Friday, January 26, 2018

உண்மையும், யதார்த்தமும் மறைக்கப்படும் சாக்கடை அரசியல்! ‘அண்டம் காக்கைக்கும், குயில்களுக்கும் பேதம் புரியலே’ வி. சிவலிங்கம்.

தமிழ் அரசியல் தற்போது எடுத்துச் செல்லப்படும் போக்கு மிகவும் கவலை அளிக்கிறது. பொய்களும், புனைவுகளும். ஆர்ப்பரிப்பும் உண்மைகள் மக்களைச் சென்றடையவிடாது தடுக்கின்றன. சுயநலமிகளினதும், சந்தர்ப்பவாதிகளினதும் கைகளில் ஊடகங்கள் இருப்பதால் உண்மைகள் சென்றடையாமல் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். நல்ல அரசியல் சக்திகளை மக்களால் அடையாளம் காணப்பட முடியவில்லை. அரசியல் யதார்த்தங்களை மக்கள் தத்தமது மனங்களில் விவாதித்து முடிவுகளை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட முடிவுகள் உணர்ச்சிகளுடன் கலந்து ஊட்டப்படுகின்றன. இதனால் ஏற்கெனவே துன்பச் சுமைகளுக்குள் உழலும் மக்களால் உண்மை நிலமைகளை உணர்ந்து கொள்ள வாய்ப்புகள் இல்லை. அதிகார மமதையும்,ஆதிக்கச் செருக்கும் போரிற்குப் பின்னதான எச்ச சொச்சங்களாக வலம் வருகின்றன.

தற்போதைய ஊள்ளுராட்சித் தேர்தல்கள் ஏற்கெனவே போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் சமூகத்தின் வாழ்வியலில் மாற்றங்களை ஏற்படுத்த உதவலாம் என்ற நம்பிக்கை சிதைந்துள்ளது. எந்தவிதமான அரசியல் மற்றும் சமூகக் கட்டுமானங்களற்று ஊழல்களின் இருப்பிடங்களாக மாறிவிட்ட அரசியல் கட்சிகளும், சுயாதீனக் குழுக்களும் துன்பத்தில் சிக்கியுள்ள மக்களை மேலும் அதற்குள் தள்ளும் அரசியலையே நடத்துகின்றன.
இவற்றிற்கெதிரான சக்திகள் காணப்படினும் அவற்றிற்குள்ளும் இணைப்புகள் இல்லாதது வேதனைக்குரியது. இதற்குப் பிரதான காரணம் அங்கு தொடர்ந்தும் வன்முறை சக்திகளின் ஆதிக்கம் நிலவுவதுதான். மக்கள் இன்னமும் கடந்த கால இருண்ட வாழ்விலிருந்து மீளவில்லை. ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அம் மக்களைச் சென்றடையவில்லை. மாற்று அரசியல் சிந்தனைகள் மக்கள் எண்ணங்களை எட்டவில்லை.

இலங்கை அரசியலில் முதன் முறையாக பெண்களுக்கு வழங்கியுள்ள பொது வாழ்விற்கான அங்கீகாரம் முளையிலேயே கிள்ளி எறியப்படும் ஆபத்துக்கள் ஆங்காங்கே எழுந்துள்ளன. இவை தமிழ்ப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் கூட்டமைப்பனால் எடுத்துச் செல்லப்படுவது மேலும்வெறுப்பை ஏற்படுத்துகிறது. தாம் ஜனநாயகவாதிகள் எனவும், அகிம்சாவாதிகள் எனவும் கூறிக்கொண்டு வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதை அவதானிக்கும் போது இவை அரசியல் அஸ்தமன அந்திம காலத்தின் இயலாமையின் வெளிப்பாடே என எண்ணத் தோன்றுகிறது.

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அக் கட்சியால் நியமிக்கப்பட்ட பெண் வேட்பாளரை கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் வீட்டிற்குள் பூட்டி வைத்திருந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. கட்சித் தலைமைப் பீடம் எந்த நடவடிக்கையையும் அந்த உறுப்பினர் மீது மேற்கொள்ளவில்லை. அப் பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பிற்காகச் சென்ற பொலீசாரும் அக் கொடுமையைக் கண்டும் செயலற்று இருந்தனர். இக் குற்றச் செயலைத் தடுக்க பொலீசார் ஏன் முன்வரவில்லை? என அந்த உறுப்பினரை வினவியபோது அப் பொலீசார் தனது பாதுகாப்பிற்காக வந்தவர்கள் எனப் பதிலளித்துள்ளார். அப் பெண் அபேட்சகரைத் தாக்கியது மட்டுமல்ல பொலீசாரை ஈடுபடுத்தவும் அவர் தவறியுள்ளார். தமிழரசுக் கட்சியின் உயர் மட்டத்தின் வன்முறை அருவருக்கத் தக்கது. இதனைக் கண்டித்துப் பேச வக்கற்ற நிலையில்  கூட்டமைப்பின் இதர கட்சிகள் மௌனமாக உள்ளன. இப் பெண் அபேட்சகர் மலையகத்தைப் பின்னணியாகக் கொண்டவர். இத் தாக்குதலுக்கு அவரது பின்னணியும் வாய்ப்பாக அமைந்ததாக கூறப்படுகிறது. தமிழர் ஒற்றுமை குறித்துப் பீத்தும் தமிழ் அரசியல் தலைமைகளின் உண்மைத் தோற்றம் இதுவே.

முஸ்லீம் மக்கள் தனித்துவமானவர்கள், அம் மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கொக்கரிக்கும் முஸ்லீம் தலைமைகள் இத் தேர்தலில் நடந்து கொள்ளும் முறை அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உள்ளது. இத் தேர்தலில் போட்டியிடும் பெண்கள் மிகவும் இழிந்த விதத்தில் பகிரங்கமாக முகப்புத்தகங்களில் அவமானப்படுத்தப்படுகிறார்கள். தேர்தலில் போட்டியிடும் முஸ்லீம் பெண்மணி ஒருவரின் காரியாலயம் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் அதிகளவு முஸ்லீம் பெண்கள் பொதுவாழ்விற்குள் வருவது இதுவே முதற் தடவையாகும். அதுமட்டுமல்ல மிகவும் உறுதியுடன் இத் தேர்தலில் அப் பெண்கள் இணைந்திருப்பது பெருமை அளிக்கிறது.

நாற்றமெடுக்கும் தமிழ் அரசியல்

கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த தமிழரசுக் கட்சி தனது அரசியல் வலுவை இழந்திருப்பதை அதன் அரசியலும், நடைமுறையும் நன்கே தெளிவுபடுத்துகிறது. தேர்தல் காலங்களில் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடுவது என்பது பயனற்ற பொது நடைமுறையாகிவிட்டது. தமிழரசுக் கட்சி கடந்த காலங்களில் வெளியிட்ட எந்தத் தேர்தல் விஞ்ஞாபனமும் நடைமுறை சார்ந்ததாக இருந்ததில்லை. இவை மக்களை ஏமாற்றும் தந்திரங்களாகவே இருந்தன.

ஆனால் இம்முறை அவர்கள் ஏற்படுத்திய பொறிக்குள் அவர்களே வீழ்ந்துள்ளதை நாம் காண முடிகிறது. உள்ளுராட்சித் தேர்தல்கள் என்பது உள்ளுர் அபிவிருத்திகளை மையப்படுத்தியது என ஆரம்பத்தில் தெரிவித்த தமிழரசுக் கட்சியினர் தற்போது இத் தேர்தலை புதிய அரசியல் யாப்பில் ஈடுபடுவதற்கான அங்கீகாரமாக மாற்ற முனைந்துள்ளனர்.

தற்போது வெளிவந்துள்ள அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை என்பது நிரந்தர அரசியல் அமைப்பாக கருதப்பட்டு விவாதம் முன்னெடுக்கப்படுகிறது. சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஐ தே கட்சி என்பன இணைந்த தேசிய அரசு தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு முன் வந்தமையால் தாம் இந்த அரசை ஆதரிப்பதாக கூட்டமைப்பினர் கூறினர். பதவிகளைப் பெற்றனர். அரச ஆடம்பரங்களை அனுபவித்தனர். தற்போதைய தேர்தல் விவாதங்களைப் பார்க்கும் போது தேசிய அரசு நிலைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் புதிய அரசியல் அமைப்பு வருமா? என்பது நிச்சயமற்றதாக உள்ளது.

இந் நிலையில் தேர்தல் கூட்டங்களில் கூட்டமைப்பிற்கு எதிராக எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத நிலையில் உள்ளனர். இதனால் தமிழரசுக் கட்சியினரும், எதிர் தரப்பினரும் தமிழ் மக்களைப் பயமுறுத்தும் அரசிலிற்குள் தள்ளி வருகின்றனர். குறிப்பாக தமிழர் கூட்டமைப்பிற்கு எதிராக இதர கட்சிகள் அணி திரண்டுள்ளன. ஒரு புறத்தில் தமிழரசுக் கட்சியின் தலைமையிலும், மறு புறத்தில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலும் அணிவகுத்து நிற்கின்றனர்.

இந்த இரு தரப்பினரும் எடுத்துள்ள அரசியல் விவாதங்கள் மக்களை ஏமாற்றுவதாகவும், தவறாக வழி நடத்துபவையாகவும், மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்த எந்தவித திட்டங்கள் அற்றதாகவும், மக்களைக் குழப்பத்தில் தள்ளுவனவாகவும் உள்ளன. இவற்றில் சிலவற்றை வாசகர்களின் கவனத்தில் தருவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

இறைமை குறித்த விவாதங்கள்

கஜேந்திரகுமார் தலைமையிலான அணியினர் புதிய அரசியல் யாப்பின் இடைக்கால அறிக்கையை நிரந்தர யாப்பாக முன்வைத்தே விவாதங்களை நகர்த்துகின்றனர். இடைக்கால அறிக்கை என்பது மக்களின் விவாதத்திற்காக, கருத்தக்களை அறியும் பொருட்டு முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையாகும். இவ் விவாதங்களின் பின்னர் முன் வைக்கப்படும் திருத்தங்களை வழிகாட்டுக் குழு பின்னர் விவாதித்து முடிவு செய்யும். எனவே இவ் இடைக்கால அறிக்கையை முடிவுப் பொருளாக முன்வைத்து அரசியலை எடுத்துச் செல்வது மக்களை ஏமாற்றுவதாகும்.

இருப்பினும் விவாதங்களை ஆராய்ந்து பார்ப்போம். இத் தேர்தலை புதிய யாப்பிற்கு எதிரான வாக்கெடுப்பாக மாற்றும் முயற்சியில் கஜேந்திரகுமார், சுரேஷ் ஆகிய தரப்பினர் இணைந்து செயற்படுகின்றனர். இவர்கள் புதிய இடைக்கால வரைபின் ஆரம்ப பக்கங்கள் ஒரு சிலவற்றுடன் தமது விவாதங்களை முடிக்கின்றனர். ஏனெனில் ஆரம்பமே பிழை என்பதால் அதற்கு மேல் விவாதிப்பதில் அர்த்தமில்லை என்கின்றனர். ஆனால் ஏனைய பிரிவுகளுக்குச் செல்லும்போது அவர்களின் விவாதம் வலுவற்றதாக மாறும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். இங்கு எமது அவதானத்திற்குரியது எதுவெனில் புதிய யாப்பு தேசியப் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறதா? என்பதை விட அதன் அடிப்படைத் தார்மீக விவாதம் திரிபுபடுத்தப்படுவதையே முதலில் அவதானிக்க வேண்டியுள்ளது. இங்கு பிரிவினைவாத அரசியல் வேறு கோணத்தில் அதாவது தமிழ் இறைமை என முன் வைக்கப்படுகிறது.

முதலில் நாட்டின் கட்டுமானம் எவ்வாறானது? என்பதற்கான வியாக்கியானங்களே அவர்களது கவனத்தில் உள்ளது. உதாரணமாக இலங்கை அரச கட்டுமானம் என்பது ‘ஏக்கய ராஜ்ய அல்லது ஒருமித்த நாடு’ என்பதற்கான விளக்கம் குறித்த விவாதங்களாகும்.

முதலில் இடைக்கால வரைபில் உள்ள விளக்கத்தினை அவதானித்தால் அதில் இலங்கை என்பது இறைமையும், சுயாதீனமும் உள்ள நாடு அதாவது ‘ஏக்கய ராஜ்ய’ அல்லது ‘ஒருமித்த நாடு’ என்பதுடன் அது மத்தியிலும், மாகாணத்திலும் அரசியல் அமைப்பின் பிரகாரம் அதிகாரத்தைப் பிரயோகிக்கும் கட்டுமானங்களைக் கொண்டுள்ளது எனக் குறிப்பிடுகிறது.

இதன் அர்த்தம் என்னவெனில் இலங்கையின் ஆதிபத்தியம் மத்தியிலும், மாகாணத்திலும் உள்ள நிறுவனங்களால் பரிபாலிக்கப்படுகிறது என்பதாகும். இதுசமஷ்டியா? அல்லவா? அதிகாரம் மையத்தில் குவிக்கப்பட்டுள்ளதை உணர்த்துகிறதா? அல்லது மாகாணங்களுக்கும் பகிரப்பட்டுள்ளதை உணர்த்துகிறதா? என்பதை வாசகரிடம் விடுகிறேன். இதன் பிரகாரம் பார்க்கையில் தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பு (1978) ஒற்றை ஆட்சி எனக் குறிப்பிடப்படுவது அதிகாரங்கள் குவிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சிமுறை என்பதால் அவ் விளக்கம் நாட்டின் ஒட்டுமொத்த கட்டுமானத்தின் தோற்றத்தினை அதாவது ஏனைய சமூகங்களும் இத் தேசத்திற்குள் உள்ளனர் என்பதை அது புலப்படுத்தவில்லை. பதிலாக அரசின் தன்மையை விபரிக்கிறது என்பதை சிங்கள மக்களும் ஏற்றுள்ளதால் அதனை மேலும் விரிபுபடுத்தும் வகையில் மேலும் விளக்கத்தை இணைத்துள்ளனர். எனவே ‘ஏக்கய ராஜ்ய’ என்பது பிரிக்கப்படாத, பிரிக்க முடியாததாகவும், அரசியல் அமைப்பை மாற்றும் அதிகாரம் அரசியல் அமைப்பில் வழங்கியுள்ளவாறு பாராளுமன்றத்திற்கும், மக்களுக்கும் உரியது எனக் குறிப்பிடுகிறது. இங்கு எந்த இடத்திலும் சிங்கள மக்கள் என்ற வார்த்தை இடம்பெறவில்லை. மக்கள் என்றே குறிப்பிடப்படுகிறது. இது எவ் விதத்தில் சிங்கள மக்களை மட்டும் குறிக்கிறது?

இந் நிலையில் கஜேந்திரகுமார் தரப்பினர் ஒற்றை ஆட்சி என்ற ஒற்றை விவாதத்திற்குள் சென்று அதன் விரிந்த விளக்கத்தை மறைக்க முயற்சிக்கின்றனர். சமஷ்டியை ஏற்காத அவர்கள் சமஷ்டியைக் காணவில்லையே! என வினவுகின்றனர். இங்கு மாற்றம் சமஷ்டியை நோக்கியதா? இல்லையா? என்பது தனியான விவாதத்திற்கு உரியது. ஆனால் புதிய விளக்கம் இதர தேசிய இனங்களின் இருப்பை அங்கீகரிப்பதாகவே உள்ளது.
இனி நாட்டின் இறைமை அதிகாரம் குறித்த விளக்கங்களைப் பார்ப்போம். புதிய வழிகாட்டுக் குழு அறிக்கையில் ‘நாட்டின் இறைமை மக்களுக்குரியது. பாராதீனப்படுத்த முடியாதது.’ எனவும், அவ் இறைமை அதிகாரம் அம் மக்களிடமே தொடர்ந்து இருக்கும் எனவும்,அவர்களிடமிருந்து பிரிக்க முடியாதது எனவும் கூறுகிறது.

நாட்டின் இறைமை குறித்து வெளிப்படுத்தப்பட்டுள்ள இப் பிரிவை இவர்கள் வியாக்கியானப்படுத்தும் முறை நாட்டின் சட்டத்துறை சார்ந்தவர்களை அவமானப்படுத்துவதாகவே உள்ளது. உதாரணமாக நாட்டின் இறைமை மக்களுக்குரியதாக இருப்பதோடு, பாராதீனப்படுத்த முடியாததாகவும் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கும் பகுதி நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் பிரிக்க முடியாத இறைமை அதிகாரத்தைக் குறிக்கிறது. இந்த இறைமை அதிகாரம் என்பது மனிதன் என்பதை மையமாகக் கொண்டு வியாக்கியானப்படுத்தப்படுகிறதே ஒழிய தமிழ், சிங்களம், முஸ்லீம் என அடையாள அரசியல் வழியில் வியாக்கியானப்;படுத்தப்படவில்லை.
ஆனால் இவர்கள் மக்கள் என்பதை மறைத்து அதனுள் தமிழ் மக்கள் என்பதை இணைத்து தமிழ் மக்களின் இறைமை என வியாக்கியானம் செய்கின்றனர். இறைமை அதிகாரம் என்பது மக்களிடமிருந்து பிரிக்க முடியாதது என்பது அரசு என்பது மக்களின் தேவைக்காக மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்டது. மக்களே தமது உரிமை அதிகாரத்தை சகல மக்களும் பாராளுமன்றம் சென்று பிரச்னைகளைத் பேசித் தீர்க்க முடியாது என்பதால் பிரதிநிதித்துவ ஜனநாயக முறையைத் தேர்ந்தெடுத்தார்கள். தமது இறைமை அதிகாரத்தை தமது வாக்குச் சீட்டின் மூலமாக தமது பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் தற்காலிகமாகஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தமது இறைமையை ஒப்படைத்தார்கள். எனவே இறைமை அதிகாரம் என்பது மக்களிடமே தொடர்ந்து இருக்கும், தாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதி கொடுத்த வாக்குறுதியை மீறும் பட்சத்தில் மீள அழைக்கும் அதிகாரமும் அந்த மக்களுக்கு உரியது. எனவேதான் இறைமை அதிகாரம் மக்களிடம் தொடர்ந்து இருக்கும் என யாப்புக் கூறுகிறது. இந்த இறைமை அதிகாரம் தனி நபர் இறைமையைக் குறிப்பிடுகிறதே தவிர ஒருபோதும் கூட்டு இறைமையைக் கூறவில்லை. மனித உரிமை என்ற கோட்பாடு இந்த தனி மனித இறைமை அதிகாரத்திலிருந்துதான் எழுகிறது. தமிழ் இறைமை எனக் கூறி மனிதனின் இறைமையைக் கொச்சைப்படுத்தும் அரசியலாகவும், மக்களை அறிவிலிகளாகக் கருதும் போக்காகவும்இது உள்ளது.

