தான் இருக்கிறது. வேறுவேறு துறைகளில் வெளிப்படாமல் ஒருசிலர் இருக்கக்கூடும். பெரும்பான்மை பற்றிச் சொல்வதானால், நம் இனம் ஆளுமையாளர்களை இழந்து நிற்பதே உண்மையாம்.

✍✍✍

வலியோரை வழிமொழியும் அறிஞர்களே, கல்வியுலகிற்கு இன்று தலைமை தாங்குகின்றனர். மேலதிகாரிகள் காலால் இட்ட கட்டளையை, தலையால் செய்யக் காத்திருக்கும் கோழைகளே, நிர்வாக உலகிற்கு இன்று தலைமை தாங்குகின்றனர்.

தம்மக்கள் மத்தியில் வீரவசனம் பேசிவிட்டு, கொழும்பில் பேரின அரசியல்வாதிகளுக்கு கால்தடவிச்சலுகைபெறும், வேடதாரிகளே அரசியல் உலகிற்கு இன்று தலைமை தாங்குகின்றனர்.

இந்த மூன்று வர்க்கத்தாரும்தான், இன்றைய நம் இளைஞர்களின் ஆளுமை இலட்சியங்கள். என்னே நம்விதி.

✍✍✍

எப்படி இருந்த இனம் இன்று எப்படி ஆகிவிட்டது? மேற்சொன்ன மும்மூர்த்திகளின் ஆளுமையைப் பின்பற்றி வாழத்தலைப்பட்டால், ஓர் இளையதலைமுறை எப்படி நிமிரும்? தாம் பொய்யர்கள் எனத் தெரிந்துகொண்டு, அப்பொய்மை வெளிப்படாமல் இருப்பதற்காக, இளையோரின் உணர்ச்சிகளை தேசப்பற்றின் பேரால் தூண்டி, தம் மாயவலைக்குள் மடக்கி வைத்திருக்கிறார்கள் இவர்கள்.

இப்பாரிய மாயவேலியை உடைத்துக் கொண்டு, ஆளுமை மிக்கவர்களாய் நம் இளையோர் மாறுவது எங்ஙனம்? அது பற்றி உங்களுடன் பேசத்தான் இக்கட்டுரை.

✍✍✍

இழந்த ஆளுமையின் மீட்சிக்காய், நம் இளையோர் செய்யவேண்டிய வேலைகள் எவை? அவற்றைத் தெரிந்து கொள்வது மிகமிக அவசியம். அவைபற்றி ஒவ்வொன்றாய்ச் சொல்கிறேன்.

✍✍✍

நம் இளையோரின் ஆளுமையின்மையின் முதற்காரணம், இனத்துள் ஆளுமை முன்னுதாரணங்கள் இல்லாமை என்பது பற்றி முன்னர் பார்த்தோம்.

மற்றவர்களைக் குறை சொல்லி என்ன பயன்? நாமே நம்மை நிமிர்த்தவேண்டியதுதான்! நம் இளையவர்கள் ஆளுமைக்கான முதற்செயற்பாடாக, பன்மொழித்திறமையை உடனடியாக வளர்க்கவேண்டும். நம்தமிழ் மண்ணைவிட்டு இலங்கை அளவில் நாம் விரிந்து செயற்படவேண்டுமானால், சிங்கள மொழி அறிவின்றி அது சாத்தியமில்லை. அதுபோலவே உலக அளவில் நாம் விரிந்து செயற்படவேண்டுமானால், ஆங்கில மொழி அறிவின்றி அது சாத்தியமில்லை. இவ்விரு மொழி பயிற்சியின்மையே, நம் இளையோரின் ஆளுமையின்மையின் இரண்டாம் காரணம் என்பேன்.

✍✍✍

சிங்கள, முஸ்லிம், மலையக இனத்தார் இவ் உண்மையைத் தெரிந்துகொண்டு, மும்மொழிப் பயிற்சி பெற்று இன்று ஆளுமையாற்றல் மிக்கவர்களாய்த் திகழ்கிறார்கள். மொழியாற்றல் வந்ததுமே, எவருடனும் தம் பிரச்சினையைப் பேசித்தீர்க்கும் ஆற்றல் வர, ஆளுமையின் அரைப்பகுதி சாத்தியமாகிவிடுகிறது.