பிரிவினை அரசியல்


இவர்களால் முன்வைக்கப்படும் விவாதங்கள் மறைமுகமாக பிரிவினை அரசியலை மீண்டும் முன்வைக்கும் தந்திரங்களாக உள்ளன. உதாரணமாக இலங்கை என்பது இரண்டு பிரதான தேசங்களை உள்ளடக்கியதெனவும், அது சிங்கள தேசம், தமிழ்த் தேசம் என்பதாக அமையுமெனவும், சிங்கள தேசத்திற்கு இறைமை அதிகாரம் உள்ளது போலவே, தமிழ்த் தேசத்திற்கும் இறைமை உள்ளது எனவும், இறைமை பிரிக்க முடியாதது என அரசியல் வரைபு கூறுவது தமிழ் மக்களின் இறைமையை மறுப்பதாக அமையும் என பிரிவினைவாதம் உள்ளெடுக்கப்படுகிறது. இவ் வரைபை ஏற்றால் இலங்கைத் தீவில் தமிழர் தேசம், தமிழர் தாயகம், அந்தத் தாயகத்திற்கான இறையாண்மை என்பவை ஏதும் இல்லை என ஆகிவிடாதா? என முன்வைக்கப்படுகிறது.இவ் வகை அரசியல் மிகவும் சூழ்ச்சி நிறைந்தது. மக்களை உணர்ச்சிக்குள் தள்ளி மீண்டும் முள்ளிவாய்க்காலை நோக்கிப் பயணிக்க வைக்கிறது.இங்கு தனிமனித இறைமை அதிகாரம், தமிழ் இறைமை அதிகாரம் என்ற பதங்களிடையே ஏற்படுத்தப்படும் குழப்பமான விளக்கங்களே கவனத்திற்குரியவை.

புதிய அரசியல் யாப்பு வரைபில் இலங்கை மக்கள் என்பதைத் தவிர சிங்கள, தமிழ் இறைமை என எந்த இடத்திலும் இல்லை. ஆனால் அவ்வாறு இருப்பதாக ஒரு மாயையை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர். தமிழ் மக்களுக்கான தனி இறையாண்மை உள்ளதெனில் அக் கொள்கையோடு ஆரம்பித்து தனிப் பாராளுமன்றம் அமைக்க தமிழ் மக்களின் ஆணையைக் கோர வேண்டும். சிங்களதேசத்தின் பாராளுமன்ற மற்றும் ஏனைய தேர்தலில் பங்குபற்றுவது அவர்கள் கூறும் தமிழ் தேசத்தின் மீதான சிங்கள தேசத்தின் இறையாண்மையை ஏற்றுச் செயற்படுவதாகும். தமிழ் மக்களின் இறையாண்மையை தமிழ் மக்களே பிரயோகிக்க வேண்டும். சிங்கள தேசத்தின் இறையாண்மைக்குள் உள்ளதாகக் கூறும் பாராளுமன்றத்திற்கு எவ்வாறு செல்ல முடியும்? அவ்வாறானால் சிங்கள தேசத்தின் இறையாண்மையை ஏற்பதாக அமையாதா?  இவைஇவர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முன் வைக்கும் குறுக்கு வழிகளாகும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் அங்கு சென்ற வேளையில் இவ் இறைமை அதிகாரம் குறித்து ஒருபோதும் பேசியதில்லை. இலங்கை அரசின் அரசியல் அமைப்பின் இறைமை குறித்த பிரச்சனைகள் பற்றிப் பேசியதில்லை. பதிலாக இலங்கையின் நீதித்துறையினதும், ராணுவத்தினதும் அரசியல் அமைப்பு மீறல்களை, மனித உரிமை மீறல்களைப் பேசியுள்ளார். இதன் அர்த்தம் என்ன? இலங்கையின் அரசியல் அமைப்பின் பிரகாரம் அரசு செயற்படவில்லை என முறையிடுவது எனில்,அரசியல் அமைப்பை ஏற்றே அவ் விவாதங்களை நகர்த்தியுள்ளார். அவரால் தனது முறைகெட்ட அரசியல் விவாதங்களை சர்வதேசம் முன்னிலையில் வைக்க முடியவில்லை.மக்களின் உணர்ச்சிகளோடு விளையாடும் இந்த அரசியல் ஏற்படுத்திய ஆழமான வடுக்கள் ஆறுமுன்னர் மீண்டும் இறைமை என்றபோலி முகங்களுடன் மக்களை ஏமாற்றுவது மிக மோசமான வஞ்சக அரசியலாகும்.

இவ் வகையான துரோக அரசியல் குறித்து தமிழரசுக் கட்சி மௌனமாகச் செல்கிறது.இவர்களில் பலர் இந்த அயோக்கிய அரசியல் தொடர மனதார விரும்புகின்றனர். இவர்களால் ஏற்பட்டு வரும் சமூக மாற்றங்களை ஜீரணிக்க முடியவில்லை. இதனால் இவர்களும் மக்களைப் பயமுறுத்தியே செல்கின்றனர். எதிர்வரும் பெப்ரவரி 10ம் திகதி கூட்டமைப்பு தனது ஆதரவை இழக்க நேரிட்டால் புதிய அரசியல் யாப்பை நிறைவேற்ற முடியாமல் போகலாம். தமிழ் மக்கள் எமக்குத் தந்த ஆதரவை மீளப் பெற்றுள்ளார்கள் என்ற நிலையை ஏற்படுத்த உதவாதீர்கள் எனப் பயமுறுத்தல் வழியில் கூறும் சுமந்திரன், இறைமை குறித்து கஜேந்திரகுமார் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்காது தவிர்த்து வருகின்றார்.

இவர்களால் புதிய அரசியல் யாப்பு சாத்தியமா? என்பதையும் உறுதிப்படுத்த முடியவில்லை. அதே போல அவ்வாறு அரசியல் அமைப்பு சாத்தியப்படாத நிலை ஏற்பட்டால் மாற்றுத் திட்டமும் இவர்களிடம் இல்லை. எந்தவித முன் நிபந்தனைகளும் இல்லாமல் அரசை ஆதரிக்கின்றனர். ராணுவம் நிலங்களை விடவில்லை. முகாம்களிலிருந்து விலகவில்லை. சிறைக் கைதிகள் விடுவிக்கப்படவில்லை. காணாமல் போனோர் காரியாலயம் செயற்படவில்லை. போர்க்குற்ற விசாரணையைக் காணவில்லை. இடைக்கால  நீதி வழங்கப்படவில்லை. இவ்வாறு பட்டியல் நீழ்கிறது.

அரச மட்டத்தில் பிரச்சனைகள் உண்டு. ஆனால் இவ்வாறான சரணாகதி அரசியல் எந்த முன்னெற்றத்தையும் தரப் போவதில்லை. அரசாங்கத்தை நிபந்தனை இல்லாமல்  காப்பாற்றுவதற்கான நியாயங்கள் எதனையும் காணவில்லை. சர்வதேச வலையில் வீழ்ந்து தமிழ் மக்களின் ஜனநாயக உரிமையை விலை கூறி விற்பதாகவே இவை காணப்படுகிறது. விட்டுக் கொடுப்பே எஞ்சியுள்ளது. மாற்று அரசியல் வழிமுறைகளும் இல்லை. பலமான சிங்கள, தமிழ்,முஸ்லீம் இணைப்பும் இல்லை. அதிகாரத்தையும், செல்வாக்கையும் அனுபவித்ததைத் தவிர எஞ்சியது எதுவுமில்லை.

இவர்கள் மீண்டும் கஜேந்திரகுமாரின் ஏமாற்று அரசியலிற்கே செல்வார்கள். சமீப காலமாக அரசியல் யாப்பு வரைபு குறித்த விவாதங்களில் சுமந்திரன் பலிக் கடாவாக முன்வைக்கப்பட்டுள்ளார். கூட்டமைப்பின் இதர உறுப்பினர்கள் எவரும் இவ் விவாதங்களில் இல்லை. சம்பளமும், சலுகைகளும் தவறாமல் கிடைக்கிறது. ஆனால் மக்கள் சேவை எங்கே? சுமந்திரனிடமோ, அவரது கட்சியிடமோ தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்த திட்டங்கள் எதுவும் இல்லை. அது மட்டுமல்ல, சுமந்திரனின் குறுகிய கால வளர்ச்சி தமிழ் அரசியலில் பெரும்கொதிப்பை ஏற்படுத்தி வருகிறது. புலிகளின் கடந்த கால ஜனநாயக விரோத செயல்களை காத்திரமாக விமர்ச்சிக்கும் அவரது அரசியல், தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற கதிரைகளை நோக்கிய அரசியல் பச்சோந்திகளுக்குப் பெரும் கொதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமது வாக்குப் பலத்திற்கு ஆப்பு வைப்பதாகக் கருதி முணுமுணுக்கின்றனர். அவரை எந்த விதத்திலும் சம்பந்தருக்குப் பின்னர் தலையெடுக்க விடுவதில்லை எனக் கங்கணம் கட்டி வருகின்றனர். இருப்பினும் தற்போதைய தேர்தலில் தனது ஆதரவு சக்திகளை அவர் நிறுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.  அரசியல் அமைப்பில் உள்ள தீர்வுகளே அவரது தீர்வுத் திட்டங்களாக உள்ளன. கூட்டமைப்பின் ஏனையோர் வெற்றி கிடைத்தால் ‘நாம்’, தோல்வி என்றால் சுமந்திரன் என்ற வகையில் அரசியலை நடத்துகின்றனர்.

சமீப காலமாக தென் இலங்கையில் இடம்பெறம் பிரதான கட்சிகள் மத்தியிலே காணப்படும் போட்டிகளில் மைத்திரி தரப்பையே சுமந்திரன் குற்றம் சாட்டி வருவதாக தெரிகிறது. தமிழரசுக் கட்சி முழுமையாக ஐ தே கட்சியிடம் சரணடைந்துள்ளது. இதன் காரணமாகவே ஐ தே கட்சி தனித்து அரசு அமைக்கப் போவதாகப் பயமுறுத்தி வருகிறது. தமிழரசுக் கட்சியிடமிருந்த குறும் தேசியவாத போக்குகள் தற்போது தற்காலிகமாக சுரேஷ், விக்னேஸ்வரன் போன்றோரிடம் பொறுப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பிலுள்ள இதர சக்திகள் இவர்களுடன் இரகசிய உறவுகளைப் பேணி வருகின்றனர். தமிழரசுக் கட்சிக்கு எதிரான அணியினர் என்பது தோற்றப்பாடாக இருப்பினும், இவை தற்காலிகமானதே. ஏனெனில் அடிப்படையில் பாரிய கருத்து வேறுபாடுகள் இல்லை.

இலங்கை அரசியல் மிகவும் சிக்கலான ஓர் சூழலுக்குள் உள்ளது. நாட்டில் லஞ்சம், ஊழல், ராணுவ அதிகாரம் நிறைந்த அரசு வேண்டுமா? அல்லது ஜனநாயகமும், சட்டம், ஒழங்கு நிறைந்த ஆட்சி தேவையா? என்ற விவாதத்திற்குள் சென்றுள்ளது. நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பித்தள்ளது. மிக அதிகமான கடன்களால் நாட்டின் அபிவிருத்திக்குப் பணம் இல்லை. இதனால் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, அபிவிருத்தியின்மை, சட்டம், ஒழுங்கு சீர்குலைவு, சமூக விரோத செயற்பாடுகளின் அதிகரிப்பு, உயர்மட்டம் வரை ஊழல் என பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. எந்த அரசும் நீடித்திருப்பது கேள்விக்குரியதாகியுள்ளது. இந் நிலையில் நிலைத்த அரசு அமைப்பது எனில் தேசியப் பிரச்சனைகளில் தெளிவான நிலைப்பாடுகளை எடுக்கும் அரசினை அமைக்க உதவ வேண்டும். கூட்டமைப்பிடம் தெளிவான நிலைப்பாடு உண்டா? சுpல சர்வதேச அரசுகளின் கைப் பொம்மையாக உள்ள கூட்டமைப்பினால் சுயாதீனமாக இயங்க முடியாது. எனவே புதிய அரசியல் பார்வை தேவையாகிறது.

தமிழ் அரசியல் தரப்பில் ஊழலும், வன்முறையும், குடும்ப ஆதிக்கமும் அதிகரித்துள்ளது. இதனால் சமூக முன்னேற்றம் சம்பந்தமாக எந்தவித முன்னெடுப்புகளோ அல்லது எதிர்ப்புகளோ இல்லை. எதிர்க் கட்சியில் இருந்தவாறே வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பது ஜனநாயகத்தையே கேலிக்குள்ளாக்குகிறது.

இவ்வாறான குழப்பமான சந்தர்ப்பவாத அரசியல் சகதிக்குள் முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளைக் கைதூக்கி விடுவது தேசத்தை நேசிக்கும் மக்களின் கடமையாகும். இங்கு கட்சிகள் பலவற்றில் சமூக நலன்களுக்காக அர்ப்பணிக்கும் பலர் உள்ளனர். இவர்கள் சமூக நிறுவனங்களின் அதிகாரத்தில் வைக்கப்பட வேண்டும். எனவே கட்சி அரசியலை விட நல்ல மனித நேயம் கொண்ட மனிதர்களை மக்கள் அடையாளம் கண்டு வாக்களிக்க வேண்டும்.
Vsivalingam@hotmail.com

Read more...

Thursday, January 25, 2018

சோசலிஷம் எதற்காக? - ஆல்பர்ட் ஐன்ஸ்ரைன்

பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் வல்லுனராக இல்லாத ஒருவர் சோசலிஷம் என்ற பொருள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது சரியானதா? பற்பல காரணங்களினால் சரியானது என்றே நான் நம்புகிறேன்.

விஞ்ஞான அறிவுக் கண்ணோட்டத்திலிருந்து முதலில் இந்தப் பிரச்சினையை நோக்குவோம். வானியலுக்கும் பொருளாதாரத்துக்கும் இடையில் சாராம்சமான நடைமுறை ரீதியான வேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதுபோலத் தோன்றலாம்: இரு துறைகளையும் சார்ந்த விஞ்ஞானிகள் ஒரு வரம்புக்குட்பட்ட தொகுப்பில் அடங்கிய நிகழ்வுகளுக்கு இடையேயான பரஸ்பரத் தொடர்பினைக் கூடுமானவரைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு, அந்த நிகழ்வுகளின் தொகுதிக்குப் பொதுவாக ஏற்றுக் கொள்ளத் தக்க விதிகளைக் கண்டறிய முயல்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் அத்தகைய நடைமுறை ரீதியான வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. பொருளாதாரத் துறையை எடுத்துக் கொண்டால், பொருளாதார நிகழ்வுகள் பெரும்பாலும் அனேகக் காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. அக்காரணிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே மதிப்பீடு செய்வது மிகவும் கடினம் ஆகும். இத்தகைய சூழ்நிலை, பொருளாதாரத் துறையில் செயல்படும் பொதுவான விதிகளைக் கண்டறியும் பணியைச் சிக்கலாக்கியுள்ளது. அதோடுகூட, மனித வரலாற்றில், நன்கு அறியப்பட்ட நாகரிகக் காலப்பகுதி என்று சொல்லப்படுகின்ற காலந்தொட்டு இன்றுவரை நாம் சேர்த்து வைத்துள்ள அனுபவத்தின்மீது பெருமளவு செல்வாக்குச் செலுத்திய, கட்டுப்படுத்திய காரணிகள் முற்றாகப் பொருளாதார இயல்பு கொண்டவையே அன்றி வேறல்ல. எடுத்துக்காட்டாக, வரலாற்றில் இடம்பெற்றுள்ள பெரும் பேரரசுகளில் பெரும்பாலானவை போர் வெற்றிகளாலேயே நிலைபெற்றுள்ளன. வெற்றி பெற்ற மக்கள், வெற்றி கொள்ளப்பட்ட நாட்டின் சிறப்புரிமை பெற்ற வர்க்கமாக சட்ட ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தம்மை நிலைநிறுத்திக் கொண்டனர். அந்நாட்டு நிலங்களின் மீதான ஏகபோக உரிமையை தமக்கென அபகரித்துக் கொண்டனர். தங்களுடைய ஆட்களையே அந்நாட்டில் மதக் குருக்களாய் நியமித்தனர். அம்மதக் குருக்கள் கல்வியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, சமுதாயத்தில் நிலவிய வர்க்கப் பிரிவினைகளை நிரந்தர சமூக அமைப்புகளாக மாற்றிவிட்டனர். அந்நாட்டு மக்கள் தமது சமுதாய நடவடிக்கைகளில் பின்பற்றக்கூடிய சமூக மதிப்புகளின் கட்டமைப்பை உருவாக்கினர். மக்கள் பெரும்பாலும் தங்களை அறியாமலேயே அதன்படி வழிநடத்தப்பட்டனர். ஆனால், தார்ஸ்டெயின் வெப்லென் (Thorstein Veblen) அவர்கள், மனிதகுல வளர்ச்சியில் ”கொள்ளைசார்ந்த காலகட்டம்” (predatory phase) என்று அழைக்கிற நேற்றைய வரலாற்று மரபை நாம் எங்கேயும் உண்மையிலேயே விட்டொழித்ததாகத் தெரியவில்லை. அந்தக் காலகட்டத்துக்குரிய அறியக்கூடிய பொருளாதார உண்மைகள் மற்றும் அவற்றிலிருந்து நாம் தருவிக்க முடிகிற விதிகளும்கூட வரலாற்றின் பிற காலகட்டங்களுக்குப் பொருந்தாதவை ஆகும். சோசலிஷத்தின் உண்மையான நோக்கம், துல்லியமாக, மனிதகுல வளர்ச்சியின் கொள்ளைசார்ந்த காலகட்டத்திலிருந்து விடுபடுவதும், அதனையும் தாண்டி முன்னேறுவதுமே ஆகும். பொருளாதார விஞ்ஞானம் இப்போதிருக்கும் நிலையில் வருங்கால சோசலிஷ சமுதாயம் பற்றி எதுவும் கூற இயலாத நிலைமையே உள்ளது.

இரண்டாவதாக, சோசலிஷமானது ஒரு சமூக–அறநெறி முடிவை நோக்கி (towards social-ethical end) நெறிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், விஞ்ஞானத்தால் முடிவுகளை உருவாக்க முடியாது. மேலும் முடிவுகளை மனிதர்களுக்குள் புகட்ட அதைவிடவும் முடியாது. விஞ்ஞானம், அதிகப் பட்சமாக, சில முடிவுகளை எட்டுவதற்கான சாதனங்களை வழங்க முடியும். ஆனால் இத்தகைய முடிவுகள் தம்மளவில், உன்னத அறநெறி இலட்சியங்களைக் கொண்டுள்ள தலைவர்களின் சிந்தனையில் உருவானவையே ஆகும். சாராம்சமான, உந்துசக்தி மிக்க இந்தக் கருத்துகள் எண்ணத்திலிருந்து வெளிப்பட்டவுடனே, சமுதாயத்தின் மெதுவான பரிணாம வளர்ச்சியைத் தீர்மானிக்கின்ற மக்கள் திரள் அக்கருத்துகளை ஏற்றுக் கொண்டு, முன்னெடுத்துச் செல்கின்றனர். அவர்களில் பாதிப்பேர் தங்களை அறியாமலேயே இதில் ஈடுபடுகின்றனர்.

இந்தக் காரணங்களினால், மானுடப் பிரச்சினைகள் என்று வரும்போது, விஞ்ஞானம் மற்றும் விஞ்ஞான வழிமுறைகளைப் பற்றி அதிகமாக எடைபோட்டுவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். சமுதாய அமைப்பினைப் பாதிக்கின்ற பிரச்சினைகளின் மீது வல்லுநர்கள் மட்டுமே கருத்துக் கூறும் உரிமை பெற்றவர்கள் என நாம் கருதிவிடக் கூடாது.

மனித சமுதாயம் ஒரு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது, அதன் நிலைப்புத் தன்மை மிக மோசமாக ஆட்டம் கண்டுள்ளது என்று அண்மைக் காலமாக எண்ணற்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் தனிமனிதர்கள் தாம் சார்ந்த குழுவின்பால் – அது சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் – வெறுப்பும், பகைமையும் காட்டுவது இயல்பாய் உள்ளது. என்னுடைய கருத்தை விளக்கும் பொருட்டு என்னுடைய சொந்த அனுபவம் ஒன்றை இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன். நான் அண்மையில், அறிவாளியான சிறந்த அந்தஸ்தில் உள்ள ஒருவருடன், இன்னொரு போர் வருவதற்கான அபாயம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய கருத்தில் இன்னொரு போர் என்பது மனிதகுலத்தின் இருப்புக்கே மிக மோசமான ஆபத்தினை விளைவிக்கும். தேசங்களுக்கு அப்பாற்பட்ட அமைப்பு ஒன்றினால் மட்டுமே இந்த ஆபத்திலிருந்து மனிதகுலத்தைக் காப்பாற்ற முடியும் என்று அவரிடம் கூறினேன். அதற்கு அந்த மனிதர் மிகவும் அமைதியாக, நிதானமாக என்னிடம் சொன்னார்: ”மனித இனம் அழிந்து போவதை இவ்வளவு ஆழமாக எதற்காக நீங்கள் எதிர்க்கிறீர்கள்?”

ஒரு நூற்றாண்டு அளவிலான மிகக் குறுகிய காலத்துக்கு முன்னால் இதைப்போன்ற ஒரு கூற்றை இவ்வளவு அக்கறையின்றி எவரும் கூறியிருக்க முடியாது என என்னால் நிச்சயமாகக் கூற முடியும். தனக்குள்ளேயே ஒரு சமநிலைத் தன்மையை அடைவதற்கு வீணே போராடி, ஏறத்தாழ வெற்றி பெறுவதில் நம்பிக்கையை இழந்துவிட்ட ஒரு மனிதனின் கூற்றாகும் இது. வலிமிகுந்த தனிமையில் தனித்து ஒதுக்கப்பட்ட ஒருவரின் மன வெளிப்பாடு என்றே கொள்ள வேண்டும். இதற்குக் காரணம் யாது? இதிலிருந்து மீள்வதற்கு வழியுண்டா?

இத்தகைய கேள்விகளை எழுப்புவது எளிது. ஆனால், அக்கேள்விகளுக்கு ஓரளவுக்கேனும் நம்பிக்கையுடன் விடையளிப்பது கடினம். நமது உணர்வுகளும் முயற்சிகளும் எப்போதுமே முரண்பட்டும் தெளிவற்றும் உள்ளன. அவற்றை எளிய, சாதாரணச் சூத்திரங்களில் விளக்கிவிட முடியாது. இந்த உண்மையை நான் நன்கு அறிந்துள்ள போதிலும், என்னால் முடிந்த அளவுக்கு மேற்கண்ட கேள்விகளுக்குப் பதில்கூற முயல்கிறேன்.

மனிதன் என்பவன் ஒரே நேரத்தில் தனிமனிதனாகவும் சமூக மனிதனாகவும் இருக்கிறான். தனிமனிதன் என்ற நிலையில், அவன் தன் சொந்த விருப்பங்களைத் திருப்திப்படுத்தும் பொருட்டும், தன் உள்ளார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ளும் பொருட்டும், அவனுடைய வாழ்க்கையையும் அவனுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளவர்களின் வாழ்க்கையையும் பாதுகாத்துக் கொள்ள முயல்கிறான். சமூக மனிதன் என்ற நிலையில், அவனுடன் வாழும் மனிதர்களின் அங்கீகாரத்தையும் அன்பையும் பெறவும், அவர்களுடைய மகிழ்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களுடைய துயரத்தில் பங்கு கொள்ளவும், அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும் விரும்புகிறான். இத்தகைய, வேறுபட்ட, அடிக்கடி மோதிக் கொள்ளும் முயற்சிகள் இருப்பதே ஒரு மனிதனின் தனிச்சிறப்பான பண்புக்குக் காரணமாக அமைகிறது. இவற்றின் குறிப்பிட்ட சேர்க்கையே ஒரு தனிமனிதன் எந்த அளவுக்கு அகச் சமன்நிலையை அடைய முடியும், சமுதாயத்தின் நலனுக்குப் பங்காற்ற முடியும் என்பதைத் தீர்மானிக்கிறது. இந்த இருவேறு உந்து சக்திகளின் ஒப்பீட்டுப் பலம், பிரதானமாக மரபு வழியில் நிர்ணயிக்கப்படுவது சாத்தியமே. ஆனால், ஒரு மனிதனில் முடிவாக வெளிப்படும் ஆளுமை, அவனுடைய வளர்ச்சியின்போது அவன் வாழ நேர்ந்த சூழல், அவன் வளர்ந்த சமுதாயத்தின் கட்டமைப்பு, அந்த சமுதாயத்தின் மரபு, அந்தச் சமுதாயம் குறிப்பிட்டவகை நடத்தை பற்றிக் கொண்டுள்ள மதிப்பீடு ஆகியவற்றாலேயே பெருமளவு உருவாக்கப்படுகின்றது. தனிமனிதனைப் பொறுத்தவரை “சமுதாயம்” என்கிற அருவமான கருத்துருவின் (abstract concept) பொருள், அவனது சமகால மனிதர்களோடும், முந்தைய தலைமுறைகளின் அனைத்து மக்களோடும் அவன் கொண்டுள்ள நேரடியான மற்றும் மறைமுகமான உறவுகளின் ஒட்டு மொத்தத்தையே குறிக்கிறது. ஒரு தனிமனிதர் தானாகவே சிந்திக்க, உணர, முயல, வேலை செய்ய இயலும்; ஆனால், அவருடைய உடல் ரீதியான, அறிவு ரீதியான, உணர்வு ரீதியான வாழ்க்கையில் அவர் சமுதாயத்தின் மீது வெகுவாகச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. சமுதாயம் என்னும் கட்டமைப்புக்கு வெளியே அவர் தன்னைப் பற்றிச் சிந்திக்கவோ, தன்னைப் புரிந்து கொள்ளவோ இயலாது. சமுதாயமே மனிதனுக்கு உணவு, உடை, உறையுள், வேலைக்கான கருவிகள், மொழி, சிந்தனையின் வடிவங்கள், சிந்தனையின் பெரும்பாலான உள்ளடக்கம் ஆகியவற்றை வழங்குகிறது. “சமுதாயம்” என்னும் சிறிய சொல்லின் பின்னால் மறைந்துள்ள, இக்காலத்து மற்றும் கடந்த காலத்து மக்கள் பலகோடிப் பேரின் உழைப்பின் மூலமாகவும், செயல்பாடுகளின் மூலமாகவுமே மனிதனின் வாழ்க்கை சாத்தியமாகியுள்ளது.

எனவே, தனிமனிதன் சமுதாயத்தின் மீது சார்ந்துள்ள தன்மையானது இயற்கையின் உண்மை என்பது வெளிப்படையாகும். எறும்புகள், தேனீக்கள் விஷயத்தில் நடந்ததைப் போல இந்த உண்மையை அழித்துவிட முடியாது. என்றாலும், எறும்புகள், தேனீக்களுடைய மொத்த வாழ்க்கையின் நிகழ்வுப்போக்கும் மிக நுண்ணிய அசைவுகள் வரைக்கும், கறாரான, பரம்பரை ரீதியான உள்ளுணர்வுகளினாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. அதே வேளையில், மனிதர்களின் சமூகப் பாங்கும், பரஸ்பர உறவுமுறைகளும் மிகவும் வேறுபட்டவையாகவும் மாறக்கூடிய இயல்புடையனவாகவும் இருக்கின்றன. நினைவிருத்தல், புதிய சேர்க்கைகளை உருவாக்கும் திறன், பேச்சுவழித் தகவல் தொடர்பென்னும் கொடை ஆகியவை மனிதர்களிடையே வளர்ச்சியைச் சாத்தியமாக்கியுள்ளன. இவை உடலியல் ரீதியான தேவைகளால் ஆட்டுவிக்கப்படுவதில்லை. இத்தகைய வளர்ச்சியின் அடையாளங்கள் மரபுகளிலும், சமூக நிறுவனங்களிலும், அமைப்புகளிலும், இலக்கியத்திலும், விஞ்ஞான, பொறியியல் செயல்பாடுகளிலும், கலைப் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இது, ஒருவகையில், மனிதன் தன் சொந்த நடத்தை மூலமாக அவனுடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த முடிவதும், இந்த நிகழ்வுப் போக்கில் உணர்வு பூர்வமான சிந்தனையும், போதாமையும் ஒரு பங்கு வகிக்க முடிவதும் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்குகிறது.

மனிதன் பிறப்பின்போது, மனித இனத்துக்கே உரிய இயற்கையான வேட்கைகளுடன் பரம்பரை வழியான உடல் கட்டமைவைப் பெறுகிறான். இவற்றை நிலையானதென்றும் மாற்ற முடியாதது என்றும் நாம் கருத வேண்டும். அதோடுகூட, அவனுடைய வாழ்நாளில் தகவல் தொடர்பு மற்றும் பிற வகையான பல்வேறு தாக்கங்கள் மூலமாகச் சமுதாயத்துடன் தகவமைத்துக் கொள்வதிலிருந்து ஒரு கலாச்சாரக் கட்டமைவைப் பெறுகிறான். காலத்தின் ஓட்டத்தில் மாற்றத்துக்கு உள்ளாகக் கூடிய இந்த கலாச்சாரக் கட்டமைவுதான் தனிமனிதனுக்கும் சமுதாயத்துக்கும் இடையிலான உறவுமுறையை மிகப் பெருமளவுக்குத் தீர்மானிக்கின்றது. நடப்பிலுள்ள கலாச்சாரப் பாங்குகளைப் பொறுத்தும், சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் சமூக அமைப்பின் வகைகளைப் பொறுத்தும் மனிதர்களின் சமூக நடத்தை மிகப்பெரும் அளவுக்கு வேறுபட முடியும் என்பதை புராதனக் கலாச்சாரங்கள் என்று சொல்லப்படுவனவற்றை ஒப்பீட்டாய்வு செய்ததன் மூலம் நவீன மானிடவியல் நமக்குக் கற்பித்துள்ளது. மனித குலத்தை மேம்படுத்த முயன்று வருவோர் தமது நம்பிக்கைகளை இதன்மீது ஊன்றலாம்: மனிதர்கள் அவர்களுடைய உடல்கூறு அமைப்பின் காரணமாக ஒருவரை ஒருவர் அழித்தொழிக்கவோ, கொடூரமான, தாங்களே விதித்துக் கொண்ட விதியின் தயவில் வாழ்வதற்கோ சபிக்கப்படவில்லை.

மனித வாழ்க்கையைச் சாத்தியமான வரையில் திருப்திகரமானதாக ஆக்கிக் கொள்ளும் பொருட்டு, சமுதாயத்தின் கட்டமைப்பும், மனிதனின் கலாச்சார அணுகுமுறையும் எவ்வாறு மாற்றப்பட வேண்டும் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோமானால், சில நிலைமைகள் நம்மால் மாற்றியமைக்க முடியாதவாறு உள்ளன என்னும் உண்மையை எப்போதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கும். ஏற்கெனவே குறிப்பிட்டவாறு, எந்த வகையில் பார்த்தாலும், மனிதனின் உடலியல் ரீதியான இயல்பு, மாற்றத்துக்கு உட்படாதது. அதற்கும் மேலாக, கடந்த சில நூற்றாண்டுகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப, சமூகநிலை வளர்ச்சிகள் இங்கே நிலைத்து நிற்கக் கூடிய நிலைமைகளை உருவாக்கி வைத்துள்ளன. தமது தொடர்ச்சியான வாழ்க்கைக்கு இன்றியமையாத சாதனங்கள் தேவைப்படுகின்ற, சற்றே நெருக்கமான மக்கள் தொகை கொண்ட சமுதாய அமைப்பில் தீவிரமான உழைப்புப் பிரிவினையும் மிக அதிகமாக மையப்படுத்தப்பட்ட உற்பத்தி முறையும் கட்டாயத் தேவையாகும். தனிமனிதர்களோ, ஓரளவு சிறிய குழுக்களோ முழுமையான தன்னிறைவுடன் வாழ முடிகின்ற காலம் – திரும்பிப் பார்த்தால் சொர்க்கமாய் இருந்த அந்தக் காலம் – போயே விட்டது. மனிதகுலம் இப்போதும்கூட உற்பத்தி மற்றும் நுகர்வு சார்ந்த பூமிவாழ் சமூகத்தையே கொண்டுள்ளது என்று கூறினால் மிகையாகாது.

என்னைப் பொறுத்தவரை நமது காலத்து நெருக்கடியின் சாராம்சம் என்ன என்பதைச் சுருக்கமாகச் சுட்டிக்காட்ட வேண்டிய கட்டத்துக்கு நான் இப்போது வந்துவிட்டேன். அது தனிமனிதருக்கு சமுதாயத்தோடுள்ள உறவுநிலை பற்றியதாகும். தனிமனிதர் சமுதாயத்து மீதுள்ள தனது சார்புத் தன்மையை முன் எப்போதையும்விட இப்போது அதிகமாக உணர்கிறார். ஆனால், இந்தச் சார்புத் தன்மையை ஒரு சாதகமான அனுகூலமாகவோ, ஓர் இயற்கையான பந்தமாகவோ, ஒரு பாதுகாப்பான சக்தியாகவோ அனுபவத்தில் அவர் உணரவில்லை. மாறாக, அவருடைய இயல்பான உரிமைகளுக்கும் அவருடைய பொருளாதார வாழ்வுக்குமேகூட ஓர் ஆபத்தாகவே கருதுகிறார். மேலும், சமுதாயத்தில் அவர் வகிக்கும் இடம், அவரின் உள்ளார்ந்த ’தான்’ என்னும் தன்முனைப்பு உந்துதலை எப்போதும் வலியுறுத்துகின்ற நிலையிலேயே உள்ளது. அதே வேளையில், அவருடைய சமுதாய ரீதியான உந்து சக்திகள் இயல்பாகப் பலவீனமாகவே உள்ளன, படிப்படியாக நசிந்து வருகின்றன. அனைத்து மனிதர்களுமே, அவர்கள் சமுதாயத்தில் எத்தகைய அந்தஸ்தில் உள்ளவராயினும், இத்தகைய நசிவுப் போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களை அறியாமலேயே தமது சொந்தத் தன்னகந்தையின் கைதிகளாக இருக்கும் இவர்கள் பாதுகாப்பற்று இருப்பதாகவும், தனித்து விடப்பட்டுள்ளதாகவும் உணர்கின்றனர். சூதுவாது இல்லாத, எளிய, பகட்டில்லாத முறையில் வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை குறுகியதாகவும் ஆபத்தானதாகவும் இருந்த போதிலும், மனிதன் சமுதாயத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதன் மூலமாக மட்டுமே வாழ்க்கையின் அர்த்தத்தைக் காண முடியும்.

[இன்றைய மனித சமூகத்தின்] கேடுகளுக்கு உண்மையான மூல காரணம் இன்றைக்கு நிலவுகின்ற முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார அராஜகமே என்பது என்னுடைய கருத்தாகும். உற்பத்தியாளர்களைக் கொண்ட ஒரு பெரிய சமூகக் குழுவின் உறுப்பினர்கள், அவர்களுடைய கூட்டு உழைப்பின் பலன்களை அனுபவிக்க விடாமல் ஒருவர் மற்றவரைத் தடுப்பதற்கு தொடர்ந்து முயன்று வருகின்றனர் என்பதை நம் கண்முன்னால் காண்கிறோம். பலாத்காரத்தின் மூலமாக அல்ல, மொத்தத்தில் சட்டப்படி நிலைநாட்டப்பட்டுள்ள விதிகளுக்கு உட்பட்டே இதனைச் செய்து வருகின்றனர். இந்தவகையில், உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் அதாவது, நுகர்வுப் பண்டங்களையும் அதோடுகூட மூலதனப் பண்டங்களையும் உற்பத்தி செய்வதற்குத் தேவையான ஒட்டுமொத்த உற்பத்தி சக்தி அனைத்தும் சட்ட ரீதியாகவே தனிநபர்களின் தனிச்சொத்தாக இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகும்.

இனிவரும் விவாதத்தில், எளிமை கருதி, உற்பத்தி சாதனங்களின் உரிமையில் பங்கில்லாத அனைவரையும் “தொழிலாளர்கள்” என்று அழைக்க இருக்கிறேன், வழக்காற்றில் இச்சொல்லை அந்தப் பொருளில் பயன்படுத்துவதில்லை என்றபோதிலும். உற்பத்தி சாதனங்களின் உரிமையாளர் தொழிலாளியின் உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குகின்ற நிலையில் உள்ளார். உழைப்பு சாதனங்களைப் பயன்படுத்தி தொழிலாளி உற்பத்தி செய்யும் புதிய பண்டங்கள் முதலாளியின் உடைமையாக ஆகின்றன. இந்த நிகழ்வுப்போக்கு பற்றிய சாராம்சமான கருத்து என்னவெனில், தொழிலாளி உற்பத்தி செய்த பொருள், அவருடைய கூலி இவை இரண்டுக்கும் இடையே உள்ள தொடர்பே ஆகும். இரண்டும் உண்மை மதிப்பின் மூலமே அளவிடப்படுகின்றன. உழைப்புக்கான ஒப்பந்தம் சுதந்திரமாக இருக்கும் பட்சத்தில், தொழிலாளி கூலியாகப் பெறுவது அவர் உற்பத்தி செய்த பண்டங்களின் உண்மையான மதிப்பைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை. தொழிலாளியின் குறைந்தபட்சத் தேவைகள், உற்பத்தி வேலைகளுக்காகப் போட்டியிடும் தொழிலாளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் முதலாளிக்குத் தேவைப்படும் உழைப்பு சக்தி ஆகியவற்றைக் கொண்டே [தொழிலாளியின் கூலி] நிர்ணயிக்கப்படுகிறது. கொள்கை அளவில்கூட, தொழிலாளிக்கு வழங்கப்படும் கூலி அவர் உற்பத்தி செய்யும் பொருளின் மதிப்பு அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.