இன்றைய புதியதலைமுறை அரசியல்வாதிகள், அறிஞர்கள், நிர்வாகிகள் என, பெரும்பான்மையினோர் இப்பன்மொழி ஆற்றலை இழந்திருப்பதால்த்தான், தம் கருத்தை மற்றவர்க்கு உரைக்கும் திறனின்றி, ஆளுமை அற்று அடிமைப்பட்டு கூசிக்குறுகி நிற்கின்றனர். மற்றைய இனங்களின் இளையோர் இம் மொழியாற்றலால் ஆளுமைபெற்று, நிமிர்ந்து நிற்பதைக் கண்டு வியக்கிறேன்.

தென்பகுதிகளில் கல்லூரிகள் முடியும் வேளையில், சில சந்தர்ப்பங்களில் வீதிவழியால் செல்ல நேரிடும். அப்போது கல்லூரி முடிந்து வரும் பேரின இளைஞர்களைக் காண்பேன் . அவர்களின் கம்பீரம், இளமைக்கே உரித்தான உற்சாகம், மேன்மையுறும் நடையுடை பாவனை இவற்றையெல்லாம் காண்கையில், எம் இளைஞர்கள் சற்றுப்பின்தங்கி விட்டார்களோ என எண்ணி என் நெஞ்சம் வாடுவதுண்டு.

✍✍✍

பரீட்சைகளில் மற்றை இனத்தாரைவிட, சிறந்த சித்திகளைப் பெற்ற எம்முடைய இளைஞர்கள், பன்மொழிப் புலமையின்மையால் மாணவர்கள் ஒன்றுகூடும் இடங்களில், கூச்சத்தோடு ஒதுங்கி நிற்கின்றனர். பல ஆற்றல்கள் இருந்தும் அதை வெளிப்படுத்த முடியாமையால் ஏற்படும் நாணத்தில், நம் இளையோரின் ஆளுமை அப்படியே நசிந்து போகிறது.

✍✍✍

ஆளுமையின்மையின் மூன்றாவது காரணியாய் இருப்பது, நம் கடந்தகால வரலாறு. கடந்த காலங்களில் நமது இயக்கங்களாலும், இடையிடை உள் நுழைந்த பிற இராணுவங்களாலும், நம் மக்களுக்கு உபதேசிக்கப்பட்ட ஒரே மந்திரம், கட்டளையை ஏற்றுப் பணிந்து போ! என்பதுவேயாம்.

இம்மந்திரக்கட்டிலிருந்து இன்றும் நம் இளையோர் விடுபடவேயில்லை. இளையோர் என்ன இளையோர் முதியோரும்தான்! சிறுமைகண்டு பொங்குதல் என்பதை நம் இனத்தார் மறந்து பலகாலம் ஆயிற்று. சிலர் பொங்குவதாய்ப் பொய்மை செய்கிறார்கள். பின்னர் தம் சுயநலத்திற்காய்ப் பணிந்து திரைமறைவில் பாதம் வருடுகிறார்கள்.

அடங்கிப்போதல், நழுவிப்போதல், பிரச்சினைகளைத் தவிர்த்தல், நமக்கேன் என்று இருத்தல், சுயகருத்தின்மை போன்ற, ஆளுமைக்கெதிரான செயற்பாடுகலெல்லாம், நற்பண்புகளாய் நம் மக்கள் மத்தியில் உபதேசிக்கப்படும் அவலம், இன்று நம் இனத்தில் வேரூன்றி இருக்கிறது. பெரியவர்களின் இந்த ஆளுமையற்ற போக்கினையே, இளையோரும் பின்பற்றுதல் இயல்பன்றோ!

அதனால்த்தான் நம் இளையோர் மேற் பண்புகளோடு, நல்ல பிள்ளைகளாய்த் தம்மைக் காட்டி நிற்கின்றனர். இழிவை ஏற்றமாய்ப் பதிவு செய்யும் முயற்சி.

✍✍✍

மொத்தத்தில், முன்னுதாரணமின்மை, மொழிப்பயிற்சியின்மை, சுயசார்பின்மை என்பவையே, பெரும்பாலும் நம் இளையோரின் ஆளுமையின்மையின் காரணங்களாயின.

✍✍✍

இவற்றை யார் நீக்குவது? எங்ஙனம் நீக்குவது? இளையோரை ஆளுமைமிக்கவர்களாய் எங்ஙனம் ஆக்குவது? இவைதான் இன்று நம் இனத்தின் முன் இருக்கும் பெரிய கேள்விகள்.

✍✍✍

குறைகளைச் சுட்டிக்காட்டுவது எளிது. பட்டிமண்டபம் பேசிப்பேசி கம்பன்கழகத்தார்க்கு, பிழைபிடிப்பதில் வித்தகம் வந்துவிட்டது. பிழைபிடித்து என்ன பயன்? சரியைச் செய்யவேண்டாமா? எல்லோரது பிழைகளையும் எடுத்துக் காட்டும் கம்பன்கழகம், மேற்படி பிழைகளை நீக்கவும் மாற்றவும் ஏதேனும் முயற்சி செய்யுமா? உங்கள் மனக்கேள்விகள் எங்கள் செவிகளில் பதிவாகின்றன.

✍✍✍

உங்கள் கேள்விகள் நியாயமானவைதான். செய்யவேண்டும் என நாங்களும் விரும்பத்தான் செய்கிறோம். உங்களின் உதவியின்றி நாங்கள் தனித்து எதனைச் செய்யமுடியும்? தாய் நாட்டிலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எம் இனத்தார், தீமைகளை நடக்கவிட்டு பின் அதற்கான பிராயச்சித்தங்களைச் செய்வதையே, தொண்டு என நினைக்கின்றனர்.

அத் தொண்டுகளுக்கே அவர்கள் உதவிக்கரம் நீட்டுகின்றனர். 'கருணையைக் காட்டுவதற்கு முன் நிபந்தனையே, மற்றவர்கள் கஷ்டப்படவேண்டும் என்பதுதானே" என்று முன்பு ஓருமுறை எங்கள் கவியரங்கில், கவிஞர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் பாடியது நினைவிருக்கிறது. தீமைகள் வருவதை முன் உணர்ந்து தடுக்கும் முயற்சிகளை, நம்மவர்கள் தொண்டாய்க் கருதுவதில்லை. அத்தொண்டுகளுக்கு உதவிபுரிய விரும்புவதுமில்லை.

காரணம், முன்னைய செயற்பாட்டில் அவர்களுக்கு விளம்பரம் கிடைக்கும். பின்னயதில் அது கிடையாது என்பதேயாம். பிழைகளும் அதற்கான பிராயச்சித்தங்களும் நடந்துகொண்டேயிருக்கவேண்டும். அப்பிழைகள் வாராமல் தடுத்து சரிகளைச் செயற்படுத்தும் முயற்சிகள் தேவையற்றவை. இதுதான் இன்றைய ஈழத்தமிழர்களின் சித்தாந்தமாம்.

✍✍✍

கடந்த நாற்பதாண்டுகாலமாக கடுமையான போர்க் காலத்திலும், மக்கள் மனதை ஆறுதல்படுத்தி, வாழ்வு மீண்டும் மலரும் என நம்பிக்கையூட்டி, மொழிப்பற்றும் இனப்பற்றும் மதப்பற்றும் உருவாக்கி, ஆளுமையும் அறமும் புகட்டி நாம் செய்த தொண்டுகளுக்கு, நம் இனத்தாரிடமிருந்து இன்றுவரை போதிய ஆதரவு கிட்டவில்லை என்றே சொல்வேன். 'நமக்கென்ன? எப்படியும் இருந்துவிட்டுப் போகட்டும்," என்றும் ஏனோ நம்மால் இருக்கமுடியவில்லை. அதுதான் எங்கள் குறைபாடு.

✍✍✍

அதனால் எம் இளையோரின் வீழ்ச்சியின் அடிப்படையாயிருக்கும் ஆளுமையின்மை எனும் பெரும் குறையை நீக்கி நிறைவுண்டாக்க, கம்பன் கழகத்தால் புதிய முயற்சி ஒன்றை எடுக்க விரும்புகிறோம். அதற்கான ஆலோசனைகளையும் ஆதரவுகளையும் உங்களிடம் எதிர்பார்த்து நிற்கிறோம். அதென்ன புதிய முயற்சி என்கிறீர்களா? அதுபற்றி விரிவாய்ச் சொல்கிறேன்.

✍✍✍

இளையோரிடம் ஆளுமை வளரவேண்டும். அவர்களால் நம் இனம் உயரவேண்டும். அதற்கான ஒரு சிறிய கதவை நாம் திறந்தால் என்ன? எனும் எண்ணம் தோன்றியது. அவ் எண்ணம் என்ன? என்பதை சிறிது விபரிக்கிறேன்.