தனியார் மூலதனம் ஒருசிலரின் கைகளிலேயே குவியத் தொடங்குகிறது. முதலாளிகளுக்கு இடையே நிலவும் போட்டி இதற்கு ஒரு காரணமாகும். தொழில்நுட்ப வளர்ச்சியும் வேலைப் பிரிவினையின் அதிகரிப்பும் சேர்ந்து, சிறிய அளவில் உற்பத்தி செய்யும் தொழிலகங்களை விழுங்கிப் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் அமைவதற்கு உதவுவதும் இன்னொரு காரணமாகும். இத்தகைய வளர்ச்சிப்போக்கின் விளைவாக, தனியார் மூலதனத்தைக் கையில் வைத்துள்ள ஒருசிலரின் ஆதிக்க ஆட்சி உருவாகிறது. அதன் அளவிறந்த ஆற்றலை ஜனநாயக ரீதியில் அமைந்த ஒர் அரசியல் சமுதாயத்தால்கூடத் தீர்மானகரமாய்த் தடுத்து நிறுத்த இயலாது. இது உண்மை ஆகும். காரணம், தனியார் முதலாளிகள் பெருமளவு நிதியுதவி அளிக்கின்ற அல்லது பிறவகையில் செல்வாக்குச் செலுத்துகின்ற அரசியல் கட்சிகளே சட்டமன்றங்களின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றன. எந்த வகையில் பார்த்தாலும், வாக்காளர்களைச் சட்டமன்றங்களிலிருந்து பிரித்து விடுகின்றனர். இதன் விளைவாக, மக்களின் பிரதிநிதிகள் [என்று சொல்லப்படுகின்றவர்கள்] சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நலன்களைப் போதுமான அளவுக்குக் காப்பாற்றுவதில்லை. மேலும், தற்போது நிலவும் சூழ்நிலையில், தனியார் முதலாளிகள், நேரடியாகவோ மறைமுகமாகவோ, பிரதான தகவல் சாதனங்களை (பத்திரிகை, வானொலி, கல்வி) தவிர்க்க முடியாதவாறு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனவே, ஒரு தனிக் குடிமகன் புறநிலையான முடிவுகளுக்கு வருவதோ, தனது அரசியல் உரிமைகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்வதோ மிகமிகக் கடினம், பல நேரங்களில் நிச்சயமாக முடியாததும் ஆகும். மூலதனத்தின் மீதான தனிச் சொத்துரிமையின் அடிப்படையில் அமைந்த பொருளாதாரத்தில் நிலவுகின்ற சூழலை இரண்டு பிரதானக் கோட்பாடுகளின் மூலம் இவ்வாறாக விளக்கலாம்: முதலாவதாக, உற்பத்தி சாதனங்கள் (மூலதனம்) தனியாருக்குச் சொந்தமாக இருக்கின்றன. அதன் உரிமையாளர்கள் தாம் விரும்பியவாறு அவற்றைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இரண்டாவதாக, உழைப்பு ஒப்பந்தம் சுதந்திரமானது. என்றாலும், இந்த அர்த்தத்தில், கலப்பற்ற முதலாளித்துவ சமுதாயம் என எதுவும் கிடையாது. குறிப்பாக, தொழிலாளர்கள் நீண்ட கசப்பான அரசியல் போராட்டங்களின் மூலமாக, சில வகையினத் தொழிலாளர்களுக்குச் சற்றே மேம்பட்ட வடிவில் “சுதந்திர உழைப்பு ஒப்பந்தம்” பெற்றுத் தருவதில் வெற்றி கண்டனர். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இன்றைய பொருளாதாரம், “கலப்பற்ற” முதலாளித்துவத்திலிருந்து பெரிதாக வேறுபடவில்லை. உற்பத்தியானது இலாபத்துக்காக செய்யப்படுகின்றது, பயன்பாட்டுக்காக அல்ல. வேலை செய்ய முடிகிற, வேலை செய்ய விரும்புகின்ற அனைவருக்கும் எப்போதும் வேலை கிடைப்பதற்கான உத்திரவாதம் அளிக்கின்ற சட்டம் எதுவுமில்லை. எந்த நேரத்திலும் வேலை பறிபோகலாம் என்ற பயத்திலேயே தொழிலாளி வாழ்கிறான். வேலையற்ற தொழிலாளர்களும் மிகக் குறைவான கூலி பெறும் தொழிலாளர்களும் இலாபகரமான சந்தைக்கு உதவ மாட்டார்கள். இதன் காரணமாக, நுகர்வுப் பண்டங்களின் உற்பத்தி கட்டுப்படுத்தப்படுகிறது. மிகுந்த இன்னலே இதன் விளைவாகும். தொழில்நுட்ப முன்னேற்றம், அனைவரின் வேலைச் சுமையைக் குறைப்பதற்குப் பதிலாக, பெரும்பாலும் மிகுதியான வேலையின்மைக்கே வழி வகுத்துள்ளது. இலாப நோக்கம், முதலாளிகளுக்கு இடையேயான போட்டியுடன் சேர்ந்து, மூலதனக் குவிப்பிலும், அதன் பயனாக்கத்திலும் ஒரு நிலையற்ற தன்மைக்குக் காரணமாக அமைகிறது. இதுவே, மிகுதியான அளவில், மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு இட்டுச் செல்கிறது. வரம்பிலாப் போட்டி, மிகுதியான உழைப்பு விரயத்துக்கும் நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, தனிமனிதர்களின் சமூக உணர்வு ஆட்டம் காண்பதற்கும் காரணமாகிறது.

தனிமனிதர்களின் சிதைவையே முதலாளித்துவத்தின் மிக மிக மோசமான கேடாகக் கருதுகிறேன். நமது மொத்தக் கல்வி அமைப்பே இந்தக் கேட்டினால் கெட்டுக் கிடக்கிறது. ஒரு மிகைப்படுத்தப்பட்ட போட்டி மனப்பான்மை மாணவனுக்குள்ளே வளர்க்கப்படுகிறது. அவன் தன்னுடைய எதிர்கால முன்னேற்றத்துக்குப் பொருளாயத வெற்றிகளைப் பூஜிப்பதற்கே பயிற்றுவிக்கப்படுகிறான். இத்தகைய மோசமான கேடுகளையெல்லாம் களைவதற்கு ஒரேயொரு வழி மட்டுமே உள்ளது என நான் நம்புகிறேன். ஒரு சோசலிஷப் பொருளாதார அமைப்பை நிறுவி, சமூக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதே ஒரே வழி. அத்தகைய ஒரு பொருளாதார அமைப்பில் உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் சமுதாயத்துக்கே சொந்தமானதாக இருக்கும். திட்டமிட்ட முறையில் அவை பயன்படுத்திக் கொள்ளப்படும். சமுதாயத்தின் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் ஒரு திட்டமிட்ட பொருளாதார அமைப்பாக அது இருக்கும். செய்யப்பட வேண்டிய வேலைகள், வேலை செய்ய முடிகிற அனைவர்க்கு இடையேயும் பகிர்ந்தளிக்கப்படும். ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கும். ஒருவருக்கு அளிக்கப்படும் கல்வி, அவரின் உள்ளார்ந்த ஆற்றல்களை வளர்ப்பதோடு, தற்கால சமுதாயத்தில் இருப்பதைப்போல அதிகாரத்தையும் அதன் வெற்றியையும் போற்றுகின்ற மனப்பான்மைக்குப் பதிலாக, சக மனிதர்கள் மீதான ஒரு அக்கறை உணர்வை அவருக்குள்ளே வளர்ப்பதற்கு முயலும்.

எனினும், திட்டமிட்ட பொருளாதாரம் என்பது சோசலிஷம் ஆகிவிடாது என்பதை நினைவில் கொள்வது முக்கியம். திட்டமிட்ட பொருளாதாரத்துடன், இயல்பாகவே தனிமனிதனின் முழுமையான சார்புநிலையும் சேர்ந்தே வரலாம். சோசலிஷத்தை அடைய, மிகமிகக் கடினமான சில சமூக – அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அவசியமாகிறது: தீவிர விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய, அரசியல், பொருளாதார அதிகாரங்களை மையப்படுத்தலை நோக்குகையில், அதிகார வர்க்கம் எல்லாம் வல்லதாகவும், அகங்காரம் மிக்கதாகவும் ஆகிப்போவதைத் தடுப்பது எவ்வாறு சாத்தியம்? தனிமனிதனின் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்க முடியும்? அதன்மூலம், அதிகார வர்க்கத்தின் அதிகாரத்துக்கு ஒரு ஜனநாயக எதிரீட்டை உறுதி செய்வது எவ்வாறு? [புதிய கட்டத்துக்கு] மாறிச் செல்லும் நமது காலத்தில், சோசலிஷத்தின் நோக்கங்கள் பற்றியும் அதன் பிரச்சினைகள் பற்றியும் தெளிவு பெறுவது மிகப்பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. இன்றைய சூழ்நிலையில், இத்தகைய பிரச்சினைகள் பற்றிய சுதந்திரமான, குறுக்கீடில்லாத விவாதம் சக்திமிக்க தடைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதால், இந்தப் பத்திரிகையைத் தொடங்குவது ஒரு முக்கியமான பொதுச் சேவையெனக் கருதுகிறேன்.

தமிழாக்கம்: மு.சிவலிங்கம்

[1949 மே மாதம் தொடங்கப்பட்ட “மன்த்லி ரிவ்யூ” என்ற பத்திரிகையின் முதல் இதழில் வெளியான கட்டுரை]

https://monthlyreview.org/2009/05/01/why-socialism/

Read more...

Sunday, January 21, 2018

கனடா துர்க்கையம்மன் ஆலயத்தினுள் மனித உரிமை மீறல். போட்டுடைத்தது கனடிய ஊடகம்.

கனடாவின் ரொரொண்டோ மாநிலத்திலுள்ள துர்கையம்மன் ஆலயத்தின் கோபுரக்கட்டுமானப் பணிகளுக்கென இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக கனடிய ஊடகமான சீபீசீ நீயூஸ் அம்பலப்படுத்தியுள்ளது. புலம்பெரும் நாடுகளெங்குமுள்ள பெரும்பாலான ஆலயங்கள் மீது மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றபோதும் நிர்வாகத்தினர் அவற்றை வழமையான பாணியில் நிராகரித்து தவறுகளை திருத்துவதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாதபோது அவை வெளிநாட்டு ஊடகங்களால் பல தருணங்களில் அம்பலப்படுத்தப்படுகின்றது. இவ்வாறு வெளிநாட்டு ஊடகங்களால் அம்பலப்படுத்தப்படுகின்றபோது ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் வெட்கித்தலைகுனியவேண்டிய அல்லது சமூககுற்றவாளிக்கூண்டில் ஏறவேண்டிய நிலை ஏற்படுகின்றது.

கனடிய ஊடகச் செய்தி பின்வருமாறு அமைகின்றது.

ரொறன்ரோ ஆலயத்தில் தாங்கள் தவறாக நடத்தப்பட்டதாக வெளிநாட்டுத் தமிழ் தொழிலாளர்கள் கூறுகின்றார்கள்.

(சுதாகர் மாசிலாமணியும் வலப்பக்கத்தில் கடைசியாகவுள்ள சேகர் குருசாமியும் CBC ரொறன்ரோவுக்குப் புகாரளித்துள்ளனர். மற்றைய இருவரையும் CBC ரொறன்ரோ நேர்காணல் செய்ய முடியாமலிருப்பதால் அவர்களுடைய முகங்கள் மங்கலாக்கப்பட்டுள்ளன.)

CBC ரொறன்ரோவுடன் மட்டுமே பேசிய இரண்டு தொழிலாளர்களின் கருத்துப்படி, ரொறன்ரோவில் இருக்கும் இந்து ஆலயத்துக்கான சிற்பிகளாக இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்த நான்கு தொழிலாளர்கள் மிகவும் கஷ்டமான வாழ்க்கைச் சூழலுக்கு முகம் கொடுத்ததுடன் மிகவும் குறைவான ஊதியத்தையே பெற்றிருக்கின்றனர்.

'It's slavery in the modern world': Foreign workers say they were hungry, abused at Toronto temple


சேகர் குருசாமி, 51 மற்றும் சுதாகர் மாசிலாமணி, 46 இன் கருத்துப்படி, ஆலயத்தின் மிகவும் புனிதமான பகுதிகளில் ஒன்றைப் பகல் நேரத்தில் செதுக்கி, பூச்சு வேலை செய்த அவர்கள், இரவில் அந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தில் உயிர்ப்பற்ற நிலையில், கொதிகலனுக்குப் பக்கத்தில் மடிக்கும் கட்டில்களில் நித்திரை கொள்வார்கள்.

"நாங்கள் மிகவும் பசியுடன் இருந்தோம், எங்களால் அதைத் தாங்கமுடியாமலிருந்தது. சாப்பிடாமல் இருப்பதால், எங்களுக்குத் தலைசுற்றும்" என மொழிபெயர்ப்பாளர் ஒருவர் ஊடாக CBC உடன் பேசிய குருசாமி கூறினார்.

CBC ரொறன்ரோவுக்கான அறிக்கை ஒன்றில், குற்றச்சாட்டுகள் "பொய்யானவை," என ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயம் கூறுகிறது.


ஆலயத்தின் அடித்தளத்தின் ஒரு அறையிலிருந்த நான்கு மடிக்கும் கட்டில்களில் நித்திரை கொள்ளும்படி தாங்கள் வற்புறுத்தப்பட்டதாக தொழிலுக்காக இடம்பெயர்ந்த அந்தத் தமிழர்கள் கூறுகின்றனர்.

'எங்களுக்குப் போதுமான உணவு கிடைக்கவில்லை'

தேவாலயம் ஒன்றில் உள்ள தூபிக்கு ஒத்த, ஆலயக் கோபுரத்தின், $1.2 மில்லியன் பெறுமதியான புனருத்தான வேலைகளின் ஒரு பகுதியைச் செயலாக்குவதற்காக ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயம் இந்தியாவிலிருந்து நேரடியாக இந்த நான்கு தமிழ் ஆண்களை வேலைக்கமர்த்தியது.

இந்த நான்கு தமிழ்த் தொழிலாளர்களும் உணவுக்காக இந்த ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியாருக்கு அழுத்தம் கொடுத்தபோது, அவர் சொற்களால் துன்புறுத்தியதுடன் வன்முறை செய்வதாக மிரட்டினார் எனக் குருசாமி கூறினார்.

"அவருக்கு மிகவும் கோபம் வந்தது, வெளியேறச் சொல்லி எங்களிடம் சொன்னார். 'நாயே வெளியேறு' என அவர் சொன்னார். தகாத சொற்களைப் பயன்படுத்தினார்." எனக் குருசாமி கூறினார். "என்னுடைய மனம் புண்பட்டுப்போனது. எங்களுக்குப் போதுமான உணவு கிடையாததால் நாங்கள் அழுதுகொண்டிருந்தோம். வேறு என்னத்தைச் செய்வதெண்டு எங்களுக்குத் தெரியேல்லை. எங்களுக்கு ஆரையும் தெரியாது. இந்த நாட்டுக்கு இப்பதான் முதல் தரமாக வந்திருக்கிறோம்."

அவருக்கு அல்சர் இருப்பதாகவும், அதனால் ஒழுங்காகச் சாப்பிடுவது அவருக்கு முக்கியமானது எனவும் மாசிலாமணி CBC ரொறன்ரோவுக்குக் கூறினார்.

"சரியான சாப்பாடு எதுவுமில்லாமல். ஐந்து மாதமா நாங்க அங்கே வேலைசெய்திருக்கிறம்," என மொழிபெயர்ப்பாளர் ஒருவர் ஊடாக மாசிலாமணி கூறினார். "சாப்பாடு பற்றி அவரிடம் நாங்கள் கேட்க முடியாது. வணங்கவருபவர்கள் முதல் நாள் சாப்பிட்ட சாப்பாட்டின் மீதியே எங்களுக்குத் தரப்படும்."

அடித்தளத்தில் கொதிகலனுக்குப் பக்கத்தில் நித்திரை கொள்ளும்படி அவர்கள் நான்கு பேரும் வற்புறுத்தப்பட்டதாக அந்தத் தமிழ் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு நாள் கூட ஓய்வில்லாமல், வாரத்தில் 60 மணி நேரத்துக்கும் அதிகமாக அவர்கள் வேலைசெய்ததாகவும், ஆனால், உணவும் நித்திரைக்கான வசதிகள்தான் அதிகம் கவலைதருவனவாக இருந்தன என்றும் மாசிலாமணியும் குருசாமியும் கூறினர்.

"மூட்டைப் பூச்சிகளைப் பற்றி நான் சொன்னாலும்கூட [பிரதம சிவாச்சாரியாருக்குக்] கோபம் வரும். அவர் எங்களை மன அழுத்தம் உள்ளவர்களாகவும் வேதனைப்படுபவர்களாகவும் மாற்றியிருக்கிறார்." எனக் கூறினார் மாசிலாமணி.

"அவருடைய நடத்தை சிவாச்சாரியார் ஒருவருடைய நடத்தை போன்றதல்ல. நிறையத் தகாத வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருக்கிறார்," எனக் குருசாமி கூறினார். "எங்களை அடிக்கப் போவதுபோல தனது கைகளை அவர் உயத்தினார்."

புகார்கள் ஆதாரமற்றவை என்கிறது ஆலயம்

பிரதம சிவாச்சாரியார் கணசுவாமி தியாகராஜகுருக்களுடனான ஒரு நேர்காணலுக்கான வேண்டுகோளை ஸ்ரீ துர்கா இந்து ஆலயம் மறுத்துவிட்டது, ஆனால், அதன் மதரீதியான சிற்ப வேலைகளைப் பூர்த்திசெய்வதற்காகக் கடந்த ஐந்து ஆண்டுகளாக தற்காலிகத் தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள் என ஓர் அறிக்கையில் அது கூறியுள்ளது.

"மேலதிக நேர வேலை எதுவும் செய்யப்படவில்லை," அத்துடன் "கட்டுமானத் தளத்தை இலகுவாக அணுகுவதற்காகவும், போக்குவரத்துத்துக்குத் தேவைப்படும் நேரத்தைக் குறைப்பதற்காகவும், உணவுக்காகவும் ஆன்மீகத் தேவைகளுக்காகவும் ஆலயத்தை அணுகுவதற்காகவும்," தொழிலாளர்களுக்கு அங்கு இருப்பிடம் வழங்கப்பட்டது என ஆலயம் கூறுகிறது.

"கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக, எங்களுடைய மதரீதியான சிற்பவேலைத் தொழிலாளர்கள் வாழ்க்கைச் சூழல்கள் தொடர்பாக ஒருபோதும் கரிசனைகளை வெளிப்படுத்தியதுமில்லை புகார்களை எங்களுக்குச் சொன்னதுமில்லை," என அந்த அறிக்கை கூறுகிறது. "ஊதியம், வேலைச் சூழல், வசிப்பிட வசதிகள் தொடர்பாக சிற்பிகள் திருப்தியடைந்திருந்ததை எங்ளுடைய கடந்த காலத் தொழிலாளர் திருப்திக் கருத்தாய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன."

"தொழிலாளர்கள் எவரையும் எங்களுடைய பணியாளர்கள் வார்த்தைகளால் தாக்கவுமில்லை, உடல்ரீதியாகப் பலமாகத் தள்ளவோ அல்லது தள்ளவோ இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்."




அந்த நான்கு தொழிலாளர்களையும் மோசமாக நடத்தியதாக ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயப் பிரதம சிவாச்சாரியார் கணசுவாமி தியாகராஜாக்குருக்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

'இதுநவீன உலகின் அடிமைத்தனமாகும்':  தமிழ் தொழிலாளர் வலையமைப்புக் கூறுகிறது 


முடிவில், தொழிலாளர்கள் முகம்கொடுப்பதாகக் கூறப்பட்டுள்ள இந்த நிலைமைளை ஆலயத்துக்குப் பிரார்த்தனைக்குச் செல்லும் ஒருவர் அறிந்து, தமிழ் தொழிலாளர் வலையமைப்பைத் தொடர்புகொண்டார்.

"இந்தப் பிரச்சினை பாரதூரமானது … நான் இளமையாக இருக்கும் போது, 20 வருடங்களுக்கு முன்பு இது நடந்திருந்திருந்தால், அந்த ஆலயத்தை நான் கொளுத்தியிருக்கக்கூடும்," என்கிறார், தமிழ் தொழிலாளர் வலையமைப்பு தன்னார்வத் தொண்டர்களில் ஒருவரான ராம் செல்வராஜா. "நியாயமான ஊதியத்தை விடுவம் அதைப் பற்றி நான் கதைக்கவில்லை, மனிதர்கள் நடத்தப்பட்ட விதம் … நவீன உலகத்தின் அடிமைத்தனம் இது."

சாரக்கட்டுகளில், தரையிலிருந்து 20 மீற்றர் உயரத்தில் வேலைசெய்தபோதும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இரண்டாம் தரத் தலைக்கவசம் மற்றும் பூட்ஸ் தவிர்ந்த பாதுகாப்புக் கவசங்கள் எதுவும் அவர்களிடம் இருக்கவில்லை, எனத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

சாரக்கட்டுகளில், நிலத்திலிருந்து 20 மீற்றர் அளவு உயரத்தில் அவர்கள் வேலைசெய்து கொண்டிருந்தபோதும், அவர்களுக்கு பாதுகாப்புக் கவசங்கள் வழங்கப்படவில்லை, எனத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அந்த நான்கு தொழிலாளர்களும், கடந்த செப்ரெம்பரில் தமிழ் தொழிலாளர் வலையமைப்பைச் சந்தித்து தங்களுடைய தொழில் ஒப்பந்தங்களை வழங்கியிருந்தனர். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால், அந்த ஆண்களால் வாசிக்க முடியாத ஒன்றாக அது இருந்தது.

அந்த நான்கு ஆண்களும் ஏப்ரல் 15, 2017 முதல் ஒக்ரோபர் 15, 2017 வரையான ஆறு மாதங்களுக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்ததை அவர்களின் வேலைவாய்ப்புப் பதிவேடுகள் காட்டின.

வாரத்துக்கு 40 மணி நேரம், மணித்தியாலத்துக்கு $18படியும், மேலதிக நேரத்துக்கு மணித்தியாலத்துக்கு $27படியும் அந்த ஆண்கள் ஊதியம்பெறுவார்கள் என்பதை அந்த ஒப்பந்தம் வரையறுக்கிறது. மேலதிக நேரத்தைத் தவிர்ந்துப் பார்த்தால் இது மாதத்துக்கு கிட்டத்தட்ட $2,500 ஆக இருக்கும்.


ஒரு மாத வேலைக்கு $2,530 அவர்களுக்கு வழங்கப்பட்டது எனத் தொழிலுக்காக இடம்பெயர்ந்த அந்தத் தொழிலாளர்கள் கூறும் காசோலை ஒன்றுக்கான ஓர் உதாரணம் இது. (Tamil Workers Network)

நான்கு தொழிலாளர்களும் ஒரு சில மணி நேரத்துக்குள் இந்தியாவுக்குப் புறப்படுகிறார்கள் என பிரதம சிவாச்சாரியார் அவர்களுக்கு செப்ரெம்பர் 24ம்திகதி காலை கூறியதாகக் குருசாமியும் மாசிலாமணியும் கூறுகின்றனர்.

ஒப்பந்தம் முடிவதற்கு மூன்று வாரகாலத்துக்கு முன்னதாகவும், தமிழ் தொழிலாளர் வலையமைப்புடன் அந்த நான்கு ஆண்களும் கதைத்த சில நாட்களுக்குப் பின்பாகவும் அது நடந்தது.

தங்களுடைய ஐந்தாவது மாத வேலைக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை என இந்தியாவிலிருந்து CBC உடன் பேசிய அந்த இரண்டு ஆண்களும் தெரிவித்தனர்.

ஆலயம், தனது அறிக்கையில் அவர்கள் நேரத்துடன் அனுப்பப்பட்டதை மறுத்திருந்ததுடன், அந்த இரண்டு தொழிலாளர்களும், "அந்தச் செய்திட்டத்தை பூர்த்திசெய்வதற்காக 2018 வசந்த காலத்தில் திரும்பிவருவதற்கு விருப்பத்தைத் தெரிவித்திருந்தாகவும்," கூறியுள்ளது.

குருசாமியுடனும் மாசிலாமணியுடனும் வேலைசெய்த மற்ற இரண்டு சிற்பிகளினதும் பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் CBC ரொறன்ரோவுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த வீடியோக்களில் அவர்களும் தங்களுடைய வேலைச் சூழல்கள் பற்றி அதே மாதிரியான குற்றச்சாட்டுகளையே கூறியுள்ளார்கள்.

ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயம் ஒரு 'வர்த்தகமாக' மாறியுள்ளது, என ஒரு செயற்பாட்டாளர் குற்றம்சாட்டுகிறார்.

குற்றச்சாட்டுகள் கவலைதருவனவாக உள்ளன, ஏனெனில் அந்தப் பிரதம சிவாச்சாரியார் ஆலயத்தை ஒரு "வர்த்தகம்" போல இயக்கிறார் போலிருக்கிறது என்கிறது, தமிழ் தொழிலாளர் வலையமைப்பு

சிவாச்சாரியார் தியாகராஜக்குருக்கள் மேலான CBC ரொறன்ரோவின் புலன்விசாரணை BMW ஒன்று அவர் பெயரில் இருப்பதையும் Mercedes S5A அற நிலையமான ஆலயத்தின் பெயரில் இருப்பதையும் காட்டுகிறது.

குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் மற்றும் சாதனைகள் செய்த கனேடியர்களுக்கு மதிப்பளிக்க வழங்கப்படும் விருதான, Queen's Diamond Jubilee Medalஐயும் (ராணியின் வைரவிழாப் பதக்கம்) 2012இல் தியாகராஜக்குருக்கள் பெற்றிருக்கின்றார்.

"முக்கியமாக 'நான் கடவுளின் அடியான்; இது வழிப்பாட்டுக்குரிய ஓர் இடம், என நீங்கள் சொல்லும்போது, உங்களுக்குத் தெரியும், மக்கள் தங்கடை நம்பிக்கைகளையும் கனவுகளையும் விரக்திகளையும் ஆலயம் ஒண்டுக்குள் கொண்டுவருவினம், அதோடை இது ஒரு வர்த்தகமாகிட்டுது என நான் நினைக்கிறன்; இது ஒரு சுரண்டல்,'' என்கிறார் செல்வராஜா.

கோபுரத்துக்கான கட்டுமான நிதிக்கு அவருடைய தாயார் அன்பளிப்புச் செய்திருக்கிறார். அத்துடன் அவருடைய சமூகத்துக்குள் உள்ள மிக முக்கியமான மதத் தலைவர் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதலால், இவை "பாரதூரமான குற்றச்சாட்டுகளாக" இருக்கின்றன என்பதை அவர் ஏற்றுக்கொள்கிறார்.

"என்னுடைய அம்மா, 'இல்லை, இல்லை, இல்லை, அப்படி இருக்கேலாது. இது ஒரு ஆலயம். ஆலயங்களிலை இப்பிடி நடக்கிறதில்லை.' என்கிறார். ஆனபடியால், இது மிகப் பாரதூரமான ஒரு விஷயம். சமூகத்துக்குள்ளை நிறைய எதிர்முழக்கங்களை இது கொண்டுவரப் போகுது எண்டது எனக்கு நிச்சயமாய்த் தெரியுது," என்கிறார், செல்வராஜா.

நகரிலுள்ள தொழிலுக்காக இடம்பெயர்ந்த தமிழர் தொடர்பில் கேள்விப்பட்ட முதலாவது விடயமாக இது இருப்பதால், முறைசாராத புலன்விசாரணைகளை ரொறன்ரோ தமிழ் சமூகத்தினுள் தமிழ் தொழிலாளர் வலையமைப்பு ஆரம்பித்திருக்கிறது. அத்துடன் இது மட்டுமல்ல இப்படிப் பல நடந்திருக்கும் என அது நம்புகிறது.

"இதன் பூதாகாரத்தை நாங்கள் புரிந்துகொள்ளும்போது, இப்படிப் பல விடயங்கள் வெளியில் வரப்போகின்றன என்பது எங்களுக்கு நன்கு தெரிகிறது," என அவர் கூறினார். "இப்போது இது எங்களுடைய radarஇல் இருக்கிறது."

பனிப்பாறையின் முனை, என்கிறார் சட்டத்தரணி

Parkdale Community Legal Services (சமூக சட்ட சேவைகள்) இந்த வழக்கினை இலவசமாக நடத்துகிறது. உண்மையிலேயே அந்த ஆண்கள் எவ்வளவு ஊதியத்தைப் பெற்றார்கள் என்பதைக் காட்டும் இந்திய வங்கிக் கணக்குப் பரிவர்த்தனை அறிக்கைகளைப் பெறுவதற்கு அந்தச் சட்ட மையம் தற்போது முயற்சிக்கின்றது.

"எங்களுடைய ஆரம்ப மதிப்பீடுகளின் அடிப்படையில் குறைந்த வேதனம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவு இரண்டிலும் கணிசமான தொகை கொடுக்கப்பட வேண்டியுள்ளது என நாங்கள் நம்புகிறோம்," என்கிறார், அந்த மையத்தின் தொழிலாளர் உரிமைகள் பிரிவுச் சட்டத்தரணி, John No

தற்காலிக வேலை அனுமதிப்பத்திரம் உள்ள வெளிநாட்டவர்கள், கனடாவில் ஒரு வேலைவழங்குநருடன் மட்டுமே வேலைசெய்யலாம்.

"கனடாவில் தங்கியிருப்பதற்கான திறனும், வாழ்வதற்கான ஊதியம் பெறலும் அந்த ஒரு வேலைவழங்குநரில்தான் முற்றாகத் தங்கியுள்ளது. அதனால் வேலைச் சூழலிலோ அல்லது வேலைவாய்ப்புத் தரங்களிலோ அந்த வேலைவழங்குநர் அவர்களை மோசமாக நடத்தினாலும் அந்த வேலையை அவர்கள் விட முடியாது என்பதால் அவர்களுக்கு மிகக் குறைந்தளவு மாற்றீடுகளே உள்ளன,"என்கிறார், No.

தொழிலுக்காக இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தவறாக நடத்தப்படும் சுமார் 50 வழக்குகளை அவரின் அலுவலகம் ஒவ்வொரு வருடமும் கையாள்வதாக No கூறினார்.

"இது பனிப்பாறையின் முனை என்றுதான் நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறினார். "அனேகமான தொழிலாளர்கள் முன்னுக்கு வருவதற்குப் மிகவும் பயப்படுகிறார்கள்."

Read more...

யார் இந்த ஹேமசந்திரரா & அருண் ஹேமசந்திரா? யார் துரோகிகள்? கேட்கிறார் DR

நீண்ட விளக்கம். வயதில் குறைந்தவர்களுக்கு என்னை பற்றிய, என்னால் ஒரு அறிமுகம்.

நான் படித்துமுடிந்தபின் பெருன்பான வைத்தியர்களைபோல் சிறந்த வாழ்கைகாக தூரதேசமோ, அல்லது பிரச்சனையில்லாத ஒரு இடமாக போய் இப்போது உள்ளாதிலும்பார்க்க கூடுதலாக பணம் சம்பாதித்து இருக்கலாம்.

ஆனால் என் ஊர் ஒரு பின்தங்கிய, பலவழிகளில் புறகனிக்கபட்ட இடமாகையினால் அதற்கு என்னைபோன்றவர்களின் சேவை தேவை என உணர்ந்து என்னை உருவாகிய எனது பிறந்த மண்னிக்கே அரசாங்க உத்தியோகத்துடன் மாற்றம்பெற்று வந்தேன்.

நான் வைத்தியராவதற்கு முதல் காரணம் நான் ஒரு பின்தங்கிய மாவட்டமான திருகோணமலையில் படித்ததுதான். அதன் கோட்டாவிலேயே முதல் முதலாக திருகோணமலியில் இருந்து மருத்துவகல்லூரிக்கு போனபெருமை என்னையும், என்னுடன் சேர்ந்த மூண்றுபேர்களையும் சேரும். அதிலும் திருகோணமலை இந்துகல்லூரி என்று எடுத்துகொண்டால் கூடுதல் காலம் இந்துகல்லூரியிலே படித்து மருத்துவபிரிவுக்கு சென்றவன் என்ற பெருமை என்னையே சாரும்.

சிறியகால இடைவெளியில் நான் எனது தனியார் மருத்துவமனையை 1981 இல் தொடங்கினேன்.

முதல் முதலாக எனது தனியார் மருத்துவ தொழிலை நான் கிண்னியாவில் இருந்துதான் ஆரம்பித்தேன். அதற்கு எனது கிண்ணியா முஸ்லிம் சகோதர்கள் தங்களின் ஒத்துழைப்பை நிறையவே தந்தார்கள். அதில் முக்கியமாக சக்கரியா ஹாஜியார் முதல் இடத்தில் இருந்தார். ஒரு சத காசையேனும் எதிர்பார்காமல் தனது கட்டிடத்தை எனக்கு தந்தார். அவரை, அவரின் உதவியை, கிண்ணியா மக்களின் அன்பையும், ஆதரவையும் நான் உயிர் இருக்கும்வரை மறக்கமாட்டேன். அந்த உருக்குள் காலடிவைத்த முதலாவது Medical Officer நான்தான் என்ற பெருமையும் எனக்குண்டு.

போக்குவரத்துக்கு எனக்கு ஒரு மோட்ட சைக்கிலை தந்து உதவிய சிங்கள அன்பரின் பேர் எனக்கு ஞாபகம் இல்லை. அவர்கூட எனக்கு மிகவும் குறைந்த விலையிலும் வட்டியில்லாத நீண்டகால கடனுக்கும் அந்த வாகனத்தை தந்து உதவிபுரிந்தார்.

நாட்டில் ஏற்பட்ட வன்செயலின் காரணமாக வெளியில் செல்லமுடியாதினால் 1984 ஆண்டுதொடக்கம் எனது தொழிலை முழுனேரமும் எனது வீட்டிலேயே தொடர்ந்தேன்.

அந்த காலகட்டத்தில் ஒரு தழிழ் மகனால் எப்படி ஒரு தனியார் தொழிலை செய்வது என்பது அதை அனுபவித்தவர்களுக்குதான் தெரியும்.

என்னிடம் துவேசம் இருக்கவில்லை. எல்லா பக்கதிலும் எனக்கு நண்பர்கள் இருந்தார்கள். இன்பமும், துன்பமும், ஏற்றமும், இறக்கமும் வாழ்கையில் மாறி மாறி வந்தது. வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு பலரும் உதவினார்கள்.

ஊரில் தழிழ் அரசியல்வாதிகள் எலோரும் ஓடி ஒழிந்துகொண்டவேளையில் நான்மட்டும்தான் இன்றுவரை உயிருக்கும் அஞ்சாமல் ஊரைவிட்டு ஓடாமல் பல இன்னலுக்குமத்தியிலும் இந்த ஊரிலேயே தொடர்ந்து வாழ்துவருகிறேன் என்பதை பெருமையுடன் என்னால் கூறமுடியும்.

அக்காலகட்டதிலும்சரி 1987 இல் இந்தியன் இராணுவம் வந்தபோதும் சரி இன்னல் பட்ட எத்தனையோ சாமானிய மக்கள்களை சாவின் விளிம்புகளிலும், சிறைகூடங்களில் இருந்தும் என்னால் காப்பற்றபட்டவர்கள் பலர் இன்றும் இங்கும், உலகில் பல பாகங்களிலும் பரந்து வாழுகின்றனர். அந்த நேரத்தில் இங்கு எந்த சாணக்கியனும், சம்பந்தன் ஐயாவுமில்லை. உதவிபெற என்னிடமே மக்கள் வந்தனர்.முடியுமான உதவிகளை நான் செய்து கொடுத்தேன். என்னால் உதவியடைந்தவர்கள் பலபேர்கள். ஆனால் என்னால் பாதிக்கபட்டவர்கள் ஒருவராவது இல்லை என்பதையும் தைரியதுடன் என்னால் கூறமுடியும்.

காலங்கள் நகர்தன. தழிழனுக்கு தீர்வுதிட்டம் வருமோ, வராதோ தெரியாது. ஆனால் மக்களுக்கு உதவவேண்டுமென்றால் அரசாங்கத்துடன் சேர்ந்துதான் செயல்படமுயும் என்ற தீர்மானத்து வந்தேன்.
யாரையும் காட்டிகொடுக்கவும் இல்லை. என் இனத்துக்கு செய்யவேண்டிய நன்மைகளை தனி ஒருவனாகவும், குழுக்களாகவும் என்னால் செய்யகூடியமாதிரி இருந்தது.