✍✍✍

உயர்தரப் பரீட்சை முடிவுகள் வருவதற்கும், பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கும் இடையில், கிட்டத்தட்ட ஆறுமாதங்களை நம் இளைஞர்கள் வீணே கழிக்கவேண்டியிருக்கிறது. இந்த ஆறுமாதங்களைப் பயன்படுத்தி நம் இளையோர்க்கு, ஆளுமை மற்றும் பன்மொழிப் பயிற்சிகளை வழங்கினால் என்ன? என்று தோன்றுகிறது. அப்பயிற்சிக்கான வழிமுறைகளைப் பின்வருமாறு அமைக்கலாம் என கருதுகிறோம்.

✍✍✍

முதல் நிலையில், பரீட்சை முடிவுகளை வைத்தும் அவர்களது இயல்பாற்றலைப் பரிசோதித்தும், இருபது அல்லது முப்பது மாணவர்களை தேர்ந்தெடுப்பது. பல்கலைக்கழகம் புகும் முழு மாணவர்களுக்கும், மேற்பயிற்சிகளை நடத்தும் பலம் இப்போதைக்குக் கம்பன்கழகத்திடம் இல்லை.

அதனாலேயே தேர்ந்தெடுக்கும் மாணவர் தொகையை எல்லைப்படுத்த நினைக்கிறோம். தேரந்தெடுக்கப்படும் மாணவர்களில் ஆண், பெண் என இருசாராரும் இணைத்துக் கொள்ளப்படுவர். இப்பணிக்கு பொருளாதார ரீதியாகப் பலரும் துணை செய்ய முன்வந்தால், தேர்ந்தெடுக்கப்படும் மாணவரின் எண்ணிக்கையை அதிகரிக்கமுடியும்.

✍✍✍

மேற்பயிற்சி கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் கொண்டதாய் அமையும். இவ் ஆறுமாதப் பயிற்சியிலும் மாணவர்கள் முழுமையாய்ப் பங்குபற்றவேண்டும். மாணவர்களுக்கு தங்குமிடவசதியும், உணவு முதலியவைகளும் வழங்கப்படும். தேவையேற்படும் பட்சத்தில் மாணவர்களிடம் அடிப்படை கட்டணம் பெறப்படும்.

கொழும்பு, மலையகம், திருகோணமலை, மட்டக்களப்பு எனும் தமிழ் பிரதேகசங்களிலும், எவையாவது இரண்டு சிங்கள பிரதேசங்களிலும், மாதந்தோறும் இம்மாணவர்கள் இடம் மாற்றித் தங்கவைக்கப்படுவர். ஆண்களுக்குத் தனியிடமும் பெண்களுக்குத் தனியிடமும், அவர்களுக்கான ஆண், பெண் பராமரிப்பாளர்களும் ஒழுங்கு செய்யப்படுவர்.

✍✍✍
மேற்கு நாடுகளிலிருந்து அழைக்கப்படும் ஆங்கிலேய விரிவுரையாளர்களே, ஆங்கில மொழிப்பயிற்சியினை நடாத்துவர். அதுபோலவே சிங்கள மொழிப்பயிற்சிக்கு சிங்கள ஆசிரியர்களே நியமிக்கப்படுவர். தகுதிபெற்ற தமிழ் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு அடிப்படைத் தமிழ் அறிவும் வழங்கப்படும்.

அதுபோலவே பன்மத அறிவும், அவ்வவ் மத அறிஞர்களால் மாணவர்களுக்குப் போதிக்கப்படும். இவைதவிர கணினிப்பயிற்சி, ஆளுமைப் பயிற்சி, நிர்வாகப் பயிற்சி போன்றவைகளும், தகுதி பெற்றவர்களைக் கொண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும். இவை எமது தற்போதைய அடிப்படை எண்ணங்கள்.

✍✍✍

கலாசார, இனபகிர்வுக்காக, பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள், குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இவ்விரண்டு வாரங்கள், சிங்கள, முஸ்லிம், மலையக, பறங்கி இனங்களைச் சார்ந்த இல்லங்களில், தங்கவைக்கப்படுவர். மற்றைய இனங்களுடனான உறவு வளர்ச்சிக்காக, இம் முயற்சி செயற்படுத்தப்படும்.