நான் அன்று தூர நோக்குடன் செய்தபோது என்னை துரோகி என்று அழைத்தவர்கள், அதை இப்போது தழிழ் தலைவர்கள் செய்யும்போது “சாணக்கியம”என்கிறார்கள்.

நான் துரோகியென்றால் என்ர மண்டையில எப்போவோ போட்டு இருப்பார்கள். அது ஒண்றும் பெரியவேலையில்லை அவர்களுக்கு. ஆனால் என்னில் ஒரு பிழையையும் கண்டுபிடிக்கபடவில்லையென்பதுதான் உண்மை.

குண்டுகள் வெடிக்கும் போதெல்லாம், துப்பாக்கிசத்தம் ஊரெங்கும் கேட்கும்போதெல்லாம், வீடுகள், வியாபார நிலையங்கள் எரியும்போதெல்லாம், இயர்கை அனர்தங்கள் நிகளும்போதெல்லாம் இனவேறுபாடின்றி எனது வைத்தியசாலை மக்கள் சேவைக்கு எப்போதுமே இலவசமாக நாட்கனக்கில் திறந்திருக்கும். அப்போது திருகோணமலையில் யார் உதவிக்கு வந்தார்கள். இந்த ஹேமசந்திராவை தவிர யார் இருந்தார்கள். எந்த சாணக்கியனும் இருக்கவில்லை.

இது எனது பரம்பரை ஊர். நாங்கள் எங்களது 14 வது பரம்பரையில் இப்பொது வாழுகின்றோம். இங்கு வரவழைக்கபட்டவர்கள் நாம். பஞசம் பிழைக்க வந்தவர்கள் இல்லை. அதனாலையே ஊர்பற்று அதிகம். மண்பற்று கூட. அநியாயம் நடக்கும்போது தட்டிகேகனும். இனி இழப்பதற்கு உயிரை தவிர ஒண்றுமில்லை.
எனது காலம் ஓய்விற்கு வந்துவிட்டது. சாதிக்கவேண்டியவற்றைசெல்லாம் சாதித்தாயிற்று. அரசியலில் நான் ஈடுபடமாட்டேன். யாரும் கெட்டதை செய்தால் தட்டிகேட்காமலும் விடமாட்டேன்.

இனி என்னத்தை செய்தாய் என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். எல்லாவற்றயும் ஞாபகத்தில் வைத்திருக்கமுடியாது.

1. மூண்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுதேர்தல் வைத்து கணக்குகாட்டி மக்களின் அனுமதியை பெற்றபின்னரே நிர்வாகத்தை தொடரவேண்டும் என்ற சட்டத்தை மதிக்காமல், 18 வருடகாலமாக எந்தவித பொதுக்கூட்டமோ, கணக்குகாட்டலோ இல்லாமல் இருந்த கோணேசர்கோவிலின் நிர்வாகத்துக்கு எதிராக எனது முதல் சட்டபூர்வமான நடவடிக்கைகள் தொடங்கியது.

சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்தே 22 வருடங்களை கடத்திவிட்டார் பதில் நீதவான். அதில் திருகோணமலை அரசியல் சாணக்கியனும் எங்கே தனது வாக்கு வங்கி குறைந்துவிடுமோ என்று ஒருவித ஒத்துழைப்பையும் தராது ஒதிங்கியே இருந்தார் என்பது மற்றுமொரு அவரின் சாணக்கியம்.

பதில் நீதவானின் மறைவின் பின் உரிய ஜனநாயகமுறையில் தேர்தல் நடாத்தபட்டு மக்களின் கையில் நிர்வாகம் ஒப்படைக்கபட்டது. இந்த நிர்வாகத்தில் நான் எந்த உரிமையும் கோரி பதவிகள் பெறவுமில்லை. பெறபோவதுமில்லை.

2. இந்துகல்லூரியின் பழையமாணவர் சங்கத்தை மீழ கட்டமைத்து இருமுறை அதற்கு தலைவராகவும் இருந்தேன். அந்த 12 வருட காலத்தில் திரு. தண்டாயுதபாணி அதிபருடன் ஒண்றாக பணிபுரிந்தகாலம் எமக்கும் எமது கல்லூரிக்கு ஒரு பொன்னான காலம் என்று சொல்லலாம்.

ஆரம்ப பாலர்பிரிவு இல்லாத நிலையில் நாம் ஆண்டு 1 தொடக்கம் 5 வரையில் ஒரேதரத்தில் அதை கல்லூரிக்கு பெற்று இயங்கவைத்தோம்.

திருகோண்மலையில் முதலாவதாகவும், கிழக்கு மாகாணத்தில் இரண்டாவதுமான தேசிய பாடசாலையாக கல்லூரியை தரமுயர்துவதற்கு எனக்கு உதவியவர்கள் எனது துவேசமில்லா போக்கை பாராட்டிய பெரும்பான்மை இனத்தை தேர்ந்தவர்கள்தான்.

இந்த காலகட்டத்தில் நாங்கள் விபுலானந்த அடிகளாருக்கு ஒரு சிலையை வைத்தோம். அந்த பெருமையும் என்னைத்தான் சாரும். சிலையை செய்து உங்களைபோன்றவர்கள் எதிர்காலத்தில் அறியவேண்டும் என்பதற்காக எனது பேரையும் பதிவு செய்துள்ளேன். அதை இன்றுவரை பராமரிதும் வருகிறேன்.

வசதியில்லாத குழந்தைகளுக்கு எனது தகப்பனாரும் முன்னால் கோணேஸ்வரா வித்தியாலய தலைமை ஆசிரியருமான சு.கு.குமாரசாமி ஐயர் அவர்களின் பேரினால் மாதத்துக்கு ஆயிரம் ரூபாபடி ஐந்து பல்கலைகழகம் செல்லும் மாணவர்களுக்கான இரண்டு வருடத்துக்கான நிதியையும் அளித்துள்ளேன்.

3. எனது நண்பர்களுடன் சேர்ந்து ஜனாதிபதி நடமாடும் செயலகத்தின்போது திருகோணமலைக்கு ஐந்து ஏக்கர் விஸ்தீரனத்தில் ஒரு பொறியியல் கல்லூரியையும் பெற்று கொடுத்தோம்.

4. அந்த ஜனாதிபதி சேவையின்போது ஒருங்கு இனைக்கபட்ட பல்கலைகழகத்தயும் அமைத்து நிரந்தரமாக ஒரு பல்கலைகழத்தை இங்கே கொண்டுவர ஒரு அடிதளத்தை அமைத்து கொடுத்தோம்.

5. மக்களின் ஒற்றுமையை உறுதிபடுத்த ஒரு “ ஐக்கிய சமாதான ஸ்தூபி” யை பொது பஸ்தரிபிடத்துக்குமுன் 1991 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அன்றைய ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாசாவினால் திறந்து வைத்தேன். அதை 27 வடுடங்களின்பின்னரும் இன்றும் காணமுடியும். அதிலும் எனது பேர் உள்ளது.

தொழிழ்கள் பல தொடங்கி வேலைவாய்பற்ற நூற்றுகனக்கான ஏழை தொழிளாரர்களுக்கு வேலைவாய்பை அளித்தேன்.

6) 1991 ஆம் ஆண்டு முதலாவது லயன்ஸ் கழகத்தையும், 2000 ம் ஆண்டு இரண்டாவதையும் ஆரம்பித்து அதன் தலைவராக இருந்து பல சமூக சேவைகளை செய்தும், எனது தலைமையில் 46 கல்வீடுகளையும் கட்டி ஏழை மக்களுக்கு கொடுக்கும் சந்தர்பமும் எனக்கு கிட்டியது.

7. தற்போது யுத்ததினால் பாதிக்கபட்ட மக்களுக்கு தினம் தினம் உதவி வருகிறேன். முன்னைய போராளிகளுக்கும் நிதி உதவி செய்து வருகின்றேன்.

8. தினமும் தேடிவரும் மக்களுக்கு இயலுமான உதவிகளை செய்துவருகின்றேன்.

9. என்னை தொடர்ந்து எனது ஒரே மகன் தனது அரசியல் பயணத்தை JVP யுடன் சேர்ந்து ஆரம்பித்து உள்ளார். ஏன் JVP என்று கேட்பவர்களும் உண்டு. சம்பூரின் அனல் மின் நிலையத்திற்கு எதிராக பலரும் போராடும்போது, அதற்கு உதவிதர சாணக்கியன் சம்பந்தன் அவர்களும், துரைரெட்டினம் MP அவர்களும் இந்தியாவில் சாணக்கியனின் குடும்பம் இருப்பதால் மக்கள் எக்கேடுகெட்டு அழிந்துபோனாலும் பரவாயில்லை, எனக்கு என் குடும்ப சுயனலம்தான் பெரிது என்று, எந்த ஆதரவையும் தரமறுத்துவிட்டார்கள். அரசாங்கத்தை சேர்ந்த சிங்கள, முஸ்லிம் MP மார்களும் ஆதரவு தர மறுத்து விட்டார்கள்.

அந்த நேரத்தில் JVP தான் கைகொடுத்து மனித அடிபடை உரிமைகள் மீறும் சட்டத்திற்கு அமைய ஜனாதிபதிக்கு எதிராக அருண் ஹேமசந்திராவால் ஒரு வழக்கு தொடரபட்டு , அதன் பின்னர் அந்த கட்டுமான பணி கைவிடபட்டது.

10. கங்குவேலி அகஸ்திகர் சிவன் கோவிலுக்கு என்று ஒரு அடி காணி இல்லதபோது அப்போதைய அரசாங்க அதிபரை கூட்டிகொண்டு சென்று இரண்டு ஏக்கர் காணியை உடனடியாக சாப்பாட்டுமேசையில் வைத்து பெற்று கொடுத்தார் அருண் ஹேமசந்திரா.

11. பல தசாப்தங்களின்பின் தழிழருக்கு சொந்தமான 100 ஏக்கர் காணியை அதேயிடத்தை சேர்ந்த படுகாடு என்னுமிடத்தில் ஊர்காவல் படையின் கட்டுப்பாட்டிலிருந்து அன்மையில் மீழபெற்று மீண்டும் தழிழ் பேசும் மக்களுக்கு கொடுத்தார் எனது மகன் அருண் ஹேமசந்திரா.

12. எந்த ஒரு அரசியல் அந்தஸ்தும் இல்லாதபோதும் 23 பேர்களுக்கு அரசு சார்பான கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு பெற்று கொடுத்தார் அருண் ஹேமசந்திரா. இதில் 90% மேலானோர் தழிழ பேசும் மக்கள். இதை எந்த ஒரு தழிழ் அரசியல் வாதிகளும் இன்றுவரை செய்தார்களா?

13. விளாங்குளத்தில் 60 வருடங்களுக்குமேல் உறுதியில்லாமல் வாழ்ந்துவரும் தழிழ் சனங்களுக்கு, உறுதியனை பெறும் முகமான உத்தியோக பூர்வமான வேலைதிட்டம் ஆரம்பிக்கபட்டுவிட்டது அருண் ஹேமச்சந்திராவால்.

14. இத்தனைக்கும் அருண் ஹேமசந்திராவுக்கு இன்னமும் 27 வயது முடியவில்லை. அவரின் 23 வயதிலேயே அவருக்கு JVP யின் தேசிய பட்டியலில் பாராளுமண்ற உறுப்பினருக்கான இடம் ஒதுக்கபட்டிருந்த்தது.

15. TNA போன்ற இனவாத கட்சியினால் துரோகிகள் என்று ஒதுக்கபட்டவர்கள்தான் நாம். எம்மால்தான் இவைகள் செய்யபட்டன.

இப்பொது சொல்லுங்கள் யார் இனவாதி? யார் தழிழ் மக்களில் பற்று அற்றவர்கள்?

யார் துரோகி?

மக்களின் அன்றாடதேவைகளின்போது கூட இருந்து உதவும் நாம் துரோகியா, அல்லது பிரச்சனையான காலத்தில் தங்களின் உயிரையும், குடும்பத்தையும் காப்பாற்ற வெளி நாட்டுக்கு ஓடி ஒழியும் சாணக்கியர்கள் துரோகிகளா?

பணத்திற்கு ஆசைபட்டு ஒதுக்கபட்ட தழிழ் மக்கள்களின் வேலைவாய்புக்களை விற்றவர்கள் துரோகிகளா அல்லது அன்றும், இன்றும், என்றும் உங்களுடன் வாழும் நாங்கள் துரோகிகளா?

Read more...

Saturday, January 20, 2018

தமிழரசுக் கட்சியை மட்டுமல்ல, பிற்போக்குத் தமிழ் தேசியவாதத்தையும் ஒழித்துக் கட்ட வேண்டும்! -சுப்பராயன்

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்ப்பு உருவாகியுள்ளதைக் காண முடிகிறது. ஆனால் இந்த எதிர்ப்பு சாதாரண தமிழ்ப் பொதுமக்கள் மத்தியில் பரவலாக உருவாகவில்லை என்பதும், தமிழ்த் தேசியவாத சக்திகளிடமே அதிகமாகக் காணப்படுகிறது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம்.

தற்போதைய எதிர்ப்பு நிலைமை வேகம் பெற்றதற்கு அண்மையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சிச் சபைகளின் தேர்தலும் ஒரு காரணம். இருந்தாலும் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை இதற்கு முன்னரும் பல ஏற்ற இறக்கங்களை அக்கட்சி கண்டுள்ளது.

1949இல் உருவான தமிழரசுக் கட்சி அதன் முன்னோடிக் கட்சியான தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும். அதன் காரணமாக அவ்விரு கட்சிகளும் 1952, 1960 (இரு தேர்தல்கள்), 1965, 1970 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் எதிரும் புதிருமாகவே போட்டியிட்டு வந்துள்ளன.

இந்த இரு கட்சிகளும் கடுமையான எதிரிகள் போலச் செயற்பட்டாலும் சாராம்சத்தில் ஒரே வர்க்கங்களை, அதாவது தமிழ் மேட்டுக் குழாமின், அதிலும் குறிப்பாக யாழ். உயர்சாதிப் பிரிவினரைப் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகளாகவே இருந்து வந்துள்ளன. தென்னிலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து வந்து சிறீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கிய எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க அக்கட்சியை ஐ.தே.கவிலிருந்து மாறுபட்ட, ஏகாதிபத்திய – எதிர்ப்பு தேசியவாதிகளின் கட்சியாக உருவாக்கினார். அதன் மூலம் இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தில் விதேசிய சார்பு, தேசிய சார்பு என இரு அணிகள் இருப்பதை வெளிப்படுத்தினார்.

தமிழரசுக் கட்சி உருவான போதும் அப்படி ஒரு நிலைமை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு சிலரிடம், குறிப்பாக கம்யூனிஸ்ட்டுகளிடம் இருந்தது. அதன் காரணமாக தமிழரசுக் கட்சி உருவான ஆரம்ப காலங்களில் தமிழரசுக் கட்சியைச் செயற்பட விடாது படுபிற்போக்கான தமிழ் காங்கிரஸ் கட்சி அடாவடித்தனங்களில் ஈடுபட்ட போது, தமிழரசுக் கட்சி தனது பொதுக் கூட்டங்களை நடாத்துவதற்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சில இடங்களில் தனது புரட்சிகர அணிகள் மூலம் மேடைப் பாதுகாப்பு கூட வழங்கியது.

அதற்கான காரணம் தமிழரசுக் கட்சி பண்டாரநாயக்கவின் சுதந்திரக் கட்சி போல ஒரு தமிழ் தேசிய முதலாளித்துவக் கட்சியாக, முற்போக்கான கட்சியாக இருக்கும் என்றும், அதன் காரணமாக தெற்கில் பண்டாரநாயக்கவின் கட்சியுடன் சில விடயங்களில் சேர்ந்து செயற்படுவது போல தமிழ் பகுதிகளில் தமிழரசுக் கட்சியுடன் கம்யூனிஸ்ட் கட்சி நேச அணியாகச் சேர்ந்த செயற்படலாம் எனக் கருதியதால் தான்.

ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்பார்த்ததிற்கு மாறாக தமிழரசுக் கட்சி இன்னொரு தமிழ் காங்கிரஸ் கட்சியாகத்தான் செயற்பட்டது. அதற்கான காரணங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

தென்னிலங்கை போன்று வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதிகளில் தமிழ் தேசிய முதலாளி வர்க்கம் ஒன்று உருவாகி இருக்கவில்லை.

தமிழரசுக் கட்சியை உருவாக்கியவர்கள் தமிழ் காங்கிரசிலிருந்து வர்க்க அடிப்படையிலான கொள்கை வேறுபாடுகளுடன் பிரிந்து வரவில்லை.

தமிழ் சமூகத்தில் உயர்சாதி பிரிவினரே அதிகம் என்பதால் தேர்தல்களில் அவர்களது வாக்குகளைக் கவருவதற்காக அவர்களைச் சார்நது நின்ற சந்தர்ப்பவாதப் போக்கு.

தமிழரசுக் கட்சித் தலைமையை அந்நிய ஏகாதிபத்திய விசுவாசமும், சிங்கள மேட்டுக்குடிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஐ.தே.கவுடனான உறவையும் விரும்பிய கனவான்கள் ஆக்கிரமித்திருந்தவை.

இந்தக் காரணிகளால் தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ் சென்ற வலதுசாரிப் பாதையிலேயே சென்றது. இருப்பினும் தமிழரசுக் கட்சி ஆரம்ப காலங்களில் கிளப்பிய தமிழ் மொழி உணர்வும், தமிழ் பேசும் மக்களுக்கான கோசங்களும் சிறுபான்மை தேசிய இனங்களான வடக்கு கிழக்குத் தமிழர்களை மட்டுமின்றி, வடக்கு கிழக்கில் வாழ்ந்த இஸ்லாமியத் தமிழர்களையும், மலையக இந்திய வம்சாவழித் தமிழர்களையும் கூடக் கவர்ந்திழுத்தது. அதற்கு இன்னொரு காரணம் அந்தக் காலகட்டத்தில் வடக்கு கிழக்கு இஸ்லாமிய மக்களுக்கோ, மலையகத் தமிழ் மக்களுக்கோ அவர்கள் மத்தியில் இருந்து அரசியல் தலைமைகள் உருவாகியிருக்கவும் இல்லை.

இதன் காரணமாக, தமிழரசுக் கட்சியின் தலைவரான எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தை 35 இலட்சம் தமிழ் பேசும் மக்களின் தலைவர் என, அதாவது வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் வாழும் தமிழ் மக்களினதும், வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களினதும் தலைவர் என, தமிழரசுக் கட்சியினர் பெருமையுடன் அழைக்க ஆரம்பித்தனர்.

ஆனால் தமிழரசுக் கட்சி அந்த அடிப்படையில் செயற்படாது, யாழ்.மையவாத அடிப்படையில் செயற்பட்டதால், காலப்போக்கில் முஸ்லிம் மக்களும், மலையகத் தமிழ் மக்களும் தமிழரசுக் கட்சியின் தலைமையை நிராகரித்ததுடன், தமது சொந்த அரசியல் கட்சிகளான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசையும், இலங்கை தொழிலாளர் காங்கிரசையும் உருவாக்கிச் செயற்பட ஆரம்பித்தனர்.

முதலாளித்துவ சமூகத்தில் ஒவ்வொரு தேசிய இனங்களிலுமுள்ள முதலாளித்துவ தேசியவாத சக்திகள் தமக்கான தனி அரசியல் பிரதிநிதித்துவத்தை உருவாக்கிச் செயற்படுவது எல்லா நாடுகளிலும் நிகழ்ந்து வந்திருக்கிறது என்ற போதிலும், தமிழரசுக் கட்சி போன்ற பெரிய சிறுபான்மை தேசிய இனத்தின் கட்சி எல்லாச் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மத்தியிலும் வேற்றுமைகள் மத்தியிலும் ஒற்றுமையை உருவாக்கிச் செயற்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் தமிழரசுக் கட்சி அவ்வாறு செய்யவில்லை. தமது தலைமையை நிராகரித்த சிறிய இனங்களான முஸ்லிம்களை “தொப்பி பிரட்டிகள்”, “முக்கால்கள்”, “சோனிகள்” எனத் துவேசித்ததுடன், மலையகத் தமிழர்களை “தோட்டக்காட்டான்”, “வடக்கத்தையான்” “வயிற்றுக் குத்தை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பக்கூடாது” என்றும் துவேசித்தனர்.

இந்தவாறான துவேசத்தை தமிழரசுக் கட்சி துவக்கி வைத்ததின் விளைவே பின்னர் அவர்களால் உருவாக்கப்பட்ட புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை இனச் சுத்திகரிப்பு செய்ய வழிவகுத்தது.

அதுமட்டுமின்றி, கிழக்கில் தமிழரசுக் கட்சியின் தூணாகச் செயற்பட்ட செ.இராசதுரை கட்சியுடன் அதிருப்தி கொண்டு வெளியேறிச் சென்ற போது கிழக்குத் தமிழர்களுக்கெதிராகவும் தமிழரசுத் தலைமை பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. இது தமிழரசுக் கட்சியின் வாரிசாக உருவான புலிகளிடமும் பின்னர் வெளிப்பட்டது. அவர்கள் தமது இடைக்கால நிர்வாகசபைத் திட்டத்தை வெளியிட்ட போது அதன் நிர்வாகிகளாகப் பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலில் கிழக்கு மாகாணத்தவர் ஒருவர் கூட இடம் பெறாதது தமிழரசுக் கட்சி தொடக்கி வைத்த போக்கின் விளைவே.

யாழ்.மையவாதத் தலைமைகளை தமிழரசுக் கட்சியும், புலிகளும் கொண்டிருந்தமையாலேயே இராசதுரை தமிழரசுக் கட்சியிலிருந்து விலகியதற்கும், பின்னர் புலிகள் இயக்கத்திலிருந்து அதன் கிழக்கு தலைவர்களான கருணா, பிள்ளையான் போன்றோர் விலகியதற்கும் வழி வகுத்தது.

இருந்தும் தமிழரசுக் கட்சி தனக்கு நெருக்கடிகள் உருவாகும் காலங்களில் ஏதாவது ஒரு தந்திரோபாயத்தை மேற்கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை நிலை நிறுத்தியே வந்துள்ளது.

உதாரணமாக, 1970 பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சி பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. அதன் தலைவர்களான அ.அமிர்தலிங்கம், டாக்டர் ஈ.எம்.வி.நாகநாதன், மு.ஆலாலசுந்தரம் ஆகியோர் தேர்தலில் படுதோல்வி அடைந்தனர். அதேபோல தமிழ் காங்கிரஸ் தலைவரான ஜீ.ஜீ.பொன்னம்பலமும், அக்கட்சியின் செயலாளரான மு.சிவசிதம்பரமும் கூட தேர்தலில் படுதோல்வி அடைந்தனர். அதற்குக் காரணம் அந்த இரு கட்சிகளும் தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளுக்கு எதிராக இலங்கையின் தரகு முதலாளித்துவக் கட்சியான ஐ.தே.க.வின் அரசாங்கத்தில் இணைந்திருந்ததும் (1965 – 70), வடக்கில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடாத்திய சமூக விடுதலைப் போராட்டத்துக்கு எதிராகச் செயற்பட்டதுமாகும்.

இந்தத் தேர்தல் தோல்விகளின் பின்னர்தான் தமிழ் தரகு முதலாளித்துவ வர்க்கங்களின் இரு பிரிவுகளான தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரஸ் கட்சியும் தமது கையறு நிலையை உணர்ந்தனர். அந்த நிலையைத் தவிர்ப்பதற்காக வரலாற்றில் முதல் தடவையாக அவை தமது தனிப்பட்ட குரோதங்களை மறந்து ஒற்றுமைப்பட்டதுடன், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற புதிய அமைப்பை உருவாக்கியதுடன், தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக தனித் தமிழ் ஈழம் என்ற கோசத்தையும் முன் வைத்தனர் அதன் மூலம் தம்மை அழிவிலிருந்து பாதுகாத்துக் கொண்டனர். அவர்கள் தமது தந்திரோபாயத்தை மாற்றினார்களே தவிர, தமது இனவாத, பிற்போக்கு கொள்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லை.

பின்னர் அவர்களது நடைமுறைகள் வங்குரோத்தாகி, அதன் காரணமாக தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராடட்ட அமைப்புகள் உருவாகி, அவற்றிலும் புலிகள் இயக்கம் தனிப்பெரும் இயக்கமாகி தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் சிலரை ஒழித்துக் கட்டிய போது, தமிழரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்தாயினும், புதிய தந்திரோபாயத்தைக் கைக்கொண்டு புலிகளின் அனுசரணையுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய அமைப்பொன்றை உருவாக்கித் தன்மைப் பாதுகாத்துக் கொண்டனர். ஆனால் புலிகள், சோரம் போன சில தமிழ் ஆயுதப் போராட்டக் குழுக்களையும் அதில் இணைத்திருந்ததால், தமிழரசுக் கட்சி தனது தனி ஆதிக்கத்தை அப்பொழுது காட்டுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

ஆனால் புலிகளின் அழிவின் பின்னர் தமிழரசுக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பைத் தவிர்க்க முடியாதபடி தொடர்ந்ததுடன், தனது தனி ஆதிக்கத்தையும் படிப்படியாக வெளிப்படுத்த ஆரம்பித்தது. அதன் விளைவே தற்பொழுது சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறிச் சென்ற நிலைமையும், கூட்டமைப்பின் எஞ்சியுள்ள பங்காளிக் கட்சிகளான புளொட், ரெலோ என்பன தமிழரசுக் கட்சியுடனான கொண்டுள்ள முறுகல் நிலையும் ஆகும்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயமென்னவெனில், தமிழரசுக் கட்சிக்கு கூட்டமைப்புக்குள்ளும் வெளியிலும் தோன்றியுள்ள எதிர்ப்பு கொள்கை சார்ந்ததா என்பதும், நீடித்து நிலைக்கக் கூடியதா என்பதுமாகும்.

ஏனெனில் தமிழரசுக் கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த அல்லது வகிக்கின்ற ஏனைய மூன்று கட்சிகளையும் பொறுத்தவரை அவைகளுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் எந்தவிதமான கொள்கை வேறுபாடுகளும் இல்லை. எல்லாமே பிற்போக்கு தமிழ் தேசியவாதத்தை வரித்துக் கொண்ட கட்சிகள்தான்.

அதேபோல, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே தமிழரசுக் கட்சித் தலைமையை எதிர்க்கின்ற வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை, வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பனவற்றைப் பொறுத்தவரையிலும் கூட, அவை தமிழரசுக் கட்சியிலிருந்து மாறுபாடான கொள்கை எதனையும் கொண்டிருக்கவில்லை. அவையும் பிற்போக்கு தமிழ் தேசியவாதத்தை வரித்துக் கொண்ட கட்சிகள்தான்.

இந்தக் கட்சிகள் எல்லாம் பிற்போக்கு தமிழ் தேசியவாதக் கட்சிகள் என்பதுடன் மட்டும் நிற்பனவல்ல. இவைகளின் உலக நோக்கு எகாதிபத்திய சார்பானதாகும். தேசிய நோக்கு படுபிற்போக்கான ஐ.தே.க. சார்பானதாகும்.

தற்போது செயற்படுகின்ற தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) மட்டுமே சற்று வித்தியாசமான, விதிவிலக்கான கட்சியாகும்.

எனவே தமிழரசுக் கட்சியுடன் அதன் பங்காளிக் கட்சிகளோ அல்லது இதர தமிழ் தேசியவாதக் கட்சிகளோ கொண்டுள்ள முரண்பாடு தனிப்பட்ட அல்லது குழு நலன் சார்ந்த முரண்பாடுகளே தவிர, கொள்கை சார்ந்ததோ அல்லது தமிழ் மக்களின் தேசிய நலன் சார்ந்ததோ அல்ல.

தமிழரசுக் கட்சியை ஒழிக்கக் கோருபவர்கள் இன்னொரு வடிவத்தில் அதன் கொள்கைகளைத் தொடரப் போகின்றவர்கள்தான். அதனால் தமிழ் மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் ஏற்படப போவதில்லை. தமிழ் மக்களுக்கு இன்று தேவை பிற்போக்கான தமிழ் தேசியவாதத்திற்கு மாற்றான ஒரு கொள்கையும், அதை உறுதியுடன் முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒரு புதிய தலைமையும்தான்.

இருப்பினும் இப்பொழுது இனவாத, பிற்போக்கு தமிழரசுக் கட்சிக்கு எதிராகத் தோன்றியுள்ள எதிர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அது மேலும் வளர்க்கப்பட வேண்டும். அதேநேரத்தில் அந்த எதிர்ப்பு இன்னொரு தமிழரசுக் கட்சியை உருவாக்குவதில் போய் முடியக்கூடாது. பதிலாக தமிழ் மக்களை இனவாத எதிர்ப்பு, பிற்போக்கு எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, என்பனவற்றின் அடிப்படையிலான முற்போக்குத் திசை வழியில் வழி நடாத்திச் செல்வதாக இருக்க வேண்டும்.

இந்த இடத்தில் 1975ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட கம்யூனிஸ்ட்டுகள் தமிழ் மக்களுக்காக முன்மொழிந்த பரந்துபட்ட ‘தமிழ் மக்களின் ஜனநாயக முன்னணி’யின் அவசியம் பற்றி உண்மையான தமிழ் தேசியவாத சக்திகள் கவனத்தில் கொள்வது காலப் பொருத்தமானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.

Read more...

Friday, January 19, 2018

கொசுக்கடி தாங்க முடியவில்லை. பீமன்

இலங்கையிலே தேர்தல் ஒன்றுக்கான அறிவித்தல்..
ஆசனங்களுக்கான அடிபாடு..
இதோ பிரிந்து செல்கின்றோம்..
அங்கே ஜனநாயகம் புரியாது கிடையாது...
சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறார்கள்..
கூட்டமைப்புக்கு எதிர் கூட்டு அமைக்கிறோம்..
இல்லை இல்லை நாங்கள் ஒற்றுமையைத்தான் விரும்புகின்றோம்..
பிரிந்து சென்று தனித்தனியே போட்டியிடுவதையும் விரும்புகின்றோம்..
எங்களை ஏமாற்றி விட்டார்கள்..
பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடாத்தி காத்திருந்தோம்..
சரிவரவில்லை.. சரிவந்தது...
என்ற செய்திகள் பழைய செய்திகளாகி, தமிழ் தேசியத்தை உலகுக்கு உணர்த்த த.தே.கூ வுக்கு ஒற்றுமையாக வாக்களியுங்கள் என்ற செய்தி வந்தபோது எலும்புத்துண்டுகளை பங்கிட்டுக்கொள்வதற்கான இழுபறி தற்காலிகமாக நிறைவு பெற்றுருக்கிறது என்ற பெருமூச்சுடன் இந்நிலைமையை இவ்யுகத்தில் மாற்றமுடியாது சசித்துக்கொண்டு வாழ்வதுதான் சிறந்தது என்று முடிவு செய்திருந்தேன்.

ஆனாலும், குழம்பின குளத்தில் குறட்டை பிடிக்கிறத்துக்கு கரப்பை தூக்கிட்டு வெளிக்கிட்டுருக்கிற முகநூல் கொசுக்களின் பதிவுகள் மீண்டுமொருமுறை கோலைத்தூக்க தூண்டியுள்ளது. முகநூல் கொசுக்கடி தாங்கவே முடியவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழக் கோரிக்கையை கைவிட்டது போதாதென்று சமஸ்டியையும் கை விட்டுவிட்டார்களாம். ஓற்றையாட்சிக்குள் தீர்வுக்கு இணங்கி விட்டார்களாம். தீர்வில் எப்படிப்பட்ட விடயங்கள் உள்ளடக்கம்பெறவேண்டும் என்று மக்களிடம் கருத்து கேட்க்கப்படவில்லையாம். இடைக்கால அறிக்கையை மக்கள் பார்வைக்கு வைக்க வில்லையாம். ஆனால் புலிகள் தாங்கள் முன்வைத்த இடைக்கால நிர்வாக அலகு தொடர்பான முன்மொழிவை மக்கள் பார்வைக்கு வைத்தார்களாம், வன்னியில் ஊற்ரெடுத்த ஜனநாயகப் பேராறு இந்துசமூத்திரத்தில் சங்கமித்து பாக்குநீரிணை எங்கும் பரவியோடியதாக வல்லூறுகளின் இரைச்சல் காதை குடைகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் மீது எனக்கு கருத்தொருமைப்பாடு கிடையாது என்பதல்ல இக்கட்டுரையின் நோக்கம். மாறாக புலிகளுக்கு ஜனநாயகம், சரி-பிழை, வெளிப்படைத்தன்மை, மக்கள் மயமாக்கம், கொள்கை என்கின்றவை தொடர்பில் பேசுதற்கு அருகதை உண்டா என்பதே.

பிரபாகரன் தனது மாவீரர் நாள் உரை ஒன்றில் தமிழ் மக்கள் என்றுமே தமிழீழம் கோரியதில்லை என்றும் அவர்கள் நியாமானதோர் தீர்வையே எதிர்நோக்கி நிற்கின்றனர் என்றும் கூறியதனூடாக புலிகளின் தமிழீழக் கோட்பாடு கைவிடப்பட்டிருந்தது என்பது மட்டுமல்ல சமஸ்டி என்ற பிடியும் தளர்ந்திருந்ததை அன்று யாவரும் அதிர்சியுடன் நோக்கியிருந்தாலும், சுவருக்கும் காதுண்டென்று புலிகள் உருவாக்கியிருந்த பீதியால் மக்கள் வாய் திறக்கவில்லை. இன்று ஜனாநாயகம் பேசுகின்ற புலிகள் அன்று ஜனநாயகம் என்ற சொல்லை உச்சரிப்பதற்கான பேச்சுரிமையைக்கூட தடைசெய்திருந்த வண்ணம் அது.

ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளின் உயிரழிவை தொடர்ந்தும் அனுமதிக்கமுடியாது என சர்வதேச சமூகம் ஓர் சமாதானத்திற்கான வழியைதேடுவதில் முனைப்புடன் செயற்பட்டு தீர்வுவொன்றுக்கான தேடுதலை மேற்கொண்டபோது, புலிகள் முன்வைத்த முழுக்கோரிக்கையும் யாது? பதில் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் „தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளவேண்டும்" என்பதாகும்.

தமிழ் மக்களின் „ஏக" பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வரவேண்டிய தேவையிருந்திருந்தால் அதற்கான கோரிக்கையை தமிழ் மக்களிடம் முன்வைத்து தேர்தலொன்று மூலமாகவே அதை அடைந்திருக்கவேண்டும். மாறாக சிறிலங்கா அரசாங்கத்திடம் சமாதானப்பேச்சென்ற போர்வையில் பூட்டிய குளிரூட்டிய அறைகளிலிருந்து இதை கோரியதன் பின்னால் இருந்திருக்கக்கூடிய பிற்போக்குத்தனத்தை இன்றும் என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ் மக்களுக்கான பிரதிநிதிகளை நிர்ணயிக்கின்ற சக்தி அல்லது அதிகாரம் இருந்திருக்குமாகவிருந்தால் அது ஏன் காலாகாலமாக வடகிழக்கில் தேர்தலில் போட்டியிட்டு தமிழ் கட்சிகளிடம் தோல்வியை தழுவிக்கொண்டது? தனக்கு விரும்பிய பிரதிநிதிகளை தானே நியமித்துக்கொண்டு அமளி துமளி அற்ற பாராளுமன்றொன்றை நடாத்திச் சென்றிருக்கலாம் அல்லவா?

இதைவாசிக்கின்ற முகப்புத்தக புலிவீரர்கள் நாங்கள் அவ்வாறு எதையும் கேட்வில்லை என்றும் தமிழ் மக்கள் சார்ந்த கோரிக்கைகளையே முன்வைத்தோம் என்றும் அவை இணையங்களில் இன்றும் உள்ளது என்ற வாதத்தையும் முன்வைக்கலாம். ஆம் புலிகள் முன்வைத்த கோரிகைகள் இணையத்தில் உள்ளது. ஆனால் அது சதாரண தமிழ் மக்கள் வாசித்து விளங்கிக்கொள்ளக்கூடிய மொழியில் இல்லை. வடகிழக்கில் தனித்தமிழில் கருமங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று பிறமொழி பெயர்பலகைகளைக்கூட அடித்து நொருக்கி ஐஸ்கீறீம் போன்ற ஆங்கிலச் சொல்லுக்கு „குளிர் கழி" என புதிய சொற்களை அறிமுகப்படுத்திய புலிகள் தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தீர்வு சம்பந்தமான முன்மொழிவின் தமிழாக்கத்தை மக்களுக்கு வழங்க மறுத்ததன் பின்னணி தெட்டத்தெளிவானது.

இலங்கை அரசாங்கத்துடன் சுமார் ஐந்தாண்டுகள் பேச்சு நடாத்திய புலிகள் அரசாங்திடம் கோரியது புலிகளுக்கான இடைக்கால நிர்வாக சபையே. அதற்கான முன்மொழிவில் :

* இடைக்கால சுயாட்சி அதிகாரசபை வட-கிழக்கின் 8 மாவட்டங்களையும் உள்ளடக்கும் அதில் முஸ்லிம்கள் உரித்துடையவர்களாக இருப்பார்கள்.