✍✍✍

பயிற்சியின் இறுதி மாதத்தில் இம்மாணவர்களுக்கு, மிகப்பெரிய நிறுவனங்களில் ஓரிரு நாட்கள் நிர்வாகப் பயிற்சி வழங்கப்படும். உயர் அதிகாரிகளைச் சந்திக்கும் முறை, வங்கி முதலிய நிறுவனங்களைக் கையாளும் முறை, உயர் ஆளுமையாளர்களைச் சந்திக்கும் முறை, நட்சத்திர ஹோட்டல்களில் விருந்துண்ணும் முறை போன்றவை அனுபவபூர்வமாக மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படும்.

வசதிப்பட்டால் உயர் அரசியல்வாதிகளையும், பெரு நிறுவனத் தலைவர்களையும் நேரடியாகச் சந்தித்து, உரையாடும் வாய்ப்புக்கள் உண்டாக்கிக் கொடுக்கப்படும்.

✍✍✍

இவைதவிர, தினம் ஒரு ஆளுமையாளரைச் சந்திக்கும் வாய்ப்பு, ஆளுமையாளர்கள் பற்றிய உரை, நவீன செயன்முறை ஊடான ஆளுமைப் பயிற்சி, தனித்த சுய ஆற்றலுக்கான வெளிப்பாட்டுப் பயிற்சி, ஊடகச் செயற்பாடுகள் பற்றிய பயிற்சி, சட்ட, மருத்துவ, இராணுவ நெறிமுறைகள் பற்றிய அறிவு, பல்லின கலை, (இசை, நாடகம்) இலக்கிய அடிப்படை அறிமுகம், விளையாட்டுத்துறைப் பயிற்சி, பல நாட்டு உணவுவகை அறிமுகம், குறித்த சில நிகழ்வுகளில் பங்கேற்கும் முறை, மற்றும் உடையலங்காரம், அதிர்வுகள் தரும் விடயங்களை எதிர்கொள்ளும் முறை, சமூகத்திற்கு உதவும் மனப்பாங்கு என்பனவான விடயங்களும், இம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.

✍✍✍

மேற்படி பயிற்சிகள், இராணுவ கட்டுப்பாட்டிற்கு நிகரான கட்டுப்பாட்டோடுதான், மாணவர்களுக்கு வழங்கப்படும். இப்பயிற்சிகள் முடிந்து வெளிவரும் மாணவர்கள், சமூகத்தில் தனித்து இனங்காணப்படத் தக்கவர்களாய்த் திகழ்வார்கள்.

✍✍✍

இது ஒரு பெரிய கனவு. கம்பன்கழகத்தின் இன்றைய பலத்தால் மட்டும், இக்கனவை நனவாக்க முடியும் என்று தோன்றவில்லை. முதலில் எமது இந்த நோக்கத்தின் அவசியத்தை தக்கவர்கள் உணரவேண்டும். பின் அதற்குத் துணைபுரிய முன்வரவேண்டும். பாரதியார் சொன்னால் போல,

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்
எதுவும் நல்கி இங்கெவ்வகையானும்
இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்.

என அனைவரையும் இத்திட்டத்திற்குத் துணைபுரிய வரவேற்று நிற்கிறோம். இவ்விடயத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவையும், நம் அரசியல்வாதிகளின் ஆதரவையும், நம் நாட்டின் தாழ்விலாச் செல்வர்களின் ஆதரவையும் நாம் நாடி நிற்கிறோம். இவ் எண்ணம் பற்றிய புதிய சிந்தனைகளை, அறிவுலகத்தாரும் ஆளுமையாளர்களும் மாணவர்களும் கூட எமக்கு வழங்கலாம்.

✍✍✍

அண்மையில் 'வேலைக்காரன்" என்ற தமிழ்ச்சினிமாவில், அதன் கதாநாயகன் அடிக்கடி ஒரு தொடரைச் சொல்வான். அத்தொடர் இன்று எம் இனத்திற்குத் தேவையானது. அதைப் பதிவு செய்து இக்கட்டுரையை முடிக்கிறேன்.

சொற்களிலேயே சிறந்த சொல் 'செயல்" என்பதே, உங்கள் ஆதரவுக்கும் ஆலோசனைக்குமாய்க் காத்திருக்கிறோம்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com