* இடைக்கால நிர்வாக சபைக்கான அறுதிப்பெரும்பாண்மையான உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் புலிகளுக்கு வழங்கவேண்டும். (தேர்தல் மூலம் மக்களுக்கு அல்ல)
பிரதம அதிகாரியை உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள். ( புலிகளால் நியமிக்கப்படுகின்ற உறுப்பினர்கள் யாரை தேர்ந்தெடுப்பார்கள்? )

* ஐந்து வருடங்களுக்கு வடகிழக்கில் தேர்தல் ஏதும் இடம்பெறமுடியாது. (வடகிழக்கு மக்களுக்கு ஜனநாயக உரிமை வழங்க கூடாது)

* வடகிழக்கில் மனித உரிமைகள் ஆணையகம் ஒன்று நிறுவப்படும். அதற்கான உறுப்பினர்களையும் அலுவலர்களையும் இடைக்கால நிர்வாக சபை உறுப்பினர்களே தெரிவு செய்வர். (அதாவது சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் வெளியேற்றப்பட்டு நாங்கள் ஒரு டம்மியை உருவாக்குவோம். )

* இடைக்கால நிர்வாக சபையானது வடகிழக்கை ஆழுகின்ற சகல அதிகாரங்களையும் கொண்டிருப்பதுடன் சகல விதமான வரிகளை அறவிடுவதற்கும் வரிகளை விதிப்பதற்குமான அதிகாரங்களை கொண்டிருக்கும் (அதாவது வன்னியிலிருந்து புலிகளின் கப்பம் பெறுதல் நடைமுறையை சட்டரீதியாக்குவதற்கு சிறிலங்கா அரசு அதிகாரம் வழங்கவேண்டும்.)

* வடகிழக்கிற்கு ஒர் தனியான நீதி நிர்வாக அலகொன்று உருவாக்கப்படும். அந்த நீதிநிர்வாக அலகே நிறுவப்படுகின்ற இடைக்கால நிர்வாக சபை தொடர்பான பிணக்குகளை கையாளும். ( அதாவது புலிகளின் விளையாட்டு நீதிமன்றுகள் சட்ட ரீதியாக்கப்படும். இலங்கை அரச அதிகாரமும் அந்த நீதிமன்றுக்கு கட்டுப்படவேண்டும்)

* வடகிழக்குக்கான வரவுசெலவுத்திட்டத்தை இடைக்கால நிர்வாக சபையே தயாரிக்கும். அதற்காண பணத்தை மத்திய அரசு ஒதுக்கவேண்டும். நிதியை நிர்வாக சபை கையாளும். (புலிகளிடம் பணத்தை கொடுத்துவிட்டு பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்)

* வடகிழக்கிற்கான புனர்நிர்மானப்பணிகளுக்கான நிதியும் இடைக்கால சபைக்கே வழங்கப்படவேண்டும் (மிச்சத்தை புலிகள் பார்த்துக்கொள்வார்கள்)

* இடைக்கால நிர்வாக சபை உள்நாட்டு வெளிநாட்டு அன்பளிப்புக்கள் மற்றும் கடன்களை நேரடியாக பெற்றுக்கொள்ள அதிகாரங்களை கொண்டிருக்கும். (வெளிநாடுகளில் தமிழரிடம் பலவந்தமாக பறிக்கும் பணத்தை தங்குதடையின்றி வன்னிக்கு கொண்டுவர சிறந்த வழி)

* பணத்திற்கான கணக்காய்வு அறிக்கை கணக்காளர் நாயகத்தினால் தயாரக்கப்படும. ஆனால் கணக்காளர் நாயகத்தை இடைக்கால நிர்வாக சபையே நியமிக்கும் (புலிகள் நியமிக்கும் கணக்காளர் நாயகத்தின் அறிக்கை எப்படியிருக்கும்?)

இவ்வாறு 23 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. புலிகளின் குறித்த எழுத்துமூலமான கோரிகையை ரணில் விக்கிமசிங்க மிகவும் புத்திசாலித்தனமாக (பாலசிங்கத்தின் பாஷையில் நரித்தனமாக) பயன்படுத்தினார். கோரிக்கையின் எழுத்துமூலத்தை முக்கியமான சக்தி வாய்ந்த நாடுகளுக்கும் அனுப்பி வைத்த ரணில் புலிகள் என்ன கேட்கிறார்கள் என்று புரிகிறதா என சர்வதேசத்தின் மனச்சாட்சின் கதவுகளை தட்டினார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சிகளை செயலிழக்க செய்ய எனக்கு இந்தநாட்டின் அரசியல் யாப்பு அதிகாரமளிக்கவில்லையே! இதை நான் எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும் என்று அப்பாவிப்பிள்ளை போல் ஆலோசனை கேட்டார். நீங்கள் உங்கள் நாடுகளில் புலிகளை பயங்கரவாதிகள் என தடை செய்துள்ளீர்கள். ஆனால் எங்களை பயங்கரவாதிகளுக்கு அதிகாரத்தை கொடு என்கின்றீர்கள். இந்நாட்டின் பிரதமராக நான் எவ்வாறு சகல கட்சிகளதும் உரிமைகளை பறித்து ஒரு கட்சிக்கு அதிகாரம் வழங்கமுடியும் என்று ஒரு கொஞ்சம் காரசாரமாகவும் தூக்கிப்போட்டார். பெரிதுபடுத்தவேண்டாம் நாங்கள் அவர்களுடன் பேசுகின்றோம் இணங்கா விட்டால் அடிபோடுவதுதான் ஒரே வழி என்றது சர்வதேசம். ஐயா அடிபோடுறதா? அவர்கள் பிராந்திய வல்லரசையே அடித்து விரட்டிய ராணுவம். என்னிடம் பலமான ராணுவமும் இல்லை ஆயுதங்களும் இல்லை என ரணில் கையை பிசைந்தார். கவலையை விடுங்கள் சகலதும் கிடைக்கும் என்றனர். புலிகளின் தலையெழுத்து நிர்ணயிக்கப்பட்டது.

புலிகளின் முன்மொழிவை தூக்கிக்கொண்டு வன்னிக்கு பறந்தது சர்வதேசம். மிஸ்டர் பிரபாகரன் என்ன கேட்கிறீர்கள் என்று விளங்கவில்லை. இது மக்களுக்கான தீர்வா அல்ல உங்களுக்கான தீர்வா என்று காரசாரமாக கேட்டது. பிரபாகரனோ மசியவில்லை என்ன ஐசே பேசுகின்றீர்கள்? „மக்கள் என்றால் புலிகள், புலிகள் என்றால் மக்கள்" என்பது உங்களுக்கு தெரியாதா என்றார். சர்வதேசமும் விட்டபாடில்லை முன்மொழிவை ஜனநாயகப்பண்புகளுக்குட்பட்டதாக எந்தத்தரப்பிற்கும் பின்னடைவு அற்றதாக மாற்றுமாறு புலிகளின் கழுத்தில் கையை வைத்தது. புலிகளது முழி பிதுங்கியது. ரணில் குள்ள நரி என்று பாலசிங்கம் ஒப்பாரி வைத்தார். சர்வதேசத்தின் அணுங்குப்பிடியில் மாட்டி விட்டதை புலிகள் உணர்ந்தனர். மாற்று வழியைத்தேடினர்.

அத்தருணத்தில் ஜனாதிபதி தேர்தலுக்காக இருவர் போட்டியிட்டனர். ரணிலை எதிர்த்து மஹிந்த போட்டியிட்டார். சர்வதேச செல்வாக்குள்ள ரணிலை தோற்கடித்தால் சர்வதேசத்தின் பிடியிலிருந்து தாங்கள் விடுபடலாம் எனவும் சர்வதேச தொடர்புகள் அற்ற மஹிந்தவின் காதில் பூச்சுத்தலாம் எனவும் கருதிய புலிகள் மஹிந்தவை வெல்ல வைப்பதற்கு பேரம் பேசினர். கோடிகள் மாறப்பட்டது. வடகிழக்கு தமிழ் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. வாக்களித்தால் கைவெட்டப்படுமென எச்சரிக்கப்பட்டது. அவ்வாறு வாக்களித்த ஓரிருவரின் கைகளும் வெட்டப்பட்டது.

புலிகளின் கனவு பகற்கனவானது. முள்ளிவாய்காலில் ஏகப்பிரதிநிதித்துவம் நிறைவுபெற்றது. ஆனால் புலிவால்கள் இந்த உண்மையை மறைக்க எத்தகைய முயற்சிகளை செய்தாலும் உண்மைகள் என்றும் அழியாது. நன்றி.

புலிகள் கோரிய இடைக்கால நிர்வாக சபைக்கான முன்மொழிவின் முழுவடிவம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பாக எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை யாவரும் வாசித்தறியலாம்.


Wherefore, the parties, namely the Liberation Tigers of Tamil Eelam and the Government of Sri Lanka, hereby agree to the following provisions:

1/ Interim self-governing authority
An interim self-governing authority (ISGA) shall be established comprised of the eight districts namely: Amparai, Batticaloa, Jaffna, Kilinochchi, Mannar, Mullaitivu, Trincomalee and Vavuniya in the north-east, until a final negotiated settlement is reached and implemented.
Representatives of the Muslim community have the right to participate in formulation of their role in the ISGA.

2/ Composition of the ISGA
2.1 The ISGA shall consist of such number of members as may be determined by the parties to this agreement.
2.2 The composition of the ISGA shall be:
2.2a Members appointed by the LTTE,
2.2b Members appointed by the GOSL, and
2.2c Members appointed by the Muslim community in the north-east.
2.3 The number of members will be determined to ensure:
2.3a An absolute majority of the LTTE appointees in the ISGA
2.3b Subject to (a) above, the Muslim and Sinhala communities in the north-east shall have representation in the ISGA.
2.4 The chairperson shall be elected by a majority vote of the ISGA and shall serve as the chief executive of the ISGA.
2.5 The chairperson shall appoint the chief administrator for the north-east and such other officers as may be required to assist in the performance of his/her duties. The chairperson shall have the powers to suspend or terminate any such appointment.
3/ Elections
The provisions of Clauses 2.2 and 2.3 shall continue until elections for the ISGA are held. Such elections shall be held at the expiry of five years of the coming into force of this agreement, if no final settlement has been reached and implemented by the end of the said period of five years.
An independent Election Commission, appointed by the ISGA, shall conduct free and fair elections in accordance with international democratic principles and standards under international observation.
4/ Human rights
The people of the north-east shall be accorded all rights as are provided under international human rights law. Every law, regulation, rule, order or decision of the ISGA shall conform to internationally accepted standards of human rights protection.
There shall be an independent human rights commission, appointed by the ISGA, which shall ensure the compliance with all such human rights obligations.
The commission will seek the assistance of international human rights bodies to facilitate the rapid establishment of an effective regime for protecting human rights.
The commission shall be entitled to receive petitions from any individual person, award compensation to any such affected person, and ensure that such person's rights are restored.
5/ Secularism
No religion shall be given the foremost place in the north-east.
6/ Prohibition against discrimination
The ISGA shall ensure that there is no discrimination on grounds of religion, race, caste, national or regional origin, age or gender in the north-east.
7/ Prevention of bribery and corruption
The ISGA shall ensure that no bribery or corruption is permitted in or under its administration.
8/ Protection of all communities
No law, regulation, rule, order or decision that confers a privilege or imposes a disability on any community, which is not conferred or imposed on any other community, shall be made concerning culture or religion.
9/ Jurisdiction of the ISGA
9.1 The ISGA shall have plenary power for the governance of the north-east including powers in relation to resettlement, rehabilitation, reconstruction, and development, including improvement and upgrading of existing services and facilities (hereinafter referred to as RRRD), raising revenue including imposition of taxes, revenue, levies and duties, law and order, and over land.
These powers shall include all powers and functions in relation to regional administration exercised by the GOSL in and for the north-east.
9.2 The detailed modalities for the exercise of such powers and the performance of such functions shall be subject to further discussion by the parties to this agreement.
10/ Separation of powers
Separate institutions for the administration of justice shall be established for the north-east, and judicial powers shall be vested in such institutions. The ISGA shall take appropriate measures to ensure the independence of the judges.
Subject to clauses 4 (human rights) and 22 (settlement of disputes), of this agreement, the institutions created under this clause shall have sole and exclusive jurisdiction to resolve all disputes concerning the interpretation and implementation of this agreement and any other disputes arising in or under this agreement or any provision thereof.
11/ Finance
The ISGA shall prepare an annual budget.
There shall be a financial commission consisting of members appointed by the ISGA. The members should have distinguished themselves or held high office in the fields of finance, administration or business.
This commission shall make recommendations as to the amount out of the consolidated fund to be allocated to the north-east. The GOSL shall make its good faith efforts to implement the recommendation.
The ISGA will, giving due consideration to an equitable distribution, determine the use of funds placed at its disposal. These funds shall include the North-east General Fund, the North-east Reconstruction Fund (NERF) and the Special Fund.
The GOSL agrees that any and all of its expenditures in or for the north-east shall be subject to the control of the ISGA.
11.1 North-east General Fund
The North-east General Fund shall be under the control of ISGA and shall consist of:
11.1a The proceeds of all grants and loans made by the GOSL to the ISGA and the proceeds of all other loans made to the ISGA
11.1b All allocations by the GOSL from agreements with states, institutions and/or other organisations earmarked in any such agreements for the north-east
11.1c All other receipts of the ISGA, other than the funds specified below.
11.2 North-east Reconstruction Fund
The NERF shall continue to exist in its present form except that control over it will be transferred to the ISGA.
All grants given for the reconstruction of the north-east will be received through the NERF. Utilisation of resources from NERF will be directly determined and supervised by the ISGA.
11.3 Special Fund
All loans and any grants which cannot be channelled through the NERF for the specific purpose of RRRD will be received into the Special Fund. As in the case of other funds, the ISGA shall control the Special Fund.
12/ Powers to borrow, receive aid and trade
The ISGA shall have powers to borrow internally and externally, provide guarantees and indemnities, receive aid directly, and engage in or regulate internal and external trade.
13/ Accounting and auditing of funds
13.1 The ISGA shall appoint an auditor general
13.2 All funds referred to in this agreement shall be operated, maintained and audited in accordance with internationally accepted accounting and auditing standards. The accounts will be audited by the auditor general. The auditing of all moneys received from international sources shall be subjected to approval by an internationally-reputed firm appointed by the ISGA.
14/ District committees
14.1 In the effective exercise of its legislative and executive powers, the ISGA may create district committees to carry out administration in the districts, and delegate to such committees such powers as the ISGA may determine. The chairpersons of such committees shall be appointed by the ISGA from amongst its members in order to serve as a liaison between the ISGA and the committees.
14.2 The other members of the committees shall also be appointed by the ISGA, which shall have the powers to suspend or terminate any such appointment. In appointing such members, due consideration shall be given to ensure representation of all communities.
14.3 The committees will function directly under the ISGA.
14.4 The chief administrator of the ISGA shall appoint principal executive officers in the districts, who shall also function as the secretaries to the committees. The chief administrator shall have the powers to suspend or terminate any such appointment.
14.5 All activities and functions of the committees shall be co-ordinated through the respective secretaries to the committees.
14.6 Sub-committees may also be appointed to facilitate administration.
15/ Administration
As part of the exercise of its executive powers the ISGA shall have direction and control over any and all administrative structures and personnel in the north-east pertaining to the powers set out in Clause 9 of this agreement.
The ISGA may, at its discretion, create expert advisory committees in necessary areas. These areas will include but are not limited to economic affairs, financial affairs, judicial affairs, resettlement and rehabilitation affairs, development of infrastructure, and essential services.
16/ Administration of land
Since land is vital to the exercise of the powers set out in Clause 9 (jurisdiction of the ISGA), the ISGA shall have the power to alienate and determine the appropriate use of all land in the north-east that is not privately owned.
The ISGA shall appoint a special commission on administration of land to inquire into and report on the rights of dispossessed people over land and land subject to encroachment, notwithstanding the lapse of any time relating to prescription.
The ISGA shall determine the term of competencies of the special commission.
17/ Resettlement of Occupied Lands
The occupation of land by the armed forces of the GOSL, and the denial to the rightful civilian owners of unfettered access to such land, is a violation of the norms of international law.
Such land must be immediately vacated and restored to the possession of the previous owners. The GOSL must also compensate the owners for the past dispossession of their land.
The ISGA shall be responsible for the resettlement and rehabilitation of displaced civilians and refugees in such lands.
18/ Marine and offshore resources
The ISGA shall have control over the marine and offshore resources of the adjacent seas and the power to regulate access thereto.
19/ Natural Resources
The ISGA will have control over the natural resources in the north-east region.
Existing agreements relating to any such natural resources will continue in force. The GOSL shall ensure that all monies due under such agreements are paid to the ISGA.
Any future changes to such existing agreements should be made with the concurrence of the ISGA.
Future agreements shall be entered into with the ISGA.
20/ Water use
Upper riparian users of river systems have a duty to ensure that there is a fair, equitable and reasonable use of water resources by lower riparian users.
The GOSL and the ISGA shall ensure that this internationally recognised principle is followed in the use of water resources.
21/ Agreements and contracts
All future agreements concerning matters under the jurisdiction of the ISGA shall be made with the ISGA.
Existing agreements will continue, but the GOSL shall ensure that all proceeds under such agreements are paid to the ISGA.
Any changes to such existing agreements should be made with the concurrence of the ISGA.
22/ Settlement of disputes
Where a dispute arises between the parties to this agreement as to its interpretation or implementation, and it cannot be resolved by any other means acceptable to the parties including conciliation by the Royal Norwegian Government, there shall be an arbitration before a tribunal consisting of three members, two of whom shall be appointed by each party.
The third member, who shall be the chairperson of the tribunal, shall be appointed jointly by the parties concerned.
In the event of any disagreement over the appointment of the chairperson, the parties shall ask the president of the International Court of Justice to appoint the chairperson.
In the determination of any dispute the arbitrators shall ensure the parity of status of the LTTE and the GOSL and shall resolve disputes by reference only to the provisions of this agreement.
The decision of the arbitrators shall be final and conclusive and it shall be binding on the parties to the dispute.
23/ Operational period
This agreement shall continue until a new government for the north-east, pursuant to a permanent negotiated settlement, is established.
The parties will negotiate in good faith to reach such a settlement as early as possible.
Provided, however, that at the end of four years if no final agreement has been reached between the parties to this agreement, both parties shall engage in negotiations in good faith for the purpose of adding, clarifying, and strengthening the terms of this agreement.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com